Breaking
November 25, 2024

Cinema

பாட்ஷா கிச்சா சுதீப்பின் ‘பில்லா ரங்கா பாட்ஷா’

பாட்ஷா கிச்சா சுதீப், அனுப் பண்டாரி, நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட் இணையும், ‘பில்லா ரங்கா பாட்ஷா’ படத்தின் அற்புதமான கான்செப்ட் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

பாட்ஷா கிச்சா சுதீப், மிகப்பெரிய பாராட்டையும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘விக்ராந்த் ரோனா’ படத்திற்கு பிறகு இயக்குநர் அனுப் பண்டாரியுடன் மீண்டும் கைகோர்க்கிறார். இப்படத்தை, ப்ளாக்பஸ்டர் ஹனுமான் பட தயாரிப்பாளர்களான கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

கிச்சா சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்களை மகிழ்விக்கும் பொருட்டு, “பில்லா ரங்கா பாட்ஷா” படத்தின் அதிகாரப்பூர்வ லோகோ மற்றும் எதிர்காலத்தில் நடக்கும் கதையை அறிமுகப்படுத்தும், ஒரு அற்புதமான கான்செப்ட் வீடியோவை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர். இயக்குநர் அனுப் பண்டாரி தனது படங்களில் நுணுக்கமான விவரங்களுடன், தனித்துவமான திரைக்கதையை படைப்பதில் பெயர் பெற்றவர். தற்போது வெளியாகியுள்ள வீடியோவும் அதை நீ
நிரூபிக்கும்படி அமைந்துள்ளது.

இந்த கான்செப்ட் வீடியோ கி.பி 2209 இல் எதிர்காலத்தில் நடக்கும் கதைகளத்தினை பற்றிய பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. சுதந்திர தேவி சிலை, ஈபிள் கோபுரம் மற்றும் தாஜ்மஹால் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது, ஒருவன் தனியாக உலகை ஆள்வது போல் தெரிகிறது. மூன்று வெவ்வேறு பகுதிகளையும் காலநிலையும் இருப்பதை இந்த வீடியோ நமக்கு காட்டுகிறது. ரசிகர்கள் பல நுணுக்கமான விவரங்களை கண்டறியும் வகையில் பல ஆச்சரியங்களையும் தொகுத்து தந்துள்ளார் இயக்குநர் அனுப் பண்டாரி.

இப்படம் பற்றி இயக்குநர் அனுப் பண்டாரி கூறுகையில்.., ‘விக்ராந்த் ரோனாவுக்குப் பிறகு நிரஞ்சன் ரெட்டி மீண்டும் என்னுடன் படம் செய்ய விரும்பினார், இதற்கு முன்பு நாங்கள் ஹனுமான் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் சமயத்தில் சந்தித்தோம். எனது அடுத்த படமும் பாட்ஷா கிச்சா சுதீப்புடன் தான் இருக்கும் என்று கூறியதும், பில்லா ரங்கா பாட்ஷாவின் கதைக்கருவையும் அதன் உலகத்தையும் பற்றி சொன்னதும், அவர் சிலிர்த்துப் போனார். அவரது அடுத்த திரைப்படத்தை மிகப்பெரிய அளவில் செய்ய விரும்பினர், அதற்கு பில்லா ரங்கா பாட்ஷா சரியாக இருக்குமென்று கூறினார்.

பாட்ஷா கிச்சா சுதீப்புடன் இணைவது குறித்து அனுப் கூறுகையில், ‘சுதீப் சாருடன் பணிபுரிவது எப்போதுமே சிறந்த அனுபவம். மக்கள் விக்ராந்த் ரோனாவை மிகவும் ரசித்தார்கள், அவர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் அதிகமாக கொண்டாடுவார்கள் என்று நான் நம்புகிறேன். சுதீப் சார் இதை தனது மிகப்பெரிய படம் என்று சொல்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு, அதனால் எனக்கு மிகப்பெரிய பொறுப்பு வந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் கூறுகையில்…
கிச்சா சுதீப்புடன் அனுப் பண்டாரி மீண்டும் இணைகிறார் என்று முதலில் கேள்விப்பட்டபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். விக்ராந்த் ரோனா தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த கூட்டணி ஏற்கனவே ரசிகர்களிடம் வரவெற்பைக் குவித்துள்ளது. பில்லா ரங்கா பாட்ஷாவின் கதைக்கருவைக் கேட்டதும், இது நாம் தயாரிக்க வேண்டிய படமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே அதை செயல்படுத்தி விட்டோம். சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்புடன் இணைவது எப்போதுமே ஒரு சிறந்த வாய்ப்பு. படப்பிடிப்பு தொடங்குவதற்கும், பில்லா ரங்கா பாட்ஷாவின் உலகத்தை எங்கள் பார்வையாளர்கள் அனுபவிப்பதற்காகவும் காத்திருக்கிறோம்.

பில்லா ரங்கா பாட்ஷா அனைத்து முக்கிய இந்திய மொழிகளிலும் தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் துவங்கவுள்ளது.

நடிகர்கள் : கிச்சா சுதீப்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : அனுப் பண்டாரி தயாரிப்பாளர்கள்: நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
பேனர்: பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹாஷ்டேக் மீடியா

பொயட்டுகள் லிரிக் என்ஜினியர்களுக்கு நடுவே ஒரு தேனெடுக்கும் தொழிலாளி!

பொயட்டுகள் பெருகிவிட்ட காலம் இது! இசை என்பது இரைச்சல். பாடல் வரிகளோ வெறும் கரைச்சல் என்றாகிவிட்ட காலத்தில் யாரோ ஒரு சிலர்தான் சினிமா பாடல்களையும் இலக்கியம் ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் சாஃட்வேர்களில் தமிழ் தேடும் லிரிக் என்ஜினியர்களை கவுரவிக்கும் சினிமா, இத்தகைய நல்ல கவிஞர்களுக்கும் ஒரு சூடத்தை கொளுத்தி வைத்து ஆராதிப்பதுதான் தமிழ்சினிமாவின் தனிச்சிறப்பு.

அப்படி சமீபத்திய ஆராதனைக்கு தன்னை தகுதியாக்கிக் கொண்டு, தமிழ் சினிமாவில் பாடல் எழுதிக் கொண்டிருக்கும் இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின், பாட்டு ரசிகர்களை கவனிக்க வைக்கிறார்.

தமிழ்சினிமாவில் பாடல் எழுதிக்கொண்டிருக்கும் கவிஞர்களில் சமூக வலைத்தளத்தள பக்கங்களில் உலகெங்கும் இலட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடரும் விரல்விட்டு எண்ணக்கூடிய கவிஞர்களில் அஸ்மினும் ஒருவர்.

“இளம் வயதில் மொழியை ஆளத்தெரிந்தவராக திகழ்கிறார் ஈழத்து இளங்கவிஞர் பொத்துவில் அஸ்மின். இவர் யாத்துள்ள கவிதைகளில் ஒரு தேர்ந்த கவிஞனுக்குரிய திறன் தெரிகிறது.பல்வேறு பாடுபொருள்களில் அவர் பாடியுள்ள கவிதைகளில் கருத்துச்செறிவும் கற்பனைவளமும் காணப்படுகின்றன.

‘பொறுமை’ எனும் அஸ்மினின் கவியரங்க கவிதை அவர் மரபில் பெற்றுள்ள ஆழ்ந்த பயிற்சிக்கும் மொழி செப்பத்திற்கும் அடையாளமாக விளங்குகிறது.

இலங்கையில் தமிழ் இதழியல் துறையிலும் ஊடகத்துறையிலும் திரைப்படத்துறையிலும் தடம்பதித்து வரும் தம்பி பொத்துவில் அஸ்மின் காலத்தால் சிறந்த கவிஞராக செதுக்கப்படுவார்”

என்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்களால் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வாழ்த்தப்பட்டவர் அஸ்மின்.

மரபுக்கவிஞர்,தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்,நிகழ்ச்சி தொகுப்பாளர், நூலாசிரியர்,பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவர்.

விஜய் ஆண்டனி “நான்” திரைப்படத்தில் பாடலாசிரியர் ஒருவரை அறிமுகப்படுத்தும் நோக்கோடு உலகளாவிய ரீதியாக நடத்திய பாடலியற்றும் போட்டியில் இருபதாயிரம் போட்டியாளர்கள் மத்தியில் பாடல் எழுதி வெற்றி பெற்று “தப்பெல்லாம் தப்பே இல்லை” பாடல் மூலமாக தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார்.

“இலங்கை என்தாய் நாடு இந்தியா என் தந்தை நாடு” என்று உரத்துக்கூறும் அஸ்மினின் பூர்வீகம் ராமநாதபுரம் தேவிப்பட்டினம்.

இவர் எழுதிய “ஐயோசாமி நீ எனக்கு வேணாம்” பாடல் இலங்கையில் உருவாக்கப்பட்ட பாடல்களில்
6 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப்பெற்று “மக்கள் விருது” பெற்ற முதல் தமிழ் பாடலாகும்.

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் மறைவிற்கு இவர் எழுதிய “வானே இடிந்ததம்மா” இரங்கல் பாடல்
அவர் அரசியல் எதிரிகளையும் கண்ணீரில் நனையவைத்தது.

அவருடைய சமாதியில் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக அப்பாடல் ஒலித்தது. அப்போது போயஸ்கார்ட்டன் வரவழைக்கப்பட்ட அஸ்மின் சசிகலாவால் பாராட்டப்பட்டார்.

கவிப்பேரரசு வைரமுத்து தொகுத்து அண்மையில் வெளிவந்த “கலைஞர் 100 கவிதைகள் 100” கவிதை தொகுப்பிலும் இவர் எழுதிய “திருக்குவளை சூரியன்” கவிதை இடம்பெற்றுள்ளது.

கோச்சடையான், அண்ணாத்த,விசுவாசம் படங்கள் வெளிவந்த போது அஸ்மின் எழுதிய புரோமோ பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் வைராலாகின.

பாடும் நிலா எஸ்.பி.பி மறைவுக்கு இலங்கை தமிழ் கலைஞர்கள் சமர்ப்பித்த “எழுந்துவா இசையே” பாடலையும் இவரே எழுதினார்.

இந்தியாவில் விவசாயிகள் தற்கொலை செய்தபோது வர்சன் இசையில் இவர் எழுதி்ய “போங்கடா நாங்க பொங்கலடா” பாடல் உழவர்களின் வலியை உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியது.

இலங்கையில் அரசியல் புரட்சி வெடித்தபோது இயக்குனர் ,நடிகர் டி.ராஜேந்தர் அவர்கள் பாடி வெளியிட்ட “நாங்க வாழணுமா சாகணுமா சொல்லுங்க” பாடல் பல மில்லியன் பார்வைகளைப்பெற்று அந்த போராட்டக்களத்தில் ஒரு போர் முரசாக ஒலித்தது அந்த பாடலை எழுதி டி.ஆரிடமே வாழ்த்துப்பெற்றவர் பொத்துவில் அஸ்மின்.

இருபத்தேழு ஆண்டுகளாக இலக்கியத்துறையில் ஈடுபட்டு வரும் அஸ்மின் விடைதேடும் வினாக்கள்(2001),
விடியலின் ராகங்கள்(2002), பாம்புகள் குளிக்கும் நதி (2013) ஆகிய கவிதை நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார்.

தமிழ்நாடு பாரதியார் பல்கலைக்கழக மாணவி செல்வி.தி.கெளசல்யா தனது முதுகலை பட்டத்துக்காக “பொத்துவில் அஸ்மின் கவிதைகளில் இயற்கை வர்ணனைகளும் சமுதாய கூறுகளும்” என்ற தலைப்பில் இவர் கவிதைகளை ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளார்.

2003ஆம் ஆண்டு இலங்கை பேராதெனியா பல்கலைக்கழகம் நடத்திய அகில இலங்கை மட்ட கவிதைப்போட்டியில் “தங்கம்பதக்கம்” பெற்ற அஸ்மின் இரண்டு முறை இலங்கை ஜனாதிபதி கரங்களால் விருது பெற்றவர்.

இவரது கலை,இலக்கிய, ஊடகப்பணியை பாராட்டி இலங்கை அரசு 2019 ஆம் ஆண்டு “கலைச்சுடர்” என்ற பட்டம் வழங்கி கெளரவித்தது.
அதே ஆண்டு கம்போடியாவில் நடைபெற்ற உலக கவிஞர் மாநாட்டில் கம்போடியா கலை,கலாச்சார அமைச்சினால் சர்வதேச கவியரசு கண்ணதாசன் விருது வழங்கி அஸ்மின் கெளரவிக்கப்பட்டுள்ளார்.

,”கவிஞர்களின் கவிஞர்” என வர்ணிக்கப்படும் கவிக்கோ அப்துல் ரஹ்மான் தலைமையில்
மலேசியா பல்கலைக்கழகத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச கவியரங்கில் கவிதைபாடி கவிக்கோவால் பாராட்டுப்பெற்றவர் அஸ்மின்.

இவரது “தட்டாதே திறந்து கிடக்கிறது” கவிதையினை இயக்குனர்கள் லிங்குசாமி,ஏ.வெங்கடேஸ்,ராசய்யா கண்ணன் ஆகியோரும் பலமுறை விதந்து பாராட்டி உள்ளனர்.

ராடர்ன் தயாரிப்பில் கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “ஜமீலா” , DD பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் “தாயம்மா குடும்பத்தார்” ஆகிய நெடுந்தொடர்களின் பாடல்களையும் அழகுத் தமிழில் அஸ்மின் எழுதியுள்ளார்.

ஜிப்ரான் இசையில் “அமரகாவியம்” படத்தில் அஸ்மின் எழுதிய “தாகம் தீர கானல் நீரை காதலின்று காட்டுதே” பாடல், சிறந்த பாடலாசிரியருக்கான ‘எடிசன்’ விருதினை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.

தாஜ்நூர் இசையில் “சண்டாளனே”,
ஸ்ரீகாந்த் தேவா இசையில் “முத்து முத்து கருவாயா” ,நீ எத்தன பேரகொன்னிருக்க முட்டக்கண்ணால ஆகிய பாடல்கள் பல மில்லியன் ஹிட்களைப் பெற்ற இவரது பாடல்களாகும்.

அஸ்மின் அனைத்து பாடல்களும் எழுதிய முதல் திரைப்படம் ஆர்.முத்துக்குமார் இயக்கத்தில் 2017 இல் வெளிவந்த “எந்த நேரத்திலும்” படமாகும். அப்படத்தில் அஸ்மின்

“ஐசக்நியூட்டன் சைன்டிஸ் கண்ட
ஆப்பிள் பெண்ணாய் ஆனதே…
வாட்ஸ்ஸப் டுவிட்டர் பேஸ்புக்கெல்லாம்
இவளின் பின்னே போனதே…

கூகுளிலே
இவளைத் தேடி
யாஹூ அலைகிறதே….
ஐ போனே இவளைப்பார்த்து
லவ்யு சொல்கிறதே

வைபரே வைஃபென நெனச்சிடுமென்னை
சைஃபரா நெனைக்காத…
ஓ லைஃப்பிலே நைஃப்ப எறிஞ்சிடமாட்டன்
ஸ்கைப்பில மொறைக்காத..””

வரிக்கு வரி ஆங்கிலும் தமிழும் கலந்து அதகளப்படுத்தியிருந்தார்.

கவித்துவம் கடல் அளவு இருந்தாலும் கடல் கடந்து இருந்ததனால் நல்ல பல வாய்ப்புகள் இவரை விட்டு கைநழுவிப்போயிருந்தன.

இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக, அறிவிப்பாளராக 14 ஆண்டுகள் பணிபுரிந்த அஸ்மின் இப்போது முழுநேர பாடலாசிரியராய் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பணிபுரிந்து வருகின்றார்.

இவர் எழுத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் தேனிசை தென்றல் தேவா பாடிய “மாமாகுட்டிமா”, ஜீவிபிரகாஸ்,இலண்டன் பாடகி சர்மினி இணைந்து பாடிய ஞாயிறே தனிப்பாடல்கள் விரைவில் வெளிவரவுள்ளன.

திரும்பிப்பார்,பைலா,UR NEXT, The Studio, பைனாகுலர்,நாளைய மாற்றம்,நீறுபூத்த நெருப்பு,காமா, இன்னும் தலைப்பு வைக்காத பல படங்களில் பிஸியா பாடல் எழுதிக்கொண்டிருக்கும் பொத்துவில் அஸ்மின் தமிழ் சினிமா பாடல்களில் புதிய மாற்றத்தை உருவாக்குவாரா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்…

கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது.

அறிமுக நாயகன் ஏகன், யோகிபாபு, சகாயபிரிகிடா, லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, சத்யாதேவி, குட்டிப்புலி தினேஷ்குமார், ஆகியோர் நடித்து என். ஆர்.ரகுநந்தன் இசையில் அசோக் குமாரின் ஒளிப்பதிவில் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் விஷன் சினிமா ஹவுஸ் டாக்டர் அருளானந்து தயாரித்து இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் அமெரிக்காவில் நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் தேர்வு செய்யப்பட்டு திரையிடப்படுகிறது.

செப்டம்பர் 12 முதல் 21 வரை நடைபெறும் இத்திருவிழாவில் 18ம் தேதி இரவு 8.00 மணிக்கு கோழிப்பண்ணை செல்லதுரை ‘வோர்ல்டு ப்ரீமியர்’ அந்தஸ்தில் திரையிடப்படுகிறது.

22 ஆண்டுகளாக நடைபெறும் ஆக்லெண்ட் பன்னாட்டு திரைப்பட விழாவில் இது வரை தமிழ் திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கோழிப் பண்ணை செல்லதுரை திரைப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக, இரு நாள் முன்பாக அமெரிக்காவில் புகழ் வாய்ந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது பெருமையாக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் டாக்டர் அருளானந்து தெரிவித்தார்.

அன்புடன்,
விஷன் சினிமா ஹவுஸ்

‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படம் விரைவில் திரையில் !!

தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ திரைப்படம் விரைவில் திரையில் !!

சென்னை 29 ஆகஸ்ட் 2025 ஃப்ரைடே பிலிம் பேக்டரி (Friday Film Factory) சார்பில் கேப்டன் எம்.பி. ஆனந்த் தயாரிப்பில், ட்ரீம் ஹவுஸ் ஹாரூன் மற்றும் பிஜிஎஸ் ப்ரொடக்ஷன்ஸ் பிஜிஎஸ் ஆகியோரின் இணை தயாரிப்பில், பிரசாத் முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்’ (Once Upon A TIme In Madras).

இந்த திரைப்படம் ஹைபர் லூப் வகையை சார்ந்த திரில்லராக, மிகவும் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகியுள்ள இப்படத்தில், கதையின் நாயகர்களாக பரத், சுஹைல், ராஜாஜி நடித்துள்ளார்கள்.

கதையின் நாயகிகளாக விருமாண்டி அபிராமி, அஞ்சலி நாயர், பவித்ரா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்..

தயாரிப்பாளர் பிஜிஎஸ் பேசியதாவது…

இந்தப் படத்தின் கதை தொடங்கி, திரைக்கதையாக ஒன்றரை ஆண்டுகள் ஆனது, இப்படம் ஒரு சஸ்பென்ஸ் நிறைந்த புதுமையான அனுபவமாக இருந்தது, அது போக படத்தில் அனைத்து கதாபாத்திரங்களிலும் பெரிய நடிகர்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் ஒப்புகொண்டு நடித்த அனைவருக்கும் நன்றி.

இயக்குனர் பிரசாத் சார் என்னிடம் சொன்ன கதையை அப்படியே அற்புதமக எடுத்துவிட்டார், படம் அருமையாக வந்துள்ளது.

பரத் சாருக்கு மிகவும் நன்றி, எங்களது கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

அனைவரும் கதையை கேட்டதும் சரி என சொன்னது எங்களுக்கு மேலும் ஒரு நம்பிக்கையை தந்தது.

ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி.

அனைவரும் பெரிய உழைப்பை கொடுத்துள்ளனர்.

அதற்கு பெரிய நன்றி. கண்டிப்பாக படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

இணை தயாரிப்பாளர் ஹாரூன் பேசியதாவது,

இந்தப் படத்தில் நான் இணைய காரணம் அருண் சார் தான், இந்தப் படத்தில் ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது.

இந்தக் கதையை இயக்குநர் மிக அழகாக சொன்னார், அதை விட இயக்குநர் படத்தை அட்டகாசமாக எடுத்துள்ளார்.

இந்தப் படம் இந்த தலை முறை ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தயாரிப்பாளர் பெரிய உதவியாக இருந்தார்.

படம் நிச்சயமாக உங்களை சிந்திக்க வைக்கும். கண்டிப்பாக படம் உங்களுக்கு பிடிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் கண்ணன் பேசியதாவது…

இந்தப் படம் எனக்கு கிடைக்க காரணம் ஹாரூன் சார் தான், அதிகமாக தயாரிப்பாளரை பாடு படுத்தியுள்ளேன், நடிகர்கள் அனைவரும் என்னுடைய வேலையை நம்பி நடித்தனர்.

திரைப்படம் நன்றாக வந்துள்ளது.

பரத் சாரின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும், பட்டியல் படம் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். அதே போல, இந்தப் படமும் அவருக்கு ஒரு பெரிய படமாக இருக்கும்.

நானும் இயக்குநரும் அதிக சண்டை போட்டுள்ளோம் எல்லாமே படத்திற்காக தான், படம் சிறப்பாக வந்துள்ளது, அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை மிருதலா சுரேஷ் பேசியதாவது,…

எனக்கு இதுதான் முதல் படம், எனக்கு இந்தப் படம் கிடைத்தது வரம், பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படத்தில் நானும் நடித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது.

இயக்குநர் எனக்கு இது முதல் படம் என தெரிந்து கொண்டு பொறுமையாக சொல்லித்தந்து இந்தப் படத்தில் என்னை நடிக்க வைத்தார்.

திரைப்படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

பார்த்து விட்டு உங்கள் ஆதரவை கொடுங்கள், நன்றி.

நடிகை சினிசிவராஜ் பேசியதாவது..,

எனக்கு கொஞ்சம் புது அனுபவமாக இருந்தது, முதல் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளேன், பரத் சாருக்கு மிகவும் நன்றி, எனக்கு பெரிதும் உதவியாக இருந்தார்.

இயக்குநர் எனக்கு ஒரு கைடாக இருந்தார், பொறுமையாக இருந்து என்னிடம் வேலை வாங்கினர்.

இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைத்தது.

அதற்கு ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி.

உங்கள் ஆதரவை இந்த படத்திற்கு கொடுங்கள்.

இசையமைப்பாளர் ஜோஷ் பிராங்க்ளின் பேசியதாவது..,

தயாரிப்பாளர் ஆனந்த் அண்ணனுக்கு மிகவும் நன்றி, என்னை அவர்தான் தேர்வு செய்தார்.

இது போன்ற ஒரு சஸ்பென்ஸ் படத்திற்கு நான் இசை அமைத்ததில்லை, இந்தப் படத்தில் 3 பாடல்கள் இசையமைத்துள்ளேன், அதற்கு ஜெகன் அண்ணா தான் வரிகள் எழுதினார் அவருக்கு மிகவும் நன்றி.

திரைப்படம் சிறப்பாக வந்துள்ளது, மொத்த குழுவிற்கும் நன்றி.

தயாரிப்பாளர் கேப்டன் எம்.பி. ஆனந்த் பேசியதாவது…

இப்படத்தின் உருவாக்கத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் செய்து கொடுத்துள்ளோம்.

திரைப்படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது.

தற்போது இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இப்படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் தினைப்படமாக இருக்கும்.

உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகை பவித்ரா லக்ஷ்மி பேசியதாவது,…

இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம்.

இந்தப் படம் உருவாகக் காரணமாக இருந்த அனைத்து தயாரிப்பாளருக்கும் நன்றி, இந்தப் படத்தின் கதை தாண்டி, படத்தில் ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கிடைத்தது.

ஒரு பெரிய நடிகருக்கு கொடுத்த அதே மரியாதையை அனைத்து நடிகரிடமும் காட்டினார்கள்.

இயக்குநருக்கு வாழ்த்துகள், இந்தப் படத்தில் பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம்.

பெரிய பயிற்சி கிடைத்தது, ஒட்டு மொத்த குழுவிற்கும் நன்றி, பரத் சாருக்கும் அபிராமி மேமுக்கும் நன்றி, இந்தப் படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும்.

உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் ஷான் பேசியதாவது,…

இந்தப் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன், மகிழ்ச்சியாக உள்ளது.

அனைவரும் எனக்கு பெரிய உறுதுணையாக இருந்தனர்.

பரத் சார் மற்றும் மற்ற அனைத்து நடிகர்களுக்கும் பெரிய நன்றி.

இந்தப் படத்தில் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

எனக்கு அது ஒரு பாக்கியம். கண்டிப்பாக உங்களுக்கு இந்தப் படம் பிடிக்கும், நன்றி.

பாடலாசிரியர் ஜெகன் கவிராஜ் பேசியதாவது..,

இந்தப் படம் நடுநிலையை பற்றி பேசியுள்ளது, இயக்குநர் கதையை சொன்னதும், இது தான் எனக்கு தோன்றியது.

அருண் சாருக்கு நன்றி இந்தப் படம் உருவாக முக்கிய காரணம், அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர்.

என் தம்பி ஜோஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இரண்டு பாடல்கள் நான் எழுதியுள்ளேன், பாட்டு அருமையாக வந்துள்ளது.

படம் சிறந்த படைப்பாக வந்துள்ளது.

கண்டிப்பாக நல்ல படங்களை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள், அதே போல் இந்தப் படத்தையும் நீங்கள் கொண்டு போய் சேர்க்க வேண்டும் நன்றி.

இயக்குநர் பிரசாத் முருகன் பேசியதாவது,…

முதலில் இந்தக் கதையை கேட்டதும் அதற்கு ஆதரவு கொடுத்தது ஆனந்த் சார் அன்றிலிருந்து இன்று வரை என் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

பரத் சார், அபிராமி மேடம் என அனைவரும் பெரிய நடிகர்கள், என்னுடைய கதையை நம்பி இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.

இந்தப் படம் ஒரு புது அனுபவமாக இருக்கும், ஒரு ஹைப்பர் லிங்க், நான்லீனியர் படம் சுவாரஸ்யமான திரைப்படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.

நடிகை அபிராமி பேசியதாவது…

எங்கள் படக்குழு அனைவருக்கும் பெரிய வாழ்த்துகள்.

இப்போது தான் நான் இந்தப் படத்தை பார்த்து விட்டு வந்தேன்.

எங்கள் குழு மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்துள்ளது.

ஒரு சில படங்கள் தான், ஒரு பெரிய ஈடுபாட்டுடன் நம்மளை பயணிக்க வைக்கும், அது போன்ற படம் தான் இது.

இயக்குநர் என்னிடம் கதையை சொல்லும் போது மொத்த ஸ்கிரிப்ட்டையும் கொடுத்தார், மிகவும் தெளிவாக இருந்தார், இந்தப் படத்தில் பல உணர்வுகளை மிக அழகாக கடத்தியுள்ளார்.

படம் சிறப்பாக வந்துள்ளது, எனக்கு மட்டுமல்ல மொத்த குழுவுக்கும், இது ஒரு முக்கிய படமாக அமையும் நன்றி.

நடிகர் பரத் பேசியதாவது..,

எனக்கு மிச்சம் வைக்காமல், அனைவரும் அனைத்தையும் பேசிவிட்டனர்.

என்ன பேசுவது என்று தெரியவில்லை.

இந்தப் படத்தில் நான் கதையின் நாயகனாக நடித்துள்ளேன்.

கடந்த ஐந்து ஆறு வருடங்களில், தமிழ் சினிமா வேறொரு இடத்திற்கு சென்று விட்டது.

அதே போல தான் இந்தப் படமும் இருக்கும்.

எனக்கு இது ஒரு புதுமையான கதாபாத்திரம், நான் மொத்த கதையையும் கேட்கவில்லை, அவர் சொன்ன சிறு நேரத்திலே, எனக்கு அவர் மீது எனக்கு நம்பிக்கை வந்தது.

அதை நம்பித்தான் இந்த படத்தில் நடித்தேன்.

அதை சரியாக செய்தும் காட்டி விட்டார். படம் பார்த்தேன் நன்றாக வந்துள்ளது.

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர், முழு ஈடுபாட்டைக் கொடுத்து இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

இசை மற்றும் ஒளிப்பதிவு என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது,

படத்தின் தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி. அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

கண்டிப்பாக உங்களுக்கு ஒரு வெற்றி கிடைக்கும்.

இப்படம் ரசிகர்களை கண்டிப்பாக சுவாரசியப்படுத்தும். உங்களுக்கு கண்டிப்பாக ஏமாற்றம் கிடைக்காது, படத்தை பார்த்து விட்டு உங்கள் கருத்துகளையும் ஆதரவையும் கொடுங்கள் நன்றி.

இப்பபடத்தில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் கன்னிகா, தலைவாசல் விஜய், அருள் டி சங்கர், பொற்கொடி, பிஜிஎஸ், கல்கி, சையத் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

நெடுநல்வாடை படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ் ப்ராங்க்ளின் இசை அமைத்துள்ளார்.

நிரைப்படத்தின் வசனத்தையும் பாடல்களையும் கவிஞர் ஜெகன் கவிராஜ் எழுதியுள்ளார்.

காளிதாஸ் மற்றும் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

‘ராட்சசன்’ திரைப்படத்தின் எடிட்டர் சான் லோகேஷ் எடிட்டிங் பொறுப்பை ஏற்றுள்ளார்.

கலை இயக்குநராக நட்ராஜ் பணியாற்றியுள்ளார்.

இந்த திரைப்படத்தின் சண்டைக் காட்சிகளை சுகன் அமைத்துள்ளார்.

காஸ்ட்யூம் டிசைனராக ரிஸ்வானா பணியாற்றியுள்ளார்.

திரைப்படத்தின் லைன் புரொடியூசர்: ஸ்ரீதர் கோவிந்தராஜ், பொன் சங்கர் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர்: கே.எஸ்.கே. செல்வகுமார் தயாரிப்பு மேற்பார்வை: சிவமாணிக்க ராஜ்

விரைவில் இந்த திரைப்படத்தின் வெளியீட்டு தேதி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

தங்கலான் – உலகளாவிய அளவில் ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி பயணம்.

சீயான் விக்ரம் நடிப்பில், பா. ரஞ்சித் எழுத்து-இயக்கத்தில், ஸ்டூடியோ க்ரீன் K.E. ஞானவேல்ராஜா தயாரிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான தங்கலான் திரைப்படம், வசூல் ரீதியில் வெற்றி அடைந்து, உலகளவில், ரூபாய் 100 கோடி வசூலை நோக்கி தற்போது நகர்ந்திருக்கிறது. தங்கலான் திரைப்படம், சீயான் விக்ரம் அவர்களுக்கு அவரது திரை வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முதல் நாள் வசூலை கொண்டு வந்தது. ரூபாய் 26 கோடிக்கும் மேல் முதல் நாள் வசூல் செய்து சாதனை படைத்த இப்படம், தொடர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இப்படத்தின் இரண்டாவது வாரம், தமிழ்நாட்டில் பல புதிய திரைப்படங்கள் வெளியாகி இருந்த போதிலும், வசூலில் ஸ்டெடியாக இப்படம் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திர மாநிலம் மற்றும் தெலங்கானாவில், பெரும் வரவேற்பை பெற்று இரண்டாவது வாரம் இப்படம் 141 தியேட்டர்கள் அதிகரித்து, தற்போது 391 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் 30-ம் தேதியன்று மும்பை, டெல்லி மற்றும் அனைத்து வட மாநிலங்களில் தங்கலான் வெளியாக உள்ளது. அதன் மூலம் மேலும் பல கோடிகளை இப்படம் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு இப்படத்திற்கு கிடைத்த வெற்றிகளினால், தயாரிப்பாளருக்கு அவரின் முதலீட்டை தாண்டி வசூல் செய்யும் என அனைவராலும் பேசப்படுகிறது. பா. ரஞ்சித் அவர்களின் சிறப்பான இயக்கத்தால், உருவான தங்கலான் திரைப்படத்தில், சீயான் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், டேனியல் கால்டகிரோன், பசுபதி என பல நடிகர்கள் தங்களின் சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்தி, அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு சிறந்த திரைப்படமாக உருவாக்கியுள்ளனர். சீயான் விக்ரம் அவர்கள் இப்படத்திற்காக கொடுத்த உழைப்பையும், அர்ப்பணிப்பையும், ஆகச்சிறந்த நடிப்பையும் பாராட்டாத பார்வையாளர்களோ ஊடகங்களோ இல்லை. அந்த அளவு தன் மாபெரும் உழைப்பை இப்படத்திற்காக விக்ரம் அவர்கள் கொடுத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இப்படம், 18-ம், மற்றும் 19-ம் நூற்றாண்டில் வாழ்ந்த விளிம்புநிலை மனிதர்கள், அவர்களின் போராட்டங்கள், மேஜிக்கல் ரியலிசம் என பல புதுமையான விஷயங்களை உள்ளடக்கி, ஒரு சிறந்த காட்சி அனுபவத்தை பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. தேசிய விருது பெற்ற இசை அமைப்பாளர் G.V. பிரகாஷ் குமாரின் பாடல்களும், பின்னணி இசையும், பெரிய பலமாக அமைந்துள்ள தங்கலான், 2024-ல் ஒரு மறக்க முடியாத திரைப்படமாகவும், ரூபாய் 100 கோடியளவில் வசூல் செய்த ஒரு படமாகவும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் இருக்கும்.

விடுதலையின் கருத்தை மறுவரையறை செய்யும் விடுதலைப் பாடல்:

விடுதலையைப் புறவெளியில் தேடியலையும் மனிதன் நாள்தோறும் தன்னைத்தானே சிறைப்படுத்திக்கொள்ளும் அகவிடுதலையைப் பற்றி சிந்திக்க வேண்டுமென்ற கருப்பொருளோடு வெளியாகியுள்ளது ‘விடுதலைப் பாடல்’. ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைப்பில், மதன் கார்க்கியின் வரிகளில் உருவாகியுள்ள இப்பாடலைத் தீபக் புளூ பாடியுள்ளார்.
தேர்வுகளின் தடைகளில் இருந்து அறிவு தேடும் விடுதலை, தோல் நிறத்தின் மதிப்பீடுகளிலிருந்து மெய்யழகு வேண்டும் விடுதலை, பொய்களின் சுமையிலிருந்து விடுபட விரும்பும் உண்மை, தொடுதிரையிலிருந்து விரல்கள் கோரும் விடுதலை என அன்றாடம் நம்மை நாமே சிறைப்படுத்திக்கொண்டு வாழ்வதைத் தகர்த்தெறிய இப்பாடல் வலியுறுத்துகிறது. இதோடு நம் நாட்டின் விடுதலைக்காக உயிர்நீத்த வீரர்களையும் போற்றுகிறது. விடுதலையின் பொருளை நாம் மறுமதிப்பீடு செய்துகொள்ள வேண்டுமென்ற ஆழமான கண்ணோட்டத்தை வலியுறுத்தும் இந்தப்பாடலை அபிநாத் சந்திரன் தயாரிக்க மதுரை குயின் மிரா பள்ளி வெளியிட்டுள்ளது.
இளைஞர்களின் துள்ளளான நடன அசைவுகளோடு உருவாகியுள்ள விடுதலைப்பாடலின் ஒளி வடிவம் பா மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது. விரைவில் அனைத்து இசைச் சீரோடைகளிலும் இப்பாடல் வெளியிடப்படும்.

புகழ் நடிக்கும் ‘FOUR சிக்னல்’……

R.S.மணிகண்டன் மற்றும் மகேஸ்வரன்கேசவன் தயாரிப்பில் மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் புகழ் நாயகனாக நடிக்கும் ‘FOUR சிக்னல்’

காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது

ஶ்ரீ லக்ஷ்மி சண்முகநாதம் ஃபிலிம்ஸ் மற்றும் கேசவ் புரொடக்ஷன்ஸ் பேனர்களில் R.S.மணிகண்டன் மற்றும்
மகேஸ்வரன்கேசவன் இணைந்து தயாரிக்க மகேஸ்வரன்கேசவன் இயக்கத்தில் ‘விஜய் டிவி’ புகழ் கதையின் நாயகனாக அறிமுகம் ஆகும் ‘Four சிக்னல்’ திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

அறிமுக இயக்குநரான மகேஸ்வரன்கேசவன், காதலும், உணர்வுகளும் கலந்த கலகலப்பான திரைப்படமாக ‘Four சிக்னல்’ படத்தை உருவாக்கி உள்ளார். நகரங்களில் வசிக்கும் வெகு ஜனங்கள் வெகுவாக பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை சுற்றி இந்த கதை சுழல்கிறது.

சென்னையின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு தினமும் ஷேர் ஆட்டோவில் செல்லும் பயணிகளுக்கும் அதன் ஓட்டுநருக்கும் இடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பாக உருவாகியுள்ள ‘Four சிக்னல்’ திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் தீபாவளிக்கு வெளியிட படக்குழு தயாராகி வருகிறது.

அருவி திருநாவுக்கரசு, கல்லூரி வினோத், லொள்ளு சபா சேஷு, ஷர்மிளா, விஜய் ஆதிராஜ், யூடியூபர் காத்து கருப்பு கலை உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க, A.J அலி மிர்சாக் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மனிதர்களின் அந்தரங்க உணர்வுகளையும் யதார்த்தங்களையும் உள்ளடக்கிய ரொமான்ஸ் டிராமாவாக உருவாகியுள்ள ‘Four சிக்னல்’ திரைப்படத்திற்கு பாலா பழனியப்பன் ஒளிப்பதிவு செய்ய, பிரியன் எடிட்டிங் செய்துள்ளார்.

படம் குறித்து பேசிய இயக்குநர், “எளிய மக்களின் வாழ்க்கையில் நடக்கும் தினசரி நிகழ்வுகளின் சுவாரஸ்ய தொகுப்பாக ‘Four சிக்னல்’ இருக்கும். தரமான திரைப்படங்களை எப்போதும் ஆதரிக்கும் தமிழ் ரசிகர்கள் இந்த திரைப்படத்தையும் ஆதரிப்பார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்,” என்றார்.

“சாலா” திரைவிமர்சனம்

சிறுவயதில் தீரன் ஏரியாவில் தாதாவாக இருக்கும் அருள்தாஸின் உயிரை ஒரு மோதலில் போது காப்பாற்றுகிறார்.உடனே தாதா அருள்தாஸ் தன் வாரிசாக கதாநாயகன் தீரனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அருள்தாஸின் எதிரி தாதாவான சார்லஸ் வினோத் ஏலத்தில் அருள்தாஸ் நடத்தும் பார்வதி பார் உரிமையை ஏலத்தில் கைப்பற்றுகிறார். இழந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதே அருள்தாஸின் லட்சியமாக வாழ்ந்து வருகிறார்.கதாநாயகன் தீரன் வளர்ந்து தனது குருவிற்காக அந்த பார்வதி பாரை மீட்டெடுப்பதில் உறுதுணையாக நிற்கிறார்.பலநூறு பார்களை நடத்த வேண்டும் என்று எண்ணத்தில் இருக்கும் கதாநாயகன் தீரன்.
மதுபான கடைகளையும் பார்களையும் மூட வேண்டும் என்று போராட்டம் நடத்தும் நாயகி ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட, எதிரும் புதிருமாக இருக்கும் இருவருக்கும் நடக்கும் மோதல் காதலாக மாறுகிறது.இதற்கிடையே இந்த பார்வதி பாரை ஏலம் எடுப்பதில் நாயகன் தரப்புக்கும், வில்லன் தரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்படுகிறது.
பார்வதி பாரை ஏலம் எடுத்தார்களா? எடுக்கவில்லையா?ரேஷ்மாவுக்கும் தீரனுக்கும் காதல் என்ன ஆனது ஒன்று சேர்ந்தார்களா? என்பதுதான் இந்த சாலா திரைப்படத்தின் மீதிக்கதை.

சாலா திரைப்படத்தில் அறிமுக நாயகனாக தீரன் அறிமுகமாகியிருக்கிறார். ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடம்பு என்று முரட்டுத்தனமாக இருந்தாலும் அப்பாவித்தனமான தனது நடிப்பால் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.தன் காதலி கதாநாயகி ரேஷ்மா பாதிப்புக்கு ஆளாகும்போது பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் மனதில் வரவேற்புப் பெறுகிறார்.
நாயகியாக ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான கதாபாத்திரம், அதை புரிந்து நடித்திருக்கிறார்.
சார்லஸ் வினோத் மற்றும் அருள்தாஸ் வழக்கமான நடிப்பு கொடுத்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிகவும் அருமையாக நடித்து இருக்கிறார்கள்..
நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீநாத் , சம்பத் ராம், யோகிராம், பள்ளி மாணவர்களாக நடித்திருக்கும் உள்ளிட்ட அனைவரும் தங்களுக்கு கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் அற்புதமாகவும் காட்சிப்படுத்துள்ளார்.
இசையமைப்பாளர் தீசன் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்து இருக்கிறார்.
மதுப்பழக்கத்திற்கு மக்கள் எப்படியெல்லாம் அடிமையாகி இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் இயக்குநர் மணிபால் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

சபையர் ஸ்டுடியோஸ் வெளியிடும் பிரபு தேவாவின் ‘பேட்ட ராப்’

பிரபுதேவா நடிக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய சபையர் ஸ்டுடியோஸ்

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை சபையர் ஸ்டுடியோஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.

இயக்குநர் எஸ். ஜே. சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, கலாபவன் ஷாஜோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.கே.தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏ. ஆர். மோகன் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார். இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் மோசன் போஸ்டர், இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பினை பெற்றிருக்கிறது. தற்போது இப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“போகுமிடம் வெகு தூரம் இல்லை” திரை விமர்சனம்….

விமல் கருணாஸ் மற்றும் பல நடிப்பில் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் போகுமிடம் வெகு தூரம் இல்லை

அமரர் ஊர்தி ஓட்டுனரான விமல், நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் மனைவியை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனது தாத்தாவை துணைக்கு வைத்து விட்டு மருத்துவ செலவிற்காக -சென்னையில் இறந்தவரின் சடலத்தை ஏற்றுக் கொண்டு திருநெல்வேலிக்கு பயணிக்கிறார்.வழியில் கூத்து கலைஞர் கருணாஸ் தன்னை செல்லும் வழியில் இறங்கி விடுமாறு கேட்க, மனதளவில் பிடிக்காமல் துணைக்காக ஏற்றுக்கொள்கிறார்.
இருவரும் பயணிக்க வழியில் ஒரு காதல் ஜோடியும் வண்டியை நிறுத்தி ஏறிக்கொள்ள இந்த இருவர் மற்றும் கருணாஸ்னால் பல விதத்தில் பல பிரச்சனைகள் கதாநாயகன் விமலுக்கு வருகிறது.
இந்த காதல் ஜோடிகளால் வந்த பிரச்சனை என்ன? அமரர் ஊர்தியில் உள்ள சடலத்தை ஒப்படைத்தாரா? ஒப்படைக்கவில்லையா? என்பதுதான் போகுமிடம் வெகு தூரம் இல்லை திரைப்படத்தின் மீதிக்கதை.
அமரர் ஊர்தி ஓட்டுனர் குமார் கதாபாத்திரத்தில் மிகவும் கனத்த முகத்துடனும் தன்னுடன் பயணித்த கருணாஸ் இறந்த பிறகு மிகவும் நினைத்து வேதனைப்படும் காட்சிகளிலும் அருமையாக தன்னை மறந்து நடித்துள்ளார்.எப்பொழுதும் பார்க்கும் விமலாக இல்லாமல் புது மாதிரியான விமலாக நடித்திருக்கிறார்.
மற்றொரு கதையின் நாயகனாக கருணாஸ் நடித்துள்ளார்.
கூத்துக் கலைஞர் கதாபாத்திரத்தில் மிகவும் அருமையாகவும் கூத்துக் கலைஞரின் நடை உடை பாவனை அனைத்தையும் ஏற்று கதாபாத்திரத்தை உணர்ந்து மிகவும் அற்புதமாக நடித்து இருக்கிறார்.
நம்மளால் ஏற்பட்ட தவறுக்கு நாம் தான் பரிகாரம் செய்ய வேண்டும் என கருணாஸ் எடுக்க முடிவு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை தூக்கி வாரி போட்டு விட்டது.
விமல் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மேரி ரிக்கெட்ஸ், அருமையாக நடித்துள்ளார்.
தீபா சங்கர், ஆடுகளம் நரேன், பவன், சார்லஸ் வினோத், அருள்தாஸ், வேல ராமமூர்த்தி, மனோஜ்குமார் அனைத்து கதாபாத்திரங்களும் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் டெமில் சேவியர் எட்வர்ட்ஸ். மிகச்சிறந்த ஒளிப்பதிவை கொடுத்து இருக்கிறார்.
இசையமைப்பாளர் என்.ஆர். ரகுநந்தன் இசை மற்றும் பாடல்கள் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இசை உயிரோட்டமாக உள்ளது.
ஒரு அமரர் ஊர்தி ஓட்டுனரின் ஒரு நாள் வாழ்க்கையை வைத்து, அதை சுற்றிய பல சுவாரஸ்யமான காட்சிகளும் அந்த ஒரு நாள் வாழ்க்கையின் அனுபவங்களையும் படமாக்க முயற்சி செய்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மைக்கேல் கே ராஜா. இந்த அமரர் ஊர்தியில் பயணிக்கும் இரண்டு கதாபாத்திரங்களை மையமாக வைத்து யோசித்த கதை அருமை, அதன் திரை கதையை இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு சுவாரஸ்யமாக அமைத்திருந்தால், அந்த மனிதர்களின் வாழ்க்கையை சுவாரசியமாக கொடுத்திருந்தால் படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்
மொத்தத்தில் போகும் இடம் வெகு தூரம் இல்லை விமலின் திரை வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு மயில் கல்லாக இருக்கும்