Breaking
August 30, 2026

Cinema

விஜய் ஆண்டனி நடிக்கும் ‘நூறு சாமி’



இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராமை ‘நூறு சாமி’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தும் விஜய் ஆண்டனி-சசி கூட்டணி

முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளின் பங்கேற்புடன் அரங்கேறிய விஜய் ஆண்டனியின் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு

‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தை ஈர்த்த இயக்குநர் சசி-விஜய் ஆண்டனி கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டுக்கு முன்னரான நிகழ்வு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா, அஜய் திஷான், லிஜோ மோல் ஜோஸ், கருணாஸ், சக்தி, காவ்யா அனில், பாலாஜி சக்திவேல், அருள் தாஸ், மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். ஃபில் குட் வித் கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.

வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நூறு சாமி’ படத்தின் வெளியீட்டிற்கு முன்னரான நிகழ்வு சென்னையில் உள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினருடன் தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த முன்னணி படைப்பாளிகளான வெற்றிமாறன், பா.ரஞ்சித், ஏ. ஆர்.முருகதாஸ், சரண், லிங்குசாமி, கார்த்திக் சுப்புராஜ், மிஷ்கின், சதீஷ் குமார், மதன், மந்திர மூர்த்தி, வி.இசட். துரை, சுப்பிரமணிய சிவா, நித்திலன் சாமிநாதன், ராஜூ முருகன், தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் தனஞ்ஜெயன், இசையமைப்பாளர்கள் எஸ். எஸ். குமரன், சிமோன், சித்து குமார் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ‘நூறு சாமி’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பாலாஜி ஸ்ரீராமை இயக்குநர் சசி படத்தின் மூலம் அறிமுகமாகி பிரபலமான இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, எஸ் எஸ் குமரன், சிமோன், சித்து குமார் ஆகியோர் இணைந்து வாழ்த்து தெரிவித்துடன் ரசிகர்களுக்கும் அறிமுகப்படுத்தினர்.

வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி வரவேற்று பேசுகையில், ”ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நான் இதுவரை நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். இந்த படத்தை பார்த்துவிட்டு பலர், ‘நன்றாக நடித்திருக்கிறீர்கள்’ என்று சொல்லிவிட்டார்கள். என்னை நன்றாக நடிக்க வைத்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி. இந்தப் படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக இங்கு வருகை தந்திருக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

இசையமைப்பாளர் பாலாஜி ஸ்ரீராம் பேசுகையில், “இந்த மேடையில் என்னை அறிமுகப்படுத்தி லெஜெண்ட்ஸ் அனைவருக்கும் நன்றி. ஒரு நாள் இயக்குநர் சசி போன் செய்து.. ஒரு சூழலை விவரித்து பாடலுக்கான மெட்டு வேண்டும் என கேட்டார். அதுதான் ‘அம்மா அம்மா.. ‘எனும் பாடல். அந்த பாடலின் மெட்டை கேட்டதும் சசி சாருக்கு பிடித்து போனது. உடனடியாக இந்த படத்திற்கு நீங்கள் தான் இசையமைப்பாளர் என்று சொன்னார். இவ்வளவு பவர்ஃபுல்லான திரைப்படத்திற்கு என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சசி சாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தின் இசை சிறப்பாக அமைந்ததற்கும் இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனியின் வழிகாட்டுதல் தான் முதன்மையான காரணம்,” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”பொதுவாக இயக்குநர்கள் ஒரு படத்தை இயக்கினால் அந்தப் படத்தின் டைட்டில் அவர்களுடைய பெயருடன் சேரும். ஆனால் இயக்குநர் சசிக்கு மட்டும் தான் அந்தந்த படத்தின் பெயர் சேரும். ஏனெனில் எல்லா படங்களையும் அவர் தன்னுடைய முதல் படத்தை போலவே முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்து உருவாக்குகிறார்.

எங்கள் இருவருக்கும் ஒரு பொதுவான விஷயம் இருக்கிறது. நாங்கள் இருவரும் இயக்குநர் கதிரிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறோம்.

இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். இப்போதுதான் சசி சாரின் திரைப்பயணத்தை பற்றி குறிப்பிட்டார்கள். இத்தனை ஆண்டுகால அனுபவம் பெற்றவரின் படைப்பு போல் தெரியவில்லை. ஒரு புது இயக்குநரின் படைப்பு போல் இவ்வளவு சுவாரசியமாக இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களை கவரும் வகையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருந்தது. இதுதான் அவருடைய தனித்துவம்.

பொதுவாகவே அவருடைய படங்களில் நடிகர்கள் தங்களது திறமையை நன்றாக வெளிப்படுத்துவார்கள். இந்த படத்திலும் அனைத்து நடிகர்கள், நடிகைகளும் தங்களது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அனைவரையும் வாழ்த்துகிறேன். இந்தப் படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில்,” ‘நூறு சாமி’ படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைவிட இயக்குநர் சசியை எனக்கு மிகவும் பிடிக்கும்.
நான் உதவி இயக்குநராக வேண்டும் என வாய்ப்பை தேடும் தருணத்தில் என்னை முதன் முதலாக அமர வைத்து பேசி, சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு நம்பிக்கையை வழங்கியவர் இயக்குநர் சசி. அந்த தருணத்தில் என்னிடம் அவர் மிகவும் எளிமையான ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு என்னால் உடனடியாக பதிலளிக்க இயலவில்லை. சிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் சந்தித்து அவர் கேட்ட கேள்விக்கான பதிலை அளித்தேன். அப்போது அவர் உன்னிடம் நல்லதொரு குவாலிட்டி இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய். வாய்ப்பு கிடைக்கும் என்றார். அவரிடம் கற்றுக்கொண்ட இந்தப் பாடத்தை இன்று வரை என் வாழ்வில் கடைப்பிடித்து வருகிறேன். என்னை தேடி வாய்ப்பு கேட்டு வரும் உதவி இயக்குநர்களை நேரில் சந்தித்து பேசி அவர்களுக்கு நம்பிக்கையை வழங்குகிறேன்.

நான் மிகவும் உணர்வுப்பூர்வமான நபர் தான். சிறிய விஷயங்கள் கூட என்னை மிகவும் உணர்வுப்பூர்வமாக மாற்றிவிடும். ‘நூறு சாமி’ படத்தை பார்க்கும் போது பல இடங்களில் என்னால் எளிதாக படைப்புடன் தொடர்பு கொள்ள முடிந்தது. இந்தப் படத்தில் நடிகை சுவாசிகா அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

படத்தில் இடம் பிடித்த நிறைய விஷயங்கள் எனக்கு பிடித்திருந்தது. படத்தில் பேசப்பட்ட விஷயங்களுக்கு இன்றைக்கும் அதற்கான வேல்யூ இருக்கிறது. அதைப்பற்றி நாம் இன்றும் விவாதிக்க வேண்டிய தேவை இருக்கிறது. சமூகத்தில் இதுபோன்ற மாற்றங்கள் உருவாக வேண்டும் என்ற சூழலும் இருக்கிறது. அழுத்தமாகவும். எளிமையாகவும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் இந்தப் படம் இருக்கும் என்று நம்புகிறேன். ரசிகர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் ‘சீலிங் ஃபேன்’ காட்சியை மிகவும் ரசித்தேன். இது என்னுடைய வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்துடன் என்னால் உளவியல் ரீதியாக இணைத்து பார்க்க முடிந்தது.

சசி சார் எத்தனையோ படங்களை இதுவரை இயக்கியிருக்கிறார். ஆனால் இந்த படத்திற்குத்தான் எனக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். எனக்கு அழைப்பு விடுக்கும் போது, ‘இந்த படம் உங்களுக்கு பிடிக்கும். நிச்சயம் வாருங்கள்’ என்றார். அதேபோல் படத்தை பார்த்தேன். மிகவும் நன்றாக இருக்கிறது. இப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் பேசுகையில், ”இந்தப் படத்தில் சிறப்பான விஷயங்கள் நிறைய இருக்கிறது. நான் பிறந்த ஊரில் நடந்த நிஜ கதை. ஒரு உண்மை சம்பவத்தை படமாக இயக்கியிருக்கிறார் நண்பர் சசி.  இது போன்றதொரு கஷ்டமான கதையை தயாரித்து நடிக்க ஒப்புக்கொண்டதற்காக விஜய் ஆண்டனிக்கும் நன்றி. படத்தின் உச்சகட்ட காட்சியை பார்க்கும் போது ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ..! என்ற பதைபதைப்பு எனக்குள் ஏற்பட்டது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத ஒரு காட்சியை அமைத்து படத்தை  சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். உச்சகட்ட காட்சியில் ஒரு பதட்டம் இருந்தது.

விஜய் ஆண்டனியை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தும் போது நானும் அவருடன் இருக்கிறேன். இதற்காக அவர் ஒரு கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டார். இருப்பினும் ஒரு தொழில்நுட்பக் கலைஞரை அறிமுகப்படுத்துவதில் அவருக்கு இருந்த ஆர்வமும், உறுதியும் அப்போது எனக்கு வியப்பாக இருந்தது.

இந்தப் படத்தில் அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக சுவாசிகா மிக நன்றாக நடித்திருக்கிறார். பாலு மகேந்திரா படத்தில் ஷோபா எப்படி சிறப்பாக நடித்திருப்பாரோ..! அதேபோன்று இந்த படத்தில் சுவாசிகா நன்றாக நடித்திருக்கிறார்.

பாடலில் சின்ன சின்ன விஷயங்களில் கூட அற்புதமான நடித்திருப்பார். வலி- அவமானம்- என அனைத்து துயரங்களையும் அற்புதமாக முகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். எனக்குத் தெரிந்து இந்த ஆண்டு ராதிகா மேடத்திற்கும், சுவாசிகாவிற்கும் தான் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன்.

எனக்கு முன்னால் சசி இயக்குநராகிவிட்டார். ஒரு சமயம் அவரிடம் நான் இயக்குநராவதற்காக வாய்ப்பை தேடுகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர் , ‘எந்த சூழலிலும் பசியுடன் இருக்காதே. ஏதேனும் நெருக்கடி என்றால்.. என்னை சந்திக்கவும்’ என்று நம்பிக்கை அளித்தார். அப்போது என் மனதில் ஒரு சந்தோஷம் உண்டானது. நாம் உதவி கேட்கிறோமோ… இல்லையோ… நான் உதவ தயார் என்று ஒருவர் சொல்லும் போது மனதில் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் உருவாகும்.  நாம் கூப்பிட்டால் கடவுள் வந்துவிடுவார் என்றால்… நாம் கடவுளை கூப்பிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆனால் நான் கூப்பிட்டால் கடவுள் வருவார் என்ற மன மகிழ்ச்சி இருக்கிறதல்லவா..! நம் முதல்வரின் போன் எண் நம்மிடம் இருக்கிறது என்றால் ..ஒரு  தைரியம் வரும் அல்லவா.. அவருடன் நான் தொடர்பு கொள்கிறோமோ… இல்லையோ… நம்மிடம் அவருடைய தொடர்பு எண் இருக்கிறது. ..என்ற ஒரு மகிழ்ச்சி இருக்கிறதல்லவா.. !அதுபோன்ற சந்தோஷத்தை எனக்கு கொடுத்தவர் சசி.

என்னுடைய முதல் திரைப்படமான தீனா திரைப்படத்தை இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நடத்திய பிறகு கைவிட்டு விடலாமா..! என்ற குழப்பம் ஏற்பட்டது. அப்போது ஒரு விழாவில் இயக்குநர் சசியை சந்தித்தேன். இயக்குநராகி விட்டதற்கு வாழ்த்து தெரிவித்த அவரிடம் ‘இந்தப் படத்தின் பணிகள் இனி நடைபெறாது’ என்று அப்போது நடைபெற்ற விசயங்களையும்.. என் மனதில் உள்ள குழப்பத்தையும்.. அவரிடம் சொன்னேன். ‘படத்தை வேண்டாம் என்று சொல்லிவிட்டால்.. அதுவே தோல்விக்கான அர்த்தம். போராடு. நீ நினைத்ததை நூறு சதவீதம் திரையில் வந்து விட வேண்டும் என்று நினைக்காதே. எழுபது சதவீதம் வந்தால் போதும். மற்றவற்றை ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்’ என்று எனக்கு நம்பிக்கை அளித்தார். அதன் பிறகு தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன்.

சமூக நீதியை பற்றி பேசுகின்ற வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரின் படங்களை விட இந்தப் படத்தில் நிறைய விசயங்கள் பேசப்பட்டிருக்கிறது. நம் வீட்டிலேயே ஆண் -பெண் என்ற வித்தியாசம்  இருக்கிறது. ஒரு ஆணுக்கு எளிதாக கிடைக்கும் பல விசயங்கள்.. பெண்களுக்கு அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. இந்த விசயத்தை சசி அற்புதமாக சொல்லி இருக்கிறார். இந்தப் படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாக இருந்தது. ரசிகர்களாகிய உங்களுக்கும் இந்த படம் மனதிற்கு நெருக்கமாகி பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், ” நான் வாழ்க்கையில் பார்த்த நூறு சாமிகளில் ஒரு சாமி  இயக்குநர் சசி. சினிமாவில் சாமிகள் கிடையாது. மிகவும் கம்மி. ஒரு பத்து பேர் தேறுவார்களா..! என்பதே  சந்தேகம். என்னுடைய 30 ஆண்டுகால சினிமா அனுபவத்தில் மாதத்திற்கு ஒரு முறை என்னுடன் தொடர்பு கொண்டு.. என்னை நேரில் சந்தித்து பேசி.. கட்டி தழுவும் ஒரே சாமி இயக்குநர் சசி.

சினிமாவில் நுழைந்து என்ன செய்யப் போகிறோம் என்றால்.. ஒரு தேசிய விருதை வாங்குவோம். ஒரு பத்து ஃபிலிம் ஃபேர் விருதுகள் வாங்குவோம். இல்லை என்றால்.. ஒரு ஆஸ்கார் விருதை வாங்குவோம். ஆனால் ஒரு நாள் மரணித்து விடுவோம். ஆனால் சசி சாகவே மாட்டார். அவர் ஒரு சாமி.

நான் சசியிடம் உதவியாளராக சேர்வதற்காக அவரை சந்தித்தேன். அவர் பத்து நிமிடம் பேசிவிட்டு, தற்போது வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார். மனிதர்களை உற்றுப் பார்த்து கவனித்து அவர்களுக்கு ஏதாவது பிரச்சனையா? என்பதை தாயுள்ளத்துடன் பார்க்கக்கூடிய மனுஷன் சசி.

நான் ஆண்களிடம் அதிசயமாக பார்க்கும் விசயம் என்னவெனில்… அந்த ஆண்களிடம் இருக்கும் பெண்மை தன்மை. சமூகம் ஆண்களை ஆண்களாகவே பார்க்கிறது. பெண்களை பெண்களாகவே பார்க்கிறது.

பெண்மை தன்மை யாரிடமெல்லாம் அதிகமாக இருக்கிறதோ…! அவர்கள் எல்லாம் மிகச் சிறப்பானவர்கள். இசைஞானி இளையராஜா – ஏ ஆர் ரகுமான் போன்றவர்களிடம் இது போன்ற பெண்மை தன்மை அதிகமாக இருக்கும். இதனால் தான் இவர்கள் மிகச் சிறந்த படைப்பாளிகளாக இருக்கிறார்கள். அப்படியானதொரு மிகச் சிறந்த பெண்மை தன்மையுடன் மனித நேயம் கொண்டவர் தான் சசி.

இந்தப் படத்தின் கதையை எழுதி நிறைவு செய்தவுடன் என்னுடைய மூன்று உதவியாளர்களுக்கு இந்த கதையை அவர் விவரித்தார். அவரின் இத்தகைய அணுகுமுறை.. அவர் மனித வாழ்க்கையை உற்று நோக்குவதன் மூலமே கிடைக்கிறது என நினைக்கிறேன். அதன் பிறகு நாங்கள் அனைவரும் இந்த படத்தை பார்த்தோம். பார்த்துவிட்டு விவாதித்தோம். இந்தப் படத்தின் திரைக்கதை மீது எனக்கு மாறுபட்ட பார்வை இருக்கிறது. அதைப்பற்றி சசியிடம் தனியாக விவாதிப்பேன்.

இந்தப் படத்தில் ஒரு தர்மம் இருக்கிறது. இந்த சமுதாயத்தின் விதிகளை எழுதிய ஆண்கள் … இந்த சமுதாயத்தின் சட்ட திட்டங்களை எழுதிய ஆண்கள்… நாம் வாழும் வீதிகளில் இறக்காமல் புதைக்கப்பட்ட பெண்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும்? என்பதை இந்தப் படம் சொல்கிறது” என்றார்.

இயக்குநர் ராஜூ முருகன் பேசுகையில், ” இப்போதெல்லாம் திரைப்படங்களின் இசை வெளியீட்டு விழா.. பெரும்பாலும் மிஷ்கினில் தொடங்கி, மிஷ்கினில் நிறைவடைகிறது.

எல்லோரையும் போல எனக்கும் சசி சாரை மிகவும் பிடிக்கும். இத்தனை ஆண்டு காலமாக தொடர்ந்து நல்ல படைப்புகளை வழங்கி வருவது என்பது மிகப்பெரிய விசயம். அவருடைய எல்லா படத்தில் இருந்தும் ஏதேனும் ஒரு விசயத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும். இந்தப் படத்தில் அவை நிறைய இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்துவிட்டு நான் இரண்டு நாட்கள் ‘டிஸ்டர்ப்டு’ ஆக இருந்தேன்.

சுனிதா வில்லியம்ஸ் எனும் பெண்மணி விண்வெளிக்கு சென்று 680 நாட்களுக்கு மேல் அங்கு இருந்துள்ளார். இன்றைக்கும் பெண்களை பற்றிய நம்முடைய பார்வை எப்படி இருக்கிறது என்றால்… ஒரு காலத்தில் நாடகத்தில் கட்டியங்காரன் என்பவன் மேடையில் தோன்றி பெண்களைப் பற்றிய விமர்சனங்களை முன்வைப்பான். அதன் பிறகு அச்சு ஊடகம் வெளியான போது.. அது கிசுகிசுவாக மாறியது. அதிலிருந்த பெண்களின் பார்வை இன்னும் மோசமானது. சமூக ஊடகங்கள் தற்போது அதிகமாக மாறி இருக்கும் போது பெண்களைப் பற்றிய பார்வை இன்னும் மோசமானதாக மாறிவிட்டது.

ஒரு கள்ள காதல் தொடர்பான வீடியோவை பதிவேற்றம் செய்தால்… பின்னூட்டத்தில் அந்த பெண்ணைப் பற்றி எதிர்மறை விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அப்போது எனக்கு,’ இந்த நாட்டில் கலாச்சார காவலர்கள் அதிகமாகி விட்டார்களோ..!’ என்று தோன்றியது. ஆனால் கலாச்சார காவலர்கள் அதிகமாக இருக்கும் இந்த தருணத்தில் தான் பெண்களுக்கு எதிரான வன்முறை- பாலியல் வன்கொடுமை -ஆகியவை தினம் தினம் நடந்து கொண்டே இருக்கிறது. இப்படி ஒரு சூழலில் ‘நூறு சாமி’ திரைப்படம் எனக்கு மிக முக்கியமான திரைப்படமாக தோன்றுகிறது.

இந்த படம் ஆண்கள் பார்க்க வேண்டிய பெண்களுக்கான படம். பெண்கள் பார்க்க வேண்டிய ஆண்களுக்கான படம்.

நீண்ட நாள் கழித்து வெளியாகும் அற்புதமான படம் இது. இப்படி ஒரு கதாபாத்திரங்களை உருவாக்கி.. கதையை சொல்ல சசியால் மட்டும்தான் முடியும்.

விஜய் ஆண்டனியின் முகத்தை நினைவுப்படுத்தி பார்த்தால்.. திரில்லர் திரைப்படங்களுக்கான கதையை எழுதுவது தான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் ‘நூறு சாமி’ படத்தை பார்த்த பிறகு, அவருக்காக எந்த கதையை வேண்டுமானாலும் எழுதலாம் என தோன்றும். அவ்வளவு அற்புதமாக இந்த படத்தில் அவர் உட்பட அனைவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை தயாரித்து நடித்திருக்கும் விஜய் ஆண்டனிக்கு நன்றி.

ஃபேனிடம் பேசிக் கொண்டிருக்கும் மனுஷி- தகப்பன்களாக மாறக்கூடிய மகன்கள்-  எங்கேயோ நடை பயணத்தின் போது நம்பிக்கையை விதைக்கும் மோட்சம்- தேசியக் கொடியை தைப்பதற்காக ஒரு பெண்ணின் வலியை பகிர்ந்து கொள்ளும் ஆசிரியர் – அன்பை தன்னுடைய அன்றாட இயல்பாக்கி கொண்ட ஏழுமலை- என ஏராளமான கதாபாத்திரங்களை உருவாக்குவது.. சசியால் மட்டும் தான் முடியும். இந்தப் படம் மிகச் சிறந்த படம். வணிக ரீதியாகவும் வெற்றியை பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேசுகையில், ” இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு தெரியும். ஏனெனில் ‘பூ’ படத்திலிருந்து தொடங்கிய சசி உடனான நட்பு இன்றும் தொடர்கிறது.  இந்த படத்திற்கு முதலில் வேறு ஒரு தயாரிப்பாளர். வேறு ஒரு நடிகர் இருந்தார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே இருந்தது. அந்தத் தருணத்தில் என்னுடன் ஆலோசனை நடத்தினார். இந்தத் தருணத்தில் எங்களுக்கு ஆபத்பாண்டவனாக வந்தவர்தான் விஜய் ஆண்டனி சார்.

இதற்காக அவர் அந்த தயாரிப்பாளருக்கு கொடுக்க வேண்டிய தொகையை முழுமையாக கொடுத்தார். அந்த வகையில் இந்தப் படத்தின் முதல் சாமி விஜய் ஆண்டனி தான்.  இந்தப் படம் இப்படி திரையில் தோன்றுவதற்கு முழு முதற் காரணம் விஜய் ஆண்டனி தான்.
இது தொடர்பாக விஜய் ஆண்டனியிடம் பேசியபோது ‘சசி சாருக்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன்’ என்றார்.

இந்த ஆண்டு நடிகை சுவாசிகாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இது ஒரு ஆர்ட் பிலிம் அல்ல. பக்கா கமர்ஷியல் திரைப்படம். கிளைமாக்ஸ் 20 நிமிடங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும். அந்த வகையில் இந்த படம் வெற்றிகரமான திரைப்படம். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து கொண்டாட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், ” தமிழ் சினிமாவில் 30 வருடங்களாக திரைப்படங்களை இயக்குவது என்பது சாதாரண விசயம் அல்ல. இதற்கு மிகப்பெரிய முயற்சி இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்தை இயக்கியிருக்கும் சசி சாருக்கு என் வாழ்த்துக்கள்.

விஜய் ஆண்டனியின் மியூசிக் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அதைவிட நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும் அதைவிட அவர் தயாரிப்பாளராக இருப்பது ரொம்ப பிடிக்கும். தொடர்ந்து வித்தியாசமான களங்கள்-  வித்தியாசமான படங்கள்-  புது இயக்குநர்கள் – என தொடர்ந்து வெற்றிகளை அளித்து வரும் விஜய் ஆண்டனியின் இந்தப் படமும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் சசி பேசுகையில், ” இந்தப் படத்தில் இரண்டாம் பாதியில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். இப்படத்தின் கதையை கேட்டுவிட்டு, ‘நான் கடைசியில் ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் கூட பரவாயில்லை. நான் இந்த படத்தில் நடிக்கிறேன்’ என்றார்.

இப்போதெல்லாம் படம் தொடங்கி 40 நிமிடத்திற்கு பிறகு தான் ஹீரோ வருகிறார். அதனால் ஒரு படத்தின் வெற்றி பாதிக்கப்படுவதில்லை. அதே போல் இந்த படத்தில் கடைசி 40 நிமிடத்தில் தான் விஜய் ஆண்டனி வருகிறார். கண்டிப்பாக இந்தப் படமும் ஒரு வெற்றிகரமான படமாக தான் இருக்கும். என்னுடைய இந்த உறுதி மொழியை ஏற்று தாராளமாக அனைவரும் ‘நூறு சாமி’ படத்தை காண திரையரங்கத்திற்கு வரலாம்.

இந்தப் படத்திற்கு எனக்கு இரண்டு பாஸ் ( Boss) ஒன்று இந்த கதையை நம்பி முதலீடு செய்து தயாரித்த தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி. இந்த பாஸ்-  படத்தை பார்த்துவிட்டு பாராட்டு தெரிவித்தார்.

என்னுடைய இரண்டாவது பாஸ் ரசிகர்கள். அவர்களும் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியின் பாராட்டை தான் தெரிவிப்பார்கள் என்று நான் நம்பிக்கையுடன் சொல்கிறேன்.

ரசிகர்களிடம் இந்த திரைப்படம் நல்ல திரைப்படம் என்று ஊடகங்களும் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன்.

இந்த கதையை நான் எங்கிருந்து எடுத்தேன் என்றால்… தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடைபெறுகிறது. அந்த ஷோவில் ஒரு அம்மாவும், மகனும் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் பகிர்ந்து கொண்ட விசயத்திலிருந்து தான் இப்படத்தின் கதை உருவானது.

தாயை ஒரு மகன் தெய்வமாகப் பார்த்தான்- அது பிச்சைக்காரன்.

ஒரு மகன், தாயை மனுஷியாக பார்த்தான்- அது நூறு சாமி.

இந்த கதையின் நிஜ நபரான பாஸ்கரை இப்போது மேடைக்கு அழைக்கிறேன். அவருடைய வாழ்வில் நடைபெற்ற விசயங்கள்தான் இப்படத்தின் கதை.

இந்த படத்தைப் பார்த்த பிறகு அனைவரும் தங்களது அம்மாவை மனுஷியாக பார்ப்பார்கள் ” என்றார்.

தயாரிப்பாளர் – நடிகர் விஜய் ஆண்டனி பேசுகையில், ” என்னுடைய வாழ்க்கையில் மூன்று திருப்புமுனைகள்.  அதில் ஒன்று ‘டிஷ்யூம்’ படத்தில் இயக்குநர் சசி எனக்கு வழங்கிய வாய்ப்பு.. இரண்டாவது திருப்புமுனை ‘பிச்சைக்காரன்’. இந்தப் படம் ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறது. மூன்றாவது திருப்புமுனை.. இந்தப் படத்தில் என்னை ‘லவ்வர் பாய்’ ஆக மாற்றியது.  இதன் பிறகு எனக்கு லவ்வர் பாய் கேரக்டர்கள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் ரசிகர்களாகிய உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். பெண்களுக்கு மிக மிக அவசியமான படம். சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய படம். உங்களது வீட்டில் அம்மா -அக்கா- தங்கை- என எல்லாருக்குமான மிக முக்கியமான படம். இந்தப் படம் உங்களை ஒருபோதும் ஏமாற்றாது” என்றார்.

“சன் ஆஃப் தஞ்சை” இந்திய கேமிங்கின் புதிய அத்தியாயம்

தஞ்சையின் தனயன் (சன் ஆஃப் தஞ்சை) என்பது பண்டைய தென்னிந்தியாவின் சோழப் பேரரசில் அமைந்த ஒரு திறந்தவெளி அதிரடி சாகச விளையாட்டாகும். இது சென்னையைத் தளமாகக் கொண்ட ஸ்டுடியோவான அயலெட் ஸ்டுடியோஸால் உருவாக்கப்பட்டது. இந்த விளையாட்டு Xbox Series X|S மற்றும் PS5 தளங்களில் வெளிவரவுள்ளது.

கதை, அரண்மனைச் சுவர்களுக்குள்ளேயே தன் வாழ்நாள் முழுவதையும் உல்லாசத்தில் கழிக்கும் சோழ இளவரசன் விண்ணேந்திரனைப் பின்தொடர்கிறது. தந்தை மரணப் படுக்கையில் இருக்க, எதிரிகள் நெருங்கி வர, அரசு வீழ்ச்சியின் விளிம்பில் நிற்க, மன்னன் ஒரு கடினமான முடிவை எடுத்து, தன் மகனைப் சாதாரண மனிதனாக உலகிற்குள் அனுப்புகிறான். தொடர்ந்து நிகழ்வது, உயிர்ப்புடன் துடிக்கும் பண்டைய தமிழ் உலகில் விண்ணேந்திரனின் பயணம்; அங்கு இந்த இளவரசன், உழவர்கள், வணிகர்கள் மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்ற பிறகே அவர்களை ஆளும் கனவைக் காண முடியும்.

ஒரு மைல்கல் படைப்பாற்றல்

தஞ்சையின் மைந்தன் விளையாட்டின் கதை, திரைக்கதை, வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதுபவர் தமிழ்த் திரையுலகில் மிகவும் கொண்டாடப்படும் எழுத்தாளர்களில் ஒருவரான கவிஞர் மதன் கார்க்கி. எந்திரன், பாகுபலி போன்ற வெற்றிப் படங்கள் உள்பட 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 1000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கான பணியுடன், மதன் கார்க்கி இந்தப் படைப்புக்கு அரிய பண்பாட்டு அறிவையும் கதைசொல்லல் திறனையும் கொண்டு வருகிறார். தஞ்சையின் மைந்தன் அவரது கேமிங் உலகிற்கான முதல் முயற்சியைக் குறிக்கிறது.

மரபில் வேரூன்றிய சண்டை

விளையாட்டின் மையத்தில் இருப்பது சுருள் வாள். தென்னிந்தியப் போர்க்கலை வரலாற்றிலிருந்து எடுக்கப்பட்டு, இதுவரை எந்த முக்கிய விளையாட்டிலும் இடம்பெறாத ஒன்று. உலகின் மிகப் பழமையான தற்காப்புக் கலைகளில் ஒன்றாகக் கருதப்படும் களரிப்பயற்றின் அடிப்படையில் சண்டை அமைப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது; இது விளையாட்டுக்கு வரலாற்று அடித்தளமும், இன்றைய கேமிங்கில் இதுவரை காணாத ஒரு போர்முறையையும் வழங்குகிறது.

உலகுக்கான தமிழ்

தஞ்சையின் தனயன் தமிழில், ஆங்கில வசன வரிகளுடன் வெளியிடப்படும். இது ஆட்டத்திற்கு எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான தேர்வாகும். முதல் முறையாக, உலகெங்கிலும் உள்ள விளையாட்டாளர்கள் முழுக்க முழுக்க தமிழில் பேசப்படும் ஒரு முக்கிய விளையாட்டை அனுபவிப்பார்கள். பண்டைய தென்னிந்தியாவின் மொழி, பண்பாடு மற்றும் நிலப்பரப்பை உள்ளிருந்தே உணர்வார்கள்.

வாழத் தகுந்த ஓர் உலகம்

சென்னையில் உள்ள அயலெட் ஸ்டுடியோஸின் 30 பேர் கொண்ட குழுவால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு, சோழ காலத்தின் நெல் வயல்கள், கடலோரத் துறைமுகங்கள், அடர்ந்த காடுகள் மற்றும் வறண்ட எல்லைப் பகுதிகளை உயிர்ப்பிக்கிறது. ஊர் மன்றங்களில் தெருக்கூத்து நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கள்ளுக் கடைகள் வதந்திகளால் சலசலக்கின்றன. அன்றாட கைவினைகளும் சடங்குகளும் உலகை உயிர்ப்புடன் நிரப்புகின்றன. இது ஒரு பின்னணி அல்ல. இதுவே விளையாட்டின் இதயம்.
விளையாட்டின் அறிமுக டிரெய்லர் இப்போது வெளியாகியுள்ளது; சர்வதேச கேமிங் சமூகத்திடமிருந்து வலுவான வரவேற்பைப் பெற்று வருகிறது.

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம்

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் :  பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

நடிகையும், இயக்குநருமான கீது மோகன்தாஸின் பிறந்த நாளை முன்னிட்டு, ‘டாக்ஸிக்’ படக் குழுவினர் ஒரு பிரத்யேக படப்பிடிப்பு தள காணொலியை பகிர்ந்துள்ளனர். இது அந்த திரைப்பட இயக்குநரின் படைப்பு சார்ந்த செயலாக்கத்தையும்… ஆளுமை மிக்க அவரது இருப்பையும்… காண்பதற்கு பார்வையாளர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

இந்த பிறந்த நாளுக்கான சிறப்பு காணொலியில் கீது மோகன்தாஸ் – தனது இயல்பான பாணியில் செயலாற்றுவதை காட்சிப்படுத்துகிறது. காட்சிகளை தீர்மானிப்பது – பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை ஒருங்கிணைப்பது – நடிப்பை வழி நடத்துவது மற்றும் ஒரு மிகப்பெரிய படக்குழுவினை நம்பிக்கையுடனும் துல்லிய தன்மையுடனும் வழிநடத்துவது- என பல விசயங்களையும் காணலாம் .

”வித்தியாசமாகத் தாக்கிய ஒவ்வொரு காட்சியின் பின்னாலும்.. வசனங்களை விட.. உரையாடலை விட அதிகமாகப் பேசிய ஒவ்வொரு மௌனத்திலும், அவர் இருந்தார்! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கீது மோகன்தாஸ்” என்ற செய்தியுடன் வெளியிடப்பட்டுள்ள இந்த காணொலி-  இந்திய திரையுலகில் உருவாக்கப்பட்ட மிகவும் பிரம்மாண்டமான படங்களில் ஒன்றான ‘டாக்ஸிக்’ படத்திற்கு உயிர் கொடுத்த அந்த திரைப்பட இயக்குநரையும்.. அவரது ஆளுமை மிக்க நேரடியான கள அணுகுமுறையையும் கொண்டாடுகிறது.‌

ஒரு சாதாரணமான படப்பிடிப்பு தள காட்சியை விட ..மேலான இந்த காணொலி- கீது மோகன் தாஸின் அசத்தலான செயல்பாட்டினை பிரதிபலிப்பதுடன்… படத்தின் பிரம்மாண்டத்தையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்தியாவில் இவ்வளவு பெரிய மற்றும் உலகளாவிய அளவிலான ஒரு திரைப்படத்தை இயக்கிய மிக சில பெண் திரைப்பட இயக்குநர்களில் ஒருவராக… அவர் ஒரு பிரம்மாண்டமான தயாரிப்பின் மையத்தில் நின்று.. நம்பிக்கையுடன் முன் நின்று வழிநடத்தி திரைப்பட தயாரிப்பு செயல்முறையில் ஒவ்வொரு அம்சத்தையும் விரிவாக திட்டமிட்டு செயல்படுத்தி இயக்குகிறார். பரந்து விரிந்த அரங்கங்கள்- சிக்கலான நுட்பமான சண்டைக் காட்சிகள் மற்றும் சர்வதேச அளவிலான தயாரிப்பு மதிப்பு ஆகியவற்றை கையாளும்போது படைப்பின் தொலைநோக்குப் பார்வையையும்… செயல்பாட்டு கட்டுப்பாட்டையும்.. சமநிலைப்படுத்தி, ஒவ்வொரு விசயத்திலும் ஆழ்ந்து கவனம் செலுத்தும் ஒரு இயக்குநரின் செயல்பாடுகளை… இந்த காணொலியில் உள்ள காட்சிகள் பறைசாற்றுகின்றன.

கீது மோகன்தாஸ் இயக்கிய ‘டாக்ஸிக் : எ ஃபேரிடேல் ஃபார்  கிரோன்  -அப்ஸ் ‘ (( Toxic: A Fairy Tale for Grownups )திரைப்படத்தில் யாஷ் உடன் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி,  , ருக்மணி வசந்த் , தாரா சுதாரியா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. வி. என் புரொடக்ஷன்ஸ் (KVN Productions )  மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேசன்ஸ் ( Monster Mind Creations )  ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம்-  அதன் பிரம்மாண்டம்… தனித்துவம்… ஆகிய காரணங்களால் தொடர்ந்து தலைப்பு செய்திகளில் இடம் பிடித்து வருகிறது. இந்திய திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த சினிமாவை ரசிகர்கள் திரையரங்குகளில் கண்டு ரசித்து கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில் இப்படம் விரைவில் உலகெங்கிலும் வெளியாக உள்ளது.

“ஸ்லம் டாக் 33 டெம்பிள் ரோட்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் பிரம்மாண்ட டீசர் வெளியீட்டு விழா சென்னை நகரில் உற்சாகமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினர், ஊடகத்தினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

நிகழ்வில் இயக்குநர் பூரி ஜெகன்நாத், தயாரிப்பாளர் சார்மி கௌர், நடிகர் விஜய் சேதுபதி, உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று ஊடகங்களையும் ரசிகர்களையும் சந்தித்தனர்.

டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள “ஸ்லம் டாக்” திரைப்படம் குறித்து நிகழ்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா பேசியதாவது:

ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.

இது தயாரிப்பாளராக எனது முதல் திரைப்படம். இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார் மற்றும் சார்மி மேடம் ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகருடன் எனது முதல் திரைப்படத்தை தொடங்கியிருப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

கதாநாயகி சம்யுக்தா, தபு மேடம், துனியா விஜய் சார் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் எனது நன்றிகள். விஷ்வா, விடிவி கணேஷ், பிரம்மாஜி மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் மிகப்பெரிய பொறுப்பு ஊடகங்கள் மற்றும் பத்திரிகை நண்பர்களின் கைகளில் உள்ளது. எங்களது படைப்பை மக்களிடம் கொண்டு செல்ல நீங்கள் வழங்கும் ஆதரவுக்கு முன்கூட்டியே நன்றி தெரிவிக்கிறேன். மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் என் நன்றிகள். நன்றி.” என்றார்.

தயாரிப்பாளர் சார்மி கௌர் பேசியதாவது:

“இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை ஊடக நண்பர்கள் அனைவரையும் மீண்டும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அதே இடம், அதே முகங்கள், அதே புன்னகைகள். 2002-ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அப்போது ஊடக நண்பர்களை சந்தித்தேன். அதன் பிறகு பல படங்களில் நடித்தேன். உங்கள் அனைவரிடமிருந்தும் நிறைய அன்பைப் பெற்றேன். இன்றும் உங்களை சந்தித்து பேசும்போது, அந்த பாசமும், நெருக்கமும் இன்னும் மாறாமல் இருப்பதை உணர்கிறேன்.”

”‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சென்னை வந்துள்ளேன். ஆனால் இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக. எங்கள் Puri Connects நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளோம். ஆனால் நேரடி தமிழ் திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது.”

”‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள். பூரி ஜெகன்நாத் சாரின் திரைக்கதை சொல்லும் விதமும், விஜய் சேதுபதி சாரின் நடிப்பும் இணைந்து இந்தப் படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன.”

“விஜய் சேதுபதி சார் முதலில் ஒரு சிறந்த நடிகர். அதே நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமும் கூட. ஒரு திரைப்படத்திற்கு நடிப்பு திறமையும், வணிக ரீதியான மதிப்பும் ஒருசேர தேவைப்படும் போது, அந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் நடிகர் அவர். இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த முறையில் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று உறுதியளிக்கிறேன்.”

“தபு மேடத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அவரைத்தான் நினைத்திருந்தோம். கதையை கேட்டவுடனேயே அவர் சம்மதித்தார். தனது கதாபாத்திரம் மட்டுமல்லாமல், முழுக் கதையையும் பாராட்டி எங்களுக்கு நம்பிக்கையளித்தார். இன்றுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.”

“துனியா விஜய் சார் இந்தப் படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையை கேட்டவுடனேயே உடனடியாக ஒப்புக்கொண்டார். தனது படப்பிடிப்பு தேதிகளையும் எங்களுக்காக மாற்றி அமைத்துக் கொடுத்தார். அவருடைய ஒத்துழைப்பிற்கும், அன்பிற்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்போம்.”

“சம்யுக்தாவை முதன்முதலில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. கதாபாத்திரத்திற்கு மிகவும் இயல்பான தோற்றமும், நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை தேவைப்பட்டது. சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தை மிக அழகாக உயிர்ப்பித்தார். அவருடைய இயல்பான நடிப்பும், எளிமையான தோற்றமும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.”

“விடிவி கணேஷ் சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அவருடைய வீடியோக்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.”

“இந்தப் படத்தில் பிரம்மாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.”

“எங்கள் நிறுவனத்தின் CEO விஷு ரெட்டிக்கு சிறப்பு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கு எந்தவிதமான அழுத்தமும் வராமல் பார்த்துக் கொண்டவர் அவர். தயாரிப்பு, மார்க்கெட்டிங், விற்பனை, விளம்பரம் என அனைத்து துறைகளையும் ஒரே நேரத்தில் கவனித்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியுள்ளார். அவருடைய உழைப்பிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது.”

“இந்தப் படத்தை ஆதரித்த ஜேபி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் முழு படக்குழுவிற்கும் என் நன்றிகள். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ரசிகர்களை பெரிதும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் மூலம் உங்களை பெருமைப்படுத்துவோம்.” என்றார்.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் பேசியதாவது..,

“இந்த நிகழ்வில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். முதலில் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியவர் அவர்தான். அவர் ஒரு மிகப்பெரிய லெஜெண்ட். ஆரம்பத்தில் அவருடன் பணியாற்றுவது எனக்கு சற்று பயமாகவும், பதட்டமாகவும் இருந்தது. ஆனால் அவருடன் இணைந்து பணியாற்றியபோது அது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக மாறியது. இந்த வாய்ப்பிற்காக அவருக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல் சார்மி மேடத்திற்கும் நன்றி. அவர் அனைவரையும் மிகவும் அன்பாகவும், எளிமையாகவும் கவனித்துக் கொண்டார். விஜய் சேதுபதி சாருக்கும், சுமிதா மேடத்திற்கும் என் நன்றிகள்.

இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய வகையில் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இது ஒரு இனிய ஆச்சரியமாக இருக்கும். பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் நிறைய புதுமைகளை கொண்டு வர முயற்சித்துள்ளோம். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.”.

நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது:

“இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு திடீரென வந்தது. ஒரு நாள் பூரி ஜெகன்நாத் சார் அழைத்தார். உடனே எனக்கு நினைவுக்கு வந்தது ‘போக்கிரி’. இன்றைய தமிழக முதலமைச்சர் நடித்த அந்த பிரம்மாண்ட வெற்றிப் படத்தின் ஒரிஜினலை இயக்கியவர் அவர்தான். அதோடு பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்த மிகப்பெரிய இயக்குநர். என் மேனேஜரும் அவரைப் பற்றி நிறைய சொல்லியிருந்தார். அதனால் அவரை சந்திக்கும்போது ஒரு விதமான எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் நேரில் சந்தித்தபோது, அவ்வளவு பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல், மிகவும் எளிமையான, மென்மையான மனிதராக அவரை பார்த்தேன். அவருடன் அமர்ந்து பேசியதும், ஒன்றாக உணவருந்தியதும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் பற்றிய விவரங்களை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதை நடித்தபோதே மிகவும் ரசித்தேன். பூரி சார் நடிகர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

“தபு மேடம் ரசிகன் நான் அவருடைய அன்பையும் அவர் குழுவினரின் அன்பை நான் மறக்க முடியாது. குறிப்பாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, தினமும் எங்களுக்கு அவர் அனுப்பிய உணவுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். மட்டன், சிக்கன், புலாவ் என பல வகையான உணவுகளை நிறைய அளவில் அனுப்புவார் அவர் கூட நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அந்த அன்பும், உபசரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. படப்பிடிப்பு அனுபவத்தை இன்னும் இனிமையாக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.”

“படப்பிடிப்பின் முதல் நாளிலேயே விஜய் சேதுபதி சாரின் அர்ப்பணிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தெலுங்கு டயலாக்குகளை எழுதி வைத்து மனப்பாடம் செய்வார். கேரவனில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதை விட, வெளியிலேயே அமர்ந்து தொடர்ந்து தனது வேலையில் முழு கவனத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த அர்ப்பணிப்பைப் பார்த்தபோது, நான் முன்பு பணியாற்றிய இன்றைய தமிழக முதலமைச்சரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நினைவுக்கு வந்தது. அதே அளவிலான ஈடுபாட்டையும், உழைப்பையும் விஜய் சேதுபதி சாரிடமும் பார்த்தேன்.

அதனால்தான் இன்று அவர் இந்திய அளவில் ஒரு வெற்றிகரமான நடிகராக திகழ்கிறார். இந்த உயரத்தை அடைவதற்கு திறமை மட்டுமல்ல, கடின உழைப்பும், பொறுமையும் அவசியம். சரியான நேரம் வரும்வரை காத்திருந்து தொடர்ந்து உழைத்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்.

இந்தப் படம் வெளியான பிறகு, குறிப்பாக தெலுங்கு ரசிகர்களும் அவருடைய நடிப்பை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். தமிழ், தெலுங்கு என எந்த மொழியாக இருந்தாலும் அவர் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அவருடைய திறமையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் வகையில் பூரி சார் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

நடிகர்கள் அனைவரிடமிருந்தும் சிறந்த நடிப்பை வாங்கிக் கொள்ளும் திறமை பூரி சாருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் செயல்படுவார். கலைஞர்களை சரியான நேரத்தில் அழைத்து, திட்டமிட்டபடி பணிகளை முடித்து விடுவார். அந்த தொழில்முறை அணுகுமுறையே அவரை இந்த உயரத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்தேன். படக்குழுவில் இருந்த உதவி இயக்குநர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப் படத்திற்காக மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. டீசரிலேயே அதன் தரம் தெரிகிறது.

‘ஸ்லம் டாக்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுகள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகை சம்யுக்தா பேசியதாவது..,

“பூரி ஜெகன்நாத் சாருடன் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியை மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இயக்கக்கூடியவர் அவர். இயக்கம் என்பது ஒரு கலை. அதை அவர் மிகவும் இயல்பாக கையாள்கிறார். சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, கலைஞர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணரும் திறமை அவருக்கு இருக்கிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.அவரின் ரசிகை நான், ரசிகர்கள் திரையில் ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒரு இணை நடிகையாக, ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறும் அந்த அற்புதமான பயணத்தை நேரில் பார்த்திருக்கிறேன். விஜய் சேதுபதி சார் அந்த மாற்றத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். அவருடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவர் மிகவும் அன்பானவர், எளிமையானவர்.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் உருவாக்கியுள்ள பாடல்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றன. இதுவரை நான் கேட்ட பாடல்களே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முழு ஆல்பத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.

எங்கள் தயாரிப்பாளர்களுக்கு சார்மி மேடமுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அவர்கள் இந்த படத்தில் பணத்தை மட்டும் முதலீடு செய்யவில்லை; தங்களது நேரம், உணர்வுகள் மற்றும் முழு அர்ப்பணிப்பையும் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக சார்மி மேம், படத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் நேரடியாக ஈடுபட்டு பணியாற்றியுள்ளார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதில் அவர் எப்போதும் அக்கறை கொண்டிருந்தார். அவரது விருந்தோம்பலும், அன்பான அணுகுமுறையும் அனைவரையும் கவர்ந்தது.

ஜேபி சாருக்கும், முழு தயாரிப்புக் குழுவிற்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். நானும் இப்போதுதான் டீசரை பார்த்தேன். முழு படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறேன்.

மேலும் பூரி ஜெகன்நாத் சாருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காத்திருப்பார்கள். அவரது பெயரையே கொண்டாடும் ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநராக அவர் உருவாக்கியிருக்கும் அந்த பிராண்ட் மதிப்பே அவருடைய வெற்றிக்கு சான்று. முழு படத்தையும் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.” என்றார்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் பேசியதாவது..,

“தமிழ் ஊடக நண்பர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் எனது முதல் நேரடி தமிழ் திரைப்படம். இந்த வாய்ப்பை அளித்த விஜய் சேதுபதி சாருக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

ஒரு இயக்குநராக, விஜய் சேதுபதி போன்ற திறமையான நடிகர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் இணைந்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். அவரைப் பற்றி என்னை மிகவும் கவர்ந்தது அவரது எளிமை. எப்போதும் மிகவும் இயல்பாகவும், எளிமையான மனிதராகவும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமுக நடிகரைப் போலவே உற்சாகத்துடன் வருவார். அவரது நடிப்பில் ஒரு துளி கர்வத்தைக் கூட பார்க்க முடியாது. அந்த குணங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. இந்த படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான, சக்திவாய்ந்த விஜய் சேதுபதியை காண்பார்கள்.

சம்யுக்தாவுடன் முதல் முறையாக பணியாற்றினேன். அவர் மிகவும் உற்சாகமானவர். இந்த படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் விடிவி கணேஷ் சார் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருப்பார். அவர் இருக்கும் இடத்தில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருக்கும். மிகவும் பாஸிடிவான மனிதர்.

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான துனியா விஜய் இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் ஜரீனா வஹாப் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.

பிரம்மாஜி, ரோஹன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். இந்த படத்தின் நடிகர் தேர்வுக்கான பெருமை முழுவதும் சார்மி கௌருக்கே சேரும். இந்த படத்திற்காக மிகச் சிறந்த நடிகர் பட்டாளத்தை அவர் ஒருங்கிணைத்துள்ளார்.

தயாரிப்பாளர்களான ஜேபி நாராயண ராவ் மற்றும் மகேந்திர ராவ் ஆகியோருக்கு எனது நன்றிகள். அவர்கள் திரைப்படத் துறையில் புதியவர்களாக இருந்தாலும், இந்த படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர். மேலும், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் அற்புதமான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் கதை இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பிச்சைக்காரர்களைக் கடந்து செல்கிறோம். ஆனால் அவர்களின் பின்னால் இருக்கும் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் கதைகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த மனிதர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.

இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; வலுவான உணர்வுகளையும் கொண்ட திரைப்படம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம். அனைவரும் குடும்பத்துடன் திரையரங்கில் வந்து இந்த படத்தை பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி.” என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது..,

“இங்கு வந்திருக்கும் ஊடக நண்பர்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் படத்தைப் பற்றியும், தங்களது அனுபவங்களைப் பற்றியும் மிகவும் அழகாக பகிர்ந்து கொண்டார்கள். அதை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

முதலில் துனியா விஜய் சாரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். கன்னடத்தில் அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது, மிகவும் ஒழுக்கமான, அர்ப்பணிப்பான நடிகராக இருந்தார். இயக்குநர் சொல்வதை முழுமையாகக் கேட்டு, அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொள்வார். அவர் ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நடிகர். அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.

விடிவி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். அவரைப் பற்றி எனக்கு இருந்த எண்ணம் வேறு, ஆனால் அவருடன் இணைந்து நடித்த பிறகு அவருடைய நடிப்பு திறமையை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு காட்சியை எப்படி இன்னும் சிறப்பாக மாற்றலாம் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்திலும், திரையிலும் அனைவரையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞர். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் உற்சாகம் இருக்கும்.

சம்யுக்தாவுக்கு நன்றி. மிகவும் திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை. ஒரு கதாபாத்திரத்தை விரைவாகப் புரிந்து கொண்டு, அதை மிக இயல்பாக வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இருக்கிறது. படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. இன்று இந்த மேடையில் அவர் பேசிய விதமும் மிகவும் அழகாக இருந்தது.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். நான் தற்போது டீசர் இசையை மட்டுமே கேட்டிருக்கிறேன். அது மிகவும் சிறப்பாக இருந்தது. படத்தின் முழு இசை ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நம்புகிறேன்.

“முதலில் சார்மி மேடத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும், அதை மிகுந்த அமைதியுடனும் உறுதியுடனும் கையாண்டார். ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், முழு படத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக செயல்பட்டார். இயக்குநருக்கு என்ன தேவை, அதை எப்படி சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார். இன்று நீங்கள் திரையில் பார்க்கப் போகும் இந்தப் படத்தின் தரத்தில் அவருடைய பங்கு மிகப்பெரியது. அவருடைய மன உறுதியையும், அர்ப்பணிப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.”

“பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு. அவருடைய சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.”

“ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதை திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு ஃபிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும்போது ஒரு நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும். ‘நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் கொடுப்பார்.”

படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக்சன், உணர்வுகள், மனித உறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன. பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் அவருடைய ஈடுபாடும், நம்பிக்கையும், உழைப்பும் மிகத் தெளிவாக தெரிகிறது.”*

“இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். இயக்குநர் மற்றும் நடிகர் இடையே உருவாகும் அந்த நம்பிக்கையும், புரிதலும் இந்தப் படத்தில் மிகவும் அழகாக அமைந்தது. பூரி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது. அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.”

”‘ஸ்லம் டாக்’ திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த படத்திற்காக உழைத்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்‘

விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.

“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

‘சிங் கீதம்’ நான் தயாரிக்க விரும்பிய படம்!

  • சிங்கிதம் சார் இப்போதும் ஜென் -ஜி (GenZ) விட முன்னணியில் இருக்கிறார் ஜென் -ஜி
  • உலகநாயகன் கமல்ஹாசன்

“சிங் கீதம் மூலம் எனது 40 வருடக் கனவு நனவாகியுள்ளது. இந்தப் படத்தின் முழுப் பெருமையும் நாக் அஸ்வினையே சாரும். வைஜயந்தி மூவிஸும் நாக் அஸ்வினும் என் மீது மிகுந்த அன்பையும் பாசத்தையும் காட்டியுள்ளனர்”

  • பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ்

சிங்கீதம் அவர்களின் பாராட்டு ஒரு ஆஸ்கர் விருது பெற்றது போல் உணர்கிறேன்

  • தேவி ஸ்ரீ பிரசாத்

பழம்பெரும் இயக்குனர் சிங்கிதம் சீனிவாச ராவ் தனது மிகவும் லட்சிய படைப்பான ‘சிங் கீதம்’ படத்துடன் ரசிகர்கள் முன் வருகிறார். நாக் அஸ்வின், வைஜயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா இப்படத்தை தயாரித்தார். அயன், அஹல்யா பம்ரு மற்றும் ஷாலினி கொண்டேபுடி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். “ராக் ஸ்டார்” தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே வெளியிடப்பட்ட ‘சிங் கீதம்’ படத்தின் டீசர் மற்றும் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன் 11 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, படக்குழுவினர் சென்னையில் PreRelease நிகழ்ச்சி நடந்தது. உலகநாயகன் கமல்ஹாசன் இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 நிகழ்ச்சியில்  உலக நாயகன்  கமல்ஹாசன் கூறியதாவது... அனைவருக்கும் வணக்கம். மாயாபஜார் முதல் தற்போதைய "சிங் கீதம்" வரை, சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களிடம் எந்த மாற்றமும் இல்லை. சினிமா அவரிடமே உள்ளது. இது மிகவும் அரிதாக நடக்கும் ஒரு விஷயம். எனக்கு 20 வயதாக இருந்தபோதே அவருடன் பணியாற்றத் தொடங்கினேன். அவருடைய படங்களில் தயாரிப்பாளராகவும், உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளேன். அவருடன் பணியாற்ற வேண்டும் என்பதே என் நோக்கம். பல ஆண்டுகளுக்கு முன்பு, அவர் என்னிடம் இரண்டு கதைகளைச் சொன்னார். அவற்றில் ஒன்று 'புஷ்பக விமானம்' என்ற திரைப்படமாக வெளியானது. இப்போது இரண்டாவது கதை 'சிங் கீதம்' என்ற திரைப்படமாக வெளியாகப் போகிறது. எனக்கு 20 வயதாக இருந்தபோது அந்தக் கதையைக் கேட்டேன். இப்போது எனக்கு 70 வயதாகிறது. இப்போது நான் அந்தப் படத்தைப் பார்க்கப் போகிறேன். சில யோசனைகள், சில கதைகள் காலத்தால் அழியாதவை. சிங்கிதம் சாரின் கதைகளும் அப்படித்தான். அவை காலத்தால் அழியாதவை. பலர் சிங்கிதம் சாரின் பெயரை 'சங்கீதம்' என்று உச்சரிக்கிறார்கள். ஆனால் இந்தப் படத்தின் மூலம், அந்தக் குழப்பம் இருக்காது. இனி எல்லோரும் அவரை ' சிங்கீதம் ' என்றே அழைப்பார்கள். இசை அவர் பெயரில்தான் இருக்கிறது. 'கல்கி' படத்தை ஒரு சூடான ஸ்டுடியோவில் படமாக்கினோம். ஆனால் 'புஷ்பக விமானம்' ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உள்ள ஏசி அறையில் படமாக்கப்பட்டது. 'முழுப் படத்தையும் நாங்கள் ஏர் கண்டிஷனிங்கில் படமாக்கினோம்' என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வோம். அதேபோல், அவருடன் நாங்கள் செய்த 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைப்படத்தை மிகவும் ரசித்தோம். சிங்கிதம் சார் இப்போதும் GenZ  விட முன்னணியில் இருக்கிறார். இன்று அவரைக் கொண்டாடுவது பெரும் மகிழ்ச்சி. நான் இப்போதும் அவருடைய உதவி இயக்குநராக இருக்க விரும்புகிறேன். சினிமா என்பது பேரார்வத்துடன் செய்யப்பட வேண்டிய ஒரு படைப்பு. அவர்கள் இந்தப் படத்தை அத்தகைய பேரார்வத்துடன் பார்வையாளர்களுக்கு கொண்டு வருகிறார்கள். ஒரு படம் பேரார்வத்துடன் உருவாக்கப்பட்டால், அது எதிர்பாராத வெற்றியைத் தரும். புஷ்பக விமானம் அதற்கு ஒரு நல்ல உதாரணம். அந்தப் பேரார்வத்தை நாம் சிங்கிதம் சாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு படம் வெற்றி பெறுமா இல்லையா என்பதை யாராலும் முன்கூட்டியே சொல்ல முடியாது. ஆனால் படம் முடிந்த பிறகுதான் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோமா இல்லையா என்பது நமக்குத் தெரியும். புஷ்பக விமானம், மும்பை எக்ஸ்பிரஸ், அபூர்வ சகோதரர்கள் போன்ற படங்கள் ஒரு நல்ல உணர்வுடன் உருவாக்கப்பட்டன. அத்தகைய உணர்வுடன் வரும் படம் சிங் கீதம். இந்தப் படத்தை நானே தயாரித்தது போல் உணர்கிறேன். நான் ஒரு இணைத் தயாரிப்பாளர் போல் உணர்கிறேன். அது நாகிக்குத் (நாக் அஸ்வின்) தெரியும். சிங்கிதம் சார் மீது எனக்கு எப்போதும் மரியாதை இருக்கும். இந்தப் படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று நான் உணர்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. மூன்று மாதங்களுக்கு முன்பு நீங்கள் சொல்லியிருந்தால், நானும் படக்குழுவில் ஒரு பகுதியாக இருந்திருப்பேன். அந்த வாய்ப்பை நான் தவறவிட்டுவிட்டேன். ஆனால், சிங்கிதம் சார் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. அவருடன் பணிபுரிய மற்றொரு வாய்ப்பு நிச்சயம் வரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி.”

இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ் பேசும்போது… அனைவருக்கும் வணக்கம். இந்தப் படம் எனது 40 வருடக் கனவு. வார்த்தைகளே பாடல்கள் என்றால், இந்தக் கதையை நான் பலரிடம் சொல்லியிருக்கிறேன் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கதை பிறந்தது. ஆனால், தெய்வீக அருளால், நாக் அஸ்வின் தயாரிப்பில் வைஜயந்தி மூவிஸ் இறுதியாக இந்தப் படத்தை உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். இந்தப் படத்தை ஆரம்பம் முதல் இறுதி வரை நான் இயக்கினேன். ஆனால், வைஜயந்தி மூவிஸ் மற்றும் நாக் அஸ்வின் ஆகியோர் படத்தின் தயாரிப்பு தொடர்பான அனைத்துப் பொறுப்புகளையும் மிகுந்த அன்புடன் ஏற்றுக்கொண்டனர். நாக் அஸ்வின் ஒரு உலகப் புகழ்பெற்ற இயக்குநர். இந்தப் படத்தைத் தயாரிக்க அவர் முன்வந்தது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அவர் படத்தை விட என்னை அதிகமாக நேசித்தார். அவர் இந்தப் படத்தை மிகுந்த மரியாதையுடன் போற்றுதலுடனும் தயாரித்தார். இந்தப் படத்தின் பெருமை நாக் அஸ்வினையே சாரும். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தக் கதையை அற்புதமாக புரிந்துகொண்டார். அவரைத் தவிர வேறு யாராலும் இந்தப் படத்திற்கு இத்தகைய அற்புதமான இசையை வழங்கி இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன். நாக் அஸ்வின் எனக்கு மிகுந்த மரியாதை கொடுத்தார். அவர் என்னை ஒரு தந்தையைப் போல நடத்தினார். அவர் காட்டிய அன்பு, பாசம் மற்றும் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அஸ்வினி தத் சார், நாக் அஸ்வின், தேவி ஸ்ரீ பிரசாத் மற்றும் என் அன்புக்குரிய கமல்ஹாசன் ஆகியோருக்கு என் சிறப்பு நன்றிகள். கமல்ஹாசன் இந்த விழாவிற்கு வருவது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவருடன் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு பிணைப்பு உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு வந்த அவருக்கு என் சிறப்பு நன்றிகள்.

தேவி ஸ்ரீ பிரசாத் பேசும்போது… அனைவருக்கும் வணக்கம். கமல்ஹாசன் சார், சிங்கிதம் சார் மற்றும் இங்கு வந்துள்ள அனைவருக்கும் நன்றி. இன்று கமல்ஹாசன் சார் தனது வாழ்க்கை அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டது பெரும் மகிழ்ச்சி அளித்தது. இது ஒரு மைல்கல் அனுபவம். பேரார்வம் பற்றி அவர் கூறியது மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது. அஸ்வினி தத் சார் அற்புதமான திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். அவரை ஒரே வார்த்தையில் விவரிப்பது மிகவும் கடினம். இருப்பினும், அவரைப் பற்றிப் பேச, ‘ஜகதேக வீரடு அதிலோக சுந்தரி’ என்ற ஒரு திரைப்படம் போதுமானது. அதேபோல், சிங்கிதம் சாரைப் பற்றிப் பேச “புஷ்பக விமானம்” என்ற வார்த்தையே போதும். இந்த மூவருக்கும் ஒரு பொதுவான குணம் உண்டு. அவர்கள் எப்போதும் இசைக்குத்தான் முதலிடம் கொடுப்பார்கள். ‘சிங் கீதம்’ படத்திற்கு நான் இசையமைப்பது ஒரு வரம் என்று உணர்கிறேன். இந்தப் படத்தில் ஒரு சிறந்த எழுத்துக் குழு உள்ளது. சிங்கிதம் சாருடன் இந்தக் கதையைப் பற்றி விவாதித்தபோது நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். சிங்கிதம் சார் இதுவரை செய்துள்ள சோதனைகளை வேறு யாரும் செய்ததில்லை. அவர் இன்னும் ஒரு சிறு குழந்தையைப் போலவே பேசுகிறார். அதுதான் அவரிடம் உள்ள சிறந்த குணம். நான் எப்போதும் இது போன்ற ஒரு படத்தை உருவாக்க விரும்பினேன். சிங்கிதம் சாரால் இந்தப் படத்தின் மூலம் அந்த ஆசை நிறைவேறியது. சிறுவயதிலிருந்தே, செய்தித்தாள் கட்டுரைகளை இசையாக மாற்றும் பழக்கம் எனக்கு உண்டு. அந்தப் பழக்கம் இந்தப் படத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது போன்ற வாய்ப்புகள் வாழ்நாளில் ஒருமுறைதான் வரும். ஒரு படத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் ஒரு பாடல் போல ஒலிக்கச் செய்வது மிகவும் சவாலானதாகத் தோன்றியது. அந்த வார்த்தை இன்று ஒரு பாடலாக மாறியுள்ளது. அதுதான் எங்கள் உற்சாகத்திற்குக் காரணம். நான் குறிப்பிட்ட அனைத்து விசித்திரமான யோசனைகளுக்கும் எனக்குப் பெரிதும் ஆதரவளித்த நாகி சாருக்கு நன்றி. மேலும், இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞருக்கும் நன்றி. அனைத்து நடிகர்களும் அற்புதமாக நடித்துள்ளனர். குறிப்பாக, இந்தப் படத்தில் நடித்த அனைவரும் தங்களது சொந்தக் குரலில் பாடியுள்ளனர். எங்கள் குழுவினர் அனைவரும் இந்தப் படத்திற்காக மிகவும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் சிறப்பு நன்றி. இந்தப் படம் பார்வையாளர்களுக்கு நிச்சயம் ஒரு புதிய மற்றும் வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்.

அயன் கூறியதாவது… அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் பிரதாப் கதாபாத்திரத்திற்கு என்னைத் தேர்ந்தெடுத்த சிங்கிதம் சார், விஜயந்தி மூவிஸ் மற்றும் நாக் அஸ்வின் சார் ஆகியோருக்கு நன்றி. சிங் கீதம் போன்ற ஒரு சிறந்த பரிசை எங்களுக்கு வழங்கிய சிங்கிதம் சாருக்கு சிறப்பு நன்றி. என் வாழ்நாள் முழுவதும் என்னை சிங்கிதம் சீனிவாச ராவ் அவர்களின் நாயகன் என்று அழைத்துக்கொள்வதில் பெருமைப்படுவேன். கமல்ஹாசன் சார் ஒரு ஜாம்பவான். அவர்தான் எங்களுக்கு உத்வேகம். தேவி ஸ்ரீ பிரசாத் சார் எங்கள் படத்திற்கு இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் பாக்கியமாக உணர்கிறேன். அவர் இந்தப் படத்திற்கு மிகவும் புதிய வகையான இசையை வழங்கியுள்ளார். இந்த நல்வாய்ப்பில், அனைவரின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி கூறுகிறேன்.

அஹல்யா பம்ரு கூறியதாவது … அனைவருக்கும் வணக்கம். இத்தனை ஜாம்பவான்களுடன் இந்தப் படத்தில் நடிப்பது பெரும் மகிழ்ச்சி. சிங்கிதம் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும் என்று நான் ஒருபோதும் கற்பனை செய்ததில்லை. கமல்ஹாசன் சார் கலந்துகொள்ளும் இந்தக் கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன். நாக் அஸ்வின் அவர்கள் முன்வந்து, எங்களைப் போன்ற புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஸ்வப்னா சினிமா மற்றும் விஜயந்தி மூவிஸ் நிறுவனங்களுக்கு நன்றி. அவர்களால்தான் எங்கள் கனவு நனவானது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன் 11 அன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது.

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!

விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியின் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகிறது!

வித்தியாசமான கதைக்களங்களையும், மாஸ் ஆக்ஷன் படங்களையும் வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் பல்வேறு கதாபாத்திரங்களில் அசத்தி வரும் நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் முதன்முறையாக இணைந்துள்ள பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. இந்த படத்திற்கு “33 Temple Road” என்ற துணைத் தலைப்பும் வழங்கப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், அனைத்து மொழிகளிலும் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இந்த படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் பணிகளை படக்குழு தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, படத்தின் டீசர் வரும் ஜூன் 8-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் நிற்கும் ஒருவரின் கழுத்தில் ரத்தக்கறை படிந்த அரிவாள் வைக்கப்பட்டிருக்கும் காட்சி, படத்தின் இருண்ட மற்றும் கொடூரமான உலகத்தை உணர்த்துகிறது. இந்த போஸ்டர் படத்தின் மீது மேலும் ஆர்வத்தை தூண்டுகிறது.

விஜய் சேதுபதியுடன் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகை தபு மற்றும் கன்னட நட்சத்திரம் துனியா விஜய் நடித்துள்ளனர். மேலும் பிரம்மாஜி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர், “அர்ஜுன் ரெட்டி”, “அனிமல்” போன்ற படங்களில் தனது அதிரடியான இசையால் பாராட்டுகளை பெற்றவர், இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கௌர் ஆகியோர் Puri Connects நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், JB நாராயண் ராவ் கொண்ட்ரோலாவின் JB Motion Pictures நிறுவனத்துடன் இணைந்து உருவாகியுள்ளது.

“ஸ்லம் டாக்” திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா அளவில் வெளியாக உள்ளது.

நடிகர்கள் : விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத்,சார்மி கௌர் , JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா
வழங்குபவர் : சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனங்கள்: Puri Connects, JB Motion Pictures
CEO : விசு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

காஜல் அகர்வால் மற்றும்  ஷ்ரேயாஸ் தல்படே   நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!

Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது.

ஒரு தீவிரமான சமூக – தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’  படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே  இணைந்து நடித்துள்ளனர்.  இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை  சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.

 ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல், பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையாக இந்த விவகாரத்தை இக்கதை விரிவாக எடுத்துரைக்கிறது. மேலும், இந்த நிலைமையைத் தடுப்பதற்கான கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் சட்டங்கள் தேவையென்பதையும் இப்படம் சுட்டிக்காட்டுகிறது.

இப்படம் உருவானதற்கான காரணத்தைப் பற்றி தயாரிப்பாளர் சாகர் B ஷிண்டே கூறியதாவது..,
“நாட்டின் பல பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தியும் பெரும்பாலும் கவனிக்கப்படாத ஒரு உண்மையை இந்தக் கதை வெளிப்படுத்துகிறது. பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, மனித வாழ்வையே பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினை. இந்த படத்தின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறுப்புணர்வை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்.”

இயக்குநர் சேட்டன் DK கூறியதாவது..,
“இந்தக் கதைக்கு உண்மைத்தன்மையை கொடுக்க குழுவில் உள்ள ஒவ்வொருவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். காஜல் மற்றும்  ஷ்ரேயாஸ்  இருவரும் மிகவும் நுணுக்கமான நடிப்பை வழங்கியுள்ளனர். அவர்கள் காட்டிய ஈடுபாடு படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.”

பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள காஜல் அகர்வால் மற்றும் பல்வேறு வகை கதாபாத்திரங்களில் பாராட்டுக்களைக் குவித்த ஷ்ரேயாஸ் தல்படே   முதல் முறையாக இணைந்து நடிக்கின்றனர். இந்த புதிய ஜோடி, கதைக்கு உணர்ச்சி ஆழத்தையும் தீவிரத்தையும் கூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பார்வையாளர்கள் சிறந்த கருத்துக்களை மையப்படுத்திய திரைப்படங்களை அதிகம் விரும்பும் சூழலில்,  ‘தி இந்தியா ஸ்டோரி’ ஒரு பொருத்தமான மற்றும் சிறப்பான திரை வெளியீடாக திகழ்கிறது. சமூக பொறுப்புணர்வை தூண்டும் இந்த படம், சினிமாவைத் தாண்டி முக்கியமான விவாதங்களை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

இந்தப்படத்தில் இணை தயாரிப்பாளர்களாக ஸ்வாதி வினாயக் சைன்டானே, அனிதா ஜாதவ், விநாயக் சைதானி, கல்பேஷ் ஷா, தேவ்யானி கொராடே மற்றும் பிரேம் ஜோஷி ஆகியோர் பணியாற்றியுள்ளனர். ஒளிப்பதிவாளர் நிஷாந்த் பக்வத், இசையமைப்பாளர் மங்கேஷ் தாக்டே, எடிட்டர் ஆஷிஷ் மாத்ரே, பாடலாசிரியர் ஷகீல் அஜாமி மற்றும் ஒலி வடிவமைப்பாளர் அன்மோல் பாவே ஆகியோரின் பங்களிப்பும் இப்படத்தை மேலும் உயர்த்தியுள்ளது.

இப்படம் Zee Studios  உலகளாவிய வெளியீடாக வெளியாகிறது.

U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்”

திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

ட்ரைலர், வசனங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனம் ஈர்த்த அங்கீகாரம் திரைப்படம் அனைவருக்குமான திரைப்படமாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு U சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின், டிரெய்லரும், முதல் பாடலான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜிப்ரான் இசையில், கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில் உருவான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் அமைந்துள்ள இந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள வீரர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் அங்கீகாரத்திற்கான அவர்களின் பயணத்தையும் பேசும் படமாக “அங்கீகாரம்” உருவாகியுள்ளது. மறுக்கப்பட்ட தனது உரிமைக்காக நீதிமன்றம் ஏறி போராடும் ஒரு தடகள வீரரின் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

இயக்குனர் பா.இரஞ்சித்தின் துணை இயக்குநரான தென்பாதியான் இயக்கியுள்ள இப்படத்தின் வசனங்கள் பேசுபொருளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் கே.ஜெ.ஆர் விஜி வெங்கடேஷ், அஜித் கோஷி, சிந்தூரி விஸ்வநாத், ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஏ.விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். பீட்டர் ஹெயின் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ள நிலையில், தினேஷ்குமார் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமு தங்கராஜ் கலை இயக்கம், சம்பத் ஆழ்வார் ஒலி வடிவமைப்பு, ஷெரீப் நடன அமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.

டிரெய்லர் மற்றும் முதல் சிங்கிள் பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பைத் தொடர்ந்து, ஜூன் 26-ம் தேதி வெளியாகும் “அங்கீகாரம்” படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Trending entertainment & White horse studios சார்பில் K.சசிகுமார், தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கத்தில், விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் ஆகியோரின் நடிப்பில், ஹைபர்லிங்க் ஆந்தாலஜி வடிவில் க்ரைம் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் “மூன்றாம் கண்”.

வரும் ஜூன் 12 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…,

தயாரிப்பாளர் K. சசிகுமார் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ள பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.எனது முந்தைய படைப்புக்கும் நீங்கள் அளித்த ஆதரவு மிகவும் உற்சாகத்தை அளித்தது. அந்த ஆதரவே மேலும் தைரியமாக புதிய முயற்சிகளை மேற்கொள்ள என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. அதற்காக அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதையை கேட்டவுடன் இதை கண்டிப்பாக உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. படத்தில் பணியாற்றிய அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். குறிப்பாக படப்பிடிப்புக் குழுவினர் நேர்த்தியாகவும், முழு ஒத்துழைப்புடனும் பணியாற்றியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இப்படத்தின் இயக்குநர் சகோ கணேசன் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் படத்தை சிறப்பாக முடித்துக் கொடுத்துள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அதேபோல், திரைக்கதை எழுத்தாளர்கள் மற்றும் படைப்புக் குழுவினரான சு.கிதா, சதீஷ், சூர்யா, தினேஷ் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் பாடலை உருவாக்கிய இசைக் கலைஞர் அஜீஷுக்கும், பாடலின் உருவாக்கத்தில் பங்காற்றிய அனைவருக்கும் நன்றி. படத்தில் ஒரே ஒரு பாடல் இருந்தாலும் அது மிகவும் சிறப்பாக வந்துள்ளது. பாடலுக்கான பணிகளில் எந்த சூழ்நிலையிலும் சோர்வடையாமல் அனைவரும் உழைத்தனர்.

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் இந்தப் படத்திற்காக முழுமையாக அர்ப்பணித்து பணியாற்றியுள்ளார். எப்போதும் இசை பற்றிய சிந்தனையிலேயே இருப்பார். அவரது இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. எதிர்காலத்தில் அவருக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மேலும், இந்தப் படத்தின் அனைத்து பணிகளிலும் உறுதுணையாக இருந்த ராமருக்கு எனது சிறப்பு நன்றிகள். அவர் எப்போதும் குழுவுக்காக முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படக்குழுவினர் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை தொடர்ந்து வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நடன இயக்குநர் ராதிகா மாஸ்டர் பேசியதாவது…
“இங்கு வந்திருக்கும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தின் இயக்குநர் சகோ கணேசனை நான் நீண்ட காலமாக அறிவேன். அவர் உதவி இயக்குநராக இருந்த காலத்திலிருந்தே அவரது கடின உழைப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அந்த உழைப்பின் மொத்த வெளிப்பாடாகவே இந்தப் படம் உருவாகியுள்ளது.

ஒரு அறிமுக இயக்குநரின் படத்திற்கு முன்னணி நடிகர்களின் தேதிகளைப் பெறுவது மிகவும் கடினம். ஆனால் விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் போன்ற திறமையான நடிகர்கள் இந்தப் படத்தில் இணைந்திருப்பது கதையின் வலிமையை எடுத்துக்காட்டுகிறது.

தயாரிப்பாளர் சசிகுமார் சார் படத்திற்குத் தேவையான அனைத்தையும் எந்த தயக்கமும் இல்லாமல் வழங்கி, படத்தை சிறப்பாக உருவாக்க முழு ஆதரவையும் அளித்தார். விதார்த் சார் எப்போதும் நல்ல கதைகளைத் தேர்வு செய்பவர். கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் ஆகியோரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடித்துள்ளனர். கதாநாயகிகள் தேஜு மற்றும் அப்துல்யா இருவரும் மிகவும் தொழில்முறை அணுகுமுறையுடன் பணியாற்றினர். குறிப்பாக கடினமான சூழ்நிலைகளிலும் நேரத்தை வீணடிக்காமல் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர்.

ஒளிப்பதிவாளர் உதய், கலை இயக்குநர் மைக்கேல், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஒட்டுமொத்தமாக அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ‘மூன்றாம் கண்’ திரைப்படம் நிச்சயம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று பெரிய வெற்றியை அடையும் என்று நம்புகிறேன். நன்றி.

கலை இயக்குநர் மைக்கேல் பேசியதாவது…,
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. இயக்குநர் சகோ கணேசன் இந்தக் கதையை மிகத் தெளிவாகவும் வித்தியாசமாகவும் வடிவமைத்துள்ளார். இந்தக் கதையை முதன்முதலில் கேட்டபோதே இது ஒரு சிறப்பான படைப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. படத்தில் நடித்துள்ள விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட அனைவரும் இயக்குநரின் பார்வையை முழுமையாக நம்பி சிறந்த ஒத்துழைப்பை வழங்கினர். தயாரிப்பாளர் சசிகுமார் சார் படத்திற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்கினார்.

இந்தப் படம் எனக்கு மிகவும் நெருக்கமான ஒரு படைப்பாக அமைந்துள்ளது. அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான இந்த ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெறும் என்று நம்புகிறேன். ஊடக நண்பர்களின் ஆதரவிற்கும் நன்றி.”

எடிட்டர் ராமர் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ எனக்கு மிகவும் முக்கியமான திரைப்படம். இந்தக் கதையை நான் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கேட்டிருந்தேன். அப்போது থেকেই இந்தக் கதை மீது ஒரு தனி ஈர்ப்பு இருந்தது. பின்னர் இயக்குநர் சகோ கணேசன் அழைத்து இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பு கொடுத்தார்.

இந்தப் படத்தின் திரைக்கதை மிகவும் வித்தியாசமாகவும், பார்வையாளர்களை கடைசி வரை ஈர்க்கக்கூடிய வகையிலும் அமைந்துள்ளது. சாதாரணமாக ஒரு படத்தின் எடிட்டிங் பணிகளுக்கு அதிக நேரம் கிடைக்கும். ஆனால் இந்தப் படம் மிகக் குறுகிய காலக்கெடுவில் முடிக்க வேண்டிய சூழல் இருந்தது. இருந்தாலும் முழுக் குழுவினரும் கடினமாக உழைத்து சிறப்பாக பணியை நிறைவு செய்தோம்.

குறிப்பாக இயக்குநர் சகோ கணேசனின் உழைப்பும், கதையின் மீது இருந்த நம்பிக்கையும் என்னை மிகவும் கவர்ந்தது. படத்தின் வடிவமைப்பிலும், காட்சிகளின் அமைப்பிலும் அவர் மிகத் தெளிவான பார்வையுடன் செயல்பட்டார்.

விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் தங்களது கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். அவர்களின் நடிப்பு இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கும். தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர்.

தயாரிப்பாளர் சசிகுமார் சார் இந்தப் படத்தை சரியான நேரத்தில், சரியான முறையில் வெளியிட வேண்டும் என்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். அவருடைய பொறுமையும் நம்பிக்கையும் பாராட்டத்தக்கது.

‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பல ஆச்சரியங்களும் வித்தியாசமான அம்சங்களும் உள்ளன. படம் வெளியாகும்போது ரசிகர்கள் அதை நிச்சயம் உணர்வார்கள். இந்தப் படத்திற்கு ஊடக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.”

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகவும் சிறப்பானது. இதற்கு முன்பு வணிக ரீதியிலான பல படங்களில் பணியாற்றியிருந்தாலும், வலுவான திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் இசையமைக்க வேண்டும் என்ற விருப்பம் எப்போதும் இருந்தது. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியது.

இயக்குநர் சகோ கணேசன் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை சந்தித்த பிறகுதான் இந்தப் படத்தில் இணைந்தேன். அப்போது படம் ஏற்கனவே எடிட்டிங் கட்டத்தை எட்டியிருந்தது. முதலில் டிரைலரைப் பார்த்தபோது படத்தின் மேக்கிங், காட்சியமைப்பு மற்றும் திரைக்கதை என்னை மிகவும் கவர்ந்தது. படத்தின் கதையை ஒரே முறை பார்த்து முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு சுவாரஸ்யமான திரைக்கதை இதில் உள்ளது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் அதன் திரைக்கதையும் கதாபாத்திரங்களுமே. விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்ட நடிகர்கள் அனைவரும் அந்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளராக எனக்கு இந்தப் படம் ஒரு சவாலான அனுபவமாக இருந்தது. கதையின் சஸ்பென்ஸை வெளிப்படுத்தாமல், அதே நேரத்தில் பார்வையாளர்களை கதைக்குள் ஈர்க்கும் வகையில் இசையை வடிவமைக்க வேண்டியிருந்தது. இயக்குநர் சகோ கணேசன் தெளிவான பார்வையுடன் இருந்ததால் அந்தப் பணி எளிதாக அமைந்தது.ஒளிப்பதிவாளர் உதய்குமார், சவுண்ட் டிசைனர் சதீஷ்குமார் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து, சவுண்ட் மற்றும் பின்னணி இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பணியாற்றியுள்ளோம். மேலும், இந்தப் படத்தில் நிறைய லைவ் இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

‘மூன்றாம் கண்’ திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாகவும், கதையம்ச ரீதியாகவும் மிகவும் வலுவான படைப்பாக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ரசிகர்களும், ஊடக நண்பர்களும் ஆதரவு அளித்து வெற்றியடையச் செய்ய வேண்டும். அனைவருக்கும் எனது நன்றிகள்.”

நடிகை அதுல்யா சந்திரா பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ எனக்கு தமிழில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம். இந்தப் படத்தின் தலைப்பே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

ஒவ்வொரு படத்திலும் புதிதாக ஏதாவது கற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்தப் படத்தில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய அனுபவம் திறமையான நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியதுதான். விதார்த், சந்தோஷ் பிரதாப், தேஜு, கலையரசன் உள்ளிட்ட அனைவரும் சிறந்த கலைஞர்கள். அவர்களுடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் சசிகுமார் சார் மற்றும் படக்குழுவினருக்கு எனது நன்றிகள். மேலும், இயக்குநர், தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர். அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

எப்போதும் எங்களுக்கு ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் நன்றி. ‘மூன்றாம் கண்’ திரைப்படத்திற்கு உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

நடிகை தேஜு அஸ்வினி பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ஊடக நண்பர்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள். உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பது இதுபோன்ற நிகழ்ச்சிகளில்தான். அதனால் நீங்கள் அனைவரும் வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ‘மூன்றாம் கண்’ திரைப்படம் எனக்கு மிகவும் சிறப்பான படம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் படத்தில் நடித்தோம். இது எனக்கு மிகவும் நெருக்கமான அனுபவமாக அமைந்தது. இந்தப் படத்தின் கதையும், அதில் நான் நடித்த கதாபாத்திரமும் எனக்கு மிகவும் பிடித்தவை.

இயக்குநர் சகோ கணேசன், தயாரிப்பாளர் சசிகுமார் மற்றும் படக்குழுவினர் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர். குறிப்பாக, எனக்கு ஊக்கமளித்து வந்த சசிகுமார் சாருக்கு என் நன்றிகள். விதார்த் சார், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது அருமையான அனுபவமாக இருந்தது. கலையரசன் எனக்கு குடும்ப உறுப்பினர் போன்றவர். படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் மிகவும் நட்பாகவும், உற்சாகமாகவும் இருந்தனர்.

ப்ரோமோ பாடலில் என்னுடைய திறமையை முழுமையாக வெளிப்படுத்தும் வாய்ப்பை வழங்கிய நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டருக்கு சிறப்பு நன்றி. ‘உனக்கு என்ன தோன்றுகிறதோ அதைச் செய்’ என்று முழு சுதந்திரம் கொடுத்து என்னை ஊக்கப்படுத்தினார். அது எனக்கு மிகவும் முக்கியமான அனுபவமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் உதய், இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், கலை இயக்குநர், எடிட்டர் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள்.

‘மூன்றாம் கண்’ நான் இதுவரை நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான கதையைக் கொண்ட திரைப்படம். ஜூன் 12-ஆம் தேதி படம் வெளியாகிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். உங்கள் கருத்துக்களை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி.”

நடிகர் KPY சரத் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். முதலில் தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் சசிகுமார் அண்ணாவுக்கும், இயக்குநர் சகோ கணேசனுக்கும் என் நன்றிகள். வழக்கமாக நான் நடிக்கும் நகைச்சுவை வேடம் இல்லாமல், வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தை இந்தப் படத்தில் எனக்கு கொடுத்திருக்கிறார்கள். இது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண் உள்ளிட்ட திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் அன்பாக பழகி, நல்ல ஒத்துழைப்பை வழங்கினர். இயக்குநர் இந்தக் கதையை மிகவும் சுவாரஸ்யமாக உருவாக்கியுள்ளார். ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களை நிச்சயம் கவரும் என நம்புகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய படக்குழுவினருக்கும், ஆதரவு அளித்து வரும் ஊடக நண்பர்களுக்கும் என் நன்றிகள்.”

நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் அழகான அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல இருந்தது. படப்பிடிப்பு முடிந்து இத்தனை நாட்கள் ஆன பிறகும், அனைவருடனும் அதே பாசமும் நட்பும் தொடர்கிறது.

இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நடிகர்களை ஒரே மாதிரியான வேடங்களில் மட்டுமே பார்க்கும் பார்வையை உடைக்கும் ஒரு வாய்ப்பாக இந்தப் படம் எனக்கு அமைந்துள்ளது. அந்த நம்பிக்கையை என் மீது வைத்த இயக்குநர் சகோ கணேசனுக்கு நன்றி ‘மூன்றாம் கண்’ ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படத்தின் முடிவு பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் வகையில் இருக்கும். இது ஒரு வித்தியாசமான, பரிசோதனை முயற்சியாக உருவாகியுள்ளது.

தயாரிப்பாளர் சசிகுமார் சார் எப்போதும் ஒரு அண்ணன் போல இருந்து ஆதரவளித்து வருகிறார். அவருக்கும், படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் நன்றிகள். ‘மூன்றாம் கண்’ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கும். அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும். நன்றி.”

நடிகர் த்ரிகுண் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி. அந்த வகையில், நண்பர்களைப் போல இணைந்து பணியாற்றும் சூழலை இந்தப் படத்தில் உருவாக்கிக் கொடுத்த இயக்குநர் சகோ கணேசனுக்கும், தயாரிப்பாளர் சசிகுமாருக்கும் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேரத்தில் எனது குடும்பத்தில் ஒரு துயர சம்பவம் நடந்தது. அப்போது படக்குழுவினர் எனக்காக படப்பிடிப்பு அட்டவணையை மாற்றி அமைத்து முழு ஒத்துழைப்பையும் வழங்கினர். அதற்காக சசிகுமார் சாருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன். மேலும், ஒரு நடிகராக நான் கேட்டுக் கொள்ளும் முன்பே சம்பளம் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நேர்மையாக வழங்கிய தயாரிப்பாளர் அவர். இது திரையுலகில் மிகவும் அரிதான விஷயம்.

இயக்குநர் சகோ கணேசன் இந்தக் கதையை முதன்முறையாக கூறியபோதே மிகவும் ஈர்த்துவிட்டார். கதை கேட்டவுடன் உடனே படத்தில் நடிக்க சம்மதித்தேன். அந்தளவுக்கு வலுவான திரைக்கதை இது. தேஜு, அதுல்யா நடிகைகள் இருவரும் மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். குறிப்பாக தேஜுவின் அணுகுமுறை என்னை மிகவும் கவர்ந்தது. விதார்த், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சரத் உள்ளிட்ட அனைவருடனும் பணியாற்றியது சிறப்பான அனுபவமாக இருந்தது.

‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான திரில்லர் படம். இதில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினருக்கும் என் நன்றிகள். ரசிகர்கள் இந்தப் படத்தை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். நன்றி.”

இயக்குநர் சகோ கணேசன் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான கமர்ஷியலான திரைக்கதையைக் கொண்ட படம். இதில் விருமாண்டி vantage point போன்ற படங்களில் பயன்படுத்தப்பட்ட திரைக்கதை டெக்னிக்கான ‘Rashomon Effect’ என்ற சுவாரஸ்யமான விஷயத்தை பயன்படுத்தியிருக்கிறோம். இந்தக் கதையை தயாரிப்பாளர் சசிகுமார் சாரிடம் கூறியவுடன், ஒரு அறிமுக இயக்குநர் என்றாலும் முழு நம்பிக்கையுடன் படத்தை தயாரிக்க முன்வந்தார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தக் கதையை எழுதும்போதே சில கதாபாத்திரங்களுக்கு குறிப்பிட்ட நடிகர்களை மனதில் வைத்திருந்தேன். விதார்த், சந்தோஷ் பிரதாப், கலையரசன் உள்ளிட்ட அனைவரும் நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்துள்ளனர். குறிப்பாக கலையரசனின் கதாபாத்திரம் மிகவும் சவாலானது. அவருடைய உடல் மொழி, குரல், நடிப்பு என அனைத்தையும் மிக நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார்.

சந்தோஷ் பிரதாப்பை இந்தக் கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்தது சரியான முடிவு என்பதை படப்பிடிப்பின்போது உணர்ந்தேன். அவர் அந்த கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாகவும் அழகாகவும் திரையில் கொண்டு வந்துள்ளார். திரிகுண் நடிக்க மாட்டேன் என சொல்ல வந்தவர் கதை பிடித்து நடித்து தந்தார்.

இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதை கேட்ட உடனேயே நம்பிக்கை வைத்து இணைந்தனர். படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொருவரிடமும் கதையின் உணர்வை ஒருமுறை மட்டுமே பகிர்ந்தேன். அதை அவர்கள் முழுமையாக புரிந்து கொண்டு தங்களது நடிப்பில் வெளிப்படுத்தினர். தேஜு பற்றி ஆரம்பத்தில் எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் கதை கேட்டவுடன் எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக்கொண்டார். ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் காட்சிகளுக்கான வசனங்களை முழுமையாக தயாராகி வந்து, மிகத் துல்லியமாக நடித்துக் கொடுத்தார். டப்பிங்கிலும் சிறப்பாக பணியாற்றினார்.

அதேபோல் அப்துல்யாவை ஒரு ஆடிஷன் வீடியோ மூலம் தேர்வு செய்தோம். அவர் அனுப்பிய நடிப்பு வீடியோ மிகவும் பிடித்திருந்தது. படத்திலும் அந்த நம்பிக்கையை முழுமையாக காப்பாற்றினார்.

ஜான் விஜய் இந்தப் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குறுகிய நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டாலும், டப்பிங் உட்பட அனைத்திலும் முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்டார். சரத் வழக்கமாக நகைச்சுவை வேடங்களில் நடித்தாலும், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

இசையமைப்பாளர் ராஜ்பிரதாப், ஒளிப்பதிவாளர் உதய்குமார், எடிட்டர் ராமர், சவுண்ட் டிசைனர் சதீஷ், கலரிஸ்ட் பிரசாந்த், டிசைனர் சந்துரு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகச் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். குறிப்பாக மிகக் குறுகிய காலத்தில் இப்படத்தை உருவாக்கியதில் அவர்களின் பங்களிப்பு மிகப்பெரியது. மேலும், உதவி இயக்குநர்கள் மற்றும் முழு படக்குழுவினரும் கடினமாக உழைத்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாகியுள்ளது.

‘மூன்றாம் கண்’ திரைப்படம் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகிறது. இது வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். அனைவரும் திரையரங்குகளில் சென்று படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

நடிகர் கலையரசன் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். ‘மூன்றாம் கண்’ திரைப்படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. இந்தப் படக்குழு ஒரு குடும்பம் போல செயல்பட்டது. படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆன பிறகும், அதே அன்பும் நட்பும் அனைவரிடமும் தொடர்ந்து இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒரு நடிகரை குறிப்பிட்ட மாதிரியான வேடங்களுக்குள் மட்டுமே அடைத்து வைக்காமல், புதிய பரிமாணங்களில் பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு. அந்த வாய்ப்பை இந்தப் படம் எனக்கு வழங்கியுள்ளது.

இயக்குநர் சகோ கணேசன் கதையை சொன்னபோதே அவரது பார்வையும், திரைக்கதையின் தனித்துவமும் என்னை கவர்ந்தது. இந்தப் படம் ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக மட்டுமல்லாமல், மனிதர்களுக்குள் இருக்கும் இருண்ட பக்கத்தைப் பற்றியும் பேசுகிறது. படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களை சிந்திக்க வைக்கும் அம்சங்கள் இதில் உள்ளன.

தயாரிப்பாளர் சசிகுமார் சார் எப்போதும் ஒரு அண்ணன் போல இருந்து அனைவருக்கும் ஆதரவாக இருந்தார். விதார்த், சந்தோஷ் பிரதாப், த்ரிகுண், தேஜு, அதுல்யா உள்ளிட்ட அனைத்து நடிகர்களுடனும் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. தொழில்நுட்பக் கலைஞர்களும் சிறப்பாக பங்களித்துள்ளனர்.

‘மூன்றாம் கண்’ ஒரு வித்தியாசமான முயற்சி. நிச்சயம் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். நன்றி.”

நடிகர் விதார்த் பேசியதாவது…
“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் நடித்த அனுபவம் மிகவும் சிறப்பானது. குறிப்பாக, இந்தப் படத்தில் எனக்கு வசனங்கள் மிகவும் குறைவு. ஒரு நடிகராக டயலாக் இல்லாமல் உணர்வுகளை மட்டும் வெளிப்படுத்துவது சவாலான விஷயம். ஆனால் இயக்குநர் சகோ கணேசன் கொடுத்த நம்பிக்கையும் வழிகாட்டுதலும் அந்தக் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்ய உதவியது.

இயக்குநரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். பல வருடங்களுக்கு முன்பே அவர் ஒரு கதை சொல்லியிருந்தார். அப்போதே, அவர் எந்தப் படம் எடுத்தாலும் கண்டிப்பாக நான் நடிப்பேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வாய்ப்பாக இந்தப் படம் அமைந்தது.

இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகுமார் சாரை நெருக்கமாக அறிந்து கொண்டேன். சினிமாவில் இத்தனை ஆண்டுகள் இருந்தும், நடிகர்களின் சம்பளத்தை படம் முடியும் முன்பே கொடுத்து, அனைவரையும் அக்கறையுடன் கவனிக்கும் தயாரிப்பாளர்களை அரிதாகவே பார்த்திருக்கிறேன். அந்த வகையில் சசிகுமார் சார் மிகவும் நேர்மையான மற்றும் மனிதநேயமான தயாரிப்பாளர். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. டிரெய்லரைப் பார்த்தபோதே இந்தப் படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது. அதேபோல் இசையும் மிகவும் சிறப்பாக வந்துள்ளது.

‘மூன்றாம் கண்’ திரைப்படம் அனைவரின் கூட்டு உழைப்பில் உருவான ஒரு நல்ல முயற்சி. ரசிகர்கள் இந்தப் படத்தை கண்டிப்பாக ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் படத்தை ஆதரிக்க வேண்டும். நன்றி.”

ஒரு சிறு விஷயம் பல பெரிய மாறுதல்களை உருவாக்கும் எனும் கேயாஸ் விதியின்படி ஹைபர்லிங்காக இணைந்த நான்கு கதைகளுடன், ரஷோமான் எஃபெக்ட்டுடன், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மர்டர் மிஸ்டரி கலந்த க்ரைம் திரில்லராக உருவாகும் மூன்றாம் கண் படத்தில், தமிழின் முன்னணி இளம் நட்சத்திரங்களான விதார்த், கலையரசன், த்ரிகுண், சந்தோஷ் பிரதாப், ஜான்விஜய், தேஜு அஸ்வினி, அதுல்யா சந்திரா, ஸ்வேதா டோரத்தி, ராதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, இவர்களுடன் மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

வித்தியாசமான திரைக்கதையில், மாறுபட்ட அனுபவம் தரும் இப்படத்தை, அறிமுக இயக்குநர் சகோ கணேசன் இயக்கியுள்ளார். கோடியில் ஒருவன், குரங்கு பொம்மை படப்புகழ் ஒளிப்பதிவாளர் NS. உதயகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். அசுரன், விடுதலை படப்புகழ் V.ராமர் இப்படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். சூப்பர் சிங்கர் புகழ் அஜீஸ் இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். யானை படப்புகழ் கலை இயக்குநர் மைக்கேல் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்துள்ளார். இப்டத்தை Trending entertainment & White horse studios நிறுவனங்கள் தயாரித்துள்ளனர்.

இப்படம் வரும் ஜூன் 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

ஜூன் 25ம் தேதி வெளியாகும் ‘அந்தரன்’

படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில் சந்தோஷ் ராவணன் இயக்கத்தில் நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை இக்னேசியஸ் அஸ்வின் மற்றும் சதீஷ் குரோசாவா மேற்கொள்ள கலை இயக்கத்தை சசிகுமார் கவனித்திருக்கிறார் பரபரப்பான கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார்.

வரும் 25ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி, ‘விக்கல்ஸ்’ விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரம் பேசுகையில், ”பிக் பாஸ் மூலமாகத்தான் இப்படத்தின் நாயகன் பிரஜின் நண்பரானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அதற்கு முன்-பின் என ஒரு புதிய வரலாறு உருவாகும். அதேபோல் நண்பர் பிரஜின் நடித்திருக்கும் ‘அந்தரன்’ படத்தின் மூலம் அந்தரனுக்கு முன், அந்தரனுக்கு பின் என பிரஜினின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருக்கும் என்று நம்புகிறேன்.

பிக் பாஸ் வீட்டில் அவர் தன்னுடைய திரையுலக பயணத்தில் நடைபெற்ற சம்பவங்களை விவரித்து கொண்டே இருப்பார். அவர் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வாழ்த்துகிறேன்,” என்றார்

நடிகை இவானா வருண் பேசுகையில், ”இது என்னுடைய முதல் திரைப்படம். அதனாலயே இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் குழுவாக இணைந்து அனைவரும் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி. படப்பிடிப்பு அனுபவங்கள் மறக்க முடியாதது.

நாங்கள் கலைஞர்கள். உணர்வுகளை கதாபாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்துகிறோம். அதன் மூலமாக நாங்கள் அனைவரும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்த படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். இந்த திரைப்படத்தை ஜூன் 25ஆம் தேதி அன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில், ”இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனை படித்து இரண்டு நாட்களில் ‘கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது’ என்றார். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, ‘என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார். அவருக்கு கதையை சொல்ல முடியுமா?’ எனக் கேட்டார். கதையை சொன்னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார். அதன் பிறகு நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோதும் எனக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக படத்தின் பணிகளை நிறைவு செய்து, தற்போது வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்தப் படத்தில் அவர் சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். அவர்தான் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இருப்பார். அதற்கும் நன்றி.

நான் படப்பிடிப்பு தளத்தில் நாயகி உடன் பேசியதே இல்லை. ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்கு தெரியாது. நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு புரியாது. இதனால் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டுதான் அவருடன் பணியாற்றினேன். ஆனால் திரையில் அவருடைய நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கும்.

‘அந்தரன்’ என்றால் ஒரு ஹண்டர். ஹண்டர் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என பொருள். நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களை கடந்து செல்கிறோம். ஆனால் அதன் மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் சீரியஸ்னஸை பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டதுதான் ‘அந்தரன்’. அதைப் பற்றி இப்போது விரிவாக சொல்ல இயலாது. படம் பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் உணர்வார்கள்.

இந்த திரைப்படம் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கினை தழுவியது. இந்த வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் நான் இதுவரை தயாரிப்பாளரிடம் கூட பகிர்ந்து கொண்டதில்லை. படம் வெற்றி பெற்ற பிறகு இதைப்பற்றி சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக இந்த ‘அந்தரன்’ வழக்கமான படமாக இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்ல முடியும்.

‘போர் தொழில்’, ‘ராட்சசன்’, ‘தெகிடி’ ஆகிய திரைப்படங்களில் இருந்தது போன்ற ஒரு தனித்துவமான விஷயம் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் இருக்கிறது. இது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்.

இந்தப் படத்தின் கதை திரில்லர் தான். ஆனால் அதனை ரொமான்டிக்காக சொல்லி இருக்கிறோம். ரொமான்டிக்கான சீன்கள் நிறைய இருக்கிறது. இது ஏன் என்பதற்கான காரணம் உச்சகட்ட காட்சியில் சொல்லியிருக்கிறோம்.

இந்தக் கதையை தயாரிப்பாளர் சி. வி. குமாரிடம் சொன்னேன். அவர்தான் இந்தக் கதையில் பல விஷயங்களை சேர்க்கலாம் என ஆலோசனை சொன்னதுடன் மட்டும் நிற்காமல் நிறைய நடிகர், நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்திக் கொள் என பரிந்துரையும் செய்தார் . அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர்,” என்றார்.

தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், ”இப்படத்தின் தயாரிப்பாளர் சாம்பசிவம் என்னுடைய நெருங்கிய நண்பர். 2019ம் ஆண்டில் ‘அடவி’ என்றொரு திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அன்று முதல் இன்று வரை நல்லதொரு நட்பு நீடிக்கிறது.

அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் ‘மனிதர்கள்’ என்றொரு படத்தை தயாரித்தார். அந்த திரைப்படத்தை வணிக ரீதியில் வெளியிடுவதற்காக பார்வையிட சொன்னார். அந்தப் படத்தை பார்த்தேன். ஆனால் அது ஆர்ட் ஃபிலிம். இந்த திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பலாம். திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என ஆலோசனை சொன்னேன். ஆனால் அவர் அந்தத் திரைப்படத்தையும் துணிச்சலுடன் திரையரங்குகளில் வெளியிட்டார்.

இயக்குநர் சந்தோஷ் இராவணன் எனக்கு மிகவும் தெரிந்தவர். கொரோனா காலகட்டத்திற்கு முன் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றியவர். அதன் பிறகு தொடர்பில் இல்லை. பிறகு ஒருநாள் சாம்பசிவம் என்னை போனில் தொடர்பு கொண்டு, ‘உங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய சந்தோஷ் சொன்ன கதை நன்றாக இருக்கிறது’ என என்னிடம் சொன்னார். சந்தோஷ் திறமையானவர் தான், படத்தை தயாரிக்கலாம் என நம்பிக்கை கொடுத்தேன். அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான பரிந்துரையை கேட்டார்கள். நானும் வழங்கினேன்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் முன் இயக்குநர் சந்தோஷ் என்னை சந்தித்து அதனை காண்பித்தார். அப்போது டைட்டில் ‘அந்தரன்’ என்று இருந்தது. அவரிடம் நீ வேறு ஒரு டைட்டில் தானே வைத்திருந்தாய். ஏன் மாற்றினாய் என்று கேட்டபோது, தயாரிப்பாளரின் தேர்வு என்று விளக்கம் அளித்தார். உடனே தயாரிப்பாளரிடம் ஏன் இந்தப் படத்திற்கு அந்தரன் என பெயர் வைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு டைட்டில் வைத்தால் அது அனைவருக்கும் புரிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் டைட்டிலுக்காக விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க வேண்டாம் என்று சொன்னேன்.

அதற்கு அவர் குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்று விருப்ப சீட்டை போட்டு தேர்ந்தெடுக்கும் போது அதில் ‘அந்தரன்’ என்று தான் வந்தது. இதனை என் மனைவி தான் தேர்வு செய்தார்கள். அதனால் அந்த டைட்டிலை மாற்ற இயலாது என்று அன்பாக சொன்னார். நான் உடனே சிரித்துக்கொண்டே சரி என்று சொல்லிவிட்டேன்..

இந்த திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். நல்ல படம் .கதையின் போக்கை யாராலும் இறுதிவரை கணிக்க இயலாத அளவிற்கு சுவராசியமாக இயக்குநர் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்தப் படம் ஜூன் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படம் நன்றாக இருந்தால் ஊடகங்களும் , ரசிகர்களும் கொண்டாடுவார்கள். இதற்கு என்னுடைய நிறுவனத்திலிருந்து வெளியான படைப்புகளே சாட்சி. அந்த வகையில் இந்த படமும் நன்றாக இருக்கிறது. வெற்றி பெறும், வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் மு கி சாம்பசிவம் பேசுகையில், ”அடவி, மனிதர்கள் ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து அந்தரன் என்னுடைய மூன்றாவது திரைப்படம். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.‌ தமிழ் சினிமாவின் யுனிவர்சிட்டி என போற்றப்படும் நண்பரும் , தயாரிப்பாளருமான சி வி குமார் மற்றும் விக்ரம், சபரி, சாண்ட்ரா ஆகிய சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி.

தயாரிப்பாளர் சி வி குமார் ‘சூது கவ்வும்’  படத்தினை தயாரித்துக் கொண்டிருந்தபோது என்னை சந்தித்து நல்லதொரு கதை இருக்கிறது தயாரிக்கிறீர்களா என கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். பணத்தை யார் கேட்டார்கள், படத்தை தயாரிக்கிறாயா எனக் கேட்டார். சி வி குமாருக்கு நல்ல கதை கிடைத்தால் போதும். அதை படமாக உருவாக்குவார். அந்த அளவிற்கு அவர் திறமையானவர். தமிழ் திரையுலகில் ஏராளமான புதுமுகங்களை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கான கன்டென்ட் மற்றும் சரியான விஷயம் கிடைத்துவிட்டால் அவர் தயாரிப்பார். இந்தப் படம் உருவானதற்கும் அவர்தான் காரணம். அதனால் அவருக்கு சிறப்பு நன்றி.

இயக்குநர் கதையை சொன்னார், அது எனக்கு பிடித்திருந்தது. அப்போது என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். அதன் பிறகு எனக்கு ஒரு குழு அமைந்தது. நான் தயாரித்த இரண்டு திரைப்படங்களிலும் நல்லதொரு கன்டென்ட் இருந்தது. அதேபோல் இந்த திரைப்படத்திலும் சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறோம். அதனை ஒரு க்ரைம் திரில்லராக வழங்கியுள்ளோம். திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களின் ஆதரவை வழங்குவீர்கள் என நம்புகிறேன்.

புதியவர்கள் ஒன்றிணைந்து ஒரு நல்லதொரு திரைப்படத்தை உருவாக்கினால் அதற்கு விநியோகஸ்தர்களும், ஓடிடி உள்ளிட்ட வர்த்தகம் தொடர்பானவர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். புதியவர்களின் திரைப்படத்தை ‘நட்சத்திரங்கள் இல்லாத திரைப்படம்’ என புறக்கணிக்க வேண்டாம். ஏனெனில் இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கடந்த காலத்தில் புது முகங்கள் தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்,” என்றார்.

நடிகர் பிரஜின் பேசுகையில், ”இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள்.

தயாரிப்பாளர் சாம்பசிவம் அவர்களின் மூன்றாவது திரைப்படம் இது. நல்ல கதை. நல்லதொரு கருத்தை தேர்வு செய்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு வணிக ரீதியான வெற்றியை தர வேண்டும். தரும்.

நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் பலர் சென்றுள்ளனர். பலரிடம் பழகி இருக்கிறேன். அதில் விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் பிக் பாஸ் வீட்டில் விக்ரமுடன் தான் அதிகமாக சண்டை போட்டிருக்கிறேன். யாருடன் நீங்கள் அதிகமாக நெருங்குகிறீர்களோ, அவர்களுடன் தான் உங்களுக்கு சண்டை வரும். அந்த சண்டை மூலமாக வரும் நட்புதான், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் நீடிக்கும்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு தரமான படைப்பாக இருக்கும். அவர்கள் செலவிடும் விலை மதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த படம் இருக்கும்.

ஜூன் 25ம் தேதி ‘அந்தரன்’ திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும்,” என்றார்.