இந்தியா, 15 மே 2026: ZEE5 தமிழ் ZEE5, பரபரப்பூட்டும் கிராமப்புற திரில்லர் திரைப்படமான கொலை சேவல் தற்போது தங்களது தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருவதாக அறிவித்துள்ளது. சஸ்பென்ஸ், உணர்ச்சிகள் மற்றும் தீவிரமான கிராமத்து நாடக அம்சங்களை இணைக்கும் இப்படம், பேராசை, துரோகம் மற்றும் மனித உறவுகளின் இருண்ட பக்கங்களை ஒரு நாட்டுப்புற பின்னணியில் ஆழமாக ஆராயும் வலுவான கதையை கொண்டுள்ளது.
தனித்துவமான தலைப்பும், இயல்பான கதை சொல்லும் முறையும் கொண்ட கொலை சேவல், அதன் யதார்த்தமான அணுகுமுறை மற்றும் சூழல்மிக்க காட்சிப்படுத்தலால் ஏற்கனவே பார்வையாளர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. மறைக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் நீண்டகாலமாக புதைந்திருந்த ரகசியங்கள் மெல்ல வெளிப்படுகின்ற ஒரு பதற்றமான விசாரணையை மையமாகக் கொண்ட இப்படம், இறுதி வரை பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் நகர்கிறது.
சந்தேகமும் பதற்றமும் நிறைந்த கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள கொலை சேவல், ஒரு மர்மமான கொலை சம்பவம் முழு சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குவதைப் பின்தொடர்கிறது. விசாரணை முன்னேறும் போது, ஒவ்வொரு கதாபாத்திரமும் சந்தேக நபராக மாற, உடைந்து போகும் உறவுகள், தனிப்பட்ட பகைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் பின்னால் மறைந்திருக்கும் அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
இந்தப் படத்தில் இடம்பெறும் திறமையான நட்சத்திரக் குழு, கதைக்கு உண்மைத் தன்மையும் உணர்ச்சி ஆழமும் சேர்க்கும் வலுவான நடிப்பை வழங்கியுள்ளது. யதார்த்தமான அணுகுமுறை, சுவாரஸ்யமான திரைக்கதை மற்றும் வலுவான உள்ளூர் மண்வாசனையுடன், கொலை சேவல் நாட்டுப்புற கலாசாரம் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்ட சஸ்பென்ஸ் நாடகங்களை விரும்பும் பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
OTT வெளியீட்டை குறித்து பேசிய படக்குழு, “இந்தப் படத்தை மேலும் பரந்த பார்வையாளர்கள் ZEE5 மூலம் கண்டறிந்து, தங்கள் வீடுகளிலிருந்தபடியே அதன் பல அடுக்குகளைக் கொண்ட கதை சொல்லலும் நுனிக்கூர்மையான சஸ்பென்ஸையும் அனுபவிப்பார்கள் என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்று தெரிவித்துள்ளது.
கொலை சேவல் மூலம், தமிழ் ZEE5 தனது பிராந்திய உள்ளடக்கத் தொகுப்பை மேலும் வலுப்படுத்தி, உண்மையான கதை சொல்லலை கொண்டாடும் அதே நேரத்தில் புதிய மற்றும் சுவாரஸ்யமான கதைகளை நாடும் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து வருகிறது.
கொலை சேவல் தற்போது ZEE5 தளத்தில் மட்டுமே ஸ்ட்ரீமிங் ஆகி வருகிறது.
ZEE5 பற்றி:
ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகவும், கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பல்மொழி கதை சொல்லியாகவும் திகழ்கிறது. உலகளாவிய உள்ளடக்க முன்னணி நிறுவனமான ZEE Entertainment Enterprises Limited நிறுவனத்தின் கீழ் செயல்படும் ZEE5, வீடியோ ஆன் டிமாண்ட் தளங்களில் முன்னணி தேர்வாக உள்ளது. ஆயிரக்கணக்கான திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஒரிஜினல் உள்ளடக்கங்கள், இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான ஆன் டிமாண்ட் உள்ளடக்கங்களை பல இந்திய மொழிகளில் வழங்கும் விரிவான மற்றும் பல்வகை நூலகத்தை இது கொண்டுள்ளது.
யாரும் இல்லாமல் தனியாக வளர்ந்த இளைஞன் ஜெய் ஒரு ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான் ஹீரோயினை சந்திக்கும் ஜெய், திடீரென காதலித்து உடனடியாக திருமணம் செய்து கொள்கிறார்கள் ஆனால் அந்த திருமணத்திற்கு பிறகு இருக்கும் கடன் பண பிரச்சினை ஆகியவை அவர்களது வாழ்க்கையை மாற்றுகிறது. இந்த சூழலில் நாயகியின் அப்பாவோ அரசியல்வாதி, அவர்களின் துரத்தல் ஒரு பக்கம் எதிரிகளின் மிரட்டல் ஒரு பக்கம் இதை சமாளித்து அவர்கள் எப்படி வெளியில் வருகிறார்கள் என்பது படத்தின் கதையாக இருந்தாலும் ,
திரைக்கதையானது பல்வேறு கிளைக் கதைகளை கொண்டு பயணிக்கிறது. முக்கியமாக வில்லன் ஹோட்டலில் ரகசிய கேமரா வைத்து தேனிலவு கொண்டாட வரும் ஜோடிகளின் அந்தரங்க வீடியோக்களை எடுத்து அதை porn சைடில் போட்டு பணம் சம்பாதிக்கும் கொடூரமான வில்லன். இதை சுற்றி ஒரு கதை பயணிக்கிறது,ஒரு அரசியல்வாதி தன் மனைவியை கொலை செய்கிறான் அதை நோக்கியும் பயணப்படுகிறது ஹோட்டலில் எடுக்கப்படும் அந்தரங்க வீடியோ வெளியில் வந்து அதன் மூலம் தற்கொலை செய்து கொள்ளும் இருவரின் கதையை சொல்லுகிறது. இப்படி பல்வேறு திரைக்கதைகளை ஒரு புள்ளியில் இணைக்க இயக்குனர் முயற்சி செய்திருக்கிறார் அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்பது தான் சட்டென்று மாறுது வானிலை படத்தின் திரை கதையாக எழுதி இயக்கியிருக்கிறார் அறிமுக இயக்குனர் பாபு விஜய் இந்தப் படத்தில் ஜெய்யுடன் ஜோடியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்திருக்கிறார் ஜெய் படத்தில் விஜயை பிரதிபலிக்கிறார் ஏற்கனவே நம்ம திடீர்னு தளபதி சிவகார்த்திகேயனும் விஜயை பிரதிபலிக்க இப்பொழுது ஜெயின் இந்த படத்தில் விஜயின் ரசிகராகவே வருகிறார் மீனாட்சி கோவிந்தராஜனின் நடிப்பு அளவாகவும் இயல்பாகவும் இருக்கிறது மேலும் இந்த படத்தில் யோகி பாபு சத்யன் ஸ்ரீமன் ஆதித்யா கதிர் மற்றும் பல நடித்திருக்கிறார்கள் ஸ்ரீமனுக்கு காமெடி கலந்த ஒரு காவல்துறை கேரக்டர் படத்தின் இசை அமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இவரது இசை ஓரளவுக்கு படத்துடன் ஒத்துப் போகிறது யோகி பாபு உடன் நடிப்பு ஏனோ படத்துடன் ஒட்டவில்லை ஆதித்யா கதிர் அவரும் பேசிக்கொண்டே இருக்கிறார் இந்தப் படத்தின் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் உதவி இயக்குனராக இருந்தவர் தனது குருநாதரின் இடத்தை நெருங்க முயற்சி செய்திருக்கிறார் அதில் சற்றே நெருங்கியும்இருக்கிறார்
சட்டென்று மாறுது வானிலை முழுமையாக புதிய அனுபவம் கொடுக்கவில்லை என்றாலும் லைட் ரொமான்டிக் த்ரில்லர் படங்களை ரசிப்பவர்களுக்கும் இது ஒரு முறை பார்க்கக்கூடிய படம்.
ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.
விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.
வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
கதையின் நாயகனாக அறிமுகமாகும் பிரபல இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது.., புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். விலங்கு சீரிஸிற்கு நீங்கள் தந்த ஆதரவுதான் எங்களுக்கு மிகப்பெரிய அடையாளம் தந்தது. விலங்கு சீரிஸிற்கு பெரிய வரவேற்பை பெற்று தந்தது நீங்கள் தான். விலங்கு போல இன்னொரு வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதில் நடிகராக மாறியுள்ளேன். அதே ஆதரவை தருவீர்கள் என நம்புகிறேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு, அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது.., நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ-டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
ZEE5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது… “ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சமீப காலங்களில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது”. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது. ஆனால் அதன் உள்ளே பல கதைகளும், பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம். அது தனி உலகமாக மாறியது. 2023-இலேயே இந்தக் கதையை உருவாக்க நினைத்தோம். தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை. அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும். ‘விலங்கு 2’-இல் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’. ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது” “பிரசாந்தை முதல் முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும், இது தனித்துவமான பயணமாக இருக்கும்” அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.
இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது…, பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகர் கவின் பேசியதாவது…, பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது…, பாண்டிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும். நல்ல உழைப்பாளி. விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ். மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் மதன் பேசியதாவது…, விலங்கு, கேம், அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம். இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல, சினிமாவை விட இது கடினமானது. படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன். நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கிய காரணம். ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளுக்கு தர வேண்டும். பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை, ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள். விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது…, தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த். அவன் என் நண்பன். இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நடிகை கௌசல்யா பேசியதாவது.., இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது” அனைவருக்கும் நன்றி.
நடிகை மீனா பேசியதாவது, “ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் சார் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. “நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்” அனைவருக்கும் நன்றி.
நடிகர் அருள்ஜோதி பேசியதாவது, “இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். பிரசாந்த் சார் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவர் திரையிலும் மிகவும் சிறப்பாகத் தெரிகிறார். இனிமேலும் அவரை ஹீரோவாக பல படங்களில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறோம்”. “இயக்குநர் விக்னேஷின் இயக்கத்தை பெரிய திரையிலும் பார்க்க வேண்டும்” என்றார்.
நடிகை சாயாதேவி பேசியதாவது, “முதலில் இந்த சீரிஸில் நடிக்க மறுத்தேன். ஆனால் ‘நான் ஹீரோவாக நடிக்கிறேன், நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா?’ என்று பிரசாந்த் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது உண்மையிலேயே அவர் இந்த சீரிஸின் ஹீரோவாக மிளிர்கிறார்” வாழ்த்துக்கள்.“‘விலங்கு’ மற்றும் ‘மாமன்’ எப்படி கொண்டாடப்பட்டதோ, அதேபோல ‘வாரண்ட்’ கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும். நல்லா இருந்தாலும், இல்லையென்றாலும் உங்கள் கருத்துக்களை நேரடியாக பிரசாந்திடம் சொல்லுங்கள்” அனைவருக்கும் நன்றி: நகைச்சுவையுடன் பேசினார்.
நடிகர் வையாபுரி பேசியதாவது, “இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். இந்த யூனிட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் – எல்லோரும் நண்பர்களாக வேலை செய்ததுதான். எந்த ஈகோவும் இல்லாமல் மிக ஜாலியாக வேலை பார்த்தார்கள்”. “ZEE5-ல் தொடர்ந்து இதுபோன்ற நல்ல சீரிஸ்களில் வேலை செய்ய ஆசை” அனைவருக்கும் நன்றி.
நடிகர் அருள்தாஸ் பேசியதாவது , “‘விலங்கு’ பிரசாந்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதன் தொடர்ச்சியாக ‘வாரண்ட்’ உருவாகியுள்ளது. இது ஒரு போலீஸ் கதை என்றாலும், சினிமாவில் வழக்கமாக பார்க்காத போலீஸ் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டுகிறது” என்றார். “பிரசாந்த் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக இயல்பாக நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் அவரோடு எளிதில் கனெக்ட் ஆக முடியும். நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும்” என்று வாழ்த்தினார். “இந்தக் குழுவிடம் போலீஸ் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் உள்ளன. அதனால் ‘வாரண்ட்’ அடுத்தடுத்த பாகங்களாகவும் வர வாய்ப்பு இருக்கிறது” என்றார்.
நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது. “ஹீரோ மெட்டீரியல் என்று எதுவும் கிடையாது. ஒரு கதையை யார் முன்னின்று கொண்டு செல்கிறார்களோ அவர்கள்தான் ஹீரோ. அந்த திறமை பிரசாந்த் சாருக்கு இருக்கிறது”, “ஆஃப் ஸ்கிரீனிலேயே பெண்களுக்கு மிகவும் பிடித்தவர் பிரசாந்த் சார். இந்த சீரிஸ் வெளியான பிறகு ஆன் ஸ்கிரீனிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகும்”.எதிர்பார்ப்பை உயர்த்திய “வாரண்ட்” முழு விழாவும் படக்குழுவினரின் நட்பு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் பிரசாந்த் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘விலங்கு’ உலகத்தின் விரிவாக்கமாக உருவாகும் இந்த “வாரண்ட்” வெப் சீரிஸ், ரியலிஸ்டிக் போலீஸ் கதையுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியது. என்றார்.
தயாரிப்பாளர் குமார் பேசியதாவது… நான் இந்தக் கதையை முழுதாக படித்து விட்டேன். விக்னேஷ் இயக்குநராக சிறக்க வாழ்த்துக்கள். பிரசாந்தை மாமன் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இந்தக் கதையை படிக்க சொல்லி மிகவும் வற்புறுத்தினார். இவர்தான் நடிக்கப் போகிறார் என்பது அப்போது தெரியாது. மிகச்சிறந்த கதை. அடுத்தடுத்து நான்கு படங்கள் கமிட்டாகியுள்ளார். எனக்கும் படம் தர கேட்டுக்கொள்கிறேன். அவர் பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள்.
நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது.., ஹீரோவுக்கு தனி உருவம், வடிவம் எல்லாம் கிடையாது. கதைதான் ஹீரோ. அதை சரியாக செய்யும் திறமை பிரசாந்திடம் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள்.
இயக்குநர் ராம்குமார் பேசியதாவது.., பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர், நல்ல இயக்குநர், இப்போது நடிகராக மாறியிருக்கிறார். அவரிடம் எப்போதும் தனித்துவம் இருக்கும். அவரை என் பார்க்கிங் படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் இருந்தது. இயக்குநராக ஜெயித்தது போல நடிகராகவும் ஜெயிப்பார். விலங்கு சீரிஸை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல வாரண்ட் எல்லோரையும் கவரும். அதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசியதாவது.., பிரசாந்த் என் நண்பர், என் படத்திலும் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் அவர் நடிக்கவில்லை என நினைக்கிறேன். விலங்கு தமிழில் அனைவரையும் கவர்ந்த சீரிஸ். ஒரு படம் எவ்வளவு டீடெய்லிங் எப்படி பண்ண வேண்டும் என்பதை விலங்கு கற்றுத்தந்தது. வாரண்ட் அதே போல மிகச்சிறந்த சீரிஸாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி.
கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், காவல் துறையின் மறுபக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், மன அழுத்தம், அதிகார துஷ்பிரயோகம், மனித மன மாற்றங்கள் ஆகியவற்றை தீவிரமாக பதிவு செய்யும் வகையில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக “கோட்டை கருப்பசாமி” என்ற காவலர் வருகிறார். சாதாரண காவலராக தனது வாழ்க்கையை தொடங்கும் அவர், சமூக அவமானங்கள், அதிகார அழுத்தங்கள் மற்றும் பல்வேறு குற்றவியல் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார். பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது, மெதுவாக அவரது மனநிலையும் செயல்பாடுகளும் மாறத் தொடங்குகின்றன. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒருவன், சட்டத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் தருணங்களே இந்த தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
ஒரு லாக்கப் டெத் சம்பவம் கதையை முற்றிலும் திருப்பி விடுகிறது. அதன் பின்னர் உண்மை, பொய், அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதலே கதையின் மையமாக நகர்கிறது. ஒரு காவலரின் உளவியல் மாற்றத்தை மிகவும் ரியலிஸ்டிக்காக பதிவு செய்யும் முயற்சியாக “வாரண்ட்” பார்க்கப்படுகிறது.
இந்த சீரிஸில் பாலாஜி சக்திவேல், காளி வெங்கட், அருள்தாஸ், நம்ரிதா MV, அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா மற்றும் வையாபுரி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பின்னணி இசை வழங்கியுள்ளார். ஒளிப்பதிவு பணிகளை அசோக் குமார், எடிட்டிங் பணிகளை R ராமர் செய்துள்ளனர்.
கிராமத்து காவல் நிலையங்கள், உள்ளூர் அரசியல், அதிகார மிரட்டல்கள் மற்றும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களை மிக நெருக்கமாக காட்டும் இந்த தொடர், “விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“வாரண்ட்” வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.
ஷான் ரோல்டன் இசையில் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ!
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில், அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் நடித்திருக்கும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் “ரா ரா ரங்கையா” பாடல் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் “நான் தான் கிங்கு” பாடலும் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்து வருகிறது.
ஷான் ரோல்டன் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள இந்தப் பாடலை ஷான் ரோல்டன், கெலிதீ, லலிதா சுதா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். நாயகனின் குணாதிசயங்கள், புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை வெளிப்படுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த லிரிக்கல் வீடியோ பாடல், முதல் முறை கேட்டவுடனேயே ரசிகர்களை ஈர்க்கும் தன்மையைக் கொண்டுள்ளது. மாஸ் மற்றும் ஸ்டைலிஷ் பாணியில் அமைந்துள்ள பாடலின் வரிகளும் இசையும், “கான் சிட்டி” படத்தின் உலகத்தை மேலும் சுவாரஸ்யமாகக் காட்டுகின்றன.
பாடலின் காட்சியமைப்பிலும் தனித்துவமான முயற்சிகள் இடம்பெற்றுள்ளன. அர்ஜூன் தாஸ் திரையில் காட்டும் ஸ்கிரீன் பிரசென்ஸ் மற்றும் பாடலின் அனல் பறக்கும் பீட்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. குறிப்பாக பாடலின் வரிகளும், இசை அமைப்பும் இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புதுமையான கதைக்களத்தில் உருவாகும் “கான் சிட்டி” படம், நகர வாழ்க்கையில் கடனில் சிக்கித் தவிக்கும் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு ஆகிய அனைத்தும் கலந்த ஒரு முழுமையான ஃபேமிலி என்டர்டெயினராக உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாக நடிக்க, அன்னா பென் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி, அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இந்த படம், மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்குக் கைப்பற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு அப்டேட்டிலும் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை கொடுத்து வரும் “கான் சிட்டி”, தற்போது “நான் தான் கிங்கு” பாடல் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சந்தீப் கிஷன் – கிருஷ்ண சைதன்யா – விஜய் சில்லா – சசி தேவி ரெட்டி கூட்டணியில் உருவாகும் ‘பவர் பேட்டா’ (Power Peta) படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது !!
விஜய் சில்லா மற்றும் சசி தேவி ரெட்டி தலைமையிலான 70mm Entertainments நிறுவனம் மீண்டும் ஒரு மாபெரும் திரைப்படத்தை உருவாக்கத் தயாராகியுள்ளது. இதயம் தொடும், தீவிரம் மற்றும் வலுவான கதைகளைக் கொண்ட படங்களை வழங்கி வரும் இந்த தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த பிரம்மாண்ட முயற்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதில் நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். எழுத்தாளராக இருந்து இயக்குநராக மாறிய கிருஷ்ண சைதன்யா இப்படத்தை இயக்குகிறார். சந்தீப் கிஷனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பவர் பேட்டா’ படத்தின் புதிய அதிரடி கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது.
இந்த கிளிம்ப்ஸ் ஆரம்பத்திலேயே திரையரங்க முதல் நாள் கொண்டாட்டத்தின் மின்சாரம் பாயும் சூழலுடன் தொடங்குகிறது. ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையில் ஹீரோ சிகரெட் புகைத்தபடி என்ட்ரி கொடுத்து, “சிங்கம்” குறித்து அதிரடி வசனம் பேசுகிறார். அதன் பின்னர் அந்த மண்ணின் தன்மையும், அதற்குள் இருக்கும் அதிகாரத்தின் வலிமையையும் அவர் விவரிக்கிறார். மேலும் திரையரங்க திரையில் பட்டாசுகளை எறியும் காட்சி ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாக தருணமாக அமைந்துள்ளது.
சந்தீப் கிஷன் இந்த படத்தில் முரட்டுத்தனமான லுக்கில் காட்சியளிக்கிறார். ஸ்டைலிஷ் கண்ணாடி, வித்தியாசமான உடை மற்றும் மிரட்டலான பாடி லாங்குவேஜ் மூலம் அவர் வேற லெவல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். அவரது கதாபாத்திர பெயரான “சேனாபதி ரவி” வெளியிடப்பட்டிருப்பதும் இந்த கதாபாத்திரத்தின் தீவிரத்தையும் ஆதிக்கத்தையும் உணர்த்துகிறது. அவரது திரை ஆளுமை, பன்ச் வசனங்கள் மற்றும் மிரட்டலான ஆட்டிட்யூட் அனைத்தும் கிளிம்ப்ஸில் பெரும் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
இயக்குநர் கிருஷ்ண சைதன்யா ஒரு பெரிய மாஸ் கதாபாத்திரத்தை உருவாக்குவதில் தனது திறமையை நிரூபித்துள்ளார். மாஸ் காட்சிகளும் வசனங்களும் வலுவாக அமைந்துள்ளன. சாதாரணமாக சிகரெட் பற்றவைக்கும் காட்சியையே கோபம் நிறைந்த தருணமாக மாற்றியிருப்பது அவரது இயக்கத்தின் திறனை வெளிப்படுத்துகிறது.
ஒளிப்பதிவாளர் மதி , பீரியட் கால உலகத்தை துல்லியமாக படமாக்கியுள்ளார். மணி சர்மாவின் பின்னணி இசை ஒவ்வொரு காட்சிக்கும் அதிரடியை கூட்டுகிறது. தேசிய விருது பெற்ற எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பை கவனித்துள்ளார். ராமகிருஷ்ணா மற்றும் மோனிகா ஆகியோர் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர். சச்சின் சுதாகரன் மற்றும் ஹரிஹரன் இணைந்து சவுண்ட் டிசைன் பணிகளை செய்துள்ளனர்.
படப்பிடிப்பு தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. முதல் கட்ட படப்பிடிப்பை படக்குழு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
நடிப்பு: சந்தீப் கிஷன்
தொழில்நுட்ப குழு: எழுத்து, இயக்கம் – கிருஷ்ண சைதன்யா தயாரிப்பாளர்கள் – விஜய் சில்லா, ஷஷி தேவிரெட்டி தயாரிப்பு நிறுவனம் – 70mm Entertainments இசை – மணி சர்மா ஒளிப்பதிவு – மதி படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத் தயாரிப்பு வடிவமைப்பு – சப்பாணி ராமகிருஷ்ணா, மோனிகா சவுண்ட் டிசைன் – சச்சின் சுதாகரன், ஹரிஹரன் PRO – யுவராஜ்
Zee studios & Drumsticks Productions தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிக்கும் “சத்தியவான் சாவித்திரி” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
Zee studios & Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகியுள்ள “சத்தியவான் சாவித்திரி” படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக், அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
வக்கீல் கூட்டத்திற்கு நடுவே சிவப்பு உடையில், தீர்க்கமான பார்வையுடன் திரும்பி பார்க்கும் கீர்த்தி சுரேஷ் கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும் ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
ஒரு சந்தோசமான சராசரி பெண்ணாக வாழும் கீர்த்தி, அவரது சீனீயர் ஒரு வழக்கில் தவறான பக்கம் வாதாடும் போது, அதை அவருக்கு உணர்த்த முற்படுகிறாள். ஆனால் அப்போது தான் சீனியரின் அசல் முகம் வெளிப்படுகிறது. அந்த வழக்கு கீர்த்தியின் வாழ்வை புரட்டி போடும் விதமாக இருக்கிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பது தான் இப்படத்தின் கதை.
ஒரு வழக்கை மையமாக வைத்து, திரில்லர் பாணியில் அனைத்து கமர்ஷியல் அம்சங்களுடன், அனைவரும் ரசிக்கும் வண்ணம், ஒரு ஜனரஞ்சக படைப்பாக இப்படத்தை உருவாக்குகி வருகிறார் அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய்.
இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் எதிர் சீனியர் வழக்கறிஞராக மிஷ்கின் இணைந்து நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், மதுசூதனன், R சுந்தர்ராஜன், ஷில்பா மஞ்சுநாத், பிரிகிடா, மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ராஜா ராணி பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தொழில்நுட்பக் குழு விபரம் தயாரிப்பு – Zee studios & Drumsticks Productions தயாரிப்பாளர்கள் – வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் இணை தயாரிப்பாளர்கள் – S வைஷ்ணவி விவேக்சந்தர் மற்றும் வினோத் CJ எழுத்தாளர் – இயக்குனர்: பிரவீன் S விஜய் ஓளிப்பதிவு : அருள் வின்சென்ட் இசை: சாம் C S எடிட்டர்: பிரசன்னா G.K கலை இயக்குனர்: பிரேம் கருந்தமலை, AM ஆனந்த்ராஜ் ஆடை வடிவமைப்பாளர்: க்வாசய் கீர்த்தி ஆடை வடிவமைப்பு : ஸ்ருதி மஞ்சரி பாடல்கள் – மோகன்ராஜன், கார்த்திக் நேத்தா, உமா தேவி விளம்பர வடிவமைப்புகள் : தினேஷ் அசோக் நிர்வாக மேலாளர் : மணி தாமோதரன் மக்கள் தொடர்பு : சதீஷ் AIM
முதன்மை கதாபாத்திரத்தில் விலங்கு, மாமன் பட இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் நடிகராக அறிமுகம்
இந்தியா, XX மே 2026: தமிழ் ZEE5 தனது தைரியமான, வேரூன்றிய, சமரசமற்ற கதை சொல்லல் வரிசையை மேலும் வலுப்படுத்திக் கொண்டு, மே 22, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ள புதிய ஒரிஜினல் தொடர் ‘வாரண்ட்’-ஐ அறிவிக்கிறது. இந்த தொடரில் முன்னணி கதாபாத்திரமாக பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கிறார். ‘விலங்கு’ என்ற கல்ட் ஹிட் தொடரையும் ‘மாமன்’ திரைப்படத்தையும் இயக்கிய இவர், இந்த தொடரில் நடிப்பதின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குனர் விக்னேஷ் நடராஜன் இயக்கத்தில் உருவாகும் இந்த தொடருக்கு சாம் C.S. இசையமைத்துள்ளார். இந்த தொடரின் ஷோ ரன்னராகவும் நடிகர் தேர்வையும் பிரசாந்த் பாண்டியராஜ் மேற்கொண்டுள்ளார். மேலும், பாலாஜி சக்திவேல், கௌசல்யா, காளி வெங்கட், நம்ரிதா MV, அருள் ஜோதி, அருள் தாஸ், சாயா தேவி உள்ளிட்ட பலர் இணைந்து, கதைக்கு ஆழத்தையும் நம்பகத்தன்மையையும் வழங்குகின்றனர்.
‘வாரண்ட்’ தொடர், அன்றாட போலீஸ் வழக்குகளின் கவனிக்கப்படாத உலகை ஆராய்கிறது, அவை மெதுவாக ஆபத்தான நிலைக்கு மாறும் விதத்தையும் காட்டுகிறது. இந்தக் கதை, கோட்டை கருப்புசாமி என்ற இரண்டாம் நிலை காவலரை மையமாகக் கொண்டு நகர்கிறது. அவரின் அமைதியான அவமானங்களும் பயமும், அவர் சட்டத்தை எவ்வாறு அமல்படுத்துகிறார் என்பதைக் கட்டமைக்கின்றன. இதன் மூலம் அதிகாரம், ஆட்சித்தன்மை மற்றும் நீதி எப்போது மங்குகிறது என்பதைக் குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
இந்த தொடரின் மூலம் நடிகராக அறிமுகமாகும் பிரசாந்த் பாண்டியராஜ் கூறியதாவது: “கோட்டை கருப்புசாமி என்பது பாராட்டப்பட வேண்டிய ஹீரோ அல்ல. அவர் சிரமமானவர், நெகிழ்வானவர், மிகுந்த மனிதத் தன்மை கொண்டவர். அந்த நேர்மை என்னை பயமுறுத்தியது, அதனால்தான் நான் அந்தக் கதாபாத்திரத்தை தேர்வு செய்தேன். ஒரு படைப்பாளியாக, வெளிப்படையான காட்சிகளுக்கு பதிலாக உண்மையை நான் எப்போதும் விரும்புகிறேன். ‘வாரண்ட்’ தொடரில் நடித்தது, நான் பொதுவாக கேமராவின் பின்னால் மட்டும் ஆராயும் உணர்வுகளை நேரடியாக எதிர்கொள்ள வைத்தது. தமிழ் ZEE5 இந்தக் கதைக்கு அதன் இயல்பான, நேர்மையான வடிவத்தில் வெளிப்பட இடமளித்தது. பார்வையாளர்கள் கோட்டை கருப்புசாமியின் பயணத்தை வெறும் பார்ப்பதற்காக அல்ல, அதை உணரவும், சிந்திக்கவும் செய்வார்கள் என்று நம்புகிறேன்.”
மே 22 முதல் தமிழ் ZEE5-ல் ‘வாரண்ட்’ தொடரைப் பார்க்க தயாராக இருங்கள்.
ZEE5 பற்றி:
ZEE5 என்பது இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் கோடிக்கணக்கான பொழுதுபோக்கு ரசிகர்களுக்கான பன்மொழிக் கதை சொல்லியாகும். இது ZEE என்டர்டெயின்மெண்ட் என்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதி ஆகும். இது 4,071+ திரைப்படங்கள், 1,800+ தொலைக்காட்சி தொடர்கள், 422+ வலை ஒரிஜினல்கள், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கும் மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான தொகுப்பை வழங்குகிறது.
இந்த உள்ளடக்கம் 12 மொழிகளில் 7 தனிப்பயன் மற்றும் ஹைபர்-லோகல் சந்தா திட்டங்களின் மூலம் வழங்கப்படுகிறது – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஓடியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி. இதில் ஒரிஜினல்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சிகள், செய்திகள் மற்றும் நேரலை டிவி ஆகியவை அடங்கும்.
உலகளாவிய தொழில்நுட்ப கூட்டாண்மைகளின் மூலம் உருவான வலுவான டீப்-டெக் அமைப்பு, பல சாதனங்கள், எகோசிஸ்டம்கள் மற்றும் இயங்குதளங்களில் ZEE5-ஐ சீரான அனுபவத்துடன் வழங்க உதவுகிறது. Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது.
தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath ) , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நஹாஸ் ஹிதாயத், இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான் தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக, இந்தப் படம் உருவாகி வருவதுடன், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். லோகா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.
மேலும், சமீப காலங்களில் வெளியான தனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், “ஐ அம் கேம்“ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். மேலும், RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத், இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாக “ஐ அம் கேம்“ உருவாகி வருகிறது. பான்-இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லராக இந்த படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியாகவுள்ளது.
தொழில்நுட்ப குழு விவரங்கள்:
லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித் இசை: ஜேக்ஸ் பிஜாய் எடிட்டிங்: சமன் சாக்கோ தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன் தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர் உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன் உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர் பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார் VFX : தௌஃபீக் (எக்வொயிட்) (Eggwhite) போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட் ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன் மக்கள் தொடர்பு : யுவராஜ்
“பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா
70 களின் காலகட்டத்தை நிஜத்தில் கொண்டு வரும் 24 பிரம்மாண்ட செட்கள், கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு
மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ் கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார்.
இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.
படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.
மேலும், படத்தில் ஹீரோ பயன்படுத்தும் கிரிக்கெட் பேட்டும் இயல்பான கிராமத்து தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமத்து இளைஞன் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தானாகவே உருவாக்கிய பேட் போல அதனை வடிவமைத்துள்ளார்களாம். அந்த கதாபாத்திரத்தின் நடை, உடல் மொழி உள்ளிட்ட பல நுணுக்கங்களும் அதற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.
கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒரே எண்ணத்தில் பணிபுரிந்தால் மட்டுமே திரைப்படம் முழுமையான வடிவம் பெறும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ராம்சரண் குறித்து பேசுகையில், தான் உருவாக்கிய ஒவ்வொரு செட்டையும் ராம்சரண் மிகவும் பாராட்டியதாக அவினாஷ் கூறியுள்ளார். மல்யுத்த அரங்கம், ரயில் அமைப்பு, சிறப்பு பாடல் செட் என அனைத்தையும் அவர் ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக “பெத்தி” குறித்து அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. “இது முற்றிலும் வித்தியாசமான திரைப்படம். படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியே வரும் போது கண்டிப்பாக கண்களில் கண்ணீர் இருக்கும். அந்த அளவுக்கு பெத்தியின் வாழ்க்கை பயணம் மனதை தொடும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் சுகுமார் கூட சமீபத்தில், இந்தப் படத்தில் ராம்சரண் நடிப்பு ரங்கஸ்தலம் படத்தை விட அதிகமாக பேசப்படும் என்று கூறியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நானி, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், சுனைனா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்” சீரிஸை பாராட்டி குழுவிற்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளனர் !!
மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ரைம் வீடியோவின் எக்ஸாம் சீரிஸ், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பல முன்னணி பிரபலங்கள் இந்த தமிழ் சஸ்பென்ஸ் டிராமாவைப் பற்றி தங்களது உற்சாகத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நானி இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளம் குறித்து பாராட்டி, இதன் பின்னணி குழுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் பெற்ற S. J. சூர்யா, முழு குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, இந்த சீரிஸ் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். சுழல் : தி வோர்டெக்ஸ் சீசன் 2 மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் ‘Wallwatcher Filmsஇன் மற்றொரு தரமான படைப்பு’ எனக் கூறி, ‘இந்த சீரிஸை binge-watch செய்ய ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் ரிஷி புகழ் சுனைனா, ‘இந்த சீரிஸை பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என்று பகிர்ந்துள்ளார். அதே சீரிஸில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ், ப்ரைம் வீடியோ குழுவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் பிரபலமான அனகா மற்றும் சுழல் : தி வோர்டெக்ஸ் புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சீரிஸிற்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் எக்ஸாம் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டு, Wallwatcher Films தயாரிப்பில், A. சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அப்பாஸ் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.
எக்ஸாம் சீரிஸ் , தமிழ் மொழியில் உருவாகி, தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி டப்பிங்குகளுடன், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வரும் மே 15 முதல் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.