Breaking
June 6, 2026

Cinema Reviews

“குமார சம்பவம்”திரைவிமர்சனம்

ஒரு வீட்டில் மர்மமான முறையில் குமரவேல் இறந்து கிடக்க அந்த வீட்டின் உரிமையாளரின் பேரனான குமரனை விசாரணைக்கு உட்படுத்துகிறார்கள்.அந்த விசாரணையில் குமரவேல் ஒரு சமூகப் போராளி என்றும் அதனால் அவருக்கு யாராவது சமூக விரோதிகள் நிறைய பேர் இருப்பார்கள் என்றும் காவல்துறை நினைக்கிறது அதை வைத்து அந்த விசாரணையை விசாரிக்க ஆரம்பிக்கிறார்கள்.அவ்வாறு செல்லம் அந்த விசாரணையானது அந்த விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்களில் பார்வையில் ஒவ்வொரு கதையாக சொல்லப்படுகிறது.அந்த கதையில் முக்கியமாக குமரன் திரைப்படம் இயக்க முயற்சிப்பதும் அதற்கான ப்ரொடியூசர் தேடி கிடைக்காததால் தனது வீட்டை விட்டுக் கொடுக்கும்படி தாத்தாவிடம் கேட்பதும் அந்த தாத்தா அந்த சொத்தை சரிசமமாக பிரித்து அதில் ஒரு பங்கை தனது வளர்ப்பு மகனாக நினைக்கும் குமரவேலுக்கும் சேர்த்து எழுதி வைத்திருக்கிறார் இந்த கோணத்தில் பார்க்கும்போது குமரன் தான் அந்த கொலையை செய்திருப்பார் என்று நினைக்கிறார்கள் காவல்துறையினர்.
இப்படி சீரியஸாக செல்ல வேண்டிய கதையை ஒரு ஜாலியான கதையாக எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி வேணுகோபால்.
இந்த படத்தின் நாயகனாக சின்னத்திரை இருந்து பெரிய திரை காரிமுகம் ஆகிறார் குமரன் தாத்தாவாக ஜி எம் குமார் நாயகியாக பாயல் ராதாகிருஷ்ணன் போராளியாக குமரவேல் இப்படி பலரும் நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் தங்கள் முதலிய பதித்திருக்க இயக்குனரோ தனது திரைக்கதையில் சற்றே கோட்டையை விட்டு இருக்கிறார்.என்றால் இதை ஒரு முழு நீள காமெடி திரைப்படமாக எடுக்க முயற்சித்து தடுமாறி இருக்கிறார் ஏனென்றால் படத்தின் கிளைமாக்ஸ் அந்த அளவுக்கு சொதப்பலாக இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.படத்தின் இரண்டு பலங்கள் ஒளிப்பதிவு மற்றும் இசை

குமார சம்பவம் படம் பார்க்கும் நமக்கும் சற்றே சம்பவம் தான்

“யோலோ” திரைவிமர்சனம்

யோலோ என்ன யூடியூப் சேனல் வைத்து அதில் பேய் வேடம் போட்டு பிராங்க் வீடியோக்களை நடத்துபவர் நாயகன்,இவருக்கும் நாயகிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதாக கூறுகிறார்கள் ஆனால் அது நாயகி மறுக்க மற்றவர்கள் அதை விசாரிக்கும் போது இருவருக்கும் திருமணம் ஆகி விட்டதாகவும் அவர்கள் இருவரும் தேனிலவுக்கு வெளிநாட்டிற்கு சென்று வந்தார்கள் என்று இருபது பாஸ்போர்ட்டிலும் ஆதாரம் இருப்பது போல் காட்டுகிறார்கள் இது உண்மையா இல்லையா என நாயகனும் நாயகியும் குழம்ப தங்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் குழம்புகிறார்கள் ஒரு கட்டத்தில் நாயகன் நாயகியை நான் காதலிக்க அவர்களுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதுதான் கதை
இந்த திரைப்படத்தின் திரைக்கதையில் இயக்குனர் ஏதோ ஒரு விஷயத்தை சொல்ல முயற்சிக்கிறார் ஒரு வித்தியாசமான கதைக்களமாக ஆரம்பித்து அதில் பேய் கதை என்று ஒன்றை கொண்டு வந்து அமானுஷ்ய சக்தி என்று ஒன்றை கொண்டு வந்து அதை சரிவர கையாளாமல் சற்றே குழப்பமாகத்தான் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் படத்தில் காமெடி இருந்தாலும் அங்கங்கே நம்மை சிரிக்க வைக்க முயற்சிக்கிறார் ஆனால் அது முடியாமல் தான் போகிறது இந்த
இந்த திரைப்படத்தை அந்த பிராங்க் ஸ்டைலிலேயே கொண்டு இருந்தால் நிச்சயம் திரைக்கதை காமெடியாகவும் நன்றாகவும் இருந்திருக்கும் இதற்குள் அமானுஷ்ய சக்தியை கொண்டு வந்தது சொதப்பலாக தான் உள்ளது

“பாம்” திரைவிமர்சனம்

காளகம்மாய் பட்டி என்னும் கிராமத்தில் ஒரு எரிகல் விழுந்து இரண்டாகப் பிரிந்து இரண்டு பக்கமும் விழுகிறது. அந்த ஊரில் உள்ள மக்கள் தங்கள் ஊர் பக்கம் உள்ள கல்லை இருவரும் தனித்தனியாக கடவுளாக கும்பிடுகிறார்கள். அதுவரை ஒற்றுமையாக இருந்த அந்த ஊர் பிரிகிறது. அவ்வாறு அந்த ஊர் காளப்பட்டி என்றும் கம்மாபட்டி என்றும் அழைக்கப்படுகிறது.

காலப்போக்கில் அவர்களது அந்த பிரிவு மிகப்பெரிய சண்டையாக மாறுகிறது பல வருடங்கள் கழித்து அந்த ஊரில் உள்ள மக்களை ஒன்று சேர்க்க போராடும் மனிதராக காளி வெங்கட் அந்தப் போராட்டத்தில் அவர் தோல்வி அடைந்து ஒரு கட்டத்தில் மரணம் அடைகிறார். அவரது உடலை தூக்க அந்த ஊர் மக்கள் முயற்சிக்கும் பொழுது முடியாமல் போக ,படத்தின் நாயகன் அர்ஜுன் தாஸ் தன்னந்தனியாக அவரை தூக்கிக் கொண்டு செல்கிறார் மேலும் அவரது உடலில் இருந்து காற்று வெளியேற அவர் உயிரோடு இருக்கிறார் என்று நம்புகிறார் அர்ஜுன் தாஸ் .

ஆனால் அந்த ஊரில் உள்ள ஒரு வயதான அம்மாவோ அது மனித உடலில் உள்ள வாயு அது இறந்த பிறகு வெளியேறும் என்று கூற, ஆனாலும் மக்கள் அனைவரும் அந்த காளிவெங்கட்டின் மேல் சாமி வந்திருப்பதாக நம்புகிறார்கள்.அந்த புரளியை வைத்துக்கொண்டு அது உண்மையா இல்லையா என்று புரியாமல் குழம்ப ஆனாலும் அந்த உடம்பை தூக்க முடியாமல் இருக்க அர்ஜுன் தாஸ் மட்டும் தூக்க, அர்ஜுன் தாஸ் தான் அந்த சாமியின் மறு அவதாரம் என்று நம்பி அவர் மட்டும்தான் காளிவெங்கட்டின் தூக்கி அடக்கம் செய்ய முடியும் என்று நம்புகிறார்கள். இதில் அர்ஜுன் தாஸ் அவரது குலத்தொழிலாக மாட்டிற்கு லாடம் மற்றும் வேலையை செய்து ஒதுக்கப்பட்டவராக இருக்கிறார்,இப்போது ஊரே அவரை கடவுளாக பார்க்கிறது இந்த சூழ்நிலையில் காளிவெங்கட்டின் உடலை அடக்கம் செய்கிறார்களா இரண்டு ஊர் மக்களும் ஒன்று சேர்கிறார்களா என்பது தான் படத்தின் திரைக்கதை.


இயக்குனர் விஷால் வெங்கட்டிற்கு இது இரண்டாம் திரைப்படம் ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்து ஒரு வித்தியாசமான கதைகளத்தில், காலகட்டத்தில் நடப்பது போல் காட்டியிருக்கிறார். தனது திரைக்கதையை தெளிவாக எழுதி இருக்கிறார், படம் ஆரம்பித்து ரொம்ப நேரத்திற்கு கதை ஒரே இடத்தில் இருப்பது போல் இருந்தாலும் இடைவேளைக்கு சற்று முன் ஒரு விறுவிறுப்பாக வித்தியாசமான கதைகளை காட்டி நிமிர வைக்கிறார் இயக்குனர், அதன் பிறகு அந்த போக்கிலேயே படமும் செல்கிறது அது படத்திற்கு நிச்சயம் போரடிக்காமல் செல்ல உதவுகிறது.

படத்தின் மிகப்பெரிய பலம் காலி வெங்கட், அர்ஜுன் தாசின் நடிப்பு காளி வெங்கட் பிணமாக அவ்வபோது தனது உடலில் இருந்தும் காற்றுக்கு அந்த உடல் அசைவை கொடுப்பதும் அந்த முகபாவணையை சிறப்பாக வைத்துக் கொண்டு பிணமாக நடிப்பதும் ரசிக்கும் படியாகவும் காமெடியாக உள்ளது.


அர்ஜுன் தாசின் நடிப்பு அளவாக அந்த கதாபாத்திரத்தில் எண்ண தேவையோ எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது மேலும் படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது வரும் கதாபாத்திரங்களை சிறப்புடன் செய்து இருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பலம் ஒளிப்பதிவு மற்றும் இசை
இயக்குனர் விஷால் வெங்கட் ஒரு தெளிவான திரைக்கதையில் இந்த பாம் திரைப்படத்தை இயக்கிஇருக்கிறார்.


பாம் திரைப்படம் கடவுள் நம்பிக்கை இருப்பவனுக்கு கடவுள் இருக்கு, இல்லாதவனுக்கு இல்லை என்பதில் எந்தவித குழப்பமும் இல்லாமல் தெளிவாக எடுத்திருக்கிறார்

லோகா-அத்தியாயம் ஒன்று திரைவிமர்சனம்

அதீத சக்திகள் கொண்ட நாயகி கல்யாணிபிரியதர்ஷன் பெங்களூர் நகரத்திற்குள்வருகிறார். அங்கே பேக்கரி ஒன்றில் பணியாற்றும் நண்பர்கள் அவர்கள் தங்கியிருக்கும்.அடிக்குமாடி அபார்ட்மெண்ட் குடியிருப்பில் சந்திரா‌ வீட்டில் இருக்கும்எதிரே வாசிக்கிறார்கள் நஸ்லன்,சந்து சலீம்குமார், மற்றும் அருண்குரியன், ஆகியோர் குடியிருப்பில் தங்கி இருக்கிறார்கள்.ஆனால் எதிரே மாடியில் இருக்கும் சந்திரா அவரால் ஈர்க்கப்படுகிறார்கள். அதே சமயம்,மனிதர்களை கடத்தி அவர்களது உடல் உள்ள உறுப்புகளை திருடும் கும்பலால்பெங்களூரில் பரபரப்பு ஏற்படுகிறது. அந்த கும்பலுடன்தொடர்புடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான சாண்டியுடன்,கல்யாணி பிரியர்தர்ஷனுடன் அடிக்கடி மோதல் வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால்,கல்யாணி பிரியர்தஷன் அவள் அதீத மாயா சக்திகள் கொண்டபெண் மட்டும் அல்ல, டிராகுலா ஆங்கிலம் படத்தில் வரும் ரத்தக்கட்டேரி போலஇந்த படத்தில் ரத்ததை உரிஞ்சும் ஹிட்பேய் போன்றகதாபாத்திரத்தில் வருகின்ற அதற்கும் மேல என்ற உண்மை தெரியவருகின்றன. அவர் யார் ? அவரைப் பற்றிய உண்மைதெரிந்த பிறகு என்ன நடந்தது ? என்பதை நம்ம புராணக் கதைக் கதாபாத்திரத்தை

சூப்பர் ஹீரோவாக சித்தரிக்கும் வகையில் சொல்வது தான் ’லோகா – அத்தியாயம் ஒன்று : சந்திரா’.என்ற கதைக்களம்

சந்திரா என்ற கதாபாத்திரத்தில் மாயா அதீத சக்திகள் படைத்த பெண்ணாககல்யாணி பிரியதர்ஷன் வெகுவாக மிரட்டியுள்ளார்.

சந்திராவால் கவர்ந்து ஈர்க்கும் வகையில இளைஞர்களாக நடித்திருக்கிறார்.நஸ்லன், சந்து சலீம்குமார் மற்றும் அருண் குரியன்

போலீஸ் இன்ஸ்பெக்டர் நாச்சியப்பா கவுடா என்றகதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடன இயக்குநர்சாண்டி மாஸ்டரின் வில்லத்தனம் மிரள வைக்கின்றன.

சிறப்பு தோற்றத்தில் வரும் டோவினோ தாமஸ், துல்கர் சல்மான் மற்றும்

திரையில் தோன்றாத பெரியவர் கதாபாத்திரங்கள் எதிர்பார்ப்பை

தூண்டும் விதத்தில் திரைக்கதையில் கையாளப்பட்டுள்ளன.

சந்திரா எதற்காக பெங்களூருக்கு வருகிறார் ?

அவருக்கு கொடுக்கப்பட்ட பணி என்ன ?, அவர்கள் யாருக்கு எதிராக

போராடுகிறார்கள் ? ஆகிய கேள்விகளுக்கான

பதில்கள் தெளிவாக தெரியவில்லை

“வீரவணக்கம்”திரை விமர்சனம்

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய முதல் செயலாளரும், புரட்சி வீரருமான பி.கிருஷ்ண பிள்ளையின்வாழ்க்கை வரலாறு. கேரளாவுக்கும்,‌இது தமிழகத்துக்கும் அரசியல் ரீதியாகவும், முதல் பெண்கள்முன்னேற்றம் மற்றும் சமூக நீதி போராட்டங்கள் ரீதியாகவும் இருக்கும்ஒற்றுமையை எடுத்துரைப்பது தான் இப்படத்தின் கதைதமிழக கிராமம் ஒன்றின் செல்வந்தரான பரத், கம்யூசனிவாதியாக இருக்கிறார்.ஊர் மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்வது, சாதியினரில், ஏழைபணக்காரன் என்ற ஏற்றத்தாழ்வு வித்தியாசமாக பார்க்காமல் .அனைவருடனும் பழகுகிறார்.

அதே சமயம், அவரது பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில்பாதிக்கப்படும் மக்களுக்கு துணையாக நிற்பது, அந்தமக்களின்பிரச்சனைகளை எதிர்த்து போராட வைப்பதற்காக அவர்களைகேரளாவுக்கு அழைத்துச் சென்று கம்யூனிச போராளிகளை சந்திக்க வைக்கிறார்.அப்போது 96. வயதுள்ள பெண் கம்யூனிச போராளி பி.கே.மேதினி, புரட்சிவீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் வாழ்க்கை வரலாறு மற்றும் கேரளாவில் கம்யூனிய புரட்சிஉருவாகி, விஸ்வரூபம் எடுத்தது என்பதை விவரிப்பது தான்

“வீரவணக்கம்” 1940 – ஆண்டில். தொடங்கும் கதை 1946 வரை பயணிக்கின்றனது.இந்த காலக்கட்டங்களில் வெள்ளையனைவெளியேற்ற ஒரு தரப்பு போராடிக் கொண்டிருந்த சமயத்தில்,இந்திய கிராமங்களில் தனி அரசாங்கத்தை நடத்திக் கொண்டிருந்தஜமீன்கள். மற்றும் நில சுவாந்தர்கள் மூலம் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட விவசாய தொழிலாளர்களைஅனைவரையும் மீட்டு, இதுல புதிய மக்கள் புரட்சியை கம்யூனிசம் எப்படி உருவாக்கியது,என்பதை எதார்த்தாம் மீறாமல், அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார் இயக்குநர் அனில் வி.நாகேந்திரன்.

சமுத்திரக்கனி பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பணக்காரகம்யூனிசவாதி கதாபாத்திரத்தில் பரத்,

அனில் வி.நாகேந்திரன்எழுதி இயக்கியிருக்கும்,பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வாழ்க்கையை
உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுத்துள்ளார்.

Bhoghee தமிழ் திரைப்பட விமர்சனம்…..

மலைப்பகுதி பின்னணியில் குடும்பம், கல்வி, சமூக பிரச்சினைகள் கலந்து உருவாக்கப்பட்ட கதை. நடிப்பு, இயக்கம், தொழில்நுட்ப அம்சங்கள், குறைகள் அனைத்தும் விவரமாக.

கதை சுருக்கம்

மலைப்பகுதி கிராம வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான படம். அலகார் (நாபி நந்தி) தனது சகோதரி கவிதா (ஸ்வஸிகா விஜய்) வழியே மருத்துவக் கல்வி கனவு காண்கிறார். ஆனால் கவிதாவின் திடீர் மரணம் கதையை மர்மமும் உணர்வும் கலந்த பாதையில் இட்டுச் செல்கிறது.


நடிப்பு

நாபி நந்தி, அலகாரின் கோபம், வேதனை, மனக்குழப்பம் ஆகியவற்றை உணர்ச்சியுடன் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்வஸிகா விஜய், குறுகிய திரைப் பரப்பிலேயே பாதிப்பை ஏற்படுத்துகிறார். வேலா ராமமூர்த்தி மற்றும் மொட்டைக் ராஜேந்திரன் ஆகியோர் துணை வேடங்களில் ஓரளவு வலிமையை கூட்டுகின்றனர்.


இயக்கம் மற்றும் திரைக்கதை

இயக்குனர் எஸ். விஜயசேகரன், உணர்ச்சி மற்றும் சமூகச் செய்தியை இணைக்க முயற்சித்தாலும், திரைக்கதை பல இடங்களில் சீரற்றதாக இருக்கிறது. முதல் பாதி சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் கதை மெதுவாக நகர்வதால் சலிப்பு ஏற்படுகிறது. சில காட்சிகள் தேவையற்ற நீளத்தைக் கொடுக்கின்றன.


தொழில்நுட்ப அம்சங்கள்

ஒளிப்பதிவு மலைப்பகுதி அழகை சிறப்பாகப் பதிவு செய்துள்ளது. பின்னணி இசை காட்சிகளுடன் பொருந்துகிறது. ஆனால் பாடல்கள் மற்றும் எடிட்டிங் தரம் சராசரி மட்டுமே.


முக்கிய அம்சங்கள் (Positive & Negative)

  • நல்லவை: உணர்ச்சிமிக்க கதை, மலைப்பகுதி பின்னணி, நம்பகமான நடிப்பு, ஒளிப்பதிவு.
  • குறைபாடுகள்: சீரற்ற திரைக்கதை, மெதுவான இரண்டாம் பாதி, தேவையற்ற காட்சிகள், பாடல்கள் நினைவில் நிற்காதது.

முடிவு

Bhoghee சமூகச் செய்தியையும், குடும்ப உணர்வையும் பேசும் முயற்சியாக உள்ளது. ஆனால் சீரற்ற திரைக்கதை மற்றும் மெதுவான கதை ஓட்டம் காரணமாக படம் முழுமையான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பார்வையாளர்களுக்கு இது ஓரளவு திருப்தி தரும் சராசரி அனுபவமாகும்.

ஹவுஸ் மேட்ஸ் சினிமா விமர்சனம் – அறிவியல் புனைகதை & திகில் கலந்த புதிய தமிழ் த்ரில்லர்

🎬 தயாரிப்பு: சுவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், ப்ளே ஸ்மித் ஸ்டியோஸ், சவுத் ஸ்டியோஸ்
🎥 தயாரிப்பாளர்கள்: சிவகார்த்திகேயன், எஸ். விஜய பிரகாஷ்
✍️ இயக்கம் & திரைக்கதை: டி. ராஜவேல்
முக்கிய நடிகர்கள்: தர்ஷன், காளி வெங்கட், அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி


ஹவுஸ் மேட்ஸ் படத்தின் கதைச் சுருக்கம்

மழை பெய்யும் இரவில் இடி மின்னல் தாக்கியதில் 2012 மற்றும் 2022 ஆகிய இரண்டு காலகட்டங்களில் ஒரே F1 பிளாக்கில் வசிக்கும் இரண்டு குடும்பங்கள், டெசரக்ட் என்ற அறிவியல் விதியின் விளைவாக ஒரே வீட்டில் வாழ்வது போல அதிசயமான சம்பவங்களை சந்திக்கின்றனர்.

கார்த்திக் (தர்ஷன்) தனது காதலி அனுவை (அர்ஷா சாந்தினி பைஜு) திருமணம் செய்து புதிய வீட்டில் குடியேறுகிறார். ஆனால் அங்கே அமானுஷ்ய நிகழ்வுகள் அவர்களைச் சூழ்கின்றன. சுவற்றில் தோன்றும் மர்மமான கிறுக்கல்கள், எழுதப்பட்ட கேள்விகள் – இவை அனைத்தும் ரமேஷ் (காளி வெங்கட்) மற்றும் அவரது குடும்பத்துடன் தொடர்புடையவை என்பது தெரியவருகிறது.

அறிவியல் விளக்கம் கொண்ட இந்த சம்பவங்கள் இரு குடும்பங்களின் வாழ்க்கையை எப்படி மாற்றுகின்றன? எதிர்காலத்தில் நடக்க இருக்கும் விபத்தை அவர்கள் தடுப்பார்களா? என்பதே படத்தின் மையக்கரு.


நடிப்பு & கதாபாத்திரங்கள்

  • தர்ஷன், காளி வெங்கட் – தங்களது கதாபாத்திரங்களை இயல்பாகவும் நம்பகத்தன்மையுடனும் வெளிப்படுத்தியுள்ளனர்.
  • அர்ஷா சாந்தினி பைஜு, வினோதினி – உணர்ச்சிகரமான காட்சிகளில் வலிமையான நடிப்பு.
  • தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் – கதை ஓட்டத்திற்கு வலிமை சேர்த்த துணை நடிகர்கள்.

தொழில்நுட்ப தரம்

🎼 இசை – ராஜேஷ் முருகேசனின் பின்னணி இசை திகிலும் உணர்ச்சியும் கலந்த அனுபவத்தை அதிகரிக்கிறது.
📸 ஒளிப்பதிவு – எம்.எஸ். சதீஷ் ஒரே வீட்டை இரண்டு காலகட்டங்களில் சுவாரஸ்யமாகக் காட்டியுள்ளார்.
✂️ எடிட்டிங் – ஏ. நிஷார் ஷரீஃப் சவாலான எடிட்டிங்கை நன்றாக கையாள்ந்துள்ளார்.
🎨 கலை – என்.கே. ராகுலின் கலை வடிவமைப்பு கதைக்கு வலிமை சேர்க்கிறது.


விமர்சன பார்வை

இயக்குனர் டி. ராஜவேல், டெசரக்ட் விதியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் சினிமாவில் வித்தியாசமான அறிவியல் புனைகதை த்ரில்லரை வழங்கியுள்ளார்.

  • பாசிட்டிவ்ஸ்: வித்தியாசமான கதை, நடிப்பு, தொழில்நுட்ப தரம்.
  • நெகட்டிவ்ஸ்: க்ளைமாக்ஸ் பகுதியில் சிறிது குழப்பம், தீர்வுகள் முழுமையாக திருப்தி அளிக்காதது.

மொத்தத்தில்

ஹவுஸ் மேட்ஸ் – அறிவியல் புனைகதை மற்றும் திகில் கலந்த வித்தியாசமான தமிழ் த்ரில்லர். சுவாரஸ்யமான கதைகளையும் விஞ்ஞான அடிப்படையிலான திரைக்கதைகளையும் விரும்பும் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவமாக இருக்கும்.

சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் : தடுமாறும் த்ரில்லர்

சின்னத்தம்பி புரொடக்ஷன் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்திருக்கும் சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் படத்தை அனிஷ் அஷ்ரஃப் எழுதி இயக்கியுள்ளார்.

கதை சுருக்கம்
க்ரைம் நாவல் எழுத்தாளரின் மகனான பிரபாகரன் (வெற்றி), தந்தையின் வாழ்க்கையை தொடராக எழுத சென்னைக்கு வருகிறார். பத்திரிகையாளரான சுவாதி (ஷில்பா மஞ்சுநாத்) அந்த தொடரை எழுதும் வேளையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா (தம்பி ராமையா) மற்றும் திருடன் மின்னல் ராஜா (கிங்ஸ்லி) ஆகியோருடன் பிரபாகரன் பழகுகிறான். திடீரென பல கொலைகள் நிகழ, ராமையாவுக்கு உதவியாக பிரபாகரன் விசாரணையில் ஈடுபடுகிறார். இதன் பின்னணியில் இருக்கும் சைக்கோ கொலைகாரன் யார் என்பதே கதை.

நடிப்பு
வெற்றி தனது வழக்கமான பாணியிலிருந்து விலகி, விசாரணை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக இருந்தும் அதிக பங்களிப்பு இல்லாமல் சில காட்சிகளில் மட்டுமே தோன்றுகிறார். தம்பி ராமையா நகைச்சுவை காட்சிகளில் சிரமப்பட்டாலும், உணர்ச்சி காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வில்லனாக மகேஷ் தாஸ் அச்சுறுத்தும் தோற்றத்துடன் பங்கேற்றுள்ளார். ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவை காட்சிகள் தேவையற்றதாக தோன்றுகின்றன.

தொழில்நுட்பம்
ஏ.ஜே.ஆர் இசையமைப்பு காட்சிகளுக்கு ஏற்றபடி அமைந்துள்ளது. அரவிந்தின் ஒளிப்பதிவு மற்றும் விஷாலின் எடிட்டிங் படத்தை வேகமாக நகர்த்த உதவுகின்றன.

விமர்சனம்
அனிஷ் அஷ்ரஃப், பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையமாகக் கொண்டு சைக்கோ த்ரில்லரை உருவாக்கியுள்ளார். ஆனால், கதாநாயகனின் விசாரணை பங்கேற்பு இயல்பாக இல்லாமல், கதையின் வலிமையை குறைக்கிறது. போலீஸ் அதிகாரியாக அவரை வடிவமைத்திருந்தால் சுவாரஸ்யம் அதிகரித்திருக்கும். சீரியஸான காட்சிகளில் நகைச்சுவை சேர்த்திருப்பது பரபரப்பை தளர்த்துகிறது.

முடிவு
சைக்கோ த்ரில்லர் முயற்சியாக வந்த சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம் சீரான திரைக்கதை இல்லாமல் தடுமாறுகிறது.


அக்யூஸ்ட் – அரசியல், காவல், குற்றம் கலந்த பதட்டப் பயணம்!

ஜெய்ஷன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன், எம்ஐஒய் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள அக்யூஸ்ட், ஒரு கைதியின் பயணத்தில் மறைந்து கிடக்கும் அரசியல் மற்றும் குற்றச் சூழலை நெருடலுடன் வெளிப்படுத்துகிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீனிவாஸ், கதை, திரைக்கதை, இயக்கம் மூன்றிலும் தன் தடத்தை பதித்துள்ளார்.

📝 கதை சுருக்கம்
புழல் சிறையில் உள்ள ரவுடி கைதி கணக்கு (உதயா) சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். பிரபல அரசியல் கட்சி மாவட்ட செயலாளர் குணசேகரன் கொலை வழக்கு என்பதால் பாதுகாப்பு கடுமையாக அமையும் நிலையில், கான்ஸ்டபிள் வேந்தன் (அஜ்மல்) தலைமையில் மூன்று போலீஸ்காரர்கள் அவரை அழைத்துச் செல்கின்றனர்.

பாதையில் ரவுடி கும்பலின் தாக்குதலில் சிக்கி, வேந்தன் கணகுவை மீட்டு வேலூரின் ஓர் ஊரில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். ஆனால், போலீஸின் உத்தரவுப்படி என்கவுண்டர் திட்டம் நடப்பதை அறிந்ததும், கணகுவை காப்பாற்ற வேந்தன் வியூகம் தீட்டுகிறார்.

ரவுடிகள், போலீஸ் என்கவுண்டர், அரசியல் விளையாட்டு என பல தடைகளை தாண்டி, வேந்தன் தனது கடமையை நிறைவேற்றி நீதிமன்றம் வரை கணகுவை அழைத்துச் செல்ல முடியுமா? குணசேகரன் கொலையின் பின்னணியில் யார்? உண்மையை வெளிச்சமிடுவாரா? என்பதே க்ளைமாக்ஸ்.

🎭 நடிப்பு

  • உதயா ரவுடி கணக்குவாக, ஆக்ஷனிலும் நகைச்சுவையிலும் சிறந்து விளங்குகிறார்.
  • அஜ்மல் நேர்மையான போலீஸ்காரராக, சாலையிலான சவால்களில் அமைதியான அழுத்தமான நடிப்பைக் கொடுத்துள்ளார்.
  • யோகிபாபு தனது நகைச்சுவை பாணியில் சிரிப்பூட்டுகிறார்.
  • ஜான்விகா கலகேரி, சாந்திகா, பவன் உள்ளிட்டோரின் நடிப்பும் படத்திற்கு வலு சேர்க்கின்றது.

🎥 தொழில்நுட்பம்

  • ஸ்டண்ட் சில்வா பஸ் சண்டை உள்ளிட்ட ஆக்ஷன் காட்சிகளை உயர்தரமாக வடிவமைத்துள்ளார்.
  • மருதநாயகம் ஒளிப்பதிவில் சாலைப் பயண காட்சிகளை நெருடலுடன் காட்சிப்படுத்தியுள்ளார்.
  • நரேன் பாலகுமார் இசையில் பாடல்கள், பின்னணி இசை சராசரி அளவுக்கு உதவுகின்றன.
  • கே.எல். பிரவீன் எடிட்டிங் படத்தின் வேகத்தை கட்டுப்படுத்தி, கதையை உறுத்தும் படி வடிவமைத்துள்ளார்.


அரசியல், குற்றம், காவல் நடவடிக்கைகள் கலந்த பதட்டமான சாலைப் பயணத்தை, திருப்பங்களும் த்ரில்லும் சேர்த்து இயக்குனர் பிரபு ஸ்ரீனிவாஸ் , அக்யூஸ்ட் நிரபராதி கைதியின் வாழ்க்கையை அரசியல் பின்னணியோடு சுவாரஸ்யமாக சொல்லும் நேர்மையான முயற்சி.


“தலைவன் தலைவி” திரைவிமர்சனம்

ஒரு படத்துல ஒரு ஹிஸ்டரியாபேசன்ட் இருக்கலாம் ,இல்ல ரெண்டு ஸ்டீரியா பேசன்ட் இருக்கலாம், ஆனால் இந்த படத்துல வர்றவங்க போறவங்க எல்லாம் ஹிஸ்டரிய பேசன்ட்டுங்களா இருந்தா பாக்குற நாம என்ன பேசன்டா மாறுவோம் அப்படின்னு சொல்ல வருவது தான்
தான் “தலைவன் தலைவி”
மதுரை ஒத்தக்கடையில் ஒரு சிறிய ஹோட்டல் நடத்தி வரும் விஜய் சேதுபதி அண்ட் கோ பேமிலி, அவருக்கு பெண் தேடுகிறார்கள், அவ்வாறு தேடும் பொழுது ஆர் கே சுரேஷின் தங்கைநித்யா மேனனை பெண் பார்க்கிறார்கள். காதல் பிறக்கிறது விஜய் சேதுபதியின் கொத்து புரோட்டாவில் மயங்கி நித்யா மேனன் குடும்பம் விஜய் சேதுபதிக்கு பெண் தர முடிவெடுக்கிறார்கள். இதற்கிடையே விஜய் சேதுபதி அம்மாவுக்கு யாரோ ஒரு ஜோசியக்காரன் நித்யா மேனன் உங்க வீட்டுக்கு வந்தா மாமனார், மாமியாரை ஒரு மூளையில் உட்கார வைத்து விடுவாள் என்று கூற, விஜய் சேதுபதி அம்மவோ அந்த பெண் வேண்டாம் என்று கூறுகிறார், ஆனால் விஜய் சேதுபதி வம்படியாக நித்தியாமேனனை தூக்கி வந்து திருமணம் செய்கிறார் இந்த திருமணத்தில் ஆர் கே சுரேஷ், விஜய் சேதுபதி இருவருக்கும் மோதலை உண்டாக்குகிறது.இவ்வாறு திருமணம் செய்துவிட்டு இருவரும் ஒற்றுமை இல்லாமல் அடிக்கடி சண்டை போடுவதும் கத்திக் கொண்டே இருப்பதும் அம்மா வீட்டிற்கு கோபித்துக் கொண்டு செல்வதுமாக நித்யா மேனன் இருக்கிறார்.

ஒரு கட்டத்தில் நிரந்தரமாக பிரிந்து செல்ல அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தைக்கு தகவல் தெரிவிக்காமல் மொட்டை அடிக்கும் பங்க்ஷன் நடக்கிறது. அங்கு வரும் விஜய் சேதுபதி அவர்களிடம் சண்டை போட்டு அடிக்கடி பிளாஷ் பைக்கில் கதைகளை சொல்லி அவர்கள் சண்டைக்காண காரணத்தை சொல்லி, இதெல்லாம் ஒரு காரணமா என்று நம்மை எண்ண வைத்து நம்மையும் கிறுகிறுக்க பிடிக்க வைத்து திரைக்கதை எழுதியவர்கள் கிறுகிறுத்து இந்த திரைப்படத்தை இருவரையும் சேர்த்து முடிக்கிறார்கள். அப்பாடா முடிந்து விட்டது என்று பார்த்தால் மீண்டும் சண்டை ஆரம்பித்து கோர்ட்டுக்கு செல்கிறார்கள், சரி டைவர்ஸ் தான் வாங்கி விட்டார்கள் என்று பார்த்தால் மீண்டும் ஒன்றாக பரோட்டா பிசைந்து கொண்டிருக்கிறார்கள் இதுதான் இந்த தலைவன் தலைவி படத்தின் கதை.

.இந்த படத்தில் விஜய் சேதுபதி ஹிஸ்டரியாபேசன்ட் போல் எப்போதும் கத்திக் கொண்டே இருக்கிறார் மனைவியிடம் சாப்பிடுங்க மேடம், சாப்பிடுங்க மேடம், ஓகே மேடம் ,சொல்றது பத்து தெருவிற்கு தள்ளி கேட்பது போல் தான் பேசுகிறார் இவர்கள் சாதாரணமாக பேசினாலே இப்படி இருக்கும் போது, சண்டை போட்டால் ஊரில் இருப்பவர்கள் என்ன நினைப்பார்கள் ஆனால் இவர்கள் சண்டை போடும் காரணம் எல்லாம் பைத்தியக்கார குடும்பத்தில் கூட இந்த மாதிரி சண்டை போட மாட்டார்கள், அந்த மாதிரியான காரணங்களை தான் காட்டியிருக்கிறார்கள் ஒரே ஒரு காட்சியும் கூட நமக்கு மனதில் பதியும் அளவிற்கு படத்தில் இல்லை என்பதுதான்,

யோகி பாபு இந்த படத்தில் படம் ஆரம்பிப்பதற்கு, முடிப்பதற்கு மட்டுமே உதவி இருக்கிறார் மத்த படத்தில் செட் ப்ராப்பர்ட்டி போல் ஆங்காங்கே வந்து போகிறார் இதே மாதிரி நிறைய கதாபாத்திரங்கள்.
படத்தில் நித்தியாமனின் அம்மாவாக வருபவரும், விஜய் சேதுபதி அம்மாவாக வருபவரும் நடிப்பின் வில்லத்தனம் மட்டும் தான் நம்மால் ரசிக்க முடிகிறது ஓரளவிற்கு.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கிடைப்பதெல்லாம் போட்டு அடித்து இசையமைத்திருக்கிறார் படம் முழுவதும் நமக்கு சவ்வு கிழிந்தது நிச்சயம்.

கத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் இந்த இசை ஒரு பக்கம் நம் காது ஜவ்வு கிழிகிறது
இந்தப் படத்தின் பாராட்டக்கூடிய ஒரே விஷயம் இந்த படத்தின் லொகேஷன் ஒரு கோவிலுக்குள் அதுவும் அந்த கிராமத்து சூழ்நிலையில் இருக்கும் அந்த கோவிலை செட்டாக பயன்படுத்தி அந்த இடத்தில் எடுத்திருப்பது மிகவும் பாராட்டக்கூடிய விஷயம் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது
தலைவன் தலைவி இந்த படத்திற்கு பொருத்தமான தலைப்போ இல்லையோ நமக்கு தெரியவில்லை????????????