Breaking
November 22, 2024

Cinema Reviews

‘தி ரோடு’திரை விமர்சனம்

திரிஷா,டான்சிங் ரோஸ்,சபீர் சந்தோஷ் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தி ரோடு

கணவர் மற்றும் மகன் மூன்று மாத கர்ப்பமாக வாழ்ந்து வரும் திரிஷா, இவர்கள் வாழ்க்கையில் திடீரென ஒரு விபத்து, அந்த விபத்தில் கணவர் மற்றும் குழந்தையை பறிகொடுத்து விடுகிறார். அவர்கள் இறந்த இடத்தில் அஞ்சலி செலுத்த வரும் திரிஷா, அங்கு நடக்கும் தொடர் விபத்துகளை கண்டு அதிர்ச்சி அடைகிறார். தனி ஒரு ஆளாக அந்த விபத்துக்கள் ஏன் நடக்கிறது என்று துப்பறிய இறங்குகிறார். இறுதியில் என்ன நடக்கிறது என்ற கதையை திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் அருண் வசீகரன்.
திரிஷா எப்பொழுதும் போல் இளமையாக, ஒரு குழந்தைக்கு தாயாக, கணவருக்கு காதல் மனைவியாக,ஒரு அழகான குடும்பத் தலைவியாக,வாழ்ந்து, பின்பு துப்பறியும் பணியில் இறங்கி காவல்துறை அதிகாரிகளை தூக்கி சாப்பிடும் தோரணையில் வலம் வருகிறார்.
டான்சிங் ரோஸ் சபீர் பெண்கள் கல்லூரியில் பேராசிரியராக வந்து அமைதியான அப்பாவியாக இருக்கும் பொழுதும், அங்கு தன்னிடம் படிக்கும் பெண்ணின் ஒரு தலை காதலை ஏற்க மறுத்து இந்தப் பெண்ணால் துரோகத்துக்கு ஆளாகி அவமானப் படும் பொழுது, அந்த அவமானத்திலிருந்து மீள அவர் தேர்ந்து எடுக்கும் வழி சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை நினைவுபடுத்தும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது அவரது கதாபாத்திரம்.
தந்தையாக வேலராமமூர்த்தி எப்பொழுதும் முரட்டுத்தனமாகவே நடிக்கும் இவருக்கு இந்த படத்தில் ஒரு பாசமான அப்பாவாக கண்கலங்க வைக்கிறார்.
தோழியாக வரும் மியா ஜார்ஜ் துப்பறியும் புலிக்கு அசிஸ்டன்ட் புலியாக வருகிறார்.
காவல்துறை இன்ஸ்பெக்டராக வரும் எம் எஸ் பாஸ்கர் அவருக்கு வழக்கமான நடிப்பு அதை திறம்பட வழங்கி இருக்கிறார்.
செம்மலர் அன்னம் வித்தியாசமான வேடம் அதை திறம்பட வழங்க தன்னால் முடிந்த வரை முயற்சி செய்து இருக்கிறார்.
சாம் சி எஸ் இன் இசையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது கே ஜி வெங்கடேசன் ஒளிப்பதிவு ஹைவே ரோடு வேகத்திற்கு செல்கிறது.
படத்தில் ஹைவே வில் வரும் ஏகப்பட்ட திருப்பங்களை போல் காட்சிக்கு காட்சி திருப்பங்கள் வந்தாலும் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமலே, சீரான வேகத்தில் படம் ஓடவில்லை

தி ரோடு ஏகப்பட்ட குண்டு குழிகளுடன் பயணம் செய்யலாம்.

OVER ALL RATTING———2/5

‘இந்தக் கிரைம் தப்பில்லை’ திரைவிமர்சனம்

ஊட்டியில் இருந்து சென்னை வரும் கதாநாயகி மேக்னா மொபைல் விற்பனை செய்யும் கடையில் பணியில் சேர்கிறார்.

அந்த மொபைல் கடைக்கு வரும் மூன்று இளைஞர்களை வேறு வேறு பெயரில் காதலிப்பது போல் நடித்து தனது பின்னால் சுற்ற வைக்கிறார் கதாநாயகி மேக்னா.

ரிட்டையர்ட் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் தலைமையில் சைலண்டாக பாண்டி கமல் மற்றும் இவரது கூட்டாளிகள் சேர்ந்து இன்ஸ்பெக்டர் ,வக்கீல் என அடுத்தடுத்து ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் செய்து வருகிறார்.

கதாநாயகி மேக்னா எதற்காக அந்த மூன்று இளைஞர்களை தன் பின்னால் சுற்ற வைக்க வேண்டும்.? ஆடுகளம் நரேன் ஆப்ரேஷன் ஒன்றிற்கு ப்ளான் எதற்காக செய்து வருகிறார்.

ரிட்டையர்ட் ராணுவ வீரரான ஆடுகளம் நரேன் யாரை டார்கெட் செய்கிறார் என்பதுதான் இந்த இந்தக் கிரைம் தப்பில்லை திரைப்படத்தின் மீதி கதை.

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆடுகளம் நரேன் நடித்திருக்கிறார்.

ஆடுகளம் நரேன் எதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் நாயகி மேக்னா கொடுத்த வேலையை மிகவும் சரியாக செய்திருக்கிறார்.

சின்னத்திரை நடிக்கும் நடிகர் பாண்டி கமல் முதல் முறையாக வெள்ளித்திரையில் இந்து திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் பாண்டி கமல் முடித்தவரை தனது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு என்ன தேவையோ அதை மிகவும் சரியாக செய்திருக்கிறார்.

இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் AMM. கார்த்திகேயன் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றவாறு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் பரிமளவாசன் இசையில் பாடல்கள் கதை ஓட்டத்திற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.

பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய பக்க பலமாக இருக்கிறது.

பாலியல் குற்றங்கள் பற்றி நிறைய படங்கள் வந்திருந்த்தாலும் இந்த திரைப்படத்தில் பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதை மிகவும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் தேவகுமார்.

இந்த கதையை யோசித்த இயக்குனர் தேவகுமார் திரைக்கதையில் இன்னும் அதிகளவில் கவனம் செலுத்தி இருந்திருக்கலாம்.

இந்த கிரைம் தப்பில்லை திரைப்படத்தில் பல குறைகள் இருக்கத்தான் செய்கின்றன.

குறைகளை தவிர்த்து திரைப்படத்தை பார்த்தால் இது ஒரு நல்ல திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி இருந்தால் இந்த திரைப்படம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்திருக்கும்.

நடிகர் & நடிகைகள் :- ஆடுகளம் நரேன், பாண்டி கமல், மேக்னா ஏலன், முத்துக்காளை, வெங்கட் ராவ், கிரேசி கோபால், காயத்ரி, மற்றும் பலர்.

எழுத்து & இயக்கம் :- தேவகுமார்.

ஒளிப்பதிவாளர் :- AMM. கார்த்திகேயன்.

படத்தொகுப்பு :- ராஜேஷ்.

இசையமைப்பாளர் :- பரிமளவாசன்.

தயாரிப்பு நிறுவனம் :- மதுரியா புரொடக்ஷன்ஸ்.

தயாரிப்பாளர் :- மனோஜ் கிருஷ்ணசாமி.

ரேட்டிங் :- 2./ 5.

‘வாழ்வு தொடங்கும் இடம் நீதானே’ திரைவிமர்சனம்

தன் பாலின ஈர்ப்பாளர்களை கருத்தை மைய்யமாக வைத்து வந்துள்ள திரைப்படம்தான் ’வாழ்வு தொடங்கும் இடம் நீதானே’ ஷார்ட் பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் இந்த திரைப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகி உள்ளது.


நிராஞ்சனா, சுருதி பெரியசாமி முக்கிய கதாபாத்திரத்தில் மற்றும் அஸ்வத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஜெயராஜ் பழனி இயக்கத்தில் ”வாழ்வு தொடங்குமிடம் நீதானே”.
தன் பாலின ஈர்ப்பாளர்களை பற்றி உணரும் படம்


தரங்கம்பாடி அருகே ஒரு ஒரு இஸ்லாமிய குடும்பத்தைச் சேர்ந்தவர் ஷகிரா. இவரின் வீட்டிற்கு திருச்சியில் இருந்து மார்டனாக வினோதா என்ற பெண் வருகிறார்.

சினிமா எடுப்பதற்காக இந்த பகுதிக்கு வந்திருப்பதாகவும், சில நாட்கள்தங்கியிருக்க இருப்பதாகவும் கூறுகிறார் வினோதா.தனது வீட்டிலேயே தங்கிக் கொள்ளுமாறு கூறிவிடுகிறார் ஷகிராவின் தந்தை. ஷகிராவும் வினோதாவும் ஒரே அறையில் தங்குகின்றனர்.

அந்த சமயத்தில் இருவருக்கும் காதல் ஏற்படுகிறது. இந்த காதலை வினோதா ஷகிராவின் அப்பாவிடம் கூறுகிறார். இதனால், கோபம் கொண்ட இருவரையும் அடித்து விடுகிறார் ஷகிராவின் தந்தை.

இந்நிகழ்வால், அவசரமாக ஷகிராவிற்கு திருமண ஏற்பாடுகளை செய்கிறார். இறுதியில் ஷகிராவும் வினோதாவும் இணைந்தார்களா.? இந்த சமுதாயம் இவர்களை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

நிராஞ்சனா, சுருதி பெரியசாமி இருவரும் தன்பாலின ஈர்ப்பாளர்களாக நடித்துள்ளார்கள். வெளிநாடுகளில் இருந்த இம்மாதிரியான கலாச்சாரம், நம் நாட்டிற்கு வர ஆரம்பித்துள்ளது. அரசும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என்று அனுமதியும் வழங்கியுள்ளது. இம்மாதிரியான தன் பாலின ஈர்ப்பாளர்கள் பற்றிய விழிப்புணர்வு இப்போது தான் எழ ஆரம்பித்துள்ளது. அது, இன்னும் மக்கள் மனதில் சென்றடைய விழிப்புணர்வு ஒன்றே வேண்டும்.

வாழ விடுங்கள் வாழ விடுங்கள் என்று கூறுவதை விட, தங்களின் உணர்வுகளை அனைவரும் புரிந்து கொள்ளும்படியான செய்தி மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும்.
திரைக்கதையை மிக அற்புதமாக நகர்த்தியுள்ளார் இயக்குனர்.

சுருதி மற்றும் நிரஞ்சனாவின் முத்த காட்சிகள் இப்படத்தின் மிகப்பெரிய ஹைலைட்.

இது போன்ற கதைகளை தேர்ந்தெடுத்து தயாரிக்கும் நீலிமா இசைக்கு பாராட்டுக்கள்.

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே காதலுக்கு ஜாதி, மதம் பேதம் மட்டும் இல்லை பாலின பேதமும் கிடையாது

Overall ratting——-2.5/5

‘சந்திரமுகி 2’ திரை விமர்சனம்

ராகவா லாரன்ஸ்,கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார்,மற்றும் பலர் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் சந்திரமுகி 2

மிகப்பெரிய தொழிலதிபரான சுரேஷ் மேனன், ராதிகா சரத்குமார் குடும்பத்தில் உள்ள பேக்டரி தீப்பெடுத்து எரிந்து விடுகிறது.இப்படி அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.நடக்கும் பிரச்சினைகளுக்கு முற்றும் புள்ளி வைக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் மட்டுமே பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என குடும்ப ஜோதிடர் சொல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரும் குலதெய்வம் கோவில் உள்ள ஊருக்கு செல்கிறார்கள்.அங்கு தங்குவதற்கான சந்திரமுகி இருக்கும் அந்த பங்களாவை குத்தகைக்கு எடுத்து அனைவரும் தங்குகிறார்கள்.இவர்களுடன் ராதிகா மகளின் இரண்டு குழந்தைகளும் வரவேண்டும் என ஜோதிடர் கூற அந்த இரண்டு குழந்தைகளுக்கும் பாதுகாவலராக இருக்கும் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் அதே சந்திரமுகி பங்களாவில் வந்து தங்குகிறார்கள்.இந்நிலையில் குலதெய்வ கோவில் பராமரிப்பு இல்லாமல் அடர்ந்த காடு போல் சுத்தம் செய்யாமல் இருக்கிறது.தங்களது குலதெய்வ கோவிலில் சுத்தம் செய்வதற்காக ஒருவர் மூலம் 20 பேர் கொண்ட நபர்கள் சுத்தம் செய்ய செல்கிறார்கள்.அங்கு கோவில் சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களில் இரண்டு பேர் மட்டும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள்.அதே சமயம் சந்திரமுகியின் ஆத்மா ராதிகாவின் மகளான லட்சுமி மேனன் உடலுக்குள் புகுந்து விடுகிறது.இதையடுத்து இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் நடக்கிறது.

இறுதியில் சந்திரமுகியின் ஆத்மா லட்சுமி மேனனை விட்டு சென்றதா? செல்லவில்லையா? சந்திரமுகியின் ஆத்மா ராதிகா குடும்பத்தை என்ன செய்தது? குல தெய்வ கோவிலில் ராதிகாவின் குடும்பத்தினர் வழிபாடு செய்தார்களா? வழிபாடு செய்யவில்லையா? என்பதுதான் இந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.

ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாப்பத்திரத்தில் வீரத்தையும், பாண்டியன் கதாப்பத்திரத்தில் காமெடியையும் தனக்கே உரிய பாணியில் நடனம், ரொமான்ஸ் என அருமையாக நடிப்பில் கலக்கி இருக்கிறார்.

சந்திரமுகியாக வரும் கதாநாயகி கங்கனா ரனாவத் நடனம், பயம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து அழகு தேவதையாக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

லட்சுமி மேனன் பாவமாக வந்து சந்திரமுகியின் ஆத்மா தன்து உடம்பில் புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி அசர வைத்து இருக்கிறார்.

பணிப்பெண்ணாக வரும் மகிமா நம்பியார் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

ராதிகா சரத்குமார் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.

சிருஷ்டி டாங்கே, ரவி மரியா, விக்னேஷ், ராவ் ரமேஸ், Y.G மகேந்திரன், சாய் ஐயப்பன், சத்ரூ, கார்த்திக் சீனிவாசன், C.ரங்கநாதன், தேவி, பாவனா, பேபி மானஸ்வி, மாஸ்டர் சஞ்ஜீவ், மாஸ்டர் தர்சித், பேபி தீக்ஷா உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

வடிவேலு தான் பயந்து ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுத்து இருக்கிறார். திரைப்படத்திற்கு பெரிய பலம் வடிவேலுவின் நடிப்பு.

ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமையாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஆஸ்கர் நாயகன் எம் எம் கீரவாணியின் இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.

சந்திரமுகி முதல் பாகத்தில் இருந்த அரண்மனையில் ராதிகா மற்றும் குடும்பத்தினர் சென்ற பிறகு சந்திரமுகி ஆத்மாவால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி.வாசு.

மொத்தத்தில் சந்திரமுகி ஆக்ரோஷமான அழகிய பேய்

OVER ALL RATTING———-3/5