’சூது கவ்வும் 2’ திரை விமர்சனம்….
நாயகன் சிவா, மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து ஆள் கடத்தல் செய்து பணம் சம்பாதித்து எந்த நேரமும் சரக்கு அடித்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.தமிழக நிதி அமைச்சர் கருணாகரன், தமிழகத்தில் உள்ள ஊழல் அமைச்சர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு, மட்டுமல்லாமல் தன் கட்சிக்கு ஏராளமான நிதிகளை பெற்றுக்கொடுப்பதிலும் முதலிடத்தில் இருந்து வருகிறார்.அதே சமயம் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரன் 60000 ஆயிரம் கோடி பணத்தை வரும் தேர்தலில் தமிழகத்தில் உள்ள வாக்காளர்களுக்கு கொடுக்க வேண்டும் என திட்டம் போடுகிறார்.அதனால் தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரன் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கொள்ளாத முதல்வர், ராதாரவி மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பை கருணாகரனிடம் ஒப்படைக்கிறார்.அதன்படி, வங்கியில் இருந்து கொடுக்கப்பட்ட டிவைஸ் மூலம் தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கு பணத்தை கொடுக்க திட்டம் போடுகிறார்.தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கு பணத்தை விநியோகம் செய்ய திட்டமிடும் கருணாகரன் அதற்காக ரூ.60000 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கியில் டெபாசிட் செய்து, அந்த பணத்தை உடனடியாக மக்களுக்கு விநியோகம் செய்வதற்காக ஒரு கருவியை வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார்.
முதல் பாகத்தில் வரும் தாஸ் கதாபாத்திரம் போல், கற்பனை காதலியுடன், கடத்தல் தொழில் செய்து வரும் கதாநாயகன் சிவா, தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.வங்கியில் இருக்கும் பணத்தை முதல்வரிடம் கொடுக்க செல்லும் போது நாயகன் சிவா தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்தி விடுகிறார்.அதனால் கருணாகரனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் நிதியமைச்சராக இருக்கும் கருணாகரனுக்கு ஏற்ப்பட்ட மாற்றம் என்ன? என்பதுதான் இந்த ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார்.
‘சூது கவ்வும்’ முதல் பாகத்தில் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி என்ன செய்தாரோ அதையே தான் இந்த சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் சிவா குருநாத் என்ற கதாபாத்திரத்தில் செய்திருக்கிறார்.
சூது கவ்வும் கதையின் மையப்புள்ளியான அருமை பிரகாசம் கதாபாத்திரத்தில் கருணாகரன், ஆளும் கட்சி முதல்வர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராதாரவி, வாகை சந்திரசேகர், அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அரசியல் மோதல்கள் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்துள்ளார்கள்.
அருள்தாஸ், கல்கி, கவி, யோக் ஜேபி, கராத்தே கார்த்தி, கற்பனை பெண்ணாக நடித்திருக்கும் ஹரிஷா ஜஸ்டின் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை மிக சரியாக செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே.தில்லை, ஒளிப்பதிவு மூலம் முதல் பாகத்தின் தொடர்ச்சி என்பதால், முதல் பாகத்தை மனதில் வைத்தே காட்சிகளை மிக அருமையாக காட்சிப்படுத்தி இருக்கிறார்.
இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஷ்வநாத்தின் இசையில் பாடல்களும், ஹரி எஸ்.ஆரின் பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப மிகவும் அருமையாக பயணித்து
இருக்கிறார்.
மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற ‘சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை, அதன் முந்தைய தொடர்ச்சியாக இயக்குநர் எஸ்.ஜே.அர்ஜுன் எழுதியிருக்கும் கதையில், அரசியல் சம்பவங்கள் சுவாரஸ்யம் மிக்கதாக உள்ளது.