Cinema

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் நடைபெற்ற வெளியீட்டிற்கு முன் நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஆஃப்ரோ பேசுகையில், ”ஒவ்வொரு இன்டர்வியூவிலும் நான் எஸ் டி ஆரின் ரசிகன் என்று சொல்லியிருக்கிறேன். அவர் இந்த மேடையில் இருக்கும்போது நானும் இருப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இதுவே என்னுடைய பெரிய இலக்கு என்றும் சொல்லலாம்.

இந்த குழுவுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன். நிறைய சுயாதீன இசை கலைஞர்களுடன் பணியாற்றுவேன். இந்தப் படத்தில் கெளுத்தி என்ற சுயாதீன கலைஞர் பாடல் எழுதியிருக்கிறார். வங்கல் புள்ள விக்கி ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடல்களை எல்லாம் கேட்டு ரசிப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த வாரம் படம் வெளியாகிறது. படத்தை பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்,” என்றார்.

நடிகர் நிழல்கள் ரவி பேசுகையில், ”சந்தானத்தின் ரசிகர்களுக்கு என் முதல் நன்றி. இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளர் ஆர்யா, கிஷோர், சந்தானம், பிரேம் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சினிமாவில் ஹீரோவாக நடித்து விட்டேன், வில்லனாக நடித்து விட்டேன், கேரக்டராகவும் நடித்துவிட்டேன், காமெடியாக நடிக்கவில்லையே என்று எண்ணியிருந்தேன். இயக்குநர் கார்த்திக் யோகியும் , நடிகர் சந்தானமும் இணைந்து ‘ டிக்கிலோனா’ திரைப்படத்தில் எனக்கு ஒரு நகைச்சுவை வேடத்தை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘படத்தில் நல்லதொரு கேரக்டரை கொடுத்து நிழல்கள் ரவியை காமெடி நடிகராகவும் வெற்றி பெற செய்தார்கள். இதற்காக சந்தானத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் மெக்டவல்ஸ் எனும் கப்பலில் கேப்டனாக பணி புரியும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். சினிமாவில் காமெடியை பார்த்து ரசிக்கிறோம் அல்லது அதை பற்றி விமர்சிக்கிறோம். ஆனால் உண்மையில் காமெடியாக நடிப்பது தான் கஷ்டமானது. சந்தானம் அதை எளிதாக செய்கிறார் என்றால் அது கடவுளின் கொடை.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான தீபக் குமார் பதேவின் தந்தையும் ஒளிப்பதிவாளர் தான். அவருடைய ஒளிப்பதிவில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்.

இந்த திரைப்படம் முழுவதும் கப்பலின் பின்னணியில் நடைபெறுகிறது. இதற்காக கலை இயக்குநர் மோகன் அற்புதமாக அரங்கங்களை வடிவமைத்திருந்தார்,” என்றார்.

நடிகை கீதிகா திவாரி பேசுகையில், ”இந்த படத்தில் பணியாற்றியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. சினிமா மீதான சந்தானத்தின் ஈடுபாடு என்னை வியக்க வைத்தது. படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அக்கறை வெளிப்பட்டது. 20 மணி நேரம் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்ற போதும் உற்சாகம் குறையாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் பணியாற்ற வைத்தார்.

இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை கஸ்தூரி பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக பெரிய முதலாளி ஆர்யாவிற்கும், சின்ன முதலாளி கிஷோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் ரசிகை. சந்தானம் சாருடன் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன். இருந்தாலும் இந்த படத்தில் பணியாற்றும் போது அவருடைய எளிமை, கடின உழைப்பை பார்த்து வியந்தேன். அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என்றும் சொல்வேன்.

நான் தொடக்க காலத்தில் கவர்ச்சியாக நடிப்பது தான் கஷ்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் காமெடியாக நடிப்பது தான் கஷ்டம் என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் என்னிடம் கதையை சொல்லும்போது நீங்கள் சந்தானத்திற்கு அம்மா என்றார், நான் பதறினேன். முதல் காட்சியில் மட்டும் தான் அம்மா, அதன் பிறகு படம் முழுவதும் அலப்பறை தான் என்றார். கதை கேட்கும் போது நான் எப்படி சிரித்தேனோ அதேபோல் தான் ரசிகர்கள் நீங்கள் திரையரங்கத்தில் படத்தை பார்க்கும் போதும் சிரிப்பீர்கள். இந்தப் படத்தில் நான் தான் கவர்ச்சி மாம்.

உள்ளொன்று வைத்து புறம் பேசாத, மனதில் தோன்றியதை பட்டென்று பேசும் எஸ் டி ஆரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நேர்மையானவர். பெருந்தன்மையானவர். அவரைப்பற்றி வெளியில் நான்கு பேர் நான்கு விதமாக பேசினாலும், அவரைப்பற்றி அவரிடம் பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

எனக்கு மனச்சோர்வாக இருக்கும்போது இப்படத்திற்காக பின்னணி பேச அழைப்பு விடுத்தார்கள். படத்தின் டப்பிங் பார்த்துவிட்டு எனக்கு சரியாகி விட்டது. மனச்சோர்வு பறந்து விட்டது. இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரை வேற மாதிரி பார்த்து ரசிப்பீர்கள். இந்தக் கோடை விடுமுறைக்கு உங்களது கவலைகளை கழட்டி வைத்து விட்டு இந்த படத்தை பார்த்தால் உற்சாகம் அடைவீர்கள், சந்தோஷம் அடைவீர்கள்,” என்றார்.

இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் பேசுகையில், ”என்னை இயக்குநராக இங்கு நிற்க வைத்திருக்கும் சந்தானத்திற்கும் , இயக்குநர் ராம் பாலாவிற்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உடன் இருப்பவர்களை உயர்த்தி விட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைவதை பார்த்து சந்தோஷம் அடைபவர் தான் சந்தானம். அவருக்கும் ஒரு காட்பாதர் இருக்கிறார். அவருடைய வளர்ச்சியை கண்டு சந்தோஷமடையும் எஸ் டி ஆர் தான் அது. அவரும் இங்கு இருக்கிறார்.

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் இயக்குநர் என்று சொல்லிக் கொள்வதை விட, இப்படத்தின் கதையை நானும் இணைந்து எழுதி இருக்கிறேன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் இயக்குநர் தான் வெளிச்சத்திற்கு வருவார். அந்தப் படத்தின் கதாசிரியர் வெளியே தெரிய மாட்டார். அது போல் இந்த படத்திற்கு நடைபெறக்கூடாது. இந்தப் படத்தில் என்னுடன் முருகன், சேது ஆகிய இருவரும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றால் அதில் இவர்களுக்கும் பங்கு உண்டு.

இந்தப் படத்தின் ஐடியாவை ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதையை சொல்வதற்கு முன்னாலேயே சந்தானத்திடம் சொன்னேன். அவர் ஐடியா நன்றாக இருக்கிறது ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகம். அதனால் அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கும் வரை காத்திரு என்றார். சின்ன பட்ஜெட்டில் உன் திறமையை வெளிப்படுத்து, அந்த திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு அதை எடுக்கலாம் என்றார். சந்தானத்தின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவர் சொன்னது போல் இப்படத்திற்கான தயாரிப்பாளரையும் கொடுத்தது.‌

ஆர்யா போன்ற தூய மனம் கொண்ட தயாரிப்பாளர் எங்களுக்கு கிடைத்தது வரம் தான். எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவரைப் போலவே இப்படத்திற்கு முதுகெலும்பாக செயல்பட்டவர் கிஷோர்.

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இதிலும் இணைந்து பணியாற்று இருக்கிறார்கள். இதில் ஓ ஜி சாண்டாவை பார்ப்பீர்கள். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை விட இதில் நடித்திருக்கும் கிச்சா எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரும்.

இப்படத்தின் ஹீரோயின் கீதிகா. அவர் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாளே அழுக்கான ஆடையை கொடுத்து நடிக்க சொன்னோம். எந்தவித தயக்கமும் இல்லாமல் நடித்தார். இந்தப் படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் எப்படி ஒரு புதிய வீரரை அணியில் இடம்பெறச் செய்தார்களோ, அதே போல் எங்கள் அணியில் நிழல்கள் ரவியை நாங்கள் இணைத்துக் கொண்டோம். அவருடைய நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவரும்.

இந்த படம் மல்டி ஜானர் மூவியாக இருக்கும். குழந்தைகள் முதல் ஃபேமிலி ஆடியன்ஸ் வரை அனைவரும் ரசிக்கக் கூடிய வகையில் இந்தப் படம் இருக்கும். மனிதனுக்கு உள்ள உணர்வுகள் எல்லாம் இதயம் சம்பந்தப்பட்டது. மன அழுத்தம், பயம், கோபம் இதெல்லாம் மனம் சம்பந்தப்பட்டது. இதயத்தை தொடும் படத்தை கொடுப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் ஸ்டிரஸ் பஸ்டர் மூவியை கொடுப்பதற்கு சந்தானம் மட்டும்தான் இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். நம்பி வாங்க…! சிரிச்சிட்டு போங்க..! நன்றி,” என்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், ”இந்தப் படத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் ஐடியாவை சந்தானம் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏற்கனவே மூன்று பாகங்களை எடுத்திருக்கிறார்கள். இனிமேல் இதில் என்ன புதிதாக சொல்லப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் தான் இயக்குநர் பிரேம் ஆனந்திடம் கதையைக் கேட்க தொடங்கினேன். ஆனால் அவர் கதையை சொன்ன விதம் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையைக் கேட்டு முடித்தவுடன் இதனை திரைக்கதையாக எழுதிக் கொண்டு வந்தால் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றேன். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து கடுமையாக உழைத்து திரைக்கதையாக கொடுக்கும் போது பெரிய பட்ஜெட் படமாக இருந்தது. இதற்காக நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் பேசினேன்.‌ அவர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் தான் கிஷோரை அறிமுகப்படுத்தினார்கள். இந்த திரைப்படத்திற்காக சந்தானத்தையும், இயக்குநர் பிரேம் ஆனந்தையும் கிஷோரிடம் ஒப்படைத்து விட்டேன். இதுதான் என்னுடைய பணி. அதன் பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திட்டமிட்டு உருவாக்கிய படம் தான் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’.

ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் எனும் நம்பிக்கை இருக்கிறது.

இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் நட்புக்காகவே ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு விருந்தினராக இங்கு வருகை தந்த சிலம்பரசனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் சந்தானம் பேசுகையில், ”தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டி டி ரிட்டர்ன்ஸ் என அனைத்து படங்களுக்கும் எழுத்து வடிவில் எங்களுக்கு உதவிய எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இருந்தாலும் அவருடைய ஆன்மா எங்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் என நம்புகிறேன்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள எஸ் டி ஆர் அவர்களுக்கு நன்றி. அவரைப் பற்றி நான் பல மேடைகளிலும், பல இன்டர்வியூக்களிலும் சொல்லியிருக்கிறேன், அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று. அவர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி , உயரத்திற்கு அழைத்துச் சென்றார். ‘காதல் அழிவதில்லை’ படத்தில் துணை நடிகராக நடித்திருக்கிறேன். அதனை பார்த்து தான் ‘மன்மதன்’ படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார் சிலம்பரசன்.
படப்பிடிப்பு தளத்தில் எனக்கான அறிமுகக் காட்சி பற்றிய விவாதம் நடைபெற்றது. “நீ லொள்ளு சபாவில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறாய். உன்னுடைய அறிமுகக் காட்சியில் ரசிகர்களிடத்தில் கைதட்டல் வரவேண்டும். அதற்காக எப்படி உன்னை அறிமுகப்படுத்துவது” என விவாதித்து கொண்டிருக்கிறோம் என்றார். அந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு என்னுடைய யோசனையையும் சொன்னேன்.‌ அதன் பிறகு அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதை ஏன் நான் இப்போது இங்கு சொல்கிறேன் என்றால், அன்றைய தினம் சினிமாவில் திரையில் நான் தோன்றும்போது கைத்தட்டல் இருக்க வேண்டும் என்று எனக்காக எடுத்த அக்கறையும், அன்பும் இன்று வரை குறையாமல் தொடர்கிறது. இது போன்றதொரு நல்ல மனம் படைத்த சிலம்பரசன் நண்பராக கிடைத்ததற்கு இறைவனுக்குத்தான் நான் நன்றியை சொல்ல வேண்டும். சிம்பு ஐ லவ் யூ. எப்போதும் அவருக்கு பின்னால் நான் இருப்பேன். எஸ் டி ஆர் 49லும் என்னுடைய பங்களிப்பை வழங்குவேன். என்னுடைய பெற்றோர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

அடுத்ததாக என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான ஆர்யா. ஆர்யாவை மட்டும் தான் எனக்குத் தெரியும். ஆர்யா தான் நிஹாரிகா என்டர்டெய்ன்மென்டை சார்ந்த கிஷோரை அறிமுகப்படுத்தினார். அவரை நான் ‘கிளாரிட்டி ‘கிஷோர் என்று தான் அழைப்பேன். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்யா என் உயிர் நண்பர். ‘கல்லூரியின் கதை’ படத்தில் தான் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் நடித்த அழகான பெண்களை கவர்வதற்காக ஆர்யா என்னை காமெடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டார். அந்த அழகான பெண்கள் சற்று சந்தேகத்துடன் என்னை பார்த்தார்கள். நண்பர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அவர்கள் முன்னால் நானும் சில காமெடியை பேசி நடித்து காட்டினேன். இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும் கவனித்து விட்டு, எங்களிடம் கேட்டனர், பிறகு சமாளித்தோம். ஆனால் ஆர்யா காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விடவில்லை. ‘சேட்டை’ படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என டைட்டிலில் இடம் பெற வைத்தார். ‘லிங்கா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் போது அவர் என்னிடம் நீங்கள் காமெடி சூப்பர் ஸ்டாரா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே என் நண்பர் ஆர்யா செய்த வேலை அது என விளக்கம் அளித்தேன்.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ஆனந்த் ஆர்யாவிடம் விவரித்தார் அவருக்கும் பிடித்து விட்டது. படத்தின் பணிகள் தொடங்கின. இந்த தருணத்தில் நான் சென்னையின் புறநகர் பகுதியில் வீடு ஒன்றினை வாங்கி, அதனை சீரமைத்து அங்கு குடும்பத்தினருடன் சென்று வசிக்கலாம் என திட்டமிட்டேன். இதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் என்னுடைய மனைவியும், அம்மாவும் அந்த வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வருவார்கள். இந்தத் தருணத்தில் ஒரு முறை ஆர்யா எனக்கு போன் செய்த போது வீட்டை புதுப்பிக்கும் பணியில் இருக்கிறேன் என்று சொன்னேன் உடனடியாக அவர் அந்த வீட்டிற்கு வந்தார். வீட்டை முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டு என்று சொல்லிவிட்டார். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்க, ஆர்யா அவரது நண்பருக்கு போன் செய்து வீட்டை இடிக்கும் பணியில் தீவிரம் காட்டி விட்டார். இந்த விஷயத்தை நான் எங்கள் வீட்டில் தெரிவிக்கவில்லை. அடுத்த வாரம் என்னுடைய அம்மாவும், மனைவியும் அந்த வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு வீடு இல்லாததை கண்டு திகைத்து விட்டார்கள். அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டை காணவில்லை என்று சொன்னார்கள். அதன் பிறகு அவர்களிடம் நடந்ததை சொன்னேன். ஆர்யா சொன்னால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் சொன்னேன். அப்போது என்னுடைய அம்மா நீங்கள் இருவரும் படத்தில்தான் இப்படி நடிப்பீர்கள். நிஜத்திலுமா இப்படி இருப்பீர்கள் எனக் கேட்டார். இந்த லெவலில் தான் எங்களுடைய பிரண்ட்ஷிப் இருக்கிறது.

‘கல்லூரியின் கதை’ படத்தில் தொடங்கிய எங்கள் நட்பில் நாங்கள் இருவரும் எதற்காகவும் பயந்ததில்லை. எதுவாக இருந்தாலும் தைரியமாக செய்வோம். வாழும் வரை சந்தோஷமாக வாழ்வோம். எது வந்தாலும் அதனை எதிர்கொள்வோம் என்பார். அந்த ஒரு சக்தி தான் அவரை இங்கு தயாரிப்பாளராக நிற்க வைத்து இருக்கிறது. என்னையும் நாயகனாக உயர்த்தி இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிக்கும் போது வேறு எந்த படத்திலும் நடிக்காதே உன் அனைத்து பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆர்யா நம்பிக்கை கொடுத்தார். படத்தை வெற்றி பெற செய்வது மட்டும்தான் உன் வேலை என்றார் அதற்காக இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆர்யாவுக்கு தருவேன் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநரான பிரேம் ஆனந்தை நான் தமிழ் சினிமாவின் கிறிஸ்டோபர் நோலன் என்று தான் சொல்வேன். ஒரு கதையை சொன்னால் அதனை பல லேயர்களில் சொல்வார். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் ஒரு ஹாரர் படம் என்றாலும் அதில் ஒரு கேம் ஷோ இருக்கும். அந்த கேமிற்குள் ஒரு திருட்டு கும்பலின் அட்வென்ச்சர் இருக்கும். இப்படி மல்டி லேயரில் ஒரு கதையை கச்சிதமாக உருவாக்குவார். அதேபோல் தான் இந்தப் படத்தின் கதையையும் அவர் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் தெளிவாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார். அந்த வகையில் ஆனந்த்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்திற்காக பணியாற்றிய முருகன், சேது உள்ளிட்ட என்னுடைய குழுவினருக்கும், இந்த படத்தில் என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் மாறனுக்கு டிவி காமெடி இருக்கிறது. ரெடின் கிங்ஸ்லிக்கு தலைகீழாக நடக்கும் காமெடி இருக்கிறது. மொட்டை ராஜேந்திரனுக்கு ஒரு எலி காமெடி இருக்கிறது. நிழல்கள் ரவி சாருக்கு ஒரு டாய்லெட் காமெடி இருக்கிறது. யாஷிகா ஆனந்திற்கு ஒரு பாட்டில் காமெடி இருக்கிறது. கஸ்தூரி மேடத்திற்கு ஒரு புக் காமெடி இருக்கிறது. இதற்கெல்லாம் திரையரங்கத்தில் கைத்தட்டல் கிடைக்கும். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நகைச்சுவை காட்சிகளில் பங்களிப்பு இருக்கிறது.

ஒரு படத்திற்கு மிகப்பெரிய பலமே இசைதான். இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கின்றன. படத்தைப் பார்க்கும்போது பின்னணி இசைக்காகவும் நீங்கள் கைதட்டுவீர்கள். குறிப்பாக மொட்டை ராஜேந்திரனுக்காக இவர் வாசித்திருக்கும் பின்னணி இசை ரசிகர்களை கவரும். இதற்காக ஆஃப்ரோவுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் ஹீரோயின் கீதிகா வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்த திரைப்படத்தில் புதிதாக என்ன இருக்கிறது என்றால், ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் கௌதம் வாசுதேவ் மேனனும், செல்வராகவனும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

ஒருவர் மிகுந்த உயரத்திற்கு செல்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டும் காரணம் அல்ல. உதாரணத்திற்கு ராமாயணத்தில் அனைவரும் ராமரை புகழ்கிறார்கள் என்றால்.. அவருடன் இருந்த சீதை, லட்சுமணன், விபீஷணன், பரதன், ராவணன் என எல்லா கேரக்டரும் சேர்ந்தது தான் ராமர் எனும் வெளிப்பாடு. அந்த வகையில் ஒருவர் உயரத்திற்கு செல்கிறார் என்றால் அவருடைய தனித்திறமை மட்டும் அதற்கு காரணம் அல்ல. அவரை சுற்றி இருப்பவர்களும் தான் காரணம் என்பேன். இங்கு நான் உயர்வதற்கு சிலம்பரசன், ஆர்யா என பலரும் காரணமாக உள்ளார்கள்.

மே 16ம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் காமெடியை இடம்பெறச் செய்திருக்கிறோம். டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை விட மும்மடங்கு காமெடியுடன் கூடிய விருந்து இருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள்,” என்றார்.

நடிகர் சிலம்பரசன் பேசுகையில், ”இந்தப் படத்தின் முந்தைய பாகங்களை பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். நான் முதலில் சினிமா ரசிகன். ஒரு ரசிகனாகத்தான் திரைப்படத்தை பார்ப்பேன். அது சந்தானம் படமாக இருந்தாலும் அவருக்கும், எனக்குமான நெருங்கிய தொடர்புகளை எல்லாம் படம் பார்க்கும்போது சற்று தள்ளி வைத்து விடுவேன். அந்த வகையில் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய மெனக்கெட்டு வித்தியாசமாக ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் பார்ட் 1 பார்ட் 2 என இரண்டு பாகத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக சந்தானத்தின் உடல் மொழி, வசன உச்சரிப்பு நன்றாக இருக்கிறது. முதலில் இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் ஆர்யா எனக்கு நெருங்கிய நண்பர். நண்பர் ஆர்யாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் – சந்தானத்தின் பிரத்யேக குழுவில் இருப்பவர். இங்கு அவருடைய குழுவில் உள்ள முருகன், சேது ஆகியோரை மேடையில் சந்தானம் அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரும் ‘மன்மதன்’ பட காலகட்டத்திலேயே படப்பிடிப்பு தளத்தில் இவர்களுடன் சந்தானம் விவாதித்துக் கொண்டிருப்பார். இவர்கள் யார் என மனதிற்குள் கேள்வி எழும். சந்தானத்திடம் கேட்ட போது என்னுடைய நண்பர்கள் தான் என விளக்கம் அளித்தார். இதை ஏன் நான் விவரிக்கிறேன் என்றால் அன்று தொடங்கிய அவர்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது. இந்தப் படம் வரை ஒரு துளி அன்பும், அக்கறையும் குறையாமல் அவர்கள் தங்களுடைய உழைப்பை வழங்குகிறார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதனால் இயக்குநர் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட அந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ஆஃப்ரோ புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘வேட்டை மன்னன்’ படத்தில் நடித்த போதே எனக்கு ரெடின் கிங்ஸ்லியை தெரியும். அப்போதே இயக்குநர் நெல்சனிடம் இவர் எதிர்காலத்தில் பெரிய காமெடியனாக வருவார் என்று சொன்னேன். அப்போது நெல்சன் சிரித்தார். இன்று நெல்சன், ரெடின் இல்லாமல் எந்த படத்தையும் இயக்குவதில்லை.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்தப் படத்தை பார்த்தேன். எங்கள் இயக்குநர் கௌதம் மேனனை இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இதற்காகவாவது உங்களை நான் சும்மா விடப்போவதில்லை. இருந்தாலும் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

சந்தானத்தை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. சந்தானம் எல்லா மேடைகளிலும் உங்களை குறிப்பிட்டு பேசுகிறார். இதன் பின்னணி என்ன என்று என்னிடம் பலமுறை பலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் அதுதான் அவரின் கேரக்டர் என பதிலளித்திருக்கிறேன்.

இந்தத் தருணத்தில் அனைவரிடத்திலும் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு உதவியை செய்கிறீர்கள் என்றால் எதையும் எதிர்பார்க்காமல் செய்யுங்கள். எதிர்பார்ப்பை மனதில் வைத்துக் கொண்டு யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் நாம் செய்த உதவியை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு உரிய மரியாதையை அளித்து பேசுவார்கள். பலர் இதை புறக்கணித்து விடுவார்கள். அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுங்கள்.

சந்தானத்தின் இப்படம் அவருடைய நெக்ஸ்ட் லெவலாக இருக்கும்.

‘எஸ் டி ஆர் 49’ இல் நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம். ஏன் என்பதை சொல்ல விரும்புகிறேன். இன்றைய சினிமாவில் காமெடி குறைந்து விட்டது.

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்”

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது.

நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது. மாறுபட்ட கதைக்களத்தில், அழுத்தமான திரைக்கதையுடன், மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பில், புதுமையான அனுபவம் தரும் படைப்பை, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கியுள்ளது.

’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்பட விமர்சனம்

அடர்ந்த காடு பகுதிகளில் கொலை ஒன்று நடக்க அந்த கொலை வழக்கை விசாரிக்க தொடங்கும் போது காவல்துறை அதிகாரி கதாநாயகன் நானிக்கு, ஒரே மாதிரியான உலகில் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் கொடூரமாக முறையில் கொலை செய்யப்படுவதாக தகவல் கிடைக்கிறது.

பலர் கொடூரமாக முறையில் கொலை செய்யப்படுவதாக உள்ள அந்த வழக்குகள் பற்றி விசாரிக்கும் தொடங்கியதும், அதன் பின்னணியில் கொடூரமான கருப்பு உலகம் ஒன்று இருப்பது கதாநாயகன் நானிக்கு தெரிய வருகிறது.

அந்த கருப்பு உலகம் எங்கிருக்கிறது?, அந்தக் கருப்பு உலகத்தில் தலைவர் யார்?, அவர்கள் அரங்கேற்றம் கொடூரமான கொலைகளுக்கான நோக்கம் என்ன?, அந்த கருப்பு உலகத்தின் தலைவனை கண்டு பிடிக்க களத்தில் இறங்கும் கதாநாயகன் நானி குற்றவாளிகளை கண்டுபிடித்தார் கண்டுபிடிக்கவில்லையா என்பதுதான் இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நானி நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கதாநாயகன் நானி காக்கி சாட்டை அணியாத காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் , காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாகவும் கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கும் கதாநாயகன் நானி நடிப்பு மற்றும் வித்தியாசமான மேனரிஷம் மூலம் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீரிநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

கதாநாயகி ஸ்ரீரிநிதி ஷெட்டிக்கு திரைப்படத்தில் பெரிய அளவில் வேலை ஒன்றும் இல்லை என்றாலும், அவரையும் திரைக்கதையோடு பயணிக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகள் திரைப்படத்திற்கு பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் மிகவும் பொருத்தமான தேர்வாக அமைந்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் திரைபபடத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக்காட்சிகளும், வன்முறை காட்சிகள் அதிக அளவில் திரைப்படத்தில் இருந்தாலும், அதை ஒளிப்பதிவு மூலம் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு இசையால் உயர்த்திருக்கிறார்.

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை, கமர்ஷியல் மாஸ் ஆக்‌ஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சைலேஷ் கோலானு,

“ரெட்ரோ|”திரை விமர்சனம்

சட்டவிரோத செயல்களை செய்துவரும் ஜோஜு ஜார்ஜ் மிகப்பெரிய தாதாவாக வளம் வந்து ஜோஜு ஜார்ஜ் தாய், தந்தை இல்லாத கதாநாயகன் சூர்யாவை வளர்த்து வருகிறார்.தனது காதலி கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்காக வெட்டு குத்து அடிதடியை விட்டுவிடுவதாக சூர்யா கதாநாயகி பூஜா ஹெக்டேவிடம் உறுதி கூறுகிறார்.

பூஜா ஹெக்டேவை சூர்யா திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழ வேண்டும் என விரும்புகிறார்.ஆனால், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டேவிறகாக தனது வளர்ப்பு தந்தையின் கையை துண்டாக வெட்டி விட, அவரது தந்தையின் ஆட்களையும் கொலை செய்து விடுகிறார்.

இதனால், சூர்யாவிடம் இருந்து இருந்து பூஜா ஹெக்டே தனது காதலில் இருந்து விலகிச் சென்று விடுகிறார். சூர்யா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

கதாநாயகி பூஜா ஹெக்டே அந்தமானில் இருக்கும் தகவல் சூர்யாவுக்கு தெரிய வர பூஜா ஹெக்டேவை சமாதானப்படுத்தி அவர் விரும்பியது போல், அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அந்தமான் செல்லும் சூர்யாவுக்கு, அங்கே மிகப்பெரிய பொறுப்பும், யுத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சூர்யாவின் வாழ்க்கை என்னவானது?, பூஜா ஹெக்டே ,சூர்யா இருவரும் இணைந்தார்களா? இணையவில்லையா? என்பதுதான் இந்த ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

தன்னை வளர்க்கும் தந்தையாக இருந்தாலும், அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் துணிச்சல் மிக்க மகனாகவும், காதல் தோல்வியால் இது வந்து போகும் காதலனாகவும் அதன், பிறகு தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளியாகவும், என ஒரே கதாபாத்திரத்திற்கு சூர்யாவின் நடிப்பின் மூலம் சிரிக்காமலேயே நடனம் ஆடுவது, ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டைலிஷாக கையாள்வது என்று திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகி பூஜா ஹெக்டே, கதையின் மையப்புள்ளியாகவும், கதையை நகர்த்திச் செல்லும் வழக்கமான கதாநாயகியாக அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பை கொடுத்து தமிழ் திரைப்பட ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.

கிங் மைக்கல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக எந்த ஒரு குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

“டூரிஸ்ட் ஃபேமிலி” திரைவிமர்சனம்

சசிகுமார் மற்றும் மனைவி சிம்ரன் அவர்களுடைய இரண்டு மகன்கள் இவர்கள் குடும்பத்துடன் விலைவாசி ஏற்றத்தால் இலங்கையில் வாழ முடியாமல் தமிழகத்துக்கு கள்ளத் தோனியில் ராமேஸ்வரம் வந்து இறங்கிய அவர்களை யோகி பாபு  சென்னைக்கு அழைத்து வந்து, கேசவ நகரில் உள்ள ஒரு காலனியில் வீட்டை வாடைக்கு எடுத்துக் கொடுத்து அவர்களை தங்க வைக்கிறார். சசிகுமார் குடியிருக்கும் வீட்டிற்கு எதிரில் உள்ள எம்.எஸ. பாஸகரிடம் கார் ஓட்டுனர் பணி புரிந்து கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றி  வருகிறார்.

ஒரு பக்கம் இருக்க  இலங்கையில் இருந்து தமிழகத்தில் அகதிகளாக வந்தவர்கள் என்பதை மறைத்து வாழ வேண்டிய சவால் இந்த குடும்பத்துக்கு, மற்றொரு பக்கம்  ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டிய சவால் காவல்துறைககு .

குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்தார்களா? கைது செய்யவில்லையா?

இலங்கையில் இருந்து வந்த அகதிகள் என்ற அடையாளம் தெரியாமல் வாழ்ந்தார்களா?

என்பதுதான் “டூரிஸ்ட் பேமிலி”  திரைப்படத்தின் கதை.

திரைப்படத்தில் தர்ம தாஸ் என்ற கதாபாத்திரத்தில் மனைவிக்கு நல்லதொரு கணவனாக, இரண்டு மகன்களுக்கு நல்லதொரு தந்தையாக, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு நல்லதொரு சிறந்த மனிதனாக என தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.“அயோத்தி” திரைப்படத்திற்கு பின் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நடிகர் சசிக்குமாருக்கு மிகப்பெரிய பேரைப் பெற்று தரும் என்பது உறுதி.

வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரனும் தனது கதாபாத்திரத்திற்கு எந்த விதமான குறையும் இல்லாமல் தனது நடிப்பின் மூலம் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

தந்தை மகனுக்குமான  நடக்கும் பாச உரையாடல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்து விடுகிறது. இரண்டாவது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இளங்கோ குமரவேல் மற்றும் ஸ்ரீஜா ரவி இருவருக்குமிடையே இருக்கும் காதல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை  கண்கலங்க வைக்கிறது.

இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தன் தாயை இழந்து தனிமையில் வாடும் ஒரு இளைஞனாக மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து கதாபாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார.

கண்டிப்புடன் கூடிய அன்பு கொண்டவராக எம் எஸ் பாஸ்கர், காவல்துறை ஆய்வாளராக பக்ஸ், அவரது மனைவியாக நடித்தவர் இவர்களது மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  யோகலெக்‌ஷ்மி என அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு மிகச் சரியான பொருத்தமாக பொருந்தியிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட உலகில் எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் இப்படியொரு தரமான படைப்பைக் கொடுத்து தமிழ் திரை உலகை உள்ள  அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய் குமார்

இயக்குநர் பூரி ஜெகன்னாத்- ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் புதிய பான் இந்திய திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை கவர தயாராகி வருகிறார். பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் பூரி ஜெகன்னாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை தபு ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தற்போது இந்தத் திரைப்படத்தில் ‘சாண்டல்வுட் டைனமோ’ விஜய்குமார் இணைந்திருக்கிறார். ‘வீர சிம்ஹா ரெட்டி’ படத்திற்கு பின்னர் விஜயகுமார் நடிக்கும் படம் இது.‌ இவர் திரை தோற்றத்திலும் .. தரமான நடிப்பிலும் பெயர் பெற்றவர்.

விஜய் சேதுபதி அவருடைய திரையுலக பயணத்தில் புதிய தளத்தை உருவாக்கும் வகையில் துணிச்சலான வேடத்தில் நடிக்கிறார். ஒரு சக்தி வாய்ந்த கதாபாத்திரத்தின் மூலம் நடிகை தபு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நடிக்கிறார். இவர்களுடன் விஜய் குமார் இணைந்து நடிக்கவிருக்கிறார். கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான இவர் .. தன்னுடைய புதிய தோற்றத்தில் மின்னும் கதாபாத்திரத்தில் நடிப்பதால்… பல அற்புதமான தருணங்களை எதிர்பார்க்கலாம்.

பூரி எழுதிய கதையுடன் டிராமா -அதிரடி ஆக்சன் – உணர்வுபூர்வமான காட்சிகளைக் கொண்ட துடிப்பான படைப்பு – என இப்படம் உறுதி அளிக்கிறது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு எதிர்வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது.

நடிகர்கள் :
விஜய் சேதுபதி, தபு ,விஜய்குமார்

தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்னாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்னாத் – சார்மி கவுர்
தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி : விஷு ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹேஷ்டாக் மீடியா

‘குற்றம் தவிர் ‘படத்தின் முன்னோட்டம்

ஸ்ரீசாய் சைந்தவி கிரியேஷன்ஸ் சார்பில் பாண்டுரங்கன் தயாரிப்பில், கஜேந்திரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘குற்றம் தவிர்’.இப்படத்தில்
ரிஷி ரித்விக் நாயகனாகவும் ஆராதியா நாயகியாகவும் நடிக்க,சித்தப்பு சரவணன், வினோதினி, ஆனந்த் பாபு,செண்ட்ராயன், ஜார்ஜ் விஜய்,சாய்தீனா , மீசை ராஜேந்திரன் ,ராணுவ வீரர் காமராஜ்,குழந்தை சாய் சைந்தவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ரோவின் பாஸ்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.எடிட்டிங் ரஞ்சித். பாடல்கள் கு.கார்த்திக்.

‘குற்றம் தவிர் ‘ படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களை கங்கை அமரன் வெளியிட்டார். விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அதிமுக கட்சியை சேர்ந்த ஈ. . புகழேந்தி, ஆன்மீகவாதி ஜெய்பிரகாஷ் குருஜி,தொழிலதிபர் பிரகாஷ் பழனி ,இயக்குநர்கள் ஆர்.அரவிந்தராஜ், பேரரசு,பவித்ரன், ராஜகுமாரன், நடிகர் சித்தப்பு சரவணன் மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

படத்தின் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அனைவரையும் வரவேற்றுப் பேசும்போது.

“நாங்கள் பெங்களூரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருந்தாலும் படப்பிடிப்புகள் பெரும்பாலும் அங்கே நடந்திருந்தாலும் தமிழ்நாட்டு நடிகர்களையே முழுதாகப் பயன்படுத்திப் படம் எடுத்து இருக்கிறோம்.

ஒரு திரைப்படத்தின் மூலம் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு கொடுக்க முடிகிறது .அவர்கள் குடும்பத்தை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடிகிறது .இந்தப் படத்தை வெற்றி பெற வைத்தால் மீண்டும் படமெடுப்பேன். அதேபோல் நான் பலருக்கும் வேலை வாய்ப்பு கொடுப்பேன்.எனவே இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

முன்னோட்டம் மற்றும்
பாடல்களை வெளியிட்டு இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் கங்கை அமரன் பேசும்போது,

“முதலில் கர்நாடகத்திலிருந்து படம் எடுக்க வந்துள்ள இவர்களை வரவேற்கிறேன்.

இங்கே கதாநாயகன் நாயகி தோன்றிய காட்சிகளைப் பார்த்தேன்.
பொதுவாக இதுபோல வெளியீட்டு நிகழ்ச்சிகளில் படத்தின் பாடல்களைப் போடுகிறார்கள், சண்டைக் காட்சிகளைப் போடுகிறார்கள். ஆனால், சென்டிமெண்ட் காட்சிகளையோ நகைச்சுவைக் காட்சிகளையோ போடுவதில்லை .
இனி அதையும் போட்டுக் காட்ட வேண்டும் . அதையும் சேர்த்துக் காட்டுங்கப்பா .அதைப் பார்க்கும் போது தான் நடிகர்களுக்கு நடிப்புக்கான மதிப்பெண் கொடுக்க முடியும். இது ஒரு அறிவுரை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம்.எப்போதும் நான் வெளிப்படையாகப் பேசுவேன். ஏதாவது குறை இருந்தாலும் சொல்வேன். எனக்கு மனதில் தோன்றியதைச் சொன்னேன் .
அந்தச் சுவைகளுடன் இந்தச் சுவைகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா நன்றாக இசையமைத்துள்ளார் .அவர் எனது உறவினர் தான். நம்ம வீட்டுப் பிள்ளை. இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் நண்பர் சுவாமிஜி இங்கே வந்திருக்கிறார். அவருக்கும் எனக்கும் நல்ல பழக்கம். என்னை அழைத்து அங்கே பெரிய மரியாதை எல்லாம் செய்தார்கள்.

இங்கே செண்ட்ராயன் வந்திருக்கிறார் அவர் எங்கள் பக்கத்து ஊர்க்காரர் தான். அவர் பிக் பாஸ் ரகசியங்களை இங்கே சொல்ல வேண்டும்.
பெங்களூரில் இருந்து படம் எடுக்க இங்கே வந்து இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்”என்றவர் ‘மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே ‘என்ற மூகாம்பிகைப் பாடலை முழுதாகப் பாடி முடித்துப் படக் குழுவினரை வாழ்த்தினார்.

இயக்குநர் கஜேந்திரா பேசும்போது,

“இது எங்களுக்கு முதல் படம்.நாங்கள் புதிதாகப் படம் எடுக்க வந்திருக்கிறோம் அனைத்து நடிகர்களையும் சென்னையில் இருந்து வரவழைத்து ஒரு தமிழ்ப் படத்தை எடுத்திருக்கிறோம். இதற்கு ஆதரவு கொடுக்க வேண்டும் .தயாரிப்பாளர் இல்லாமல் திரைப்படம் எடுக்க முடியாது. படப்பிடிப்பில் எந்தக் குறையும் இல்லாமல் அவர் எங்கள் அனைவரையும் நன்றாகப் பார்த்துக் கொண்டார்” என்றார்.

கதாநாயகனாக நடிக்கும் ரிஷி ரித்விக் பேசும்போது,

” நான் வில்லனாக நடித்து வந்தேன் .இப்போது இதில் கதாநாயகனாக நடிக்க வைத்திருக்கிறார்கள். பெங்களூரிலிருந்து படம் எடுக்க வந்திருக்கிறார்கள் என்ற போது நான் முதலில் யோசித்தேன். ஆனால் தயாரிப்பாளர் உடனே ஒரு லட்ச ரூபாய் எனக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தார்கள். எந்தப் பிரச்சினையும் இல்லாமல் படப்பிடிப்பு மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது .உடன் நடித்த நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. பருத்திவீரன் படத்தில் பார்த்து நான் வியந்த சரவணன் சார் இப்படத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் பாஸ்கர், எடிட்டர் ரஞ்சித் போன்றவர்களின் ஈடுபாடும் உழைப்பும் சாதாரணமானதல்ல.அனைவரும் சேர்ந்து விருப்பத்தோடு சிரமப்பட்டு எடுத்திருக்கிறோம்.
படம் ஒரு நல்ல கருத்தைப் பற்றிப் பேசுகிறது . இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்” என்றார்.

கதாநாயகி நடிகை ஆராதியா பேசும்போது,

” ஒவ்வொரு படத்தையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியைச் சிறப்பாகச் செய்யும் ஊடகங்களுக்கு நன்றி .இந்தப் படத்தையும் கொண்டு செல்லுங்கள் . ‘மதிமாறன்’ படத்தில் எனக்கு நல்ல பெயர் கிடைத்தது .அதன் மூலம் என்னை அனைவருக்கும் தெரிய வைத்த இயக்குநர் மந்த்ரா சாருக்கு நன்றி .நான் இதுவரை 12 படங்கள் நடித்திருக்கிறேன். ஒன்றுதான் வெளியாகி இருக்கிறது. மற்றவை வெளிவர உள்ளன. இந்தப் படத்தில் தயாரிப்பாளர்,அவரது குழுவினர் எங்களை நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள்.
முதன் முதலில் இதில் நடனமாடி நடித்திருக்கிறேன். அந்தக் காட்சியைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி “என்றார்.

பருத்திவீரன் சரவணன் பேசும் போது,

“நான் இதில் வில்லனாக நடித்திருக்கிறேன்.
இந்த படப்பிடிப்பு பெங்களூர், கர்நாடகா பகுதி என்று நடந்தது. தமிழ்நாட்டில் இருந்து படப்பிடிப்புக்காக அங்கே செல்கிறோம் எப்படி இருக்குமோ என்று தயங்கியபடியே சென்றேன். ஆனால் ஏர்போர்ட்டில் இறங்கியது முதல் அவர்கள் என்னை வரவேற்று அழைத்துச் சென்று தங்க வைத்து உபசரித்தது வரை மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.படப்பிடிப்பின் போதும் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள்,இப்படிக் கடைசி வரை நடந்து கொண்டார்கள்.

அவர்களின் அந்த நல்ல மனதிற்காக இந்தப் படம் வெற்றி பெற வேண்டும். பாடல்கள் சிறப்பாக உள்ளன.தயாரிப்பாளருக்கு வாழ்த்துக்கள்” என்றார்

நடிகர் செண்ட்ராயன் பேசும்போது,

“இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் நல்ல சம்பளம் கொடுத்தார் .பாக்கி வைக்காமல் அவ்வப்போது செட்டில் செய்து கொண்டே இருந்தார்கள்.நான் பெங்களூர் படப்பிடிப்பு என்றதும் கர்நாடகாவில் இருப்பவர்களுக்குத் தமிழ் தெரியாதே என்று சில கன்னட வார்த்தைகளை எல்லாம் கஷ்டப்பட்டுக் கற்றுக் கொண்டு போனேன். ஆனால் அங்கே போய்ப் பார்த்தால் எல்லாருமே தமிழ் பேசினார்கள். பெங்களூரில் உள்ளவர்கள் தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு எல்லாமும் பேசுகிறார்கள். அது ஒரு பேன் இந்தியா நகரமாகத் தோன்றியது .அனைவரும் ஒன்றாக இருக்கிறார்கள்”
என்றார்.

நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது,

“பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கிய சினிமா எத்தனையோ வளர்ச்சியைப் பெற்று இன்று வளர்ந்து இருக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு ஒரு நல்ல பாத்திரத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர். பெரிய நட்சத்திரங்கள் இருந்தாலும் கதை இருந்தால் தான் படம் ஓடும் .இதில் கதையை நம்பி படம் எடுத்திருக்கிறார்கள்.இயக்குநர் தான் எதிர்பார்த்தது வரும் வரை விட மாட்டார் .அந்த அளவிற்கு மெனக்கெடுவார்.இந்தப் படத்தில் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம்” என்றார்.

நடிகர் சாய் தீனா பேசும்போது,

” பொதுவாக படப்பிடிப்புகளில் பேச வேண்டிய வசனங்களை பேப்பரில் காண்பிப்பார்கள், தருவார்கள்.இந்த இயக்குநர் படப்பிடிப்பில் டயலாக் பேப்பரையே காட்டியதில்லை. அதை அவர் கையில் நான் பார்த்ததே கிடையாது .ஆனால் இப்படி இருந்தே ஒரு முழுப்படத்தையும் முடித்து விட்டார்”என்றார்.

நடிகை வினோதினி பேசும்போது,

“இயக்குநருக்கு தமிழ் எழுதவே தெரியாது அதனால்தான் டயலாக் பேப்பர் எழுதவில்லை.இருந்தாலும் இந்தப் படத்தைச் சிறப்பாக முடித்தார். திரைப்படத்திற்கு தயாரிப்பாளர் தான் அடித்தளம் . முதலில் தயாரிப்பாளரைப் பார்த்தபோது இந்த படத்தை எப்படி எடுப்பாரோ? என்று நினைத்தேன் .இந்தப் படத்தை எப்படிக் கொண்டு போய் சேர்ப்பாரோ என்று கேள்வி இருந்தது. ஆனால் அவர் அனைத்தையும் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து, திட்டமிட்டுச் செய்தார் .அனைத்தையும் தொடர்ச்சியாகப் பின்பற்றி வந்தார். திட்டமிட்டுச் செயல்படுவதில் அவர் என்னை ஆச்சரியப்படுத்தினார்.

ஒரு திரைப்பட விழாவுக்கு இத்தனை பேர் வந்திருக்கிறார்கள் . அந்த அளவிற்கு அவர் உறவுகளைச் சேர்த்து வைத்துள்ளார் .இந்த உறவுகளே அவருக்கு வெற்றியைத் தேடித் தரும் .இந்தப் படத்தில் நான் ஒரு அம்மா பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.பழம்பெரும் நடிகர் நாகேஷின் மகன் ஆனந்த் பாபு உடன் இணைந்து நடித்திருக்கிறேன்.

அந்தக் குழந்தை சைந்தவி கூட நடித்தது மறக்க முடியாது. முதல் படம் போலவே தெரியவில்லை, சிறப்பாக நடித்தாள். நான் நடித்த அம்மா பாடல் சிறப்பாக வந்துள்ளது.அனைவருக்கும் நன்றி “என்றார்.

ராணுவ வீரரும் நடிகருமான காமராஜ் பேசும்போது,

” இதுவரை தைரியம், ஐ, மெர்சல், சிங்கம் 3 ,சுல்தான் போன்ற படங்களில் நான் நடித்திருக்கிறேன் .,நான் இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறேன் .எனது முகநூல் பார்த்து ஐ பட வாய்ப்பு கொடுத்த ஷங்கர் அவர்களை மறக்க முடியாது.
இந்தப் படத்தில் நான் ஒரு பாத்திரத்தில் வருகிறேன்.
சினிமா ஆர்வம்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. சினிமா அனைத்தையும் கற்றுக் கொடுக்கும் வாரம் ஒரு சினிமாவைக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள்” என்றார்.

பிக் பாஸ் புகழ் டேனியல் பேசும்போது,

” என் நண்பர்கள் நடித்திருப்பதால் நட்புக்காக நான் இங்கே வந்தேன். இந்தத் தயாரிப்பாளரைப் பார்க்கும்போது அவர் அழைத்தால் காலண்டரில் தேதி இல்லை என்றால் கூட கால்ஷீட் கொடுத்து நடிப்பேன்.சம்பளம் பெரிதல்ல.எவ்வளவு பெரிய உச்ச நடிகர்களுக்கும் சிறிய சாதாரண நடிகர்களுக்கும் சம்பளத்தில் வித்தியாசம் இருக்கலாம் ஆனால் மனம் ஒன்றுதான் ” என்றார்.

ஜெயபிரகாஷ் குருஜி பேசும் போது,

“எனக்குத் திரை உலகில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நான் கலந்து கொள்ளும் விழாக்கள் பிற விழாக்கள் பத்து என்றால் சினிமா விழாக்கள் நூறு என்று இருக்கும்.
அந்த அளவிற்குத் திரையுலகில் உள்ளவர்கள் எனக்கு நண்பர்களாக இருக்கிறார்கள் .கங்கை அமரன் அப்படி ஒரு நண்பர். தினம் என்னுடன் பேசுபவர். இந்தப் படத்தை வேறு மொழியிலும் வெளியிடுங்கள். வெற்றி பெறும் ” என்றார்.

அதிமுகவைச் சேர்ந்த அரசியல்வாதி ஈ. புகழேந்தி பேசும்போது,

” குற்றம் தவிர் என்ற படத்தின் தலைப்பே அழகாக இருக்கிறது இந்த தலைப்புக்காக இந்தப் படம் ஓட வேண்டும். வெற்றியைத் தேடித்தரும்.

இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். ‘ரத்தக்கண்ணீர் ‘படம் அந்த காலத்தில் எம் ஆர் ராதா அவர்கள் நடிப்பில் வெற்றி பெற்ற படம் .அது வெளியாகி 60 -70 ஆண்டுகளுக்குப் பிறகு கன்னடத்தில் ரத்தக்கண்ணீரு என்று எடுத்தார்கள்.அதை எடுத்தவர் எனது நண்பர்.
நான் அங்கு போய் பார்த்தபோது திரையங்குகளில் எல்லாம் போலீஸ் தடியடி நடக்கும் அளவிற்குக் கூட்டம் அலைமோதியது. படம் பெரிய வெற்றி.

இதைக் கேள்விப்பட்டு திருவாரூர் தங்கராசு பெங்களூர் வந்திருந்தார். என்னைக் கேட்காமல் என் அனுமதி இல்லாமல் எப்படி கன்னடத்தில் எடுக்கலாம் என்று சத்தம் போட்டார்.அந்தப் படம் எடுத்தவர் நண்பர் மிகவும் நல்லவர். தெரியாமல் செய்துவிட்டேன் என்று அவர் திருவாரூர் தங்கராசு காலைத் தொட்டு கும்பிட்டார்.எவ்வளவு பணம் கேட்டாலும் தருகிறேன் .ஆனால் இந்தப் படத்தை கர்நாடகா முழுதும் கொண்டு சேர்த்த எனது மகிழ்ச்சி பெரியது என்றார்.இருவருமே எனக்குத் தெரிந்தவர்கள் . நான் இருவரையும் சமாதானம் செய்து வைத்தேன்.

சினிமா தான் தலைவர்களை கொடுத்தது. சினிமாவில் ஜெயிப்பது நீச்சல் தெரியாதவன் நீச்சல் போட்டிக்கு வருவது போல. எம்ஜிஆர் பாடல் எங்கு பார்த்தாலும் ஒலிக்கிறது. எப்போதும் அவரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம்.
எம்ஜிஆர் படங்களில் குற்றவாளியைப் போலீஸ் கைது செய்வது போல் தான் இருக்கும் .தண்டிப்பது போல கொலை செய்வது போல இருக்காது .ஆனால் இப்போது படங்களில் எல்லாம் கதாநாயகர்கள் கத்தியைத் தூக்கிக்கொண்டு வருகிறார்கள்” என்றார் ஆதங்கத்துடன்.

இயக்குநர் அரவிந்தராஜ் பேசும்போது ,

பெங்களூரில் இருந்து படம் எடுக்க வந்து நம் இயக்குநர் குடும்பத்தில் ஒருவராகி உள்ள புதிய இயக்குநரை வரவேற்கிறேன். ஸ்கிரிப்ட் இல்லாமல் படம் எடுத்தார்கள் என்று சொன்னார்கள். அந்த அளவிற்கு மனதில் கதையைப் பதிய வைத்துள்ள இயக்குநரின் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன்.

வில்லனிலிருந்து கதாநாயகனாக இந்த கதாநாயகன் உயர்ந்து இருக்கிறார் .அவர் வெற்றி பெறுவார். இங்கே சினிமா துறையில் ஆன்மிகத் துறையினரும் இணைந்து இருப்பதை இந்த மேடையில் பார்க்கிறேன். அவர்களை இணைத்துள்ளது இந்த படம். எனக்குத் தெரிந்த ஆன்மிகம் சினிமா தான் “என்றார்.

இயக்குநர் பவித்ரன் பேசும் போது,

” சென்னையில் இருந்து பெங்களூர் அழைத்து என்னை ஒரு படம் எடுக்க வைத்தார்கள். அந்தப் படம் தமிழில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’. அது செப்டம்பர் 30-ல் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது .இந்தத் தயாரிப்பாளர் நல்ல சமூக சேவகராக இருக்கிறார் .ஒரு நல்ல படம் எடுத்தால் ஊடகங்கள் அதைக் கொண்டாடுவார்கள் . நீங்கள் ஒரு வேலையைச் சிறப்பாகச் செய்தால் அதைப் பத்து மடங்கு கொண்டு சேர்ப்பார்கள். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.

பாடலாசிரியர் கு. கார்த்திக் பேசும் போது ,

“இந்தப் படத்தில் ஒரு கானா பாடல் உட்பட நான்கு பாடல்கள் எழுதி இருக்கிறேன்.பாடலாசிரியர்களுக்கு உரிய சம்பளம் கிடைப்பது கடினம். இதில் அதைச் சரியாகக் கொடுத்திருக்கிறார்கள்.இந்தப் படத்தின் இயக்குநர் தனக்கு எது வேண்டுமோ அதைச் சரியாகக் கேட்டுப் பெற்றுக் கொள்பவர் ,அவ்வளவு தெளிவானவர்.
பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன மகிழ்ச்சி” என்றார்.

தொழிலதிபர் பிரகாஷ் பழனி பேசும் போது,

” இந்தப் படத்தை பெரிய இடத்திற்கு எடுத்துக் கொண்டு செல்லுங்கள்’ என்று கூறி வாழ்த்தினார்.

இயக்குநர் ராஜகுமாரன் பேசும்போது.

” குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்பார்கள். குற்றம் தவிர் என்பது இந்த படத்தின் பெயர். உறவுகளில் குற்றம் பார்க்கக் கூடாது. தவிர்க்க வேண்டும் தயாரிப்பாளர் அனைவருக்கும் சம்பளத்தை பாக்கி இல்லாமல் கொடுத்தார் என்றார்கள் அதனால் தான் இயக்குநர் சிறந்த படமாக எடுத்திருக்கிறார். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். பெங்களூரில் இருந்து வந்து படம் எடுத்திருக்கும் தயாரிப்பாளர் வெற்றி பெறட்டும். பல தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்கட்டும்” என்று வாழ்த்தினார்.

நடிகர் ஜார்ஜ் விஜய் பேசும் போது,

“இந்தப் படத்தின் போஸ்டர் ட்ரெண்டிங்கில் வந்தது. அதை வெளியிட வேண்டும் என்று முன்னணி நடிகர்களை அணுகிய போது யாருமே கண்டு கொள்ளவில்லை.ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால் தான் சினிமா முன்னுக்கு வரும். நான் கவலையோடு இருந்த போது எனக்கு ஒரு வாசகம் வந்தது. ‘என் கிருபை உனக்குப் போதும்’ என்றது அப்படி பல பெரியவர்களின் கிருபை இங்கே இந்தப் படக் குழுவிற்கு வந்துள்ளது”என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பேசும்போது,

“நான் ஒரு பாடல் காட்சியில் ஆடி நடித்தேன்.அதன் படப்பிடிப்பு இரவு 7 மணிக்கு தொடங்கி 10 மணி வரை சென்றது. ஒரு குடிசைப்பகுதியில் நடந்தது. சுற்றிலும் மக்கள் கூடி இருந்தார்கள்.பத்து மணிக்கு சாப்பாடு வந்திருந்தது.ஆடிய களைப்பு பசியாக இருந்தது.சாப்பிடலாம் என்று திரும்பிப் பார்த்தபோது சாப்பாடு எங்கள் கைக்கு வரவில்லை. தயாரிப்பாளர் பாண்டுரங்கன் அதை எல்லாம் கூடி இருந்த மக்களுக்குக் கொடுத்து விட்டார்.சில நிமிடங்கள் பொறுத்து இருங்கள் என்று எங்களுக்குப் புதிதாக வரவழைத்துக் கொடுத்தார்.அப்படிப்பட்ட நல்ல மனதுக்காரர் பாண்டுரங்கன்.
இந்தப் படத்திற்காக சிவகாசி மாதிரி பாடல்களைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.
அந்த சிவகாசி வாய்ப்பை கொடுத்த பேரரசு சார் இங்கே வந்திருக்கிறார். என்னை விஜய் படம் கொடுத்துப் பெரிய ஆளாக்கி விட்ட வர் அவர்.
இந்தப் படத்தில் அப்பா பாடல் பாடியது சிறப்பானது. படம் வெற்றிபெறும் என்று வாழ்த்துகிறேன் “என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது,

“இங்கே பேசியவர்கள் பலரும் எம்ஜிஆர் பற்றிப் பேசினார்கள். எம்ஜிஆர் மட்டும் தான் வில்லனைக் கொல்ல மாட்டார். எந்தப் படத்திலாவது அவர் நம்பியாரைக் கொன்றிருக்கிறாரா?கெட்டது செய்பவர்களைக் கூட திருந்தத் தான் வைப்பார்.
அதனால்தான் அவரைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருக்கிறோம்.இப்போதெல்லாம் பழிவாங்க உடனே சுட்டு விடுகிறோம்.

கர்நாடகாவில் பல மொழி பேசுகிறார்கள் என்றார் செண்ட்ராயன். அப்படியானால் அவர் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு தருகிறார் என்று கூறலாமா?

சினிமாதான் அனைத்து துறையினரையும் ஒன்றிணைத்து வாழவைக்கும் துறை. இங்கே பாருங்கள் ஆன்மீக துறையினர், அரசியல் துறையினர், ராணுவத்தினர், காவல்துறையினர், ஊடகத் துறையினர் என அனைவரும் இணைந்து இருக்கிறார்கள்.
ஒரு துறை விழா என்றால் அந்தத் துறை சார்ந்தவர்கள்தான் கலந்து கொள்வார்கள். ஆனால் சினிமாவில் தான் எல்லாத்துறையினரும் இணைகிறார்கள்.

இங்கே ஸ்ரீகாந்த் தேவா வந்திருக்கிறார் பாடல்கள் சிறப்பாக கொடுத்திருக்கிறார். அவர் சிவகாசி படத்திற்குப் போட்ட பாடல்கள் வெற்றி பெற்றன.

அப்போதெல்லாம் இசையமைப்பாளர்களை மலேசியா, சிங்கப்பூர், பாங்காக் என்று அழைத்துக் கொண்டு போய் மெட்டுப்போட வைப்பார்கள்.அவருக்கும் வெளிநாடு செல்லலாம் என்று ஆசை இருந்தது. கேட்டுக் கொண்டே இருந்தார்.
தருமபுரி படத்தில் பணியாற்றி வந்த போது விஜயகாந்த் கட்சி தேர்தல் என்று பரபரப்பாக இருந்தார். படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்தது. அங்கே வரவழைத்து கேரவனிலேயே மெட்டுப்பட வைத்தேன். மூன்று பாடல்கள் அங்கேயே போட்டுக்கொடுத்தார் . பழனி படம் வந்தபோது பழனிக்கும் திருவண்ணாமலை சமயத்தில் திருவண்ணாமலைக்கும் வரவழைத்து மெட்டுகளை வாங்கினேன் .உள்ளூர் பெயரை வைத்துக் கொண்டு உலக நாடுகளுக்கு ஏன் செல்ல வேண்டும் என்று கேட்டேன். கடைசி வரை அவரது வெளிநாடு கனவு பலிக்கவே இல்லை.

குற்றங்களைத் தவிர்க்க வேண்டும் .திரையரங்குகளில் படங்களைப் பார்க்க முடியாமல் இறுகப்பற்று, எம காதகி போன்ற படங்களை ஓபிடியில் பார்க்கும்போது எனக்குக் குற்ற உணர்ச்சியாக இருக்கும். அதுபோன்ற குற்றங்களை இனி தவிர்க்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

பாடல் காட்சிகளைப் பார்த்தோம்.கதாநாயகன் ரிஷியும் நாயகி ஆராதியாவும் நன்றாக ஆடினார்கள்.பாடல்களைப் பாடும் போது ஆராதியாவுக்கு லிப் மூவ்மெண்ட் சரியாக இருந்தது. ஆனால் ரிஷிக்கு சரியாக அமையவில்லை.கதாநாயகியின் இடுப்பைப் பார்த்துக் கொண்டே ஆடியதால் அதாவது ‘ஹிப்’பைப் பார்த்ததால், ‘லிப்’பைக் கோட்டை விட்டுவிட்டார்.
இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார்.

விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கும் படக் குழுவினருக்கும் தயாரிப்பாளர் பாண்டுரங்கன் பொன்னாடை போர்த்தி வரவேற்று கர்நாடகத்துப் பாரம்பரிய முறையில் தலைப்பாகை அணிவித்து மரியாதை செய்தது , எந்தவொரு தமிழ் திரைப்பட திருவிழாவிலும் காண முடியாத பண்பாட்டுச் செயல் பாடாக இருந்தது.

‘ட்ரீம் கேர்ள்’படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியீடு……..

ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இயக்கிய ‘மீரா’ படத்தின் கதாசிரியரும் ‘அழியாத கோலங்கள் 2’ படத்தின் இயக்குநருமான எம் .ஆர் .பாரதி இயக்கத்தில் புதுமுகங்கள் ஜீவா, ஹரிஷா, பிரபு சாஸ்தா, இந்திரா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ட்ரீம் கேர்ள்’ . இப்படத்திற்கு சாலமன் போஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார் .இளமாறன் இசையமைத்துள்ளார். வசனம் ஹேமந்த் செல்வராஜ். கலை இயக்கம் கலை.
படத்தொகுப்பு .கே.பி. அஹமத் .
சாருலதா பிலிம்ஸ் தயாரித்துள்ளது.பாடல்களை சரிகம வெளியிட்டுள்ளது.

இப்படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்களைப் பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் வெளியிட்டார் .விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர்.விழாவில் ஏராளமான இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் படத்தின் ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ் பேசும்போது,

“முதலில் வாய்ப்பு கொடுத்த எம். ஆர். பாரதி அவர்களுக்கு நன்றி.நான் இயக்குநர் எம் .ஆர் . பாரதியைச் சந்தித்து படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சென்னையில் எடுக்கலாமென்றார். நான்தான் ஊட்டியில் எடுக்கலாம் என்று கூறினேன். வைடுஷாட், லாண்ட்ஸ்கேப் எடுத்துக் கொண்டு வா, இருவர் நடப்பது மாதிரி போனிலேயே எடுத்துக் கொண்டு வா என்றார். அடுத்த நாளே எடுத்து அனுப்பினேன். அதை அவர் பார்த்துவிட்டு அவர் ஊட்டியில் தான் நாம் படப்பிடிப்பு நடத்துகிறோம் என்றார்.ஊட்டியின் காலநிலையும் வண்ணங்களும் மிகவும் சிறப்பாக இருந்தன.ஒரு சிறிய குழுவாகச் சென்று சிறப்பாகச் எடுத்து முடித்திருக்கிறோம்” என்றார்.

படத்தின் நாயகன் ஜீவா பேசும்போது,

” இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். உடன் நடித்தவர்களுக்கு நன்றி. இயக்குநர் மிகவும் அன்பானவர்,அவர் ஒரு குழந்தையைப் போன்றவர். எப்போதும் நேர் நிலையாக சிந்திப்பவர். அனைவருக்கும் நம்பிக்கை அளிப்பவர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்” என்றார்.

படத்தில் நடித்துள்ள பிரபு சாஸ்தா பேசும் போது,

” இந்தப் படத்தில் நான் அரவிந்த் என்ற ஒரு பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இயக்குநர் மனதில் ஒரு உலகம் இருந்தது. அந்த உலகத்தில் உள்ள கதாபாத்திரத்திற்கு என்னை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. அவர் மிகவும் அன்பானவர் .அதிகம் பேச மாட்டார் , நேர்நிலை எண்ணம் கொண்டவர்.
ஒளிப்பதிவாளர் சாலமன் போஸ் ஒளிப்பதிவில் காதல் மொழி இருக்கிறது.அவர் ஒரு நிறத்தைத் தேர்ந்தெடுத்து அதில் நம்மை நிற்க வைத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும்.
மணிவண்ணன் சார் போல வசனங்களை ஹேமந்த் சிறப்பாக எழுதியிருக்கிறார்.படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி.பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றலாம் .ஆனால் மிகவும் கடினமான இடங்களில் சிரமப்பட்டு படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம்” என்றார்.

எழுத்தாளர், இயக்குநர் அஜயன் பாலா பேசும் போது,

” தமிழ்நாட்டில் கனவுகளைக் காட்சியாக்கிக் கொடுத்த பி. சி . ஸ்ரீராம் அவர்கள் இங்கே வந்திருக்கிறார்.நான் அண்ணன் எம். ஆர் .பாரதியிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தேன். அவர் எப்போதோ இயக்குநராக இருக்க வேண்டியது. சற்று தாமதம் ஆகிவிட்டது.எனக்கு ஒரு நல்ல சகோதரராக நண்பராக இருக்கிறார். நாங்கள் 30 ஆண்டு கால நட்புடன் இருக்கிறோம்.
நான் சென்னை வந்த போது சென்னையில் ஒரு நம்பிக்கை நீரூற்றாக அவர் தான் இருந்தார். அவரே தனக்கான இடத்தை சிரமப்பட்டு தேடி அமைத்துக் கொண்டுள்ளார்.இருந்தாலும் பலருக்கும் நம்பிக்கை தருபவராக இருந்தார். பல விளம்பரப் படங்கள் எடுத்துள்ளார். எப்போதும் போராடிக் கொண்டிருப்பவர் தான் . அது மட்டுமல்ல மற்றவர்களுக்கு எப்போதும் நம்பிக்கையைத் தருபவர் .
ஒரு நல்ல வரியைக் கூறினால் ஒரு அழகான காட்சியைக் கூறினால் கூட குழந்தையைப் போல ரசிப்பார்.

உலக அளவில் திரைப்படங்கள் பார்ப்பவர். உலக சினிமாக்களை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துபவர். அவர் எப்போதும் ஒரு ரசிகராகவே தன்னை உணர்வர் .அந்த ரசிக மனம் தான் அவரை உயிர்ப்போடு வைத்துள்ளது.அவர் ஒரு ட்ரீம் பாய் .அவரது கனவு தான் இந்தப் படம்.இப்போது எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது, ‘ஏ.ஐ’ என்கிறார்கள் .அழகியலை எந்த ‘ஏஐ’ யாலும் உருவாக்க முடியாது .அந்த அழகியல் உள்ளவரை உலகம் அழியாது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைவரின் பிளே லிஸ்டிலும் இருக்கும். இது கனவைப் பற்றிப் பேசுகிற படம். இதைத் தனது கனவுப் படம் என்று அவர் உருவாக்கி இருக்கிறார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்

இயக்குநர் நந்தா பெரியசாமி பேசும்போது,

” எனது நண்பர்களில் பாரதிக்கு சிறப்பான இடம் உண்டு.ஒரு நாள் ஒரு கதை இருக்கிறது பேசலாம் என்று எங்களை அழைத்தார்.
நாங்கள் லிங்குசாமி,பாலாஜி சக்திவேல், பிருந்தா சாரதி ஆகியோர் அவர் அழைத்த இடத்திற்குச் சென்றோம். சேலையூரில் ஒரு ரிசார்ட்டில் எங்களை அழைத்து கதை பற்றிப் பேசாமல் மனம் குளிர சாப்பாடு போட்டார். கதை பற்றிப் பேசுவது இவ்வளவு சுகமானதா என்று நினைத்தோம்.

அவர் தனது உழைப்பால் தனது பதிப்பகத் துறையில் பல சாதனைகள் படைத்திருக்கிறார் .நான் கிராமத்திலிருந்து சென்னை வந்த போது எனக்கு, சாதாரண வணிகப் படங்களை மட்டுமே பார்த்து வந்த எனக்கு, ஆன்டன் செகாவையும் அகிரா குரோசாவையும் அறிமுகப்படுத்தியவர் அவர்.இவர்களெல்லாம் சினிமாவில் இருக்கிறார்களா என்று ஆச்சரியப்படுத்தியவர்.அவர் நல்ல ரசிகர். நல்ல கவிதை சொன்னால் 500 ரூபாய் பரிசு கொடுப்பார் .எங்களது வாசிப்பை விரிவு படுத்தியவர்.அவரது ஒரு வரிக் கதை இந்த அற்புதமான படமாக வந்திருக்கிறது .படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

படத்தின் நாயகி ஹரிஷா பேசும்போது ,

” இங்கே பெரிய பெரிய ஜாம்பவான்கள் வந்திருக்கிறார்கள்.அவர்கள் அமர்ந்திருக்கும் இப்படிப்பட்ட மேடையைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி.இயக்குநர் பாரதி சார் நடிப்பவர்களைத் தேர்வு செய்த போது என்னை அழைத்தார்.பார்த்துவிட்டு நீ தான் என் ட்ரீம் கேர்ள் என்றார். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 25 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. மிகவும் மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது .நாங்கள் அழகாக இருப்பதே இந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான் தெரிந்தது.
படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்” என்றார்.

இயக்குநரும் கதை வசன கர்த்தாவுமான பிருந்தா சாரதி பேசும் போது ,

“பத்திரிகையில் இருந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் இயக்குநர் எம் ஆர் பாரதி. 1992 இல் இருந்து அவர் எனக்குப் பழக்கம்.

‘மீரா’ படத்திற்குப் பிறகு ‘அழியாத கோலங்கள் 2 ‘ எடுத்து ஆச்சரியப்படுத்தினார். இப்போது இந்தப் படத்தை எடுத்திருக்கிறார் .

சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் டிவி உலகத்தில் ஒரு வெற்றியாளராக இருந்தார். தொலைக்காட்சிகளுக்கு வெற்றியாளர்களின் கதைகளை எடுத்து நிகழ்ச்சி தயாரித்துக் கொடுத்தார். பல விளம்பரப் படங்களும் எடுத்துள்ளார் அப்போது நான் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன் .அதற்காகப் பல ஊர்களுக்கு அவருடன் சென்று இருக்கிறேன்.
அதன் மூலம் சொற்ப வருமானம்தான் வந்தாலும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருந்தார். இவரது மனைவி ஒரு பொறியியல் பேராசிரியர். பொறியியல் கல்லூரிக்காக அவர் எழுதிய புத்தகத்தை கல்லூரிகளின் பாடத்தில் துணைப்பாடத்தில் சேர்த்து விட வேண்டும் என்று முதலில் இவர் தேடி அலைந்தார். ஆனால் அது பெரிய வெற்றி பெற்று இன்று பெரிய வெற்றிகரமான பதிப்பாளராக இருக்கிறார்.

அவரை முதலில் சந்தித்தபோது பிடித்த படத்தைக் கேட்ட போது நான் ‘மூன்றாம் பிறை’ என்றேன் அதிலிருந்து அவர் இணக்கம் ஆகிவிட்டார்.

எனக்குப் பிடித்த படங்கள் ‘மௌன ராகம்’,’முதல் மரியாதை’, ‘உதிரிப்பூக்கள்’ என்றிருந்தது. அவர்தான் எனக்கு உலக சினிமாவை அறிமுகப்படுத்தினார்.’சாருலதா’ என்ற படத்தைப் பற்றி அவர்தான் முதலில் பேசினார்.அகிரா குரோசோவா போன்ற மேதைகளை அறிமுகப்படுத்தினார்.
சிறந்த ரசனை உள்ளவர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘அழியாத கோலங்கள் 2’ என்று அற்புதமான படத்தை இயக்கினார் .திரைப்பட உருவாக்கத்தில் இப்படியும் செய்யலாமா என்று யோசிக்க வைத்தார்.

ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள கனவு இருக்கும் . அந்தக் கனவு தான் இந்தப் படம்.

இங்கே வந்திருக்கும் பி.சி ஸ்ரீராம் அவர்களை நான் பிலிமாலயா பத்திரிகைக்காக பேட்டி எடுக்க வேண்டும் என்று அவரிடம் எப்படி பேசுவது என்ன கேள்வி கேட்பது என்று எனக்குக் தெரியவில்லை .பி சி ஸ்ரீராம் உருவான கதை எப்படி என்று கேட்டேன்.அப்போது அவரது சித்தி பிரபல மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் சரஸ்வதி ராம்நாத் என்றார். அவரைச் சந்திக்க வரும் பல எழுத்தாளர்களை இவர் பார்த்து இலக்கியம் பற்றி ஆர்வம் வந்திருக்கிறது.ஒரு நாள் ஒரு கூட்டத்துக்கு அழைத்துச் சென்றாராம் .அது ஜே. கிருஷ்ணமூர்த்தி பேசிய கூட்டம் . அப்போது அவர் ‘உன் கண்களால் உலகைப் பார் ‘என்று கூறியதை மனதில் எடுத்துக்கொண்டு அப்படி உலகம் பார்க்கும் கண்களால் பார்க்காமல் உன் கண்களால் உலகத்தை பார் என்று அவர் பார்க்க ஆரம்பித்தார். அந்தக் காட்சிகள் எல்லாம் நமக்கு வேறு விதமாக அழகாகத் தெரிந்தன .
இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் கதிர் பேசும்போது,

“நான் கல்லூரியில் படித்த போதே எம்.ஆர். பாரதி எனக்கு பழக்கம் .அப்போது பல படங்களுக்கு நான் டிசைனராக பணியாற்றி இருக்கிறேன். எல்லாமே சின்ன சின்ன படங்கள். ‘வேலியில்லா மாமரம்’ என்ற படத்தில் அவர் உதவி இயக்குநராக பணிபுரிந்தார்.அப்போதிலிருந்து எனக்கு அவர் பழக்கம்.
அவர் நல்ல புத்தக வாசிப்பு கொண்டவர்.
எனது புத்தக அறிவுக்குக் காரணம் அவர் தான். அவர் வீட்டில் ஏராளமான புத்தகங்கள் இருக்கும். அவர் வீட்டுக்குச் சென்றால் ரஷ்ய நாவல்கள் நிறைய படிப்போம். அவற்றை மீண்டும் மீண்டும் அங்கே போய் படிப்போம்.
எழுத்து என்பது சினிமாவுக்கு மிகவும் அத்தியாவசியம். சினிமாவுக்கே எழுத்துதான் அஸ்திவாரம் அது இல்லாததால் தமிழ் சினிமா இன்று சீர்கெட்டுப் போயிருக்கிறது.யாரும் படிப்பதில்லை .ஆனால் புத்தகம் எழுத்தை ஆயுதமாகக் கொண்டு பாரதி இங்கே இயக்குநராக இருக்கிறார்.அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
படம் கவிதை போல வந்திருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகிறேன்”
என்றார்.

.திரைப்படக் கல்லூரி முதல்வரும் ஓவியருமான கலைமாமணி ட்ராட்ஸ்கி மருது பேசும்போது ,

“சென்னை வந்த காலத்தில் இருந்து பாரதியை எனக்குத் தெரியும் .
அப்போது பழக்கமான பல நண்பர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்.
பாரதி என் நல்ல நண்பர். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் வசந்தபாலன் பேசும்போது,

“‘மீரா’ படத்தில் நான் உதவி எடிட்டராக பணியாற்றினேன். அப்போது எடிட்டர் லெனின் – விஜயனைப் பார்க்க அடிக்கடி பிசி ஸ்ரீராம் சார் அங்கே வருவார். அவர் ஒளிப்பதிவில் எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகளைப் பார்த்து எனக்கு வியப்பாக இருக்கும்.

இசைஞானி இளையராஜாவுக்கு சற்றும் குறைவில்லாத பெருமைக்குரியவர் ஒளிப்பதிவு மேதை பி. சி.. ஸ்ரீராம் அவர்கள் .

இவர் படத்தில் இவரது ஒளிப்பதிவில்தான் நாம் அதுவரை பார்த்த சாதாரண வீடு கூட அழகாகத் தெரிந்தது. வீடு இவ்வளவு அழகாக இருக்கிறது என்று இவரது ‘மௌன ராகம் ‘படத்தைப் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் .ஒரு காட்டன் புடவையைக் கூட அழகாகக் காட்ட முடியுமா என்று நான் வியந்தேன்.
‘திருடா திருடா ‘படத்தின் ‘தீ தீதித்திக்கும் தீ ‘ பாடலில் நாம் இதுவரை பார்த்த எழும்பூர் மியூசியத்தைக் கூட அவ்வளவு அழகாக காட்டியிருப்பார் .
கமலா தியேட்டரில் அந்தப் படத்தை பார்த்தேன்.அந்தப் பாடலில் விளக்குகள் அணைந்து எரியும்போது
அந்த அவரது ஒளி ஜாலத்தைப் பார்த்து திரையரங்க ரசிகர்கள் கைதட்டினார்கள். மீண்டும் பார்த்தபோது அதே காட்சியில் கைதட்டினார்கள்.

வசனங்கள் ,நடிப்பு எல்லாவற்றையும் கடந்து ஒளிப்பதிவுக்குக் கைத்தட்டல் பெற்றவர் இந்த ஒளிப்பதிவு மேதை.அப்படி தனது ஒளிப்பதிவின் மூலம் சிறப்பு சேர்த்தவர் இங்கே வந்திருக்கிறார் .இன்று இந்தியாவின் தலைசிறந்து விளங்கும் பல ஒளிப்பதிவாளர்கள் அவர் மூலம் வந்தவர்கள் .

அவர் ஒளி அமைப்பின் மூலம் கவிதை எழுதியவர் .அதன் மூலம் ஒரு மாயாஜாலம் நிகழ்த்தியவர் .ஒளியாலும் கதை சொல்ல முடியும் என்று நிரூபித்தவர் .அவரது ‘குருதிப்புனல்’ ,’அக்னி’ நட்சத்திரம் போன்ற படங்கள் எந்த ஏஐ-யும் இல்லாத அந்தக் காலத்திலேயே 35 எம் எம் பிலிமில் அசத்தியவர் .

‘அலைபாயுதே’, ‘ஓகே கண்மணி’, ‘சீனி கம் ‘ வரை அவர் தனது மேதைமையான ஒளிப்பதிவைக் காட்டியவர்.பெரிய மாயாஜாலம் நிகழ்த்தியவர். இவர் தமிழ் சினிமாவால் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர்.சினிமா மேதைகளைக் கொண்டாட வேண்டும். விரைவில் இவருக்கான விழா எடுக்க வேண்டும் என்றும் இந்த மேதை கொண்டாடப்பட வேண்டும் என்றும் இதன் மூலமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

கவனிப்பாரற்று கிடந்த எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரிக்கு டிராட்ஸ்கி மருது அவர்கள் பொறுப்பேற்ற போது நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். கல்லூரிக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கும் செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இனி திரைப்படக் கல்லூரிக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கும் என்று நம்புகிறேன்.

பாரதி இயக்கியிருக்கும் இந்தப் படம் வெற்றி பெற வேண்டும்”
என்று கூறி படக் குழுவினரை வாழ்த்தினார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி .சி. ஸ்ரீராம் பேசும் போது,

“இங்கே பாரதி பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தபோது ,ஒரே கருத்தை எல்லோரும் கூறிய போது எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. நான் வேறு விதமான விழாக்களில் கலந்து கொண்டுள்ளேன். சினிமா ஆடியோ விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல்முறை. பாரதி அழைத்தால் மறுப்பு சொல்ல முடியுமா?
அவர் தனது நட்பின் மூலம் உயர்ந்திருக்கிறார்.எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்களுக்குள் நீண்ட நாள் நட்பு உண்டு.எங்களுக்குள் பல கதைகள் உண்டு. அவரது திருமணத்திலிருந்து பல கதைகள் உண்டு.

நான் சொன்ன ஒரு வரிக் கதையை அவர் திரைக்கதையாக்கிக் கொடுத்தார். சுவாரசியமாக மாற்றி இருந்தார்.
நன்றாக இருந்தது.அது வழக்கமான படமாக இருக்காது. அவர் இது மாதிரி அர்த்தமுள்ள சிறிய பட்ஜெட் படங்கள் செய்தாலே போதும். பல கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் படங்கள் எல்லாம் வேண்டாம். இந்தப் படம் நன்றாக வர வேண்டும் .பாரதிக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் எம் .ஆர் .பாரதி பேசும் போது,

“நான் சினிமாவுக்கான உதவி இயக்குநர் வாய்ப்பு தேடிய போது சரியான படம் அமைய வில்லை. சின்ன சின்ன படங்களில் நான் உதவி இயக்குநராக வேலை பார்த்தேன்.’நெஞ்சமெல்லாம் நீயே’ என்ற படத்தில் பணியாற்றினேன். அதுதான் உருப்படியான ஒரு படம் .

‘மீரா’ படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 12 நாளில் ‘அழியாத கோலங்கள் 2 ‘படத்தை எடுத்தோம். அந்த பட முயற்சியில் இறங்கிய போது அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். நான் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அர்ச்சனா தயாரிக்க முன் வந்தார். அப்போது ரேவதியை இயக்குநராக ஆக்கலாமே படத்துக்கு ஒரு மதிப்பு கிடைக்கும் என்றேன். உன் கனவு இது.நீதான் இயக்க வேண்டும் என்று கூறினார். அப்படி அந்தப் படத்தை 12 நாட்களில் எடுத்தோம்.யூட்யூபில் லட்சக்கணக்கான பேர் பார்த்துள்ளார்கள்.

இந்த ‘ட்ரீம் கேர்ள்’ படத்திற்கு நான்கு காட்சிகள் எடுப்பது போல் திட்டத்தோடு சென்றோம். ஆனால் முழுப் படத்தையும் முடித்து விட்டு வந்திருக்கிறோம் .16 நாட்களில் பெரும்பாலான காட்சிகளை எடுத்து விட்டோம் .

சினிமா என்பது கஷ்டம் கிடையாது .தேவையில்லாமல் சிரமப்படக்கூடாது.

சரியாக வாய்ப்புகள் அமையவில்லை என்றால் அதிலிருந்து ஒரு பிரேக் கொடுத்துவிட்டு மீண்டும் செல்லலாம். சற்று விலகி இருந்து பார்த்தால் நமக்கு ஒரு திறப்பு கிடைக்கும்.

நான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று சிரமப்பட்டதில்லை .சினிமா நம்ப வேண்டும் நேசிக்க வேண்டும்.

சிறிய பட்ஜெட்டில் சிக்கனமாகப் படம் எடுக்கக் தெரிந்தால் நம்மை அது காப்பாற்றி விடும். சிக்கனமாக எடுத்தால் இழப்பும் குறைவாக இருக்கும்.

முதலில் நான் ‘மீரா’ படத்திற்கு கதை வசனம் எழுதினேன். பி சி சார் இயக்கினார். அதன் பிறகு சினிமாவை நான் நேசித்ததால் அதற்குள்ளேயே எப்போதும் இருப்பது போல் பார்த்துக் கொண்டேன்.

ராஜ் டிவிக்காக நிறைய விளம்பரங்கள், விளம்பர படங்கள் தயாரித்தேன். கல்லூரிகளுக்கு புத்தகம் போட்டேன். முதலில் இக்னோ எனப்படும் இந்திராகாந்தி திறந்தவெளி பல்கலைக்கழகத்திற்காக ஒரு சிறு புத்தகம் போட்டோம். இந்தியா முழுக்க ஒரே பாடத்திட்டம் இருந்ததால் அந்தச் சிறிய புத்தகம் பெரிய வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு அந்த துறையில் நுழைந்து வெற்றிகரமாக 26 ஆண்டுகளாக சாருலதா பப்ளிகேஷன் நடத்தி வருகிறேன்.

எனக்குள் இருந்த சினிமா கனவை அழிக்காமல் இருந்ததால் அதற்குப் பிறகும் ‘அழியாத கோலங்கள் 2 ‘எடுக்க முடிந்தது.இந்தப் படம் வெற்றி பெற ஒத்துழைப்பு கொடுங்கள்” என்றார்.

நானி நடிக்கும் ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிப்பில் இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கத்தில் வால் போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ எனும் திரைப்படம் எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியாகிறது. இந்தத் திரைப்படத்தை தமிழில் சினிமாக்காரன் நிறுவனம் வெளியிடுகிறது.

தற்போது படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் நானி, நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி, படத்தினை தமிழகம் முழுவதும் வெளியிடும் விநியோகஸ்தர் வினோத் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் நானி பேசுகையில், ” நான் எப்போது சென்னைக்கு வந்தாலும் என்னுடைய சொந்த வீட்டுக்கு வந்த உணர்வு ஏற்படும். விரைவில் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தமிழில் பேசும் அளவிற்கு பயிற்சி பெற்றுக்கொண்டு பேசுவேன்.

பலமுறை என்னை வடிவமைத்தது தமிழ் சினிமா தான் என சொல்லி இருக்கிறேன். 2012 – 13 ஆம் ஆண்டில் சென்னையிலிருந்து புறப்பட்டு ஹைதராபாத் சென்றேன். இருந்தாலும் தற்போது வரை தமிழக மக்களின் அன்பு – தமிழ் ரசிகர்களின் அன்பு அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. தமிழில் நடிப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன். பொருத்தமான வாய்ப்பு கிடைத்தால் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.

‘ஹிட் தி தேர்ட் கேஸ்’ படத்திற்காக மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஹிட் படத்தின் இரண்டு பாகங்களும் தமிழில் வெளியாகியிருக்கும் என நினைக்கிறேன். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன். ‘ஹிட் -தி தேர்ட் கேஸ் ‘ இது ஒரு படம் அல்ல. அற்புதமான அனுபவத்தை தரும் படைப்பு. முதல் இரண்டு படத்திற்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘ஹிட் 1 ‘, ‘ஹிட் 2 ‘படத்தில் இடம் பெற்ற சில கதாபாத்திரங்கள் இதிலும் வரக்கூடும். ஆனால் படத்தின் கதை புதிது. கதை சொல்லும் பாணி புதிது. திரையரங்குகளில் ரசிகர்கள் பார்த்து கொண்டாடுவதற்கான அனைத்து அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது.

ஏனைய இரண்டு பாகங்களை விட ‘ஹிட் தி தேர்ட் கேஸ்’ படத்தை திரையரங்குகளில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவம் கிடைக்கும் என்பதை மட்டும் உறுதியாக சொல்கிறேன். இந்தப் படத்தில் நான் நடித்திருப்பதற்காக மட்டுமல்ல.. இப்படத்தில் இடம் பிடித்திருக்கும் சில விசயங்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.

நான் நடிக்கும் படத்திற்கு தெலுங்கு மக்களை கடந்து தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் சரியான விமர்சனத்தை முன் வைப்பார்கள். கொண்டாடுவார்கள். ரசிப்பார்கள்.‌ அதிலும் தமிழ் ரசிகர்களின் அன்பு எப்போதும் மகிழ்ச்சியானதாகவே இருக்கும்.

‘ஹிட் – தி தேர்ட் கேஸ் ‘படத்தை இயக்குநர் சைலேஷ் கொலானு இயக்கியிருக்கிறார். சானு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மிக்கி ஜே மேயர் இசையமைத்திருக்கிறார். இவர்கள் படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அதிலும் மிக்கி ஜே மேயரின் பின்னணி இசை உங்களை நிச்சயமாக கவரும்.

இது ஒரு அரிதான திரில்லர் திரைப்படம். இன்வெஸ்ட்டிகேட் திரில்லர் ஜானரிலான இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கும் எல்லா விசயங்களும் உயர்தரம் கொண்டவை. அந்த வகையில் இந்த படம் மாஸான கமர்சியல் என்டர்டெய்னர். ஆனால் அதே சமயத்தில் வழக்கமான கமர்ஷியல் படமாக இது இருக்காது. இந்தப் படம் வெளியான பிறகு நீங்களே உங்களுடைய நண்பர்களிடத்தில் படத்தைப் பற்றி சொல்லி, மீண்டும் திரையரங்கில் வந்து பார்ப்பீர்கள்.

இந்தத் திரைப்படத்தில் எனக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருக்கிறார். அவர் திரையில் தோன்றும் காட்சிகள் அனைத்தும் அனைவருக்கும் பிடிக்கும். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பணியாற்றிய தருணங்கள் அனைத்தும் மறக்க முடியாதவை.

இந்த திரைப்படத்தை தமிழில் வெளியிடும் சினிமாக்காரன் நிறுவனத்தின் வினோத் குமாருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று ‘ஹிட்’ – ‘ரெட்ரோ’ என இரண்டு படங்களும் வெளியாகிறது. இரண்டு திரைப்படங்களும் வெற்றி பெற வேண்டும். ” என்றார்.

நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பேசுகையில், ” ‘கே ஜி எஃப் ஒன்’ , ‘கே ஜி எப் 2’, ‘கோப்ரா’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறேன். அப்படத்தினை விளம்பரப்படுத்தும் போது தமிழக ரசிகர்களையும் சந்தித்து இருக்கிறேன். தமிழ் ரசிகர்கள் வெளிப்படுத்தும் அன்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை.
ஹிட்- 3 நான் நடித்திருக்கும் முதலாவது தெலுங்கு படம்.‌ இரண்டரை ஆண்டுகள் காத்திருந்து தெலுங்கில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறேன். இயக்குநர் சைலேஷ் கொலானு அற்புதமாக படத்தை இயக்கியிருக்கிறார். அனைவருக்கும் பிடித்த ‘நேச்சுரல் ஸ்டார் ‘நானியுடன் இணைந்து நடித்திருக்கிறேன். ‘கே ஜி எஃப் 2 ‘ படம் 2022 இல் வெளியானது. அதன் பிறகு என்னை நினைவு வைத்துக் கொண்டு இயக்குநர் சைலேஷ் கொலானு- நானி ஆகிய இருவரும் இந்த கதாபாத்திரத்திற்காக என்னை தேர்ந்தெடுத்ததை மகிழ்ச்சியாக கருதுகிறேன். இதற்காக அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை சொல்கிறேன்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது நானியின் ரசிகையாக இருந்தேன். அவருடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்குமா.! என காத்திருந்தேன். என் கனவு நனவாகி இருக்கிறது. ஆனால் இந்த ஜானரிலான படத்தில் இணைந்து நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. உண்மையிலேயே இது சந்தோஷத்தை அளிக்கிறது.‌

இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும். மே முதல் தேதியன்று திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

விநியோகஸ்தர் ‘ சினிமாகாரன் ‘ வினோத் குமார் பேசுகையில், ” ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்திற்கு பிறகு ‘ஹிட்- தி தேர்ட் கேஸ்’ படத்தை வெளியிடுகிறேன். இதற்காக வால்போஸ்டர் சினிமா மற்றும் யுனானிமஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ‘கண்ணும் கண்ணும் கொள்ளை அடித்தால்’ எனும் திரைப்படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிக் கொண்டிருந்தேன். எங்கள் படமும், ‘ஹிட் 1 ‘ திரைப்படமும் ஒரே நாளில் வெளியானது. இரண்டு படமும் வெற்றி பெற்றது. தற்போது ‘ஹிட் 3’ படத்திற்கு நான் விநியோகஸ்தராகி இருக்கிறேன். இது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்தப் படத்தில் நானி சார் நடித்திருக்கிறார். அவர் நடிப்பதற்காக தேர்வு செய்யும் அனைத்து படங்களும் நன்றாகவே இருக்கும். தொடர்ந்து அவர் ஹிட் படங்களை வழங்கிக் கொண்டிருக்கிறார். ஹிட் 3 எனும் படம் ஏற்கனவே ஹிட்டான இரண்டு பாகங்களில் தொடர்ச்சியாக வெளியாகும் மூன்றாவது பாகம். இதில் நானி இருப்பதால் நிச்சயம் பெரிய அளவில் வெற்றியைப் பெறும்.

ஸ்ரீநிதி ஷெட்டி ஏற்கனவே ‘கே ஜி எஃப் ‘, ‘கோப்ரா’ போன்ற வெற்றி படங்களில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் திறமைசாலிகள்.‌ அதனால் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என நம்புகிறேன்.” என்றார்.

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ டூரிஸ்ட் ஃபேமிலி ‘எனும் திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ,மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ் பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார். படத் தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ் கமல் கவனித்திருக்கிறார். தமிழகத்தில் அடைக்கலமாகும் ஈழ அகதிகளின் வாழ்வியலை மையப்படுத்திய இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான்- மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன், இயக்குநர் அபிஷன் ஜீவிந், நாயகன் சசிகுமார், நடிகர் மிதுன் ஜெய் சங்கர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடலாசிரியர் மோகன் ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ” எனக்கு இந்த மேடை மிக முக்கியமான மேடை. ‘ஈசன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து..’ எனும் பாடலை நாங்கள் எந்த படத்திற்காக எழுதினோமோ.. அந்தப் படத்தில் இருந்து அந்தப் பாடலை நீக்கி விட்டார்கள். அதன் பிறகு ஒரு வருடம் கழித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எனக்கு போன் செய்து, ‘ஈசன் படத்தில் ‘ஜில்லா விட்டு ஜில்லா வந்து’ பாடல் இடம்பெறுகிறது. சசிகுமார் சாருக்கு அந்த பாடல் மிகவும் பிடித்து விட்டது’ என்றார். நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். அந்த தருணங்கள் இன்றும் என் மனதில் பசுமையாய் இருக்கிறது. ஜேம்ஸ் வசந்தனின் ஸ்டுடியோவில் சசிகுமாரிடம் என்னை அறிமுகப்படுத்திய பிறகு , ‘அவர் பாடல் சிறப்பாக இருக்கிறது’ என வாழ்த்தினார். அந்த வாழ்க்கை என்னால் மறக்க இயலாது. அந்தப் பாடல் எனக்கான அடையாளமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து யுவன் சார் ஸ்டுடியோவில் ஒருவர் என்னை சந்தித்து நான் பட தயாரிப்பில் ஈடுபட்டால் உங்களுக்கு வாய்ப்பு தருவேன் என்று வாக்குறுதி தந்தார். அவர்தான் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன். அவர் தயாரித்த ‘குட்நைட் ‘ படத்தில் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பையும் வழங்கினார். அவர் தயாரிப்பில் சசிகுமார் நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நானும் பணியாற்றியதற்கு பெருமிதம் கொள்கிறேன். இந்தப் படத்திற்கு நாயகன் சசிகுமார் என்று சொன்னவுடன் அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த படத்தின் பாடல்களை எழுத வேண்டும் என தீர்மானித்தேன். அதேபோல் இயக்குநர் அபிஷனும் கதையை சொன்னது போல் எடுத்திருக்கிறார். சிறப்பாக உருவாக்கி இருக்கிறார். ஒரு படம் சிறப்பாக உருவாகும் போது தான் அதனை நாம் கொண்டாட முடியும். இந்தப் படத்தின் இயக்குநர் அபிஷன் சின்ன பையன் தான். இருந்தாலும் மிகப்பெரிய இயக்குநராக வருவார். சசிகுமார் இப்படத்தில் இருப்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. மற்றொரு தயாரிப்பாளர் மகேஷ் ராஜும் எங்களுக்கு ஆதரவாக இருந்தார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் மொட்டை மாடியில் ஒரு பாடலை பாடுவார். அந்தப் பாடல் யூடியூப்பில் பிரபலமானது. அந்த பாடலுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். இவருடன் இணைந்து எப்போது நாம் பணியாற்றுவோம் என ஆவலுடன் காத்திருந்தேன். இயக்குநர் பொன் குமார் மூலம் ‘1947’ எனும் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றினோம். ‘குட்நைட்’ படத்தில் இணைந்து பணியாற்றினோம். அந்தப் படத்தில் உள்ள எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது. மிகவும் மகிழ்ச்சி. அவருடன் ஒரு பாடலுக்காக இணைந்து பணியாற்றும் அனுபவமே சிறப்பானது. அவருடைய பேச்சுக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.
‘குட்நைட் ‘, ‘ லவ்வர் ‘ ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் வெளியாகிறது. ஹாட்ரிக் வெற்றியை பெறுவார்கள். இதற்கு நீங்கள் பேராதரவு தர வேண்டும். படம் வெளியாவதற்கு முன் படத்தைப் பற்றிய பேச்சு இருக்கிறது. படம் வெளியான பிறகும் இந்த பேச்சு நீடிக்கும். இந்தப் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், படத்தில் பணியாற்றி அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பஸ்லியான் பேசுகையில், ” குட்நைட் – லவ்வர் ஆகிய படங்களை தொடர்ந்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி ‘ எங்களின் மூன்றாவது படம். இரண்டு ஹிட் படங்களை கொடுத்திருக்கிறோம். இந்த படமும் ஹிட் ஆகும் என நம்புகிறேன்.
சசிகுமாருக்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இயக்குநர்- நடிகர் என பிரபலமாக இருக்கும் அவர் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடித்ததற்கு நன்றி. இந்தப் படத்தை வெற்றி பெறச் செய்து, அவருக்கும் மகிழ்ச்சியை வழங்குவோம் என நம்புகிறேன்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பொருத்தவரை இது ஒரு கூட்டு முயற்சி. இயக்குநர் அபி என்னை சந்தித்து கதையை சொல்லும்போது அவருக்கு 23 வயது தான். கதையை இடைவேளை வரை கேட்கும்போது அதிர்ச்சியாகி விட்டேன். முழு கதையைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன்.‌ அந்தக் கதையை கேட்டதும் இயக்குநர் அபியை எனக்கு ஆத்மார்த்தமாக பிடித்திருந்தது.‌ அந்தக் கதையில் அவர் சொன்ன விசயங்கள் ஜீவன் உள்ளதாக இருந்தது. அவர் கதையை எப்படி சொன்னாரோ… அதை அப்படியே திரைக்கு கொண்டு வந்திருக்கிறார். நல்ல படத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தை நாங்கள் குடும்பமாக இணைந்து உருவாக்கினோம். மே மாதம் முதல் தேதி அன்று இப்படத்தை உங்களிடம் சமர்ப்பிக்கிறோம். ஆதரவு தாருங்கள்.

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் அற்புதமாக பின்னணி இசை அமைத்திருக்கிறார். படத்தை பார்க்கும் போது பல காட்சிகளுடன் நம்மால் எளிதாக தொடர்பு கொள்ள முடியும். இதற்கு இவரின் இசை உதவி செய்திருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்களும், நடிகைகளும் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘குட்நைட் ‘,’லவ்வர்’ என்ற இரண்டு படத்திற்கும் வெற்றியை வழங்கி இருக்கிறீர்கள். அதனைத் தொடர்ந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற திரைப்படத்தையும் வெற்றி பெற செய்வீர்கள் என நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசுகையில், ” குட்நைட் – லவ்வர் ஆகிய இரண்டு படங்களுக்கும் நீங்கள் கொடுத்த ஆதரவால் தான் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’யை உருவாக்க முடிந்தது. இதற்காக முதலில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் அபிஷன் கதையை சொல்லத் தொடங்கியதும் ஐந்தாவது நிமிடத்தில் ஒரு ‘மொமென்ட்ஸ்’ வரும். அதைக் கேட்டவுடன் இந்த படத்தை நிச்சயம் தயாரிக்கலாம் என்றேன். அந்தத் தருணத்தில் இந்த படம் எப்படி வரும் என்று நான் நினைத்திருந்தேனோ.. அதேபோல் இயக்குநர் அபிஷன் உருவாக்கி இருந்தார். இந்த வயதில் இவ்வளவு பெரிய கடின முயற்சியை நான் கண்டதில்லை. அவர் எதிர்காலத்தில் மிக சிறப்பான இயக்குநராக வருவார்.‌ இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை பெற்றுத் தரும்.‌ திரை உலகில் அவருக்கு பேராதரவு கிடைக்கும் என நான் நம்புகிறேன்.

சசிகுமார் இல்லை என்றால் நாங்கள் இந்த படத்தை தயாரித்திருக்கவே மாட்டோம். 16 வயதுடைய மகனுக்கு அப்பா கேரக்டர் என்றால் இவரைத் தவிர வேறு யாரும் எங்களின் நினைவுக்கு வரவில்லை. இந்தக் கதையை புரிந்து கொண்டு கதையின் நாயகனாக நடிப்பதற்கு ஒரு துணிச்சல் தேவை. அதை மேற்கொண்டு எங்களுக்கு ஆதரவு அளித்த சசிகுமாருக்கு நன்றி.

மோகன் ராஜனின் பாடல் வரிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சில கலைஞர்கள் இல்லை என்றால் படம் உருவாக்க வேண்டாம் என நினைப்பேன் . அத்தகைய கலைஞர்கள் தான் மோகன் ராஜன் – ஷான் ரோல்டன் – பரத் விக்ரமன். எங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் அனைத்து படங்களிலும் இவர்களின் பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். சில படங்களுக்கு இசையை தவிர்த்து விட்டு ரசிக்க முடியாது. எந்த கதையை நான் கேட்டாலும் முதலில் இதில் ஷான் ரோல்டனின் இசை எப்படி இருக்கும் … என்ன மாயஜாலம் செய்யும் … என்று தான் யோசிப்பேன். அப்படி யோசித்துக் கொண்டுதான் கதையையே கேட்பேன். இதுவரை நான் கேட்ட கதைகளுக்கு நான் நினைத்ததை விட அற்புதமாக இசையமைத்து கொடுத்திருக்கிறார் ஷான் ரோல்டன். இதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மகேஷ் என் பார்ட்னர். பொதுவாக இரண்டு பேர் இணைந்து பணியாற்றினால் கிரியேட்டிவ் டிஃபரன்ஸ் வரும்.‌ ஆனால் மகேஷ் நான் என்ன நினைத்து செய்தாலும் அதற்கு முழு பக்க பலமாக இருப்பார். நாங்கள் இதுவரை இரண்டு படங்களை வெற்றிகரமாக தயாரித்திருக்கிறோம். இப்பொழுது மூன்றாவது படத்தில் இணைந்திருக்கிறோம். மகேசின் ஆதரவு இல்லை என்றால் என்னால் தொடர்ந்து இயங்க முடியாது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் யாரையும் எந்த ஒரு தருணத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தாது என்பதை மட்டும் நான் இங்கு உறுதியாக சொல்கிறேன். இந்தத் திரைப்படம் எங்கள் குழுவினரின் நேர்மையான முயற்சி. அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும். அன்பை கொடுக்கும். ரசிகர்களை கவர்வதற்கான அனைத்து விசயங்களும் இப்படத்தில் உள்ளது. மே முதல் தேதி அன்று வெளியாகிறது. நீங்கள் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் அபிஷன் ஜீவிந் பேசுகையில், ” பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது திரைப்படத்தை இயக்குவது தான் லட்சியம் என்ன நினைத்துக் கொண்டிருந்தேன். ஒரு புள்ளிக்குப் பிறகு நான் யாரிடமும் பணியாற்றாமல் கதை எழுதத் தொடங்கினேன். நான் எழுதிய கதையை எந்தவித தயக்கமும் இல்லாமல் தயாரிப்பாளர்கள் கேட்டனர். கதையை கேட்ட பிறகு வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர்கள் மகேஷ் – யுவராஜ் ஆகியோருக்கு என் முதல் நன்றி.
படத்தின் முதல் பாதி கதையை கேட்டதும் தயாரிப்பாளர் யுவராஜ் இப்படத்தை உருவாக்குவோம் என நம்பிக்கை அளித்தார். அந்த தருணம் அற்புதமானது.‌

இப்படத்திற்கு சசிகுமார் தான் ஹீரோ என நிச்சயத்துக் கொண்டு அவரை சந்தித்து கதை சொல்லப் போனேன். கதையை அவரிடம் சொல்லும் போது அவர் எந்த ரியாக்ஷனையும் காண்பிக்கவில்லை. அதன் பிறகு நான் சற்று சோர்வடைந்தேன். அன்று மாலை தயாரிப்பாளர் யுவராஜ் போன் செய்து சசிகுமார் சாருக்கு கதை பிடித்து விட்டது என சொன்னார். அப்போது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.

இப்படத்தில் குழுவாக இணைந்து பணியாற்றுவதற்கு சிறப்பான தொழில்நுட்ப கலைஞர்களைத்தான் தயாரிப்பாளர்கள் வழங்கினார்கள். அதில் முதன்மையானவர் ஷான் ரோல்டன். அவரின் இசை இல்லை என்றால் இந்தப் படம் இல்லை. இந்த
படத்தின் மூலம் எனக்கு பாராட்டு கிடைத்தால்.. அதில் 50 சதவீதம் ஷான் ரோல்டனைத்தான் சாரும். அந்த அளவிற்கு இந்த படத்தில் அவர் கடினமாக உழைத்திருக்கிறார்.

மோகன் ராஜனுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் சிலிர்ப்பானது. ‘முகை மழை’ என்ற வார்த்தைக்கு அவர்தான் பொருள் சொல்லி புரிய வைத்தார். ஷான் ரோல்டன் – மோகன் ராஜன் ஆகிய இருவரிடமிருந்து நிறைய விசயங்களை கற்றுக் கொண்டேன்.

சிம்ரன் மேடம் போன்ற அனுபவம் மிக்க நட்சத்திரத்துடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி.‌ மிதுன் ஜெய் சங்கர் – கமலேஷ் ஆகிய இருவரும் இப்படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், ” இந்த இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மூன்றாவது படத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். இந்தப் பயணத்தின் போது சினிமா எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் நிறைய நடந்தது.‌ அதனால் முதலில் இரண்டு தயாரிப்பாளர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லோரும் என்னிடம் எப்போது நம்பர் ஒன் ஆக வரப்போகிறீர்கள் ? என கேட்கிறார்கள். நான் அதற்காக வரவில்லை.‌ நல்ல படைப்புகளுக்கு இசையை வழங்கி அதனை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அதன் மூலமாக கிடைக்கும் நல்ல விசயங்கள் தான்.. என்னுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

திடீரென்று உயரத்திற்கு சென்று விட்டால்… அந்த உயரத்தில் நின்று கொண்டு, அந்த உயரத்தை தக்க வைப்பது என்பது கடினமான செயல்.‌ பலர் பல ஐடியாக்களை சொல்வார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை இசை இந்த சமூகத்திற்கு எப்படி பலன் அளிக்க வேண்டும். எந்த மாதிரியான இசையை சமூகத்திற்கு வழங்க வேண்டும் என்பது போன்ற சிந்தனையை கொண்டவன் நான். அந்த வகையில் நான் இதுவரை என்னுடைய சினிமா இசை பயணத்தில் சந்தித்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல நல்ல படங்களில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன்.

என்னுடைய நண்பரும் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர்மான விஜய் இப்படத்தின் கதையை கேளுங்கள் என்று சொன்னார். பொதுவாக நான் கதையை கேட்பதை தவிர்த்து விடுவேன். திரைக்கதையை வழங்கி விடுங்கள். நான் வாசித்து தெரிந்து கொள்கிறேன் என்று சொல்லிவிடுவேன். திரைக்கதையை வாசிக்கும் போது அந்த திரைக்கதையில் இசைக்கான வேலை என்ன? என்பது தெரிந்துவிடும். ஏனெனில் சில கதாபாத்திரங்களில் மன ஓட்டத்தை இசையால் சொல்லிவிட முடியும்.

இருந்தாலும் இப்படத்தின் இயக்குநர் அபி கதையை நான் ஒரு முறை சொல்கிறேன் கேளுங்கள் என்றார். கதையை இரண்டு மணி நேரம் சொன்னார். கதையை சொல்லும்போது திரையில் காட்சிகளாக இப்படித்தான் தோன்றும் என்ற விசுவலை உண்டாக்கினார். அவர் கதை சொன்ன விதத்தை பார்த்து வியந்து போனேன். இந்தப் படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும்.

இப்போதுள்ள சூழலில் ஒரு நல்ல படத்தை எடுக்க வேண்டும் என்றால் அதில் நல்ல கதாபாத்திரங்கள் இருக்க வேண்டும். ஒரு டிராமா இருக்க வேண்டும். குடும்ப மதிப்பீடுகள் இருக்க வேண்டும்.. என பல விசயங்கள் உண்டு. இதனை அனுபவமிக்க இயக்குநர்களுக்கு இயல்பானது. ஆனால் அபி போன்ற ஒரு புதுமுக இயக்குநருக்கு… இத்தகைய ஒரு பொறுப்புணர்ச்சி இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.‌

ஒரு கட்டமைப்புக்குள் இயங்குவது என்பது வேறு. ஒரு இயக்குநராக என்னுடைய குரல் இது என வெளிப்படுத்துவது வேறு. ஆனால் இயக்குநர் அபி தன் நிலைப்பாட்டை தெளிவாக சொன்னார். இந்தப் படம் என்னை சிந்திக்க வைத்தது. இதற்காக உங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் பணியாற்றியதை நான் ஆசீர்வாதமாகவே கருதுகிறேன்.

சசிகுமாரை இயக்குநராகவும், நடிகராகவும் பல கோணங்களில் ரசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் இணைந்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். பாடலாசிரியர் மோகன் ராஜன் என்னுடைய இனிய நண்பராக அறிமுகமானதற்கும் அவருடைய ஈசன் படத்தில் இடம்பெற்ற பாடல் தான். அதற்காகவும் உங்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றியை சொல்கிறேன்.‌ சசிகுமாரின் நடிப்பு இந்தப் படத்தில் ஸ்பெஷலாக இருக்கும். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். மகிழ்ந்தேன்.

பாடலாசிரியர் மோகன் ராஜன் – அவருடைய தமிழ் இந்த கால இளைஞர்களுக்கு அவசியமானது. புதுமை என்பது.. ஏற்கனவே இருந்ததன் தொடர்ச்சி தான். தமிழ் திரை உலகில் பணியாற்றுகிறோம். பாடலில் தமிழுக்கு இடமில்லை என்றால் எப்படி? இது போன்ற விசயத்தில் என்னைப்போல் உறுதியாக இருந்து பாடலில் தமிழை இடம்பெறச் செய்வதில் அவருக்கும் பங்கு உண்டு. நாங்கள் தங்கிலீஷிலும் பாடல் எழுதுவதுண்டு. இருந்தாலும் தமிழிலும் பாடல்கள் இடம்பெற வேண்டும். தமிழ் மொழியை காதில் கேட்க வேண்டும். ஏனெனில் தமிழ் ஒரு செம்மொழி. அவரும் நானும் சந்தித்து பேசத் தொடங்கினால்.. நேரம் செல்வதே தெரியாது. மகிழ்ச்சி நீடிக்கும்.

கலை என்பது மகிழ்ச்சியிலிருந்து தான் பிறக்கிறது. கலைஞர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் தான் அவர்களிடமிருந்து பிறக்கும் கலையும் மகிழ்ச்சியாக இருக்கும். கலை என்பது உட்கிரகித்தல் தான். ஒத்த சிந்தனை உள்ளவர்கள் இணையும்போது தான் நல்ல படைப்பு கிடைக்கும். இப்படத்தில் நடித்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படத்தை நீங்கள் தியேட்டரில் நன்றாக அனுபவித்து ரசிப்பீர்கள்.

இங்கு குடும்பத்திற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை பழைய விசயமாக பேசுகிறார்கள். இது தவறு. குடும்பங்கள் தான் நல்ல விசயங்களை நினைவு படுத்தும். என் குடும்பம் இல்லை என்றால் நான் இந்த தொழிலில் இருக்க முடியாது.‌ சில பேர் ‘குடும்பம் தானே தடையாக இருக்கிறது’ என்பார்கள். ஆனால் குடும்பம் தான் நமக்கு பக்க பலமாக இருக்கிறது. நீங்கள் தவறு செய்தால் முதலில் கேள்வி கேட்பது குடும்பம் தான். அதே தருணத்தில் நீங்கள் வீழ்ச்சி அடையும் போது உங்களை கை தூக்கி விடுவதும் குடும்பம் தான். அதனால் குடும்ப படங்களுக்கு வரவேற்பு அளிக்க வேண்டும்.

குடும்பங்களில் சினிமாவின் தாக்கம் அதிகம். அதனால் குடும்பத்தை பற்றிய சினிமாக்களின் எண்ணிக்கை குறையக்கூடாது. அந்த வகையில் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.

நாம் கொரிய நாட்டு திரைப்படங்களை பார்த்து ரசிக்கிறோம். எந்த மாதிரியான கொரியன் படங்களை பார்த்து ரசிக்கிறோம் என்பதை பாருங்கள். மொழி என்ற எல்லையை கடந்து மனித குடும்பத்திடம் பேசும் படங்களை தான் பார்த்து ரசிக்கிறோம். அந்த வகையில் டூரிஸ்ட் ஃபேமிலி தமிழ் படமா? என்று கேட்டால்.. ஆமாம் தமிழ் படம் தான். அதையும் கடந்து நம் மனித குடும்பத்திற்கு தேவையான அழகான கொண்டாடப்பட வேண்டிய கொண்டாட்டமான அன்புச் செய்தியை சொல்லப் போகும் சிறந்த படமாக இருக்கும் ” என்றார்.

நடிகர் சசிகுமார் பேசுகையில், ” படக்குழுவினர் மேடையில் இவ்வளவு விசயங்களை பேசுவார்கள் என நான் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் இது போன்ற மேடையில் தான் தங்களது நன்றியை தெரிவிக்க இயலும். படம் வெளியான பிறகும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதை மட்டும் அறிமுக இயக்குநருக்கு அறிவுரையாக சொல்கிறேன். நன்றி தெரிவிப்பது நல்ல விசயம்.

இந்த படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு முழு திருப்தி என்றாலும், ரசிகர்களிடம் கிடைக்கும் ஆதரவிற்காகத்தான் சற்று பதட்டத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன். படத்தைப் பற்றி படக்குழுவினரான நாங்கள் பேசுவதை விட.. படத்தை பார்க்கும் ரசிகர்களும், ஊடகங்களும் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

தயாரிப்பாளர்கள் இருவரும் நண்பர்கள். அந்த ஒரு காரணத்தினாலேயே அவர்களை எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அவர்கள் எடுத்த ‘குட்நைட்’ ‘லவ்வர்’ என்ற இரண்டு படங்களும் அனைவரும் ரசித்த படங்கள். அதனால் அவர்கள் கதையை தேர்வு செய்வதில் வல்லவர்களாக இருப்பார்கள் என நினைத்து, நான் தான் இந்த படத்தில் படத்திற்குள் வந்தேன். இது எனக்கு தான் பெரிய விசயம்.

கதை சொல்லும் போது இயக்குநர் என்னென்னவோ செய்து காண்பித்தார். நான் அதை கவனித்துக் கொண்டே இருந்தேன். இயக்குநருடன் வந்த தயாரிப்பாளர் யுவராஜ் ரியாக்சன் செய்து கொண்டே இருந்தார். நான் அவரையும் அமைதியாக கவனித்துக் கொண்டே இருந்தேன். இருந்தாலும் நான் இது போன்றதொரு நல்ல கதையை கேட்டு நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. என்னிடம் சொன்ன கதையை சிறிது மாற்றாமல் அப்படியே எடுத்திருக்கிறார்கள். இது இயக்குநர் அபியின் வெற்றியாக நான் நினைக்கிறேன்.

எனக்கு ஜோடியாக சிம்ரன் மேடம் நடிக்கிறார்கள் என்று சொன்னவுடன் உற்சாகமாகி விட்டேன். அவர்களுக்கும் இந்த கதை பிடித்திருந்தது. அதனால் நடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். எல்லோருக்கும் சிம்ரன் பிடிக்கும் இந்தப் படத்திலும் சிம்ரன் நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். அவர்களும் இந்தப் படத்தில் நன்றாக நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திலும் அவர் ஹீரோயின். நான் ஹீரோ. அதனால் அவர்கள் இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம்.

இந்தக் கதை எனக்கு ஏன் பிடித்தது என்றால் இந்த கதையின் நாயகன் ஈழத்தமிழ் பேசுபவன். ஈழத்திலிருந்து ஒரு குடும்பம் இங்கு வந்து எப்படி தங்களுடைய வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதை. இதை பார்க்கும் போது காமெடியாக இருக்கும்.

பொதுவாக ஈழத் தமிழர்களைப் பற்றிய படம் என்றால் அது சோகமாகவும், வலி மிகுந்ததாகவும் இருக்கும். ஆனால் இந்தப் படம் சந்தோசமாக இருக்கும். உங்களை – ரசிகர்களை சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கும். ஆனால் உள்ளுக்குள் ஒரு வலியையும் , விசயத்தையும் சொல்லிக்கொண்டே இருப்பார்கள். வலியை மறைத்து தான் நாம் சந்தோஷத்தை கொடுக்க முடியும். அந்த வகையில் இந்த குடும்பம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும்.

அவர்கள் அடுத்த தலைமுறையினருக்காக கஷ்டப்படுகிறார்கள். நாம் படும் கஷ்டங்கள் நம்முடைய தலைமுறையினர் படக்கூடாது. குழந்தைகளை சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள் . இதனால் தங்களுக்குள் உள்ள வலியை மறந்து- மறைத்து அவர்களுக்காக வாழ்கிறார்கள். இந்தப் படம் உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பொருந்தும். அனைவருக்கும் பொருந்தும்.

உலகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் இப்படத்தை பார்க்கும் போது நம்முடைய கலாச்சாரத்தையும், நம்முடைய தமிழ் மொழியையும் மறந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும். இந்த எண்ணம் குறைந்தபட்சம் பத்து பேருக்கு ஏற்பட்டாலும் வெற்றிதான். இதை உலகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் தங்களுடைய குடும்பத்துடன் வந்து பார்ப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இது ஒரு ஃபீல் குட் மூவி.

இயக்குநரிடம் இதற்கான இன்ஸ்பிரேஷன் எது? என்று கேட்டபோது அவர் ‘தெனாலி’ திரைப்படம் என்றார். அதனால் இந்தத் திரைப்படம் பார்க்கும்போது ‘தெனாலி’, ‘மொழி’ போன்ற படங்கள் நினைவுக்கு வரலாம் என நம்புகிறேன்.

இந்தப் படத்தில் என்னுடைய மூத்த மகனாக நடித்திருக்கும் மலையாள நடிகர் மிதுன் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் கமலேஷ் என ஒரு குழந்தை நட்சத்திரம் நடித்திருக்கிறார். அவர்தான் இந்த படத்திற்கு காமெடி. அவர்தான் உங்கள் அனைவரையும் சிரிக்க வைக்கப் போகிறார்.

இந்த படத்தில் பாடல்களும், இசையும் நன்றாக இருக்கிறது. இந்தப் படம் அன்பை போதிக்கிறது. மே மாதம் முதல் தேதி அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. வந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.