தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.
சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.
‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற கூட்டணி மீண்டும் ‘சூர்யா 43’ படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
சூர்யா -சுதா கொங்கரா – ஜீ.வி. பிரகாஷ் குமார் என தேசிய விருது பெற்ற கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால், ‘சூர்யா 43’ திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, அறிவிப்பு வெளியான நிலையிலேயே அதிகரித்திருக்கிறது.
நடிகை மாளவிகா மோகனன் தன் தனித்துவமான அடையாளத்தை திரையில் மட்டும் வெளிப்படுத்தாமல், சமூக வலைதள பக்கங்களிலும் காண்பித்து தன் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். இதைத் தொடர்ந்து ‘மாஸ்டர்’, ‘மாறன்’ ஆகிய படங்களில் நடித்து தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் திரைப்படங்களில் நடிப்பதுடன் சமூக வலைதள பக்கங்களில் தன்னைப் பின்தொடரும் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களுக்காக பிரத்யேக புகைப்படங்களை பதிவிட்டு அவர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார்.
அண்மையில் தன் வசீகரிக்கும் அழகுடன் கூடிய புகைப்படங்களை பதிவிட்டார். அதில் அவருடைய அசத்தலான அழகுடன் கருணை நிரம்பிய பார்வையும் இடம்பெற்றது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. மாளவிகா மோகனன் தனக்கான ரசிகர்களை கவர்வதற்கு பிரத்யேக வழியை பின்பற்றி ரசிகர்களை மகிழ்விக்கிறார். அவரது சமீபத்திய புகைப்படங்களில் தன்னுடைய வசீகரமான தோற்றத்தை அவர் பயன்படுத்தும் பாணி வித்தியாசமானதாகவே தெரிகிறது.
இதனிடையே நடிகை மாளவிகா மோகனன், தற்போது இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரமுடன் இணைந்து ‘தங்கலான்’ எனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
. Noted Tamil Actor Vikram Prabhu of Kumki fame recommended many youngsters to have regular healthy lifestyle and fitness routines to arrest cardiac complications .Cancer patient wins the first prize for uniquely amplifying heart health through his interesting Instagram reel.
Chennai, October 21, 2023 – Prashanth Hospitals, a leading super-speciality hospital in Chennai, successfully culminated its impactful ‘Save Young Hearts’ 2023 digital campaign, in continuation with the major hit campaign of 2022, designed to raise awareness about cardiac wellness and encourage healthy lifestyles among the youth to prevent cardiac complications and heart attacks. The grand finale event featured distinguished guests and renowned cardiologists from Prashanth Hospitals who delivered key insights on stress management, healthy eating, and lifestyle choices crucial for cardiac well-being. Grandson of the legendary actor Chevalier Sivaji Ganesan and well-known Tamil actor Vikram Prabhu of the national award winning Kumki and Tamil blockbuster Ponniyin Selvan fame, extended his heartfelt congratulations as the event’s chief guest to the award winners and participants of the short video contest, recognizing their outstanding creative contributions in promoting cardiac wellness and encouraging a heart-healthy lifestyle. Prashanth Hospitals’ team of expert cardiologists shared their perspectives on the pressing need to de-stress, adopt a balanced diet, and make positive lifestyle choices to safeguard against cardiac issues. Their insights shed light on the gravity of frequent cardiac arrests among young individuals in recent times. The event included a recognition ceremony for the winners of the short video/reels contest, who have demonstrated exceptional creativity in advocating for cardiac wellness and healthy living. Overall, there were a total of more than 100 entries that innovatively resonated the trending topic on Instagram which aided in creating a mega awareness amongst the targeted audience. The first prize was awarded to a cancer patient Mr. Sivamani Kannan with a handsome cash reward of Rs.1 lakh for brilliantly conveying the intended message by depicting the rising cardiac complications in a smart and impactful manner. The second prize Rs.50,000 was awarded to Mr. Jeevan for creating a compelling video on preventive measures for heart health. Dr. Prashanth Krishna, Managing Director of Prashanth Hospitals, Chennai, emphasized, “Our unwavering commitment is to protect the hearts of our youth and ensure a healthier future. Increased awareness and lifestyle changes are instrumental in preventing heart attacks. Engaging with young individuals and the broader social media community is the key. Through this competition, we aim to convey the message of preventing cardiac arrests and fostering a heart- healthy lifestyle. We are delighted by the overwhelming response to this campaign and the tremendous support from celebrity influencers.”
Addressing the audience on the significance of being aware and alert of cardiac wellness, Senior Cardiologist, Dr. Kathiresan commented “The healthy lifestyle changes should be imbibed right from the school. There should be a continuous campaign for the public by professional organisations and the government. Long term environmental changes are also needed. We must immediately seek medical help when we face even the slightest signs and symptoms of cardiac complications like a heart burn, radiating pain in hands and shoulders, and a sense of discomfort in the heart or breathing. “Prashanth Hospitals’ ‘Save Young Hearts’ digital campaign reached out to a wide audience across various social media platforms, empowering young individuals to take proactive steps in preventing cardiac complications. Given the growing concern of heart disease among the younger generation, the campaign’s mission was to educate, inspire change, and drive the importance of heart health through innovative social media initiatives. The Grand Finale of this campaign was organized at Crest Club, Phoenix Marketcity, Chennai. The “Save Young Hearts Reels Contest” served as a platform for open discussions, creative engagement, and debates focused on preventing the increasing incidents of heart attacks.
கட்டுமானத்துறையில் சுமார் 33 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டிய வில்லாக்களுக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, இந்நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் விரைவில் விற்பனையாகி விடுகிறது.
மேலும், நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நினைவாக்கும் விதத்தில் சென்னை சுற்றுவட்டாரத்தில் குறைந்த விலையில் ’ஒன் ஸ்கொயர்’ (One Square) என்ற பெயரில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்பு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால் மேல்தட்டு மக்களிடம் மட்டும் இன்றி நடுத்தர மக்களிடமும் இந்நிறுவனம் நம்பிக்கையை பெற்றுள்ளது.
சென்னை தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்களது வெற்றிகரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மூலம் தமிழகத்தின் நம்பிக்கைக்குரிய கட்டுமான நிறுவனமாக திகழும் ரூஃப்வெஸ்ட், தற்போது தமிழகத்தை கடந்து ஆந்திராவின் தடா உள்ளிட்ட தமிழகத்தை ஒட்டியுள்ள பிற மாநிலங்களிலும் கால்பதிக்க உள்ளது.
ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் இத்தகைய வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அந்நிறுவன ஊழியர்களை கெளரவிக்கும் விதத்தில், அவர்களை மகிழ்விக்க முடிவு செய்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஷாம் அவர்கள், ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் வழக்கமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களோடு, அவர்களை சர்ப்பிரைஸ்ப்படுத்தும் விதமாக, ஊழியர்கள் மற்றும் குடும்பத்தாரை சமீபத்தில் வெளியான விஜயின் ‘லியோ’ திரைப்படத்தை பார்க்க வைத்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், திரிஷா நடிப்பில் மிகப்பெரிய் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க விரும்புகிறார்கள். குறிப்பாக, விடுமுறை நாட்களில், டிக்கெட் கிடைக்காத நிலையில், தங்களது ஊழியர்களின் விருப்பம் அறிந்து அவர்களுக்கே தெரியாமல், இத்தகைய ஏற்பாட்டை ரூஃப்வெஸ்ட் நிறுவனம் செய்திருக்கிறது. அந்த வகையில், ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் அவர்களது குடும்பத்துடன் விஜயின் ‘லியோ’ திரைப்படத்தை பார்க்க வைத்து உற்சாகப்படுத்தியுள்ளனர்.
ஒரு திரைப்படம் பார்ப்பது சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், தற்போதைய விடுமுறை நாளில், இதுபோன்ற ஒரு நிகழ்வை உருவாக்கி கொடுத்து ஊழியர்களை உற்சாகப்படுத்தியிருக்கும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம், எதிர்காலத்தில் ஊழியர்களுக்காக பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறது.
அந்த திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ள ரூஃப்வெஸ்ட், தங்களது தரத்தால் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது போல், தங்களது ஊழியர்களையும் குஷிப்படுத்துவதை தங்களது நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
200 women bikers hit the road to spread awareness on breast cancer
Chennai, 22nd October 2023: Kauvery Hospital Alwarpet and Vadapalani Chennai, a unit of Kauvery Group of Hospitals, a leading multispecialty healthcare chain in Tamil Nadu organized a bike rally along with Women Motosport Club, to create awareness on breast cancer. The rally was flagged off from Kauvery Hospital Vadapalani by Thiru Prabhakara Raja, MLA Virugambakkam Constituency and Thiru Suresh Kumar, IAS and Mr Kingsley Director of Operations, Kauvery Hospital Vadapalani. The rally culminated at RA Puram Corporation Playground where the bikers were felicitated.
“Almost 60% of women visit the hospital when they have reached the advanced stage of cancer. It is important to be aware of the early signs and symptoms of breast cancer to help in early diagnosis and better outcomes. Therefore, every year the aim is to create awareness on early detection, symptoms/signs and self-examination. We are pleased to associate with Women Motosport Club for the noble initiative, Dr Iyappan Ponnuswamy Medical Director Kauvery Hospital Chennai.
“Kauvery Hospital has been at the forefront of diagnosing and treating cancers across all age groups. The Kauvery Cancer Institute is equipped with highly trained surgical, medical and radiation oncologists who provide advanced care with state of the art infrastructure. We also believe that prevention is better than cure, and as part of our commitment and giving back to the society we have been organizing awareness initiatives which also includes free mammogram screening in different regions of the state.,” said Dr Aravindan Selvaraj Co-Founder and Executive Director Kauvery Group of Hospitals.
The event was presided over by Thiru Ma Subramaniam, Hon’ble Minister of Healthy and Family Welfare Govt of Tamil Nadu, Thiru Dayanidhi Maran , Member of Parliament and Secretary DMK Sports Wing, Thiru Mylai Dha Velu, MLA , Mylapore Constituency., Dr AN Vaidhyswaran, Senior Consultant and Director Radiation Oncology Kauvery Hospital Main Alwarpet , Dr Mahesh Kumar Medical Superintendent Kauvery Hospital Alwarpet, Thirumathi C Latha. Secretary Tamil Nadu Athletic Association Joint Secretary , Athletic Federation of India and Ms Nivetha Jessica President, Women Motorsport Club.
A Mammogram Van was also stationed at the program to encourage screening for breast cancer.
நடிகர் விஷால் அவர்களால் தமிழ் சினிமாவுக்கு விடியல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவி வகித்தும், நடிகர் சங்க செயலாளராகவும் இருந்தும் தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் இவரது நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் மார்க் ஆண்டனி. தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளிவந்த இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அதே சமயம் இந்தியில் வெளியிடுவதற்க்கு சென்சார் சர்டிபிகேட்டுக்காக மும்பையில் CBFC யில் விண்ணப்பித்த போது அங்கு உள்ள அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை நடிகர் விஷால் வன்மையாக கண்டிக்க பாரத பிரதமர் மற்றும் மகாராஷ்டிரா முதல்வர் அவர்களுக்கு தெரியப்படுத்தி வேண்டுகோள் வைத்தார், அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பென்டு செய்து உத்தரவிட்டார்கள். மேலும் இது தொடர்பான வழக்கை மும்பை CBCID விசாரித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது தமிழ் படங்களை இந்தியில் வெளியிட சென்சார் சர்டிபிகேட் வாங்கும் முறையில் அதிரடி மாற்றத்தை கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. இதுவரை மும்பையில் மட்டுமே இந்தியில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு சென்சார் சர்டிபிகேட் வழங்கப்பட்டு வந்த நிலையில் இனி தமிழகத்திலேயே பெற்று கொள்ளலாம் என அதிரடியாக அறிவித்துள்ளனர்.
இனி எந்த தயாரிப்பாளரும் தமிழ் திரைப்படங்களுக்கு மும்பை சென்று CBFC யை அனுகவேண்டிய அவசியம் இல்லை
தமிழ் மொழியுடன் சேர்த்து ஏற்கனவே தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளுக்கு தமிழகத்திலேயே சென்சார் சர்டிபிகேட் பெற்று கொள்ளும் வசதி இருந்து வந்த நிலையில் தற்போது இந்தி மொழி ரிலீஸ்க்கும் இந்த முறை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஷால் அவர்களால் ஏற்பட்ட இந்த மாற்றம் தமிழ் சினிமாவுக்கு, தயாரிப்பாளர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகவே பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் நடிகர் விஷால் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் கூறி பாராட்டி வருகின்றனர்.
நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் முதல் தயாரிப்பான ‘பிரமயுகம்’ அதன் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது. ‘பிரமயுகம்’ ஆகஸ்ட் 17, 2023 முதல் ஒட்டப்பாலம், கொச்சி, அதிரப்பள்ளி போன்ற இடங்களில் பிரம்மாண்டமாக படமாக்கப்பட்டது.
2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடுவதை நோக்கமாகக் கொண்ட படக்குழு இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக உள்ளது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மிக விரைவில் படத்தின் மார்க்கெட்டிங் பணிகளைத் தீவிரமாக தொடங்கவுள்ளது.
‘பிரமயுகம்’ மிகவும் எதிர்பார்க்கப்படும் பன்மொழி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் மம்முட்டியின் தோற்றம் அடங்கிய போஸ்டர் செப்டம்பரில் வெளியானதில் இருந்து, ரசிகர்கள் இந்தப் படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக, மம்முட்டியின் சமீபத்திய வெளியீடான ‘கண்ணூர் ஸ்காவ்ட்’ படம் வெற்றிப் பெற்றதும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க முக்கியக் காரணம்.
மம்முட்டி நடிப்பில், ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ள மலையாளத் திரைப்படம் ‘பிரமயுகம்’. ஹாரர்- த்ரில்லர் படங்களைத் தயாரிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட பேனரின் கீழ் தயாரிக்கப்படுகின்ற முதல் திரைப்படமாக ‘பிரமயுகம்’ அமைந்ததில் நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் பெருமை கொள்கிறது. நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் YNOT ஸ்டுடியோஸ் இணைந்து ‘பிரமயுகம்’ படத்தை வழங்குகின்றன.
சக்ரவர்த்தி ராமச்சந்திரா & எஸ்.சஷிகாந்த் தயாரித்த ‘பிரமயுகம்’ படத்தில் அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன் மற்றும் அமல்டா லிஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில்ள நடித்துள்ளனர். மேலும் ஷேனாத் ஜலால் ஒளிப்பதிவாளராகவும், ஜோதிஷ் ஷங்கர் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் ஷஃபிக் முகமது அலி எடிட்டராகவும் கிறிஸ்டோ சேவியரிடர் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர். படத்திற்கு டி.டி.ராமகிருஷ்ணன் வசனம் எழுத, ரோனெக்ஸ் சேவியரின் ஒப்பனை மற்றும் மெல்வி ஜே ஆடைகளையும் கவனித்துள்ளனர்.
Chennai, India – October 20th, 2023 – Celebrating the cultural richness of Navaratri and the artistic expression of Golu, Navin’s, the most trusted and respected real estate brand of Chennai, today announced an exciting Navaratri Golu contest. This contest is a testament to Navin’s commitment to honoring the cultural heritage of Chennai and the deep-rooted traditions that make Navaratri such a cherished time of the year. In line with this, Navin’s invites participants from all over Chennai to showcase their creativity through the create their own distinctive and captivating Golu arrangement in the comfort of their homes till the 24th October, Tuesday. With this competition, Navin’s offers a chance to let their imaginative skills shine as they carefully set up dolls and figurines that pay homage to the cultural significance of Navaratri. Once their Golu display is ready, individuals are required to capture a photo or short video of their creation and share it on Instagram , tagging @navinshousing mentioning their name, apartment name and apartment number; while also including the hashtag #Navin’sGolu in their social media post. Post meticulously reviewing the submissions, the top three Golus will be chosen based on their creativity, and uniqueness. These lucky winners will be honored with exciting gift vouchers and have their Golu displays featured on Navin’s official social media pages. Besides this, they will also have their Golu showcased by a popular influencer. Join us in our celebrations and share your Golu displays with us, as part of this cultural extravaganza. Let us come together to live in the traditions and creative expressions that make Chennai a vibrant and culturally rich city. For further queries , please contact – 7305392777
As part of World Dentist’s Day activations, Sensodyne aims to emphasize the importance of
oral health and dentists through these camps.
20th October 2023, Chennai: Sensodyne, a leading oral care brand from the house of Haleon (erstwhile GlaxoSmithKline Consumer Healthcare), is organizing a series of free dental camps across India in October 2023 as part of its World Dentist’s Day activations. With these camps, Sensodyne aims to provide free quality access to pro-active dental care, showcasing the importance of oral health and thereby the criticality of dentists, in our everyday lives. Sensodyne is organizing a total of 500+ free dental camps across community centres, non-metro areas, dental colleges, and regular dental clinics, in multiple cities across India. By doing these camps, Sensodyne is providing support to over 25,000 patients, enabling them to be more aware about their oral health and conditions such as sensitivity, gum health, cavities, and enamel erosion. By setting up these free camps, Sensodyne is trying to enable better access for dental care. These camps will be hosted in multiple locations with renowned dentists in Chennai, targeting hundreds of patients and creating awareness on basic dental hygiene and oral care by encouraging Indians to be sensitive towards their oral health. The details are as follows:
The camps will also aim to educate consumers on the importance of incorporating oral hygiene into one’s daily self-care routine and raise awareness about common dental conditions like tooth sensitivity, gum problems, cavities, enamel erosion etc., and how to manage them. With multiple such dental camps across India, Sensodyne is bringing together Indians from all corners of the country to thank dentists for their contributions on World Dentist’s Day. Commenting on this multi-city initiative, Ms. Bhawna Sikka, Category Head – Oral Healthcare, Haleon India, said, “Oral health is crucial for our overall health and wellbeing, making regular oral health check-ups very important for all individuals. As part of our campaign on World Dentist’s Day, Sensodyne aims to highlight the importance of proactive oral care and regular dentist visits for our complete wellbeing. With these dental camps, Sensodyne aims to provide free access to quality dental care, while also emphasizing the pivotal role that dentists play in our daily lives. We wish to thank our dentists for always looking after our oral health, enabling us to enjoy life to the fullest at all ages.”
விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன் மற்றும் பலர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் மேற்பார்வையில் , சண்டை இயக்குனர் அன்பறிவு இயக்கத்தில் ,அனிருத் இசையில் வெளிவந்திருக்கும் திரைப்படம் லியோ.
கதைச்சுருக்கம்,
மிகப்பெரிய போதைப் பொருள் கடத்தல் காரரான சஞ்சய் தத் அவருடைய தம்பி அர்ஜுன் இவர்களின் கடத்தல்களுக்கு உறுதுணையாக இருப்பது சஞ்சய் தத்தின் இரட்டை பிள்ளைகளான விஜயும் மடோனா செபாஸ்டினும், செய்யும் கடத்தலுக்கு கண்மூடித்தனமாக பல கொலைகளை செய்து அவர்கள் கடத்தலுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.மூடநம்பிக்கையில் மூழ்கி போன சஞ்சய்தத் ஒரு கட்டத்தில் தன் மகளையும் மகனையோ நரபலி கொடுத்தால் தனது கடத்தல் தொழில் மேலும் மேலும் வளரும் என்று நம்பி,யோசித்து மகளை நரபலி கொடுக்க முடிவு செய்கிறார் இதற்கு அர்ஜுனும் துணை போகிறார், இந்நிலையில் ஏற்கனவே பல கொலைகளை கண்மூடி தனமாக செய்யும் விஜய்யும் மடோனாவும் இதற்கு பயப்படுகிறார்கள். விஜய் எவ்வளவோ முயற்சி செய்தும் மடோனா கொல்லப்படுகிறார்.இதனால் அந்த ஒரு நிமிடத்தில் வாழ்க்கையே வெறுத்துப் போன விஜய் அந்த நிமிடத்தில் இருந்து திருந்தி நல்லவனாக வாழ முடிவு செய்து அந்த போதைப் பொருள் குடோனையே கொளுத்தி விட்டு தானும் இறந்துவிட்டதாக நாடகமாடி, திரிஷாவை கல்யாணம் செய்து கொண்டு காஷ்மீரில் ஒரு டீக்கடை வைத்து தான் உண்டு தன் இரண்டு குழந்தைகள் உண்டு என்று வாழ்ந்து வருகிறார். இவர் உயிருடன் இருப்பதை தெரிந்து அப்பாவும் சித்தப்பாவும் அவரை மீண்டும் கடத்தல் தொழில் இழுக்க நினைக்க, மீண்டும் ஒரு அவதாரம் எடுத்து அவர்களை அழிக்கிறார் இதுதான் படத்தின் கதை.
காஷ்மீரில் வசிக்கும் விஜய் அங்கு ஒரு பள்ளியில் வெறிபிடித்த ஹைனா ஒன்று நுழைந்து விட அதை காவலர்கள் சுட்டுக்கொன்றுவிட பார்க்க விஜய் லாவகமாக அதை பிடித்து தத்து எடுத்து வளர்க்கிறார் அதற்கு சுப்பிரமணி என்று பெயர் வைத்து பெயர் வைத்து இந்த ஒரு காட்சி மட்டுமே படத்தின் ஆரம்பத்தில் கிட்டத்தட்ட கால் மணி நேரத்திற்கு வருகிறது ஏன்டா இதற்கு எவ்வளவு நேரம் வருகிறது என்று பார்த்தால் கிளைமாக்ஸில் மீண்டும் ஒரு ஐந்து நிமிடம் வந்து விஜய்க்கு உதவி செய்கிறதாம் அந்த ஹைனா. படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டுமே வசனம் பேசி நடிக்கிறார் விஜய். படம் முழுவதும் கும்பல் கும்பலாக வருகிறார்கள் விஜயிடம் குத்தப்பட்டு செத்துப் போகிறார்கள். ஒரு சண்டையில் திடீரென துப்பாக்கி எடுத்து விஜய் ஐந்து பேரை மிக சரியாக சுட்டு கொன்று விடுகிறார். ஆனால் கோர்ட்டில் அது சென்று மேலும் அவர்கள் ஒரு கொள்ளையர்கள் என்றும் கூறி அசால்டாக விடுதலை செய்து விடுகிறார்கள். சரி படம் எப்பொழுதாவது ஆரம்பித்து விடும் என்று நினைத்தால் அதன்பிறகு கும்பல் கும்பலாக வருகிறார்கள் வெறும் சண்டை காட்சிகளாகவே உள்ளது படத்தில் ஒரு சில சீன்களில் மட்டும் விஜய் நடிக்க செய்கிறார்.
திரிஷா இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்தாலும் வயது ஆக ஆக இளமை கூடிக் கொண்டே செல்கிறது திரையில் அவ்வளவு அழகாக.
சஞ்சய் தத் மெயின் வில்லன், அர்ஜுன் தம்பி வில்லன் அவர்களின் காட்சிகள் மிகவும் அழுத்தமாகவும் கொடூரமாகவும் இருக்கும் என்று எதிர்பார்த்தால், ஏதோ சிரிப்புதான்.
விஜயின் நண்பராக ,பாரஸ்ட் ரேஞ்சராக வரும் கௌதம் வாசுதேவன் இவ்வளவு மக்கு போலீசாக இருப்பார் என்று எதிர்பார்க்கவே இல்லை எதிர் பார்க்கவே இல்லை
மன்சூர் அலிகான் அலிகான் அவர் அவராகவே வருகிறார் அவரது நடிப்பு வழக்கம் போலவே. கைதி படத்தில் பிரமோஷன் வாங்கின கான்ஸ்டபிள் இங்கு விஜய் வீட்டுக்கு காவலாளியாக மாற்றலாகி வருகிறார். அனுராக் காஷ்யப் இரண்டு நிமிடங்கள் வந்து விஜய் கையால் சுடப்பட்டு செத்துப் போகிறார் . படத்தில் மேலும் ஏகப்பட்ட நடிகர்களை போட்டு அவர்களின் என்ன சீன் வைப்பது என்று தெரியாமல் குழம்பி ஏதோ செய்து விட்டார் லோகேஷ் கனகராஜ்.
அனிருத்தின் இசை வழக்கம் போல காட்டு கத்தலுடன் வருகிறது.
ஒளிப்பதிவு ஒளிப்பதிவு நிறைய காட்சிகளுக்கு சிஜி தேவை என்று தெரிந்தும் ஏனோ ஒளிப்பதிவில் சொதப்பி இருக்கிறார்கள் சிஜி காட்சிகளும் சொதப்பி இருக்கிறார்கள்.
இப்படி பல வெட்டு குத்துகள் பல கொலைகள் என்று படம் முடிந்ததும் கமலஹாசனின் குரலில் விக்ரம் படத்தின் தொடரச்சியாக இந்த படம் இருக்கும் என்று அவரது குரலில் ஒரு வசனத்தை போட்டு நம்மை தியேட்டரை விட்டு கிளம்ப வைக்கிறார்கள்.