தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் தயாராகி, வரும் 21ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டிராகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது.
‘ஓ மை கடவுளே’ புகழ் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், வி ஜே சித்து, ஹர்ஷத் கான், மரியம் ஜார்ஜ், இந்துமதி மணிகண்டன், தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்திருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்திய இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராக பணியாற்றியிருக்கிறார்.
படத்தின் முன்னோட்டம் வெளியானதை தொடர்ந்து சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி, இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, இயக்குநர்-நடிகர் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். வருகை தந்திருந்த பத்திரிகையாளர்களை ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரங்கராஜ் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ”எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘திருட்டுப்பயலே’ படத்திலிருந்து தற்போது உருவாகி இருக்கும் ‘டிராகன்’ திரைப்படம் வரை தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து ஊடகங்களுக்கும், முதலில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ‘டிராகன்’ எங்களுக்கு ஒரு முக்கியமான படம். என்னுடைய ஃபேவரைட்டான படமும் கூட என்று சொல்லலாம். இந்தப் பயணம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தது. பிரதீப் ரங்கநாதனுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறோம். இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவுடன் முதல் முறையாக பணியாற்றி இருக்கிறோம். நல்லதொரு உள்ளுணர்வுடன் டிராகனை தயாரித்திருக்கிறோம். படத்தின் முன்னோட்டத்தை பார்த்திருப்பீர்கள். இதைவிட படத்தில் நிறைய நல்ல அம்சங்கள் இருக்கின்றன. படத்தைப் பார்த்து அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ”தமிழில் இது என்னுடைய இரண்டாவது படம். ஓ மை கடவுளே படத்திற்குப் பிறகு ஐந்தாண்டுகள் கழித்து மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறேன்.
‘ஓ மை கடவுளே’ படத்திற்கு ஊடகங்கள் வழங்கிய ஆதரவு காரணமாக அந்த படம் வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்திற்குப் பிறகு நான் தெலுங்கு திரையுலகில் பணி புரிந்தேன். மீண்டும் இங்கு வந்து இப்படத்தை இயக்கி இருக்கிறேன்.
‘ஓ மை கடவுளே’ படத்தில் சமூக பொறுப்புடன் கூடிய விஷயங்கள் இருந்தது போலவே, சமூக பொறுப்புடன் ‘டிராகன்’ திரைப்படத்திலும் பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஒரு இயக்குநராக ‘டிராகன்’ படத்தில் என்ன சொல்ல வந்திருக்கிறோம் என்பதில் பத்து சதவீதம் தான் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருக்கிறது. திரையரங்கத்திற்கு வருகை தரும் ரசிகர்களுக்கு எதிர்பாராத வகையில் நல்லதொரு அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக ஏனையவற்றை மறைத்திருக்கிறோம்.
நான் சொன்ன கதையை நம்பி ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா மேடம் ஆகியோர் வாய்ப்பளித்திருக்கிறார்கள். அதற்காக முதலில் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை உருவாக்குவதற்கு எனக்கு முழு சுதந்திரத்தை வழங்கினார்கள். நான் சொல்ல நினைத்ததை திரையில் உருவாக்குவதற்கு ஆதரவளித்த அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
படத்தின் நாயகனான பிரதீப் ரங்கநாதனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். இந்த படத்திற்கான அடித்தளத்தை பத்தாண்டுகளுக்கு முன் நாங்கள் பேசி இருக்கிறோம். அதன் பிறகு அது குறித்து நிறைய கனவு கண்டோம். இன்று அதனை திரையில் கொண்டு வந்திருக்கிறோம் இதற்காக நாங்கள் எங்களை தகுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
பிரதீப் ரங்கநாதன் எனும் என்னுடைய நண்பனை இந்த திரைப்படத்தில் நான் இயக்கவில்லை. ‘லவ் டுடே’ எனும் நூறு கோடி ரூபாய் வசூல் செய்த நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதனை தான் நான் இயக்கியிருக்கிறேன். இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறேன். இருவரும் நண்பர்கள் என்ற எல்லையை கடந்து தொழில் ரீதியாக நேர்த்தியாக உழைத்திருக்கிறோம். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறேன். ரசிகர்களுடன் திரையரங்கத்தில் சந்திப்போம்,” என்றார்.
இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ”திரையுலகில் ஊடகங்களும் மக்களும் எனக்கு வழங்கியிருக்கும் இந்த இடத்தை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். இதற்காக ஊடகத்தினருக்கும் மக்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘லவ் டுடே’ படத்திற்குப் பிறகு என்ன மாதிரியான கதைகளை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் இருந்தது. ஏனெனில் என் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதுபோன்ற தருணத்தில் தான் எனக்கு ‘டிராகன்’ படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன். ‘லவ் டுடே’ படத்தின் மூலம் என்னை கதையின் நாயகனாக ஏஜிஎஸ் நிறுவனம் தான் அறிமுகப்படுத்தியது. அதற்காக அந்த நிறுவனத்திற்கு நான் என்றென்றும் நன்றியை தெரிவித்துக் கொண்டே இருப்பேன்.
‘ஓ மை கடவுளே’ எனும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த இயக்குநருடன் இணைந்து, அவருடைய இரண்டாவது படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு பிறகு தான் என்னுடைய 10 ஆண்டுகால நண்பரின் இயக்கத்தில் நடிக்கிறேன் என சொல்லலாம்.
நாங்கள் இருவரும் நட்பையும், தொழிலையும் தனித்தனியாக பிரித்து வைத்து தான் பழகுகிறோம். அதனால் நட்பு என்றால் நட்பு …! வேலை என்றால் வேலை..! இதில் எந்த குறுக்கீடும் இருக்காது. இந்தப் படம் அற்புதமாக வந்திருக்கிறது. தொடர்ந்து அனைத்து தரப்பினரின் ஆதரவும் கிடைக்கும் என உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.
‘டிராகன் ‘ படத்தின் முன்னோட்டத்தில் இடம்பெறும் காட்சிகளில் இளமை குறும்பு – கல்லூரியில் சீனியர் மாணவர்களின் அட்ராசிட்டி – நாயகனின் கெத்து – கௌதம் வாசுதேவ் மேனனின் நடனம்- மிஷ்கினின் நடிப்பு- அனுபமா பரமேஸ்வரனின் கவர்ச்சி – கயாடு லோஹரின் காதல் பேசும் கண்கள்- என ரசிக்கும் படியான காட்சிகள் ரசனையுடன் இடம் பிடித்திருப்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் 21ம் தேதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்தினை ‘முதல் நாள் முதல் காட்சி’யிலேயே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
Yamaha blends style, performance, and excitement with pop culture at Chennai Comic Con 2025
India Yamaha Motor Pvt. Ltd. took centre stage at Comic Con, India’s biggest pop culture event, held on February 8–9, 2025, at the Chennai Trade Centre, Nandanbakkam, Chennai. With its rich cultural heritage, dynamic automotive industry and passionate fan community, the city provided the perfect setting for an electrifying event where art, lifestyle and innovation came together in a spectacular celebration.
The Yamaha Experience Zone was the major highlight in the event, featuring immersive activities that captivated attendees. Visitors enjoyed the MotoGP gaming setup, immersing themselves in the adrenaline of virtual racing. The Samurai-themed MT-03 became a favourite photo spot, while the YZF-R15 provided the unique experience of posing at a dramatic lean angle, simulating the rush of a racetrack corner. Adding to the excitement, the RayZR Street Rally featured instant photo-sharing, allowing fans to capture and take home their cherished memories.
The event saw significant engagement, with visitors showing keen interest in motorcycling and expressing their fandom for Yamaha. In response, the company offered Comic Con Super Fan Box and Yamaha’s exclusive Comic Con themed merchandise, along with other Yamaha goodies to the most engaging cosplayers as well as comics and motorcycling enthusiasts.
As Chennai Comic Con 2025 comes to an end, Yamaha reiterates its dedication to crafting innovative experiences that resonate profoundly with the youth of India. Events like Comic Con not only highlight Yamaha’s standing as a premium and dynamic motorcycle brand but also strengthen its connection with young Indians by blending the thrill of motorcycling with the vibrant spirit of pop culture. Yamaha remains dedicated to inspiring and engaging individuals, fostering a community of lifelong enthusiasts for generations to come.
நடிகர் ரியோ ராஜ் நடித்திருக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ ஆஸம் கிஸா..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட்ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ‘ ஆஸம் கிஸா..’ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர்கள் கெலி தீ மற்றும் கானா ஃபிரான்ஸிஸ் ஆகியோர் எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆஃப்ரோ ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டீசர் , ட்ரெய்லர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா – ஸ்வினீத் எஸ். சுகுமார்- ஆஃப்ரோ கூட்டணி திரையிசை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடும் வகையில் வைப்( Vibe)பான பாடலாக ..’ ஆஸம் கிஸா..’ உருவாகி இருப்பதால் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
ஒரு பரபரப்பான மனதைக் கவரும் ஒரு க்ரைம் திரில்லரான சுழல்—தி வோர்டெக்ஸ் சீசன் 2, தொடரின் கதைக்களம் காளிபட்டணம் என்ற ஒரு சிறிய கற்பனை கிராமத்தில் தொடங்கி காட்சி ரீதியாக பிரமிக்க வைக்கும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டத்தின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது,
புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு, பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் உருவான சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2, குடும்ப உறவுகள், காதல், தியாகம் மற்றும் மனித உணர்வுகளின் இயக்க கூறுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு க்ரைம் திரில்லர் ஆகும்.
இந்த தொடரில் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்கள் உட்பட லால், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், அஸ்வினி நம்பியார் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் அடங்கிய ஒரு மிகப்பெரிய திறமை வாய்ந்த நட்சத்திரப் பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர்
சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.
மும்பை, இந்தியா—பிப்ரவரி 11, 2025—இந்தியாவின் மிகவும் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சன ரீதியாக ஏகோபித்த பாராட்டுக்களை பெற்ற அதன் ஒரிஜினல் க்ரைம் த்ரில்லர் தொடர் சுழல்-தி வோர்டெக்ஸ் இன் இரண்டாவது சீசன் பிப்ரவரி 28 அன்று வெளியிடப்படவிருப்பதை இன்று அறிவித்துள்ளது. விருது வென்ற இந்தத் தொடரின் புதிய சீசனின் கதைக்களம், தமிழ்நாட்டில் காளிபட்டணம் என்ற கற்பனை கிராமத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் அஷ்டகாளி திருநாள் கொண்டாட்டங்களின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. புஷ்கர் (Pushkar) மற்றும் காயத்ரி ( Gayatri) ஆகியோரின் எழுத்தில் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, பிரம்மா ( Bramma) மற்றும் சர்ஜுன் KM (Sarjun KM) இயக்கத்தில் உருவான இந்தத் தொடரில், கதிர் ( Kathir ) மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ( Aishwarya Rajesh) மீண்டும் முன்னணி வேடங்களில் தோன்றி நடிக்க அவர்களுடன் லால், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர் மற்றும் அஸ்வினி நம்பியார் ஆகியோரும் மேலும் (Lal, Saravanan, Gouri Kishan, Monisha Blessy, Samyuktha Vishwanathan, Shrisha, Abhirami Bose, Nikhila Sankar, Rini, Kalaivani Bhaskar, மற்றும் Ashwini Nambiar) மஞ்சிமா மோகன் மற்றும் கயல் சந்திரன் ( Manjima Mohan and Kayal Chandran} ஆகியோரும் இணைந்து சிறப்பு வேடத்தில் தோன்ற ஒரு மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே முக்கியவேடங்களில் தோன்றி நடித்திருக்கிறார்கள். முதல் சீசனின் அதிரடியான இறுதிக் கட்டத்தில் சிறையில் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கும் நந்தினி (ஐஸ்வர்யா) தோன்றும் காட்சியுடன் இந்த இரண்டாவது சீசன், அதே விறுவிறுப்புடன் தொடங்குகிறது, அதே சமயம் சக்காரி (கதிர்) ஒரு மர்மங்களால் சூழப்பட்ட வரலாற்றைக் கொண்ட கிராமத்தை சென்றடைகிறார். ஆனால் எதிர்பாராது நிகழும் ஒரு கொலையால் அந்த கிராமமும், கிராம மக்களும் அதிவேகமாகப் பரவும் இருண்ட சூழலுக்குள் தள்ளப்படுகிறார்கள் இந்தத் தொடர் இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள 240 க்கும் அதிகமான நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிப்ரவரி 28 அன்று பிரத்தியேகமாக பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஆங்கில சப் டைட்டில்களுடன் ஒளிபரப்பாகிறது .
மனதை பதைபதைக்கச்செய்யும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரான சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2, அதன் அழுத்தமான கதைக்களம் மற்றும் ஆற்றல் மிக்க உணர்ச்சிகரமான நடிப்பாற்றலுடன் ஒரு விறுவிறுப்பான கதையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. குடும்ப உறவுகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல் மற்றும் அச்சம் போன்ற உணர்வு பூர்வமான கருப்பொருள்களுடன் பின்னிப்பிணைந்த இந்த சீசனின் கதைக்களம் சிக்கல் நிறைந்த புதிரான காளிபட்டணத்தின் சமூகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு மரணத்தைச் சுற்றி வலம் வருகிறது. மேலும் ஒரு புதிய மர்மத்தையும் கட்டவிழ்க்கிறது. அதே வேளையில் அதன் ஆழத்தில் மறைந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத விசயங்களையும் வெளிக்கொண்டு வருகிறது . மனித உளவியலின் ஆழங்களையும், மற்றவர்களுடனான தனிநபர்களின் முரண்பாடுகளையும் பிரதிபலிக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2, பார்வையாளர்களை எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் திடுக்கிடும் மாற்றங்கள் நிறைந்த ரகசியங்கள் மற்றும் பொய்களால் சூழப்பட்ட ஒரு உலகத்திற்குள் கொண்டு சென்று இறுதி வரை அவர்களை இருக்கையின் ஒரு விளிம்பில் வைக்கிறது.
“பிரைம் வீடியோவில், உலகெங்கிலும் உள்ள பல்வேறு வகைப்பட்ட பார்வையாளர்கள் அனைவரோடும் ஒரு சேர ஒத்திசைந்து ஈர்க்கக்கூடிய கருத்தாழமிக்க அதை சமயம் உண்மையான உள்ளூர் கதைகளை உருவாக்குவதே எங்களின் இடைவிடாத முயற்சியாக இருக்கிறது அந்த வகையில் உள்ளூர் கதைகள் உலக அளவிலான மக்களை சென்றடைந்து , பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து ஏகோபித்த பாராட்டுக்களை சுழல் – தி வோர்டெக்ஸ் முதல் சீசன், பெற்றிருப்பது அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.,” என்று பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் இந்தியா, தலைவர் நிகில் மதோக் கூறினார். மேலும் அவர் கூறியதாவது “வால்வாட்சர் பிலிம்ஸ் உடனான இந்த வெற்றிகரமான கூட்டணியை உருவாக்கி, இந்த ஆரவாரமான தொடரின் இரண்டாவது சீசனை வழங்குவதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம். தங்கள் துறையில் தலைசிறந்த நிபுணர்களாக திகழும் புஷ்கர் மற்றும் காயத்ரி, இருவரும் மர்மம் நிறைந்த த்ரில்லர்- பிரிவில் கலாச்சாரப் பின்னணியோடு கதைகளை உருவாக்குவதில் விற்பன்னர்களாகத் திகழ்கிறார்கள் மேலும் இந்த இரண்டாவது சீசனும் எங்களின் பார்வையாளர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றார்.
வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பின் கீழ் இந்தத் தொடரை உருவாக்கி வழங்கிய – கதாசிரியர்கள் , படைப்பாளிகளான புஷ்கர் மற்றும் காயத்ரி கூறினார்கள் “வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி ஐத் தொடர்ந்து எங்களது இரண்டாவது கூட்டு முயற்சியான சுழல் – தி வோர்டெக்ஸ் -முதல் சீசன் க்கும் கிடைத்த மாபெரும் வரவேற்பு, அன்பு மற்றும் பாராட்டுக்கள் ஒரு மனதை ஈர்க்கக்கூடிய கதைக்களத்தை கொண்ட உள்ளூர் கதைகள் வடிவங்கள், பிராந்தியங்கள் மற்றும் மொழியறிவையும் கடந்து அனைவரையும் சென்றடைய ஸ்ட்ரீமிங் எவ்வாறு வழிவகுத்தமைத்துத் தந்திருக்கிறது என்பதற்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும் சுழல் – தி வோர்டெக்ஸ் உலகை மேலும் விரிவடையச்செய்யும் வகையில் ஒரு கற்பனைக் கிராமத்தின் பூர்வீக குடிகளின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஒரு இருளடைந்த மர்மமான மற்றும் மனதை சில்லிடவைக்கும் ஒரு கிரைம் மற்றும் அஷ்டகாளி திருவிழாவின் கண்கொள்ளாக் காட்சிகளுடன் ஆழமாகச் சென்று அதன் இரண்டாவது சீசனை நாங்கள் வடிவமைத்தோம், பிரம்மா மற்றும் சர்ஜுனின் உன்னதமான இயக்கம், கதிர், ஐஸ்வர்யா மற்றும் லால் ஆகியோரின் அற்புதமான திறமை மிக்க நடிப்பாற்றல் ஆகியவற்றுடன் அனுபவம் வாய்ந்த மற்றும் புதிய திறமைகளின் மாறுபட்ட கூறுகளின் கலவையான திறமை மிக்க நடிகர்களின் குழுவோடும், இந்தத் தொடர் பரந்த அளவிலான பார்வையாளர்களை ஈர்க்கக் கூடிய வகையிலான உள்ளூர் கதைசொல்லலின் பல்துறைத்திறனுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. பிரைம் வீடியோவுடன் கூட்டணி அமைத்து இந்த கிளையுரிமையை கட்டியெழுப்புவதில் நாங்கள் பெரு மகிழ்ச்சியடைகிறோம், அவர்கள் இதன் மூலம் படைப்பாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு மட்டுமல்லாமல், படைப்பாளிகளுக்கு தங்கள் உருவாக்கங்களை காட்சிப்படுத்த மிகப் பெரிய கேன்வாஸை வழங்குவதோடு அவர்களின் கருத்தாக்கங்களை தங்கள் சேவையின் மூலம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு கொண்டு சென்று காட்சிப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர்” .
தமிழ் திரையுலகின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான அஷோக் செல்வன் நடிப்பில் தயாராகும் ‘#AS23 ‘ எனும் புதிய திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் அஷோக் செல்வன் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். இந்த திரைப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ எனும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற திரைப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார். இந்த படத்தில் பணியாற்றும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக உருவாகும் இந்த திரைப்படத்தை ஹாப்பி ஹை பிக்சர்ஸ் ( Happy High Pictures) சார்பில் தயாரிப்பாளர்கள் அஷோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
‘ஓ மை கடவுளே’ எனும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை வழங்கிய நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு இது என்பதாலும், ‘போர் தொழில்’ பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதி இருப்பதாலும், ‘#AS23 ‘ படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
நந்தமுரி பாலகிருஷ்ணா, ப்ளாக்பஸ்டர் மேக்கர் போயபதி ஸ்ரீனு, ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா, 14 ரீல்ஸ் பிளஸ், எம் தேஜஸ்வினி நந்தமுரி வழங்கும், #BB4 அகாண்டா 2: தாண்டவம் படத்தில் ஆதி பினிசெட்டி நடிக்கிறார். இப்படத்தின் சண்டைக்காட்சிகள் தற்போது அன்னபூர்ணா ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டு வருகிறது.
மாஸ் கடவுளாக கொண்டாடப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிளாக்பஸ்டர் இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் நான்காவது முறையாக இணைந்துள்ளார், இவர்கள் கூட்டணியில் அகாண்டா 2: தாண்டவம் பிரம்மாண்டமாக உருவாகிறது. பிளாக்பஸ்டர் ஹிட் படமான அகண்டாவின் தொடர்ச்சியாக உருவாகும் இப்படம், ஆக்ஷன் அதிரடியில் முதல் பாகத்தைக் காட்டிலும் இன்னும் தீவிரமாக, ஆன்மீகமும் கலந்த பிரம்மாண்டமாக திரைப்படமாக உருவாகிறது. முன்னணி தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் பிளஸ் பேனரின் சார்பில், ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் தயாரித்துள்ள இப்படத்தை, எம் தேஜஸ்வினி நந்தமுரி வழங்குகிறார்.
திறமைமிகு முன்னணி இளம் நடிகரான ஆதி பினிசெட்டி இப்படத்தில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார், இது அவரது திரை வாழ்க்கையில் ஒரு அற்புதமான அத்தியாயமாக இருக்கும். இதற்கு முன் சர்ரைனோடு படத்தில் ஆதியை ஒரு அழுத்தமான வேடத்தில் காட்டிய இயக்குநர் போயபதி ஸ்ரீனு இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு அற்புதமான பாத்திரத்தில் அவரைக் காட்டவுள்ளார்.
அனைத்து கதாபாத்திரங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதில் புகழ் பெற்ற போயபதி, ஆதியின் கதாபாத்திரத்தை நம்பமுடியாத அளவு வெறித்தனத்துடன் வடிவமைத்துள்ளார், இது அவரது திரை வாழ்க்கையில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் பாத்திரங்களில் ஒன்றாக இருக்கும். இப்படத்திற்காக ஆதி மிகப்புதிய தோற்றத்தில் உருமாறியுள்ளார். ஆதி பினிசெட்டி மற்றும் பாலகிருஷ்ணா இடையே அதிரடியான காட்சிகளை, ரசிகர்கள் எதிர்பார்க்கலாம், மிகத்தீவிரமான ஆக்ஷன் மற்றும் அழுத்தமான தருணங்களுடன், ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும்.
தற்போது, அன்னபூர்ணா ஸ்டூடியோவில் 7 ஏக்கரில் கலை இயக்குநர் ஏ.எஸ்.பிரகாஷ் மற்றும் அவரது குழுவினரால் அமைக்கப்பட்ட பிரமாண்டமான, பிரத்தியேகமாகக் கட்டப்பட்ட செட்டில் படத்தின் ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆக்சன் காட்சிகளைப் புகழ்பெற்ற ஸ்டண்ட் மாஸ்டர்களான ராம்-லக்ஷ்மணன் உருவாக்கி வருகிறார்கள். பாலகிருஷ்ணா மற்றும் ஆதி பினிசெட்டி இருவரும் இந்த அதிரடி படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர், அவர்களின் நடிப்பு பார்வையாளர்களை அவர்களின் இருக்கைகளின் நுனியில் வைப்பது உறுதி. இந்த காட்சி, குறிப்பாக, படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும்.
பாலகிருஷ்ணாவின் கதாபாத்திரமும் மிகவும் சுறுசுறுப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த இரண்டாம் பாகத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார், இது மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகப்பெரிய அளவில் உருவாகிறது. இசையமைப்பாளர் எஸ் தமன், ஒளிப்பதிவாளர் சி ராம்பிரசாத், எடிட்டர் தம்மிராஜு மற்றும் கலை இயக்குநர் ஏஎஸ் பிரகாஷ் உட்பட அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு திறமையான குழு இந்தப் படத்தில் பணியாற்றுகிறது.
அகண்டா 2 பான் இந்தியா வெளியீடாக வெளியாகவுள்ளது, இது பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் போயபதி ஸ்ரீனு ஆகிய இருவருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இருக்கும். தசரா பண்டிகையையொட்டி, செப்டம்பர் 25, 2025 அன்று இப்படம் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
நடிகர்கள்: மாஸ் கடவுள் நந்தமுரி பாலகிருஷ்ணா, சம்யுக்தா, ஆதி பினிசெட்டி
தொழில்நுட்பக் குழு: எழுத்தாளர், இயக்குநர்: போயபதி ஸ்ரீனு தயாரிப்பாளர்கள்: ராம் அச்சந்தா, கோபி அச்சந்தா பேனர்: 14 ரீல்ஸ் பிளஸ் வழங்குபவர்: எம் தேஜஸ்வினி நந்தமுரி இசை: தமன் எஸ் ஒளிப்பதிவு : சி ராம்பிரசாத், சந்தோஷ் டி டெடகே கலை: ஏ.எஸ்.பிரகாஷ் எடிட்டர்: தம்மிராஜு சண்டைகள்: ராம்-லக்ஷ்மன் மக்கள் தொடர்பு – யுவராஜ்
ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராகுல் தயாரிப்பில், நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாக, இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வரும் கவின் நடிப்பில், உருவாகியுள்ள “கிஸ்” படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட்லுக் இன்று வெளியாகியுள்ளது.
காதலர் தினம் நெருங்கும் நிலையில், காதல் ஜோடிகள் சுற்றிலும் கூடி முத்தமிட, நடுவில் ஸ்டைலீஷாக நிற்கும் கவினின் கண்கள் மட்டும் மறைக்கப்பட்டிருக்கும், புதுமையான, மிகவும் வித்தியாசாமான ஃபர்ஸ்ட்லுக், பார்ப்பவர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கிறது. இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளியாகுமென படக்குழு அறிவித்திருப்பது, மேலும் படத்தின் ஆவலைத் தூண்டுகிறது.
தமிழ் சினிமாவில் மாறுபட்ட படைப்புகளை வழங்கி, தொடர் பிளாக்பஸ்டர் வெற்றிகளைக் குவித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ராகுல், பெரும் பொருட்செலவில், பிரம்மாண்ட படைப்பாக இப்படத்தை தயாரித்துள்ளார்.
டான்ஸராக திரைத்துறைக்குள் நுழைந்து, நடன இயக்குநராக வளர்ந்து, நடிகராகவும் வலம் வரும் சதீஷ், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய இளைய தலைமுறை காதலைக் கொண்டாடும் விதத்தில் வித்தியாசமான ரொமான்ஸ் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரமான கவின் இப்படத்தில் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக, “அயோத்தி” படப்புகழ் ப்ரீத்தி அஸ்ரானி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் தேவயானி, கவுசல்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவை ஹரீஷ் மேற்கொள்கிறார், எடிட்டராக RC பிரனவ் பணியாற்ற, மோகன் மகேந்திரன் கலை இயக்கம் செய்துள்ளார். சண்டைப்பயிற்சி – பீட்டர் ஹெயின்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரொடக்சன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி, காதலர் தினத்தன்று வெளியாகவுள்ளது.
பரிதாபங்கள் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் விஷ்ணு விஜயன் இயக்கத்தில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் கமர்ஷியல் ஃபேண்டஸி, ஃபேமிலி என்டர்டெயினர் திரைப்படமான “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.
வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல அல்லாமல், ஒரு நடுத்தர குடும்ப வாழ்வில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளில் இருந்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. நம் வாழ்வோடு எளிதில் தொடர்புபடுத்தி கொள்ளும் வகையான இந்தக் கதையில், ஃபேண்டஸி கலந்து ரசிகர்கள் சிரித்து மகிழும் வண்ணம் ஒரு அட்டகாசமான நகைச்சுவைப் படமாக இருக்கும்.
படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இப்படத்தின் டைட்டிலை வெளிப்படுத்தும் விதமாக, நகைச்சுவை ததும்பிய அசத்தலான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள டைட்டில் டீசர் இணையம் முழுக்க வைரலாக பரவி வருகிறது.
இரு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை சொல்லும் இக்கதையில், பரிதாபங்கள் புகழ் கோபி சுதாகர் முதன்மை பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் VTV கணேஷ், வின்சு சாம், ரமேஷ் கண்ணா, சுரேஷ் சக்ரவர்த்தி, விஜி சந்திரசேகர், சுபத்ரா ராபர்ட், முருகானந்தம், பிரசன்னா, யுவராஜ் கணேசன், ஹரிதா, கௌதம், பாலகுமாரன், குகன், சாத்விக், ஆழியா, பெனடிக்ட் & பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்சன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
“ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தொழில்நுட்ப குழு விபரம் ஒளிப்பதிவு : சக்திவேல், K B ஶ்ரீ கார்த்திக் இசை : JC ஜோ பின்னணி இசை & கூடுதல் பாடல்கள் – அருண் கௌதம் எடிட்டிங் : சாம் Rdx மக்கள் தொடர்பு : சதீஷ், சிவா (AIM)
லியோ சிவக்குமார், பிரிகடா நடிப்பில் நானி இயக்கத்தில் எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகும் “டெலிவரி பாய்” (Delivery Boy)
அசசி கிரியேஷன்ஸ் அமுதா லியோனி வழங்கும் டெலிவரி பாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
இத்திரைப்படத்தில் திண்டுக்கல் லியோனி அவர்களின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரிகிடா நடிக்கிறார். சுசீந்திரனின் உதவி இயக்குனரான நானி இத்திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.
இப்படத்தில் ராதிகா சரத்குமார், போஸ் வெங்கட், காளி வெங்கட் ,துஷ்யந்த் ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
எமோஷனல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகவுள்ள இத்திரைப்படத்தின் பூஜை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களின் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி”.
வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
இயக்குநர் திரு பேசியதாவது….
தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கும், இயக்குநர் சுசீந்திரன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். அவர்கள் இருவருமே எனது குடும்பம் போல் தான். அவர்களைப் போலவே நானும் இப்படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். தனஞ்செயன் சார் இருக்கும் அபார்ட்மெண்டில் தான் நானும் வசிக்கிறேன், தினமும் வாக்கிங் செல்லும் போது அவர் யாரிடமாவது ஃபோனில் பேசிக் கொண்டே இருப்பார், அப்படித்தான் போன் செய்து, 2K கிட்ஸ் படம் பற்றி என்னிடம் சொன்னார், முழு கதையும் அவர் அவ்வளவு ரசித்துச் சொன்னார். அதன் பிறகு சுசீந்திரன் சார் போன் செய்தபோது, தேவாவே சொல்லிவிட்டார் உங்கள் படத்தைப் பற்றி என்று சொன்னேன். அந்த அளவு இந்தத் திரைப்படம் அவரை பாதித்திருக்கிறது. ஒரு படத்தை அவர் பாராட்டுவது அத்தனை எளிதான விஷயமில்ல, அவரே சொன்ன பிறகு நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்
இயக்குநர் செல்லா அய்யாவு பேசியதாவது…. இயக்குநர் சுசீந்திரன் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர், ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான களத்தில் கதை சொல்லுவார். இந்தப் படத்தில் 2K கிட்ஸ் பசங்களின் கதையைச் சொல்லி இருக்கிறார். இந்த கால இளைஞர்களின் வாழ்க்கையை, அவர்கள் ரிலேஷன்ஷிப்பை, அவர்கள் வாழ்க்கையை அணுகும் விதத்தை, அவர்கள் எப்படி சரியாக இருக்கிறார்கள் என்பதை, மிக அழகான கதையாகக் கோர்த்து, இந்த படத்தில் சொல்லி இருக்கிறார். முந்தைய ஜெனரேஷன் இந்த தலைமுறையைப் பார்த்து தவறாக நினைப்பார்கள், ஆனால் அதெல்லாம் இல்லை என்று, மிக அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். கிளைமாக்ஸ் மிக அற்புதமாக இருந்தது. ஒளிப்பதிவு, இசை, இரண்டும் அட்டகாசமாக இருந்தது. படம் மிக சூப்பராக வந்திருக்கிறது, படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்
இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி பேசியதாவது…. இரண்டு நாட்களுக்கு முன் சுசீந்திரன் சார் எனக்கு போன் செய்து, இந்த விழாவிற்கு வர முடியுமா? என்று கேட்டார் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. ஸ்கூல் படிக்கும் காலத்தில் அவருடைய படங்கள் பார்த்து நிறைய விவாதித்து இருக்கிறோம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர், அவர் நடிகர்களைக் கையாளும் விதம், எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படத்தில் நடிகர்கள் நடிப்பது மாதிரியே தெரியாது, அவ்வளவு அருமையாக அவர்களைக் கையாளுவார். பல விஷயங்களில் அவர்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். இந்தப் படத்தைக் காலை சில நண்பர்களோடு பார்த்தேன், எப்போதும் அடுத்த தலைமுறை பற்றி நமக்குப் பெரிய அளவில் தெரியாது, ஆனால் இவர் 2K கிட்ஸ் வாழ்க்கையை மிக அற்புதமாகக் கையாண்டிருந்தார். படம் சூப்பராக வந்துள்ளது, படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
இயக்குநர் ஹரிஹரன் பேசியதாவது… என்னுடைய ஜோ படம் வந்தபோது, இரண்டு நாள் கழித்து ஒரு ஷோ போட்டு இருந்தோம், அப்போது படத்தின் இயக்குநர் யார் என்று விசாரித்து, என்னைத் தேடி வந்த கட்டியணைத்துப் பாராட்டினார். அப்போது இருந்தே சுசீந்திரன் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது. அவரது படங்களுக்கு நான் ரசிகன். இந்த படத்தின் ஆரம்பத்திலிருந்து நான் இந்த படத்தை ஃபாலோ செய்து வருகிறேன். என் படத்தில் நடித்த கவின் அண்ணா அவர்கள் இந்த படத்திலும் நடித்துள்ளார். அவர் படம் பற்றிச் சிலாகித்துச் சொல்வார். படத்தை நான் பார்த்தேன் ஒரு விஷயத்தை எடுத்தால், அதை மிகச் சரியாக முடிப்பதில் சுசீந்திரன் சார் வல்லவர். ஆதலால் காதல் செய் போன்ற அட்டகாசமான படங்களைத் தந்தவர், இந்த படத்திலும் மிக அழுத்தமான ஒரு கதையைச் சொல்லி இருக்கிறார். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது… நண்பர் சுசீந்திரன் இந்த படத்தின் டைட்டில் டிசைன் செய்த போது, எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அப்போதே எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. இந்த தலைமுறைக்கு மிகவும் பிடித்த டைட்டில், மிகவும் பிடித்த கதை, இது அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். குடும்பத்தோடு ரசிக்கும் வகையில் ஒரு நல்ல படமாக இருக்கும். நான் இந்த திரைப்படத்தைப் பார்த்து விட்டேன், இந்த படத்தின் கிளைமாக்ஸ் மிக அற்புதமாக இருந்தது. அந்த சோஷியல் மெசேஜ், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். விழாவின் நாயகன் இமான் சார், இந்த படத்தில் இசை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இமான் சாரும் பிரபு சாலமன் சாரும் சேரும்போது, பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய ஹிட் அடிக்கும், அதே போல தான் சுசீந்திரன் சார் இமான் சார் கூட்டணி சேரும்போது, பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடிக்கும். இருவரின் காம்போ இன்னும் மிகப்பெரிய வெற்றிகளைத் தர வேண்டும். நடிகர்கள் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர், குட்டு பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும் எனச் சொல்வார்கள், சுசீந்திரன் சார் அறிமுகப்படுத்திய விஷ்ணு விஷால், சூரி என இருவரும் தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார்கள், அதே போல இடம் உங்களுக்கும் கிடைக்கும். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள். சுசீந்திரனால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள், அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், இன்று பெரிய இடத்தில் இருக்கிறார்கள், சுசீந்திரனுக்கு என் வாழ்த்துக்கள். அதேபோல் இந்த படத்தை நம்பி வாங்கிய தனஞ்செயன் அவர்களுக்கு எனக்கு நன்றிகள். இப்படத்தை நம்பி, புதிய அறிமுகங்களை நம்பி, தயாரித்த தயாரிப்பாளருக்கு என்னுடைய நன்றிகள். படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
இயக்குநர் அந்தோணி பாக்யராஜ் பேசியதாவது…. ஆபீஸ் போடாமல் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இது. ஆனால் ஆறு மாதத்தில் இதை இத்தனை அற்புதமாக எடுத்து முடிக்க சுசி சாரால் மட்டும் தான் முடியும். எல்லோருமே புது முகங்கள், ஆனால் அவர்களை வைத்துக் கொண்டு, மிகச் சரியாக திட்டமிட்டு, மிகக்குறுகிய காலத்தில், படத்தை முடித்து இருக்கிறார். நாயகன் ஜெகவீர், முதல் படம் காதலர் தினத்தன்று படம் ரிலீஸ் ஆகிறது, அவருக்கு எனது வாழ்த்துக்கள். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இமான் சாரின் இசை மிக அற்புதமாக வந்திருக்கிறது. என்னுடைய நடிப்பிற்கும் அவர் வாசித்திருக்கிறார் என்பது எனக்குப் பெருமையாக உள்ளது. இத்தனை புதுமைகளை நம்பி, சுசீந்திரன் சாரின் திறமையை நம்பி, தயாரிப்பாளர் உள்ளே வந்திருக்கிறார். நமக்கொரு நல்ல தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார் அவருக்கு நன்றி. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
இயக்குநர் முருகானந்தம் பேசியதாவது… இந்த படத்தில் நானும் நடித்துள்ளேன், அதனால் படத்தைப் பற்றி அதிகம் சொல்ல முடியாது. படத்தை நான் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படம் என்பது ஏதாவது ஒரு உணர்வை அழுத்தமாகச் சொல்ல வேண்டும், இந்தக் கால தலைமுறைக்கு ஒரு சிறு குழப்பம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது, அந்த குழப்பத்திற்கு விடை தரும் படமாக இந்த திரைப்படம் இருக்கும். இசையமைப்பாளர் இமான் இசை மிக அற்புதமாக வந்திருக்கிறது. புதுமுக நடிகர் ஜெகவீர் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். புகழ் பெற்ற இயக்குநர்கள் இப்படத்தை ஆதரிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படம் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.
இயக்குநர் செல்வ சேகரன் பேசியதாவது… இயக்குநர் சுசீந்திரனிடம், ஏன் திரும்ப புது முகங்களை வைத்து இயக்குகிறாய்? என்று கேட்டேன். இது மீண்டும் ஒரு வெண்ணிலா கபடி குழு திரைப்படம் போல் இருக்கும், நமக்கு புது மாற்றத்தைத் தரும் என்று சொன்னார். நல்லபடியாக செய் என்று வாழ்த்தினேன், படம் நன்றாக வந்துள்ளதாக, அனைவரும் பாராட்டுவது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் மிகப்பெரிய வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள், அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் பிரபு சாலமன் பேசியதாவது…. என்னுடைய நண்பர் ஜெகவீர் அவருடன் வேறு ஒரு ப்ராஜெக்ட் செய்வதற்காக ஒரு வருடம் டிராவல் செய்து உள்ளேன், அவரின் உழைப்பு, ஆர்வம் பற்றி எனக்குத் தெரியும். இந்தத் திரைப்படம் அவருக்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகத்தைத் தரும். படம் பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது, இன்றைய விழாவின் நாயகன் இமான் ஒரு நல்ல இசை இல்லாமல் ஒரு நல்ல கதையை உங்களால் சொல்லவே முடியாது. எவ்வளவுக்கு எவ்வளவு நம் வாழ்க்கையை, மண் சார்ந்து நம் படங்கள் பிரதிபலிக்கிறதோ அந்தளவு நம் படங்கள், உலகத் திரைப்படங்களாக உலகிற்குத் தெரியும். இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, இன்றைய சினிமா உலகில் முதலில் பாசிடிவாக ஒரு படத்தை எடுக்க வேண்டும் என நினைத்த இயக்குநர் தான். நம் மண்ணின் கதையைச் சொல்ல வேண்டும் என நினைத்து, அதை மிக அழகாக இந்த திரைப்படத்தில் சொல்லி இருக்கிறார். அந்த துணிச்சலுக்கு சுசீந்திரனுக்கு வாழ்த்துக்கள். வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற படங்களைப் போல எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம், அந்த இடத்தை இந்தத் திரைப்படம் நிறைவு செய்யும். எந்த இடத்திலும் தொய்வில்லாமல் மிக அருமையாகத் திரைக்கதையை எடுத்துச் சென்றுள்ளீர்கள், நடித்த நடிகர்கள் அனைவரும், மிக அற்புதமாக நடித்திருக்கிறார்கள். யாருமே தனியாகத் தெரியவில்லை, அந்தந்த பாத்திரங்களாகத்தான் எனக்குத் தெரிந்தார்கள். இன்றைய தலைமுறையைப் பற்றி மிக அழுத்தமான ஒரு விஷயத்தை, மிகத் தைரியமாகப் பேசியிருக்கிறார். காதல் தாண்டி, நாயகனும் நாயகியும் நண்பர்களாக இருக்க முடியுமா? என்ற ஒரு விஷயத்தை இந்த திரைப்படம் பேசுகிறது. இதை முன்பே எனது இயக்குநர் அகத்தியன் சார் தன்னுடைய காதல் கோட்டை திரைப்படத்தில் பேசி இருந்தார். கதாநாயகினும் கதாநாயகனும் சந்திக்காமல் ஒரு காதல் கதை எடுத்தார். அது இந்தியாவையே புரட்டிப் போட்டது. அதே போல் இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் பட குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் விக்னேஷ் சுப்ரமணியன் பேசியதாவது… City light pictures தயாரிப்பில், இது எங்கள் முதல்ப்படம். சுசீந்திரன் சார் மீதான நம்பிக்கையில் ஆரம்பிக்கப்பட்ட திரைப்படம் இது. சொன்னது போல 40நாளில் இப்படத்தையே முடித்து விட்டார். ஜெகவீர் என் நண்பர் அவர் மூலம் தான் சுசி சார் அறிமுகம். 2கே ஜெனரேஷனை நெகடிவாக காட்டுகிறார்கள் ஆனால் சுசி சார் மிக அருமையாக இதைக் கையாண்டுள்ளார். தனஞ்செயன் சார் எங்கள் படத்தைப் பார்த்து விட்டு, நானே ரிலீஸ் செய்கிறேன் என எடுத்துக்கொண்டார். அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை வழங்கிய சுசி சாருக்கு நன்றி. இது எல்லோருடைய உழைப்பு. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.
இசையமைப்பாளர் இமான் பேசியதாவது.., இந்த திரைப்படத்தை இன்று காலை பார்த்த அத்தனை முக்கியமான இயக்குநர்களுக்கும், அவர்களுடைய நேரத்தை செலவிட்டு, இப்படம் பார்த்துப் பாராட்டிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். இத்தனை குறுகிய காலத்தில், ஒரு திரைப்படத்தைத் திட்டமிட்டு, அத்தனை வேலைகளையும் கச்சிதமாக முடிக்கக் கூடிய, ஒரே இயக்குநர் சுசீந்திரன் சார் மட்டுமே, அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். உடலாலும், மனதாலும், பலத்தாலும் மிக நன்றாக இருக்க வேண்டும் என ஆசைப்படும் பல நண்பர்கள் உள்ளனர், அதில் நானும் ஒருவன். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த திரைப்படம் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது… திட்டமிடலில் சுசீந்திரன் சாரை மிஞ்ச முடியாது, இந்த விழாவையே சரியாக ஒரு மணிக்குத் திட்டமிட்டு இருந்தார், திடீரென போன் செய்து, 12:30 மணிக்கு ஆரம்பித்து விடலாம் என்றார். எல்லோரையும் வரவைத்து ஸ்கிரீனில் பாடல் ஓடிக்கொண்டிருக்கும் போது, இங்கு மேடையை ஒருங்கிணைத்தார், அவரின் இந்த திட்டமிடல் தான், அவரிடம் இருக்கும் சிறப்பு. ஒரு படத்தை எப்படி மிகக் குறுகிய காலத்தில் முடிக்க முடியும் என்பதை, அவரிடம் கற்றுக் கொள்ளலாம். ஒரு படத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, படத்தின் செலவினங்களை இழுத்து விட்டு, இறுதியில் படத்திலும் ஒன்றும் இல்லாமல், செலவையும் அதிகமாக்கிவிடும் இயக்குநர்கள் இந்த காலத்தில் இருக்கிறார்கள். ஆனால் அதை உடைத்துத் திட்டமிடலில் சாதித்த காட்டுகிறார் சுசீந்திரன். ஒரு பக்கம் இந்த விழா நடந்து கொண்டிருக்கும்போது, இன்னொரு பக்கம் கல்லூரியில் படத்தை விளம்பரம் செய்கிறேன் என்று சொன்னார். அவரின் இந்த ஆர்வம் எனக்கு மிகவும் பிடித்தது, ஒரு இயக்குநர் இறங்கி வேலை செய்யும்போது ,எப்போதும் மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும், நான் அவர் எது சொன்னாலும் ஓகே சொல்லிவிடுவேன். தயாரிப்பாளர் விக்னேஷுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், சுசீந்திரன் சாரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருப்பீர்கள். ஒரு திரைப்படத்தைத் தயாரிப்பது மிக எளிது, ஆனால் அதை வியாபாரம் செய்வது என்பது மிகவும் கடினம், அதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த திரைப்படம் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும். அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.
இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது… வெண்ணிலா கபடி குழு படத்திற்குப் பிறகு முதல் படம் போன்ற உணர்வை இந்தப்படம் தந்துள்ளது, இந்தப்படத்தை என் நெருங்கிய நண்பர்கள் இயக்குநர்களுக்குப் போட்டுக் காட்டினேன் பார்த்து விட்டு வாழ்த்தியதற்கு நன்றி. இப்படத்திற்கு உறுதுணையாக இருந்த ஒளிப்பதிவாளர் ஆனந்த் கிருஷ்ணனுக்கு நன்றி. என் உடன் நின்ற இசையமைப்பாளர் இமானுக்கு நன்றி. புதுமுகமாக அறிமுகமாகும் ஜெகவீருக்கு வாழ்த்துக்கள், துஷ்யந்த் இப்படத்தில் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் வாழ்த்துக்கள், மீனாக்ஷிக்கு வாழ்த்துக்கள், அனைத்து நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இந்தத் திரைப்படத்தைத் தயாரித்திருக்கும் விக்னேஷுக்கு நன்றி, இப்படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும், அனைவருக்கும் நன்றி.
வெட்டிங்க் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் D இமான் இசையமைக்கிறார். இயக்குநர் சுசீந்திரன் மற்றும் D இமான் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. City light pictures சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
புதுமுக நாயகன் ஜெகவீர் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தொழில் நுட்ப குழு
இயக்கம் – சுசீந்திரன் ஒளிப்பதிவு -V.S.ஆனந்த கிருஷ்ணன் இசை – டி.இம்மான் பாடல் வரிகள். – கார்த்திக் நேதா எடிட்டர் – தியாகு கலை – சுரேஷ் பழனிவேலு நடனம் – ஷோபி, பால்ராஜ் புரோ – சதீஷ் (AIM) ஆடை வடிவமைப்பாளர் – மீரா போஸ்டர் வடிவமைப்பாளர் – கார்த்திக் தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன் தயாரிப்பாளர் – விக்னேஷ் சுப்ரமணியன்