deccanwebtv

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் 16ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படத்தின் வெளியீட்டு முன் நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

‘டி டி ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தில் சந்தானம், கீதிகா திவாரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, மொட்டை ராஜேந்திரன், மாறன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி , யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். தீபக் குமார் பதே ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஏ.ஆர்.மோகன் கவனித்திருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படம் வரும் 16ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் நடைபெற்ற வெளியீட்டிற்கு முன் நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் இசையமைப்பாளர் ஆஃப்ரோ பேசுகையில், ”ஒவ்வொரு இன்டர்வியூவிலும் நான் எஸ் டி ஆரின் ரசிகன் என்று சொல்லியிருக்கிறேன். அவர் இந்த மேடையில் இருக்கும்போது நானும் இருப்பதை பெருமிதமாக நினைக்கிறேன். இதுவே என்னுடைய பெரிய இலக்கு என்றும் சொல்லலாம்.

இந்த குழுவுடன் இரண்டாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறேன். நிறைய சுயாதீன இசை கலைஞர்களுடன் பணியாற்றுவேன். இந்தப் படத்தில் கெளுத்தி என்ற சுயாதீன கலைஞர் பாடல் எழுதியிருக்கிறார். வங்கல் புள்ள விக்கி ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்தப் பாடல்களை எல்லாம் கேட்டு ரசிப்பீர்கள் என நினைக்கிறேன். அடுத்த வாரம் படம் வெளியாகிறது. படத்தை பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்,” என்றார்.

நடிகர் நிழல்கள் ரவி பேசுகையில், ”சந்தானத்தின் ரசிகர்களுக்கு என் முதல் நன்றி. இந்தப் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளர் ஆர்யா, கிஷோர், சந்தானம், பிரேம் ஆனந்த் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
சினிமாவில் ஹீரோவாக நடித்து விட்டேன், வில்லனாக நடித்து விட்டேன், கேரக்டராகவும் நடித்துவிட்டேன், காமெடியாக நடிக்கவில்லையே என்று எண்ணியிருந்தேன். இயக்குநர் கார்த்திக் யோகியும் , நடிகர் சந்தானமும் இணைந்து ‘ டிக்கிலோனா’ திரைப்படத்தில் எனக்கு ஒரு நகைச்சுவை வேடத்தை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து ‘வடக்குப்பட்டி ராமசாமி ‘படத்தில் நல்லதொரு கேரக்டரை கொடுத்து நிழல்கள் ரவியை காமெடி நடிகராகவும் வெற்றி பெற செய்தார்கள். இதற்காக சந்தானத்திற்கு மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் மெக்டவல்ஸ் எனும் கப்பலில் கேப்டனாக பணி புரியும் கேரக்டரில் நடித்திருக்கிறேன். சினிமாவில் காமெடியை பார்த்து ரசிக்கிறோம் அல்லது அதை பற்றி விமர்சிக்கிறோம். ஆனால் உண்மையில் காமெடியாக நடிப்பது தான் கஷ்டமானது. சந்தானம் அதை எளிதாக செய்கிறார் என்றால் அது கடவுளின் கொடை.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளரான தீபக் குமார் பதேவின் தந்தையும் ஒளிப்பதிவாளர் தான். அவருடைய ஒளிப்பதிவில் நான் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்.

இந்த திரைப்படம் முழுவதும் கப்பலின் பின்னணியில் நடைபெறுகிறது. இதற்காக கலை இயக்குநர் மோகன் அற்புதமாக அரங்கங்களை வடிவமைத்திருந்தார்,” என்றார்.

நடிகை கீதிகா திவாரி பேசுகையில், ”இந்த படத்தில் பணியாற்றியதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. சினிமா மீதான சந்தானத்தின் ஈடுபாடு என்னை வியக்க வைத்தது. படப்பிடிப்பு தளத்தில் அவருடைய அக்கறை வெளிப்பட்டது. 20 மணி நேரம் இடைவெளி இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்ற போதும் உற்சாகம் குறையாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் பணியாற்ற வைத்தார்.

இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை கஸ்தூரி பேசுகையில், ”இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்காக பெரிய முதலாளி ஆர்யாவிற்கும், சின்ன முதலாளி கிஷோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியின் ரசிகை. சந்தானம் சாருடன் ஏற்கனவே பணியாற்றி இருக்கிறேன். இருந்தாலும் இந்த படத்தில் பணியாற்றும் போது அவருடைய எளிமை, கடின உழைப்பை பார்த்து வியந்தேன். அவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோ என்றும் சொல்வேன்.

நான் தொடக்க காலத்தில் கவர்ச்சியாக நடிப்பது தான் கஷ்டம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் காமெடியாக நடிப்பது தான் கஷ்டம் என்பதை இந்த படத்தின் மூலம் தெரிந்து கொண்டேன்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் என்னிடம் கதையை சொல்லும்போது நீங்கள் சந்தானத்திற்கு அம்மா என்றார், நான் பதறினேன். முதல் காட்சியில் மட்டும் தான் அம்மா, அதன் பிறகு படம் முழுவதும் அலப்பறை தான் என்றார். கதை கேட்கும் போது நான் எப்படி சிரித்தேனோ அதேபோல் தான் ரசிகர்கள் நீங்கள் திரையரங்கத்தில் படத்தை பார்க்கும் போதும் சிரிப்பீர்கள். இந்தப் படத்தில் நான் தான் கவர்ச்சி மாம்.

உள்ளொன்று வைத்து புறம் பேசாத, மனதில் தோன்றியதை பட்டென்று பேசும் எஸ் டி ஆரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் நேர்மையானவர். பெருந்தன்மையானவர். அவரைப்பற்றி வெளியில் நான்கு பேர் நான்கு விதமாக பேசினாலும், அவரைப்பற்றி அவரிடம் பழகியவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.

எனக்கு மனச்சோர்வாக இருக்கும்போது இப்படத்திற்காக பின்னணி பேச அழைப்பு விடுத்தார்கள். படத்தின் டப்பிங் பார்த்துவிட்டு எனக்கு சரியாகி விட்டது. மனச்சோர்வு பறந்து விட்டது. இந்தப் படத்தில் நிழல்கள் ரவி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோரை வேற மாதிரி பார்த்து ரசிப்பீர்கள். இந்தக் கோடை விடுமுறைக்கு உங்களது கவலைகளை கழட்டி வைத்து விட்டு இந்த படத்தை பார்த்தால் உற்சாகம் அடைவீர்கள், சந்தோஷம் அடைவீர்கள்,” என்றார்.

இயக்குநர் எஸ்.பிரேம் ஆனந்த் பேசுகையில், ”என்னை இயக்குநராக இங்கு நிற்க வைத்திருக்கும் சந்தானத்திற்கும் , இயக்குநர் ராம் பாலாவிற்கும் முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உடன் இருப்பவர்களை உயர்த்தி விட்டு அவர்கள் மகிழ்ச்சி அடைவதை பார்த்து சந்தோஷம் அடைபவர் தான் சந்தானம். அவருக்கும் ஒரு காட்பாதர் இருக்கிறார். அவருடைய வளர்ச்சியை கண்டு சந்தோஷமடையும் எஸ் டி ஆர் தான் அது. அவரும் இங்கு இருக்கிறார்.

‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் இயக்குநர் என்று சொல்லிக் கொள்வதை விட, இப்படத்தின் கதையை நானும் இணைந்து எழுதி இருக்கிறேன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன். ஒரு படம் வெற்றி பெற்றால் அந்தப் படத்தின் இயக்குநர் தான் வெளிச்சத்திற்கு வருவார். அந்தப் படத்தின் கதாசிரியர் வெளியே தெரிய மாட்டார். அது போல் இந்த படத்திற்கு நடைபெறக்கூடாது. இந்தப் படத்தில் என்னுடன் முருகன், சேது ஆகிய இருவரும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். இந்த படம் பெரிய வெற்றியைப் பெற்றால் அதில் இவர்களுக்கும் பங்கு உண்டு.

இந்தப் படத்தின் ஐடியாவை ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் கதையை சொல்வதற்கு முன்னாலேயே சந்தானத்திடம் சொன்னேன். அவர் ஐடியா நன்றாக இருக்கிறது ஆனால் படத்தின் பட்ஜெட் மிக அதிகம். அதனால் அதற்கான தயாரிப்பாளர் கிடைக்கும் வரை காத்திரு என்றார். சின்ன பட்ஜெட்டில் உன் திறமையை வெளிப்படுத்து, அந்த திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு அதை எடுக்கலாம் என்றார். சந்தானத்தின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது. ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அவர் சொன்னது போல் இப்படத்திற்கான தயாரிப்பாளரையும் கொடுத்தது.‌

ஆர்யா போன்ற தூய மனம் கொண்ட தயாரிப்பாளர் எங்களுக்கு கிடைத்தது வரம் தான். எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவரைப் போலவே இப்படத்திற்கு முதுகெலும்பாக செயல்பட்டவர் கிஷோர்.

‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் இதிலும் இணைந்து பணியாற்று இருக்கிறார்கள். இதில் ஓ ஜி சாண்டாவை பார்ப்பீர்கள். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களை விட இதில் நடித்திருக்கும் கிச்சா எனும் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவரும்.

இப்படத்தின் ஹீரோயின் கீதிகா. அவர் படப்பிடிப்பிற்கு வந்த முதல் நாளே அழுக்கான ஆடையை கொடுத்து நடிக்க சொன்னோம். எந்தவித தயக்கமும் இல்லாமல் நடித்தார். இந்தப் படத்திற்காக அவர் கடுமையாக உழைத்திருக்கிறார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணியில் எப்படி ஒரு புதிய வீரரை அணியில் இடம்பெறச் செய்தார்களோ, அதே போல் எங்கள் அணியில் நிழல்கள் ரவியை நாங்கள் இணைத்துக் கொண்டோம். அவருடைய நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவரும்.

இந்த படம் மல்டி ஜானர் மூவியாக இருக்கும். குழந்தைகள் முதல் ஃபேமிலி ஆடியன்ஸ் வரை அனைவரும் ரசிக்கக் கூடிய வகையில் இந்தப் படம் இருக்கும். மனிதனுக்கு உள்ள உணர்வுகள் எல்லாம் இதயம் சம்பந்தப்பட்டது. மன அழுத்தம், பயம், கோபம் இதெல்லாம் மனம் சம்பந்தப்பட்டது. இதயத்தை தொடும் படத்தை கொடுப்பதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் ஸ்டிரஸ் பஸ்டர் மூவியை கொடுப்பதற்கு சந்தானம் மட்டும்தான் இருக்கிறார். இந்தத் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். நம்பி வாங்க…! சிரிச்சிட்டு போங்க..! நன்றி,” என்றார்.

நடிகர் ஆர்யா பேசுகையில், ”இந்தப் படத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தப் படத்தின் ஐடியாவை சந்தானம் சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏற்கனவே மூன்று பாகங்களை எடுத்திருக்கிறார்கள். இனிமேல் இதில் என்ன புதிதாக சொல்லப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் தான் இயக்குநர் பிரேம் ஆனந்திடம் கதையைக் கேட்க தொடங்கினேன். ஆனால் அவர் கதையை சொன்ன விதம் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையைக் கேட்டு முடித்தவுடன் இதனை திரைக்கதையாக எழுதிக் கொண்டு வந்தால் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றேன். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து கடுமையாக உழைத்து திரைக்கதையாக கொடுக்கும் போது பெரிய பட்ஜெட் படமாக இருந்தது. இதற்காக நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்துடன் பேசினேன்.‌ அவர்களும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் தான் கிஷோரை அறிமுகப்படுத்தினார்கள். இந்த திரைப்படத்திற்காக சந்தானத்தையும், இயக்குநர் பிரேம் ஆனந்தையும் கிஷோரிடம் ஒப்படைத்து விட்டேன். இதுதான் என்னுடைய பணி. அதன் பிறகு இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து திட்டமிட்டு உருவாக்கிய படம் தான் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’.

ஒரு வாரத்திற்கு முன் இப்படத்தை பார்த்தேன். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட் ஆகும் எனும் நம்பிக்கை இருக்கிறது.

இப்படத்தில் நடித்த நடிகர் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் நட்புக்காகவே ஒப்புக் கொண்டார்கள். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு விருந்தினராக இங்கு வருகை தந்த சிலம்பரசனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் சந்தானம் பேசுகையில், ”தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டி டி ரிட்டர்ன்ஸ் என அனைத்து படங்களுக்கும் எழுத்து வடிவில் எங்களுக்கு உதவிய எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜனுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய மறைவு எங்களுக்கு மிகப்பெரிய இழப்பு. இருந்தாலும் அவருடைய ஆன்மா எங்கள் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் என நம்புகிறேன்.

இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ள எஸ் டி ஆர் அவர்களுக்கு நன்றி. அவரைப் பற்றி நான் பல மேடைகளிலும், பல இன்டர்வியூக்களிலும் சொல்லியிருக்கிறேன், அவர் இல்லை என்றால் நான் இல்லை என்று. அவர்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தி , உயரத்திற்கு அழைத்துச் சென்றார். ‘காதல் அழிவதில்லை’ படத்தில் துணை நடிகராக நடித்திருக்கிறேன். அதனை பார்த்து தான் ‘மன்மதன்’ படத்தில் எனக்கு வாய்ப்பளித்தார் சிலம்பரசன்.
படப்பிடிப்பு தளத்தில் எனக்கான அறிமுகக் காட்சி பற்றிய விவாதம் நடைபெற்றது. “நீ லொள்ளு சபாவில் இருந்து சினிமாவிற்கு வந்திருக்கிறாய். உன்னுடைய அறிமுகக் காட்சியில் ரசிகர்களிடத்தில் கைதட்டல் வரவேண்டும். அதற்காக எப்படி உன்னை அறிமுகப்படுத்துவது” என விவாதித்து கொண்டிருக்கிறோம் என்றார். அந்த விவாதத்தில் நானும் கலந்து கொண்டு என்னுடைய யோசனையையும் சொன்னேன்.‌ அதன் பிறகு அந்த காட்சி படமாக்கப்பட்டது. இதை ஏன் நான் இப்போது இங்கு சொல்கிறேன் என்றால், அன்றைய தினம் சினிமாவில் திரையில் நான் தோன்றும்போது கைத்தட்டல் இருக்க வேண்டும் என்று எனக்காக எடுத்த அக்கறையும், அன்பும் இன்று வரை குறையாமல் தொடர்கிறது. இது போன்றதொரு நல்ல மனம் படைத்த சிலம்பரசன் நண்பராக கிடைத்ததற்கு இறைவனுக்குத்தான் நான் நன்றியை சொல்ல வேண்டும். சிம்பு ஐ லவ் யூ. எப்போதும் அவருக்கு பின்னால் நான் இருப்பேன். எஸ் டி ஆர் 49லும் என்னுடைய பங்களிப்பை வழங்குவேன். என்னுடைய பெற்றோர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.

அடுத்ததாக என்னுடைய நண்பரும், தயாரிப்பாளருமான ஆர்யா. ஆர்யாவை மட்டும் தான் எனக்குத் தெரியும். ஆர்யா தான் நிஹாரிகா என்டர்டெய்ன்மென்டை சார்ந்த கிஷோரை அறிமுகப்படுத்தினார். அவரை நான் ‘கிளாரிட்டி ‘கிஷோர் என்று தான் அழைப்பேன். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆர்யா என் உயிர் நண்பர். ‘கல்லூரியின் கதை’ படத்தில் தான் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம். படப்பிடிப்பு தளத்தில் எங்களுடன் நடித்த அழகான பெண்களை கவர்வதற்காக ஆர்யா என்னை காமெடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லிவிட்டார். அந்த அழகான பெண்கள் சற்று சந்தேகத்துடன் என்னை பார்த்தார்கள். நண்பர் சொல்லிவிட்டாரே என்பதற்காக அவர்கள் முன்னால் நானும் சில காமெடியை பேசி நடித்து காட்டினேன். இதனை இயக்குநரும், தயாரிப்பாளரும் கவனித்து விட்டு, எங்களிடம் கேட்டனர், பிறகு சமாளித்தோம். ஆனால் ஆர்யா காமெடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை விடவில்லை. ‘சேட்டை’ படத்தில் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என டைட்டிலில் இடம் பெற வைத்தார். ‘லிங்கா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் போது அவர் என்னிடம் நீங்கள் காமெடி சூப்பர் ஸ்டாரா என்று கேட்டார். அதற்கு சிரித்துக் கொண்டே என் நண்பர் ஆர்யா செய்த வேலை அது என விளக்கம் அளித்தேன்.

இந்தப் படத்தின் கதையை இயக்குநர் ஆனந்த் ஆர்யாவிடம் விவரித்தார் அவருக்கும் பிடித்து விட்டது. படத்தின் பணிகள் தொடங்கின. இந்த தருணத்தில் நான் சென்னையின் புறநகர் பகுதியில் வீடு ஒன்றினை வாங்கி, அதனை சீரமைத்து அங்கு குடும்பத்தினருடன் சென்று வசிக்கலாம் என திட்டமிட்டேன். இதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, வாரம் தவறாமல் வெள்ளிக்கிழமைகளில் என்னுடைய மனைவியும், அம்மாவும் அந்த வீட்டிற்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வருவார்கள். இந்தத் தருணத்தில் ஒரு முறை ஆர்யா எனக்கு போன் செய்த போது வீட்டை புதுப்பிக்கும் பணியில் இருக்கிறேன் என்று சொன்னேன் உடனடியாக அவர் அந்த வீட்டிற்கு வந்தார். வீட்டை முழுவதும் சுற்றி பார்த்துவிட்டு வீட்டை இடித்து விட்டு புதிதாக கட்டு என்று சொல்லிவிட்டார். இதற்கு நான் மறுப்பு தெரிவிக்க, ஆர்யா அவரது நண்பருக்கு போன் செய்து வீட்டை இடிக்கும் பணியில் தீவிரம் காட்டி விட்டார். இந்த விஷயத்தை நான் எங்கள் வீட்டில் தெரிவிக்கவில்லை. அடுத்த வாரம் என்னுடைய அம்மாவும், மனைவியும் அந்த வீட்டிற்கு செல்கிறார்கள். அங்கு வீடு இல்லாததை கண்டு திகைத்து விட்டார்கள். அதன் பிறகு எனக்கு போன் செய்து வீட்டை காணவில்லை என்று சொன்னார்கள். அதன் பிறகு அவர்களிடம் நடந்ததை சொன்னேன். ஆர்யா சொன்னால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் சொன்னேன். அப்போது என்னுடைய அம்மா நீங்கள் இருவரும் படத்தில்தான் இப்படி நடிப்பீர்கள். நிஜத்திலுமா இப்படி இருப்பீர்கள் எனக் கேட்டார். இந்த லெவலில் தான் எங்களுடைய பிரண்ட்ஷிப் இருக்கிறது.

‘கல்லூரியின் கதை’ படத்தில் தொடங்கிய எங்கள் நட்பில் நாங்கள் இருவரும் எதற்காகவும் பயந்ததில்லை. எதுவாக இருந்தாலும் தைரியமாக செய்வோம். வாழும் வரை சந்தோஷமாக வாழ்வோம். எது வந்தாலும் அதனை எதிர்கொள்வோம் என்பார். அந்த ஒரு சக்தி தான் அவரை இங்கு தயாரிப்பாளராக நிற்க வைத்து இருக்கிறது. என்னையும் நாயகனாக உயர்த்தி இருக்கிறது.

இந்தப் படத்தில் நடிக்கும் போது வேறு எந்த படத்திலும் நடிக்காதே உன் அனைத்து பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆர்யா நம்பிக்கை கொடுத்தார். படத்தை வெற்றி பெற செய்வது மட்டும்தான் உன் வேலை என்றார் அதற்காக இந்த படத்தில் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தை மிகப்பெரிய வெற்றிப்படமாக ஆர்யாவுக்கு தருவேன் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநரான பிரேம் ஆனந்தை நான் தமிழ் சினிமாவின் கிறிஸ்டோபர் நோலன் என்று தான் சொல்வேன். ஒரு கதையை சொன்னால் அதனை பல லேயர்களில் சொல்வார். ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ படம் ஒரு ஹாரர் படம் என்றாலும் அதில் ஒரு கேம் ஷோ இருக்கும். அந்த கேமிற்குள் ஒரு திருட்டு கும்பலின் அட்வென்ச்சர் இருக்கும். இப்படி மல்டி லேயரில் ஒரு கதையை கச்சிதமாக உருவாக்குவார். அதேபோல் தான் இந்தப் படத்தின் கதையையும் அவர் எழுதியிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் தெளிவாக காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருக்கிறார். அந்த வகையில் ஆனந்த்திற்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்திற்காக பணியாற்றிய முருகன், சேது உள்ளிட்ட என்னுடைய குழுவினருக்கும், இந்த படத்தில் என்னுடன் இணைந்து நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் மாறனுக்கு டிவி காமெடி இருக்கிறது. ரெடின் கிங்ஸ்லிக்கு தலைகீழாக நடக்கும் காமெடி இருக்கிறது. மொட்டை ராஜேந்திரனுக்கு ஒரு எலி காமெடி இருக்கிறது. நிழல்கள் ரவி சாருக்கு ஒரு டாய்லெட் காமெடி இருக்கிறது. யாஷிகா ஆனந்திற்கு ஒரு பாட்டில் காமெடி இருக்கிறது. கஸ்தூரி மேடத்திற்கு ஒரு புக் காமெடி இருக்கிறது. இதற்கெல்லாம் திரையரங்கத்தில் கைத்தட்டல் கிடைக்கும். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நகைச்சுவை காட்சிகளில் பங்களிப்பு இருக்கிறது.

ஒரு படத்திற்கு மிகப்பெரிய பலமே இசைதான். இந்த படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடல்கள் வெளியாகி வெற்றி பெற்று இருக்கின்றன. படத்தைப் பார்க்கும்போது பின்னணி இசைக்காகவும் நீங்கள் கைதட்டுவீர்கள். குறிப்பாக மொட்டை ராஜேந்திரனுக்காக இவர் வாசித்திருக்கும் பின்னணி இசை ரசிகர்களை கவரும். இதற்காக ஆஃப்ரோவுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் ஹீரோயின் கீதிகா வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார். அவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்த திரைப்படத்தில் புதிதாக என்ன இருக்கிறது என்றால், ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் கௌதம் வாசுதேவ் மேனனும், செல்வராகவனும் வித்தியாசமான கேரக்டரில் நடித்திருக்கிறார்கள்.

ஒருவர் மிகுந்த உயரத்திற்கு செல்கிறார் என்றால் அதற்கு அவர் மட்டும் காரணம் அல்ல. உதாரணத்திற்கு ராமாயணத்தில் அனைவரும் ராமரை புகழ்கிறார்கள் என்றால்.. அவருடன் இருந்த சீதை, லட்சுமணன், விபீஷணன், பரதன், ராவணன் என எல்லா கேரக்டரும் சேர்ந்தது தான் ராமர் எனும் வெளிப்பாடு. அந்த வகையில் ஒருவர் உயரத்திற்கு செல்கிறார் என்றால் அவருடைய தனித்திறமை மட்டும் அதற்கு காரணம் அல்ல. அவரை சுற்றி இருப்பவர்களும் தான் காரணம் என்பேன். இங்கு நான் உயர்வதற்கு சிலம்பரசன், ஆர்யா என பலரும் காரணமாக உள்ளார்கள்.

மே 16ம் தேதி அன்று இப்படம் வெளியாகிறது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் காமெடியை இடம்பெறச் செய்திருக்கிறோம். டி டி ரிட்டர்ன்ஸ் திரைப்படத்தை விட மும்மடங்கு காமெடியுடன் கூடிய விருந்து இருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள்,” என்றார்.

நடிகர் சிலம்பரசன் பேசுகையில், ”இந்தப் படத்தின் முந்தைய பாகங்களை பார்த்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். நான் முதலில் சினிமா ரசிகன். ஒரு ரசிகனாகத்தான் திரைப்படத்தை பார்ப்பேன். அது சந்தானம் படமாக இருந்தாலும் அவருக்கும், எனக்குமான நெருங்கிய தொடர்புகளை எல்லாம் படம் பார்க்கும்போது சற்று தள்ளி வைத்து விடுவேன். அந்த வகையில் ஒவ்வொரு படத்திற்கும் நிறைய மெனக்கெட்டு வித்தியாசமாக ரசிகர்களுக்கு ஏதாவது ஒன்றை வழங்க வேண்டும் என கடுமையாக உழைக்கிறார் சந்தானம். இந்தப் படத்தின் பார்ட் 1 பார்ட் 2 என இரண்டு பாகத்தையும் சிறப்பாக உருவாக்கி இருப்பார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதும் சிறப்பாக இருக்கிறது. குறிப்பாக சந்தானத்தின் உடல் மொழி, வசன உச்சரிப்பு நன்றாக இருக்கிறது. முதலில் இந்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நடிகர் ஆர்யா எனக்கு நெருங்கிய நண்பர். நண்பர் ஆர்யாவுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

இயக்குநர் பிரேம் ஆனந்த் – சந்தானத்தின் பிரத்யேக குழுவில் இருப்பவர். இங்கு அவருடைய குழுவில் உள்ள முருகன், சேது ஆகியோரை மேடையில் சந்தானம் அறிமுகப்படுத்தினார். இவர்கள் இருவரும் ‘மன்மதன்’ பட காலகட்டத்திலேயே படப்பிடிப்பு தளத்தில் இவர்களுடன் சந்தானம் விவாதித்துக் கொண்டிருப்பார். இவர்கள் யார் என மனதிற்குள் கேள்வி எழும். சந்தானத்திடம் கேட்ட போது என்னுடைய நண்பர்கள் தான் என விளக்கம் அளித்தார். இதை ஏன் நான் விவரிக்கிறேன் என்றால் அன்று தொடங்கிய அவர்களின் நட்பு இன்று வரை தொடர்கிறது. இந்தப் படம் வரை ஒரு துளி அன்பும், அக்கறையும் குறையாமல் அவர்கள் தங்களுடைய உழைப்பை வழங்குகிறார்கள். இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதனால் இயக்குநர் பிரேம் ஆனந்த் உள்ளிட்ட அந்த மூவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இசையமைப்பாளர் ஆஃப்ரோ புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கொண்டிருக்கிறார். அதனால் அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘வேட்டை மன்னன்’ படத்தில் நடித்த போதே எனக்கு ரெடின் கிங்ஸ்லியை தெரியும். அப்போதே இயக்குநர் நெல்சனிடம் இவர் எதிர்காலத்தில் பெரிய காமெடியனாக வருவார் என்று சொன்னேன். அப்போது நெல்சன் சிரித்தார். இன்று நெல்சன், ரெடின் இல்லாமல் எந்த படத்தையும் இயக்குவதில்லை.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

இந்தப் படத்தை பார்த்தேன். எங்கள் இயக்குநர் கௌதம் மேனனை இப்படி செய்வீர்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. இதற்காகவாவது உங்களை நான் சும்மா விடப்போவதில்லை. இருந்தாலும் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.

சந்தானத்தை பற்றி சொல்வதற்கு நிறைய இருக்கிறது. சந்தானம் எல்லா மேடைகளிலும் உங்களை குறிப்பிட்டு பேசுகிறார். இதன் பின்னணி என்ன என்று என்னிடம் பலமுறை பலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் அதுதான் அவரின் கேரக்டர் என பதிலளித்திருக்கிறேன்.

இந்தத் தருணத்தில் அனைவரிடத்திலும் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஏதாவது ஒரு உதவியை செய்கிறீர்கள் என்றால் எதையும் எதிர்பார்க்காமல் செய்யுங்கள். எதிர்பார்ப்பை மனதில் வைத்துக் கொண்டு யாருக்கும் உதவ வேண்டாம். சிலர் நாம் செய்த உதவியை மனதில் வைத்துக் கொண்டு அதற்கு உரிய மரியாதையை அளித்து பேசுவார்கள். பலர் இதை புறக்கணித்து விடுவார்கள். அதனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உதவி செய்யுங்கள்.

சந்தானத்தின் இப்படம் அவருடைய நெக்ஸ்ட் லெவலாக இருக்கும்.

‘எஸ் டி ஆர் 49’ இல் நாங்கள் இருவரும் இணைந்து இருக்கிறோம். ஏன் என்பதை சொல்ல விரும்புகிறேன். இன்றைய சினிமாவில் காமெடி குறைந்து விட்டது.

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்”

துருவ் விக்ரம் நடிக்கும், “பைசன் காளமடான்” திரைப்படம், வரும் அக்டோபர் 17, தீபாவளி கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகிறது !!

இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில், தமிழ் திரையுலகில் மிகவும் எதிபார்க்கப்படும், ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பைசன் காளமாடன்” திரைப்படம், வரும் 2025 அக்டோபர் 17 அன்று, தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், துணிவும் தைரியமும் நிறைந்த ஒரு விளையாட்டு வீரனின், ஆழமான கதையை சொல்ல வருகிறது.

நடிகர் துருவ் விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், அனுபமா பரமேஸ்வரன், இயக்குநர் ஆமீர், இயக்குநர் லால், பசுபதி, மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தமிழ்த் திரையுலகப் பயணத்தில் மற்றொரு மைல்கல்லாக இப்படம் அமைந்துள்ளது. மாறுபட்ட கதைக்களத்தில், அழுத்தமான திரைக்கதையுடன், மிகச்சிறந்த தொழில் நுட்ப கலைஞர்களின் உழைப்பில், புதுமையான அனுபவம் தரும் படைப்பை, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் வழங்கியுள்ளது.

CHENNAI WELCOMES A MAGICAL SUMMER WITH HELLO KITTY AND FRIENDSFUN FAIR AT PHOENIX MARKETCITY!

Chennai, May 5th 2025: Phoenix Marketcity, Chennai officially opened the doors to Holiday Land with the grand launch of Hello Kitty and Friends Fun Fair – a spectacular celebration that brought imagination to life for children and families across the cityrecently. 

At the heart of this celebration was the magnificent decor – a vibrant, carnival-inspired installation designed to transport visitors into the charming world of Hello Kitty and Friends. With towering circus tentsspinning wheelscushioned slides, and mini Ferris wheels, every element of the décor was thoughtfully curated to evoke joy, nostalgia, and wonder. The installation also featured oversized Sanrio mascots and characters like Hello Kitty, My Melody, Pompompurin, Keroppi and Badtz-Maru — inviting little ones into a lively setting bursting with colour, music, lights, and laughter.

The event welcomed over 30 mom influencers and their children, who were among the first to explore this immersive space. Guests enjoyed a series of engaging activities including creative DIY corners by Skillo DIY Parties, delightful nail art sessions by Nails & Beyond, tasty treats from in-house F&B partners, and cheerful photobooth corners to capture the day’s magic.

As part of the Holiday Land celebrations, Phoenix Marketcity also hosted the “A Slice of Fun” Bento Cake Workshop on April 26th and 27th in collaboration with Food Consulate. Kids had a blast decorating their own bento cakes, adding a sweet and creative touch to the magical world of Holiday Land.

The excitement continues at Phoenix Marketcity, with a lineup of engaging activities that have already delighted visitors and more fun still to come! On May 3rd and 4th, kids aged 4 and above enjoyed a variety of DIY Activities, crafting their own stuffed toys, designing cool caps, and creating adorable candles. The sessions were a huge hit, sparking creativity and joy in young minds! But the fun doesn’t stop there! On May 10th and 11th, visitors aged 10 and above can unleash their creativity at the Tufting Workshop, designing vibrant Holiday Land-themed rugs to take home as a special keepsake.

Hello Kitty and Friends Fun Fair and the enchanting world of Holiday Land will continue to spread joy all summer long, with the installation live at Phoenix Marketcity until the first week of June. With larger-than-life décor, a magical atmosphere, and endless activities for families, Phoenix Marketcity is truly the ultimate summer destination in Chennai!

உடனடிநோயறிதல்காரணமாகத்தீர்த்துவைக்கப்பட்டஎட்டுவயதுசிறுமியின்மருத்துவமர்மம் 

– சென்னை, 26 ஏப்ரல், 2025

ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில், சிறுநீர் கட்டுப்பாடின்மை காரணமாகப் பல ஆண்டுகளாக தொடர்ந்து அசௌகரியத்தை அனுபவித்த எட்டு வயது சிறுமிக்கு, ஒரு தனித்துவமான பைலேட்ரல்இன்ட்ராவெசிகல் ரீ-இம்பிளான்டேஷன் (Bilateral Intravesical Reimplantation Surgery) அறுவைs சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எக்டோபிக் யூரிட்டர் (Ectopic Ureter) எனப்படும் அரிய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனக்கண்டறியப்பட்டு, அறுவைச் சிகிச்சையினால் இறுதியாக முழு நிவாரணம் பெற்றுள்ளார். அவர், இன்று குணமடைந்து வருவது விடாமுயற்சி, கருணைகூர் பராமரிப்பு, மற்றும்முழுமையான மருத்துவ நிபுணத்துவத்தின் வல்லமைக்கு சான்றாக நிற்கிறது.

எக்டோபிக் யூரிட்டர் என்பது சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பைக்கு சிறுநீரைக் கொண்டு செல்லும் சிறுநீர்க்குழாய், சிறுநீர்ப்பையுடன் சரியாக இணையாமல், சிறுநீர்ப்பைக்கு வெளியே இணைந்திருக்கும் ஒரு பிறவிகுறைப்பாடாகும். இது சிறுநீர் வெளியேற்றத்தில் ஒழுங்கற்றத்தனத்தை ஏற்படுத்தி, சிறுநீர் கட்டுப்பாடின்மைபோன்ற அறிகுறிகளைத் தோற்றுவிக்கும், குறிப்பாக பெண்களில்.

குழந்தைப் பருவத்திலிருந்தே, அச்சிறுமி தொடர்ந்து சிறுநீர் கசிவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் இரவும் பகலும் டயப்பர்களையே சார்ந்து இருக்க வேண்டியநிலையிருந்தது. பல ஆண்டுகளாக ஒரு தீர்வைக் கண்டுபிடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவருடைய பிரச்சனை என்பது மீண்டும் மீண்டும் வரும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும்வுல்வோவஜினைடிஸ் (Vulvovaginitis) என்று தவறாகக்கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான ஈரப்பதம், கடுமையான தோல் உரிதல் போன்ற உடல் அசௌகரியத்துடனும், தனிமை, பழிச்சொல் போன்றமனவலியுடனும் போராடியுள்ளார்.

ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையின் குழந்தை -சிறுநீரக மருத்துவ நிபுணரும், மூத்த ஆலோசகரும், மருத்துவருமான சங்கீதாவின் பராமரிப்பின் கீழ் வந்தபோது, ​​குழந்தையின் பயணம் நம்பிக்கைக்குரிய திருப்பத்தை எடுத்தது. விரிவான மருத்துவ மதிப்பீட்டின் போது, ​​ சிறுநீர்க்குழாயிலிருந்து தொடர்ச்சியான சிறுநீர் கசிவிற்குக் காரணம், எக்டோபிக் யூரிட்டராக இருக்குமோஎன்ற சந்தேகத்தை அடைந்தது மருத்துவ குழு. 

அல்ட்ராசவுண்ட், MR யூரோகிராம் மற்றும் சிஸ்டோஸ்கோபி உள்ளிட்ட மேலதிக மருத்துவ ஆய்வுகள், குழந்தையின் நிலை குறித்து முக்கியமான நுண்ணறிவுகளை வழங்கின. நோயைக் கண்டறிந்ததும், அறுவைச் சிகிச்சை தான் தீர்வுஎனும் தெளிவு கிடைக்கப்பெற்றது. குழந்தை அறுவைச்சிகிச்சை நிபுணரும் மருத்துவரான ராகுல் M அவர்களின் நிபுணத்துவத்தின் கீழ், குழந்தைக்கு பைலேட்ரல்இன்ட்ராவெசிகல் யூரிட்ரிக் ரீ-இம்பிளான்டேஷன் (Bilateral Intravesical Ureteric Reimplantation Surgery) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறுவைச் சிகிச்சைக்குப் பிந்தைய மாற்றம் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாகச் சிறுநீர்கட்டுப்பாடின்மையில் போராடிய பிறகு, அந்த சிறுமிதற்போது பகலிலும் இரவிலும் நிம்மதியாக இருக்கிறார்.இரண்டு மணி நேரம் வரை சிறுநீரைக் கட்டுப்படுத்தும்சாதனை என்பது, ஒரு காலத்தில் சாத்தியமற்றதாகஇருந்தது. இப்போது அவர் புது நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்.

“எக்டோபிக் யூரிட்டர் என்பது அரிதான நோயாகஇருந்தாலும், விடாப்பிடியான சிறுநீர் கட்டுப்பாடின்மைக்கு ஒரு மறைமுக காரணமாக இருக்கலாம், குறிப்பாக இளம் பெண்களில்” என்று மருத்துவர் சங்கீதா விளக்கினார். “இந்த விஷயத்தில், விரிவான வரலாறு மருத்துவ பரிசோதனைகளின் வழியாக மூல காரணத்தைக் கண்டறிந்து, அவளுக்கு ஒரு சாதாரண, மகிழ்ச்சியான குழந்தைப் பருவத்தை அனுபவிக்க ஒரு வாய்ப்பை வழங்க எங்களுக்கு உதவியது” என்றார்.

சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை, ஒரு முன்னணி சுகாதார நிறுவனமாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பை குடல், பெண்கள் மற்றும் குழந்தை நலம், எலும்பியல், மூட்டு புணரமைப்பு, சிறுநீரகம், சிறுநீரகம் முதலிய சிறப்புப் பிரிவுகளில், மேம்பட்ட மருத்துவமும், அறுவை சிகிச்சை வசதியும் வழங்குகின்றது. பிரத்தியேக நிபுணர்கள் குழு, 50+ கிரிட்டிக்கல் கேர் படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன் தியேட்டர்கள், ஒரு மேம்பட்ட கேத் லேப், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல் நுண்ணோக்கி, உறுப்பு மாற்று சிகிச்சை வசதிகள், 24/7 டயாலிசிஸ் பிரிவு போன்ற அதி நவீன வசதிகளின் மூலம் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ சேவையை, உலகம் முழுவதும் உள்ள நோயாளிகளுக்கு வழங்குகின்றது.

’ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்பட விமர்சனம்

அடர்ந்த காடு பகுதிகளில் கொலை ஒன்று நடக்க அந்த கொலை வழக்கை விசாரிக்க தொடங்கும் போது காவல்துறை அதிகாரி கதாநாயகன் நானிக்கு, ஒரே மாதிரியான உலகில் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலர் கொடூரமாக முறையில் கொலை செய்யப்படுவதாக தகவல் கிடைக்கிறது.

பலர் கொடூரமாக முறையில் கொலை செய்யப்படுவதாக உள்ள அந்த வழக்குகள் பற்றி விசாரிக்கும் தொடங்கியதும், அதன் பின்னணியில் கொடூரமான கருப்பு உலகம் ஒன்று இருப்பது கதாநாயகன் நானிக்கு தெரிய வருகிறது.

அந்த கருப்பு உலகம் எங்கிருக்கிறது?, அந்தக் கருப்பு உலகத்தில் தலைவர் யார்?, அவர்கள் அரங்கேற்றம் கொடூரமான கொலைகளுக்கான நோக்கம் என்ன?, அந்த கருப்பு உலகத்தின் தலைவனை கண்டு பிடிக்க களத்தில் இறங்கும் கதாநாயகன் நானி குற்றவாளிகளை கண்டுபிடித்தார் கண்டுபிடிக்கவில்லையா என்பதுதான் இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நானி நடித்திருக்கிறார்.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் கதாநாயகன் நானி காக்கி சாட்டை அணியாத காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் , காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாகவும் கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்திருக்கும் கதாநாயகன் நானி நடிப்பு மற்றும் வித்தியாசமான மேனரிஷம் மூலம் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

இந்த ‘ஹிட் – தி தேர்ட் கேஸ்’ திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீரிநிதி ஷெட்டி நடித்துள்ளார்.

கதாநாயகி ஸ்ரீரிநிதி ஷெட்டிக்கு திரைப்படத்தில் பெரிய அளவில் வேலை ஒன்றும் இல்லை என்றாலும், அவரையும் திரைக்கதையோடு பயணிக்க வைக்க மேற்கொண்ட முயற்சிகள் திரைப்படத்திற்கு பெரிய அளவில் பலமாக அமைந்திருக்கிறது.

சூர்யா ஸ்ரீநிவாஸ், அதில் பாலா, ராவ் ரமேஷ், சமுத்திரகனி, கோமளி பிரசாத், மகந்தி ஸ்ரீநாத், ரவீந்திர விஜய், பிரதீக் பாபர், அமித் சர்மா என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் மிகவும் பொருத்தமான தேர்வாக அமைந்துள்ளார்கள்.

ஒளிப்பதிவாளர் சானு ஜான் வர்கீஸ் திரைபபடத்திற்கு மிகப்பெரிய பலம். சண்டைக்காட்சிகளும், வன்முறை காட்சிகள் அதிக அளவில் திரைப்படத்தில் இருந்தாலும், அதை ஒளிப்பதிவு மூலம் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் மிக்கி ஜே.மேயரின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்தையும், விறுவிறுப்பையும் பல மடங்கு இசையால் உயர்த்திருக்கிறார்.

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரை, கமர்ஷியல் மாஸ் ஆக்‌ஷன் திரைப்படமாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சைலேஷ் கோலானு,

நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்

‘லெவன்’ டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்

ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ லெவன் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

‘லெவன்’ டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ‘லெவன்’ முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி என் அழகர்சாமியும், தெலுங்கு வெளியீட்டு உரிமையை ருச்சிரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் என் சுதாகர் ரெட்டியும், மலையாள உரிமையை E4 என்டர்டெய்ன்மென்ட் முகேஷ் ஆர் மேத்தாவும், கர்நாடகா உரிமையை ஃபைவ் ஸ்டார் கே செந்திலும் பெற்றுள்ளனர்.

மே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே,பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி.ஜி. தியாகராஜன், டி. சிவா, இணை தயாரிப்பாளர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்கள் அமீர், செல்வராகவன், பிரபு சாலமன், ஏ. எல் விஜய் , விநியோகஸ்தர்கள் ஃபைவ் ஸ்டார் செந்தில், அழகர்சாமி, அருள்பதி , சரிகம ஐஸ்வர்யா, சஞ்சய் வாத்வா, முகேஷ் மேத்தா, மீனா சாப்ரியா, கிருஷ்ண ரெட்டி, பி. எல். தேனப்பன், கதிரேசன், ராஜ் டிவி ரவி, ரகுநந்தன், இயக்குநர்கள் விஷால் வெங்கட், பத்ரி, ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் எழுத்தாளர் செல்வேந்திரன் வரவேற்றார். இப்படத்தின் இசையை இயக்குநர் கே. பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ் தாணு வெளியிட, இயக்குநர் ஏ.எல். விஜய், தயாரிப்பாளர்கள் கதிரேசன், டி சிவா, தியாகராஜன், பி. எல். தேனப்பன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் அமீர் – செல்வராகவன் இணைந்து வெளியிட, விநியோகஸ்தர்கள் சஞ்சய் வாத்வா, அழகர்சாமி, செந்தில், முகேஷ் மேத்தா ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்கள்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில், ” நண்பர் அக்பரின் வாரிசான அஜ்மல் கான் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைக்கும் அளவிற்கு காட்சிகள் திரில்லிங்காக இருக்கிறது. இமானின் இசை படத்திற்கு கூடுதல் சிறப்பு. இந்நிறுவனம் தயாரித்த இந்த மூன்றாவது திரைப்படமும் வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், ”நீண்ட நாட்கள் கழித்து அரசாங்க அருங்காட்சியகத்தில் உள்ள இந்த கலையரங்கத்தில் நடைபெறும் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் இமான். அவர் எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நண்பராக இருப்பவர். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன். சிறப்பாக இருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கலந்து கொடுத்திருக்கும் பாட்டும் நன்றாக இருக்கிறது. இப்படத்தின் நாயகன் நவீன் மிகச் சிறந்த திறமைசாலி. அவருடைய திறமையை தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படத்தின் இயக்குநரை மனதாரப் பாராட்டுகிறேன். முன்னோட்டத்தில் சில காட்சிகளை பார்த்த உடனே இவருடைய திறமை வெளிப்பட்டது.‌ இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில், ” லெவன் திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். இன்ட்ரஸ்டிங்கான திரில்லர் திரைப்படம். இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடித்த நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்க்கும்போதுதான் படத்திற்கு ஏன் ‘லெவன்’ என பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் டிக்கெட்டை வாங்கி பார்க்கிறார்கள். ஆனால் பத்து கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கும் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு அனைவரும் ஒன்று கூடி விவாதித்து டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். நல்ல படமாக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல சங்கடங்கள் இருக்கிறது. ஆந்திராவுடன் ஒப்பிடும்போது ஒரு நல்ல படத்திற்கு தமிழ்நாட்டில் வசூல் சதவீதம் குறைவாகவே இருக்கிறது. சினிமாவைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை – இந்த மூன்று நாட்களில் தான் ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கிறது. அதனால் சிறிய முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கோரிக்கை. இதனை மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை பரீட்சார்த்தமாக சோதனை செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக திரையுலகினர் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை ரித்விகா பேசுகையில், “இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன் உருவாக்கிய‌ ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திலும் நான் நடித்திருக்கிறேன். அதற்கு ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன், ” என்றார்.

தயாரிப்பாளர் டி . சிவா பேசுகையில், ”தயாரிப்பாளர் அக்பர் தைரியமானவர். தொடர்ந்து படங்களை தயாரிக்கிறார். அவர் தயாரித்த இந்த திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த அரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் வழங்கியிருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினரை வாழ்த்துகிறேன். ‘லெவன்’ திரைப்படம், ‘ராட்சசன்’ படத்தை போல் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.

நடிகர் நவீன் சந்திரா மிகப்பெரிய திறமைசாலி. அவருக்கு இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வாய்ப்பினை வழங்கும் என்று நம்புகிறேன். திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் இமானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஃபாஸ்டஸ்ட் – எக்கனாமிக்- பிரண்ட்லி- லவ்லி – மியூசிக் டைரக்டர் இமானுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை வழங்க வேண்டும்,” என்றார்.

நடிகை ரியா ஹரி பேசுகையில், ”திரையுலகில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த மேடையில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அக்பர் சார்தான்.‌ அவர் மீதான அன்பின் காரணமாகவே அனைவரும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். நானும் அவருடைய பார்ட்னர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த திரைப்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் இமான் சாரை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். அவருடனான சந்திப்பின்போது எப்போதும் ஒரு பாசிட்டிவிட்டியை பரவச் செய்து கொண்டிருப்பார். அவரை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன். ஆனால் பேசியதில்லை.
அவருடைய இசையில் முதல் பாடல் உருவான‌ போது இதுதான் என்னுடைய ஃபேவரிட்டான பாடல் என சொன்னேன்.‌ இரண்டாவது பாடல் உருவான போது இந்தப் பாடல் தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது என்றேன். அதன் பிறகு காத்திருங்கள் தொடர்ச்சியாக பாடல்கள் வந்து கொண்டிருக்கிறது அனைத்து பாடல்களையும் கேளுங்கள் என்றனர். எனக்கு எல்லா பாடல்களும் பிடித்திருக்கிறது. ரசிகர்களுக்கும் அனைத்து பாடல்களும் பிடிக்கும். இதற்காக சரிகம நிறுவனத்திற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நவீன் அவர்களை இப்படத்திற்கான போட்டோ ஷூட்டின் போது முதன்முதலாக சந்தித்தேன். எனக்கு இருந்த தயக்கத்தை உடைத்து இயல்பாக பழகினார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கு சிறிய நுட்பமான பல விஷ‌யங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒட்டுமொத்த படக்குழுவையும் இயல்பாக வைத்திருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதது. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் ஒரு மேஜிக் இருக்கிறது. இந்த திரைப்படத்தை பார்க்கும்போது உங்களுக்குள் நிபந்தனையற்ற அன்பு இருப்பதை உணர்வீர்கள். அந்த அதீத அன்பு ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இந்த திரைப்படம் திரில்லராக இருந்தாலும் எமோஷனலான படம். மே 16அன்று வெளியாகும் இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”நான் திரைப்படத்தை இயக்குவதற்கும், திரைப்படத்தை பார்ப்பதற்கும் சம்பந்தமே இருக்காது. எனக்கு கிரைம் ஆக்ஷன் திரைப்படங்கள் தான் மிகவும் பிடிக்கும். இது போன்ற படங்களை பார்க்கும் போது மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கும் விஷ‌யம் இருக்கும். அடுத்து என்ன என்ற இன்ட்ரஸ்ட் இருக்கும். ‘விடியும் வரை காத்திரு’, ‘ஒரு கைதியின் டைரி’ என இரண்டு திரைப்படங்களை தான் இந்த வகையில் இயக்கியிருக்கிறேன். ‘லெவன்’ திரைப்படம் கிரைம் திரில்லர் என்று சொன்னவுடன் ஆர்வம் ஆகிவிட்டேன்.‌ இந்தப் படத்தை 16ம் தேதி அன்றே பார்க்க வேண்டும் என்று ஆவலும் ஏற்பட்டிருக்கிறது. ரசிகர்களிடமும் வரவேற்பு இருக்கும். படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகை அபிராமி பேசுகையில், ”மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் தொடக்கப் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி. இந்தத் திரைப்படத்தில் அழகான பாடல்களை வழங்கியதற்காக இசையமைப்பாளர் இமானுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் அஜ்மலுடன் இணைந்து பணியாற்றுவது அனைத்து நட்சத்திரங்களுக்கும் இயல்பாக இருக்கும். அவருடைய அக்கறையும், அன்பும் அதிகம். இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் அமீர் பேசுகையில், ”இப்படத்தின் நாயகன் நவீன் சந்திராவிற்கும், இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் இமானுக்கும், தயாரிப்பாளர் அஜ்மலுக்கும் என் வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அவ‌ர் மேடையில் ஒன்றிணைத்திருக்கிறார்.

நான் ஊதா கலர் ரிப்பனின் ரசிகன். நான் எல்லா தருணத்திலும் முணுமுணுக்கும் பாடல் அது. இங்கு மேடையில் பேசிய விநியோகஸ்தர் மதுரை அழகர் எந்த திரைப்படத்தையும் அவ்வளவு எளிதாக பாராட்ட மாட்டார். அவர் இந்தத் திரைப்படத்தை விநியோகிக்கிறார் என்றால், இந்த படம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்று அர்த்தம்.‌ அத்துடன் பிரபு சாலமன்- இமான் ‍ அக்பர் – இணைந்திருக்கிறார்கள் என்றால்.. அந்த படம் நன்றாக தான் இருக்கும். அக்பர் ஆடிட்டர் என்றாலும் சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர். அதனால் தான் படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டமும் , பாடல்களும் நன்றாக இருந்தன‌. ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்ற படங்கள் ரசிகர்களை எப்படி இருக்கை நுனியில் வைத்திருந்தனவோ அதேபோல் இந்த படமும் இருக்கும் என்று நம்புகிறேன், வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், ” மிகவும் மகிழ்ச்சி.‌ தயாரிப்பாளர்கள் அக்பர் – அஜ்மல் கான் ‍- ரியா ஹரி ஆகியோர்களுக்கு முதலில் நன்றி. திரையுலகில் 23 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருந்தாலும் இதுவரை கிரைம் திரில்லர் ஜானரிலான திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது.‌ அந்த வகையில் ‘லெவன்’ என்னுடைய இசையில் வெளியாகும் முதல் கிரைம் திரில்லர் திரைப்படம்.‌ இதற்காக இயக்குவர் லோகேஷ் அஜில்ஸுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ டி டியில் படங்களை பார்க்கும் போது ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்களை தான் விரும்பி பார்ப்பேன். உச்சகட்ட காட்சி வரை ஆர்வம் குறையாமல் பார்க்கலாம்.

நான் இயக்குநர் சுந்தர் சி உடன் எட்டு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அந்த தருணத்தில் அவருடைய உதவியாளர்களும் இருப்பார்கள். அவர்களும் படத்தை இயக்கும் போது எனக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். அந்த வகையில் லோகேஷ் என்னை சந்தித்து நான் சுந்தர் சி உதவியாளர். ஒரு கதையை உங்களிடம் சொல்ல வேண்டும் என கேட்டபோது, நான் மாஸான கமர்ஷியல் என்டர்டெய்னராக தான் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் கதையை கேட்கும் போது பக்காவான க்ரைம் திரில்லர் ஜானரில் இருந்தது. கதை கேட்டு முடித்ததும் அவரிடம் முதலில் இந்த கதைக்கு என்னை எப்படி யோசித்தீர்கள் எனக் கேட்டேன். இதுவரை நீங்கள் இந்த ஜானருக்கு இசை அமைக்கவில்லை. நீங்கள் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படம் வெளியான பிறகு அவர் பேசப்படுவார்.‌

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் எழுத்து சிறப்பானதாக இருந்தது. படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். படத்தைப் பார்த்த பிறகு அவரை போனில் பாராட்டினேன்.‌ இந்தப் படத்தில் வரும் சைலன்ஸ் கூட ரசிகர்களுக்கு பிடிக்கும்.

இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடகர் மனோ பாடியிருக்கிறார்.‌ இதுவரை எத்தனையோ பாடல்களுக்கு நான் இசையமைத்திருந்தாலும் எனது இசையில் மனோ பாடியதில்லை. இந்தப் படத்தில் அது நடந்து இருக்கிறது. இதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.‌ இந்தத் திரைப்படம் மே 16ம் தேதி அன்று வெளியாகிறது.‌ ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்று இந்த திரைப்படமும் இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. படத்தை திரையரங்கத்தில் பார்த்துவிட்டு உங்களுடைய அன்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் பிரபு சாலமன் பேசுகையில், ”தயாரிப்பாளர் அக்பருடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன்.‌ இந்தப் படத்தின் கதையை கேட்டதும் பிடித்திருந்தது. கதைக்குப் பொருத்தமான நடிகர்களை தேடத் தொடங்கினோம். அந்தத் தருணத்தில் அற்புதமான நடிப்புத் திறமை உள்ள நவீன் சந்திரா இந்த கதைக்குள் வந்தார். கதாபாத்திரத்தை திரையில் கச்சிதமாக காட்சிப்படுத்துவதில் திறமையானவர் நடிகர் நவீன் சந்திரா என்பதை படம் பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் சொல்வீர்கள். அதன் பிறகு ஒவ்வொருவராக படத்திற்குள் வந்தனர்.

இந்த படத்தை எனக்கு நெருக்கமாக உணர வைத்தது கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு தான். இதுபோன்ற திரைப்படங்களுக்கு ஒளி சூழல் முக்கியமானது.‌ அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

மே 16 இப்படம் திரையரங்கில் வெளியாகும் போது அதற்கான அங்கீகாரத்தை ரசிகர்கள் வழங்குவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.

நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், ”ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘சரபம்’ என்றொரு தமிழ் படத்தில் நடித்தேன்.‌ அதன் பிறகு தமிழில் ‘லெவன்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன்.
இந்த விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகவும் உணர்வுபூர்வமான தருணம் இது. இந்த கதையை கேட்ட பிறகு இதில் நடித்தால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. தயாரிப்பாளர் அக்பர், இயக்குநர் லோகேஷ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஆகிய மூவரும் சேர்ந்து படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை நேர்த்தியாக உருவாக்கினர். அதனால் இந்த திரைப்படத்தை அவர்களால் எளிதாக உருவாக்க முடிந்தது.

இந்த திரைப்படத்தை ஒரு படமாக இல்லாமல் இரண்டு படமாக படப்பிடிப்பு நடத்தினோம். இதன் போது நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. மே 16ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.‌ மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.

நான் இமானின் தீவிர ரசிகன். படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கின்றன‌. இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘விருமாண்டி’ படத்தில் அபிராமி அவர்களின் நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்கும் நாட்களுக்காக காத்திருந்தேன், நட்பாக பழகினார். காட்சிகளில் நடிக்கும்போது அவருடைய திறமையை நேரில் பார்த்து வியந்தேன். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.‌

ரியா ஹரி படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நம்பிக்கை அளித்தவர். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. எதிர்காலத்தில் அவர் மிகச்சிறந்த நடிகையாக வலம் வருவார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன், தெலுங்கு திரையுலகம் சார்பாக அவரை வரவேற்கிறேன்.

‘லெவன்’ படம் நன்றாக உருவாகியுள்ளது, படத்தை சிறப்பான தருணத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக காத்திருந்தோம். ரசிகர்களுக்கு நல்லதொரு படத்தை வழங்க வேண்டும் என தீர்மானித்து மே 16ம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில், ” இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்திற்கு நடிகர்கள் அமைந்துவிட்டால் பாதி வெற்றி உறுதியாகி விடும் என்று சொல்வார்கள் அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நவீன், திலீபன், ரியா, அபிராமி, ரித்விகா ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிடில்கிளாஸ் மாதவன் படத்தில் அபிராமியின் ரசிகன் நான்.

என்னுடைய முதல் படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க வேண்டும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற போது தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு என்னுடன் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான் காரணம். அவர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பின் காரணமாகத்தான் படத்தினை திட்டமிட்டபடி நிறைவு செய்தேன். அதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும், கார்த்திக்கும் நண்பர்கள். நான் உதவி இயக்குநராகவும், அவர் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி பயணத்தை தொடங்கிய தருணத்திலிருந்தே நண்பர்கள். அவன் தான் இந்தப் படத்திற்கு முதுகெலும்பு. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எனக்கு கூட சில தருணங்களில் சோர்வு எட்டிப் பார்க்கும். ஆனால் கார்த்திக் சோர்வே இல்லாமல் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இந்தப் படத்தின் டீசர் வெளியானவுடன் வேறொரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமானார்.

இமான் சார் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். படத்தில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். அதிலும் இடைவேளை தருணத்தில் அவர் வழங்கி இருக்கும் பின்னணி இசை நிச்சயம் பேசப்படும். இமான் சாரின் 2.0 வெர்ஷ‌னை இப்படத்தில் பார்க்கலாம்.‌

தயாரிப்பாளர் அக்பர் – படத்திற்கு நிதி அளிப்பதோடு மட்டும் இல்லாமல் இப்படத்திற்காக நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைப்பை கொடுத்தோமோ, அதற்கு நிகராக அவரும் உழைத்தார். அவர் ஒருபோதும் தயாரிப்பாளராக இருந்ததில்லை, படத்திற்காக அனைத்து பணிகளையும் அவர் செய்தார். அவரைப் பார்க்கும்போது எனக்கு சற்று பொறாமையாக தான் இருக்கிறது. ஏனெனில் அவ்வளவு ஸ்ட்ராங்கஸ்ட் பெர்சன்.‌ அவருக்காகவே இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும், வெற்றி பெற வேண்டும். ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் தான் ஒரு திரைப்படம் வெற்றி பெறும் என நம்புபவன். அந்த வகையில் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.‌

நடிகர் நவீன் ஒரு கதாபாத்திரத்திற்குள் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே இருப்பார். கேரக்டரை எழுதும்போது திரையில் எப்படி தோன்றும் என்று நினைத்து எழுதுவதில்லை.‌ ஆனால் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புவோம். படம் பார்த்த அனைவரும் படம் எப்படி நன்றாக இருக்கிறது என்று ஒருமித்த குரலில் சொன்னார்களோ, அதேபோல் அனைவரும் நவீன் சந்திராவின் நடிப்பையும் பாராட்டினார்கள். இந்தப் படம் நவீன் சந்திராவிற்கு தமிழ் திரையுலகத்தில் நல்ல பெயரை சம்பாதித்து தரும். நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

மே 16 அன்று ‘லெவன்’ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அற்புதமான திரையரங்க அனுபவம் காத்திருக்கிறது. அதைக் காண திரையரங்கத்திற்கு வாருங்கள்,” என்றார்.


Beat the Heat with Samsung’s Fab Grab Fest – Huge Discounts on Gadgets & Appliances!

• Up to 41% off on select models of Galaxy S series, Z series, and A series smartphones

• Up to 65% discounts on select models of tablets, accessories and wearables

• Up to 43% off on select refrigerators and washing machines and up to 58% off on WindFreeTM ACs 

• Up to 48% off on television models such as Neo QLED 8K, Neo QLED, OLED, QLED, The Frame, Crystal 4K UHD

CHENNAIMay 1, 2025 Samsung, India’s largest consumer electronics brand, is turning up the heat this summer with the return of its blockbuster sale — Fab Grab Fest! Kicking off on May 1, this much-anticipated shopping extravaganza brings sizzling, limited-time deals on a wide range of Samsung’s cutting-edge products, available exclusively on Samsung.com, Samsung Shop App and Samsung Exclusive Stores.

Fabulous Smartphone and Laptop Deals up for Grabs

As the sale kicks off, customers can enjoy up to 41% off on select models of Samsung Galaxy S, Galaxy Z, and Galaxy A smartphone series. Whether it is the latest foldables or powerful camera-centric models, there is something for every tech enthusiast. In addition, select Galaxy tablets, accessories and wearables will be available at discount ofup to 50% off, making it the perfect time to complete your Galaxy ecosystem.

Not just that, users seeking a seamless and versatile tablet-like experience can avail up to 35% off on select Galaxy Book5 and Book4 laptops and elevate their workflow with Galaxy AI.

Customers purchasing the all-new Galaxy Tab S10FE series will get 45W charger without cable worth INR 2999 free. 

Big Screen Luxury at Incredible Prices

Unmissable deals on Samsung’s flagship TVs are also lined up in this edition. Customers can expect up to 48% off on popular models including the Neo-QLED 8K, Neo QLED, OLED, QLED, The Frame, and Crystal 4K UHD series. Those looking to turn their walls into a confluence of art and technology can choose The Frame TV. With a flush fit, Samsung’s Frame seamlessly transcends into an art piece when turned off – and now, with an instant cart discount of up to INR 11000, premium design and cinematic experiences are more accessible than ever. Additionally, customers can avail benefits of up to INR 5000 exchange bonus on purchase of select TVs.

Smart Savings on Digital and Premium Home Appliances

Samsung is also rolling out exclusive offers on its full suite of digital appliances. Shoppers can enjoy deals across refrigerators, washing machines, microwaves, air conditioners, and monitors.

For those seeking top-tier performance and design, select models of side-by-side refrigerators, French-door refrigerators will be up for grabs at an exclusive deal of up to 43% off.

Select models of washing machines will be available at up to 43% off. Additionally, they will get a generous 20-year warranty on the Digital Inverter Motor for both Fully Automatic Front Loading and Fully Automatic Top Loading machines. For easy access, the affordable EMI option is also available starting at just INR 1590 for Fully Automatic Front Loading, INR 990 for Fully Automatic Top Loading, and INR 890 for Semi-Automatic Washing Machines.

To beat the heat this summer, select WindFree™ AC models can be availed at a fabulous deal of 58% off, with an additional 5% discount on the purchase of two or more units. These ACs also include a 5-year warranty on the PCB part and a 10-year warranty on the compressor, delivering both savings, comfort and peace of mind.

Step into Luxury with Samsung’s ‘Buy More, Save More’ Offers

Customers can continue to indulge in a premium experience through our ‘Buy More Save More’ deals. Shoppers purchasing two or more smart home appliances via Samsung.com or the Samsung Shop App will receive an additional discount of 5%. The programme invites users to handpick their own personalized bundles from a variety ofdigital appliances that suit their needs, while maximizingsavings.

Select Samsung monitors will be available at discounts of up to 60%. Customers purchasing Galaxy Book Series laptops can avail a multi-buy offer on monitors – where pairing the two together will mean more savings.Additionally, Samsung is offering an instant cart discount of up to INR 7000 on gaming monitors.

Easy Financing and Cashback Offers

Customers can avail cashback of up to 22.5% using debit and credit cards from leading banks including HDFC Bank and ICICI Bank. The maximum cashback available during the Fab Grab Fest is INR 25000, adding an extra layer of affordability to the existing unbeatable offers.

Fab Grab Fest Offers:

Available on Samsung.com, Samsung Shop App and Samsung Exclusive Stores
Products/CategoryConsumer Offer Highlight Models
SmartphonesUp to 41% off on MRP 
24 months NCEMI on Galaxy Foldables & up to 12 months NCEMI on Galaxy S series 
Galaxy Z Fold6, Galaxy Z Flip6, Galaxy S25 Ultra, Galaxy S25+, Galaxy S25, Galaxy S24 Ultra, Galaxy S24, Galaxy S24 FE,  Galaxy A56 5G, Galaxy A36 5G, Galaxy A55 5G, Galaxy A35 5G,  Galaxy M16, Galaxy M06, Galaxy F16, Galaxy F06
LaptopsUp to 35% off on MRP
Up to INR 17490 bank cashback 
Galaxy Book5 Pro 360, Galaxy Book5 Pro, Galaxy Book5 360, Galaxy Book4, Galaxy Book4 Pro
Tablets, Accessories & WearablesUp to 65% off on MRP
Up to INR 16000 bank cashback on Galaxy Watch 
Galaxy Tab S10 Series, Galaxy Tab S10 FE, Galaxy Tab S9 FE & FE+, Galaxy Tab A9+, Galaxy Tab A9, Galaxy Watch7 Series, Galaxy Watch Ultra, Galaxy Buds3 Pro,Galaxy Fit3
TVs Up to 48% off on MRPFree Soundbar or TV on purchase of select TVsBank cashback of 20% up to INR 20000Up to INR 11000 Instant Cart Discount on Frame TV1 + 1 year warranty Buy More Save More: Buy 2 get 5% extra Off*Get additional Trade-In benefit up to INR 5000* on select SKUs Neo QLED 8K, Neo QLED, OLED, QLED, The Frame, Crystal 4K UHD
RefrigeratorsUp to 43% off on MRP
Up to INR 5000 Instant Cart Discount on Side-by-Side & French Door Refrigerators
Up to INR 2500 Instant Cart Discount on Double Door Refrigerators 
Buy More Save More: Buy 2 get 5% extra Off*
20 Years warranty on Digital Inverter Compressor
Lowest EMI option starting INR 3990/mo.* with Bajaj Finserv
Side-by-Side & French Door Refrigerators
Washing MachinesUp to 43% off on MRPUp to INR 3000 Instant Cart Discount on Bespoke AI LaundryBuy More Save More: Buy 2 get 5% extra Off*EMI options starting INR 990/mo.* on Fully Automatic Top Load Washing MachinesEMI options starting INR 890/mo.* on Semi-Automatic Washing MachinesEMI options starting INR 1590/mo.* on Fully Automatic Front Load Washing Machines20 years warranty on Digital Inverter Motor on FATL & FAFLFront Load >= 8Kg | Top Load > =8Kg Washing Machines
MicrowavesUp to 39% off on MRP
Buy More Save More: Buy 2 get 5% extra Off*
10 year warranty on Ceramic Enamel Cavity
Convection Microwave Owens >= 28L
MonitorsUp to 60% off on MRP
Multi Buy offer on Monitors with purchase on Galaxy Book Series Laptops: Get up to 60% off on MRP of Monitors 
Up to INR 7000 Instant Cart Discount on Gaming Monitors
Buy More Save More: Buy 2 get 5% extra Off*
M5 FHD Smart Monitor, M7 UHD 4K Smart Monitor, Neo GG9 Gaming Monitor with Dual UHD resolution, FHD Monitor with IPS Panel
Air ConditionersUp to 58% off on MRP
EMI options starting INR 1990/mo.* with Bajaj Finserv
Buy More Save More: Buy 2 get 5% extra Off*
5 years comprehensive warranty, 10 year warranty on compressor
WindFree™ Series
Bank CashbackUp to 22.5% cashback with HDFC, ICICI and other leading bank debit and credit cards (Up to INR 17490) #
Up to 22.5% cashback with ICICI, HDFC, SBI and other leading bank cards (Up to INR 25000)^
# Smartphones, tablets, wearables, and laptops. 
^ Select TVs & Digital Appliacnces

“ரெட்ரோ|”திரை விமர்சனம்

சட்டவிரோத செயல்களை செய்துவரும் ஜோஜு ஜார்ஜ் மிகப்பெரிய தாதாவாக வளம் வந்து ஜோஜு ஜார்ஜ் தாய், தந்தை இல்லாத கதாநாயகன் சூர்யாவை வளர்த்து வருகிறார்.தனது காதலி கதாநாயகி பூஜா ஹெக்டேவுக்காக வெட்டு குத்து அடிதடியை விட்டுவிடுவதாக சூர்யா கதாநாயகி பூஜா ஹெக்டேவிடம் உறுதி கூறுகிறார்.

பூஜா ஹெக்டேவை சூர்யா திருமணம் செய்து கொண்டு அமைதியாக வாழ வேண்டும் என விரும்புகிறார்.ஆனால், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பூஜா ஹெக்டேவிறகாக தனது வளர்ப்பு தந்தையின் கையை துண்டாக வெட்டி விட, அவரது தந்தையின் ஆட்களையும் கொலை செய்து விடுகிறார்.

இதனால், சூர்யாவிடம் இருந்து இருந்து பூஜா ஹெக்டே தனது காதலில் இருந்து விலகிச் சென்று விடுகிறார். சூர்யா சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

கதாநாயகி பூஜா ஹெக்டே அந்தமானில் இருக்கும் தகவல் சூர்யாவுக்கு தெரிய வர பூஜா ஹெக்டேவை சமாதானப்படுத்தி அவர் விரும்பியது போல், அடிதடி இல்லாத அமைதியான புதிய வாழ்க்கையை தொடங்குவதற்காக அந்தமான் செல்லும் சூர்யாவுக்கு, அங்கே மிகப்பெரிய பொறுப்பும், யுத்தமும் காத்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சூர்யாவின் வாழ்க்கை என்னவானது?, பூஜா ஹெக்டே ,சூர்யா இருவரும் இணைந்தார்களா? இணையவில்லையா? என்பதுதான் இந்த ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் மீதிக்கதை.

தன்னை வளர்க்கும் தந்தையாக இருந்தாலும், அவருக்காக எதை வேண்டுமானாலும் செய்யும் துணிச்சல் மிக்க மகனாகவும், காதல் தோல்வியால் இது வந்து போகும் காதலனாகவும் அதன், பிறகு தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக போரிடும் போராளியாகவும், என ஒரே கதாபாத்திரத்திற்கு சூர்யாவின் நடிப்பின் மூலம் சிரிக்காமலேயே நடனம் ஆடுவது, ஆக்‌ஷன் காட்சிகளை ஸ்டைலிஷாக கையாள்வது என்று திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை காட்சிக்கு காட்சி ரசிக்க வைத்திருக்கிறார்.

கதாநாயகி பூஜா ஹெக்டே, கதையின் மையப்புள்ளியாகவும், கதையை நகர்த்திச் செல்லும் வழக்கமான கதாநாயகியாக அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜோஜு ஜார்ஜ் தனது இயல்பான நடிப்பை கொடுத்து தமிழ் திரைப்பட ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.

கிங் மைக்கல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன் என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வேலையை மிகச் சிறப்பாக எந்த ஒரு குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.

“டூரிஸ்ட் ஃபேமிலி” திரைவிமர்சனம்

சசிகுமார் மற்றும் மனைவி சிம்ரன் அவர்களுடைய இரண்டு மகன்கள் இவர்கள் குடும்பத்துடன் விலைவாசி ஏற்றத்தால் இலங்கையில் வாழ முடியாமல் தமிழகத்துக்கு கள்ளத் தோனியில் ராமேஸ்வரம் வந்து இறங்கிய அவர்களை யோகி பாபு  சென்னைக்கு அழைத்து வந்து, கேசவ நகரில் உள்ள ஒரு காலனியில் வீட்டை வாடைக்கு எடுத்துக் கொடுத்து அவர்களை தங்க வைக்கிறார். சசிகுமார் குடியிருக்கும் வீட்டிற்கு எதிரில் உள்ள எம்.எஸ. பாஸகரிடம் கார் ஓட்டுனர் பணி புரிந்து கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றி  வருகிறார்.

ஒரு பக்கம் இருக்க  இலங்கையில் இருந்து தமிழகத்தில் அகதிகளாக வந்தவர்கள் என்பதை மறைத்து வாழ வேண்டிய சவால் இந்த குடும்பத்துக்கு, மற்றொரு பக்கம்  ராமேஸ்வரத்தில் நிகழும் ஒரு குண்டு வெடிப்புக்கு காரணமானவர்களை பிடிக்க வேண்டிய சவால் காவல்துறைககு .

குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளிகளை காவல் துறையினர் கைது செய்தார்களா? கைது செய்யவில்லையா?

இலங்கையில் இருந்து வந்த அகதிகள் என்ற அடையாளம் தெரியாமல் வாழ்ந்தார்களா?

என்பதுதான் “டூரிஸ்ட் பேமிலி”  திரைப்படத்தின் கதை.

திரைப்படத்தில் தர்ம தாஸ் என்ற கதாபாத்திரத்தில் மனைவிக்கு நல்லதொரு கணவனாக, இரண்டு மகன்களுக்கு நல்லதொரு தந்தையாக, அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு நல்லதொரு சிறந்த மனிதனாக என தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.“அயோத்தி” திரைப்படத்திற்கு பின் இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் நடிகர் சசிக்குமாருக்கு மிகப்பெரிய பேரைப் பெற்று தரும் என்பது உறுதி.

வசந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரனும் தனது கதாபாத்திரத்திற்கு எந்த விதமான குறையும் இல்லாமல் தனது நடிப்பின் மூலம் சிறப்பு சேர்த்திருக்கிறார்.

தந்தை மகனுக்குமான  நடக்கும் பாச உரையாடல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்கள் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்து விடுகிறது. இரண்டாவது மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் கமலேஷ் ஜெகன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

இளங்கோ குமரவேல் மற்றும் ஸ்ரீஜா ரவி இருவருக்குமிடையே இருக்கும் காதல் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை  கண்கலங்க வைக்கிறது.

இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் தன் தாயை இழந்து தனிமையில் வாடும் ஒரு இளைஞனாக மிகச் சிறப்பான நடிப்பை கொடுத்து கதாபாத்திரமாகவே  வாழ்ந்திருக்கிறார.

கண்டிப்புடன் கூடிய அன்பு கொண்டவராக எம் எஸ் பாஸ்கர், காவல்துறை ஆய்வாளராக பக்ஸ், அவரது மனைவியாக நடித்தவர் இவர்களது மகள் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும்  யோகலெக்‌ஷ்மி என அனைவரும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு மிகச் சரியான பொருத்தமாக பொருந்தியிருக்கிறார்கள்.

தமிழ் திரைப்பட உலகில் எந்த ஒரு இயக்குனரிடமும் உதவி இயக்குனராக பணிபுரியாமல் இப்படியொரு தரமான படைப்பைக் கொடுத்து தமிழ் திரை உலகை உள்ள  அனைவரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.

மெட்ராஸ் மஹால் என்ற த்ரில்லர் திரைப்படத்தின் பூஜை

மெட்ராஸ் மஹால் என்ற த்ரில்லர் திரைப்படத்தின் பூஜை வெகு விமர்சையாக இன்று பிரசாத்லேபில் நடைபெற்றது .

BASAVA புரொடக்ஷன் வழங்கும் மெட்ராஸ் மஹால் இயக்குனர் ஜீ வி சீனு இயக்குகிறார் கதை திரைக்கதை வசனம் இயக்கம் இதற்கு முன் பானு என்கிற திரைப்படத்தை எடுத்து வெற்றிகண்டார். புது முகங்கள் நடிக்கும் நான்கு கதாநாயகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. கதாநாயகியாக அக்ஷரா அவர்கள் நடிக்கிறார். கிழக்கு வாசல் பொண்ணுமணி, இதயம் இது போன்ற படங்களில் ஒலிப்பதிவு செய்த கேமராமென் அவர்கள் இப்படத்திற்கு ஒலிப்பதிவு மேற்பார்வையும் ம் அதேபோல் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறார். காமெடி நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது. துளசிராமன் இசையமைக்கிறார். தயாரிப்பு வினோத் நம்பியார் எஸ் முருகன் அவர்கள் தயாரித்துள்ளார்.

படத்தின் பூஜையில் கலந்து கொண்ட நடிகர், மற்றும், தயாரிப்பாளர், காலேஜ் சேர்மேன் அட்வகேட் Mercury சத்யா பேசியதாவது,
அனைவருக்கும் வணக்கம், இன்று பிரசாத் லேப்பில் மெட்ராஸ் மஹால் என்ற புதிய படத்தின் துவக்க விழா இன்று அமோகமாக நடைபெற்றுள்ளது. அதற்கு நமக்கு வருகை தந்துள்ள மெயின் விஜயமுரளி அண்ணன் அவர்களுக்கும், கில்டு துரை அண்ணன் அவர்களுக்கும், சக்ரவர்த்தி, கேரளாவிலிருந்து வந்திருக்கிறார் தயாரிப்பாளர் விநோத் அவர்களுக்கும், திருவெற்றியூர் முருகன் அவர்கள், துணை தலைவர் சம்பத், இதனுடைய மேலாளர் தங்கவேலு அவர்களுக்கும், இசையமைப்பாளர் துளசிராமன் அவர்களுக்கும், மாதவன் சந்தோஷ் அவர்களுக்கும், துளசிராமன் அவர்களுக்கும், கதாநாயகி அக்ஷனா, கதாநாயகன் சீனு அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை சிறப்பித்த அனைவருக்கும் என் முதலில் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

பெருமையாக கூறிக்கொள்வது சிறிய தயாரிப்பாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமம். கோடி கோடியாக வைத்து எடுக்கவில்லை, அனைத்து நாடி நரம்புகளை வைத்து நம்முடைய சீனு இந்த படத்தை எடுக்கிறார்கள். தூண்களான விளங்கிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும், இந்தப் படம் வடசென்னை சார்ந்ததாகவும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் திரைப்படமாக அமையும், மிகப்பெரிய படம் எல்லாம் வந்திருக்கலாம், ஆனால் சீனு எழுதி தயாரித்த இந்த படம் மக்களுக்கு சென்றடையும், மாணவாகள் சமுதாயம் தற்போது சீரழிந்து வரும் நிலையில் அதனை எவ்வாறு அவர்கள் சீரழிந்து மீண்டும் நல்ல வழிக்கு திருந்தி நமது பெற்றோர்களுக்கு நல்ல பேரை எடுத்து நம்ம மக்களுக்கும் எடுத்துக்காட்டாக இந்த படம் அமையும் இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் வரவேற்பார்கள் ஆகையினால் இந்த சிறப்பு அக்ஷயதிருதி அன்று இப்படத்தின் பூஜையை போட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து பிஆர்,ஓ சார்பாக வந்த அனைவருக்கும், ஊடகத்துறை அனைவர்களுக்கும், பத்திரிக்கை துரை நண்பர்களுக்கும், உங்களின் உதவி வேண்டி உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறோம் என்றார்.

விஜயமுரளி அவர்கள் பேசியதாவது:

மெட்ராஸ் மஹால் படம் மிகப்பெரிய படமாக வெற்றியடையனும். கோபியின் முதல் படம் மெட்ராஸ் மஹால் படம் பி.ஆர்.ஓ. பண்றாங்க. கோபிக்காக இந்த படம் பெரிய படமாக அமையும். சத்யா சார் சொன்னார்கள், லட்சங்கள் படம் எடுக்குறனு சொன்னாங்க. இந்த படம் லட்சியம் படமாக அமையனும், சிறு முதலீட்டு படம் தான் சினிமாவை வாழ வைக்கிறது. எல்லாருக்கும் வேலை கொடுக்குது. ஆகவே இந்த படத்திற்கு அனைவரும் உதவி பெரிய அளவில் ஓடவைக்கனும். லாபம் கிடைக்கிற அளவிற்கு சினிமா வரவேற்கனும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

வினோத் அவர்கள் பேசியதாவது :

சீனு அவர்கள் என்னுடைய நண்பர், அவரை நம்பி நான் வந்திருக்கேன். இந்த மெட்ராஸ் மஹால் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டுக்கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை என்றார்.

கில்டு செயலாளர் துரைசாமி அவர்கள் பேசியதாவது :

இந்த படம் மெட்ராஸ் மஹால் திரைப்படம் இன்று பூஜை நடந்தது. இந்த விழாவிற்கு வந்துள்ள ஊடக நண்பர்கள், பத்திரிக்கை நண்பர்கள், படத்தின் குழுவினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மெர்குரி சத்யா அனைத்தையும் கூறிவிட்டார் பொதுவாகவே வர படம் தயாரிப்பில் இருக்கும்போது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். இந்த பூஜையிலே பார்த்திங்கனா பெரிய அளவிலே இருந்தது. இந்த மெட்ராஸ் மஹால் படத்தின் போஸ்டரே அவ்வளவு ஈர்ப்பை கொடுத்துள்ளது. பெரிய எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ளது. சீனு அவர்கள் அருமையான டிசைன் செய்து இந்த படத்தின் மூலமாக அனைவரும் பெரிய அளவில் சேரனும், இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறுகிறேன் என்றார்.

கில்டு துணை தலைவர் அவர்கள் பேசியதாவது :
அனைவருக்கும் வணக்கம் இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கிற கில்டு துணை தலைவர் என்ற முறையில் எங்களது அமைப்போட வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மெர்குரி சத்யா அவர்கள் ஏற்கனவே சொல்லிட்டாங்க இந்த திரைப்படத்தினுடைய வெப்பத்தை சமுதாயத்தினுடைய தாக்கத்தை எப்படி ஏற்படுத்த போதுனு மெர்குரி சத்யா அடையாளப்படுத்தியிருக்கிறார். ரொம்ப அருமையான தலைப்பு மெட்ராஸ் மஹால் ஒரு சென்னைக்குள்ள என்னல்லாம் நடக்குனு மட்டுமல்ல, வடசென்னைக்குள்ள நுட்பமா உள்ள புகுந்து ஒரு கதை களைப்ப அமைத்து ஒரு சாதாரண மனிதனுடைய விவரமான செய்திகளை நுட்பமான செய்திகளை தனது அடையாளத்தை வெளியீடுது, சிறு முதலீடு படம் என்று சொன்னார்கள், எவ்வளவு பெரிய கார் வாங்கினாலும், சின்னதாக இருக்கிற போல்டு நட் தான் முக்கியம், அந்த போல் நட் போல இயக்கக்கூடிய இயங்கிக்கொண்டிருக்கற அத்தனைக்கும் உறுதுணையாக இருக்கிற அச்சானியாக மெட்ராஸ் மஹால் இருக்க போகிறது என்பதிலை ஐயமில்லை. துரை அண்ணன் சொன்னாங்க தன்னுடைய படத்தின் பர்ஸ் லுக் அனைத்து மக்களிடமும் பெரிய அளவில் போய் சேர போகிறது என்பதில் எந்தஒரு மாற்றமில்லை. அப்படிப்பட்ட ஒரு சாதனையாக இந்த படம் தொடங்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் வம்சியை போல உருவாக்கும் என்பதில்லை ஐயமில்லை. இயக்குனர் சீனு அவர்கள் நேர்த்தியாக எடுத்துக்காட்டுவார்கள். இந்த ஊடகத்துறை நண்பர்கள் தான் சரியான முறையில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டு இந்த படத்தின் குழுவிற்கு எங்களது கில்டு சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

அனைத்து உறவுகளுக்கு வணக்கம்,
இந்த மெட்ராஸ் மஹால் படம் மிகப்பெரிய படமாக அமையும் என்றும் சிறு முதலீட்டு படம் என்று சொல்லாமல் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார், படக்குழுவினர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

மெட்ராஸ் மஹால் இந்த படம் வடசென்னையை வைத்து எடுத்த படம், இந்த படத்தை அனைவரும் பார்க்கவேண்டும் ஒரு நான்கு நபர்களை வைத்து எடுத்திருக்கிறார்கள் அனைவரும் சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கூறினார்.

ஹீரோயின் அக்ஷரா கார்த்திக் அவர்கள் பேசியதாவது:
மெர்குரி சத்யா அவர்களுக்கு நன்றி, சீனு அவர்களுக்கும் நன்றி அனைவரும் இப்படத்தை வாழ்த்தி பாராட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் துளசிராமன் அவர்கள் பேசியதாவது

இந்த படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், தயாரிப்பாளர் அவர்களுக்கும், இந்த படத்திற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. பத்திரிக்கையாளர் தயவு செய்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

ஹீரோ சஞ்சய் அவர்கள் பேசியதாவது :
மெட்ராஸ் மஹால் படத்தை அனைவரும் வாழ்த்தி முக்கியமாக தயாரிப்பாளர் அவர்களுக்கும், இயக்குனர் அவர்களுக்கும், நன்றி, தியேட்டரில் பார்த்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு பத்திரிக்கையாளரிடம் கேட்டுக்கொள்கிறேன்.

சபரி நாதன் அவர்கள் பேசியதாவது :

வணக்கம், இந்த படத்திற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி