Breaking
October 18, 2024

ஐ.எம்.டி.பியின் இந்தியாவிற்கான 250 தலைசிறந்த திரைப்படங்கள் பட்டியலில் 2023இல் வெளியான ஐந்து திரைப்படங்கள் இடம் பெற்றுள்ளன


Chennai-20.12.2023-ஐ.எம்.டி.பி (www.imdb.com), திரைப்படங்கள், தொலைக்காட்சித்
தொடர்கள், மற்றும் பிரபலங்கள் ஆகியவை சம்மந்தமான தகவல்களுக்கு மிகவும் பிரபலமானதும் அதிகாரப்பூர்வமானதுமான இந்நிறுவனம், இந்தியாவிற்கான 250 தலைசிறந்த திரைப்படங்களின் பட்டியிலில் 2023 ஆம் ஆண்டு வெளியான ஐந்து திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளது என் தகவலை வெளியிட்டுள்ளது. ஐ.எம்.டி.பியின் 250 தலைசிறந்த திரைப்படங்கள் பட்டியல் என்பது இந்தியத் திரைப்படங்களில் அதிக-தரமதிப்பீடு செய்யப்பட்டவற்றின் ஒரு தொகுப்பாகும், இது அனைத்துக் காலக்கட்டங்களிலும் வெளியான பல்வேறு வகையான மற்றும் பிராந்தியங்களைச்
சேர்ந்த அற்புதமான புதிய திரைப்படங்கள் மற்றும் பழைய திரைப்படங்களையும் கண்டறிந்து அவற்றைப் பார்த்து மகிழும் வாய்ப்பினை ரசிகர்களுக்கு வழங்குகிறது. இந்த பட்டியலில் உள்ள தலைப்புகள் யாவும் தொடர்ச்சியாக ஐ.எம்.டி.பியில் வாக்களிக்கும் அதன் பயனர்கள் வழங்கும் தரமதிப்பீட்டின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது.

இந்த பட்டியலில் இடம்பெறும் திரைப்படங்களில் உள்ளடங்குபவை: விது வினோத் சோப்ரா அவர்களின் 12த் ஃபெயில் (ஹிந்தி); மனோஜ் பாஜ்பேயி அவர்களின் மிகவும் புகழ்பெற்ற நீதிமன்ற காட்சிகள் நிறைந்த திரைப்படமான சிர்ஃப் எக் பந்தா காஃபி ஹை (ஹிந்தி); குற்றத்- திரில்லர் திரைப்படமான போர் தொழில் (தமிழ்); சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள ஆக்‌ஷன்-திரைப்படமான விடுதலை பகுதி 1 (தமிழ்); மற்றும் உயிர்வாழப் போராடும்

திரைப்படமா 2018 (மலையாளம்).

டிசம்பர் 20, 2024 இன்படி ஐ.எம்.டி.பி தரமதிப்பீடுகள் மற்றும் பட்டியல் தரநிலைகள்:

  1. 12த் ஃபெயில், 9.2 புள்ளிகளுடன் 20வது இடத்தில் உள்ளது
  2. 2018, 8.4 புள்ளிகளுடன் 104வது இடத்தில் உள்ளது
  3. விடுதலை பகுதி 1 8.3 புள்ளிகளுடன் 139வது இடத்தில் உள்ளது
  4. சிர்ஃப் எக் பந்தா காஃபி ஹை, 7.9 புள்ளிகளுடன் 163வது இடத்தில் உள்ளது
  5. போர் தொழில், 8.0 புள்ளிகளுடன் 193வது இடத்தில் உள்ளது
    இந்த முழு பட்டியலையும் இங்கே பாருங்கள் https://www.imdb.com/india/top-rated-indian-
    movies/. ஐ.எம்.டி.பி பயனர்கள் இவற்றையும் இன்னும் பல திரைப்படங்களையும் இந்த
    இணைப்பில் தங்களது ஐ.எம்.டி.பி வாச்லிஸ்டில் சேர்க்க முடியும் https://www.imdb.com/watchlist.

Related Post