ஃபைட் கிளப் மொத்த கதையும் வட சென்னையை மையப்படுத்தி நகர்கிறது.
கதாநாயகன் விஜய்குமார் கால்பந்தாட்டத்தில் மிகவும் ஆர்வமாக இருக்கும் கதாநாயகன் விஜய்குமாரை கால்பந்தாட்டத்தில் மிகப் பெரிய ஆளாக்க வேண்டும் என கார்த்திகேயன் சந்தானம் முயற்சி செய்கிறார்.
அண்ணன் கார்த்தி கேயன் சந்தனம் தன் பகுதி இளைஞர்களை எப்படியாவது கால்பந்தாட்ட வீரர்கள் ஆக்க வேண்டும் என பயிற்சி அளித்து வருகிறார்.
அண்ணன் கார்த்தி கேயன் சந்தனத்தின் தம்பி அவினாஷ் ரகுதேவன் தன் நண்பன் சங்கரதாஸ் இருவரும் சேர்ந்து போதைப்பொருள் மற்றும் கஞ்சா விற்கும் தொழிலாக செய்ய முடிவெடுக்கிறார்கள். தம்பி அவினாஷ் ரகுதேவன் அவருடைய நண்பன் சங்கரதாஸ் இருவரும் சேர்ந்துஆரம்பிக்கும் கஞ்சா விற்பனை செய்யும் தொழிலை அண்ணன் கார்த்தி கேயன் சந்தனம் தடுத்து நிறுத்துகிறார்.ஆத்திரம் அடைந்த அவினாஷ் ரகுதேவன் நண்பன் சங்கரதாஸ் சேர்ந்து கார்த்திகேயன் சந்தானத்தை இருவரும் கொலை செய்து விடுகிறார்கள்.
இந்தக் கொலை விஷயத்தில் உஷாராகும் சங்கரதாஸ் நைசாக அவினாஷ் ரகுதேவனிடம் பேசி சிறைக்கு அனுப்பி வைத்துவிட்டு சங்கரதாஸ் கட்சியில் சேர்ந்து அரசியல்வாதி ஆகிவிடுகிறார்.கொலை பழியை ஏற்றுக்கொண்டு சிறைக்கு சென்று தண்டனைக் காலம் முடிந்து சிறையிலிருந்து வரும் அவினாஷ் ரகுதேவன் தன்னை ஏமாற்றி சிறைக்கு அனுப்பிய சங்கரதாஸ் எப்படியாவது பழிவாங்க வேண்டும் என முடிவு செய்கிறார்.அரசியல்வாதியான சங்கரதாசை நெருங்க முடியாததால் அப்பகுதியில் தன் அண்ணன் மீது மிகப்பெரிய அளவில் மரியாதை வைத்திருக்கும் கதாநாயகன் விஜயகுமார் மற்றும் நண்பர்களிடம் உருக்கமாக பேசி அவினாஷ் ரகுதேவன் தன் வலையில் விழ வைக்கிறார்.
கதாநாயகன் விஜயகுமார் மற்றும் நண்பர்களுக்கு போதை ஏற்றி சங்கரதாஸ்தான் கார்த்திகேயன் சந்தானத்தை கொன்றான் என சொல்லி சங்கரதாஸ் எப்படியாவது பழிக்கு பழி வாங்க வேண்டும் என கதாநாயகன் விஜயகுமாரை உசுப்பி விடுகிறார்.இந்தப் பிரச்சனை இருதரப்பு இரு உள்ளவரிடம் மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்படுகிறது. இரு தரப்பு கேங் வாரில் இரு தரப்பிலும் உயிர் சேதம் ஏற்படுகிறது.
ஒரு கட்டத்தில் அவினாஷ் ரகுதேவன் சதியை கதாநாயகன் விஜயகுமார் தெரிந்ததா? தெரியவில்லையா? அடுத்து நடக்கும் பயங்கரம் என்ன என்பதுதான் இந்த ஃபைட் கிளப் திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்த ஃபைட் கிளப் திரைப்படத்தில் உறியடி திரைப்படத்தில் நடித்த விஜயகுமார் கதாநாயகனாக நடித்திருக்கிறார்
கதாநாயகன் விஜயகுமார் வடசென்னை இளைஞனாக மிகவும் நார்மலாக நடித்திருக்கிறார்.
கதாநாயகியாக மோனிஷா மோகன் மேனன் ,பெரிதாக இந்த திரைப்படத்தில் வேலை இல்லை ஒரு சில காட்சிகளில் மட்டும் வருகிறார்.
கார்த்திகேயன் சந்தானம் ஒரு ஒரு சில காட்சிகளில் வந்திருந்தாலும் மனதில் பதிகிறார்.
சங்கரதாஸ் கத பத்திரத்தை உணர்ந்து மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
அவினாஷ் ரகுதேவன் மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் சரவணவேல், ஜெயராஜ், வடசென்னை அன்பு, சார்பட்டா சாய் தமிழ், மூர்த்தி, ஆதிரா பாண்டிலட்சுமி, திருநாவுக்கரசு, ஜீவா ரத்தினம், கிரண் பெருமாள், கானா மைக்கேல், ராகுல் குணசேகரன், C.சந்தோஷ் குமார், அரசன், மோகனக்கண்ணன், விக்னேஷ் வடிவேல், நவீன் விக்ரம், அருவி பாலா, அஸ்வின் ஈசன்கொண்டா, அனைத்து கதாபாத்திரங்களும் நடிப்பின் மூலம் பிரதிபலிக்கிறது.
ஒளிப்பதிவாளர் லியோன் பிரிட்டோ ஒலிப்பதிவு வடசென்னை கண் முன்னே நிறுத்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசை அனைத்தும் திரைப்படத்திற்கு அருமையாக அமைந்துள்ளது.
இந்த பைட் கிளப் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமே ஒளிப்பதிவு மற்றும் இசை படத்தொகுப்பு இல்லையென்றால் திரைப்படம் சுமாராகத்தான் இருந்திருக்கும்.
பெரும்பாலான கதாபாத்திரங்கள் சிகரெட்,. கஞ்சா புகைப்பதும் தண்ணியடிப்பதையும் ரொம்பவே தவிர்த்திருக்கலாம்.
Overall rating———2
படம் முழுவதும் வரும் கஞ்சாவை குறைத்து இருந்தால் இன்னும் ரேட்டிங் அதிகரித்திருக்கலாம்
மொத்தத்தில் இது பைட் கிளப் அல்ல கஞ்சா கிளப்