“அனோமி” திரைவிமர்சனம்

ஒரு விபத்தில் தனது பெற்றோர்களை பறிகொடுத்த பாவனாவும் அவரது தம்பியும் தனிமையில் வசிக்கிறார்கள் பாவனா ஒரு தடவியில் நிபுணராக வேலை செய்கிறார் ஆனாலும் அவரது தம்பி தனது பெற்றோரின் மரணத்திலிருந்து வெளியில் வர முடியாமல் மனதளவில் பாதிக்கப்பட்டு அதற்கானஉலகில் சிகிச்சையில் இருக்கிறார்
இந்த நிலையில் அந்தப் பகுதியில் விசித்திரமான முறையில் பல தற்கொலைகள் நடக்கின்றன, அந்த தற்கொலைகளை தடவியல் நிபுணரான பாவனா அங்கு இருக்கும் நிகழ்வுகளை பார்வையிடுகிறார். அதே நேரத்தில் பாவனாவின் தம்பியும் அதே முறையில் தற்கொலை செய்து கொள்ள அதை விசாரிக்க இறங்குகிறார் பாவனா,
அதே நேரத்தில் மற்றொரு பக்கம் காவல்துறை அதிகாரியாக ரகுமான் அவருக்கு காவல்துறையில் ஏதோ ஒரு மன உளைச்சலில் இருந்து சரிவர வேலை செய்யாமல் இருக்கிறார்.இந்த நிலையில் அவரது உயர் அதிகாரிகள் கூப்பிட்டு அவருக்கு நேர கெடு வைத்து இதற்குள் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறார்கள்.

அதே நேரத்தில் பாவனா தனது தம்பியின் மரணத்தில் சந்தேகப்பட்டு நீதிமன்றத்தில் பல தடயங்களை சமர்ப்பித்து எனது தம்பி தற்கொலை செய்து கொள்ளவில்லை கொலை தான் செய்து கொண்டிருக்கிறார் என அது குறித்து விசாரிக்க வேண்டி மனு தாக்கல் செய்கிறார். கோர்ட்டும் காவல்துறையை வன்மையாக கண்டிக்கிறது, இந்த நிலையில் ரகுமானும் பாவனாவும் இணைந்து நடந்த அத்தனை தற்கொலைகளும் தற்கொலை அல்ல கொலை தான் என்பதை எவ்வாறு வெளிக்கொண்டு வருகிறார்கள் என்பதை இந்த அனோமி படத்தின் திரைக்கதை.

இந்தப் படத்தின் மிகப்பெரிய வளமை திரைக்கதை தான் அந்த சைக்கோ கொலைகாரன் ஏன் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களை தேர்ந்தெடுத்து கொலை செய்கிறான் அதற்குப் பின்னணி என்ன என்பதை சொல்ல வரும்போது நமக்கே சற்று பயமாக தான் இருக்கிறது ஆனாலும் அந்த விஷயத்தை திரைக்கதையில் இன்னும் ஆழமாக சொல்லி இருந்தால் திரைக்கதை ஒரு முழுமையான ட்ரெயின் திரில்லராக இருந்திருக்கும் அந்த விஷயத்தில் இயக்குனர் சற்று தொய்வடைந்து இருக்கிறார்

படத்தில் பாவனாவின் நடிப்பு அளவாக இருக்கிறது ரகுமானின் நடிப்பை வீணடித்திருக்கிறார்கள் மற்றும் பாவனாவின் தம்பி கொலைகாரர்கள் என அனைவரும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரங்களை செய்திருக்கிறார்கள்
இந்த மாதிரியான கிரைம் திரில்லர் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு இசையமை மிகவும் பலமாக இருக்கும் ஆனால் இது அதுவும் சற்றே தொலைவாக தான் இருக்கிறது மேற்கண்ட பல விஷயங்களை இயக்குனர் சிறப்பாக கவனித்து இருந்தால் அனோமி ஒரு உணர்வுபூர்வமான க்ரைம் திரிலராக வந்திருக்கும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *