Breaking
June 5, 2026

May 2026

MGM Healthcare Achieves India’s First LVAD Heart Pump Implant in Nearly 80-Year-Old Heart Failure Patient

Chennai, May 21, 2026: Setting a first-of-its-kind milestone in cardiac care in India, MGM Healthcare has successfully implanted a Left Ventricular Assist Device (LVAD), a mechanical heart pump, in a nearly 80-year-old retired Chennai resident suffering from advanced heart failure and co-morbidities including low blood pressure, worsening kidney function, and lung congestion.

The patient’s heart had become too weak to pump enough blood to the rest of the body, the vital function performed by the left ventricle. This condition is known as left ventricular failure, or advanced left ventricular systolic heart failure. As a result, he frequently suffered severe breathlessness and required repeated ICU admissions. On one occasion, he had to be readmitted to the ICU on the very same day he was discharged from the hospital. Seeking a permanent solution to his recurring breathlessness and the underlying heart condition, the patient opted for advanced definitive treatment.

Considering his advanced age, fragile clinical condition and worsening kidney function, the medical team ruled out heart transplantation and instead opted for implantation of a LVAD. The device sits inside the left ventricle and takes over much of the pumping function.

The LVAD implantation was performed by the team lead Dr. K R Balakrishnan, Chairman- Cardiac Sciences, Director- Institute of Heart and Lung Transplant & mechanical Circulatory Support and Dr. Suresh Rao K G, Co- Director- Institute of Heart and Lung Transplant & mechanical Circulatory Support at MGM Healthcare. The intervention was successful, following which the patient recovered in hospital for three weeks before being discharged. He is now living independently, able to go for regular walks and leading an active, brisk life.

In his comments, Dr. K R Balakrishnan said, “Our heart works as a two-sided pump, the right side sends blood to the lungs, while the left side pumps blood to the rest of the body. In this patient, the left side had become extremely weak and was barely able to perform its function, which is why he was experiencing frequent breathlessness and repeated hospitalisations. A conventional heart transplant was not feasible because of his advanced age, fragile condition and worsening kidney function. Even LVAD implantation carried significant risk, as multiple organs were beginning to fail. We therefore carried out a comprehensive evaluation, including heart function studies, lung pressure assessment, and checks of all major organs from the kidneys to the brain. Although LVAD is usually an elective procedure, in his case there was little time to wait as his organs were deteriorating, making timely intervention critical. We are extremely happy that the procedure went well.”

In his comments, Dr. Suresh Rao said, “LVAD technology was originally introduced as a bridge-to-transplant option for very sick patients awaiting a donor heart. Today, it is also being used selectively as a long-term therapy for patients who may not undergo transplantation. While the hospital has implanted LVADs in many patients below 65 years of age, this is the first time it has performed the procedure in a patient close to 80 years old.

In his comments Mr. Nilesh Mundada, COO, MGM Healthcare & Sr. VP – Finance, MGM Group, said, “MGM Healthcare’s commitment has reflected the milestone of pushing past the boundaries of advanced cardiac care as well as bringing in life-saving innovations to patients. The successful implanting of LVAD in a nearly 80-year-old patient, who had an advanced heart failure, emphasizes the strength of our experts. As heart failure continues to emerge as a growing health challenge, we will remain committed to delivering world-class treatment solutions that help us improve the outcomes and give patients renewed hope and quality of life.

உலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு

உலகை உலுக்கிய இசையின் அரை நூற்றாண்டு : கனெக்ட் மீடியா, மெர்குரி மூவீஸ் மற்றும் WPP புரொடக்ஷன் இணைந்து இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலியை உருவாக்கியுள்ளன !!

சென்னை, மே 16, 2026 — கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய திரையுலகில் இளையராஜாவின் 50வது ஆண்டு திரையுலக பயணத்தின் நினைவாக ஒரு பிரம்மாண்டமான சினிமா அஞ்சலியை உருவாக்கியுள்ளன.

1976 மே 14ஆம் தேதி வெளியான அன்னக்கிளி திரைப்படம், இந்திய சினிமாவின் ஆன்மாவையே மாற்றியமைத்த இசையை உலகிற்கு அறிமுகப்படுத்தியது. ஐம்பது ஆண்டுகள் கடந்தும், 09 மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட படங்களுக்கும், 9,000க்கும் அதிகமான பாடல்களுக்கும் இசையமைத்துள்ள இளையராஜாவின் படைப்புகள், உலக சினிமா வரலாற்றில் மிக ஆழமான உணர்வுகளையும் கலாச்சார தாக்கத்தையும் ஏற்படுத்திய இசையாகத் திகழ்கின்றன. இந்த விழா ஒரு சாதாரண மைல்கல் அல்ல; மனிதகுலத்திற்கு ஒரே ஒருவரால் வழங்கப்பட்ட அசாதாரண பரிசை கொண்டாடும் தருணமாகும்.

“இளையராஜா சார் இசை என்பது வெறும் பின்னணி இசை அல்ல; அது தலைமுறைகளின் உணர்ச்சி நினைவகம்,” என்று கனெக்ட் மீடியா நிறுவனத்தின் நிறுவனர் வருண் மாதூர் தெரிவித்தார். “அவர் திரையுலகில் 50 அசாதாரண ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், உலகத் தரத்துக்கு இணையான ஒரு படைப்பை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அவரது இசை ஒவ்வொரு படத்திலும் சாதித்ததுபோல, இந்த முயற்சியும் உலகத் தரத்திலான படைப்பாற்றலையும் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைக்கிறது என்றார்.”

இந்த அஞ்சலி, தொழில்துறையில் முன்னணியில் உள்ள AI தொழில்நுட்பங்களும், அடுத்த தலைமுறை திரைப்பட உருவாக்க முறைகளும் பயன்படுத்தப்பட்டு, உருவாக்கப்பட்ட ஒரு உணர்ச்சி மற்றும் காட்சியமைப்பு நிறைந்த சினிமா அனுபவமாக இருக்கும். உணர்வுகள், சினிமா கதை சொல்லல் மற்றும் காட்சித் தொழில்நுட்ப புதுமைகள் ஆகியவற்றின் மூலம், இளையராஜாவின் ஐம்பது ஆண்டு கால தாக்கத்தை இன்றைய தலைமுறைக்கும் அதே வலிமையுடன் கொண்டு சேர்க்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

“இளையராஜாவின் பாரம்பரியம் என்பது ஒரு இசையமைப்பாளரின் சாதனை மட்டும் அல்ல; அது அரை நூற்றாண்டாக கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் வாழும் உணர்வு,” என்று மெர்குரி குழுமத்தின் நிர்வாக இயக்குநரும் குழும தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீராம் பக்திசரண் கூறினார்.

“அந்த பாரம்பரியத்தை கொண்டாடுவதற்காக நாளைய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது எங்களுக்கு ஒரு பெருமையும் பொறுப்பும் ஆகும். AI தொழில்நுட்பம் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டுள்ள இந்த காலத்தில், இந்த முயற்சி திரைப்படத் துறையில் புதிய ஆர்வத்தை உருவாக்கும். அதே நேரத்தில், படைப்பாற்றல் கொண்ட கலைஞர்களை புறக்கணிக்காமல், தயாரிப்பு செலவுகளை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் வாய்ப்பையும் இது வழங்கும்.”

இந்த முயற்சியில் தனது AI மற்றும் படைப்பாற்றல் நிபுணத்துவத்தை வழங்கியுள்ள WPP புரொடக்ஷன், கலாச்சாரத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான புதிய ஒற்றுமையின் அடையாளமாக இதை பார்க்கிறது.

“நிலைத்திருக்கும் சிறந்த படைப்புகள் அனைத்தும் உணர்வு, கலாசாரம் மற்றும் புதுமை ஆகியவற்றின் சந்திப்பில் உருவாகின்றன,” என்று WPP புரொடக்ஷன் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கார்த்திக் நாகராஜன் கூறினார்.

“இந்த அஞ்சலி அதற்கான சிறந்த உதாரணம். இங்கு மிக முன்னேறிய AI தொழில்நுட்பங்கள் வெறும் காட்சிச்சிறப்புக்காக பயன்படுத்தப்படவில்லை; தலைமுறைகள் கடந்து பலரின் வாழ்க்கையின் பின்னணி இசையாக இருந்த ராஜா சார் இசையை கௌரவிக்கவே பயன்படுத்தப்படுகின்றன.”என்றார்.

அட்லீ,ப்ரியா அட்லீ தம்பதியின் மகளுக்கு “மியூ” (Miyou) எனப் பெயர் சூட்டியுள்ளார்கள்…

.

தமிழ்த் திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி ப்ரியா அட்லீ தங்களது பெண் குழந்தையின் பெயரை சமூக வலைத்தள பதிவின் மூலம் வெளியிட்டுள்ளனர். தங்களது மகளுக்கு “மியூ” (Miyou) என்று பெயர் வைத்துள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு, குழந்தையின் சிறிய கையை காட்டும் மென்மையான பாஸ்டல் நிற படத்துடன் பகிரப்பட்டுள்ளது. அதில், “எங்கள் இதயத்தில் மிகப்பெரிய இடத்தைப் பிடித்திருக்கும் ஒரு சிறிய உயிர்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.

இந்த பதிவை பகிர்ந்த தம்பதியினர்,“எங்கள் காதலின் கலைக்கு இப்போது ஒரு பெயர் வந்துவிட்டது “மியூ” (Miyou) — அழகு, மென்மை மற்றும் அன்பு. அன்புடன், மீர், ப்ரியா & அட்லீ ”என்று குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், “மியூ” என்ற பெயர் அழகு, மென்மை மற்றும் அன்பை குறிக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பெயர் வெளியானதும், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். உணர்ச்சிபூர்வமாகவும் எளிமையாகவும் அமைந்த இந்த அறிவிப்பு இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

இயக்குநர் பிரேம்குமார், பகத் பாசில் இணையும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது !!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்” படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த புதிய படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ஐசரி K. கணேஷ் அவர்களின் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் 32வது தயாரிப்பாக இப்படம் உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். தனித்துவமான கதைகளையும், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதைகளையும் தேர்ந்தெடுத்து வெற்றிபெறும் பகத் பாசில் மற்றும் மனதை தொடும் படைப்புகளால் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் பிரேம்குமார் இணையும் இந்த புதிய கூட்டணி, திரையுலகில் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வெற்றிப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், பல்வேறு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து வித்தியாசமான கதைக்களங்களை கொண்ட திரைப்படங்களை தயாரித்து வருகிறது. வணிக ரீதியிலும், உள்ளடக்க ரீதியிலும் வெற்றிபெற்ற பல படங்களை வழங்கியுள்ள இந்த நிறுவனம், தற்போது இந்த புதிய முயற்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இயக்குநர் C. பிரேம்குமார், “96” மற்றும் “மெய்யழகன்” போன்ற உணர்வுப்பூர்வமான திரைப்படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர். எளிமையான காட்சியமைப்புகள், மனதை வருடும் கதாபாத்திரங்கள் மற்றும் இயல்பான திரைக்கதைகளால் பாராட்டப்பட்ட அவர், இந்த புதிய படத்திலும் ரசிகர்களை கவரும் விதமான ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் பிரேம் குமாரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. புதிய கூட்டணியால் உருவாகும் இந்த படம், ரசிகர்களிடையே தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது

நாகர்கோவிலில் சமூக நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்

நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் மே 15-ஆம் தேதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த் தலைமை வகித்தார்.

நாகர்கோவில் ரவுண்ட் டேபிள் 176 (Nagercoil Round Table 176) மற்றும் நாகர்கோவில் லேடீஸ் சர்க்கிள் 196 (Nagercoil Ladies Circle 196) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இதில் சிறப்பு விருந்தினராகத் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியன் (Magesh Raj Pasilian) கலந்துகொண்டார்.

வழங்கப்பட்ட நலத்திட்டங்கள்:

  • செயற்கைக் கால்கள்: ‘ஸ்ரீ பாலாஜி ஆர்த்தோடிக்ஸ்’ (Sree Balaji Orthotics) நிறுவனம் தயாரித்த 27 செயற்கைக் கால்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.
  • மின்சார ஆட்டோக்கள்: பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 5 பெண்களுக்கு மின்சார ஆட்டோக்கள் (E-Autos) வழங்கப்பட்டன.

திட்டத்தின் நோக்கம்:

சுமார் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்ட இத்திட்டம், சமூக நலன் மற்றும் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை முதன்மை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சௌந்தர்யா ரஜினிகாந்த் பயனாளிகளுக்கு நேரில் நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தினார்.

KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்”

KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது !!

KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள இந்த திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வித்தியாசமான ஜோம்பி வகை ஜானரில் உருவாகி வரும் இப்படம், ஆக்ஷன், காமெடி மற்றும் ஹாரர் அம்சங்கள் கலந்த முழுமையான கமர்ஷியல் என்டர்டெய்னராக உருவாகி வருகிறது. பிரபு தேவாவின் ஸ்டைலும் , வடிவேலுவின் தனித்துவமான நகைச்சுவையும் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கவுள்ளது.

மலேசியாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பிரமாண்ட காட்சிகள் படத்தின் முக்கிய ஹைலைட்டாக அமையும் என படக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக வெளியான டைட்டில் டீஸர் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருந்தது. அந்த டீஸரில் ஜோம்பிகளால் சூழப்பட்ட சூழலில் பிரபு தேவா மற்றும் வடிவேலு துப்பாக்கியுடன் மாஸாக தோன்றிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. “ பிரபு வேலு”, “வடி தேவா” போன்ற நகைச்சுவை கலந்த பெயர்கள் ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் (Sam Rodrigues) எழுதி இயக்குகிறார். ஹாரர் அட்வென்ச்சர் பாணியில் உருவாகும் இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். H.C. வேணு ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்கத்தை டான் பாலா செய்துள்ளார். ‘அனிமல்’ திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync Cinema நிறுவனம் சவுண்ட் டிசைனை மேற்கொண்டுள்ளது. மேலும், தெலுங்கானா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனன் சவுண்ட் மிக்சிங் பணிகளை செய்துள்ளார்.

நடிகர் பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம், KRG நிறுவனத்தின் நான்காவது பிரமாண்ட தயாரிப்பாக உருவாகி வருகிறது. இந்தோனேசியாவின் Mount Bromo எரிமலை பகுதியில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்த நிலையில், விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

“பேங் பேங்” திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி !!

எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் ஸ்டைலிஷ் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பல்வேறு விதமான கதாபாத்திரங்களின் மூலம் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் ராம் போதினேனி, தற்போது தனது கலைப்பயணத்தில் இன்னொரு துணிச்சலான அடியை எடுத்து வைத்துள்ளார். அவரது முந்தைய படமான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். இப்போது தனது 23வது படமான #RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ராமின் பிறந்தநாளை முன்னிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள #RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. தெலுங்கு சினிமாவில் அரிதாக முயற்சிக்கப்படும் இந்த ஜானர், ரசிகர்களிடையே ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை, புதியதாக தொடங்கப்பட்டுள்ள Rapo Cinematics நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணா போதினேனி தயாரிக்கிறார். மேலும் இந்த முயற்சியின் மூலம், நடிகர்-இயக்குநர்களான N. T. ராமா ராவ், கிருஷ்ணா மற்றும் பவன் கல்யாண் ஆகியோரின் வரிசையில் ராம் போதினேனியும் இணைகிறார்.

படக்குழு வெளியிட்டுள்ள பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர், ராம் போதினேனியின் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது. லெதர் ஜாக்கெட்டுடன் பின்னால் இருந்து நிற்கும் ராமின் தோற்றம், படத்தின் டார்க், இன்டென்ஸ் மற்றும் தனித்துவமான மனநிலையை வெளிப்படுத்துகிறது. அவரது V-cut ஹேர் ஸ்டைல், கதாபாத்திரத்தின் அட்டகாசமான அணுகுமுறையை மேலும் வலுப்படுத்துகிறது.

போஸ்டரின் பின்னணியில் இடம் பெற்றுள்ள பிரம்மாண்டமான சிவப்பு நிற “V”, ‘வீரா’ என்பதையும், போராட்டம், ஆபத்து மற்றும் ஆதிக்கத்தையும் குறிக்கிறது. இருபுறமும் மங்கலாக தெரியும் உயரமான கட்டிடங்கள், குற்றச்செயல்கள் நிறைந்த குளிர்ச்சியான நகரத்தை நினைவூட்டுகின்றன. “The Story of a Lone Wolf” என்ற டேக் லைன், தனிமை, மனதின் அடி அழ உணர்வுகள் மற்றும் சிக்கலான உளவியல் பின்னணியுடன் நகரும் கதாநாயகனை சுட்டிக்காட்டுகிறது.

ராம் போதினேனி இயக்குநராக அறிமுகமாகும் #RAPO23, அவர் தானே உருவாக்கிய சக்திவாய்ந்த மற்றும் புதுமையான கதைக்களத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், ‘வீரா’வாக இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் ராம் நடிக்க உள்ளார். அந்த மாற்றம் ஏற்கனவே போஸ்டரின் ஸ்டைல் மற்றும் மூடில் தெளிவாக தெரிகிறது.

படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிப்பு: ராம் போதினேனி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து & இயக்கம் : ராம் போதினேனி
தயாரிப்பு: கிருஷ்ணா போதினேனி
பேனர்: Rapo Cinematics
மக்கள் தொடர்பு – யுவராஜ்

“எக்ஸாம்” திரைவிமர்சனம்

குரூப் 1, குரூப் 2 போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கிற சிலமுறைகேடு
களை மையமாக வைத்து உருவானதுதான் இந்த கதை இது.
“ஒரே ஒரு தேர்வு… ஆனால் பலரின் வாழ்க்கையை மாற்றும் போராட்டம்!”

கல்வி, போட்டித் தேர்வு, பெற்றோரின் எதிர்பார்ப்பு, மாணவர்களின் மனஅழுத்தம் — இவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் Exam. சாதாரணமாக ஒரு “எக்ஸாம் டிராமா” போல தோன்றினாலும், இதன் பின்னால் இருக்கும் சமூக அழுத்தங்களையும், மாணவர்கள் எதிர்கொள்ளும் மனநிலையையும் மிகவும் நெருக்கமாக காட்டுகிறது.
ஒரு முக்கியமான போட்டித் தேர்வை எழுத தயாராகும் சில மாணவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கதை நகர்கிறது.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பின்னணி, குடும்ப சூழல், கனவு மற்றும் அழுத்தங்கள் இருக்கின்றன.ஒருவருக்கு குடும்பத்தின் நம்பிக்கை,
மற்றொருவருக்கு வாழ்க்கையை மாற்றும் கடைசி வாய்ப்பு,
இன்னொருவருக்கு சமூக அழுத்தம்.இந்த எல்லா உணர்வுகளும் சேர்ந்து தேர்வு மையத்தில் வெடிக்கும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

துஷாரா விஜயன், அப்பாஸ், அதிதி பாலன் ஆகியோர் இந்த வெப் தொடரில்முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
துஷாரா விஜயன்தனது கதாபாத்திரத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார்.ஆனால், இந்தக் கதைக்கு அவர் எந்த மிகுந்த அளவிற்கு பொருந்துகிறார்என்ற கேள்வி எழுகின்றது. அதிதி பாலன் போலீஸ் அதிகாரிகதாபாத்திரம் என்றாலும், பாதி தொடர் ஒரு பத்துக்கு பத்து மேற்பட்ட அறைக்குள்ளே கடத்தப்பட்டநிலையில் முடிகின்றது
அப்பாஸ் ஒரு கதாபாத்திரத்தில் இன்னும் ஓரு அழுத்தமாக நடிக்க வைத்தியிருந்தால்.
இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.
தேர்வுமுறை
கேடுகளை மட்டும் தெளிவாக பேசியிருந்தால் கதைக்கு சிறப்பாக அமைந்திருக்கும்.

சென்னை – கிரசென்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மற்றும் RICS இணைந்து, இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த ரியல் எஸ்டேட் மேலாண்மை MBA படிப்பைத் தொடங்குகின்றன

சென்னை – கிரசென்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் மற்றும் RICS இணைந்து, இந்தியாவின் மிகவும் சிறப்பு வாய்ந்த ரியல் எஸ்டேட் மேலாண்மை MBA படிப்பைத் தொடங்குகின்றன — நாளைய நகரங்களை வடிவமைக்கும் தொழில் வல்லுநர்களை உருவாக்குகின்றன.

உலகம் உற்று நோக்கும் வேகத்தில் இந்தியா வளர்ச்சி பெற்று வருகிறது. பல்வேறு வளர்ச்சி நிலைகளில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் நகரங்கள், ₹111 லட்சம் கோடியைத் தாண்டிய தேசிய உள்கட்டமைப்புத் திட்டங்கள், மற்றும் 2030-ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13 சதவீதப் பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படும் ரியல் எஸ்டேட் துறை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, மேலாண்மை, தொழில்நுட்பம், நிலைத்தன்மை மற்றும் கட்டப்பட்ட சூழல் ஆகியவற்றின் சங்கமத்தை வழிநடத்தக்கூடிய தொழில் வல்லுநர்களுக்கான தேவை முன்னெப்போதையும் விட அதிகமாக உள்ளது.

இருப்பினும், இந்த சங்கமத்திற்கு முறையான கல்வி மூலம் குறிப்பிடத்தக்க அளவில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை. இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை பாரம்பரியமாக, தங்கள் அனுபவத்தின் மூலம் தங்கள் திறமையில் தேர்ச்சி பெற்ற நிபுணர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது — அவர்கள் திறமையானவர்களாகவும், வளமிக்கவர்களாகவும் இருந்தபோதிலும், தற்போது ஒவ்வொரு இந்தியரின் வாழ்வையும் தொடும் இத்துறைக்குத் தேவைப்படும் சர்வதேச அளவிலான மேலாண்மைக் கட்டமைப்புகள், பகுப்பாய்வுக் கருவிகள் அல்லது நிலைத்தன்மைச் சிந்தனைகள் அவர்களிடம் அரிதாகவே இருந்தன.

கிரசென்ட் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் (CSB), B.S. பட்டப்படிப்பின் கீழ்… தென்னிந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றான, சென்னையில் உள்ள அப்துர் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், இந்தத் துறையில் தீர்க்கமாக நுழைந்துள்ளது. ராயல் இன்ஸ்டிடியூஷன் ஆஃப் சார்ட்டர்ட் சர்வேயர்ஸ் (RICS) உடன் ஒரு மூலோபாயக் கூட்டணியில் உருவாக்கப்பட்ட ரியல் எஸ்டேட் மேலாண்மையில் MBA (MBA-REM) படிப்பை முறைப்படி அறிமுகப்படுத்தியதன் மூலம், CSB இப்போது அது சேவை செய்யும் தொழில்துறைக்கு ஏற்றவாறு துல்லியமாக வடிவமைக்கப்பட்ட ஒரு முதுகலைப் பட்டப்படிப்பை வழங்குகிறது.

உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கூட்டாண்மை

ஒரு கூட்டுப் பங்காளராக RICS-ஐத் தேர்ந்தெடுத்ததை, இந்தத் துறை உடனடியாகப் புரிந்துகொள்ளும். 1868-ல் நிறுவப்பட்டு, ஐக்கிய ராஜ்ஜியத்தில் தலைமையிடத்தைக் கொண்டுள்ள RICS, நிலம், சொத்து, கட்டுமானம், மதிப்பீடு மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் தரநிலைகள் மற்றும் தகுதிகளுக்கான உலகின் முதன்மையான தொழில்முறை அமைப்பாகும். 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாகச் செயல்படுவதாலும், உலகெங்கிலும் 130,000-க்கும் மேற்பட்ட சான்றளிக்கப்பட்ட தொழில் வல்லுநர்களைக் கொண்டிருப்பதாலும், எந்தவொரு திட்டத்துடனும் அதன் தொடர்பு என்பது, எந்தவொரு நிறுவனத் தரவரிசையாலும் மட்டும் வழங்க முடியாத ஒரு கண்டிப்பு, பொருத்தம் மற்றும் உலகளாவிய ஒருங்கிணைப்பின் அடையாளமாகும்.

கிரசென்ட் MBA-REM திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, இந்தக் கூட்டாண்மை மிகவும் நடைமுறைக்குரியது. இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறைத் தரநிலைகளுக்கான அணுகலையும், லண்டன் முதல் சிங்கப்பூர் வழியாக வளைகுடா வரை அளவுகோலாகக் கொள்ளப்படும் சிறந்த நடைமுறைகளுக்கான வெளிப்பாட்டையும், மற்றும் கட்டப்பட்ட சூழலில் உள்ள ஒரு உலகளாவிய தொழில்முறை சமூகத்தில் உறுப்பினராகும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்திய ரியல் எஸ்டேட் துறையானது, முன்னெப்போதும் இல்லாத விகிதத்தில் இறையாண்மை நிதிகள், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் ஒரு காலகட்டத்தில், சர்வதேசத் தரநிலைகளுடன் இணைந்த தகுதிகளைப் பெற்றிருப்பது வெறும் சாதகமானது மட்டுமல்ல — அது பெருகிய முறையில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடர்புகள் உண்மையான மற்றும் நீடித்த தொழில் வாழ்க்கையின் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன.

ரியல் எஸ்டேட் கல்வி, கட்டிடக்கலைத் துறைகள், சிவில் இன்ஜினியரிங் பள்ளிகள் மற்றும் பொதுவான MBA விருப்பப் பாடங்கள் என பல துறைகளில் சிதறிக் கிடக்கும் ஒரு சூழலில், இது ஒரு அர்த்தமுள்ள திருத்தமாகவும் அமைகிறது. இந்தக் கல்வி ஒருபோதும் ஒருங்கிணைக்கப்படாமலும், உண்மையான நிபுணத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கவில்லை, மேலும் தற்போது இத்துறையை நிர்வகிக்கும் உலகளாவிய தரநிலைகளுடன் அரிதாகவே இணைக்கப்பட்டுள்ளது. 2030-ஆம் ஆண்டுக்குள் ரியல் எஸ்டேட் சந்தை மூன்று டிரில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படும் ஒரு நாட்டிற்கு, இந்த இடைவெளியைப் புறக்கணிப்பது என்பது மிகவும் செலவு மிக்கதாகிவிட்டது. MBA-REM அந்தச் சமன்பாட்டை மாற்றுகிறது, மேலும் RICS-இன் முழு அதிகாரத்தின் ஆதரவுடன் இதைச் செய்கிறது.

தொழில்துறையின் எதார்த்தங்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட பாடத்திட்டம்

வழக்கமான மேலாண்மைத் திட்டங்களைப் போலல்லாமல், MBA-REM திட்டமானது கட்டப்பட்ட சூழலை ஒரு பாடப்பிரிவாகக் கருதாமல், அதற்கென ஒரு தனித் துறையாகவே கருதுகிறது. நவீன ரியல் எஸ்டேட் மேலாண்மைக்குத் தேவைப்படும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி இதன் பாடத்திட்டம் கட்டமைக்கப்பட்டுள்ளது: ரியல் எஸ்டேட் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல், நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டமிடல், சொத்து மதிப்பீடு மற்றும் முதலீட்டு மேலாண்மை, கட்டுமானத் திட்ட மேலாண்மை, ப்ராப்டெக் மற்றும் டிஜிட்டல் மாற்றம், கட்டப்பட்ட சூழலில் நிலைத்தன்மை, கட்டுமானப் பொருளாதாரம், மற்றும் இந்தியாவில் நிலம் மற்றும் மேம்பாட்டை நிர்வகிக்கும் சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்புகள்.

கல்வி சார்ந்ததாக இருப்பது போலவே, கற்றல் அனுபவமும் நிறைந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நேரடித் தொழில் திட்டங்கள், கட்டமைக்கப்பட்ட உள்ளகப் பயிற்சிகள், நிபுணர் அமர்வுகள், மற்றும் கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் தொழில்முறை வலையமைப்பு ஈடுபாடுகளில் பங்கேற்பார்கள். இந்தத் திட்டம் AICTE-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தென்னிந்தியாவில் ரியல் எஸ்டேட் மேலாண்மையில் முறையாக அங்கீகரிக்கப்பட்ட மிகச் சில சிறப்பு MBA திட்டங்களில் இதுவும் ஒன்றாகத் திகழ்கிறது — இந்தச் சிறப்பு, வேலையளிப்பவர்களுக்கும் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும் ஒரே மாதிரியாக முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தத் திட்டம் யாருக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது?

MBA-REM திட்டமானது, பரந்த மற்றும் திட்டமிட்டுப் பன்முகத்தன்மை கொண்ட ஒரு மாணவர் குழுவிற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பொறியியல், கட்டிடக்கலை, வணிகவியல், சட்டம் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் இருந்து புதிதாகப் பட்டம் பெற்றவர்கள், இந்தியாவின் மிகவும் ஆற்றல்மிக்க மற்றும் நிதி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒன்றில், ஒரு கட்டமைக்கப்பட்ட, சான்றளிக்கப்பட்ட நுழைவுப் புள்ளியைக் காண்பார்கள். கட்டுமானம், நகர்ப்புறத் திட்டமிடல், வங்கி மற்றும் நிதி, அரசு உள்கட்டமைப்பு அமைப்புகள் மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாடு போன்ற துறைகளில் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள், தங்கள் நிபுணத்துவத்தை முறைப்படுத்தவும், தங்கள் மேலாண்மைத் திறன்களை ஆழப்படுத்தவும் அல்லது தங்கள் தொழில் முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும் விரும்பினால், அவர்களுக்கும் இது மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

இந்தத் திட்டத்தின் மூலம் உருவாகும் தொழில் பாதைகள், ரியல் எஸ்டேட் ஆலோசனை, சொத்து மதிப்பீடு மற்றும் சொத்து மேலாண்மை, முதலீட்டு ஆலோசனை, ப்ராப்டெக் முயற்சிகள், நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு, நிலையான கட்டுமானம் மற்றும் திட்ட மேலாண்மை ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தியாவின் நகரங்கள் வளரும்போதும், அதன் வீட்டுவசதி இருப்பு நவீனமடையும்போதும், அதன் உள்கட்டமைப்பு இலக்குகள் உலகளாவிய மூலதனத்தை ஈர்க்கும்போதும், இந்தப் பதவிகளுக்கு அதிகளவில் தேவை உள்ளது. சரியான நிறுவனத்திடமிருந்து, சரியான உலகளாவிய அங்கீகாரத்துடன், சரியான தகுதியைப் பெறுவதே முக்கியமான வித்தியாசத்தை உருவாக்கும் தொழில்கள் இவை.

இம்முயற்சிக்குப் பின்னாலுள்ள நிறுவனம்

ரியல் எஸ்டேட் மேலாண்மையில் MBA என்பது, மரபுகளைக் காட்டிலும் பொருத்தத்திற்கு எப்போதுமே முன்னுரிமை அளிக்கும் ஒரு நிறுவன உத்தியின் சமீபத்திய வெளிப்பாடாகும். இந்தியாவின் லட்சியங்கள் பரந்து விரிந்திருக்கும், திறமையாளர்களின் வரத்து குறைவாக இருக்கும், மேலும் கோடிக்கணக்கான முதலீடுகள் மற்றும் மில்லியன் கணக்கான உயிர்களின் பங்கீடுகள் உள்ள ஒரு துறையில், கிரசென்ட் மற்றும் RICS இணைந்து உருவாக்கியுள்ள இந்தத் திட்டத்தின் காலம் தற்செயலானது அல்ல, அது திட்டமிட்டு எடுக்கப்பட்டதாகும். பி.எஸ். அப்துர் ரஹ்மான் கிரசென்ட் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில், ரியல் எஸ்டேட் மேலாண்மையில் (REM) MBA படிப்பிற்கான 2026-2028 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை இப்போது நடைபெறுகிறது.

“பெத்தி” படம் மூலம் வெளிநாட்டு விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்!

இந்தியாவின் மிகவும் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே ஃபிலிம்ஸ் (Hombale Films) தனது முதல் வெளிநாட்டு விநியோக முயற்சியாக “பெத்தி” திரைப்படத்தை அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளிநாட்டு விநியோகத் துறையில் விரிவாக்கம் செய்வதாக அறிவித்திருந்த ஹொம்பாலே ஃபிலிம்ஸ், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் “பெத்தி” திரைப்படத்தின் மூலம் தனது சர்வதேச விநியோக பயணத்தை தொடங்குகிறது.

கேஜிஎஃப், காந்தாரா, சலார் போன்ற மாபெரும் வெற்றி திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவின் அளவுகோலை மாற்றிய ஹொம்பாலே ஃபிலிம்ஸ், தற்போது 2026 ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்திய திரைப்படங்களில் ஒன்றான “பெத்தி” மூலம் சர்வதேச விநியோகத்தில் முக்கியமான முன்னேற்றத்தை எடுத்துள்ளது.

பல ஆண்டுகளாக, மண் மணம் சார்ந்த கதையையும் பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தையும் இணைத்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து வரும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ், இந்தியாவைத் தாண்டியும் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.

“பெத்தி” திரைப்படத்தின் மூலம், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தனது சர்வதேச தடத்தை நேரடியாக வலுப்படுத்துகிறது. இது அந்த நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு விநியோக முயற்சியாக கருதப்படுகிறது. இந்த அறிவிப்பு திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டிற்கான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது.

புகழ்பெற்ற இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கும் “பெத்தி” திரைப்படம், அதன் அதிரடியான ஆக்ஷன் பின்னணி, சக்திவாய்ந்த கதைக்களம் மற்றும் ராம் சரணின் தீவிரமான உருமாற்றத்தால் ஏற்கனவே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் A. R. ரஹ்மான் இசையமைப்பது இந்த படத்துக்கு கூடுதல் பலத்தை வழங்குகியுள்ளது.

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் “பெத்தி” படத்தை விநியோகம் செய்வது, ரசிகர்கள் மற்றும் திரை வர்த்தக வட்டாரங்களில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய சர்வதேச பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வெளிநாட்டு வெளியீடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.