துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் “ஐ அம் கேம்” திரைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மலையாள படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது. தென்னிந்தியாவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், தற்போது பரபரப்பான இறுதிக்கட்ட பின்னணி பணிகளில் உள்ளது.
தனது திரை வாழ்க்கையில் இதுவரை நடித்திருக்கும் படங்களில் மிகவும் ஸ்டைலிஷான படமாக இப்படம் இருக்கும் என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். கதாபாத்திரமும், படத்தின் உலகம் முழுவதும் நவீன மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இயக்குனர் நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath ) , தன்னை முற்றிலும் புதிய ஸ்டைலிஷ் அவதாரத்தில் காட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த படத்தை வடிவமைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
நஹாஸ் ஹிதாயத், இயக்கும் இந்த பிரம்மாண்ட ஆக்ஷன் திரில்லர் திரைப்படம் 2026 ஆகஸ்ட் மாதத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. துல்கர் சல்மான் தனது திரை வாழ்க்கையில் இதுவரை மேற்கொண்டிருக்கும் மிகப்பெரிய படைப்பாக, இந்தப் படம் உருவாகி வருவதுடன், மலையாள சினிமாவின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Wayfarer Films தயாரிப்பில், துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர். ஷஹபாஸ் ரஷீத் மற்றும் ஆதர்ஷ் சுகுமாரன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். லோகா திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு Wayfarer Films நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படமாகவும் இது அமைந்துள்ளது.
மேலும், சமீப காலங்களில் வெளியான தனது பல படங்களில் வின்டேஜ் தோற்றத்தில் நடித்திருந்தாலும், “ஐ அம் கேம்“ திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட மற்றும் புத்துணர்ச்சியான மாற்றத்தில் ரசிகர்களை சந்திக்கப் போவதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் அவர் ஸ்டைலிஷ் மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்குகிறார். மேலும், RDX வெற்றிக்குப் பிறகு நஹாஸ் ஹிதாயத், இயக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். மேலும் துல்கர் சல்மான் நடிக்கும் 40வது படமாக “ஐ அம் கேம்“ உருவாகி வருகிறது. பான்-இந்திய அளவில் மிகப்பெரிய ஆக்ஷன் திரில்லராக இந்த படம் தயாராகி வருகிறது.
இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி மற்றும் சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையை ஜேக்ஸ் பிஜாய் அமைக்க, அதிரடி சண்டைக் காட்சிகளை பிரபல ஸ்டண்ட் இயக்குநர்கள் அன்பறிவு வடிவமைத்துள்ளனர்.
ஏற்கனவே வெளியான முதல் மற்றும் இரண்டாவது லுக் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தன. “ஐ அம் கேம்” திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான்-இந்திய படமாக வெளியாகவுள்ளது.
தொழில்நுட்ப குழு விவரங்கள்:
லைன் தயாரிப்பாளர்: பிபின் பெரும்பில்லி ஒளிப்பதிவு: ஜிம்ஷி காலித் இசை: ஜேக்ஸ் பிஜாய் எடிட்டிங்: சமன் சாக்கோ தயாரிப்பு நிர்வாகிகள் : சுஜோய் ஜேம்ஸ், தேவதேவன் தயாரிப்பு வடிவமைப்பு: அஜயன் சாலிசேரி மேக்கப்: ரோனெக்ஸ் சேவியர் உடை வடிவமைப்பு: மஷார் ஹம்சா தயாரிப்பு ஒருங்கிணைப்பு : தீபக் பரமேஸ்வரன் உதவி இயக்குநர் : ரோஹித் சந்திரசேகர் பாடல்வரிகள் : மனு மஞ்சித், விநாயக் சசிகுமார் VFX : தௌஃபீக் (எக்வொயிட்) (Eggwhite) போஸ்டர் வடிவமைப்பு: டென் பாயிண்ட் ஒலி வடிவமைப்பு: சிங்க் சினிமா சவுண்ட் மிக்ஸ்: கண்ணன் கணபதி ஸ்டில்ஸ்: எஸ்.பி.கே மார்க்கெட்டிங் தலைவர் : விஜீத் விஸ்வநாதன் மக்கள் தொடர்பு : யுவராஜ்
“பெத்தி” படம் முடிந்து வெளியே வரும் போது கண்களில் கண்ணீர் இருக்கும்” – தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா
70 களின் காலகட்டத்தை நிஜத்தில் கொண்டு வரும் 24 பிரம்மாண்ட செட்கள், கிராமத்து உணர்வு, கண்கலங்க வைக்கும் கதை – “பெத்தி” குறித்து அவினாஷ் கொல்லா பகிர்வு
மெகா சூப்பர்ஸ்டார் ராம்சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவாகி வரும் “பெத்தி” திரைப்படம் குறித்து தயாரிப்பு வடிவமைப்பாளர் அவினாஷ் கொல்லா பகிர்ந்த தகவல்கள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள இந்த பிரம்மாண்ட படைப்பு, ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இத்திரைப்படத்தின் கதை முதன்முதலாக கேட்ட தருணத்திலேயே தன்னை ஆழமாக பாதித்துவிட்டதாக அவினாஷ் கொல்லா தெரிவித்துள்ளார். தனது பத்து வருட சினிமா பயணத்தில் இதுபோன்ற உற்சாகத்தை எந்தக் கதையும் தரவில்லை என்றும், கதை கேட்ட பிறகு சுமார் இருபது நிமிடங்கள் அதிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். மிக கனமான கதையின் தன்மையை உயிர்ப்பிக்க தயாரிப்பு வடிவமைப்பில் வெகு கவனமுடன் செயல்பட்டதாக கூறியுள்ளார்.
இந்தப் படத்திற்காக ஒரு வருடத்திற்கு மேலாக முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு செட்டிற்கும் முன்பாக சிறிய வடிவங்கள் உருவாக்கப்பட்டு பின்னரே பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளன. மொத்தமாக 24 பெரிய செட்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளதுடன், 60க்கும் மேற்பட்ட கூடுதல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்துவது சிரமமானதால், தேவையான அனைத்து இடங்களையும் தனியே உருவாக்கி வசதியான சூழலில் படமாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
70 மற்றும் 80களின் பின்னணியில் அமைந்துள்ள இந்தப் படத்திற்காக, விஜயநகரம் பகுதியை முழுமையாக மறுவடிவமைத்துள்ளனர். அந்த காலகட்டத்தின் தெருக்கள், கடிகார கோபுரம், சுற்றுப்புறங்கள் என அனைத்தையும் இயல்பாக மீண்டும் உருவாக்கியுள்ளனர். படம் முழுவதும் உருவாக்கப்பட்ட செட்கள் எதுவும் செட் போல தோன்றக்கூடாது என்பதே தனது நோக்கம் எனவும், அந்த அளவிற்கு இயல்பாக வேலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவினாஷ் குறிப்பிட்டார்.
படத்தில் இடம்பெறும் மல்யுத்த காட்சிகளுக்காக இதுவரை யாரும் பார்க்காத வகையிலான அரங்க அமைப்பு உருவாக்கப்பட்டதாம். குறிப்பாக தரைக்கடியில் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட அமைப்பில், கதை நாயகன் பெத்தியாக ராம்சரண் கம்பீரமாக தோன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. மேலும், கிரிக்கெட் காட்சிகளும் இயல்பான கிராமத்து உணர்வை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. “லகான்” படத்தைப் போல இல்லாமல், கிராம மக்கள் வயல்வெளி மேடுகளில் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் உணர்வை தரும் வகையில் அந்த காட்சிகள் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.
படத்தில் இடம்பெறும் சர்க்கரை ஆலை, ரயில் அமைப்பு, மலையடிவார நகரம் போன்றவை அனைத்தும் செட்களாக உருவாக்கப்பட்டிருந்தாலும், அவை அனைத்தும் உண்மையான இடங்களைப் போலவே தோன்றும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு பழைய பங்களாவுக்குள் மலையடிவார நகரத்தை உருவாக்கியது மிகப்பெரிய சவாலாக இருந்ததாக அவினாஷ் கூறியுள்ளார்.
மேலும், படத்தில் ஹீரோ பயன்படுத்தும் கிரிக்கெட் பேட்டும் இயல்பான கிராமத்து தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமத்து இளைஞன் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தானாகவே உருவாக்கிய பேட் போல அதனை வடிவமைத்துள்ளார்களாம். அந்த கதாபாத்திரத்தின் நடை, உடல் மொழி உள்ளிட்ட பல நுணுக்கங்களும் அதற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.
கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் ஒரே எண்ணத்தில் பணிபுரிந்தால் மட்டுமே திரைப்படம் முழுமையான வடிவம் பெறும். அந்த வகையில் ஒளிப்பதிவாளர் R. ரத்னவேலு மிகச்சிறப்பான ஒத்துழைப்பை தந்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகர் ராம்சரண் குறித்து பேசுகையில், தான் உருவாக்கிய ஒவ்வொரு செட்டையும் ராம்சரண் மிகவும் பாராட்டியதாக அவினாஷ் கூறியுள்ளார். மல்யுத்த அரங்கம், ரயில் அமைப்பு, சிறப்பு பாடல் செட் என அனைத்தையும் அவர் ரசித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதியாக “பெத்தி” குறித்து அவர் கூறிய வார்த்தைகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன. “இது முற்றிலும் வித்தியாசமான திரைப்படம். படம் முடிந்து திரையரங்கிலிருந்து வெளியே வரும் போது கண்டிப்பாக கண்களில் கண்ணீர் இருக்கும். அந்த அளவுக்கு பெத்தியின் வாழ்க்கை பயணம் மனதை தொடும்” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் சுகுமார் கூட சமீபத்தில், இந்தப் படத்தில் ராம்சரண் நடிப்பு ரங்கஸ்தலம் படத்தை விட அதிகமாக பேசப்படும் என்று கூறியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
நானி, எஸ்.ஜே.சூர்யா, ஐஸ்வர்யா ராஜேஷ், சுனைனா, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டோர் ப்ரைம் வீடியோவின் தமிழ் ஒரிஜினல் தொடர் “எக்ஸாம்” சீரிஸை பாராட்டி குழுவிற்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளனர் !!
மே 15 ஆம் தேதி வெளியாகவுள்ள ப்ரைம் வீடியோவின் எக்ஸாம் சீரிஸ், திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. பல முன்னணி பிரபலங்கள் இந்த தமிழ் சஸ்பென்ஸ் டிராமாவைப் பற்றி தங்களது உற்சாகத்தையும் பாராட்டுகளையும் பகிர்ந்து வருகின்றனர். இந்த சீரிஸின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடிகர் நானி இந்த சீரிஸின் திறமையான நடிகர் பட்டாளம் குறித்து பாராட்டி, இதன் பின்னணி குழுவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
“வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் கவனம் பெற்ற S. J. சூர்யா, முழு குழுவிற்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்து, இந்த சீரிஸ் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தியுள்ளார். சுழல் : தி வோர்டெக்ஸ் சீசன் 2 மூலம் பிரபலமான சம்யுக்தா விஸ்வநாதன் ‘Wallwatcher Filmsஇன் மற்றொரு தரமான படைப்பு’ எனக் கூறி, ‘இந்த சீரிஸை binge-watch செய்ய ஆவலாக காத்திருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இன்ஸ்பெக்டர் ரிஷி புகழ் சுனைனா, ‘இந்த சீரிஸை பார்க்க ஆவலாக இருக்கிறேன்’ என்று பகிர்ந்துள்ளார். அதே சீரிஸில் நடித்த கேப்ரியல்லா செல்லஸ், ப்ரைம் வீடியோ குழுவிற்கு தனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் “வதந்தி : தி ஃபேபிள் ஆஃப் வெலோனி” மூலம் பிரபலமான அனகா மற்றும் சுழல் : தி வோர்டெக்ஸ் புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் சீரிஸிற்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர். இதனால் எக்ஸாம் சீரிஸ் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோரால் உருவாக்கப்பட்டு, Wallwatcher Films தயாரிப்பில், A. சற்குணம் எழுதி இயக்கியுள்ள இந்த சஸ்பென்ஸ் டிராமாவில் துஷாரா விஜயன் மற்றும் அதிதி பாலன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அப்பாஸ் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.
எக்ஸாம் சீரிஸ் , தமிழ் மொழியில் உருவாகி, தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழி டப்பிங்குகளுடன், ஆங்கிலம் உட்பட 15 மொழிகளில் சப்டைட்டில்களுடன், இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், வரும் மே 15 முதல் ப்ரைம் வீடியோ தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.
ப்ரைம் வீடியோ தனது புதிய ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என அறிவித்துள்ளது.
அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.
இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு தளமான ப்ரைம் வீடியோ, தனது அடுத்த ப்ரைம் ஒரிஜினல் திரைப்படமான “சிஸ்டம்” திரைப்படத்தின் உலகளாவிய வெளியீட்டு தேதியை மே 22 என இன்று அறிவித்துள்ளது. இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். திருப்பங்கள் நிறைந்த நீதிமன்றத் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படம், அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்டு நகர்கிறது. ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “சிஸ்டம்” திரைப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும்ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில், இந்தி மொழியில் பிரத்யேகமாக ப்ரைம் வீடியொவில் வெளியாகிறது.
“சிஸ்டம்” திரைப்படம், அதிகாரமும் செல்வாக்கும் நிறைந்த உலகில் நீதி மற்றும் உண்மைக்காக போராடும் இரு பெண்களின் கதையை பேசும் அதிரடி நீதிமன்றத் த்ரில்லர். சோனாக்ஷி சின்ஹா நடித்துள்ள கதாபாத்திரமான நேஹா ராஜ்வன்ஷ் என்ற பொது வழக்கறிஞரும், ஜோதிகா நடித்துள்ள கதாபாத்திரமான எளிய பின்னணியைச் சேர்ந்த நீதிமன்ற ஸ்டெனோகிராபரான சரிகா ராவத் என்பவரும் எதிர்பாராத வகையில் ஒன்றிணைகிறார்கள். சமூக நிலைமையில் முற்றிலும் வேறுபட்டவர்கள் என்றாலும், உண்மையை வெளிக்கொணரவும் நீதியை நிலைநாட்டவும் அவர்கள் சக்திவாய்ந்த அமைப்புகளுக்கு எதிராக போராடுகிறார்கள்.
ப்ரைம் வீடியோ இந்தியா ஒரிஜினல்ஸ் பிரிவின் தலைவர் நிகில் மாதோக் கூறியதாவது…
“சிஸ்டம் என்பது பேராசை, நீதி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட சக்திவாய்ந்த மற்றும் பரபரப்பான திரைப்படம். அஷ்வினி ஐயர் திவாரி இயக்கத்தில், Baweja Studios ஆதரவுடன் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஒவ்வொரு கட்டத்திலும் ஆச்சரியப்படுத்தும். சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜோதிகாவின் வலுவான நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலமாக இருக்கும். மே 22 அன்று ப்ரைம் வீடியோவில் வெளியாகும் இந்த திரைப்படம், உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுடன் ஆழமாக இணையும் என நம்புகிறோம்.”
Baweja Studios நிறுவனத்தின் தயாரிப்பாளர் ஹர்மன் பவேஜா கூறுகையில்.., “சிஸ்டம்” என்பது முற்றிலும் மாறுபட்ட உலகங்களில் இருந்து வரும், தங்களுக்கென தனித்த எண்ணங்களை கொண்ட இரு உறுதியான பெண்களின் கதையாக உருவாகியுள்ள ஒரு விறுவிறுப்பான நீதிமன்ற டிராமா திரைப்படம். சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் வலுவான நடிப்பு இந்த கதையை உயிர்ப்பித்துள்ளன. அர்த்தமுள்ள மற்றும் சினிமாபூர்வமான கதைகளை சொல்லும் எங்கள் நோக்கத்தை இப்படம் பிரதிபலிக்கிறது. ப்ரைம் வீடியோ மற்றும் அஷ்வினி ஐயர் திவாரியுடன் இணைந்து பணியாற்றியது, இந்த கதையை மிகப்பெரிய அளவில் மற்றும் நம்பகத்தன்மையுடன் உருவாக்க உதவியுள்ளது. இந்தியாவிலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடமும் இந்த வித்தியாசமான கதையை கொண்டு சேர்க்க ஆவலாக உள்ளோம்,” என்றார்.
மெகா பவர் ஸ்டார் ராம் சரண், புச்சி பாபு சனா, வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் மைத்ரி மூவி மேக்கர்ஸ் சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும் “பெத்தி” படப்பிடிப்பு நிறைவு; ஜூன் 4 உலகமெங்கும் வெளியாகிறது !
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் “பெத்தி” ஜூன் 4 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது !
மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சனா இயக்கத்தில், உருவாகி வரும் கிராமத்து ஆக்ஷன் டிராமா “பெத்தி” (Peddi), படத்தின் முழு படப்பிடிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளது.
வெங்கட சதீஷ் கிலாரு தயாரிப்பில், விருத்தி சினிமாஸ் நிறுவனத்தின் கீழ் உருவாகும் இப்படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்கள் வழங்குகிறது. மிகப்பெரிய அளவில் உருவாகி வரும் இப்படம் குறித்து தயாரிப்பாளர்கள் ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளனர். இப்படம் ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ரத்தம், வியர்வை மற்றும் தூசியில் நனைந்த நிலையில் ராம் சரண், முகத்தை மேலே தூக்கி ஒரு இயல்பான கோபக் குரலில் கத்தும் தோற்றத்தில் தோன்றும், அசத்தலான ரிலீஸ் தேதி போஸ்டர் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. சீரற்ற முடி, காயமடைந்த முகம், கிழிந்த சட்டை ஆகியவை குழப்பத்தில் உருவான மனிதனின் வலிமையான உருவத்தை வெளிப்படுத்துகின்றன. போஸ்டர் டிசைன் எந்தத் தணிக்கையும் இல்லாத தாக்கத்தைக் வெளிப்படுத்துகிறது. “பெத்தி” ஒரு வெடிக்கும் திரையரங்கு அனுபவமாக உருவாகி வருவது இதில் தெளிவாகிறது.
ஜூன் தொடக்கத்தில் வெளியாகும் இந்தப் படம், கோடை விடுமுறையின் இறுதிக் கட்டத்தில் சரியாக அமைய இருப்பதால், கல்வி ஆண்டு தொடங்கும் முன் நல்ல திரையரங்கு வெளியீட்டை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக வட்டாரங்களும் இந்த தேதியை புத்திசாலித்தனமான ஒரு திட்டமிடலாக பார்க்கின்றன.
ஹைதராபாத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான செட்டில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான ஒரு சிறப்பு பாடல் படமாக்கப்பட்டு, அதனுடன் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இந்த உற்சாகமான பாடல் “பெத்தி” படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன.
இந்த படத்திற்காக ராம் சரண் தன்னை முழுமையாக அர்ப்பணித்துள்ளார். முதல் இரண்டு க்ளிம்ப்ஸ்களில் அவர் முற்றிலும் வேறுபட்ட இரண்டு கெட்டப்புகளில் தோன்றியது இதற்கு சான்றாகும். மேலும், பாடல்களிலும் தனது நடனத்தால் படத்தின் மீதான ஈர்ப்பை மேலும் உயர்த்தியுள்ளார்.
இந்த படத்தில், ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா மற்றும் பொமன் இராணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் வலுவான நடிப்பை வழங்கவுள்ளனர். தொழில்நுட்ப ரீதியாகவும் இந்த படம் உயர்தரக் கலைஞர்களால் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஒளிப்பதிவை ஆர். ரத்னவேலு மேற்கொள்கிறார்; எடிட்டிங்கை நவீன் நூலி கவனிக்கிறார்; தயாரிப்பு வடிவமைப்பை அவினாஷ் கொல்லா மேற்கொள்கிறார்.
கிராமத்து விளையாட்டு பின்னணியுடன், தீவிரமான ஆக்ஷன் மற்றும் வலுவான உணர்ச்சிகளை இணைக்கும் “பெத்தி”, தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் இந்தியிலும் பான்-இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மற்றும் அவரது குழு, இந்தியா முழுவதும் தீவிரமான புரமோஷன் திட்டங்களை மேற்கொண்டு, படத்தின் எதிர்பார்ப்பை மேலும் உயர்த்த திட்டமிட்டுள்ளனர்.
நடிகர்கள் : மெகா பவர் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், ஜகபதி பாபு, திவ்யேந்து சர்மா,பொமன் இராணி
தொழில்நுட்பக் குழு : இயக்கம், திரைக்கதை: புச்சி பாபு சனா வழங்குபவர்கள் : மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் தயாரிப்பு நிறுவனம்: விருத்தி சினிமாஸ் தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு இணை தயாரிப்பாளர்: ஈஷான் சக்சேனா இசை: A.R. ரஹ்மான் ஒளிப்பதிவு: R. ரத்னவேலு தயாரிப்பு வடிவமைப்பு : அவினாஷ் கொல்லா படத்தொகுப்பு: நவீன் நூலி நிர்வாக தயாரிப்பாளர்: V.Y. பிரவீன் குமார் மார்க்கெட்டிங்: ஃபர்ஸ்ட் ஷோ மக்கள் தொடர்பு : யுவராஜ்.
Chennai, May 06 2026: SRM Institute of Science and Technology, Ramapuram launched the Mission Mausam Urban Testbed and observational facilities, developed by Indian Institute of Tropical Meteorology under the Ministry of Earth Sciences, at its Ramapuram campus in Chennai on Wednesday.
The Urban Testbed, the only such facility in the Chennai region, will monitor aerosols, clouds, precipitation, atmospheric dynamics, and thermodynamic parameters across the city to enhance monsoon prediction, nowcasting, and early warnings of severe weather.
Mission Mausam, an initiative of the Ministry of Earth Sciences, aims to enhance disaster preparedness and strengthen climate services for key sectors such as agriculture, water resources, aviation, and energy, with the goal of making India a weather-ready and climate-smart nation.
The Urban Testbeds, established by IITM (Indian Institute of Tropical Meteorology, (An autonomous Institute under the Ministry of Earth Sciences, Govt. of India) Pune, feature dense surface observations through automatic weather stations, along with volumetric measurements using radars and profilers that track wind, temperature, relative humidity, aerosols, clouds, and precipitation. These datasets enable researchers to better understand atmospheric dynamics, thermodynamics, and physio-chemical processes driving severe weather, while also supporting accurate nowcasting solutions.
Dr. M. Ravichandran, Secretary, Ministry of Earth Sciences, inaugurated the facility in the presence of Dr. A. Suryachandra Rao, Director, IITM, Pune; Dr. R. Shivakumar, Chairman, SRMIST, Ramapuram ,Chennai & Trichy ; Dr. Thara Prabhakaran, Project Director, IITM; and Dr. M. Sakthi Ganesh, Dean (E&T), SRMIST, along with directors and heads of partner institutions.
The event also marked the inauguration of SRMIST’s Centre for Atmospheric Sciences Research and Innovation, along with the signing of an MoU between SRMIST and IITM, a premier central government institute engaged in fundamental research in weather, monsoon, and climate sciences. The MoU will facilitate collaboration in research and academic activities in the field of weather and climate sciences.
In his comments, Dr. Shivakumar said, “We are proud to host the Chennai Urban Testbed and an urban aerosol observational facility at SRM Institute of Science and Technology, Ramapuram, and we thank IITM and the Ministry of Earth Sciences for choosing SRMIST for this important national initiative. Our Ramapuram campus is strategically located within Chennai’s urban landscape to document urban aerosol properties.
The Urban Testbed will serve as a representative site, supporting urban weather services and strengthening nowcasting and forecasting, particularly kilometre-scale models. This partnership and the new facilities will significantly enhance research capabilities, foster academic collaboration, and advance understanding of weather and climate, enabling innovative, multidisciplinary applications that will benefit Chennai and beyond.”
Dr. Sakthi Ganesh added, “Urban areas face increasing challenges from severe weather, with greater population exposure and impact across critical service sectors. Mission Mausam seeks to address these challenges by integrating observations, numerical models, Artificial Intelligence and Machine Learning, along with social sciences, within a collaborative ecosystem. The Urban Testbed at SRM Institute of Science and Technology, Ramapuram, will play a vital role by generating high-resolution, location-specific data on key meteorological parameters.
This will significantly improve nowcasting and forecasting, particularly in densely populated urban environments like Chennai, and support better preparedness for extreme weather events. The facilities will also offer valuable opportunities for our students and research scholars to undertake advanced research and academic projects.”
CinemaCon வெற்றிக்கு பிறகு, ராக்கிங் ஸ்டார் யாஷ் நடித்த ‘டாக்ஸிக்’ திரைப்பட வெளியீடு மாற்றம் – உலகளாவிய ரிலீஸுக்காக புதிய தேதி விரைவில் அறிவிப்பு !!
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’ ( Toxic: A Fairy Tale for Grownups ) திரைப்படத்தின் வெளியீடு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்பு 2026 ஜூன் 4 அன்று வெளியிட திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படம், தற்போது புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு, CinemaCon நிகழ்வில் படத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் திரையுலக முக்கிய நபர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு, படத்தை மேலும் பெரிய அளவில் சர்வதேச சந்தைகளில் வெளியிட வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இதனால், படக்குழு தனது வெளியீட்டு திட்டத்தை மறுபரிசீலனை செய்துள்ளது.
படம் தற்போது முழுமையாக தயாராகியுள்ள நிலையில், உலகளாவிய விநியோகம் மற்றும் முக்கிய சர்வதேச கூட்டாண்மைகளை உறுதிப்படுத்தும் பணிகளில் தயாரிப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படம் யாஷ் மற்றும் கீது மோகன் தாஸ் ஆகியோரால் எழுதப்பட்டு, கீது மோகன் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ளது.
இது குறித்து நடிகர் யாஷ் கூறியதாவது:
“சில படங்களை நாம் உருவாக்குகிறோம்… சில படங்கள் நம்மை மீண்டும் சினிமாவை காதலிக்க வைத்துவிடுகிறது. டாக்ஸிக் அப்படிப்பட்ட ஒரு பயணம். CinemaCon-ல் எங்கள் படத்தை வெளியிட்ட பிறகு, உலகளாவிய அளவில் கிடைத்த வரவேற்பு இந்த படம் இன்னும் பெரிய அளவில் செல்ல வேண்டிய படைப்பு என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியது.
டாக்ஸிக் படம் முழுமையாக தயாராகி விட்டது. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் கூட்டாண்மைகளை உறுதி செய்யும் பணியில் இருக்கிறோம். இதனால், ஜூன் 4 அன்று படத்தை வெளியிடவில்லை. ஆனால் விரைவில் புதிய தேதியில் உலகம் முழுவதும் வெளியாகும்.
இந்திய சினிமா உலகளவில் உயர்ந்து நிற்கும் இந்த நேரத்தில், தரத்தை மேலும் உயர்த்துவது நம்முடைய பொறுப்பு. அதற்காகவே இந்த முடிவு. உங்கள் ஆதரவை நான் எப்போதும் மனதில் வைத்திருக்கிறேன். சில கதைகள் பொறுமையை கேட்கும்… இந்தப் படம் அவற்றில் ஒன்று. நிச்சயமாக இது இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.”
இந்த திரைப்படத்தில் யாஷ் உடன் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மிணி வசந்த், மற்றும் தாரா சுதாரியா ஆகியோர் நடித்துள்ளனர்
கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
KVN Productions மற்றும் Monster Mind Creations தயாரிப்பில் உருவாகியுள்ள “டாக்ஸிக்” திரைப்படம், புதிய தேதியில் விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும்.
பிரைம் வீடியோ – புஷ்கர் & காயத்ரி – வால்வாட்சர் ஃபிலிம்ஸ் (Wallwatcher Films) – A.சற்குணம் – கூட்டணியின் ‘எக்ஸாம் – EXAM’ தமிழ் ஒரிஜினல் இணையத் தொடரின் முன்னோட்டம் வெளியீடு
இந்தியா முழுவதும் பெரிதும் விரும்பப்படும் பொழுது போக்கு தளங்களில் முதன்மையானதாக திகழும் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் மே மாதம் 15 ஆம் தேதி முதல் வெளியாகவுள்ள ‘எக்ஸாம் – EXAM’ எனும் சஸ்பென்ஸ் திரில்லரான இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
வால் வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் & காயத்ரி ஆகியோரின் தயாரிப்பில் தேசிய விருதை வென்ற இயக்குநரான ஏ சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எக்ஸாம் – EXAM’ இணைய தொடரில் துஷாரா விஜயன், அதிதி பாலன், அப்பாஸ் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஏழு அத்தியாயங்களாக தயாராகி இருக்கும் இந்த இணையத் தொடர் எதிர்வரும் மே 15 ஆம் தேதி முதல் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. சஸ்பென்ஸ் திரில்லரான EXAM இணைய தொடரின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர்கள் புஷ்கர் – காயத்ரி – இயக்குநர் ஏ. சற்குணம் – துஷாரா விஜயன் – அதிதி பாலன் – ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் புஷ்கர் பேசுகையில், ” நாங்கள் ‘வா குவாட்டர் கட்டிங் ‘எனும் திரைப்படத்தின் பணியை தொடங்குவதற்கு முன் ஏ சற்குணம் இயக்கத்தில் உருவான ‘களவாணி’ திரைப்படம் வெளியாகி வெற்றியை பெற்றிருந்தது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற முடியும் என்ற சாதனையை ஏ சற்குணம் படைத்திருந்தார். இதைத்தான் நாங்கள் தயாரிப்பாளர்களிடத்தில் குறிப்பிட்டு, ‘பெரிய ஸ்டார்ஸ் தேவையில்லை. சின்ன பட்ஜெட்டில் நடிகர்களை வைத்து பெரிய வெற்றியை பெற முடியும்’ என எடுத்துச் சொன்னோம்
சினிமாவில் ஒரு ஹீரோவின் கதையைத்தான் சொல்கிறோம். ஆனால் டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் இணைய தொடர் நீண்ட வடிவம் கொண்டதால்.. அதைக் கடந்து சில விசயங்கள் அவசியமாக தேவைப்படும். ‘எக்ஸாம்’ தொடரின் முன்னோட்டத்தை பார்க்கும் போது ஜான்சி மற்றும் மரமல்லி எனும் இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான ஒரு சம்பம் … ஜான்சி சிக்குவாளா.. சிக்கமாட்டாளா ? என்ற ஒரு டென்ஷன் இருந்து கொண்டே இருக்கும்.. இதைக் கடந்து எக்ஸாம் என்ற போட்டி தேர்வு மோசடி குறித்த கதையும் உள்ளது.
சற்குணம் எங்களிடம் முதலில் கதையை சொல்லும்போது இந்த விசயங்கள் எல்லாம் அதில் இருந்தது. கதையைக் கேட்டவுடன் இது நீண்ட வடிவத்திற்கானது என்பதை புரிந்து கொண்டோம். உண்மையைச் சொல்லப்போனால் நாங்கள் வெளியில் இருந்து வந்த ஒரு திரைக்கதையை படித்து ஓகே சொன்னது சற்குணத்தின் கதையை மட்டும் தான். ‘வதந்தி’ தொடரை எழுதிய ஆண்ட்ரூஸ்-ஐ, எங்களுக்கு முதலில் இருந்தே தெரியும்.
நாங்கள் கதையைக் கேட்டவுடன் ஆறு ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் வரை விறுவிறுப்பாக செல்லக்கூடிய அம்சங்கள் இருக்கிறதா? என்பதை தான் பார்ப்போம். அந்த விசயத்தில் இயக்குநர் சற்குணம் மிகவும் தெளிவாக இருந்தார்.
நிறைய வெப் சீரிஸ்களை பார்த்திருந்தால்.. அவை சினிமாவாக தயாராகி இருக்கலாம். இருந்தாலும் அதனை அங்கங்கே சற்று இழுத்து வெப்சீரிஸாக மாற்றி இருப்பார்கள். ஆனால் இயக்குநர் சற்குணம் முதலிலேயே தெளிவாக இது நீண்ட வடிவத்திற்கான கதையாகத்தான் என்று சொன்னார்.
இணைய தொடருக்கான படப்பிடிப்பு என்பது மிகவும் தெளிவான திட்டமிடலுடன் இருக்க வேண்டும். அந்த விசயத்திலும் இயக்குநர் சற்குணம் மிகத் தெளிவான திட்டமிடலுடன் பணியாற்றினார். அந்த விசயத்திலும் சற்குணம் கிரேட். ” என்றார்.
இயக்குநர் காயத்ரி பேசுகையில், ” அவர் எங்களிடம் சொன்ன கதை மிக நன்றாக இருந்தது. ஒரு திரைப்படத்தை தயாரிப்பதற்கும்… ஒரு இணையத் தொடரை தயாரிப்பதற்கும்… சில இலக்கணங்கள் உண்டு. அதற்காக பிரத்யேகமாக எழுத வேண்டும். நாங்கள் கதையைப் பற்றி விவாதிக்கும் போது அதை அவர்கள் திறந்த மனதுடன் நாங்கள் சொல்லும் விசயத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். அது இயக்குநர் சற்குணத்திடம் இருந்தது. அவர் எப்போது படைப்பு குறித்து எந்த ஆலோசனைகள் சொன்னாலும்… குறிப்புகள் வழங்கினாலும்… மறுக்காமல் கேட்டுக் கொண்டு அதற்கான விளக்கத்தை அளிப்பார்.
ஒரு ப்ராஜெக்ட் என்றால் நிறைய விசயங்கள் ஒன்றாக கூடி வரவேண்டும். அதிலும் குறிப்பாக நடிகர்களுடைய விசயத்தில் நாங்கள் தெளிவாக இருந்தோம். திறமையான நடிகர்களாக- கலைஞர்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம். இந்த விசயத்தில் துஷாராவும், அதிதியும் எங்களது முதன்மையான தேர்வாக இருந்தது. குறிப்பாக அதிதியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.
இந்தத் தொடரில் முக்கியமான ஒரு கேரக்டர் இருக்கிறது. இதற்கு யார் பொருத்தமாக இருப்பார்? என்று யோசித்துக் கொண்டே இருந்தோம். ஒரு வருடத்திற்கு முன் நடிகர் அப்பாஸ் திடீரென்று வீடியோ காலில் வந்து மீண்டும் நடிக்கலாம் என்று நினைக்கிறேன் என்றார். அவருக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அவரை அந்த கேரக்டருக்காக தேர்வு செய்தோம். அவரும் அற்புதமாக நடித்திருக்கிறார்.
திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். ஒளிப்பதிவாளருக்கு இதுதான் முதல் படைப்பு. கலை இயக்குனருக்கும் இதுதான் முதல் படைப்பு. அதனால் இயக்குநர் சொன்னதை போல் எக்ஸாம் தொடரின் தொடக்கத்தில் இருந்து இப்போது வரை அனைவரும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக உழைத்து வருகிறோம்.
பிரைம் வீடியோ நிறுவனத்தினை சார்ந்த அனைவரும் இதற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். நாங்கள் இணையத் தொடரை உருவாக்கினாலும் அதனை ரசிகர்களிடத்தில் சென்றடைய செய்ய வேண்டிய அனைத்து பணிகளையும் பிரைம் வீடியோ நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். இதற்காக அவர்களுக்கும் இந்த தருணத்தில் எங்களின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் ஏ.சற்குணம் பேசுகையில், ” சங்கர் ஐ ஏ எஸ் அகாடமியின் நிறுவனரான சங்கர் என் நண்பர். போட்டி தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்கு தொடுப்பதற்காக சென்று இறுதியில் வக்கீலாக மாறியவரும் என் நண்பர். தமிழக அரசு தேர்வுகளுக்காக பயிற்சி பெறும் நிறைய நண்பர்கள் எனக்கு தெரியும். இவர்கள் அனைவரும் தான் இந்த இணைய தொடரை உருவாக்குவதற்கு முதல் காரணம்.
நடுத்தர வர்க்கத்து மக்களின் மிகப்பெரிய கனவு தான் அரசு பணிக்கான தேர்வு. அதில் நடைபெற்ற முறைகேடுகளை அப்படியே பதிவு செய்யாமல்… அதனை ஒரு திரில்லர் மோடில் அடுத்து என்ன ? அடுத்து என்ன ? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்ற வகையில் ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டு… ஏழு அத்தியாயங்களாக இந்த எக்ஸாம் தொடர் உருவாகி இருக்கிறது.
நான் இயக்குநர்கள் புஷ்கர் & காயத்ரி அவர்களிடம் கதையை சொல்லும் போது.. அவர்கள் என்னிடம் சொன்ன ஒரே விசயம்.. அடுத்து என்ன? அடுத்து என்ன? என்ற பரபரப்பு ஒவ்வொரு காட்சியிலும் இருக்க வேண்டும். இதில் நாம் ஒரு நல்ல விசயத்தை சொல்கிறோம் என்ற எல்லையைக் கடந்து… பொழுது போக்கு அம்சங்களுடன் அடுத்து என்ன நடக்கும் என்ற திரில்லிங்கான தருணங்களாகவும் இருக்க வேண்டும் என்பதை எப்போதும் நட்புணர்வுடன் பகிர்ந்து கொண்டே இருந்தனர். இந்த தொடருக்கு அவர்களின் இந்த ஆலோசனையும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
அதன் பிறகு அவர்கள் எனக்கு கொடுத்த சுதந்திரம். கதையைக் கேட்டவுடன் ஓகே சொல்லாமல்… உடன் இருந்து அந்த திரைக்கதையை முழுவதுமாக படிக்கிறார்கள். மீண்டும் என்னை அழைத்து அது தொடர்பாக விவாதிக்கிறார்கள்.
அதே தருணத்தில் தயாரிப்பு விசயத்தில் எந்த ஒரு சமரசமும் செய்து கொள்ளாமல் தரமான படைப்பாக உருவாக்கினார்கள்.
எனக்கு மிகவும் பிடித்த ஒரு விசயம் என்னவென்றால் …ஒரு படத்தை தொடங்கும் போது தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நல்ல புரிதல் இருக்கும். ஆனால் அந்தப் படம் நிறைவடையும் போது தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் இடையே கருத்து முரண் எழுந்திருக்கும். இப்படி ஒரு அனுபவம் இல்லாமல் நான் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய முதல் படைப்பு வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான எக்ஸாம் தான். இதற்காக இவர்கள் இருவருக்கும் நான் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்கிறேன்” என்றார்.
நடிகை துஷாரா விஜயன் பேசுகையில், ‘ இந்த இணைய தொடர் மூலம் நான் முதன் முதலாக டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாகிறேன். எனது நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படமும் நேரடியாக பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில்தான் வெளியானது. இந்த வகையில் நான் மிகப் பெரிய அதிர்ஷ்டசாலி.
எக்ஸாம் இந்த தொடர்- நான் கண்ணை மூடிக்கொண்டு நம்பிக்கையுடன் ஒப்புக்கொண்ட ஒரு ப்ராஜெக்ட். புஷ்கர் காயத்ரி என்று சொன்னவுடன் ஓகே சொன்னேன். அதிலும் இயக்குநர் ஏ சற்குணம் என்று சொன்னவுடன் டபுள் ஓகே சொல்லிவிட்டேன்.
ஜான்சி கதாபாத்திரம் கடினமானது. அவள் ஒரு அப்பாவியான பெண். ஆனால் கடினமான முடிவுகளை எடுக்கக் கூடியவள். அப்படித்தான் அந்த கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கும் போது எனக்கு சவாலானதாக இருந்தது என்னவென்றால் ..அவள் முடிவெடுக்கும் தருணம்….ஆனால் அதைப் பற்றி எல்லாம் அதிகம் கவலைப்படாமல் நான் இருந்ததற்கு இயக்குநர் சற்குணம் தான் முழு காரணம்.
நிச்சயமாக இந்த இணைய தொடர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்.
நான் எப்போதும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை உள்ளவள். அதுபோன்ற கதை தான் எக்ஸாம்.
இதை நான் தேர்ந்தெடுத்ததை விட அந்த கதாபாத்திரம் தான் என்னை தேர்ந்தெடுத்தது என்று நம்புகிறேன் இதுபோன்ற கதைகளில் தான் நான் தொடர்ந்து நடித்து வருகிறேன் இனிமேலும் தொடர்ந்து நடிப்பேன்.
இந்த குழுவினருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. குறிப்பாக ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் உடன் பணியாற்றியது மறக்க முடியாது. இந்தப் படத்தில் நான் சண்டைக் காட்சிகளில் நடித்திருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அந்த காட்சிகளில் நடிப்பது தான் சற்று கடினமானதாகவும் சவாலானதாகவும் இருந்தது. ஜான்சி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகை அதிதி பாலன் பேசுகையில், ” மரமல்லி கதாபாத்திரத்திற்கு என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி மற்றும் சற்குணத்திற்கு நன்றி. மரமல்லி கதாபாத்திரத்திற்காக உடல் ரீதியாக சில முன் தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருந்தது. சண்டை காட்சிகளுக்காக நாங்கள் நிறைய ஒத்திகையும் பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டியதிருந்தது. நான் முதல் முறையாக சண்டை காட்சிகளில் நடிப்பதால் அதனை மகிழ்ச்சியோடும் சந்தோஷத்துடனும் பணியாற்றினேன். நிறைய அடிபட்டது. அடி வாங்கினேன். நாங்கள் இருவரும் தான் (துஷாராவும் அதிதியும்) அடித்துக் கொண்டோம்.
இந்த கேரக்டர் தொடங்கும் போது சற்று வில்லத்தனமாகத் தான் தொடங்கும். அதற்கு மேல் எதையும் நான் தற்போது சொல்ல இயலாது. இயக்குநர் சற்குணம் சார் இந்த கேரக்டரை பற்றி என்னிடம் விவரித்த போது நான் இதற்கு முன் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிக்கவில்லை என்பதால்.. ஒப்புக்கொண்டேன். அதற்கு முன் நான் இயக்குநர் சற்குணத்தின் மிகப்பெரிய ரசிகை.அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். எல்லோருடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது” என்றார்.
Chennai, 1st May 2026: Tanishq, India’s largest jewellery retail brand from the house of Tata, has announced the grand launch of its new store in West Tambaram, Chennai, further strengthening its presence in Tamil Nadu. Marking a significant milestone, this is the brand’s 66th store in the state and 24th store in Chennai City. The newly launched store was inaugurated by Mr. Arun Narayan, CEO, Jewellery Division, Titan Company Ltd and Mr. Narasimhan Y L, Circle Business Head, Jewellery, TN & Kerala, in the presence of key company representatives and esteemed patrons at 12:30 PM.
To celebrate the grand opening, Tanishq has introduced a special inaugural offer, wherein customers can avail a complimentary gold coin* on their purchases as part of the limited period celebration. The offer is valid from 1st May to 3rd May 2026.
Strategically located at 257, GST Road, West Tambaram, Chennai, Tamil Nadu 600045, the new store spans an expansive 8000 sq. ft. retail area. The store reflects Tanishq’s design excellence and customer first philosophy, offering a contemporary, spacious, and immersive retail environment that enhances the overall shopping experience.
The store houses an extensive selection of iconic Tanishq jewellery designs, including plain gold jewellery, exquisite diamond collections, solitaires, polki jewellery, and a wide range of daily wear pieces. Customers can also explore unique offerings such as Anique jewellery and South Indian Glass Kundan designs. The store also presents the latest natural gemstones collection, ‘Hues’, along with a versatile range catering to both traditional and contemporary preferences.
The store also houses the Tanishq Diamond Expertise Centre, a tech-enabled initiative that helps customers verify the authenticity, origin, and brilliance of their diamonds. The multi-tool setup features five advanced devices that evaluate key aspects of a diamond, including light performance, origin, inclusions, and laser markings.
Sharing his thoughts on the inauguration, Mr. Arun Narayan, CEO, Jewellery Division, Titan Company Ltd, said, “Tamil Nadu continues to be a key market for us, with a strong affinity for craftsmanship, design, and quality. The launch of our new store in West Tambaram is a reflection of our commitment to deepening our presence in the region while offering an elevated and seamless retail experience. With a diverse portfolio of designs and a customer first approach, we aim to cater to the evolving preferences of our customers and be a part of their meaningful celebrations.”
Mr. Dinesh Kumar, Circle Business Manager, Tanishq, added, “We are delighted to expand our footprint in Tamil Nadu with the launch of our new store in West Tambaram, Chennai. This milestone reflects our continued commitment to making our offerings more accessible while delivering an elevated and immersive retail experience. The store has been thoughtfully designed to cater to the evolving preferences of our customers, offering a wide array of designs across categories. We look forward to welcoming our patrons and being a part of their special moments and celebrations.”