தமிழில் பெரும் பாராட்டுகள் பெற்ற வெற்றிப் படத்தை மலையாளத்தில் யோகி பாபு முதன்மைப் வேடத்தில் நடிக்க ராம்நாத் பழனிகுமார் இயக்குகிறார்
ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த ‘ஆதார்’ தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
மலையாளத்திலும் ‘ஆதார்’ என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைகிறார்கள்.
‘ஆதார்’ மலையாளம் ரீமேக் குறித்து பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், “2022ம் ஆண்டு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள், விமர்சகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘ஆதார்’ பாராட்டுகளை குவித்தது. தற்போது இப்படத்தை யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்க மலையாளத்தில் இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள் ‘ஆதார்’ படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.
கார்ப்பரேட் உலகத்தின் லாப நோக்கத்திற்காக சாமானிய மனிதர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் ‘ஆதார்’ எடுத்துரைக்கும் என்று இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மேலும் தெரிவித்தார்.
கருணாஸ் நடித்த ‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய ராம்நாத் பழனிகுமார் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ மற்றும் ஜீவா-நயன்தாரா நடித்த ‘திருநாள்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ‘ஆதார்’ மலையாளம் ரீமேக் பணிகளை விரைவில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே ‘ஆதார்’ தமிழ் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. ‘நீளிரா ‘ திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும் வழங்குகின்றன.
ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் சோமீதரன் பேசுகையில், “சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்தப் படங்களை பார்க்கும் போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான ஈழத்து கலைஞர்களுக்கும் இருந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியை கேட்க முடியாதா…! என்னுடைய ஊரின்.. என்னுடைய வீட்டின்.. ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்து விட இயலாதா..! என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் ஈழத்திலிருந்து பாலு மகேந்திரா தொடங்கி ஏராளமான கலைஞர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இது சாத்தியப்பட்டிருக்கிறது. அதனை சாத்தியப்படுத்துவதற்கான முதல் புள்ளியை வைத்த இயக்குநர்- நண்பர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு எங்களுடைய வீட்டில் சமைக்கும் புட்டு உணவு பண்டத்தை பெரிய திரையில் பார்த்திட மாட்டோமா என்ற எண்ணம் இருந்தது, அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.
இந்த கதையை நான் சொல்லும் போது ஈழத்தில் நடைபெற்ற போரை பற்றி செவி வழியாக கேட்டு ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த எங்களுடைய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் இந்த கதையை படமாக உருவாக்குவதற்கான முடிவை மேற்கொண்ட தருணம் முக்கியமானது. இது போன்ற ஒரு கதையை படமாக்குவதற்காக முயற்சியை மேற்கொண்டிருந்த போது, இந்த கதைக்குள் ஒரு வாழ்வியல் இருக்கிறது, அந்த வாழ்க்கை தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும், தமிழ் சினிமா புதிதான வாழ்க்கையை கொண்டாடி இருக்கிறது, இந்த படத்தையும் அந்த வகையில் கொண்டாடும் என்று நம்பிக்கையுடன் தயாரித்த கார்த்திகேயன் சந்தானத்திற்கு என் நன்றி.
நான் எழுதிய திரைக்கதைக்குள் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது என்று ஊக்கப்படுத்திய கல்யாண் அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவோ அல்லது சீரியஸ் ஃபிலிம் ஆகவோ இல்லாமல் நாம் காலம் காலமாக பார்த்த போர்ப்படங்களில் இருந்து அந்த வாழ்க்கையை சொல்லும் படமாக இது இருக்கிறது.
இந்தப் படத்தை இணைந்து தயாரித்த ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணா அவர்களுக்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும், வெளிநாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும் என் நன்றி.
நாங்கள் நிறைய போர் படங்களை பார்த்திருக்கிறோம். ஹாலிவுட்டிலிருந்து பல திரைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த படங்களை நாம் கொண்டாடியிருக்கிறோம். அந்த திரைப்படங்களில் இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதையும் சுடப்படுவதையும் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு உலகம் போர் சூழலில் இருக்கிறது. தினம் நாம் போர் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த செய்திகளில். குண்டுகளின் எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்குப் பின்னால், குண்டு விழுகின்ற இடத்தில், அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி… அங்கும். மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும். குண்டு விழுகின்ற அந்த நேரத்தில் அவர்கள் ஒரு பிறந்த நாளை கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம், அவர்கள் ஒரு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம், அங்கு ஒரு மரணம் நிகழ்ந்திருக்கலாம், ஏதோ ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அங்கு குண்டு விழுந்த பிறகு என்னவாகும்? அந்த சூழ்நிலையை எப்படி மாற்றும்? அவர்கள் எப்படி பதட்டமடைவார்கள்? அந்த பதட்டமான வாழ்க்கை இருக்கிறதல்லவா, அப்படிப்பட்டதொரு வாழ்க்கையை சொல்லும் படம்தான் ‘நீளிரா’.
நாம் போர் படங்களை பார்க்கும் போது எப்போதும் இரு தரப்பினரின் தாக்குதலை பற்றிய படங்களாக தான் பார்த்திருக்கிறோம். இந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி… அந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி… குண்டுகள் முழங்கும், துப்பாக்கிகள் சுடும் காட்சிகளைத் தான் பார்த்திருக்கிறோம். இதற்கு நடுவில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. போர் என்றால் இரு தரப்பிலிருந்து சுடும் துப்பாக்கிகள் என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜம் அதுவல்ல.
போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் படித்தோம். அந்த போருக்குள் தான் எங்களுடைய சிறு வயது விளையாட்டுகள் இருந்தது. அந்தப் போர் தான் எங்களது விளையாட்டாகவும் இருந்தது. அந்தப் போருக்குள் தான் எங்களின் காதலும் இருந்தது, போருக்குள் தான் திருமணமும் இருந்தது. அந்த போர் வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்தோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு போர் என்றால் இரு தரப்பினரும் கம்பீரமாக நிற்பதை போன்று நினைப்பார்கள். ஆனால் அதுவல்ல. போர் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.
பகுதியாக மாறிவிட்ட போரில் எங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அந்த வாழ்க்கையில் நிகழ்வுகள் எப்படி இருந்தது? அதைத்தான் இந்த படத்தில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.
ஒரு விசயம் நடந்து விடுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. உலகத்தில் அப்படியான பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என்றொரு திரைப்படம். அந்தப் படம் போரை பற்றிய வலியை தான் சொல்லியது. போரின் வலியை ரத்தமாகவோ அழுகையாகவோ மட்டும் சொல்லாமல் அதற்குள் இருக்கும் வாழ்க்கையை சொல்லியது அந்தத் திரைப்படம். அப்படியானதொரு வாழ்க்கையைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.
இந்த சூழலில் தமிழர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு பரபரப்பான திரில்லரை ரசிக்க கூடியவர்களாகவும், அந்த படங்களை வெற்றி பெற வைப்பவர்களாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள்.
என்னைப் பொருத்தவரை மரணத்தை விட மரண பயம் கொடுமையானது. இந்த படம் அந்த மரண பயத்தில் இருந்த வாழ்க்கையை சொல்கிறது. இப்படி ஏராளமான இரவுகளில் ஒரு நீண்ட இரவை பற்றிய படம்தான் நீளிரா. அந்த இரவும், அந்த இரவின் படபடப்பும், அந்த மக்களின் பதற்றமும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கும்.
நாங்கள் தமிழகத்தில் ஈழத்தைப் பற்றி நிறைய கதைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். எனக்கு கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் உள்ள வீடுகள் எப்படி இருக்கும் என்று தெரியும். இதில் மேல் தட்டு, நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் ஆகியோரின் வீடுகள் எப்படி இருக்கும் என்றும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய ஈழ மண்ணில் எங்களுடைய வீடுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த தமிழ் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். இதுவரைக்கும் அத்தகைய காட்சி முழுமையாக காண்பிக்கப்படவில்லை. இந்த படம் அந்த வேலையை செய்யும். ஈழத்தில் வீடுகள் எப்படி இருக்கின்றன? அந்த வீட்டின் குசினி ( கிச்சன்) எப்படி இருக்கிறது? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.
லயோலா கல்லூரியில் நான் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போது ஈழத்தைப்பற்றி நான் எவ்வளவு கதைகளை சொன்னாலும் மற்றவர்களால் அதனை விசுவலைஸ் செய்து பார்க்க இயலாது. ஏனெனில் அவர்கள் அதனை விசுவலாக பார்த்ததில்லை. இந்தப் படம் அந்த வாழ்க்கையை உங்களுக்கு விசுவலாக எந்தவித சமரசமும் இல்லாமல் காட்சிப்படுத்தும்.
எங்கள் ஊரில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே நாங்கள் படமெடுத்திருக்கிறோம். இங்கிருந்து படங்கள் வராத காலகட்டத்தில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் தருணத்திலும் கூட நாங்கள் ஒரு விஹெச்எஸ் கேமராவில் படமெடுத்துக் கொண்டிருந்தோம். படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இறந்து விடுவார்கள். இருந்தாலும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும். அப்படி எடுக்கப்பட்ட படங்களை நாங்கள் 90களில் பார்த்திருக்கிறோம். அங்கிருந்து தொடங்கியது தான் இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்.
போர் தொடங்கும் போது வாழ்க்கை படப்படப்பாக இருக்கும், ஆனால் அதற்குள் இருக்கும் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு பதற்றத்தையும் அதற்குள் நடைபெறும் ஒரு திருமணத்தைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.
இலங்கையில் போர் நடந்த போது பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து இங்கு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு அந்த மக்களுக்காக நிற்க வேண்டும் என்று வந்த ஒரு ஐடி கம்பெனி இளைஞன், பின்னாளில் இயக்குநராகி, தயாரிப்பாளராகி, எனக்கு நண்பராகவும் மாறி இந்தப் படத்தை சாத்தியப்படுத்திய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.
பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவர் ஒரு முறை என்னிடம் ‘உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்க முடியாமல் போய்விட்டது.’ என சொன்னார். இன்று அதனை சாத்தியப்படுத்துவதற்கு உதவிய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,” என்றார்.
நடிகை ரூபா கொடுவாயூர் பேசுகையில், “எம காதகி படத்திற்கு பிறகு நான் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படத்தை போல் இந்த திரைப்படமும் எனக்கு ஸ்பெஷலானது. எனக்கு மட்டுமல்ல தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்த படம் ஸ்பெஷலானது. நமக்கு போரைப் பற்றி என்ன தெரியும் என்றால் போர் என்றால் ஆயுதம் இருக்கும், துப்பாக்கி இருக்கும், போராட்டம் இருக்கும் என தெரியும். ஆனால் அதற்குள் மக்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு எமோஷனலான போரை எதிர்கொள்வார்கள். அதை பற்றி பேச நினைத்த திரைப்படம் தான் நீளிரா. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு நீண்ட இரவில் நடைபெறும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. ரசிகர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.
இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குநருக்கும் நன்றி. நான் கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு ரசிகை. அவர் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். நீளிரா போன்ற படங்கள் மீது நம்பிக்கை வைத்து தயாரித்து வழங்கி இருக்கிறார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்திற்குப் பிறகு இயக்குநர் சோமிதரனுக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைக்கும். இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து எதுவும் தற்போது பகிர்ந்து கொள்ள இயலாது. ஆனால் இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்.
நீளிரா திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போதும் உங்கள் நினைவுகளில் இந்த நீளிரா இருக்கும். ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்,” என்றார்.
இசையமைப்பாளர் கே பேசுகையில், “இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அர்த்தமுள்ள திரைப்படத்தில் நானும் பங்களித்திருப்பதில் சந்தோஷம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துகள். நீளிரா ஒரு அர்த்தமுள்ள படைப்பாக இருக்கும். மறக்க முடியாத படமாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி,” என்றார்.
நடிகர் சனந்த் பேசுகையில், “நான் சென்னையில் பிறந்து சென்னையிலேயே வளர்ந்த பையன். எனக்கு இந்த படத்தில் இருந்த வாழ்வியல் முற்றிலும் புதிதாக இருந்தது. இயக்குநர் சோமிதரன் நிறைய டாக்குமென்ட்ரி திரைப்படங்களையும் வேறு சில வீடியோக்களையும் காண்பித்தார். அங்குள்ள மக்களின் வாழ்வியலை பற்றியும் சொன்னார். அதனை கேட்டு தான் இப்படத்தில் நடித்தேன். நான் இதற்கு முன் போர் சம்பந்தமாக குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றும் போது தான் நிறைய மக்களை சந்திக்க முடிந்தது. நிறைய மக்களிடம் பேசினேன். அவர்களுடைய கதைகளை கேட்டேன். அவர்களிடம் ஈழத்தைப்பற்றி நிறைய கதைகள் உள்ளது. அதை கேட்கும் போது இன்னும் நிறைய ஈழம் சம்பந்தமான திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என நினைக்கிறேன். விரைவில் நிறைய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.
இந்தப் படத்தை வெளியிடுபவர்களுக்கும் , வழங்குபவர்களுக்கும் என்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,” என்றார்.
நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், “மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல வகையான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். எனக்கு மட்டுமல்ல இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த திரைப்படம் ஸ்பெஷலானது. இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளும் எனக்கு பிடித்திருந்தது. மேடைக் கலைஞர்கள், குறும்படங்களில் நடித்தவர்கள், புது முகங்கள், லண்டன், கனடா ஆகிய இடங்களில் இருந்து நடிக்க வந்தவர்கள்… இவர்களுடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.
இந்த படத்தில் நான் ஒரு கேப்டனாக நடித்திருக்கிறேன். இதைத்தவிர என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி விரிவாக எதையும் சொல்ல இயலாது. ஆனால் படம் பார்த்தால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்திற்காக அஸ்ஸாம், மும்பை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நடிகர்களை கவனமுடன் இயக்குநர் தேர்வு செய்தார்.
படப்பிடிப்பின் போது நடிகர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை.. சந்தோஷமாக இருந்தது. நான் இதுவரை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தில் ஐந்து படங்களில் நடித்து விட்டேன். அது என்னுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனம் போன்றது. இங்கு என்ன சிறப்பு என்றால், இங்கு சமத்துவம் இருக்கும். அனைவரும் சினிமா மீது பற்று கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதிலும் அர்த்தமுள்ள படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.
நான் நடித்த காட்சிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிச்சயமாக பார்ப்பார், அப்போது நான் நன்றாக நடித்திருக்கிறேனா? இல்லையா? என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.
திரைப்படங்கள், இணைய தொடர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தொடர்பு கொண்டு இப்படத்தின் கதையை பற்றி விவரித்தார். இயக்குநர் சோமிதரனிடம் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன். கதையைக் கேட்ட பிறகுதான் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்தின் கதை தேர்வு குறித்து வியந்தேன். அவர் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், “நாங்கள் தயாரிக்கும் 18-வது திரைப்படம் இது. ஆறாவது திரைப்படம் தயாரிக்கும் போது நண்பர் ஒருவர் நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். அதை தமிழில் பேசலாமே என ஆலோசனை சொன்னார். அதன் பிறகு என்னை மாற்றிக் கொண்டு தமிழில் பேசி வருகிறேன். ஆனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியதிருக்கிறது. ஏனெனில் அப்போதுதான் பிசினஸ் செய்ய முடியும்.
நீளிரா மிகவும் ஸ்பெஷலான படம். பெருமைக்குரிய படம். இந்தப் படத்தை தயாரித்ததற்காக நாங்கள் தைரியமாக காலரை தூக்கி விட்டுக் கொள்வோம்.
2012ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து இங்கு திரும்பி வந்தேன். அங்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ் ‘பீட்சா’ படத்தை இயக்கி ஒரே நாளில் புகழ்பெற்றார். அதன் பிறகு தான் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாள் இயக்குநர் சோமிதரனை சந்தித்தேன். அவரை இதுவரை நான் இயக்குநராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. அவரும் என்னை தயாரிப்பாளராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள். அவருடைய படத்தை நாங்கள் தயாரிப்போம் என்று நினைக்கவில்லை. அவரும் எங்களிடத்தில் கதையை சொல்வார் என்று நினைக்கவில்லை. இது ஒரு மிகப்பெரிய நீண்ட பயணம். சோமிதரன் அருமையானதொரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
முதலில் இது போன்ற ஒரு கதையை தேர்வு செய்து படமாக உருவாக்க வேண்டும் என்று கார்த்திக் சொன்னார். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.
சனந்த் சொன்னது போல் நானும் மதுரையில் பிறந்து மதுரையிலேயே வளர்ந்தவன். இந்தப் படத்தில் சொல்லப்படுவதை போல் நாங்கள் எதையும் கேட்கவில்லை. அறியவும் இல்லை. தெரியாது. நான் ஒரு இந்திய பிரஜையாக எப்படி வாழ்வேன் என்றால் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை எனக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவழிப்பேன். இதுதான் என் உலகம். உலகத்தில் வேறு என்ன நடந்தாலும் அதை பற்றி அதிகமாக தெரிந்து கொள்வதில் விருப்பமில்லாத நபர். ஏனெனில் நான் ஒரு யூனிக்கான இதயம் கொண்ட நபர். காலையில் எழுந்தவுடன் செய்திகள் பார்க்கும்போது நல்ல விஷயமாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நெகட்டிவ் ஆகவே இருந்தால் அது என் வாழ்க்கையை பாதிக்கிறது. அந்த நாளை என்னால் இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை. நான் என்னை எந்த அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள இயலுமோ அந்த அளவில்தான் பேச வேண்டும். பார்க்க வேண்டும் என நானே வரையறை வகுத்துக் கொண்டேன்.
இந்த மனநிலையில் இருந்தபோது ஒரு நாள் கார்த்திக் என்னிடம் ஒரு நிமிட குறும்படம் ஒன்றே காட்டினார். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம். அது எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஏன்? எதற்கு? என்று புரியவில்லை. அப்புறம் கார்த்திக் அதைப்பற்றி எனக்கு விளக்கம் அளித்தார் அதன் பிறகு எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது.
சினிமா என்று வந்த பிறகு நம்மால் சில விசயங்களை சொல்ல முடியும் என்ற போது.. அதனை சொல்ல வேண்டும் என நினைத்தோம். அப்படித்தான் நாங்கள் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை உருவாக்கினோம். இயக்குநர் சோமீதரன் இப்படி ஒரு கதையை சொன்னபோது அதை படமாக தயாரிக்க பெருமிதத்துடன் முன்வந்தோம்.
படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் சோமீ நிறைய பேசுவார், ஒளிப்பதிவாளர் பிரதீபன் பேசவே மாட்டார். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் நாள் நாங்கள் நாகர்கோவிலுக்கு சென்றிருந்தோம். நான் -கார்த்திக் சுப்புராஜ்- கல்யாண் -பவன் -ராஜ் – என பலரும் சென்றிருந்தோம். முதல் காட்சி மிகவும் எளிமையான காட்சி. சினிமாவைப் பற்றி தெரியாதவர்கள் கூட அது மிக எளிமையான காட்சி என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் காட்சி முதல் டேக் ஓகே ஆகவில்லை. இயக்குநர் ஒன் மோர் என்றார். பிறகு மீண்டும் ஒன் மோர் என்று சொன்னார். கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் ஒன் மோர் சொல்லிக்கொண்டிருந்தார் . நாங்கள் அங்கு இருப்பதால் இயக்குனர் சோமீ பதட்டமடைகிறாரோ..! என நினைத்து அங்கிருந்து கிளம்பினோம். பிறகு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அங்கு வந்தபோது அதே காட்சி மீண்டும் அதே ஒன் மோர் என்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார்த்திக்கிடம் படத்தின் டைட்டில் நீளிராவை போல் இது நீண்டு கொண்டே போகும் போல் தெரிகிறது என்று சொன்னேன்.
ஆனால் இந்தப் படம் மிகவும் குறுகிய காலத்தில் அற்புதமாக உருவாக்கப்பட்ட படம். தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான படமாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக இசை. இசையமைப்பாளர் கே இந்தப் படத்தில் மிக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இசைதான் ஒரு காட்சியை உயிர்ப்புள்ளதாக உணர்வுபூர்வமானதாக மாற்றுகிறது. நடிகர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவது இசை தான். இசையமைப்பாளர் கே உடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.
நவீன் சந்திரா – சன் ஆப் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ. அவர் எங்களுடைய குடும்பத்தில் ஒருவர். அவருடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்த படத்தை காண்பித்தவுடன் பேராதரவு வழங்கிய ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணாவிற்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்தை சார்ந்த அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் சிந்தன் அவர்களுக்கும், அயல்நாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் விதுர்ஸ் அவர்களுக்கும் நன்றி
இன்றைய ஜென் ஸீ ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வருவதற்கு அரும்பாடு பட வேண்டி இருக்கிறது. அவர்களுக்கும் இந்தப் படம் மிகவும் முக்கியமான படம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இது மிகவும் முக்கியமான படம். நாங்களும் இது போன்ற நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது ரசிகர்களின் கைகளில் இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை கண்டு ரசிக்க வேண்டும்,” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “முதலில் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. அதன் பிறகு திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கினோம். எப்படிப்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அப்படிப்பட்ட படங்களை தயாரிக்க முன்வந்தோம். பொதுவாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் எல்லா படத்திற்கும் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் என்று தான் இருக்கும். படத்தின் தயாரிப்பாளராக கார்த்திகேயன் சந்தானம் இருப்பார். ஆனால் முதன் முறையாக நானாக இப்படத்தின் தயாரிப்பாளர் பெயரில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்று விரும்பி கேட்டேன். அப்படி ஆசைப்பட்ட திரைப்படம் இது.
இந்த படத்திற்கு முன் இயக்குநர் சோமீ மிகப்பெரிய டாக்குமெண்ட்ரி இயக்குநர். இலங்கையில் போர் நடக்கும் போது போரை பற்றிய ஆவண படத்தை இயக்கியவர். அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட. அவருடைய கதையை அவரே எழுதி இருக்கிறார். அவரிடம் இன்னும் நிறைய ஏராளமான கதைகள் உள்ளது.
எனக்கு ஈழம் சம்பந்தமாக ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு. கார்த்திகேயன் சொன்னது போல் ‘காட்சி பிழை’ தான் என்னுடைய முதல் குறும்படம். அதன் மூலமாகத்தான் நான் நாளைய இயக்குநரில் தேர்வானேன்.
பொதுவாக சின்ன வயதாக இருக்கும் போது ஒரு ஏரோபிளேன் சென்றால் … அதை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். மதுரையில் ஒரு ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் பசங்களுக்கு ஏரோபிளேன் எப்படி மகிழ்ச்சியை அளிக்குமோ… ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பிள்ளைக்கு அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருக்கும்போது அவர்களுடைய பார்வையில் ஏரோபிளேனை காண்பித்து எப்படி சோறு ஊட்டுவார்களோ.. இப்படி பலருக்கு ஏரோபிளேன் பறப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்பதை காட்சிப்படுத்தினேன். அதேபோன்று ஏரோபிளேன் பறக்கும் போது ஈழத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதுதான் அந்த குறும்படத்தில் நான் சொல்லி இருப்பேன்.
போரை பற்றிய நிறைய கிளாசிக்கல் ஃபிலிம் இருக்கிறது. 1917 என்ற படத்தை போல் போருக்குள் ஆக்சன் படங்களும் இருக்கும். லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்று இயக்குநர் குறிப்பிட்டார்.
‘தி பியானிஸ்ட் ‘படத்தில் இரண்டாம் உலகப்போர் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. அந்தக் காலகட்ட வாழ்க்கை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஒரு பியானோ பிளேயரை பற்றிய படம். அதில் ஒரு காட்சி வரும். அவரால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது. நீண்ட நாட்கள் கழித்து அவர் ஒரு பியானோவை பார்ப்பார். அவர் ஒரு இசைக் கலைஞர். பியானோவை பார்த்தவுடன் அதை வாசிக்க வேண்டும் என்று துடிப்பார். அதை வாசிக்க வேண்டும் என்று நினைப்பார். அப்படி வாசித்தால் அந்த ஒலி வெளியில் கேட்டு குண்டு வீச கூடும். இந்த நிலையில் அந்த இசைக் கலைஞர் பியானோ இசைக்கருவியை தொடாமல் அதை அற்புதமாக வாசிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். அது எனக்கு ஒரு அற்புதமான உணர்வை வழங்கியது. போரை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை உணர வைத்தது. இது போன்ற படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
சோமீ குறிப்பிட்டதைப் போல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து அந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஈழ மக்கள் மீது எனக்கு ஒரு எம்பதி இருந்தது. அதை கலை வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் விரும்பினேன். சினிமா ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் என்பதை உணர்ந்து இருக்கிறேன். உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் கலை படைப்புகள். வசூல் என்பதையெல்லாம் கடந்து இந்த சமூகத்திற்கு சில உண்மை கதைகளை அவசியம் சொல்ல வேண்டும். நாம் எல்லா பார்த்திடாத கேட்டிராத கதைகளை சொல்ல வேண்டும் என்பதுதான் சினிமா. ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. அத்தகைய தருணத்தில் நான் சோமீயை சந்தித்தேன். அவருடைய எல்லா ஆவணப் படங்களையும் பார்த்தேன். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவர் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்று நினைத்தபோது அவரிடம் இருந்து கதைகளை கேட்டோம்.
குறைந்த முதலீட்டில் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள். தயாரிக்கிறோம். ஏனென்றால் அது எங்களின் கனவு என்று அவரிடம் சொன்னேன். ஈழத்தைப் பற்றிய கதையை இந்திய சினிமாவில் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் ரசிகர்களுக்காக உருவாக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் நிறைய கதைகளை சொல்லும்போது இந்த நீளிரா கதையையும் சொன்னார். ஒரு திருமணம் – அதற்காக இரவில் நடைபெறும் சடங்குகள் – சம்பிரதாயங்கள் என்று சொன்னார். அதைக் கேட்கும் போது மிகவும் எமோஷனலாக இருந்தது. அதே தருணத்தில் அது ஒரு திரில்லராகவும் இருந்தது. இதனை ஒரு சர்வைவல் திரில்லர் என்றும் சொல்லலாம்.
போரை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை என்றாலும் இந்த படம் பார்க்கும்போது இது ஒரு அசலான திரில்லர் திரைப்படம் என்ற அனுபவத்தை வழங்கும்.
தற்போது ஈரானில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இங்கு ஒரு திருமணம் நிற்கிறது. அதனால் உலகத்தில் எங்கோ நடைபெறும் ஒரு போரின் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது. இந்த சூழலில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பகுதியில் திருமணம் எப்படி நடந்திருக்கும் என்பதை எம்மால் எளிதாக புரிந்து கொள்ள இயலும். அதுவும் இந்த திரைப்படம் சுவாரசியங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்ட ஒரு கதையாக உருவாகி இருக்கிறது. குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். நடித்த நடிகைகள் நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தின் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறோம். தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.
250+ MSME CEOs, industry captains, and academia convene in Chennai
Leaders from TVS, Boeing, Motherson, Maruti Suzuki, Cummins, L&T, Bosch, ZF, and Deloitte engage MSMEs on quality, global value chain integration, and digital transformation
IFQM launches Quality Excellence Prize for MSMEs, Leadership Development Course, and two industry-designed university courses
Chennai, March 20, 2026: The Indian Foundation for Quality Management (IFQM) convened its first MSME Symposium at Anna University, Chennai, bringing together over 250 MSME CEOs, CPOs and CEOs of large companies, quality experts, and academic leaders to deliberate on making India’s Micro, Small, and Medium Enterprises (MSMEs) globally competitive and export-capable. The symposium, themed – India Needs… A Resurgent MSME Sector – called for a “national quality sprint” to integrate with the global value chains.
Delivering the keynote address, Venu Srinivasan, Chairman, IFQM, said, “If MSMEs grow in their journey, not just to better productivity, quality and profitability but to become large companies for strategy, technology, products, innovation and growth, it will be a breakthrough in creating a new India. The MSME transformation agenda can have some very simple objectives – do cell formation,double your productivity, reduce your quality defect by half,reduce your inventory by half, reduce your space by one-third, all this in about 12 months and we will be well on our way. IFQM is taking this force multiplicationeffort by taking a cluster approach – ten MSME clusters covering 67 MSMEs is already in place – and this I believe is not just an effort to improve the MSME ecosystem but our long term aspiration to build brand India.”
The MSME symposium featured four panel discussions, two case studies, and four concrete launches aimed at bridging the quality gap between India’s MSME ecosystem and global manufacturing standards.
Soumitra Bhattacharya, CEO & Director, IFQM, said, “India is amongst the fastest growing large economies, but our share of global trade is still under 2%. The bridge between GDP growth and global competitiveness is quality. Germany’s Mittelstand — our MSME equivalent — contributes 68% of that country’s exports. India’s 7.69 crore MSMEs have not reached anywhere close. The difference is not scale — it is quality systems, supply chain integration, and a culture of precision. Through this symposium and the programmes we have showcased today, IFQM is putting practical tools in the hands of MSME leaders — not policies on paper, but frameworks they can act on starting immediately.”
“India is in a sweet spot, and yet this opportunity has to be grabbed on merits. No one is going to give us a passthrough just because there is a big global geopolitical tension across the world and India could be a safe haven. We will earn our right by focusing on daily work management, continuous improvement, counselling and assessment and adherenece to global benchmarks,” he added.
India’s MSME sector accounts for 31% of GDP, 35% of manufacturing output, and nearly 49% of exports, employing 32.8 crore people across 7.69 crore registered enterprises. Yet India’s share of global merchandise exports remains at approximately 1.8%, and its IMD World Competitiveness Ranking slipped to 41st out of 69 economies in 2025. The symposium addressed this growth-competitiveness paradox head-on, with industry leaders sharing actionable frameworks, global benchmarks, and MSME transformation case studies.
Key Sessions and Industry Engagement
The symposium featured a cross-section of India’s industrial leadership engaging directly with MSMEs. The opening panel, “India as a Global Manufacturing Hub,” moderated by Ashwani Bhargava of Boeing India, featured panellists from Bosch (Madhav Dusane), Cummins India (Kavita Sandeep Kaushik), and LGB (Prabakaran), who examined what global OEMs look for when sourcing from Indian suppliers and the quality benchmarks MSMEs must meet to enter global value chains.
Pankaj Mital, Vice Chairman, Motherson Group, presented a case study on how Motherson transformed from a single Indian MSME into an $18-billion global company — offering a replicable roadmap for Indian manufacturers. A second panel on “Growth in the Domestic Market,” moderated by Arvind Balaji of Lucas TVS, included CV Raman of Maruti Suzuki, alongside leaders from TVS Motor, L&T, and TEPL, discussing how MSMEs can scale within India’s domestic supply chains.
A distinctive session titled “Listen & Unravel,” moderated by Deloitte, brought industry leaders face-to-face with MSME entrepreneurs to understand their on-ground challenges, while a “Solutions & Roadmap” panel moderated by Dr. Jairam Varadaraj offered concrete remedies and course corrections, including L&T SUFiN’s financing solutions for small manufacturers.
Five Launches at the Symposium
IFQM announced five initiatives designed to move from intent to action for MSMEs: (1) Cluster development by IFQM to enable a benchmark level for MSMEs; (2) The IFQM Quality Excellence Prize (QEP) for MSMEs — India’s first industry-led excellence award with a rigorous, multi-stage assessment framework designed specifically for smaller enterprises; (3) A Leadership Development Course for MSMEs through the IFQM Academy, launched by Srikanth Padmanabhan (Independent Director, IFQM) and R. Anandakrishnan (TVS Motor); (4) A Zero Defect Manufacturing course with SRM IST, Chennai; and (5) An Excellence in Manufacturing Engineering course with VelTech University. A special screening of the Mittelstand documentary during lunch highlighted global MSME success models.
சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இயக்குநர் வெங்கி அட்லூரி ( (Venky Atluri)- ஒரு சக்தி வாய்ந்த எமோஷனல் டிராமாவை வழங்க உறுதியளிக்கிறார்
சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் – ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது.
இந்த டீசர்- சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார். பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்…ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன.
மமிதா பைஜு கதைக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்கிறார். அவர் படத்திற்கு துடிப்பான மற்றும் வசீகரமான ஆற்றலையும் ஒன்றிணைக்கிறார். இந்த டீசர் குறிப்பிடத்தக்க வயது இடைவெளியை உள்ளடக்கிய ஒரு வழக்கத்திற்கு மாறான காதல் கதையை குறிப்பிடுகிறது. கதை சொல்லலில் வெங்கி அட்லூரியின் பிரத்யேக பாணி மூலம்.. இப்படம் இத்தகைய அம்சத்தை ஆழமாகவும், பல்வேறு உணர்ச்சிகளுடன் முதிர்ச்சியாக கையாளும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.
படத்தில் வலிமையான தொழில்நுட்ப குழுவினரின் பங்களிப்பையும் இந்த டீசர் காட்சிப்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் – கம்பீரமான மற்றும் சக்தி வாய்ந்த பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். இது காட்சி அமைப்புகளை உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி படத்தை செழுமையான மற்றும் விஷுவல் ஆக ஈர்க்கும் பிரேம்களுடன் படம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நவீன் நூலியின் எடிட்டிங் ..சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. பங்களானின் கலை வடிவமைப்பும் படத்தின் உலகத்தை மேலும் மேம்படுத்துகிறது.
வலிமையான உணர்ச்சிப்பூர்வமான அடித்தளங்களைக் கொண்ட -ஒரு மிகப்பெரிய அளவிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘- ஒரு அட்டகாசமான நட்சத்திர குழுவையும் உயர்தரமான தொழில்நுட்ப குழுவையும் ஒன்றிணைக்கிறது. ‘லக்கி பாஸ்கர் ‘, மற்றும் ‘வாத்தி’ ஆகிய படங்களின் வெற்றி மூலம் உயர்ந்திருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றொரு மறக்க முடியாத பொழுது போக்கு அம்சமுள்ள படத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.
சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas ) நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, எதிர்வரும் ஜூலை மாதம் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.
Chennai, March 17 2026: MGM Healthcare Malar, Adyar has successfully performed a Video-Assisted Thoracoscopic Surgery (VATS), a minimally invasive procedure, on a one-year-old girl to remove a congenitally developed non-functional portion of the lung (the lower lobe of the left lung) which posed a potential risk of severe respiratory complications, recurrent infections, or bleeding in the future, and could also have adversely affected heart function.
The condition, known as bronchopulmonary sequestration – a congenital malformation of the airway and lung – was diagnosed during fetal development and closely monitored until the child turned one year old, allowing doctors to plan the surgery safely for optimal outcomes. The condition is rare, accounting for only about 2% of congenital lung anomalies. The successful use of VATS to treat bronchopulmonary sequestration marks a first-of-its-kind achievement in Chennai.
The procedure was performed by Dr. Karpaga Vinayagam, Senior Consultant – Paediatric Surgery, who led a team including Dr. Mohan Raj, Consultant – Paediatric Surgery; Dr. Prabhakaran G, Senior Consultant, Paediatrics; Dr.Arun Kumar S, Lead Consultant – Neonatology, Dr. N.K.V. Vigneshwar, Associate Consultant – Neonatology, Dr. Vidhya Mohanram, Senior Consultant, Anaesthesia; and the multidisciplinary ICU team.
The procedure lasted approximately three and a half hours. During surgery, the team carefully removed the affected lower lobe of the left lung and ligated the abnormal blood supply from the aorta to the diseased segment.
In his comments, Dr. Karpaga Vinayagam said, “This was a particularly challenging surgery because the bronchopulmonary sequestration was located entirely within the left lung lobe and had a major blood supply directly from the aorta. Performing the procedure thoracoscopically in a child is technically demanding due to the limited space in the chest cavity. However, we opted for it, as this minimally invasive approach could mean less post-operative pain, a shorter hospital stay, and faster recovery compared to conventional open surgery.”
The child’s recovery has been remarkable. She was monitored in the ICU, shifted to the ward after two hours, and discharged within three days. Paediatric lungs continue to grow until around nine years of age, allowing the remaining lung to compensate for the removed lower lobe. She is expected to lead a normal, healthy life.
In his comments, Mr. Venugopal Bhat, Chief Operating Officer and Vice President – Group Strategic Initiatives, MGM Healthcare Malar, Adyar, said, “This successful surgery demonstrates our commitment to advanced paediatric surgical care and highlights our focus on minimally invasive techniques that ensure faster recovery and better outcomes for our patients.”
Chennai, March 17, 2026: Marking World Head Injury Awareness Day (March 20), the Kauvery Group of Hospitals emphasised the critical importance of rapid access to Level I Trauma Care Centres for patients suffering from severe head injuries and other life-threatening trauma. Thiru K Shankar, IPS, Director General of Prisons and Correctional Services, graced the occasion.
Head injury refers to trauma affecting the scalp, skull or brain, most commonly caused by road traffic accidents, falls, sports injuries or assaults. Globally, more than 50 million people sustain head injuries each year, while in India the estimated incidence is around 1.5 million annually, with nearly 60% resulting from road traffic accidents.
Trauma care facilities are categorised into four levels depending on the expertise and infrastructure available. Level I Trauma Care Centres represent the highest level of emergency care, equipped to manage the most complex and severe injuries.
Addressing the media, Dr Krish Sridhar, Group Mentor – Neurosciences and Director, Institute of Brain & Spine, Kauvery Hospital, Radial Road, said that timely and specialised trauma care plays a decisive role in saving lives. “Head injury is one of the most serious consequences of trauma, particularly in road traffic accidents. The outcome for the patient depends greatly on how quickly they reach a Level I Trauma Care Centre where specialised teams and advanced facilities are available round-the-clock. Early access to such centres during the golden hour can significantly improve survival and neurological recovery,” he noted.
In his comments, Dr Ranganathan Jothi, Chief – Brain & Spine Surgeon and Director of Neurosciences, Kauvery Hospital Vadapalani, said, “Many serious head injuries require urgent neurosurgical intervention. In patients with traumatic brain injury, conditions such as intracranial bleeding or brain swelling can deteriorate rapidly if not treated promptly. Immediate access to neurosurgical expertise, advanced imaging and intensive care – all available in a Level I Trauma Care Centre – can make the difference between life and death or between full recovery and long-term disability.”
Dr Aravindan Selvaraj, Co-Founder and Executive Director, Kauvery Group of Hospitals, commented: “World Head Injury Awareness Day is an important reminder of the growing burden of trauma in our society. Strengthening trauma systems and ensuring that patients are transported quickly to advanced trauma centres is critical. Across the Kauvery network, our trauma teams are equipped to provide comprehensive emergency care so that patients receive timely treatment during the most critical moments.”
Kauvery Hospitals manages hundreds of trauma and head injury cases every year, particularly across its advanced facilities in Chennai, including Alwarpet, Radial Road and Vadapalani, where specialised neurosurgical and trauma teams function round-the-clock.
Across the Kauvery network, Level I Trauma Care Centres are equipped with: 24×7 availability of neurosurgeons, trauma surgeons, emergency physicians and critical care specialists; advanced imaging facilities, including CT and MRI; dedicated trauma resuscitation teams; immediate access to operating theatres for emergency surgery; specialised neuro-critical care and intensive care units, and multidisciplinary teams capable of managing complex polytrauma cases.
To further support emergency response, Kauvery Hospital has strengthened its advanced ambulance network and introduced an SOS feature in the Kauvery Kare mobile application, enabling users to quickly request emergency assistance and ambulance transport to the nearest trauma care facility. Through continued awareness initiatives and advanced trauma care systems, Kauvery aims to improve survival and reduce long-term disability among patients with severe head injuries.
ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள “நீ Forever” திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. “தருணம்” என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
இன்றைய GenZ தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.
நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படம் சென்னையின் இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20 முக்கிய டிரேட் மார்க் இடங்களில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (SaReGaMa) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து, விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 27 முதல் உங்கள் இதயங்களைக் கவர வருகிறது “நீ Forever”.
தொழில்நுட்ப குழு விபரம்
தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர்: புகழ் & ஈடன் எழுத்து மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி இசை: அஸ்வின் ஹேமந்த் ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன் கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன் ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக் ஒப்பனை: கலைவாணி பாலன் பாடலாசிரியர்: கு.கார்த்திக் ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார் ஒலி கலவை: அரவிந்த் மேனன் VFX: Hocus Pocus DI: டி-ஸ்டுடியோஸ் போஸ்ட் நடனம்: விஜயராணி தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ் டப்பிங்: டி-ஸ்டுடியோஸ் போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: விக்ரம் சேகர் மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
நடிகர் ரவி மோகன் ஹீரோவாக நடித்த பிரபல திரைப்படமான “தாம் தூம்” மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. கடந்த காலத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படம், தற்போது புதுப்பிக்கப்பட்ட தரத்தில் மீண்டும் ரசிகர்களை சந்திக்க தயாராகியுள்ளது.
Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy) மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் இந்த ரீ-ரிலீஸை பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். சேலம் பகுதியிலேயே பல வெற்றி திரைப்படங்களை விநியோகம் செய்த அனுபவம் கொண்ட இவர்கள், ஹோசூரில் Grand Cinemas என்ற மல்டிப்ளெக்ஸ் திரையரங்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது “தாம் தூம்” படத்தை மீண்டும் திரைக்கு கொண்டு வருவதன் மூலம் ரசிகர்களுக்கு மலரும் நினைவுகளைத் தரும் அனுபவத்தை வழங்க உள்ளனர்.
2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று வெளியான “தாம் தூம்”, அந்நேரத்தில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. வெளிநாடுகளில் முழுமையாக படமாக்கப்பட்ட காட்சிகள், அதிரடியான சண்டை காட்சிகள், அழகான காதல் தருணங்கள் ஆகியவை அந்த காலத்து இளம் தலைமுறையை மிகவும் கவர்ந்தன. குறிப்பாக 2K தலைமுறைக்கும் இன்றளவும் நினைவில் இருக்கும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த படத்தின் மூலம் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தமிழில் முதன்முறையாக கதாநாயகியாக அறிமுகமானார். தற்போது ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கும் அவர், அரசியல் துறையிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறார். மேலும் இப்படத்தில் ராய் லக்ஷ்மி, ஜெயராம், போஸ் வெங்கட், பிதாமகன் மகாதேவன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் அமைந்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்திற்கு பெரிய பலமாக அமைந்தது. அந்த காலத்தில் ஹிட் பட்டியலில் இடம் பெற்ற பல பாடல்கள் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றன.
மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் உருவான “தாம் தூம்” படம், வணிக அம்சங்களுடன் கூடிய ஒரு முழுமையான கமெர்ஷியல் என்டர்டெய்னராக அமைந்தது. Mediaone Global Entertainment Limited மற்றும் Ayngaran International / Metro Film (P) Ltd ஆகிய நிறுவனங்கள் அதிக பொருட்செலவில் இப்படத்தை தயாரித்திருந்தன.
18 ஆண்டுகளுக்குப் பிறகு, “தாம் தூம்” படம் டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டு 5.1 ஆடியோ சவுண்ட் தரத்துடன் மீண்டும் திரைக்கு வர உள்ளது. இந்த படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் ரீ-ரிலீஸ் ஆகிறது.
இதனைத் தொடர்ந்து Murugan Film Factory சார்பில் கந்தசாமி (Kandasamy) மற்றும் பாலசுப்ரமணி (Balasubramani) ஆகியோர் மேலும் பல வெற்றி திரைப்படங்களையும் எதிர் வரும் காலத்தில். ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ரவி மோகன் ரசிகர்களுக்கும், 2000களின் நினைவுகளை மீண்டும் அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்கும் “தாம் தூம்” ரீ-ரிலீஸ் ஒரு சிறப்பு திரை அனுபவமாக அமையும் என்பது உறுதி.
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான ‘நமோ ரே – NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது. இந்து மதத்தில் போற்றப்படும் கடவுளான நாராயணனை இந்த உணர்ச்சிபூர்வமான இசை படைப்பு கொண்டாடுகிறது. பக்தி- நம்பிக்கை- மற்றும் மீட்பு ஆகிய கருப்பொருள்கள் மூலம் பார்வையாளர்களுடன் ஆழமாக இணைக்க முயற்சிக்கிறது.
நாகபந்தம்…
அபிஷேக் நாமா இயக்கத்தில் கிஷோர் அன்னபுரெட்டி மற்றும் நிஷிதா நாகிரெட்டி ஆகியோர்களின் தயாரிப்பில் உருவான ‘நாகபந்தம் ‘ வளமான கதை சொல்லல் மற்றும் அதிர்ச்சியூட்டும் காட்சிகளைக் கொண்ட ஒரு சினிமா பயணமாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. இது இந்தியா மற்றும் அதற்கு அப்பால் உள்ள பார்வையாளர்களுடன் எதிரொலிக்கும் கதாபாத்திரங்களை சித்தரிக்கும் குறிப்பிடத்தக்க தொழில் துறை கலைஞர்களின் பங்களிப்பைக் கொண்டுள்ளது. இந்திய கலாச்சாரத்தின் பன்முகத்தன்மை மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதை இந்தப் படம் நோக்கமாக கொண்டுள்ளது. நவீன இந்திய சினிமாவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை இப்படம் அளிக்கிறது.
இசை …
‘நமோ ரே’ ( NAMO Re) பாடல் திறமையான கூட்டணி ஜுனைத் குமார் மற்றும் அபே ஆகியோரால் பாரம்பரிய மற்றும் சமகால இசை பாணிகளை கலந்து இசையமைக்கப்பட்டது. எஸ். சௌந்தர்ராஜன் எழுதிய பாடல் வரிகள் ஆழமான ஆன்மீக உணர்வை தூண்டுகின்றன. பிரத்யேக நம்பிக்கை மற்றும் தெய்வீக தொடர்பை பற்றிய பிரதிபலிப்பையும் ஊக்குவிக்கின்றன. பாடகி ஹரி பிரியாவின் குரல் ஆன்மீக உணர்வின் ஆன்மாவை எழுப்புகின்றன. இந்த பாடல் பரவலாக எதிரொலிக்கிறது.
நடனம் & நடன அமைப்பு
‘நமோ ரே’ ( NAMO Re) பாடலின் சிறப்பம்சம் கணேஷ் ஆசார்யா மற்றும் ஸ்ரஷ்டி வர்மா ஆகியோரின் சிறந்த நடன அமைப்பாகும். சுமார் ஆயிரம் நடன கலைஞர்கள் பல்வேறு இந்திய நடன வடிவங்களை நிகழ்த்துகிறார்கள். இந்த நடன அமைப்பு இந்தியாவின் கலாச்சார மரபைக் கொண்டாடும் ஒரு துடிப்பான மற்றும் பார்வையை ஈர்க்கும் காட்சியை உருவாக்குகிறது.
கலை & காட்சி வடிவமைப்பு …
‘நமோ ரே’ ( NAMO Re) பாடலின் காட்சி அம்சம் அசோக் குமாரின் விரிவான தொகுப்பு- வடிவமைப்பு மற்றும் சௌந்தர் ராஜனின் ஒளிப்பதிவு ஆகியவற்றால் சிறப்பானதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் படைப்புகள் ஆன்மீக சூழலின் சித்தரிப்புக்கு நம்பகத் தன்மையை கொண்டு வருகின்றன. துடிப்பான வண்ணங்கள் மற்றும் பாரம்பரிய மையக் கருத்துகளை பின்னணியாகக் கொண்ட ஒரு ஆழமான பக்தி சூழலை உருவாக்குகின்றன.
முக்கியத்துவம் & செல்வாக்கு
‘நமோ ரே’ ( NAMO Re) ஒரு பாடலை விட , ‘நமோ ரே’ என்பது காதல் -பக்தி- ஒற்றுமையை ஊக்குவிக்கும் ஒரு கலாச்சார கொண்டாட்டம் ஆகும். சவால்களை எதிர்கொள்ளும் உலகில் நம்பிக்கை மற்றும் சமூக உணர்வை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கிளர்ச்சியூட்டும் பாடல் வரிகள் மற்றும் துடிப்பான நடன அமைப்பின் ஒருங்கிணைந்த சக்தி.. பல்வேறு பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு சிறந்த அனுபவத்தை உருவாக்குகிறது.
‘நமோ ரே’ ( NAMO Re) இசை பாடலின் அறிமுகம் நாக பந்தம் மற்றும் இந்திய கலை வெளிப்பாட்டிற்கான ஒரு மைல் கல்லாக அமைகிறது. ஆன்மீக விழிப்புணர்வு மற்றும் கலாச்சார பிணைப்புகளை மேம்படுத்துவதில் கலையின் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.
பொழுதுபோக்கையும் கடந்து ‘நமோ ரே’ ( NAMO Re) ஆன்மீக சிந்தனையையும் மன நலத்தையும் ஊக்குவிப்பதுடன் இந்த கூட்டு கலை வெளிப்பாட்டின் வாயிலாக நம்பிக்கையுடனான பிரத்யேக பிணைப்பையும் வளர்க்கிறது.
நாகபந்தம் ( Nagabandam) குறித்த எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் அத்திரைப்படமும் அதை சூழ்ந்துள்ள ‘நமோ ரே’ ( NAMO Re) குறித்த உற்சாகமும் ஒரு மறக்க முடியாத திரையுலக பயணத்தின் முன்னோட்டத்தை நமக்கு வழங்குகின்றன.
”கே டி: தி டெவில் – K D : The Devil ” படத்திலிருந்து ‘திற நீ எந்தன் தரணி திற நீ – Thira Nee Enthan Tharani Thira Nee” பாடல் மூலம் கொண்டாட்டத்தின் உச்சத்தை வழங்குகிறார் நோரா ஃபதேஹி (Nora Fatehi )
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘கே டி : தி டெவில் – K D : The Devil ‘ திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
கே வி என் புரொடக்ஷன்ஸ் – KVN Productions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வெங்கட் கே. நாராயணா தயாரித்துள்ள இந்தத் திரைப்படம் இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய வெளியீடுகளில் ஒன்றாக உள்ளது.
இப்படத்தில் ‘ஆக்சன் பிரின்ஸ்’ துருவா சர்ஜா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஷில்பா ஷெட்டி, வி. ரவிச்சந்திரன், ரமேஷ் அரவிந்த், ரீஷ்மா நானையா மற்றும் நோரா ஃபதேஹி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.
விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் ‘திற நீ எந்தன் தரணி திற நீ – Thira Nee Enthan Tharani Thira Nee” எனும் துள்ளல் மிகுந்த மற்றும் உற்சாகமான ஒரு நடனப் பாடலை வெளியிட்டுள்ளனர். அதிரடியான தாளமும் கொண்டாட்ட மனநிலையையும் கொண்ட இந்த பாடல் ரசிகர்களிடையே ஒரு முக்கியமான ‘பார்ட்டி கீதம்’ ஆக ( Party Anthem) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரபரப்பான பாலிவுட் நடன தாரகை நோரா ஃபதேஹி மற்றும் வசீகரமான நட்சத்திர நடிகர் சஞ்சய் தத் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்த பாடல் – கவர்ச்சி – திரையில் இருவரின் ஆளுமை மிக்க தோற்றம்- விறுவிறுப்பான நடன அசைவுகள் – ஆகியவற்றை கொண்டுள்ளது. அர்ஜுன் ஜன்யா இசையமைத்துள்ள இந்தப் பாடல் பல்வேறு மொழி பேசும் ரசிகர்களின் மனதிலும் ஆழமாக பதியும் வகையிலான ஒரு ஈர்க்கக்கூடிய தாள லயத்தை கொண்டுள்ளது.
துடிப்புமிக்க பாடகி ராஜலட்சுமி இந்தப் பாடலைப் பாடியுள்ளார். அவரது உற்சாகமான குரல் பாடலின் கொண்டாட்ட மனநிலைக்கு பொருத்தமாக அமைந்துள்ளது. பாடலின் வரிகளை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இசை அமைத்தல் – இசை ஒருங்கிணைப்பு மற்றும் பாடல் தயாரிப்பு பணிகளை அர்ஜுன் ஜன்யா மேற்கொண்டுள்ளார்.
‘திற நீ எந்தன் தரணி திற நீ ‘ பாடல் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் ரசிகர்களின் ஃபிளேலிஸ்டிலும் ( Playlists) , நடன மேடைகளிலும் இந்தப் பாடல் விரைவில் இடம் பிடிக்கும் என படக் குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்.
கே டி : தி டெவில் – KD : The Devil ‘ திரைப்படம் ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பிரம்மாண்டமான திரை அனுபவத்தை வழங்கும் என உறுதியளிக்கிறது.