Breaking
June 5, 2026

March 2026

மார்ச் 6 முதல் ZEE5-ல் ‘காந்தி டாக்ஸ்’

ZEE5, ‘காந்தி டாக்ஸ்’ படத்தின் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் அறிவித்தது!

இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில், விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி நடித்த விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட இந்த திரைப்படம், மார்ச் 6 முதல் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ZEE5-ல் வெளியாகிறது

திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற திரைப்படமான ‘காந்தி டாக்ஸ்’, தற்போது அதன் உலக டிஜிட்டல் வெளியீட்டை மார்ச் 6 முதல் ZEE5-ல் கொண்டாடவுள்ளது. இந்த படம் அதன் சக்திவாய்ந்த மற்றும் உலகளாவிய கதையம்சத்தை அதிகமான பார்வையாளர்கள் அனுபவிக்கவும் வகையில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் ஒளிபரப்பாகிறது.

லிங்க் – https://www.youtube.com/watch?v=FRTJ8TWC78g

Zee Studios, Moviemill மற்றும் Kyoorius நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம், அதன் துணிச்சலான கதை சொல்லல், வலுவான நடிப்பு மற்றும் மொழியைத் தாண்டிய தனித்துவமான திரைப்பட அணுகுமுறைக்காக பரவலாக பாராட்டப்பட்டது. கிஷோர் பாண்டுரங்க் பெலகர் எழுதி இயக்கியுள்ள ‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் நடித்துள்ளனர். சமகாலத்தில் அரிதாக உருவாகும் மௌன திரைப்படமாக இது திகழ்கிறது. முழுவதும் காட்சிகள் மற்றும் உணர்ச்சி வெளிப்பாடுகள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ள இந்தப் படம், ஏ.ஆர். ரஹ்மான் அமைத்துள்ள ஆன்மாவை வருடும் இசையால் மேலும் வலுப்பெறுகிறது.

‘காந்தி டாக்ஸ்’ திரைப்படம், தனிப்பட்ட இழப்புகள், பொருளாதார சிரமங்கள் போன்ற சூழ்நிலைகளில் சிக்கிக் கொண்டுள்ள சில மனிதர்களின் வாழ்க்கைப் பயணங்களை இணைத்து சொல்கிறது. எதிர்பாராத விதமாக அவர்கள் பாதைகள் ஒன்றாக மோதும் போது, அது உயிர்வாழ்வுக்கான போராட்டமாக, மனித உறவுகளின் தீவிரமான கதையாக மாறுகிறது. உரையாடல்கள் இல்லாமல், நடிப்பு, காட்சிகள் மற்றும் இசை மூலமாகவே ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்தும் இந்தப் படம், பார்வையாளர்களுக்கு முழுமையான மற்றும் மனதை நெகிழ்விக்கும் அனுபவத்தை வழங்குகிறது.

நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது:
“ஒரு சொல் கூட பேசாமல் இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்தும் திரைப்படம் என்பதால் ‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த படம். உணர்ச்சிகளை முழுக்க நடிப்பின் மூலம் வெளிப்படுத்துவது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. திரையரங்குகளில் கிடைத்த வரவேற்பு மிகவும் உற்சாகமாக இருந்தது. இப்போது ZEE5 வழியாக மேலும் பலர் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த படத்தின் கருத்துடன் பார்வையாளர்கள் இணைந்து, தங்கள் சொந்த அனுபவமாக இந்த கதையை உணர்வார்கள் என்று நம்புகிறேன்.”

அதிதி ராவ் ஹைதரி கூறியதாவது:
“‘காந்தி டாக்ஸ்’ படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது, அமைதியான காட்சிப் பதிவு முறை மூலம் ஒரு முழுமையான உணர்ச்சி உலகை உருவாக்கும் அதன் திறன். படத்தின் ஒவ்வொரு தருணமும் நெருக்கமான மற்றும் சிந்திக்க வைக்கும் அனுபவமாக உள்ளது. திரையரங்குகளில் கிடைத்த அனுபவம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. இப்போது ZEE5 மூலம் பல மொழிகளில் மேலும் பரந்த பார்வையாளர்களை இந்த படம் சென்றடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது பார்வையாளர்களை கவனிக்கவும், சிந்திக்கவும் வைப்பதோடு, தங்கள் பார்வையில் வாழ்க்கையின் பொருளை கண்டுபிடிக்கவும் அழைக்கும் ஒரு கதை.”

இயக்குநர் கிஷோர் பாண்டுரங்க் பெலகர் கூறியதாவது:
“‘காந்தி டாக்ஸ்’ எனக்கு மிகவும் தனிப்பட்ட மற்றும் சவாலான முயற்சி. உரையாடல்கள் இன்றி ஒரு கதையை சொல்ல வேண்டியிருந்ததால், காட்சிகள், நடிப்பு மற்றும் இசையின் சக்தியை முழுமையாக நம்ப வேண்டியிருந்தது. திரையரங்குகளில் கிடைத்த அன்பும் பாராட்டும் எங்களை மிகவும் உற்சாகப்படுத்தியது. இப்போது ZEE5 இந்த படத்தை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு செல்வது மிகுந்த மகிழ்ச்சி.”

‘காந்தி டாக்ஸ்’ திரைப்படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் மார்ச் 6 முதல் ZEE5-ல் தவறாமல் காணுங்கள்!

Kauvery Group Launches Dedicated GI Bleed Centres Across Tamil Nadu

Chennai, March 2, 2026: Kauvery Group of Hospitals has launched dedicated GI Bleed Centres across all its hospitals in Tamil Nadu to provide timely evaluation, coordinated care, and comprehensive management of Gastrointestinal (GI) bleeding, a common medical emergency marked by internal bleeding within the digestive tract.

These centres will also be operational in the group’s hospitals in Karnataka. With 12 units across the two states, the initiative ensures patients have access to specialised, multidisciplinary care closer to home.

These centres bring together emergency physicians, gastroenterologists, intensivists, interventional radiologists, and surgeons under a coordinated care model. From arrival in the emergency department through risk assessment, ICU or ward admission, endoscopic or radiological intervention, and structured discharge planning, patients are managed along a clearly defined clinical pathway.

The centres are equipped with 24/7 emergency endoscopy services and advanced therapeutic endoscopic techniques, including injection therapy, band ligation, glue therapy, and coil embolisation. Interventional radiology support for angiographic embolisation, along with surgical expertise for complex cases, is available whenever required.

Speaking at the launch, Dr. P. Basumani, Director, Kauvery Institute of Digestive Sciences, said: “GI bleeding can result from ulcers, gastric erosions, or variceal bleeds linked to liver disease. Effective management depends on early assessment, stabilisation, accurate diagnosis, and timely intervention, as delays can be life-threatening. It requires a systematic, well-coordinated approach. At the Kauvery GI Bleed Centre, we have streamlined evidence-based protocols to ensure timely care at every stage. What truly makes a difference is teamwork – with multiple departments working seamlessly to deliver coordinated, patient-centred care.”

Highlighting the vision behind the initiative, Dr. Aravindan Selvaraj, Co-Founder and Executive Director of Kauvery Group of Hospitals, said: “Access to timely, specialised care is critical in managing medical emergencies. With Kauvery Hospitals across Tamil Nadu and Karnataka, we are bringing advanced GI bleed management closer to the communities we serve. Our goal is to standardise protocols across all units to ensure consistent quality, safety, and patient outcomes, regardless of location. This initiative underscores our ongoing commitment to strengthening emergency and critical care services.”

‘L. ஜெகதம்மா 7B: ஸ்டேட் பர்ஸ்ட்’ திரைப்பட விமர்சனம்

ஊர்வசி, வி.கே. பைஜு,ராஜேஷ் ஷர்மா , ஜெயன் சேர்த்தலா, நோபி மார்கோஸ், அஞ்சலி சத்யநாத்,கலேஷ் ராமானந்த், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஜிபின் கோபிநாத், ரேஷ்மி அனில், ஷைலஜா அம்பு, பி.ஆர். பிரதீப் நடித்துள்ளார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி உள்ளார் ஷிவாஸ்.

ஒளிப்பதிவு அனில் நாயர், இசை கைலாஷ் மேனன்,பாடல்கள் பி. கே .ஹரி நாராயணன், படத்தொகுப்பு ஷாய்ஜால் பி.வி,கலை இயக்கம் ராஜேஷ் மேனன்.
எவர் ஸ்டார் இந்தியன் வழங்கும் இந்தப் படத்தைப் பாசில் ஹோல்டிங்ஸ் உடன் இணைந்து ஊர்வசி தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தின் கதை என்ன?

திருமணம் ஆகாத 40 வயதைத் தாண்டிய ஜெகதம்மா பாரத்தூர் என்கிற முன்னேற்றம் எட்டிப் பார்க்காத சிறிய ஊரில் வசித்து வருகிறார்.
அங்கே உள்ளவர்களுக்குக் குறிப்பாக உழைக்கும் பெண்களிடம் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்கும் தொழில் செய்கிறார்.
அத்துடன் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்டாகவும் இருக்கிறார். படப்பிடிப்புகளுக்கு துணை நடிகர்கள் சப்ளை செய்கிறார்.
அவருக்கு நம்பிக்கைக்குரிய தம்பியைப் போல் அன்வர் என்பவர் கூடவே இருக்கிறார்.
இப்படிப்பட்ட ஜெகதம்மா சொன்னபடி கேட்பதற்கு அங்கே ஒரு பெண்கள் கூட்டம் இருக்கிறது. அதிகாரிகளின் சட்ட திட்டங்களெல்லாம் அங்கே செல்லுபடி ஆகாது .அப்பகுதிப் பெண்கள் இவர் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது அந்தப் பெண்களின் கணவர்களுக்குப் பிடிப்பதில்லை. இருந்தாலும் இவர் சொல்வதைத்தான் மனைவிகள் நம்புவார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் அந்த ஊர்ப் பஞ்சாயத்து தலைவர் இறந்து விடுகிறார். அந்த 11 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஜெகதம்மா போட்டியிடும் படி ஒரு சூழல் வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் தேர்தலில் நிற்கிறார். அவரை எதிர்த்து தேசிய கட்சியும் பொதுவுடமை கட்சியும் என இரண்டு பிரதான கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்துகின்றன.அனுதாப ஓட்டுகளை வைத்து வெற்றி பெறலாம் என்று
இறந்த பஞ்சாயத்து தலைவர் மகளை நிறுத்தி ஒரு கட்சியினர் தேர்தல் பணியாற்றுகிறார்கள்.
இன்னொரு கட்சியான பொதுவுடமைக் கட்சியில் ஒரு பெரிய பணக்காரரை வேட்பாளராக நிறுத்துகிறார்கள்.அவருக்கு வாய்ப்பு கொடுத்ததில் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முணுமுணுப்புகள் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. அப்போது அந்த உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் வந்தவுடன் அவர்கள் எல்லோரும் மனம் மாறி ஒப்புக்கொள்கிறார்கள்.
இப்படிப்பட்ட இரு பெரிய மலைகள் இடையே ஜெகதம்மா மோதுகிறார்.
இவரை எதிர்த்து பல்வேறு பிரச்சாரங்கள் செய்கிறார்கள். இந்த அரசியல் விளையாட்டில் தனி ஒரு நபராக ஜெகதம்மா எப்படி ஜெயிப்பார் ? அந்தப் பகுதி மக்களைக் கவர மூன்று வேட்பாளர்களும் விவாதம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சித்தாந்தங்கள் சட்டதிட்டங்கள் பேசும் அவர்கள் மத்தியில் ஜெகதம்மா சில எளிமையான கேள்விகள் கேட்டு அவர்களை மடக்குகிறார் .அது பொதுமக்களிடம் பிரபலமாகிறது. அது மட்டுமல்லாமல் இவர் எளிமையாக ஜோடனை இல்லாமல் பேசுவது வைரலாகிறது.
ஜெகதம்மாவுக்கு தான் வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது .அப்போது அவரே மக்களிடம் அனுதாபம் பெறுவதற்கு ஒரு வேலையைச் செய்கிறார். அத்துடன் இடைவேளை வருகிறது.

அவர் செய்த வேலையால் மக்களிடம் அனுதாப அலையடிக்கிறது.11 வது வார்டு தேர்தலில் ஒரு வழியாக வெற்றி பெற்று விடுகிறார்.எதிர்க்கட்சிகள் வாயடைத்துப் போயிருக்கின்றன .பஞ்சாயத்து தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் இரு பக்கமும் சம பலத்துடன் இருப்பதால் ஒரு சிக்கல் வருகிறது.ஜெகதம்மாவின் ஒற்றை வாக்கு முக்கியமானதாகிறது.இவரைத் துணைப் பஞ்சாயத்து தலைவராக முயற்சி செய்கிறார்கள். தான் தலைவராகத்தான் ஆவேன் என்று பிடிவாதம் பிடித்து அதிலும் வெற்றி பெறுகிறார். இவரைத் தலைவராக்கி தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளலாம் என்று நம்பிய அரசியல்வாதிகளுக்கு அவர்கள் எண்ணத்திற்கு எதிராகச் செயல்பட்டு பேரிடியாக மாறுகிறார்.

ஒரு காலத்தில் வட்டி வசூல் செய்யும் ராணியாக ஜெகதம்மா இருந்திருந்தாலும் அந்தப் பதவிக்கு வரும் போது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அங்குள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உருப்படியாக செய்ய நினைக்கிறார். அங்கே கழிவு மேலாண்மை இல்லாமல் ஊரை அசுத்தப்படுத்துவதைக் தடுக்க நினைக்கிறார். இதற்காக கலெக்டரிடம் மனு கொடுக்கிறார். இது எதிர்க்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை .அவருக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்.
ஜெகதம்மா எதார்த்தமாக பேசிய பேச்சை வைத்து, கலவரம் செய்கிறார்கள்.கலவரத்தைத் தூண்டினார் என்று பழி போடுகிறார்கள். சிறை செல்கிறார். பிறகு குற்றமற்றவராக விடுதலையாகிறார்.ஜெகதம்மா எதார்த்தமாக பேசிய பல பேச்சுகள் மக்களிடம் தீயாகப் பரவுகிறது. தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களைப் பார்த்து இவர் ’நங்கு பழி’க்கிறார் .அது அவர்களை அவமானப்படுத்தியதாகப் பிரச்சாரம் செய்தாலும் மக்களிடம் அது பிரபலமாகிறது.இப்படி அவருக்கு எதிரான அம்புகள் அனைத்தும் பூ மாலையாக மாறியது போல் அவருக்கு விளம்பரமாகவும் அமைகிறது.செல்வாக்கும் உயர்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் ஜெகதம்மா ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கிறார்.’நோட்டா’ தெரியாமல் வெள்ளந்தியாக இருக்கும் ஜெகதம்மா,பஞ்சாயத்து தலைவர் ஆன பிறகு தெருவில் பொறுப்பில்லாமல் குப்பை போடுபவர் வீட்டுக்கு அதை பார்சல் செய்து கொடுத்து விட்டு அபராதத் தொகை செலுத்த பில்லை நீட்டும் போது பொறுப்புள்ள ஊர்த் தலைவராக மாறி இருப்பார்.
அங்கே முறைசாரா தொழில் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் வழங்குகிறது.
அதன் பிறகு அவர் தடையை உடைத்து முன்னேறிய ஒரு தலைவராக உருவெடுக்கிறார். அவரை இழுப்பதற்குப் பல்வேறு கட்சிகள் போட்டி போடுகின்றன. இன்னொரு பக்கம் தனிக்கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இத்தனை கட்சிகள் இத்தனை கொடிகள் இருக்கும் போது இன்னொரு கட்சியா? இன்னொரு கொடியா? நமக்கு இருக்கும் ஒரு கொடி போதும் என்று அவர் தேசியக் கொடியைக் காட்டுகிறார் அத்துடன் படம் முடிகிறது.

இந்தப் படத்தில் ஊர்வசி ஜெகதம்மா என்கிற டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். ஜெகதம்மாவாக ஊர்வசி படம் முழுக்க ஆக்கிரமித்து அனைத்து காட்சிகளிலும் அவரே மேலோங்கி நிற்கிறார்.

அந்த பாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டு கம்பீரமாக படத்தைத் தூக்கிச் சுமந்து இருக்கிறார். பல்வேறு பாத்திரங்கள் இடையில் ஊடாடி வந்தாலும் எல்லாவற்றையும் விட அவர்தான் மேலோங்கி வெளிப்பட்டுள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில்,விதவிதமான முகபாவனைகள் என்று நடிப்பாற்றல் காட்டுவதற்கான வாய்ப்புகளும் படத்தில் உள்ளன . அதை அவரும் சரியாகப் பயன்படுத்தி உள்ளார்.
அந்தக் கிராமத்து மனுஷியாகச் சரியாக உடல் மொழி காட்டி உள்ளார்.
எனவே படம் பார்த்துவிட்டு வெளியே வருகிறபோது ஜெகதம்மா மட்டுமே நினைவில் நிற்கும்படியாக அவர் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் பொதுவுடைமை கட்சி வேட்பாளர், தேசியக் கட்சித் தலைவர்கள்,ஊர்வசியுடன் எப்போதும் துணை நிற்கும் அன்வர் என்கிற வாலிபன்,தொலைக்காட்சி நேர்காணல் செய்பவர், லோக்கல் யூடியூப் சேனல் காரர் என்று பல்வேறு முகங்கள் மனதில் பதிகிறார்கள்.

எப்போதுமே ஏதாவது ஒரு ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் ஒரு பாத்திரம் நினைவில் இருக்கும்.
எளிமையான காட்சிகள் மூலம் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்த்தும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.அதற்கேற்ற வகையில் ஒளிப்பதிவாளர் அனில் நாயரின் ஒளிப்பதிவு அமைந்துள்ளது. இசையமைப்பாளர் கைலாஷ்மேனனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளன.

அரசியல் கட்சிகள் செய்யும் அன்றாடச் செயல்பாடுகளை எல்லாம் காட்சிகள் ஆக்கி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள்.
அரசியல் விளையாட்டில் எதுவும் சகஜம் என்று இருக்கும் கட்சிகளின் போக்கையும் காட்சிகள் ஆக்கியிருக்கிறார்கள்.

ஏழாம் வகுப்பு படித்த ஒரு பெண்,ஸ்டேட் ஃபர்ஸ்ட் என்று கூறும் அளவிற்கு எப்படி மாநிலத்தில் முதலாவதாகப் பார்க்கக்கூடிய பெண்ணாக உயர்கிறாள் என்பதுதான் இந்தக் கதை.

ஓர் எளிமையான கதையை எடுத்துக் கொண்டு கலகலப்பான காட்சிகளைக் கொண்டு வலிமையான கருத்தை சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பில் வெற்றிகரமான படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.இப்படம் மலையாளத்தில் வந்திருந்தாலும் காட்சிகள் மொழித் தடைகளை தாண்டி ரசிக்க வைக்கின்றன.

“ஆழி” திரைவிமர்சனம்

கன்னியாகுமரி பகுதியில் வசிக்கும் சரத்குமார் வெளியில் படகு மெக்கானிக் ஆகவும் முழு நேர தொழிலாக போதை கடத்தல் ஆயுத கடத்தலில் ஈடுபடும் ஒரு மிகப்பெரிய தாதாவாகவும் இருக்கிறார் அவருக்கு ஒரு மகள் இன்னொருஇன்னொரு பக்கம் ஒரு ஏழை குடும்பத்தில் வசிக்கும் இந்திரஜித் அவருக்கும் சரத்குமாரின் மகள் தேவிகாவுக்கும் காதல்.இதை அறிந்த சரத்குமார் அந்தப் பையனை ஒரு படகில் கட்டி நடுக்கடலில் தூக்கிக்கொண்டு சித்தரவதை செய்து கொலை செய்ய முயற்சிக்கிறார் இந்த சம்பவத்தில் சரத்குமார் அந்த பையனை கொலை செய்கிறாரா?சரத்குமாரை கொலை செய்கிறானா ?அல்லது இருவருக்கும் ஏதாவது ஏற்பட்டு மூவர் இருவரும் தப்பித்தார்களா என்பது தான் இந்த படத்தின் திரைக்கதை.
இந்தப் படத்தில் இந்த இரண்டு கதாபாத்திரங்கள் தவிர வேறு எதுவும் இல்லாததால் கதை அந்த ஒரு இடத்தில் மட்டுமே அந்த படகில் மட்டுமே நடைபெறுகிறது.இந்த திரைப்படத்தின் ஸ்பெஷல் என்னவென்றால் ஆஸ்கார் விருது பெற்ற சவுண்ட் இன்ஜினியர்ரசூல் பூக்கூட்டி இந்த படத்திற்கு சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி இருக்கிறார் அது மட்டுமே இந்த திரைப்படத்தின் ஸ்பெஷல்
சரத்குமார் வரும் முரட்டுத்தனமாக நடிப்பிற்கு அந்த ஒட்டு தாடி ஏனோ ஒட்டாமலே இருக்கிறது அது இல்லாமலே அவர் வெள்ளத்தனம் காட்டி இருக்கலாம் ரசிக்கும் படியாக இருந்திருக்கும்.
அவர் வில்லன் கடத்தல் மணி என்று காட்டுவதற்காக ஒரே ஒரு சீன் மட்டும் வைத்திருக்கிறார்கள் அதுவும் அவர் வெளிநாடு தனத்தை காட்டவில்லை ஏதோ வந்தோம் போனோம் என்று தான் இருக்கிறது.
அறிமுக நாயகனாக இந்திரஜித் தேவிகா சதீஷ் இருவரும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள் இந்திரஜித் நடிப்பு சரத்குமாரின் அடி வாங்கும் போது மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.
மாத ராமதாசன் எழுதி இயக்கியுள்ள ஆழி இந்த திரைப்படம் கடலின் ஆழத்தை காட்டி நம்மை பயமுறுத்தும் என்று நினைத்தால் நினைத்தால் தான்

“போர்த் ஃப்ளோர்” திரை விமர்சனம்

மும்பையில் வசிக்கும் ஆரிக்கு சென்னையில் இருக்கும் அவரது முன்னாள் காதலியிடம் இருந்து ஒரு போன் வருகிறது அதில் தான் ஒரு பிரச்சனையில் இருப்பதாகவும் நீ சென்னைக்கு உடனடியாக வரவேண்டும் நீ வந்த பிறகு நானே உனக்கு போன் செய்கிறேன் என்று சொல்லி அழைக்கிறாள்.
சென்னை வரும் ஆரி அங்கு உள்ள ஒரு தனிமையில் இருக்கும் ஒரு அப்பார்ட்மெண்டில் தங்குகிறார்.அந்த வீட்டின் மூன்று மாடியில் மட்டுமே புழக்கத்தில் இருக்கும்போது இவருக்கு தவறுதலாக நான்காவது மாடியில்உள்ள அறைக்கு சாவி வழங்கி அங்கே தங்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.நேரத்தில் அந்த அப்பார்ட்மெண்டில் ஒரே ஒரு பெண்ணும் வேறு ஒரு பிளாக்கில் ஷார்ட் பிலிம் எடுக்கின்ற பேர்வழிகள் என்று ஒரு சில இளைஞர்களும் இளைஞர்களும் தங்கி இருக்கிறார்கள்.
நிலையில் அந்த அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ஒரு சிலர் ஆரிய இடம் சில விஷயங்கள் பேசுகிறார்கள்.திடீரென ஏதேதோ மர்மமான கனவுகள் வருகிறது தனது காதலியை நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருக்க அவரையும் தேடுகிறார் இந்த சூழலில் அந்த மர்ம பங்கு அப்பார்ட்மெண்டில் என்ன நடக்கிறது என்பதை இந்த திரைக்கதை 4th ப்ளோர் என்னும் திரைப்படம் கூறுகிறது.
இந்த போர்த் பார் திரைப்படம் ஆனது ஹாரர் மூவியா பழிவாங்கும் திரைப்படமா க்ரைம் திருவிழா என பல்வேறு குழப்பங்களுக்கிடையில் இயக்கியிருக்கிறார் இயக்குனர்.
காதலியை தேடும் பாரிக்கு காதல் என்னவானால் என்று தெரியவில்லை ஆனால் அதே பங்களாவில் ஒரு அறையில் ஆரியன் மகள் அவருக்கே தெரியாமல் இருக்கும் மகள் ஒரு அறையில் அடைபட்டு இருப்பது அவரை மீட்பது ,மேலும் ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபடும் ரவுடிசம் என பல்வேறு விஷயங்களை இந்த ஹாரர் மூவிக்குள் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர்.
இந்த படத்தில் ஹீரோவாக ஆரி அவருக்கு நடிப்பு மிகவும் சுமாராகத்தான் வருகிறது அவர் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு இருக்க வேண்டும்,இல்லனாக இயக்குனர் சுப்பிரமணியன் சிவா இவர் முழுநேர நடிகராக மாறிக் கொண்டிருக்கிறார்.
பவித்ரா நாயகி யாவும் அவரின் மாமாவாக தலைவாசல் விஜயம் தங்களது தரப்பட்ட கதாபாத்திரங்களை செய்து இருக்கிறார்கள்.

இசை தரண் குமார் திகில் படத்திற்கான இசையில் இன்னும் மெனக்கெட்டு இருக்கலாம் அதே போல் ஒளிப்பதிவும்.
இயக்குனர் எல் ஆர் சுந்தரபாண்டி திரைக்கதையில் இன்னும் மெனக்கட்டு இருந்தால் நிச்சயம் இந்த ஹாரர் மூவி நமக்கு பயம் கொடுத்திருக்கும்

“தடயம்” வெப் தொடர் விமர்சனம்

1995 1999 இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் உள்ள கிராமங்களில் நடந்த தொடர் கொலைகளை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்திருக்கும் தொடர் தான் தடயம்
ஆந்திரா எல்லை வர தமிழக கிராமங்களில் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக இரட்டை கொலைகள் கணவன் மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டு அவர்களது தாலி மற்றும் அருணா கயிறு அதை மட்டும் மறுத்துக் கொண்டு செல்கிறார்கள்.இது தொடர்ந்து நடக்க மக்கள் வீதி அடைய இதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சமுத்திரகனி.அவரது அதிகாரியாக சிவா தான் இன்ஸ்பெக்டராக வருகிறார்.இருவரும் இணைந்து இந்த தொடர் கொலைகளை செய்தவர்களை தேட அது ஆந்திர பிரதேசம் வரை செல்கிறது.அதே நேரத்தில் வழக்கமாக உயர் அதிகாரிகளின் ஒத்துழையாமை போன்றவையும் இந்த வழக்கை சுணக்கப்படுத்துகிறது.இந்த நிலையில் இருவரும் இணைந்து எப்படி இந்த கொலைகளை கண்டுபிடிக்கிறார்கள் அந்த கொலைகளுக்கான காரணம் என்ன என்பதை கண்டறியும் திரைக்கதை தான் தடயம்.
இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரியாக சமுத்திரகனி ஒரு வித்தியாசமான நடிப்பாகவும் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மாற்றி புதிதாக ஏதோ தர முயற்சி செய்திருக்கிறார் அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்.அவரது முதிர்ச்சியான நடிவம் கூர்நோக்கு பார்வையும் இந்த கொலை வழக்கை எளிமையாக கையாள வைக்கிறது அவருக்கு.
இன்ஸ்பெக்டர் கேரக்டரில் ஷிவதாநடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ள கதாபாத்திரம் அதில் அவர் தன்னை நிரூபித்தும் இருக்கிறார்.
திரைக்கதையில் வரும் பல்வேறு கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தமாகவும் தேவையான இடத்திலும் பயன்பட்டு இருக்கிறார்கள்.
முக்கியமாக வில்லன் கதாபாத்திரம் புஷ்பா ஒன்று படத்தில் வில்லனாக வந்த ராஜ் இந்த வெப் சீரிஸில் கொடூரமான சைக்கோ இல்லனாக மிரட்டுகிறார்.
இந்த படத்திற்கான ஒளிப்பதிவும் அந்த காலகட்டமும் ,இசையும் சிறப்பாக பொருந்தி வருகிறது.
இந்தப் படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைக்கதை விறுவிறுப்பாக செல்வதால் தொய்வில்லாமல் செல்கிறது.
ஒரு இரட்டைக் கொலையும் அந்த வீட்டில் உள்ள ஒரு கேள்விக்குறி மார்க்கும் அதை தொடர்ந்து செல்லும் 72 கொலைகளும் என இந்த திரை கதையை சிறப்பாக எழுதி இயக்கி இருக்கிறார்நவீன் குமார் பழனிவேல்
தடயம் zee5 ott தளத்திற்கு ஒரு விறுவிறுப்பான க்ரைம் தொடர்