புது வேதம் திரைவிமர்சனம்

காக்கா முட்டை விக்னேஷ் ரமேஷ் இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிப்பில் ராசா விக்ரம் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் புது வேதம்.






கதைச்சுருக்கம்,
தந்தையை இழந்த விக்னேஷ் மற்றும் அவரது தாய் பேருந்து நிலையத்தில் பிச்சை எடுத்து வாழ்க்கையை தருகிறார்கள் அந்த நேரத்தில் விக்னேஷின் தாயை பாலியல் வன்புணர்வு செய்ய சிலர் முயற்சிக்கும் பொழுது ஒருவர் அவர்களை காப்பாற்றுகிறார் , மேலும் அவர் விக்னேஷின் தாயாரிடம் உன் மகனை நீ இங்கேயே விட்டு விட்டு வந்துவிடு நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூற அந்த தாயும் பெற்ற மகன் என்று பாராமல் அந்த பேருந்து நிலையத்திலேயே அனாதையாக விட்டுவிட்டு அந்த நபருடன் கிளம்பிச் சென்று. அதன் பின்பு சாப்பாட்டிற்கு வழியில்லாமல் அலையும் பொழுது ரமேஷ் நட்பு கிடைக்க, இரண்டு கால்களையும் இழந்த அவன் குப்பை மேட்டில் குப்பைகளை பொறுக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறான் அவனுடன் சேர்ந்து விக்னேஷும் அங்கு மேலும் பலரும் அந்த குப்பைகளை பொறுக்கி வளர்கிறார்கள். இவர்களுக்கு இடையே ஏற்படும் பந்தங்களும் பாசங்களும் அவர்கள் வாழ்க்கை எவ்வாறு பயணப்படுகிறது என்பதையும் இயக்குனர் ராசா விக்ரம் குப்பை மேட்டு கதையாக இருந்தாலும் ஒரு நேர்மையாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.
குப்பைகளை எடுத்துக் கொண்டு வருபவர்களும் அதை வாங்கி விற்று பெரும் பணக்காரராக மாறும் இமான் அண்ணாச்சி குப்பைகளில் கிடக்கும் காலாவதியான மருந்துகளை மெடிக்கல் ஷாப்பில் ரீலேபிள் செய்து விற்று கோட்டீஸ்வரராக பல கோடிகளில் வியாபாரம் செய்கிறார்.
அந்த குப்பை மேட்டில் வரும் ஒரு பாட்டி மற்றும் வயதுக்கு வந்த ஒரு பேத்தி அந்த பேதின் மேல் விக்னேஷ் ஒருதலையாக காதல் கொண்டு வருகிறார் ஆனால் அவள் வேறு ஒரு லாரி டிரைவரை நம்பி ஏமாந்து வயிற்றில் பிள்ளையை சுமந்து கொண்டு வருகிறார் அவருக்கு அரணாக வருகிறார் விக்னேஷ் அந்த நிலையிலும் அவர் மேல் கொள்ளும் காதல் விக்னேஷ் தன் மனிதநேயத்தை வெளிப்படுத்தி.
ஊரிலிருந்து வேலை தேடி வந்து சிசர் மனோகர் தன் பணத்தை இழந்து அவரும் இவருடன் சேர்ந்து குப்பை பொறுக்கும் கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறார் அவருடைய மகளின் கல்யாணத்தின் பொழுது பணத்திற்காக தடுமாறும் பொழுது ஒரு தந்தையாக கண்முன் நிற்கிறார்.
மேலும் வரும் பல கதாபாத்திரம் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கதை பத்திரங்களை சிறப்பாக அளித்திருக்கிறார்கள்.
படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் யாரும் எதிர்பாராத முடிவு அதை இயக்குனர் அழகாக அளித்திருக்கிறார்.
சென்னை போன்ற பெரு நகரங்களில் பெற்றவர்களை இழந்து பெற்றோர்களால் புறக்கணிக்கப்பட்டு தவறான வழிகளில் பிறந்து அனாதைகளாக எந்த வாழ்வாதாரமும் இல்லாமல் சுற்றி தெரியும் பலர் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு நம்மால் கொட்டப்படும் குப்பை மேடுகள் நமக்கு அது குப்பைகளாக இருக்கலாம் ஆனால் அது அவர்களின் வாழ்வாதாரம் என்பதை அங்கேயே, அந்த சாக்கடை அந்த துர்நாற்றம் ஆகியவற்றை சகித்துக் கொண்டு அங்கேயே வாழ்ந்து இந்த படத்தை எடுத்த இயக்குனருக்கும் நடிகர்களுக்கும் நிச்சயம் கைத்தட்டல் தந்தே ஆக வேண்டும் .
அந்த குப்பை மேட்டின் வாழ்க்கையை எதார்த்தமாக படம் பிடித்த கேவி ராஜன், ரவி தேவேந்திரன் இசை படத்திற்கு பலமாக.
புது வேதம் குப்பை மேட்டில் வாழும் ஒரு நேர்மை.