‘மதிமாறன் ‘திரை விமர்சனம்

கிராமத்தில்v எம் எஸ் பாஸ்கர். தபால்காரராக, இரட்டைக் குழந்தைகள் அதில் ஒருவர் செங்குட்டுவன் மற்றொருவர் இவானா இரண்டு குழந்தைகளும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

அதில் எம் எஸ் பாஸ்கரின் மகன் வளர்ச்சி குறைபாடு உள்ளவராக இருக்கிறார்.

படிப்பு மற்றும் திறமையை, தன் அறிவிலும் தொடர்ந்து நிரூபித்துக் உயர்ந்து கொண்டே இருக்கிறார்.

ஒன்றாக ஒரே வகுப்பில் படிக்கும் கதாநாயகி ஆராத்யாவிற்கும் செங்குட்டுவன் மீது காதல் மலாடுகிறது.

ஒருநாள், இவானா தனது கல்லூரி பணிபுரியும் பேராசிரியரோடு ஓடிவிட்டார் என்ற செய்தியறிந்து வீட்டில் அனைவரும் உறைந்து போகின்றனர்.

இவானா வயிற்றில் குழந்தையோடு கல்லூரி பேராசிரியர் உடன் ஓடிப்போன அவமானம் தாங்க முடியாமல் தூக்கு மாட்டிக் கொண்டு இறந்து விடுகிறார்கள்.

அதன்பின் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து கதாநாயகன் வெங்கட் செங்குட்டவன் கலங்கி நிற்கிறார்.

தனது சகோதரி இவானா மீது உள்ள கோபத்துடன் தன் சகோதரியை சந்திக்க சென்னை பயணப்படுகிறார்.

சென்னைக்கு வந்த கதாநாயகன் வெங்கட் செங்குட்டுவன் தன் சகோதரி இவனா வை சந்தித்தாரா? சந்திக்கவில்லையா?  சென்னையில் நடக்கும் தொடர்ந்து இளம்பெண்கள் கற்பழித்து கொலை செய்து கொண்டிருப்பது யார்? கொலை குற்றவாளிகளை காவல்துறையினர் கண்டுபிடித்தார்களா கண்டுபிடிக்கவில்லையா என்பதுதான் இந்த மதிமாறன் திரைப்படத்தின் மீதி கதை.

இந்த மதிமாறன் திரைப்படத்தில் கதாநாயகனாக வெங்கட் செங்குட்டுவன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் வெங்கட் செங்குட்டுவன், நெடுமாறன் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

நடிகர் எம் எஸ் பாஸ்கரின் நாளுக்கு நாள் தன் அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்ந்து கொண்டே செல்கிறார்

இந்த மதிமாறன் திரைப்படத்தில் இவானா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

நடிகை இவானா 
மிகவும் யதார்த்தமான நடிப்பை இந்த மதிமாறன் திரைப்படத்தில் கொடுத்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்குற்ற உணர்ச்சியால் உருக்குலைந்து நின்று அழும் காட்சிகளில் திரையரங்கில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் அழ வைக்கும் அளவிற்கு நடிப்பைக் கொடுத்துவிட்டார்.

இந்த மதிமாறன் திரைப்படத்தில் கதாநாயகியாக ஆராத்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ஆராத்யா, கல்லூரியில் இளமையாகவும், காவல்துறை அதிகாரியாக மிடுக்கெனவும் தோன்றி கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்..

காவல்துறை ஆணையாளராக கதாபாத்திரத்தில் வரும் ஆடுகளம் நரேன், வாட்ச்மேன் கதாபாத்திரத்தில் வரும்பவா செல்லதுரை, சுதர்ஷன் கோவிந்த், பிரவீன் குமார் . E இந்த மதிமாறன் திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பர்வேஸ். ஒளிப்பதிவான் மூலம் திரைப்படத்திற்கு மாபெரும் அளவில் தூணாக நிற்கிறது.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமையாகவும் 
பின்னணி இசை புதுமையாகவும் திரைப்படத்திற்கு கூடுதல் வலு சேர்த்துள்ளது.

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை திரைப்படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது.

மிகவும் அழகான ஒரு வாழ்வியலை கொண்டு வந்து கண்முன்னே நிறுத்தி அதில் உயிரோட்டமான திரைக்கதையை அமைத்து நல்ல ஒரு விருந்தாக மதிமாறனை திரைப்படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மந்திர வீரபாண்டியன்.

2023 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ் திரைப்பட உலகில் மிகச்சிறந்த படைப்பைக் கொடுத்து டாப் லிஸ்டில் மட்டுமல்லாமல் ஹிட் லிஸ்டிலும் இயக்குனர் வரிசையில் இணைந்து விட்டார் இயக்குனர் மந்திர வீரபாண்டியன்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் இயக்குனர் மந்த்ரா

வீரபாண்டியன் குறைபாடுள்ள ஒரு மனிதனின் வாழ்க்கையை உணர்வுப்பூர்வமாக சொல்வதோடு, அதனுடன் ஒரு கிரைம் திரில்லர் கதையை சேர்த்து சொல்லிய விதம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

OVER ALL RATTING…………..3/5

Related Post