சலார் திரைவிமர்சனம்

ஸ்ருதிஹாசன் மற்றும் அவரது
தந்தையை ஏழு வருடமாக ஒரு மிகப்பெரிய கும்பல் தேடிக்கொண்டிருக்கிறது. கதாநாயகி திடீரென்று வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு திரும்புகிறார்.
அப்போது ஸ்ரேயா ரெட்டி தன்னிடமுள்ள ரவுடி கும்பலிடம் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் கதாநாயகி ஸ்ருதிஹாசனை எங்கிருந்தாலும் கடத்தி வரச்சொல்கிறார். ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபிக்கு போன் செய்து தன் மகள் இந்தியா வருவதாகவும் நீங்கள் தயவுசெய்து தன் மகளை காப்பாற்றுமாறு கேட்டுக்கொள்கிறார்.

இதைத்தொடர்ந்து கதாநாயகி ஸ்ருதிஹாசனை காப்பாற்றுவதற்காக கதாநாயகன் பிரபாஸ் களமிறங்குகிறார்.இறுதியில் கதாநாயகி ஸ்ருதிஹாசனை ஸ்ரேயா ரெட்டி கடத்துவதற்கான காரணம் என்ன? மைம் கோபியிடம் கதாநாயகி ஸ்ருதிஹாசனின் தந்தை மைம் கோபியிடம் என்ன சத்தியம் செய்து கொடுத்தார்? என்பதுதான் இந்த சலார் திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகன் பிரபாஸ் சண்டை காட்சிகளில் அமர்க்களம் படுத்திருக்கிறார். உயிர் நண்பனுக்காக உருகும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் நம்மையும் கண் கலங்க வைத்துவிட்டார்.

நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன் கதாபாத்திரத்தை உணர்ந்து இருக்கிறார்.

மைம் கோபி தனது அனுபவம் நடிப்பை கொடுத்திருக்கிறார்.

மற்றும் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜெகபதி பாபு, பாபி சிம்ஹா, ஈஸ்வரி ராவ், ஸ்ரேயா ரெட்டி, ஜான் விஜய் அனைவரும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் புவன் கவுடாவின் ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்தை மிரட்டி வைத்திருக்கிறார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசை மற்றும் பாடல் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

STAR RATTING…………….2.5/5

Related Post