Shah Rukh Khan starrer has left no stone unturned to create records one after the other. Right from its release, the film has only created wonders. Now, adding yet another feather to its spree of creating records, Jawan has become a film that has witnessed a phenomenal 3.50 Cr. footfalls which is the highest for an Indian movie in 2023.
Jawan has ruled the houseful boards of the cinema halls ever since its release. The audience in abundance has rushed to the theaters to witness this action entertainer. Not just once but a huge chunk of people have watched the film several times. This has today made the film witness the 3.50 Cr. Footfalls, the highest for an Indian movie in 2023. This indeed shows that Jawan is an unstoppable force not just at the box office but also in the hearts of the audience.
‘Jawan’ is a Red Chillies Entertainment presentation directed by Atlee, produced by Gauri Khan, and co-produced by Gaurav Verma. The film was released worldwide in theaters on September 7th, 2023, in Hindi, Tamil, and Telugu.
வரலாறு படைத்த ஜவான்! ஷாருக்கானின் மெகா பிளாக்பஸ்டர் “ஜவான்” திரைப்படத்தினை 3.50 கோடி பார்வையாளர்களை கண்டுகளித்துள்ளனர்; 2023 இல் ஒரு இந்தியத் திரைப்படம் செய்த உட்சபட்ச சாதனை இது !!
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவரும் படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக சாதனைகளை படைத்து வருகிறது. ஜவான் படம் வெளியானதில் இருந்தே பல வரலாற்று சாதனைகளை படைத்து வருகிறது. தற்போது, அந்த சாதனை மகுடத்தில் மேலும் ஒரு இறகு சேர்ந்துள்ளது, ஜவான் திரைப்படத்தினை இது வரை திரையரங்குகளில் 3.50 கோடி பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். 2023-ல் ஒரு இந்தியத் திரைப்படம் செய்த உட்சபட்ச சாதனை இதுவாகும்.
ஜவான் வெளியானது முதலே திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் போர்டுகளாக நிரம்பி வழிகிறது. இந்த ஆக்ஷன் எண்டர்டெயினரைக் காண ஏராளமான பார்வையாளர்கள் திரையரங்குகளில் குவிந்து வருகின்றனர். இப்படத்தை ஒருமுறை மட்டுமல்லாமல், பலமுறை படத்தை ஏராளமானோர் பார்த்துள்ளனர். இதனால் இன்று படம் திரையரங்குகளில் 3.50 டிக்கெட் விற்பனையைக் கடந்து சாதனை செய்துள்ளது. 2023ல் ஒரு இந்தியத் திரைப்படத்திற்கான அதிகபட்ச சாதனை இதுவாகும். ஜவான் பாக்ஸ் ஆபிஸில் மட்டுமல்ல, பார்வையாளர்களின் இதயங்களிலும் தடுக்க முடியாத சக்தியாக இருப்பதையே இது காட்டுகிறது.
“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.
Chennai; 10 October, 2023: MathWorks, the leading developer of mathematical computing software, has successfully concluded its second MathWorks Automotive Conference 2023in Pune and Chennai. The event brought together engineers, automotive industry professionals, researchers, and academicians from across the country to discuss the latest trends, innovations, and challenges in the automotive industry.
Ramamurthy Mani, Engineering Director of MathWorks, delivered the keynote address, “Architecting Software-Defined Vehicles through Model-Based Design,” that shows how automotive engineers can use Model-Based Design for software architecture conceptualization, component design, software integration, and testing to enable higher quality and reliability of the final product. In addition, this year’s conference gathered noteworthy industry leaders and decision makers, including Sanjeev Madhav and Asawad Kulkarni from Tata Consultancy Services, Sivakumar Uppaluri from Volvo, Bhanu Prakash Padiri from Continental, Ujwala Karle from The Automotive Research Association of India, Neema Nair from Cummins, Dr. Philip Jose from Mahindra Last Mile Mobility, Bhupesh Tekade and Armelle Guerin from Renault Nissan Technology & Business Center India, Hariharan Lakshminarayanan from Stellantis, Dr.Manaswini Rath from KPIT, Gerd Winkler from Vitesco Technologies and many more. The group participated in engaging panel discussions and technical sessions across various topics, such as “The Transformative Journey of Software-Defined Vehicles with Model-Based Design” and “Celebrating Women in Automotive.”
Sunil Motwani, Country Head of MathWorks India, said, “We are delighted by the resounding success of the MathWorks Automotive Conference 2023 in Chennai and Pune. The event highlighted the influential role of the Software-Defined Vehicle in the automotive industry and enabled MathWorks to showcase how MATLAB® and Simulink® can help automotive engineers drive innovation within the industry. “
‘Jigarthanda Double X’, a pan-Indian film directed by Karthik Subbaraj and produced by Stonebench Films, is set to hit the theaters worldwide on for Diwali. With exactly a month away for the big day, its first single launch and press meet was held today at Satyam Cinemas, Chennai.
‘Maamadura’, the first song from ‘Jigarthanda Double X’ was released online by music composer-turned-actor G V Prakash Kumar today at 12.12 pm. SJ Suryah, Raghava Lawrence, producer Karthikeyan Santhanam, and music director Santhosh Narayanan among others participated in the physical event.
We are waiting for Diwali 2023 for the release of this movie. Thank you Kathiresan sir for giving me this stage. We wanted to meet you (press and media) exactly a month before the release and share information about ‘Jigarthanda Double X’. We have made this film at a huge cost. Thanks to Raghava Lawrence, S J Suryah sir, Director Karthik Subbaraj and all members of the crew. We hope this movie will be a huge hit. Watch this in theaters for Diwali and support us.
‘Jigarthanda’ won the National Award. We hope that ‘Jigarthanda Double X’ will also win the National Award. Editing and music will be pillars of this movie. I wouldn’t be here without my Stone Bench Films. Thanks to everyone who helped us.
Music composer Santhosh Narayanan said…
Everyone here said the single that was released today is a great song. We have made one such entire album. Do watch this movie in theatres. I get my own space when I do a film with Karthik Subbaraj. Karthik sir is my biggest supporter. I hope I have given good music. This movie has a special place in the list of my favorite films I have worked on. This flick will be different. Both SJ Suryah and Lawrence have acted well. There are huge expectations for this film. This is definitely a connect for you, thank you all.
Actor and director SJ Suryah said…
Hello everyone, We are handing over ‘Jigarthanda Double X’ to you press and media friends. The fim has content to reach audience across borders. I have seen the amount of anticipation a Karthik Subbaraj film can generate. Santhosh Narayanan, who does not speak much, has spoken a lot on this stage. This film has made him to speak so. Lawrence sir is a noble human being. It was a pleasure to work with him in this film. Karthik Subbaraj sir’s work and visuals are always extraordinary. God is sending good projects to me. ‘Iraivi’ is the biggest reason why I am a good actor here. I thank Karthik Subbaraj sir for that. There is much to talk about. We will definitely talk. This movie has taken shape very well.
Actor Raghava Lawrence said…
Greetings to all the journalists and friends who have come here, thanks to all my fans who love me without any expectations. I was supposed to act in ‘Jigarthanda’. Kathiresan and Karthik Subbaraj narrated its story. I was working on a Telugu film so I couldn’t do it. I was worried that I had missed it. ‘Jigarthanda Double X’ is the God-given opportunity to compensate it. I call those who teach me in life as Guru. I had worked in a film with Balachander sir. I call Superstar Rajini sir as Guru. Karthik Subbaraj is also a guru now. This movie is all about what he said. Karthik Subbaraj has made this movie very well. The team has constructed a road for people in the shooting location. This film will be a super hit just because of its team’s helping nature.
I am a big fan of Santhosh Narayanan. There is a lot to talk about this movie. It was a pleasure to act with SJ Suryah sir.
Director Karthik Subbaraj said…
Hello everyone, I am very happy to be on this stage. I hope this film will give me a big hit after ‘Petta’. I came to Satyam Theatre for the audio launch of ‘Pizza’. ‘Jigarthanda Double X’ gives me that kind of feeling now. Thanks to everyone who worked on this film. I won’t talk much about this movie. I hope you will talk about this story. Thanks to Stonbench Films and Kathiresan sir. As Santhosh Narayanan said, this film has come out very well. Thanks to our journalist friends. Please shower your support on us.”
A KARTHIK SUBBARAJ PADAM
A SANTHOSH NARAYANAN MUSICAL
DOP S THIRUNAVUKKARASU
EDITOR SHAFIQUE MOHAMED ALI
PRODUCTION DESIGNER T SANTANAM
STUNTS DHILIP SUBBBARAYAN
ART DIRECTOR BALASUBRAMANIAN, KUMAR GANGAPPAN
CHOREOGRAPHY SHERIF M, BABA BASKAR
SOUND DESIGNER KUNAL RAJAN
COSTUME DESIGNER PRAVEEN RAJA
MAKEUP VINOTH S
COSTUMER SUBIER
LYRICS VIVEK, MUTHAMIL R M S
STILLS M DINESH
VFX SUPERVISOR H MONESH
COLORIST RANGA
PUBLICITY DESIGNS TUNEY JOHN (24AM)
TEASER CUT ASHISH
SOUND MIX SUREN G
PRODUCTION CONTROLLER GANESH PS
PRODUCTION EXECUTIVES G DURAIMURUGAN
PRODUCTION COORDINATOR RAJKUMAR
PRODUCTION MANAGERS N SHANMUGA SUNDHARAM, RANGARAJ PERUMAL
EXECUTIVE PRODUCER ASHOK NARAYANAN M
ASSOCIATE PRODUCER PAVAN NARENDRA
CO PRODUCED BY KAL RAMAN, S SOMASEGAR, KALYAN SUBRAMANIAM
CO PRODUCED BY ALANKAR PANDIAN
DIRECTION TEAM SRINIVASAN, ANAND PURUSHOTH, KARTHIK VP, VIGNESWARAN, JAGADISH, ARVIND RAJU R, MAHES BALU, SOORAJ DAS, SAI, MURUGANANTHAM, RAGHUL M, AVINASH R, MOHAN KUMAR R
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ முதல் பாடல் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் தயாரிப்பில் பான்-இந்தியா படமாக உருவாகும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ இன்னும் சரியாக ஒரு மாதத்தில் தீபாவளி வெளியீடாக உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், அதன் முதல் பாடல் வெளியீடும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னை சத்யம் சினிமாசில் இன்று நடைபெற்றது.
‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘மாமதுர’-யை இன்று மதியம் 12.12 மணிக்கு இசையமைப்பாளரும் நடிகருமான ஜி வி பிரகாஷ் இணையத்தில் வெளியிட்டார். எஸ் ஜே சூர்யா, ராகவா லாரன்ஸ், தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் (ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்) பேசியதாவது…
இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம், இந்த திரைப்படத்தின் 2023 தீபாவளி ரிலீசுக்கு காத்திருக்கிறோம். இந்த மேடையை தந்த கதிரேசன் சார் அவர்களுக்கு நன்றி. வெளியீட்டுக்கு ஒரு மாதத்துக்கு முன் உங்களை சந்தித்து ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினோம். நிறைய செலவில் இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். ராகவா லாரன்ஸ், எஸ்,ஜே. சூர்யா சார், இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் மற்றும் அனைத்து குழுவினருக்கும் நன்றி. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறோம். திரையரங்குகளில் இதை தீபாவளிக்கு பார்த்து விட்டு ஆதரவளிக்க வேண்டும்.
‘ஜிகர்தாண்டா 1’ தேசிய விருது வாங்கியது. ‘ஜிகர்தாண்டா டபுள் எக்ஸ்’-ம் நேஷனல் அவார்ட் வாங்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது. எடிட்டிங், இசை எல்லாம் நன்றாக அமைந்துள்ளது. என்னுடைய ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் இல்லாமல் நான் இல்லை. எங்களுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றி.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம், திகட்டாத பாடல் என்று இன்று வெளியிடப்பட்ட பாடலை சொன்னார்கள். அப்படிப்பட்ட ஒரு ஆல்பமே பண்ணியிருக்கிறோம். இந்த திரைப்படத்தை கண்டிப்பாக தியேட்டரில் வந்து பாருங்கள். கார்த்திக் சுப்பராஜ் உடன் படம் பண்ணும் போது எனக்கு தனி ஸ்பேஸ் கிடைக்கிறது. கார்த்திக் சார் எனக்கு மிகப்பெரிய ஆதரவை அளிப்பவர். நல்ல இசை கொடுத்திருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் பணியாற்றிய படங்களில் மிகவும் பிடித்தவற்றில் இதற்கு தனி இடம் உண்டு. இந்த படம் வேறு மாதிரி இருக்கும். எஸ் ஜே சூர்யா மற்றும் லாரன்ஸ் இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. இது உங்களுக்கு கண்டிப்பாக கனெக்ட் ஆகும், நன்றி.
நடிகர் மற்றும் இயக்குநர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் உங்களிடம் ஒப்படைக்கிறோம். எல்லைகளை தாண்டி ரசிகர்களை சென்றடையும் விஷயம் இப்படத்தில் உள்ளது. கார்த்திக் சுப்பராஜ் படம் எந்த அளவு எதிர்பார்ப்புகளை உருவாக்கும் என்று நான் பார்த்துள்ளேன். அதிகம் பேசாத சந்தோஷ் நாராயணன் அவர்களே இந்த மேடையில் நிறைய பேசியுள்ளார். இந்த படம் அவ்வளவு பேச வைத்துள்ளது. லாரன்ஸ் சார் நல்ல மனிதர். இந்த படத்தில் அவருடன் பணியாற்றியது ரொம்ப சந்தோஷம். கார்த்திக் சுப்பராஜ் சார் படைப்பும் காட்சிகளும் அப்படி இருக்கும். இறைவன் நல்ல நல்ல படைப்புகளை என்னை நோக்கி அனுப்பி வைக்கிறார். நான் இங்கு ஒரு நல்ல நடிகனா இருப்பதற்கு ‘இறைவி’ படம் மிகப்பெரிய காரணம். அதற்காக கார்த்திக் சுப்பராஜ் சார் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நிறைய பேச வேண்டியது இருக்கிறது. கண்டிப்பாக பேசுவோம். இந்த படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது…
வந்திருக்கும் பத்திரிக்கையாளர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என் மேல் அன்பு செலுத்தும் என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. ‘ஜிகர்தண்டா 1’ நான் பண்ணவேண்டியது. கதிரேசன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் கதை சொன்னார்கள். தெலுங்கு படத்தில் நான் பணியாற்றிக் கொண்டு இருந்ததால் அந்தப்படத்தை என்னால் செய்ய முடியவில்லை. நான் ரொம்ப மிஸ் பண்ணிவிட்டேன் என்று கவலைப்பட்டேன். அதற்கு கடவுள் கொடுத்த வாய்ப்பு தான் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’. எனக்கு வாழ்க்கையில யாரெல்லாம் கற்றுக் கொடுக்கிறார்களோ அவர்களை நான் குரு என்று தான் சொல்லுவேன். பாலசந்தர் சார் கூட ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். ரஜினி சாரை நான் குரு என்று தான் சொல்லுவேன். கார்த்திக் சுப்பராஜும் இப்போது குரு தான். அவர் என்ன சொன்னாரோ அது தான் இந்தப்படம். கார்த்திக் சுப்பராஜ் இந்தப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கி உள்ளார். படப்பிடிப்பு நடைபெற்ற இடம் ஒன்றில் மக்களுக்காக சாலை அமைத்து தந்துள்ளார்கள். அடுத்தவர்களுக்கு உதவிய காரணத்திற்காகவே இந்தப்படம் வெற்றிப்படமாக அமையும்.
சந்தோஷ் நாராயணன் சாரோட பெரிய ரசிகன் நான். நிறைய மேடைகள் இருக்கிறது. இந்தப்படத்தை பற்றி நிறைய பேச வேண்டும். எஸ் ஜே சூர்யா சாருடன் நடித்தது மகிழ்ச்சி.
இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…
அனைவருக்கும் வணக்கம், நான் இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷப்படுகிறேன். ‘பேட்டை’ படத்திற்கு பிறகு இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுக்கும் என்று நினைக்கிறேன். ‘பீட்சா’ இசை வெளியீட்டுக்கு சத்யம் தியேட்டருக்கு வந்தேன். அந்த மாதிரி உணர்வை இப்போது எனக்கு ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ தருகிறது. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தை பற்றி நான் அதிகம் பேசமாட்டேன். இந்த கதையை பற்றி நீங்கள் பேசுவீர்கள் என்று நம்புகிறேன். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் கதிரேசன் சார் அவர்களுக்கு நன்றி. சந்தோஷ் நாராயணன் சொன்ன மாதிரி இந்தப்படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. பத்திரிகையாளர் நண்பர்களுக்கு நன்றி. உங்கள் ஆதரவு கட்டாயம் வேண்டும். அனைவருக்கும் நன்றி.
இயக்கம்: கார்த்திக் சுப்பராஜ்
தயாரிப்பு: கார்த்திகேயன் சந்தானம், எஸ். கதிரேசன்
அசோசியேட் தயாரிப்பாளர்: அலங்கார் பாண்டியன்
இசை: சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு: எஸ். திருநாவுக்கரசு
படத்தொகுப்பு: ஷஃபிக் முகமது அலி
தயாரிப்பு வடிவமைப்பாளர்: டி. சந்தானம்
சண்டை பயிற்சி: திலிப் சுப்புராயன்
கலை இயக்கம்: பாலசுப்ரமணியன், குமார் கங்கப்பன்
நடன அமைப்பு: ஷெரிப் எம், பாபா பாஸ்கர்
ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன்
ஆடை வடிவமைப்பாளர்: பிரவீன் ராஜா
ஒப்பனை: வினோத். எஸ்
ஆடைகள்: சுபேர்
பாடல்கள்: விவேக், முத்தமிழ் ஆர்.எம்.எஸ்
ஸ்டில்ஸ்: எம். தினேஷ்
வி.எஃப்.எக்ஸ் மேற்பார்வையாளர்: எச். மோனேஷ்
கலரிஸ்ட்: ரங்கா
பப்ளிசிட்டி டிசைன்ஸ்: ட்யூனி ஜான்
டீசர் கட்: ஆஷிஷ்
சவுண்ட் மிக்ஸ்: சுரேன். ஜி
ப்ரொடக்ஷன் கண்ட்ரோலர்: கணேஷ் பி.எஸ்
தயாரிப்பு நிர்வாகி: ஜி. துரைமுருகன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்: ராஜ்குமார்
தயாரிப்பு மேலாளர்கள்: என். சண்முக சுந்தரம், ரங்கராஜ் பெருமாள்
நவம்பர் 17ஆம் தேதி அன்று பான் இந்தியா வெளியீடாக வர இருக்கும் இயக்குநர் அஜய் பூபதியின் ’செவ்வாய்கிழமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘என் நெஞ்சம் நீந்துதே’ வெளியாகியுள்ளது!
‘ஆர்எக்ஸ் 100’ மற்றும் ‘மகா சமுத்திரம்’ படங்களுக்குப் பிறகு இயக்குநர் அஜய் பூபதி ‘செவ்வாய்கிழமை’ படத்தின் மூலம் மீண்டும் திரைக்கு வருகிறார். முத்ரா மீடியா ஒர்க்ஸ் பேனரின் கீழ் சுவாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா தயாரித்துள்ள இப்படத்தில் பாயல் ராஜ்புத் நாயகியாக நடித்துள்ளார். ‘கோ’ புகழ் அஜ்மல் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நவம்பர் 17ஆம் தேதி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘என் நெஞ்சம் நீந்துதே’ இன்று வெளியாகியுள்ளது. இந்திய அளவில் ‘கந்தாரா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஜனீஷ் லோக்நாத், ’செவ்வாய்கிழமை’ படத்திற்கு சிறந்த இசையைக் கொடுத்துள்ளார். பழனி பாரதி பாடல்களை எழுதியிருக்க, ஹர்ஷிகா தேவநாத் பாடியுள்ளார்.
அழகான கிராமப்புறத்தின் பின்னணியில் இந்தப் பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடலில் பாயல் ராஜ்புத் மற்றும் அஜ்மல் அமீருடன் படமாக்கப்பட்டுள்ளது. இந்த இசை நிச்சயம் உங்களை மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையில் அமைந்திருக்கிறது எனப் படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.
’செவ்வாய்கிழமை’ படத்தின் முதல் பாடல் ஏற்கனவே ஹிட். அந்தப் பாடலின் மூலம் கிராமத்து மக்களிடையே உள்ள அச்ச உணர்வை இயக்குநர் வெளிச்சம் போட்டுக் காட்டினார். ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் ஒரு கொலை நடப்பது பற்றிய சில குறிப்புகளையும் இந்தப் பாடல் தந்தது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள இந்தப் பாடலில், பாயலின் கதாபாத்திரத்தின் மூலம் காதல் வெளிப்பட்டுள்ளது.
தயாரிப்பாளர்கள் ஸ்வாதி ரெட்டி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா கூறுகையில், “அஜய் பூபதி வெறும் பாடல்களை மட்டும் தராமல் அதன் வழியே கதையும் சொல்வதால் அவை மிகவும் சிறப்பாக வெளிப்படும். ‘என் நெஞ்சம் நீந்துதே’ ஒரு குறிப்பிட்ட சூழல் கொண்ட காதல் பாடல். இந்தப் பாடல் வழியே பாயல் கதாபாத்திரத்தின் பின்னணியும் சொல்லப்பட்டுள்ளது. முதல் பாடலைப் போலவே இந்தப் பாடலும் ரசிகர்களைக் கவரும் என நம்புகிறோம். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. டிரெய்லர் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். படத்தை நவம்பர் 17ம் தேதி பெரிய அளவில் வெளியிடுவோம்” என்றனர்.
இந்தப் படம் ஒரு வித்தியாசமான ஆக்ஷன் த்ரில்லர் என்று இயக்குநர் அஜய் பூபதி கூறியுள்ளார். மேலும், “படம் பல உணர்வுகளைப் பற்றியது. அதில் காதலும் ஒன்று. அஜ்னீஷ் லோக்நாத் நல்ல இசையைக் கொடுத்துள்ளார். பாடல்களை அழகாகப் படமாக்கியுள்ளோம். தற்போது வெளியாகியுள்ள இந்தப் பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்று அவர் கூறினார்.
அஜய் பூபதி ‘செவ்வாய்கிழமை’ படத்திற்கு ஏ கிரியேட்டிவ் ஒர்க்ஸ் நிறுவனம் இணைத் தயாரிப்பு செய்துள்ளனர்.
நடிகர்கள்:
பாயல் ராஜ்புத், ஸ்ரீதேஜ், அஜ்மல் அமீர், சைதன்யா கிருஷ்ணா, அஜய் கோஷ், லக்ஷ்மன் மற்றும் பலர். தொழில்நுட்பக் குழுவினர்:
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: டாக் ஸ்கூப், நிர்வாகத் தயாரிப்பாளர்: சாய்குமார் யாதவில்லி, எடிட்டர்: குல்லப்பள்ளி, மாதவ் குமார், வசனம்: தாஜுதீன் சையத், ராகவ், கலை இயக்குநர்: மோகன் தல்லூரி, தயாரிப்பு வடிவமைப்பாளர்: ரகு குல்கர்னி, ஃபைட் மாஸ்டர்கள்: ரியல் சதீஷ், பிருத்வி, ஒலி வடிவமைப்பாளர் & ஆடியோகிராபி: தேசிய விருது பெற்ற ராஜா கிருஷ்ணன், ஒளிப்பதிவாளர்: தாசரதி சிவேந்திரா, நடன இயக்குநர்: பானு, ஆடை வடிவமைப்பாளர்: முடாசர் முகமது, இசையமைப்பாளர்: பி அஜனீஷ் லோக்நாத், கதை, திரைக்கதை, இயக்கம்: அஜய் பூபதி.
Second single ‘En Nenjam Neendhudhey’ from director Ajay Bhupathi’s ‘Chevvaikizhamai’
After ‘RX 100’ and ‘Maha Samudram’, super-talented director Ajay Bhupathi is returning to the big screen with ‘Chevvaikizhamai’. Produced by Swathi Reddy Gunupati and Suresh Varma under the banner of Mudra Media Works, the film has Payal Rajput in the lead role. Ajmal Ameer of ‘Ko’ fame has a prominent role. The creators of the thriller drama have announced that the film will be released on November 17th in Tamil, Telugu, Kannada, Malayalam and Hindi.
The film’s second song, titled ‘En Nenjam Neendhudhey’, was released today. B Ajaneesh Loknath, who bowled over the audience with the pan-India hit ‘Kantara’, has given excellent music to ‘Chevvaikizhamai’. Palani Bharathi gave the lyrics, while Harshika Devanath rendered it.
The song is set in the backdrop of the beautiful countryside. Shot on Payal Rajput and Ajmal Aameer, this one presents the actress in a refreshing way. The ‘RX 100’ director, who showed Payal in a novel way in that film, is back to show her in a special way yet again. The melody would make you want to listen to it again and again.
The first song from ‘Chevvaikizhamai’ has already been a hit. Through that song, the director highlighted the sense of dread among the people of the village. The song also gave some hints about a murder taking place every Tuesday. In the latest song, the romantic interest in Payal’s character has been brought out.
Producers Swathi Reddy Gunupati and Suresh Varma said, “Ajay Bhupathi’s songs are very special because they tell a story. They are not just musical interludes. ‘En Nenjam Neendhudhey’ is a romantic song with a certain context. The song has a lot to do with Payal’s background. Like the first song, we hope this one too is going to click with the audience. The post-production work is in its final stage. The trailer release date will be revealed soon. We will release the film on November 17 on a grand scale.”
Film director Ajay Bhupathi described the film as a different action thriller. “It is about multiple emotions. Love is one of them. Ajaneesh Loknath has given a nice melody. We have pictured the song beautifully. I hope everyone will like this song,” he said.
Ajay Bhupathi is the production partner at A Creative Works for ‘Chevvaikizhamai’.
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீதி சிங் நடிப்பில் 24ஏ.எம். தயாரிப்பில் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அயலான்’. இதன் டீசர் வெளியீட்டு விழா படக்குழுவினர் கலந்து கொள்ள நேற்று மாலை சென்னையில் நடந்தது.
நிகழ்வில் முதலாவதாக கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் எக்ஸிகியூடிவ் புரொடியூசர் சவுந்தர் பைரவி பேசியதாவது, “இந்த விழாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ரவிக்குமார், நடிகர் சிவகார்த்திகேயன், படக்குழுவினர் அனைவரையும் வரவேற்கிறோம்” என்றார்.
நடிகர் பாலசரவணன் பேசியதாவது, “இவ்வளவு நாள் எதற்காக காத்திருந்தோமோ அது நடக்கிறது. இந்தப் படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் ரவிக்குமாருக்கும், சிவகார்த்திகேயன் பிரதருக்கும் படக்குழுவினருக்கும் நன்றி”.
பாடலாசிரியர் விவேக் பேசியதாவது, “ஒருத்தருக்கு வெற்றி கஷ்டப்பட்டு கிடைக்கும்போதுதான் அது வரலாறாக மாறும். அதுபோன்ற ஒரு பாதையில் வந்தவர்தான் சிவகார்த்திகேயன். அதுபோலதான் ‘அயலான்’ படமும் கஷ்டப்பட்டு வந்துள்ளது. நிச்சயம் வெற்றி பெறும். ’மாவீரன்’ போன்ற படத்தை எடுத்து நடிக்க ஒரு தைரியம் வேண்டும். சமூக கருத்துகளை முன்னிறுத்தும் இதுபோன்ற படங்களை சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் எடுத்து நடிக்க வேண்டும். இந்தப் படத்தில் வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ரவிக்குமார், ரஹ்மான், சிவகார்த்திகேயனுக்கு நன்றி. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!”
பாடலாசிரியர் மதன் கார்க்கி, “இதுபோன்ற வெவ்வேறு ஜானர்களில் படங்கள் எடுப்பது அரிது. அதனால், இயக்குநர் ரவிக்குமார் இந்த கதையை சொன்னதும் மகிழ்ச்சியாக இருந்தது. நடிகர் என்பதையும் தாண்டி சக பாடலாசிரியராக சிவகார்த்திகேயனுக்கு பாடல் எழுதுவது மகிழ்ச்சி. ரஹ்மான் சார், விவேக் சார் இவர்களுடன் பணிபுரிந்தது கூடுதல் மகிழ்ச்சி”.
கலை இயக்குநர் முத்துராஜ், “இதுபோன்ற ஒரு படத்தில் வேலை பார்த்ததில் மகிழ்ச்சி. ரவிக்குமார் பொறுமையாகவும் தனக்கு என்ன வேண்டும் என்ற தெளிவும் கொண்டவர். அவரின் பொறுமைக்காகவே இந்தப் படம் பெரும் வெற்றி பெறும். சிவகார்த்திகேயன் மீது எனக்கு பெரிய மரியாதை உண்டு. கமர்ஷியலாக எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்றில்லாமல் பொறுப்பாக செய்வார். படக்குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர்”.
நடிகர் ஷரத், “இந்தப் படத்தில் நடித்தது எனக்கு மகிழ்ச்சி. ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளேன். சிவா சாரின் ‘மாவீரன்’ பார்த்தேன் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தில் நிறைய ஆக்ஷன் உள்ளது. உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்”.
எடிட்டர் ரூபன், “’அயலான்’ படம் இன்னும் முடியவில்லை. வேலை போய்க்கொண்டுதான் இருக்கிறது. சினிமாவில் இன்று நிறைய ஜானர்ஸ் வருகிறது. இந்த ஜானர் குழந்தைகளில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும். அப்படிதான், ரவி செய்துள்ளார். அவரின் பொறுமைக்கு மிகப்பெரிய நன்றியும் மரியாதையும். இந்தப் படத்தை ஆரம்பித்து வைத்த சிவகார்த்திகேயனுக்கும் தயாரிப்புத் தரப்புக்கும் நன்றி. இந்த டீசர் இரண்டு வருடங்களுக்கு முன்பு எடிட் செய்தது. பொறுமையாக இருந்த ரசிகர்களுக்கும் நன்றி. ஹாலிவுட் இயக்குநர்கள் போல ரவியும் எட்டு வருடமாக இந்தப் படம் செய்துள்ளார். படம் இப்போதும் புதிதாக உள்ளது. எல்லோருக்கும் நன்றி”.
இஷா கோபிகர், “நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் கோலிவுட்டில் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி. இயக்குநர் ரவிக்குமாருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. நீங்கள் இவ்வளவு நாள் காத்திருந்ததற்கு நிச்சயம் படம் சூப்பராக இருக்கும். என்னையும் இந்தப் படத்தில் அழைத்ததற்கு நன்றி”.
ஃபேன்தம் சி.ஈ.ஓ பிஜாய், “’அயலான்’ படத்தை உங்கள் அனைவரிடமும் காட்டுவதற்காக ஏழெட்டு வருடங்களாக் காத்திருக்கிறோம். சிவகார்த்திகேயன் சார் இல்லாமல் இந்தப் படம் சாத்தியம் இல்லை. ‘இன்று நேற்று நாளை’ படம் முடிந்த சமயத்தில் இதை ஆரம்பித்தோம். ஒவ்வொரு பரிமாணத்திலும் இந்தப் படத்தைப் பார்த்துள்ளோம். ஹாலிவுட் தரத்தில் இந்தப் படத்தைக் கொண்டு வர முயற்சி செய்தோம். இந்திய சினிமாவில் இப்படி ஒரு படம் வெளிவரவில்லை என இதன் தரத்தை பல ஹாலிவுட் கம்பெனி பாராட்டியுள்ளது”.
இயக்குநர் ரவிக்குமார், “’அயலான்’ படத்திற்கு காத்திருந்த காலக்கட்டம் குறித்து அனைவரும் பேசினார்கள். இதை மிதமாக கடந்து வர உதவியர்கள் என் குடும்பமும் நண்பர்களும்தான். இதற்கு பின்பு மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தவர் சிவகார்த்திகேயன். அவர் இந்தக் கதையின் மீது வைத்த நம்பிக்கையில்தான் இத்தனை வருடம் பல சவால்களைக் கடந்து பயணித்து வந்தோம். நீரவ் ஷா, முத்துராஜ் சார் போன்ற பெரிய மாஸ்டர்கள் இந்தப் படத்தில் வேலை பார்த்துள்ளது எனக்குப் பெருமை. அவர்கள்தான் என்னை வழிநடத்தினார்கள். ரஹ்மான் சார்தான் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் என்று சொன்னபோது மகிழ்ச்சியாகவும் பதட்டமாகவும் இருந்தது. ரஹ்மான் சார் நிறைய சுதந்திரம் கொடுத்துள்ளார். ரஹ்மான் சாரின் ரசிகன் நான். அவர் என் படத்திற்கு இசையமைத்திருப்பது மகிழ்ச்சி. வி.எஃப்.எக்ஸ். பிஜாய்க்கு நன்றி. நடிகர்கள் யோகிபாபு, பாலசரவணன், ஷரத் எல்லோருக்கும் நன்றி. என்னுடைய இயக்குநர் குழுவுக்கும் நன்றி” என்றார்.
நடிகர் சிவகார்த்திகேயன் பேசியதாவது, “‘அயலான்’ படம் தீபாவளிக்கு வருவதாக சொல்லி இருந்தோம். ஆனால், சிஜி பணிகளுக்கு இன்னும் சில காலம் இருந்தால் இன்னும் சிறப்பாக புதிய விஷயங்களை சேர்க்கலாம் என சிஜி பணிகள் செய்யும் நிறுவனத்திடம் இருந்து ரெக்வஸ்ட் வந்தது. அதனால், பொங்கலுக்கு வெளியீட்டை மாற்றினோம். நீங்கள் தற்போது டீசரில் பார்க்கும் ஏலியன் வேர்ல்ட் இப்போது உருவாக்கியது. தீபாவளியை விட பொங்கல் விடுமுறை இன்னும் சிறப்பாக உள்ளது. ‘இன்று நேற்று நாளை’ படத்தை திருச்சியில் பார்த்தபோது ரசிகர்கள் டைம் மிஷின் என்ற கான்செப்ட்டை அவ்வளவு ரசித்துக் கொண்டாடினார்கள். அதைப் பார்த்துவிட்டு இயக்குநர் ரவிக்குமாருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினேன். அதன் பிறகு அவரை சந்தித்து கதை கேட்டேன். இந்த ஏலியன் கதையை ஐந்து நிமிடங்கள் சொன்னார். உடனே சம்மதம் சொன்னேன். முதல் படத்தில் குறைந்த பட்ஜெட்டில் சிறப்பான படத்தை அவர் கொடுத்த நம்பிக்கையில்தான் இந்தப் படத்தில் அவருடன் இணைந்தேன். அவர் தமிழ் மீடியத்தில் படித்தவர். கல்லூரி படிப்பை கரஸில் முடித்தார். படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்துவிட்டார் ரவிக்குமார். படத்தை 95 நாட்களில் எடுத்து முடித்து விட்டார். அவ்வளவு பிரிப்பரேஷன். இந்தப் படத்திற்கு ரஹ்மான் சார் இசை இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. அவரும் கதைக் கேட்டு உடனே சம்மதம் சொன்னார். ஐந்து வருடங்களுக்கு முன்னால் ரஹ்மான் சாருக்கு என்ன சம்பளம் கொடுத்து கமிட் செய்தோமோ அதையே இப்போது வரை ஓகே சொல்லி எங்களுக்காக புதிய டியூன் இப்போது வரை போட்டுக் கொடுத்தார். அது அவருடைய பெருந்தன்மை. டீசர் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக சொன்னார். இந்தியாவில் லார்ஜ் ஃபார்மேட் கேமராவில் எடுத்த முதல் படம் ‘அயலான்’தான். நீரஜ் சார், முத்துராஜ் சார் என பல ஸ்ட்ராங் டெக்னீஷியன்ஸ் இதில் உள்ளார்கள். இதேபோன்று ஏலியன், ஸ்பேஸ் ஷிப் வைத்து இதற்கு முன்பு எம்.ஜி.ஆர். ஒரு படம் முயற்சி செய்தார். அதற்கு பிறகு நீங்கள் தான் என சொன்னார்கள். அதனால், எம்.ஜி.ஆர்.க்கு அப்புறம் சிவகார்த்திகேயன் தான் என யூடியூப் தலைப்பு வைத்து விடாதீர்கள். அதுபோன்ற கன்செப்ட் என்றுதான் சொன்னேன். படத்தில் 4600 வி.எஃப்.எக்ஸ் ஷாட்ஸ் உள்ளது. இந்தப் படத்தின் மொத்த டெக்னீஷியன்ஸூம் தமிழ் சினிமாவை சேர்ந்தவர்கள். சிஜி கம்பெனி அம்பத்தூரில்தான் உள்ளது. இதற்கு வெளிநாடு போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்தப் படம் முடித்தவுடன் நானும் ரவிக்குமாரும் சேர்ந்து இன்னொரு படம் செய்கிறோம். ஒருக்கட்டத்தில் படத்திற்கு நிதி தேவை என்ற நிலை வந்தபோது, நான் சம்பளம் வேண்டாம், படம் சிறப்பாக வர வேண்டும் என்று சொன்னேன். ரவிக்குமாரின் நேர்மைக்காக அவர் ஜெயிப்பார். இதுபோன்ற சிறந்த வி.எஃப்.எக்ஸ்ஸோடு சிறந்த படம் இந்தியாவில் இல்லை என்பதை நம்பிக்கையோடு சொல்வேன். ’அயலான்’ படத்தைக் குடும்பத்தோடு திரையரங்குகளில் பொங்கலுக்கு போய் பார்க்கலாம்” என்றார்.
Despite new film releases, ‘Jawan’ maintains an incredible hold in its 5th weekend! Collects 1117.36 Cr. globally!
Calling Shah Rukh Khan’s Jawan an unstoppable force won’t be any wrong. Starring King Khan, the film is indeed ruling the box office like a king. As the film is running in its 5th week now, it seems to have seen no effect of the new releases. Even after the arrival of many films, Jawan is standing strong with its rising box-office collection with 1117.36 Cr. gross box office collection globally and 626.37 Cr. in India.
Jawan has successfully proved itself a strong player at the box office in India. Its collection figures are continually making a stronghold at the box office. With a monstrous collection of 626.37 Cr. in India, Jawan has become the highest-grossing Hindi film in the history of cinema (Original language). It collected a record-breaking 566.33 Cr. in Hindi and a fabulous 60.04 Cr. in Dubs. Additionally, looking at its collection overseas, the film is standing strong with a total of $45.39 million. Internationally, Jawan has collected 1117.36 Cr. gross box office collection.
‘Jawan’ is a Red Chillies Entertainment presentation directed by Atlee, produced by Gauri Khan, and co-produced by Gaurav Verma. The film was released worldwide in theaters on September 7th, 2023, in Hindi, Tamil, and Telugu.
புதிய திரைப்படங்கள் வெளியான போதிலும், ‘ஜவான்’ அதன் 5வது வார இறுதியில் நம்பமுடியாத வசூல் சாதனை படைத்து வருகிறது! இதுவரையில் உலகளவில் 1117.36 கோடி வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.!
நடிகர் ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தை, தடுக்க முடியாத சக்தி என்று அழைப்பதில் தவறில்லை. கிங் கான் நடித்த இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஒரு ராஜாவைப் போல் ஆட்சி செய்து வருகிறது. இப்படம் தற்போது 5வது வாரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும், புதிய வெளியீடுகளால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல படங்கள் வந்த பிறகும், ஜவான் உலகளவில் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 1117.36 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் வசூலில் வலுவாக உள்ளது. மற்றும் இந்தியாவில் மட்டும் 626.37 கோடியை வசூலித்துள்ளது.
ஜவான் இந்தியா பாக்ஸ் ஆபிஸில் தன்னை ஒரு வலுவான வீரராக வெற்றிகரமாக நிரூபித்துள்ளது. அதன் வசூல் எண்ணிக்கை 626.37 கோடி வசூலுடன் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் அசைக்க முடியாத கோட்டையாக இருந்து வருகிறது. இந்தியா சினிமா வரலாற்றில் (அசல் மொழி) அதிக வசூல் செய்த இந்தித் திரைப்படமாக ஜவான் வரலாறு படைத்துள்ளது. இப்படம் இந்தியில் 566.33 கோடி வசூலித்து சாதனை படைத்தது. மற்றும் பிற மொழிகளில் 60.04 கோடி வசூல் செய்தது. கூடுதலாக, வெளிநாடுகளில் அதன் வசூலைப் பார்க்கும்போது, படம் மொத்தம் 45.39 மில்லியன் டாலர்களுடன் வலுவான நிலையில் உள்ளது. சர்வதேச அளவில் ஜவான் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூலாக 1117.36 கோடி வசூல் செய்துள்ளது.
“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.