Breaking
October 18, 2024

நயன்தாரா நடித்துள’அன்னபூரணி’- The Goddess of Food’

‘அன்னபூரணி’ படத்திற்காக தொழில்முறை சமையல் கலைஞராக மாறிய நயன்தாரா!

திரையில் தனது கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மைக்காக தீவிர உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு கொடுப்பதில் நடிகை நயன்தாரா எப்போதுமே தயங்குவதில்லை. இந்த தனித்த விஷயம்தான் சந்தேகத்திற்கு இடமின்றி திரைத்துறையில் அவரை இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வைத்திருக்கிறது. இந்த நிலையில், தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் இன்னொரு படமாக அவர் ‘அன்னபூரணி- The Goddess of Food’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.

இந்தத் திரைப்படம் சமையலைச் சுற்றி வருவதால், செஃபாக நடிகை நயன்தாரா தனது 100% சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். மேலும், காட்சிகளின் உண்மைத் தன்மைக்காக படத்தில் உள்ள சமையல் காட்சிகளின் போது, படக்குழு உண்மையான சமையல் கலைஞரை செட்டில் வைத்திருந்தது. சமையல்காரரின் சரியான குணாதிசயங்களாக இருக்கும் பேன் ஃபிளிப்பிங், டாஸ்சிங் மற்றும் பல நுணுக்கங்களையும் சரியாக கற்றுக் கொண்டார் நயன்தாரா. இதில் ஏமாற்றும் விதமாக ஒரு ஷாட் கூட இல்லை என்றும், நயன்தாரா எந்த டூப்பும் இல்லாமல் நடித்துள்ளார் என்றும் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருப்பதாலும், பல விஷயங்களை படமாக்க வேண்டியிருந்ததால் நடிகை நயன்தாரா தன்னுடைய மதிய உணவு மற்றும் இரவு உணவு இடைவேளையின் போது கூட கேரவனுக்குள் செல்லாமல் செட்டிலேயே இருந்துள்ளார். நடிகை நயன்தாராவின் இந்த அர்ப்பணிப்பு ‘அன்னபூரணி’ படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சில நாட்களில் பத்து மணிக்கு முடிந்துவிட வேண்டிய படப்பிடிப்பு நள்ளிரவு 12 மணி வரைகூட நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது தனிப்பட்ட வேலைகள் காரணமாக படப்பிடிப்பை அடுத்த நாள் தொடரலாம் என்று படக்குழுவினர் தெரிவித்தபோது கூட, தன்னுடைய வேலைகளைக் கூட பொருட்படுத்தாது படத்திற்காக அதிகாலை 5 மணி வரை கூட அவர் இருந்திருக்கிறார்.

இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமன் எஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (உரையாடல்கள்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளவர்கள்.

‘தி வில்லேஜ்’ இணையத் தொடர்,

‘தி வில்லேஜ்’ இணையத் தொடர் மூலம் என்னுடைய ஒ டி டி டிஜிட்டல் தள அறிமுகம், நிச்சயமாக வித்தியாசமான அனுபவமாகும்’ என பிரைம் வீடியோவின் ‘தி வில்லேஜ்’ எனும் இணையத் தொடரை பற்றி நடிகர் ஆர்யா உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.

பிரைம் வீடியோவில் வெளியாகவிருக்கும் ஒரிஜினல் தமிழ் திகில் தொடரான ‘தி வில்லேஜ்’ எனும் நீண்ட வடிவிலான இணையத் தொடரின் உலகளாவிய பிரீமியரை அண்மையில் அறிவித்தது. இந்தத் தொடர் அதே பெயரில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி மற்றும் ஷாமிக் தாஸ் குப்தா ஆகியோர் உருவாக்கிய கிராஃபிக் ஹாரர் நாவல்களால் ஈர்க்கப்பட்டு உருவாகியிருக்கிறது. தனது குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சிக்கும் மனிதனின் கதையை இந்த திகில் தொடர் விவரிக்கிறது. திறமைமிகு நடிகர்களில் ஒருவரான ஆர்யா- பத்தாண்டுகளுக்கும் மேலாக திரை துறையில் பணியாற்றி வருகிறார். இப்போது இந்த திகில் தொடரில் நடித்ததன் மூலம் நீண்ட வடிவத்திலான இணையத் தொடரின் ஸ்ட்ரீமிங்கில் அறிமுகமாகிறார். இந்த திகில் தொடரில் அவர் கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த கதாபாத்திரம், கட்டியல் எனும் கிராமத்தில் வசிக்கும் உள்ளூர் வாசிகள் சிலருடன் இணைந்து தனது குடும்பத்தை கண்டறியும் மீட்பு பணியில் ஈடுபடுவராக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒரிஜினல் திகில் தொடர் பற்றி நடிகர் ஆர்யா பேசுகையில், ” தி வில்லேஜ் எனும் திகில் தொடருடனான எனது ஒ டி டி எனும் டிஜிட்டல் தள அறிமுகம் நிச்சயமாக ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்தது. இதன் கருத்தாக்கம், திகில் & த்ரில்லர் அம்சம் மற்றும் ஆழமான கதை ஆகியவை இந்திய ஒ டி டி சந்தையில் ஒரு போதும் அதன் ரசிகர்களால் அனுபவிக்கப்படவில்லை. மேலும் இந்த இணைய தொடர் சுவராசியமானதாக இருப்பதையும் நான் கண்டேன். இது என்னை தொடர்ந்து பணியாற்ற வழி வகுத்தது.‌ இந்திய ஒ டி டி இயங்கு தளங்களில் காணப்படும் அனைத்து திகில் வகையிலிருந்தும் ‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் தொடர் தனித்துவமானதாகும். பல தருணங்களில் திரைப்படங்களில் நாம் பார்க்கும் திகில்.. ஓர் எல்லைக்குள் பின் தடை செய்யப்பட்டதாக இருக்கும். அதை உருவாக்கும் போது ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் செல்ல இயலாத நிலை உண்டு. ஆனால் இந்த திகில் தொடரில் இயக்குநர் மிலிந்த் ராவ் அனைத்து அம்சத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஜானரிலான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் படைப்பாளிகள் நம்புவதற்கு இது ஒரு சிறந்த வழி என நான் நினைக்கிறேன். ஏனெனில் மக்கள் இந்த வகையான ஜானரிலான படைப்புகளை கண்டு ரசிக்க விரும்புகிறார்கள்.‌” என்றார்.

‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் தொடரில் ஆர்யாவுடன் திவ்யா பிள்ளை, ஆழியா, ஆடுகளம் நரேன், ஜார்ஜ் மரியான், பி என் சன்னி, கே. முத்துக்குமார், எஸ். எஸ். கலைராணி, ஜான் கொக்கன், பூஜா, வி. ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.‌ இந்த தொடர் வினோதமான தோற்றமுடைய உயிரினங்கள்… மரபு பிறழ்ந்தவர்கள்.. ஒரு குடும்பத்தை இடைவிடாமல் வேட்டையாடும் பயங்கர கொடூரத்தின் முடிவில்லாத இரவைக் காட்சிப்படுத்தி இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் சகிப்புத்தன்மையின் விளிம்பிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த ஒரிஜினல் தமிழ் திகில் தொடரை இயக்குநர் மிலிந்த் ராவ் இயக்கி இருக்கிறார். ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் பி. எஸ். ராதாகிருஷ்ணன் தயாரித்துள்ளார். இந்த ஒரிஜினல் திகில் தொடர் நவம்பர் 24ஆம் தேதி முதல் தமிழில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. அதனுடன் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும், ஆங்கிலத்தில் சப்- டைட்டில்களுடன் பிரைம் வீடியோவில் வெளியாகிறது.

சென்செய் டொனால்ட் டைசனிடம் கராத்தே பயின்ற 7 தமிழக மாணவர்கள் ஜப்பானில் பிளாக் பெல்ட் வென்றனர்

அரகாவா ஸ்டான்லி வாடோ-காய் இந்தியா பயிற்சி மையத்தின் சென்செய் டொனால்ட் டைசனிடம் கராத்தே பயின்ற 7 தமிழக மாணவர்கள் ஜப்பானில் பிளாக் பெல்ட் வென்றனர்

12 வயது ஜெய்ஸ்ரீ அக்ஷயா மற்றும் 14 வயது ஆர்யன் சதீஷ் புதிய சாதனையை படைத்தனர்

அரகாவா ஸ்டான்லி வாடோ-காய் இந்தியா பயிற்சி மையத்தை சேர்ந்த புகழ்பெற்ற நிபுணரான சென்செய் டொனால்ட் டைசனிடம் கராத்தே பயிற்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த ஏழு இளம் வீரர்கள் ஜப்பானில் பிளாக் பெல்ட்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களில் 12 வயது ஜெய்ஸ்ரீ அக்ஷயா மற்றும் 14 வயது ஆர்யன் சதீஷ் புதிய சாதனையை படைத்துள்ளனர்.

டோக்கியோவில் நடைபெற்ற 2023 ஜே கே எஃப் (JKF) டான் கிரேடிங் தேர்வுகளில் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கராத்தேவில் மிக உயர்ந்த அங்கீகாரமான பிளாக் பெல்ட்களை இவர்கள் வென்றுள்ளனர்.

ஜே கே எஃப் என அழைக்கப்படும் ஜப்பான் கராத்தே கூட்டமைப்பின் சர்வதேச நிபுணர்களால் இத்தேர்வுகள் நடத்தப்பட்டன. உலகின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் மரியாதைக்குரிய கராத்தே அமைப்பாக இது போற்றப்படுகிறது.

வெறும் 12 வயதே ஆன ஜே ஜெய்ஸ்ரீ அக்ஷயா, டான் 1 ஜூனியர் பிரிவில் இந்தியாவின் இளைய ஜே கே எஃப் பிளாக் பெல்ட் வீராங்கனையாக தேர்ச்சி பெற்றுள்ளார். அதே பிரிவின் கீழ் கிரிஷிவா ஏடிஎம் என்ற மாணவரும் பிளாக் பெல்ட்டை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டான் 1 சீனியர் பிரிவில், கிஷோர் எம் பிளாக் பெல்ட் வென்றுள்ளார். டான் 2 ஜூனியர் பிரிவில் ஆர்யன் சதீஷ் பிளாக் பெல்ட் வென்றுள்ளார். இப்போது 14 வயதாகும் இவர், ஒன்பது வயதில் இந்தியாவின் இளைய ஜே கே எஃப் பிளாக் பெல்ட் வீரர் பட்டத்தை வென்று சாதனை படைத்தவராவார்.

மேலும், டான் 2 சீனியர் பிரிவில் ராகுல் அவதானி, ஹரிரோஷன் ஜே பி மற்றும் சுரேந்தர் கே ஆகியோர் பிளாக் பெல்ட்களை வென்றுள்ளனர். கராத்தே துறையில் அறிமுகமே தேவைப்படாத சென்செய் டொனால்ட் டைசனால் மேற்கூறப்பட்ட அனைவரும் பயிற்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. ஜே கே எஃப் பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் உரிமம் பெற்ற முதல் இந்தியர் இவர். தனது தந்தை மற்றும் புகழ்பெற்ற கராத்தே குருவான ஸ்டான்லி குருஸின் திறமையான வழிகாட்டுதலின் கீழ் மூன்று வயதிலிருந்தே கராத்தே கற்கத் தொடங்கியவர் சென்செய் டைசன் என்பது இங்கே நினைவுகூரத்தக்கது.

சென்செய் டைசனின் தந்தையின் மறைவுக்குப் பிறகு, ஜே கே எஃப் வாடோ-காய் கராத்தேவின் தலைவர் சென்செய் கொய்ச்சி ஷிமுரா அவருக்கு ஆசிரியரானார். கடந்த ஆண்டு இந்திய-ஜப்பான் கருத்தரங்கு நடந்தபோது, சென்செய் கொய்ச்சி ஷிமுரா, இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க சென்னை மற்றும் மேற்கு வங்காளத்துக்கு வருகை தந்தார். இந்நிகழ்ச்சியில் சுமார் 500 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தனது மாணவர்கள் பிளாக் பெல்ட் வென்றது மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் உலகின் இளைய ஐந்தாவது டான் ஜே கே எஃப் பிளாக் பெல்ட் வீரரான சென்செய் டைசன், “ஒரு மாணவர் முறையாக கராத்தே கற்று பிளாக் பெல்ட்டை அடைய ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும். மேலும், பிளாக் பெல்ட் எங்கிருந்து ஒருவர் பெறுகிறார் என்பது மிகவும் முக்கியம். எனது அனைத்து மாணவர்களும் ஜேகேஎஃப் அமைப்பிடமிருந்து பிளாக் பெல்ட்களைப் பெற்றதில்
நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “2023 பேட்ச்சின் வெற்றியின் மூலம், அரகாவா ஸ்டான்லி வாடோ-காய் இந்தியாவின் 16 மாணவர்கள் ஜே கே எஃப் சான்றளிக்கப்பட்ட பிளாக் பெல்ட்களை பெருமையுடன் பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே இது அதிக எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை 100 மற்றும் 1000ஐ எட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஏனெனில், நாங்கள் கராத்தே மட்டுமல்ல, வாழ்க்கைத் திறன்களையும் கற்றுத் தருகிறோம்,” என்றார்.

சென்செய் டைசன் மேலும் கூறுகையில், “எங்கள் அடுத்த இலக்கு டோக்கியோவில் நடைபெற உள்ள 2025 உலகக் கோப்பையில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும். கடந்த முறை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நடந்த இடமான நிப்பான் புடோகன் ஸ்டேடியத்தில் இது நடைபெறுகிறது. அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்கின்றன,” என்றார்.

ஜே கே எஃப் வாடோ-காய் என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற கராத்தே அமைப்பாகும், இது ஜப்பானுக்குள் 1,350 கிளைகளையும் ஜப்பானுக்கு வெளியே 250 குழுக்களையும் கொண்டுள்ளது (பதிவு செய்யப்பட்ட கிளைகள் உட்பட). 850,000 உறுப்பினர்களில், சுமார் 180,000 பேர் பிளாக் பெல்ட் தரவரிசையில் உள்ளனர்.

உலகின் மிகவும் பிரபலமான தற்காப்பு கலையான கராத்தே ஜப்பானில் தனது பயணத்தைத் தொடங்கியது, இப்போது சுமார் 150 நாடுகளில் 130 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் கற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும்-பாரதிராஜா,

Ref.No. TFAPA/610

NOVEMBER 21, 2023

சினிமா துறையில் சக கலைஞர்களை மதிப்பது மிகவும் அவசியம்

பெண்கள் சுயமாக வெளியுலகம் வரவும், சுய உழைப்பில் உயரவும் போராடும் காலம் இது. அப்படிப்பட்ட நேரத்தில் பெண்களைப் பற்றி யார் இழிவாக பேசினாலும் அது கண்டுக்கத் தக்கது.

அதுவும் சினிமாவில் பெண்கள் என்றாலே ஒரு இளக்காரப் பார்வை பலரிடம் இருக்கிறது. ஆனால் பொதுவெளியை விட சினிமா இன்று பெண்களுக்கு நன்மதிப்பையும், உயர்ந்த நிலையையும், சமமாக அவர்களை மதிக்கும் நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இக்காலகட்டங்களில் நம்மைச் சுற்றிப் போராடி வெல்லும் பெண்களுக்கு உறுதுணையாக, தூணாக நின்று வாழ்த்த வேண்டியது நம் அனைவரின் கடமை.

சில மேடைகள்…சில பேட்டிகள்…சில நேரங்கள், சில மனிதர்களின் சிந்தனையை…நாவைப் புரட்டிப்போடும். நா கவனமும்…மேடை நாகரீகமும் அனைத்து இடங்களிலும் மிக முக்கியமானது.

நடிகர் திரு. மன்சூர் அலிகான் தனது பேட்டியில் நிதானித்திருக்க வேண்டும். விடும் வார்த்தைகள் மற்றவர்களை வலிக்கச் செய்யுமே என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் வரம்பு மீறி நாம் மதிக்கும் ஓரு சக நடிகை பற்றி பேசியிருக்கிறார்.

இன்றைய திரையுலகை வேறு தளத்திற்கு கொண்டு செல்லும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது. சகக் கலைஞர்களைப் பற்றி பேசும்போது பொறுப்புணர்ந்து பேச வேண்டும். அவ்வாறு பொறுப்புணராமல், தடித்த வார்த்தைகளைப் பேசியதற்கு, நமது சங்கம் சார்பில் என் வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தவிர, பாதிக்கப்பட்டவர் அவர் பேசியது தவறு. எனது நன்நிலையை அவ்வார்த்தைகள் பாதிக்கிறது என்று பாதிக்கப்பட்ட பெண்ணாக அவர் குரல் எழுப்பியுள்ள நிலையில் , தானாக முன்வந்து திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்காதது சரியற்ற, முறையற்ற செயல்.

மன்னிப்பு கேட்பது மீசை மண்ணில் ஒட்டும் செயல் அல்ல. அது தன்னை மெருகேற்றிக்கொள்ள… உணர்ந்துகொள்ள …பெருந்தன்மையைக் கற்றுக் கொள்ள உதவும். சமயத்தில் அத்தன்மையே நம்மை பலமானவர்களாகவும் மாற்றும். திரு. மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டு இப்பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பதே சிறந்த செயல் என்று நாங்கள் அனைவரும் கருதுகிறோம்.

கலைஞர்கள், மேடையில் பேசும்போது காமெடி என்ற பெயரிலோ, வலைத்தளங்களில் வைரலாகும் நோக்கோடோ அடுத்தவர்களை புண்படுத்தும் வார்த்தைகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.

நன்றி.
தமிழ் ஃபிலிம் ஆக்டிவ் ப்ரொடியூசர்ஸ் அசோசியேஷன் சார்பில்,

பாரதிராஜா,
தலைவர்

Unlocking Potential: The Phenomenon of Catch-Up Growth

Chennai-21.11.2023-Childhood is a time of rapid growth and development, but at times,
children may experience delays in their growth for various reasons. Parents often grapple with
feelings of uncertainties, wondering why their child isn’t growing as expected and that can
sometimes be overwhelming.
Stunted growth occurs due to either inadequate nutrient intake, which can lead to growth
impairment, chronic illnesses, or environmental factors 1 . Today, across the world, there are
approximately 149 million stunted children below the age of five. In fact, a report by the World
Health Organization shows that India accounts for nearly one-third of the global childhood
stunting burden with 40.6 million children stunted under the age of five.
Let’s deep dive into what catch-up growth is, its causes, and how parents can support their
child’s catch-up growth journey.
What Is Catch-Up Growth?
Malnutrition stands as a primary cause for stunted growth in children. Children often
experience growth spurt upon the restoration of adequate nutrition known as spontaneous
catch-up (CU) growth. This helps kids regain their initial growth trajectory. 2 Children who
experience faltering development often need extra calories, protein, and micronutrients. These
nutrients serve a dual purpose, it not only replenishes what was lost during periods of
inadequate intake but also helps to support further growth. 3
Many children are consuming nutritious foods; however, it’s necessary to address the challenges
of efficient nutrition. Minerals, such as calcium, iron, and zinc, are crucial for a child’s growth
and development. Additionally, encouraging active engagement in physical activities is a key
factor in nurturing children’s overall well-being.
How to Promote Growth through Nutritional Intervention
While providing proper nutrition is crucial to your child’s healthy growth and development at all
stages, nutritional intervention is also essential from an early age. There is a need to understand
and address undernutrition, which can result from insufficient dietary intake, suboptimal
nutrient absorption, or utilization of inefficient nutrients. Focusing on a child’s life at an earlier
stage will mitigate the serious consequences it can have on their growth potential, ensuring they
reach their full developmental capacity.
Evaluating childhood nutrition involves more than just ensuring your child consumes his/her
vegetables; it can be a multifaceted process. The key outcome of good nutrition is crucial not
only for achieving optimal height but also for supporting cognitive development and bolstering
immune function. Approaching a healthcare physician should be considered when treating kids
who are falling behind on growth.
Encouraging Healthy and Holistic growth in Children: Children are often more
physically active than adults, therefore they tend to be hungrier. Make sure they eat a well-

balanced diet with a variety of healthy foods and nutrients. Here are a few ways how you can
ensure your child’s development with these healthy habits:

  1. Measure and monitor to help your child grow: Begin by regularly monitoring
    your child’s growth, particularly for children aged 2 to 6 years. Dr Bhaskar Raju,
    DCH, MD, DM, HOD Dept of Pediatric Gastroenterologist, Institute of Child
    Health adds, “It is advisable to measure them every three months, and parents can
    opt to use tools such as a growth diary or tracker. Accurate measurement is crucial for
    comprehending and tracking a child’s growth.” Moreover, it can aid in the early
    detection of growth deficiencies, enabling parents to take prompt action and address the
    underlying causes
  2. Eat right: To support holistic growth, provide a balanced diet that includes cereals,
    pulses, milk, meat, fruits, and vegetables daily. This ensures your child receives the
    necessary protein, vitamins, and minerals for healthy bone development. For parents of
    fussy eaters, consider using oral nutrition supplements for a well-rounded diet. Engage
    your children in shopping, meal planning, and cooking to increase their interest in eating
    what they’ve helped prepare. Make meals more appealing by using cookie cutters to
    create fun shapes with fruits and vegetables like apples and cucumbers, or serve a
    colorful variety of foods for breakfast and dinner
  3. Exercise: Establish a balanced play regimen for children to limit screen time. On
    holidays, you can motivate kids to embrace a ‘gadget-free’ day and encourage them to
    spend time with the entire family. Make sure children engage in a minimum of 3 hours of
    physical activity daily, which can include activities like swimming, running, skipping,
    walking, or dancing. Physical activity plays a crucial role in enhancing bone health, and
    promoting overall physical well-being
    To promote comprehensive development, a well-rounded diet can enhance the absorption of
    vital nutrients. If your child doesn’t eat enough calories and nutrients, nutrition supplements
    can help fill some of the gaps. Supplements act as both gap-covers as well as catalysts,
    enhancing the body’s capability to absorb essential vitamins and minerals from the foods your
    child consumes. It’s like turning up the volume on nutrient absorption, so their body can make
    the most of every single bite.

Governor Tamilisai inaugurates Visionary Women Circle & Collective

Chennai: The Women Entrepreneurship Development Organisation (WEDO), a
pioneer in the financial empowerment of women through entrepreneuership, on
Saturday (November 18) launched its Visionary Women Circle and Visionary
Women Collective at a mega function held in the MMA Academy in Chennai.
Over 200 women entrepreneurs from different fields and from the length and
breadth of India participated with a view to partaking of the spirit, resilience and
creativity that emanated from the brainstorming sessions at the event.
Governor Tamilisai inaugurates: A votary of women’s financial empowerment
through her gubernatorial actions, Governor of Telangana and Lt Governor of
Puducherry Dr Tamilisai Soundararajan, who presided over the function as the
chief guest, declared open the Visionary Women Circle & Collective, bestowing
upon her words of encouragement and insightful messages as to how women of the
country could help better their financial position by undertaking various types of
entrepreneurial activities.
Guiding forces: The guiding forces of WEDO– Mrs Kadambari Umapathy,
Founder, and Dr Abdul Manaff, Chairman–made things possible for the Visionary
Women Circle & Collective, all for the financial development of women who
wanted to prove their worth in various entrepreneurial activities.
.

Flagship event at MMA Chennai: Both of them said that the flagship event at the
prestigious MMA Hall in Chennai on November 18 formed as a milestone in their
journey of growth, empowerment and limitless possibilities. This pioneering
initiative could make waves across the country, marking a significant milestone in
their journey, they acknowledged.
Naturals and Coca Cola partnering: Naturals founder Mr C K Kumaravel, a
celebrity in his own right and a successful entrepreneur is the supporting partner of
the initiative apart from the global brand Coca Cola
Inaugural volume of Collective: The event also saw the presentation of  the
inaugural volume of the Collective apart from the unveiling of the Visionary
Women Circle. It also promised to be a momentous occasion of unparalleled
inspiration, empowerment and unity.
Resilient network: The main idea of Visionary Women Circle is to create a
resilient network that encompasses peer-to-peer mentor access and market support
for progressive women-owned brands, thus enabling seamless connections with
clients, collaborators and investors globally.
The purpose: To be precise, Visionary Women Circle is a collective of
noteworthy transactable, collaboratable and investable women entrepreneurs from
different sectors and parts of India. Mrs Dhivya Sriram, Founder, Anil Engineering
Private Limited, presided over the India chapter of the Visionary Women Circle.
5 brands: It is interesting to note that 5 brand launches happened on the occasion–
She Finance-fund and mentoring for women entrepreneurs was inaugurated by
Mrs.A S Kumari, Head of TN State women’s Commission.
Other brands included: Finestra-Life Coaching brand specialising in Parenting,
Tulips & Daffodils-Organic soil amendments, Precise Goal-financial consultant
and SARAS, which is into trendy and eco-friendly bags.

ராஜ்குமார் ஹிரானி “டங்கி” மூலம் திரையில் !!

100% வெற்றிச் சாதனை படைத்த மனிதனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ராஜ்குமார் ஹிரானி “டங்கி” மூலம் மற்றொருமுறை திரையில் மாயாஜாலம் நிகழ்த்தவுள்ளார் !!

இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, திரை ரசிகர்கள் கொண்டாட அவரது பெயர் மட்டுமே போதும்!! மக்களின் இதயங்களைத் தொடும் அழகான சினிமாவை தொடர்ந்து வழங்கியவர், திரையுலக மாஸ்டர் கதாசிரியர், இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பார்வையாளர்களின் மனதில் நீங்காத அளவில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வழங்கி, ப்ளாக்பஸ்டர் வெற்றிச்சாதனையையும் படைத்துள்ளார். ‘சஞ்சு,’ ‘பிகே,’ ‘3 இடியட்ஸ்,’ போன்ற கிளாசிக் படங்கள் மற்றும் அனைவரும் கொண்டாடிய ‘முன்னா பாய்’ என, ஹிரானி அனைத்து வயதினரும் எப்போதும் கொண்டாடும் சினிமா ரத்தினங்களை தொடர்ந்து வழங்கி வந்துள்ளார். இப்போது, ஷாருக்கானுடனான அவரது முதல் முறையாக இணைந்திருக்கும் ‘டங்கி’ மூலம், மீண்டும் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தவுள்ளார். ரசிகர்கள் நகைச்சுவை கலந்த மனம் மயக்கும் ஒரு இனிதான பயணத்திற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம்.

உணர்ச்சிபூர்வமான அம்சங்களுடன் நகைச்சுவை, கலந்து சமூகச் செய்தியை சொல்லும் வகையில் கதைகளை வடிவமைக்கும் ஹிரானியின் தனித்துவமான திறன் தான், அவரது திரைப்படங்களை பொழுதுபோக்கிற்கும் மேலாக ஒரு உன்னத படைப்பாக உருவாக்குகிறது. அவரது படங்கள் கலாச்சார அடையாளமாகவும் அவற்றை நோக்கிய, உரையாடல்களைத் தூண்டுவதாகவும், சமூகத்தில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவரது படங்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுவதில் ஆச்சரியமில்லை.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘டங்கி’ திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது. மேலும் இது இந்த டிசம்பரில் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை மகிழ்விக்க வருகிறது டங்கி.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 2023 இல் வெளியிடப்பட உள்ளது.

’சில நொடிகளில்’ படத்தின் இசை வெளியீடு.

வினய் பரத்வாஜ் இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி, ராஜ் வரதனாக முன்னணி கதாபாத்திரத்திலும், புன்னகை பூ கீதா மேதா வரதனாகவும், யாஷிகா ஆனந்த் மாயா பிள்ளை என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மிஸ்ட்ரி, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட இந்தப் படம் வரும் நவம்பர் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் பாடகியும் இந்தப் படத்தின் இசையமைப்பாளருமான தர்ஷனா பேசியதாவது, “பல்லேலக்கா பாடல் மூலம் என்னுடைய சினிமா பயணம் ஆரம்பித்தது. அதன் பிறகு, ‘கருப்பு பேரழகா’, ‘ஆட்டக்காரா’ என கடந்த 17 வருடங்களாக பாடகியாக மட்டுமே இருந்துள்ளேன். இசையமைப்பாளராக ஆவேன் என நினைத்துக் கூட பார்த்ததில்லை. அதை ‘சில நொடிகளில்’ படம் நிறைவேற்றியுள்ளது. அந்த வாய்ப்புக் கொடுத்த வினய்க்கு நன்றி. கணவன், மனைவிக்கு இடையே ஒருவருக்கு மட்டும்தான் காதல் இருக்கிறது. அந்த எமோஷன் வேண்டும் என்று வினய் சொன்னார். இரண்டு பாடல்கள் செய்து கொடுத்தேன். அதில் தொடுவானம் தேர்ந்தெடுத்தார். உங்களுக்கும் அந்தப் பாடல் பிடிக்கும் என நம்புகிறேன்”.

பாடகர் பிஜார்ன், ” இந்த வாய்ப்புக் கொடுத்த வினய்க்கும் என்னுடைய மியூசிக் டீமுக்கும் நன்றி. கண்டிப்பாக படம் எல்லோருக்கும் பிடிக்கும்”.

நடிகை யாஷிகா ஆனந்த், “படத்திற்கு நீங்கள் கொடுத்து வரும் ஆதரவுக்கு நன்றி. நிஜத்தில் நான் எப்படி மாடலிங் செய்கிறேனோ அப்படி தான் இந்தப் படத்திலும் மாடலாக நடித்திருக்கிறேன். ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் இருந்துதான் என் பயணம் ஆரம்பித்தது. நான் மிகப்பெரிய த்ரில்லர் ஃபேன். அதனால், இந்தப் படமும் பிடித்து நடித்தேன். நான் தல அஜித் சாரின் மிகப்பெரிய ஃபேன். ரிச்சார்ட் சாரிடம் பேசும்போது அஜித் சாருக்கு நான் கொஞ்சம் நெருக்கம் ஆகியுள்ளேன் என்று நினைத்து சந்தோஷப்படுவேன். பாடல்களும் இசையும் எனக்குப் பிடித்துள்ளது. நீங்கள் திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

படத்தின் தயாரிப்பாளர், நடிகை ‘புன்னகை பூ’ கீதா பேசியதாவது, “‘சில நொடிகளில்’ படத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவுக்கும் கொடுக்கப் போகும் ஆதரவுக்கும் நன்றி. படம் ஒரு அழகான ஜர்னி. டீமும் அந்த அனுபவத்தைக் கொடுத்தது. வினய் ரொம்பவும் பொறுமையான நபர். ரிச்சர்ட் ப்ளஸன்ட்டானவர். யாஷிகா அவ்வளவு ஒத்துழைப்பு கொடுத்தார். ஒரு காட்சியில் பெட்டிக்குள் அவர் மடங்கி உட்கார வேண்டும். அவர் காலில் ஏற்கனவே பிளேட் உள்ளது. அப்படி உட்காருவது மிகவும் கஷ்டம். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தாது அவ்வளவு நேரம் உட்கார்ந்து இருந்தார். படம் உங்களுக்கும் பிடிக்கும். படத்தில் எனக்கு இருந்த சவால் ‘பட்டாசு பூவே’. அந்த பாடலுக்காக வரவேண்டிய சல்சா டான்ஸருக்கு கடைசி நேரத்தில் விசா கிடைக்காமல் போனது. அதனால் எங்களுக்கு லோக்கலில் கிடைத்தவரை உடனடியாக வரவைத்து ஒன்பதை மணி நேரத்தில் ரிகர்சல் செய்து அந்தப் பாடலை எடுத்தோம். இன்னும் கொஞ்சம் நேரம் கிடைத்திருந்தால் நன்றாக எடுத்து இருக்கலாமோ என்ற ஆதங்கம் இருக்கிறது. அந்த பாடல் சமயத்தில்தான் லண்டனில் எனக்கு கோவிட் வந்தது. அதன் பிறகு தான் தெரிந்தது செட்டில் நிறைய பேருக்கு தெரியாமலே கோவிட் இருந்தது என்று. இதுபோன்று சில சவால்களும் படத்தில் எனக்கு இருந்தது”.

தயாரிப்பாளர் ஜெயக்குமார், “”இந்தப் படம் முழுக்க லண்டனில் படமாக்கினோம். 35 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தினோம். நிறைவான ஒன்றாக இருந்தது. இயக்குநர் வினய் எதையும் திட்டமிட்டு செய்யக் கூடியவர். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டார் என்றுதான் சொல்வேன். கெளதம் மேனனையும் நாங்கள்தான் அறிமுகம் செய்தோம். ரிச்சார்டும் சிறப்பாக நடித்துள்ளார். கீதா மேமுக்கு சினிமா மீது நேசமும் அர்ப்பணிப்பும் அதிகம். யாஷிகாவும் நன்றாக நடித்துள்ளார். இசையும் இந்தப் படத்தில் சிறப்பாக வந்துள்ளது. நன்றி”.

‘திரெளபதி’ பட இயக்குநர் மோகன்.ஜி. பேசியதாவது, “என்னுடைய ஹீரோ ரிச்சார்ட் சாருடைய படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நான் கலந்து கொள்வது மகிழ்ச்சி. இதுபோன்ற விழா அவருக்கு நடக்க வேண்டும் அதில் நான் கலந்து கொள்ள வேண்டும் என நான் நீண்ட நாள் காத்திருந்தேன். கடினமான ஒரு சமயத்தில் நான் போய் அவரிடம் நின்றபோது எனக்கு உதவுவதற்காக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். படம் ரிலீஸின் போதும் எதிர்பாராத சில பிரச்சினைகள் வந்தது. அப்போதும் நான் அவரிடம்தான் போனேன். எனக்கு எல்லாவிதத்திலும் பக்கபலமாக நின்றார். அப்படி உருவானதுதான் ‘திரெளபதி’. அவர் இல்லை என்றால் ‘திரெளபதி’ இல்லை. இந்தப் படம் 18 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. அதேபோல, அடுத்த படமான ‘ருத்ரதாண்டவ’மும் 13 கோடி ரூபாய் தமிழ்நாட்டில் வசூல் செய்தது. மூன்றாவது படம் ஒரு கேப் விட்டு பண்ணலாம் என்றார். அதனால்தான் செல்வா சாருடன் ‘பரகாசுரன்’ செய்தேன். நானும் ரிச்சரட் சாரும் மூன்றாவது முறையாக இணைய இருக்கிறோம். அதுகுறித்தான அறிவிப்பு விரைவில் வரும். சினிமாவில் நான் ஐந்து வருடம் பயணித்தது அவரால்தான். திடீரென இவர் யாஷிகாவுடன் ஃபோட்டோ போட்டதும், ‘என்ன சாருக்கு கல்யாணமா?’ என நிறைய பேர் என்னிடமும் கேட்க ஆரம்பித்துவிட்டனர். அவரிடம் நான் கேட்டபோது, சிரித்தார். பின்புதான் படத்திற்கான புரோமோஷன் எனப் புரிந்தது. ரிச்சார்ட் சாரை இது போல திரையில் ஸ்டைலிஷாகப் பார்ப்பது மகிழ்ச்சி. 24ஆம் தேதி படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

இயக்குநர் வினய் பரத்வாஜ், “நான் இந்தியாவை விட்டு சென்று 18 வருடங்கள் ஆகிவிட்டது. சிங்கப்பூரில் செட்டில்ட். நல்ல பேங்க்கிங் வேலை இருந்தது. எனக்குப் பிரியமான ஒருவரை கேன்சரால் இழந்து விட்டேன். அதனால், புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த யூடியூப்பில் வீடியோக்கள் போட ஆரம்பித்தேன். சென்னையிலும் இது தொடர்பாக பல நிகழ்ச்சிகள் செய்திருக்கிறேன். நல்ல வரவேற்பு இருந்தது. சிங்கப்பூரில் ஸ்டார் விஜய், கலர்ஸ் தமிழுக்காக நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கினேன். அதன் பிறகு குறும்படம் இயக்குவதற்கான வாய்ப்பும் கிடைத்தது. எனக்குள் இருந்த இயக்குநரை அப்போதுதான் உணர்ந்தேன். மீடியா குளோபல் ஒன் நிறுவனம் கோவிட் சமயத்தில் எனக்கு கால் செய்து லண்டனில் செய்வது போன்ற ஒரு கதை இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்டார்கள். வழக்கமான த்ரில்லர் கதைகளைப் போல இல்லாமல் வித்தியாசமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். த்ரில்லர், மிஸ்ட்ரி, காதல் என எல்லாமே இதில் உண்டு. இசை எனக்குப் பிடிக்கும். அதனால்தான் ஐந்து இசையமைப்பாளர்கள் இந்தப் படத்தில் உள்ளனர். தர்ஷாவின் பாடல் இன்று வெளியாகியுள்ளது. அவர் மிகவும் திறமையானவர். வித்தியாசமான யாஷிகாவை இந்தப் படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள். கீதா மலேசியாவில் பாப்புலரான ஆர்.ஜே. சிறந்த தயாரிப்பாளர் என்றாலும், அவரை நடிகராக எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் படத்தில் ஏற்ற கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். படத்தில் வித்தியாசமான கீதாவைப் பார்ப்பீர்கள். படத்தை எடுப்பதை விட அதற்கு நல்ல புரோமோஷன் செய்து டிஸ்டிரிபியூட் செய்வதுதான் பெரிய விஷயம். அது இந்தப் படத்திற்கு சிறப்பாகவே நடந்துள்ளது. மோகன் ஜி படங்களுக்கு நான் பெரிய ரசிகன். எங்கள் படம் பார்த்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். செலிபிரிட்டி நிகழ்ச்சியின் ஹோஸ்ட்டாக இதற்கு முன்பு பல பிரபலங்களை சந்தித்து இருக்கிறேன். அதில் இருந்து சொல்கிறேன். ரிச்சார்ட் பழகுவதற்கு மிகவும் எளிமையானவர். சிறந்த மனிதர். அவரை இந்தப் படத்தில் வித்தியாசமான நடிகராகப் பார்ப்பீர்கள். இது என்னுடைய முதல் தமிழ்ப் படம். இந்தப் படம் திரையரங்குகளில் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது. உங்கள் அன்பும், ஆதரவும் வேண்டும்”.

நடிகர் ரிச்சார்ட் ரிஷி, “படத்தில் ஐந்து அற்புதமான பாடல்களைக் கொடுத்த இசையமைப்பாளர்களுக்கும் நன்றி. இந்தப் படத்தில் நிறைய புது விஷயங்களைச் செய்திருக்கிறோம். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம். கண்டிப்பாக தியேட்டரில் இந்தப் படத்தைப் பாருங்கள். சின்னப் படங்கள் எல்லாம் நிறைய ஜெயித்திருக்கிறது. பெரிய படங்கள் எல்லாம் நிறைய தோற்றிருக்கிறது. அதனால், படங்களுக்கு ஆதரவு கொடுங்கள்” என்றார்.

‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடந்தது.

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பாளர் டி. அருள் நந்து பேசியதாவது, “15 வருடங்களாக சினிமா செய்ய வேண்டும் என்பது எங்களுடைய கனவு. அதை 2023 செய்யக் காரணம் ஏகன்தான். அவர் எங்களிடம் வந்து ரியோவிடம் ஒரு கதையுள்ளது அதை செய்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினார். ரியோ கதை சொன்னது மிகவும் பிடித்திருந்தது. உடனே படம் பண்ணலாம் என முடிவெடுத்து விட்டோம். படத்திற்காக அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். படத்தை நான் இதுவரை எட்டு முறை பார்த்துள்ளேன். ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் புதிதாக உள்ளது. படம் மிகப்பெரிய வெற்றியடையும் என்ற நம்பிக்கையுள்ளது”.

தயாரிப்பாளர் மேத்யூ, ” படம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் என்றால் படம் பார்க்கக் கூடியவர்களுக்கு ஏதேனும் ஐந்து, பத்து நிமிடங்கள் தங்களுடன் கனெக்ட் செய்து கொள்ளும்படியான மொமெண்ட் நிச்சயம் இருக்கும். முதல் பாதி முழுவதுமே எனக்கு அப்படித்தான் இருந்தது. எல்லாருமே கடினமான உழைப்பைக் கொடுத்துள்ளனர். படம் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்”.

பாடலாசிரியர் விக்னேஷ் ராமகிருஷ்ணன், “இளமை ததும்ப ததும்ப இந்தப் படத்தைக் கொடுத்துள்ளோம். ரியோ நேர்த்தியான நடிப்பைக் கொடுத்துள்ளார். படம் நன்றாக உள்ளது”.

பாடலாசிரியர் கிரண் வரதன், “இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர் ஹரி, ரியோ, தயாரிப்பாளர்களுக்கும் நன்றி” என்றார்.

பாடகர் ஆண்டனி தாசன், “ரியோவுக்காக இரண்டாவது முறை பாடியுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்களைப் போலவே நானும் இந்தப் பாடலைக் கேட்க ஆர்வமாக உள்ளேன். இந்த வாய்ப்புக் கொடுத்த இசையமைப்பாளர் சித்துகுமாருக்கும், பாடலாசிரியர் கிரண் வரதனுக்கும் நன்றி. ரசிகர்களுக்கும் பாடல் நிச்சயம் பிடிக்கும்”.

கலை இயக்குநர் ஏ.பி.ஆர்., “‘காப்பான்’, ‘பீஸ்ட்’, ‘ஜெயிலர்’ போன்ற பல படங்களில் அசோசியேட்டாக வேலை பார்த்துள்ளேன். ரியோ அண்ணன் இதுபோல புது அணி உள்ளது எங்களுக்கு செய்து தர முடியுமா என்று கேட்டார். அவ்வளவு சந்தோஷமாக இருந்தது இவர்களுடன் வேலை பார்த்தது. சிறப்பான அனுபவம் எனக்கு கொடுத்தது. அடுத்த படமும் ரியோ அண்ணன் எனக்கு வாய்ப்பு கொடுப்பார் என நம்புகிறேன்”.

ஒளிப்பதிவாளர் கே.ஜி. விக்னேஷ், “படத்திற்கான லொகேஷன் எதுவும் ஏமாற்றாமல் நேரடியாக அங்கு போய் எடுத்து வந்தோம். தயாரிப்பு தரப்பும் அதற்கு எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தது. நன்றி”

எடிட்டர் கே.ஜி. வருண், ” இந்த படத்தின் கதையை ஹரி என்னிடம் சொன்னபோது நாஸ்டாலஜியாவாக இருந்தது. நன்றாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. படமும் நன்றாகவே வந்திருக்கிறது”.

நடன இயக்குநர் அபு, ” என்ன படத்தில் வேலை பார்க்க வேண்டும் என நாங்களே ஆர்வமாக கேட்டு வந்தோம். வாய்ப்பு கொடுத்த ஹரிக்கு நன்றி.

நடன இயக்குநர் சார்ல்ஸ், “படத்தின் பாடல்களை பெரிய அளவில் நன்றாக செய்ய வாய்ப்பு கொடுத்த ஹரிக்கும் ரியோவுக்கும் நன்றி”.

விஜே ராக்கேஷ், “இந்தப் படத்தில் எல்லாரும் கிட்டத்தட்ட ஒரே வயது என்பதால் படப்பிடிப்புக்கு போகும் போதே ஜாலியாக இருக்கும். இயக்குநரும் எங்களுடன் கூலாக உட்கார்ந்து பேசுவார். ஆனால், வேலை என்று வந்துவிட்டால் சின்சியராக செய்து விடுவார். ரியோ இந்த படம் மூலம் இந்த இடத்திற்கு வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் ரியோவும் இந்த படத்தில் ஸ்கிரீன் ஷேர் செய்துள்ளோம்”.

கவின், “ரியோவின் உழைப்பு இந்த படத்தில் அதிகமாக இருக்கிறது. என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி”.

ஆர்.ஜே. இளங்கோ குமரன், “ஹீரோவுக்கு அப்பா கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்திருக்கிறேன். அன்பிற்காக நான் உள்ளே நுழைந்த படம் இது. ஆனால், படத்திற்குள் வந்த பிறகு தான் தெரிந்தது இந்த படமே அன்பால் ஆனது என்று. அதனால், 24ஆம் தேதி ‘ஜோ’ படம் பார்த்து உங்கள் அன்பைக் கொடுங்கள்”.

இயக்குநர் சீனு ராமசாமி, ” இந்தப் படத்தில் உள்ள கலைஞர்களுக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இதில் நடித்த ரியோ, இயக்குநர் ஹரிஹரன் என யாருமே எனக்கு பெரிய அறிமுகம் இல்லை. தயாரிப்பாளர் அருள் நந்து மட்டுமே எனக்கு தெரியும். அவர்தான் இந்த படத்தை என்னை பார்க்க சொல்லி சொன்னார். படம் பார்த்த பின்பு படத்தின் புரோமோஷன்காக ஒரு சாட்சியாக நானும் வந்திருக்கிறேன். அவ்வளவு அருமையான படம் இது. படம் பார்த்த பின்பு எனக்கு 20 வயது குறைந்தது போல உள்ளது. இந்த படம் பார்த்த பின்பு மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஏதாவது சொல்ல வேண்டுமென்று என்னை உந்தியது. குடும்பத்தோடு எல்லோரும் இந்த படத்தை நிச்சயம் பார்க்கலாம். சமீபத்தில், மனநிறைவோடு நான் பார்த்த படம் ‘ஜோ’. இளைஞர்களே நம்பி படம் எடுத்த இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் நான் நன்றி சொல்கிறேன். ஒரு மனிதனை காதல் எப்படி தோற்கடிக்கிறது வாழவைக்கிறது என்பதை இந்த படம் சொல்லும். இந்த படம் என்னை பயங்கரமாக தாக்கி அழ வைத்தது. இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இதில் ஒரு பாடல் பாடியுள்ளார். அவரை என் படத்தில் கூட இப்படி நான் பயன்படுத்தவில்லை. அவர் குரல் வரும் போது எல்லாம் மனம் கலங்குகிறது. படம் நல்ல திரையரங்க அனுபவத்தை நிச்சயம் கொடுக்கும்” என்றார்.

நடிகர் தீனா, ” ரியா அண்ணாவின் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’ அவருடன் எனக்குப் பழக்கம். அவர் கூப்பிடவில்லை என்றாலும் இந்த நிகழ்வுக்கு நானே வருவேன். இந்த படத்தில் அவர் எப்படி நடித்திருக்கிறார் என்பதை பார்க்க ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

நடிகர் புகழ், “படத்தில் நடித்தோமோ போனோமோ என்றில்லாமல் உங்கள் பட நிகழ்வுக்கு நீங்களே ஹோஸ்ட் செய்து கொண்டிருப்பது பெரிய விஷயம். உன்னுடைய உழைப்புக்கு நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய இடத்தை போய் சேரும்”.

சக்தி ஃபிலிம் ஃபேக்டர் சக்திவேலன், “ஒரு படம் பார்ப்பது என்பது ஒரு புத்தகம் படிப்பதற்கு சமம் என்று இந்த படத்தின் தயாரிப்பாளர் அருள் நந்து அண்ணன் என்னிடம் சொன்னார். ‘ஜோ’ படத்திற்காக கதாநாயகன் ரியோவில் இருந்து அனைவருமே கடுமையாக மூன்று வருடம் உழைத்துள்ளனர். டிசம்பர் 24 தான் வெளியிட வேண்டும் என அவ்வளவு ஆசையோடு கேட்டார். பிடித்தவர்களுக்காக திருப்தியாக நான் செய்து கொடுக்கும் படம் இது”.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “இந்த படத்தின் டிரைய்லரை அருள் நந்து போட்டு காண்பித்தபோது நன்றாக இருக்கிறது எனது தோன்றியது. புரமோஷன் பாடலுக்காக யுவன் வந்தபோது படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியது. தான் கமிட் செய்த புராஜெக்ட்டை மிகவும் விரும்பி, முழு அர்ப்பணிப்பு கொடுத்து அருள் நந்து செய்துள்ளார். அதற்காகவே இந்த படமும் அவருக்கு வெற்றியை கொடுக்க வேண்டும். ‘ஜோ’ படத்தின் கிளைமாக்ஸ் நிச்சயம் உங்களை நெகிழ வைக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்”.

ஃபைனான்சியர் அன்புச்செழியன், ” படத்தில் எல்லாருமே சிறப்பாக நடித்துள்ளனர். முதல் பாதி ஜாலியாகவும் இரண்டாம் பாதி எமோஷனலாகவும் போனது. ’96’ போல படம் வெற்றிப் பெற வாழ்த்துக்கள்”.

நடிகர் ஏகன், “இந்த படத்தின் கதை கேட்டதில் இருந்தே கதையும் என் கதாபாத்திரமும் மிகவும் பிடித்திருந்தது. படம் உங்களுக்கும் பிடிக்கும்”.

நடிகர் அன்புதாசன், ” கடினமான உழைப்பைக் கொடுத்தால் எந்த ஒரு படமும் வெற்றி பெறும். அப்படியான உழைப்பை ‘ஜோ’ படக்குழுவினர் கொடுத்துள்ளனர். படதின் இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ, ஹீரோயின் எல்லோருக்கும் நன்றி. வாழ்த்துக்கள்!”

நடிகர் கெவின், “‘படத்தில் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. நடிக்க முடியாமா?’ என ரியோ கேட்டார். இதற்காக தான் காத்திருக்கிறேன் என்று சொல்லி இந்த படத்தில் நடித்தேன். ரொம்பவே பிரெண்ட்லியான டீமாக தான் இருந்தது. படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி”.

நடிகர் விகே, “இந்தப் படத்தில் நான் நடிப்பேன் என்று நினைக்கவே இல்லை. ஹரி சார் கதை சொன்னதும் எனக்கு பிடித்திருந்தது. வாய்ப்புக்கு நன்றி”.

நடிகர், இணை இயக்குநர் குட்டி ஆனந்த், “இந்தப் படத்திற்கு கோ டைரக்டராக தான் உள்ளே வந்தேன். ஆனால், அந்தப் பணியை நான் ஒழுங்காக செய்யவில்லை என்று ஆர்டிஸ்ட் ஆக்கிவிட்டார்களா என்று தெரியவில்லை. இயக்குநர் ஹரிக்கு நன்றி”.

இசையமைப்பாளர் சித்துகுமார், “எனக்கும் இயக்குநர் ஹரிக்கும் ஒரு நல்ல நட்பு இருக்கிறது. இருந்தாலும் நாங்கள் படம் முடியும் வேளையில்தான் இன்னும் நெருக்கமானோம். ரியோ அண்ணனோடு ஷார்ட் பிலிம்ஸ் காலத்திலிருந்து பணியாற்றி வருகிறேன். என்னுடன் பணிபுரிந்த அனைவருக்கும், படக்குழுவுக்கும் நன்றி”.

நடிகை மாளவிகா, “நான் ஒரே மலையாளி. இந்தப் படத்தில் என்னை நம்பி மிக முக்கியமான வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் ஹரி இவர்களுக்கு நன்றி. படத்தின் கதை மிகவும் பிடித்து செய்தேன். ரியோ சீனியராக இருந்தாலும் எங்களை மிகவும் நன்றாக நடத்தினார். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

நடிகை பவ்யா, “தயாரிப்பாளர், இயக்குநர், ரியோ என எல்லாருக்குமே நன்றி. நாங்கள் அனைவரும் முழு மனதை கொடுத்து தான் இந்த படத்தில் வேலை செய்திருக்கிறோம். இந்தப் படத்தில் பணிபுரிந்த எல்லாருமே இப்போது எனக்கு பெஸ்ட் நண்பர்கள். இந்தப் படத்தில் எண்டர்டெயின்மெண்ட், ஆக்ஷன், எமோஷன், லவ் என எல்லாமே இருக்கும். ஒரு உண்மையான காதலை உணர வேண்டும் என்றால் கண்டிப்பாக ‘ஜோ’ படத்தை நீங்கள் பாருங்கள்”.

இயக்குநர் ஹரிஹரன், ” இந்தப் படத்தின் நிகழ்விற்கு வந்து பெரிய வார்த்தைகள் சொன்ன சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நன்றி. நான் இயக்குநராக இந்த இடத்திற்கு வருவதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. 2015 வாக்கில் இந்த கதையை ரியோ அண்ணனிடம் சொன்னேன். விடிய விடிய படத்தின் கதையை கேட்டுவிட்டு நிச்சயம் இதை நான் செய்கிறோம் என்று சொன்னார். அன்றிலிருந்து இன்று வரை இந்த படத்தை தூக்கி சுமந்து கொண்டு உள்ளார். இப்படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் நன்றி”.

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குழுவின் நன்றி தெரிவிப்பு.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ் கதிரேசன் தயாரிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ குழுவின் நன்றி தெரிவிப்பு விழா

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ஸ்டோன்பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில், ரெட் ஜெயின்ட் மூவீஸ் வெளியீட்டில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 அன்று வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர்கள் கல் ராமன் எஸ் சோமசேகர், கல்யாண் சுப்பிரமணியம் மற்றும் அலங்கார் பாண்டியன் ஆவர். இப்படத்தின் நன்றி தெரிவிப்பு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 17) நடைபெற்றது. நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

சட்டானி பாத்திரத்தில் நடித்த விது பேசியதாவது…

வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி. சீனியர்களுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. லாரன்ஸ் சார் மற்றும் எஸ் ஜே சூர்யா அவர்களுடன் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

எடிட்டர் ஷபிக் முகமது அலி பேசியதாவது…

அனைவருக்கும் நன்றி. ஸ்டோன் பெஞ்ச் குடும்பத்தை சேர்ந்தவன் நான். கார்த்திக் சுப்புராஜ் சாரால் தான் நான் இன்றைக்கு இந்த இடத்தில இருக்கிறேன். பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி, நீங்கள் இந்தப்படத்தை பத்தி பேசியிருக்கவில்லை என்றால் நான் இங்க பேச முடிந்திருக்காது.

நடிகர் நவீன் சந்திரா பேசியதாவது…

பத்திரிகையாளர் நண்பர்களுக்கும் இந்த‌ வெற்றியை கொடுத்த ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் மிகப்பெரிய நன்றி. எனக்கே என்னுடைய கேரக்டர் மீது வெறுப்பு வரும் அளவிற்கு கதை இருந்தது. எஸ் ஜே சூர்யா சார் மற்றும் லாரன்ஸ் சாருடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம். இந்த பாத்திரத்தை எனக்கு கொடுத்த‌ கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு மிக்க நன்றி. ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் பார்த்தவுடன் கார்த்திக் சுப்புராஜ் சார் திரைப்படத்தில் ஒரு சீன் மட்டுமாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்ததற்கு மிகவும் நன்றி.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசியதாவது…

திரையுலகில் எந்த மாதிரி படம் செய்ய வேண்டும் என்று தொழில்நுட்ப கலைஞர்கள் இடையில் விவாதம் இருந்து கொண்டே இருக்கும், நாம் ஆசைப்பட்டு செய்ய வந்த படங்கள் சில சமயங்களில் தான் கிடைக்கும், அந்த மாதிரி படம் மக்களுக்கும் பிடித்திருப்பது மகிழ்ச்சி. கார்த்திக் சுப்பராஜ் மாதிரியான இயக்குநர் தொடர்ந்து ஒரே விஷயத்தை செய்யாமல், அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் சினிமாவை செய்வார்கள் அவருடன் நானும் இருப்பது மகிழ்ச்சி. எங்கள் டீமில் இந்தப்படத்தின் இசைக்காக நிறைய உழைத்தோம். கார்த்திக் படம் மீண்டும் தியேட்டரில் எப்போது வரும் என காத்திருந்தோம். இந்தப்படத்தை இப்போது தியேட்டரில் மக்கள் கொண்டாடுவது மகிழ்ச்சி. படத்திற்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசியதாவது…

இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு நன்றி. பத்திரிகையாளர் காட்சியிலேயே இப்படத்திற்கு நீங்கள் மனதார பாராட்டு தெரிவித்தீர்கள். ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ திரைப்படத்தை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டேன். இந்த திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததற்கு அனைவருக்கும் நன்றி. ஸ்டோன்பெஞ்ச் பயணத்தில் இது ஒரு முக்கிய மைல்கல். இந்த திரைப்படத்தை பொறுத்தவரை நான் பேசுவதற்கு நிறைய இருக்கிறது. ரெட் ஜெயின்ட்டுக்கு மிக்க நன்றி. கார்த்திக் சுப்ப‌ராஜ் அவர்களுக்கு மிகவும் நன்றி. மக்களிடம் இந்த திரைப்படம் மிகப்பரிய அளவில் சென்றடைந்துள்ளது, அனைவரும் ரசிக்கிறார்கள். இந்த திரைப்படத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

நடிகர் மற்றும் இயக்குந‌ர் எஸ் ஜே சூர்யா பேசியதாவது…

வெற்றியை பகிர வேண்டிய நேரம் இது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு நன்றி. மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட‌ ஊர்களுக்கு சென்று தியேட்டர் ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்த்தோம். ரசிப்புத் தன்மை தற்போது முன்பை விட மிகவும் அதிகமாகி உள்ளது. ஒரு நகைச்சுவை காட்சிக்கு கைத்தட்டல் வரலாம், ஆனால் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளுக்கு வரும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமாக உள்ளது.

இப்படத்தை வெளியிட்ட ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு மிக்க நன்றி. “நம்ம பேசக்கூடாது, நம்ம படம் பேசனும்” என்று கார்த்திக் சுப்பராஜ் சொல்வார். அதே மாதிரி இந்த படம் பேசுகிற‌து. லாரன்ஸ் அவர்கள் எனது மிகப்பெரிய நண்பர், நல்ல மனிதர், நல்ல பெயரை அவர் சம்பாதித்திருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்களின் குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தில் எல்லாமே நன்றாக‌ அமைந்தது. அனைவ‌ருக்கும் பிடித்த‌ மாதிரி அமைந்திருக்கிறது. நல்ல கதையை இயக்குந‌ர் திரையில் காட்டியிருக்கிறார்.

நடிகர் ராகவா லாரன்ஸ் பேசியதாவது…

பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படம் எனக்கு பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. என் உள் மனது சொன்ன மாதிரி இந்த படத்தின் நாயகன் கார்த்திக் சுப்புராஜ் தான். இந்த படத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய‌ உள்ளது. சட்டானி கதாபாத்திரத்தில் நடித்த விதுவிற்கு மிகப்பெரிய பாராட்டுகள். ரெட் ஜெயின்ட் நிறுவனத்திற்கு மிகவும் நன்றி.

நிறைய பேர் இந்த படத்தை பாராட்டி உள்ளனர். என்னுடைய‌ குரு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்கள் வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி. ராகவேந்திரா சுவாமியை நேரில் பார்த்ததில்லை, ரஜினிகாந்த் அவர்களை என்னுடைய‌ ராகவேந்திரா சுவாமியாக‌ நினைக்கிறேன். என் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. என் அம்மா பெயரில் ஒரு பெரிய கல்யாண மண்டபம் கட்டப் போகிறேன். அதற்கு உங்கள் வாழ்த்துகள் தேவை. நன்றி.

இயக்குந‌ர் கார்த்திக் சுப்பராஜ் பேசியதாவது…

அனைவருக்கும் வணக்கம், இந்த திரைப்படத்தின் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது, அதே சமயம் பதட்டமும் இருந்தது. உங்கள் அனைவரின் ஆதரவோடும் இன்று ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ மாபெரும் வெற்றி பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. இந்த படத்தை திரையரங்கில் பார்த்த அனைவருக்கும் நன்றி. படத்தின் தலைப்பை வழங்கிய ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் திரு கதிரேசன் அவர்களுக்கு நன்றி. இதில் பணியாற்றிய‌ அனைவருக்கும் நன்றி. ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திகேயன் சந்தானம் அவர்களுக்கு நன்றி. லாரன்ஸ், எஸ் ஜே சூர்யா, நிமிஷா சிறப்பாக நடித்திருந்தனர். சட்டானி கதாபாத்திரம் அவ்வளவு சுலபம் இல்லை. அந்த வேடத்தில் நடித்த விது மிகவும் கஷ்டப்பட்டு நடித்தார்.

இந்த படத்திற்கு கடவுளின் ஆசிர்வாதம் நிறைய இருக்கிறது. நிறைய விஷயங்கள் நடந்தன. இதன் காட்சிகளை நாங்கள் செதுக்கவில்லை, எல்லாம் கடவுளின் அருளால் தானாக அமைந்தது. ஒன்றரை வருடத்திற்கு முன்னால் இந்த கதையை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம், இன்று இது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ், இயக்குநர்கள் ஷங்கர், நெல்சன், மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலருக்கு நன்றி. என்னுடைய தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் என்னை பாராட்டி உள்ளார். ‘பீட்சா’ மற்றும் ‘மெர்குரி’ படங்களுக்கு பாராட்டிய ஒரே நபர் தலைவர் மட்டும் தான். நன்றி தலைவா. மாபெரும் ஆதரவளித்துள்ள பத்திரிகையாளர்களுக்கு நன்றி.
.