Breaking
August 11, 2026

Paradise Kebab Fest’s next leg in Chennai

Chennai, 13 August 2025: Following the tremendous response from Hyderabad and Bangalore,
Chennai will get its share of the super delectable Kebab Fest by Paradise Food Court – the biggest
food chain serving authentic and delectable Hyderabadi cuisine with seven decades of legacy. The
unique kebab fest beginning on 1 st Aug will treat the denizens of Chennai with a variety of kebabs
from across India as a one-stop kebab destination at Paradise. Be it dine-in, take-aways or Online
Delivery the kebabs will be available at all the Paradise outlets in the city.
Known for serving foods authentic to the royal kitchens of Hyderabad, Paradise is bringing the
unique fest to one of the most cosmopolitan cities in India. At the same time Paradise ensures
maintaining the authentic taste and flavours prepared under the most hygienic conditions and their
standard safety protocols.
From Zafrani Kalmi Kebab from J&K to Reshmi Malai kebab from Madhya Pradesh to Salem Chicken
Tikka Kebab from Tamil Nadu; you name it you have it the kebab fest. The list does not stop here.
Bhuna Chicken Tikka Kebab from Uttar Pradesh to Nilgiri Chicken Tikka Kebab are also on the menu.
The vegetarian options include the best of Maharashtra’s Thecha Paneer Tikka Kebab and
Rajasthan’s Mathania Paneer Tikka Kebab.
Mr. Robinder Singh, COO – Paradise Food Court Pvt. Ltd. said, we are thrilled to bring the Kebab
Fest to Chennai! This is just the beginning — we have exciting plans to expand with more stores and
introduce delicious new items to our menu. At the heart of everything we do is our unwavering
commitment to delivering quality and an exceptional dining experience for our customers
“We are very choosy about the ingredients and use on the finest quality in all our preparations. The
foods are kept to the most authentic taste while ensuring quality control protocols are met,” added
Mr. Swatantra Gautam – Vice President, Culinary, Paradise Food Court Pvt. Ltd.
The food chain has acquired its place in the Limca Book of Records for ‘Most Biryanis Served in A
Year’. In 2017, Paradise catered over 70 lakh servings of biryani and in 2018 the numbers crossed
over 90 lakhs. Paradise also won the ‘Restaurant Serving The Best Biryani’ award at the Asia Food
Congress and Golden Spoon Award at the India Food Forum in 2018. Through the years they have
won several accolades and laurels from Telangana State Hotels Associations, GHMC, Times Food
Award, Pride of Telangana and Lifetime Achievement Award to name a few.
About Paradise:


Back in 1953, a small Canteen and Café functioned out of a cinema theatre called Paradise in Secunderabad.
The Café continued its services even when the theatre shut down. The Café continued its services even when
the theatre shut down. Between 1978 and 1996, the restaurant underwent an exhaustive re-structuring,
renovation, and modernization program that was aimed at adapting to the changing social trends and evolving
food habits of the people. Today, we have expanded to multiple locations across India with being flagbearers
to authentic Hyderabadi biryani and have plans to take this Hyderabadi pride to the entire world.

ZEE5 இல் வெளியான “மாமன்” திரைப்படம், அதிவேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங்க் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான, நடிகர் சூரி நடித்த “மாமன்” திரைப்படம், வெளியான வேகத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இப்படம் மாமனுக்கும் அக்கா மகனான மருமகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இப்படம் மருமகனுக்கான உயிரைத்தரத் தயாராக இருக்கும் மாமனுக்கும் (சூரி), மருமகன் லட்டுவுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்கிறது. பல வருடக் காத்திருப்புக்குப் பிறகு, சகோதரி கிரிஜா (ஸ்வசிகா) க்கு குழந்தை பிறக்கிறது. மாமனும் மருமகனும் பாசமலர்களாகத் திரியும் நிலையில், இன்பா (சூரி), மருத்துவரான ரேகாவை (ஐஸ்வர்யா லட்சுமி) மணக்கிறார். மருமகன் மாமன் மீது வைத்திருக்கும் பாசம், குடும்பத்தில் பெரும் பிரச்சனைகளைக் கொண்டு வருகிறது. மொத்த குடும்பத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை, குடும்ப உறவுகள் எப்படிக் கடந்து வருகிறார்கள் என்பது தான் இப்படத்தின் கதை. “மாமன்” குடும்பத்தோடு இணைந்து அனைவரும் ரசித்துப் பார்க்கக் கூடிய அழகான படம்.

மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், ZEE5 இல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி உலகம் முழுக்க , டிஜிட்டல் பிரீமியர் செய்யப்பட்டது.

இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், குடும்ப உறவுகளின் மேன்மையை, மனதைக் கவரும் ஃபேமிலி எண்டர்டெயினராக சொன்ன, இந்த பிளாக்பஸ்டர் மாமன் திரைப்படம், மக்களின் பேராதரவைப் பெற்று வெளியான வேகத்தில் 100 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது.

ZEE5 இன் புதுமையான, தனித்துவமான விளம்பரங்கள், மக்கள் மத்தியில் “மாமன்” திரைப்படத்தை உலகம் முழுக்க கொண்டு சேர்த்துள்ளது.

ZEE5 தமிழ் பாரவையாளர்களுகென தொடர்ந்து தனித்துவமான சிறப்பான படைப்புகளை பிரத்தியேகமாக வழங்கி வருகிறது. அதன் சமீபத்திய வெளியீடான “சட்டமும் நீதியும்” சீரிஸ் மக்களின் பேராதாரவைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. தற்போது சூரி நடிப்பில் மாமன் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

“மாமன்” திரைப்படத்தை ZEE5 தளத்தில் பிரத்தியேகமாக கண்டுகளியுங்கள்!.

கவனம் ஈர்க்கும் மெடிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் “அதர்ஸ்“ !!

இளைய தலைமுறையின் கதை சொல்லல், காட்சியமைப்பு மற்றும் நடிப்புத் திறமைகள் மூலம் புதிய பரிமாணங்களை நோக்கி பாய்ந்து வரும் தமிழ் சினிமாவில், புதிய படைப்பான ‘அதர்ஸ்’ மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

புதிய அறிமுகம் ஆதித்யா மாதவன், கடமை உணர்வுமிக்க காவல் அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. 96, மாஸ்டர் போன்ற படங்களில் தன் நடிப்புத் திறமையால் பாராட்டைப் பெற்ற கவுரி G. கிஷன், இப்படத்தில் மருத்துவராக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

அதர்ஸ் படத்தில் அஞ்சு குரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி, மாளா பார்வதி, ஜகன், R.சுந்தர்ராஜன் உள்ளிட்ட வலுவான நடிகர் பட்டாளம் இணைந்து நடித்துள்ளனர்.

விளம்பரத் துறையில் முன்னணி எடிட்டராக பெயர் பெற்ற அபின் ஹரிஹரன், இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது கேரியரை மலையாள சேட்டிலைட் தொலைக்காட்சியில் 3D அனிமேட்டராக தொடங்கிய அவர், பின்னர் துபாயில் திரைப்பட விளம்பர எடிட்டராக சிறந்து விளங்கினார். கார்ப்பரேட் துறையிலும், பிரபலங்களின் போட்டோஷூட் நிகழ்ச்சிகளிலும் பிரபலமானவர். எடிட்டிங், அனிமேஷன், போட்டோஷூட் ஆகிய துறைகளில் பல்துறை திறமையுடன் தன் தனித்துவத்தை நிரூபித்து, தற்போது இயக்குநராக வளர்ந்துள்ளார். இவரது கதை சொல்லும் திறனும் மற்றும் செட்டில் வேகமாக பணியாற்றும் திறனும், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இப்படத்திற்கு டிமாண்டி காலனி புகழ் அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்ய, தீரன் அதிகாரம் ஒன்று, உத்தம வில்லன், துணிவு போன்ற புகழ்பெற்ற படங்களுக்கு இசையமைத்த ஜிப்ரான், பாடல்களும், பின்னணி இசையும் அமைத்துள்ளார். டூரிஸ்ட் ஃபேமிலி, லவ்வர், லப்பர் பந்து போன்ற ஹிட் ஆல்பங்களைத் தந்த மோகன் ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அசுரன், விடுதலை போன்ற படங்களுக்கு எடிட்டராக பணியாற்றிய எடிட்டர் ராமர், இந்தப் படத்தை எடிட் செய்துள்ளார். உமா சங்கர் வடிவமைத்த செட் டிசைன்கள், படத்தின் கதைக்கு உயிர் ஊட்டியுள்ளது.

தமிழ் திரையுலகிற்கு வருகை தரும் புதிய திறமைகளை வரவேற்று முன்னணி நட்சத்திரங்கள் வெங்கட் பிரபு, ஆர்யா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், வாணி போஜன், இரா சரவணன், பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர், சமூக ஊடகங்களில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு வாழ்த்தியுள்ளனர்.

கிராண்ட் பிக்சர்ஸ் (Grand Pictures) முரளி தயாரிப்பிலும், கார்த்திக் G இணைத் தயாரிப்பிலும், முழுவதும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள “அதர்ஸ்” திரைப்படம், வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது.

நடிப்பு, கதை, தொழில்நுட்பம் என எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் “அதர்ஸ்“ திரைப்படம் பார்வையாளர்களை கவரத் தயாராகவுள்ளது.

எட்டு தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றியின் “பிளாக் கோல்டு”

MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி வழங்கும், “தீர்ப்புகள் விற்கப்படும்” புகழ் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.வெங்கடேஷ், அருள் D சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் First லுக் வெளியானது.

First லுக்கில் ஒரு படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது.

நடிகர் வெற்றியின் ஆக்ரோசமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இருக்கும் சரக்கு கண்டைனரும் காட்சியின் வீரியத்தை காட்டுகிறது. இந்த First லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.

ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன் தன் குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு இழப்பிற்க்கு பதில் தேடி எந்த அளவிற்கு துணிகிறான் என்பதே இப்படத்தின் கதைக்கரு. நம் வாழ்வில் சாதாரணமாக இருக்கும் சிறு விசயம் ஒன்று, எப்படி உலக வர்த்தகமாகி இருக்கிறது, அதன் பிண்ணனியில் இருக்கும் நிழல் உலக மாபியாக்கள் பற்றி கூறும் இப்படத்தை பரபரப்பான திரைக்கதையில் அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாகி உள்ளது.

ஒரு சாதாரண நடுத்தர இளைஞனுக்கும் மிகப்பெரிய வணிக மாபியாக்களுக்கும் இடையே நடக்கும் அனல் தெறிக்கும் உண்மை சம்பவங்களை சொல்லும் இக்கதையில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் பிக்பாஸ் அபிராமி,துளசி,A.வெங்கடேஷ்,அருள் D சங்கர்,விஜய் டிவி ராமர்,சபிதா ராய்,ஜீவா ரவி,அஜித் விக்னேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்

இப்படம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. மூன்று கட்ட படப்பிடிப்பாக ஏப்ரலில் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது.

“பிளாக் கோல்டு” ன் first லுக்கில் நடிகர் வெற்றி முன்பு எப்போதும் இல்லாத தோரணையில் புதுமையாகயும்,இளைமையாகவும் இருக்கிறார். இது படத்தின் மீது ரசிகர்களுக்கு ஆவலை தூண்டியிருக்கிறது.

தொழில்நுட்பக்குழு விபரம்
தயாரிப்பு – MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி
இயக்கம் – தீரன் அருண்குமார்
ஒளிப்பதிவு : சந்தோஷ்குமார் வீராசாமி
இசை – கவாஸ்கர் அவினாஷ்
பாடல்கள் – மோகன்ராஜன்
எடிட்டிங் – ராவணன்
கலை- c.s.பாலசந்தர்
சண்டைப்பயிற்சி – “மெட்ரோ” மகேஷ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

கூலி படத்தின் கொண்டாட்டம், Sun NXT ல் முன்னதாகவே துவங்குகிறது !!

இந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி, காலை 10 மணிக்கு, கூலி படத்தின் பிரீவியூவைப் பார்க்கத் தயாராகுங்கள் – கூலியின் மனதைக் கவரும் கொண்டாட்டத்தின் ஒரு அதிரடியான முன்னோட்டத்தை, நட்சத்திரங்களுடனான விழாவைக் கண்டுகளிக்கத் தயாராகுங்கள். ஆரவாரமான ரசிகர்கள் மற்றும் தொழில்துறை ஜாம்பவான்கள் பங்கேற்ற இந்த விழா, ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் என்பதை விடவும், மிகப்பெரியக் கொண்டாட்டம். கூலி படத்தின் கவுண்டவுன் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது.

இந்த விழா உலகெங்கிலும் உள்ள தென்னிந்திய திரைப்பட ஆர்வலர்கள் கண்டுக்களிக்கும் வகையில் Sun NXT, இல் ஒளிபரப்பாகிறது.

ரெட் கார்பெட் துவங்கிய தருணத்திலிருந்தே, உற்சாகம் துவங்கி விட்டது. ரசிகர்களின் காதைப் பிளக்கும் ஆரவாரத்துடன் நட்சத்திரங்கள் விழா அரங்கிற்குள் நுழைந்தனர். இசை அரங்கம் முழுக்க அதிரும் பலத்துடன் ஒலித்தது, மேலும் கூலி படத்தில் உழைத்த பிரபலங்கள் கலைஞர்கள், கூலி படத்தின் இசை மற்றும் படத்தின் மாயாஜாலத்தைக் கொண்டாட மேடை ஏறியதும், ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கரை புரண்டு ஓடியது.

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஸ்ருதி ஹாசன் படத்தில் பணிபுரிந்த தருணங்களை மற்ற நடிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் நடிகர் சத்யராஜ், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, கூலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து பணியாற்றியது குறித்து நினைவு கூர்ந்தார். இந்தியா முழுவதும் ஏற்கனவே இசை தரவரிசையில் முன்னணி இடம்பிடித்த அனிருத்தின் கூலி ஆல்பம், அரங்கை அதிர வைத்தது. சௌபின் ஷாஹிர் மோனிகா பாடலுக்கு நடனமாட, கூட்டம் உற்சாகக் கூக்குரல் எழுப்பியது. தெலுங்கு ஐகான் நாகார்ஜுனா, ஒரு ஹீரோவின் வரவேற்போடு அரங்கில் நுழைந்து ரசிகர்களைக் கவர்ந்தார். பழம்பெரும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் சாரின் இதயப்பூர்வமான பேச்சு, ரஜினிகாந்த் வெறும் நட்சத்திரம் அல்ல – அவர் நம்மில் நிறைந்திருக்கும் ஒரு உணர்வு என்பதை நமக்கு நினைவூட்டின.

நீங்கள் தமிழ் பிளாக்பஸ்டர்கள், தெலுங்கு ஆக்‌ஷன் படங்கள், மலையாள கிளாசிக் படங்கள் அல்லது கன்னட வெகுஜன பொழுதுபோக்குப் படங்கள் என எதன் ரசிகராக இருந்தாலும் சரி, இந்த நிகழ்வு, வேறு எந்த நிகழ்ச்சியிலும் இல்லாத வகையில், அகில இந்திய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாக, உங்களை மகிழ்விக்கும்.

இவ்விழா தனித்துவமான, உணர்ச்சிவசமான, மிகப்பெரிய நிகழ்ச்சி. இவ்விழா ஆகஸ்ட் 10, காலை 10 மணிக்கு, சன் NXT இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

‘கூலி அன்லீஷ்ட் பிரிவியூ’ நேரம் மற்றும் தேதி: 10 ஆகஸ்ட், காலை 10 மணி Sun NXT இல் ஒளிபரப்பாகிறது ஆனால் அது மட்டும் இல்லை.

அதே நாள் மாலை 6:30 மணிக்கு, சன் டிவியில் முழு நிகழ்ச்சியையும் பாருங்கள், இது சன் NXT இன் நேரடி தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகவுள்ளது.

கூலி அன்லீஷ்ட் நிகழ்வின் முழு நிகழ்வையும் ஸ்ட்ரீம் செய்யுங்கள் -, தடையற்ற மற்றும் மறக்க முடியாத அனுபவத்தைப் பெறுங்கள். Sun NXT கூலி கொண்டாட்டத்தைத் தொடங்குகிறது – முதல் காட்சியைத் தவறவிடாதீர்கள்.

Watch on – https://www.sunnxt.com/home

இப்போதே Sun NXT-க்கு சந்தா செய்து, திரையை தீப்பிடிக்க வைக்கும் தருணத்தைக் காணுங்கள். ஆகஸ்ட் 10 ஆம் தேதி காலை 10 மணிக்கு கொண்டாட்டம் தொடங்குகிறது. அது தொடங்கும் போது, அங்கே இருங்கள்.

அருண் விஜய்யின் “ரெட்ட தல”

நடிகர் சிவகாரத்திகேயன் வெளியிட்ட, அருண் விஜய்யின் “ரெட்ட தல” பட டீசர்!!

BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக, முன்னணி நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ஸ்டைலீஷ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள “ரெட்ட தல” படத்தின் அதிரடியான டீசரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க, பட அறிவிப்பு முதலே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் இந்தப்படத்தின் டீசரை முன்னணி நட்சத்திர நடிகர் சிவகார்த்திகேயன் தன் சமூக வலைத்தளம் வழியாக வெளியிட்டார்.

முழுக்க முழுக்க ஸ்டைலீஷாக ஆக்சன் ரொமான்ஸ் கலந்து, ஒரு கலர்ஃபுல் எண்டர்டெயினராக, அருண் விஜய்யின் இரண்டு விதமான லுக்கை காட்டும், இந்த டீசர் படம் பற்றிய ஆவலைத்தூண்டுவதாக அமைந்துள்ளது. இந்த டீசர் வெளியான வேகத்தில் இணையம் முழுக்க வைரலாக பரவி ரசிகர்களிடம் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

நடிகர் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், சித்தி இத்னானி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார், இவர்களுடன் தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தினை BTG Universal நிறுவனம் சார்பில் திரு.பாபி பாலச்சந்திரன், மிகப்பெரும் பொருட்செலவில், அருண் விஜய் திரை வாழ்க்கையில் மிகப்பிரம்மாண்ட படைப்பாகத் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்

தயாரிப்பு – BTG Universal
தயாரிப்பாளர் – பாபி பாலச்சந்திரன்
இயக்கம் – கிரிஷ் திருக்குமரன்
இசை – சாம் CS
தலைமை நிர்வாக இயக்குநர் – டாக்டர் M மனோஜ் பெனோ
ஒளிப்பதிவு – டிஜோ டாமி
எடிட்டர் – ஆண்டனி
ஸ்டண்ட் – மாஸ்டர்ஸ் அன்பறிவு
கலை இயக்கம் – அருண்சங்கர் துரை
உடை வடிவமைப்பு – கிருத்திகா சேகர்
பப்ளிசிட்டி டிசைனிங் – பிரதூல் NT
பப்ளிசிட்டி போட்டோகிராஃபர் – வெங்கட் ராம்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

🔗https://youtu.be/GCNIHzJ5LQs?si=njmL2aF-uqger3Q7

16 ஆண்டுகளுக்குப் பிறகு, “பல்டி” படம் மூலம், மலையாளத் திரையுலகிற்கு திரும்பும் சாந்தனு பாக்யராஜ் !!

16 ஆண்டுகளுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் சாந்தனு பாக்யராஜ் மீண்டும் களமிறங்குகிறார். “பல்டி” எனும் ஆக்ஷன் நிறைந்த அதிரடி திரில்லரில், நடிகர் ஷேனு நிகாமுடன் (Shane Nigam) இணைந்து நடிக்கிறார். புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் ( Unni Sivalingam) எழுதி இயக்கும் இப்படம், அதிரடி நிறைந்த விளையாட்டு காட்சிகளோடும், உணர்ச்சிகரமான கதை சொல்லலோடும், குழு ஒற்றுமை, மனவலிமை, மற்றும் கதாபாத்திரங்கள் எதிர்கொள்ளும் தனிப்பட்ட போராட்டங்களைச் சிறப்பாக வெளிப்படுத்தும், ஒரு மிரட்டலான திரில் பயணமாக உருவாகிறது.

படத்தின் தனித்துவமான ஈர்ப்புக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், பிரபல திரைப்பட இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் (Alphonse Puthren), சோடா பாபுவாக (Soda Babu) முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முன்னணி இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ( Sai Abhyankkar) இசையமைக்கிறார். துடிப்பு மிக்க இளம் திறமைகளின் பங்கேற்பில், “பல்டி” 2025 மலையாள சினிமா ரசிகர்களுக்கு ஒரு சினிமா விருந்தாக உருவாகிறது.

2007ஆம் ஆண்டு, நடிகர் மோகன்லாலுடன் நடித்த ஏஞ்சல் ஜான் (Angel John) என்ற திரைப்படத்தின் மூலம் சாந்தனு மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அந்த படம், தொலைக்காட்சி ஒளிபரப்பின் போது பெரும் வரவேற்பைப் பெற்றது. பின்னர் அவர் தமிழ் திரையுலகில் முழுமையாக கவனம் செலுத்தி, வெற்றிகரமான பயணத்தை தொடர்ந்தார். வெகுகாலமாகவே அவரது மலையாள திரைப்படத்திற்காக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சாந்தனு தனது மலையாளக் கம்பேக்கைப் பற்றி கூறியதாவது:

“பல ஆண்டுகளுக்குப் பிறகு மலையாள சினிமாவுக்கு திரும்புவது எனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த படம் ஒரு புதிய அனுபவமாகவும், மீண்டும் மலையாளத்தில் களமிறங்க சிறந்த கதாபாத்திரமாகவும் அமைந்துள்ளது.”

புதுமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் எழுதி இயக்கும், விளையாட்டு பின்னணியிலான அதிரடி திரில்லர் திரைப்படமான இந்தப் “பல்டி” படம், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. STK ஃபிரேம்ஸ் மற்றும் Binu George Alexander Productions ஆகிய நிறுவனங்களின் சார்பில் சந்தோஷ் T. குருவில்லா (Santhosh T. Kuruvilla) மற்றும் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் (Binu George Alexander) ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.

படத்தின் அற்புதமான தொழில்நுட்பக் குழுவினர் மற்றும் தயாரிப்புக் குழு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. வைரல் வெற்றிகளுக்குப் பெயர் பெற்ற இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இப்படத்திற்கு இசையமைக்கிறார். இது மலையாள சினிமாவில் அபயங்கரின் அறிமுகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் பாடலாசிரியர் விநாயக் சசிகுமாருடனான அவரது கூட்டணி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

“RDX: ராபர்ட் டோனி சேவியர்” திரைப்படத்தில் பணியாற்றியதற்காக பரவலாகப் பாராட்டப்பட்ட அனுபவமிக்க ஒளிப்பதிவாளர் அலெக்ஸ் J. புலிக்கல், இந்த நட்சத்திரக் குழுவில் இணைகிறார். இந்தப் படத்தை சிவகுமார் V. பணிக்கர் எடிட்டிங் செய்கிறார். ஷெரின் ரேச்சல் சந்தோஷ் இணை தயாரிப்பாளராகவும், சந்தீப் நாராயண் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

இந்த படத்தில் கிஷோர் புறக்காட்டிரி தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், ஸ்ரீலால் M தலைமை இணை இயக்குநராகவும் ஒரு வலுவான குழு உள்ளது. இணை இயக்குநர்களில் சபரிநாத், ராகுல் ராமகிருஷ்ணன், சாம்சன் செபாஸ்டியன் மற்றும் மெல்பின் மேத்யூ (போஸ்ட் புரடக்சன்) தயாரிப்பு) ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

இந்தபடத்தில் கிரியேட்டிவ் இயக்குநராக வாவா நுஜுமுதீன் பணியாற்ற, T.D. ராமகிருஷ்ணன் கூடுதல் வசனங்களை எழுதியுள்ளார். ஆஷிக் S அவர்களின் கலை இயக்கம் படத்தின் காட்சி ஈர்ப்பை மேலும் மேம்படுத்துகிறது. உடைகள்: மெல்வி J, ஸ்டண்ட் : ஆக்‌ஷன் சந்தோஷ் & விக்கி மாஸ்டர், ஒப்பனை: ஜிதேஷ் போய்யா, ஒலி வடிவமைப்பு மற்றும் மிக்சிங் : விஷ்ணு கோவிந்த், DI: கலர் பிளானட், ஸ்டில்ஸ்: சஜித் R M, வண்ணக்கலைஞர்: ஸ்ரீக் வாரியர், VFX: ஆக்செல் மீடியா, ஃபாக்ஸ் டாட் மீடியா, திட்ட ஒருங்கிணைப்பாளர்: பென்னி கட்டப்பண்ணா, நடன அமைப்பு: அனுஷா, தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: கிஷோர் புறக்காட்டிரி, தலைமை இணை இயக்குநர்: ஸ்ரீலால் M, இணை இயக்குநர்: சபரி நாத், மெல்பின், சாம்சன் செபாஸ்டியன், ராகுல் ராமகிருஷ்ணன், தயாரிப்பு: Moonshot Entertainments மற்றும் STK Frames CFO: ஜோபீஷ் ஆண்டனி, COO: அருண் C தம்பி, விநியோகம்: Moonshot Entertainments PVT LTD, ஆடியோ லேபிள்: Think Music, டைட்டில் வடிவமைப்பு : ராக்கெட் சயின்ஸ், விளம்பர வடிவமைப்புகள்: வியாகி மற்றும் ஆண்டனி ஸ்டீபன், மார்க்கெட்டிங் மற்றும் விளம்பரங்கள்: Snakeplant LLP, மக்கள் தொடர்பு : யுவராஜ்

கல்யாணி (Kalyani) & நஸ்லென் (Naslen) இணைந்து நடிக்கும், “லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா”

துல்கர் சல்மானின் வெய்ஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனம் தயாரிக்கும் ஏழாவது படைப்பு, லோகா – சேப்டர் 1 : சந்திரா திரைப்படம், இந்த ஓணம் பண்டிகைக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகிறது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்தத்திரைப்படம், இந்திய சினிமாவில் முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க முயற்சியாகும். டொமினிக் அருண் ( Dominic Arun) எழுதி இயக்கியுள்ள இந்த சூப்பர் ஹீரோ திரைப்படத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் கல்யாணி, சூப்பர் ஹீரோவாக அதிரடி அவதாரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தூ சலீம் குமார் ( Chandhu Salim Kumar),அருண் குரியன் (Arun Kurian), சாந்தி பாலச்சந்திரன் ( Shanthy Balachandran) உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல பகுதிகளாக உருவாகும் லோகா சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் படங்களின் முதல் பாகம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

தொழில்நுட்பக் குழு:

ஒளிப்பதிவு – நிமிஷ் ரவி
இசை – ஜேக்ஸ் பீஜாய்
எடிட்டிங் – சாமன் சகோ
நிர்வாக தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி
கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன்
தயாரிப்பு வடிவமைப்பு – பாங்லான்
கலை இயக்கம் – ஜிது செபாஸ்டியன்
மேக்கப் – ரோனெக்ஸ் சாவியர்
உடை வடிவமைப்பு – மெல்வி J, அர்ச்சனா ராவ்
ஸ்டில்ஸ் – ரோஹித் கே.சுரேஷ், அமல் K.சதார்
சண்டைக் காட்சிகள் – யானிக் பென்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ரினி திவாகர், வினோஷ் கையமல்
முதன்மை உதவி இயக்குநர் – சுஜித் சுரேஷ்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

நடிகர் விக்ரம் பிரபு & LK அக்‌ஷய் குமார் நடிப்பில் “சிறை”

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள “சிறை” படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டுள்ளார்.

கதையில் களத்தையும் கதாப்பாத்திரங்களையும் பிரதிபலிக்கும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்கள் மற்றும் திரை ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம்.

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, வேலூர் சிவகங்கை ஆகிய பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரடக்சன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் இசை மற்றும் டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

உபேந்திராவின் (Real Star Upendra’s) பான்-இந்தியா திரைப்படம் “நெக்ஸ்ட் லெவல்”

பல மொழிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கும், ரியல் ஸ்டார் உபேந்திரா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பான்-இந்தியா திரைப்படமான “நெக்ஸ்ட் லெவல்” மூலம், வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்.

சுவாரஸ்யமான கதை சொல்லல் மற்றும் அதிநவீன விஷுவல் (VFX) ஆகியவற்றுடன், தனித்துவமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் நாயகியாக, பல மொழிகளில் சிறப்பாக நடித்துப் புகழ்பெற்ற நடிகை மலாஶ்ரீயின் (Malashree) மகள் ஆராதனா (Aradhana) நடிக்கிறார். பன்முக திறமையாளர் தர்ஷன் (Darshan) உடன் கடேரா ( Kaatera ) படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை வென்ற ஆராதனா, தற்போது தன் இரண்டாவது படத்தில், இன்னொரு கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவுடன் திரையை பகிர இருக்கிறார்.

தருண் ஸ்டுடியோஸ் (Tarun Studios ) நிறுவனத்தின் சார்பில் தருண் சிவப்பா (Tarun Shivappa) தயாரிக்கும் இப்படத்தை, பிரபல இயக்குநர் அரவிந்த் கௌஷிக் (Aravind Kaushik) இயக்குகிறார்.கன்னடத் திரையுலகில் இதுவரை எடுக்கப்பட்ட தனித்துவமான வித்தியாசமான படங்களில் ஒன்றாகவும், பான்-இந்திய படமாகவும் இப்படம் உருவாகவுள்ளது.

இப்படத்தின் துவக்க விழா, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட முகூர்த்த விழாவுடன் நடைபெற உள்ளது. இவ்விழாவில் பல டாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு, பெங்களூரு, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் நடைபெறவுள்ளது.

இப்படத்தின் மிக முக்கிய VFX காட்சிகள், மிக உயர்ந்த தரத்தில், இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள முன்னணி கிராபிக்ஸ் ஸ்டுடியோக்களுடன் (graphics studios) இணைந்து உருவாக்கப்படவுள்ளது. குறுகிய காலத்திற்குள் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட படைப்பை வழங்கி, தேசிய அளவில் கன்னட சினிமாவுக்கு புதிய அளவுகோலை அமைப்பதே படக்குழுவின் இலக்காகும்.

‘ஏ’, ‘உபேந்திரா’ (A, Upendra) , ‘ரக்த கண்ணீரு’ (Raktha Kanneeru) போன்ற உபேந்திராவின் கல்ட் கிளாசிக் படங்களின் சாரமும் கதை சொல்லும் பாணியும்,நெக்ஸ்ட் லெவல் (Next Level) படத்தில் இருப்பதாக கூறப்படுவதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

ரோஸ், மாஸ் லீடர் (சிவராஜ்குமார் உடன்) Rose, Mass Leader (with Shivarajkumar) , விக்டரி 2( Victory 2), காகி( Khaki), சூ மந்தர் (Choo Mantar) போன்ற படங்களை தயாரித்த தருண் சிவப்பா ( Tarun Shivappa), தனது மிகப்பெரிய தயாரிப்புகளில் ஒன்றாக நெக்ஸ்ட் லெவல் படத்தை உருவாக்குகிறார். சூ மந்தர் படத்தில் பணியாற்றிய அனூப் கட்டுகரன், இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

வலுவான தொழில் நுட்ப குழுவும், வாகை சூடிய நட்சத்திர பட்டியலும் கொண்ட நெக்ஸ்ட் லெவல், திரைப்படம் சமீப காலத்தில் உருவாகும் மிக தனித்துவமான கன்னட படங்களில் ஒன்றாக இருக்கும்.