Breaking
October 18, 2024

SRK “டங்கி” படத்திலிருந்து அடுத்ததாக வெளியாகும் ஓ மஹி பாடலான டங்கி டிராப் 5

SRK “டங்கி” படத்திலிருந்து அடுத்ததாக வெளியாகும் ஓ மஹி பாடலான டங்கி டிராப் 5 வீடியோவின் சிறு துணுக்கை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகமூட்டியுள்ளார்!!

வருகிறது ‘டங்கி டிராப் 5 – ஓ மஹி பாடல்’, க்ளிம்ப்ஸே வெளியிட்ட SRK !!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் டங்கி டிராப் 1, டங்கி டிராப் 2 லுட் புட் கயா, டங்கி டிராப் 3 நிக்லே தி கபி ஹம் கர் சே மற்றும் டங்கி டிராப் 4, டிரெய்லர் என வரிசையாக டங்கி அப்டேட்கள் மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளித்து வருகின்றனர் தயாரிப்பாளர்கள். ராஜ்குமார் ஹிரானி உருவாக்கிய அன்பான, அழகான திரை உலகத்தைப் பார்ப்பதற்கான எதிர்பார்ப்பை இது நிச்சயமாக அதிகரித்துள்ளது. தற்போது ரசிகர்களின் உற்சாகத்தை கூட்டும் வகையில், தயாரிப்பாளர்கள் இப்போது டங்கி டிராப் 5, ஓ மஹி பாடலை வெளியிட தயாராகி வருகின்றனர். இந்த பாடலின் வீடியோவை வெளியிடுவதற்கு முன்னதாக அதிலிருந்து ஒரு கிளிம்ப்ஸே வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

சமீபத்திய #AskSRK அமர்வில், கிங் கான் இந்தப் பாடலைத் திரைப்பட ஆல்பத்தில் இருந்து தனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றாகக் குறிப்பிட்டார், எனவே ரசிகர்கள் இப்பாடலை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஷாருக்கான் நடிப்பில் டங்கி ரிலீஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறது, ஆனால் பார்வையாளர்களை கவர்ந்திழுக்க தயாரிப்பாளர்கள் எந்த வாய்ப்பையும் தவற விடவில்லை. இதோ டங்கி டிராப் 5 இன்று அதன் வருகைக்கு தயாராகிவிட்டது!

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.

“Dance Don Guru Steps 2023 Kollywood Awards“ நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் பிரம்மாண்ட  விழா !

தமிழ் சினிமாவில்  கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடனக் கலைஞர் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில், எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள, பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த டான்ஸ் டான் விழாவை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர்,  அக்‌ஷதா ஶ்ரீதர், அசோக் மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர், லலிதா மணி மாஸ்டர், குமார் சாந்தி மாஸ்டர், வசந்த் மாஸ்டர், விமலா மாஸ்டர், சம்பத் மாஸ்டர், ஹரீஷ் குமார் மாஸ்டர், மாலினி மாஸ்டர், DKS பாபு மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்

உலகளவில் இந்தியா சினிமா ஆடல் கலை மற்றும் பாடலுக்கு பெயர் பெற்றது. பாடலும் ஆடலும் இல்லாமல் இந்திய சினிமா இல்லை. இங்கு சினிமா உருவானதிலிருந்தே ஆடல், பாடல் சினிமாவின் ஒரு அங்கமாக, சினிமாவிலிருந்து பிரிக்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடனக் கலையை பயிற்றுவிக்கும் நடனக் கலைஞர்களின் பணி அளப்பரியது.

இத்தனை புகழ்மிக்க நடனக் கலையை  ஆரம்ப காலத்தில் பயிற்றுவித்த பல புகழ்மிகு நடனக் கலைஞர்கள் பற்றிய விவரங்கள் வரலாற்றில் இல்லை.

1950 களில் துவங்கி 2023 வரையிலும் பல புகழ்பெற்ற நடனக் கலைஞர்கள் தமிழ்த்திரையுலகில் பணியாற்றி வந்துள்ளனர். இன்றைய நவீன டிஜிட்டல் உலகைப் போல அவர்களைப் பற்றிய அறிமுகங்களோ, விவரங்களோ, அனைவருக்கும் தெரிந்ததில்லை. திரையுலகில் பணியாற்றும் நடனக் கலைஞர்களுக்கே நம் முந்தைய தலைமுறையின் ஆரம்பத்தில் புகழுடன் பணியாற்றிய நடனக் கலைஞர்களின் விவரங்கள் தெரிவதில்லை.

நம் தலைமுறையில் நமக்கு முன் சாதித்து காட்டிய நடனக் கலைஞர்களை அடையாளம் காட்டும் வகையிலும், அவர்களைப் பற்றி வரலாற்றில் பதிவு செய்து, அவர்களின் நினைவை போற்றும் வகையிலும் இந்த  டான்ஸ் டான் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் தமிழ் திரையுலகில் புகழுடன் பணியாற்றி மறைந்த நடனக் கலைஞர்கள் பற்றி பதிவு செய்து, அவர்களின் சாதனைகளை,  நினைவு கூர்ந்து, அவர்களின் புகழ் திரைப்பிரபலங்கள் முன்னிலையில்  கௌரவிக்கப்படவுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற முன்னாள் நடன கலைஞர்களும் இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர். மேலும் தமிழகத்தின்  38 மாவட்டங்களில் நடனப்பள்ளி நடத்தி வரும் நடனக் கலைஞர்கள் இவ்விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

Dance Don Guru Steps 2023 Kollywood Awards தமிழ்த் திரையுலகின் முன்னணி நடனக் கலைஞரான கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் முன்னின்று இவ்விழாவை ஏற்பாடு செய்து நடத்துகிறார். வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி காமராஜர் அரங்கில் நடக்கவுள்ள இவ்விழாவில், தமிழ் சினிமாவின் முன்னணி நடன கலைஞர்களுடன், தமிழ்த்திரைத்துறையின் பல முன்னணி இயக்குநர்கள் பலர் பங்கேற்கவுள்ளனர்.

டான்ஸ் டான் விழா டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி காமராஜர் அரங்கில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் மூன்றாவது மலையாள ஒரிஜினல் சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்” ஜனவரி 05, 2024 முதல் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது !!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சமீபத்தில் அதன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாள ஒரிஜினல் சீரிஸான ​​“பேரில்லூர் பிரீமியர் லீக்” சீரிஸின் டிரெய்லரை வெளியிட்டது. அரசியலை இதயம் வருடும் நகைச்சுவை கலந்து சொல்லும் அட்டகாசமான சீரிஸ் “பேரில்லூர் பிரீமியர் லீக்”. இந்த சீரிஸ் வரும் 2024 ஜனவரி 5 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்பட உள்ளது.

இரண்டு நிமிடங்கள் கொண்ட இந்த டிரெய்லர், ஒரு கிராமம் அதன் மனிதர்கள் அவர்களிடையேயான உறவுகள், அரசியல் வேடிக்கைகள், வெடித்துச் சிரிக்க வைக்கும் நகைச்சுவை என அதிரடியான விருந்தளிக்கிறது “பேரில்லூர் பிரீமியர் லீக்”. நிகிலா விமல் மற்றும் சன்னி வெய்னுடன், இந்தத் தொடரில் விஜயராகவன், அஜு வர்கீஸ், அசோகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த சீரிஸில் நடித்துள்ளனர் மற்றும் திறமையான தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு பேரில்லூர் பிரீமியர் லீக்கை உண்மையிலேயே ரசிக்க வைக்கிறது.

E4 என்டர்டெயின்மென்ட் பேனரில் முகேஷ் R மேத்தா மற்றும் CV சாரதி தயாரித்துள்ள ‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ சீரிஸை புகழ் பெற்ற இயக்குநர் பிரவீன் சந்திரன் இயக்கியுள்ளார், தீபு பிரதீப் இந்த சீரிஸை எழுதியுள்ளார். ஒளிப்பதிவு இயக்குநரான அனூப் வி ஷைலஜா, கிராமப்புற கேரளாவின் சாரத்தை அசத்தலான காட்சிகளுடன் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் பவன் ஸ்ரீ குமாரின் தலைசிறந்த எடிட்டிங் இக்கதையைத் திரையில் அழகாக உயிர்ப்பிக்கிறது. முஜீப் மஜீதின் இசை இந்த சீரிஸை மெருகேற்றுகிறது.

‘பேரில்லூர் பிரீமியர் லீக்’ ஏழு வெவ்வேறு மொழிகளில் (மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி) ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது, இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள் தங்கள் சொந்த மொழியில் இந்த நகைச்சுவை சீரிஸை ரசிக்க முடியும்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் “டங்கி” படத்தை வெளியிடுகிறது!!

‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது, ஸ்ரீ கோகுலம் மூவிஸ். இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாராகி, இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்திருக்கும் இப்படம் டிசம்பர் 21 முதல், திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரீம் பிக் பிலிம்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ‘டங்கி’ படத்தின் விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது. கிங் கான் ஷாருக்குடன் மீண்டுமொரு படத்தில் நாங்கள் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவருடன் இன்னும் பல படங்கள் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறோம்” ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் விநியோகம் செய்துள்ளது ஸ்ரீ கோகுலம் மூவிஸ். ‘ஜவான்’ படத்திற்கு பிறகு ‘டங்கி’ படத்தையும் விநியோகம் செய்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

2023 வது வருடம் ஷாருக்கானின் பிரமாண்டமான கம்பேக் வருடம் ஆக அமைந்துள்ளது. ஜனவரியில் ‘பதான்’, செப்டம்பரில் ‘ஜவான்’, தற்போது டிசம்பரில் ‘டங்கி’. பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார் மற்றும் அனில் குரோவர் போன்ற பாலிவுட் திறமைகள் இணைந்துள்ள ‘டங்கி’ இதயம் வருடும் அழகான படமாக இருக்கும் என்பதை படத்தின் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ராஜ்குமார் ஹிரானி, கௌரி கான் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி மற்றும் கனிகா தில்லானுடன் இணைந்து ராஜ்குமார் ஹிரானி வசனம் எழுதியுள்ளார். மும்பை, ஜபல்பூர், காஷ்மீர், புடாபெஸ்ட், லண்டன், ஜெட்டா மற்றும் நியோம் என உலகின் பல இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அமன் பந்த் பின்னணி இசையமைத்துள்ளார் மற்றும் ப்ரீதம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். CK.முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் ஆகியோர் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் “டங்கி” படத்தை வெளியிடுகிறது!!

ஸ்ரீ கோகுலம் மூவிஸ் நிறுவனம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்திற்கான, விநியோகம் செய்யும் உரிமையை பெற்றுள்ளது !!

‘ஜவான்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்பிலிருக்கும் ஷாருக்கானின் ‘டங்கி’ திரைப்படத்தினுடைய கேரளா மற்றும் தமிழ்நாட்டு விநியோக உரிமையை வாங்கியுள்ளது, ஸ்ரீ கோகுலம் மூவிஸ். இதில் ஷாருக்கான் அனைவரையும் மயக்கும் அட்டகாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாராகி, இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி எழுதி, இயக்கி, எடிட்டிங் செய்திருக்கும் இப்படம் டிசம்பர் 21 முதல், திரையரங்குகளில் வெளியாகிறது.

ட்ரீம் பிக் பிலிம்ஸ் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் ‘டங்கி’ படத்தின் விநியோக பங்குதாரராக இணைந்துள்ளது. கிங் கான் ஷாருக்குடன் மீண்டுமொரு படத்தில் நாங்கள் இணைவதில் பெருமிதம் கொள்கிறோம். மேலும் அவருடன் இன்னும் பல படங்கள் இணைந்து பணியாற்றுவோம் என நம்புகிறோம்” ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தை கேரளா மற்றும் தமிழ்நாட்டில் விநியோகம் செய்துள்ளது ஸ்ரீ கோகுலம் மூவிஸ். ‘ஜவான்’ படத்திற்கு பிறகு ‘டங்கி’ படத்தையும் விநியோகம் செய்கிறோம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

2023 வது வருடம் ஷாருக்கானின் பிரமாண்டமான கம்பேக் வருடம் ஆக அமைந்துள்ளது. ஜனவரியில் ‘பதான்’, செப்டம்பரில் ‘ஜவான்’, தற்போது டிசம்பரில் ‘டங்கி’. பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார் மற்றும் அனில் குரோவர் போன்ற பாலிவுட் திறமைகள் இணைந்துள்ள ‘டங்கி’ இதயம் வருடும் அழகான படமாக இருக்கும் என்பதை படத்தின் பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன. ராஜ்குமார் ஹிரானி, கௌரி கான் மற்றும் ஜோதி தேஷ்பாண்டே ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி மற்றும் கனிகா தில்லானுடன் இணைந்து ராஜ்குமார் ஹிரானி வசனம் எழுதியுள்ளார். மும்பை, ஜபல்பூர், காஷ்மீர், புடாபெஸ்ட், லண்டன், ஜெட்டா மற்றும் நியோம் என உலகின் பல இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு அமன் பந்த் பின்னணி இசையமைத்துள்ளார் மற்றும் ப்ரீதம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். CK.முரளிதரன், மனுஷ் நந்தன், அமித் ராய் ஆகியோர் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

ஷாருக்கான் டங்கி படத்திற்காக சிறப்புப் பாடல் ஒன்றை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் படமாக்கினார்!

சமீபத்தில் வெளியான டங்கி டிராப் 4 படத்தின் மீதான எதிர்பார்ப்பை, உச்சகட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. ரசிகர்கள் ஒரு அற்புதமான திரை அனுபவத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி உணர்ச்சிகள் நிறைந்த, ஒரு மகத்தான மனதைக் கவரும் உலகத்தை வடிவமைத்திருக்கும் விதத்தைப் பார்வையாளர்கள் பாராட்டினாலும், படத்தின் மையத்தை அழகாக வெளிப்படுத்தும் பாடல்களையும் அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். இதுவரை வெளியான பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இப்போது அவர்களின் உற்சாகத்தை மேலும் உயர்த்தும் வகையில் மேலும் ஒரு அப்டேட் வந்துள்ளது. விளம்பர நோக்கங்களுக்காக கவனமாக வடிவமைக்கப்பட்ட “டங்கி” படத்திற்கென ஒரு சிறப்புப் பாடலைப் படமாக்க SRK ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

படக்குழுவிற்கு நெருக்கமானவர்கள் தந்த தகவலின் படி , “ஷாரூக் மற்றும் ஹிரானி ஆகியோர், செவ்வாய் இரவு சுஹானாவின் படத்தின் பிரீமியரின்போது வெளியிடும்படி இப்பாடலை மூன்று நாட்களில் படமாக்கியுள்ளனர். மிகக்குறைந்த குழுவினருடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அபுதாபியின் புறநகர் பகுதிகளில் இப்பாடல் படமாக்கப்பட்டிருக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் SRK விற்கு மிகப்பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. இந்நிலையில் SRKவின், பாடல் படப்பிடிப்பு பற்றிய செய்தி அவரது உள்ளூர் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு ‘டங்கி’ திரைப்படத்தில் நடித்துள்ளது.

இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகிறது.

தகவல் – Midday

ஆலம்பனா திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

KJR Studios வழங்கும் Koustubh Entertaiment தயாரிப்பில் இயக்குநர் பாரி K விஜய் இயக்கத்தில், வைபவ், பார்வதி நடிப்பில், கலக்கலான ஃபேண்டஸி காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் ஆலம்பனா.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிப் பார்க்கும் வகையில் ஒரு ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி திரைக்குவரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையார் சந்திப்பு படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இவ்விழாவினில்..

திண்டுக்கல் I லியோனி பேசியதாவது..,
முன்னதாக இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறேன் ஆனால் அதைவிட ஆலம்பனா படத்தில் மிகப்பெரியதொரு பாத்திரத்தில் நடித்துள்ளேன். இப்படத்தில் எல்லோரையும் விட எனக்குத் தான் அதிக காஸ்ட்யூம், அந்தளவு பெரிய கேரக்டர். நிறைய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். முனீஷ்காந்திற்கு ரசிகன் நான் அவரது காமெடியை சிரித்து ரசிப்பேன். காளி வெங்கட் அட்டகாசமாக நடிக்துள்ளார். எனது பேரனாக வைபவ் நடித்துள்ளார். மிக நல்ல மனிதர் எனக்கு பெரும் ஆதரவாக இருந்தார். இப்படத்தில் சாதாரணமாக வந்து போகும் கேரக்டர் இல்லை. டான்ஸர்களோடு டான்ஸ் ஆடும் தாத்தா கேரக்டர். படத்தில் என்னை டான்ஸ் ஆட வைக்க, அவ்வளவு கஷ்டப்பட்டார் இயக்குநர். படம் நன்றாக வந்துள்ளது குழந்தைகளோடு பார்க்ககூடிய அருமையான படம். ஆதரவு தாருங்கள். நன்றி.

நடிகர் காளி வெங்கட் பேசியதாவது…
முண்டாசுபட்டி உதவி இயக்குநர் பாரி தான் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார் நாங்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஒரே செட்டாக இருந்து பணிபுரிந்தவர்கள். இப்போது அவருடன் இணைந்து பணிபுரிந்த படம், திரைக்கு வருவது மகிழ்ச்சி. இப்படத்தில் இருக்கும் காமெடி, படம் எடுக்கும் போது இருந்ததை விட, பார்த்த போது இன்னும் சிறப்பாக வாய்விட்டு சிரிக்க முடிந்தது. நண்பர் முனீஷ்காந்துடன் நடித்தது மகிழ்ச்சி. வைபவ், பார்வதி ஆகியோருடன் வேலை பார்த்தது சந்தோசம். இயக்குநர் தயாரிப்பாளருக்கு என் நன்றிகள்.

நடிகர் கபீர்சிங் பேசியதாவது…
இயக்குநருக்கு நன்றி. இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. கதை சொன்ன போதே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வைபவ்,பார்வதி இருவருடன் நடித்தது மகிழ்ச்சியான அனுபவம். இது மிக நல்ல படம். படத்தைத் தியேட்டரில் பார்க்கும் போது, நீங்கள் உணர்வீர்கள், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

ஒளிப்பதிவாளர் வினோத் பேசியதாவது..
இந்தப்படத்தில் கதைக்கு தேவையான அளவில் அத்தனை நடிகர்களை ஒருங்கிணைத்ததே பெரிய வெற்றி தான். எல்லோரும் தங்கள் படம் போல் வேலைப்பார்த்தார்கள். ஆரம்பம் முதல் இறுதிவரை படம் செம்ம காமெடியாக இருக்கும். முனீஷ்காந்த் கலக்கியிருக்கிறார். ஆர்ட் டைரக்டர் எனக்குப் பெரிய உதவியாக இருந்தார். அவருக்கு நன்றி. படத்திற்கு அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது…
இயக்குநர், தயாரிப்பாளர், ஹீரோ ஹீரோயின் அனைவருக்கும் என் நன்றி. KJR Studios தயாரிப்பு நிறுவனம் என் சொந்த நிறுவனம் போல அவர்களின் அனைத்து படங்களிலும் நான் நடித்துள்ளேன். இந்தப்படம் நீங்கள் மனம் விட்டு சிரித்து மகிழும் படமாக இருக்கும். இப்படம் குழந்தைகள் ரசிக்கும் படமாக இருக்கும். இயக்குநருக்கும், என்னை அழகாக காட்டிய ஒளிப்பதிவாளருக்கும் நன்றி. படத்தைப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.

கபிலன் வைரமுத்து பேசியதாவது..
நண்பர் பாரி K விஜய்யுடைய நீண்ட நாள் கனவு. பல காலமாக இந்தப்படம் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். இப்போது இறுதியாக இப்படம் திரைக்கு வருவது மகிழ்ச்சி. எனக்கு வைபவ் காமெடி சென்ஸ் மிகவும் பிடிக்கும். ஒரு காதாநாயகனாக குறிப்பிட்ட எல்லைக்குள் அவர் செய்யும் காமெடி மிக நன்றாக ஒர்க் அவுட்டாகியிருக்கிறது. இந்தப்படத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையில் 4 பாடல்கள் எழுதியுள்ளேன். இயக்குநர் பாரியிடம், யாருக்கு படமெடுக்கிறேன் என்கிற தெளிவு இருக்கிறது. அவரின் மனதிற்கு இந்தப்படம் பெரியதாக ஜெயிக்க வேண்டும். சென்னை வெள்ளத்தால் நாம் தற்போது மிக சோகமான காலகட்டத்தில் சிக்கியுள்ளோம் அதிலிருந்து நம்மை மீட்டு சிரிக்க வைக்கும் படமாக இப்படம் இருக்கவேண்டும். அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் பாரி K விஜய் பேசியதாவது..
இந்தக்கதையைத் தயாரிப்பாளரிடம் சொன்ன போது, தயாரிப்பாளர் இந்தக்கதை, நல்ல கதை, நன்றாக எடுத்தால் ஓடும் என்றார். அவர் நான் நினைத்ததை விட, கேட்டதை விட இப்படத்திற்காக அதிகம் செலவழித்தார். அவரால் தான் இத்திரைப்படம் நன்றாக வந்துள்ளது. எழுதியதை விட, எடுப்பது கஷ்டம் ஆனால் அதை மகிழ்ச்சியோடு உழைத்து எடுத்துள்ளோம். வைபவ், பார்வதி இருவரும் என்னைப் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக நடித்து தந்தார்கள். அதே போல் பூதம் என யோசித்த போதே முனீஷ் காந்த் தான் மனதில் இருந்தார். நன்றாக நடித்துள்ளார். ஆனந்த்ராஜ், பாண்டியராஜன், காளிவெங்கட் எல்லோரும் கடினமாக உழைத்துள்ளனர். படத்தில் தாத்தா கேரக்டர் என்ற போதே திண்டுக்கல் ஐ லியோனி தான் ஞாபத்திற்கு வந்தார். அவரும் சிறப்பாக செய்துள்ளார். ஹிப்ஹாப் ஆதி அட்டகாசமாக இசையமைத்துள்ளார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் ஆக்சனை குழந்தைகளும் ரசிக்கும் படி தந்துள்ளார். படத்தை மிகவும் கஷ்டப்பட்டு உருவாக்கினோம் தற்போது திரைக்கு வருகிறது. ஊடக மக்கள் இப்படத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

நடிகை பார்வதி பேசியதாவது..
என் ஃபேவரைட் ஜானர் , ஃபேண்டஸி காமெடி தான். எனக்கு அந்த ஜானரில் ஆலம்பனா படத்தின் வாய்ப்பு வந்தது மிக்க மகிழ்ச்சி. இந்தப்படத்தில் முனிஷ் காந்த், காளி வெங்கட் ,ஆனந்த்ராஜ் என மிக நல்ல மனிதர்களோடு வேலைபார்த்தது சந்தோஷமாக இருந்தது. வைபவ் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். இந்தப்படம் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை, அனைவரும் ரசித்து சிரிக்கும் படமாக இருக்கும். இப்படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்

நடிகர் வைபவ் பேசியதாவது…
இப்படத்தின் கதையை KJR லிருந்து சொன்ன போதே, சூப்பராக இருந்தது. யார் ஹீரோ என்றேன் நீ தான் என்றார் தயாரிப்பாளர். சந்தோஷமாக இருந்தது. எப்போதும் ஜெய், ப்ரேம்ஜி மாதிரி ஆட்களுடனேயே நடித்துவிட்டேன். இப்படத்தில் முனீஷ்காந்த், காளிவெங்கட் போன்ற சீனியர்களுடன் நடித்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தில் இசைக்காக ஹிப்ஹாப் ஆதியை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றபோது நான் பேசினேன். பூதம் கதை என்றவுடன் உங்களுக்கு பூதம் கேரக்டர் சூப்பராக இருக்கும் என அவரும் என்னைக் கலாய்த்து விட்டார். இந்தப்படத்திற்கு சிறப்பான இசையைத் தந்துள்ளார். படத்தில் உண்மையிலேயே சிரித்து மகிழும் அளவு காமெடி இருக்கும். இந்தப்படம் எனக்குப் புதுவிதமான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் நன்றி.

நடிகர்கள்: வைபவ், பார்வதி, முனிஷ்காந்த், யோகி பாபு, காளி வெங்கட் ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர் திண்டுக்கல் I லியோனி, பாண்டியராஜ், முரளி சர்மா, கபீர் சிங்

தொழில் நுட்ப குழு விபரம்
இயக்குநர்: பாரி K விஜய்
இசையமைப்பாளர்: ஹிப்ஹாப் தமிழா
ஒளிப்பதிவு : வினோத் ரத்தினசாமி
எடிட்டிங் : ஷான் லோகேஷ்
கலை: கோபி ஆனந்த்
சண்டைக்காட்சிகள்: பீட்டர் ஹெய்ன்
பாடல் வரிகள் -பா.விஜய், கபிலன் வைரமுத்து
நடனம்: ஷெரிப்
ஆடை வடிவமைப்பாளர் – கீர்த்தி வாசன்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

“மதிமாறன்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கத்தில், இவானா, வெங்கட் செங்குட்டுவன் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க , மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள “மதிமாறன்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Don’t judge the book by its cover புத்தகத்தின் அட்டையை பார்த்து புத்தகத்தை மதிப்பிடாதே என்பதாக உலகின் மிகச்சிறந்த பழமொழி ஒன்று உள்ளது, அது தான் இப்படத்தின் மையம். தன்னுடன் இரட்டையராக பிறந்த சகோதரியைத் தேடும் நாயகனின் தேடல் தான் இப்படத்தின் கதை.

பிரபல இயக்குநர் பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மந்த்ரா வீரபாண்டியன் இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாடி ஷேமிங் எந்த வகையிலும் தவறென்பதையும், இயலாதவர்களின் மீதான சமூகத்தின் பார்வையையும் கேள்விகுள்ளாக்கும் வகையிலுமான கதையை, அட்டகாசமான திரைக்கதையில் மாறுபட்ட திரில்லர் டிராமாவாக உருவாக்கியுள்ளார் மந்த்ரா வீரபாண்டியன்.

தற்போது வெளியாகியுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் படத்தின் முதன்மை கதாப்பாத்திரங்களுடன் ஒரு காவலதிகாரி ஜீப்பின் மீது அமர்ந்திருக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டுவதுடன், ரசிகர்களுக்கு ஒரு தரமான திரில்லர் அனுபவம் காத்திருப்பதாக உறுதியளிக்கிறது.

இப்படத்தில் நாச்சியார், லவ் டுடே புகழ் இவானா முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க வெங்கட் செங்குட்டுவன் நாயகனாக நடித்துள்ளார். இவர்களுடன் ஆராத்யா, எம்.எஸ்.பாஸ்கர், ‘ஆடுகளம்’ நரேன், பாவா செல்லதுரை, E.பிரவீன் குமார், சுதர்சன் கோவிந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் தற்போது திரைவெளியீட்டுக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
விரைவில் இப்படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரை வெளியீடு குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இப்படத்தினை பாபின்ஸ் ஸ்டுடியோஸ் எனும் புதிய நிறுவனம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடவுள்ளது.

தொழில்நுட்ப குழு விபரம்
இயக்கம் – மந்த்ரா வீரபாண்டியன்
தயாரிப்பு நிறுவனம் – ஜி.எஸ் சினிமா இண்டர்நேஷனல்
TN திரையரங்கு வெளியீடு – பாபின்ஸ் ஸ்டுடியோஸ்
இசையமைப்பாளர் – கார்த்திக் ராஜா
ஒளிப்பதிவு – பர்வேஸ் K
எடிட்டர் – சதீஷ் சூர்யா
கலை இயக்குனர் – V.மாயபாண்டி சண்டைக்காட்சி – சுரேஷ் குமார்
ஆடை வடிவமைப்பாளர் – கடலூர் M ரமேஷ், ஷேர் அலி N (வெங்கட் செங்குட்டுவன்) ஒப்பனை – என்.சக்திவேல்
மக்கள் தொடர்பு – யுவராஜ்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட “மலைக்கோட்டை வாலிபன்” படத்தின் அதிரடியான டீசர் வெளியானது !!

பிரபல இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் இயக்கத்தில், மோகன்லால் நடித்திருக்கும் இப்படத்தின் ஒரு சிறு துளி போதும், ரசிகர்களுக்கு உற்சாகத்தில் கொந்தளிக்க, தற்போது வெளியாகியுள்ள டீசர், அந்த விருந்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது.

திரையுலக காதலர்களின் நீண்ட காத்திருப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்து, மோகன்லாலின் வரலாற்றுத் திரைப்படமான ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டது. புகழ்மிகு இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி மற்றும் மோகன்லால் ஆகியோரின் கூட்டணியின் முதல் திரைப்படமாக மிகப்பிரம்மாண்ட படைப்பாக இப்படம் வெளிவருகிறது.

ஜான் & மேரி கிரியேட்டிவ், செஞ்சுரி ஃபிலிம்ஸ், மேக்ஸ்லேப் & சரேகமா ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

நடிகர் மோகன்லால் கூறுகையில், “படைப்பாளி லிஜோ ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவத்தை உருவாக்கியுள்ளார், அதன் ஒரு துளியை இந்த டீசரில் பார்வையாளர்கள் பார்க்க முடியும்.” என்றார்.

‘மலைக்கோட்டை வாலிபன்’ யூட்லீ நிறுவனம் மோகன்லாலுடன் இணைந்து தரும் முதல் திரைப்படமாகும். “லிஜோ ஜோஸ் பெல்லிசேரி ஒரு புதுமையான உலகை படைத்ததோடு மட்டுமல்லாமல், மோகன்லால் உடன் அற்புத நடிகர்கள் கூட்டணியையும் இப்படத்தில் இணைத்துள்ளார். மலையாள திரை உலகில் இப்படம் மிக முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும், ஏனெனில் இதன் தீம், பிரம்மாண்டம் மற்றும் உணர்ச்சிகரமான பின்னணி என அனைத்தும் உலகளாவிய தன்மையைக் கொண்டுள்ளன. இதனால்தான் இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படும்” என்கிறார் சரேகாமா இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் – பிலிம்ஸ் & ஈவென்ட்ஸ் சித்தார்த் ஆனந்த் குமார்.

‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்திற்கு வசனம் எழுதியவர், இதற்கு முன்பு லிஜோவுடன் ‘நாயகன்’, ‘ஆமென்’ படங்களில் பணியாற்றிய P S ரஃபீக் ஆவார். “என்னைப் பொறுத்தவரை, ஒரு கருப்பொருளை திரைப்படமாக உருவாக்கும் செயல்முறையாக நடந்தது, ஒரு பெரிய வெற்றியை ப்ளாக்பஸ்டரை உருவாக்கவேண்டும் என்ற அழுத்தத்திலிருந்து இது உருவாகவில்லை, இது இயல்பாக நடந்த திரைப்படம். ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் அடிப்படை கரு, சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்குள் முளைத்து, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக விரிவான கதைக்களமாக உருமாற்றம் பெற்றது. எழுத்தாளர் ரஃபீக் அந்த உலகத்தை என்னுடன் இணைந்து விரிவுபடுத்தினார், அதன் பிறகுதான் அந்த பாத்திரத்திற்கு லாலேட்டன் (மோகன்லால்) சரியான பொருத்தமாக இருப்பார் என்பதை நாங்கள் உணர்ந்தோம்,” என்கிறார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.

“மோகன்லாலுடன் நீண்ட நாள் பழகிய நான், திரைப்படத் தயாரிப்பில் இறங்க முடிவு செய்தபோது, இயல்பாகவே அவரை மிகப்பெரியதொரு படத்தில், முக்கிய வேடத்தில் நடிக்க வைக்க விரும்பினேன். லிஜோ போன்ற திறமையான இயக்குநர் மோகன்லாலுடன் கைகோர்க்கும் போது, மக்கள் கண்டிப்பாக மிகப்பெரும் பொழுதுபோக்கு படத்தை எதிர்பார்க்கலாம்,” என்கிறார் ஷிபு பேபி ஜான்.

இப்படத்திற்கு பிரசாந்த் பிள்ளை இசையமைக்க, மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். சோனாலி குல்கர்னி, ஹரீஷ் பெராடி, டேனிஷ் சைட், மனோஜ் மோசஸ், கதா நந்தி மற்றும் மணிகண்டன் ஆச்சாரி ஆகியோர் மிக முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர், ‘மலைக்கோட்டை வாலிபன்’ ஜனவரி 25, 2024 அன்று திரைக்கு வருகிறது.

ராக்கிங் ஸ்டார் யாஷின் அடுத்த பட டைட்டில் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” !!

ராக்கிங் ஸ்டார் யாஷ், கீது மோகன்தாஸ் மற்றும் வெங்கட் நாராயணா ஆகியோர் கூட்டணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யாஷ்19 படத்தின் தலைப்பாக டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரவுன் அப்ஸ் ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) அறிவிக்கப்பட்டுள்ளது!!

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்திற்கு “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) தலைப்பிடப்பட்டுள்ளது !!

ஒன்றரை வருடங்களாக அமைதி காத்த ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது அடுத்த படத்தின் தலைப்பை அறிவித்துள்ளார். டாக்ஸிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ் என்று அறிவித்துள்ளார். இந்திய சினிமாவில் மிகவும் என எதிர்பார்க்கப்படும் இப்படம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் மற்றும் நாடு முழுக்க ரசிகர்களால் மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ராக்கிங் ஸ்டார் யாஷ் கூட்டணியில் உருவாகிறது.

தாங்கள் செய்ய விரும்பிய படத்தை ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக உருவாக்கும் முனைப்பில் பொறுமை மற்றும் ஆர்வத்துடன், இருவரும் படத்தை வடிவமைப்பதிலும் ஒரு நட்சத்திரக் குழுவை அமைப்பதிலும் தங்கள் முழுமையான நேரத்தை எடுத்துக் கொண்டனர். பல ஊகங்களுக்குப் பிறகு, படக்குழு படத்தின் தலைப்பை ஒரு காட்சி துணுக்குடன் பகிர்ந்து கொண்டது, அவர்களின் திட்டமிடல் மற்றும் படைப்பின் மீதான அவர்களின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது.

“டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” ( பெரியவர்களுக்கான ஒரு விசித்திரக் கதை ) என்ற தலைப்பை வெளிப்படுத்தும் வீடியோ, பார்வையாளர்களை தீவிரமான ஒரு படைப்புலகத்திற்குள் அழைத்துச் செல்லும் என்பதை உறுதியளிப்பதுடன், வெளியீட்டுத் தேதியையும் அறிவித்து, பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

இப்படத்தின் தயாரிப்பாளர் திரு வெங்கட் K நாராயணா கூறுகையில்..,
“எங்களின் மிகப்பெருமையான படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தில் ராக்கிங் ஸ்டார் யாஷுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். யாஷ் மற்றும் கீது இருவரும் ரசிகர்களை மகிழ்விக்கும் ஆக்சனுடன் ஒரு மிகச்சிறந்த படைப்பாக இருக்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்ததால், இப்படத்தை அறிவிக்க சிறிது காலதாமதாமானது. நாங்கள் தயாரிக்கும் இந்த அற்புதமான மற்றும் பிரம்மாண்டமான படத்தை உலகத்திற்கு காட்டுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

படத்தைப் பற்றிய தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட கீது மோகன்தாஸ், ”எனது கதை சொல்லல் பாணியில் நான் எப்போதும் பரிசோதனை முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன். எனது முந்தைய படங்களான லையர்ஸ் டைஸ் மற்றும் மூத்தோன் ஆகியவை சர்வதேச அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், எனது நாட்டில் எனது சொந்த பார்வையாளர்களை திருப்திபடுத்தி வெற்றிப்படம் தர ஆசைப்பட்டேன். அந்த எண்ணத்தில் உருவானதுதான் இந்த திரைப்படம். இந்த படம் இரண்டு எதிர் உலகங்களின் கதையை அழகியல் கலந்து சொல்லும் ஒரு கலவையான படைப்பாக இருக்கும், இந்தப்படத்திற்காக யாஷுடன் இணைந்ததில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன் நான் சந்தித்த மிகவும் புத்திசாலித்தனமான மனிதர்களில் ஒருவர் யாஷ், அவருடன் இணைந்து இந்த மாயாஜால பயணத்தை எங்கள் குழு தொடங்குவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் “டாக்சிக் – எ ஃபேரி டேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்” படத்தை கீது மோகன்தாஸ் எழுதி இயக்குகிறார், கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இப்படம் ஏப்ரல் 10, 2025 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.

Hollywood Creative Alliance விருதுக்கான தேர்வுப் பட்டியலில் இடம் பிடித்த அட்லியின் ஜவான்

பாலிவுட் கிங்கான் ஷாருக்கான், இயக்குநர் அட்லி கூட்டணியில் உருவான ஜவான் இந்திய திரையுலக வரலாற்றில் பல புதிய சாதனைகளை படைத்த நிலையில், தற்போது ஹாலிவுட்டில் வழங்கப்படும் ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் ஹாலிவுட்டில் இடம்பிடித்த தமிழ் இயக்குநராக சாதனை படைத்துள்ளார் இயக்குநர் அட்லி.

தமிழ்த் திரையுலகில் கமர்ஷியல் படங்களுக்கு புது வடிவம் தந்தவர், முன்னணி நட்சத்திரங்களை ப்ளாக்பஸ்டர் ஹீரோக்களாக மாற்றியவர் இயக்குநர் அட்லி. தமிழ் சினிமா வசூலில் வரலாற்றுச் சாதனைப் படைத்து, பின் பாலிவுட் கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான, “ஜவான்” மூலம் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார் இயக்குநர் அட்லி. ராஜா ராணி ப்ளாக்பஸ்டர் வெற்றி மூலம் திரையுலக பயணத்தை துவங்கிய அட்லி, தெறி, மெர்சல், பிகில் படங்கள் மூலம் உச்சம் தொட்டு, தற்போது ‘ஜவான்’ மூலம் ஹாலிவுட்டில் இடம்பெற்ற முதல் தமிழ் இயக்குநராக சாதனை படைத்திருக்கிறார்.

ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, இயக்குநர் அட்லீ இயக்கத்தில், கிங்கான் ஷாருக்கான் நடிப்பில் உருவான, ‘ஜவான்’ திரைப்படம், இந்தியாவின் அத்தனை முன்னணி மொழிகளிலும் ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றது. இப்படம் இந்தியாவில் திரையரங்குகளில் 3.5 கோடி பார்வையாளர்களைப் பெற்றது, 1080 கோடி ரூபாய் வசூலித்த, இந்தியாவில் முதல்ப்படமாக சாதனை படைத்தது.

பல புது வரலாற்றுச் சாதனைகளைப் படைத்த இப்படம், ஹாலிவுட்டில் வருடா வருடம் வழங்கப்படும், உலகளவிலான சிறந்த படங்களுக்கான ஹாலிவுட் கிரியேட்டிவ் அல்லயன்ஸ் ( Hollywood Creative Alliance ) விருதுக்கான தேர்வுப்பட்டியலில் இந்தியா சார்பில் இடம்பிடித்துள்ளது. ஒரு தமிழ் படைப்பாளியின் படைப்பு, உலகளவிலான படைப்புகளுடன் இடம்பிடித்திருப்பதை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இயக்குநர் அட்லிக்குப் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.