பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படம் அக்டோபர் 17 தீபாவளிக் கொண்டாட்டமாக, உலகம் முழுவதும் வெளியாகிறது!!
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK ( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ ) திரைப்படம் 2025 வருட தீபாவளிக் கொண்டாட்டமாக வரும் அக்டோபர் 17 ஆம் தேதி ரசிகர்களை மகிழ்விக்க திரைக்கு வருகிறது.
பிரபல இயக்குநரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள LIK ( ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கிருத்தி ஷெட்டி , எஸ். ஜே. சூர்யா, யோகி பாபு, கௌரி கிஷன், ஷா ரா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் செந்தமிழன் சீமான் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு Rock Star அனிருத் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு பணிகளை டி. முத்துராஜ் மேற்கொண்டிருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நயன்தாரா தயாரித்திருக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித்குமார் தயாரித்து, வழங்குகிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி தீபாவளிக் கொண்டாட்டமாக, உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து படத்தின் , பாடல்கள், டிரெய்லர், ஸ்னீக் பிக்..ஆகியவை அடுத்தடுத்து வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் – அனிருத் கூட்டணியில் வெளியான இப்படத்தில் இடம்பெறும் முதல் பாடல் (தீமா தீமா) பெரும் வரவேற்பினை பெற்றது. புதுவிதமான கதைககளத்தில் உருவாகியிருக்கும், இப்படத்தின் மீது ரசிகர்களிடத்தில், பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படத்தின் அதிக எதிர்பார்ர்பிலிருக்கும் டீசர் வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.
‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி – வசிஷ்டா (Vassishta) – எம். எம். கீரவாணி (MM Keeravani)- யுவி கிரியேசன்ஸ் (UV Creations) – கூட்டணியில் உருவாகும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் மெகா பிளாஸ்ட் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கிளிம்ப்ஸ் ரசிகர்களுக்கு புதிய சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.
‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நாளை தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவர் நடிக்கும் ‘விஸ்வம்பரா ‘ படத்தின் தயாரிப்பாளர்கள்- ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான ஆச்சரியத்தை அளித்துள்ளனர். இது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கற்பனை கலந்த சமூக காட்சியின் ஒரு அற்புதமான விஷுவலாகும். இயக்குநர் வசிஷ்டா (Vassishta) இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை யுவி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் விக்ரம், வம்சி – பிரமோத் ( Pramod ) ஆகியோர் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறார்கள். இந்த கிளிம்ப்ஸ் குறிப்பிடத்தக்க மற்றும் புதிய சினிமாடிக் காவியத்திற்கான அனுபவத்தை வழங்குகிறது.
விஸ்வம்பராவின் உலகில் நடந்த கொந்தளிப்பான நிகழ்வுகளை பிரதிபலிக்கும் ஒரு குழந்தைக்கும், ஒரு முதியவருக்கும் இடையேயான வசீகரிக்கும் உரையாடலுடன் இந்த காணொளி தொடங்குகிறது. ஒரு மனிதனின் சுயநலத்தால் தூண்டப்பட்ட மிகப்பெரிய அழிவை முதியவர் விவரிக்கிறார். நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அந்த மீட்பர் இறுதியாக வெளிப்படுகிறார். அவர் இந்த சாம்ராஜ்யத்தின் பாதுகாவலராக- மிக சக்தி வாய்ந்த – வியப்பில் ஆழ்த்தக்கூடிய பிரவேசத்தை உருவாக்குகிறார்.
இந்த காட்சி தொகுப்பு நன்கு வடிவமைக்கப்பட்ட டீசராகும். இது சிரஞ்சீவியை ஒரு முக்கியமான வேடத்தில் பார்க்க ஆர்வமுள்ள திரைப்பட ஆர்வலர்களை சிலிர்க்க வைக்கும் என்று உறுதியளிக்கிறது. ஆரம்பக் கட்ட பரபரப்பு இப்போது அதிகரித்து வரும் நிலையில்.. கதை ஒரு புராணக் கதையை பற்றியதாக இருக்கிறது. அதில் சிரஞ்சீவி விஸ்வம்பராவின் பாதுகாவலராக தோன்றுகிறார்.
இயக்குநர் வசிஷ்டா பிரம்மாண்டமும், வெகுஜன ஈர்ப்பும் நிறைந்த ஒரு விகிதாச்சார காவியத்தை… பிரபஞ்சத்தை … கற்பனை செய்து படைத்திருப்பதாக தெரிகிறது. சிரஞ்சீவியின் காந்தம் போன்ற திரை ஆளுமை ஒவ்வொரு காட்சியிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. மேலும் அவரது தீவிர நடிப்பு உண்மையான அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. விஸ்வம்பராவின் பிரபஞ்சத்தை கனவு போன்ற தொடுதலுடன் வடிவமைத்ததற்காக தயாரிப்பு வடிவமைப்பாளர் ஏ. எஸ். பிரகாசின் கடும் உழைப்பு பாராட்டக்கூடியதாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சோட்டா கே. நாயுடு (Chota K Naidu)- விஸ்வம்பராவின் மாய உலகத்தை வளமான …கம்பீரமான… காட்சி அமைப்புகளுடன் உயிர்ப்பிக்கிறார். அதே தருணத்தில் எம். எம். கீரவாணி ( MM Keeravani’s) கிளர்ச்சியூட்டும் வகையில் பின்னணி இசையை அமைத்து காணொளியை சக்தி வாய்ந்த உணர்ச்சி எழுச்சியை சேர்க்கிறது. VFX – ஹாலிவுட் தரத்திற்கு நிகராக அமைந்திருக்கிறது. மேலும் யுவி கிரியேசன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பு மதிப்பீடுகள் கிளிம்ப்ஸ் முழுவதும் தெளிவாகத் தெரிகின்றன.
சிரஞ்சீவியின் புகழ்பெற்ற வாழ்க்கையில் விஸ்வம்பரா திரைப்படம்- ஒரு மைல்கல் படமாக இருப்பதற்கான அனைத்து அறிகுறிகளையும் சுட்டிக்காட்டுகிறது. இதனை திரை ரசிகர்கள் தவற விட விரும்பமாட்டார்கள். இந்தக் காட்சி உண்மையில் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கும், அவரை போற்றும் ரசிகர்களுக்கும் மிகச் சரியான பிறந்தநாள் பரிசாகும்.
இந்த திரைப்படத்தில் திரிஷா கிருஷ்ணன் கதாநாயகியாக நடிக்கிறார். இவருடன் ஆஷிகா ரங்கநாத் (Ashika Ranganath) மற்றும் குணால் கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
ஏற்கனவே அறிவித்தபடி விஸ்வம்பரா 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும். இது இந்த சீசனின் மிகப்பெரிய ஈர்ப்பாகவும் இருக்கும்.
நடிகர்கள் :
‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி , திரிஷா கிருஷ்ணன், ஆஷிகா ரங்கநாத் , குணால் கபூர் மற்றும் மௌனி ராய் ( ஒரு பாடலுக்கு சிறப்பு தோற்றம் )
தொழில்நுட்ப குழு :
எழுத்து & இயக்கம் : வசிஷ்டா தயாரிப்பாளர்கள் : விக்ரம், வம்சி – பிரமோத் தயாரிப்பு நிறுவனம்: யு வி கிரியேசன்ஸ் இசை : எம். எம். கீரவாணி , பீம்ஸ் சிசிரோலியோ ஒளிப்பதிவு : சோட்டா கே. நாயுடு தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஏ. எஸ். பிரகாஷ்
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) இணைந்து தயாரிக்க, அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது !!
அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், இன்று துவக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் (Million Dollar Studios) . குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவனத்தின் 6 வது படைப்பாக இப்படம் உருவாகிறது.
தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களைத் தந்து, முன்னணியில் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) நிறுவனம் தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் நடிகர் தனுஷ் நடிப்பில், போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் “D54” மற்றும் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் “மூக்குத்தி அம்மன் 2” படங்களைத் தயாரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன் நடிக்கும் இந்த புதிய படத்தினை, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவன தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) சார்பில் தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் கலக்கி வரும் நடிகர் அசோக் செல்வன் இப்படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கலக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார்.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஹேப்பி எண்டிங், ஒன்ஸ்மோர்” படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் இன்று துவங்கி, ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக, அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் விக்ரமன் எடிட்டிங் பணிகளை கையாளுகிறார்.
இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
– MASS மூலம் ஸ்மார்ட் மொபிலிட்டியின் புதிய சகாப்தத்தைஅறிமுகப்படுத்துகிறது
சென்னை, ஆகஸ்ட் 20, 2025 — இந்தியாவின் மொபிலிட்டிநிலப்பரப்பை மறுவரையறை செய்வதற்கான ஒருதுணிச்சலான படியாக, பீப்பிள் டெக் எண்டர்பிரைஸ், அதன்முன்னோடி தளமான MASS (மொபிலிட்டி அஸ்சப்ஸ்கிரிப்ஷன் சர்வீஸ்) இன் முதன்மை தயாரிப்பாகTHINQX என்ற AI-இயங்கும் மின்சார இருசக்கரவாகனத்தை வெளியிட்டது. நிறுவனம் சமீபத்தில்தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச சந்தைகளில் அதன்AI-இயங்கும் மின்சார இருசக்கர வாகனமான THINQX ஐஅறிமுகப்படுத்தியது, இப்போது அதை தமிழ்நாட்டில்அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தவெளியீடு இந்தியாவின் EV மற்றும் ஸ்மார்ட் போக்குவரத்துசுற்றுச்சூழல் அமைப்பிற்கு ஒரு முக்கிய தருணத்தைக்குறிக்கிறது. சென்னை இந்தியாவின் ஆட்டோமொடிவ்தலைநகரம் மற்றும் THINQX ஐ அறிமுகப்படுத்துவதில் இதுஒரு முக்கிய பங்கை வகிக்கும், தமிழ்நாடு சந்தையின்வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் செய்யப்படும், முக்கியமாக சென்னை, மாதுரி மற்றும் தமிழ்நாட்டின் பிறநகரங்கள் மற்றும் பாண்டிச்சேரியிலும்.
THINQX இந்தியாவின் தனித்துவமான போக்குவரத்துசவால்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, கிக் தொழிலாளர்கள், டெலிவரி நிபுணர்கள் மற்றும் அன்றாடபயணிகளுக்கு எளிய சந்தா மாதிரியில் அடுத்த தலைமுறை, AI-ஒருங்கிணைந்த மின்சார இரு சக்கர வாகனத்தைவழங்குகிறது. அதன் கரடுமுரடான ஆனால்புத்திசாலித்தனமான வடிவமைப்பு பல்வேறு நிலப்பரப்புகள்மற்றும் பயனர் தேவைகளுக்கு ஏற்றவாறுமாற்றியமைக்கிறது.
MASS: சந்தா சேவையாக இயக்கம்
MASS முயற்சி பீப்பிள் டெக் எண்டர்பிரைஸின் பெரியநோக்கத்தை பிரதிபலிக்கிறது: இயக்கத்தைஜனநாயகப்படுத்துதல், உரிமையிலிருந்துபுத்திசாலித்தனமான அணுகலுக்கு நகர்தல். THINQX என்பது புதுமை, நெகிழ்வுத்தன்மை மற்றும்நிலைத்தன்மையால் இயக்கப்படும் எதிர்காலத்திற்குத்தயாராக இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பைஉருவாக்குவதில் முதல் படியாகும்.
THINQX இன் CTO & தலைமை கட்டிடக் கலைஞர்அகெல்லாரவிகிரண் கூறினார்: “இந்தியா தேடுபவர்களின்நிலம் – அங்கு சிந்தனை, கற்றல் மற்றும் தகவமைப்புஆகியவை நமது டிஎன்ஏவில் உள்ளன. அதைத்தான் Thinqxகுறிக்கிறது: அந்த புதுமையின் உணர்வை இயக்கத்தில்கொண்டு வருகிறது. Thinqx செயல்திறன், பாதுகாப்பு மற்றும்இயக்கத்தின் எதிர்காலத்தை மறுவரையறை செய்கிறது.”
டி.ஜி. பீப்பிள் டெக் எண்டர்பிரைஸின் நிறுவனர் மற்றும்தலைமை நிர்வாக அதிகாரி விஸ்வ பிரசாத் கூறினார்: “THINQX உடன், நாங்கள் ஒரு வாகனத்தை மட்டும்தொடங்கவில்லை – நாங்கள் ஒரு இயக்கத்தைத்தொடங்குகிறோம். போக்குவரத்து பற்றி இந்தியா எப்படிநினைக்கிறது என்பதை MASS மாற்றும்”.
முக்கிய சிறப்பம்சங்கள்:
– 100% இந்தியாவில் தயாரிக்கப்பட்டது: உள்நாட்டுவடிவமைப்பு, பொறியியல் மற்றும் உற்பத்தி சிறப்பைவெளிப்படுத்துகிறது.
– ஸ்மார்ட் பை டிசைன்: டிஜிட்டல் கிளஸ்டர்கள், AI-இயங்கும் கட்டுப்பாடுகள் மற்றும் நிகழ்நேர டெலிமெட்ரிஆகியவற்றைக் கொண்டுள்ளது.
– சமூக ரீதியாக பொருத்தமானது: கிக் தொழிலாளர்கள், கிராமப்புற தொழில்முனைவோர் மற்றும் விநியோகபணியாளர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டது.
வண்ணாரபேட்டை பிரபல 5 ரூபாய் மருத்துவர் டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் துணைவியார் பிரபல மகப்பேறு மருத்துவர் C வேணி அவர்கள் இயற்கை எய்தினார்.
சென்னை வண்ணாரபேட்டையில் ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில், மருத்துவம் பார்த்து பிரபலமான டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் மனைவி மற்றும் பிரபல மகேப்பேறு மருத்துவர் திருமதி C வேணி அவர்கள், இன்று காலை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.
திருமதி C வேணி 1953 ஆம் வருடம் சின்னக்கண்ணு, புண்ணியகோடி தமபதியருக்கு கடைசி மகளாக பிறந்தார். சென்னையின் பிரபல KMC கல்லூரியில் மருத்துவ படிப்பை Gynaecology பிரிவில் முடித்தார். பின்னர் மருத்துவ கல்லூரி துறையில் தலைவராக ( HOD ) RSRM மற்றும் வேலூர் மருத்துவ கல்லூரிகளில் 40 வருடங்கள் பணியாற்றினார். மேலும், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளராக பணியாற்றினார். தமிழ்நாடு எம் ஜி ஆர் மருத்துவகல்லூரியில் Controller of Examinations ஆக பணியாற்றியவர், மகப்பேறு மருத்துவம் மற்றும் மகளிருக்கான மருத்துவத்தில் புகழ் பெற்ற நிபுணராக திகழ்ந்தார்.
தனது கணவர் டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களைப் போலவே, வண்ணாரபேட்டை, காசிமேடு பகுதிகளில் பெண்களுக்கு மகப்பேறு மருத்துவ பணிகள் செய்து பிரபலமடைந்தார். இதுவரையிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகப்பேறு பணிகள் செய்துள்ளார்.
மக்களுக்கு 5 ரூபாய் கட்டணத்தில் மருத்துவம் செய்து, இந்தியப்பிரதமர் மாண்மிகு திரு மோடி அவர்களாலும், தமிழக முதல்வர் மாண்புமிகு திரு மு க ஸ்டாலின் அவர்களாலும் பாராட்டப்பெற்ற திரு டாக்டர் S ஜெயச்சந்திரன் அவர்களின் மறைவைத் தொடர்ந்து, அவர் விட்டுச் சென்ற சமூக பணிகள், அவர் வாழ்ந்த இடத்தில் அவரது குடும்பத்தார் மூலம், தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
டாக்டர் திருமதி வேணி ஜெயச்சந்திரன் அவர்கள் இன்று 18.08.2025 காலை 6.15 மணி அளவில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வெங்கடாச்சலம் தெரு, பழைய வண்ணாரபேட்டை, சென்னை 21 என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது. நாளை 19/08/2025 காலை 10 மணிக்கு அவர்களின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு காசிமேடு இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.
தொடர்புக்கு டாக்டர் சரத் ராஜ ஜெயச்சந்திரன் +91 98848 66007
Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”.
விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னுசாமி பேசியதாவது… எங்கள் அழைப்பை மதித்து வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை மிக கஷ்டப்பட்டு ஒரு குழுவாக உழைத்து, உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் சுபாஷ் பேசியதாவது… படத்தை முழுதாக நான் பார்த்துவிட்டேன். தந்தை பெரியார் கருத்தை அழகாகவும், சிறப்பாகவும், ஆழமாகவும் பதிவு செய்துள்ள இயக்குநருக்கும், படக்குழுவிற்கும் எனது பாராட்டுக்கள். ஒரு பெண்ணின் பார்வையில் படத்தைச் சொன்னதற்குப் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நடித்த அனைவருக்கும் பட ரிலீஸுக்குப் பிறகு நல்ல வாய்ப்புகளும் பெரிய பேரும் கிடைக்கும். ஆனால் படத்தின் விளம்பர பணிகளுக்கு ஹிரோயின் வரவே இல்லை. ஏதோ வெப் சீரிஸ் வாய்ப்பில் அவர் பிஸியாகிவிட்டார் என்றார்கள். கஷ்டப்பட்டு இவர்கள் எடுத்த படத்தால் பிரபலமாகிவிட்டு, பட விழாவிற்கு வராமல் இருப்பது குற்றம். இனிமேல் படத்தில் புக் செய்யும் போதே அவர்கள் விழாக்களுக்கும் வர வேண்டுமென ஒப்பந்தம் போட வேண்டும். படக்குழுவினர் அனைவரும் ஜெயிக்க வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் கௌரி சங்கர் எந்த விளம்பரமும் இல்லாமல் பல சமூகப் பணிகள் செய்து வருகிறார். அவரது மனதுக்காக கண்டிப்பாக இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் கெவின் டெகோஸ்டா பேசியதாவது.. எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி. என் இசையில் பாடிய இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் சௌந்தர் பேசியதாவது…. கடுக்கா மிகச்சிறப்பான கருத்தைச் சொல்லும் சிறப்பான படம். கேமராமேன், இசையமைப்பாளர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாகச் செய்துள்ளார்கள். பாடல் கேட்டவுடன் முணுமுணுக்கத் தோன்றுகிறது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நான் வெளிநாட்டில் வேலை செய்யும் போது, இரண்டு படங்களுக்கு டிக்கெட் எடுத்தால், ஒரு டிக்கெட் இலவசம். அதே போல் இங்கு சின்ன பட்ஜெட் படங்களுக்கு 10 டிக்கெட் எடுத்தால் 5 டிக்கெட் இலவசம் என்று அறிவித்தால், படத்தின் மீது ஈர்ப்பு வரும். தயாரிப்பாளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் நன்றி.
இயக்குநர் SS முருகராசு பேசியதாவது… இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி இருவருக்கும் நன்றி. அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். படம் எடுத்த அந்த ஊரில் எல்லோரும் மிகவும் உதவியாக இருந்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரை எங்கள் படம் மிகச்சிறந்த படம், இனி நீங்கள் தான் படம் பார்த்துச் சொல்ல வேண்டும், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பேசியதாவது… என் நண்பன் விஜய் கௌரிஷை ஹீரோவக்க வேண்டும் என்று தான் இந்தப்படத்தை ஆரம்பித்தோம். அதிலும் இதில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக ஏன் நடிக்கிறாய் எனக்கேட்டேன். என்னுடைய தயாரிப்பான கடாவர் சீரிஸில் துணை நடிகராகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தான். அவன் சின்ன சின்னதாக ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியுள்ளான். இது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய படம். அவன் எது செய்தாலும் சரியாக இருக்கும். இந்தப்படத்தில் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது. படம் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார் என்றவுடன் சந்தோசமாகிவிட்டது. இனி அவர் இப்படத்தை எடுத்துச் சென்று விடுவார். கௌரி பல சமூக அக்கறைமிக்க செயல்களைச் செய்துகொண்டிருக்கிறான். அவன் இன்னொரு விஜய் சேதுபதியாக வருவான். இயக்குநர் அவ்வளவு அழகாக இப்படத்தினை எடுத்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது… இந்தப்படம் டிரெய்லர் பார்க்கும் போது என்னுடைய அட்டகத்தி படம் பார்ப்பது போலவே இருந்தது. சின்ன படங்கள் எடுப்பதில் படம் எடுப்பதைத் தாண்டி படத்தை விளம்பரப் படுத்துவதில் தான் இருக்கிறது. அதை மிகச்சிறப்பாக தனஞ்செயன் சார் செய்து வருகிறார். அவர் இந்தப்படத்தைச் செய்வது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது… கடுக்கா நிறையப் பிரபலங்கள் வாழ்த்த வந்துள்ளார்கள். படக்குழு ஒரு பாட்டிலேயே ஈர்த்து விட்டார்கள். பெயரிலேயே ஆனந்தத்தை வைத்திருக்கும் இந்த தயாரிபபளர்களுக்கு வாழ்த்துக்கள். படத்தில் பெண்கள் சம்பந்தமாகச் சிறப்பான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள். சினிமாவில் நாம் சரி செய்ய வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது. திரையரங்கில் இஷ்டத்துக்கு ஷோ தருகிறார்கள், எந்த ஷோ நம்ம படம் ஓடுகிறது என்றே தெரியவில்லை. இதை ஒழுங்கு படுத்த வேண்டும். நாம் படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் ரஜினி சார் படம் 100 தியேட்டரில் வெளியானால் அடுத்து 16 படங்கள் வெளியாக தியேட்டர் இருக்கும். ஆனால் இப்போது ஒரே படத்தை எல்லாத் தியேட்டரிலும் போட்டு வசூலை அள்ள, மற்ற படங்களை ஓட விடமால் செய்து விடுகிறார்கள். குறைந்த பட்சம் சின்ன படங்களுக்கு ஒரு வாரம் 4 ஷோ தர வேண்டும். இதைத் தயாரிப்பாளர் சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தப்படத்தை அழகாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் ஒரே பாட்டில் கலக்கிவிட்டார். கிராமிய படங்கள் தான் பெரிய வெற்றியைத் தரும். கடுக்கா மிகச்சிறப்பான வெற்றியைப் பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
நாயகன் விஜய் கௌரிஷ் பேசியதாவது.. மேடையில் இருப்பவர்கள் அனைவரும் என் இனாபிரேஷன். அவர்கள் எங்கள் படத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தேவா சாருக்கு நன்றி. இப்பாடலுக்கு வரவேற்பைப் ஏற்படுத்தித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தில் எல்லோருமே எங்களுக்கு மிகப்பெரிய சப்போர்ட்டாக இருந்துள்ளார்கள். அனைவருக்கும் என் நன்றிகள். டிரெய்லரில் காட்டாத ஒரு விசயத்தைப் படத்தில் வைத்துள்ளோம். கதையில் தான் பிரம்மாண்டத்தை வைத்துள்ளோம். கதை நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக ஹிட்டாகும். நாங்கள் நல்ல படம் தந்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
இயக்குநர் பேரரசு பேசியதாவது… தனஞ்செயன் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அந்தப்படத்தில் விசயம் இருக்கும், படம் கண்டிப்பாக ஹிட்டாகும். கடுக்கா என்றால் காய் இல்லை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ, அதில் யாருக்கு ஹீரோயின் கடுக்கா கொடுக்கிறார் என்பது தான் படம். ஆனால் ஹீரோயின் உண்மையிலேயே கடுக்கா கொடுத்தது தயாரிப்பாளருக்குத் தான். இவர்கள் கொடுத்த வாய்ப்பில் ஹீரோயின் ஆகிவிட்டு எந்த விழாவிற்கும் வரவில்லை. இசையமைப்பாளர் ஒரு பாட்டில் அனைவரையும் கவர்ந்து விட்டார். விஜய் கௌரிஷ் அட்டகத்தி தினேஷை ஞாபகப்படுத்துகிறார். நன்றாக நடிக்கிறார். கடுக்கா ஆடியன்ஸை ஏமாற்றாது. சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களே சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில்லை, அவர்கள் படம் மட்டும் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை. கடுக்கா சின்ன டீம் செய்துள்ள நல்ல படம், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது… இப்படம் அட்டகத்தி படத்திற்கு டிரிப்யூட் மாதிரி இருந்தது. அதனால் தான் CV குமாரை விழாவிற்கு அழைத்தேன். நான் நிறைய வெளிவராத படங்கள் பார்க்கிறேன். நம்மை மதித்து படம் காட்டுகிறார்கள் என்று அவர்களிடம் உரையாடி படத்திற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். அப்படி படம் பார்த்த போதே சில கரக்சன்ஸ் சொன்னேன். அதைப் புரிந்து கொண்டு அவர்கள் அதையெல்லாம் சரி செய்தார்கள். மிகச்சிறப்பாக 2 மணி நேரத்திற்குள் சிறப்பான படமாக மாற்றிக் காட்டினார்கள். அதனால் இப்படத்தை நான் ரிலீஸ் செய்து தருகிறேன் என்று சொன்னேன். நாயகன் விஜய் கௌரிஷ் ஒவ்வொரு ஊராகப் போய் அங்கு இன்ஸ்டா விளம்பரம் செய்து புரமோட் செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நாளை நமதே படத்திற்கும் நான் உதவி செய்திருந்தேன் 50 லட்சத்தில் எடுத்த அந்த படத்திற்கு மிகச்சிறப்பான ரிவ்யூ தந்தீர்கள். மிகப்பெரிய வெற்றியைத் தந்தீர்கள். அதே போல் இந்தப்படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். நன்றி.
நடிகர்கள்: விஜய் கௌரிஷ், ஸ்மேஹா, ஆதர்ஷ் மதிகாந்த், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா மற்றும் பலர்
தொழில் நுட்ப குழு இயக்குநர் : SS முருகராசு இசையமைப்பாளர்: கெவின் டெகோஸ்டா ஒளிப்பதிவாளர்: சதீஸ் குமார் துரைக்கண்ணு எடிட்டர் : M.ஜான்சன் நோயல் தயாரிப்பு வடிவமைப்பாளர் : விஜய் அந்துவான் நடன அமைப்பாளர்: அபேப் R.K இணை இயக்குநர்: R.ஐய்யனார், ரமேஷ் பாஷா இணை இயக்குநர்: சரண் K.ஆறுமுகம் உதவி இயக்குநர்: ஆறுமுகம், பிரதாப் சிங் DI: கலர் வேவ்ஸ் கலரிஸ்ட் : ராகவன் VFX: Issls ஸ்டுடியோ உதவி ஒளிப்பதிவாளர் : ஆல்வின், கிஷோர் உதவியாசிரியர்: லோகேஷ்ராஜா, சாம்ராஜா விளம்பர வடிவமைப்பாளர் : கோலிவுட் ஸ்டுடியோஸ் விநியோகம் : G.தனஞ்செயன் மக்கள் தொடர்பு : கேப்டன் M P ஆனந்த்
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான ‘அக்யூஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ‘அக்யூஸ்ட்’ படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர்.
இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ”இப்படத்தின் வெற்றிக்கு தற்போது வரை கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நாயகனும், நண்பணுமாகிய உதயாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த வெற்றி அவரை தான் சாரும். படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது அவர் தான். தற்போது வரை இந்த படத்தின் வெற்றியை அவர் தன் தலை மீது ஏற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து எங்களின் நலன்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவரது நோக்கம். அவரது நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், உதயாவிற்கும் நன்றி.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்,” என்றார்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ”இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் பின்னணியில் ஒரு குட்டி கதை இருக்கிறது. இப்போது அதைப் பற்றி விரிவாக பேச இயலாது. இருப்பினும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ‘அக்யூஸ்ட்’ திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகத்தினருக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தது. ‘தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்’ என்ற குறள் தான் என் நினைவுக்கு வருகிறது. இந்த முயற்சிக்கு வித்திட்டது ஏ எல் உதயா தான். இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து நான் தற்போது பேசும் தருணம் வரை உதயா அசுரத்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதனை நான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படம் வெளியான பிறகு நாங்கள் குழுவாக இணைந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, திருநெல்வேலி என்று ஊர் ஊராக பயணித்து ரசிகர்களை சந்தித்தபோது ரசிகர்களையும், ஊடகத்தினரையும் அவர் தனி ஆளாக எதிர்கொண்டார். ரசிகர்கள் அனைவரும் ‘கணக்கு எப்படி இருக்க?’ என்ற அளவிற்கு நலம் விசாரிக்க தொடங்கி விட்டார்கள். ரசிகர்களின் பேரன்பு எங்களுக்கு கிடைக்க காரணமாக இருந்தவரும் உதயா தான். இந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழு முதல் காரணமாக நான் உதயாவை தான் குறிப்பிடுவேன்.
கன்னட திரைப்படத்துறையில் வெற்றி பெற்றிருந்தாலும், தமிழிலும் வெற்றி பெற்ற இயக்குநராக வலம் வர செய்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் ஏ. எல். உதயா பேசுகையில், ” பகிர்ந்து கொள்ள நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா, என தெரியாது. அவ்வளவு சோர்வாக இருக்கிறேன்.
என்னுடைய நண்பர்களின் ஆதரவினால் இப்படத்தின் பணிகளை தொடங்கி, நிறைவு செய்து ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் சேர்ப்பித்து மக்கள் வெற்றி பெற செய்துள்ளார்கள். இதற்குள்ளாக நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே, விவரிக்க இயலாது, பகிர்ந்து கொள்ள முடியாது.
இந்தப் படத்தின் கதை நல்ல கதை. நண்பர்கள், தயாரிப்பாளர்கள், திரை உலகத்தின் ஆதரவுடன் படத்தினை தயாரித்து விட்டோம். வெளியிட திட்டமிடப்பட்ட போது இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக பணியாற்றினார்கள். சிலர் கூடவே இருந்து தடுத்தார்கள். அதெல்லாம் வலி மிகுந்த விஷயங்கள்.
சினிமாவில் நாங்கள் இன்று இந்த இடத்தில் நிற்கிறோம் என்றால் இது சாதாரணமானதல்ல. மிகப் பெரிய வெற்றி. இந்த இடம் அப்படி இருக்கிறது. ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன. யாருடைய ஆசீர்வாதம் என்று தெரியவில்லை, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்கில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ஓட வைப்பதற்காக போராடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்த போராட்டத்தை நானும் எனது குழுவும் இஷ்டப்பட்டு தான் செய்து வருகிறோம்.
இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு.
எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இந்த திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது என தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்த படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு ஊடகங்களும், மக்களும் தான் காரணம்.
இந்தப் படம் வெளியாகி மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி தான். அதனால்தான் இதற்கு காரணமான ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினோம்.
இப்படம் வெளியான பிறகு நாங்கள் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என்று செல்லும்போது அங்குள்ள ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு கொண்டாடுகிறார்கள். எங்கள் மீது பேரன்பு காட்டுகிறார்கள். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இது கடவுளின் ஆசீர்வாதம் தான்.
சினிமாவில் எந்த சங்கமாக இருந்தாலும் அவை உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சினிமா ஒரு மோனோபோலியாக (monopoly) இருக்கிறது. நான் இதை உறுதியாக சொல்கிறேன். இதில் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமானது. மீண்டும் ஒரு முறை போராட முடியாது. இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவம் கொண்ட எங்களுக்கு இப்படி ஏற்படுகிறது என்றால், புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கு நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. நாம் இந்த நிலையில் தான் தற்போது இருக்கிறோம். இந்த தருணத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கு நான் மிகப்பெரிய மரியாதை செலுத்துகிறேன். ஏனெனில் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எங்களைப் போன்ற சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது எந்த குறையையும் சொல்ல இயலாது. திருப்பூர், சேலம், கோவை போன்ற பகுதிகளில் இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி திரையரங்க உரிமையாளர்கள் தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்களாகிய நாம் தான் சரியில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தான் சுயநலம் அதிகம் இருக்கிறது.
இந்த படத்தை இயக்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், தயாரிப்பாளர் சௌந்தர், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, நடிகர்கள் டேனி, பிரபாகர், ஸ்ரீதர், ஹைடு கார்த்திக், நடிகைகள் சுபத்ரா, தீபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வி எஃப் எக்ஸ் மூர்த்தி என அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து தயாரிப்பாளர்களும் நன்மை பெற வேண்டும். அடுத்து நாம் பட வெளியீட்டை ஒழுங்கு படுத்துவது தான் முதன்மையான பணி. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன். தயாரிப்பாளர் கேயார் , தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் போன்றோர்கள் தலைமையில் இருந்த சங்கம் போல் வலுவான சங்கம் வேண்டும். யாருக்கும் எதற்கும் அச்சப்படாத தலைவர்கள் இருந்தார்கள் இல்லையா, அது போன்ற தலைவர்கள் வந்தால் மட்டும் தான் சினிமா நன்றாக இருக்கும்.
இந்தப் படத்தில் நான் மட்டும் ஹீரோ இல்லை, அஜ்மலும் ஒரு ஹீரோ தான். ஜான்விகா, யோகி பாபு ஆகியோருக்கும் நன்றி.
இந்த டீம் மீண்டும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் ‘டண்டனக்கா டான்’ என்ற பெயரில் கதையை சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும். இந்த ‘அக்யூஸ்ட்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்குவேன் என உறுதியாக சொல்கிறேன்,” என்றார்.
நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த டீசர், இப்போது வைரலாகி வருகிறது. மேலும் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து, படம் மெகா ஹிட்டாகும் என்கிற எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது.
ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நிவின் பாலி – நயன்தாரா எனும் நட்சத்திர ஜோடி மீண்டும் இணையும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் ( George Philip Roy)மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். Maverik Movies Pvt. Ltd தயாரிப்பில், நிவின் பாலியின் ஹோம் பேனரான Pauly Jr. Pictures மற்றும் Rowdy Pictures Pvt. Ltd. இணைந்து தயாரிக்கின்றன.
நேற்று வெளியான அசத்தலான டீசர், பள்ளி வாழ்க்கையின் வண்ணமயமான வாழ்க்கையையும், பரபரப்பான உலகையும் சித்தரிக்கிறது. மேலும் மாணவர்களை மையமாகக் கொண்டு கதை நகரும் என்பதை டீசர் வெளிப்படுத்தியுள்ளது. காமெடி, வேடிக்கை, அதிரடி, சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் கலந்த கமெர்ஷியல் எண்டர்டெய்னர் என டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நிவின் பாலி தனது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் துறுதுறுப்புடன் குறும்பு மிக்க ஹரி என்ற கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். அதேசமயம், நயன்தாரா ஒரு வலிமையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது கதைக்கு பெரும் சுவாரஸ்யத்தை சேர்க்கும் அம்சமாக அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளியாகிய ப்ளாக்பஸ்டர் “லவ் ஆக்சன் டிராமா” திரைப்படத்திற்குப் பின், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நிவின் பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணைந்துள்ள இந்தப்படம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜனகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, கீரண் கொண்டா, காமருதீன் K உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
மேலும், மலையாளத் திரையுலகில் இருந்து அஜு வர்கீஸ் (Aju Varghese), ஷரஃபுதீன் (Sharafudheen), சுரேஷ் கிருஷ்ணா, மல்லிகா சுகுமாரன், லால், ஜகதீஷ், ஜானி ஆன்டனி ஆகியோர் இணைந்துள்ளதால், இந்த ஆண்டு வெளிவரும் மிக அதிக நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.
வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) வழங்கும் “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!!
துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பான “லோகா – சேப்டர் 1 : சந்திரா” படம், தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் மூலம் வெளியாகிறது. ஒணம் பண்டிகை சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், ‘லோகா’ எனும் சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் படமாகும். இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். பல பாகங்களாக வெளியாக இருக்கும் சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகம் இதுவாகும். தென் இந்தியா முழுவதும் EPIQ திரைகளிலும் படம் வெளியாகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தூ சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல பகுதிகளாக உருவாகும் லோகா சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் படங்களின் முதல் பாகம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தொழில்நுட்பக் குழு: ஒளிப்பதிவு – நிமிஷ் ரவி இசை – ஜேக்ஸ் பீஜாய் எடிட்டிங் – சாமன் சகோ நிர்வாக தயாரிப்பாளர்கள் – ஜோம் வர்கீஸ், பிபின் பெரும்பள்ளி கூடுதல் திரைக்கதை – சாந்தி பாலச்சந்திரன் தயாரிப்பு வடிவமைப்பு – பாங்லான் கலை இயக்கம் – ஜிது செபாஸ்டியன் மேக்கப் – ரோனெக்ஸ் சாவியர் உடை வடிவமைப்பு – மெல்வி J, அர்ச்சனா ராவ் ஸ்டில்ஸ் – ரோஹித் கே.சுரேஷ், அமல் K.சதார் சண்டைக் காட்சிகள் – யானிக் பென் தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ரினி திவாகர், வினோஷ் கையமல் முதன்மை உதவி இயக்குநர் – சுஜித் சுரேஷ் மக்கள் தொடர்பு – யுவராஜ்
Chennai, August 15, 2025: In a moving celebration of both health and independence, hundreds of cardiac patients who had fully recovered after life-saving interventions at Kauvery Hospital, Vadapalani walked hand-in-hand with their treating cardiologists at Anna Nagar Tower Park on 15th August, 2025, Independence Day.
The “Namma Heart Walk” was flagged off by Thiru M.K. Mohan, MLA – Anna Nagar Constituency and celebrated Indian Contemporary Artist Trotsky Marudu and joined by senior cardiologists and cardiac surgeons, Dr. Anbarasu Mohanraj, Clinical Lead & Senior Consultant – Cardiovascular & Thoracic Surgery, Prof. Dr. P. Manokar, Clinical Lead – Interventional Cardiology and Dr. C. Sundar, Clinical Lead – Structural Cardiology.
As part of the celebrations, the chief guest, Thiru M.K. Mohan, also inaugurated a public Automated External Defibrillator (AED) unit at Anna Nagar Tower Park. This life saving device will be accessible to the public during emergencies, reinforcing the hospital’s commitment to community safety and preparedness in tackling sudden cardiac arrests.
For the walkers, once battling life-threatening heart conditions, this event was more than symbolic, it was living proof that with timely diagnosis, advanced treatment, and lifestyle changes, life after a major cardiac event can be active, healthy, and fulfilling.
Why this matters – The science in numbers • 17.9 million people die from heart disease globally every year, yet up to 80% of these deaths are preventable with lifestyle changes. • In India, 1 in 4 deaths is due to heart disease. • Golden Hour Saves Lives: Patients receiving primary angioplasty within 90 minutes have up to 95% survival and full recovery rates. • Minimally invasive procedures like TAVR (Transcatheter Aortic Valve Replacement) allow patients to walk home in 2 – 3 days and resume normal life within weeks.
“Cardiac surgery is often seen as a last resort, but for many patients, it’s the turning point that gives them a second life. Standing here today with patients who have gone through complex bypasses and valve surgeries – walking, smiling, and living fully is the best outcome we can hope for as surgeons,” said Dr. Anbarasu Mohanraj, Clinical Lead & Senior Consultant – Cardiovascular & Thoracic Surgery.
“Heart disease is no longer a life sentence of restrictions. With advanced procedures like TAVR and minimally invasive structural heart interventions, patients can resume normal activities within days to weeks. In India, early detection and immediate treatment can reduce heart failure risk by over 60%,” said Dr. C. Sundar, Clinical Lead – Structural Cardiology.
“Every minute counts in heart attacks. Our data shows that patients who undergo primary angioplasty within the golden hour have a 95% survival rate and return to normal life without major limitations. Today’s walk proves that with rapid, expert care, heart health can be restored,” added Prof. Dr. P. Manokar, Clinical Lead – Interventional Cardiology.
“Prevention is the first line of defence against heart disease. Regular health check-ups, a balanced diet, exercise, and avoiding tobacco can prevent more than 80% of premature heart attacks. This event inspires the community to value health and take proactive steps to protect the heart,” said Thiru M.K. Mohan, MLA – Anna Nagar Constituency.
Adding his artistic insight at the flag-off, Trotsky Marudu remarked, “Art, like medicine, tells stories of survival and renewal. Seeing these survivors walk again is a living canvas, lines of courage, resilience and life drawn in motion.”
“At Kauvery Hospital, we believe every cardiac emergency deserves immediate, high-quality care. Our 24×7 heart team is equipped for fast-response primary angioplasty, advanced structural heart procedures, and complex cardiac surgeries – all delivered at affordable costs. We are proud to see our patients today not as survivors, but as thriving individuals living life to the fullest,” said Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director – Kauvery Group of Hospitals.
This Independence Day, Kauvery Hospital, Vadapalani and its cardiac champions delivered a clear message: freedom from heart disease is possible with awareness, timely medical care, and the right lifestyle choices especially walking and diet. The event was not just a walk, but a testament to medical excellence, patient resilience, and the hospital’s commitment to ensuring every heartbeat gets a second chance.