ராபர் படத்தின் பின்னணி இசை மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த ஜோகன் சிவனேஷ்!

ஜோகன் சிவனேஷ் தமிழ்நாட்டின் சென்னையில் இசைப்பாரம்பரியம் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் . இவர் 9 வயது முதலே கீபோர்டு இசைக்கப் பழகினார். பின் ஏ.ஆர். ரஹ்மானின் தற்போதைய கே.எம். கன்ஸர்வேட்டரி அன்று ‘வாப்பா’ கன்ஸர்வேட்டரி என்ற பெயரில் செயல்பட்டுவந்த இசைப்பள்ளியில் சவுண்ட் இன்ஜினீயரிங் படித்தார். மறுபுறம் முன்னனி இசைக்குழுக்களில் கீபோர்டு வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் பாடகர் எஸ். பி. பாலசுப்பிர மணியம் முதல் இளையராஜா வரை பல இசை மேதைகளோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அங்கு கிடைத்தது. 2008 ஆம் ஆண்டு இளையராஜாவின் ராஜா ஒன் மேன் ஷோ நிகழ்ச்சியில் கீபோர்டு வாசித்தார் .

2012 ஆம் ஆண்டு முதல்முறையாக கொள்ளைக்காரன் படத்துக்காக இசையமைத்திருந்தார் .இதை தொடர்ந்து இவர் இசையமைத்த மெட்ரோ படம் ஜோகனுக்கு திரையுலகில் பெரும் வரவேற்பையும் ரசிகர்களிடம் தனி இடத்தையும் தந்தது . இப்படங்களை தொடர்ந்து ஆள், உரு ,அகடு ,ஆயிரம் பொற்காசுகள் ,ஒயிட் ரோஸ் ,
கன்னட படமான கப்பட்டி போன்ற படங்களும் இன்று வெளியான
ராபர் படம் தொடர்ந்து தனது சிறந்த இசை வேலைப்பாடுகளை கொடுத்து வருகிறார் . ராபர் படத்தில் இவரது பின்னணி இசை படம் பார்த்த மக்களிடையே கவனத்தை ஈர்த்து,பெரிதளவில் பேசப்படுகிறது . மேலும் பல படங்களில் தற்போது இவர் பிசியாக வேலைபார்த்து வருகிறார் .

யாஷ் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படமான ‘டாக்ஸிக் : ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிக்கும் அதிரடி திரில்லர் திரைப்படமான ‘டாக்ஸிக் : ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ படத்தை பாராட்டிய ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே ஃபெர்ரி

”யாஷின் டாக்ஸிக் திரைப்படம்- இது ஒரு பேங்கர்” என ஹாலிவுட் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெர்ரி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

ஹாலிவுட் திரைப்படங்களில் அதிரடி காட்டிய இயக்குநர் இந்திய சினிமாவில் இணைந்திருக்கிறார். உலகளாவிய பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படங்களில் துணிச்சல் மிக்க – துடிப்பான அதிரடியான ஆக்சன் காட்சிகளை வடிவமைப்பதில் புகழ்பெற்றவர் அதிரடி இயக்குநர் ஜே ஜே பெர்ரி. இவர் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக் : ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்- அப்ஸ்’ படக் குழுவினருடன் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சூசகமாக தெரிவித்துள்ளார். அத்துடன் ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷுடன் இணைந்து தோன்றும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டு, ‘இவருடன் இணைந்து பணியாற்றுவதில் பெருமிதம் கொள்கிறேன்’ என பதிவிட்டிருக்கிறார்.

மேலும் அந்தப் பதிவில் ”#டாக்ஸிக் என பெயரிட்டு, தனது நண்பர் #யாஷ் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தியாவில் சிறப்பான வெற்றியை பெற்றேன். ஐரோப்பா முழுவதிலும் இருந்து என் அன்பான நண்பர்கள் பலருடன் பணியாற்ற முடிந்தது. இதை அனைவரும் பார்ப்பதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இது ஒரு அற்புதமான அனுபவம். நாங்கள் இணைந்து பணியாற்றியதில் மிகவும் பெருமை கொள்கிறோம்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

‘கே ஜி எஃப் ‘படத்திற்கு பின் சக்தி வாய்ந்தவராக மாறிய யாஷ்- பெர்ரியின் பதிவிற்கு பிறகு தன்னுடைய எண்ணத்தை பகிர்ந்து கொண்டார். ‘இது ஒரு சினிமா காட்சியாக உருவாகி வருவதற்கு அதிக உற்சாகத்தை தூண்டியது’ என்றும், ” என் நண்பரே உங்களுடன் இணைந்து நேரடியாக பணிபுரியும் போது உங்களின் ஆற்றலை அறிந்தேன்” என்றும் பதிவிட்டிருக்கிறார்.

இந்திய சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லை குறிக்கும் வகையில் உருவாகி வரும் ‘டாக்ஸிக் ‘ திரைப்படம் ஆங்கிலம் மற்றும் கன்னட மொழியில் எழுதி, படமாக்கப்பட்ட பிரம்மாண்டமான பொருட்செலவிலான இந்திய திரைப்படமாகும். இந்த துணிச்சல் மிகுந்த படைப்பு.. இந்திய பார்வையாளர்களுக்கு ஒரு அசலான கதையை உறுதி செய்கிறது. அதே தருணத்தில் உலகளாவிய பார்வையாளர்களுக்கான அணுகுமுறையையும் கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், பல சர்வதேச மொழிகளிலும் டப்பிங் செய்யப்படவுள்ளது. இது உண்மையில் ஒரு பன்முகத் தன்மை வாய்ந்த கலாச்சார ரீதியிலான திரைப்பட அனுபவத்திற்கு வழி வகுக்கும்.

இந்த இலட்சிய படைப்பை சர்வதேச அளவில் பாராட்டினைப் பெற்ற இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கியுள்ளார். உணர்வுபூர்வமான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற கீது மோகன் தாஸ் – சன்டான்ஸ் திரைப்பட விழாவில் தேசிய விருது மற்றும் உலகளாவிய திரைப்பட தயாரிப்பு விருது போன்ற மதிப்புமிக்க பாராட்டுகளை பெற்றுள்ளார். ‘டாக்ஸிக்’ படத்தின் மூலம் அவர் தன்னுடைய கலை பார்வையை ஹை ஆக்டேன் ஆக்சனுடன் இணைந்து தருகிறார். இதன் மூலம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத பயணத்திற்கும் அவர் உறுதியளிக்கிறார்.

கே வி என் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் ‘ராக்கிங் ஸ்டார்’‌ யாஷ் இணைந்து தயாரிக்கும் ‘டாக்ஸிக்: ஏ ஃபேரிடேல் ஃபார் க்ரோன்-அப்ஸ்’ எனும் திரைப்படம் மேற்கத்திய பாணியிலான துல்லியத்தையும், இந்திய தனத்தையும் தீவிரத்துடன் இணைந்து.. அதிரடி ஆக்சன் படத்தின் ஜானரை மறு வரையறை செய்வதற்கு தயாராக உள்ளது.

மோகன்லால்- பிரித்திவிராஜின் “எம்புரான்” திரைப்படம், மார்ச் 27, 2025-ல், உலகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகிறது !!

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், “லூசிபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமான “எம்புரான்” திரைப்படம், வரும் 2025 மார்ச் 27-ஆம் தேதி, உலகம் முழுவதும் 4000 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நடிகர்-இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆன்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது.

மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தோமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகிறார். அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவடார், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பிஜூ சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடேகர், நைலா உஷா, ஜிஜூ ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபோனே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

இந்தப் பிரம்மாண்டத் திரைப்படத்தின் படப்பிடிப்பு, 2023 அக்டோபர் 5-ம் தேதி, ஃபரிடாபாத்தில் தொடங்கியது. இதன் படப்பிடிப்பு, உலகம் முழுக்க பல இடங்களில் நடைபெற்றது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும். அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள “எம்புரான்” திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதை உலகம் முழுக்க விரிகிறது.

தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் சுஜித் வாசுதேவ், படத்தொகுப்பாளர் அகிலேஷ் மோகன், கலை இயக்குநர் மோகன்தாஸ், ஸ்டண்ட் இயக்குநர் ஸ்டண்ட் சில்வா, மற்றும் படத்தின் கலை இயக்குநர் நிர்மல் சஹதேவ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். முதல் பாகத்தின் இசையமைப்பாளரான தீபக் தேவ், இப்படத்தில் மிரட்டல் இசையைத் தந்துள்ளார்.

“எம்புரான்” படத்தின் விளம்பரப் பணிகள் படத்தைப் போலவே, பிரம்மாண்டமாக துவங்கி நடந்து வருகிறது. 2025 ஜனவரி 26-ம் தேதி, குடியரசு தினத்தில் கொச்சியில் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ டீசர், டிஜிட்டல் தளங்களில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. பிப்ரவரி 9, 2025-ல் ஆசீர்வாத் சினிமாஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ யூட்யூப் சேனல்களில், படத்தின் கதாப்பாத்திரங்கள் 2-3 நிமிட வீடியோக்கள் மூலமாகக் குறுகிய கால இடைவெளியில் வெளியானது. பிப்ரவரி 26, 2025 அன்று மோகன்லால் குரேஷி- ஆப்ரஹாம் எனும் ஸ்டீபன் நெடும்புள்ளியாக அறிமுகப்படுத்தப்பட்டது, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய வெளியீடாக வெளியாகும் “எம்புரான்”, இந்தியத் திரையுலகில் முக்கியமான படமாக, எதிரப்பார்ப்பை எகிறவைத்துள்ளது. 2025 மார்ச் 27 அன்று ஸ்டீபன் நெடும்புளஙளியை திரையில் ரசிக்கத் தயாராகுங்கள்!

ZEE5 தளம் வழங்கும், அடுத்த அதிரடி காமெடி ஒரிஜினல் சீரிஸ், “செருப்புகள் ஜாக்கிரதை” மார்ச் 28 முதல் ஸ்ட்ரீமாகிறது !!

இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, அதிகாரப்பூர்வமான வெளியீட்டுத் தேதியுடன் வெளியிட்டுள்ளது.

SS Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் வயிறு குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான, அசத்தலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

வைரங்களை கடத்தி விற்கும் வியாபாரி ரத்தினம், தனது பொக்கிஷமான வைரத்தை அவனது செருப்பு ஒன்றில் மறைத்து வைக்கிறார். ரெய்டு அதிகாரிகளுக்கு பயந்து, அந்த செருப்பை ஆடிட்டரான தியாகராஜனிடம் ( சிங்கம்புலி ) கொடுக்கிறார். தியாகராஜனும் அவரது மகன் இளங்கோவும் செருப்பை தொலைத்து விடுகிறார்கள். வைரம் உள்ள செருப்பைத் தேடி அலையும், கலகலப்பான பயணம் தான் இந்த சீரிஸ். ஒவ்வொரு எபிஸோடும் கலக்கலான காமெடியுடன், பரபர திருப்பங்களுடன் வெகு சுவாராஸ்யமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இவருடன் விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா ,உடுமலை ரவி, பழனி, சாவல் ராம், director பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். தொழில் நுட்ப குழுவில், ஒளிப்பதிவு – கங்காதரன், இசை – LV முத்து கணேஷ், எழுத்து – எழிச்சூர் அரவிந்தன், Editor – வில்சி J சசி, ஆடியோகிராஃபி – டோனி J, கலை – S சதீஷ்குமார், சவுண்ட் டிசைன் – ஹரி ஹரன், உடை வடிவமைப்பு – M அஷோக் குமார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

உங்கள் முகங்களில் புன்னகை பூக்கச் செய்யும் இந்த “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸை, வரும் மார்ச் 28 முதல் ZEE5 தளத்தில் கண்டுகளிக்கலாம். ZEE5 மனோரஞ்சன் விழா மூலம், 2025 ஆம் ஆண்டு மார்ச் 1 முதல் 30 வரை, ZEE5, ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் வகையில், பல வெற்றிப் படங்கள், விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட சீரிஸ்கள், காமெடி டிராமாக்கள் மற்றும் அதிரடி ஆக்சன் படங்களை இலவசமாக வழங்கிவருவது குறிப்பிடதக்கது.

ZEE5 பற்றி ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்குப் பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்திலிருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்க்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.

விஜய் சேதுபதி வெளியிட்ட பரத் நடிக்கும் ‘காளிதாஸ் 2’ படத்தின் பர்ஸ்ட் லுக்

பரத் – அஜய் கார்த்திக் இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2 ‘படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழில் பிரபலமான நடிகர் பரத் மற்றும் நடிகர் அஜய் கார்த்திக் முதன்முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘காளிதாஸ் 2’ எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

2019 ஆம் ஆண்டில் பரத் நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற ‘காளிதாஸ்’ படத்தை தொடர்ந்து அதன் இயக்குநரான ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காளிதாஸ் 2’ திரைப்படத்தில் பரத், அஜய் கார்த்திக், பிரகாஷ் ராஜ், ‘ஆடுகளம்’ கிஷோர், சுரேஷ் மேனன், ஆனந்த் நாக், பவானி ஸ்ரீ , அபர்னதி, ராஜா ரவீந்தர், டி எம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் ‘பூவே உனக்காக’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகை சங்கீதா- இப்படத்தில் அழுத்தமான வேடத்தில் நடித்திருப்பதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை புவன் ஸ்ரீனிவாசன் கவனிக்க, கலை இயக்கத்தை துரைராஜ் கையாள, நிர்வாக தயாரிப்பு பணியை எஸ். பழனியப்பன் மேற்கொண்டார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிரபல விநியோகஸ்தரும் , தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் , அவரின் சொந்த பட தயாரிப்பு நிறுவனமான ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதை மாந்தர்களின் கதாபாத்திர தோற்றம்- பாரம்பரியத்தை கம்பீரமாக வெளிபடுத்தும் குடும்ப புகைப்படமாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் தற்போது கிரைம் திரில்லராக உருவாகி இருக்கிறது. இப்படத்திற்காக சென்னை மற்றும் கேரளாவில் படபிடிப்பு நடைபெற்றது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்கும்” என்றார்.

இந்தத் திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள’பைசன்’

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள’பைசன்’ எனும் துணிச்சலான விளையாட்டு வீரரை பற்றிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வெளியிட்டுள்ளன

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பைசனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அனைவரின் பாராட்டையும் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள விளையாட்டு வீரர் பற்றிய இந்த கதையின் ஃபர்ஸ்ட் லுக்கை அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்- நீலம் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வெளியிட்டுள்ளது. கபடி வீரராக துருவ் விக்ரம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகை அனுபமா பரமேஸ்வரன் இவருடன் இணைந்து நடித்திருக்கிறார் இந்த திரைப்படம் உண்மை சம்பவங்களால் ஈர்க்கப்பட்டு.. ஆர்வம்.. மீள் உருவாக்கம்.. மற்றும் அனைத்து தடைகளையும் எதிர்த்து வெற்றி பெறுவதற்கான ஒரு உறுதியான நிலைப்பாட்டை உயிர்ப்பிக்கிறது.

கதை சொல்வதில் தனித்துவமான பாணியை கொண்டிருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பைசன்’- பார்வையாளர்களை உத்வேகப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் தமிழில் வெளியாகும் ஒரு மைல்கல் படைப்பாக இருக்கும் என உறுதி அளிக்கிறது. மேலும் இந்த பயணத்தின் புதிய தகவல்களுக்காக ஆர்வத்துடன் காத்திருங்கள்.

விண்ணைத்தாண்டி வருவாயா – 15 ஆண்டுகள் நிறைவுக் கொண்டாட்டம் !!

சில காதல் கதைகள், அனைவரின் மனதிலும் நீங்காத நினைவுகளை தந்து, உணர்வுகளோடு பிணைந்து, என்றென்றும் நிலைத்து நிற்கும். கௌதம் வாசுதேவ் மேனனின் கிளாசிக் காதல் கதையான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இத்தனை வருடங்களுக்குப் பிறகும், காதலர்களின் மனதில் பல இனிமையான தருணங்களை உருவாக்கி, என்றென்றைக்குமான காதல் கதையாக நிலைத்து நிற்கிறது.

15 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள இந்த படம், இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சிறப்புக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, படக்குழுவினர் அனைவரும் அவர்களுடைய ஞாபகங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், இந்தப் படத்தை சிறப்பானதாக்கிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தனர்.

இந்த சிறப்புக் கொண்டாட்ட நிகழ்வில், நடிகர் சிலம்பரசன் டி.ஆர். மற்றும் வி.டி.வி கணேஷ், ஒரு காணொளியில் தோன்றி, இந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர்.

நடிகர் சிலம்பரசன் டி.ஆர் கூறியதாவது… “விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வந்து, 15 ஆண்டுகள் நிறைவடைந்ததில், நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படத்தை அதன் வெளியீட்டின் போதும், இன்றும் மிகப்பெரிய வெற்றியாக்கிய ரசிகர்களுக்கு என் நன்றிகள். கௌதம் மேனன் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார், திரிஷா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள்.”

நடிகை திரிஷா கூறியதாவது…, “விண்ணைத்தாண்டி வருவாயா எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத, மிகச் சிறந்த படங்களில் ஒன்றாகும். இந்தப் படம் என் மனசுக்கு மிகவும் நெருக்கமானது. இதைப் படமாக்கிய கௌதம் வாசுதேவ் மேனனுக்கு எனது நன்றி. இப்படம் இன்னும் பலரின் அன்பினால் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படப்பிடிப்பின் போது நாங்கள் கடந்து வந்த அத்தனை தருணங்களும், மிக மிக அழகான நினைவுகள். படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றிகள். மேலும் இந்தப் படத்தை இன்றும் கொண்டாடும் ரசிகர்களுக்கும் எனது நன்றிகள்.”

கௌதம் மேனன் கூறியதாவது…
“சில திரைப்படங்கள் 10, 15, 25 ஆண்டுகள் நிறைவடையும் போது அதைப் பற்றி பேசுவது வழக்கம். ஆனால், ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ பற்றி பேசும்போது எனக்கு உணர்ச்சிப் பூர்வமான, மிக ஆழமான உணர்வு தோன்றுகிறது. பலரும் என்னை சந்திக்கும் போது, இன்னும் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸி கதாபாத்திரங்களை நினைவுகூர்கிறார்கள். சிம்பு இல்லையெனில் இந்தக் கதையில் அந்த மேஜிக் நிகழ்ந்திருக்கும் என நான் நிச்சயமாக சொல்ல முடியாது. அத்தனை சிறப்பாக அவர் அந்தக் கதாப்பாத்திரத்தை செய்திருந்தார் அவருக்கு என் நன்றி. திரிஷா என்னிடம் இந்தப்படத்தின் வில்லன் நான் தான், என்னை மக்கள் வெறுப்பார்கள் என்றார். நான் அதற்கு ரசிகர்கள் உங்களை அடிக்கக் கூட கூடும், ஆனால் இந்தப்படத்திற்குப் பிறகு மக்கள் உங்களை நேசிப்பதை நிறுத்தவே மாட்டார்கள் என்றேன். இந்தப் படம் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டிருந்தாலும், படத்தை உருவாக்கிய ஒவ்வொரு தருணங்களிலும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசை, இந்தக் கதையில் ஒரு மிகப்பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்தியது. மனோஜின் காட்சியமைப்பும், ஆண்டனியின் எடிட்டிங்கும் இந்தப் படத்தை மனதிற்கு மிக நெருக்கமான படைப்பாக மாற்றின.”

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் ஆர்எஸ் இன்ஃபோட்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்தன. ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை விநியோகிக்க, இப்படம் மாபெரும் வெற்றியை ஈட்டியது.

மேலும் இந்நிகழ்வில் இந்தப் படத்திற்கான அற்புதமான பாடல்களைப் பாடிய பாடகர்கள் அவர்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். மேலும், சோனி மியூசிக் இந்தக் கொண்டாட்டத்திற்கு ஒரு சிறப்பு ஆன்லைன் தளத்தை உருவாக்கியுள்ளனர். lovefullyvtv.com எனும் இணையதளம் அனைத்து வி.டி.வி ரசிகர்களையும் இந்தக் கொண்டாட்டத்தில் பங்குபெறச் செய்கிறது. இந்த தளம் மூலம் அனைத்து விடிவி பட ரசிகர்களும் படத்தின் சிறப்பு தருணங்களை, படக்குழுவினரின் அனுபவங்களை, படப்பாடல்களை கேட்டும் பார்த்தும் அனுபவிக்கலாம்.

’ஜென்டில்வுமன்’ திரை விமர்சனம்

திருமணம் நடந்து மூன்று மாதங்களான கதாநாயகன் ஹரி கிருஷ்ணனுடன் மற்றும் மனைவி கதாநாயகி லிஜோமோல் ஜோஸ், இருவரும் சென்னையில் உள்ள அப்பார்ட்மெண்டில் வாழ்ந்து வரும் நிலையில் மனைவி கதாநாயகி லிஜோமோல் ஜோஸ், மீது கதாநாயகன் ஹரி கிருஷ்ணன் அளவுக்கு அதிகமான பாசத்தோடு இருக்கிறார் என நினைக்கும் போது, தனது கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனின் செல்போன் மூலம் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வருகிறது.

தனது கணவர் மற்றொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்தவுடன் கடும் கோபமடையும் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ், கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனை கொலை செய்து விடுகிறார்.

இரத்த வெள்ளத்தில் கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணன் இறந்ததை பார்த்து பயமில்லாமலும் கொஞ்சம் கூட களங்கம் இல்லாமலும், கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனின் உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு, சர்வசாதாரணமாக தனது வேலையை பார்க்க தொடங்கி விடுகிறார்.

இதற்கிடையே, கதாநாயகன் ஹரி கிருஷ்ணனை காணவில்லை என அவருடைய காதலி மற்றொரு கதாநாயகி லஸ்லியா காவல்துறையில் புகார் ஒன்றை கொடுக்கிறார்.

மற்றொரு கதாநாயகி லஸ்லியா கொடுத்த புகாரின் பேரில் விசாரணையை தொடங்குகின்றனர்.

இந்த நிலையில் தனது கணவர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனை கொலை செய்துவிட்டு மிக சர்வ சாதாரணமாகவும் மிக சகஜமாகவும் உலா வரும் கதாநாயகி லிஜோமோல் ஜோஸ் காவல்துறையிடம் இருந்து தப்பித்தாரா? தப்பிக்கவில்லையா?

காவல்துறையினர் கதாநாயகன் ஹரி கிருஷ்ணனை கண்டுபிடித்தார்களா?, கண்டுபிடிக்கவில்லையா?
என்பதுதான் இந்த ‘ஜென்டில்வுமன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ஜென்டில் உமன் திரைப்படத்தில் கதையின் நாயகியாக லிஜோமோல் ஜோஸ், நடித்திருக்கிறார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் லிஜோமோல் ஜோஸ், தனது கணவன் செய்த மிகப்பெரிய துரோகத்தை அறிந்து சாதாரண பெண் போல் கலங்கினாலும், அடுத்த கணமே சற்றும் எதிர்ப்பார்க்காத விதமாக மிகப்பெரிய அளவில் ஒரு முடிவு எடுத்து அதை செய்து திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்களை பதற வைத்துவிடுகிறார்.

தன் கணவனை கொலை செய்து உடலை குளிர்சாதன பெட்டியில் மறைத்து வைத்துவிட்டு எந்த ஒரு பதட்டத்தையும் வெளிக்காட்டாமல் ஒவ்வொரு நாட்களையும் கடந்து செல்வது திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், அதை நடிப்பின் மூலம் ரசிகர்களிடம் கைதட்டல் பெறுகிறார்.

இந்த ஜென்டில்வுமன் திரைப்படத்தில் கதாநாயகனாக ஹரி கிருஷ்ணன் நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஹரி கிருஷ்ணன், கடவுள் மீது அதிக பக்தி, நெற்றியில் பட்டை என்று நல்லவனாக இருந்தாலும், பெண்கள் விசயத்தில், பசுந்தோல் போத்திய பன்னாடை எனக் கூறும் அளவுக்கு பெண் பித்தனா வலம் வந்திருக்கிறார்.

இந்த ஜென்டில்வுமன் திரைப்படத்தில் மற்றொரு கதாநாயகியாக லாஸ்லியா நடித்திருக்கிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் லாஸ்லியா, தன் கதை பத்திரத்தை விழுந்து மிகச் சரியாக சிறப்பாக நடித்திருக்கிறார்.

கதாநாயகி லிஜோமோல் ஜோஸின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தாரணி, காவல்துறை ஆய்வாளர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜிவ் காந்தி, காவல்துறை இணை ஆணையராக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சுதேஷ், காவலர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வைரபாலன் என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சரியாக செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ் காத்தவராயன், அப்பார்ட்மெண்ட் க்குள் வைத்தே பல காட்சிகளை திரைப்படமாக்கியிருந்தாலும், கதாபாத்திரங்களின் மன போராட்டங்களை திரைப்படம் பார்க்கும் பார்வையாளர்கள் மனதில் பதியும் அளவிற்கு காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் சிறப்பு பின்னணி இசை கதைக்களத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் மிகச் சிறப்பாக பயணித்திருக்கிறார்.

பெண்கள் எந்த நிலைக்கு சென்றாலும், அவர்களை ஆண்கள் தங்களுக்கு கீழே தான் வைத்திருக்கிறார்கள், உள்ளிட்ட வசனங்கள் மூலம் பெண்ணியம் பேசினாலும், அதை கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் சேர்த்து கமர்ஷியலாக மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார் இயக்குநர் ஜோஸ்வா சேதுராமன்,

‘எமகாதகி’ திரை விமர்சனம்

தஞ்சை மாவட்டம் அருகில் அந்த ஒரு அழகிய கிராமத்தில் மேல் ஜாதியும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் சிலர், பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்களை கீழ் ஜாதியும் என்று எண்ணி அவர்களை எடுபிடி வேலைக்கு வைத்துக் கொள்வது அக்கிராமத்தில் பழக்கமாக இருந்து வருகிறது.

அந்த கிராமத்தின் முன்னாள் ஊர் தலைவர் மற்றும் கோவில் தர்மகர்த்தாவாக இருந்த, தனது மகன் வேறு ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் தன்னால் அந்த கிராமத்தில் தலைநிமிர்ந்து நடக்க முடியவில்லை என்று எண்ணி வருந்தி கொண்டிருக்கிறார்.

அந்த கிராமத்தில் தலைவராக இருக்கும் ராஜூ ராஜப்பன். அவருடைய மனைவி கீதா கைலாசம். இவர்களுக்கு ஒரு மகள் கதாநாயகி ரூபா கொடுவாயூர் ஒரு மகன் சுபாஷ் ராமசாமி இருக்கிறார்கள்.

சிறு வயது முதலே அவ்வப்போது மூச்சு விடுவதில் சிரமம் இருந்து வருகிறது கதாநாயகி ரூபா கொடுவாயூர். இதனால், இவர் சுவாச மருந்தை எடுத்துக் கொண்டு வருகிறார்.

ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.
மகன் சுபாஷ் ராமசாமிக்கு திருமணம் முடிந்து அவருடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.
மகன் சுபாஷ் ராமசாமி மற்றும் நண்பர்கள் சேர்ந்து ஊர் கோவிலில் இருக்கும் சாமியின் கிரீடத்தைத் திருடி தொழில் தொடங்கி, அந்த தொழிலும் நஷ்டத்தில் முடிந்து விடுகிறது.

இன்னும் இரு வாரத்தில் ஊர்த் திருவிழா நடைபெற இருப்பதால் ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன்.
மகன் சுபாஷ் ராமசாமிக்கு அவருடைய நண்பர்களும் அடமானம் வைத்த ஊர் கோவிலில் இருந்து எடுத்த சாமியின் கிரீடத்தைத் எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று ஓடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்தநிலையில், கடும் கோபத்துடன் வீட்டிற்கு வரும் ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன் தனது மனைவியுடன் சண்டை போட்டு அவரை கைநீட்டி அடித்து விட
அம்மாவை எதற்காக அடித்தீர்கள்.? என்று கேள்வியெழுப்ப ஊர் தலைவர் ராஜூ ராஜப்பன் கதாநாயகி ரூபா கொடுவாயூரை அடித்து விடுகிறார்.

இதனால், மனம் உடைந்த
கதாநாயகி கதாநாயகி ருபா கொடுவாயூர் அழுது கொண்ட தனது ரூமிற்கு சென்று விடுகிறார்.

இதனை தொடர்ந்து நடு இரவில் எழுந்த அம்மா கீதா கைலாசம், தனது மகள் ரூமுக்கு செல்ல அங்கு மகள் கதாநாயகி ருபா கொடுவாயூர் தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்ததைக் பார்த்து அதிர்ச்சியடைகிறார்.

கதாநாயகி ருபா கொடுவாயூர்
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட விஷயம் நம் கிராமத்திற்கு தெரிந்தால், குடும்ப கெளரவம் மற்றும் மனம் போய்விடும் மூச்சுத் திணறலால் கதாநாயகி ருபா கொடுவாயூர் இறந்து விட்டதாக குடும்பத்தினர் கூறிவிடுகின்றனர்.

கதாநாயகி ருபா கொடுவாயூர் இறந்துவிட்ட செய்தியறிந்து அந்த கிராமமே துக்கத்தில் மூழ்கி விடுகிறது.

இந்த நிலையில், இறுதி சடங்கு நடத்துவதற்காக கதாநாயகி ருபா கொடுவாயூர் உடலை கிராமத்துஇளைஞர்கள் சிலர் தூக்க முயல, இறந்த உடல் கனக்க, அவர்களால் அந்த உடலை தூக்க முடியவில்லை.

இருந்த உடல் அசைவதைக் கண்டு இளைஞர்கள் அனைவரும் பயந்து ஓடுகின்றனர்.

கதாநாயகி ருபா கொடுவாயூர் உடலை வீட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்ல முடியாத அளவிற்கு தடுத்து நிறுத்தும் அமானுஷ்ய சக்தி யார்? கதாநாயகி ருபா கொடுவாயூர் தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டாரா.? வேறு யாராவது கொலை செய்து தூக்கில் மாட்டி விட்டார்களா? என்பது தான் இந்த எமகாதகி திரைப்படத்தின் மீதிக்கதை

இந்த “எமகாதகி” திரைப்படத்தில் கதாநாயகனாக நரேந்திர பிரசாத், நடித்திருக்கிறார்

அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நரேந்திர பிரசாத்,
மிகவும் கனகச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

அறிமுக நடிகராக நரேந்திர பிரசாத் மிக அருமையாக கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்ததால் நம்மால் ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது.

இந்த எமகாதகி திரைப்படத்தில் கதாநாயகியாக ரூபா கொடுவாயூர் நடித்துள்ளார்.

காதல், அழுகை, கோபம், குறும்புத்தனம் என பல காட்சிகளில் தனது முக பாவனைகளை மிக அழகான நடிப்பை கொடுத்து லீலா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.

அதிலும், பிணமாக இருக்கும் காட்சியில் அழகாகவும் அருமையாகவும் நடித்திருக்கிறார்.

கதாநாயகி ரூபா கொடுவாயூர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுபாஷ் ராமசாமியும் அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜூ ராஜப்பன் ஊர் தலைவர் கதாபாத்திரத்தில் மிக அருமையாக பொருந்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களுமே மிகவும் இயல்பாகவே தங்களது கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்து முடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்க் இவரின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் ஜெசின் ஜார்ஜின் இசையில் மூன்று பாடல்களும் அருமை பின்னணி இசை கதையோடு பயணிக்க வைத்திருக்கிறார்.

தமிழ் திரைப்பட உலகில் வித்தியாசமான கதைகளத்துடன் அனைவரும் திரும்பி பார்க்கும்படியான ஒரு படைப்பு படைத்திருக்கிறார் இயக்குனர் பெப்பின் ஜார்ஜ் ஜயசீலன்.

நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ பிரம்மாண்டமாகத் துவங்கியது !!

1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்பட பூஜை !!

100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம்!!

தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது.

1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் … உட்படப் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் (Vels Film International Limited) நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே. கணேஷ், மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் (Ivy Entertainment) இணைந்து, முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக, இப்படத்தை 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கிறார்கள்.

தனது தனித்துவமான காமெடி எண்டர்டெயினர் படங்கள் மூலம், திரையுலகைச் செழிக்க வைப்பதுடன், ரசிகர்களைத் தொடர்ந்து மகிழ்வித்து வரும் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி. இப்படத்தை இயக்குகிறார். இப்படம் அழுத்தமான கதையுடன், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் காமெடி எண்டர்டெயினராக உருவாகவுள்ளது. இயக்குநர் சுந்தர் சி, நயன்தாரா இருவரும் முதல்முறையாக இணைந்திருப்பது, ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நயன்தாரா முதன்மை வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் துனியா விஜய், ரெஜினா கஸண்ட்ரா, யோகிபாபு, ஊர்வசி, அபிநயா, ராமச்சந்திர ராஜு, அஜய் கோஷ், சிங்கம்புலி, விச்சு விஸ்வநாத், இனியா, மைனா நந்தினி ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைக்கிறார். தொழில் நுட்ப குழுவில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு, ஃபென்னி ஆலிவர் எடிட்டிங், வெங்கட் ராகவன் வசனம், கலை இயக்கம் பொன்ராஜ், சண்டைப்பயிற்சி ராஜசேகர் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.

பரபரப்பான ஆக்சன், வலுவான கதைக்களம், நகைச்சுவை கலந்து ஒரு அற்புதமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது.