We at SMCA take immense pride and delight to present the 47th Annual Autumn Festival “Sharodotsav” from 28th September to 2nd October, 2025. SMCA is a body registered under the Tamil Nadu Societies Registration Act,
While we inaugurate the Annual Autumn festival by invoking the Goddess of Shakti – Maa Durga, we add to the grandeur with gala events Musical Nights, Stage performances of renowned artists and members, Food-fest, various contests, lucky draw and many more, over a period of 5 days. This mega event gives space for branding products visible to a large gathering from various strata of society and a souvenir that is read by 3000+ patrons, as experienced over the years. We stay relevant throughout the year with our charitable initiatives under SMCA CHARITABLE TRUST, registered as a Public Charitable Trust. Over four decades our trust has been offering support to individuals and organizations in the areas of – Annadanam, Education, Health and Environment. It has been involved in the enhancement of socio-economic living conditions of the marginalized population of the society. The Sharodotsav at SMCA brings together people from all walks of life-cultures, communities and states, into a bond of friendship and goodwill instilling the spirit of harmony and humanity in the process. We also serve free food on 3 days – Saptami, Ashtami and Navam for about 10,000 people. This event also coincides with our annual fundraising initiative for the Charitable Trust and other social activities of SMCA.
Chief Guests- Rtd. Chief Justice of Manipur and Agartala and Mr Murlidharan and Mr. Senthil Kumar- Madras High Court Judge.
SMCA President Kausik Ganguly Secretary Sandip Dey Vice -Presidents Bhaskar Sain and Debashish Mukherjee. Dr Anita Ramesh, Executive Committee Member was also present on the occasion.
இந்திய தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து காந்தாராவின் பாரம்பரியத்தை சிறப்பு கவர், பட அஞ்சல் அட்டைகள் & கேன்சலேஷன் ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்துள்ளன!!
இந்தியா தபால்துறை, கர்நாடக அஞ்சல் வட்டாரம், ஹொம்பாலே பிலிம்ஸ் இணைந்து, கர்நாடகாவின் செழுமையான பாரம்பரிய கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில், ஒரு சிறப்பு கவர், இரண்டு பட அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்பை வெளியிட்டுள்ளது. தேசிய விருது பெற்ற காந்தாரா திரைப்படத்தில் வலிமையாக வெளிப்பட்ட புனிதமான பூதகோலா மரபை, இந்த வெளியீடு சிறப்பித்துள்ளது.
செப்டம்பர் 22-ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஊடகத்தினரும் கர்நாடக அஞ்சல் வட்டார பிரதிநிதிகளும் பங்கேற்றனர். காந்தாரா படத்தின் எழுத்தாளர், இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி, கர்நாடக அஞ்சல் வட்டாரத்தின் இயக்குநர் (முகாம்) ஸ்ரீ சந்தேஷ் மகாதேவப்பா, பெங்களூரு GPO முதன்மை அஞ்சல் மாஸ்டர் ஸ்ரீ H.M. மஞ்சேஷா, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர் ஆகியோர் இணைந்து இந்த சிறப்பு தபால் அட்டைகளை வெளியிட்டனர்.
பூதகோலா காட்சியுடன் வடிவமைக்கப்பட்ட கேன்சலேஷன் ஸ்டாம்ப், சேகரிப்பதற்குரிய அரிய வெளியீடாகவும், கர்நாடகாவின் வாழும் மரபுகளை பிரதிபலிக்கும் பெருமையான நினைவுச் சின்னமாகவும் அமைந்துள்ளது.
இந்நிகழ்வில் பேசிய ரிஷப் ஷெட்டி, “காந்தாரா எங்கள் மரபின் வேர்களையும் வழிபாடுகளையும் கொண்டாடும் விதமாக உருவாக்கப்பட்டது. இந்திய தபால் துறை இந்த பயணத்தை சிறப்பு கவர் மற்றும் அஞ்சல் அட்டைகள் மூலம் கௌரப்படுத்தியுள்ளது என்பது பெருமை. இது படத்திற்கான அங்கீகாரம் மட்டுமல்ல, நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் மக்களுக்கான அங்கீகாரமும் ஆகும்” என்றார்.
சிறப்பு அங்கீகாரமாக, “காயகவே கைலாச” என்ற சொற்றொடரை ரிஷப் ஷெட்டி ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி கையெழுத்திட்டார். உழைப்பின் புனிதத்தையும் பக்தியையும் பிரதிபலிக்கும் இந்த நிலையான தத்துவம் காந்தாரா படத்தின் கதையிலும் பிரதிபலிக்கிறது.
தயாரிப்பாளர் விஜய் கிராகந்தூர், “இந்திய தபால் துறையில் இந்த அங்கீகாரம் படத்திற்கும் மட்டுமல்ல, கர்நாடகாவின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்திற்கும் ஒரு பெரிய கௌரவம். இது எங்களுக்கெல்லாம் மிகவும் பெருமையான தருணம். இப்படியான முயற்சிகள் எங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல உதவும். காந்தாரா எங்கள் வேர்களை இவ்வளவு பெருமைக்குரிய மேடையில் வெளிப்படுத்தும் ஊடகமாக மாறியது எங்களை மிகவும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது” என்றார்.
சிறப்பு கவர், அஞ்சல் அட்டைகள் மற்றும் கேன்சலேஷன் ஸ்டாம்ப் ஆகியவை, மனிதன், இயற்கை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் ஆழ்ந்த ஆன்மீக இணைப்பை வெளிப்படுத்திய காந்தாரா படத்திற்கான ஒரு அஞ்சலியாகும். இந்த முயற்சியின் மூலம், இந்தியா தபால் துறை மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், கர்நாடகாவின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தவும், ஒற்றுமை, நம்பிக்கை, கலாச்சார மரியாதை போன்ற காலத்தால் அழியாத மதிப்புகளை மக்களிடம் நினைவூட்டவும் முன்னெடுத்து சிறப்பித்துள்ளன.
இந்த வெளியீடு, இந்தியா தபால் துறை பாரம்பரியத்தையும், காந்தாரா படத்தின் சினிமா பாரம்பரியத்தையும் இணைக்கும் பெருமையான தருணமாகும். கலாச்சாரத்தையும் சமூகத்தையும் இணைக்கும் காலத்தால் அழிக்க முடியாத நம் வேர்களை கௌரவிக்கும் அடையாள முயற்சியாக இது திகழ்கிறது.
MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் S. சாம் இயக்கத்தில், புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, மனதை இலகுவாக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில், ஃபேண்டஸி கலந்த கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் “யோலோ”.
வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்வில் பேசியவர்கள்
தயாரிப்பாளர் மகேஷ்: எங்கள் படத்தை வாழ்த்த வந்த திரை ஆளுமைகளுக்கு நன்றி. படம் இப்போது தான் ஆரம்பித்தது போல உள்ளது, முடிந்து இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டது. அமீர், சமுத்திரக்கனி சார் நிறைய ஆதரவு தந்தார்கள். ஒளிப்பதிவாளர் சூரஜ் பற்றி ஏன் அதிகம் ப… [12:47 pm, 30/8/2025] Sandy Cine Pro Aim: இயக்குநர் ஆர். கே. செல்வமணி இந்த விழாவிற்கு எதுவும் தெரியாமல் தான் வந்தேன். வந்த பிறகுதான் தெரிகிறது இது என் குடும்ப விழா என்று. ஹீரோ தேவ் எனக்குச் சின்ன வயதிலிருந்து தெரியும். அவரை எனக்கு பூர்ணேஷ் எனத்தான் தெரியும், படத்திற்காக தேவ் என மாறியுள்ளார்.அவரது மாமா டெல்லி பாபு, உலகத்தின் மிகச் சிறந்த மனிதர்களில் ஒருவராக இருந்தார். அவருக்குத் தீமையே தெரியாது, நன்மை தான் செய்வார். மிகச் சிறந்த இயக்குநர்களை, மிகச் சிறந்த படைப்புகளை உருவாக்கிய தயாரிப்பாளர். காலம் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது. அவர் தன் மகனை ஹீரோவாக்க வேண்டுமென்று பல முறை சொல்லியுள்ளார். இன்று அந்த ஆசை நிறைவேறியுள்ளது மகிழ்ச்சி. அவருடைய ஆசி உனக்கு எப்போதும் உண்டு.
“YOLO” என்றால் என்னவென்று தெரியவில்லை. இங்கு வந்த பிறகுதான் கேட்டேன் — You Only Live Once என்றார்கள். உண்மை தான், நாம் ஒரு முறை தான் வாழ்கிறோம், அதை அழகாக வாழ்வோம்.
இந்த படத்தில் எல்லோரும் இளமையாக இருக்கிறார்கள். எல்லோரும் தங்கள் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள். சகிஷ்னா வரும்போதே 6 பாடலுடன் வந்துள்ளார். சாம், சமுத்திரகனி, அமீர் மாதிரி இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறார், அதுவே அவர் திறமையைச் சொல்லும்.
எனக்கு முதல் படத்துக்குச் சம்பளம் ₹14,000 தான். ஆனால் அடுத்த படத்துக்குச் சம்பளம் ஒரு கோடி ரூபாய். அதனால் முதல் படத்துக்குச் சம்பளத்துக்கு அலையாதீர்கள். முதல் படத்தோட பட்ஜெட் என்னவோ அது தான் உங்கள் சம்பளம். ஏனெனில் என்னை நம்பி ஒரு தயாரிப்பாளர் 1 கோடி போடுகிறார் என்றால் அது தான் என் சம்பளம். அப்படி இயக்குநர்கள் நீங்கள் நினைத்தால்தான் அடுத்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்க முடியும். இப்படத்திற்கு உழைத்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள். நன்றி, வணக்கம்.
இயக்குநர் அமீர் இந்த விழாவில் கலந்து கொண்ட எங்களுக்கெல்லாம் ஒரு காரணம் இருக்கிறது. ஆனால் பெருந்தன்மையோடு காரணமில்லாமல் கலந்து கொண்ட அண்ணன் ஆர். கே. செல்வமணி அவர்களுக்கு நன்றி.
புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுக்கு “கேப்டன்” எனும் பெயர் நிரந்தரமாக அமையக் காரணமானவர். அவருடைய மறைவுக்கு பின்னாடியும் ஓடிய கேப்டன் பிரபாகரன் படத்தை தந்தவர். இத்தனை ஆண்டுகள் கழித்தும் இன்றைக்கும் திரையிடப்பட்டு ஒரு மாபெரும் வெற்றி அடைகிறது என்றால் அதற்குக் காரணம் அந்த படத்தின் தரம்.
என்னுடைய முதல் படம் மௌனம் பேசியது முதல் இப்போ வரைக்கும் நிறைய அசிஸ்டன்ட் டைரக்டர்ஸ் என்கிட்ட இருந்து வெளியில் போயிருக்கிறார்கள். அதில் பாதி பேரின் பெயரே எனக்கு தெரியாது. “சார், உங்களோடு தான் ஒர்க் பண்ணேன்” என சொன்னால் “அப்படியா, சரி ஓகே” அப்படின்னு சொல்வேன். ஏன்னா ஒரே ஒரு ஷெட்யூலில் மட்டும் தான் ஒர்க் பண்ணியிருப்பான். அடுத்த ஷெட்யூலில் இருக்க மாட்டான். அப்படிப்பட்டவர்கள் ஒரு 30–40 பேர் இருக்கிறார்கள். ஆனால் வெற்றி பெற்றவர்கள் மிகக் குறைவு தான். அதில் சாம் ஒருவர்.
எல்லாரும் கனி பற்றி தான் சொன்னார்கள். அவன் இளகிய மனசுக்காரன். பருத்திவீரன் படப்பிடிப்பில் யாரையும் திட்டக்கூட மாட்டான். இப்போது அவனை நடிகனாகப் பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. அவனுடைய வளர்ச்சிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தப் படத்தின் ஹீரோ பற்றி எனக்கு பெருசா ஒன்றும் தெரியாது. பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள்: “ஊராம் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானா வளரும்?” என்று. அவருடைய மாமா நிறைய புதிய இயக்குநர்களை அறிமுகம் செய்திருக்கிறார். மரகத நாணயம் எடுத்த சரவணன், பேச்சலர் எடுத்த சதீஷ் — இவர்களை எல்லாம் அறிமுகப்படுத்தியதால் தான் இன்று மகேஷ் என்ற தயாரிப்பாளர் மூலமாக தேவ் ஹீரோவாகி இருக்கிறார்.
தேவ் தன் அப்பா அம்மா இந்த மேடையில் இல்லை, அவர்கள் இருக்கனும்னு ஆசைப்பட்டேன்னு சொன்னார். வாழ்க்கை அப்படி நம்ம நினைப்பது போல நடக்காது. அப்படி நினைத்த மாதிரி நடந்ததுன்னா அது வாழ்க்கையே இல்லை. பொதுவாக சொல்வார்கள் — நீ போகும் பாதையில் இடையூறு இல்லையென்றால் அது உனக்கான பாதை இல்லை. நீ போட்ட பாதையில் இடையூறு இருந்தால் அதைச் சரி பண்ணினால்தான் அது உன் பாதையாக இருக்கும்.
நிச்சயமாக இந்த படம் உங்களுக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நம்புகிறேன். சாம் என்கிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான், கனிகிட்டயும் ஒர்க் பண்ணியிருக்கான். ஆனா இருவரின் பாணியையும் பின்பற்றாமல் புதுசாக படம் எடுத்திருக்கான். ஒவ்வொன்றையும் கவனமாகச் செய்துள்ளான். டிரெய்லரில் அது தெரிகிறது. படத்தில் பணிபுரிந்த ஒவ்வொருவரும் நம்பிக்கையோடு பேசினார்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படம் வெற்றி பெற பிரார்த்திக்கிறேன். நன்றி.
இயக்குநர் சாம் முதலில் என் அப்பா அம்மாவுக்கு நன்றி. அவர்களால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன்.அமீர் சார் ஒரு சிங்கம் மாதிரி. அவருடன் வேலை செய்வது சவாலானதாக இருந்தது. அவர் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் பணத்தை வீணாக்கக் கூடாது என்பதை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன். அவரால்தான் புதுமுகங்களை வைத்து படம் எடுக்க தைரியம் வந்தது.
நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அமீர் சாரும், கனி சாரும் என்னை ஊக்கப்படுத்தினார்கள். அவர்கள் எனக்கு இப்போதுவரை நிறைய உதவி செய்திருக்கிறார்கள். கனி சார் எந்த ஒரு நொடியையும் வீணாக்க மாட்டார். அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டேன். “எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” என்பார். அவர் இந்தப் படத்திற்குப் பெரிய ஆதரவாக இருந்தார்.
எங்கள் அழைப்பை மதித்து வந்த ஆர். கே. செல்வமணி சாருக்கு நன்றி. எனக்கு இப்பட வாய்ப்பை தந்த மகேஷ் சாருக்கு நன்றி. அவர் பல புதுமுகங்களை அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தார். அதுபோலவே தேவை லீடாக அறிமுகப்படுத்தினார்.
ஆகாஷ் ஒரு அப்பாவி பையனாக நன்றாக நடித்துள்ளார். பலரைத் தேடி கடைசியாக தேவிகாவை ஒப்பந்தம் செய்தோம். அவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். என் நண்பன் ராம் — கல்லூரியிலிருந்தே ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். இன்ஸ்டிடியூட்டில் சூரஜ் உடன் பணிபுரிந்திருக்கிறேன். நான் கேட்டதைச் சிறப்பாகச் செய்து தந்துள்ளார்.சகிஷ்னா இந்தப் படத்தில் 6 வெவ்வேறு பாடல்களை மிகச் சிறப்பாக உருவாக்கியுள்ளார்.எடிட்டர் ரமேஷ் நேரடியாக வந்து எனக்கு உதவினார். தயாரிப்பில் நாகராஜ் புரொடக்ஷன் மேனேஜர் பெரிய ஆதரவாக இருந்தார்.என் உதவி இயக்குநர்கள் குழு என்னைவிட வேகமாக இருப்பார்கள். ரகு மாஸ்டர், டேஞ்சர் மணி மாஸ்டர் இருவருக்கும் நன்றி.பாடலாசிரியர்கள் சூப்பர் சுப்பு, முத்தமிழ், சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ் — இவர்களின் வரிகள் படத்துக்கு வலு சேர்த்துள்ளன. படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. படவா கோபி பெரிய ஆதரவாக இருந்தார். நன்றி.
இது இளமையான எண்டர்டெயின்மென்ட் படம். நிச்சயம் படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்தும். “YOLO” செப்டம்பர் 12 அன்று திரைக்கு வருகிறது.மீடியா நண்பர்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டும். நன்றி.
இயக்குநர், நடிகர் சமுத்திரகனி இறைவனுக்கு நன்றி. மிக மகிழ்ச்சியான தருணம். என் படத்தை விட அதிக சந்தோசமாக உள்ளது.அமீர் அண்ணனுக்கு நன்றி சொல்ல வேண்டும். பருத்திவீரன் படத்தில் தான் நானும் சாமும் சந்தித்தோம். அமீர் அண்ணன் எங்களிடம் நிறைய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
சாமுக்கும் எனக்கும் இனிமையான பயணம். அண்ணனிடமிருந்து வந்த பிறகு “இவனை விட்டு விடக்கூடாது” என நினைத்து என்னுடன் இணைத்துக் கொண்டேன். அவன் எனக்காக நிறையச் செய்துள்ளான். இந்த மேடை அவனுக்கு ரொம்ப லேட்டாக கிடைத்துள்ளது. அதனால் இந்தப் படத்திற்காக அவனுடன் நிற்க வேண்டும் என நினைத்தேன்.
இந்தப் படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும். ஏனெனில் அவ்வளவு உழைப்பைச் செய்திருக்கிறார்கள். படத்தில் உண்மையும், உணர்வும் இருக்கிறது. தேவ் கவலைப்படாதீர்கள், உங்கள் அப்பா அம்மா மாமா ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு. அவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள். இந்த திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நண்பன் மகேஷ் இந்தக் குழுவின் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி. இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள்.
படத்தின் குறிப்பு
நாம் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நிகழ்வு வாழ்க்கையில் நடந்தால் — அதுவே இந்தப் படத்தின் ஃபேண்டஸி மையம். மனதை இலகுவாக்கி, முகத்தில் புன்னகை மலரச் செய்யும் அழகான காதல் திரைப்படமாகவும், இன்றைய தலைமுறை வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாகவும், ரொம்-காம் ஜானரில் கலக்கலான கமர்ஷியல் எண்டர்டெயின்மென்ட்டாகவும் இப்படம் உருவாகியுள்ளது.
இயக்குநர் அமீர் மற்றும் சமுத்திரகனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய S. சாம் இப்படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர்கள்
தேவ்
தேவிகா
படவா கோபி
ஆகாஷ் பிரேம்குமார்
பிரவீன்
நித்தி பிரதீப்
திவாகர்
யுவராஜ்
விஜே நிக்கி
தீபிகா
தீப்சன்
சுப்ரு
சுவாதி நாயர்
பூஜா ஃபியா
சுபா கண்ணன்
கலைக்குமார்
தொழில்நுட்பக் குழு
தயாரிப்பு நிறுவனம் – MR Motion Pictures
தயாரிப்பாளர் – மகேஷ் செல்வராஜ்
இயக்கம் – S. சாம்
ஒளிப்பதிவு – சூரஜ் நல்லுசாமி
இசை – சகிஷ்னா சேவியர்
எடிட்டிங் – A. L. ரமேஷ்
கலை இயக்கம் – M. தேவேந்திரன்
கதை – ராம்ஸ் முருகன்
ஸ்டண்ட் – டேஞ்சர் மணி
நடனம் – கலைக்குமார், ரகு தாபா
திரைக்கதை – S. சாம், ராம்ஸ் முருகன், பண்பு செல்வன், மகேஷ் செல்வராஜ்
பாடல்கள் – முத்தமிழ், சூப்பர் சுப்பு, சதீஸ்காந்த், சகிஷ்னா சேவியர், மகேஷ் செல்வராஜ்
டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜின் -தி பெட் திரைப்படத்தில் முகேன் ராவ், பவ்யா தரிகா, டத்தோ ராதா ரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்’ ரவி, வினோதினி வைத்தியநாதன், ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு விவேக்- மெர்வின் இசையமைத்திருக்கிறார்கள். படத்தொகுப்பு பணிகளை தீபக் கவனிக்க கலை இயக்கத்தை வி. எஸ். தினேஷ்குமார் மேற்கொண்டிருக்கிறார். காமெடி ஹாரர் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை டி ஆர் பாலா மற்றும் அனில் குமார் ரெட்டி தயாரிப்பில் வெங்கடாச்சலம் இணைத் தயாரிப்பில் ஃபேரி டேல் பிக்சர்ஸ், ஏ ஆர் டூரிங் டாக்கீஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் விஜிவி கிரியேஷன்ஸ் மற்றும் சினிமாரஸா புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து வழங்குகின்றன.
வரும் 30ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘ ஜின் -தி பெட்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் படக்குழுவினருடன் நீதியரசர் எஸ் கே கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரி பன்னீர்செல்வம் ஐபிஎஸ், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு, தயாரிப்பாளர் கேயார், ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இயக்குநர் சங்க தலைவர் ஆர். வி. உதயகுமார் , செயலாளர் பேரரசு , துணைத் தலைவர் ஆர் . அரவிந்தராஜ், கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவரையும் தமிழ்நாடு திரைப்பட கல்லூரியின் முதல்வரும் இயக்குநருமான திருமலை வேந்தன் வரவேற்றார்.
ஃபெப்சி தலைவர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநரின் தந்தையான திருமலை வேந்தன் திரைப்படக் கல்லூரியில் எனக்கு ஜூனியர். அவருடன் எனக்கு 40 ஆண்டுகால நட்பு இருக்கிறது. அவருடைய வரவேற்புரையும் , வாழ்த்துரையும் சுருக்கமாகவும் , சிறப்பாகவும் இருந்தன.
இயக்குநரின் தாயாரான ராஜேஸ்வரி அம்மாவை பார்த்தால் பலருக்கு பயம். உண்மையில் அவர்தான் புரட்சிகரமான போராளி. அவருடன் பழகத்தொடங்கினால் ஒன்று எதிரியாகி விடுவார்கள், இல்லையென்றால் நட்பாகி விடுவார்கள். ஆனால் அவர் ஒருபோதும் யாருக்கும் துரோகியானதில்லை.
இப்படத்தின் பாடல்களையும் முன்னோட்டத்தையும் பார்த்தபோது தமிழ் திரையுலகுக்கு அற்புதமான திறமை மிக்க குழு கிடைத்திருப்பதாகவே நினைக்கிறேன்.
நாங்கள் எல்லாம் நாயகியை தேர்வு செய்யும்போது அந்தப் பெண்ணின் புன்னகையையும், கண்களையும் மட்டும் தான் கவனிப்போம். அந்த வகையில் இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் பவ்யாவிடம் அழகான புன்னகை இருக்கிறது. பார்ப்பதற்கு சமந்தா போல் இருக்கிறார். அவருக்கு தென்னிந்திய திரைப்படத்துறையில் சிறந்த எதிர்காலம் இருக்கிறது.
வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறேன். இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாக கதையை கேளுங்கள். நடிகர்களின் மேலாளர்களும், உதவியாளர்களும் கதை கேட்க தொடங்கியதால் தான் சினிமா சீரழிகிறது.
இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை. எப்போது ஒரு நாயகனுக்கும்.. நாயகிக்கும் இயக்குநருக்கும் இடையே ஒரு புரிதலும், நட்பும் இல்லையோ, அப்போதே அந்தப் படம் தோல்வியை தழுவுகிறது. இதை என் படத்தினை ஆய்வு செய்து தெரிந்து கொண்டிருக்கிறேன்.
தயாரிப்பாளர் கேயார் ஒரு ஜீனியஸ். அவர் நினைத்தால் தற்போது திரைத்துறையில் நடைபெற்று வரும் பிரச்சனைக்கு தீர்வை சொல்ல முடியும். அவர் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது.
இன்றைய தேதியில் ஒரு நாளைக்கு திரையரங்குகளில் ஏழு முதல் எட்டு லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. இதன் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஒரு மாதத்திற்கு அறுபது கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இவை அனைத்தும் படத்தின் தயாரிப்பாளர்கள் மூலம் தான் அவர்களுக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த வருமானம் தயாரிப்பாளர்களுக்கு கிடைக்கிறதா என்றால் இல்லை. படம் ஓடவில்லை என்றால் தயாரிப்பாளருக்கு மட்டும்தான் நஷ்டம் ஏற்படுகிறது.
என்னுடைய தயாரிப்பாளர் நண்பர் ஒருத்தர் ‘மத கஜ ராஜா’ படம் வெளியாகி ஐந்து மாதங்கள் ஆகிவிட்டான, இன்னும் அதற்கான வசூல் முழுமையாக வந்து சேரவில்லை என குறிப்பிட்டார். இதுதான் தயாரிப்பாளர்களின் இன்றைய நிலை. அதனால் தயாரிப்பாளர்கள் சங்கம் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி நல்லதொரு முடிவை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும். திரையுலகத்தில் தொழிலாளர்கள் தான் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார்கள். தயாரிப்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் நீடிப்பதில்லை. சில தயாரிப்பாளர்கள் மட்டுமே 30 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள்.
எங்களுடைய பெப்சி பொதுக்குழுவில் தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்களாகிய நாம் நன்றாக இருக்க முடியும் என்று சொல்லி இருக்கிறேன். தற்போதுள்ள தயாரிப்பாளர்களில் 80 சதவீதத்தினர் தொழிலாளர்களை சிறப்பான மரியாதையுடன் நடத்துகிறார்கள். அதனால் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நாங்களும் பிரார்த்திக்கிறோம்.
தயாரிப்பாளர் கேயார் ஒரு ஃபார்முலாவை வைத்திருக்கிறார். அதனைப் பயன்படுத்தி தற்போது நிலவும் பிரச்சனைகளுக்கு அவர் தீர்வு காண வேண்டும். நாங்கள் தவறு
செய்திருந்தாலும் அதனை அவர் சுட்டிக் காட்டலாம். நாங்கள் திருத்திக் கொள்ள தயாராக இருக்கிறோம்.
படத்தின் இயக்குநர் பாலா எதிர்காலத்தில் சிறந்த இயக்குநராக வருவார்.
பெற்றெடுத்த குழந்தையை கையில் ஏந்திக் கொள்ளும் போது கிடைக்கும் உணர்வை போல் இசை இருக்க வேண்டும். அப்படித்தான் கதையும் இருக்க வேண்டும். இப்போதுள்ள ஹீரோக்களுக்கு கதையை சொல்ல வேண்டும் என்றால் மெயிலில் அனுப்புங்கள் என்கிறார்கள். இது குழந்தையை மெயிலில் அனுப்புவது போல் இருக்கிறது. கதையை இயக்குநர் விவரிக்கும் போது தான் எதிரில் இருப்பவர்கள் கதையில் எந்த தருணத்தை ரசிக்கிறார், எதனை ரசிக்கவில்லை என்பதை இயக்குநரால் தெரிந்து கொள்ள முடியும். கதையை மெயிலில் அனுப்ப சொன்னால் அது கடினமானது. முதலில் கதையை ஆங்கிலத்தில் எப்படி மொழியாக்கம் செய்வது என்று யோசிக்க வேண்டும்.
இதுவரை பேய் படம் என்றால் ஒரு பயம் இருந்தது. ஆனால் அந்த பேயை ஒரு செல்லப்பிராணியாக மாற்றி அதனை வளர்க்கலாம் என்று இந்த படம் சொல்கிறது. அதனால் இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும்,” என்றார்.
ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு பேசுகையில், ”என்னுடைய பெற்றோர்கள் முதலில் சென்னையில் தான் வணிகம் செய்தார்கள். அதில் நஷ்டம் ஏற்பட்டதும் சொந்த ஊருக்கு திரும்பி விட்டார்கள். நான் முதன் முதலாக 19 வயதில் சென்னைக்கு வந்தபோது, எனக்கு அறையை கொடுத்து, உணவளித்து, தினசரி ஊதியமும் கொடுத்து, அவருடைய இயக்கத்தில் வேலை செய்வதற்கான வாய்ப்பு கொடுத்து ஆதரித்தவர் டி ஆர் பாலா. என் பின்னணி தெரியாமல் என்னிடம் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று கண்டுபிடித்தவர் டி ஆர் பாலா. இவர் திறமையான இயக்குநர். இவர் இதற்கு முன் ‘தேர்ட்டீன்’ என்ற குறும்படத்தை இயக்கியிருக்கிறார். இவருடைய வாழ்வியலை மையப்படுத்தி ‘சென்னை பிரம்மாக்கள்’ என்ற ஒரு குறும்படத்தை நான் இயக்கினேன். இதன் பிறகு எங்களுடைய நட்பு இன்று வரை தொடர்கிறது. அதன் பிறகு தவிர்க்க முடியாத காரணத்தினால் ஆன்மீகத்தின் பக்கம் என்னுடைய கவனம் திரும்பியது.
படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனது நண்பர் டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஜின் -தி பெட்’ திரைப்படத்திற்கு உங்களது ஆதரவை வழங்குமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் ஆர். அரவிந்தராஜ் பேசுகையில், ”16 குட்டி சாத்தான்களுக்கு தலைவர் ஒரு பூதம். 16 பூதத்திற்கு தலைவர் ஒரு பேய். 16 பேய்களுக்கு தலைவர் ஒரு ஜின். என நான் வாசித்திருக்கிறேன். இந்த ‘ஜின்’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது, எனக்கு ‘பட்டணத்தில் பூதம்’ திரைப்படம் நினைவுக்கு வந்தது. எனவே இந்தத் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெறும்.
பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ள திரைப்படங்கள் வந்து நாளாகி விட்டது. அதுவும் குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒரு திரைப்படம் வருகிறது என்றால் அது வரவேற்கக் கூடியது. இன்றைக்கு குழந்தைகள் பேய் படங்களை பார்த்து பேயை ரசிக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் கேயார் பேசுகையில், ”ஒரு திரைப்படத்திற்கு தலைப்பு முக்கியம். ஒரு தலைப்பு வைத்தால் அந்தத் தலைப்பு அனைத்து தரப்பினரையும் சென்றடைய வேண்டும். தற்போது ஓ டி டியில் அனைத்து மொழியினரும் படத்தை பார்ப்பதால் அவர்களுக்கும் பிடிக்கும் வகையில் படத்தை தலைப்பை வைக்க வேண்டியதிருக்கிறது. இதையெல்லாம் நன்றாக சிந்தித்து, இந்தப் படத்திற்கு இயக்குநர் டி ஆர் பாலா ‘ஜின்’ என்று பெயர் வைத்ததை பாராட்டுகிறேன்.
இப்படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பார்த்தேன். பார்த்தவுடன் அதன் தரம் புரிந்தது. ஹீரோ-ஹீரோயின் காம்பினேஷன் சூப்பராக இருந்தது. ஜின் என்பது புது கான்செப்ட். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ‘ஈ டி’ என்றொரு படம் வந்தது. அதை அடிப்படையாக வைத்து தான் ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ உருவானது. அந்த வகையில் குழந்தைகளை கவரும் வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘ஜின்’.
இப்படத்தின் ஆடியோ உரிமை, டிஜிட்டல் உரிமை என அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு விட்டது என கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த திரைப்படம் வெளியாவதற்கு முன்பே வெற்றியை பெற்றிருக்கிறது. எந்த அளவிற்கு வெற்றியை பெறுகிறது என்பதை 30ம் தேதி முதல் திரையரங்குகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இந்தப் படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா லோகேஷ் கனகராஜ், நெல்சன் போல் முன்னணி நட்சத்திர இயக்குநராக வருவார். அந்த அளவிற்கு திறமைசாலியாக இருக்கிறார். அது படத்தின் முன்னோட்டத்திலேயே தெரிந்து விட்டது,” என்றார்.
இணை தயாரிப்பாளர் ராகவேந்திரா பேசுகையில், ” எனக்கு சினிமா மீது ஆசை இருக்கிறது. படத்தை தயாரிக்கலாம் என்று நினைத்தபோது இப்படத்தின் கதை கிடைத்தது. படத்தின் கதை பிடித்து போனதால் இணை தயாரிப்பாளராக இந்த குழுவுடன் இணைந்தேன்.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்திருப்பது ஒரு கதை. ஆனால் படத்தில் மற்றொரு கதையும் உண்டு. அது சிறப்பானதாக இருக்கும். இது என்னுடைய முதல் படம். இவ்வளவு சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
இப்படத்தின் மூலம் இயக்குநருக்கு சிறப்பான எதிர்காலம் கிடைக்க வேண்டும், கிடைக்கும் என நம்புகிறேன். இந்த திரைப்படத்தை திரையரங்கத்தில் பத்துக்கு மேற்பட்ட முறை பாருங்கள். பலருக்கு பகிருங்கள், ஆதரவிற்கு நன்றி,” என்றார்
தயாரிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி வேந்தன் பேசுகையில், ”ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் மகன் என்னிடம் ‘ஜின்’ என்றொரு தலைப்பை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ய வேண்டும் என கேட்டார். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்கத்தில் பேசி ஜின் என்ற தலைப்பை பதிவு செய்தேன். அதன் பிறகு இந்த ஜின் என் குடும்பத்தை சின்னாபின்னமாக்கிவிட்டது. என் மகன் இந்த டைட்டிலையும், கதையையும் வேறொரு நிறுவனத்திற்கு சொல்கிறார், நன்றாக இருக்கிறது என சொன்னார்கள் ஆனால்
மேற்கொண்டு எந்த பணியும் நடைபெறவில்லை. அதன் பிறகு முன்னணி பட தயாரிப்பு நிறுவனம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர் நடிப்பதற்காக இந்த டைட்டிலும் கதையையும் சொன்னார். கதை விவாதம் எல்லாம் நடந்தது. ஆனால் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இந்த தருணத்தில் இப்படத்தின் டைட்டில் வேறு ஒரு நிறுவனத்திற்கு சொந்தமானது. அதன் பிறகு அந்த டைட்டிலை அந்த நிறுவனத்திடம் கேட்டோம். அவர்கள் தர மறுத்து விட்டார்கள். அதன் பிறகு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்து ‘ஜின் தி பெட்’ என டைட்டில் வைத்தோம். இதன் பிறகு எங்கள் குடும்பம் தொடர்ந்து உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
கடவுள் இருக்கிறார் என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். கடவுள் இல்லை என்று ஒரு பிரிவினர் சொல்கிறார்கள். ஆனால் ஜின் நிச்சயமாக இருக்கிறது. ‘ஜின்- தி பெட்’ என்று பெயர் வைத்த பிறகுதான் எங்களுக்கு நல்லது நடந்திருக்கிறது. இந்த ஜின்னை மலேசியாவில் வளர்க்கிறார்கள்.. அதன் பின்னணியில் உருவானது தான் இப்படத்தின் கதை,” என்றார்.
நடிகை பவ்யா தரிகா பேசுகையில், ”2022 நவம்பர் 20ம் தேதியன்று நான் என்னுடைய தோழியின் வீட்டில் இருந்தேன். அப்போதுதான் என்னுடைய தோழிகள் ‘ஜின் ‘என்ற ஒரு விஷயத்தை பற்றி சொன்னார்கள். அதைப்பற்றி அப்போது நான் அவ்வளவாக நம்பவில்லை. ஒரு வார்த்தையை சொல்லி அதனை அடிக்கடி சொல் அதனுடைய எனர்ஜி கிடைக்கும் என்றார்கள். அதனையும் நான் சாதாரணமாக எடுத்துக் கொண்டேன். அங்கிருந்து நான் நள்ளிரவு 2.30 மணிக்கு கிளம்பினேன். அதன் பிறகு ஏதோ ஒரு விஷயத்திற்காக தோழியின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன். அந்தத் தருணத்தில் என் முதுகு பின்னாடி இருந்து’ பவ்யா என்ற குரல் ஒலித்தது. அதைக் கேட்டவுடன் பயம் ஏற்பட்டது.
அதன் பிறகு அடுத்த நாள் காலை என்னுடைய சமூக வலைதளத்தை பார்வையிடுகிறேன். அப்போது ஜின்ஷா என்றொரு ஃபாலோயர் நிறைய லைக்குகளை போட்டு கவனத்தைக் கவர்ந்தார். இது எனக்கு மேலும் பயத்தை ஏற்படுத்தியது இதனால் உடனடியாக கோவில், சர்ச், தர்கா, குருத்வாரா ஆகிய இடங்களுக்கு சென்று வந்தேன், மூன்று மாதங்கள் கழித்து இயல்பானேன். அதன் பிறகு என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் வருகிறது. அதன் டைட்டில் ‘ஜின்’. எனக்குள் ஆச்சரியம் ஏற்பட்டது.
இயக்குநர் பாலா என்னை சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் சந்தித்தார். அப்போது ஜின்னை பற்றிய எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். அவருக்கும் ஆச்சரியம் ஏற்பட்டது. அதனால் தானோ என்னவோ இப்படத்தில் நான் நாயகியாக நடித்திருக்கிறேன். ஜின்னுடைய தொடர்பு எனக்கும் இருக்கிறது என நம்புகிறேன்.
இயக்குநர் பாலா மிகவும் அமைதியானவர். பொறுமையானவர். படப்பிடிப்பு தளத்தில் அவர் நட்பாக பழகக் கூடியவர். கலைஞர்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுப்பார். அது எனக்கு பிடித்திருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்ல படத்தில் நடிக்கும் போதும் இயல்பாக இருந்தேன். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நல்லதொரு பாசிட்டிவான வைப் இருக்கிறது. ஜின் எனக்கு என் வாழ்க்கையில் ஆசியை வழங்கி இருக்கிறது. இந்தப் படம் ஒரு ஃபேமிலி என்டர்டெய்னர். அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும். மே 30ம் தேதி என்று அனைவரும் திரையரங்கத்திற்கு வாருங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள்,” என்றார்.
இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் பேசுகையில், ”நீண்ட நாள் கழித்து கமர்ஷியல் என்டர்டெய்னர் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறோம். இப்படத்தின் பாடல்களைப் பற்றியும், பின்னணி இசையை பற்றியும் குறிப்பிட்டு பாராட்டிய அனைவருக்கும் நன்றி. படத்தின் இயக்குநர் டி ஆர் பாலா உடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாததாக இருந்தது. பணியாற்றிய பாடலாசிரியர்களுக்கும் நன்றி. திரைப்படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து சந்தோஷமடைய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
‘ஜின் தி பெட்’ ஃபேமிலி என்டர்டெய்னர். படத்திற்கு பின்னணி இசையை அமைக்கும் போது உற்சாகத்துடன் பணியாற்றினோம். இந்தப் படத்தின் மூலம் டி ஆர் பாலா என்ற அருமையான நண்பர் எங்களுக்கு கிடைத்திருக்கிறார். அவருடைய முதல் படம் இது, கடுமையாக உழைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘குட்டி மா…’ என்ற பாடலுக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பிற்கு நன்றி. இந்தப் படத்தின் நாயகனான முகேன்
மல்டி டேலன்டட் பெர்சன். நாங்கள் கேட்டுக் கொண்டதற்காக ஒரு பாடலை பாடியிருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.
இயக்குநர்-தயாரிப்பாளர் டி ஆர் பாலா பேசுகையில், ”கடவுளுக்கு நன்றி. சின்ன வயதில் இருந்து எனக்கு நம்பிக்கையை ஊட்டி வளர்த்தவர் என் அம்மா தான். வீட்டிலிருந்து வெளியே சென்று நம்பிக்கையுடன் இந்த உலகத்தை எதிர்கொள்ள வேண்டும் என்று சொன்னவர் அவர். அதற்கான அனைத்து விஷயங்களை கற்றுக் கொடுத்தவரும் என் அம்மா தான். இந்த படத்தை தயாரித்திருக்கும் ஃபேரிடேல் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குவதற்கும் என் அம்மா கொடுத்த ஊக்கம் தான் காரணம். இப்படி ஒரு மேடைக்காக நீண்ட காலமாக காத்திருந்தேன். இன்று கிடைத்திருக்கிறது. இந்த தருணத்தில் என் பெற்றோர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கும், வாழ்த்திய நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.
இந்த படத்தின் இணை தயாரிப்பாளர்களான அனில் குமார் ரெட்டி மற்றும் ரகு அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தின் தயாரிப்பிற்காக முதலீடு செய்த அனைத்து முதலீட்டாளர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் குழுவுடன் இசையமைப்பாளர்கள் விவேக் – மெர்வின் இணைந்த பிறகு படத்தின் தரம் உயர்ந்தது. அவர்களும் கடுமையாக உழைத்து ஹிட் பாடல்கள் வழங்கி இருக்கிறார்கள். இப்படத்திற்கு அருமையாக பின்னணி இசையும் அமைத்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், கலை இயக்குநர், கிராபிக்ஸ், ஸ்கிரிப்ட் டாக்டர், சண்டைப் பயிற்சி இயக்குநர், நடன இயக்குநர், பாடலாசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ராதாரவி, முகேன் ராவ், பவ்யா தரிகா, பால சரவணன், வினோதினி, ஜார்ஜ் விஜய், ரித்விக், இமான் அண்ணாச்சி என இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்கள்.
நான் விஜய் சார் நடித்த மூன்று படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். அந்தத் தருணத்தில் அவர் ‘பொறுமையாக இருக்க கற்றுக்கொள்’ என அறிவுறுத்தி இருக்கிறார். அதனை நான் இன்று வரை உறுதியாக பின்பற்றி வருகிறேன்.
இந்தத் திரைப்படத்தை வாங்கி இருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் விளம்பர படம் தொடர்பாக மலேசியாவிற்கு சென்றபோது அங்கு என்னுடைய உறவினர் ஒருவர், அவருடைய வீட்டில் ஜின் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தார். அவர்கள் தான் இதனை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். இது ஜின், வீடுகளில் நாய், பூனை, பறவை போன்ற செல்லப்பிராணிகளை வளர்ப்பது போல் இதனையும் வளர்க்கலாம். ஆனால் சில நிபந்தனைகள் உண்டு. தண்ணீர் கூடாது. சூரிய ஒளி கூடாது. இரவில் தான் உணவு அளிக்க வேண்டும் என சில நிபந்தனைகளை சொன்ன போது முதலில் ஆச்சரியமடைந்தேன்.
எனக்கு கடவுள் மீது இருக்கும் நம்பிக்கையைப் போல் பேய்கள் மீதும், அமானுஷ்யங்கள் மீதும் நம்பிக்கை உண்டு. ஜின்னை பற்றி அவர்கள் சொல்லும் போது அவர்கள் அதன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை தான் நான் முதலில் பார்த்தேன். இது மலேசியாவில் மட்டுமல்ல இந்தோனேஷியா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உள்ளதாக சொன்னார்கள். இது தொடர்பாக பிறகு ஆய்வு செய்ய தொடங்கினேன். கூகுளில் ‘டோயோ’ என பதிவிட்டு தேடினால் இதைப்பற்றிய ஏராளமான விஷயங்கள் இடம் பிடித்திருப்பதை காணலாம். இதனை கருவாகக் கொண்டு நான் ஒரு கதையை உருவாக்கினேன்.
இது தொடர்பாக மலேசியாவை சார்ந்த மந்திரவாதி ஒருவரிடம் உரையாடிய போது, ‘ஜின்னை பற்றிய படத்தில் அதனை காமெடியாக காட்சிப்படுத்தாதீர்கள். சீரியஸாக உருவாக்குங்கள்’ என ஆலோசனை சொன்னார். ஆனால் நாங்கள் அதனை காமெடி ஹாரர் திரைப்படமாகத்தான் உருவாக்கியிருக்கிறோம்.
இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலும் ஏராளமான அமானுஷ்ய விசயங்கள் நடைபெற்றன. இப்படத்தில் பங்கேற்ற கலைஞர்களுக்கும் ஜின் தொடர்பான அமானுஷ்ய அனுபவம் கிடைத்ததாக சொன்னார்கள்.
இப்படத்தின் கதையை உருவாக்கிய பிறகு மிகப்பெரிய முன்னணி தயாரிப்பு நிறுவனத்தில் இந்த கதையை சொன்னேன். அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவர்களுடைய பரிந்துரையின் பெயரில் முன்னணி நட்சத்திர நடிகர் ஒருவரை சந்தித்து அவரிடமும் கதையை விவரித்தேன். கதையை கேட்டு சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். அதன் பிறகு பல்வேறு காரணங்களால் இரண்டு ஆண்டுகள் இப்படத்தில் பணிகள் நடைபெறவில்லை. அதன் பிறகு இப்படத்தினை நானே சொந்தமாக தயாரித்து இயக்க தீர்மானித்தேன். இந்தத் திரைப்படம் எதிர்வரும் முப்பதாம் தேதியன்று வெளியாகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மன அழுத்தத்துடன் இருப்பவர்களுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தரும். இது ஒரு கம்ப்ளீட் ஃபேமிலி எண்டர்டெய்னர். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் முகேன் ராவ் பேசுகையில், ”இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இயக்குநர் டி ஆர் பாலா உடன் ‘ஒற்றைத் தாமரை’ என்ற வீடியோ ஆல்பத்தில் இணைந்து பணியாற்றிருக்கிறேன். என்ன தேவை என்பதில் அவரிடம் ஒரு தெளிவு இருக்கும். இந்த ‘ஜின்’ படத்திலும் அவருக்கு என்ன தேவையோ அதனை நடிகர்களிடமிருந்து பெற்றார். அவர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் கடுமையாக உழைத்திருக்கிறார். இதற்காகவே அவரை நான் மனதார பாராட்டுகிறேன். இந்தப் படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அவருடன் தொடர்ந்து பயணிக்கவும் விரும்புகிறேன்.
இயக்குநரின் பெற்றோர்களான வேந்தன்-ராஜேஸ்வரி தம்பதிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அனைத்து கலைஞர்களையும் அக்கறையுடன் கவனித்தனர்.
தொடக்கத்தில் விவேக் மெர்வின் என்பது ஒருவர் என நினைத்துக் கொண்டிருந்தேன். அதன் பிறகு தான் அவர்கள் இருவர் என்று தெரிந்து கொண்டேன். அவர்கள் ஏராளமான ஹிட் பாடல்களை வழங்கி இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத அனுபவமாக இருந்தது.
இயக்குநர் டி ஆர் பாலாவிற்கும், ஆன்மீக சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவுக்கும் இடையேயான நட்பு எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இவ்விழாவிற்கு வருகை தந்து சிறப்பித்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடிகர், நடிகைகளுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நான்கு சண்டைக் காட்சிகள் இருக்கின்றன. ஏராளமான திரைப்படங்களை பார்த்து சண்டை காட்சிகளில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. அதனால் சண்டை காட்சிகளின் நடிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால் இந்த திரைப்படத்தில் உள்ள நான்கு சண்டையிலும் ‘ஜின்- தி பெட்’டிற்கு தான் முக்கியத்துவம் இருக்கும். அது என்ன? என்பதை நீங்கள் திரையில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு நான் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன். சில படங்களின் பணிகள் நிறைவடைந்து இருப்பதால் அது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்புகிறேன்.
இந்த திரைப்படத்தில் நடித்திருக்கும் ஜின்-னும் ஒரு கதாபாத்திரம் தான். அவரும் இங்கு எங்கேயோ தான் இருப்பார். அவருக்கும் நான் நன்றியை சொல்கிறேன். இந்த ‘ஜின் தி பெட்’ படத்தின் கதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் ஃபேமிலி எண்டர்டெய்னராக உருவாகி இருக்கிறது. அனைவரும் மே 30ம் தேதியன்று திரையரங்கத்திற்கு வருகை தந்து இப்படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட நவீன் சந்திரா நடிக்கும் ‘லெவன்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம்
‘லெவன்’ டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார்
ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘ லெவன் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெவன்’ திரைப்படத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி, அபிராமி, திலீபன், ரித்விகா, ‘ஆடுகளம்’ நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார். கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
‘லெவன்’ டிரெய்லரை உலக நாயகன் கமல் ஹாசன் சமூக வலைதளங்களில் வெளியிட்டார். வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே ‘லெவன்’ முன்னோட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி என் அழகர்சாமியும், தெலுங்கு வெளியீட்டு உரிமையை ருச்சிரா என்டர்டெய்ன்மென்ட்ஸ் என் சுதாகர் ரெட்டியும், மலையாள உரிமையை E4 என்டர்டெய்ன்மென்ட் முகேஷ் ஆர் மேத்தாவும், கர்நாடகா உரிமையை ஃபைவ் ஸ்டார் கே செந்திலும் பெற்றுள்ளனர்.
மே 16 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர் கே,பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ் தாணு, டி.ஜி. தியாகராஜன், டி. சிவா, இணை தயாரிப்பாளர் கோபாலகிருஷ்ணன், இயக்குநர்கள் அமீர், செல்வராகவன், பிரபு சாலமன், ஏ. எல் விஜய் , விநியோகஸ்தர்கள் ஃபைவ் ஸ்டார் செந்தில், அழகர்சாமி, அருள்பதி , சரிகம ஐஸ்வர்யா, சஞ்சய் வாத்வா, முகேஷ் மேத்தா, மீனா சாப்ரியா, கிருஷ்ண ரெட்டி, பி. எல். தேனப்பன், கதிரேசன், ராஜ் டிவி ரவி, ரகுநந்தன், இயக்குநர்கள் விஷால் வெங்கட், பத்ரி, ரமேஷ் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் எழுத்தாளர் செல்வேந்திரன் வரவேற்றார். இப்படத்தின் இசையை இயக்குநர் கே. பாக்யராஜ் மற்றும் தயாரிப்பாளர் எஸ் தாணு வெளியிட, இயக்குநர் ஏ.எல். விஜய், தயாரிப்பாளர்கள் கதிரேசன், டி சிவா, தியாகராஜன், பி. எல். தேனப்பன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து இப்படத்தின் முன்னோட்டத்தை இயக்குநர்கள் அமீர் – செல்வராகவன் இணைந்து வெளியிட, விநியோகஸ்தர்கள் சஞ்சய் வாத்வா, அழகர்சாமி, செந்தில், முகேஷ் மேத்தா ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசுகையில், ” நண்பர் அக்பரின் வாரிசான அஜ்மல் கான் இப்படத்தை தயாரித்திருக்கிறார். ரசிகர்களை இருக்கை நுனிக்கு வரவழைக்கும் அளவிற்கு காட்சிகள் திரில்லிங்காக இருக்கிறது. இமானின் இசை படத்திற்கு கூடுதல் சிறப்பு. இந்நிறுவனம் தயாரித்த இந்த மூன்றாவது திரைப்படமும் வெற்றி பெறும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் தியாகராஜன் பேசுகையில், ”நீண்ட நாட்கள் கழித்து அரசாங்க அருங்காட்சியகத்தில் உள்ள இந்த கலையரங்கத்தில் நடைபெறும் இசை மற்றும் முன்னோட்ட வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த விழாவின் நாயகன் இசையமைப்பாளர் இமான். அவர் எப்போதும் தயாரிப்பாளர்களுக்கு நண்பராக இருப்பவர். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன். சிறப்பாக இருக்கிறது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கலந்து கொடுத்திருக்கும் பாட்டும் நன்றாக இருக்கிறது. இப்படத்தின் நாயகன் நவீன் மிகச் சிறந்த திறமைசாலி. அவருடைய திறமையை தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படத்தின் இயக்குநரை மனதாரப் பாராட்டுகிறேன். முன்னோட்டத்தில் சில காட்சிகளை பார்த்த உடனே இவருடைய திறமை வெளிப்பட்டது. இந்தத் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்,” என்றார்.
தயாரிப்பாளர் கதிரேசன் பேசுகையில், ” லெவன் திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். இன்ட்ரஸ்டிங்கான திரில்லர் திரைப்படம். இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், நடித்த நடிகர், நடிகைகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்க்கும்போதுதான் படத்திற்கு ஏன் ‘லெவன்’ என பெயர் வைத்திருக்கிறார்கள் என்பது தெரியவரும். இந்தத் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் டிக்கெட்டை வாங்கி பார்க்கிறார்கள். ஆனால் பத்து கோடி ரூபாய் முதலீட்டில் எடுக்கும் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கு அனைவரும் ஒன்று கூடி விவாதித்து டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும். நல்ல படமாக இருந்தாலும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பல சங்கடங்கள் இருக்கிறது. ஆந்திராவுடன் ஒப்பிடும்போது ஒரு நல்ல படத்திற்கு தமிழ்நாட்டில் வசூல் சதவீதம் குறைவாகவே இருக்கிறது. சினிமாவைப் பொறுத்தவரை வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை – இந்த மூன்று நாட்களில் தான் ரசிகர்களின் வருகை அதிகமாக இருக்கிறது. அதனால் சிறிய முதலீட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்தால் நன்றாக இருக்கும் என்பது என்னுடைய கோரிக்கை. இதனை மூன்று அல்லது நான்கு மாதங்கள் வரை பரீட்சார்த்தமாக சோதனை செய்ய வேண்டும் என்றும், இது தொடர்பாக திரையுலகினர் அனைவரும் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகை ரித்விகா பேசுகையில், “இந்தத் திரைப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன் உருவாக்கிய ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்திலும் நான் நடித்திருக்கிறேன். அதற்கு ரசிகர்களிடத்தில் பெரிய வரவேற்பு இருந்தது. இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன், ” என்றார்.
தயாரிப்பாளர் டி . சிவா பேசுகையில், ”தயாரிப்பாளர் அக்பர் தைரியமானவர். தொடர்ந்து படங்களை தயாரிக்கிறார். அவர் தயாரித்த இந்த திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்த அரங்கத்தில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி நிறுத்தப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் வழங்கியிருக்கிறார்கள். இதற்காக படக்குழுவினரை வாழ்த்துகிறேன். ‘லெவன்’ திரைப்படம், ‘ராட்சசன்’ படத்தை போல் மிகப் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.
நடிகர் நவீன் சந்திரா மிகப்பெரிய திறமைசாலி. அவருக்கு இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வாய்ப்பினை வழங்கும் என்று நம்புகிறேன். திரைப்படத்திற்கு இசையமைத்திருக்கும் இமானுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஃபாஸ்டஸ்ட் – எக்கனாமிக்- பிரண்ட்லி- லவ்லி – மியூசிக் டைரக்டர் இமானுக்கு இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை வழங்க வேண்டும்,” என்றார்.
நடிகை ரியா ஹரி பேசுகையில், ”திரையுலகில் உள்ள அனைத்து தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த மேடையில் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அக்பர் சார்தான். அவர் மீதான அன்பின் காரணமாகவே அனைவரும் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். நானும் அவருடைய பார்ட்னர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த திரைப்படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் இமான் சாரை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். அவருடனான சந்திப்பின்போது எப்போதும் ஒரு பாசிட்டிவிட்டியை பரவச் செய்து கொண்டிருப்பார். அவரை நிறைய முறை சந்தித்து இருக்கிறேன். ஆனால் பேசியதில்லை. அவருடைய இசையில் முதல் பாடல் உருவான போது இதுதான் என்னுடைய ஃபேவரிட்டான பாடல் என சொன்னேன். இரண்டாவது பாடல் உருவான போது இந்தப் பாடல் தான் எனக்கு அதிகம் பிடித்திருக்கிறது என்றேன். அதன் பிறகு காத்திருங்கள் தொடர்ச்சியாக பாடல்கள் வந்து கொண்டிருக்கிறது அனைத்து பாடல்களையும் கேளுங்கள் என்றனர். எனக்கு எல்லா பாடல்களும் பிடித்திருக்கிறது. ரசிகர்களுக்கும் அனைத்து பாடல்களும் பிடிக்கும். இதற்காக சரிகம நிறுவனத்திற்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நவீன் அவர்களை இப்படத்திற்கான போட்டோ ஷூட்டின் போது முதன்முதலாக சந்தித்தேன். எனக்கு இருந்த தயக்கத்தை உடைத்து இயல்பாக பழகினார். படப்பிடிப்பு தளத்தில் எனக்கு சிறிய நுட்பமான பல விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஒட்டுமொத்த படக்குழுவையும் இயல்பாக வைத்திருப்பார். அவருடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாதது. இதற்காக அவருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் ஒரு மேஜிக் இருக்கிறது. இந்த திரைப்படத்தை பார்க்கும்போது உங்களுக்குள் நிபந்தனையற்ற அன்பு இருப்பதை உணர்வீர்கள். அந்த அதீத அன்பு ஒரு மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இந்த திரைப்படம் திரில்லராக இருந்தாலும் எமோஷனலான படம். மே 16அன்று வெளியாகும் இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”நான் திரைப்படத்தை இயக்குவதற்கும், திரைப்படத்தை பார்ப்பதற்கும் சம்பந்தமே இருக்காது. எனக்கு கிரைம் ஆக்ஷன் திரைப்படங்கள் தான் மிகவும் பிடிக்கும். இது போன்ற படங்களை பார்க்கும் போது மூளைக்கும் கொஞ்சம் வேலை கொடுக்கும் விஷயம் இருக்கும். அடுத்து என்ன என்ற இன்ட்ரஸ்ட் இருக்கும். ‘விடியும் வரை காத்திரு’, ‘ஒரு கைதியின் டைரி’ என இரண்டு திரைப்படங்களை தான் இந்த வகையில் இயக்கியிருக்கிறேன். ‘லெவன்’ திரைப்படம் கிரைம் திரில்லர் என்று சொன்னவுடன் ஆர்வம் ஆகிவிட்டேன். இந்தப் படத்தை 16ம் தேதி அன்றே பார்க்க வேண்டும் என்று ஆவலும் ஏற்பட்டிருக்கிறது. ரசிகர்களிடமும் வரவேற்பு இருக்கும். படக் குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
நடிகை அபிராமி பேசுகையில், ”மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் தொடக்கப் பயணத்தில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு நன்றி. இந்தத் திரைப்படத்தில் அழகான பாடல்களை வழங்கியதற்காக இசையமைப்பாளர் இமானுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளர் அஜ்மலுடன் இணைந்து பணியாற்றுவது அனைத்து நட்சத்திரங்களுக்கும் இயல்பாக இருக்கும். அவருடைய அக்கறையும், அன்பும் அதிகம். இந்தப் படத்தில் என்னுடன் இணைந்து நடித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் அமீர் பேசுகையில், ”இப்படத்தின் நாயகன் நவீன் சந்திராவிற்கும், இன்றைய விழா நாயகன் இசையமைப்பாளர் இமானுக்கும், தயாரிப்பாளர் அஜ்மலுக்கும் என் வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த திரையுலகத்தையும் அவர் மேடையில் ஒன்றிணைத்திருக்கிறார்.
நான் ஊதா கலர் ரிப்பனின் ரசிகன். நான் எல்லா தருணத்திலும் முணுமுணுக்கும் பாடல் அது. இங்கு மேடையில் பேசிய விநியோகஸ்தர் மதுரை அழகர் எந்த திரைப்படத்தையும் அவ்வளவு எளிதாக பாராட்ட மாட்டார். அவர் இந்தத் திரைப்படத்தை விநியோகிக்கிறார் என்றால், இந்த படம் உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அத்துடன் பிரபு சாலமன்- இமான் அக்பர் – இணைந்திருக்கிறார்கள் என்றால்.. அந்த படம் நன்றாக தான் இருக்கும். அக்பர் ஆடிட்டர் என்றாலும் சினிமாவை அளவு கடந்து நேசிப்பவர். அதனால் தான் படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் முன்னோட்டமும் , பாடல்களும் நன்றாக இருந்தன. ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்ற படங்கள் ரசிகர்களை எப்படி இருக்கை நுனியில் வைத்திருந்தனவோ அதேபோல் இந்த படமும் இருக்கும் என்று நம்புகிறேன், வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் டி. இமான் பேசுகையில், ” மிகவும் மகிழ்ச்சி. தயாரிப்பாளர்கள் அக்பர் – அஜ்மல் கான் - ரியா ஹரி ஆகியோர்களுக்கு முதலில் நன்றி. திரையுலகில் 23 ஆண்டுகளாக பணியாற்றிக் கொண்டிருந்தாலும் இதுவரை கிரைம் திரில்லர் ஜானரிலான திரைப்படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. அந்த வகையில் ‘லெவன்’ என்னுடைய இசையில் வெளியாகும் முதல் கிரைம் திரில்லர் திரைப்படம். இதற்காக இயக்குவர் லோகேஷ் அஜில்ஸுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஓ டி டியில் படங்களை பார்க்கும் போது ஏராளமான க்ரைம் திரில்லர் திரைப்படங்களை தான் விரும்பி பார்ப்பேன். உச்சகட்ட காட்சி வரை ஆர்வம் குறையாமல் பார்க்கலாம்.
நான் இயக்குநர் சுந்தர் சி உடன் எட்டு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். அந்த தருணத்தில் அவருடைய உதவியாளர்களும் இருப்பார்கள். அவர்களும் படத்தை இயக்கும் போது எனக்கு வாய்ப்பளித்திருக்கிறார்கள். அந்த வகையில் லோகேஷ் என்னை சந்தித்து நான் சுந்தர் சி உதவியாளர். ஒரு கதையை உங்களிடம் சொல்ல வேண்டும் என கேட்டபோது, நான் மாஸான கமர்ஷியல் என்டர்டெய்னராக தான் இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால் கதையை கேட்கும் போது பக்காவான க்ரைம் திரில்லர் ஜானரில் இருந்தது. கதை கேட்டு முடித்ததும் அவரிடம் முதலில் இந்த கதைக்கு என்னை எப்படி யோசித்தீர்கள் எனக் கேட்டேன். இதுவரை நீங்கள் இந்த ஜானருக்கு இசை அமைக்கவில்லை. நீங்கள் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றார். இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் அசோகனின் பங்களிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. இந்த படம் வெளியான பிறகு அவர் பேசப்படுவார்.
இயக்குநர் லோகேஷ் அஜில்ஸின் எழுத்து சிறப்பானதாக இருந்தது. படத்தை நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறார். படத்தைப் பார்த்த பிறகு அவரை போனில் பாராட்டினேன். இந்தப் படத்தில் வரும் சைலன்ஸ் கூட ரசிகர்களுக்கு பிடிக்கும்.
இந்தப் படத்தில் ஒரு பாடலை பாடகர் மனோ பாடியிருக்கிறார். இதுவரை எத்தனையோ பாடல்களுக்கு நான் இசையமைத்திருந்தாலும் எனது இசையில் மனோ பாடியதில்லை. இந்தப் படத்தில் அது நடந்து இருக்கிறது. இதற்காக மகிழ்ச்சி அடைகிறேன். இந்தத் திரைப்படம் மே 16ம் தேதி அன்று வெளியாகிறது. ‘போர் தொழில்’, ‘ராட்சசன்’ போன்று இந்த திரைப்படமும் இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை. படத்தை திரையரங்கத்தில் பார்த்துவிட்டு உங்களுடைய அன்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் பிரபு சாலமன் பேசுகையில், ”தயாரிப்பாளர் அக்பருடன் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் கதையை கேட்டதும் பிடித்திருந்தது. கதைக்குப் பொருத்தமான நடிகர்களை தேடத் தொடங்கினோம். அந்தத் தருணத்தில் அற்புதமான நடிப்புத் திறமை உள்ள நவீன் சந்திரா இந்த கதைக்குள் வந்தார். கதாபாத்திரத்தை திரையில் கச்சிதமாக காட்சிப்படுத்துவதில் திறமையானவர் நடிகர் நவீன் சந்திரா என்பதை படம் பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் சொல்வீர்கள். அதன் பிறகு ஒவ்வொருவராக படத்திற்குள் வந்தனர்.
இந்த படத்தை எனக்கு நெருக்கமாக உணர வைத்தது கார்த்திக் அசோகனின் ஒளிப்பதிவு தான். இதுபோன்ற திரைப்படங்களுக்கு ஒளி சூழல் முக்கியமானது. அவருக்கு சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.
மே 16 இப்படம் திரையரங்கில் வெளியாகும் போது அதற்கான அங்கீகாரத்தை ரசிகர்கள் வழங்குவார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது,” என்றார்.
நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், ”ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘சரபம்’ என்றொரு தமிழ் படத்தில் நடித்தேன். அதன் பிறகு தமிழில் ‘லெவன்’ திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருக்கிறேன். இந்த விழாவுக்கு வருகை தந்த அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மிகவும் உணர்வுபூர்வமான தருணம் இது. இந்த கதையை கேட்ட பிறகு இதில் நடித்தால் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. தயாரிப்பாளர் அக்பர், இயக்குநர் லோகேஷ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஆகிய மூவரும் சேர்ந்து படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை நேர்த்தியாக உருவாக்கினர். அதனால் இந்த திரைப்படத்தை அவர்களால் எளிதாக உருவாக்க முடிந்தது.
இந்த திரைப்படத்தை ஒரு படமாக இல்லாமல் இரண்டு படமாக படப்பிடிப்பு நடத்தினோம். இதன் போது நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றினர். இந்தப் படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. மே 16ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறேன்.
நான் இமானின் தீவிர ரசிகன். படத்தில் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கின்றன. இதற்காக அவருக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘விருமாண்டி’ படத்தில் அபிராமி அவர்களின் நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் அவர்களுடன் இணைந்து நடிக்கும் நாட்களுக்காக காத்திருந்தேன், நட்பாக பழகினார். காட்சிகளில் நடிக்கும்போது அவருடைய திறமையை நேரில் பார்த்து வியந்தேன். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.
ரியா ஹரி படப்பிடிப்பு தளத்தில் எனக்கு நம்பிக்கை அளித்தவர். அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. எதிர்காலத்தில் அவர் மிகச்சிறந்த நடிகையாக வலம் வருவார். அதற்காக அவரை வாழ்த்துகிறேன், தெலுங்கு திரையுலகம் சார்பாக அவரை வரவேற்கிறேன்.
‘லெவன்’ படம் நன்றாக உருவாகியுள்ளது, படத்தை சிறப்பான தருணத்தில் வெளியிட வேண்டும் என்பதற்காக காத்திருந்தோம். ரசிகர்களுக்கு நல்லதொரு படத்தை வழங்க வேண்டும் என தீர்மானித்து மே 16ம் தேதி இப்படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் பேசுகையில், ” இங்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு படத்திற்கு நடிகர்கள் அமைந்துவிட்டால் பாதி வெற்றி உறுதியாகி விடும் என்று சொல்வார்கள் அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நவீன், திலீபன், ரியா, அபிராமி, ரித்விகா ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மிடில்கிளாஸ் மாதவன் படத்தில் அபிராமியின் ரசிகன் நான்.
என்னுடைய முதல் படம் தமிழ்- தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்க வேண்டும் திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்ற போது தொடக்கத்தில் சற்று பதற்றமாக இருந்தது. ஆனால் வெற்றிகரமாக நிறைவு செய்ததற்கு என்னுடன் பணியாற்றிய நடிகர்களும் நடிகைகளும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் தான் காரணம். அவர்கள் கொடுத்த முழு ஒத்துழைப்பின் காரணமாகத்தான் படத்தினை திட்டமிட்டபடி நிறைவு செய்தேன். அதற்காக இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நானும், கார்த்திக்கும் நண்பர்கள். நான் உதவி இயக்குநராகவும், அவர் உதவி ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி பயணத்தை தொடங்கிய தருணத்திலிருந்தே நண்பர்கள். அவன் தான் இந்தப் படத்திற்கு முதுகெலும்பு. படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது எனக்கு கூட சில தருணங்களில் சோர்வு எட்டிப் பார்க்கும். ஆனால் கார்த்திக் சோர்வே இல்லாமல் சுறுசுறுப்பாக பணியாற்றிக் கொண்டே இருப்பார். இந்தப் படத்தின் டீசர் வெளியானவுடன் வேறொரு படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமானார்.
இமான் சார் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டம். படத்தில் பாடல்களிலும், பின்னணி இசையிலும் அவர் கடுமையாக உழைத்திருக்கிறார். அதிலும் இடைவேளை தருணத்தில் அவர் வழங்கி இருக்கும் பின்னணி இசை நிச்சயம் பேசப்படும். இமான் சாரின் 2.0 வெர்ஷனை இப்படத்தில் பார்க்கலாம்.
தயாரிப்பாளர் அக்பர் – படத்திற்கு நிதி அளிப்பதோடு மட்டும் இல்லாமல் இப்படத்திற்காக நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைப்பை கொடுத்தோமோ, அதற்கு நிகராக அவரும் உழைத்தார். அவர் ஒருபோதும் தயாரிப்பாளராக இருந்ததில்லை, படத்திற்காக அனைத்து பணிகளையும் அவர் செய்தார். அவரைப் பார்க்கும்போது எனக்கு சற்று பொறாமையாக தான் இருக்கிறது. ஏனெனில் அவ்வளவு ஸ்ட்ராங்கஸ்ட் பெர்சன். அவருக்காகவே இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும், வெற்றி பெற வேண்டும். ஒரு தயாரிப்பாளர் வெற்றி பெற்றால் தான் ஒரு திரைப்படம் வெற்றி பெறும் என நம்புபவன். அந்த வகையில் இந்த திரைப்படம் பெரிய வெற்றியை பெறும் என்று நம்புகிறேன்.
நடிகர் நவீன் ஒரு கதாபாத்திரத்திற்குள் வந்துவிட்டால் அந்த கதாபாத்திரமாகவே இருப்பார். கேரக்டரை எழுதும்போது திரையில் எப்படி தோன்றும் என்று நினைத்து எழுதுவதில்லை. ஆனால் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்று விரும்புவோம். படம் பார்த்த அனைவரும் படம் எப்படி நன்றாக இருக்கிறது என்று ஒருமித்த குரலில் சொன்னார்களோ, அதேபோல் அனைவரும் நவீன் சந்திராவின் நடிப்பையும் பாராட்டினார்கள். இந்தப் படம் நவீன் சந்திராவிற்கு தமிழ் திரையுலகத்தில் நல்ல பெயரை சம்பாதித்து தரும். நிறைய வாய்ப்புகளும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
மே 16 அன்று ‘லெவன்’ படம் பார்க்கும் ரசிகர்களுக்கு அற்புதமான திரையரங்க அனுபவம் காத்திருக்கிறது. அதைக் காண திரையரங்கத்திற்கு வாருங்கள்,” என்றார்.
• Up to 41% off on select models of Galaxy S series, Z series, and A series smartphones
• Up to 65% discounts on select models of tablets, accessories and wearables
• Up to 43% off on select refrigerators and washing machines and up to 58% off on WindFreeTM ACs
• Up to 48% off on television models such as Neo QLED 8K, Neo QLED, OLED, QLED, The Frame, Crystal 4K UHD
CHENNAI, May 1, 2025 Samsung, India’s largest consumer electronics brand, is turning up the heat this summer with the return of its blockbuster sale — Fab Grab Fest! Kicking off on May 1, this much-anticipated shopping extravaganza brings sizzling, limited-time deals on a wide range of Samsung’s cutting-edge products, available exclusively on Samsung.com, Samsung Shop App and Samsung Exclusive Stores.
Fabulous Smartphone and Laptop Deals up for Grabs
As the sale kicks off, customers can enjoy up to 41% off on select models of Samsung Galaxy S, Galaxy Z, and Galaxy A smartphone series. Whether it is the latest foldables or powerful camera-centric models, there is something for every tech enthusiast. In addition, select Galaxy tablets, accessories and wearables will be available at discount ofup to 50% off, making it the perfect time to complete your Galaxy ecosystem.
Not just that, users seeking a seamless and versatile tablet-like experience can avail up to 35% off on select Galaxy Book5 and Book4 laptops and elevate their workflow with Galaxy AI.
Customers purchasing the all-new Galaxy Tab S10FE series will get 45W charger without cable worth INR 2999 free.
Big Screen Luxury at Incredible Prices
Unmissable deals on Samsung’s flagship TVs are also lined up in this edition. Customers can expect up to 48% off on popular models including the Neo-QLED 8K, Neo QLED, OLED, QLED, The Frame, and Crystal 4K UHD series. Those looking to turn their walls into a confluence of art and technology can choose The Frame TV. With a flush fit, Samsung’s Frame seamlessly transcends into an art piece when turned off – and now, with an instant cart discount of up to INR 11000, premium design and cinematic experiences are more accessible than ever. Additionally, customers can avail benefits of up to INR 5000 exchange bonus on purchase of select TVs.
Smart Savings on Digital and Premium Home Appliances
Samsung is also rolling out exclusive offers on its full suite of digital appliances. Shoppers can enjoy deals across refrigerators, washing machines, microwaves, air conditioners, and monitors.
For those seeking top-tier performance and design, select models of side-by-side refrigerators, French-door refrigerators will be up for grabs at an exclusive deal of up to 43% off.
Select models of washing machines will be available at up to 43% off. Additionally, they will get a generous 20-year warranty on the Digital Inverter Motor for both Fully Automatic Front Loading and Fully Automatic Top Loading machines. For easy access, the affordable EMI option is also available starting at just INR 1590 for Fully Automatic Front Loading, INR 990 for Fully Automatic Top Loading, and INR 890 for Semi-Automatic Washing Machines.
To beat the heat this summer, select WindFree™ AC models can be availed at a fabulous deal of 58% off, with an additional 5% discount on the purchase of two or more units. These ACs also include a 5-year warranty on the PCB part and a 10-year warranty on the compressor, delivering both savings, comfort and peace of mind.
Step into Luxury with Samsung’s ‘Buy More, Save More’ Offers
Customers can continue to indulge in a premium experience through our ‘Buy More Save More’ deals. Shoppers purchasing two or more smart home appliances via Samsung.com or the Samsung Shop App will receive an additional discount of 5%. The programme invites users to handpick their own personalized bundles from a variety ofdigital appliances that suit their needs, while maximizingsavings.
Select Samsung monitors will be available at discounts of up to 60%. Customers purchasing Galaxy Book Series laptops can avail a multi-buy offer on monitors – where pairing the two together will mean more savings.Additionally, Samsung is offering an instant cart discount of up to INR 7000 on gaming monitors.
Easy Financing and Cashback Offers
Customers can avail cashback of up to 22.5% using debit and credit cards from leading banks including HDFC Bank and ICICI Bank. The maximum cashback available during the Fab Grab Fest is INR 25000, adding an extra layer of affordability to the existing unbeatable offers.
Fab Grab Fest Offers:
Available on Samsung.com, Samsung Shop App and Samsung Exclusive Stores
Products/Category
Consumer Offer
Highlight Models
Smartphones
Up to 41% off on MRP 24 months NCEMI on Galaxy Foldables & up to 12 months NCEMI on Galaxy S series
Up to 48% off on MRPFree Soundbar or TV on purchase of select TVsBank cashback of 20% up to INR 20000Up to INR 11000 Instant Cart Discount on Frame TV1 + 1 year warranty Buy More Save More: Buy 2 get 5% extra Off*Get additional Trade-In benefit up to INR 5000* on select SKUs
Up to 43% off on MRP Up to INR 5000 Instant Cart Discount on Side-by-Side & French Door Refrigerators Up to INR 2500 Instant Cart Discount on Double Door Refrigerators Buy More Save More: Buy 2 get 5% extra Off* 20 Years warranty on Digital Inverter Compressor Lowest EMI option starting INR 3990/mo.* with Bajaj Finserv
Side-by-Side & French Door Refrigerators
Washing Machines
Up to 43% off on MRPUp to INR 3000 Instant Cart Discount on Bespoke AI LaundryBuy More Save More: Buy 2 get 5% extra Off*EMI options starting INR 990/mo.* on Fully Automatic Top Load Washing MachinesEMI options starting INR 890/mo.* on Semi-Automatic Washing MachinesEMI options starting INR 1590/mo.* on Fully Automatic Front Load Washing Machines20 years warranty on Digital Inverter Motor on FATL & FAFL
Front Load >= 8Kg | Top Load > =8Kg Washing Machines
Microwaves
Up to 39% off on MRP Buy More Save More: Buy 2 get 5% extra Off* 10 year warranty on Ceramic Enamel Cavity
Convection Microwave Owens >= 28L
Monitors
Up to 60% off on MRP Multi Buy offer on Monitors with purchase on Galaxy Book Series Laptops: Get up to 60% off on MRP of Monitors Up to INR 7000 Instant Cart Discount on Gaming Monitors Buy More Save More: Buy 2 get 5% extra Off*
Up to 58% off on MRP EMI options starting INR 1990/mo.* with Bajaj Finserv Buy More Save More: Buy 2 get 5% extra Off* 5 years comprehensive warranty, 10 year warranty on compressor
WindFree™ Series
Bank Cashback
Up to 22.5% cashback with HDFC, ICICI and other leading bank debit and credit cards (Up to INR 17490) # Up to 22.5% cashback with ICICI, HDFC, SBI and other leading bank cards (Up to INR 25000)^
# Smartphones, tablets, wearables, and laptops. ^ Select TVs & Digital Appliacnces
மெட்ராஸ் மஹால் என்ற த்ரில்லர் திரைப்படத்தின் பூஜை வெகு விமர்சையாக இன்று பிரசாத்லேபில் நடைபெற்றது .
BASAVA புரொடக்ஷன் வழங்கும் மெட்ராஸ் மஹால் இயக்குனர் ஜீ வி சீனு இயக்குகிறார் கதை திரைக்கதை வசனம் இயக்கம் இதற்கு முன் பானு என்கிற திரைப்படத்தை எடுத்து வெற்றிகண்டார். புது முகங்கள் நடிக்கும் நான்கு கதாநாயகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. கதாநாயகியாக அக்ஷரா அவர்கள் நடிக்கிறார். கிழக்கு வாசல் பொண்ணுமணி, இதயம் இது போன்ற படங்களில் ஒலிப்பதிவு செய்த கேமராமென் அவர்கள் இப்படத்திற்கு ஒலிப்பதிவு மேற்பார்வையும் ம் அதேபோல் முக்கிய தோற்றத்தில் நடிக்கிறார். காமெடி நடிகர்கள் தேர்வு நடைபெறுகிறது. துளசிராமன் இசையமைக்கிறார். தயாரிப்பு வினோத் நம்பியார் எஸ் முருகன் அவர்கள் தயாரித்துள்ளார்.
படத்தின் பூஜையில் கலந்து கொண்ட நடிகர், மற்றும், தயாரிப்பாளர், காலேஜ் சேர்மேன் அட்வகேட் Mercury சத்யா பேசியதாவது, அனைவருக்கும் வணக்கம், இன்று பிரசாத் லேப்பில் மெட்ராஸ் மஹால் என்ற புதிய படத்தின் துவக்க விழா இன்று அமோகமாக நடைபெற்றுள்ளது. அதற்கு நமக்கு வருகை தந்துள்ள மெயின் விஜயமுரளி அண்ணன் அவர்களுக்கும், கில்டு துரை அண்ணன் அவர்களுக்கும், சக்ரவர்த்தி, கேரளாவிலிருந்து வந்திருக்கிறார் தயாரிப்பாளர் விநோத் அவர்களுக்கும், திருவெற்றியூர் முருகன் அவர்கள், துணை தலைவர் சம்பத், இதனுடைய மேலாளர் தங்கவேலு அவர்களுக்கும், இசையமைப்பாளர் துளசிராமன் அவர்களுக்கும், மாதவன் சந்தோஷ் அவர்களுக்கும், துளசிராமன் அவர்களுக்கும், கதாநாயகி அக்ஷனா, கதாநாயகன் சீனு அவர்களுக்கும் இந்த நிகழ்ச்சியை சிறப்பித்த அனைவருக்கும் என் முதலில் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
பெருமையாக கூறிக்கொள்வது சிறிய தயாரிப்பாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமம். கோடி கோடியாக வைத்து எடுக்கவில்லை, அனைத்து நாடி நரம்புகளை வைத்து நம்முடைய சீனு இந்த படத்தை எடுக்கிறார்கள். தூண்களான விளங்கிக்கொண்டிருக்கும் அனைவருக்கும் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும், இந்தப் படம் வடசென்னை சார்ந்ததாகவும், மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் திரைப்படமாக அமையும், மிகப்பெரிய படம் எல்லாம் வந்திருக்கலாம், ஆனால் சீனு எழுதி தயாரித்த இந்த படம் மக்களுக்கு சென்றடையும், மாணவாகள் சமுதாயம் தற்போது சீரழிந்து வரும் நிலையில் அதனை எவ்வாறு அவர்கள் சீரழிந்து மீண்டும் நல்ல வழிக்கு திருந்தி நமது பெற்றோர்களுக்கு நல்ல பேரை எடுத்து நம்ம மக்களுக்கும் எடுத்துக்காட்டாக இந்த படம் அமையும் இந்த படத்தை கண்டிப்பாக அனைவரும் வரவேற்பார்கள் ஆகையினால் இந்த சிறப்பு அக்ஷயதிருதி அன்று இப்படத்தின் பூஜையை போட்டதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அனைத்து பிஆர்,ஓ சார்பாக வந்த அனைவருக்கும், ஊடகத்துறை அனைவர்களுக்கும், பத்திரிக்கை துரை நண்பர்களுக்கும், உங்களின் உதவி வேண்டி உங்கள் பொற்பாதங்களை தொட்டு வணங்குகிறோம் என்றார்.
விஜயமுரளி அவர்கள் பேசியதாவது:
மெட்ராஸ் மஹால் படம் மிகப்பெரிய படமாக வெற்றியடையனும். கோபியின் முதல் படம் மெட்ராஸ் மஹால் படம் பி.ஆர்.ஓ. பண்றாங்க. கோபிக்காக இந்த படம் பெரிய படமாக அமையும். சத்யா சார் சொன்னார்கள், லட்சங்கள் படம் எடுக்குறனு சொன்னாங்க. இந்த படம் லட்சியம் படமாக அமையனும், சிறு முதலீட்டு படம் தான் சினிமாவை வாழ வைக்கிறது. எல்லாருக்கும் வேலை கொடுக்குது. ஆகவே இந்த படத்திற்கு அனைவரும் உதவி பெரிய அளவில் ஓடவைக்கனும். லாபம் கிடைக்கிற அளவிற்கு சினிமா வரவேற்கனும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
வினோத் அவர்கள் பேசியதாவது :
சீனு அவர்கள் என்னுடைய நண்பர், அவரை நம்பி நான் வந்திருக்கேன். இந்த மெட்ராஸ் மஹால் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டுக்கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் நன்றி கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவு எங்களுக்கு தேவை என்றார்.
கில்டு செயலாளர் துரைசாமி அவர்கள் பேசியதாவது :
இந்த படம் மெட்ராஸ் மஹால் திரைப்படம் இன்று பூஜை நடந்தது. இந்த விழாவிற்கு வந்துள்ள ஊடக நண்பர்கள், பத்திரிக்கை நண்பர்கள், படத்தின் குழுவினர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மெர்குரி சத்யா அனைத்தையும் கூறிவிட்டார் பொதுவாகவே வர படம் தயாரிப்பில் இருக்கும்போது பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். இந்த பூஜையிலே பார்த்திங்கனா பெரிய அளவிலே இருந்தது. இந்த மெட்ராஸ் மஹால் படத்தின் போஸ்டரே அவ்வளவு ஈர்ப்பை கொடுத்துள்ளது. பெரிய எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ளது. சீனு அவர்கள் அருமையான டிசைன் செய்து இந்த படத்தின் மூலமாக அனைவரும் பெரிய அளவில் சேரனும், இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை கூறுகிறேன் என்றார்.
கில்டு துணை தலைவர் அவர்கள் பேசியதாவது : அனைவருக்கும் வணக்கம் இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கிற கில்டு துணை தலைவர் என்ற முறையில் எங்களது அமைப்போட வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மெர்குரி சத்யா அவர்கள் ஏற்கனவே சொல்லிட்டாங்க இந்த திரைப்படத்தினுடைய வெப்பத்தை சமுதாயத்தினுடைய தாக்கத்தை எப்படி ஏற்படுத்த போதுனு மெர்குரி சத்யா அடையாளப்படுத்தியிருக்கிறார். ரொம்ப அருமையான தலைப்பு மெட்ராஸ் மஹால் ஒரு சென்னைக்குள்ள என்னல்லாம் நடக்குனு மட்டுமல்ல, வடசென்னைக்குள்ள நுட்பமா உள்ள புகுந்து ஒரு கதை களைப்ப அமைத்து ஒரு சாதாரண மனிதனுடைய விவரமான செய்திகளை நுட்பமான செய்திகளை தனது அடையாளத்தை வெளியீடுது, சிறு முதலீடு படம் என்று சொன்னார்கள், எவ்வளவு பெரிய கார் வாங்கினாலும், சின்னதாக இருக்கிற போல்டு நட் தான் முக்கியம், அந்த போல் நட் போல இயக்கக்கூடிய இயங்கிக்கொண்டிருக்கற அத்தனைக்கும் உறுதுணையாக இருக்கிற அச்சானியாக மெட்ராஸ் மஹால் இருக்க போகிறது என்பதிலை ஐயமில்லை. துரை அண்ணன் சொன்னாங்க தன்னுடைய படத்தின் பர்ஸ் லுக் அனைத்து மக்களிடமும் பெரிய அளவில் போய் சேர போகிறது என்பதில் எந்தஒரு மாற்றமில்லை. அப்படிப்பட்ட ஒரு சாதனையாக இந்த படம் தொடங்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் வம்சியை போல உருவாக்கும் என்பதில்லை ஐயமில்லை. இயக்குனர் சீனு அவர்கள் நேர்த்தியாக எடுத்துக்காட்டுவார்கள். இந்த ஊடகத்துறை நண்பர்கள் தான் சரியான முறையில் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டு இந்த படத்தின் குழுவிற்கு எங்களது கில்டு சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
அனைத்து உறவுகளுக்கு வணக்கம், இந்த மெட்ராஸ் மஹால் படம் மிகப்பெரிய படமாக அமையும் என்றும் சிறு முதலீட்டு படம் என்று சொல்லாமல் இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருக்கிறார், படக்குழுவினர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மெட்ராஸ் மஹால் இந்த படம் வடசென்னையை வைத்து எடுத்த படம், இந்த படத்தை அனைவரும் பார்க்கவேண்டும் ஒரு நான்கு நபர்களை வைத்து எடுத்திருக்கிறார்கள் அனைவரும் சப்போர்ட் பண்ண வேண்டும் என்று கூறினார்.
ஹீரோயின் அக்ஷரா கார்த்திக் அவர்கள் பேசியதாவது: மெர்குரி சத்யா அவர்களுக்கு நன்றி, சீனு அவர்களுக்கும் நன்றி அனைவரும் இப்படத்தை வாழ்த்தி பாராட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இசையமைப்பாளர் துளசிராமன் அவர்கள் பேசியதாவது
இந்த படத்தில் இரண்டு பாடல்கள் உள்ளது. மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன், தயாரிப்பாளர் அவர்களுக்கும், இந்த படத்திற்கு வாய்ப்பு கொடுத்ததற்கு மிகவும் நன்றி. பத்திரிக்கையாளர் தயவு செய்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
ஹீரோ சஞ்சய் அவர்கள் பேசியதாவது : மெட்ராஸ் மஹால் படத்தை அனைவரும் வாழ்த்தி முக்கியமாக தயாரிப்பாளர் அவர்களுக்கும், இயக்குனர் அவர்களுக்கும், நன்றி, தியேட்டரில் பார்த்து இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்குமாறு பத்திரிக்கையாளரிடம் கேட்டுக்கொள்கிறேன்.
சபரி நாதன் அவர்கள் பேசியதாவது :
வணக்கம், இந்த படத்திற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி
முன்னணி நடிகர் தனுஷ் “DCutz By Dev” சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி வைத்தார் !!
DCutz By Dev” சலூனை திறந்து வைத்த முன்னணி நடிகர் தனுஷ்
முன்னணி நட்சத்திர நடிகர் தனுஷ், பிரபல சிகையலங்கார நிபுணர் தேவ் அவர்களின் , “DCutz By Dev” எனும் பிரீமியம் சலூனை, சென்னை ஆர்.ஏ.புரத்தில் துவங்கி வைத்தார். இந்த சலூனின் திறப்புவிழாவில், திரையுலக பிரமுகர்களும், தொழில்முறை நிபுணர்களும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
தேவ், தென்னிந்தியத் திரையுலகில் பிரபலமான சிகையலங்கார நிபுணராகப் புகழ் பெற்றவர். தமிழ்த் திரையுலக முன்னணி நட்சத்திரங்களுடன் பணியாற்றி, அவர்களுக்குத் தனி ஸ்டைலை கட்டமைத்தவர். தனிப்பட்ட சிகை அலங்காரத்தில் அவரது திறமை மிகவும் பிரசித்தி பெற்றது. இப்போது, தனது திறமையையும், தனித்த ஸ்டைலையும் “DCutz By Dev” மூலம், பரந்த அளவில் அனைத்து மக்களுக்கும் கொண்டு செல்ல இருக்கிறார்.
DCutz By Dev அதன் அதிநவீன வசதிகள், நிபுணத்துவ ஸ்டைலிஸ்டுகள் மற்றும் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்புடன் சிகை அலங்காரம் மற்றும் அழகுபடுத்தலை இன்னும் விரிவாகக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. இந்த சலூன் இப்போது பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டுள்ளது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல்
சன் மூன் யுனிவர்ஸல் பிக்சர்ஸ் டாக்டர் ரவிச்சந்திரன் வழங்க, ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. முன்னணி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இப்பாடலை வெளியிட்டுள்ளார். க்ரைம் திரில்லராக தயாராகியுள்ள இந்த திரைப்படத்தை ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் இசையில், ஆதித்யா ஆர் கே குரலில், மனதை வருடும், துள்ளலான காதல் பாடலாக, இப்பாடல் அனைவரின் இதயத்தை கொள்ளை கொள்கிறது. இந்த அழகான பாடல், வெளியான வேகத்தில் இசை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், ‘பிக் பாஸ்’ அபிராமி, ராம்குமார், ஜி. கே. ரெட்டி, லோகு, எழுத்தாளரும், நடிகருமான வேல.ராமமூர்த்தி, தங்கதுரை, பிராங்க் ஸ்டார் ராகுல், ஒ. ஏ. கே. சுந்தர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.
இறுதி கட்டப் பணிகள் முடிந்த நிலையில், படத்தை வெளியிடும் பணிகளில் படக்குழு பரபரப்பாக இயங்கி வருகிறது. இப்படத்தின் இசை, டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்பு, விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, தமிழ் ரசிகர்களுக்கென பல பிரத்தியேகமான படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. தற்போது தனது அடுத்த ஒரிஜினல் காமெடி சீரிஸான “செருப்புகள் ஜாக்கிரதை” சீரிஸை வெளியிட்டுள்ளது. S Group சார்பில் தயாரிப்பாளர் சிங்காரவேலன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த அதிரடி காமெடி சீரிஸில், சிங்கம்புலி, விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த சீரிஸின் முன் திரையிடல் பத்திரிகை ஊடக நண்பர்களுக்காகப் பிரத்தியேகமாகத் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்
ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன் பேசியதாவது… கடந்த அக்டோபரில் ஐந்தாம் வேதம் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஹிட்டானது, அந்த சீரிஸுக்கு நீங்கள் தந்த ஆதரவுக்கு நன்றி. செருப்புகள் ஜாக்கிரதை மிக வித்தியாசமான சீரிஸ், மத்த வெப் சீரிஸ் மாதிரி இல்லாமல் எழுதவே மிகவும் அதிக டைம் எடுத்தது. 2 மணி நேரத்தை ஒரு சீரிஸாக கொடுக்கும் முயற்சி தான் இது. இனி தொடர்ந்து ZEE5 ல் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை இந்த மாதிரி சீரிஸ் வரும். அந்த வகையில் செருப்புகள் ஜாக்கிரதை முதல் புராஜக்ட். மிக சிம்பிளான லைன், ஆனால் அதை சுவாரஸ்யாமாக கொடுத்துள்ளோம், ராஜேஷ் சூசைராஜ் ஐந்தாம் வேதம் முதலே தெரியும் மிகத் திறமைசாலி, இந்த சீரிஸை சாத்தியமாக்கிய தயாரிப்பாளர் சிங்காரவேலன் மற்றும் அரவிந்தன், ராஜேஷ் சூசை ராஜ் ஆகியோருக்கு நன்றி. இந்த மாதிரி கதை நீங்கள் தான் நடிக்க வேண்டும், என்றவுடன் உடனே ஓகே சொன்ன சிங்கம்புலி அண்ணாவுக்கு நன்றி. ஐந்தாம் வேதம் சீரிஸில் என்னை ரொம்பவும் இம்ரெஸ் செய்தவர் விவேக் ராஜகோபால், மிக எளிதாக நடிப்பால் நம்மை அவர் பக்கம் ஈர்த்து விடுகிறார். அவருக்கு வாழ்த்துக்கள். ஐரா அகர்வால் மொழி தெரியாமலே டப்பிங் செய்துள்ளார், வாழ்த்துக்கள். தொழில் நுட்ப கலைஞர்கள் மிக அற்புதமாக பணியாற்றியுள்ளனர். நடித்த அனைவருக்கும் நன்றி. வேற வேற ஜானர்களில் ZEE5லிருந்து பல படைப்புகள் வரவுள்ளது. உங்களுக்குப் பிடித்தமாதிரி படைப்புகள் தொடர்ந்து வரும். ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பாளர் சிங்காரவேலன் பேசியதாவது… முன்னதாக மதில் எனும் ஓடிடி படைப்பைத் தயாரித்துள்ளோம், இப்போது செருப்புகள் ஜாக்கிரதை உருவாக ஆதரவாக இருந்த ZEE5 கௌசிக் நரசிம்மனுக்கு நன்றி. இந்தக் கதை சிறப்பாக வர வேண்டும் என்றால் சிங்கம் புலி தான் வேண்டுமென நினைத்தோம், எங்களை நம்பி வந்த சிங்கம்புலி சாருக்கு நன்றி. இந்த அருமையான கதையைத் தந்த எழுச்சூர் அரவிந்தன் அவர்களுக்கு நன்றி. இந்த கதையைத் திரையில் உயிர்ப்பித்த ஒளிப்பதிவாளர் கங்காதரனுக்கு நன்றி. இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் மிக அற்புதமாக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளார். உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
ஒளிப்பதிவாளர் கங்காதரன் பேசியதாவது… இந்த வாய்ப்பைத் தந்த ராஜேஷுக்கு நன்றி, ராஜேஷ் மிக நெருங்கிய நண்பர், இதை ஒப்புக்கொண்ட கௌஷிக் சார், சிங்கார வேலன் சாருக்கு நன்றி. சிங்கம்புலி அண்ணா முழு ஒத்துழைப்புத் தந்தார், அவருக்கு என் நன்றிகள். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. அனைவரும் இந்த சீரிஸ் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர்கள் எல் வி முத்து & கணேஷ் பேசியதாவது… இந்த வெப் சீரிஸ் ZEE5 உடன் இரண்டாவது படைப்பு, அவர்களுக்கு எங்கள் நன்றி. இதில் வாய்ப்புத் தந்த சிங்காரவேலன் சாருக்கு நன்றி. நண்பர் ராஜேஷ் அருமையான காமெடி டைரக்டர். சிங்கம்புலி அண்ணாவைத் திரையில் பார்த்தாலே சிரிப்பு வரும், அருமையாக நடித்துள்ளார். விவேக் ராஜகோபால், ஐரா அகர்வால், லொள்ளு சபா மனோகர் எல்லோருமே அட்டகாசமாக நடித்துள்ளனர். அவர்கள் நடிப்புக்கு இசையமைப்பது எளிதாக இருந்தது. ராஜேஷ் அருமையாக இந்த சீரிஸை உருவாக்கியுள்ளார். இந்த சீரிஸ் வெளியாகியுள்ளது அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
கதை வசனகர்த்தா எழுச்சூர் அரவிந்தன் பேசியதாவது… நண்பர் கௌஷிக்கும் நானும் 22 வருட நண்பர்கள். நல்ல காமெடி கதை வைத்திருக்கிறீர்களா எனத் திடீரென கேட்பார், அடுத்த விவாதத்தில், 2 வாரத்தில் துவங்கி விடும். கே எஸ் ரவிக்குமார் நடிப்பில், மதில் ZEE5 க்காக எழுதினேன், உடனே கே எஸ் ரவிக்குமார் டீமில் எழுத்தாளாராக சேர்ந்து விட்டேன், அடுத்து இந்த சீரிஸில் நடித்த விவேக் ராஜகோபால் நண்பர் படத்தில் இப்போது வேலை செய்கிறேன். இப்படி புதுப்புது வாய்ப்புகள் ZEE5 மூலம் கிடைத்துள்ளது. எப்போதும் எனக்கு உதவும் குணமுள்ளவர் தயாரிப்பாளர் சிங்காரவேலன், என்ன வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் ஒரு போன் செய்தால் செய்து விடுவார். ராஜேஷ் மகா உழைப்பாளி, மிக அருமையாக உழைத்துள்ளார். கங்காதரன் ஒளிப்பதிவு மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இந்தக்கதையின் முக்கிய தூண் சிங்கம்புலி அண்ணன், அவர் நடிப்பைப் பார்த்தாலே சிரிப்பு வரும். இதில் எல்லோரையும் சிரிக்க வைத்துள்ளார். எல்லா நடிகர்களும் மிக நன்றாக நடித்துள்ளனர். இந்த படைப்பில் பணியாற்றிய கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. ZEE5 ல் இன்னும் தொடர்ந்து நிறையக் கதைகள் செய்ய ஆசைப்படுகிறேன், நன்றி
ஐரா அகர்வால் பேசியதாவது… மிக மிக மகிழ்ச்சியாக உள்ளது நான் நடித்த வெப் சீரிஸ் வெளியாகியுள்ளது. ZEE5 கௌசிக் நரசிம்மன் சார், தயாரிப்பாளர் சிங்காரவேலன் சாருக்கு நன்றி. வாய்ப்பு தந்த ராஜேஷ் சாருக்கு நன்றி. நான் நடித்ததில் எந்த படத்திலும் இந்தளவு சந்தோஷமாக இருந்ததில்லை, இந்த ஷூட்டிங் ஸ்பாட் வெகு கலகலப்பாக இருந்தது. டைரக்டர் ராஜேஷ் மிகமிக அமைதியானவர், அற்புதமாக உருவாக்கியுள்ளார். சிங்கம் புலி சார் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார். கங்காதரன் சார் எனக்கு முழு ஆதரவு தந்தார். எல்லோரும் மிக அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார்கள். உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் விவேக் ராஜகோபால் பேசியதாவது… முதலில் பத்திரிகையாளர்களுக்கு நன்றி, மதில் படைப்புக்கு முழு ஆதரவு தந்தீர்கள், அதனால் தான் இங்கு நான் நிற்கிறேன். செருப்புகள் ஜாக்கிரதை படைப்புக்கும் முழு ஆதரவு தாருங்கள். ZEE5 க்கு நன்றி. முழு ஆதரவு தந்த தயாரிப்பாளர் சிங்காரவேலன் சாருக்கு நன்றி. சிங்கம்புலி சார் அவ்வளவு சேட்டை, லவ்லி ஹியூமன், எல்லோரையும் சிரிக்க வைப்பார் என்ன கேட்டாலும் சொல்லித் தருவார். இயக்குநர் ராஜேஷ் என்னிடம் நிறையக் கதை சொல்லியுள்ளார், எனக்கு வாய்ப்பு வந்தால் உன்னைக் கூப்பிடுவேன் என்றார். மை டார்லிங்க் ராஜேஷ் சாருக்கு நன்றி. இதில் நடித்த அனைவருக்கும் நன்றி. இந்த படைப்பிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் பேசியதாவது… முதல் நன்றி ZEE5 கௌசிக் நரசிம்மன் சாருக்கு தான், அவர் மூலம் தான் இந்த வாய்ப்பு கிடைத்தது, ஐந்தாம் வேதம் மூலம் தான் அவர் அறிமுகம் கிடைத்தது. அவரது சினிமா அனுபவம் கற்றுக்கொள்ள வேண்டியது, என்ன சந்தேகம் கேட்டாலும் எளிதாகத் தீர்த்து விடுவார். அவருக்கு என் நன்றி. அவர் தான் சிங்காரவேலன் சாரிடம் அனுப்பி வைத்தார், தயாரிப்பைத் தாண்டி மிக நல்ல மனிதர். கௌசிக் சார், சிங்காரவேலன் இருவரால் தான் நான் இயக்குநர் இருவருக்கும் நன்றி. சிங்கம் புலி சார் டாமினேட் செய்வார் என்று சொன்னார்கள், ஆனால் அவர் அப்படிப்பட்டவர் இல்லை, மிக மிக இனிமையான மனிதர், மிக அருமையாக நடித்துள்ளார். ஐரா அகர்வால் துறுதுறுப்பான பெண், ஷூட்டிங்கில், எங்களை விட அவர் நிறைய ரீல்ஸ் எடுத்துள்ளார். டார்லிங்க் விவேக், ஐந்தாம் வேதத்தில் அவர் நடிப்பு பார்த்து பிரமித்திருக்கிறேன். இந்தக்கதை ஒகே ஆனவுடன் அவரைத்தான் அழைத்தேன், நன்றாக நடித்துள்ளார். நான் அசோஷியேட்டாக வேலை பார்த்த போது, கங்காதரனும் அசோஷியேட், நான் இயக்குநர் ஆனால் நீ தான் கேமராமேன் என்றேன் ஆக்கிவிட்டேன். இதில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த சீரிஸ் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் சிங்கம்புலி பேசியதாவது… ZEE5 நிறுவனத்திற்கு முதல் நன்றி. தயாரிப்பாளார் சிங்காரவேலன் அவர்களுக்கு நன்றி. அரசாங்கம் எல்லோரையும் மொத்தமாகப் பால் வாங்கி வைக்கச் சொன்னார்கள் அல்லவா? அப்போது ஆரம்பித்தது இந்த சீரிஸ். எழுத்தாளர் எழுச்சூர் அரவிந்தன் பேச பேச காமெடியாக இருக்கும் அவரிடம் அத்தனை கதை இருக்கிறது. அவர் இன்னும் உயரம் தொட வேண்டும். தயாரிப்பாளர் இன்னும் அப்பாவியாக இருக்கிறார், கங்காதரன் நான் கருப்பன் செய்யும் போது, அவர் அஸிஸ்டெண்ட், இதில் அவர் ஒளிப்பதிவு எனும் பொது, அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதன். விவேக் ராஜகோபால் மிகப்பெரிய திறமைசாலி. மிக நன்றாக நடித்துள்ளார். ஐரா மிக அழகானவர் மிகத்திறமைசாலி. இந்த சீரிஸில் நடித்த அனைவரும் மிகத் திறமையானவர்கள் நன்றாகச் செய்துள்ளார்கள். ZEE5 எங்கள் எல்லோரையும் மிக நன்றாகப் பார்த்துக் கொண்டார்கள். செருப்பு, டெட்பாடி, இரண்டை வைத்து மிக அருமையாக காமிக்கலாக இந்தக்கதையை எழுதியுள்ளார்கள். ராஜேஷ் சூசை அற்புதமாக எடுத்துள்ளார். இந்த சீரிஸில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இந்த டீமுக்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் எம் ராஜேஷ் பேசியதாவது… புதிய இளமையான டீம், செருப்புகள் ஜாக்கிரதை டைட்டிலே மிக அழகாக இருக்கிறது. ZEE5 அடுத்தடுத்து நிறைய புராஜக்ட் செய்யப்போவதாக கௌஷிக் சொன்னார், அது நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பைத் தரும் அதற்காக அவருக்கு நன்றி. சிங்காரவேலன் என் நெருங்கிய நண்பர், அவருக்கு வாழ்த்துக்கள். சிங்கம்புலி அண்ணாவுடன் கடவுள் இருக்கான் குமாரு வேலை பார்த்தேன், ஆனால் மாகாராஜா பார்த்து அவர் மீது பயமே வந்து விட்டது, அவர் வந்து பேசியபிறகு தான், நம்ம அண்ணன் என்ற உணர்வு வந்தது, இப்படி ஒரு கேரக்டர் அவருக்கு கிடைத்தது அருமை, அவர் திறமை பெரிது. அவருக்கு வாழ்த்துக்கள். விவேக் ராஜகோபால் நன்றாக நடிக்கிறார். இந்த சீரிஸில் வேலை பார்த்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். சீரிஸ் வெற்றி பெற என் வாழ்த்துக்கள் நன்றி.
ரசிகர்களை முழுமையாக மகிழ்விக்கும் வகையில், முற்றிலும் நகைச்சுவையை மையமாக வைத்து, ரசிகர்கள் குலுங்கி சிரித்து மகிழும் வகையிலான காமெடி சீரிஸாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.
இந்த சீரிஸில் முதன்மைப் பாத்திரத்தில் நடிகர் சிங்கம்புலி நடித்திருக்கிறார். இவருடன் விவேக் ராஜகோபால், இரா அகர்வால், லொள்ளு சபா மனோகர், இந்திரஜித், மாப்ள கணேஷ், உசேன், சபிதா, உடுமலை ரவி, பழனி, சேவல் ராம், டாக்டர் பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
28 மார்ச் முதல் ZEE5 ல், செருப்புகள் ஜாக்கிரதை சீரிஸை பார்த்து மகிழுங்கள்!!