தமிழ்செல்வி தன் கனவை வெல்ல 1 லட்சம் திரட்டுவாளா ? – விஜய் டிவி “சின்ன மருமகள்” தொடரின் நெஞ்சைத் தொடும் கதை!
அதிர வைக்கும் சம்பவங்கள், பரபரக்கும் திருப்பங்களுடன், “சின்ன மருமகள்” நெடுந்தொடர், உங்கள் விஜய் டிவியில் !!
தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் “சின்ன மருமகள்”. பெண் ரசிகர்கள் தனித்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடர், அதிரடி திருப்பங்களுடன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாக பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த வாரம், வீட்டை விட்டு வெளியே வந்து, கணவனையும் தகப்பனையும் உதறி, தன் கனவைச் சாதிக்க தமிழ்செல்வி மேற்கொண்ட பயணம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த வார தொடரில், தமிழ்செல்வி மருத்துவராகும் தன் கனவை நிறைவேற்ற, அவளுக்குத் தேவைப்படும் 1 லட்சம் ரூபாயைத் திரட்ட, மொய் விருந்து வைக்கத் திட்டமிடுகிறாள். அவளின் திட்டத்தை உடைக்க சாவித்திரி, கிடா விருந்து வைக்கத் திட்டமிடுகிறாள். சாவித்திரியை எதிர்த்து தமிழ்செல்வி ஜெயிப்பாளா? தன் கனவைச் சாதிக்க 1 லட்சம் அவளால் திரட்ட முடியுமோ? என பரபரப்பு திருப்பங்களுடன், இந்த தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
தமிழ்செல்வி தற்போது ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராக மாறியுள்ளார். தமிழக மக்கள் அவளை தங்கள் வீட்டுப் பெண்ணாகப் பார்க்கிறார்கள். அவளது கனவு ஜெயிக்குமா ? என ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.
தமிழசெல்வியின் இந்த பரபரப்பான பயணத்தைத் தெரிந்து கொள்ள, இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் 9.30 மணிக்கும் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசியுங்கள்.
~ டிடி நெக்ஸ்ட் லெவல் படம், டிஜிட்டலில் வெளியாவதற்கு முன்னதாகவே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ~
ZEE5 தளத்தில் அடுத்து வெளியாகவுள்ள ஹாரர்-காமெடி திரைப்படமான டெவில்ஸ் டபுள் : நெக்ஸ்ட் லெவல் படம், அதிகாரப்பூர்வ டிஜிட்டல் வெளியீட்டுக்கு முன்னதாகவே, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் வெளியீடு குறித்தான டிரெய்லரும், புரமோ விடியோக்களும், சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. வித்தியாசமான களத்தில், ஹ்யூமர் மற்றும் அதிரடி சினிமா அனுபவத்தின் கலவையாக உருவாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சந்தானம், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி நடித்துள்ள இந்தப்படம், ஜூன் மாதத்தின் மிகவும் பேசப்படும் ஓடிடி ரிலீஸாக மாறியுள்ளது. படம் மீதான எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்த டிஜிட்டல் வெளியீட்டில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும். ZEE5 தளத்தில் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இப்படத்தை கண்டுகளிக்கலாம் !
இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படி தப்பி வெளியில் வருகிறான்? என்பது தான் இப்படத்தின் கதை. வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அதிரடி பயணத்திற்கு தயாராகுங்கள்.
ZEE5-தளத்தில் ஜூன் 13 முதல் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ பார்த்து ரசியுங்கள்
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, அடுத்ததாக அதிரடி வெற்றித் திரைப்படமான “டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெவல், எனும் டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிடி வெற்றிப்பட வரிசையில், நான்காவது பாகமாக வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
எழுத்தாளர்-இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில், கலக்கல் நகைச்சுவை நாயகன் சந்தானம் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அதிரடி-திகில்-நகைச்சுவை, ஜம்ப்-ஸ்கேர்ஸ், நையாண்டி மற்றும் ஸ்லாப்ஸ்டிக் ஆகிய ஜானர்களின் சுவாரஸ்யமான கலவையாக, அனைத்து வகை ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில், உருவாகியுள்ளது. இறந்துபோன திரைப்பட இயக்குநரின் பழிவாங்கும் எண்ணத்தால், ஒரு திரைப்படத்திற்குள் சிக்கிக்கொள்ளும் விமர்சகன், அங்கு இருக்கும் டைரியின் சக்தியை மீறி, அந்த மாயாஜால சக்தியை மீறி, ஜெயிக்கிறானா ? படத்திலிருந்து வெளியில் வந்தானா? என்பது தான் இப்படத்தின் மையம்.
இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படி வெளியில் வருகிறான் என்பது தான் இப்படத்தின் கதை.
ZEE5 இன் மூத்த துணைத் தலைவர் தென்னிந்திய மார்க்கெட்டிங் மற்றும் வணிகத் தலைவர் லாயிட் சி சேவியர் கூறியதாவது…, “ZEE5 இல், புதுமையான கதைக்களத்தில், ரசிகர்களை ஈர்த்த வெற்றித் திரைப்படங்களைக் கொண்டுவருவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். தென்னிந்திய கதைகளுக்கு, இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. “டிடி நெக்ஸ்ட் லெவல்” முற்றிலும் வித்தியாசமான களத்தில், ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும். இப்படத்தினை எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.
எழுத்தாளர் மற்றும் இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் கூறியதாவது…, “டிடி நெக்ஸ்ட் லெவல் மூலம், பாரம்பரிய திகில் அனுபவத்திலிருந்து மாறுபட்டு, நகைச்சுவையின் எல்லைகளைத் தாண்டி, முற்றிலும் புதுமையான ஒரு உலகத்தை உருவாக்க விரும்பினேன். தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதும், சந்தானம், செல்வராகவன், கௌதம் மேனன் மற்றும் கீதிகா திவாரி உள்ளிட்ட அற்புதமான நடிகர்களின் பங்களிப்பிலும், அந்த கற்பனை உலகத்தை உயிர்ப்பிக்க முடிந்தது. வழக்கமான கதை சொல்லலிருந்து மாறுபட்டு, ஒவ்வொரு திருப்பத்திலும் ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு படத்தை வடிவமைத்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. படத்தின் டிஜிட்டல் பிரீமியருக்கு ZEE5 ஐ விடச் சிறந்த தளம் இருக்க முடியாது. ZEE5 மூலம் இப்படம், உலகம் முழிக்கவிருக்கும் அனைத்து ரசிகர்களையும் சென்றடையவுள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.
நடிகர் சந்தானம் கூறியதாவது.., “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தில் நடித்த கிஸ்ஸா கதாப்பாத்திரம், சமீப காலங்களில் நான் ஏற்று நடித்ததிலேயே மிகவும் திருப்திகரமான கதாபாத்திரமாக்கும். கிஸ்ஸா தைரியமானவன், விசித்திரமான குணங்கள் நிறைந்தவன். கிஸ்ஸா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது மிகுந்த சவால் வாய்ந்ததாகவும், சந்தோசமான அனுபவமாகவும் இருந்தது. இப்போது இப்படம் ZEE5 மூலம் உலகமெங்குமுள்ள பார்வையாளர்களைச் சென்றடைவது மகிழ்ச்சி. நீங்கள் இதுவரை பார்த்த திரைப்படங்களைத் தாண்டி, இந்தப்படம் உங்களை அடுத்த லெவலுக்கு கூட்டிச் செல்லும்.
ZEE5 ல் வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல், டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள்!!
~ இந்தியாவின் நவீன தன்மையும், அதன் பன்மொழித் தன்மையையும் பிரதிபலிக்கும் புதிய பிராண்ட் லோகோ! ~
~ “பல மொழிகள், முடிவற்றக் கதைகள்” என்ற பிராண்ட் பிரச்சாரம் – உணர்ச்சி பிணைப்பையும், மொழிப் பெருமையையும் கொண்டாடும் புதிய முயற்சி ~
~ 7 மொழிகளில் UHD மற்றும் Dolby Atmos உடன் தொடங்கும், மொழியை மையப்படுத்திய சப்ஸ்கிரிப்ஷன் பிளான்கள் ₹120 முதல் துவங்குகிறது ~
~ 2025-26 நிதியாண்டில், 130க்கும் மேற்பட்ட புதிய சீரிஸாகவும், திரைப்படங்கள், நான்பிக்சன் மற்றும் லைவ் நிகழ்ச்சிகள் பல மொழிகளில் ~
இந்தியா, 7 ஜூன் 2025 – ZEE5 இன்று தனது புதிய பிராண்டு அடையாளத்தையும், எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான மாற்றத்தையும் அறிவித்து, இந்தியாவின் முன்னணி உள்ளூர் OTT தளமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. “நம்ம மொழி நம்ம கதைகள்” எனும் வாக்குறுதியுடன், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நெடுங்கதைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், ZEE5 புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.
இந்த புதிய மாற்றத்தில், மொழியை மையப்படுத்திய பல புதிய திட்டங்கள், AI சார்ந்த பர்ஸ்னலைஸ்ட் பரிந்துரைகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட கஸ்டமர் அனுபவம் ஆகியவை அடிப்படை அம்சமாக இருக்கும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு மொழிக்குமான கண்டண்ட் பிளான்கள் தனித்தனியாக உருவாக்கப்படுகின்றது.
மொழி அடிப்படையிலான சந்தா திட்டங்கள் ₹120/மாதம் முதல் தொடங்க, இந்தி (பஞ்சாபி மற்றும் போஜ்புரி உட்பட) ₹220/மாதம், All Access Pack ₹320/மாதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் வருடாந்திர சலுகை கட்டணமும் உள்ளது.
ZEE நிறுவனத்தில் வரவிருக்கும் முக்கிய மொழி சார்ந்த சீரிஸ்கள் :
Detective Sherdil (இந்தி)
Chhal Kapat: The Deception (இந்தி)
சட்டமும் நீதியும் (தமிழ்)
Mothubaru Love Story (தெலுங்கு)
Inspection Bungalow (மலையாளம்)
Maarigallu (கன்னடம்)
Aata Thambhahya Naay (மராத்தி)
Vibhishan (பெங்காலி) ஆகிய படைப்புகள் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.
ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் தலைவர் அமித் கோயங்கா கூறியதாவது… “இந்திய பார்வையாளர்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஆழமான பர்ஸ்னலைஸ்ட் செய்யப்பட்ட, மொழிக்கு முதன்மையான தளமாக மாறுவதற்கான எங்கள் பயணத்தில் எங்கள் புதிய பிராண்ட் அடையாளம் ஒரு முக்கிய படியாக இருக்கும். ZEE இந்த புதிய பிராண்ட், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில், எங்கள் தடத்தை வலுப்படுத்துதல், கலாச்சார ரீதியாக பொருத்தமான கதைசொல்லல் மூலம் ரசிகர்களின் ஈடுபாட்டை ஆழப்படுத்துதல் மற்றும் பர்ஸ்னலைஸ்ட் செய்யப்பட்ட மற்றும் உள்ளுணர்வு கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த, வசதியான தளத்தைத் தொடர்ந்து உருவாக்குதல் என செயல்படும். இது உலகளவில் இந்தியப் பொழுதுபோக்கு படைப்புகளைக் கண்டறிந்து, இணைத்து, நுகரும் விதத்தில் ஒரு புதிய கலாச்சார மாற்றமாகும்”
ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி கார்த்திக் மகாதேவ் கூறுகையில்.., “நம்ம மொழி நம்ம கதைகள்” என்ற வாசகத்துடன் கூடிய எங்கள் பிராண்ட் பிரச்சாரம், மொழி அடிப்படையிலானது, ஒரு ஆழமான பர்ஸனலைஸ் உணர்வுகளின் கொண்டாட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் மொழியில் சொல்லப்படும் ஒரு கதை, அதை வெறும் கதையாக பார்க்காமல், அதை வாழ்ந்தது போல உணர வைப்பது தான் எங்கள் நோக்கம். 7 மொழிகளில் வடிவமைக்கப்பட்ட இந்த பன்மொழி பிரச்சாரம், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் உட்பட பெரிய மற்றும் சிறிய நகரங்களின் கலாச்சாரத்துடன் எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மொழி அடிப்படையிலான இந்த திட்டம், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதும், அவர்கள் மொழியில் அவர்கள் கலாச்சாரத்தில் படைப்புகளை வழங்க வேண்டும் என்ற ZEE5 இன் நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறது.
ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை உள்ளடக்க அதிகாரி ராகவேந்திரா ஹுன்சூர் கூறுகையில்.., “ZEE5 இல், சக்திவாய்ந்த கதைசொல்லல் ஆழமான கலாச்சார நுண்ணறிவுடன் தொடங்குகிறது என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட மொழி சார்ந்த பார்வையாளர்களுக்குச் சேவை செய்வதில், நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அவர்களின் யதார்த்தங்கள், அவர்களின் மொழிகள் மற்றும் அவர்களின் அன்றாட கதைகளில் இணைந்து, நாங்கள் எதை உருவாக்குகிறோம் என்பதை மட்டுமல்ல – யாருக்காக உருவாக்குகிறோம் என்பதையும் இதில் விரிவுபடுத்தியுள்ளோம். அது நீண்ட வடிவ ஒரிஜினல் கதைகள், குறுகிய வடிவ கதைகள் அல்லது சோதனை வடிவங்கள் என எதுவாக இருந்தாலும், பார்வையாளர்களை அவர்களின் மொழிகளில் மகிழ்விப்பதே எங்கள் குறிக்கோள். இது வெறும் புதுமையான கண்டண்ட் உள்ளடக்க உத்தி மட்டும் அல்ல – பார்வையாளர்கள் முழுமையாக ரசிக்கும் வகையில் மொழியை மையப்படுத்தி, எங்கள் புதிய படைப்புகளை வழங்கவுள்ளோம்”
இந்த புதிய பிராண்டிங் மாற்றம், ‘Yours Truly, Z’ எனும் Zee நிறுவன வாக்குறுதியுடன் மிக இயல்பாக ஒத்துப்போகிறது. இது ZEE5-ன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்காக, பல்வேறு மொழிகளில் புதுமையான கண்டண்ட்களை வழங்கும் ஒரே தளமாக ZEE5 தன்னை நிலைநிறுத்தி வருகிறது.
தன்னம்பிக்கையின் சிலையாக தமிழ்ச்செல்வி – விஜய் டிவி “சின்ன மருமகள்” தொடரின் நெஞ்சைத் தொடும் கதை!
வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!
தமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.
பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு, தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கி உழலும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு, நம் தமிழ்ப்பெண்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் உழலும், தமிழ்செல்வியின் கதையை சொல்லும், “சின்ன மருமகள்” தொடர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.
இத்தொடரின் கதை, இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் தமிழ்ச்செல்வி, திருமணமான நிலையில், மாமியார் வீட்டின் சிக்கல்களால், தான் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் சொல்கிறாள். அந்த உண்மை தெரியவர, அவள் தந்தை வீட்டுக்கு விரட்டப்படுகிறாள். ஆனால் தந்தையும் கடன் வாங்கி குடித்துவிட்டுத் திரிய, தந்தை வீட்டை உதறுகிறாள். அவள் உண்மையிலேயே கர்ப்பம் என்பது தெரிய வர, அதை நம்ப மறுக்கும் கணவனையும் உதறி, நான் தனியாக என் கனவை அடைவேன் எனச் சவால் விட்டுக் கிளம்புகிறாள்.
தனியாகக் கணவனையும், தந்தையையும் எதிர்த்து வெளியே வரும் தமிழ்ச்செல்வி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வாள்? தடைகளை மீறி அவள் ஜெயிப்பாளா?, அவள் மருத்துவகனவு என்னவாகும்? என, இந்தத் தொடர் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்
~ இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்கத்தில், குஷி ரவி, அக்ஷயா நாயக் மற்றும் மானசி சுதீர் நடிப்பில் உருவான ZEE5-இன் அய்யனா மானே – கர்நாடகத்தின் பெருமையாகவும், ஓடிடி உலகின் அடுத்த பிளாக்பஸ்டர் சீரிஸாகவும், சாதனை படைத்து வருகிறது ~
இளைஞர்களின் இதயம் கவர்ந்த நடிகை குஷி ரவி நடிப்பில், சமீபத்தில் வெளியான ZEE5 இன் முதல் கன்னட ஓரிஜினல் வெப் சீரிஸான “அய்யனா மானே” பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் தற்போது 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மக்களின் உள்ளார்ந்த கலாச்சார அம்சத்தோடு, நவீனத்தை இணைக்கும் ZEEயின் கதைகளில் இது ஒரு சிறந்த படைப்பாக அமைந்துள்ளது. ஆறு எபிசோடுகளைக் கொண்ட இந்த திரில்லர் சீரிஸை, இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்க, ஸ்ருதி நாயுடு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ZEE5 டிஜிட்டல் உலகில் தனது தனித்துவமான நிபுணத்துவத்தால், இன்றைய தலைமுறையை ஈர்க்கும், நல்ல கதைகளைத் தருவதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. “அய்யனா மானே” குடும்பத்துடன் முழுவதும் ரசிக்கக்கூடிய ஒரு உணர்ச்சிப் பூர்வமான திகில் அனுபவமாக அமைந்துள்ளது. இளைஞர்களின் கனவுக்கன்னி குஷி ரவி பாத்திரம், தனித்த பாராட்டுக்களைப் பெற்று வருவதுடன், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது. தியா திரைப்படம் குஷி ரவிக்கு, தமிழிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுத் தந்துள்ள நிலையில், “அய்யனா மானே” சீரிஸ் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் தளங்களில் இதன் டிரெய்லர் மட்டும் 14-15 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸின் இந்தி டப்பிங் தேசிய ரீதியில் அதிகமான பார்வையாளர்களைப் பெற உதவியுள்ளது.
சிக்கல் நிறைந்த சிக்மங்கலூர் மலைப்பகுதியில் வாழும் சக்திவாய்ந்த அய்யனா மானே குடும்பம் ஒரு பயங்கரமான ரகசியத்தை மறைக்கிறது – அக்குடும்பத்தில் மூன்று மருமகள்கள் மர்மமான முறையில் இறந்துபோகின்றனர், ஒவ்வொரு மரணமும் குடும்பத்தின் தெய்வமான கொண்டையாவுடன் தொடர்புடையதாக உள்ளது. ஜாஜி (குஷி ரவி) அக்குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளும்போது, ஒரு புதிய தொடக்கமாக இருக்க வேண்டிய அவரது வாழ்வு, விரைவாகவே சாபமிக்க கனவாக மாறுகிறது. சாபங்களின் கிசுகிசுக்கள், அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் பழம்பெரும் மரபுகள் என எல்லாம் இணைந்து, ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி விளையாடுகிறதா? அல்லது வீட்டிற்குள் இன்னும் மோசமான ஏதோ ஒன்று பதுங்கியிருக்கிறதா? என்று அவளைக் கேள்வி கேட்க வைக்கின்றன. குடும்பப் பணிப்பெண் தாயவ்வா மற்றும் காவல்துறை அதிகாரி மகாந்தேஷ் ஆகியோரின் உதவியுடன், அவள் ஆழமாக விசாரிக்கும் போது, ஒவ்வொரு பதிலும் இன்னும் பயங்கரமான கேள்விகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது என்பதை ஜாஜி உணர்கிறாள். அவள் விதியின் வலையில் சிக்கிக் கொண்டாளா? மேலும் முக்கியமாக – அவள் உயிருடன் தப்பி வருவாளா? என்பது தான் இந்த சீரிஸின் கதை.
நடிகை குஷி ரவி கூறுகையில்: ”‘அய்யனா மானே’ ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த கதாபாத்திரத்தில் பயம், எதிர்பார்ப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவது சவாலானதாய் இருந்தது, ஆனால் அதே சமயம் எனக்கு மிகவும் திருப்தி அளித்த பாத்திரமாக அமைந்தது. இந்த சீரிஸ் இந்த அளவிற்கு ரசிகர்களிடம் சென்று சேரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்போது ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதற்காக ZEE5 மற்றும் ஸ்ருதி நாயுடு புரொடக்ஷன்ஸுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.”
இயக்குநர் ரமேஷ் இந்திரா கூறுகையில் : “அய்யனா மானே எனது உள்ளார்ந்த பயம், நம்பிக்கை மற்றும் குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களிலிருந்து உருவானது. இது கர்நாடக கலாச்சாரத்தின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் ஒரு முயற்சியாகவும் இருந்தது. இந்த வெற்றி, இந்தியாவில் உள்ள மண் மற்றும் மொழி சார்ந்த கதைகள் புதிய உயரங்களை எட்ட முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.”
இப்போதே ‘அய்யனா மானே’ சீரிஸை ZEE5-இல் கண்டு களியுங்கள் – திரில்லரின் புதிய அனுபவத்தைப் பெறுங்கள்.
மே 3ஆம் தேதி வெஸ்டின் வேளச்சேரியில் துவாரகா ஸ்டூடியோஸ் சார்பில், ஃபேஷன் உலகின் மிக முக்கியமான “கிராண்ட் காலா ஃபேஷன் வீக்” நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் சித்தி இத்னானி, வைபவ்,கருணாகரன்,பிரதீப் மில்ராய்,நயனா சாய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிர்க்யா நக்ரா, பிக்பாஸ் தர்ஷன், ஷிவானி நாராயணன்,மாதுரி ஜெயின்,சஞ்சனா சிங், இனியா ,ஸ்வயம் சித்தா ,ஆகியோருடன் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர் கலந்துகொண்டனர்.
ஃபேஷன் உலகின் பிரம்மாண்டமாக நடந்த இவ்விழாவில், திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இசைக் கலைஞர்களுக்கு உதவும் வகையிலான “சேவ் த வாய்ஸஸ்” அறக்கட்டளை அமைப்பு அறிவித்தனர்.
திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இணைந்து துவங்கியுள்ள “சேவ் த வாய்ஸஸ்” என்ற புதிய அமைப்பு, இசை உலகில் போராடும் இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவ, ஒரு சமூக அமைப்பாகச் செயல்படவுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களின் குழுவால் வழிநடத்தப்படும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள்:
உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு மருத்துவ மற்றும் கல்வி ஆதரவு வழங்குதல்.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இசைத்திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு இசைக்கருவிகள் வாசிக்கவும், பாடுவதிலும் திறனை மேம்படுத்தவும் பயிற்சி அளித்தல்.
அவர்களை ஒரு தெளிவான இசைமிக்க வாழ்க்கை நோக்கில் வழிநடத்தி, இசைத்துறையில் ஒரு நிலையான இடம் பிடிக்க உதவுதல்.
இந்த புதிய அமைப்பு, திறமை மிக்க எளிய இசைக்கலைஞர்களின் வாழ்வில் புத்துயிர் பாய்ச்சும்.
இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி சேனலாகவும், உலகின் மிக அதிகமாக பார்வையிடப்படும் தமிழ் தொலைக்காட்சி சேனலாகவும் திகழும் Sun TV, தனது பெருமைக்கு மேலும் ஒரு மகுடம் சூட்டிக்கொண்டுள்ளது.
உலகளவில் மிகவும் பிரபலமான இந்த தொலைக்காட்சி நெட்வொர்கின் YouTube சேனல், Sun TV, தற்போது 30 மில்லியன் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளது.
இந்த சாதனையில் ஆச்சரியம் ஏதுமில்லை ஏனெனில் Sun TVயின் YouTube சேனலில் தினமும் 100க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்படுகின்றன! இதில் Sun TVயில் ஒளிபரப்பப்படும் பல பிரபலமான நிகழ்ச்சிகளின் வீடியோக்கள் அடங்கியுள்ளன, உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களை, இந்த நிகழ்ச்சிகள் ஈர்த்து வருகின்றன.
இதற்கு மேலாக, Sun Pictures தயாரிக்கும் திரைப்படங்களின் பாடல்கள், டிரெய்லர்கள் மற்றும் டீசர்களும் இந்த பிரபலமான நெட்வொர்கின் YouTube சேனலில் பிரத்யேகமாக வெளியிடப்படுகின்றன.
Sun TV YouTube சேனலில் பல வீடியோக்கள் பல வாரங்களாக டிரெண்டாகி வந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது! உதாரணமாக, விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் ‘அரபிக் குத்து’ பாடலும், ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா’ பாடலும் இதில் குறிப்பிடத்தக்கவை. இதில் முன்னோடியான ‘அரபிக் குத்து’ பாடல் 700 மில்லியன் பார்வைகளைத் தாண்டியது, ‘காவாலா’ பாடல் 300 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது!
உலகளாவிய அளவில் பெரும் எண்ணிக்கையிலான ரசிகர்களைக் கொண்டுள்ள Sun TV YouTube சேனல், தினமும் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் புதிய ஃபாலோயர்ஸை இணைத்துக் கொண்டு, ஏற்கனவே இணைந்திருக்கும் ரசிகர்களின் நம்பிக்கையையும் நிலைநிறுத்தி வருகின்றது.
Sun TV YouTube சேனலின் இணைப்பு – https://www.youtube.com/@suntv
தமிழின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 ல் சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் திரைப்படம், வெளியான வெறும் 48 மணி நேரத்திற்குள், 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. இப்படம் கடற்கரை கிராம பின்னணியில், அசத்தலான விஷுவல்களுடன், ஃபேண்டஸி அம்சங்கள் நிறைந்த, புதுமையான ஹாரர் படமாக அனைவரையும் கவர்ந்துள்ளது. இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், இப்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் திவ்யா பாரதி, இளங்கோ குமரவேல், சபுமோன் அப்துசமத் மற்றும் சேதன் கடம்பி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
கிங்ஸ்டன் திரைப்படம், துணிச்சலான கடத்தல்காரரான கிங்ஸ்டன் (ஜி.வி. பிரகாஷ்) என்பவனின் கதையை விவரிக்கிறது. உள்ளூர் ரௌடியிடம் வேலை பார்க்கும் கிங்ஸ்டன், ரௌடி கிராமத்தை ஏமாற்றுவதை அறிந்து, அவனுக்கு எதிராகக் களமிறங்குகிறான். தன் கிராமத்தை மீட்கும் பொருட்டு, மீன் பிடிக்க முடியாமல், பல வருடங்களாகச் சபிக்கப்பட்ட கடற்பகுதிக்குள், தன் நண்பர்களுடன் துணிந்து நுழைகிறான். அந்த சாபத்தின் ரகசியத்தை அவன் கண்டுபிடித்தானா? தன் கிராமத்தை மீட்டானா? என்பது தான் இந்தப்படத்தின் கதை.
கிங்ஸ்டன் திரைப்படம் மாறுபட்ட கதைக்களம், அற்புதமான விஷுவல்கள், கடல் பின்னணி, நடிகர்களின் திறமையான நடிப்பு என, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பரவலான பாராட்டுக்களைக் குவித்துள்ளது.
ZEE5 இன் SVOD தெற்கு துணைத் தலைவர் லயோட் சேவியர் கூறுகையில், “ ‘கிங்ஸ்டன்’ படத்திற்குக் கிடைத்த அற்புதமான வரவேற்பு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. தமிழ் சினிமா இப்போது மிகப்பெரிய வெற்றிப்பயணத்தில் இருக்கிறது. அந்த வகையில், அட்டகாசமான எண்டர்டெயினர் திரைப்படமான, “கிங்ஸ்டன்” படத்தை, எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்கியதில் மகிழ்ச்சி கொள்கிறோம். இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில், நடிகர் ஜிவி பிரகாஷ் நடித்துள்ள இந்தப்படம், ஒரு புதுமையான களத்தில், அதிரடி திரில்லராக ஒரு ரோலர்கோஸ்டர் பயணத்திற்கு ரசிகர்களைக் கூட்டிச் செல்கிறது. இது போல் சிறந்த படைப்புகளைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு வழங்க வேண்டுமென்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். ZEE5ல் இன்னும் சிறந்த நல்ல படைப்புகள், மண் சார்ந்த படைப்புகள், தொடர்ந்து வரவுள்ளது.
இயக்குநர் கமல் பிரகாஷ் கூறியதாவது…, இந்தப் படம் அன்பான குழுவின் உழைப்பு. எதிர்பாராத ஒரு களத்தின் பின்னணியில் மர்மம், அதிரடி மற்றும் ஃபேண்டஸி அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான அனுபவத்தைத் தர வேண்டும் எனும் நோக்கத்தில் உருவாக்கிய படைப்பு இது. இப்படத்தை உருவாக்குவது மிகப்பெரிய சவாலாக இருந்தது, கிங்ஸ்டன் கதாபாத்திரத்தில் ஜிவி பிரகாஷின் உழைப்பு வியக்கதக்கதாக இருந்தது. தன்னை முழுதாக மாற்றிக்கொண்டு, மிகப்பிரமாதமாக, தனித்துவமான நடிப்பைத் தந்தார். இந்த வேடத்தில் வேறு யாரையும் என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ZEE5 ப்ரீமியர் மூலம் இப்படத்தை அனைத்து மக்களும் கொண்டாடுவதைக் காணப் பெரு மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தின் மீது அன்பைக் கொட்டிய அனைவருக்கும் நன்றி.
நடிகர் ஜி.வி. பிரகாஷ் கூறியதாவது.., “கிங்ஸ்டன் திரைப்படம் மீது மக்கள் காட்டி வரும் அபரிமிதமான அன்பைப் பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! கிங்ஸ்டன் பல வழிகளில் சவாலாக அமைந்த மிகச்சிறப்பான ஒரு கதாபாத்திரம் – கிங்ஸ்டன் துணிச்சலானவன், கணிக்க முடியாதவன், இப்பாத்திரத்தை ஏற்று நடித்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. இந்த விசித்திரமான உலகில் மூழ்கி அதை இவ்வளவு பெரிய டிஜிட்டல் வெற்றியாக மாற்றிய அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நன்றி”
கிங்ஸ்டன் இப்போது ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்கிறது, இன்றே கண்டு மகிழுங்கள்!
நியோ கேஸ்டில் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் சத்யா கரிகாலன் தயாரிப்பில் இசையமைப்பாளர் அஸ்வமித்ரா இயக்கத்தில் புதுமுக குழந்தை நட்சத்திர நடிகர் சித்தார்த் பன்னீர் சொந்த குரலில் தமிழ், தெலுங்கு , மலையாளம் ,கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பாடி, நடனமாடியிருக்கும் மிஸ் மேல கிரஷ்'( Miss u Mela Crush u) எனும் வீடியோ ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கவிப்பேரரசு வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் செந்தில், தம்பி ராமையா, கருணாஸ், இளவரசு, ரோபோ சங்கர், பிக்பாஸ் முத்துகுமரன், இயக்குநர்கள் சற்குணம், இரா. சரவணன், போஸ் வெங்கட், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், காயத்ரி ரகுராம், மாஸ்டர் ராதிகா, சாண்டி மாஸ்டர், ராமர் ரவிக்குமார், திரு. கடம்பூர் ராஜா, திரு. ரத்தினம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் திரு. கருப்பையா பன்னீர்செல்வம் வரவேற்றார்.
இயக்குநர் – இசையமைப்பாளர் அஸ்வமித்ரா பேசுகையில், ” மாஸ்டர் சித்தார்த்தை முதலில் வேறு ஒரு பாடலுக்காக தான் அணுகினேன். பெப்பியான அந்த பாடலை பாட மாட்டேன் என சொல்லி விட்டார். அதன் பிறகு ஒரு பாடலை உருவாக்கி கொண்டிருந்தபோது என் பின்னால் நின்று கொண்டு ஒரு பாடலை ‘ஹம்’ செய்தான். இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உடனடியாக பாடுகிறாயா? என கேட்டேன். சொல்லிக் கொடுத்தால் பாடுவேன் என்றான் நம்பிக்கையுடன். அதன் பிறகு தான் இந்த பாடலை உருவாக்கினோம். சித்தார்த் திறமைசாலி. எதை சொல்லிக் கொடுத்தாலும் அதனை உடனடியாக கற்றுக் கொண்டு விடுவான். அதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளிலும் அவரே இந்த பாடலை பாடியிருக்கிறார். இந்த வீடியோ ஆல்பத்தை தொடர்ந்து மூன்று பாடல்களை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதில் சிலம்பம் தொடர்பான பாடலும் உண்டு. சிலம்ப வித்தையில் மாஸ்டர் சித்தார்த் நேஷனல் சாம்பியன். அவர் சிலம்பத்தில் தேசிய விருதினை வென்றவுடன் அது தொடர்பான பாடலையும் உருவாக்கி இருக்கிறோம். அந்தப் பாடலும் விரைவில் வெளியாகும். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும், இந்த வீடியோ ஆல்பத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் – நடிகர் தம்பி ராமையா பேசுகையில், ” எம் மண்ணின் மைந்தன் சித்தார்த்திற்கு வாழ்த்துகள். புதுக்கோட்டை என்பது கலைக்கு மட்டுமல்ல அரசியலுக்கும் சிறந்த மண். தமிழ் திரை உலகத்திற்கு இரண்டு சூப்பர் ஸ்டார்களை கொடுத்தது இந்த மண். இந்நிகழ்வில் நான் தாய் மாமன் எனும் உறவினையும், அதன் மேன்மையையும் காண்கிறேன். சத்யா கரிகாலன் ஆகிய சகோதர சகோதரிகளை பார்த்து வியக்கிறேன். அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் வீட்டிற்கு ஒரு முறை விஜயம் செய்த போது சித்தார்த்தை பார்த்தவுடன் மலைக்கள்ளன் எம்ஜிஆரை நேரில் பார்த்தது போல் இருந்தது. வியந்தேன். சித்தார்த்தின் தாய் சத்யா அவர்கள் சித்தார்த்தை கைபிடித்து உயரத்திற்கு அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்த குழந்தையை கொண்டாடுவதற்காக இங்கு வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருப்பூரின் அடையாளமாக திகழும் தொழிலதிபர் ஒருவரை சந்தித்து உரையாடிய போது, ‘குழந்தையை பெற்றெடுப்பது எளிது அதனை வளர்த்து ஆளாக்குவது என்பது தான் கடினம்’ என்றார். அந்த வகையில் சத்யா கரிகாலன் குழந்தையை நல்ல திறமைசாலியாக வளர்த்து ஆளாக்குகிறார். சித்தார்த் இறைவனால் ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தை. அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
சரீரம், சாரீரம் என இரண்டு விசயங்கள் இருக்கிறது. உடலுக்கு மட்டும் ஊட்டச்சத்து போதாது. மனதிற்கும் ஊட்டச்சத்து வேண்டும். யார் ஒருவர் தனது உடலையும் , குரலையும் காதலிக்கிறார்களோ… அவர்கள் சாதனையாளர்கள். அவரை சமுதாயத்தால் சீரழிக்கவே இயலாது. அந்த வகையில் சித்தார்த் அற்புதமாக பாடுகிறார். அதிலும் ஐந்து மொழிகளில் பாடியிருக்கிறார். அவரிடம் ஞானம் இருக்கிறது. அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சித்தார்த் எதிர்காலத்தில் மிகப்பெரிய உயரத்தை தொடுவார் என வாழ்த்துகிறேன்” என்றார்.
நடிகர் – அரசியல்வாதி கருணாஸ் பேசுகையில், ” இந்த வரலாற்று சிறப்புமிக்க அரங்கத்தில் ஆறு வயது மதிக்கத்தக்க குழந்தையின் பாடும் திறமையையும், நடனமாடும் திறமையையும் கண்டோம். அனைவரும் பாராட்டினார்கள். ஆனால் இந்த சித்தார்த்திடம் திறமை இருக்கிறது என்று முதலில் கண்டறிந்தவன் நான். இந்தப் பிள்ளையை நான் தான் முதன் முதலில் நடனமாட வைத்தேன். அந்தத் திரைப்படம் விரைவில் வெளியாகும். அந்த பாடலும் அவனின் நடனமும் நிச்சயம் பேசப்படும். இவனுடைய மாஸ்டரை அவருடைய தாயாருக்கு அறிமுகப்படுத்தியதும் நான்தான். அந்த மாஸ்டரை ஒரு வீடியோ ஆல்பத்தில் நடன இயக்குநராக அறிமுகப்படுத்தியதும் நான்தான். அந்த வகையில் இந்த இடம் மிகவும் ராசியானது. அனைத்தும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்டதாகவே நான் கருதுகிறேன். இவருடைய திறமையை மேலும் வளர்த்து இறைவனின் ஆசியால் மென்மேலும் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.
ரோபோ சங்கர் பேசுகையில், ” குழந்தை நட்சத்திரம் சித்தார்த்துக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். மேடையில் நடனம் ஆடும் போது ‘நானே மாஸ்டர்’ என சமயோசிதமாக பேசியது என்னை வியக்க வைத்தது. எனக்கும் சின்ன வயசுல மிஸ் மேல் கிரஷ் இருந்தது. அதனை இன்று வரை கண்ணியம் மிக்க மரியாதையுடன் தொடர்கிறேன். சின்ன வயதில் நான் நிறைய போட்டோக்களை வெட்டி, ஒட்டி நிறைய ஆல்பங்களை உருவாக்கி இருக்கிறேன். குழந்தைக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அவருடைய பெற்றோர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ” என்றார்.
நடிகர்- இயக்குநர் போஸ் வெங்கட் பேசுகையில், ” சித்தார்த்தின் வீட்டிற்கு சென்றிருக்கிறேன். இவனுக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவரும் மிகுந்த திறமைசாலி. இருவருமே திறமை மிக்கவர்கள். சகோதரி சத்யா அவர்கள் குழந்தையின் நடனத்தை ஃபோனில் காண்பித்த போது சித்தார்த்தின் நடனத் திறமையை பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஆனால் ஐந்து மொழிகளில் பாடி, அதனை ஒரு வீடியோ ஆல்பமாக வெளியிடுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதனை சித்தார்த் நேர்த்தியாக செய்திருக்கிறார். சித்தார்த்தை விரைவில் நாம் நடிகராகவும் பார்ப்போம். அது இன்னும் அதிகமான நபர்களை ஆச்சரியப்படுத்தும் என நான் நம்புகிறேன். சித்தார்த்தின் எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன். மேலும் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத கதாநாயகனாக அவர் வருவார் என்றும் நான் உறுதியாக கூறுகிறேன். ” என்றார்.
இயக்குநர் இரா. சரவணன் பேசுகையில், ” சித்தார்த் ஆடி பாடி நடித்திருக்கும் இந்த ஆல்பத்தை நடிகர்கள் சசிகுமார் -சூரி- ஆகியோர் பார்த்தார்கள். இதில் சசிகுமார் – இந்த ஆல்பம் ஹிட் ஆவதற்கு முன்பே இவனிடம் கால்ஷிட் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என்றார். அந்த அளவிற்கு அவருக்கு இந்த ஆல்பம் பிடித்திருந்தது. இதனைத் தொடர்ந்து நடிகர் சூரி என்னிடம் இந்த ஆல்பத்தை பார்த்த பிறகு, ஆறு மாதத்திற்கு முன்னர் இந்த குழந்தையை பற்றி எனக்குத் தெரிந்திருந்தால் ‘மாமன்’ படத்தில் நடிக்க வாய்ப்பளித்திருப்பேன் என்றார். அந்த அளவிற்கு சித்தார்த்திடம் ஒரு எனர்ஜிடிக்கான டேலண்ட் இருக்கிறது. இந்த ஆல்பத்தை பார்த்தவுடன் சித்தார்த் மீது ‘நம்ம வீட்டு பிள்ளை’ என்ற பாச பிணைப்பு ஏற்படுகிறது. நாமெல்லாம் இரு மொழி… மும்மொழி… என பேசிக் கொண்டிருக்கும்போது.. சித்தார்த் ஐந்து மொழியில் பாடி ஆடி அசத்தியிருக்கிறார். இதனால் சித்தார்த் புதுக்கோட்டை மண்ணிலிருந்து பாலிவுட் வரை உயர்வர் என உறுதியாக சொல்ல முடியும். இதற்கு இங்கு வருகை தந்திருக்கும் எல்லோரும் சித்தார்த்தை ஆசீர்வதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் சற்குணம் பேசுகையில், ” ஒரு தேர்ந்த நடன கலைஞராகவும் பாடகராகவும் நடிகராகவும் சித்தார்த் இந்த ஆல்பத்தில் தனது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் ஐந்து மொழியில் அவர் பாடியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆல்பத்தில் நடனமாடி இருப்பதைவிட அதனை மேடையில் எந்தவித தவறும் இல்லாமல் ஆடுவது தான் தனி சிறப்பு. நடன கலைஞர்கள் நடனமாடும் போது அவர்களது முகத்தை உற்சாகம் வைத்துக் கொண்டு நடனம் ஆடுவது தான் தனித்துவம் என்பார்கள். அது சித்தார்த்திடம் இயல்பாகவே இருக்கிறது. சித்தார்த்தை தமிழ் சினிமா சார்பாக பாராட்டுகிறேன். தமிழ் சினிமாவின் உச்சம் தொட வாழ்த்துகிறேன்” என்றார்.
காயத்ரி ரகுராம் பேசுகையில், ” நடிகர் சிலம்பரசன் சின்ன வயதில் என்னுடன் தான் பாட்டு நடனம் ஆகியவற்றை கற்றுக் கொண்டார். அத்துடன் நடிப்பு ,சண்டை பயிற்சி, உடற்பயிற்சி, இசை கருவி வாசிப்பு ஆகியவற்றையும் கற்றுக் கொள்வார். அவர் சின்ன வயதில் கற்றுக்கொண்ட அனைத்து திறமையும் இந்த சித்தார்த்திடமும் இருப்பதை நான் பார்க்கிறேன். கமல் சாரும் இன்று அனைத்து துறையிலும் திறமை மிக்கவர். அந்த வரிசையில் அவர்களை தொடர்ந்து தனுஷ் -பிரசாந்த் – ஆகியோர்களையும் பார்த்திருக்கிறேன். அந்த வரிசையில் நான் சித்தார்த்தையும் பார்க்கிறேன். சித்தார்த்திற்கு கற்றுக் கொடுப்பதற்கு மாஸ்டர்கள் தயாராக இருந்தாலும்.. பெற்றோர்களின் ஊக்கமும் , ஆர்வமும் என்பது முக்கியம். அதனால் அவர்களுக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்த காமராஜர் அரங்க மேடையில் தான் நான், தொகுப்பாளினி கீர்த்தி, நடிகை ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடனமாடி பிரபலமாகி இருக்கிறோம். அந்த அளவிற்கு இந்த மேடை ராசியானது. அந்த வகையில் சித்தார்த்தும் ஆண்டவனின் ஆசியுடன் பெரும் புகழை பெறுவார்” என்றார்.