Breaking
August 9, 2026

Entertainment

“டிடி நெக்ஸ்ட் லெவல்” “கோஸ்ட் ஆன் வீல்ஸ்” சிறப்பு புரமோ நிகழ்ச்சி !!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில், சமீபத்தில் வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம், ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களைக் கவரும் விதத்திலும், “டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தின் பேய் தீமை அடிப்படையாக வைத்து, ஒரு வித்தியாசமான புரமோ நிகழ்ச்சியை நடத்தியுள்ளது Zee5.

சந்தானம் நடிப்பில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம் Zee5 தளத்தில் வெளியான வேகத்தில், 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வருகிறது. இப்படத்தை மேலும் மக்களிடம் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 ஒரு பஸ்ஸில் படத்தின் தீமை மையமாக வைத்து, படத்தின் போஸ்டர்களுடன் படத்தின் கருவை மையமாகக் கொண்ட செட் அமைக்கப்பட்டு, அதில் பேய் வேடமிட்ட ஒருவர் உலாவும் வகையில் உருவாக்கி, சென்னை முழுக்க மக்கள் அதிகம் புழங்கும் இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறது.

முதல் முறையாக இந்த பஸ் மக்கள் அதிகம் புழங்கும், கிண்டி சதுக்கத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் படத்தில் நடித்த நடிகை யாஷிகா ஆனந்த் கலந்துகொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

ரசிகர்களும், பொதுமக்களும் படத்தின் தீமில் வடிவமைக்கப்பட்ட பஸ்ஸை பார்த்து, ஆச்சரியத்தில் மூழ்கினர். பஸ்ஸை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை யாஷிகா ஆனந்த் கூறியதாவது…
எங்களுடைய “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம், Zee5 மூலம் உலகளவில் பெரும் எண்ணிக்கையிலான பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளது. இப்படம் வெளியான வேகத்தில் 1 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்துள்ளது மகிழ்ச்சி. எங்கள் படத்தை இன்னும் பிரபலப்படுத்தும் வகையில், Zee5 முன்னெடுத்துள்ள இந்த வித்தியாசமான புரமோசன் நிகழ்ச்சி, பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த பஸ்ஸின் வடிவமைப்பை, பார்த்து மிகுந்த ஆச்சரியப்பட்டேன். இந்நேரத்தில் எங்கள் படக்குழுவினருக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். மேலும் Zee5 நிறுவனத்திற்கும் என் நன்றி. படத்திற்கு ஆதரவளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றி.

இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படித் தப்பி வெளியில் வருகிறான்? என்பது தான் இப்படத்தின் கதை. நடிகர் சந்தானம், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி நடித்துள்ள இந்தப்படம், ஜூன் மாதத்தின் மிகவும் பேசப்படும் ஓடிடி ரிலீஸாக மாறியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகர் ஆர்யா தனது The Show People நிறுவனம் சார்பில், இப்படத்தைத் தயாரித்துள்ளார். இயக்குநர் S. பிரேம் ஆனந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். இசையமைப்பாளர் ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ZEE5 இல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இப்படத்தைக் கண்டுகளிக்கலாம் !

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2

ஹாட்ஸ்டார் மலையாள ஸ்பெஷல் வெப் சீரிஸ் வகையில், முதல் படைப்பாக பெரும் வரவேற்ப்பை பெற்ற கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீரிஸின், பெரிதும் எதிர்பார்க்கபடும் இரண்டாவது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த சீரிஸின் அதிரடியான இரண்டாவது டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில், வரும் ஜூன் 20ஆம் தேதி முதல், இரண்டாவது சீசன் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

கேரளா க்ரைம் ஃபைல்ஸ் சீசன் 2 தி சர்ச் ஃபார் CPO அம்பிலிராஜு எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்த புதிய சீசன், ஒரு சிவில் போலீஸ் அதிகாரியான அம்பிலி ராஜு காணாமல் போன, மர்ம வழக்கை அடிப்படையாக வைத்து, திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. 1 நிமிடம் 30 விநாடிகள் கொண்ட இரண்டாவது டிரெய்லர், கதையின் களத்தையும் அதன் தீவிரதன்மையையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

அஹம்மது கபீர் இயக்கியுள்ள இந்த சீரிஸின் கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை பஹுல் ரமேஷ் எழுதியுள்ளார். ஹாசன் ரஷீத், அஹம்மது கபீர் மற்றும் ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஆகியோர் மங்கீ பிசினஸ் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் இந்த சீரிஸை தயாரித்துள்ளனர்.

இந்த சீரிஸில் அர்ஜுன் ராதாகிருஷ்ணன், அஜு வர்கீஸ், லால், இந்திரன்ஸ், ஹரிச்ரீ அசோகன், ரெஞ்சித் சேகர், சஞ்சு சனிசென், சுரேஷ் பாபு, நவாஸ் வல்லிக்குன்னு, நூரின் ஷெரீஃப், ஜியோ பேபி, ஷிப்லா ஃபாரா, பிலாஸ் சந்திரஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸுக்கு, ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், மகேஷ் புவனேந்திரன் எடிட்டிங் செய்துள்ளார், ஹெஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.

இந்த அதிரடி திரில்லர் சீரிஸுன் இரண்டாவது சீசன், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, இந்தி மற்றும் பெங்காலி என ஏழு இந்திய மொழிகளில் ஜூன் 20 முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகிறது.

🔗https://www.youtube.com/watch?v=3j9tDsk2xco

சின்ன மருகள் சீரியல் வெற்றியை, ரசிகர்களுக்கு மொய் விருந்து வைத்து கொண்டாடிய விஜய் டிவி !!

தமிழகத்தின் விருப்பமான தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், தற்போது திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “சின்ன மருமகள்” நெடுந்தொடர், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில், மக்களுடன் இணைந்து உரையாடி, அவர்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடியுள்ளது விஜய் டிவி.

பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த இரு வாரங்களாகப் பரபரப்பான கதைக்களத்தில் நகரும் இந்த சீரியல், பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைக் கொண்டாடும் ஒரு கட்டமாக, மதுரையில் ஜுன் 13 மற்றும் விருதுநகரில் ஜூன் 14 தேதிகளில் நடைபெற்ற இந்த கொண்டாட்டம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காலை பிரத்தியேகமாக, சின்ன மருமகள் சீரியல் ரசிகர்கள் 50 பேர் கலந்துகொண்டனர். பெண்களின் வாழ்க்கையில் நிகழும் நிகழ்கால பிரச்சனைகள், அவர்களுக்கு வரும் தடங்கல்கள், குடும்ப சிக்கல்கள் என சீரியலில் வருவது போலவே, தங்களின் சொந்தக் கதைகளை, குழுவினருடன் ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக பகிர்ந்துகொண்டனர். சீரியல் குழுவினர் ரசிகர்களின் கதைகளைக் கேட்டு, அவர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து, அவர்களோடு மகிழ்வோடு உரையாடி மகிழ்ந்தனர். இந்த மொத்த நிகழ்வும் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்தது.

மதியம் சின்ன மருமக்கள் தொடரின் தற்போதைய பரபரப்பான மொய் விருந்தை அடையாளப்படுத்தும் விதமாக, ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து அளிக்கப்பட்டது. ரசிகர்களுடன் படக்குழுவினரும் உணவருந்தி மகிழ்ந்தனர்.

மாலை, விஜய் டிவி சீரியல் நடிகர், நடிகையர்கள், குக் வித் கோமாளி, கலக்கப் போவது யாரு, சூப்பர் சிங்கர் முதலான விஜய் டிவி நிகழ்ச்சியின் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொள்ள, 4000 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ஆடல் பாடல் நிகழ்வுகளுடன் கொண்டாட்டத் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா விஜய் டிவி ரசிகர்களிடம் பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.

விஜய் டிவியின் சின்ன மருமகள் தொடர் முதலாக அனைத்து நிகழ்ச்சிகளையும், விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசியுங்கள்.

மொய் விருந்தில் வெற்றி பெறுவாளா தமிழ்செல்வி ? பரபரக்கும் திருப்பங்களுடன் சின்ன மருமகள் நெடுந்தொடர் !!

தமிழ்செல்வி தன் கனவை வெல்ல 1 லட்சம் திரட்டுவாளா ? – விஜய் டிவி “சின்ன மருமகள்” தொடரின் நெஞ்சைத் தொடும் கதை!

அதிர வைக்கும் சம்பவங்கள், பரபரக்கும் திருப்பங்களுடன், “சின்ன மருமகள்” நெடுந்தொடர், உங்கள் விஜய் டிவியில் !!

தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் “சின்ன மருமகள்”. பெண் ரசிகர்கள் தனித்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடர், அதிரடி திருப்பங்களுடன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாக பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த வாரம், வீட்டை விட்டு வெளியே வந்து, கணவனையும் தகப்பனையும் உதறி, தன் கனவைச் சாதிக்க தமிழ்செல்வி மேற்கொண்ட பயணம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த வார தொடரில், தமிழ்செல்வி மருத்துவராகும் தன் கனவை நிறைவேற்ற, அவளுக்குத் தேவைப்படும் 1 லட்சம் ரூபாயைத் திரட்ட, மொய் விருந்து வைக்கத் திட்டமிடுகிறாள். அவளின் திட்டத்தை உடைக்க சாவித்திரி, கிடா விருந்து வைக்கத் திட்டமிடுகிறாள். சாவித்திரியை எதிர்த்து தமிழ்செல்வி ஜெயிப்பாளா? தன் கனவைச் சாதிக்க 1 லட்சம் அவளால் திரட்ட முடியுமோ? என பரபரப்பு திருப்பங்களுடன், இந்த தொடர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

தமிழ்செல்வி தற்போது ஒவ்வொரு குடும்பத்தின் உறுப்பினராக மாறியுள்ளார். தமிழக மக்கள் அவளை தங்கள் வீட்டுப் பெண்ணாகப் பார்க்கிறார்கள். அவளது கனவு ஜெயிக்குமா ? என ஆவலோடு எதிர்பார்த்து வருகிறார்கள்.

தமிழசெல்வியின் இந்த பரபரப்பான பயணத்தைத் தெரிந்து கொள்ள, இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவியில் ஒவ்வொரு நாளும் 9.30 மணிக்கும் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் கண்டு ரசியுங்கள்.

ZEE5-தளத்தில் ஜூன் 13 முதல் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’

~ டிடி நெக்ஸ்ட் லெவல் படம், டிஜிட்டலில் வெளியாவதற்கு முன்னதாகவே, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது ~

ZEE5 தளத்தில் அடுத்து வெளியாகவுள்ள ஹாரர்-காமெடி திரைப்படமான டெவில்ஸ் டபுள் : நெக்ஸ்ட் லெவல் படம், அதிகாரப்பூர்வ டிஜிட்டல் வெளியீட்டுக்கு முன்னதாகவே, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிஜிட்டல் வெளியீடு குறித்தான டிரெய்லரும், புரமோ விடியோக்களும், சமூக ஊடகங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. வித்தியாசமான களத்தில், ஹ்யூமர் மற்றும் அதிரடி சினிமா அனுபவத்தின் கலவையாக உருவாகியுள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சந்தானம், செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி நடித்துள்ள இந்தப்படம், ஜூன் மாதத்தின் மிகவும் பேசப்படும் ஓடிடி ரிலீஸாக மாறியுள்ளது. படம் மீதான எதிர்பார்ப்பு, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இந்த டிஜிட்டல் வெளியீட்டில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும். ZEE5 தளத்தில் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தில் இப்படத்தை கண்டுகளிக்கலாம் !

இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படி தப்பி வெளியில் வருகிறான்? என்பது தான் இப்படத்தின் கதை. வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் அதிரடி பயணத்திற்கு தயாராகுங்கள்.

ZEE5-தளத்தில் ஜூன் 13 முதல் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ பார்த்து ரசியுங்கள்

“டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம், வரும் ஜூன் 13 முதல் ZEE5 ல் ஸ்ட்ரீமாகிறது!!

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, அடுத்ததாக அதிரடி வெற்றித் திரைப்படமான “டெவில்ஸ் டபுள்: நெக்ஸ்ட் லெவல், எனும் டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தை, வரும் ஜூன் 13 முதல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது. டிடி வெற்றிப்பட வரிசையில், நான்காவது பாகமாக வெளியான “டிடி நெக்ஸ்ட் லெவல்” படம், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

எழுத்தாளர்-இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவான இப்படத்தில், கலக்கல் நகைச்சுவை நாயகன் சந்தானம் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் கீதிகா திவாரி, கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி ஆகிய முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படம், அதிரடி-திகில்-நகைச்சுவை, ஜம்ப்-ஸ்கேர்ஸ், நையாண்டி மற்றும் ஸ்லாப்ஸ்டிக் ஆகிய ஜானர்களின் சுவாரஸ்யமான கலவையாக, அனைத்து வகை ரசிகர்களையும் மகிழ்விக்கும் வகையில், உருவாகியுள்ளது. இறந்துபோன திரைப்பட இயக்குநரின் பழிவாங்கும் எண்ணத்தால், ஒரு திரைப்படத்திற்குள் சிக்கிக்கொள்ளும் விமர்சகன், அங்கு இருக்கும் டைரியின் சக்தியை மீறி, அந்த மாயாஜால சக்தியை மீறி, ஜெயிக்கிறானா ? படத்திலிருந்து வெளியில் வந்தானா? என்பது தான் இப்படத்தின் மையம்.

இறந்துபோன திரைப்பட இயக்குநர் ஹிட்ச்காக் இருதயராஜ் (செல்வராகவன்) நடத்தும் ஒரு மர்மமான தனிப்பட்ட திரையிடலுக்கு, இளம் யூடுயூப் ரிவ்யூவர் கிஸ்ஸாவிற்கு அழைப்பு வருகிறது. அவனுக்குத் தெரியாமல் அவன் குடும்பம் அந்த திரையிடலுக்குச் சென்ற நிலையில், அவர்கள் படத்திற்குள் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த படத்திற்குள் செல்லும் கிஸ்ஸா, தன் குடும்பத்தை, தன் காதலியைக் காப்பாற்ற என்ன செய்கிறான், அதிலிருந்து எப்படி வெளியில் வருகிறான் என்பது தான் இப்படத்தின் கதை.

ZEE5 இன் மூத்த துணைத் தலைவர் தென்னிந்திய மார்க்கெட்டிங் மற்றும் வணிகத் தலைவர் லாயிட் சி சேவியர் கூறியதாவது…,
“ZEE5 இல், புதுமையான கதைக்களத்தில், ரசிகர்களை ஈர்த்த வெற்றித் திரைப்படங்களைக் கொண்டுவருவதில் நாங்கள் மிகுந்த பெருமை கொள்கிறோம். தென்னிந்திய கதைகளுக்கு, இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. “டிடி நெக்ஸ்ட் லெவல்” முற்றிலும் வித்தியாசமான களத்தில், ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவமாக இருக்கும். இப்படத்தினை எங்கள் பார்வையாளர்களுக்கு வழங்குவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

எழுத்தாளர் மற்றும் இயக்குநர் எஸ். பிரேம் ஆனந்த் கூறியதாவது…,
“டிடி நெக்ஸ்ட் லெவல் மூலம், பாரம்பரிய திகில் அனுபவத்திலிருந்து மாறுபட்டு, நகைச்சுவையின் எல்லைகளைத் தாண்டி, முற்றிலும் புதுமையான ஒரு உலகத்தை உருவாக்க விரும்பினேன். தி ஷோ பீப்பிள் மற்றும் நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியதும், சந்தானம், செல்வராகவன், கௌதம் மேனன் மற்றும் கீதிகா திவாரி உள்ளிட்ட அற்புதமான நடிகர்களின் பங்களிப்பிலும், அந்த கற்பனை உலகத்தை உயிர்ப்பிக்க முடிந்தது. வழக்கமான கதை சொல்லலிருந்து மாறுபட்டு, ஒவ்வொரு திருப்பத்திலும் ஆச்சரியங்கள் நிறைந்த ஒரு படத்தை வடிவமைத்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. படத்தின் டிஜிட்டல் பிரீமியருக்கு ZEE5 ஐ விடச் சிறந்த தளம் இருக்க முடியாது. ZEE5 மூலம் இப்படம், உலகம் முழிக்கவிருக்கும் அனைத்து ரசிகர்களையும் சென்றடையவுள்ளது மகிழ்ச்சி. இப்படத்தை உலகம் முழுக்கவுள்ள ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

நடிகர் சந்தானம் கூறியதாவது..,
“டிடி நெக்ஸ்ட் லெவல்” படத்தில் நடித்த கிஸ்ஸா கதாப்பாத்திரம், சமீப காலங்களில் நான் ஏற்று நடித்ததிலேயே மிகவும் திருப்திகரமான கதாபாத்திரமாக்கும். கிஸ்ஸா தைரியமானவன், விசித்திரமான குணங்கள் நிறைந்தவன். கிஸ்ஸா கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது மிகுந்த சவால் வாய்ந்ததாகவும், சந்தோசமான அனுபவமாகவும் இருந்தது. இப்போது இப்படம் ZEE5 மூலம் உலகமெங்குமுள்ள பார்வையாளர்களைச் சென்றடைவது மகிழ்ச்சி. நீங்கள் இதுவரை பார்த்த திரைப்படங்களைத் தாண்டி, இந்தப்படம் உங்களை அடுத்த லெவலுக்கு கூட்டிச் செல்லும்.

ZEE5 ல் வரும் ஜூன் 13 ஆம் தேதி முதல், டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள்!!

புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !!

~ இந்தியாவின் நவீன தன்மையும், அதன் பன்மொழித் தன்மையையும் பிரதிபலிக்கும் புதிய பிராண்ட் லோகோ! ~

~ “பல மொழிகள், முடிவற்றக் கதைகள்” என்ற பிராண்ட் பிரச்சாரம் – உணர்ச்சி பிணைப்பையும், மொழிப் பெருமையையும் கொண்டாடும் புதிய முயற்சி ~

~ 7 மொழிகளில் UHD மற்றும் Dolby Atmos உடன் தொடங்கும், மொழியை மையப்படுத்திய சப்ஸ்கிரிப்ஷன் பிளான்கள் ₹120 முதல் துவங்குகிறது ~

~ 2025-26 நிதியாண்டில், 130க்கும் மேற்பட்ட புதிய சீரிஸாகவும், திரைப்படங்கள், நான்பிக்சன் மற்றும் லைவ் நிகழ்ச்சிகள் பல மொழிகளில் ~

இந்தியா, 7 ஜூன் 2025 – ZEE5 இன்று தனது புதிய பிராண்டு அடையாளத்தையும், எதிர்கால வளர்ச்சிக்கான முக்கியமான மாற்றத்தையும் அறிவித்து, இந்தியாவின் முன்னணி உள்ளூர் OTT தளமாக தன்னை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது. “நம்ம மொழி நம்ம கதைகள்” எனும் வாக்குறுதியுடன், கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் நெடுங்கதைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன், ZEE5 புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளது.

இந்த புதிய மாற்றத்தில், மொழியை மையப்படுத்திய பல புதிய திட்டங்கள், AI சார்ந்த பர்ஸ்னலைஸ்ட் பரிந்துரைகள், மற்றும் புதுப்பிக்கப்பட்ட கஸ்டமர் அனுபவம் ஆகியவை அடிப்படை அம்சமாக இருக்கும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைப் பிரதிபலிக்கும் வகையில், ஒவ்வொரு மொழிக்குமான கண்டண்ட் பிளான்கள் தனித்தனியாக உருவாக்கப்படுகின்றது.

மொழி அடிப்படையிலான சந்தா திட்டங்கள் ₹120/மாதம் முதல் தொடங்க, இந்தி (பஞ்சாபி மற்றும் போஜ்புரி உட்பட) ₹220/மாதம், All Access Pack ₹320/மாதம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களுக்கும் வருடாந்திர சலுகை கட்டணமும் உள்ளது.

ZEE நிறுவனத்தில் வரவிருக்கும் முக்கிய மொழி சார்ந்த சீரிஸ்கள் :

Detective Sherdil (இந்தி)

Chhal Kapat: The Deception (இந்தி)

சட்டமும் நீதியும் (தமிழ்)

Mothubaru Love Story (தெலுங்கு)

Inspection Bungalow (மலையாளம்)

Maarigallu (கன்னடம்)

Aata Thambhahya Naay (மராத்தி)

Vibhishan (பெங்காலி) ஆகிய படைப்புகள் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளது.

ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் தலைவர் அமித் கோயங்கா கூறியதாவது…
“இந்திய பார்வையாளர்களின் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஆழமான பர்ஸ்னலைஸ்ட் செய்யப்பட்ட, மொழிக்கு முதன்மையான தளமாக மாறுவதற்கான எங்கள் பயணத்தில் எங்கள் புதிய பிராண்ட் அடையாளம் ஒரு முக்கிய படியாக இருக்கும். ZEE இந்த புதிய பிராண்ட், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில், எங்கள் தடத்தை வலுப்படுத்துதல், கலாச்சார ரீதியாக பொருத்தமான கதைசொல்லல் மூலம் ரசிகர்களின் ஈடுபாட்டை ஆழப்படுத்துதல் மற்றும் பர்ஸ்னலைஸ்ட் செய்யப்பட்ட மற்றும் உள்ளுணர்வு கொண்ட தொழில்நுட்பம் சார்ந்த, வசதியான தளத்தைத் தொடர்ந்து உருவாக்குதல் என செயல்படும். இது உலகளவில் இந்தியப் பொழுதுபோக்கு படைப்புகளைக் கண்டறிந்து, இணைத்து, நுகரும் விதத்தில் ஒரு புதிய கலாச்சார மாற்றமாகும்”

ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி கார்த்திக் மகாதேவ் கூறுகையில்..,
“நம்ம மொழி நம்ம கதைகள்” என்ற வாசகத்துடன் கூடிய எங்கள் பிராண்ட் பிரச்சாரம், மொழி அடிப்படையிலானது, ஒரு ஆழமான பர்ஸனலைஸ் உணர்வுகளின் கொண்டாட்டமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் மொழியில் சொல்லப்படும் ஒரு கதை, அதை வெறும் கதையாக பார்க்காமல், அதை வாழ்ந்தது போல உணர வைப்பது தான் எங்கள் நோக்கம். 7 மொழிகளில் வடிவமைக்கப்பட்ட இந்த பன்மொழி பிரச்சாரம், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்கள் உட்பட பெரிய மற்றும் சிறிய நகரங்களின் கலாச்சாரத்துடன் எதிரொலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எங்கள் மொழி அடிப்படையிலான இந்த திட்டம், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்குவதும், அவர்கள் மொழியில் அவர்கள் கலாச்சாரத்தில் படைப்புகளை வழங்க வேண்டும் என்ற ZEE5 இன் நம்பிக்கையை உயிர்ப்பிக்கிறது.

ZEE எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் தலைமை உள்ளடக்க அதிகாரி ராகவேந்திரா ஹுன்சூர் கூறுகையில்..,
“ZEE5 இல், சக்திவாய்ந்த கதைசொல்லல் ஆழமான கலாச்சார நுண்ணறிவுடன் தொடங்குகிறது என்று நாங்கள் எப்போதும் நம்புகிறோம். வரலாற்று ரீதியாகப் புறக்கணிக்கப்பட்ட மொழி சார்ந்த பார்வையாளர்களுக்குச் சேவை செய்வதில், நாங்கள் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். அவர்களின் யதார்த்தங்கள், அவர்களின் மொழிகள் மற்றும் அவர்களின் அன்றாட கதைகளில் இணைந்து, நாங்கள் எதை உருவாக்குகிறோம் என்பதை மட்டுமல்ல – யாருக்காக உருவாக்குகிறோம் என்பதையும் இதில் விரிவுபடுத்தியுள்ளோம். அது நீண்ட வடிவ ஒரிஜினல் கதைகள், குறுகிய வடிவ கதைகள் அல்லது சோதனை வடிவங்கள் என எதுவாக இருந்தாலும், பார்வையாளர்களை அவர்களின் மொழிகளில் மகிழ்விப்பதே எங்கள் குறிக்கோள். இது வெறும் புதுமையான கண்டண்ட் உள்ளடக்க உத்தி மட்டும் அல்ல – பார்வையாளர்கள் முழுமையாக ரசிக்கும் வகையில் மொழியை மையப்படுத்தி, எங்கள் புதிய படைப்புகளை வழங்கவுள்ளோம்”

இந்த புதிய பிராண்டிங் மாற்றம், ‘Yours Truly, Z’ எனும் Zee நிறுவன வாக்குறுதியுடன் மிக இயல்பாக ஒத்துப்போகிறது. இது ZEE5-ன் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்காக, பல்வேறு மொழிகளில் புதுமையான கண்டண்ட்களை வழங்கும் ஒரே தளமாக ZEE5 தன்னை நிலைநிறுத்தி வருகிறது.

கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் அதிரடி காட்டிய தமிழ்செல்வி

கணவனும் வேண்டாம், தகப்பனும் வேண்டாம் அதிரடி காட்டிய தமிழ்செல்வி ! பரபரக்கும் விஜய் டிவியின் சின்ன மருமகள் நெடுந்தொடர் !!

தன்னம்பிக்கையின் சிலையாக தமிழ்ச்செல்வி – விஜய் டிவி “சின்ன மருமகள்” தொடரின் நெஞ்சைத் தொடும் கதை!

வாழ்க்கை எனும் போரில் – சமூகத்தை எதிர்க்கும் தமிழ்ச்செல்வியின் சாகச பயணம்!

தமிழ் சின்னத்திரை உலகில், மக்களின் பேராதரவைப் பெற்ற, தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை ஒவ்வொரு நாளும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொடர் “சின்ன மருமகள்”. மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

பொதுவாகவே தமிழில் நெடுந்தொடருக்கு, தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப கதைகள், குடும்பத்தில் சிக்கி உழலும் பெண்களின் வலிகளைச் சொல்லும் கதைகளுக்கு, நம் தமிழ்ப்பெண்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் மருத்துவராகும் கனவோடு திருமண வாழ்க்கையில் உழலும், தமிழ்செல்வியின் கதையை சொல்லும், “சின்ன மருமகள்” தொடர், மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது.

இத்தொடரின் கதை, இப்போது உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. மருத்துவருக்குப் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் தமிழ்ச்செல்வி, திருமணமான நிலையில், மாமியார் வீட்டின் சிக்கல்களால், தான் கர்ப்பமாக இருப்பதாகப் பொய் சொல்கிறாள். அந்த உண்மை தெரியவர, அவள் தந்தை வீட்டுக்கு விரட்டப்படுகிறாள். ஆனால் தந்தையும் கடன் வாங்கி குடித்துவிட்டுத் திரிய, தந்தை வீட்டை உதறுகிறாள். அவள் உண்மையிலேயே கர்ப்பம் என்பது தெரிய வர, அதை நம்ப மறுக்கும் கணவனையும் உதறி, நான் தனியாக என் கனவை அடைவேன் எனச் சவால் விட்டுக் கிளம்புகிறாள்.

தனியாகக் கணவனையும், தந்தையையும் எதிர்த்து வெளியே வரும் தமிழ்ச்செல்வி எப்படி வாழ்க்கையை எதிர்கொள்வாள்? தடைகளை மீறி அவள் ஜெயிப்பாளா?, அவள் மருத்துவகனவு என்னவாகும்? என, இந்தத் தொடர் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தொடரின் புதிய எபிஸோடுகளை, விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கண்டு ரசிக்கலாம்

ஓடிடியில் கலக்கும் ZEE5-இன் கன்னட சீரிஸ், “அய்யனா மானே” !!

~ இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்கத்தில், குஷி ரவி, அக்ஷயா நாயக் மற்றும் மானசி சுதீர் நடிப்பில் உருவான ZEE5-இன் அய்யனா மானே – கர்நாடகத்தின் பெருமையாகவும், ஓடிடி உலகின் அடுத்த பிளாக்பஸ்டர் சீரிஸாகவும், சாதனை படைத்து வருகிறது ~

இளைஞர்களின் இதயம் கவர்ந்த நடிகை குஷி ரவி நடிப்பில், சமீபத்தில் வெளியான ZEE5 இன் முதல் கன்னட ஓரிஜினல் வெப் சீரிஸான “அய்யனா மானே” பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸ் தற்போது 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது. மக்களின் உள்ளார்ந்த கலாச்சார அம்சத்தோடு, நவீனத்தை இணைக்கும் ZEEயின் கதைகளில் இது ஒரு சிறந்த படைப்பாக அமைந்துள்ளது. ஆறு எபிசோடுகளைக் கொண்ட இந்த திரில்லர் சீரிஸை, இயக்குநர் ரமேஷ் இந்திரா இயக்க, ஸ்ருதி நாயுடு புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ZEE5 டிஜிட்டல் உலகில் தனது தனித்துவமான நிபுணத்துவத்தால், இன்றைய தலைமுறையை ஈர்க்கும், நல்ல கதைகளைத் தருவதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. “அய்யனா மானே” குடும்பத்துடன் முழுவதும் ரசிக்கக்கூடிய ஒரு உணர்ச்சிப் பூர்வமான திகில் அனுபவமாக அமைந்துள்ளது. இளைஞர்களின் கனவுக்கன்னி குஷி ரவி பாத்திரம், தனித்த பாராட்டுக்களைப் பெற்று வருவதுடன், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்று வருகிறது. தியா திரைப்படம் குஷி ரவிக்கு, தமிழிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுத் தந்துள்ள நிலையில், “அய்யனா மானே” சீரிஸ் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

டிஜிட்டல் தளங்களில் இதன் டிரெய்லர் மட்டும் 14-15 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த சீரிஸின் இந்தி டப்பிங் தேசிய ரீதியில் அதிகமான பார்வையாளர்களைப் பெற உதவியுள்ளது.

சிக்கல் நிறைந்த சிக்மங்கலூர் மலைப்பகுதியில் வாழும் சக்திவாய்ந்த அய்யனா மானே குடும்பம் ஒரு பயங்கரமான ரகசியத்தை மறைக்கிறது – அக்குடும்பத்தில் மூன்று மருமகள்கள் மர்மமான முறையில் இறந்துபோகின்றனர், ஒவ்வொரு மரணமும் குடும்பத்தின் தெய்வமான கொண்டையாவுடன் தொடர்புடையதாக உள்ளது. ஜாஜி (குஷி ரவி) அக்குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளும்போது, ஒரு புதிய தொடக்கமாக இருக்க வேண்டிய அவரது வாழ்வு, விரைவாகவே சாபமிக்க கனவாக மாறுகிறது. சாபங்களின் கிசுகிசுக்கள், அமானுஷ்ய சம்பவங்கள் மற்றும் பழம்பெரும் மரபுகள் என எல்லாம் இணைந்து, ஒரு கண்ணுக்குத் தெரியாத சக்தி விளையாடுகிறதா? அல்லது வீட்டிற்குள் இன்னும் மோசமான ஏதோ ஒன்று பதுங்கியிருக்கிறதா? என்று அவளைக் கேள்வி கேட்க வைக்கின்றன. குடும்பப் பணிப்பெண் தாயவ்வா மற்றும் காவல்துறை அதிகாரி மகாந்தேஷ் ஆகியோரின் உதவியுடன், அவள் ஆழமாக விசாரிக்கும் போது, ஒவ்வொரு பதிலும் இன்னும் பயங்கரமான கேள்விகளுக்கு மட்டுமே வழிவகுக்கிறது என்பதை ஜாஜி உணர்கிறாள். அவள் விதியின் வலையில் சிக்கிக் கொண்டாளா? மேலும் முக்கியமாக – அவள் உயிருடன் தப்பி வருவாளா? என்பது தான் இந்த சீரிஸின் கதை.

நடிகை குஷி ரவி கூறுகையில்:
”‘அய்யனா மானே’ ஒரு மறக்க முடியாத அனுபவம். இந்த கதாபாத்திரத்தில் பயம், எதிர்பார்ப்பு ஆகியவற்றை வெளிப்படுத்துவது சவாலானதாய் இருந்தது, ஆனால் அதே சமயம் எனக்கு மிகவும் திருப்தி அளித்த பாத்திரமாக அமைந்தது. இந்த சீரிஸ் இந்த அளவிற்கு ரசிகர்களிடம் சென்று சேரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இப்போது ரசிகர்கள் என் மீது காட்டும் அன்பு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இதற்காக ZEE5 மற்றும் ஸ்ருதி நாயுடு புரொடக்ஷன்ஸுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.”

இயக்குநர் ரமேஷ் இந்திரா கூறுகையில் :
“அய்யனா மானே எனது உள்ளார்ந்த பயம், நம்பிக்கை மற்றும் குடும்பத்தைப் பற்றிய எண்ணங்களிலிருந்து உருவானது. இது கர்நாடக கலாச்சாரத்தின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் ஒரு முயற்சியாகவும் இருந்தது. இந்த வெற்றி, இந்தியாவில் உள்ள மண் மற்றும் மொழி சார்ந்த கதைகள் புதிய உயரங்களை எட்ட முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்கிறது.”

இப்போதே ‘அய்யனா மானே’ சீரிஸை ZEE5-இல் கண்டு களியுங்கள் – திரில்லரின் புதிய அனுபவத்தைப் பெறுங்கள்.

🔗https://www.youtube.com/watch?v=9F3YU0oE9vs&pp=ygUZYXl5YW5hIG1hbmUgdGFtaWwgdHJhaWxlcg%3D%3D

“சேவ் த வாய்ஸஸ்” – திறமைமிகு குரல்களுக்காக ஒரு புதிய முயற்சி !

மே 3ஆம் தேதி வெஸ்டின் வேளச்சேரியில் துவாரகா ஸ்டூடியோஸ் சார்பில், ஃபேஷன் உலகின் மிக முக்கியமான “கிராண்ட் காலா ஃபேஷன் வீக்” நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் முன்னணி நட்சத்திரங்கள் சித்தி இத்னானி, வைபவ்,கருணாகரன்,பிரதீப் மில்ராய்,நயனா சாய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிர்க்யா நக்ரா, பிக்பாஸ் தர்ஷன், ஷிவானி நாராயணன்,மாதுரி ஜெயின்,சஞ்சனா சிங், இனியா ,ஸ்வயம் சித்தா ,ஆகியோருடன் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகையர் கலந்துகொண்டனர்.

ஃபேஷன் உலகின் பிரம்மாண்டமாக நடந்த இவ்விழாவில், திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இசைக் கலைஞர்களுக்கு உதவும் வகையிலான “சேவ் த வாய்ஸஸ்” அறக்கட்டளை அமைப்பு அறிவித்தனர்.

திரு பிளேஸ் கண்ணன் மற்றும் திரு சத்யன் மகாலிங்கம் ஆகியோர் இணைந்து துவங்கியுள்ள “சேவ் த வாய்ஸஸ்” என்ற புதிய அமைப்பு, இசை உலகில் போராடும் இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் கலைஞர்களின் உடல்நலம் மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்விக்கு உதவ, ஒரு சமூக அமைப்பாகச் செயல்படவுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள இசைக்கலைஞர்களின் குழுவால் வழிநடத்தப்படும் இந்த அமைப்பின் முக்கிய நோக்கங்கள்:

உதவி தேவைப்படும் கலைஞர்களுக்கு மருத்துவ மற்றும் கல்வி ஆதரவு வழங்குதல்.

குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இசைத்திறமைகளை கண்டறிந்து, அவர்களுக்கு இசைக்கருவிகள் வாசிக்கவும், பாடுவதிலும் திறனை மேம்படுத்தவும் பயிற்சி அளித்தல்.

அவர்களை ஒரு தெளிவான இசைமிக்க வாழ்க்கை நோக்கில் வழிநடத்தி, இசைத்துறையில் ஒரு நிலையான இடம் பிடிக்க உதவுதல்.

இந்த புதிய அமைப்பு, திறமை மிக்க எளிய இசைக்கலைஞர்களின் வாழ்வில் புத்துயிர் பாய்ச்சும்.