Clear your calendars and fasten your seatbelts because Ethan Hunt is punching in early! Fans of the iconic franchise now won’t have to wait as long to witness Ethan Hunt’s final mission unfold on the big screen as Paramount Pictures India announces that the highly anticipated Mission: Impossible – The Final Reckoning will now hit theatres on May 17th, 2025, Saturday – 6 days ahead of schedule (23rd May).
The move comes in response to overwhelming fan excitement and demand worldwide. With the franchise’s trademark adrenaline and heart, The Final Reckoning promises an experience like no other — one last mission, packed with epic scale, emotional stakes, and edge-of-your-seat thrills that only Mission: Impossible can deliver. This is truly the send-off fans have been waiting for.
Paramount Pictures and Skydance Present A Tom Cruise Production “MISSION: IMPOSSIBLE – THE FINAL RECKONING” directed by Christopher McQuarrie. This action juggernaut features a powerhouse ensemble including Hayley Atwell, Ving Rhames, Simon Pegg, Esai Morales, Pom Klementieff, Henry Czerny, Angela Bassett, Holt McCallany, Janet McTeer, Nick Offerman, Hannah Waddingham, Tramell Tillman, Shea Whigham, Greg Tarzan Davis, Charles Parnell, Mark Gatiss, Rolf Saxon, and Lucy Tulugarjuk.
Mark your calendars for Saturday, May 17, 2025, as MISSION: IMPOSSIBLE – THE FINAL RECKONING releases in English, Hindi, Tamil & Telugu and get ready to step into a world where lives, choices and missions diverge for one last time!
Until Dawn is an interactive, interactive horror game published by Sony Computer Entertainment. The game follows a butterfly effect system in which the players either survive or die depending on the choices they make! The players have to make their moves from a third person’s angle which will help them to solve the mystery! This is a screen adaptation of the game… David F. Sandberg, the maker of films as Lights Out, Annabelle Creation etc has directed this horror flick.
Based on the Video Game, Until Dawn of 2015, this is a standalone story set in the same Universe, exploring the mythology of the game series! Clover (Ella Rubin) and her friends set out to the remote valley where her sister, Melanie (Maia Mitchell) disappeared! They realize that they have been trapped in a time loop. They relive the nightmare again and again but with a different killer, each time! They need to survive till Dawn to escape!
ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் நடிப்பில், “கலியுகம்” திரைப்படம் மே 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!
போஸ்ட் அபோகலிப்டிக் சைக்காலஜிகல் திரில்லராக உருவாகியுள்ள “கலியுகம்” திரைப்படம், மே 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது!!
முன்னணி நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் நடிப்பில், போஸ்ட் அபோகலிப்டிக் களத்தில், புதுவிதமான சைக்கலாஜிகல் திரில்லராக, அறிமுக இயக்குநர் பிரமோத் சுந்தர் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் “கலியுகம்”. மாறுபட்ட களத்தில் உருவாகியுள்ள இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் & பிரைம் சினிமாஸ் நிறுவனங்கள் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் கே.ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி S தாணு படக்குழுவைச் சந்தித்து,படத்தின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டார்.
ஒரு கற்பனையான டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடப்பதாக இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. பேரழிவு நிகழ்வுகளால் சூறையாடப்பட்ட உலகில், உயிர்வாழ்வதே மிக சிக்கலாக இருக்கிறது, ஒழுக்கம் மற்றும் அன்பு எல்லாம் உடைந்து போன உலகில், மனிதர்கள் வாழ முயலும் உணர்ச்சிகரமான உளவியல் போராட்டத்தை இப்படம் சொல்கிறது. முற்றிலும் புதுமையான களத்தில், பரபரப்பான சம்பவங்களுடன், ஒரு அழுத்தமான திரில் பயணமாக, ரசிகர்களை புதிய உலகிற்கு இப்படம் கூட்டிச் செல்லும்.
இப்படத்தில் நடிகை ஷ்ரத்தா ஶ்ரீநாத் மற்றும் ஆடுகளம் கிஷோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இனியன் சுப்ரமணி, அஸ்மல், ஹரி, மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளர் கே ராம் சரண் இப்படத்தின் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். உலகத் தரத்தில், உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பில், மிகச்சிறந்த திரில்லராக உருவாகியுள்ள இப்படம் வரும் மே மாதம் 9 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது.
தொழில் நுட்ப குழு விபரம் எழுத்து, இயக்கம் – பிரமோத் சுந்தர் தயாரிப்பாளர் – கே.எஸ். ராமகிருஷ்ணா, கே. ராம்சரண் இணை தயாரிப்பாளர் – யு.சித்தார்த் தயாரிப்பு நிறுவனம் – ஆர்கே இன்டர்நேஷனல், பிரைம் சினிமாஸ் ஒளிப்பதிவாளர்: கே.ராம்சரண் கலை இயக்குனர் – எம்.சக்தி வெங்கட்றாஜ் இசையமைப்பாளர்: டான் வின்சென்ட் எடிட்டிங் – நிம்ஸ் வசனம் – கார்த்திக் குணசேகரன், ஆத்ரேயா & கற்கவி உடை வடிவமைப்பு – பிரவீன் ராஜா ஒலி வடிவமைப்பு – டான் வின்சென்ட் ஒலி கலவை – தபஸ் நாயக் கலரிஸ்ட் – எஸ். ரகுநாத் வர்மா (B2H ஸ்டுடியோஸ்) VFX: CA டிஜிட்டல் ஸ்டுடியோஸ் மக்கள் தொடர்பு – யுவராஜ் போஸ்டர் டிசைன் – சிவகுமார் (சிவாடிஜிட்டலார்ட்)
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஏஸ் ‘( ACE) எனும் திரைபடம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு பிரத்யேக புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏஸ் ‘ ( ACE) எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ருக்மணி வசந்த், யோகி பாபு, பி எஸ் அவினாஷ், திவ்யா பிள்ளை, பப்லு , ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கரண் பகதூர் ராவத் ஒளிப்பதிவு செய்திருக்கும், இந்த திரைப்படத்திற்கு, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் . இசையமைப்பாளர் சாம் சி எஸ் பின்னணி இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு பணிகளை ஃபென்னி ஆலிவர் மேற்கொள்ள, கலை இயக்க பொறுப்பை ஏ.கே . முத்து கவனித்திருக்கிறார். கமர்சியல் ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 CS என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆறுமுக குமார் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
மலேசியாவில் முழு படப்பிடிப்பும் நடத்தப்பட்ட இத்திரைப்படத்தின் டைட்டில் டீசர்- கிளிம்ப்ஸ் – பாடல்- ஆகியவை வெளியாகி பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதுடன், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் 23ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ரசிகர்களிடத்தில் மட்டுமின்றி திரையுலக ஆர்வலர்கள் மற்றும் திரையுலக வணிகர்களிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ ரெட்ரோ’ எனும் திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் , ரம்யா சுரேஷ், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். ரொமாண்டிக் ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
எதிர்வரும் மே மாதம் முதல் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான சூர்யா ரசிகர்களுடன் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் பேசுகையில், ” சூர்யாவின் அன்பான ரசிகர்கள் அனைவருக்கும் வணக்கம். நாம் நினைத்தது நடந்துவிடும். ‘ரெட்ரோ’ திரைப்படம் மறக்க முடியாத அனுபவத்தை தரும். 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் 15 வது படைப்பு இது. சூர்யாவுடனான பயணம் இனிமையானது. இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்திருக்கும் படக்குழுவினர் அனைவரும் தங்களின் முழுமையான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள். அதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தை பற்றி நிறைய சொல்ல வேண்டும் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் என் இனிய நண்பர். மூன்றாண்டுகளுக்கு முன் சந்தித்து இந்த கூட்டணியை உருவாக்கினோம். மார்ச் 2024 ஆம் ஆண்டில் உறுதி செய்து ஜூன் மாதம் படப்பிடிப்புக்கு சென்றோம். கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மறக்க முடியாதது. குறிப்பாக அந்தமானில் 36 நாட்கள் இடைவிடாது படப்பிடிப்பு நடத்தினார். இதற்கு அவரது குழுவினரின் திட்டமிடல் தான் காரணம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எங்களுடைய தயாரிப்பில் உருவான ’36 வயதினிலே’ படத்திற்கு இசையமைத்தார். அதன் பிறகு இந்த படத்தில் மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்தில் அனைத்து பாடல்களும் அற்புதமாக இருக்கிறது. இந்த படத்தில் அவர் ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார். அதற்கும் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள். இயக்குநர் அல்போன்ஸ் புத்திரனுக்கும் என்னுடைய நன்றிகள்” என்றார்.
தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், ”நான் வாழ்க்கையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது ஒரு முக்கியமான முடிவை எடுத்தேன். அது என் மனைவியை காதலித்தது. அன்றைய தினம் விதைத்த விதைதான் இன்று விருட்சமாக வளர்ந்து மேடையில் உங்கள் முன்னால் நிற்கிறேன். அத்துடன் கார்த்திக் சுப்புராஜும் உறவினர் ஆனார். இது மிகவும் உணர்வுபூர்வமான தருணம்.
ராஜசேகர் என் வாழ்வில் கிடைத்த மிக இனிமையான மனிதர். இந்த படத்தில் இருந்து நாங்கள் புதிய பயணத்தை தொடங்கி இருக்கிறோம். சூர்யாவை போல் ஒரு ஜென்டில்மேன் ஆக இருக்க முடியுமா! என தெரியவில்லை. மக்கள் மீதும்… ரசிகர்கள் மீதும்… அவர் காட்டும் அன்பை போல் வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. அவரிடம் இருந்து பெற்ற ‘ஆரா’ என் இறுதி மூச்சு வரை தொடரும். அவருடைய ‘அகரம் ‘ அலுவலகத்திற்கு ஒரு முறை தான் விஜயம் செய்தேன். எங்களால் என்ன செய்ய முடியும் என யோசிக்க வைத்தது அந்த சந்திப்பு. ஐ லவ் யூ சூர்யா சார். படத்தைப் பற்றி நாங்கள் எப்போதும் பேச மாட்டோம். படம் தான் பேச வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ் சொல்வார். ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்கிறேன் சிறப்பான- தரமான -அழகான- அன்பான – சம்பவம் இந்த படத்தில் இருக்கிறது.” என்றார்.
பாடலாசிரியர் விவேக் பேசுகையில், ” நம்ம நெனச்சது நடந்துருமா.. சிங்கம் மறுபடியும் திரும்புதும்மா.. முன்ன ஒரு கதை இருந்ததும்மா.. இப்போ உரு கொண்டு இறங்குதம்மா.. சூர்யாவைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் போதாது. சூர்யா சாருக்கு எப்போதும் நன்றி கடன் பட்டிருக்கிறேன் நான்’ 36 வயதினிலே’ என்ற திரைப்படத்தில் தான் அனைத்து பாடல்களையும் எழுதினேன்.
சூர்யாவைப் பற்றி ஒரு பாடலில் சொல்ல வேண்டும்… ஆனால் நேரடியாக சொல்லாமல் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ‘ஒரு தீயில சொல்லெடுத்து ஒளி போடுற கையெழுத்து’ என சொல்லியாகிவிட்டது. ‘ வீரனாம் கர்ணனுக்கே அவ அப்பன்..’ எனும் வரிகளை எழுதியது மறக்க முடியாது. அவருடன் இணைந்து பயணித்ததில் பெரு மகிழ்ச்சி. இந்த படத்தின் டீசரில் ‘பரிசுத்த காதல்’ வருகிறது. இந்த பரிசுத்த காதல் சந்தோஷ் நாராயணனின் பரிசுத்த காதலை சொல்கிறது. சந்தோஷ் நாராயணன் தமிழ் சினிமாவின் ஜீனியஸ். ‘ கனிமா ..’ படத்தின் பாடல் வெளியீட்டிற்கு முதல் நாள் தற்போது நீங்கள் கேட்கும் வரிகள் இல்லை. இசையும் இல்லை. கதாபாத்திரத்தின் நடன அசைவுகளுக்கு ஏற்ப இசையை மாற்றி.. பாடல் வரிகளையும் மாற்றி அமைத்தார். அந்த அளவிற்கு நுட்பமாகவும் நுணுக்கமாக பணியாற்றுபவர் தான் இந்த ஜீனியஸ்.
இந்த திரைப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் நிறைய பாடல்கள் உண்டு . நான் மேலும் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். அந்த மூன்று பாடல்களும் மிகச் சிறப்பானதாக இருக்கும். அவருக்கு என் நன்றி.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எங்களைப் போன்ற பாடல் ஆசிரியர்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்குவார். அவர் உருவாக்கிய கதை சூழல்தான் அற்புதமான பாடல்களாக மாற்றம் பெறுகிறது. இதற்காக அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் பேசுகையில், ” முதல் முறையாக சூர்யா படத்தின் முன்னோட்டத்தில் பணியாற்றி இருக்கிறேன். சூர்யா நடித்த அன்புச்செல்வன் கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘பிதாமகன்’ பட சூர்யாவை பிடிக்கும். ரெட்ரோ படத்தில் அனைத்து அம்சங்களும் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்றார்.
நடிகர் சிவகுமார் பேசுகையில், ” மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சூர்யாவுக்கு 17 வயசு. செயின்ட் பீட்ஸ் ஸ்கூலில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது எங்கள் வீட்டிற்கு உறவினரான ஒரு ஜோதிடர் வந்தார். எனது இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் கேட்டார். இரண்டு மகன்களின் ஜாதகத்தையும் பார்த்த பிறகு, உங்களுடைய மகன் கலைதுறையில் மிக உச்சத்திற்கு வருவார் என சொன்னார். சூர்யாவா? கார்த்தியா? என கேட்டேன். அவர் பெரியவன் சூர்யா தான் என்று சொன்னார். காலையிலிருந்து மாலை வரை மொத்தமாகவே நான்கு வார்த்தை தான் பேசுவான் சூர்யா. அவன் கலைத்துறையில் வெற்றி பெறுவான் என்கிறீர்களே.. என்றேன். அதன் பிறகு இயக்குநராக வருவாரா…? ஒளிப்பதிவாளராக வருவாரா…? எனக்கேட்டபோது, இல்லை முகத்தை தொழிலாக கொண்டிருப்பார் என்றார். அப்போது நான் நடிகராக வருவாரா? எனக் கேட்டபோது, அவர் ‘ஆம் ‘என்றார். அதுமட்டுமல்ல உங்களை விட சிறந்த நடிகர் என்ற பெயரையும் சம்பாதிப்பார். உங்களைவிட நிறைய விருதுகளையும் வாங்குவார். உங்களைவிட நிறைய சம்பாதிப்பார் என்றார். சூர்யாவே இதை கேட்டுவிட்டு சின்ன புன்னகையுடன் கடந்து சென்று விட்டார். அதன் பிறகு லயோலா கல்லூரியில் இணைந்தார். அதன் பிறகு தனியார் கம்பெனியில் வேலை செய்தார். அந்தத் தருணத்தில் நாங்கள் ஒரு கலை விழா நிகழ்ச்சிக்காக மலேசியாவிற்கு சென்றோம். அப்போது இயக்குநர் வசந்தும் உடன் வந்தார். அதன் பிறகு சென்னை விமான நிலையத்தில் வைத்து ஒரு முறை இயக்குநர் வசந்த் சூர்யாவை பார்த்திருக்கிறார். இரண்டு நாள் கழித்து இயக்குநர் வசந்த் எனக்கு போன் செய்து உங்க பையன் சூர்யாவிற்கு சினிமாவில் நடிப்பதற்கு ஆசை இருக்கிறதா? என கேட்டார் இல்லை என்று நான் சொல்லிவிட்டேன். நான் அவரிடம் பேசலாமா? என கேட்டார். அதன் பிறகு இயக்குநர் வசந்த் சூர்யாவை நேரில் சந்தித்து பேசினார். அதன் பிறகு அவருக்கு மேக்கப் டெஸ்ட் நடைபெற்றது. ‘நேருக்கு நேர்’ படம் வெளியானது. அதில் இடம்பெறும் ஒரு பாடலில் சூர்யாவின் குளோசப் காட்சி இருந்தது. அந்த காட்சிகள் தெரிந்த சூர்யாவின் கண்களை பார்த்த இயக்குநர் ஒருவர், ‘இது தமிழ்நாட்டின் வாழும் பெண்களின் தூக்கத்தை கெடுக்கும்’ எனக் குறிப்பிட்டார். சினிமாவைப் பற்றி கனவில் கூட நினைக்காத சூர்யாவை இன்று நடிகராக உயர்த்திய இயக்குநர் மணிரத்னத்தையும், இயக்குநர் வசந்தையும் பாதம் தொட்டு வணங்குகிறேன். அதன் பிறகு இயக்குநர் பாலா, ‘நந்தா’ என்றொரு படத்தை கொடுத்து சிறந்த நடிகர் என்பதை நிரூபித்தார். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
வீட்டில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் நடனமாடுவார். அதன் பிறகு நான்கு மணிக்கு எழுந்து கடற்கரைக்குச் சென்று உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சூர்யாவிற்கு முன் சிக்ஸ்பேக் வைத்துக்கொண்ட நடிகர் யாருமில்லை. தற்போது 28 வருடமாகிவிட்டது. இவரை உருவாக்கிய அனைத்து இயக்குநர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
நடிகர் கஜராஜ் பேசுகையில், ” சிவக்குமார் , நாசர் ஆகிய இருவரும் லெஜெண்ட்ஸ். நான் நடிகனாக நடித்த முதல் படத்திற்கு வாய்ப்பளித்த என் மகனும், இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் முதல் படம் ‘பீட்சா’. நூறாவது படம் ‘ரெட்ரோ’. இந்தத் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தது தான் எனக்கு ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் மட்டுமல்லாமல் எப்போதும் அனைவர் மீதும் அக்கறையும், அரவணைப்பும் கொண்டவர் சூர்யா. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்றார்.
நடிகர் ஜோஜு ஜார்ஜ் பேசுகையில், ” வந்தாரை வாழவைக்கும் தமிழகம். சினிமாவை கொண்டாடும் இந்த மண்ணில்… இந்த மேடையில்.. நிற்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் என் கதாபாத்திரத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் சொன்னபோது பயந்துவிட்டேன். அவரிடம் ஒரே ஒரு வேண்டுகோளை தான் வைத்தேன். அதை இயக்குநர் நிறைவேற்றினார். எனக்கு என் மீது நம்பிக்கையை கொடுத்த படம்.
மலையாளத்தில் மம்முட்டியுடன் நடித்த ஒரு படத்தில்தான் எனக்கு பிரேக் கிடைத்தது. அப்போது அவரிடம் இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு எனக்கு இரண்டு ஆண்டுகள் வரை வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்குமா? என கேட்டேன். வெற்றியை எப்படி கையாளுகிறாயோ… அதைப் பொறுத்து தான் வாய்ப்பு தொடரும் என்றார். இதற்கு நான் நேரில் பார்த்த மிக சிறந்த உதாரணம் சூர்யா சார். இத்தனை வெற்றிகளுக்கு பிறகும் அவரிடம் இருக்கும் எளிமை.. எனக்கு மிகவும் பிடிக்கும். ஐ லவ் யூ சார். இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
தயாரிப்பாளர் ஜெயந்தி லால் கட்டா பேசுகையில், ” இந்தப் படத்தில் இணைந்து பணியாற்ற வாய்ப்பளித்ததற்காக முதலில் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நடித்த பல படங்கள் ஹிந்தியில் ரீமேக் ஆகியிருக்கிறது. அதில் அமீர்கான் – அக்ஷய் குமார் – அஜய் தேவகன் – போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். சூர்யாவை இந்தியா முழுவதும் தெரியும். அவர் இந்தியாவின் ஹீரோ. எனக்கு இந்தி மட்டும் தான் தெரியும். அவர்களுக்கு ஆங்கிலமும், தமிழ் மட்டும்தான் தெரியும். இருப்பினும் அரை மணி நேரம் நாங்கள் சந்தித்து பேசினோம். கார்த்திகேயன் சந்தானம் தான் பேச்சுவார்த்தைக்கு உதவினார். நான் முதன்முதலில் இவ்வளவு பிரமாண்டமான விழாவில் கலந்து கொள்கிறேன். எனக்கு தமிழ் படங்கள் என்றால் சூர்யாவின் படங்கள் மட்டும் தான் தெரியும். திரைப்படத்தின் வெற்றிக்கு உதவும் ரசிகர்களை வாழ்த்துகிறேன். ரெட்ரோ திரைப்படத்தின் வெற்றி விழாவை மும்பையில் நடத்துகிறேன். சூர்யாவின் ரசிகர்கள் அனைவரும் அதில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கிறேன்.” என்றார்.
நடிகை பூஜா ஹெக்டே பேசுகையில், ” நான் கலந்து கொள்ளும் இரண்டாவது இசை வெளியீட்டு விழா நிகழ்வு. இதனை சிறப்பானதாக மாற்றிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சினிமாவில் தான் முதலில் அறிமுகமானேன்.
இந்த வாய்ப்பினை வழங்கிய தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் தமிழில் பின்னணி பேசி இருக்கிறேன். இதற்கு உதவிய இயக்குநர் குழுவினருக்கும் நன்றி. டீசரில் எந்த டயலாக்குகளையும் நான் பேசவில்லை என்றாலும் இசை மூலமாக என் கதாபாத்திரத்தின் உணர்வை ரசிகர்களுக்கு சொன்ன இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுக்கு என் நன்றி. இந்த திரைப்படத்தில் ருக்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன் இத்தகைய கேரக்டரை வடிவமைத்ததற்காகவும் அதில் நடிப்பதற்கு எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கேங்ஸ்டர் கதையை எழுதி இருக்கிறீர்கள். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் அதில் நடிப்பதற்கு வாய்ப்பு தாருங்கள். சூர்யா சார் இந்த படத்தில் பாரி என்ற கேரக்டரில் நடித்திருக்கிறார். சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது. எப்போதும் ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவருடைய எக்ஸ்பிரஸிவ்வான கண்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘ கனிமா ‘பாடலை ரீல்சாக உருவாக்கி பதிவிட்ட அனைவருக்கும் நன்றி. ” என்றார்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பேசுகையில், ” இசை வெளியீட்டு விழாவில் என்னுடைய முதல் பேச்சு இதுதான். வருகை தந்திருக்கும் அனைவருக்கும் முதலில் நன்றி. பீட்சா படத்திலிருந்து கார்த்திக் சுப்புராஜ் உடன் இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறேன். நம்மிடம் இருக்கும் பைத்தியக்காரத்தனத்தை வெளியில் கொண்டு வந்து, அதனை கலை வடிவமாக மாற்றும் திறமைக்காரர் கார்த்திக் சுப்புராஜ். அவருடன் பணியாற்றும்போது கிடைக்கும் அனுபவம் வித்தியாசமானது. தயாரிப்பாளர்களுக்கும் நன்றி. இந்த படத்தில் மிகவும் அன்பான நடிகர் சூர்யாவுடன் பணியாற்றியது பறக்க முடியாதது. எப்போதும் பெரிய நட்சத்திரங்களுடன் பணியாற்றும் போது தயக்கம் இருக்கும். ஆனால் இந்த படத்தில் அந்த தயக்கத்தை உடைத்து இயல்பாக்கியவர் சூர்யா சார். படப்பிடிப்பு தளத்தில் பூஜா ஹெக்டே எப்படி ரியாக்ட் செய்வாரோ.. அதிலிருந்து ஒரு விசயத்தை கார்த்திக் சுப்புராஜ் எடுத்து இதில் பயன்படுத்தி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் என்னுடைய அம்மாவும் பாடியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம். இது ரசிகர்களுடன் மாயாஜால தொடர்பை ஏற்படுத்தி வெற்றி பெறச் செய்யும் என நம்புகிறேன்” என்றார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ” ரெட்ரோ எனக்கு மிகவும் ஸ்பெஷல் ஆனது. கேங்ஸ்டர் படங்களை இயக்க வேண்டும் என்று வரவில்லை. கிரே ஷேடு உள்ள கதாபாத்திரங்களை வெளிப்படுத்துவது எனக்கு பிடிக்கும். என்னுடைய முதல் படமான பீட்சா படத்திலிருந்து ஹீரோ கேரக்டர் கிரே ஷேடு உள்ளதாக இருக்கும். என்னைப் பொறுத்தவரை எல்லோரும் நல்லவர்களும் இல்லை. எல்லோரும் கெட்டவர்களும் இல்லை. அதனால் அதுபோன்ற கதாபாத்திரங்களை எழுத வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. ‘இறைவி’ திரைப்படம் ரிலேஷன்ஷிப்பில் பெண்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதாக இருந்தது. பெண் என்பவள் எப்போதும் தன்னுடைய சுதந்திரத்தை ஏன் ஒரு ஆணிடம் ஒப்படைக்கிறார் என்ற கேள்வி என்னுடைய சின்ன வயதில் இருந்தே இருந்தது. ஒரு காதல் கதையை எழுத வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய வீட்டில் மனைவி கூட ஏன் எப்போதும் வன்முறையான படங்களை பார்த்துக் கொண்டே இருக்கிறாய்… எடுத்துக் கொண்டே இருக்கிறாய்…. ஒரு காதல் திரைப்படத்தை எடுக்க மாட்டாயா..? எனக் கேட்பார். ‘ரெட்ரோ’ படத்தின் கதையை நான் பல வருஷத்திற்கு முன் எழுதினேன். நான் கதையை பற்றி முழுமையாக சொல்ல விரும்பவில்லை. பொதுவாக ஒரு திரைப்படத்தில் நானூறு பேர்களுக்கு மேல் பணியாற்றுவோம். திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் போது ரசிகர்களுக்கு ஏதோ ஒரு வகையில் மேஜிக் செய்திருப்போம். அந்த அனுபவத்தை திரையரங்கில் முழுமையாக தர வேண்டும் என்பதற்காகத்தான் படத்தைப் பற்றி நிறைய விசயங்களை பகிர்ந்து கொள்வதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திரையரங்கத்திற்கு வாருங்கள். கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்களுக்கு பிடிக்கும்.
நான் எழுதும் எழுத்துகளுக்கு ஒரு ஆன்மா இருக்கும் என்று உறுதியாக நம்புபவன். கதைகள் நாம் சந்திக்கும் நபர்களிடமிருந்து கிடைக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் படத்தை நிறைவு செய்த பிறகு நானும் சூர்யா சாரும் சந்தித்தோம். நான் சூர்யா சாரின் ரசிகன். அவருடைய நடிப்பில் வெளியான ‘மௌனம் பேசியதே’ என்னுடைய ஃபேவரைட்டான படம். அதன் பிறகு ‘நந்தா’, ‘காக்க காக்க’ படத்தை பார்த்த பிறகு சிறந்த நடிகர் என்பதை புரிந்து கொண்டேன். இவருடன் எப்படியாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என கனவு கண்டேன். ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் இணைந்தோம். இந்த திரைப்படம் ஏதோ ஒரு வகையில் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும்.
படத்தின் படப்பிடிப்பை 90 நாட்கள் நடத்த திட்டமிட்டோம். ஆனால் 82 நாட்களில் தொடர்ச்சியாக பணியாற்றி நிறைவு செய்தோம். இதற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
நடிகர் சூர்யா பேசுகையில், ” ரெட்ரோ இசை வெளியீட்டு விழாவில் மிக குறைவாக பேசலாம் என நினைத்தேன். வேறொரு விழாவில் நிறைய பேசலாம் என்றும் நினைத்தேன். தமிழகத்தின் அனைத்து பகுதியிலிருந்தும் வந்திருக்கும் என் அன்பான ரசிகர்களுக்கு முதலில் நன்றி. நன்றி.
‘ரெட்ரோ’ என்பது ஒரு காலத்தை குறிக்கிறது. நாம் கடந்து வந்த காலத்தை குறிப்பது. சினிமாவுக்கு வந்து 28 வருஷம் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். அந்த காலத்தை என்னால் மறக்க முடியாது. இந்த அழகான நினைவுகளை கொடுத்த உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. இன்று நடிகர் ஜெயராமை தவற விடுகிறோம். நாசர், ஜோஜு ஜார்ஜ் போன்றவர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்து தங்களுடைய உழைப்பை உற்சாகத்துடன் வழங்குவதை பார்க்கும் போது வியப்பாக இருக்கும். நான் வெற்றி பெற வேண்டும் என உண்மையாக விரும்பும் நாசர் சாருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய இயக்குநர் தமிழ், கருணாகரன், கஜராஜ் அப்பா, சுவாசிகா, விது, பிரேம் … இவர்களுடன் நான்கு மாதம் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.
கார்த்திக் சுப்புராஜ் சிங்கிள் ஷாட்டாக எடுப்பார். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்கினார்கள். ருக்மணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூஜா ஹெக்டேவிற்கும் நன்றி. இந்த படத்தில் அவரே டப்பிங் பேசி இருக்கிறார்.
இந்தப் படத்தின் தொடக்கப்புள்ளி ராஜசேகரும் , கார்த்திகேயனும் தான். அந்தமானில் ஆயிரம் பேருடன் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். இது மறக்க முடியாது.
நம்முடைய படங்கள் வட மாநிலங்களில் திரையிடப்பட்டு, அங்குள்ளவர்களின் அன்பை சம்பாதித்திருக்கிறது என்றால் அதற்கு முக்கியமான காரணம் தயாரிப்பாளர் ஜெயந்தி லால் கட்டா தான். அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கார்த்திக்கும், ஸ்ரேயாசும் இணைந்து ஒரு காட்சியை மேஜிக் போல் உருவாக்குவார்கள். இவர்களின் திட்டமிடலால்தான் நான்கு மாதத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்ய முடிந்தது. நான் மணி சாரிடமும் பணியாற்றி இருக்கிறேன். ஹரி சாரிடமும் பணியாற்றி இருக்கிறேன். இவர்கள் இரண்டு பேரும் கலந்த கலவை தான் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜிடம் ஒரு பாசிட்டிவிட்டி எப்போதும் இருக்கும். இந்தப் படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு படம் உருவாக வேண்டும் என்றால் சகோதரத்துவம் இருக்க வேண்டும் என நினைப்பேன். இந்தத் திரைப்படத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் அற்புதமான இசையை வழங்கி இருக்கிறார். எங்களுடைய 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் லோகோவிற்கும், ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தின் லோகோவிற்கும் இசையமைத்தது சந்தோஷ் நாராயணன் தான். மனதை வருடுவது என்பது மிகவும் அரிதாகத்தான் நடைபெறும். இந்த திரைப்படத்தின் பாடல்கள் நீண்ட நாள் கழித்து ஆல்பமாக ஹிட் ஆகியிருக்கிறது. இதில் மனதை வருடும் பாடல்களும் இருக்கிறது.
சிறிது நாட்களுக்கு முன் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்திருப்பேன். அவர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டேன். இது நான் பிறந்த நாளில் சொன்ன வாக்குறுதி. நீங்கள் அனைவரும் உங்களைக் கடந்து மற்றவர்களுக்காக… நீங்கள் செய்த ஒரு காரியத்திற்காக … உங்களுடன் இணைந்து போட்டோ எடுத்துக் கொண்டேன். அந்த சமயத்தில் என்னிடம், ‘நீங்கள் நல்லா இருக்கீங்கல்லே.. ‘என உரிமையுடன் நலம் விசாரித்திருக்கிறீர்கள். அந்த அன்பு மட்டும்தான் என்னை தொடர்ந்து இயங்க செய்து கொண்டிருக்கிறது. இங்கு வருகை தந்திருக்கும் நீங்கள் அனைவரும் 20 வயதில் இருக்கிறீர்கள். என் மீது நீங்கள் அளவு கடந்த அன்பை வைத்திருக்கிறீர்கள். நீங்கள் அனைவரும் இந்த நாளை…. இந்த தருணத்தை… கொண்டாட வேண்டும் என்று இங்கு வருகை தந்திருக்கிறீர்கள். இந்த அன்பு ஒன்றே போதும்.. நான் எப்போதும் நன்றாகவே இருப்பேன். இங்கிருக்கும் தம்பிகளுக்கும் , தங்கைகளுக்கும் சொல்லும் ஒரே விசயம் இதுதான். அப்பா இந்த மேடையில் சொன்னது தான். நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஒரு சப்ஜெக்ட்டில் மட்டும் தான் பாசானேன். பன்னிரண்டாம் வகுப்பிலும் எல்லா சப்ஜெக்டிலும் பெயில் ஆனேன். பப்ளிக் எக்ஸாமில் மட்டும்தான் பாஸானேன். லைஃப் இஸ் பியூட்டிஃபுல். வாழ்க்கையை நம்புங்கள். வாழ்க்கையில் நிறைய அழகான விசயங்கள் நடக்கும். வாய்ப்புகள் வரும்போது அதை தவற விடாதீர்கள். வாழ்க்கையில் ஒரு முறை ..இரண்டு முறை அல்லது மூன்று முறை வாய்ப்பு கிடைக்கும். அதனைத் தவற விட்டு விடாதீர்கள். இந்த வயதில் எல்லோரும் ரிஸ்க் எடுக்கலாம். தவறில்லை. பேரார்வத்துடன் இருந்தால் மட்டும் போதாது. முழுமையான ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். எல்லோருக்கும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
இந்தப் படத்தில் கார்த்திக் சுப்புராஜ் சொன்னது போல் நிறைய லேயர்ஸ் இருக்கிறது. ஆனால் எனக்கு பிடித்த விசயம் ஒன்று இதில் இருக்கிறது. நானும், பூஜாவும் பேசிக் கொண்டிருக்கும்போது தம்மம் … தி பர்பஸ்… என்பதை பற்றி பேசுவோம். இந்த வேகமான வாழ்க்கையில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன அந்த ரெண்டு விசயங்கள் என்னை கவர்ந்தது. என்னுடைய பர்பஸ் ..அகரம் பவுண்டேஷன் தான். இதற்கும் உங்களுடைய ஒத்துழைப்பு இருக்கிறது. படிப்பில் ஆவரேஜ் ஸ்டூடண்ட்டான எனக்கும் ஒரு வாழ்க்கையை கொடுத்து அதன் மூலமாக எனக்கு ஒரு சக்தியை கொடுத்து ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட தம்பிகளும், தங்கைகளும் பட்டதாரி ஆகியிருக்கிறார்கள். இன்னும் நிறைய பேர் பட்டதாரி ஆவார்கள். இதற்கு அகரத்தில் பணியாற்றும் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. இதை நான் எப்போதும் பெருமிதமாக கருதுவேன்.
மே முதல் தேதியன்று வெளியாகும் கார்த்திக் சுப்புராஜின் ‘ரெட்ரோ’ படத்தை திரையரங்கத்திற்கு வருகை தந்து கொண்டாடுங்கள். ஐ லவ் யூ ஆல். உங்கள் அன்பிற்கு நன்றி” என்றார்.
இசை ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற “குபேரா” படத்தின் முதல் சிங்கிள் “போய் வா நண்பா” !!
பான் இந்திய படைப்பாக உருவாகி வரும் “குபேரா படத்தின் முதல் சிங்கிள், இசை ரசிகர்களை புயலாக தாக்கியுள்ளது. ‘குபேரா’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘போய் வா நண்பா’ அதிரடி இசையில், மென் மெலடி கலந்து அசரடிக்கிறது. இப்பாடல் மூன்று தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ், இயக்குநர் சேகர் கம்முலா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவாகியுள்ளது.
இப்பாடல் உருவான பின்னணி காட்சிகள், தனுஷின் குரல், மற்றும் அவரின் அசத்தலான நடனம், ராக் ஸ்டார் டிஎஸ்பியின் மயக்கும் இசை, அருமையான வரிகள், எனக் கேட்கும் போதே மாய உலகிற்கு அழைத்து செல்கிறது. சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மேஜிக்கை காணும் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது இப்பாடல்.
மனித உணர்வுகளின் குவியலாக, அற்புதமான உணர்வுகளைப் பேசும் படைப்பாக உருவாகியுள்ள இப்படம், உலகம் முழுவதும் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் ஜிம் சரப் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் LLP மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் சார்பில் சுனீல் நாரங் மற்றும் புஷ்கூர் ராம் மோகன் ராவ் ஆகியோர் தயாரிப்பில் “குபேரா” திரைப்படம், மிகப் பெரிய பொருட்செலவில், பிரம்மாண்ட பான் இந்திய படைப்பாக உருவாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட குபேரா திரைப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் உண்மையான பான் இந்திய படைப்பாக வெளியாகவுள்ளது.
இளம் பெண் ஒருவர் நடுஇரவில் கடத்தப்படும் நிலையில் இதனை தொடர்ந்து அவருடைய தாய் மற்றும் தாத்தா காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றை அளிக்கின்றனர்.புகாரின் அடிப்படையில் உடனடியாக காவல்துறை ஆய்வாளர் சிபிராஜ் உடனடியாக விசாரணை தொடங்குகிறார். வழக்கை சிபிராஜ் விசாரணை செய்து கொண்டு இருக்கும் போதே, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு போன் கால் ஒன்று வருகிறது. தனியார் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு பெண் ஒருவர் கொடுமைப்படுத்தப்பட்டு அந்தப் பெண்ணை எப்படியாவது காப்பாற்றுங்கள் என ஆண் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கிறார்.
இதை அறிந்து அந்த பேருந்தை டோல்கேட் செக்போஸ்டில் காவல்துறையினர் பிடிக்கிறார்கள்.அந்த பேருந்திற்குள் சிபிராஜ் சென்று பார்க்க, அங்கு கால் செய்த நபர் இறந்து கிடக்கிறார்.
ஒரு இளம் பெண் கடத்தப்பட்டு இருப்பதும் ஒரு பெண் ஒருவர் பேருந்தில் கொடுமை செய்யப்படுகிறார் என காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்த நபரும் பேருந்தில் இறந்து கிடக்க என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்களை கதாநாயகன் காவல்துறை ஆய்வாளர் சிபிராஜ், இதற்கெல்லாம் யார் காரணம் என குற்றவாளியை கண்டுபிடித்தாரா? கண்டுபிடிக்கவில்லையா? என்பதுதான் இந்த டென் ஹவர்ஸ் திரைப்படத்தின் மீதிக்கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ் இதுவரை பல திரைப்படங்களில் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், டென் ஹவர்ஸ் திரைப்படத்தில் சற்று மாறுபட்ட நடிப்பை மிக அருமையாக வெளிப்படுத்தியுள்ளார்.
திரைப்படத்தில் நடித்திருக்கும் கஜராஜ், ஜீவா ரவி ராஜ் அய்யப்பா, முருகதாஸ், திலீபன், உதயா, தங்கதுரை, சரவண சுப்பையா, ஷாருமிஷா, நிரஞ்சனா, ஆகியோரின் நடிப்பும் திரைப்படத்திற்கு மிகச் சிறப்பு சேர்த்து இருக்கிறது.
மேலும், திரில்லர் திரைப்படத்தில் கதை மற்றும் திரைக்கதைக்கு வில்லன்தான் மிகமிகவும் முக்கியம் ஆனால் வில்லனுக்கு உதவியாக வரும் பஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் இருந்த வலு, வில்லனுக்கு இல்லாதது திரைப்படத்தின் மிகப்பெரிய மைனஸ்.
ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக்கின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகள் அனைத்தும் கதைக்கு ஏற்றவாறு மிகச்சிறப்பாக பயணித்திருக்கிறார்.
இசையமைப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி யின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு திரைப்படத்தில் இன்னும் கூட கொஞ்சம் வேகமாக இருந்திருக்கலாம்.
தனது அறிமுக இயக்கத்திலேயே அருமையாக கதையை தேர்ந்தெடுத்து ஒரே இரவில் 10 மணி நேரத்தில் ஒரு திரில்லர் கதைக்களத்தை கையில் எடுத்து அருமையான திரைக்கதையை வடிவமைத்து மிகச்சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குநர் இளையராஜா கலியபெருமாள்
ஜிங்குச்சா – வெட்டிங் ஆந்தம் (கல்யாணப் பாட்டு) பாடல் வரிகள் கமல் ஹாசன், இசை ஏ.ஆர். ரஹ்மான்.
உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில், முன்னணி இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் முதல் பாடலான, ‘ஜிங்குச்சா’ கலைவாணர் அரங்கத்தில் வெளியிடப்பட்டபோது சென்னை மாநகரமே இசையும் கொண்டாட்டமுமாக முழங்கியது. திரையுலக ஜாம்பவான்கள் கமல் ஹாசன், மணிரத்னம், மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோர் வெளியிட, முன்னணி நட்சத்திரங்கள் சிலம்பரசன், த்ரிஷா கிருஷ்ணன், ஜோஜு ஜார்ஜ், மற்றும் அஷோக் செல்வன் பங்கேற்ற இந்நிகழ்வு, இந்திய சினிமாவின் துணிச்சலான புதியதோர் அத்தியாயத்தின் தொடக்கமாகத் திகழ்ந்தது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஆர். மகேந்திரன், மெட்ராஸ் டாக்கீஸ், மற்றும் சிவா ஆனந்த் இணைந்து தயாரிக்க, ‘தக் லைஃப்’ திரையிலும் திரைக்குப் பின்னும் புதிய, வலுவான கூட்டணியுடன் உருவாகி வருகிறது.
கல்யாணக் கொண்டாட்டம் என்னும் விறுவிறுப்பான பின்னணியில், கமல் ஹாசனும், சிலம்பரசன் டி.ஆரும், இணைந்து ஆடியிருக்கும் இந்தப் பாடல், ரஹ்மானுக்கே உரித்தான பாணியில் நாட்டுப்புறத் தாளக்கட்டும், தற்கால இசையும் இணைந்து அமைந்திருக்கிறது. கமல் ஹாசனின் வரிகளுடன், ஈர்க்கும் குறும்பும், துள்ளலுமான இந்தப் பாடல், பல அடுக்குகளைக் கொண்ட தக் லைஃப் உலகத்துக்கான வண்ணமயமான முதல் வாசலாக அமைந்துள்ளது.
உலகளாவிய வினியோகஸ்தர்கள் பட்டியல்
தக் லைஃப் திரைப்படத்தின் வினியோகஸ்தர்கள் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது:
தமிழ்நாடு – ரெட் ஜெயண்ட் மூவீஸ்
சர்வதேச அளவில் – ஏபி இண்டர்நேஷனல், ஹோம் ஸ்க்ரீன் எண்டர்டெய்ன்மெண்ட்டுடன் இணைந்து
வட இந்தியா – பென் மருதர் சினி எண்டர்டெய்ன்மெண்ட்
ஆந்திர பிரதேஷ் & தெலுங்கானா – ஸ்ரேஷ்த் மூவீஸ்
கர்நாடகா – ஃபைவ் ஸ்டார் செந்தில்
தக் லைஃப் திரைப்படத்தின் ஆடியோ உரிமைகளை சரிகம நிறுவனம் பெற்றுள்ளது.
அதிகாரபூர்வமான ஓடிடி தளம் நெட்ஃப்ளிக்ஸ்.
வினியோகஸ்தர்கள் முடிவு செய்யப்பட்ட நிலையில், தயாரிப்பாளர்கள் உலகளாவிய திரையரங்க வெளியீட்டை ஜூன் 5, 2025 அன்று நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள். உலகெங்கும், தலைமுறை வேறுபாடின்றி அத்தனை ரசிகர்களும் இதற்காகக் காத்திருக்கிறார்கள்.
மேலும், தக் லைஃப் படக்குழுவினர், ஜஸ்ட் க்ரோ தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து நிகழ்த்தும் தக் லைஃப் திருவிழா, ஏ.ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் மே மாதம் 23-ஆம் தேதி நிகழும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
தக் லைஃப் திரைப்படத்தில், ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல் ஹாசன் தோன்றுகிறார். சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, அஷோக் செல்வன், அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாஸர், அலி ஃபஸல், சான்யா மல்ஹோத்ரா ஆகியோருடன் இந்திய அளவில் புகழ்பெற்ற மேலும் பல நட்சத்திரங்கள் இணையவிருப்பதால் பெரும் நட்சத்திரப் பங்கேற்பு கொண்ட படமாக தக் லைஃப் உருவாகி வருகிறது. திரையிலும் திரைக்குப் பின்னுமாக இத்தனை திறமையான கலைஞர்கள் ஒன்றிணைவதால் இது ஒரு மாபெரும் திரை அனுபவமாக இருக்கும். தக் லைஃப் திரைப்படத்தை மிகச் சிறந்த கலைஞர்கள், தலைமுறைகளைக் கடந்து நிற்கும்படி, பிரம்மாண்டமான, உணர்வுப்பூர்வமான காட்சி அனுபவமாக உருவாக்கி இருக்கிறார்கள். இதோ, முதல் பாடல் வெளியாகிவிட்டது. கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. தக் லைஃப் கவுண்ட் டவுன் ஆரம்பம்.
CURTAIN RAISER –Based on the character, Paddington Bear created by Michael Bond, Paddington (2014), a live action animated comedy, was a box-office hit. Based on its success, Paddington 2 (2017) followed, both directed by Paul King. While the first movie was about a soft and polite bear that migrates from the jungles of Peru to the streets of London and is adopted by the Brown family, followed by an unknown person who has a hidden agenda! In the sequel, it gets imprisoned for a crime not committed and the bear as to prove its innocence for its acquittal!
SYNOPSIS – This is the third instalment of the famous franchise of films based on the tales of Michael Bond who created the Paddington character! The Brown family sets out into the Peruvian Jungles to track Paddington’s aunt! This 3rd film marks the directorial debut of Dougal Wilson!
The 3rd part is a full-fledged family entertainer filled with full of adventures, rivers, ancient ruins, so on and so forth…
CREDITS –
The voice cast includes Hugh Bonneville, Emily Mortimer, Antonio Banderas, Olivia Colman and Ben Whishaw (voice of Paddington)
Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி மற்றும் வைகைப்புயல் வடிவேலு கூட்டணியில், நீண்ட இடைவேளைக்குப் பிறகு, காமெடி சரவெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்”.
வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில், A.C.S மருத்துவக் கல்லூரி விழாவில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
தயாரிப்பாளர் ஏ சி சண்முகம் அவர்கள் பேசியதாவது… அனைவருக்கும் வணக்கம். எம்ஜிஆர் பல்கலைகழகத்தில் கலைவிழா நடத்த வேண்டுமென்று முடிவெடுத்து, பிரசிடெண்டட் அருண்குமார் இந்த படக்குழுவை அழைத்துள்ளனர். மகிழ்விக்கும் மன்னர்கள் சுந்தர் சி மற்றும் வடிவேலு அவர்களை கெஸ்ட்டாக அழைத்துள்ளனர். பென்ஸ் மீடியாவிற்கு அடுத்தடுத்து, வெற்றிப்படங்களைத் தந்து வருகிறார் சுந்தர் சி. 12 வருடங்களாகக் கிடப்பிலிருந்த மதகஜராஜா படத்தை வெளியிட்டோம், அதையும் ஹிட்டாக்கி தந்தார். இவ்வளவு பெரிய ஆளுமைகள் இவ்விழாவிற்கு வந்ததற்கு நன்றி. வடிவேலு சார் பற்றிச் சொல்லத்தேவையில்லை, அவர் உலகப்புகழ் வாய்ந்தவர். பென்ஸ் மீடியா இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்துள்ளது என்பதில் பெருமை. இந்தப்படம் கண்டிப்பாக அனைவரையும் மகிழ்விக்கும். இந்த கல்லூரியில் இந்த விழாவை நடத்துவது, மகிழ்ச்சி, அனைவருக்கும் நன்றி.
நடிகர் விச்சு விஸ்வநாத் பேசியதாவது… இயக்குநர் சுந்தர் சி அவர்களுடன் இணைந்து 36 வருடமாகப் பயணித்து வருகிறேன். கேங்கர்ஸ் படத்தில் ஹெச் எம் ரோல் செய்துள்ளேன். வடிவேலு சாருடன் மீண்டும் நடித்தது மகிழ்ச்சி. வின்னர் படத்தில் பல ரீடேக் வாங்கினேன், அந்த பதட்டம் இந்தப்படத்திலும் இருந்தது. இப்படம் புதுமையாக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் மைம் கோபி பேசியதாவது… விச்சு அண்ணா தான் என்னை சுந்தர் சி அண்ணனிடம் அறிமுகப்படுத்தி இப்படத்தில் நடிக்க வைத்தார். அவருக்கு நன்றி. சுந்தர் சி எப்படி இருப்பார்? எப்படி நடந்து கொள்வார்? எனத் தயக்கமாக இருந்தது. என்னைப் பார்த்ததும் கை கொடுத்தார், அவர் கை அவ்வளவு சாஃப்டாக இருந்தது. அவர் மனதும் அதே மாதிரி தான். மிக இனிமையானவர். அவருடன் 1000 படம் கூட வேண்டுமானாலும் நடிக்கலாம். இப்படத்தில் வடிவேலு அண்ணனுடன் நடித்தது மகிழ்ச்சி. அவர் நடிப்பைப் பார்க்க அத்தனை அற்புதமாக இருக்கும். அவ்வளவு எக்ஸ்பிரஷன் தருவார். இந்தப்படம் மிக நன்றாக வந்துள்ளது எல்லோரும் தியேட்டரில் போய்ப் படம் பாருங்கள் நன்றி.
நடிகர் முனீஷ்காந்த் பேசியதாவது.. சுந்தர் சி அண்ணனுடன் கலகலப்பு 2 செய்தேன் அடுத்த வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. நேரிடையாக அவரிடமே கேட்டேன், கேங்ஸ்டரில் நல்ல வாய்ப்பு தந்தார். வடிவேலு அண்ணனுடன் நாய் சேகருக்குப் பிறகு இணையும், இரண்டாவது படம். இரண்டு ஆளுமைகளுடன் பணியாற்றியது மகிழ்ச்சி. இப்படத்தில் பார் ஓனராக நடித்துள்ளேன் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன், நன்றி.
நடிகர் பக்ஸ் எனும் பகவதி பெருமாள் பேசியதாவது… சுந்தர் சி சார் ஒரு ஜென்டில்மேன் டைரக்டர், இத்தனை வெற்றி தந்தவர் ஆனால் எந்த ஒரு கீரிடமும் அவரிடம் இருக்காது, மிக இயல்பாகப் பழகுவார். 35 நாட்களில் அவர் என்னிடம், படத்தில் இத்தனை லைட் மேன் ஊழியர்கள் பணியாற்றுவதைத் தான் பெருமையாகச் சொன்னார். அவரின் நல்ல மனதுக்கு நன்றி. வடிவேலு சார் கூட ஒரு போட்டோ எடுக்க வேண்டுமென ஆசைப்பட்டவன். ஆனால் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
கதை மற்றும் வசனகர்த்தா வெங்கட் ராகவன் பேசியதாவது… இந்த நிகழ்ச்சிக்கு, இவ்வளவு கூட்டத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது நம்ம படம், கேங்கர்ஸ் ஆசிர்வதிக்கப்பட்ட படம், அரண்மனை வெற்றிக்குப் பிறகு என்ன பண்ணலாம் எனப் பேசும் போது, வடிவேலு அண்ணனுடன் பண்ணலாம் என பேசினோம். அடுத்த நாளே சுந்தர் சி சார், வடிவேலு அண்ணனைச் சந்தித்து ஐடியாவை பேசி ஓகே பண்ணினார். அடுத்த முன்றாவது வாரத்தில், படம் ஷூட்டிங் போய் விட்டோம். நாங்கள் நினைத்த அனைத்தும் கிடைத்தது. இந்தப்படத்திற்கு எல்லாமே தானாக அமைந்தது. நாங்கள் நினைத்த நடிகர்கள் கிடைத்தார்கள். தலைநகரம் படத்தில் வடிவேலு அண்ணனுடன் வேலை பார்த்துள்ளேன். இப்படத்தில் மீண்டும் வேலை பார்த்தேன், அவரிடம் அதே எனர்ஜி பல மடங்கு வளர்ந்துள்ளது, சுந்தர் சி அண்ணனுடன் வடிவேலு அண்ணன் கெமிஸ்ட்ரி அப்படி இருக்கும். அவர்களை ஃபேனாக பார்த்து ரசித்துள்ளேன். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் ஏசிஎஸ் சாருக்கு நன்றி. இந்தப்படம் மிக நன்றாக வந்துள்ளது, அனைவரும் தியேட்டருக்கு சென்று படம் பாருங்கள். அனைவருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் எசக்கி கிருஷ்ணசாமி பேசியதாவது… படத்தில் வாய்ப்பு தந்த சுந்தர் சி அண்ணாவுக்கு நன்றி. அவருடன் எனக்கு இது 3 வது படம், என் கடைசி 7 படத்தில் அவர் ஏதாவது ஒரு வழியில் இருந்துள்ளார். அவருக்கு நன்றி. அவர் படம் எப்படி இருக்க வேண்டும், என்பதை முதலிலேயே சொல்லி விடுவார். முழு சுதந்திரம் தருவார். இப்படம் மிக அருமையாக வந்துள்ளது. கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்.
எடிட்டர் பிரவீன் ஆண்டனி பேசியதாவது… மக்களைச் சிரிக்க வைக்கும் அருமையான படங்களைத் தருபவர் எங்கள் சுந்தர் சி சார். கோடிக்கணக்கான மக்களைச் சிரிக்க வைக்கிறார். இப்படமும் அனைவரையும் சிரிக்க வைக்கும் நன்றி.
இசையமைப்பாளர் சத்யா பேசியதாவது… எனக்கு இந்த வாய்ப்பை தந்ததற்கு சுந்தர் சி சாருக்கு நன்றி. இசையில் எனக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் தந்துள்ளார். பாடல்களுக்கும் மிகப்பெரிய முக்கியத்துவம் தந்துள்ளார். சுந்தர் சி சார், வடிவேலு சார் கூட்டணியில் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சி அனைவருக்கும் நன்றி.
நடிகை கேத்தரின் தெரேசா பேசியதாவது… உங்கள் முன்னிலையில் எங்கள் படத்தைப் பற்றிச் சொல்வதில் மகிழ்ச்சி. ஒரு சிறு கிராமத்தில் உள்ள பள்ளி ஆசிரியையாக நடித்துள்ளேன். நான் வடிவேல் சாரின் ரசிகை, அவர் கதாபாத்திரத்திற்குள் மாறுவதை அருகிலிருந்து பார்த்தது அற்புதமான அனுபவமாக இருந்தது. அவருடன் நடித்தது பெருமை. இப்படத்தில் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் என் நன்றிகள். Avni Cinemax (P) Ltd மற்றும் Benz Media PVT LTD நிறுவனங்களுக்கு நன்றி. சுந்தர் சி சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுகிறேன். ஆனால் அவருடன் நடிப்பது முதல் முறை, அவர் படத்தை மிக இயல்பாக, எந்தவித கஷ்டமும் இல்லாமல் மிகச்சிறப்பாகக் கொண்டு வந்துவிடுகிறார். இந்தப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் சிரிக்க வைக்கும். அனைவரும் கொண்டாடுங்கள் நன்றி.
நடிகை வாணி போஜன் பேசியதாவது… இங்கு கல்லூரி மாணவர்கள் ஆடிய நடனம் மிக அற்புதமாக இருந்தது. சுந்தர் சி சாருக்கு பெரிய நன்றி சொல்ல வேண்டும். அவரும் வடிவேலு சாரும் இருக்கும் படத்தில் யார் கூப்பிட்டாலும் நடிப்பார்கள். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததற்கு நன்றி. சுந்தர் சி சார் மிக மிக எளிமையான இனிமையான மனிதர். அவருக்கு என் நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்களை மகிழ்விக்கும் அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது… கல்லூரியில் உங்கள் எல்லோரையும் பார்க்க அத்தனை உற்சாகமாக உள்ளது. இனிமேல் நிறையக் கல்லூரி விழாவிற்கு வருகை தருவேன். நானும் வடிவேல் அண்ணனும் மீண்டும் இணைந்து, உங்களை மகிழ்விக்க, உழைத்துள்ளோம். என் மீது இப்படத்திற்காக நம்பிக்கை வைத்த, ஏ சி சண்முகம் அண்ணன், ஏசிஎஸ் அருண்குமார் ஆகியோருக்கு நன்றி. இந்தப்படம் ஆரம்பிக்க விதை போட்டது வடிவேல் அண்ணன் தான். தமிழில் மணிஹெய்ஸ்ட் மாதிரி ஒரு சின்ன ஊரில், ஆட்டோ ஓட்டுநர், டீச்சர் எல்லாம் வைத்து, பண்ணினால் எப்படி இருக்கும் என்பது தான் கதை. இந்தப்படத்திற்கு என்னடா தலைப்பு வைப்பது எனத் திணறியபோது, வடிவேல் அண்ணன் போற போக்கில் கேங்கர்ஸ் என்றார். அதையே தலைப்பாக வைத்து விட்டோம். கண்டிப்பாக இப்படம் உங்கள் எல்லோரையும் சந்தோசப்படுத்தும் நன்றி.
நடிகர் வடிவேலு பேசியதாவது… முதலில் சுந்தர் அண்ணன் சார்பிலும் என் சார்பிலும் ஏ சி சண்முகம் அய்யா அவர்களுக்கு நன்றி. 10 ஆயிரம் மாணவர்கள் முன்னிலையில் இப்பட விழா நடப்பது மகிழ்ச்சி. நானும் சுந்தர் சி அண்ணனும் 15 வருஷமா சேர வில்லை, நம்மூரில் பிரிச்சி வைக்க ஆளா இல்லை, இடையில் நாங்கள் பிரிந்திருந்தது பெரிதாகத் தெரியவில்லை. இந்தப்படம் எதோ நேற்று செய்த வின்னர் படம் மாதிரி, அத்தனை புதிதாக இருக்கிறது. சுந்தர் சி அண்ணனுக்கு சொல்லவா வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து உருவாக்கியிருக்கிறார். பேசி முடிச்சு 35 நாளில் இப்படத்தை முடித்து விட்டோம். உங்களுக்குத் தேவையான அத்தனை தீனியும் படத்தில் இருக்கிறது. இது தியேட்டரில் எல்லோரும் சேர்ந்து பார்த்து கொண்டாட வேண்டிய படம். சுந்தர் சி அண்ணன் அருமையாக எடுத்துள்ளார், என்னிடம் என்ன வாங்க வேண்டும் என, அவருக்கும் தெரியும் உங்கள் எல்லோருக்கும் கொண்டாட்டம் காத்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி.
வைகைப்புயல் வடிவேலு நடிப்பில் புகழ்பெற்ற, கைப்புள்ள, வீரபாகு கதாபாத்திரங்களைப் போலத் தனித்தன்மையுடன் கூடிய “சிங்காரம்” எனும் அசத்தலான கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார். ஃபர்ஸ்ட் லுக்கில், அவரது தோற்றமே ரசிகர்களைக் குதூகலப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
இப்படத்தில் சுந்தர் சி, வடிவேலு ஆகியோருடன் கேத்தரின் தெரேசா, வாணி போஜன், முனீஷ்காந்த், பக்ஸ், மைம் கோபி, ஹரீஷ் பேரடி, அருள் தாஸ், கருப்புசாமி, சந்தான பாரதி, S மதுசூதன ராவ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் சுந்தர் சி இயக்கியுள்ள இப்படத்திற்கு, வசனங்களை வெங்கட் ராகவன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் C .சத்யா இசையமைத்துள்ளார். எசக்கி கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்ய, எடிட்டிங் பணிகளை பிரவீன் ஆண்டனி செய்துள்ளார், கலைஇயக்கத்தினை பொன்ராஜ் கவனிக்க, சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் ராஜசேகர் K அமைத்துள்ளார்.
இப்படம் வரும் ஏப்ரல் 24 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது.