‘சந்திரமுகி 2’ திரை விமர்சனம்
ராகவா லாரன்ஸ்,கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா சரத்குமார், லட்சுமி மேனன், மஹிமா நம்பியார்,மற்றும் பலர் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் சந்திரமுகி 2
மிகப்பெரிய தொழிலதிபரான சுரேஷ் மேனன், ராதிகா சரத்குமார் குடும்பத்தில் உள்ள பேக்டரி தீப்பெடுத்து எரிந்து விடுகிறது.இப்படி அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.நடக்கும் பிரச்சினைகளுக்கு முற்றும் புள்ளி வைக்க வேண்டும் என்றால் குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் மட்டுமே பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என குடும்ப ஜோதிடர் சொல்ல, குடும்பத்தில் உள்ள அனைவரும் குலதெய்வம் கோவில் உள்ள ஊருக்கு செல்கிறார்கள்.அங்கு தங்குவதற்கான சந்திரமுகி இருக்கும் அந்த பங்களாவை குத்தகைக்கு எடுத்து அனைவரும் தங்குகிறார்கள்.இவர்களுடன் ராதிகா மகளின் இரண்டு குழந்தைகளும் வரவேண்டும் என ஜோதிடர் கூற அந்த இரண்டு குழந்தைகளுக்கும் பாதுகாவலராக இருக்கும் கதாநாயகன் ராகவா லாரன்ஸ் அதே சந்திரமுகி பங்களாவில் வந்து தங்குகிறார்கள்.இந்நிலையில் குலதெய்வ கோவில் பராமரிப்பு இல்லாமல் அடர்ந்த காடு போல் சுத்தம் செய்யாமல் இருக்கிறது.தங்களது குலதெய்வ கோவிலில் சுத்தம் செய்வதற்காக ஒருவர் மூலம் 20 பேர் கொண்ட நபர்கள் சுத்தம் செய்ய செல்கிறார்கள்.அங்கு கோவில் சுத்தம் செய்து கொண்டிருந்தவர்களில் இரண்டு பேர் மட்டும் மர்மமான முறையில் இறந்து விடுகிறார்கள்.அதே சமயம் சந்திரமுகியின் ஆத்மா ராதிகாவின் மகளான லட்சுமி மேனன் உடலுக்குள் புகுந்து விடுகிறது.இதையடுத்து இந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் பலவிதமான பிரச்சனைகள் நடக்கிறது.
இறுதியில் சந்திரமுகியின் ஆத்மா லட்சுமி மேனனை விட்டு சென்றதா? செல்லவில்லையா? சந்திரமுகியின் ஆத்மா ராதிகா குடும்பத்தை என்ன செய்தது? குல தெய்வ கோவிலில் ராதிகாவின் குடும்பத்தினர் வழிபாடு செய்தார்களா? வழிபாடு செய்யவில்லையா? என்பதுதான் இந்த சந்திரமுகி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.
ராகவா லாரன்ஸ் வேட்டையன் கதாப்பத்திரத்தில் வீரத்தையும், பாண்டியன் கதாப்பத்திரத்தில் காமெடியையும் தனக்கே உரிய பாணியில் நடனம், ரொமான்ஸ் என அருமையாக நடிப்பில் கலக்கி இருக்கிறார்.
சந்திரமுகியாக வரும் கதாநாயகி கங்கனா ரனாவத் நடனம், பயம் என அனைத்திலும் ஸ்கோர் செய்து அழகு தேவதையாக ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
லட்சுமி மேனன் பாவமாக வந்து சந்திரமுகியின் ஆத்மா தன்து உடம்பில் புகுந்தவுடன் ஆக்ரோஷமான நடிப்பையும் வெளிப்படுத்தி அசர வைத்து இருக்கிறார்.
பணிப்பெண்ணாக வரும் மகிமா நம்பியார் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.
ராதிகா சரத்குமார் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோர் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.
சிருஷ்டி டாங்கே, ரவி மரியா, விக்னேஷ், ராவ் ரமேஸ், Y.G மகேந்திரன், சாய் ஐயப்பன், சத்ரூ, கார்த்திக் சீனிவாசன், C.ரங்கநாதன், தேவி, பாவனா, பேபி மானஸ்வி, மாஸ்டர் சஞ்ஜீவ், மாஸ்டர் தர்சித், பேபி தீக்ஷா உள்ளிட்ட அனைவரும் கொடுத்த வேலையை மிகவும் சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
வடிவேலு தான் பயந்து ரசிகர்களுக்கு சிரிப்பை கொடுத்து இருக்கிறார். திரைப்படத்திற்கு பெரிய பலம் வடிவேலுவின் நடிப்பு.
ஒளிப்பதிவாளர் ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு அருமையாக அமைந்திருக்கிறது.
இசையமைப்பாளர் ஆஸ்கர் நாயகன் எம் எம் கீரவாணியின் இசை மற்றும் பாடல்கள் அனைத்தும் அருமையாக இருக்கிறது.
சந்திரமுகி முதல் பாகத்தில் இருந்த அரண்மனையில் ராதிகா மற்றும் குடும்பத்தினர் சென்ற பிறகு சந்திரமுகி ஆத்மாவால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பி.வாசு.
மொத்தத்தில் சந்திரமுகி ஆக்ரோஷமான அழகிய பேய்
OVER ALL RATTING———-3/5