‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண், இந்திய கிரிக்கெட்டின் நாயகனான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் பல்வேறு வியப்பில் ஆழ்த்தும் பின்னூட்டங்களுடன் வைரலாகி வருகின்றன.
இந்திய சினிமாவின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான ராம்சரண் அண்மையில் தனியார் நிறுவனத்தின் விளம்பரப் படப்பிடிப்பிற்காக மும்பைக்கு சென்றிருந்தார். அப்போது இந்திய கிரிக்கெட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனியை சந்தித்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ராம் சரண் பகிர்ந்திருந்தார். அதனுடன் ‘இந்தியாவின் பெருமையை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி’ என்றும் பதிவிட்டிருந்தார்.
ராம்சரனின் ரசிகர்கள் அவர் நடிப்பில் தயாராகி வரும் ‘கேம் சேஞ்சர்’ எனும் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை எதிர்பார்த்து காத்திருந்த தருணத்தில்.. ராம் சரணும், எம் எஸ் தோனியும் சந்தித்து கொண்ட தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியானதால், அதனை கொண்டாடி வருகின்றனர்.
அந்த புகைப்படத்தில் ராம் சரண் -இந்திய ராணுவ வீரர்கள் அணியும் பச்சை வண்ண சட்டையும், மகேந்திர சிங் தோனி -நீல வண்ண சட்டையும் அணிந்து தோன்றுவது ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது.
இதனைக் கண்ட இருவரது ரசிகர்களும் ‘ஒரே சட்டகத்தில் இரண்டு கடவுள்கள்’ என்றும், ‘இந்திய சினிமாவின் பெருமையும், இந்திய கிரிக்கெட்டின் பெருமையும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்’ என்றும், ‘வெள்ளித்திரை நாயகனும், மைதான நாயகனும் ஒருவரை ஒருவர் சந்தித்திருக்கிறார்கள்’ என்றும், ‘இந்தியாவின் இரண்டு ராசியான ஜொலிக்கும் நட்சத்திரங்கள்’ பல்வேறு பின்னூட்டங்களை பதிவிட்டு தங்களது பேரன்பை பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதையை நமது வாழ்வியலோடு அழகாக சொல்லும் ஹர்காரா திரைப்படம், ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் காட்சித்துணுக்குகள் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
KALORFUL BETA MOVEMENT தயாரிப்பில், அருண் காஸ்ட்ரோ இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், காளி வெங்கட், அருண் காஸ்ட்ரோ நடிப்பில் வெளியான திரைப்படம் “ஹர்காரா”. இப்படம் ஆகஸ்ட் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து அக்டோபர் 1 ஆம் தேதி இப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியானது.
அமேசான் ப்ரைம் தளத்தில் இந்திய அளவில் ஹர்காரா திரைப்படம் டாப்டென்னில் நன்காம் இடம்பிடித்து, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஓடிடி தளத்தில் குடும்ப பார்வையாளர்கள் இப்படத்தை கொண்டாடி வருகின்றனர். தமிழில் மட்டுமல்லாமல் இந்தியாவெங்கும் இப்படம் ரசிகர்களின் ஆதரவைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் முதல் தபால் மனிதனின் கதை சொல்லும் இந்தப்படம், இப்போதைய நகர வாழ்வியலின் சிக்கல்களையும், தொழில்நுட்பம் புகாத மலை கிராமத்தின் அழகிய வாழ்வியலையும், நாம் மறந்து போன இயற்கையோடு இணைந்த வாழ்க்கையையும் அழகாகச் சொல்கிறது.
இப்படத்தில் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்வின் பெருமையை சொல்லும் ஒரு காட்சியை அனைவரும் கொண்டாடி பகிர்ந்து வருகிறார்கள். படத்திலிருந்து சில காட்சித்துணுக்குகள் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டு, பல மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மனதை மயக்கும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள “ஹர்காரா” படத்தை அமேசான் ப்ரைம் தளத்தில் கண்டுகளியுங்கள்.
இன்னும் 17 நாட்களில் புலியின் வேட்டை தொடங்குகிறது. மாஸ் மஹாராஜா ரவிதேஜா நடிப்பில் முதல் பான் இந்தியா திரைப்படமான டைகர் நாகேஸ்வர ராவ் படத்தை, ப்ளாக்பஸ்டர் இயக்குநர் வம்சி இயக்குகிறார். பிரபல தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் மிகப்பெரிய பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளார்கள். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிப்பில் பான் இந்தியா பிளாக்பஸ்டர்கள்- தி காஷ்மீர் பைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 ஆகிய படங்களுக்குப் பிறகு வரும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளன. சிறந்த தயாரிப்பு மற்றும் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களுடன் பிரம்மாண்ட படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
படத்தின் அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும், ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்கள், ரசிகர்களுக்கு ஆச்சர்யம் தரும் வகையில் மிகவும் தேடப்படும் திருடர்களின் தளமான ஸ்டூவர்ட்புரத்தின் ஆபத்தான உலகத்திற்கு பார்வையாளர்களை கொண்டு செல்லும் ஒரு அற்புதமான டிரெய்லருடன் வந்துள்ளனர். மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் இந்த டிரெய்லர் வெளியிடப்பட்டது.
கொள்ளையடிப்பதற்கு விதிகள் இருக்கும் நிலையில் நாகேஸ்வரராவின் வருகை அனைத்தையும் மாற்றுகின்றது. நாகேஸ்வரராவிற்கு பெரும் அதிகாரப் பசி, பெண்களின் மீது பேராசை, பண ஆசை. ஒருவரைத் தாக்கும் முன் அல்லது எதையாவது கொள்ளையடிக்கும் முன் எச்சரிக்கை கொடுப்பதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். இருப்பினும், நாகேஸ்வர ராவை ஒழிக்க ஒரு பலமான போலீஸ்காரர் முயல்கிறார். ஸ்டூவர்ட்புரம் நாகேஸ்வர ராவின் கதை அவரது கைதுடன் முடிந்தது, ஆனால் டைகர் நாகேஸ்வர ராவின் கதை அங்கிருந்து தொடங்குகிறது. தேசிய அச்சுறுத்தலாக மாறும் டைகர் நாகேஸ்வர ராவின் இரத்தம் தோய்ந்த வேட்டை பிரமிப்பானது.
டிரெய்லரின் இரண்டரை நிமிடங்கள் நாகேஸ்வர ராவின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான தருணங்களைக் காட்டுகிறது. ரவிதேஜா இளமையாகவும், சுறுசுறுப்பாகவும், காட்டுமிராண்டியாகவும், மிருகத்தனமாகவும், என பல விதங்களில் தோன்றுகிறார். நாகேஸ்வர ராவாக அவரது மாற்றம் நம்பமுடியாத வகையில் அமைந்துள்ளது. ஒவ்வொரு நடிகருக்கும் தனித்துவமான இடம் கொடுக்கப்பட்டுள்ளது. நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர், ரேணு தேசாய், அனுபம் கெர், நாசர், ஜிஷு சென்குப்தா, ஹரீஷ் பெராடி மற்றும் முரளி ஷர்மா ஆகியோருடன் பல முக்கிய நடிகர்கள் இப்படத்திற்கு கூடுதல் மதிப்பை சேர்க்கின்றனர்.
டைகர் நாகேஸ்வர ராவ் ஒரு அதிரடி பொழுதுபோக்கு திரைப்படம். இயக்குநர் வம்சி தன் தனித்துவமான கதை சொல்லலில், ரவிதேஜாவை இதுவரை பார்த்திராத புதுமையான தோற்றத்தில் பிரமாண்டமாக காட்சிப்படுத்தியுள்ளார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் தயாரிப்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் உயர்தரமான படைப்பாக இப்படம் உருவாகிறது, இப்படத்தின் ஆக்ஷன் கோரியோகிராஃபி உலகத்தரம் வாய்ந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் அற்புத இசையில், R மதியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிகர்களுக்கு அற்புத விருந்தாக அமைந்துள்ளது. கடந்த காலத்தில் நடக்கும் கதையில் அவினாஷ் கொல்லாவின் கலை இயக்கம் குறிப்பிடத் தக்கது. ஸ்ரீகாந்த் விசாவின் வசனங்கள் மிக பவர்புல்லாக அமைந்துள்ளது.
படத்தின் பிரம்மாண்டத்தை அழகாக எடுத்துக்காட்டுகிறது டிரெய்லர். படத்தின் இணை தயாரிப்பாளர் மயங்க் சிங்கானியா பணியாற்றுகிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா ரிலீஸாக இப்படம் வெளியாகவுள்ளது.
நடிகர்கள்: ரவி தேஜா, நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ரேணு தேசாய், அனுபம் கெர் மற்றும் பலர்
எழுத்து – இயக்கம் : வம்சி தயாரிப்பாளர்: அபிஷேக் அகர்வால் தயாரிப்பு நிறுவனம் : அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் வழங்குபவர்: தேஜ் நாராயண் அகர்வால் இணை தயாரிப்பாளர்: மயங்க் சிங்கானியா வசனம்: ஸ்ரீகாந்த் விசா இசையமைப்பாளர்: GV பிரகாஷ் குமார் ஒளிப்பதிவு : R மதி தயாரிப்பு வடிவமைப்பாளர்: அவினாஷ் கொல்லா மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங்க் – ஃபர்ஸ்ட் ஷோ
ஜவான் திரைப்படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான ‘ஆராராரி ராரோ’ இசை வீடியோ இறுதியாக உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில், விவேக்கின் இதயப்பூர்வமான வரிகளில், இந்த பாடல் தாய்-மகன் பாசத்தின் அழுத்தமான சித்தரிப்புடன் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்துள்ளது. தீப்தி சுரேஷின் அழகான குரலில் இந்த வீடியோ, தீபிகா படுகோன் மற்றும் இளம் ஆசாத் ஆகியோரின் அற்புதமான சித்தரிப்பில் ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்கிறது.
‘ஆராராரி ராரோ’ வெறும் பாடல் அல்ல; இது ஒரு தாய் மற்றும் அவரது மகனுக்கு இடையே இருக்கும் ஒப்பற்ற பாசத்தின் கதை, நிபந்தனையற்ற அன்பின் வெளிப்பாடு. இந்த மியூசிக் வீடியோ இந்த புனிதமான உறவினை அதனுடன் வரும் தியாகங்கள் மற்றும் உணர்ச்சிகளை, ஆழமாக காட்சிப்படுத்தியுள்ளது. தீபிகா படுகோன், அர்ப்பணிப்புள்ள தாயின் பாத்திரத்தை தன் அசாத்திய நடிப்பில், திரையில் உயிர்ப்பித்துள்ளார். மியூசிக் வீடியோவில் தீபிகா படுகோன் பார்வையாளர்களிடம் பெரும் மாற்றத்தை கொண்டு வருகிறார் அவரது தோற்றம், அவரின் பாதிப்பு அதைத்தாண்டிய அவரது மன வலிமை, அவரது கதாபாத்திரத்திற்கு பெரும் நம்பகத்தன்மையை சேர்க்கிறது. இந்தப்பாடல் உலகம் முழுதும் ரசிக நெஞ்சங்களை கொள்ளை கொண்டு வருகிறது.
“ஜவான்” திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.
“ஒன் 2 ஒன்” படத்தின் பரபரப்பான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
24 HRS புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான தயாரிப்பில், இயக்குநர் K.திருஞானம் எழுதி இயக்க, சுந்தர்.C நாயகனாக நடிக்க பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கும் திரைப்படம் “ஒன் 2 ஒன்” படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.
மின்னல் வேகத்தில் நகரும் ரயிலுக்கு மேலும், கீழும், கடும் ஆக்ரோஷத்துடன் சுந்தர்.C, அனுராக் காஷ்யப் இடம்பெற்றிருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் படத்தின் மீது பெரும் ஆவலை தூண்டுகிறது. ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான கமர்ஷியல் விருந்துள்ளது என்பதை ஃபர்ஸ்ட் லுக் உறுதிப்படுத்துகிறது.
ஒரு குழந்தைக்குப் பாசமான தந்தையாகவும், மறுபுறம் ஆக்சன் முகத்துடன் இதுவரையிலும் ஏற்று நடித்திராத வித்தியாசமான பாத்திரத்தில் சுந்தர்.C மிரட்டலாக நடித்துள்ளார். அவருக்கு இணையான வில்லன் பாத்திரத்தில், இமைக்கா நொடிகள் படத்திற்குப் பிறகு, பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இப்படத்தில் அட்டகாசமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் பரமபதம் விளையாட்டு படத்தில் நாயகன் வேடத்தில் நடித்த விஜய் வர்மன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை திரிஷா நடிப்பில் உருவாகி வெளியான பரமபதம் விளையாட்டு படத்தைத் தொடர்ந்து இயக்குநர் K.திருஞானம், விறுவிறுப்பான திரைக்கதையில் பரபரப்பான கமர்ஷியல் படமாக இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சுந்தர்.C நாயகனாக நடிக்கிறார். பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், விஜய் வர்மன் மற்றும் நடிகை நீது சந்த்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் ராகினி திவேதி, பேபி மானஸ்வி, ரியாஸ்கான் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர்.
இப்படத்திற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபின் அட்டகாசமான நான்கு பாடல்களை இசையமைத்துள்ளார். முன்னதாக இவரின் இசையில் பிரமித்து, புத்தம் புதிய ஐஃபோன் வழங்கி அவரைப் படக்குழு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.
படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
தொழில் நுட்பக் குழு விபரம்
தயாரிப்பு – 24 HRS புரொடக்ஷன்ஸ் எழுத்து இயக்கம் – K.திருஞானம் இசை – சித்தார்த் விபின் ஒளிப்பதிவு – S KA பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன் எடிட்டிங் – C S பிரேம் குமார் கலை இயக்கம் – R ஜனார்த்தனன் பாடல்கள் – மோகன் ராஜன் சண்டைப்பயிற்சி – சிறுத்தை கணேஷ் , ரக்கர் ராம் நடனம் – தீனா லைன் புரடியூசர் – K கேசவன் சவுண்ட் & மிக்ஸிங் – T உதயகுமார் ஸ்டில்ஸ் – V பாக்யராஜ் D I – ஶ்ரீ கலாசா ஸ்டூடியோஸ் கலரிஸ்ட் – ரகுராமன் விஷுவல் எஃபெக்ட்ஸ் & சிஜி – டி நோட் ஸ்டுடியோ மக்கள் தொடர்பு – சதீஷ், சிவா (AIM) பப்ளிசிட்டி டிசைன் – தினேஷ் அசோக்
The power-packed massive actioner Ustaad Bhagat Singh in the deadly combination of Pawan Kalyan and Harish Shankar concluded an intense and action-packed schedule with an exploding performance of the Power Star. The makers have announced to come up with exciting updates in the coming days. The team is jubilant with the way the works are happening.
Ustaad Bhagat Singh is making a huge buzz, not just because the last film Gabbar Singh in their combination was a sensational hit, the glimpse of the movie received a thumping response from all corners. More importantly, Pawan Kalyan is back in action as a cop.
Tollywood’s leading production house Mythri Movie Makers is bankrolling the project ambitiously. Naveen Yerneni and Y Ravi Shankar are the producers of this high budget entertainer featuring the most happening Sreeleela playing the lead actress.
Rockstar Devi Sri Prasad provides the music for the movie that has cinematography by Ayananka Bose. Ram-Lakshman duo is taking care of stunts of the movie edited by Chota K Prasad.
Technical Crew: Written & Directed by Harish Shankar. S Producers: Naveen Yerneni, Y.Ravi Shankar Banner: Mythri Movie Makers CEO: Cherry Screenplay: K Dasaradh Music: Devi Sri Prasad DOP: Ayananka Bose Editor: Chota K prasad Additional writer: C. Chandramohan Production Designer: Anand Sai Fights: Ram – Laxman Executive producers: Chandra Sekhar Ravipati, Harish Pai PRO: Yuvraaj Marketing: First Show
‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண்- இயக்குநர் ஹரிஷ் சங்கர் – மைத்ரி மூவி மேக்கர்ஸ் ஆகியோரின் கூட்டணியில் தயாராகி வரும் ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தின் பரபரப்பான படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கரின் வித்தியாசமான கலவையில் பவர் பேக் செய்யப்பட்ட ஆக்ஷன் காட்சிகளும், பவர்ஸ்டாரின் பவரான நடிப்புடன் தீவிரமாக நடைபெற்று வந்த இப்படத்தின் படபிடிப்பு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து வரும் நாட்களில் படத்தை பற்றிய புதிய அப்டேட்களை தயாரிப்பாளர்கள் வெளியிடவுள்ளனர். பணிகள் விரைவாக நடைபெற்று வருவதை கண்டு படக் குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
‘உஸ்தா பகத்சிங்’ ஒரு பெரிய அதிர்வை உருவாக்கியிருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வெளியான ‘கப்பர் சிங்’ திரைப்படம்- பரபரப்பான வெற்றியைப் பெற்றதுடன் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் சென்றடைந்து பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த திரைப்படத்தில் மிக முக்கியமாக ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாண் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த ‘உஸ்தாத் பகத்சிங்’ படத்தை தயாரித்து வருகிறது. இதன் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவிசங்கர் பிரம்மாண்டமான பொருட்செலவில் ஆக்சன் என்டர்டெய்னராக உருவாக்கி வருகின்றனர்.
ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் ‘பவர் ஸ்டார்’ பவன் கல்யாணுடன் நடிகை ஸ்ரீ லீலா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் அஸ்த்தோஷ் ராணா, ‘கே ஜி எஃப்’ புகழ் அவினாஷ், கௌதமி, நர்ரா சீனு, நாக மகேஷ் மற்றும் ‘டெம்பர்’ வம்சி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். அயனங்கா போஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை சோட்டா கே. பிரசாத் கையாள, அதிரடி சண்டை காட்சிகளை ராம் – லக்ஷ்மன் அமைத்திருக்கிறார்கள். மக்கள் தொடர்பு பணிகளை யுவராஜ் மேற்கொள்கிறார்.
பொங்கல் வெளியீடாக தயாராகிறது சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் “அரண்மனை 4”
தமிழகமெங்கும் குடும்பங்களைக் குதூகலப்படுத்திய பேய் படம் அரண்மனை. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ச்சியாக அடுத்தடுத்து பாகங்கள் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகம் விரைவில் ரசிகர்களை மகிழ்விக்க உள்ளது. Benzz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் மற்றும் Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்கி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் வெற்றிகரமான இயக்குனராக வலம் வருபவர் சுந்தர்.சி. ரசிகர்களுக்காக மட்டுமே படம் என்பதில் உறுதியாக இருக்கும் சுந்தர் சி இயக்கும் படங்கள், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கொண்டாடும் படி இருக்கும். அந்த வகையில் அவர் உருவாக்கிய அரண்மனை படம், தமிழில் பேய் படங்களைக் குழந்தைகளும் கொண்டாடிப் பார்க்கும் வண்ணம் மாற்றிய படமாகும். முதல் மூன்று பாகங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து, தற்போது நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திர கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இப்படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, சிங்கம்புலி, VTV கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கே ஜி எஃப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.
முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் சுந்தர் சி. 2024 பொங்கல் அன்று வெளியாகவள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நுட்ப குழு
தயாரிப்பு – Benz Media Pvt Ltd (A.C.S அருண்குமார்) and Avni Cinemax (P) Ltd (குஷ்பு சுந்தர்) எழுத்து இயக்கம் – சுந்தர் சி வசனம் – வேங்கட் ராகவன் இசை : ஹிப்ஹாப் தமிழா ஒளிப்பதிவு – இசக்கி கிருஷ்ணசாமி படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர் கலை இயக்கம் – பொன்ராஜ் சண்டைப்பயிற்சி – ராஜசேகர் K ஸ்டில்ஸ் – V.ராஜன் மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் திரைப்படத்தை தயாரித்து வெற்றிகண்ட Chendur film international தங்களது 7வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. D.ராஜா வழங்கும், T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார் தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள பரபர திரில்லர் திரைப்படமான “ஹிட்லர்” படத்தின் முதல் பார்வையை படக்குழு மோஷன் போஸ்ட்டராக வெளியிடப்பட்டுள்ளது.
முற்றிலும் மாறுபட்ட வகையில், வித்தியாசமாக அமைந்திருக்கும் ஃபர்ஸ்ட் லுக், மற்றும் விஜய் ஆண்டனி தோற்றம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
படைவீரன், வானம் கொட்டட்டும் படத்தை இயக்கிய தனா இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி தன் முந்தைய படங்களிலிருந்து விலகி முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ரியா சுமன் நாயகியாக நடித்துள்ளார்.
ஹிட்லர் திரைப்படத்தை ஆக்ஷன் திரில்லர் வகையில் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் தனா. பரபர திருப்பங்களுடன் பறக்கும் திரைக்கதையில், ஒரு அழகான காதலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது. அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒரு மாறுபட்ட அனுபவமாக இப்படம் இருக்கும்.
ஹிட்லர் ஒரு மனிதனாக இருக்கலாம் ஆனால் இன்று வரலாற்றில் அந்தப் பெயர் சர்வாதிகாரத்தின் அடையாளம். அதன் காரணமாகவே இப்படத்திற்கு ஹிட்லர் என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் விஜய் ஆண்டனி, ரியா சுமன் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் சரண்ராஜ் இப்படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் கலக்கியுள்ளார். நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா, ஆடுகளம் நரேன், இயக்குநர் தமிழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் விவேக் மெர்வின் இசையமைக்க, ஒளிப்பதிவு பணிகளை கன்னடத்தின் வெற்றிப் படமான மப்டி படத்தின் ஒளிப்பதிவாளர் நவீன்குமார் செய்துள்ளார். கலை இயக்கத்தை உதயகுமார் செய்துள்ளார். Chendur film international சார்பில் T.D.ராஜா, D.R.சஞ்சய் குமார், பிரம்மாண்ட பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
Shah Rukh Khan becomes the only actor to achieve this feat with Jawan and pathaan in a SINGLE YEAR!
Jawan is not only SRK’s second film to become the top grosser but might also be the first hindi film to join the 600cr club and despite the new film releases, the film continues to be Rock steady!
Today, Jawan went on to become the highest grossing hindi film ever in the history of Indian cinema, making history yet again, Shah Rukh Khan yet again breaking records and setting new benchmarks for the industry.
Red Chilies Entertainment’s Jawan, starring Shah Rukh Khan, is synonymous with the word history. Since its release on September 7, 2023, the film has been rewriting history at the box office, writing new records, and attaining massive numbers at the box office.
Jawan raked in 525.50 crores in hindi and a grand total of 584.32 crores at the Indian box office, while at the global box office the film as broken all records by garnering 1000 plus crores and stands tall at a monstrous 1043.21cr! All of these massive numbers garnered and records broken in just 22 DAYS flat!
Jawan’s performance is unaffected by the new releases, and it is a clear sign that fans are adoring the film and lavishing praise on it even in its third week.