Cinema

‘லேபில்’ நவம்பர் 10 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில்.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் ஜெய் மற்றும் தன்யா ஹோப் ஆகியோரின் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘லேபில்’ ஒரிஜினல் சீரிஸை நவம்பர் 10, 2023 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.

வித்தியாசமான களங்களில், அழுத்தமான படைப்புகளை வழங்கி வரும், இயக்குநர் அருண்ராஜா இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பதால், ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சமீபத்தில் வெளியான “லேபில்” சீரிஸின் டிரெய்லர் திரை ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்திருப்பதுடன், பொதுப்பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த சீரிஸை இயக்கியதோடு, இதன் திரைக்கதையையும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். கூடுதல் திரைக்கதை மற்றும் வசனங்களை ஜெயச்சந்திர ஹாஷ்மி எழுதியுள்ளார்.

லேபில் சீரிஸை முத்தமிழ் படைப்பகம் தயாரித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் CS இந்த சீரிஸிக்கு இசையமைத்துள்ளார் மற்றும் ஒளிப்பதிவை தினேஷ் கிருஷ்ணன் செய்துள்ளார். B.ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பாளராகவும், வினோத் ராஜ்குமார் கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

யுகபாரதி, மோகன் ராஜா, லோகன் மற்றும் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் உட்பட நான்கு பாடலாசிரியர்கள் இந்த சீரிஸுக்கு பாடல்களை எழுதியுள்ளனர். நடன அமைப்பை அசார் மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை சக்தி சரவணன் அமைத்துள்ளார்.

இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் வெப் சீரிஸில் ஜெய் மற்றும் தன்யா ஹோப் தவிர, நடிகர்கள் மகேந்திரன், ஹரிசங்கர் நாராயணன், சரண் ராஜ், ஸ்ரீமன், இளவரசு மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.

‘மார்கழி திங்கள்’ திரைவிமர்சனம்

பாரதிராஜா, ரக்ஷனா மற்றும் ஷியாம் செல்வம் அறிமுகத்தில் சுசீந்திரனின் திரைக்கதையில்,மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்திருக்கும் படம் மார்கழி திங்கள்.


கதை சுருக்கம்,

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டியில் நடக்கும் கதை. பெற்றோரை இழந்து தாத்தாவின் அரவணைப்பில் வாழும் கவிதா. பத்தாம் வகுப்பு படிக்கும் இவருக்கும் அவருடன் படிக்கும் மாணவரான வினோத்திற்கும் படிப்பில், போட்டி வந்து, அந்த போட்டியே காதலாக மாறி நிற்கிறது ,தாத்தாவிற்கு தான் தான் உலகம் என்று நினைக்கும் கவிதா, தாத்தாவிடம் தன் காதலை சொல்ல அந்த காதலை தாத்தா சேர்த்து வைத்தாரா, அல்லது அல்லது தன் சமூகத்தின் மீதான பயத்தில் என்ன முடிவு எடுக்கிறார் என்பதை படத்தின் திரை கதை.
தாத்தாவாக பாரதிராஜா, வயது முதிர்ந்த தனது தளர்ந்த உடலாலும், குரலாலும் அந்த தாத்தாவின் கதாபாத்திரத்திற்கு அழகாக உயிரூட்டி இருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் பாரதிராஜா. பேதியாக வரும் நடிகை ரக்ஷனா, கவிதாவாக வாழ முயற்சி செய்திருக்கிறார். தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தை நிறைவாக வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். அந்த வயதிற்கே உரிய காதல் ஏமாற்றம் இயலாமை ஆகியவற்றை தன் நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார். காதலனாக வரும் ஷியாம் செல்வம் எனும் மனதில் நிற்க மறுக்கிறார், காதல் காட்சிகளிலும் உயிரோட்டம் இல்லாமல் இருக்கிறது. இயக்குனர் சுசீந்திரன் தன்னை படத்தில் வில்லனாக காட்டிக் கொள்ள மிகவும் மெணக்கெடுக்கிறார் .,ஆனால் அவர் வில்லன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அவருக்கு அந்த கதாபாத்திரம் ஒட்டவில்லை.
அப்புகுட்டி படம் முழுவதும் வருகிறார் ஒரு சில வசனங்கள் மட்டும் பேசுகிறார் இன்னும் அவரை ஆழமாக அழுத்தமாகவும் காட்டி இருந்தால் அவரது நடிப்பு படத்திற்கு பலமாக இருந்திருக்கும்.


கவிதாவின் தோழியாக வரும் நக்க்ஷா படம் முழுவதும் வருகிறார் அனைவரையும் கவனிக்க வைக்கிறார்.
வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு படத்திற்கு இன்னும் அழகு ஊட்டி இருக்கலாம். கிராமத்தின் அழகை எடுத்துக் காட்டி இருக்கலாம். படத்தொகுப்பு இன்னும் விறுவிறுப்பாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இசை இளையராஜா ஆனால் இளையராஜாவை இசை நமக்கு ஞாபகப்படுத்தவில்லை.

படத்தின் மிகப்பெரிய பலம் கதை நடக்கும் களம் அந்த கதைகளத்தை மிகவும் கவனமாக கையாண்டு இருக்கிறார்கள் திரைக்கதையில். ஒரு சில காட்சிகள் நாடக பாணியில் இருப்பதை தவிர்த்து இருக்கலாம் அந்த காட்சிகள் படத்திற்கு தொய்வை ஏற்படுத்துகிறது. மேலும் ஒரு கிராமத்தின் சூழலை கையில் எடுத்த இயக்குனர் அந்த கிராம மக்களின் வாழ்க்கையை காட்டி இருக்கலாம் அந்த கிராமத்தில் கதாபாத்திரங்கள் மட்டுமே இருப்பதாக காட்டி இருப்பது சற்று நெருடலாக உள்ளது.
கடைசியில் வரும் 20 நிமிட படத்திற்காக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை இன்னும் விறுவிறுப்பாக அமைத்திருந்தால் படம் நிச்சயம் நம் மனதை விட்டு நீங்காமல் இருந்திருக்கும் கண்கலங்க வைத்திருக்கும்.
படத்தின் கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத ஒன்று மிகவும் வலியான ஒன்று.

மார்கழி திங்கள் காதலுக்கும் சாதிக்கும் இடையில் சிக்கித் தவிக்கும் காதல் நெஞ்சங்கள்

OVEREALL RATTING——–3/5

படத்தின் கடைசி 20 நிமிட காட்சிகளுக்காக மட்டுமே இந்த மதிப்பெண்

‘துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து #ZEE5GameChangers

‘துரங்கா சீசன் 2’ வின் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து #ZEE5GameChangers உடைய பிரச்சார நிகழ்வை, புது தில்லி காவல்துறை தலைமையகத்தில் தொடங்கி வைத்தனர்.

இந்நிகழ்வின் முதல் பதிப்பில், DCP மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா மற்றும் பாலிவுட் நடிகை த்ரஷ்தி தாமி ஆகியோர் பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பான உரையாடலில் ஈடுபட்டனர்.

ZEE5 தளம் அதன் உள்ளடக்கத்தில் சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் அயலி, ஜன்ஹித் மெய்ன் ஜாரி, சத்ரிவாலி, ஹெல்மெட், அபார் ப்ரோலாய், அர்த் போன்ற பல படைப்புகளைக் கொண்டுள்ளது.

ZEEL இன் OTT பிரிவின் ஒன்றாக செயல்படும் இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, அதன் சமூக அக்கறைமிக்க படைப்புகளைச் சந்தைப்படுத்துதல் மற்றும் சமூகத் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த #ZEE5GameChangers நிகழ்வை அறிவித்துள்ளது. புது தில்லி தலைமையகத்தில் பெண் காவல் துறையுடன், ‘துரங்கா சீசன் 2’ இன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இணைந்து இந்த பிரச்சார நிகழ்வைத் தொடங்கினர். இந்நிகழ்வில் பிரபல நடிகர்களான அமித் சாத், த்ரஷ்தி தாமி, முன்னணி இயக்குநர் ரோஹன் சிப்பி மற்றும் ZEE5 இன் AVOD மார்க்கெட்டிங் தலைவர் அபிரூப் தத்தா ஆகியோர் கலந்துகொண்டு, சட்ட அமலாக்கத் துறையில் பெண்களின் போராட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து ஆலோசித்து உரையாடினர்.

ஒரு பெண் காவலரின் கதையுடன் அடையாள திருட்டு பிரச்சினையை முன்னிலைப்படுத்தி, வரவிருக்கும் உளவியல் த்ரில்லர் ‘துரங்கா 2’ சீரிஸ் இந்நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்மாதிரியான கதைகளுடன், பல்வேறு மொழிகளில் மற்றும் வடிவங்களில் இன்றைய சமூக பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் படைப்புகளை, பொழுதுபோக்கின் வழியே ZEE5 எப்போதும் வழங்கி வருகிறது. ரசிகர்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் #ZEE5GameChangers நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிக அழுத்தமான தைரியமான மற்றும் சக்திவாய்ந்த கதைசொல்லல் மூலம் மாற்றத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், பொருத்தமான கருப்பொருள்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த ZEE5 முயல்கிறது. காவல்துறைப் பணியாளர்களின் அனுபவங்களையும் பயணத்தையும் பகிர்ந்து கொண்ட DCP PRO சுமன் நல்வா, துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமியுடன் இந்நிகழ்வில் இது குறித்த உரையாடலில் ஈடுபட்டார்.

டெல்லி காவல்துறை DCP மக்கள் தொடர்பாளர் சுமன் நல்வா கூறுகையில்..,
“சமூக அக்கறையுடன் நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய படைப்புகளை ZEE5 வழங்கி வருவதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, பார்வையாளர்களை மிக ஆர்வத்துடன் பார்க்க வைக்கும் திறனை ZEE5 கொண்டுள்ளது. ZEE5 பெண் காவலர்களின் பணியை அங்கீகரித்துப் பாராட்டியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். தில்லி காவல் படையின் பெண் காவலர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்தவர்கள். போராட்டங்கள் மற்றும் கஷ்டங்கள் இருந்தபோதிலும் அதைக் கடந்து சவாலான பணிகளைச் செய்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் இம்மாதிரியான பாராட்டுக்கள் அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதுடன் நகரத்திற்குச் சிறந்த முறையில் சேவை செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை அதிகரிக்கிறது.

ZEE5, AVOD மார்கெட்டிங் தலைவர் திரு. அபிரூப் தத்தா கூறுகையில்..,
“ZEE5 இல், கல்வி மற்றும் சமூக அக்கறைமிக்க புதுமையான படைப்புகளில் முதலீடு செய்வதே எங்கள் முக்கிய நோக்கமாகும். கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் அதே வேளையில், நுகர்வோரை மையமாகக் கொண்ட பிராண்டாக நிஜ வாழ்க்கை சவால்களை எதிர்கொள்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தற்போதைய மாறிவரும் சமூகத்தில் கதைசொல்லலின் உருமாறும் சக்தியை நாங்கள் நம்புகிறோம், மாறுபட்ட கதை சொல்லலின் வழியேவும், அதனைச் சந்தைப்படுத்தும் முயற்சிகள் மூலமாகவே நாம் பரந்த பார்வையாளர்களை இணைத்து, அவர்களிடம் கல்வி மற்றும் பல கருத்துக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என்பதை அங்கீகரிக்கிறோம். #ZEE5GameChangers மூலம், தாக்கத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கம் மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகள் மூலம் எங்கள் பார்வையாளர்களுடன் இணைந்து, அனைவரும் தொடர்புகொள்ளும் ஒரு தளத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். இது போன்ற ஒவ்வொரு முயற்சியிலும், முக்கியத்துவம் வாய்ந்த உரையாடல்களை உருவாக்குவதையும், எங்கள் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட மற்றும் தரமான கதைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

துரங்காவின் முன்னணி நடிகையான த்ரஷ்தி தாமி கூறுகையில்..,
“துரங்கா சீரிஸில் எனக்கு போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி, தற்போது #ZEE5GameChangers முயற்சியால் டெல்லி படையில் உள்ள இந்த துணிச்சலான நிஜ வாழ்க்கை ஹீரோக்கள் / பெண் போலீஸ் அதிகாரிகளுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது இன்னும் மகிழ்ச்சி. இந்த விதிவிலக்கான பெண்களின் குறிப்பிடத்தக்கச் சாதனைகளைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அவர்களின் உத்வேகப் பயணங்களைச் சுற்றியுள்ள முக்கியமான உரையாடல்களைத் தூண்டும் இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை. சமூகத்தில் நிலவும் ஒரே மாதிரியான கருத்துகளை உடைத்து, குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்துவது, சமூகத்திற்கு அவர்களின் விலைமதிப்பற்ற பங்களிப்பை அங்கீகரிக்கும் ஒரு தருணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன் மற்றும் அவர்களின் கதைகள் கேட்கப்பட வேண்டும் மற்றும் கொண்டாடப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்கிறேன்.”

ZEE5 சமூ விழிப்புணர்வு கொண்ட அழுத்தமான கதைகளை அனைத்து மொழிகளிலும் வழங்கி வருகிறது உள்ளடக்கத்தை வழங்கி, ஒரே மாதிரியான கருத்தாக்கத்தை உடைத்து, பார்வையாளர்களை மேம்படுத்துவதற்கும் மாற்றத்தைத் தூண்டுவதற்கும் முக்கியமான உரையாடல்களைத் தொடங்குகிறது. அந்த வகையில் துரங்கா முதல் சீஸனானது 8 எபிசோடுகள் கொண்ட வெப்-சீரிஸ் ஆக ஆகஸ்ட் 2022 இல் வெளியிடப்பட்டது. இதனை ரோஸ் ஆடியோ விஷுவல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது இந்த சீரிஸில் அமித் சாத், த்ரஷ்தி தாமி மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோர் முன்னணி நடிகர்களாக நடித்துள்ளனர். இது மர்மம் மற்றும் சஸ்பென்ஸ் கலந்து தொகுக்கப்பட்ட ஒரு வசீகரமான காதல் கதையை வழங்குகிறது. ரோஹன் சிப்பி இயக்கியுள்ள, துரங்காவின் சீசன் 2 அக்டோபர் 24, 2023 அன்று திரையிடப்பட்டது. இந்த சீசனில், இன்ஸ்பெக்டர் ஐரா தனது கணவரின் இருண்ட கடந்த காலத்தை ஆராய்வதால், ரசிகர்கள் மேலும் பல திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் எதிர்பார்க்கலாம்.

ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான “ரங்கோலி” திரைப்படம் !!

பள்ளி மாணவனின் வாழ்வினை எளிமையான கதையில் அழகாகச் சொல்லிய “ரங்கோலி” திரைப்படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகி வரவேற்பைக் குவித்து வருகிறது.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரிப்பில் இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில் புதுமுகங்களின் நடிப்பில் தற்போதைய காலகட்ட பள்ளி வாழ்க்கையைச் சொல்லும் திரைப்படமாக வெளியான திரைப்படம் “ரங்கோலி”.

திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் 24 அக்டோபர் 2023 அன்று அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. அனைவரின் பள்ளி ஞாபகங்களைக் கிளறும் இப்படம் குடும்ப பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருவதுடன், அதிக எண்ணிக்கையிலான பார்வைகளைப் பெற்று வருகிறது.

குடும்பத்தினரின் வற்புறுத்தலால் ஒரு பள்ளியிலிருந்து வேறொரு உயர்தர பள்ளிக்கு மாற்றலாகும் மாணவனின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களே இப்படத்தின் கதை.
பள்ளி மாணவர்களின் வாழ்வை மட்டுமல்லாது ஒரு எளிமையான குடும்பத்தின் வாழ்வியலையும் அழகாக இந்தப்படம் சொல்கிறது.

மாநகரம், தெய்வத்திருமகள் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹமரேஷ், இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். பிரார்த்தனா சந்தீப், சாய் ஶ்ரீ, அக்‌ஷயா ஆகியோர் இப்படத்தில் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆடுகளம் முருகதாஸ் முக்கிய பாத்திரமொன்றில் நடித்துள்ளார்.

Gopuram Studios சார்பில் K.பாபு ரெட்டி & G.சதீஷ்குமார் தயாரித்துள்ள இப்படத்தினை அறிமுக இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். சுந்தரமூர்த்தி KS இசையமைத்துள்ளார். I.மருதநாயகம் ஒளிப்பதிவு செய்துள்ளார். G.சத்யநாராயணன் எடிட்டிங் செய்துள்ளார். ஆனந்த் மணி கலை இயக்கம் செய்துள்ளார்.

பள்ளிக்கால வாழ்க்கையை அற்புதமாகச் சொல்லும் இந்த அழகான டிராமா திரைப்படத்தினை அமேசான் ப்ரைம் தளத்தில் கண்டுகளியுங்கள்

தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகிறது, சர்வதேச அளவில் பாராட்டுக்களைக் குவித்த கிடா (Goat) திரைப்படம் !!

ஶ்ரீ ஸ்ரவந்தி மூவீஸ் நிறுவனம் சார்பில் ஸ்ரவந்தி ரவி கிஷோர், கிருஷ்ண சைத்தன்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா.வெங்கட் இயக்கத்தில், உருவாகியுள்ள கிடா (Goat) திரைப்படத்தின் டிரெய்லர் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் இப்படம் தீபாவளிக் கொண்டாட்டமாக திரையரங்குகளில் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கிடா திரைப்படம் உலகளவில் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பாரட்டுக்களை குவித்துள்ளது. இப்படம் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்பட்டது. மேலும் சென்னையில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட்டப்பட்டது குறிப்பிடதக்கது.

கிடா திரைப்படத்தில் பூ ராமு, காளி வெங்கட் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மதுரை அருகே உள்ள கிராமத்தில் வாழும் ஒரு சிறுவனுக்கும், அவனது தாத்தாவிற்கும் மற்றும் ஒரு ஆட்டுக்கும் உள்ள உறவுப்பிணைப்பை சொல்லும் படமாக இப்படம் உருவாகியுள்ளது.
ஒரு தீபாவளி திருநாளில் நடைபெறும் இந்தக்கதை, தீபாவளி நன்நாளில் வெளியாவதில் படக்குழு பெரும் உற்சாகமாக உள்ளது.

உலகளவில் பாராட்டுக்களை குவித்த இப்படம் இறுதியாக, நம் தமிழக ரசிகர்களை தீபாவளி திருநாளில் மகிழ்விக்கவுள்ளது.

பூ ராமு, காளிவெங்கட், மாஸ்டர் தீபன், பாண்டியம்மா, லோகி, கமலி, ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முழுப்படப்பிடிப்பும் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக தொடர்ந்து வன்முறைக்களமாக இருக்கும் தமிழ் சினிமாவிலிருந்து முற்றிலும் மாறுபட்டு எளிமையான உணர்வுகளை, அழகாக சொல்லும் அற்புதமான வாழ்வியல் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரு மாறுபட்ட சினிமா அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் இருக்குமென்பதை டிரெய்லர் உறுதி செய்கிறது.

தொழில் நுட்ப குழு விபரம்
ஆடியோகிராஃபி – தபஸ் நாயக்
கலை இயக்கம் : K.B.நந்து
பாடல்கள் : ஏகாதசி
எடிட்டர் : ஆனந்த் ஜெரால்டின்
இசை : தீசன்
ஒளிப்பதிவு : M.ஜெயப்பிரகாஷ்
தயாரிப்பு : ஸ்ரவந்தி ரவி கிஷோர்
இயக்கம் : ரா. வெங்கட்

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, கோபிசந்த் மலினேனி, S தமன், மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணையும் #RT4GM திரைப்படம் துவங்கியது.

வெற்றிக்கூட்டணியான மாஸ் மகாராஜா ரவி தேஜா மற்றும் மாஸ் மேக்கர் கோபிசந்த் மலினேனி நான்காவது முறையாக இணைந்துள்ளனர், இப்படம் குறித்த ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது. டோலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் #RT4GM படத்தை, பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது. திரையில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் ரவி தேஜா இப்படத்தில் நடிக்கிறார்.

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் இதர படக்குழு உறுப்பினர்கள் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், இன்று பூஜையுடன் படம் பிரம்மாண்டமாக துவங்கியது. இப்படத்தின் ஸ்கிரிப்டை அல்லு அரவிந்த் தயாரிப்பாளர்களிடம் ஒப்படைத்தார். படத்தின் முதல் காட்சிக்காக ஆன்மோல் சர்மா கேமராவை இயக்க, VV விநாயக் கிளாப்போர்டு அடித்தார். K ராகவேந்திரா ராவ் முதல் காட்சிக்கு இயக்கம் செய்து கௌரவித்தார்.

நடிகரும் திரைப்படத் இயக்குநருமான செல்வராகவன், தெலுங்கு மொழியில் இப்படம் மூலமாக நடிகராக அறிமுகமாகிறார். இப்படத்தில் அவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் கதாநாயகி பற்றிய விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

RT4GM திரைப்படம் உண்மையான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு தனித்துவமான மற்றும் சக்திவாய்ந்த திரைக்கதையுடன் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர் ஆகியோர் மிகப்பெரிய பட்ஜெட்டில் திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர், மேலும் திரைத்துறையின் முன்னணி தொழில்நுட்ப வல்லுநர்களின் கைவண்ணத்தில் உயர்தரமான படைப்பாக இப்படம் உருவாகவுள்ளது.

முன்னணி இசையமைப்பாளர் S தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ரவி தேஜாவுடன் தமனுக்கு இது 12வது படம், கோபிசந்த் மலினேனியுடன் 7வது படமாகவும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மூலம் 4வது படமென்பதும் குறிப்பிடத்தக்கது.

பிகில், மெர்சல் போன்ற பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவரும், சமீபத்தில் இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய ஜவான் படத்தினை காட்சிப்படுத்திய திறமை மிகு ஒளிப்பதிவாளரான GK விஷ்ணு, #RT4GM இன் மாபெரும் உலகத்தை காட்சிப்படுத்தவுள்ளார்.

தேசிய விருது பெற்ற டெக்னீஷியன் நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய, AS பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். வசனங்களைச் சாய் மாதவ் புர்ரா எழுதியுள்ளார், மயூக் ஆதித்யா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, M விவேக் ஆனந்த் மற்றும் ஸ்ரீகாந்த் நிம்மகத்தா ஆகியோர் மற்ற எழுத்தாளர்களாக பணியாற்றுகின்றனர்.

நடிகர்கள்: ரவி தேஜா, செல்வராகவன், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் பலர்

தொழில்நுட்பக் குழு:
கதை மற்றும் இயக்கம்: கோபிசந்த் மலினேனி
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி மற்றும் Y ரவிசங்கர்
பேனர்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
CEO: செர்ரி
நிர்வாக தயாரிப்பாளர்: தினேஷ் நரசிம்மன்
இசை: S தமன்
ஒளிப்பதிவு : GK விஷ்ணு
எடிட்டர்: நவீன் நூலி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
தயாரிப்பு வடிவமைப்பாளர்: AS.பிரகாஷ்
ஆடை வடிவமைப்பாளர்: அனிருத்/தீபிகா
எழுத்தாளர்கள்: மயூக் ஆதித்யா, ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, M விவேக் ஆனந்த் மற்றும் ஸ்ரீகாந்த் நிம்மகத்தா
விளம்பர வடிவமைப்பாளர்: கபிலன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்
மார்க்கெட்டிங்க் : ஃபர்ஸ்ட் ஷோ
பப்ளிசிட்டி : பாபா சாய் (மேக்ஸ் மீடியா)

ஓ வுமெனியா!

திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காயத்ரி மற்றும் புஷ்கர் மற்றும் இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர் சுதா கொங்கரா ஓ வுமெனியா! அறிக்கை 2023-யின் பின்னணியில் இந்திய பொழுது போக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு அவர்களுடைய ஆதரவு அளிப்பதாக உறுதி மொழி அளித்தனர்

ஆலியா பட், தகுபட்டி சுரேஷ் பாபு, சுப்ரியா மேனன், சுப்ரியா யார்லாகாட்டா, ஷோபு யார்லாகாட்டா, விக்ரமாதித்யா மோட்வானே, மற்றும் அதிகமான பொழுதுபோக்கு ஆளுமைகள் இந்த துறையில் பன்முகத்தன்மைக்கான அவர்களுடைய ஆதரவைத் தெரிவித்தனர்

ஆர்மேக்ஸ் மீடியா மற்றும் ஃபிலிம் கம்பானியன் தலைமை வகிக்க , மற்றும் ப்ரைம் வீடியோ ஆதரவளிக்கும் ஓ வுமேனியா! இந்திய பொழுதுபோக்கில் பெண் பிரதிநிதித்துவம் குறித்த இந்தியாவின் மிக முழுமையான அறிக்கை ஆகும்

முழு அறிக்கையை இங்கே படிக்கலாம் www.owomaniya.org

சென்னை- அக்டோபர் 26,2023 – இந்தியாவின் மிகவும் நேசிக்கப்படும் பொழுதுபோக்கு இடமான ப்ரைம் வீடியோ, இந்திய பொழுதுபோக்கில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறித்த மிக முழுமையான அறிக்கையான இன்று ஓ வுமெனியா! அறிக்கையின் சமீபத்திய பதிப்பை வெளியிட்டது. மீடியா ஆலோசனை நிறுவனமான, ஆர்மேக்ஸ் மீடியா, இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு ப்ளாட்ஃபார்ம் ஆன , ஃபிலிம் கம்பேனியானால் ஆய்வு செய்யப்பட்டு மற்றும் உருவாக்கப்பட்டு மற்றும் ப்ரைம் வீடியோவின் ஆதரவு பெற்ற இந்த ஆய்வு இந்தியாவின் பொழுதுபோக்கு தொழிலுக்குள் உள்ளடக்க தயாரிப்பு, மார்கெட்டிங் மற்றும் கார்பரெட் தலைமையின் வெவ்வேறு முகங்களில் பெண்களின் பயணம் குறித்த புள்ளி விவரங்களை மதிப்பிடுகிறது.

இந்த அறிக்கையின் பின்னணியில், இந்த துறையைச் சேர்ந்த வெவ்வேறு தலைவர்கள் அவர்களுடைய ஆதரவை தெரிவித்தனர் மற்றும் பொழுதுபோக்கில் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கான உறுதி மொழிகளை எடுத்துக் கொண்டர். திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் காயத்ரி மற்றும் புஷ்கர் கூறினர், “எங்களுடைய செயல் திட்டங்களில் பன்முகத்தன்மையை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு, எழுத்தாளர் அறைகளில் பெண்களை தொடர்ந்து சேர்ப்பதற்கு மற்றும் அரசாங்கம் கட்டாயமாக்கிய பிஓஎஸ்ஹெச் வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுவதற்கு மற்றும் நிறுவனத்திற்குள் ஒரு ஐசிசி கொண்டிருப்பதற்கு நாங்கள் உறுதி மொழி எடுக்கிறோம்.” அவருடைய ஆதரவிற்கான உறுதி அளிக்கையில், இயக்குனர் மற்றும் திரை எழுத்தாளரான சுதா கொங்காரா கூறினார்,” என்னுடைய தயாரிப்பாளர்கள் அரசாங்கம் கட்டாயமாக்கியிருக்கும் பிஓஎஸ்ஹெச் வழிகாட்டுதல்களுடன் இணங்குவதை மற்றும் அவர்களுடைய இடத்தில் ஒரு ஐசிசி கொண்டிருப்பதை உறுதி செய்வதற்கு நான் உறுதி மொழி ஏற்கிறேன்.”

பெண்-முன்னணி வகித்த திரைப்படமான கங்குபாய் காத்தியாவாடிக்காக சமீபத்தில் தேசிய திரைப்பட விருதை வென்ற மற்றும் மற்றொரு பெண்களை –முன்னே வைக்கும் கதை அமைப்பான டார்லிங்குடன் தயாரிப்பாளர் ஆகவும் மாறியிருக்கும் ஆலியா பட் கூறினார், “என்னுடைய தயாரிப்பு திட்டங்களில் பன்முகத்தன்மையை தொடர்ந்து ஊக்குவிப்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன். அன்னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிப்பாளர் மற்றும் எக்சிக்யூட்டிவ் டைரக்டர் சுப்ரியா யார்லாகாட்டா கூறினார், “தெலுங்கு திரைப்பட துறையில் ஒரு ஐசிசி-ஐ நிறுவிய முதல் ஸ்டூடியோ மற்றும் தயாரிப்பு நிறுவனம் அன்னபூர்ணா ஆகும். எங்களுடைய தயாரிப்புகளில் பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதற்கு மற்றும் எழுத்தாளர் அறைகளில் பெண்களை சேர்ப்பதற்கான எங்களுடைய முயற்சியை நாங்கள் தொடர்ந்து மேற்கொள்வோம். எங்களுடைய சூழல், பணியிடத்தில் அதிகமான பெண்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தொடர்ச்சியாக முன்னேறி வருகிறது”. அபர்ணா புரோஹித், ஒரிஜினல்ஸ் தலைவர், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியா , ப்ரைம் வீடியோ, உறுதி எடுத்துக் கொண்டார், “எழுத்தாளர் அறையில் பெண்களை சேர்ப்பதற்கு மற்றும் எங்களுடைய தயாரிப்புகள் அனைத்திலும் துறைத் தலைவர்களாக குறைந்தபட்சம் 30% பெண்களை வேலைக்கு அமர்த்துவதை நோக்கி பணியாற்றுவதற்கு நான் உறுதி அளிக்கிறேன் .”

அனைத்து உறுதி மொழிகளையும் இங்கே பார்க்கலாம்: https://drive.google.com/drive/folders/1l9S6ENy3KWnZcxfRuyuBmmaEEiG1zbPQ

2021 -லிருந்து இந்த தொழில் பார்த்திருக்கும் மாற்றம் குறித்த முழுமையான ஒரு கண்ணோட்டத்தை அடைவதற்கு, இந்த வருடம், 2022 ல் 8 இந்திய மொழிகளில் (ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பஞ்சாபி, பெங்காலி மற்றும் குஜராத்தி) ஸ்ட்ரீம் செய்யப்பட்ட மற்றும் தியேட்டரில் வெளியிடப்பட்ட 156 திரைப்படங்கள் மற்றும் தொடர்களை இந்த அறிக்கை ஆய்வு செய்தது,

ப்ரைம் வீடியோவுடன், க்ளீன் ஸ்லேட் ஃபில்ம்ஸ், எம்மே என்டர்டெய்ன்மென்ட், எக்செல் என்டர்டெய்ன்மென்ட், ஜியோ ஸ்டூடியோ, ப்ரொட்யூசர்ஸ் கில்டு இண்டியா, ஆர்எஸ்விபி , சோனிலைவ், டைகர் பேபி மற்றும் ஸீ5 உட்பட இந்த தொழிலைச் சேர்ந்த மற்ற பார்ட்னர்களால் இந்த அறிக்கைக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது .

இந்த அறிக்கையின் முக்கிய கண்டு பிடிப்புகளில் பின்வருபவை உள்ளடங்கும்:

• படைப்பாற்றல் திறன் – இயக்கம், ஒளிப்பதிவு, எழுத்து மற்றும் உற்பத்தி டிசைனின் முக்கிய துறைகளில் 780 ஹெச்ஓடி பதவிகளில் 12% மட்டுமே பெண்கள் பதவி வகித்தனர் .

• உள்ளடக்க விஷயம் – 2021-ல் , ஆய்வு செய்யப்பட்ட பொருட்களில் (திரைப்படங்கள், தொடர்களில்) 55% பெக்டெல் டெஸ்டை பாஸ் செய்தது, இப்போது அந்த எண்ணிக்கை பாதி அளவிற்கு கீழே 47% -க்கு சென்று விட்டது, மற்றவைகள் இடையே கில்ட்டி மைன்ட்ஸ், ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்! சீசன் 3, டெல்லி க்ரைம் சீசன் 2, மாஜா மா, கங்குபாய் காத்தியாவாடி பெக்டெல் டெஸ்டை பாஸ் செய்வதற்கு அதிகபட்ச சீன்கள் கொண்ட பொருட்களாக (திரைப்படங்கள், தொடர்களாக) வெளி வந்தன.

• மார்கெட்டிங் – ட்ரெய்லர்களில் 27% டாக் டைம் மட்டுமே இன்னமும் பெண்களுக்கு கிடைக்கிறது, இந்த எண்ணிக்கை ஸ்ட்ரீம் செய்யப்படும் திரைப்படங்களுக்கு மிக அதிகமாக உள்ளது, இதில் ட்ரெய்லர்களில் 33% டாக் டைம் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மற்றவைகள் இடையே, ஹஷ் ஹஷ், கெஹராயியான், த ஃபேம் கேம், அம்மு, அ தர்ஸ்டே, சீத்தா ராமம், டிரெய்லர்களில் பெண் கதாபாத்திரங்களுக்கு குறைந்தபட்சம் 50% டாக் டைமுடன் சிறந்த செயல்திறன் கொண்டிருந்தது

• நிறுவன திறமை – இந்தியாவில் 25 முதன்மையான எம்அண்டுஇ நிறுவனங்களில் உள்ள 135 டைரக்டர் / சிஎக்ஸ்ஓ பதவிகள் ஆய்வு செய்யப்பட்ட போது, 13% பெண்கள் மட்டுமே அந்த பதவியை வகித்தனர்.

ஓ வுமெனியா!-வின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் குறித்த அவருடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்கையில், ஆர்மேக்ஸ் மீடியா நிறுவனர் மற்றும் சிஇஓ ஷைலேஷ் கபூர், கூறினார் “சில முக்கிய அம்சங்களில் மெதுவான ஆனால் நிலையான முன்னேற்றம் இருந்திருந்தாலும், அனைவரையும் உள்ளடக்குவதை ஒரு தீவிர கண்ணோட்டத்துடன் பார்ப்பதற்கான தேவையை இந்த அறிக்கை வெளிச்சமிட்டு காட்டியிருக்கிறது. இந்த அறிக்கையின் முந்தைய பதிப்பை போல, ஸ்ட்ரீமிங் தொடர்ந்து பெண் பிரதிநிதித்துவத்திற்கான பாதையை வகுத்து வருகையில், சற்று குறைவான செயல்திறன் கொண்ட நாடகம் போன்ற திரைப்படங்கள் இந்த தொழிலில் உள்ளவர்களை எழுப்புவதற்கான அழைப்பாக திகழ வேண்டும். சாதகமான ஒரு மாற்றத்தை பார்ப்பதற்கான உண்மையான விருப்பதிற்கு முக்கியத்துவம் அளித்து, இந்த துறை இந்த டேட்டாவை கவனத்தில் கொள்வதை மற்றும் சிறப்பான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கு ஒன்றாக வருவதைப் பார்ப்பதற்கு நான் மிகழ்ச்சி அடைகிறேன் .

இந்த அறிக்கை பற்றி பேசுகையில், ஃபிலிம் கம்பானியன் நிறுவனர் மற்றும் எடிட்டர் அனுபமா சோப்ரா கூறினார், “பொழுதுபோக்கு சக்தி வாய்ந்த ஒரு மீடியம் , இது அனைவரையும் உள்ளடக்குவது மற்றும் பன்முகத்தன்மையை முன்நிலைப்படுத்த வேண்டும். ஓ வுமெனியா! முன்னை விட வேகமாக நகரச் செய்வதற்கான எங்களுடைய முயற்சி ஆகும். இந்த உரையாடலை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு முக்கிய தனிநபர்கள் குறிப்பிட்ட இலக்குகளை ஏற்று வேலை செய்வது மற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் இந்த துறையிலிருந்து அற்புதமான பங்கேற்பை பார்ப்பதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்பட்ட படிகள் சிறியதாக தோன்றலாம் ஆனால் ஒவ்வொரு படியும், ஒவ்வொரு நடவடிக்கையும் முக்கியமானது, மற்றும் ஓ வுமெனியா! அறிக்கையின் ஒவ்வொரு பதிப்புடனும், அதிக சமநிலையான ஒரு சூழலுக்கு ஒரு அடி நெருக்கமாக நாங்கள் நகர்வதாக நாங்கள் நம்புகிறோம். இந்த தனித்தன்மையான முயற்சிக்காக எங்களுடன் இணைவதற்காக ப்ரைம் வீடியோ மற்றும் ஆர் மேக்ஸ் மீடியாவிற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

“ப்ரைம் வீடியோவில் , பன்முகத்தன்மை, சமநிலை மற்றும் அனைவரையும் உள்ளடக்குவது தேவையானது மட்டும் அல்ல, இது அவசியமானது என நாங்கள் நம்புகிறோம். ஒரு நிறுவனமாக, நாங்கள் எப்போதுமே சமநிலையான பிரதிநிதித்துவத்தில் நம்பிக்கை கொண்டிருக்கிறோம், ப்ரைம் வீடியோ மற்றும் எங்களுடைய உள்ளடக்க விஷயத்தில் மட்டும் அல்ல, ஆனால் பரவலாக படைப்புத் தொழிலுக்குள்ளும் அந்த நம்பிக்கையைக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய தொழிலுக்குள் திறமை மிக்க பெண்களை வளர்ப்பது மற்றும் அதிகாரம் அளிப்பதன் மூலமாக, எங்களால் பரவலான சுற்றுப்புறச் சூழல் அமைப்பில் சாதகமான மாற்றத்தின் சிற்றலை விளைவை (தொடர்ச்சியான சிறு மாற்றங்களை) உருவாக்க முடியும் என்று சொன்னார் அபர்ணா புரோஹித் , ஹெட் ஆஃப் ஒரிஜினல்ஸ், இண்டியா மற்றும் தென் கிழக்கு ஏசியா, ப்ரைம் வீடியோ. “ஓ வுமெனியா! இந்த துறையை இணைப்பதற்கு மற்றும் பெண் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதற்கு ஒருங்கிணைப்பதற்கு ஒன்றிணைந்த முயற்சியை பிரதிபலிக்கிறது. இந்த அறிக்கையின் சமீபத்திய பதிப்பு, மாற்றம் ஏற்படுத்தும் இந்த முயற்சிகளை துரிதப்படுத்துவதற்கான அவசரத்தை அடிக் கோடிடுகிறது. பார்ட்னர்களின் உறுதியான ஆதரவை மட்டும் அல்லாமல், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் உட்பட இந்த துறையைச் சேர்ந்த செல்வாக்கு மிக்கவர்களின் தீவிர பங்கேற்பையும் காண்பது இதயத்தை மகிழ்விப்பதாக உள்ளது. அவர்கள் தங்களுடைய தனிப்பட்ட அர்ப்பணிப்பை உறுதி அளிப்பது மட்டும் அல்லாமல் அதிக அளவில் பெண்களை உள்ளடக்குவதற்கு ஆதரவளிப்பதற்கு பரவலாக நிறுவன அளவிலான அர்ப்பணிப்புகளுக்கும் அவர்கள் உறுதி அளித்தனர்.”

11985 ல் ஆலிசன் பெக்டெல்லால் கருத்துருவாக்கப்பட்ட த பெக்டெல் டெஸ்ட், உள்ளடக்க விஷயங்களில் பாலின பிரதிநிதித்துவத்திற்கு சர்வதேச அளவில்-ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுகோலாக பார்க்கப்படுகிறது. ஒரு திரைப்படத்தில் இரண்டு பெயரிடப்பட்ட பெண்கள் குறைந்தபட்சம் பேசிக் கொள்ளும் ஒரு சீன் உள்ளது, மற்றும் அந்த உரையாடல் ஆண்கள் / ஒரு ஆண் தவிர வேறு ஏதாவது விஷயம் பற்றியது என்றால் அந்த திரைப்படம் பேக்டெல் டெஸ்டில் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுகிறது. தொடர்கள் நீண்ட நேரம் ஓடும் என்பதால், தொடர்களை ஸ்ட்ரீம் செய்வதற்கு, மூன்று சீன்களை உள்ளடக்குவதற்கு விதி மாற்றம் செய்யப்பட்டது .

2ட்ரெய்லர் டாக் டைம் என்பது தனித்தன்மையாக ஓ வுமேனியா! –விற்காக உருவாக்கப்பட்டது. இந்த பரிசோதனையில், ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்களுக்கு ஒதுக்கப்படும் பேசும் நேரம் வாரியாக, திரைப்படத்தின் அல்லது தொடரின் முக்கிய ட்ரெய்லர் ஆய்வு செய்யப்படும் மற்றும் வகைப்படுத்தப்படும். இந்த பரிசோதனை, பெண் கதாபாத்திரங்களுக்கு சொந்தமான பேசும் நேரத்தின் % -ஐ அறிக்கையாக அளிக்கிறது. இந்த பரிசோதனை உள்ளடக்க விஷயங்களை தயாரிப்பாளர்கள் மற்றும் ப்ளாட்ஃபார்ம்கள் எப்படி மார்கெட் செய்வது என்பது குறித்த ஒரு கருத்தை அளிக்கிறது. 73 % ட்ரெய்லர் டாக் டைம் ஆண் கதாபாத்திரங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது, இதன் முடிவுகள் அவர்களுடைய மார்கெட்டிங்கில் ஆண் கண்ணோட்டத்திலிருந்து திரைப்படங்கள் நிலைப்படுத்தப்படுவதாக ஆலோசனை அளிக்கிறது.

ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.

முன்னணி இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை நடிகர் சிலம்பரசன் டி ஆர் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு சிறப்பித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ.வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாள, கலை இயக்கத்தை உதயா கவனிக்கிறார். ஆக்சனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அதிரடி சண்டை காட்சிகளை சக்தி சரவணன் அமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்கில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமாரின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இத்திரைப்படம் வெகு விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” 1980களில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் கதை, கல்லூரியை களமாக கொண்டிருக்கிறது. இப்படத்தில் கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் பேசப்பட்டிருக்கிறது. ஜீ.வி. பிரகாஷ் குமாரின் திரையுலக பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும்.” என்றார்.

‘சூர்யா 43’ காக மீண்டும் இணையும் தேசிய விருது கூட்டணி

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா நடிப்பில் ‘சூர்யா 43’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் படத்தின் புதிய தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது.

சூர்யாவின் திரையுலக பயணத்தில் அவரது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய படைப்புகளில் ‘சூரரைப் போற்று’ திரைப்படமும் ஒன்று. இப்படத்தை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மீண்டும் சூர்யா கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் மிகவும் சவாலான பாத்திரங்களில் துல்கர் சல்மான், நஸ்ரியா பகத் , விஜய் வர்மா ஆகியோர் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் 100வது படமிது. இந்தத் திரைப்படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஜோதிகா, சூர்யா மற்றும் ராஜ்சேகர் கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிகை, சிறந்த பின்னணி இசை, சிறந்த திரைக்கதை என ஐந்து பிரிவுகளில் ஐந்து தேசிய விருதுகளை வென்ற கூட்டணி மீண்டும் ‘சூர்யா 43’ படத்தில் ஒன்றிணைந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

சூர்யா -சுதா கொங்கரா – ஜீ.வி. பிரகாஷ் குமார் என தேசிய விருது பெற்ற கூட்டணி மீண்டும் இணைந்து இருப்பதால், ‘சூர்யா 43’ திரைப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு, அறிவிப்பு வெளியான நிலையிலேயே அதிகரித்திருக்கிறது.

’லியோ’ படம் மூலம் ஊழியர்களை உற்சாகப்பத்திய ரூஃப்வெஸ்ட் !

கட்டுமானத்துறையில் சுமார் 33 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக பயணித்து வரும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லாக்களை உருவாக்கி கொடுத்துள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டிய வில்லாக்களுக்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததோடு, இந்நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் விரைவில் விற்பனையாகி விடுகிறது.

மேலும், நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நினைவாக்கும் விதத்தில் சென்னை சுற்றுவட்டாரத்தில் குறைந்த விலையில் ’ஒன் ஸ்கொயர்’ (One Square) என்ற பெயரில் ரூஃப்வெஸ்ட் நிறுவனம் கட்டி வரும் அடுக்குமாடி குடியிருப்பு
மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததால் மேல்தட்டு மக்களிடம் மட்டும் இன்றி நடுத்தர மக்களிடமும் இந்நிறுவனம் நம்பிக்கையை பெற்றுள்ளது.

சென்னை தாம்பரம், முடிச்சூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தங்களது வெற்றிகரமான அடுக்குமாடி குடியிருப்புகள் மூலம் தமிழகத்தின் நம்பிக்கைக்குரிய கட்டுமான நிறுவனமாக திகழும் ரூஃப்வெஸ்ட், தற்போது தமிழகத்தை கடந்து ஆந்திராவின் தடா உள்ளிட்ட தமிழகத்தை ஒட்டியுள்ள பிற மாநிலங்களிலும் கால்பதிக்க உள்ளது.

ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தின் இத்தகைய வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அந்நிறுவன ஊழியர்களை கெளரவிக்கும் விதத்தில், அவர்களை மகிழ்விக்க முடிவு செய்த நிறுவனத்தின் சி.இ.ஓ ஷாம் அவர்கள், ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் வழக்கமாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் பரிசு பொருட்களோடு, அவர்களை சர்ப்பிரைஸ்ப்படுத்தும் விதமாக, ஊழியர்கள் மற்றும் குடும்பத்தாரை சமீபத்தில் வெளியான விஜயின் ‘லியோ’ திரைப்படத்தை பார்க்க வைத்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், திரிஷா நடிப்பில் மிகப்பெரிய் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘லியோ’ திரைப்படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்க விரும்புகிறார்கள். குறிப்பாக, விடுமுறை நாட்களில், டிக்கெட் கிடைக்காத நிலையில், தங்களது ஊழியர்களின் விருப்பம் அறிந்து அவர்களுக்கே தெரியாமல், இத்தகைய ஏற்பாட்டை ரூஃப்வெஸ்ட் நிறுவனம் செய்திருக்கிறது. அந்த வகையில், ரூஃப்வெஸ்ட் நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களையும் அவர்களது குடும்பத்துடன் விஜயின் ‘லியோ’ திரைப்படத்தை பார்க்க வைத்து உற்சாகப்படுத்தியுள்ளனர்.

ஒரு திரைப்படம் பார்ப்பது சாதாரணமான நிகழ்வாக இருந்தாலும், தற்போதைய விடுமுறை நாளில், இதுபோன்ற ஒரு நிகழ்வை உருவாக்கி கொடுத்து ஊழியர்களை உற்சாகப்படுத்தியிருக்கும் ரூஃப்வெஸ்ட் நிறுவனம், எதிர்காலத்தில் ஊழியர்களுக்காக பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை வகுத்து வைத்திருக்கிறது.

அந்த திட்டங்கள் குறித்து விரைவில் அறிவிக்க உள்ள ரூஃப்வெஸ்ட், தங்களது தரத்தால் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவது போல், தங்களது ஊழியர்களையும் குஷிப்படுத்துவதை தங்களது நோக்கமாக கொண்டு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.