Cinema

Promo Of Blissful Melody #Maiyal From Natural Star Nani, Mrunal Thakur, Shouryuv, Vyra Entertainments Hi Nanna is out now

While the teaser enthused everyone with its beautiful emotions, showcasing different layers in Hi Nanna, the two songs of this Natural Star Nani starrer released thus far by the makers topped the music charts. As part of musical promotions, the makers will be unveiling the third single #Maiyal on Nani and Mrunal Thakur on the 4th of this month.

Today, they released a promo of the song. From sending love to sharing sweet pinches, it’s a joyful celebration altogether. Nani and Mrunal Thakur bring that magic with their delightful chemistry in the video. We need to wait for three more to watch the lyrical video of this blissful melody. The music for this Shouryuv directorial venture is scored by Hesham Abdul Wahab.

The Pan India movie produced on a large scale by Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala on Vyra Entertainments will see Baby Kiara Khanna playing an important role.

Sanu John Varughese ISC is the cinematographer, while Praveen Anthony is the editor and Avinash Kolla is the production designer. Satish EVV is the executive producer.

Hi Nanna is slated for release in Tamil, Telugu, Kannada, Malayalam, and Hindi languages on December 7th.

Cast: Nani, Mrunal Thakur, Baby Kiara Khanna

Technical Crew:
Director: Shouryuv
Producers: Mohan Cherukuri (CVM) and Dr Vijender Reddy Teegala
Banner: Vyra Entertainments
DOP: Sanu John Varughese ISC
Music Director: Hesham Abdul Wahab
Production Designer: Avinash Kolla
Editor: Praveen Anthony
Executive Producer – Satish EVV
Costume Designer: Sheetal Sharma
PRO: Nikil Murukan

‘ஹரா’ திரைப்படத்தில் மோகன் ஜோடியாக அனுமோல்

படப்பிடிப்பு நிறைவடைந்து பண்டிகை வெளியீட்டுக்கு தயாராகிறது

பதினான்கு வருடங்களுக்கு பிறகு அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ திரைப்படத்தில் அவரது ஜோடியாக பிரபல மலையாள நடிகை அனுமோல் நடிக்கிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜிக்கு சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டதால் அவரது சிகிச்சையின் காரணமாக படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது.

இதற்கிடையே, ‘ஹரா’ திரைப்படத்தின் அதிரடி முதல் பார்வை மற்றும் டீசர் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ திரைப்படத்தில் எதிர் நாயகனாக நடிக்க மோகன் ஒப்பந்தமானார்.

இதன் காரணமாக, ‘ஹரா’ படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கிய போது தேதிகள் ஒத்துழைக்காததால் ஏற்கனவே ஒப்பந்தமான பிரபல நடிகைக்கு பதில் மோகன் ஜோடியாக அனுமோல் நடித்துள்ளார். சிறப்பான பங்களிப்பை அனுமோல் வழங்கி உள்ளதாகவும் அவரது கதாபாத்திரம் பேசப்படும் என்றும் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், “கோத்தகிரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இறுதி கட்ட படபிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. பண்டிகை வெளியீடாக விரைவில் திரையரங்குகளில் ‘ஹரா’ வெளியாகும் என்று கூறினார்.

பள்ளியில் படிக்கும் போதிலிருந்தே ஐபிசி சட்டங்களை மாணவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் ‘ஹரா’ திரைப்படத்தை கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் தயாரிக்கிறார்.

‘ஹரா’ திரைப்படத்தில் யோகி பாபு, ‘பவுடர்’ நாயகி அனித்ரா நாயர், சாருஹாசன், சுரேஷ் மேனன், வனிதா விஜயகுமார், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், மற்றும் சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட ஏராளமான நடிகர்கள் நடித்துள்ளனர்.

‘ரா ..ரா .சரசுக்கு ராரா…’வயதுவந்தவர்களுக்கான படம்

ஒரே இரவில் நடக்கும் கதையாக லேடீஸ் ஹாஸ்டல் பின்னணியில் உருவாகி இருக்கும் படம்
‘ரா ..ரா ..சரசுக்கு ராரா…’
இந்தப் படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ளார்.
கேசவ் தெபுர் இயக்கியுள்ளார்.
ஒளிப்பதிவு ஆர் .ரமேஷ்,
இசை ஜி. கே.வி.

9 V ஸ்டுடியோஸ் நிறுவனம் நவம்பர் 3 ஆம் தேதி
இப்படத்தை வெளியிடுகிறது.

இப்படத்தின் அறிமுக விழா இன்று சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ ஜெயலட்சுமி பேசும் போது,

“தயாரிப்பாளர்களுக்காகத் தைரியமாகக் குரல் கொடுக்கும் கே .ராஜன் அவர்கள் இங்கே வந்திருக்கிறார். அவரது துணிச்சலுக்காக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும்.

வாழ்க்கையில் எத்தனை பேர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? இரண்டு மணி நேரம் சந்தோஷமாக இருக்க வேண்டும் ,தன்னை மறந்து ஜாலியாக இருக்க வேண்டும் என்று தான் இந்தப் படத்தை எடுத்துள்ளோம் இப்பொழுது கத்தி , வெட்டு குத்து, ரத்தம் என்று வரும் படங்களைத்தான் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அவற்றிலிருந்து மாறுபட்டு ஜாலியாக இருக்கும் படியாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இது வயது வந்தவர்களுக்கான படம் என்றாலும் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்கும் பிடிக்கும் படியாக இருக்கும். படத்தை எடுக்கும் போது நாங்கள் பல பிரச்சினைகளைச் சந்தித்தோம் .இதன் படப்பிடிப்பு வேலூரில் நடந்த போது போலீஸ் தொல்லைகள் தினம் தினம் வந்து கொண்டே இருந்தன. சாதாரண போலீஸ் முதல் இன்ஸ்பெக்டர், கமிஷனர் வரை எங்களுக்குத் தொல்லை கொடுத்தார்கள். அப்போதெல்லாம் எங்களுக்குப் பாதுகாப்பாக ஆதரவாக காட்பாடி ராஜன் அவர்கள் இருந்து வந்திருக்கிறார். அதை என்னால் மறக்க முடியாது. இந்தப் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது” என்றார்.

படத்தின் இயக்குநர் கேசவ் தபுர் பேசும்போது,

“நான் இங்கே வரும்போது என்னிடம் இந்தத் தலைப்பை பார்த்து படம் கிளுகிளுப்பாக இருக்குமா என்று கேட்டார்கள். நீங்கள் நினைப்பது போல் கிளுகிளுப்பாக இருக்காது ;சந்தோஷமான கிளுகிளுப்பாக இருக்கும் என்றேன் .நான் சிறு வயது முதல் தலைவர் ரஜினி அவர்களின் ரசிகன். அவர் படங்களில் நடனக் கலைஞராகவும் நடன உதவி இயக்குநராகவும் பணிபுரிந்து இருக்கிறேன்.

‘ சந்திரமுகி ‘ படத்தில் இருந்து அந்தத் தலைப்பை நான் எடுத்துக் கொண்டேன் .சரசு என்றால் மோகம் மட்டுமல்ல சந்தோஷம் என்றும் குறிக்கும்.

இந்தத் தலைப்பு பற்றி நான் தயங்கிய போது கூட, தயாரிப்பாளர்தான் உறுதியாக இருந்தார்கள், இதே தலைப்பை மாற்றக்கூடாது என்று. இந்தப் படத்தை பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையேதான் எடுத்தோம் .தினசரி ஒரு பிரச்சினை வரும். அப்படி 45 நாட்களும் பிரச்சினை வந்து கொண்டே இருந்தது . பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தும் போது தான் காவல்துறை அனுமதி வாங்க வேண்டும். ஆனால் உரிமையாளரிடம் அனுமதி வாங்கிய ஒரு தனியாருக்குச் சொந்தமான இடத்தில் படப்பிடிப்பு நடத்தும்போது எங்களுக்கு அவ்வளவு இடைஞ்சல்கள் கொடுத்தார்கள் .இப்படி முதல் நாள் 300 நடனக் கலைஞர்களுடன் நாங்கள் தயாராகி விட்டோம் .அனுமதி வேண்டும் என்று எங்களைத் தொந்தரவு கொடுத்தார்கள். இப்படிப் படப்பிடிப்பு நடந்த எல்லா நாட்களிலும் தொல்லைகள் தொடர்ந்தன.
ஆனால் அப்போதெல்லாம் தயாரிப்பாளர் தைரியமாக அதை எதிர்கொண்டு சமாளித்தார்.

படத்தில் 60 கட்கள் சென்சாரில் கொடுத்தார்கள். அதனால் என்னை “60 கட் டைரக்டர் “என்று கூறுகிறார்கள்.

நான் இதுவரை வந்த படங்களைப் பார்த்து தான் சினிமாவுக்கு வந்திருக்கிறேன். எத்தனையோ படங்களில் அனுமதித்த காட்சிகளை எல்லாம் எங்களுக்கு மட்டும் சென்சாரில் அனுமதிக்க முடியாது என்றார்கள்.

படத்திற்கு நாங்கள் யூ சர்டிபிகேட் கேட்கவில்லை.ஏ சர்டிபிகேட் தான் வேண்டும் என்று கேட்கிறோம். இது அடல்ட் படம் என்று தான் கூறினோம். ஆனால் சென்சாரில் எதுவுமே முடியாது என்று கைவிட்டு விட்டார்கள். எதுவுமே தர முடியாது என்றார்கள்.நீங்கள் வேண்டுமானால் ரிவைசிங் கமிட்டி செல்லுங்கள் .இல்லாவிட்டால் நீதிமன்றம் செல்லுங்கள் என்றார்கள்.

ரிவைசிங் கமிட்டி சென்றோம் அங்கே நடிகை கௌதமி தான் தலைவராக இருந்தார். படத்தின் மூலம் என்ன சொல்ல போகிறீர்கள் என்றார்.லேடீஸ் ஹாஸ்டலில் தவறுகள் நடக்கின்றன அப்படி நடக்க கூடாது என்று நாங்கள் சொல்கிறோம் என்றோம்.

பல மணி நேரம் காக்க வைத்தார்கள்.
பிறகு நீங்கள் எதை வெட்ட வேண்டுமோ அதை தாராளமாக வெட்டிக் கொள்ளுங்கள் .ஆனால் எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்விகள் கேளுங்கள் விளக்கம் சொல்கிறோம் என்றேன்.
அவர்கள் எதையும் கேட்பதற்குத் தயாராக இல்லை. நான்கு பக்கம் அளவில் குறிப்பிட்டு நீக்கச் சொன்னார்கள்.நக்மா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள் .லலிதா என்று பெயர் இருக்கக் கூடாது என்றார்கள்.அந்தப் பெயர்கள் ஒரு நிறுவனத்தின் பெயர் அல்ல சாதாரணமாக இருக்கக்கூடியது தான்.
ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் அவ்வளவு அவமதித்தார்கள்.
விளக்கிப் பேசும்போது
கையைக் காட்டிப் பேசியதைத் தங்களை அவமதிப்பதாகக் கருதி மன்னிப்பு கேட்டு லெட்டர் கொடுங்கள் என்றார்கள். கதாநாயகன் கதாநாயகியை மேலே பார்க்கிறான் அந்தக் காட்சியைத் தூக்குங்கள் என்றார்கள் .நாங்கள் விளக்கம் சொன்னால் எதுவும் பேசக்கூடாது வெளியே போங்கள் என்று சொன்னார்கள். எங்களுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு அங்கே எங்களை நடத்தினார்கள் .

சென்சார் விதிகள் எல்லாம் 1952 -ல் உள்ளது அப்படியே இன்றும் உள்ளன. ஆனால் திரைப்படங்களும் வாழ்க்கை முறையும் கலாச்சாரமும் எவ்வளவோ மாறிவிட்டன. ஆனால் அதை மாற்றாமல் அப்படியே வைத்து இருக்கிறார்கள் .5 ஆண்டுக்கு ஒரு முறையாவது சென்சார்விதிகளை மாற்ற வேண்டும் .அப்போதுதான் இவர்களுக்கு நாட்டு நடப்பு என்னவென்று புரியும். இவர்கள் அப்படிப் பெயர்களை எடுக்கச் சொன்னதால் டப்பிங் எல்லாம் மாற்ற வேண்டி இருந்ததால் தயாரிப்பாளருக்கு ஆறு லட்சம் செலவானது. ஒரு புதிய சிறிய தயாரிப்பாளருக்கு இதெல்லாம் அநியாய செலவுதான் .

ஆன்ட்டி என்றால் தப்பு என்கிறார்கள். குள்ளன் என்று கூறக்கூடாது என்கிறார்கள். நாங்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தான் ஏ சர்டிபிகேட் கேட்கிறோம்.யூ ஏ எல்லாம் நாங்கள் கேட்கவில்லை .

நாங்கள் பெண்களைத் தவறாகத் சித்தரிக்கவில்லை. அப்படிச் செய்திருந்தால் இப்படி ஆறு நடிகைகள் நடித்திருக்க முடியுமா?
என்றோம் அவர்கள் ஆனால் ஒப்புக்கொள்ளவில்லை.

தெருக்கூத்துகளில் நாடகங்களில் இல்லாத இரட்டை அர்த்த வசனங்களா? ஆனால் திரைப்படத்தில் இருந்தால் பெரிது படுத்துகிறார்கள் .அதில் இல்லாததையா நாங்கள் கூறுகிறோம்? இன்று சினிமா வெப் சீரிஸ் எல்லாம் எவ்வளவு மாறி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்.

இப்படத்தை தமிழ் தெலுங்கு என்று நேரடிப் படம் போலவே எடுத்துள்ளோம் .இன்று ஒரு படத்தை வியாபாரம் செய்வது என்பது மிகவும் சிரமமாக இருக்கிறது. ஹார்ட் டிஸ்க்கை எடுத்துக் கொண்டு ஐந்தாறு ஆண்டுகளாகத் தயாரிப்பாளர் அலைய வேண்டி உள்ளது. இப்படி சினிமாவில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட இடையூறுகளை எல்லாம் நினைத்து நான் கண்கலங்கி அழுதிருக்கிறேன். நம்மை நம்பி வந்த தயாரிப்பாளருக்கு நஷ்டம் வராமல் காப்பாற்றுவது நமது கடமை அல்லவா?

தயாரிப்பாளர் தந்தை போன்றவர் .அப்படித் தந்தை ஸ்தானத்தில் உள்ளவருக்கு நான் துரோகம் செய்ய முடியுமா ?ஏமாற்ற முடியுமா?

படத்தில் நாங்கள் கருத்து சொல்லவில்லை .ஒரு அடல்ட் காமெடி படம்தான் எடுத்துள்ளோம்” என்றார்.

விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே .ராஜன் பேசும்போது,

” இப்போதெல்லாம் பட விழாக்களுக்கு அதில் நடித்த நடிகைகள் வருவதில்லை.அந்த நிலையில் இங்கே வந்திருக்கிற இந்த நான்கு நடிகைகளை நான் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன் .அந்த நாலு பேருக்கு நன்றி!

புதிதாக இவ்வளவு துணிச்சலாகத் தமிழ்ப் படம் எடுக்க வந்துள்ள தயாரிப்பாளருக்கு நான் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவர்களுக்குப் போட்ட பணம் திரும்ப வந்துவிடும்.இப்பொழுது எல்லாம் போட்ட பணம் திரும்பி வந்தாலே பெரிய விஷயம்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் 250 முதல் 300 படங்கள் எடுத்து வெளியிட முடியாமல் உள்ளன.
ஏனென்றால் கியூபுக்கு 15 முதல் 20 லட்சம் கட்ட வேண்டும் .விளம்பர செலவுகள் 50 லட்சம் ஆகும். இப்படிப் பல பிரச்சினைகள் உள்ளன. இவர்கள் சொந்தப் பணத்தில் படம் எடுத்திருக்கிறார்கள் .சிறிய தயாரிப்பாளர்கள்தான் சொந்தப் பணத்தில் படம் எடுக்கிறார்கள்.

இந்தப் படத்தை வெளியிடும் விநியோகஸ்தரும் தைரியமாக நவம்பர் 3 ஆம் தேதி வெளியீடு என்று அறிவிப்பு செய்துள்ளார்கள்.

இது ஒரு அடல்ட் படம் இது இப்படித்தான் இருக்கும். இதை ரசிப்பதற்கு மக்கள் இருக்கிறார்கள். இதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் அதற்காக ஒரு படம் எடுப்பது தவறில்லை .பல கோடி ரூபாய் வசூல் செய்யும் பெரிய ஹீரோ படத்தில் நடித்த நடிகையை இதைவிட மோசமாக காட்டியுள்ளார்கள்.

இயக்குநர் கேசவை நான் பாராட்டுகிறேன். அவர் தயாரிப்பாளர் மேல் வைத்த நம்பிக்கையைப் பாராட்டுகிறேன்.

அவர் இந்த படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார்?

இந்தக் கதையைப் பார்த்து இப்படி நாட்டில் நடக்குமா? என்று கேட்பார்கள் .இப்படியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

அப்பா அம்மாவுக்கு மரியாதை கொடுங்கள் நம் பண்பாட்டை மறந்து விடக்கூடாது என்கிறார்.

இப்போது பெரிய கதாநாயக நடிகர்களே மோசமாக வசனம் பேசுகிறார்கள். தலை முடியைக் காட்டி வசனம் பேசுகிறார்கள்.இப்போது வருகிற படங்கள் எல்லாமே பழிவாங்கும் கதைகள். எதற்கெடுத்தாலும் துப்பாக்கி
எதற்கெடுத்தாலும்
கத்தி என்று உள்ளது. சமூகத்தில் 18 வயது பையன் கத்தி தூக்கி கொண்டு திரிகிறான். இப்போது இருக்கிற படங்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது .

பெரிய கதாநாயகர்களை பின்பற்றுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது. அப்படி இருக்கும்போது இப்படி அதிக வன்முறைகள் வெட்டு குத்து என்று நடிப்பது சிகரெட் புகைப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பெரிய கதாநாயகன் செய்யும்போது அதைப் பின்பற்றி ஒரு கூட்டமும் அதையே செய்யும் .

அவுட்டோரில் வெளிப்புறங்களில் படம் எடுக்கும் போது நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன் முதலமைச்சரைச் சந்தித்து ஒரு வேண்டுகோள் விடுத்தோம் .அவுட்டோர் லொகேஷன்களில் டிராபிக், போலீஸ் என்று ஏகப்பட்ட பேர் வந்து லஞ்சம் வாங்குகிறார்கள். தினசரி 25ஆயிரம் ரூபாய் லஞ்சத்துக்கே கொடுக்க வேண்டியிருக்கிறது.இதைத் தடுத்து முறைப்படுத்த வேண்டும்.

தலைமைச் செயலகத்தில் சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வர வேண்டும் அப்படி அமைத்து ஒருமுறை அனுமதி வாங்கிவிட்டால் தமிழ்நாட்டில் எங்கே சென்றாலும் பிரச்சினை இல்லாமல் படப்பிடிப்பு நடத்துவதற்கு அனுமதிக்கும் வகையில் வசதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். முதலமைச்சரும் பரிசீலிக்கிறோம் என்றார்.

நான் 2004 -ல் இதே தலைப்பை என் படத்திற்கு வைத்தேன். ஆனால் அப்போது எதிர்ப்பு இருந்ததால் நான் பின் வாங்கி, விட்டு விட்டேன். ஆனால் ஆனால் இந்த தயாரிப்பாளர் போராடி அதே தலைப்பை வாங்கி இருக்கிறார் .அவருக்கு என் பாராட்டுக்கள்.

இப்போது கூட இருப்பவர்களே உதவியாக இருப்பதில்லை. அவர்களே பெரிய பிரச்சினையாக இருக்கிறார்கள். நிலைமை மாறும் போது எல்லாவற்றையும் போட்டு விட்டு ஓடி விடுகிறார்கள். இதுதான் இன்றைய உலக நிலைமையாக உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இயக்குநர் தயாரிப்பாளர் உடன் இருப்பதும் அவரது நிலைமை புரிந்திருப்பதும் பாராட்டுக்குரியது.

சினிமா விழாக்களில் போர்த்தப்படும் இந்தப் பொன்னாடைகள் தவிர்க்கப்பட வேண்டும். அதனால் ராஜஸ்தான் காரர்களுக்குத்தான் வியாபாரம் நடக்கும்.அந்தப் பொன்னாடையால் நமக்கு எந்தப் பயனும் இல்லை.அவை பயனற்றவை எதற்கும் பயன்படாது.

நமது தமிழ்நாட்டின் நெசவாளிகள் பயன்பெறும் வகையில் கைத்தறி ஆடை வாங்கி போர்த்திடுங்கள். அதன்மூலம் அவர்களை வாழ வையுங்கள்.

இந்தப் படம் வெற்றி அடைய வாழ்த்துகிறேன்”

இவ்வாறு கே. ராஜன் பேசினார்.

விழாவில்
விநியோகஸ்தர்கள் ரமேஷ் சுப்பிரமணியன், அஞ்சலி முருகன்,
படத்தின் இசை அமைப்பாளர் ஜி கே வி , எழுத்தாளர் பொன். முருகன்,கலை இயக்குநர் ராமச்சந்திரன்,சண்டை இயக்குநர் ராஜாசாமி,பாடல் ஆசிரியர் சிவப்பிரகாசம்,
படத்தில் நடித்திருக்கும் மாரி வினோத், வில்லன் விஜய் பிரசாத், நடிகைகள் காயத்ரி, சிம்ரன், தீபிகா, சாரா அக்ஷயா, படக் குழுவினருக்கு நெருக்கமான நண்பர்கள் வேலூர் வெங்கடேசன், அண்ணாமலை, சின்னையா, தாமு, காளிராஜன், காத்து கருப்பு கலை, தயாரிப்பாளர் சுப்பிரமணியன் மலைச்சாமி ஆகியோரும் கலந்து கொண்டனர்

9 V ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படம் நவம்பர் 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

நல்ல கதை வந்தால் ஓகே சொல்ல காத்திருக்கும் ரம்பா..

வெள்ளித் திரையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், அஜித் குமார் என அத்தனை முன்னணி நடிகர்களுடன் கலக்கிய நட்சத்திர நடிகை ரம்பா கனடாவில் குடும்பத்தோடு வசிக்கிறார் .அவரோடு வந்த சிம்ரன், லைலா கோதிகா போன்ற நடிகைகள் இன்று பல முக்கிய படங்களில் நடித்து வருவதால் ரம்பாவுக்கும் நடிப்பின் மீதான மீண்டும் வந்துள்ளது. ஏற்கனவே தெலுங்கு படத்தில் வாய்ப்புகள் வந்தாலும், தமிழில் மீண்டும் நடிக்கவே ஆர்வம் காட்டுகிறார்.

திரையுலகில் 20 வருடங்கள் 100 படங்களுக்குமேல் நடித்து திரையுலகின் நட்சத்திர நாயகியாக இளைஞர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை ரம்பா. 90 கிட்ஸ்களின் உறக்கத்தை கெடுத்தவர், முன்னணி நடிகையாக கோலோச்சியவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் திரையில் தோன்றவுள்ளார்.

தனது 15 வயதிலேயே நடிகையாக மலையாள சினிமா மூலம் திரையுலகில் கால் பதித்தவர் ரம்பா, 1993 ல் உழவன் படம் மூலம் தமிழ் சினிமவில் கால்பதித்தார். அடுத்த 20 வருடங்கள் இந்திய திரையுலகில் கொடிகட்டிப் பறந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், போஜ்புரி, இந்தி என இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நடித்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக தென்னிந்திய முழுதும் நட்சத்திரமாக ஜொலித்தார். 20 வருடங்களாக திரையுலகில் கோலோச்சிய இவர் திருமணத்திற்குப் பிறகு நடிப்பிலிருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் திரையுலகில் தன் நடிப்பு பயணத்தை தொடரவுள்ளதாக தெரிவுத்துள்ளார். இச்செய்தி அவரது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இது குறித்து நடிகை ரம்பா கூறுகையில்…
திரையுலகில் வெகு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் கனவுக்கன்னி அடையாளமும் புகழும் எனக்கு கிடைத்தது. அதை நினைத்து எப்போதும் எனக்கு பெருமை தான். நான் நடிக்கும் காலத்தில் மிக ஜாலியாக சுட்டிப்பெண்ணாக இருந்தேன். திருமணத்திற்கு பிறகு கூட எல்லோரும் கேட்டார்கள் என டிவிக்களில் ஷோ செய்தேன், ஆனால் குழந்தைகள் என்னை மிஸ் செய்கிறார்கள் எனத் தெரிந்த போது, நடிப்பதை நிறுத்தி விட்டேன். இரண்டு பெண் குழந்தைகள்,ஒரு பையன் என அழகான குடும்பம், ஒரு நடிகையாக நான் உணர்ந்ததே இல்லை, ஒரு நல்ல அம்மாவாக மனைவியாகவே இருந்தேன், இப்போது குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள். இப்போதும் ரசிகர்கள் என்னை ஞாபகாமாக கேட்பதும் பாராட்டுவதும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர்களின் அன்புதான் மீண்டும் நடிக்கலாம் என்ற எண்ணத்தைத் தூண்டியது.

சினிமாவை தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கிறேன், இப்போது சினொமாவின் டிரெண்ட் மாறியிருக்கிறது. ஆனால் சினிமா என்றுமே மாறாது. இப்போதும் சினிமா நண்பர்கள் உடன் பல விசயங்கள் பேசிக்கொண்டு இருப்பேன், என் வயதுக்கேற்ற வித்தியாசமான கதாப்பாத்திரங்களில், நடிக்க வேண்டும். அதற்கான கதைகளை கேட்க ஆரம்பித்துள்ளேன். ரசிகர்கள் என்னை விரைவில் திரையில் பார்க்கலாம் என்றார்.

நயன்தாரா நடித்துள்ள ‘அண்ணபூரணி- The Goddess of Food’ படம் டிசம்பர் 1, 2023 வெளியாக உள்ளது!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் 75வது படமான ‘அன்னபூரணி- The Goddess of Food’ டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. இப்படத்தை நிலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்கியுள்ளார் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரைடென்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர். டிசம்பர் எப்பொழுதும் திருவிழா காலம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன. அந்த வகையில் இந்தப் படத்தின் நல்ல கதையம்சம் குடும்பப் பார்வையாளர்களை ஈர்க்கும் எனப் படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘அன்னபூரணி – The Goddess of Food’ படம் சரியான திட்டமிடலோடு சரியான நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது குறித்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமன் எஸ் இசையமைத்திருக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (வசனம்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

ஹரிஷ் கல்யாண் நடித்த ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது!

நடிகர் ஹரிஷ் கல்யாண் தன்னுடைய ஒவ்வொரு படத்தின் வெற்றி மூலமும் பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாக வளர்ந்து வருகிறார். அவரது அடுத்தப் படமான ‘பார்க்கிங்’ அறிவிக்கப்பட்டதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்போது இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் – பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி ஆகியவை படம் டிசம்பர் 1,2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன்பான ப்ரீ-ரிலீஸ் பிசினஸூம் ஒட்டுமொத்த படக்குழுவினரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ’பலூன்’ படத்தில் கே.எஸ்.சினிஷிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் இந்துஜா கதாநாயகியாக நடிக்க, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பல முக்கிய நடிகர்களும் இதில் நடித்துள்ளனர். சரியான திட்டமிடல் மற்றும் அதை செய்லபடுத்துவதன் மூலமாக முழு படப்பிடிப்பையும் குறுகிய காலத்தில் படக்குழு முடித்துள்ளது.

‘பார்க்கிங்’ படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார் மற்றும் ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் (எடிட்டிங்), என்.கே.ராகுல் (கலை), டி.முருகேசன் (நிர்வாகத் தயாரிப்பாளர்), தினேஷ் காசி, ஃபீனிக்ஸ் பிரபு (ஆக்‌ஷன்), ஷேர் அலி (ஆடைகள்), அப்சர் (நடன இயக்குநர்), யுகபாரதி (பாடல் வரிகள்), டிடிஎம் (விஎஃப்எக்ஸ்), ராஜகிருஷ்ணன் எம்.ஆர். (ஒலிக்கலவை), சிங்க் சினிமா (ஒலி வடிவமைப்பு), யெல்லோடூத்ஸ் (வடிவமைப்பு), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளனர்.

த்ரில்லர் டிராமா ஜானரில் எடுக்கப்பட்டுள்ள ‘பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸின் சுதன் சுந்தரம் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரியின் கே.எஸ்.சினிஷ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

‘அர்ஜுன் சக்ரவர்த்தி – ஜர்னி ஆஃப் அன் சங் சாம்பியன்’ திரைப்படத்தின் முதல் பார்வை.



ஸ்ரீனி குப்பலா தயாரிப்பில் விக்ராந்த் ருத்ரா எழுத்து மற்றும் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படமான ‘அர்ஜுன் சக்ரவர்த்தி, ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்’ முதல் பார்வை (ஃபர்ஸ்ட் லுக்) வெளியாகி உள்ளது.

விஜய ராமராஜு மற்றும் சிஜா ரோஸ் முதன்மை வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் அஜய், தயானந்த் ரெட்டி, அஜய் கோஷ் மற்றும் துர்கேஷ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் தோன்றுகின்றனர்.

‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ திரைப்படம் 1980களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை திரையில் காட்டும் படமாக இது அமையும்.

இன்று வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக்கில் அர்ஜுன் சக்ரவர்த்தி ஸ்டேடியத்தின் நடுவில் கையில் பதக்கத்துடனும் முகத்தில் பெருமிதத்துடனும் இருப்பதைக் காணலாம். இந்திய கபடியில் அர்ஜுன் சக்ரவர்த்தியின் தாக்கம் 1980களில் இந்திய கிரிக்கெட்டில் கபில்தேவின் தாக்கத்திற்கு இணையாக உள்ளது என்ற வாசகம் எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது. விஜய ராமராஜு இந்த பாத்திரத்திற்காக தன்னுடைய உடலை சிறப்பாக கட்டமைத்துள்ளார்.

சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளனர். விக்னேஷ் பாஸ்கரன் இசையமைக்க, ஜெகதீஷ் சீக்கட்டி ஒளிப்பதிவு செய்ய, சுமித் படேல் கலை இயக்கத்தை கவனிக்க பிரதீப் நந்தன் படத்தொகுப்புக்கு பொறுப்பேற்றுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது.

‘அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் எ அன்சாங் சாம்பியன்’ குறித்து பேசிய தயாரிப்பாளர் ஸ்ரீனி குப்பலா, “இது ஒரு திரைப்படமாக  மட்டுமில்லாமல், சவால்களை தாண்டி நம் அனைவரையும் ஊக்குவிக்கும் மனிதர்களின் அசைக்க முடியாத மன உறுதிக்கான எடுத்துக்காட்டாக அமையும். கனவை நனவாக்க முழு மூச்சாக உழைத்தால் இலக்கை எட்டிவிடலாம் என்பதை இப்படம் வெளிப்படுத்தும்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஒரு குழுவாக இணைந்து நாங்கள் உருவாக்கியுள்ள இப்படம் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இதற்காக அயராது பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப குழுவினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கையை இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுவதால், இந்த பயணத்தில் எங்களுடன் சேர அனைவரையும் அழைக்கிறோம். இது சொல்லப்பட வேண்டிய கதையாகும்,” என்று தெரிவித்தார்.

இயக்குநர் விக்ராந்த் ருத்ரா கூறுகையில், “‘அர்ஜுன் சக்ரவர்த்தி: ஜர்னி ஆஃப் அன்சாங் சாம்பியன்’ படத்தை இயக்கியது பெருமையாக உள்ளது. அர்ஜுன் சக்கரவர்த்தியின் கதையை திரையில் உயிர்ப்பிக்கும் பயணம் சவாலாக இருந்தது. அர்ப்பணிப்பு, விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றிலிருந்து வெற்றி பிறக்கிறது என்ற பழமொழிக்கு அர்ஜுன் சக்ரவர்த்தியின் வாழ்க்கை ஒரு சான்றாகும். எங்களின் ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் புரிந்து கொண்டு பகிர்ந்து கொள்ளும் திறமையான நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி,” என்றார்.

“அர்ஜுன் சக்ரவர்த்தியாக விஜய் ராமராஜூவின் உழைப்பு உண்மையிலேயே அசாதாரணமானது. அர்ஜுன் சக்ரவர்த்தியின் பாத்திரத்தை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் எட்டு விரிவான உடல் மாற்றங்களுக்கு தன்னை அவர் உட்படுத்திக் கொண்டார். அவரது நடிப்பால் பார்வையாளர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மன உறுதி, உழைப்பு மற்றும் ஒருவரின் கனவுகளின் அசைக்க முடியாத நாட்டம் ஆகியவற்றின் கதை இது. இந்த சினிமா பயணத்தின் ஒரு அங்கமாக இருந்து எங்களை ஆதரிக்குமாறு ரசிகர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று இயக்குநர் விக்ராந்த் ருத்ரா கூறினார்.

“‘டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக 2 மாதங்கள் வரை என்னை தயார்படுத்தி கொண்டேன்” ; கத்ரீனா கைப்

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் வரிசை படங்களில் முதன் பெண் உளவாளியான, கத்ரீனா கைப் நடிக்கின்ற சோயா என்கிற கதாபாத்திரம் தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ராவல் ஒவ்வொரு ஒரு அடியிலும் ஆணுக்கு சமமாக காட்டப்பட்டு வருகிறது.. சண்டை என வந்துவிட்டால் எந்த அளவுக்கும் இறங்கி ஒரு கை பார்க்கும் அளவுக்கு அவள் கடுமையான, புத்திசாலித்தனமான மற்றும் கொடுமையான உளவாளி.

கத்ரீனா சோயா கதாபாத்திரத்தை தானாகவே சொந்தமாக உருவாக்கியிருக்கிறார் என்பதுடன் தயாரிப்பாளர்கள் ஒவ்வொரு டைகர் படத்திலும் அவரது கதாபாத்திரத்தை தவறாமல் உச்சநிலைக்கு எடுத்து செல்கிறார்கள். நம்பமுடியாத சண்டை காட்சிகளை செய்துள்ளதற்காக கத்ரீனா கைப் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். மேலும் இதுவரை வெள்ளித்திரையில் வேறெந்த பெண்ணும் செய்திராத அளவுக்கு ஒத்தைக்கு ஒத்தை மோதும் ஆக்சன் காட்சிகளையும் செய்திருக்கிறார். ‘டைகர் 3’யில் இந்த மிகப்பெரிய ஆக்சன் காட்சிகளில் நடிப்பதற்கு தயாராவதற்கு கிட்டத்தட்ட 60 நாட்கள் வரை அவர் பயிற்சியும் ஒத்திகையும் எடுத்துக்கொண்டு தயாராகியுள்ளார்.

கத்ரீனா கூறும்போது, “தன்னுடைய குடும்பத்தையோ அல்லது நாட்டையோ அல்லது மனித நேயத்தையோ காப்பாற்றவேண்டும் என்கிற நிலை வரும்போது ஒரு பெண்ணால் செய்ய முடியாதது என எதுவுமில்லை என்பதைத்தான் ‘டைகர் 3’ காட்டுகிறது. வளர்ப்பவர்களாக மட்டுமல்ல கடுமையான பாதுகாவலர்களாகவும் பெண்களால் இருக்க முடியும் என்பதை மக்களிடம் சொல்வதற்கு சோயா போன்ற ஒரு கதாபாத்திரம் முக்கியமானது மற்றும் அவசியமானதும் கூட.. என்னுடைய திரையுலக பயணத்தில் சோயா அதிகப்படியாக போற்றப்படக்கூடிய கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “ அவளது மன உறுதியாலும் தைரியத்தாலும் எந்த ஒருவருடனும் அவள் எப்படி பொருத்திக்கொள்ள முடிகிறது என்பதை நான் ரசிக்கிறேன். அவள் ஒரு சண்டையிலிருந்து எப்போதும் பின்வாங்கியதில்லை. ஆக்சன் என வரும்போது ஆணை விட மிகச்சிறப்பாக அவளால் செயல்பட முடியும். சோயாவின் ஆக்சன் ஸ்டைல் என்பது தனித்துவமானது. இந்த டிரைலரில் நீங்கள் பார்த்த சில காட்சிகளை போல மிகவும் சிக்கலான சண்டைக்காட்சிகளை கூட அவளால் எளிதாக மேற்கொள்ள முடியும். சோயா மொத்த எதிரி படைகளையும் எதிர்ப்பவள் மட்டுமல்ல, அவளே அனைவருடன் தானாகவே சண்டையிட கூடியவள்” என்கிறார்.

யஷ்ராஜ் பிலிம்ஸ் சோயா கதாபாத்திரத்தை ஒவ்வொரு படத்திலும் மிகவும் கடுமையாக உருவாக்கி இருக்கிறார்கள் என்கிற உண்மையை கத்ரீனா ரசிக்கிறார். அவர் கூறும்போது, “ஒரு ஜானராக ஆக்சனை நான் விரும்புவதுடன் ஒரு உளவாளியாக நடிக்கவேண்டும் என்கிற என் கனவும் நனவாகியுள்ளது. என்னுடைய பெருமையான அடையாளங்களில் ஒன்றாக இது இருக்கப்போகிறது என்பதை நான் அறிந்திருக்கிறேன். அதனால் என்னுடைய 200 சதவீத உழைப்பை இந்த மூன்றாம் பாகத்திற்கு கொடுத்துள்ளேன். ஒவ்வொரு டைகர் படமும் சோயா கதாபாத்திரத்தை ஒவ்வொரு கட்டமாக உச்சத்திற்கு எடுத்து செல்கிறது. அதற்காக அவள் கடுமையாக போராடி இருக்கிறாள் என்பதுடன் அது ரத்தக்களறியாகவும் இருந்திருக்கிறது. அது தான் நான் எப்போதும் நேசிக்கின்ற இந்த கதாபாத்திரத்தின் உயிர்மூச்சு” என்கிறார்.

கத்ரீனா கூறும்போது, “’டைகர் 3’யின் ஆக்சன் காட்சிகளுக்காக குறைந்தது இரண்டு மாதங்களாவது என்னை தயார்படுத்திக்கொண்டேன். ஒரு சுறுசுறுப்பானவளாக, அதிவேகம் கொண்டவளாக, மிகப்பெரிய பலம் கொண்டவளாக சோயா இருக்கவேண்டும் என நாங்கள் விரும்பினோம். சோயா செய்திருக்கும் ஆக்சன் காட்சிகளை நீங்கள் பார்க்கும்போது உண்மையிலேயே நானும் அதனுடன் சேர்ந்து சுழல வேண்டி இருந்தது என்பதையும் என்னுடைய திரையுலக பயணத்திலேயே மிகவும் கடினமான பயிற்சியாகவும் அது இருந்தது என்பதையும் இதுபோன்ற காட்சிகள் இதற்கு முன்னாள் எந்த ஒரு பெண்ணும் முயற்சித்ததில்லை என்பதையும் நீங்கள் உணர்வீர்கள்” என்கிறார்.

மேலும் அவர் கூறும்போது, “உலகிலேயே மிகச்சிறந்த சண்டைப்பயிற்சி குழுவால் செயல்படுத்தப்பட்ட இந்த ஆக்சன் காட்சிகளை பெரிய திரையில் பார்வையாளர்கள் பார்த்து ரசிக்க இருப்பதை நினைத்து நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன்” என்கிறார்.

ஆதித்யா சோப்ராவால் தயாரிக்கப்பட்டு, மனீஷ் சர்மாவால் இயக்கப்பட்டுள்ள இந்தப்படம் வரும் தீபாவளி வெளியீடாக நவ-12 ஞாயிறன்று வெளியாக இருக்கிறது. தனது அடையாள கதாபாத்திரமான யஷ்ராஜ் பிலிம்ஸின் ‘ஓஜி’யான சூப்பர் ஏஜென்ட் டைகராக நடித்துள்ள சல்மான் கானுக்கு ஜோடியாக கத்ரீனா நடித்துள்ளார்.

எம்.எஸ். மன்சூர் வழங்கும் ‘சிரோ’ படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

மில்லியன் ஸ்டுடியோஸின் எம்.எஸ்.மன்சூர், திரைப்பட ஆர்வலர்களுக்கு இதுவரை இல்லாத சினிமா அனுபவத்தை அளிக்கும் வகையில் ’வெப்பன்’ திரைப்படத்தைத் தயாரித்துள்ளார். தற்போது அவரின் தயாரிப்பில் ‘சிரோ’ திரைப்படம் அடுத்ததாக உருவாக இருக்கிறது. இந்தத் திரைப்படம் பேண்டசி ஜானரில் சிறந்த தொழில்நுட்பத் தரத்துடன் உருவாக இருக்கிறது. மலையாளத்தில் ’பதினெட்டாம் பாடி’, ’வாலாட்டி’, ’பிரார்த்தனா சாப்ரியா’ போன்ற பிளாக்பஸ்டர் ஹிட்கள் மூலம் பிரபலமான அக்ஷய் ராதாகிருஷ்ணன் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். கமர்ஷியல் பைலட்டான பிரார்த்தனா சப்ரியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்க ரோகிணி, ’போர்தொழில்’ படப்புகழ் லிஷா சின்னு, ’சூப்பர் டீலக்ஸ்’ புகழ் நோபல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 27 – காலை எளிய பூஜையுடன் தொடங்கியது. இந்தப் பூஜையில் நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர். விவேக் ராஜாராம் இந்தப் படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்பு விளம்பரப்படங்கள் இயக்குவது மற்றும் டிசைனராகவும் பணிபுரிந்துள்ளார். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்.

படம் குறித்து தயாரிப்பாளர் எம்.எஸ்.மன்சூர் கூறும்போது, “எங்கள் ‘சிரோ’ படத்தின் படப்பிடிப்பு எளிய பூஜையுடன் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். ஒரே ஷெட்யூலில் முழு படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மில்லியன் ஸ்டுடியோவில் உள்ள நாங்கள் எப்போதும் உயர்தர தொழில்நுட்ப அம்சத்துடன் நல்ல கதையம்சம் சார்ந்த திரைப்படங்களையே உருவாக்க விரும்புகிறோம். எங்களின் முதல் தயாரிப்பான ’வெப்பன்’ படத்தில் சத்யராஜ் மற்றும் வசந்த் ரவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் புரோமோ ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதுபோலவே, ‘சிரோ’ திரைப்படமும் மூலம் சிறந்த திரையரங்க அனுபவத்தை பார்வையாளர்களுக்குக் கொடுப்பதற்காக சிறந்த சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ்/அனிமேஷன் கலைஞர்களை இந்தப் படத்தில் பணிபுரிய வைத்துள்ளோம்” என்றார்.

தொழில்நுட்பக்குழு விவரம்:
ஒளிப்பதிவு: கிஷன் சி.வி,
எடிட்டிங்: கோபி கிருஷ்ணா,
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: சிவகுமார்,
நிர்வாக தயாரிப்பாளர்கள்: சக்திவேல் & ரிஸ்வான்,
விளம்பர வடிவமைப்பாளர்: தினேஷ் அசோக்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன்

‘கூழாங்கல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!

நயன்தாரா- விக்னேஷ்சிவனின் ரெளடி பிக்சர்ஸ் வழங்கும் அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்ஜர் ராஜா இசையில் ‘கூழாங்கல்’ படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் அக்டோபர் 27 ஆம் தேதி நேரடியாக வெளியாகி இருக்கிறது. இதன் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நேற்று நடந்தது.

இயக்குநரும் தயாரிப்பாளருமான விக்னேஷ்சிவன், “’ரெளடி பிக்சர்ஸ்’ என்ற பேனரை ஆரம்பிக்கலாம் என்று நினைத்த போது நாங்கள் எடுத்த முதல் படம் ‘கூழாங்கல்’தான். இயக்குநர் ராம் சார் என் குரு போன்றவர். அவர்தான் இந்தப் படம் குறித்து என்னிடம் கூறினார். இந்தப் படம் பார்த்ததும் எங்களுக்கும் பிடித்திருந்தது. உலகளவில் பல திரைப்பட விருது விழாக்களில் பார்வையாளர்களுக்குத் திரையிட்ட போது அவர்களுக்குப் பிடித்திருந்தது. எங்களுக்கு அதிக பெருமையை ஈட்டிக் கொடுத்தப் படம் இது. இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக எங்களின் முதல் படம் தேர்வாகி இருந்ததன் மகிழ்ச்சியை வார்த்தையால் சொல்ல முடியாது. அதேபோல, ஸ்பிரிட் அவார்டிலும் இந்தப் படம் நாமினேட் ஆனது. இப்படி பலவற்றை இந்தப் படம் சாதித்துக் கொடுத்தது. எங்கள் முதல் படத்திற்கே இத்தனை அங்கீகாரம் கிடைத்திருக்கிறது என்பது பெருமை. இதை உருவாக்கிய இயக்குநர் வினோத்திற்கும், படத்தில் நடித்த கருத்தடையான், செல்லபாண்டி ஆகியோருக்கும் நன்றி. பல திரைப்பட விருது விழாக்களுக்கும் சென்ற பிறகே வெளியிட வேண்டும் என முடிவு செய்திருந்தோம். திரையரங்கில் வெளியிட வேண்டும் என்பதுதான் விருப்பம். ஆனால், அதற்கான நேரம் தாண்டி போய்க் கொண்டே இருந்ததால் சோனி லிவ் ஓடிடியில் இப்போது வெளியிடுகிறோம். மிகப்பெரிய இயக்குநர்கள், நடிகர்களின் அறிமுகம் கிடைக்கவும் இந்தப் படம் உதவியது. இதை சாத்தியப்படுத்திக் கொடுத்த இயக்குநர் வினோத்திற்கு நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்” என்றார்.

இயக்குநர் வினோத்ராஜ் பேசியதாவது, “’கூழாங்கல்’ படத்தை முடித்து விட்டு அடுத்து இதை எப்படி எடுத்து செல்லலாம் என பார்த்துக் கொண்டிருந்தபோது, ராம் அண்ணன் கோவா திரைப்பட விழாவில் படத்தைப் பார்த்துவிட்டு ஊக்கப்படுத்தி எங்களை நயன் மேம் விக்னேஷ் சிவன் சாரிடம் அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கும் படம் பிடித்துப் போய் பல உயரங்களுக்கு ‘கூழாங்கல்’லை எடுத்துச் சென்றார்கள். அவர்களுக்கும் என் படக்குழுவினருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு நீங்கள் என்ன கருத்து சொன்னாலும் ஏற்றுக்கொள்கிறோம். நன்றி!” என்றார்.