இயக்குநர் சுசீந்திரன் வெளியீட்டில், நடிகர் நரேன் நடிப்பில், ஹாரர் திரில்லர் “ஆத்மா”!!
KADRIS ENTERTAINMENT UAE நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி தயாரிப்பில், நடிகர் நரேன் நடிப்பில், மாறுபட்ட ஹாரர் மிஸ்டரி திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் ஆத்மா இப்படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. இப்படத்தினை தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் வெளியிடுகிறார்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞனுக்கு, தான் தங்கும் வீட்டில் ஒரு குரல் கேட்கிறது. அதன் பின்னால் உள்ள மர்மத்தை அவன் தேட ஆரம்பிக்க, அதன் தொடர்ச்சியாக, பல மர்ம முடிச்சுகள் அவிழ ஆரம்பிக்கிறது. பரப்பரபான பல திருப்பங்களுடன், ஹாரர் கலந்த, மிஸ்டரி திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
ராகேஷ் சங்கர் கதை திரைக்கதை எழுத, இயக்குநர் சுகீத் இப்படத்தினை இயக்கியுள்ளார். K சந்துரு இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
கேள்விக்கான விடைகளை தேடும் நாயகனை மையப்படுத்தி, வெளியாகியுள்ள மாறுபட்ட ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடமும், திரை ஆர்வலர்களிடமும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.
கைதி, விக்ரம் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, ஆட்டிசம் பாதித்த இளைஞனாக இப்படத்தில் முதன்மைப்பாத்திரத்தில் அசத்தியுள்ளார் நடிகர் நரேன். நாயகியாக தில்லுக்கு துட்டு 2 புகழ் ஷ்ரத்தா ஷிவதாஸ் நடித்துள்ளார். பால சரவணன் காளி வெங்கட், கனிகா, விஜய் ஜானி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ஃபிலிப்பினோவைச் சேர்ந்த நடிக்கைகள் ஷெரீஸ் ஷீன் அகாட், கிறிஷ்டீன் பெண்டிசிகோ ஆகியோர் திருப்புமுனை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் முழுமையாக துபாய் நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. துபாயில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
பெரும் பொருட்செலவில், KADRIS ENTERTAINMENT UAE. நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நஜீப் காதிரி இப்படத்தினை தயாரித்துள்ளார். தமிழகமெங்கும் பிரபல இயக்குநர் சுசீந்திரன் இப்படத்தினை வெளியிடுகிறார்.
முழு படப்பிடிப்பும் முடிந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் டீசர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
தொழில் நுட்பக் குழு இயக்கம் – சுகீத் கதை திரைக்கதை – ராகேஷ் N சங்கர் , வசனம் – K சந்துரு இசை – மங்கள் சுவர்னன், சஸ்வதி சுனில்குமார் ஒளிப்பதிவு – விவேக் மேனன் எடிட்டிங் – நவீன் விஜயன் தயாரிப்பு – நஜீப் காதிரி எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் – பதேருதீன் பனக்கட் மக்கள் தொடர்பு – சதீஷ் ( AIM )
~ ரோனி ஸ்க்ரூவாலா தயாரித்துள்ள இப்படத்தை, இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ளார் மற்றும் சாம் பகதூர் கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடித்துள்ளார்.
~ இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, இன்று ஜனவரி 26 அன்று, குடியரசு தினத்தை முன்னிட்டு, விக்கி கௌஷல் நடித்த, சாம் பகதூர் படத்தின் பிரத்தியேக டிஜிட்டல் பிரீமியரை அறிவித்திருக்கிறது. இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கியுள்ள இப்படத்தை, ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP production நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் சாம் மானெக்ஷாவின் அசாதாரண வாழ்க்கையை, அவரின் நம்ப முடியாத போர் சாகசங்களை விவரிக்கிறது, அவரது ஆரம்ப நாட்களில் இராணுவத் தளபதியாக இருந்து, அவரது ஓய்வு வரை, அவரது புகழ்பெற்ற பயணத்தின் மைல்கற்கள் மற்றும் வெற்றிகளை இப்படம் விரிவாக சொல்கிறது. விக்கி கௌஷலுடன் பாத்திமா சனா ஷேக், ஷான்யா மல்ஹோத்ரா, முகமது போன்ற நட்சத்திர நடிகர்களுடன் ஜீஷன் அய்யூப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சாம் பகதூர் திரைப்படம் சாம் மானெக்ஷாவின் புகழ்பெற்ற வாழ்க்கை மற்றும் பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்ட முதல் இந்திய இராணுவ அதிகாரியாக அவர் ஆவதற்கான, அவரது பயணத்தின் ஏற்ற இறக்கங்களை, உண்மையாக ஆராய்கிறது. இப்படம். 75வது குடியரசு தின நன்நாளில், ஒரு அஞ்சலியாக இந்த சினிமா உருவாகி வந்துள்ளது. ஒரு தலைசிறந்த படைப்பை அனுபவிப்பது மட்டுமல்லாமல் ஒரு உண்மையான ஹீரோவின் ஆத்மாவிற்கு மரியாதை செலுத்தும் அஞ்சலியாக இப்படம் இருக்கும். நான்கு தசாப்தங்களில் ஐந்து போர்களில் கலந்துகொண்டு சேவை செய்த, இந்திய இராணுவத்தின் ஒரு அடையாளமான சாம் மானெக்ஷாவின் பிரமிப்பான பயணத்தை இப்படம் விவரிக்கிறது.
இந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் மானெக்ஷாவின் இணையற்ற இராணுவ பங்களிப்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது, அவரது வீரம், புத்திசாலித்தனம் மற்றும் தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்தத் திரைப்படம் இராணுவ மற்றும் அரசியல் உறவுகளின் சிக்கலான இயக்கங்களையும் கூடவே ஆராய்கிறது. தேசத்திற்காக சாம் மானெக்ஷா தந்த பங்களிப்புகளைப் பற்றிய விரிவான புரிதலை வழங்குகிறது. விக்கி கௌஷலின் மிகச்சிறப்பான நடிப்பு அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளது.
ஒரு திரைப்படத்தின் வெற்றி பல்வேறு முனைகளில் அதன் ஒட்டுமொத்த ஈர்க்கும் தரம், ஆகிய அனைத்தையும் கொண்டுள்ள இப்படம், வரலாற்றினை மீண்டும் உயிர்ப்பிக்கும் திறனில் அந்த வெற்றியை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. இப்படம் பார்வையாளர்களுக்கு மிகச்சிறந்த அனுபவமாக அமையும். சாம் பகதூர் திரைப்படத்தின் உலக டிஜிட்டல் பிரீமியராக ZEE5 இல் ஜனவரி 26 ஆம் தேதி பிரத்தியேகமாக வெளியாகிறது. ZEE5 இன் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில், “ஒவ்வொரு இந்தியருக்கும் குடியரசு தினம் என்பது ஒரு ஆழமான உணர்வைத் தரக்கூடியது. இந்த ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி, குடியரசு நன்நாளில் சாம் பகதூர் படத்தின் டிஜிட்டல் பிரீமியரை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். நம் தேசத்தின் உணர்வோடு எதிரொலிக்கும் இதுபோன்ற சொல்லப்படாத கதைகளை, எங்கள் பார்வையாளர்கள் விரும்புகிறார்கள், மேலும் அவர்களுக்குப் பொருத்தமான மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் பொழுதுபோக்குகளை வழங்கவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். இந்தப் படம் ஒரு உண்மையான நிஜவாழ்வு ஹீரோவுக்கு அஞ்சலி செலுத்தும் படம். ரோனி ஸ்க்ரூவாலா புரொடக்ஷன்ஸ் உடனான எங்கள் கூட்டணி மிகவும் மகிழ்ச்சிகரமானது. அவர்களுடனான கூட்டணி, தேஜஸ் மற்றும் சாம் பகதூர் போன்ற தேசபக்தி திரைப்படங்களை மீண்டும் வழங்க எங்களுக்கு உதவியது. சாம் பகதூர் திரைப்படம் திரையரங்குகளில் பெரும் வெற்றியைக் குவித்த பிறகு, பார்வையாளர்கள் எங்கள் தளத்திலும் இந்தப் படத்தைப் பார்த்து மகிழ்வார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.
தயாரிப்பாளர் ரோனி ஸ்க்ரூவாலா கூறுகையில், “சாம் பகதூர் திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் இண்டஸ்ட்ரியில் இருந்து ஒதுங்கியிருந்த காலகட்டத்தில் இந்தப் படத்தின் ஐடியா எனக்குள் வந்தது, இப்போது இந்த திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருப்பது, எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. ஐகான்கள் அதிகம் உள்ள நம் நாட்டில், அவர்களின் கதைகளைக் கொண்டாட நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். துணிச்சலான ஹீரோவான சாம் மானெக்ஷாவின் உத்வேகம் தரும் கதையை வெளிக்கொணரவும், அதை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளவும் எனது தாழ்மையான முயற்சி தான் இந்த படம். ZEE5 உடன் இணைந்து இந்த அழகான கதையை, உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு வழங்குவது மகிழ்ச்சி. இந்த படத்தின் மூலம் நாங்கள் மேற்கொண்ட பயணத்தை, பார்வையாளர்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்.
இயக்குநர் மேக்னா குல்சார் கூறுகையில், “இந்த வாழ்க்கை வரலாற்றுப் படத்தை உருவாக்குவது எனக்கு ஒரு வாழ்க்கையை மாற்றும் அனுபவமாக இருந்தது, அதை நான் ஒரு ஆசீர்வாதமாகக் கருதுகிறேன். சாம் பகதூர் கதை பார்க்கும் அனைவருக்கும் ஒரு சிறந்த உத்வேகமாக இருக்கும். ஆரம்பத்திலேயே, விக்கி கௌஷல் அந்த பாத்திரத்திற்கு மிகவும் பொருத்தமானவர் என்பதை நான் அறிந்தேன். ஈடு இணையற்ற நம்பகத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரத்திற்கு அவர் உயிர் தந்துள்ளார். இலட்சியங்களும் அதை வாழ்ந்து காட்டும் முன்மாதிரிகளும் காலத்தைக் கடந்தவர்கள், யாராவது ஒருவர் உண்மை மற்றும் நேர்மையுடன் வாழ்ந்தால், அது காலத்தைக் கடந்து நிற்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ZEE5 மூலம் இந்த சொல்லப்படாத கதையை இன்னும் அதிகமான பார்வையாளர்களிடம் கொண்டு செல்வதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இப்படம் என்னையும் சாம் பகதூரின் ஒட்டுமொத்த குழுவையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியதைப் போல், பார்வையாளர்களின் மனதிலும் ஆழமாக எதிரொலிக்கும் என்று நம்புகிறேன்.
நடிகர் விக்கி கௌஷல் கூறியதாவது.., “சாம் மானெக்ஷாவின் கதாபாத்திரத்தில் நடித்தது, மிகவும் பெருமையும் மரியாதையும் நிறைந்த ஒரு நம்பமுடியாத பயணமாகும். அத்தகைய துணிச்சலான மற்றும் புகழ்பெற்ற ஆளுமையைத் திரையில் பிரதிபலிப்பது மிகப்பெரிய பொறுப்பு. அதற்காகக் கிடைத்த அன்பு மற்றும் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இப்படத்தின் திரையரங்க வெளியீட்டின் போது ரசிகர்கள் கதாபாத்திரத்தின் மீது பாச மழை பொழிந்தனர்.
ZEE5 இல் நிகழும் இப்படத்தின் டிஜிட்டல் பிரீமியர், இக்கதையைப் பரந்த பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்ல உதவும். எனவே 75வது குடியரசு தினத்தில் சாம் பகதூர் படம் மூலம் நம் தேசத்திற்கு அழியாத அஞ்சலி செலுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன். இது ஒரு படம் மட்டுமல்ல; இது பார்வையாளர்களுடன் பகிரப்படும் ஒரு பெரும் பயணம், இப்படம் மூலம் பார்வையாளர்கள் உத்வேகம் பெறுவார்கள் என்று நம்புகிறேன்.” 26 ஜனவரி 2024 முதல் ZEE5 இல் சாம் பகதூர் ஸ்ட்ரீமிங்கைப் கண்டுகளிக்கலாம்.
ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி வெளியீடு
இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெபல்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் பிரத்யேக காணொளி ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்கள்.
அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர். எஸ். இயக்கத்தில் தயாராகும் திரைப்படம் ‘ரெபல்’. இதில் ஜீ. வி. பிரகாஷ் குமார், மமிதா பைஜூ, கருணாஸ், சுப்ரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி., ஆதித்யா பாஸ்கர், ‘கல்லூரி’ வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை உதயா கவனிக்க, பட தொகுப்பு பணிகளை வெற்றி கிருஷ்ணன் கையாண்டிருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி, மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 22 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் பிரத்யேக காணொளியில் இடம் பெறும் வசனங்களும், அதிரடி காட்சிகளும், ஜீ. வி. பிரகாஷ் குமாரின் ஆக்சன் அவதாரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
ஷாருக்கான் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே (பதான்) மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கியதன் மூலம் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். அதைத்தொடர்ந்து ‘ஜவான்’, ‘டங்கி’ என பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து இந்த ஆண்டு முழுவதும் திரையுலகில் ஆட்சி செய்து ஆதிக்கம் செலுத்தினார்.
இந்நிலையில் ‘பதான்’ வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையிலும், ஷாருக்கானின் ‘ஜவான்’, ‘டங்கி’ என தொடர்ந்து இரண்டு வெற்றி படங்களை வழங்கியதால் அவரது ரசிகர்கள் ஷாருக்கின் படங்களை நினைவுக்கூறுகிறார்கள்.
பதானுக்கு பிறகு ஷாருக்கான் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜவானை வழங்கினார். இது ஒரு மெகா பான் இந்திய பிளாக் பஸ்டராக மாறியது. பவர் பேக் ஆக்ஷனுடன் கூடிய ஷாருக்கானின் கதாபாத்திரத்தையும் அவரது திரை தோற்றத்தையும் இதற்கு முன் ரசிகர்கள் பார்த்ததில்லை. ஜவானும் பல சாதனைகளை முறியடித்தது. ₹1,148.32 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து, அதிக அளவில் வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது.
தொடர்ந்து இரண்டு அதிரடி ஆக்சன் பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை வழங்கிய பிறகு ஷாருக்கான் மனதைக் கவரும் மகத்தான படைப்பான ‘டங்கி’யை வழங்கினார். இந்த படத்தின் மூலம் மில்லியன் கணக்கிலானவர்களின் இதயங்களை தொட்டார். திரையரங்குகளுக்கு குடும்ப பார்வையாளர்களின் பெருங்கூட்டத்தை ஈர்த்தார். அத்துடன் வெளிநாட்டில் வாழும் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, அவர்களை தாயகம் திரும்பும் உணர்வையும் தூண்டினார். இத்திரைப்படம் இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் இது வரை 450 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது.
‘பதான்’, ‘ஜவான்’, ‘டங்கி’ ஆகிய படங்களின் மூலம் ஒரே வருடத்தில் ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து ஷாருக்கான் சாதனை படைத்திருக்கிறார். 2023 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றி பெற்ற ஐந்து படங்களில் மூன்று படங்கள் ஷாருக்கான் நடிப்பில் வெளியானவை. இத்தகைய சாதனையை படைத்த ஒரே நடிகர் ஷாருக்கான் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்திருக்கிறார். இதன் மூலம் நடிகர் ஷாருக்கான், தனக்கு தான் தான் மிகப்பெரிய போட்டியாளர் என்பதை மீண்டும் நிரூபித்து, புதிய சாதனைகளை படைத்து வருகிறார்.
கட்டா குஸ்தி திரைப்படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் & இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி!! விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!
2022 ஆம் ஆண்டில் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற “கட்டா குஸ்தி” திரைப்படக்கூட்டணி மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறது. முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு இணையும், இந்த புதிய திரைப்படம், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11 வது தயாரிப்பாக (VVS11) உருவாகிறது.
குடும்ப பார்வையாளர்களை மகிழ்வித்ததோடு, விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுக்களைக் குவித்த “கட்டா குஸ்தி” திரைப்படம், கடந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் படங்களில் ஒன்றாக அமைந்தது. இப்படத்தின் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஜோடி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது. மேலும் இப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில், இந்தியாவில் கடந்த ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட மூன்றாவது படமாகவும், தமிழ் மொழியில் அதிகம் பார்க்கப்பட்ட முதல் படமாகவும் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய வெற்றியைத் தந்த, நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்லா அய்யாவு கூட்டணி மீண்டும் இணைவது, ரசிகர்களிடம் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஐ ஆர் என மாறுபட்ட களங்களில், தரமான வெற்றிப்படங்களைத் தந்து வரும், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் 11 வது படைப்பாக, இப்படம் உருவாகிறது.
மிகப்பெரும் பொருட்செலவில், முன்னணி நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், குடும்பத்தோடு கொண்டாடும் அசத்தலான காமெடி கமர்ஷியல் படமாக இருக்கும்.
இந்த புதிய திரைப்படத்திற்கான ஆரம்ப கட்ட பணிகள், தற்போது துவங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படம் பற்றிய மற்ற விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் சீரிஸுக்கு ஹார்ட் பீட் என்று பெயரிட்டுள்ளது.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வெளியீடாக, சமீபத்தில் வெளியிடப்பட்ட, ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்களான “மத்தகம் மற்றும் லேபிள்” சீரிஸ்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்நிலையில், தற்போதைய புதிய சீரிஸான ‘ஹார்ட் பீட்’ சீரிஸுக்கு, ரசிகர்களிடம் இப்பொழுதே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த சீரிஸின் டைட்டிலை ஒரு அழகான சிறிய வீடியோவில், டைட்டில் தொடரின் பெயர் மற்றும் அதன் கவர்ச்சியான, ‘ரிதம் ஆஃப் லைஃப்’ எனும் டேக் லைனுடன் வெளியிட்டது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த சீரிஸ் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின் பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது
இயக்குநர் பிரசாந்த் வர்மா, ராமர் கோவில் திறப்பு விழாவினை முன்னிட்டு இந்த அற்புத சந்தர்ப்பத்தில், PVCU யுனிவர்ஸிலிருந்து மற்றொரு காவிய, சாகசத்திரைப்படமான, “ஜெய் ஹனுமான்” படத்தின் முன் தயாரிப்பு பணிகளை துவங்கியுள்ளார் !!
ராமர் கோவில் திறப்பு நன்நாளில், PVCU யுனிவர்ஸிலிருந்து, அடுத்த அதிரடியாக “ஜெய் ஹனுமான்” பட முன் தயாரிப்பு பணிகள் துவக்கம் !!
பிரசாந்த் வர்மா ஜெய் ஹனுமான் எனும் அடுத்த படத்தின் தலைப்பை தற்பொது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘ஹனுமான்’ படத்தின் முடிவில் அறிவித்திருந்தார். பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் ஹனுமான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஸ்கிரிப்டை இயக்குநர் ஏற்கனவே முழுமையாக தயார் செய்துவிட்டார். பிரமாண்டமான ஃபேண்டஸி உலகில், சூப்பர்மேன் சாகஸ கதைகளைச் சொல்லும் இப்படம், மிகப்பெரும் பட்ஜெட்டில் உலத்தரமான தொழில்நுட்ப அம்சங்களுடன், முன் எப்போதும் இல்லாத, புதுமையான திரை அனுபவத்தை வழங்கும்.
இயக்குநர் பிரசாந்த் வர்மா இப்படத்தின் ப்ரீ-புரொடக்ஷனைத் தொடங்க, அற்புதமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவின் முக்கிய நாளில், பிரசாந்த் வர்மா ஹைதராபாத்தில் உள்ள ஹனுமான் கோவிலில் நடந்த யாகத்தில் பங்கேற்றார். படத்தின் ஸ்கிரிப்ட் அனுமன் சிலையின் முன் வைக்கப்பட்டு, இத்திரைப்படத்திற்காக ஆசீர்வாதம் வாங்கப்பட்டது. முன் தயாரிப்பு பணிகளைத் தொடங்க, இதைவிட சிறந்த சந்தர்ப்பம் கிடைக்காது என்பதில், படக்குழு உற்சாகமாக உள்ளனர்.
இந்நிகழ்விலிருந்து ஒன்றிரண்டு போஸ்டர்கள் வெளியாகியுள்ளது. அப்புகைப்படங்களில் ஒன்று, பிரசாந்த் வர்மா தெய்வத்தின் முன் நின்று ஸ்கிரிப்டை வைத்திருப்பதைக் காட்டினால், மற்றொன்று அதன் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்ட ‘ஹனுமான்’ படத்தின் கடைசி காட்சியைக் காட்டுகிறது.
இப்பிரம்மாண்ட படைப்பினை பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவுக்கப்படும்.
“ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான் – ஒரு சொல்லப்படாத காவியம்!! “ திரைப்படத்தின் போஸ்டர், ராமர் கோவில் திறப்பு விழா நாளில் வெளியிடப்பட்டது!!
இப்படத்தின் வசீகரிக்கமிக்க போஸ்டரை, சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம், அயோத்தியின் வரலாற்று நிகழ்வையொட்டி, வெளியிட்டது.
சுரேஷ் ஆர்ட்ஸ் நிறுவனம் அதன் தயாரிப்பில், உருவாகும் மகத்தான படைப்பான “ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்” திரைப்படத்தின் புதுமையான போஸ்டரை, அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவின் புனித நாளில், பெருமையுடன் வெளியிட்டுள்ளது. கன்னடம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வரவிருக்கும் இந்தத் திரைப்படம், மதிப்புமிக்க ராமாயணத்தின் சொல்லப்படாத அம்சங்களை கூறுவதோடு, காவியக் கதையின் தனித்துவமான கண்ணோட்டத்தை வழங்கும்.
ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி வெளியிடப்பட்டுள்ள கவர்ச்சிகரமான போஸ்டர், அயோத்தியில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை எதிரொலிக்கும் வகையில், ரசிகர்களிடம் வரவேற்பை குவித்துள்ளது. ‘ராமாயணத்தின் சொல்லப்படாத இதிகாசம்’ என்ற டேக்லைன், ராமாயணம் குறித்து இதுவரை ஆவணப்படுத்தப்படாமல் இருக்கக்கூடிய அம்சங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் படமாக, இப்படம் இருக்குமென்பதைக் குறிக்கிறது.
மலைகள், நெருப்பு, நீர் மற்றும் ராமர் மற்றும் அனுமன் தெய்வீக இரட்டையர் போன்ற கூறுகளைக் கொண்ட இந்த போஸ்டர், அயோத்தியில் இந்த மகிழ்ச்சியான தருணத்தின் சாரத்தை படம்பிடித்து காட்டுவதாக அமைந்துள்ளது. இயக்குநர் அவதூத் இயக்கும் ‘ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்’ படம், அதிரடி மிகுந்த ஆக்சன் காட்சிகளுடன், காலத்தால் அழிக்க முடியாத காவியத்தை உயிர்பிக்கும்.
கன்னடத்தில் பாராட்டுகளைக் குவித்த பிரபல தயாரிப்பாளர் K. A.சுரேஷ், சுரேஷ் ஆர்ட்ஸ் பேனரின் கீழ், இந்த லட்சியத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். பல மொழிகளில் இருந்து மதிப்புமிக்க முன்னணி நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றவுள்ளனர், இது ஒரு மாறுபட்ட மற்றும் புகழ்மிகு ஒருங்கிணைப்பாக இருக்கும்.
தற்போது ஸ்டோரிபோர்டிங் மற்றும் VFX ஆரம்ப பணிகள் நடந்து வருகின்றன. “ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான்” படத்தின் தயாரிப்பு மற்றும் கதைக்களம் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்படும். மொழித் தடைகளைத் தாண்டி எதிரொலிக்கும் மாறுபட்ட கதைகளை வழங்குவதில், பான் இந்தியா சினிமாவின் அர்ப்பணிப்புக்கு, இந்தப் படம் ஒரு சான்றாக இருக்கும்.
மக்கள் கருத்தில் ‘கூச முனிசாமி வீரப்பன்’ நல்லவனா ? கெட்டவனா ? ZEE5 தளம் நிகழ்திய ஷோ !!
‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸைக் கொண்டாடும் வகையில் தள்ளுபடி அறிவித்தது ZEE5 தளம்!!
இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.
இந்தியாவையே அதிரவைத்த வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கையை, அவரது வாக்குமூலத்துடன் அலசும் இந்த சீரிஸ் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இந்த சீரிஸை கொண்டாடி வருகின்றனர். தமிழின் இதுவரையிலும் மிகச்சிறந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை நமக்கு வழங்குகிறது. அவரது நிஜ வாழ்க்கைக் காட்சிகள் அவரது வாக்குமூலம் வழியாகவும், அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் ஆளுமை மற்றும் அவரது குற்றப் பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது.
இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. வீரப்பன் பற்றி இதுவரை வெளிவராத உண்மைகள் பலவற்றை வெளிக்கொண்டு வந்துள்ள, இந்த சீரிஸ் இதுவரையிலும் வெளியான வீரப்பன் பற்றிய டாக்குமெண்ட்ரியிலிருந்து மாறுபட்டதாகவும் தனித்துவமானதாகவும் அமைந்துள்ளது.
‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸுக்கு கிடைத்திருக்கும் பார்வையாளர்களின் வரவேற்பைக் கொண்டாடும் வகையில் ஒரு வித்தியாசமான ஷோவை ZEE5 மக்கள் கூடியிருக்கும் Urban Square இல் அரங்கேற்றியுள்ளது. மக்கள் கருத்தில் ‘கூச முனிசாமி வீரப்பன்’ நல்லவனா ? கெட்டவனா ? என்பதைத் தெரிவிக்கும் வகையில், அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கோடுகளால் வரையப்பட்ட வீரப்பனின் ஓவியத்திற்கு, தங்கள் கருத்தையொட்டிய வண்ணங்களைத் தீட்டலாம்.
இந்நிகழ்வில் மக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு, வண்ணங்களைத் தீட்டி வீரப்பன் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்தனர். மேலும் ZEE5 தளத்திற்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
இது குறித்தான வீடியோ லிங்க்
‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸை தீரன் புரடக்சன்ஸ் சார்பில் நக்கீரன் பிரபாவதி இந்த டாக்கு சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்படப்பட்டு வருகிறது.
‘கூச முனிசாமி வீரப்பன்’ 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததைக் கொண்டாடும் வகையில், ZEE5100 எனும் தள்ளுபடி கூப்பனை ZEE5 தளம் அறிவித்துள்ளது. இந்த கூப்பன் மூலம் நீங்கள் ZEE5 தளத்தின் சந்தாவில் 100 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.
~ அஜய் கர்தூர்வார் இயக்கியிருக்கும் இப்படத்தை, அஜய் குமார் புரொடக்ஷன்ஸ் மற்றும் சந்தனா கோபிசெட்டி இணைந்து தயாரித்துள்ளனர் ~
இந்தியா, ஜனவரி 12, 2024: இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம், தனது நேரடி-டிஜிட்டல் தெலுங்கு திரைப்படமான ‘அஜய் காடு’ படத்தினை ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்து வருவதாக அறிவித்துள்ளது. சந்தனா கோபிசெட்டியுடன் இணைந்து அஜய் குமார் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் அஜய் கர்தூர்வர் இப்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் பன்முக நடிகர் அஜய் குமார், தெலுங்கு பிக் பாஸ் புகழ் பானு ஸ்ரீ மற்றும் ரோடீஸ் வெற்றியாளர் ஸ்வேதா மேத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் திறமைமிகு நடிகர்களான பிராச்சி தாக்கர், அபய் பெத்திகாண்டி, ஜெயஸ்ரீ கரு மற்றும் யதம் ராஜு ஆகியோரும் நடித்துள்ளனர்.
‘அஜய் காடு’ அஜய் எனும் நடுத்தர வர்க்க இளைஞன் , பணம், புகழ் மற்றும் காதல் என அனைத்தும் புது வடிவமெடுக்கும் வேகமான உலகத்திற்கு ஏற்ப, மாற முயற்சிக்கும் கதையை விவரிக்கிறது. வாழ்வின் மீதான வெறுப்பில் நம்பிக்கையைக் கைவிடும் அஜய், போதைக்கு அடிமையான மருத்துவரான ஸ்வேதாவை சந்திக்கிறான். அவன் வாழ்வு மாற்றத்திற்குள்ளாகிறது. அஜய் தனது உள் மனப் போராட்டங்களை எதிர்கொள்வதையும் மற்றும் வெளி உலகத்தால் முன்வைக்கப்படும் சவால்களை எதிர்த்துப் போராடுவதையும் ஒரு நெகிழ்ச்சி மிகு பயணமாக இப்படம் சொல்கிறது. ZEE5 இல் ஜனவரி 12 முதல் படம் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.
படத்தின் பிரீமியர் குறித்து அஜய் கர்துர்வார் கூறியதாவது.., “‘அஜய் காடு’ படத்திற்காக நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகச் செயல்பட்டது இன்னுமே நம்பமுடியாத த்ரில் பயணமாக இருந்தது. இந்த திரைப்படம் என் இதயத்திற்கு மிக நெருக்கமான, ஒரு சிறப்பு மிகு படைப்பாகும். இந்த அற்புதமான அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளேன், டிரெய்லர், படத்தின் சிறு அறிமுகத்தைத் தரும் படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது! சண்டைக்காட்சிகள், உணர்ச்சிகள் மற்றும் காதல் ஆகியவற்றின் கலவையாக ஒரு தீவிரமான படைப்பை உங்களுடன் பகிர்வதில், உற்சாகமாக உணர்கிறேன். இந்த துடிப்பு மிகு காதல் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்லும், ZEE5 உடனான இந்த ஒத்துழைப்பு ஒரு கேம் சேஞ்சர் என்று நான் நம்புகிறேன். ஒரே நாளில் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடைய இது மிகப்பெரிய பாலமாக அமையும். ‘அஜய் காடு’ அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும்.”
இப்படத்தில் நல்லமல்லா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பானு ஸ்ரீ கூறியதாவது.., ” ஒரு அருமையான படைப்பில் அஜய் கர்தூர்வாருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தனித்துவமான பாத்திரங்கள் மற்றும் அழுத்தமான திரைக்கதைகளால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் அவரது திறன் ஏற்கனவே என் ஆர்வத்தைத் தூண்டியது. படத்தில், பிரியா என்ற ஒரு துடிப்பான மற்றும் சுதந்திரமான இளம் பெண்ணாக நான் நடிக்கிறேன். இப்பாத்திரம் கதைக்கு ஒரு தனித்துவமான சுவை கூட்டும், மேலும் ZEE5 இல் திரைப்படத்திற்குப் பார்வையாளர்கள் தரும் வரவேற்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.
ZEE5 பற்றி ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில் கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள் கொண்ட ஒரு பெரும் திரை நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது. பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு 12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5 வழங்குகிறது.
மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர : Facebook – https://www.facebook.com/ZEE5 Twitter – https://twitter.com/ZEE5India Instagram – https://www.instagram.com/zee5/