Breaking
January 10, 2025

Cinema

ZEE5 தளத்தில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ் !!

மக்கள் கருத்தில் ‘கூச முனிசாமி வீரப்பன்’ நல்லவனா ? கெட்டவனா ? ZEE5 தளம் நிகழ்திய ஷோ !!

‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸைக் கொண்டாடும் வகையில் தள்ளுபடி அறிவித்தது ZEE5 தளம்!!

இந்தியாவின் முன்னணி ஸ்ட் ரீமிங் தளமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் Zee5 தளத்தில் சமீபத்தில் வெளியான ‘கூச முனிசாமி வீரப்பன்’ டாக்குமெண்ட்ரி சீரிஸ் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்துள்ளது.

இந்தியாவையே அதிரவைத்த வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கையை, அவரது வாக்குமூலத்துடன் அலசும் இந்த சீரிஸ் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களும் இந்த சீரிஸை கொண்டாடி வருகின்றனர். தமிழின் இதுவரையிலும் மிகச்சிறந்த டாக்குமெண்ட்ரி சீரிஸ் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த சீரிஸ் வனக் கொள்ளைக்காரன் கூச முனிசாமி வீரப்பனின் வாழ்க்கை மற்றும் அவரது குற்றச் சரித்திரம் பற்றிய நெருக்கமான பார்வையை நமக்கு வழங்குகிறது. அவரது நிஜ வாழ்க்கைக் காட்சிகள் அவரது வாக்குமூலம் வழியாகவும், அவருக்கு நெருக்கமான நபர்கள் மற்றும் அவரைப் பிடிக்க அயராது முயன்ற அதிகாரிகளின் நேரடி வாக்குமூலங்கள் ஆகியவற்றின் மூலம், இந்த சீரிஸ் வீரப்பனின் ஆளுமை மற்றும் அவரது குற்றப் பின்னணியைத் தெளிவாகச் சித்தரிக்கிறது.

இந்த சீரிஸின் தனிச்சிறப்பு என்னவென்றால், இது முதன்மையாக வீரப்பனின் வார்த்தைகளில், அவரது முழு வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறது. வீரப்பன் பற்றி இதுவரை வெளிவராத உண்மைகள் பலவற்றை வெளிக்கொண்டு வந்துள்ள, இந்த சீரிஸ் இதுவரையிலும் வெளியான வீரப்பன் பற்றிய டாக்குமெண்ட்ரியிலிருந்து மாறுபட்டதாகவும் தனித்துவமானதாகவும் அமைந்துள்ளது.

‘கூச முனிசாமி வீரப்பன்’ சீரிஸுக்கு கிடைத்திருக்கும் பார்வையாளர்களின் வரவேற்பைக் கொண்டாடும் வகையில் ஒரு வித்தியாசமான ஷோவை ZEE5 மக்கள் கூடியிருக்கும் Urban Square இல் அரங்கேற்றியுள்ளது. மக்கள் கருத்தில் ‘கூச முனிசாமி வீரப்பன்’ நல்லவனா ? கெட்டவனா ? என்பதைத் தெரிவிக்கும் வகையில், அவர்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கோடுகளால் வரையப்பட்ட வீரப்பனின் ஓவியத்திற்கு, தங்கள் கருத்தையொட்டிய வண்ணங்களைத் தீட்டலாம்.

இந்நிகழ்வில் மக்கள் பலரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு, வண்ணங்களைத் தீட்டி வீரப்பன் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்தனர். மேலும் ZEE5 தளத்திற்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

இது குறித்தான வீடியோ லிங்க்

‘கூச முனிசாமி வீரப்பன்’ ஒரிஜினல் டாக்குமெண்ட்ரி சீரிஸை தீரன் புரடக்சன்ஸ் சார்பில் நக்கீரன் பிரபாவதி இந்த டாக்கு சீரிஸைத் தயாரித்துள்ளார். இந்த சீரிஸ் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் பிரத்தியேகமாக ZEE5 இல் திரையிடப்படப்பட்டு வருகிறது.

‘கூச முனிசாமி வீரப்பன்’ 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்ததைக் கொண்டாடும் வகையில், ZEE5100 எனும் தள்ளுபடி கூப்பனை ZEE5 தளம் அறிவித்துள்ளது. இந்த கூப்பன் மூலம் நீங்கள் ZEE5 தளத்தின் சந்தாவில் 100 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.

ZEE5 தளம் அதன் அஜய் கர்துர்வார் நடிப்பில் ‘அஜய் காடு’

~ அஜய் கர்தூர்வார் இயக்கியிருக்கும் இப்படத்தை, அஜய் குமார் புரொடக்ஷன்ஸ் மற்றும் சந்தனா கோபிசெட்டி இணைந்து தயாரித்துள்ளனர் ~

இந்தியா, ஜனவரி 12, 2024: இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5 தளம், தனது நேரடி-டிஜிட்டல் தெலுங்கு திரைப்படமான ‘அஜய் காடு’ படத்தினை ஜனவரி 12 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்து வருவதாக அறிவித்துள்ளது. சந்தனா கோபிசெட்டியுடன் இணைந்து அஜய் குமார் புரொடக்ஷன்ஸ் பேனரின் கீழ் அஜய் கர்தூர்வர் இப்படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தில் பன்முக நடிகர் அஜய் குமார், தெலுங்கு பிக் பாஸ் புகழ் பானு ஸ்ரீ மற்றும் ரோடீஸ் வெற்றியாளர் ஸ்வேதா மேத்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் திறமைமிகு நடிகர்களான பிராச்சி தாக்கர், அபய் பெத்திகாண்டி, ஜெயஸ்ரீ கரு மற்றும் யதம் ராஜு ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘அஜய் காடு’ அஜய் எனும் நடுத்தர வர்க்க இளைஞன் , பணம், புகழ் மற்றும் காதல் என அனைத்தும் புது வடிவமெடுக்கும் வேகமான உலகத்திற்கு ஏற்ப, மாற முயற்சிக்கும் கதையை விவரிக்கிறது. வாழ்வின் மீதான வெறுப்பில் நம்பிக்கையைக் கைவிடும் அஜய், போதைக்கு அடிமையான மருத்துவரான ஸ்வேதாவை சந்திக்கிறான். அவன் வாழ்வு மாற்றத்திற்குள்ளாகிறது. அஜய் தனது உள் மனப் போராட்டங்களை எதிர்கொள்வதையும் மற்றும் வெளி உலகத்தால் முன்வைக்கப்படும் சவால்களை எதிர்த்துப் போராடுவதையும் ஒரு நெகிழ்ச்சி மிகு பயணமாக இப்படம் சொல்கிறது. ZEE5 இல் ஜனவரி 12 முதல் படம் இலவசமாக ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது.

படத்தின் பிரீமியர் குறித்து அஜய் கர்துர்வார் கூறியதாவது.., “‘அஜய் காடு’ படத்திற்காக நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராகச் செயல்பட்டது இன்னுமே நம்பமுடியாத த்ரில் பயணமாக இருந்தது. இந்த திரைப்படம் என் இதயத்திற்கு மிக நெருக்கமான, ஒரு சிறப்பு மிகு படைப்பாகும். இந்த அற்புதமான அனுபவத்தை அனைவருடனும் பகிர்ந்து கொள்ள மிக ஆர்வமாக உள்ளேன், டிரெய்லர், படத்தின் சிறு அறிமுகத்தைத் தரும் படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது! சண்டைக்காட்சிகள், உணர்ச்சிகள் மற்றும் காதல் ஆகியவற்றின் கலவையாக ஒரு தீவிரமான படைப்பை உங்களுடன் பகிர்வதில், உற்சாகமாக உணர்கிறேன். இந்த துடிப்பு மிகு காதல் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்லும், ZEE5 உடனான இந்த ஒத்துழைப்பு ஒரு கேம் சேஞ்சர் என்று நான் நம்புகிறேன். ஒரே நாளில் உலகளாவிய பார்வையாளர்களைச் சென்றடைய இது மிகப்பெரிய பாலமாக அமையும். ‘அஜய் காடு’ அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் படைப்பாக இருக்கும்.”

இப்படத்தில் நல்லமல்லா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை பானு ஸ்ரீ கூறியதாவது.., ” ஒரு அருமையான படைப்பில் அஜய் கர்தூர்வாருடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தனித்துவமான பாத்திரங்கள் மற்றும் அழுத்தமான திரைக்கதைகளால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் அவரது திறன் ஏற்கனவே என் ஆர்வத்தைத் தூண்டியது. படத்தில், பிரியா என்ற ஒரு துடிப்பான மற்றும் சுதந்திரமான இளம் பெண்ணாக நான் நடிக்கிறேன். இப்பாத்திரம் கதைக்கு ஒரு தனித்துவமான சுவை கூட்டும், மேலும் ZEE5 இல் திரைப்படத்திற்குப் பார்வையாளர்கள் தரும் வரவேற்பைக் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்.

ZEE5 பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.

மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர :
Facebook – https://www.facebook.com/ZEE5
Twitter – https://twitter.com/ZEE5India
Instagram – https://www.instagram.com/zee5/

ஹனு மான் திரைவிமர்சனம் 

சிறு கிராமத்தில் தன் அக்கா வரலக்ஷ்மியுடன் வாழும் கதாநாயகன் தேஜா சஜ்ஜா ஜாலியான சின்ன சின்ன திருட்டு செயல்களை செய்து கொண்டு எந்த ஊரில் வேலை வெட்டி இல்லாமல் வெட்டியாக ஊரைச் சுற்றி திரிகிறான்.

தலைவரான ராஜ் தீபக் ஷெட்டி கிராமத்து மக்கள் அனைவரிடமும் வரி வாங்கி கொண்டு ஊரை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கிறார்..

யாராவது கிராமத்து தலைவரான ராஜ் தீபக் ஷெட்டி எதிர்த்து பேசினாலோ அல்லது வரி கட்டவில்லை என்றாலும் மல்யுத்த என்ற போட்டி மூலம் எதிர்ப்பவரை கொல்வது அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கதாநாயகன் தேஜா சஜ்ஜாவின் பள்ளி பருவ காதலியான கதாநாயகி அமிர்தா நாயர் அந்த கிராமத்துக்கு மருத்துவராக வருகிறார்

ஒரு கட்டத்தில் கதாநாயகி அமிர்தா நாயரை கொள்ளையர்கள் தாக்க அவரை காப்பாற்ற கதாநாயகன் தேஜா சஜ்ஜா கொள்ளையர்களிடம் போராடும் போது கொள்ளையர்கள் தாக்கியதில் மயக்கமான நிலையில் இருக்கும் கதாநாயகன் தேஜா சஜ்ஜாவிடம் ஹனுமானின் ரத்த துளியால் உருவான சக்தி வாய்ந்த கல்லான ருத்ர கல் ஒன்று கதாநாயகன் தேஜா சஜ்ஜா கையில்
கிடைக்கிறது.

சூரிய சக்தியால் அந்த ருத்ர கல்லில் மூலம் மாபெரும் சக்தியில் மிகப்பெரிய பலசாலியாக உருவெடுப்பதோடு மட்டுமல்லாமல் அந்த கிராமத்து தலைவரான ராஜ் தீபக் ஷெட்டியை அடித்து பந்தாடி அந்த கிராமத்து மக்களை கதாநாயகன் தேஜா சஜ்ஜா காப்பாற்றுகிறார் .

இந்த ருத்ர கல்லின் சக்தியை தெரிந்துக்கொள்ளும் வில்லன் வினய். கல்லுடன் சேர்த்து மாபெரும் சக்தியை கைப்பற்ற கதாநாயகன் தேஜா சஜ்ஜாவை இருக்கும் கிராமத்துக்கு தேடி வருகிறார்.

இறுதியில் கதாநாயகன் தேஜா சஜ்ஜாவிடம் ஹனுமானின் சக்திவாய்ந்த ருத்ர கல்கிடைத்ததற்கான காரணம் என்ன ?

கதாநாயகன் தேஜா சஜ்ஜாவிடமிருந்து அந்த ருத்ர கல்லை கைப்பற்ற நினைத்த வில்லன் வினய்யின் சதி திட்டம் பலித்ததா ? பலிக்கவில்லையா ? என்பதுதான் இந்த ‘ஹனு-மான்’. திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த ‘ஹனு-மான்’ திரைப்படத்தில் கதாநாயகனாக தேஜா சஜ்ஜா நடித்திருக்கிறார்.

நாயகனாக நடிக்கும் தேஜா சஜ்ஜா துறுதுறு இளைஞனாக நடிப்பின் மூலம் அசத்தி இருக்கிறார்

ஹனுமந்து கதாபாத்திரத்திரமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சக்தி கொண்ட சூப்பர் ஹீரோவாக நடிப்பில் ஜொலிக்கிறார் 

ருத்ர கல்லின் சக்தி மூலம் அவர் செய்யும் சாகசங்களை காமெடி கலந்த நடிப்பில் தெலுங்கு கதாநாயகர்கள் திரைப்படங்களில் செய்வதை சொல்லும்போது முடிவில் தெலுங்கு ஸ்டார் பாலகிருஷ்ணாவை போல ரயிலை நிறுத்துவதற்காக கிளம்பும் காட்சியில் விசில் சத்தத்தில் தியேட்டரே அதிர்கிறது.

இந்த ஹனு-மான் திரைப்படத்தில் கதாநாயகியாக அமிர்தா ஐயர் நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் அமிர்தா ஐயர் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார்.

கதாநாயகன் தேஜா சஜ்ஜாவின்அக்காவாக நடிக்கும் வரலட்சுமி சரத்குமார் வழக்கம்போல் மிகவும் அருமையாக அவருடைய கதாபாத்திரத்தை உணர்ந்து மிரட்டி இருக்கிறார்.

ஸ்டைலிஷ் வில்லனாக மிரட்டும் வினய் ராய்,கிராமத்து தலைவராக பயமுறுத்தும் ராஜ் தீபக் ஷெட்டி, சிரிக்க வைக்கும் வெண்ணிலா கிஷோர் ,
சமுத்திரக்கனி என அனைத்து கதாபாத்திரங்களில்  நடித்தவர்களும் மிகவும் இயல்பாக நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவாளர் தாசரதி சிவேந்திரனின் ஒளிப்பதிவு மூலம் கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்

இசையமைப்பாளர்கள் ஹனுதீப் தேவ், கெளரஹரி, கிருஷ்ணா செளரப் ஆகியோரது இசையும், மற்றும் பாடல்கள் பிண்ணனி இசை அனைத்து அருமையாக இருக்கிறது.

படத்தொகுப்பாளர் சாய் பாபு தலாரியின் படதொகுப்பு திரைப்படத்திற்கு பக்க பலமாய் இருக்கின்றது.

ஒரு கிராமத்தில் கதாநாயகனுக்கு சக்தி கிடைத்த பின் அந்த சக்தியினால் சூப்பர் ஹீரோவாக உருமாறி அவர் நிகழ்த்தும் சாகசங்களை கதையாக கொண்டு ஆன்மிகம் கலந்த விறு விறுப்பான திரைக்கதையுடன் குழந்தைகள் முதல் அனைவரும் சிரித்து மகிழ பேசிக்கொண்டே குரங்கு வரும் காட்சிகளும் ஹாலிவுட் திரைப்பட பாணியில் வடிவமைக்கப்பட்ட சிறப்பான காட்சிகளுடன் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையில் ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி திரைப்படமாக திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் வர்மா.

Megastar Chiranjeevi, Vassishta, UV Creations – Mega Mass Beyond Universe – #Mega156 Titled Vishwambhara,

Megastar Chiranjeevi provided a full meal feast to his fans and movie buffs for the last Sankranthi with Waltair Veerayya. Megastar doesn’t have any theatrical release for the festival this year, but the makers of his magnum opus #Mega156 provided a perfect Sankranthi presentation by unveiling its title through a spellbinding glimpse.

The glimpse begins with transporting us into a heavenly world, where someone locks a magical box, which accidentally falls. It passes through a black hole and crashes into an asteroid. After many such disruptions and obstacles, the magical object finally reaches the earth which is symbolically shown with a large Hanuman statue. A crater appears as it crashes into the earth, yet nothing happens to the magic box. Finally, the title of the movie is revealed as Vishwambhara.

The Mega Mass Beyond The Universe is beyond our imagination and the journey of the magical box gives us some lucidity on the kind of cinematic experience we are going to witness. The VFX work is top notch. More importantly, the title Vishwambhara sounds extremely effectual.

The mega fantasy adventure is directed by Vassishta of Bimbisara fame under the leading production house UV Creations. Vikram, Vamsi, and Pramod are producing the movie on a high budget which is going to be the costliest film for Chiranjeevi to date.

MM Keeravani scores the music, while Chota K Naidu is the cinematographer. AS Prakash is the production designer, while Sushmita Konidela is the costume designer.

Kotagiri Venkateswara Rao and Santhosh Kamireddy are the editors for the film. Sri Siva Shakthi Datta and Chandrabose are the lyric writers, while Srinivas Gavireddy, Ganta Sridhar, Nimmagadda Srikanth, and Mayukh Adithya are the script associates.

The shoot of the movie is in the initial stages. The makers also announced the release of the movie for Sankranthi in 2025.

Cast: Megastar Chiranjeevi

Technical Crew:
Writer & Director: Vassishta
Producers: Vikram, Vamsi, Pramod
Banner: UV Creations
Music: MM Keeravani
DOP: Chota K Naidu
Production Designer: AS Prakash
Costume Designer: Sushmita Konidela
Editor: Kotagiri Venkateswara Rao, Santhosh Kamireddy
Lyrics: Sri Siva Shakthi Datta and Chandrabose
Script Associates: Srinivas Gavireddy, Ganta Sridhar, Nimmagadda Srikanth, and Mayukh Adithya
Ex-Producer: Karthik Sabareesh
Line Producer: Ramireddy Sridhar Reddy
PRO: Yuvraaj
Marketing: First Show

மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மெகா156 “விஸ்வம்பரா”.

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும், கற்பனைக்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி திரைப்படம் – மெகா156 #Mega156 விஸ்வம்பரா என தலைப்பிடப்பட்டுள்ளது!! அதிர வைக்கும் டைட்டில் க்ளிம்ப்ஸேவுடன் , 2025 ஆம் ஆண்டு சங்கராந்திக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. !!

மெகாஸ்டார் சிரஞ்சீவி கடந்த சங்கராந்திக்கு ‘வால்டர் வீரய்யா’ படம் மூலம் தனது ரசிகர்களுக்கும், திரையுலக பிரியர்களுக்கும் அறுசுவை விருந்தளித்தார். இந்த ஆண்டு மெகாஸ்டாருக்கு எந்த திரையரங்கு வெளியீடும் இல்லை என்றாலும், அவரது பிரம்மாண்டமான திரைப்படமான #Mega156 இன் தயாரிப்பாளர்கள், படத்தின் தலைப்பை அற்புதமான க்ளிம்ப்ஸேவுடன் வெளியிட்டதன் மூலம், ரசிகர்களுக்கு இந்த சங்கராந்தியை கொண்டாட்டமாக மாற்றியுள்ளனர்.

தற்செயலாக விழும் மாயாஜாலப் பெட்டியை யாரோ ஒருவர் பூட்டி வைக்க, ஒரு பரலோக உலகத்திற்கு நம்மைக் கொண்டு செல்வதில் இருந்து இந்த கிளிம்ப்ஸே வீடியோ தொடங்குகிறது. அப்பெட்டி கருந்துளை வழியாகச் சென்று சிறுகோள் மீது மோதி, பல இடையூறுகள் மற்றும் தடைகளுக்குப் பிறகு, இறுதியாக பூமியை அடைகிறது, இது ஒரு பெரிய அனுமன் சிலையுடன் அடையாளமாக காட்டப்பட்டுள்ளது. பூமியில் மோதும்போது ஒரு பள்ளம் தோன்றுகிறது, ஆனால் மாயப் பெட்டிக்கு எதுவும் நடக்கவில்லை. இறுதியாக, படத்தின் தலைப்பு “விஸ்வம்பரா” என கண்களுக்கு விருந்தாக விரிகிறது.

பிரபஞ்சத்திற்கு அப்பால் மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்லும் வகையிலான இந்த வீடியோவில் காட்டப்படும், மாயாஜால பெட்டியின் பயணம், நாம் காணப்போகும் சினிமா அனுபவத்தைப் பற்றிய சிறு தெளிவைத் தருகிறது. இதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் உலகத்தரத்தில் அமைந்துள்ளது மிக முக்கியமாக, விஸ்வம்பரா எனும் தலைப்பு வெகு கவர்ச்சிகரமாக உள்ளது.

விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக இருக்கும். இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

இப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் துவங்கி, நடைபெற்று வருகிறது. இப்படம் 2025 சங்கராந்தி விருந்தாக திரைக்கு வருமென, தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ் ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ்
ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ‘கல்கி 2898 AD’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் மே மாதம் ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.

கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சி மொழியான சினிமாவை அனைவரும் கொண்டாடுகிறார்கள். அத்தகைய சினிமாவின் தொலைநோக்கு பார்வையாளரான இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதியை , தனித்துவமான அறிவிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் படக்குழுவினர் கவர்ந்திருக்கிறார்கள். அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இத்திரைப்படம்.. ஒரு அசாதாரணமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்கும் என உறுதி அளிக்கிறது. வாரணாசி, மும்பை, டெல்லி, சண்டிகர், சென்னை, மதுரை, ஹைதராபாத், விசாகப்பட்டினம், குண்டூர், பீமாவரம், காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் பல முக்கியத்துவம் வாய்ந்த மாநகரங்களில் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பை தயாரிப்பாளர்கள் பிரம்மாண்டமாக வெளியிட்டனர். இதற்காக விஜயவாடாவில் நடைபெற்ற பிரத்யேக அணிவகுப்பு… பார்வையாளர்களின் கவனத்தைக் கவர்ந்தது. இதன் போது தனித்துவமான மற்றும் அற்புதமான முறையில் படத்தின் வெளியீட்டை, இந்த ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி என உற்சாகமாக அறிவித்தனர்.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனரும், திரைப்பட தயாரிப்பாளருமான சி. அஸ்வினி தத் ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு குறித்து பேசுகையில், ” வைஜயந்தி மூவிஸ் நிறுவனம் தனது ஐம்பதாவது ஆண்டை நிறைவு செய்யும் வகையில்.. எங்களுடைய சினிமா பயணத்தில் மே ஒன்பதாம் தேதியின் முக்கியத்துவம் தெளிவாகத் தெரிகிறது. ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ முதல் விருது பெற்ற ‘மகாநதி’ மற்றும் ‘மகரிஷி’ வரை இந்த தேதி எங்கள் வரலாற்றில் தனி இடத்தை பொறித்துள்ளது. இப்போது அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் போன்ற திறமையான நட்சத்திர கலைஞர்களுடன் தயாரான ‘கல்கி 2898 AD’ படத்தின் வெளியீடு எங்களுக்கு ஒரு சிறப்பான தருணத்தை குறிக்கிறது. எங்கள் நிறுவனத்தின் மைல் கல்லான ஐம்பதாவது ஆண்டுடன் இப்படம் இணைந்துள்ளது. மேலும் நாங்கள் எங்கள் பயணத்தை தொடரும்போது ..அதை இந்த திரைப்படம் மேலும் அர்த்தமுள்ளதாக ஆக்குகிறது.” என்றார்

இதனிடையே ‘கல்கி 2898 AD’ கடந்த ஆண்டு சான்- டியாகோவில் உள்ள காமிக்-கானில் அறிமுகம் செய்யும் போது உலகம் முழுவதும் பெரும் அதிர்வை உருவாக்கி, பாராட்டைப் பெற்றது. மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். மேலும் அவர்களை சூழ்ச்சிகள் நிறைந்த எதிர்கால உலகிற்கு அழைத்துச் செல்லவும் ‘கல்கி 2898 AD’ உறுதியளிக்கிறது.

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான ‘கல்கி 2898 AD’ ஒரு பன்மொழி திரைப்படமாகும். இது புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்ட.. எதிர்காலத்தில் நடைபெறும் அறிவியல் புனைவு படைப்பாகும்.

SRK’s 2 blockbuster Jawan and Pathaan are among the 10 most searched movies on Google in 2023!

The way Shah Rukh Khan set his rule all over the year in 2023 with Jawan, Pathaan, and Dunki, he truly proved why he is the king of Bollywood. Having made a comeback after a hiatus of 4 years, the superstar arrived as a storm and proved his dominance at the box office worldwide. While the films have topped several charts, continuing the spree, it has now made its place in the top 10 most searched movies on Google in 2023.

With Jawan at leading the way followed by Pathaan, Shah Rukh Khan is a superstar who has 2 of his films in the list of most searched movies on Google in 2023. It’s indeed worth marking that he is the only superstar who has 2 films in the list that were released in a single year.

Shah Rukh Khan has indeed hit a hat trick by delivering three blockbusters in a single year with Pathaan, Jawan, and Dunki. While these films created examples of its success, it ruled the box office with its whooping collection figures. The superstar has also created a phenomenon by drawing whooping 8 Cr. footfalls throughout the year, with Jawan contributing 3.93 Cr., Pathaan 3.20 Cr. , and Dunki over 1 Cr. so far — becoming the first ever Hindi film actor to do so. Starting the year with a bang, Pathaan raked in 524 Cr. nett (Hindi) and 545 Cr. nett (all languages) in India, and a stellar 1055 Cr. worldwide including a record-breaking 49.25 million USD overseas. Whereas Jawan was released in June, the highest-grossing Hindi film ever with a whopping 643 Cr. nett collection in India across all languages. 580 Cr. of this came from the Hindi version alone, another record for Hindi cinema. Then came, Dunki which collected 410 Cr. worldwide in just 13 days, the film is projected to reach 460 Cr. or more by the end of its run.

தமிழகத்திலேயே மிகப்பெரிய மிக நவீன வசதிகளுடன் கூடிய, திரையரங்கமாக பிராட்வே திரையரங்கம்

தமிழகத்திலேயே மிகப்பெரிய மிக நவீன வசதிகளுடன் கூடிய, திரையரங்கமாக பிராட்வே திரையரங்கம் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ளது. இத்திரையரங்கத்தினை பார்வையிட்ட ரெட் ஜெயன்ட் மூவிஸ் இனைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி, திரையரங்கு உரிமையாளர் திரு சதீஷ்குமார் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முதல் முறையாக அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன திரையரங்கமாக, பிராட்வே திரையரங்கம் அமைந்துள்ளது. 9 திரைகள் கொண்ட இந்த திரையரங்கில், தமிழகத்திலேயே மிகப்பெரிய திரை அளவைக்கொண்ட, லேசர் ஸ்கிரீன் எபிக், ஐமேக்ஸ் ஸ்கிரீன் மற்றும் மிகச்சிறந்த ஒலி அமைப்பும் புதுமையான வகையில் உயர்தரத்திலான இருக்கை வசதிகளுடன் கூடிய கோல்ட் ஸ்கிரீன் அமைந்துள்ளது. இதனுடன் 6 வழக்கமான திரைகளும் அமைந்துள்ளது.

ரசிகர்களும், திரைக்காதலர்களும் வியந்து பார்க்கும் வகையிலான, இந்த மல்டிப்ளெக்ஸ் பிராட்வே திரையரங்கினை பார்த்துப் பிரமித்த, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் திரு செண்பகமூர்த்தி அவர்கள், திரையரங்க உரிமையாளர் திரு சதீஷ்குமார் அவர்களை சந்தித்து, பாராட்டுத் தெரிவித்தார். இந்நிகழ்வில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் Manager திரு சுப்பு அவர்கள் உடனிருந்தார்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்சன் நம்பர் 10 .

2022 ஆம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் திரைப்படமான கட்டா குஸ்தி படத்திற்குப் பிறகு, எங்களின் அடுத்த திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த புதிய திரைப்படத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்கிறார் மற்றும் ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா போன்ற வெற்றிப்படங்களையும் மற்றும் விரைவில் வரவிருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தையும் இயக்கியுள்ள இயக்குநர் கோகுல் இப்படத்தை இயக்கவுள்ளார். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் தற்காலிகமாக ‘விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்சன் நம்பர் எண் 10’ என்று அழைக்கப்படும்.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் வெளிவந்த ‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன், கட்டா குஸ்தி , எஃப் ஐ ஆர் போன்ற வெற்றிப் படங்களின் தொடர்ச்சியாக அடுத்து வரவுள்ள “ஆர்யன்” படமும் அதிக பொருட்செலவில், ஆக்சன் மற்றும் அசத்தலான பொழுது போக்குத் திரைப்பபடமாக உருவாகி வருகிறது.

விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் கோகுல் கூட்டணியில் உருவாகவுள்ள விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்சன் நம்பர் 10 திரைப்படம் உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, மிகப்பெரும் பட்ஜெட்டில், மிரட்டலான ஆக்சன் எண்டர்டெயினராக உருவாக்கப்படவுள்ளது.

விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் – புரடக்‌ஷன் நம்பர் 10′ திரைப்படம், நடிகர் விஷ்ணு விஷால் நடித்துவரும், தற்போதைய திரைப்படங்களின் பணிகள் முடிந்தவுடன் துவங்கும். தற்போது இப்படத்தின் முதல்கட்ட முன் தயாரிப்பு பணிகளை துவக்கியுள்ளோம். விரைவில் இப்படத்திற்கான நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படும்.

எங்களின் இந்த புதிய பயணத்தில் எப்போதும் போல், உங்கள் ஆதரவையும் அன்பையும் வழங்க வேண்டுகிறோம்.

அயோத்தி ராமர் ஆலயத்திற்கு புதிய பாணியில் நன்கொடை வழங்கும் ‘ஹனு-மான்’ படக் குழு

‘ஹனு-மான் திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிடும் ரசிகர்களிடமிருந்து.. அவர்கள் செலுத்திய டிக்கெட் கட்டண தொகையிலிருந்து ஐந்து ரூபாயை.. அயோத்தியில் எழுப்பப்பட்டு வரும் ராமர் ஆலயத்திற்கு நன்கொடையாக வழங்குகிறோம்’ என அப்படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த அறிவிப்பிற்கு ‘மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி வரவேற்பும், நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் ‘ஹனு-மான்’. இதில் தேஜா சஜ்ஜா, வரலட்சுமி சரத்குமார், அமிர்தா ஐயர், வினய் ராய், சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தாசரதி சிவேந்தரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌர ஹரி மற்றும் அனுதீப் தேவ் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஃபேன்டசி ஜானரில் சூப்பர் ஹீரோ திரைப்படமாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெய்ன்மென்ட் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. நிரஞ்சன் ரெட்டி தயாரித்திருக்கிறார். ஸ்ரீமதி சைதன்யா இதனை வழங்குகிறார்.

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதியன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் உலகம் முழுதும் திரையரங்குகளில் ‘ஹனு-மான்’ வெளியாகிறது. தமிழகம் முழுவதும் இந்த திரைப்படத்தை சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். இந்நிலையில் படக் குழு தற்போது கொச்சி, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத் என பல இடங்களில் இப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வுகளில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது.

இதில் ஒரு நிகழ்வாக ஹைதராபாத்தில் ஃபிரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், ” அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டிருப்பது வரலாற்றில் ஒரு மைல் கல் நிகழ்வாகும். இம்மாதம் 22 ஆம் தேதியன்று ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள எனக்கு அழைப்பு வந்திருக்கிறது. இதில் நான் என்னுடைய குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொள்வேன்.
ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு ‘ஹனு-மான்’ படக் குழு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
இப்படத்தினை காண்பதற்காக விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஐந்து ரூபாயை ராமர் கோவில் கட்டுவதற்காக நன்கொடையாக வழங்குகிறார்கள். இந்த செய்தியை படக் குழு சார்பாக நான் மகிழ்ச்சியுடன் இங்கு அறிவிக்கிறேன். மேலும் இத்தகைய உன்னதமான முடிவை எடுத்த ‘ஹனு-மான்’ படக் குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

ராமர் ஆலயம் கட்டுவதற்காக ‘ஹனு-மான்’ படத்திற்கு விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்து ஐந்து ரூபாயை நன்கொடையாக வழங்கும் ‘ஹனு-மான்’ படக் குழுவினரை திரையுலகினர் மட்டுமல்லாமல் ஆன்மீக அன்பர்களும் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள்.