வெளியீடு -November 21st 2025 நிறுவனம் -Sony Pictures 2022-இல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் படமான Sisu நிறைவிருக்கலாம். இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கும் பொது , வெறி கொண்டு அலையும் சில வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க அவர்களை திரும்ப தாக்குகிறார்! தப்பித்து விடுகிறார்! இனி , இரண்டாம் பாகம் பற்றி …
கொல்லப்பட்ட தன் குடும்பத்தாரின் நினைவாக , அவர்களெல்லாம் வாழ்ந்த வீட்டை இடம் பெயர்த்து வேறிடத்தில் நிலை நிறுத்தி தன் தனிமையான நிலைப்பாட்டை தொடர முற்படும் பொழுது , அவரை கொன்றே தீர வேண்டும் என்கிற ஒரு வெறி உணர்வோடு அவரை தேடி வருகிறது எதிரணி! அந்த போர் வீரரோ, என்ன நடந்தாலும் நான் மரணிக்க மாட்டேன் என்ற உத்வேகத்தில் வாழ்பவர்! அவர்கள் அனைவரையும் அவரால் சமாளித்து வெல்ல முடிந்ததா என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம்! 2002 இல் வெளிவந்த Sisu திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது! இப்படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சிகள் மிக பெரிய அளவில் பேசப்பட்டன! திரைப்பட துறையை சார்ந்த Stunt Masters பலரும் இப்படத்தை பெரியளவில் கொண்டாடினர்! இந்த இரண்டாம் பாகத்தில், சண்டை காட்சிகள் , முதல் பாகத்தை விட அசத்தலாக உள்ளது என்றால் மிகையில்லை ! Jelmari Helander படத்தை, எழுதி இயக்கியுள்ளார் . 2022 இல் வெளிவந்த படத்தையும் எழுதி இயக்கியவரும் இவரே! Jorma Tommila (கதாநாயகன்), Stephen Lang, Richard Brake ஆகியோர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர். Mika Orasmaa – ஒளிப்பதிவாளர்
மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B. வினோத் ஜெயின் வெளியீட்டில் மீண்டும் திரைக்கு வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் இப்படத்தை வெளியிடும் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வினோத் ஜெயின், நடிகர் விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜா, நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கௌதம் ராஜ், பொன் குமரன், கணேஷ் பாபு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை விநியோகிக்கும் விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் வினோத் ஜெயின் பேசுகையில்,
”நம் எல்லோருக்கும் நெருக்கமான படம் ‘ப்ரண்ட்ஸ்’. ப்ரண்ட்ஸ் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது நட்பு, சிரிப்பு. இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது. தற்போது 4K தொழில்நுட்பத்தில் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி. இந்தப் படம் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
திரு. ஷானு பேசுகையில், “ப்ரண்ட்ஸ்’ திரைப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கும் பணிகள் 70 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றது. தயாரிப்பாளர் அப்பச்சனிடம் பேசி, மறு வெளியீட்டிற்கான உரிமையை வாங்கினோம். அப்போதே அவர் இந்த திரைப்படத்தை மிகப் பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்று நிபந்தனை விதித்த பிறகே அனுமதி வழங்கினார். மிகப்பெரிய திறமை வாய்ந்த தொழில்நுட்ப குழுவிடம் இப்படத்தின் புதுப்பிப்பு பணிகளை வழங்கினோம். இந்தப் படத்திற்காக 5.1 – 7.1- டால்பி அட்மாஸ் – என மூன்று வெர்ஷன்களில் ஒலிகளை மாற்றி அமைத்திருக்கிறோம். ஒவ்வொரு ஃபிரேமையும் டி ஐ (DI) செய்து, கலர் கரெக்ஷனையும் செய்திருக்கிறோம். ரசிகர்களுக்கு நல்லதொரு அனுபவத்தை மீண்டும் வழங்குவதற்காக கடினமாக உழைத்து இருக்கிறோம். இந்தப் படத்தை எந்த காலத்தில் பார்த்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும்.
இந்தப் படத்தை மலையாளத்தில் உள்ளது போல் இல்லாமல் தமிழ் ரீமேக்கில் இரண்டு கதாபாத்திரங்களை இயக்குநர் சித்திக் புதிதாக இணைத்து இருப்பார். அதனால் மலையாளத்தில் வெளியான ப்ரண்ட்ஸ்’ படத்திற்கும், தமிழில் வெளியான ‘ப்ரண்ட்ஸ்’ படத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதிலும் வடிவேலுவின் காமெடி அல்டிமேட்டாக இருக்கும். இந்தப் படம் 21ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும்,” என்றார்.
இயக்குநர் கௌதம் ராஜ் பேசுகையில், “நான் பள்ளியில் படிக்கும் போது இந்த படத்தை பார்த்தேன். தற்போது இந்த படம் மீண்டும் வெளியாகிறது. டிரைலரை பார்க்கும்போது தொழில்நுட்ப ரீதியாக தரமிக்கதாக இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆனந்த குட்டன் அந்த காலகட்டத்தில் பாசில், சித்திக் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்றியவர். அவருடைய லைட்டிங் குவாலிட்டி ஸ்பெஷலாக இருக்கும்.
இந்தப் படத்தை மீண்டும் தியேட்டருக்கு சென்று பார்க்கும் போது பல விஷயங்களை நினைவு படுத்தும். அந்த அளவிற்கு இந்த படம் ஒரு கல்ட் கிளாசிக் மூவி.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால், அந்த காலத்தில் சித்திக் தான் பான் இந்திய இயக்குநர். அவர் ஒரு கதையை மலையாளத்தில் எடுத்து வெற்றி பெற வைத்து, அதே கதையுடன் தமிழ், தெலுங்கு ,இந்தி என்று ஒவ்வொரு மொழியிலும் இயக்குவார். அதன் பிறகு மீண்டும் மலையாளத்தில் ஒரு கதையை இயக்குவார். அவரைப் போல் ஒரு ஸ்கிரிப்ட்டை காமெடி வெர்ஷனில் எழுதி இயக்கக்கூடிய இயக்குநர் தற்போது இல்லை.
விஜய்யின் கலை உலக பயணத்தில் ‘ப்ரண்ட்ஸ்’ திரைப்படம் தான் கலெக்ஷன் கிங் ஆக அவரை உயர்த்தியது.
புதுக்கோட்டை அருகில் உள்ள அறந்தாங்கியில் தான் நான் இந்தப் படத்தை பார்த்தேன். எங்கள் ஊரில் இந்த படம் 40 நாட்கள் ஓடியது.
சூர்யாவையும் ஊர் முழுவதும் அறிமுகப்படுத்தி சென்றடைய வைத்த படமும் இந்தப் படம் தான்.
லெஜன்ட் இளையராஜாவின் பாடல்களை இப்போது கேட்டாலும் ஃபிரஷ்ஷாக இருக்கிறது.
இன்று வரை டிரெண்டில் இருக்கும் நேசமணி கதாபாத்திரம் இந்தப் படத்தில் இருக்கிறது. தற்போது வரை மீம்ஸ் கிரியேட்டர்கள் இப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளைத் தான் பயன்படுத்துகிறார்கள்.
இந்தப் படத்தை நீங்கள் தியேட்டருக்கு சென்று பார்க்கும் போது நிறைய நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தும் என நம்புகிறேன். தற்போதுள்ள இளம் தலைமுறை ரசிகர்கள் இதை ஒதுக்குவார்கள், அதை ஒதுக்குவார்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. அவர்கள் அனைத்தையும் ரசிக்கிறார்கள். இந்தப் படம் அவர்களுக்கு வேறு ஒரு அனுபவத்தை வழங்கும். இந்தக் குழுவினருக்கு வாழ்த்துகள்,” என்றார்.
இயக்குநர் கணேஷ் பாபு பேசுகையில், “நான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறேன் என்பது பெருமிதமாக இருக்கிறது. இந்தப் படத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ் கண்ணா என நிறைய ஹீரோக்கள் உள்ளனர். படப்பிடிப்பு நடைபெறும் தருணத்தில் இவர்கள் அனைவருக்கும் இடையே ஒரு போட்டி இருக்கும். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள குஷால் தாஸ் கார்டன் மற்றும் ஒய் எம் சி ஏ மைதானத்தில் தான் நடைபெற்றது. குஷால் தாஸ் கார்டன் என்பது சினிமாவிற்கு கோயில் போன்றது. அவை எல்லாம் மறக்க முடியாத அனுபவங்கள்,” என்றார்.
இயக்குநர் பொன் குமரன் பேசுகையில், “ஆண்பாவம் பொல்லாதது எனும் படத்தை அண்மையில் திரையரங்கம் ஒன்றில் குடும்பத்தினருடன் பார்த்தேன். பார்த்துவிட்டு வெளியே வரும்போது அங்கு ‘ப்ரண்ட்ஸ்’ படத்தின் விளம்பர பேனர் வைக்கப்பட்டிருந்தது. என் மனைவி இந்த படம் எப்போது வருகிறது, என்று உற்சாகத்துடன் கேட்டார். இந்தப் படம் மீண்டும் வெளியாகிறது என்று சொன்னேன். அவருடைய உற்சாகம் காரணமாக இந்தப் படத்தை குடும்பத்துடன் அனைவரும் பார்ப்பார்கள் என்று நம்பிக்கை ஏற்பட்டது.
தற்போது கடந்த காலத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள் ரீ ரிலீஸ் செய்வது அதிகரித்து வருகிறது. இந்தப் படத்தை டெக்னிக்கலாக நல்ல குவாலிட்டியுடன் உருவாக்கி இருக்கிறார்கள். நாம் திரையரங்கத்திற்கு செல்லும் போது அதில் ஓடும் படங்கள் காட்சியாகவும், ஓசையாகவும் நல்லதொரு தரமான அனுபவத்தை கொடுத்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள். அது போன்றதொரு முயற்சியை மேற்கொண்ட தயாரிப்பாளர் வினோத் ஜெயின் மற்றும் அவரது குழுவினரை பாராட்டுகிறேன்.
நான் கன்னடத்தில் திரைப்படங்களை இயக்கி விட்டு தமிழில் இயக்குவதற்காக அவரை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். அப்போது அவர் மற்றொரு கதையை சொல்லி இந்த கதையை திரைப்படமாக உருவாக்கலாம் என சொன்னார். அந்த கதை மிகவும் அதிகம் செலவாகுமே என்று சொன்னதற்கு பரவாயில்லை என்று சொல்லி, தற்போது ‘கோல்மால் ‘ என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். அதே அளவிற்கான நேரத்தையும், பொருளையும் செலவு செய்து ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை புதுப்பித்திருக்கிறார். தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு தரமான படத்தை தர வேண்டும் என்ற அவருடைய எண்ணம் உயர்வானது,” என்றார்.
நடிகர் ரமேஷ் கண்ணா பேசுகையில், “இந்தப் படத்தின் இயக்குநர் சித்திக் அவர் எழுதிய வசனங்களை தவிர வேறு எந்த வசனங்களையும் நடிகர்கள் பேச அனுமதிக்க மாட்டார். நான் அவருடன் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறேன். ஸ்கிரிப்டில் இருக்கும் டயலாக்கை தவிர வேறு ஒரு வசனத்தை நடிகர்கள் பேசினால் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஆணியே புடுங்க வேணாம்’ எனும் டயலாக் கோகுல கிருஷ்ணாவும், டைரக்டர் சித்திக் சாரும் எழுதிய டயலாக் தான்.
இந்தப் படத்தில் நான் பேசும் ‘ஆடு நடந்தது… மாடு நடந்தது..’ என்ற வசனம் மட்டும் தான் அவர் அனுமதித்த எக்ஸ்ட்ரா டயலாக். அதற்கும் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு இது ஒரு கல்ட் கிளாசிக் டயலாக் என நான் விளக்கம் சொன்ன பிறகு ஒப்புக்கொண்டார்.
ப்ரண்ட்ஸ் படப்பிடிப்பு நடந்த போது நானும், சூர்யாவும் கலகலப்பாக பழகினோம். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது அவரும், ஜோதிகாவும் காதலித்து கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் தூது சென்றிருக்கிறேன்.
ப்ரண்ட்ஸ் படத்தை பொருத்தவரை இயக்குநர் ரசித்து ரசித்து உருவாக்கினார். அவர் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அது போன்றதொரு சிறந்த இயக்குநர் தற்போது இல்லாதது நமக்கு மிகப்பெரிய இழப்புதான். நேசமணி அவர் உருவாக்கிய அற்புதமான கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தை மலையாளத்தில் சீனிவாசன் நடித்திருப்பார்.
இந்தப் படம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெளியாகிறது அதற்கு ஒரு ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெறுகிறது என்றால் நமக்கெல்லாம் ஆண்டவனின் ஆசி இருக்கிறது என்றுதான் அர்த்தம்.
நாங்கள் சினிமாவில் அறிமுகமாகும் போது எங்களுக்கு பிடித்த காமெடி படம் எது, என்று கேட்டால்.. நாங்கள் ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஊட்டி வரை உறவு’ ஆகிய படங்களை சொல்வோம். இந்தப் படங்களை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். அதேபோல் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். இதனால் இந்த படம் ரீ ரிலீசிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்.
இந்தப் படத்தில் இடம்பெறும் கடிகாரம் உடையும் காட்சியை படமாக்கும் போது விஜய்யும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். மீண்டும் அந்த காட்சியை படமாக்குவதற்கு அரை மணி நேரத்திற்கு மேலாகும். மீண்டும் படமாக்கும் போது ‘ஐயோ நான் பிடிக்கலடா’ என்ற டயலாக் சொல்லும்போது மீண்டும் விஜயும், சூர்யாவும் சிரித்து விடுவார்கள். படத்தை நீங்கள் உற்றுப்பார்த்தால் விஜயும், சூர்யாவும் திரும்பி நின்று கொண்டு சிரிப்பார்கள்.
விஜய் படப்பிடிப்புக்கு தளத்திற்கு வந்தால் அமைதியாக இருப்பார். ஆனால் நடிக்கும் போது அற்புதமாக நடித்து அசத்தி விடுவார். அது அவருக்கான கடவுள் கொடுத்த பரிசு. அதேபோல் டப்பிங்கிலும் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை தான் பார்ப்பார். அதன் பிறகு எந்த ஒரு பிசிறு இல்லாமல் கச்சிதமாக பேசி விடுவார். எனக்குத் தெரிந்தவரை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் இது போல் அவர் நடித்த காட்சிகளை ஒரு முறை பார்த்துவிட்டு டப்பிங்கில் முதல் முறையிலேயே கச்சிதமாக பேசி விடுவார். அந்த வகையில் விஜய் அற்புதமான நடிகர் மற்றும் அற்புதமான டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அதே போல் படப்பிடிப்பு தளங்களில் ஹீரோ என்ற பந்தா எதுவும் இல்லாமல் எங்களுடன் சகஜமாக பழகுவார்.
இந்தப் படத்தில் தேவயானி கதாபாத்திரத்திற்காக முதலில் ஜோதிகாவிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு சிம்ரனிடம் பேசினார்கள். இறுதியில் தேவயானி தான் நடித்தார். அப்போது அவருக்கு ஒரு அதிர்ஷ்டம் இருந்தது. ‘காதல் கோட்டை’ படத்திலிருந்து அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி. அவர் சார்பாகவும் வாழ்த்து தெரிவிக்கிறேன்,” என்றார்.
இயக்குநர் பேரரசு பேசுகையில், “ரமேஷ் கண்ணாவை பற்றிய பல ரகசியங்கள் இப்போதுதான் தெரிகிறது. படப்பிடிப்பு தளத்திற்கு சென்று நடிக்காமல் பல வேலைகளையும் பார்த்திருக்கிறார். சூர்யா- ஜோதிகா காதலுக்கு உதவி இருக்கிறார்.
சூர்யா- விஜய் இருவரும் முதலில் ‘நேருக்கு நேர்’ படத்தில் நடித்தார்கள். அதில் இருவரும் எதிரும் புதிருமாக இருப்பார்கள். இந்தப் படத்தில் இணைபிரியாத நண்பர்கள். இந்தப் படத்தை நான் கல்லூரியில் படிக்கும் போது பார்த்தேன்.
விஜய் நடித்த ‘காதலுக்கு மரியாதை’, ‘துள்ளாத மனமும் துள்ளும்’, சூர்யா நடித்த ‘நந்தா’ என எந்த படத்தை பற்றி பேசினாலும்.. அப்படத்தின் கதை நினைவுக்கு வரும். ஆனால் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை பற்றி பேசும்போது அதன் கதை நினைவுக்கு வராது. அதில் இடம்பெற்ற காமெடி காட்சிகள் தான் நினைவுக்கு வரும்.
என்னை பொருத்தவரை சித்திக் மிகப்பெரும் இயக்குநர். ஆக்ஷன் படத்தை இயக்கலாம், லவ் சப்ஜெக்ட்டை இயக்கலாம், சென்டிமென்ட் படத்தை எடுத்து, மக்களை அழ வைத்துவிடலாம், ஆனால் காமெடி படத்தை இயக்குவது என்பது கடினம். ஏனெனில் காமெடி படத்திற்கு டைமிங் ரொம்ப முக்கியம். ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் காமெடி காட்சிகளில் ஐந்து, ஆறு நடிகர்கள் இருப்பார்கள். அனைவரும் டைமிங் உடன் நடித்து ரசிகர்களை சிரிக்க வைப்பார்கள்.
இந்தப் படத்தில் யார் ஹீரோ என்று தெரியாது. விஜயா, சூர்யாவா, வடிவேலா, ரமேஷ் கண்ணாவா என தெரியாது. இவர்கள் எல்லாரும் ஒவ்வொரு காட்சியிலும் தங்களது திறமையை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
மலையாள இயக்குநர்கள் மிகவும் நேர்த்தியானவர்கள். திரைக்கதையில் என்ன இருக்கிறதோ அதை மட்டுமே படமாக்குவார்கள். நான் மலையாள திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.
இந்தப் படத்திற்குப் பிறகு நேசமணி என்பது ட்ரெண்ட் ஆகிவிட்டது.
நான் ‘திருப்பாச்சி’ படத்தில் பணியாற்றும்போது விஜய் மிகப்பெரிய ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து விட்டார். அந்தப் படத்தின் கதையை அவரிடம் சொல்லும்போது ஆடு வெட்டும் காட்சியில் பெஞ்சமினை வைத்து தான் கதை சொன்னேன். ஏனெனில் அவர் காமெடியன். அதனால் காட்சியை அப்படி உருவாக்கினேன். படப்பிடிப்புக்கு செல்லும் முன் மீண்டும் விஜயிடம் படத்தின் கதையை முழுவதுமாக சொன்னேன். அப்போது அவர் தயக்கத்துடன் அந்த ஆடு வெட்டும் காட்சியில் நான் நடித்தால் நன்றாக இருக்குமா எனக் கேட்டார். அந்தக் காட்சியில் அவரை நடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்கனவே இருந்தது. ஆனால் அவர் ஆக்ஷன் ஹீரோவாக மாறிவிட்டதால் அந்த காட்சி அவருக்கு பொருத்தமானதாக இருக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அவர் கேட்டவுடன் ‘ஓகே சார் நீங்கள் நடிக்கலாம்’ என்று சொல்லிவிட்டேன். விஜய் இன்று மிகப்பெரிய கமர்ஷியல் ஹீரோவாக முன்னேறி விட்டாலும் அவருக்குள் ஒரு அற்புதமான காமெடி சென்ஸ் இருக்கிறது. என்னுடைய ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’ ஆகிய இரண்டு படங்களிலும் முதல் பாதி காமெடியாக தான் இருக்கும்.
ஒரு நடிகருக்கு காமெடி சென்ஸ் இருந்தால் அவர் மிகப்பெரிய ஹீரோவாக வளர்ந்து விடுவார். அப்போதுதான் நீண்ட காலத்திற்கு திரை உலகில் நட்சத்திரமாக வளர முடியும். சூர்யாவும் ‘பிதாமகன்’ படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார்.
தற்போதுள்ள சூழலில் புதிய படங்களை வெளியிடுவதில் சவால்கள் உள்ளது. இந்நிலையில் ஒரு படத்தை ரீ ரிலிஸ் செய்வது மிகப்பெரிய விஷயம். ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அதற்கான தகுதி இருக்க வேண்டும். அதற்கான தகுதி இந்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்திற்கு இருக்கிறது. தினமும் வெளியாகும் குண்டு வெடிப்பு, வன்முறை, உயிர் பலி போன்ற செய்திகளால் மக்கள் மனதளவில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய ரிலீஃபாக இந்த ‘ப்ரண்ட்ஸ்’ படம் அமையும். அதனால் இந்தப் படம் வெளியாகும் போது எந்த அளவிற்கு வெற்றியை பெற்றதோ, அதே அளவிற்கு இந்த படம் மீண்டும் வெளியாகும் போதும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.
“சர்வம் மாயா” புதிய போஸ்டர் வெளியானது !! கிறிஸ்துமஸ் 2025 பிரம்மாண்ட வெளியீடு !
நடிகர் நிவின் பாலி நடித்துள்ள “சர்வம் மாயா” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகில் சத்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், 2025 டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இன்று வெளியீட்டுத் தேதி அறிவிப்புடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம், படத்தின் வித்தியாசமான உலகை அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.
“சர்வம் மாயா” போஸ்டர் இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மூவரின் சுவாரஸ்யமான முகபாவனைகள், அனைத்து தரப்பினரையும் கவரும் நகைச்சுவை கலாட்டாவாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. காமெடி டிராமா வகை படங்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார் என்பதையும் இந்த போஸ்டர் உணர்த்துகிறது.
அட்டகாசமான காமெடியுடன், கொண்டாட்ட உணர்வை பதிவு செய்யும் இந்த படம், இந்த ஆண்டின் சிறந்த விடுமுறை கொண்டாட்ட படமாக இருக்கும். மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காடின் மகனான அகில் சத்யன் இயக்கத்தில், ஃபயர்ஃப்ளை ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “சர்வம் மாயா”, 2025-ன் மிகப்பெரிய பண்டிகை வெளியீடுகளில் ஒன்றாக உருவாகி வருகிறது.
மகத்தான மகாராணியின் புதிய அத்தியாயம் துவங்கியது ! நந்தமூரி பாலகிருஷ்ணா –கோபிசந்த் மலினேனி – வெங்கட சதீஷ் கிலாரு – விருத்தி சினிமாஸ் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!
நந்தமூரி பாலகிருஷ்ணாவின் #NBK111 படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளார் !!
அதிரடியான தொடர் ப்ளாக்பஸ்டர் வெற்றிகளால் ரசிகர்களின் பேராதரவைப் பெற்ற காட் ஆஃப் த மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா, தற்போது மீண்டும் ப்ளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனியுடன் கைகோர்க்கிறார். வீரசிம்ஹாரெட்டி பட வெற்றிக்குப் பிறகு, இவர்களின் கூட்டணியில் மீண்டும் ஒரு புதிய படமான, #NBK111 வரலாற்றுச் பின்னணியில் மாபெரும் படைப்பாக உருவாகிறது. இந்த படத்தை, பான்–இந்திய அளவிலான “பெத்தி” எனும் படத்தை தயாரித்து வரும் வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ் சார்பில் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரிக்கிறார்.
இப்போது படம் ஒரு புதிய அத்தியாயத்துக்குள் நுழைந்துள்ளது — மகத்தான, வலிமையான ராணியின் அத்தியாயம் துவங்கியுள்ளது.
அழகும், கம்பீரமும் கலந்த நயன்தாரா, இந்த மாபெரும் வரலாற்றுப் படத்தில் பாலகிருஷ்ணாவின் ஜோடியாக, கதாநாயகியாக இணைந்துள்ளார். படத்தின் கதையில் முக்கியத்துவமிக்க, சக்திவாய்ந்த கதாபாத்திரத்தை அவர் ஏற்கிறார். சிம்ஹா, ஜெய் சிம்ஹ , ஸ்ரீ ராம ராஜ்யம் ஆகிய மூன்று படங்களுக்கு பிறகு, பாலகிருஷ்ணா–நயன்தாரா ஜோடி நான்காவது முறையாக இணைவதால், ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த அறிவிப்பு நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டது.
அறிவிப்பு வீடியோவே பிரமிப்பை தருவதாக கண்களை கவரும் காட்சி அமைப்புடன்,படத்தின் பெருமையை உணர்த்துகிறது.
இப்பபடம் பற்றிய மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஈடுசெய்யும் வகையில், குதிரையில் வரலாற்று ராணியாக நயன்தாராவை அறிமுகப்படுத்தி, இயக்குநர் கோபிச்சந்து மலினேனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
முதல் முறையாக வரலாற்று படத்தில் களம் இறங்கும் இயக்குநர் கோபிசந்த் மலினேனி, தன் மாஸ் ஸ்டைலை இந்த பிரம்மாண்ட படைப்பிலும் வழங்கவுள்ளார். பெரும்பாலும் கமர்ஷியல் ப்ளாக்பஸ்டர்கள் வழங்கும் இவர், இம்முறை பாலகிருஷ்ணாவை இதுவரை காணாத புதிய கதாப்பாத்திரத்தில் வடிவமைக்கிறார். வரலாற்று பின்னணியில் எமோசனும் ஆக்சனும் கலந்த மிகப்பெரும் அனுபவத்தை, பிரம்மாண்ட காட்சிகளுடன் வழங்கப் போகிறது இந்த படம்.
படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும்.
நடிகர்கள்: நந்தமூரி பாலகிருஷ்ணா நயன்தாரா
தொழில்நுட்ப கலைஞர்கள்:
எழுத்து, இயக்கம்: கோபிசந்த் மலினேனி தயாரிப்பு: வெங்கட சதீஷ் கிலாரு வழங்குபவர்: விருத்தி சினிமாஸ் மக்கள் தொடர்பு – யுவராஜ்
மலை வாழ்வு கிராமத்தில் வாழும் நாயகன் மதி, சிறு வயதில் வழி தவறி பள்ளத்தில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றுகிறார். அதில் இருந்து அந்த குட்டி யானை மதியை .சுற்றி சுற்றி வருகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி, யானையின் பாசத்திற்கு அடிமையாகி அதை வளர்க்கிறார்.
யானையும், மதியும் வளர்ந்து சகோதரர்களைப் போல் எப்போதும் ஒன்றாகவே இருக்க, ஒருநாள் திடீரென்று யானை மாயமாகி விடுகிறது. யானையை தேடி அலையும் மதி ஒரு கட்டத்தில் அதன் நினைவில் தன்நிலை மறந்தவராக வலம் வருகிறார். இதற்கிடையே ஆசிரியரின் அறிவுரையால் கல்லூரி படிப்புக்காக தன் ஊரை விட்டு செல்லும் மதி, 5
வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார்.அப்போது மாயமான யானை பற்றிய தகவல் ஒன்று அவருக்கு கிடைக்கிறது. அந்த தகவலை வைத்து யானையை தேடி செல்லும் மதிக்கு
அவரது யானை கிடைத்ததா ?என்பது தான் “கும்கி ” – 2’.
அறிமுக நடிகர் மதி யானையை இழந்துவிட்டு தவிப்பது, யானையை ஆபத்தில் இருந்து காப்பாற்ற துடிப்பது, உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.
சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் ஷ்ரிதா ராவ், நாயகனின்
நண்பராக நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். பிரபு சாலமன், எழுதியிருக்கும் திரைக்கதை சற்று சுவாரஸ்யமாக இருந்தாலும், காட்சிகளில்…………….
காட் ஆஃப் மாஸஸ் நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக்பஸ்டர் மேக்கர் போயபாடி ஶ்ரீனு நான்காவது முறையாக இணைய, மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள பிரம்மாண்டமான பக்தி-ஆக்ஷன் திரைப்படம் “அகண்டா 2: தாண்டவம்”. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தை 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா , ஆகியோர் தயாரிக்க, M. தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார். எஸ்.தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் ‘தி தாண்டவம்’ ப்ரோமோவுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது.நேற்று முழு பாடலும் மும்பை ஜூஹுவிலுள்ள PVR மாலில் நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் வெளியிடப்பட்டது.
இசையமைப்பாளர் எஸ். தமன், நந்தமூரி பாலகிருஷ்ணாவிற்கு பிரத்தியேகமான அதிரடி மாஸ் பி.ஜி.எம் கள் வழங்குவதில் புகழ்பெற்றவர், இப்போது மீண்டும் வலிமையான பக்தி மணக்கும் அதிரடிப் பாடலைத் தந்துள்ளார். ஆரண்ய அகோரா அவதாரத்தில் பாலகிருஷ்ணா, பெரிய கோவில் அரங்கில் அகோரர்களின் ஓம் உச்சரிப்புகளின் நடுவே தெய்வீகமான சிவ தாண்டவத்தை ஆடும் காட்சிகள் – தமன் அமைத்த அதிரடி தாளங்களுடன் இணைந்து ஒரு ஆழ்ந்த ஆன்மிக அனுபவத்தை உருவாக்குகின்றன.
கல்யாண் சக்ரவர்த்தி சிவ பெருமானின் பிரபஞ்ச ஆற்றலை வார்த்தைகளால் உயிர்ப்பிக்க, பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் மற்றும் கைலாஷ் கேர் ஆகியோரின் அற்புதமான குரலில் பாடலை பாடியுள்ளார். பாடல் முழுவதும் சிலிர்க்க வைக்கும் தருணங்களால் நிறைந்துள்ளது, இந்த ஆண்டின் மிக வலுவான பக்திப்பாடலாக இப்பாடல் இருக்கும்.
படத்தில் சம்யுக்தா நாயகியாக நடிக்க, ஆதி பினிசெட்டி வலிமையான எதிர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், ஹர்ஷாலி மால்ஹோத்ரா முக்கியமான வேடத்தில் தோன்றுகிறார்.
ஒளிப்பதிவு பணிகளை – C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே செய்துள்ளனர். எடிட்டிங் பணிகளை தம்மிராஜு மற்றும் கலை இயக்கத்தை A. S. பிரகாஷ் செய்துள்ளனர்.
பாலகிருஷ்ணாவின் அதிரடி தோற்றம், போயபட்டி ஸ்ரீனுவின் மாஸ் பிரசன்டேஷன் தமனின் அட்டாசமான இசை என பலத்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகும் “அகண்டா 2: தாண்டவம்”, ரசிகர்கள் கொண்டாடும் ஆன்மிக அதிரடி மாஸ் அனுபவமாக இருக்கும்
இந்த படம் டிசம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
எழுத்து, இயக்கம் : போயபாடி ஶ்ரீனு தயாரிப்பாளர்கள் : ராம் ஆசம்டா , கோபிசந்த் ஆசம்டா பேனர் : 14 ரீல்ஸ் ப்ளஸ் வழங்குபவர் : M. தேஜஸ்வினி நந்தமூரி இசை : S. தமன் ஒளிப்பதிவு : C. ராம்பிரசாத், சந்தோஷ் D டெடாகே எக்ஸிக்யூட்டிவ் புரடியூசர் : கோடி பருச்சுரி கலை : A.S. பிரகாஷ் எடிட்டிங் : தம்மிராஜு சண்டை அமைப்பு : ராம் – லக்ஷ்மன் மக்கள் தொடர்பு : யுவராஜ் மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ
Behindwoods புரொடக்ஷன்ஸின் பிரம்மாண்டமாக தயாரிக்கும், ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா மீண்டும் இணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை கைபற்றிய லஹரி மியூசிக்
Behindwoods புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 29 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒன்றிணையும் ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை தென்னிந்தியாவின் சிறந்த மற்றும் வரலாற்று புகழ் பெற்ற இசை நிறுவனமான ‘லஹரி மியூசிக்’ அதிகாரப்பூர்வமாக பெற்றுள்ளது.
Behindwoods Founder & CEO மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் இயக்கும் மூன்வாக், இசை, நடனம் மற்றும் குடும்ப பொழுதுபோக்கின் கொண்டாட்டமாக உருவாகி வருகிறது. ஆஸ்கர் விருது பெற்ற இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் இதயத்தை வருடும் இசையுடன் வெளியாகும் இந்தப் படம், ரசிகர்கள் மற்றும் திரைத் துறையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்த இணைப்பைப் பற்றி பேசும் போது, லஹரி மியூசிக் நிறுவனர் திரு. மனோஹரன் நாயுடு கூறுகையில்: “இது எங்களின் 50வது ஆண்டு; ‘மூன்வாக்’ படத்தின் இசை உரிமையை பெற்று இப்படத்துடன் இணைவது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி. மூன்வாக் படத்தின் பாடல்கள் உண்மையாகவே அந்தப்படத்தின் இதயத் துடிப்பு என்று கூறினால் அது மிகையாகாது. ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கிய இந்த அசாதாரணமான பாடல்கள் உலகின் எல்லா மூலையிலும் தகுந்த தரத்துடன் சேரும் என்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
நான் இப்படத்தின் 5 பாடல்களையும் கேட்டுள்ளேன், அவை அனைத்தும் தனித்தன்மை கொண்டவை மற்றும் வித்தியாசமானவை. மனோஜ் NS அவர்களின் நேர்மையான முயற்சி மற்றும் கடின உழைப்பைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இது ஒரு சிறந்த Blockbuster Album ஆகும் என நான் உறுதியாக நம்புகிறேன்.”
Behindwoods Founder & CEO மற்றும் இப்படத்தின் இயக்குனர் திரு. மனோஜ் நிர்மலா ஸ்ரீதரன் கூறுகையில்: “தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய மற்றும் கொண்டாடப்படும் இசை நிறுவனங்களில் ஒன்றான லஹரி மியூசிக், ஏ.ஆர். ரஹ்மான் அவர்களின் முதல் ஆல்பமான ரோஜா-வை வெளியிட்ட பெருமை பெற்றது. அந்த படம் இந்திய இசை உலகில் ஒரு பெரிய மைல்கல்லாக அமைந்தது. பிரபுதேவா அவர்கள் நடித்த படங்களிலும் லஹரி மியூசிக் பல பிரபலமான ஆல்பங்களில் இணைந்து பணியாற்றியுள்ளது.
தென்னிந்திய படங்களுக்கான லஹரியின் சக்திவாய்ந்த Distribution Network மற்றும் இசை விளம்பரத்தில் உள்ள ஆழமான அனுபவம் ‘மூன்வாக்’ படத்திற்கு மிகப்பெரிய வலிமையாக இருக்கும். Behindwoods மற்றும் லஹரி மியூசிக் இணைப்பு, இந்தப் படத்தின் இசையை பல மொழிகளிலும் பல்வேறு தளங்களிலும் அதிகப்படுத்தும். லஹரி மியூசிக் முன்பு ஜென்டில்மேன் மற்றும் காதலன் (தெலுங்கு பதிப்பு ப்ரேமிகுடு) போன்ற மைல்கல் ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளது. இவ்விருவரும் இணையும் இது மூன்றாவது மிகப்பெரிய முயற்சி”.
மூன்வாக் படத்தில் பிரபுதேவா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அஷோகன், சதிஷ், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், லொல்லு சபா சுவாமிநாதன், டாக்டர் சந்தோஷ் ஜேக்கப், தீபா சங்கர் மற்றும் ராம்குமார் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு தரமான குடும்ப பொழுதுபோக்காக உருவாகும் மூன்வாக், உலக தர நடன அமைப்புகள், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகளை அழகாக இணைத்து, இந்திய அளவில் இசை, நடனம் மற்றும் காமெடியின் கொண்டாட்டமாக உருவாகி வருகிறது.
தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதி கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. ‘மூன்வாக்’ படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு, 2026ஆம் ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வுகளில் ஒன்றாக இருக்கும்.
Storm – The Moonwalk’s Anthem, ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இணைந்து நடித்திருக்கும் முதல் பாடல் வீடியோ தமிழ் ராப் இசைகலைஞர் அறிவு பாடிய ராப்புடன் வரும் நவம்பர் 19, புதன்கிழமை அன்று, லஹரி மியூசிக் மற்றும் Behindwoods டிவி யூடியூப் சேனல்களில் மட்டும் பிரத்யேகமாக வெளியிடப்படுகிறது. இது ரசிகர்களுக்கு மறக்க முடியாத பழைய நினைவுகளைத் தூண்டும் உற்சாகத்தை வழங்கும்.
மொட்டை ராஜேந்திரன் நடிப்பில் வெளியான ராபின்ஹுட் பட டிரெய்லரை, பாராட்டிய இயக்குநர் ஹெச் வினோத் !!
1980 களில் பின்னணியில் உருவாகியுள்ள காமெடி திரைப்படம் “ராபின்ஹுட்” பட டிரெய்லர் வெளியானது !!
LUMIERES STUDIOS நிறுவனம் சார்பில், ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன் இயக்கத்தில், முதல் முறையாக நடிகர் மொட்டை ராஜேந்திரன் நாயகனாக நடிக்க, 1980 களின் கிராமப்புற பின்னணியில், கலக்கலான காமெடி திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “ராபின்ஹீட்”.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் H வினோத் இப்பட டிரெய்லரை வெளியிட்டு, படக்குழுவை பாராட்டியுள்ளார்.
படத்தின் டிரெய்லரைப் பார்த்த இயக்குநர் H.வினோத் , படத்தின் பின்னணி, விஷுவல்கள் பிரம்மாதமாக உள்ளது. காமெடி அருமையாக உள்ளது. இசை படத்திற்கு பொருத்தமாக அமைந்துள்ளது. டிரெய்லர் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் எனத் தெரிவித்துள்ளார்.
1980 களில், கிராமத்தில் ஒரு லாட்டரி சீட்டில் பெரிய பரிசு விழ, அந்த பரிசுக்காக இருவருக்கு இடையே நிகழும் போட்டியும், பிரச்சனைகளும் தான் இப்படத்தின் மையம்.
நாம் மறந்து போன லாட்டரி சீட்டு காலத்தை, கிராமப்புற பின்னணியில் மீட்டெடுத்து , கலகலப்பான திரைக்கதையுடன் அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் கார்த்திக் பழனியப்பன்.
இன்று வெளியாகியிருக்கும் டிரெய்லர், 1980 களின் காலகட்டத்தை திரையில் பார்க்கும் குதூகலத்தை தருவதோடு, வயிறு வலிக்க சிரிக்க வைக்கும், ஒரு கலக்கலான எண்டர்டெயினராக இப்படம் இருக்கும் என்பதை, உறுதி செய்கிறது.
இப்படத்தில் நடிகர் மொட்டை ராஜேந்திரன் முதன்முறையாக நாயகனாக களமிறங்கியுள்ளார். எதிர் பாத்திரத்தில் மறைந்த RNR மனோகர் நடித்துள்ளார். இவர்களுடன் KPY சதீஷ், அம்மு அபிராமி, சங்கிலி முருகன், முல்லை மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு அருப்புகோட்டை, காரியாபட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.
விரைவில் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
தொழில் நுட்பக் குழு தயாரிப்பு : LUMIERES STUDIOS இயக்கம் : கார்த்திக் பழனியப்பன் தயாரிப்பு : ஜூட் மீனே, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா இணை தயாரிப்பாளர் : நவாஸ் இசை : ஸ்ரீநாத் விஜய் ஒளிப்பதிவு : இக்பால் அஸ்மி எடிட்டிங் : ஜோமின் கலை இயக்கம் : கே.எஸ். வேணுகோபால் டயலாக் : ஜோதிஅருணாசலம் தயாரிப்பு மேற்பார்வை : A.C. சார்ல்ஸ் தயாரிப்பு நிர்வாகி : ஆனந்த் ராஜ் பாடல் வரிகள் : கபிலன் நடன அமைப்பு : நந்தா ஸ்டண்ட் : டேஞ்சர் மணி சவுண்ட் மிக்சிங் : A.M. ரஹமத்துல்லா எஸ்.எஃப்.எக்ஸ் : அருண் சீனு இரண்டாம் யூனிட் இயக்குநர் : சக்கி அசோக் இணை இயக்குநர்கள் : ராம் கோவிந்த், சிவபாலன் புரமோஷன் டிசைன்ஸ் : செல்லா (ஹாப்பி டேல்ஸ்) டிரெய்லர் கட் : சரவணன் எடயக்ஞானம் மக்கள் தொடர்பு – சதீஷ் AIM
ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லராக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீயவர் குலை நடுங்க’.
இப்படம் வரும் நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படக்குழு பத்திரிக்கை, ஊடக மற்றும் பண்பலை நண்பர்களை சந்தித்து, படம் குறித்தான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் ஜி அருள்குமார் பேசியதாவது..,
மிக மகிழ்ச்சியாக இருக்கிறது இறைவனை வேண்டிக்கொண்டிருந்தேன், இந்த விழா எப்படி நடக்கும் என நினைத்தேன், எல்லாம் ஒன்றாக இணைந்து இன்று விழா நடப்பது மகிழ்ச்சி. இப்படத்தில் எனக்கு ஒப்புதல் தந்து உழைத்த அனைவருக்கும் நன்றி. நான் பூ வித்து வளர்ந்தவன், நான் அர்ஜுன் சாரின் ஜெண்டில்மேன் படம் பார்த்துள்ளேன். அவரின் ரசிகன் இன்று அவரை வைத்துப் படமெடுத்துள்ளேன் என்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. எனக்குத் தேதி தந்து படத்தில் நடித்த ஐஸ்வர்யா மேடம், அபிராமி மற்ற நடிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. அண்ணன் லோகு எனக்கு நிறைய உதவிகள் செய்தார். படத்தை வெளியிட உதவிய தேவராஜ் அண்ணாவுக்கு நன்றி. எல்லோருக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு பேசியதாவது..,
ஒரு படத்தின் டிரெய்லர் எவ்வளவு முக்கியம் என எல்லோருக்கும் தெரியும். படம் மிக நன்றாக வந்துள்ளது. அர்ஜூன் , ஐஸ்வர்யா மேடம் நிறைய சப்போர்ட் செய்தார்கள். படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.
நடிகர் லோகு பேசியதாவது..,
ஒரு பெரிய படத்தில், இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளம் உள்ள படத்தில், எனக்கு வாய்ப்பு தந்த இயக்குநர் தினேஷுக்கு என் நன்றிகள். தயாரிப்பாளர் அருள்குமார் பட்ட கஷ்டத்தை நான் நேரில் பார்த்துள்ளேன், அவர் குழந்தை மனதுக்காரர், அவர் மனதுக்கு இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
இசையமைப்பாளர் பரத் ஆசிவகன் பேசியதாவது..,
தினேஷ் அண்ணனை பல வருடங்களாகத் தெரியும். நான் அஸிஸ்டெண்டாக வேலை பார்த்து வந்தேன். நிறையப் படத்தில் வேலை பார்த்தாலும் கிரடிட் கிடைக்காது. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு தினேஷ் அண்ணனுக்கு நன்றி. தயாரிப்பாளர் அருள்குமார் சாருக்கு நன்றி. நான் நன்றாக வேலை பார்த்துள்ளேன் என நம்புகிறேன். அர்ஜூன் சார் படம் பார்த்து வளர்ந்தவன் நான் அவர் படத்திற்கு வேலை பார்த்தது மகிழ்ச்சி. படத்தில் நாலு பாடல்கள், எல்லாம் நன்றாக வந்துள்ளது. நேற்று அர்ஜூன் சாருக்காக ஒரு பாடல் செய்தோம், கெனிஷா பாடித்தந்தார். பாடல் அனைவருக்கும் பிடிக்கும், படம் நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.
தயாரிப்பாளர் பி எல் தேனப்பன் பேசியதாவது..,
இயக்குநர் தினேஷ் மிகக் கடின உழைப்பாளி. அவருக்கு இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் பூ வியாபாரி என்றார்கள். அவர் பெரிய வெற்றி பெற்று கோயம்பேட்டில் கடை போட வாழ்த்துக்கள். அர்ஜூன் சார் படம் பார்த்ததாக சொன்னார்கள். நான் சின்ன வயதில் சங்கர் குரு பார்த்தேன் இன்றும் அப்படியே இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு படம் ஒத்துக்கொள்வது கடினம். இருவரும் சேர்ந்துள்ள இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பிராங்ஸ்டர் ராகுல் பேசியதாவது..,
தினேஷ் அண்ணன் எவ்வளவு கஷ்டப்பட்டார் என எனக்குத் தெரியும். இந்தப்படத்தில் ஒரு காமெடி கேரக்டர் செய்துள்ளேன், வாய்ப்பு தந்ததற்கு நன்றி. அர்ஜூன் சாருடன் நடித்தது மிகப்பெரிய மகிழ்ச்சி. அனைவருக்கும் நன்றி. நான் ஒரு படம் இயக்கி வருகிறேன் அதற்கும் ஆதரவு தாருங்கள், இப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி
நடிகை அபிராமி பேசியதாவது..,
இயக்குநர் தயாரிப்பாளர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி. ஐஸ்வர்யா எப்போதும் மிக இனிமையானவர். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. அர்ஜூன் சாரை எப்போது பார்த்தாலும் ஸ்டைலாக இருக்கிறார். அவர் படத்தில் இருப்பது மகிழ்ச்சி. நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன். குழந்தைகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வை இப்படம் தரும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
நடிகர் தங்கதுரை பேசியதாவது..,
இயக்குநர் தினேஷ் இப்படத்திற்காகக் கடுமையாக உழைத்துள்ளார். இப்படத்தில் எனக்கே தெரியாத பல லோகேஷன்களை சென்னையில் காட்டினார். எனக்கு நல்ல ரோல் தந்துள்ளார். அர்ஜூன் சாரின் தீவிர ரசிகன். சின்ன வயதில் அவரை நானும், என் நண்பர்களும் போலீஸ் எனத்தான் நினைத்தோம். அவர் படம் பார்த்தால் நாட்டுப்பற்று வரும். அவருடன் நான் நடித்தது எனக்கு பெருமை. ஐஸ்வர்யா ஒரு வெர்சடைல் ஆக்டர் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடன் நடித்தது மகிழ்ச்சி. இப்படம் மிக நன்றாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை பிரியதர்ஷிணி பேசியதாவது..,
தீயவர்கள் குலை நடுங்க இந்தப்படத்திற்காக நான் நீண்ட காலம் காத்திருந்தேன், தயாரிப்பாளர் பேசியது மிக உணர்வுப்பூர்வமாக இருந்தது. நான் ஒரு அம்மாவாக நடித்துள்ளேன் மிக நல்ல ரோல். படத்தில் நடித்தது மிக நல்ல அனுபவமாக இருந்தது. அர்ஜூன் சார் எல்லோருக்கும் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஐஸ்வர்யா மேடம் நேச்சுரல் ஆக்டர் அவர்களுடன் நடித்தது மகிழ்ச்சி. சமூகத்திற்கு முக்கியமான கருத்தைச் சொல்லும் படம். அனைவரும் இப்படம் பிடிக்கும் நன்றி.
பிரவீன் ராஜா பேசியதாவது..,
சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்திருந்தேன். அதைப்பார்த்த என் நண்பர் மூலம் இப்பட வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் ஓகே சொன்ன பிறகு தான் அர்ஜூன் சார் ஐஸ்வர்யா மேடமுடன் நடிக்கப் போகிறேன் எனத் தெரிந்தது. உண்மையில் கொஞ்சம் பயமாக இருந்தது. ஆனால் உடன் நடித்த போது இருவரும் அவ்வளவு ஆதரவாக இருந்தார்கள். படம் மிக நன்றாக வந்துள்ளது. 4 மொழிகளில் படம் வருகிறது அனைவரும் ஆதரவு தாருங்கள்.
எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது..,
தமிழில் வரவர எல்லாம் ஆங்கிலத்தில் தலைப்பு வைக்கும் போது, தமிழ் தலைப்பு வைத்துள்ள இந்த குழுவிற்கு நன்றி. தயாரிப்பாளரைப் பார்க்க மிக மகிழ்ச்சியாக உள்ளது. இம்மாதிரி தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் வர வேண்டும். அர்ஜூன் சாரை திரையில் பார்க்கப் பொறாமையாக உள்ளது. உடலை அவ்வளவு கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் மிக நல்ல நடிகை. இசையமைப்பாளர் மிக அற்புதமான பாடல்களைத் தந்துள்ளார். இந்தப்படம் வெற்றி பெற எல்லா அம்சங்களும் படத்தில் உள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் பேசியதாவது..,
அறிமுக இயக்குநர் தினேஷுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளருக்கு நன்றி. அர்ஜூன் சாரின் மிகப்பெரிய ரசிகன், தமிழ் நாட்டிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினியாக இருக்கலாம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய ஸ்டார் அர்ஜூன் சார் தான். அட்டகத்தி படத்திலிருந்து ஐஸ்வர்யா மேடம் வளர்ச்சியைப் பார்த்து வருகிறேன். இன்று சோலோ ஹீரோயினாக வளர்ந்துள்ளதற்கு அவரின் நம்பிக்கையும் உழைப்பும் தான் காரணம். அவர் ஒரு படத்தை ஓகே செய்தால் அந்தப்படம் வெற்றி எனலாம். சரியானதை மட்டுமே செய்யும் இருவர் இப்படத்தில் இருக்கிறார்கள். படம் கண்டிப்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் தயாரிப்பாளர் சங்கத்தில் பெரிய ஹீரோக்கள் படத்தில் வெற்றி தோல்வியில் பங்கு கொள்ள வேண்டும் என தீர்மானம் போட்டுள்ளார்கள் அதை நான் வரவேற்கிறேன். தமிழ் திரையுலகில் நிறையப் பிரச்சனைகளைச் சரி செய்ய வேண்டியுள்ளது. புது தயாரிப்பாளர்கள் பலர் திணறுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதற்குத் தீர்வு காண வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
வேலூர் திரையரங்கு உரிமையாளர் வி எம் தேவராஜ் பேசியதாவது..,
நான் படம் பார்த்துவிட்டேன் அர்ஜூன் சார் மிக அற்புதமாக நடித்துள்ளார். படம் அருமையாக வந்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் ஆதரவு தர வேண்டும். சக்ஸஸ் மீட்டில் இன்னும் அதிகம் பேசுகிறேன். தயாரிப்பாளருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரும் நன்றி.
தவெக கொள்கை பரப்பு செயலாளர் ராஜ் மோகன் பேசியதாவது..,
சினிமாவில் கனவுகளோடு அலைபவர் தான் தம்பி தினேஷ். அவர் சொன்ன கதையை நம்பி அவருக்கு வாய்ப்பு தந்த அர்ஜூன் சாருக்கு நன்றி. நடிகைக்கென போடப்பட்ட வட்டத்திற்குள் சிக்காத ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் இப்படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் குழந்தை நட்சத்திரம் மிக அற்புதமாக நடித்துள்ளார். வீடும் நாடும் நன்றாக இருக்க வேண்டுமானால் குழந்தைகள் நலமாக இருக்க வேண்டும் என ஒரு கருத்தைச் செய் நேர்த்தியுடன் செய்துள்ள தினேஷுக்கு வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்.
விசிக கட்சி துணை பொதுச் செயலாளர் திரு வன்னியரசு பேசியதாவது..,
தினேஷ் இலெட்சுமணனுக்கு என் வாழ்த்துக்கள். இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். கலைஞர் தமிழில் தலைப்பு வைத்தால் வரிவிலக்கு என அறிவித்தார். இப்போது அவரது மகன் ஆட்சியில் இருக்கிறார். இன்று அருமையான தமிழில் தலைப்பு வைத்துள்ள, நல்ல கருத்தைச் சொல்லும் இம்மாதிரி படங்களுக்கு வரிவிலக்கு தர வேண்டுமென முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன். குற்றவாளிகள் எப்படி எளிதாக தப்பிக்கிறார்கள், அரசும் அதிகார வர்க்கம் எப்படி துணை போகிறது என்பதை இப்படம் பேசுகிறது. இதில் உண்மையான நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறப்பான ஆக்சன் நாயகியாக நடித்துள்ளார். ஆக்சன் கிங் அர்ஜூனை பக்கத்தில் வைத்து அவர் ஆக்சனில் நடித்திருப்பது சிறப்பு. ஆக்சன் கிங் அர்ஜூன், இப்படத்திற்கு முழு ஆதரவு தரும் அவரது பண்புக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்து இப்படக்குழு மிகப்பெரிய படங்கள் செய்து ஜெயிக்க வாழ்த்துக்கள்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது..,
மீடியா நண்பர்களுக்கு என் முதல் நன்றி. எங்களை வாழ்த்த வந்த அனைத்து பெரியவர்களுக்கும் நன்றி. இப்படம் ஒரு உண்மையான சம்பவம், இயக்குநர் சொன்ன போது எனக்கு உடல் நடுங்கி விட்டது. உண்மையான கதையைச் சொல்லும் போது மக்கள் நெருக்கமாக உணர்வார்கள். அவர்களுக்குப் பெரிய விழிப்புணர்வை அது தரும். கமர்ஷியல் சினிமா உலகில் இப்படி உண்மைக் கதையை சொல்ல முயற்சித்த தினேஷுக்கு நன்றி. அர்ஜூன் சார் ரியல் லைஃபில் உண்மையாகவே ஜெண்டில்மேன். அவர் மேஜிக்கை நேரில் பார்த்தது நல்ல அனுபவம். நான் நன்றாக ஃபைட் செய்ய அவர் தான் காரணம். அவர் தான் இந்தப்படத்தில் ஹீரோ. உங்கள் எல்லோருக்கும் படம் பிடிக்கும். இப்படம் திரைக்கு வரும் போது, அனைவரும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் பேசியதாவது..,
என் 15 வருட ஏக்கம் தான் இந்தப்படம். என்னவாக வந்தோம், என்னவாக இருக்கிறோம் என்னவாக போகிறோம் என்பது முக்கியம், என என்னை இந்த இடத்திற்கு அழைத்து வந்த அனைவருக்கும் நன்றி. என் அப்பா அம்மாவிற்கு நன்றி. என் அப்பா தான் சினிமா ஆசையை என்னுள் தூண்டியவர். தயாரிப்பாளர் அருள்குமார் அவருக்கு ஊரில் அவ்வளவு மரியாதை, அவர் ரெண்டு படம் சரியாகப் போகவில்லை. ஆனால் அவர் உனக்கு ஒரு படம் தருகிறேன் என்றார். எனக்கு அவர் மேல் இருந்த நம்பிக்கையை விட அவர் என் மேல் வைத்த நம்பிக்கை அதிகம். என்னிடம் எந்த கேள்வியும் கேட்க மாட்டார். அவர் நம்பிக்கைக்கு நன்றி. டெக்னீஷியன்ஸ் எல்லோரும் எனக்கு முழு ஒத்துழைப்பு தந்தார்கள். இப்படம் பார்க்கும் போது இசையமைப்பாளரின் திறமை உங்களுக்குப் புரியும். எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் முழு உழைப்பைத் தந்தார். எழுத்தாளர் நவனீத்திற்கு நன்றி. அர்ஜூன் சார் ஷீட்டிங்கில் நிறைய கரக்சன் சொல்வார், அப்போது நிறைய விவாதிப்போம். அதெல்லாம் படம் முடிந்து பார்க்கும் போது தான் அவரின் எக்ஸ்பீரியன்ஸ் எனக்குப் புரிந்தது. அவ்வளவு ஆதரவாக இருந்தார். ஐஸ்வர்யா மேடம் மிகக் கடுமையாக உழைத்துள்ளார். அர்ஜூன் சாருக்கு சமமான பாத்திரம். மிகச்சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் நிறைய நடிகர்கள் எல்லோரும் கதைக்கு முக்கியத்துவமாக இருப்பார்கள். இந்தப்படத்தில் அனிகா குழந்தை நட்சத்திரம் முக்கியமான கேரக்டர் அதை அவ்வளவு தத்ரூபமாக சூப்பராக நடித்துள்ளார். லோகு சார் இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார். இங்கு வாழ்த்த வந்த அனைவருக்கும் நன்றி. படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகர் அர்ஜூன் பேசியதாவது..,
எனக்கு இது மிக முக்கியமான படம், எனக்கு எல்லா படமுமே முதல் படம் போலத்தான். தயாரிப்பாளர் அருள்குமார் பூ வித்தாகச் சொன்னார்கள், ஆனால் அவர் சினிமா மீது வைத்திருக்கும் அன்பு தான் அவரை தயாரிப்பாளர் ஆக்கியுள்ளது. எல்லோரையும் மதிக்கும் அவரது பண்பு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மனதிற்காகவே இப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நான் நிறைய புதிய இயக்குநர்களுடன் பணிபுரிந்துள்ளேன், இயக்குநர் தினேஷ், என்னுடன் நிறைய விவாதித்தாக சொன்னார் ஆனால் எல்லாமே படத்திற்காகத் தான், படத்தை மிகச்சிறப்பாக எடுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோ அவர் தான், இவர் தான் என்றார்கள், ஆமாம் இப்படத்தில் மூன்று ஹீரோ, பிரவீன் ஒரு ஹீரோ, ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னொரு ஹீரோ. ராஜேஷ் அவரது தந்தையின் பெயர், அவர் சின்ன வயதில் தவறிவிட்டார். அவரும் நடிகர் தான், அவருடன் நான் சில படங்களில் நடித்துள்ளேன் அவர் எனக்கு சிறந்த நண்பர். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச்சிறந்த நடிகை, அவர் இன்னும் வளர வாழ்த்துக்கள். தங்கதுரையுடன் ஷீட்டிங்கில் அதிகம் சுற்றிக்கொண்டிருப்பேன் நல்ல மனிதர். எல்லோருடைய ஆசீர்வாதமும் அன்பும் இப்படத்திற்குக் கிடைக்க வேண்டும். நன்றி.
சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாகக் கொண்டு, ஒரு அதிரடி ஆக்சன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
‘ஆக்சன் கிங்’ அர்ஜுன், ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில், அபிராமி வெங்கடாசலம், பிரவீன் ராஜா, லோகு. Npks, ராம் குமார், தங்கதுரை, பேபி அனிகா, பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேலா ராமமூர்த்தி, பத்மன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பரத் ஆசிவகன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை லாரன்ஸ் கிஷோர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை அருண்சங்கர் துரை கவனித்திருக்கிறார்.
இப்படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில், நவம்பர் 21 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G. R. மதன் குமார் தயாரிப்பில் கருணாநிதி இயக்கத்தில் கிஷோர் – TTF வாசன், அபிராமி, குஷிதா ஆகியோரின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘IPL (இந்தியன் பீனல் லா)’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
‘IPL -இந்தியன் பீனல் லா’ திரைப்படத்தில் கிஷோர், TTF வாசன், குஷிதா, அபிராமி, சிங்கம் புலி, ஹரிஷ் பெராடி, ‘ஆடுகளம்’ நரேன், ஜான் விஜய், போஸ் வெங்கட், திலீபன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். S. பிச்சு மணி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்திருக்கிறார். திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் G.R. மதன் குமார் தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் முத்திரை பதித்த இயக்குநர் கே. பாக்யராஜ் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட, படக்குழுவினருடன் இயக்குநர்கள் ஆர். கே. செல்வமணி, ஆர். வி. உதயகுமார், பேரரசு ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மதன் குமார் பேசுகையில், ”இந்த விழாவிற்கு வருகை தந்த அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தின் ஹீரோ வாசன், அவரது ஒரு முகத்தை காண்பித்து நன்றாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றி பேசுவதற்கு பல அத்தியாயங்கள் உள்ளது. அவருக்கு இன்னும் பல திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அதற்கும் என் வாழ்த்துகள்.
இயக்குநர் கருணாநிதி என் நெருங்கிய நண்பர். எங்கள் இருவருக்கும் இடையே 25 ஆண்டு கால நட்பு இருக்கிறது. ஒரு நாள் என்னை சந்தித்து யதார்த்தமாக இப்படத்தின் கதையை சொன்னார். இது உண்மை கதை. எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்று இருக்கக்கூடும். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் இது போன்ற சம்பவங்களை எதிர்கொண்டு அதிலிருந்து பிறகு மெல்ல மெல்ல மீண்டு வந்திருப்பார்கள். நாட்டில் நடைபெறுகிற ஒரு விஷயம் தான் . அதனை இப்படத்தின் முன்னோட்டத்திலேயே நீங்கள் பார்த்திருக்கலாம். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளுக்கு சென்று பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் இந்த படத்தை தமிழகம் முழுவதும் எங்கள் நிறுவனமே வெளியிடுகிறது.
இதற்கெல்லாம் தொடக்க புள்ளி என ஒன்று இருக்கிறது. அவர்தான் என்னுடைய இனிய நண்பர் மார்ட்டின் சுரேஷ். கொரோனா காலகட்டத்தின் போது அதிகார வர்க்கத்தால் நேரடியாக பாதிக்கப்பட்டவர். இவர் சொன்ன சம்பவங்களை தழுவி தான் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் கருணாநிதி எழுதி, சிறப்பான படத்தை உருவாக்கி இருக்கிறார்,” என்றார்.
பாடலாசிரியர் கு. கார்த்திக் பேசுகையில், ”இப்படத்திற்காக என்னைத் தொடர்பு கொண்டு, ‘ஐபிஎல்’ என்றொரு படம், இது போன்றதொரு சூழல், கவித்துவமான பாடல் வரிகள் வேண்டும் என இசையமைப்பாளரும், இயக்குநரும் கேட்டுக் கொண்டனர். இந்தப் படத்தில் ‘யாவளோ..’ எனத் தொடங்கும் பாடலை எழுதியிருக்கிறேன்.
இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி என்னிடம் பேசும் போது ஒரு மெட்டின் அடிப்படை அமைப்பை அனுப்பி, இதற்கு பாடல் வரிகள் எழுத வேண்டும் என கேட்டார். நாங்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கொள்ளாமல் வாட்ஸப் மூலமாகவே உரையாடினோம். எனக்கு முதலில் முழு திருப்தி கிடைக்கவில்லை. அதன் பிறகு இசையமைப்பாளர், ‘முயற்சி செய்து பார்ப்போம். நன்றாக வரும்’ என்றார். அதன் பிறகு இசையை இணைத்து, கோர்த்து முழுமையான பாடலாக வழங்கும் போது, அதில் ஒரு ஃபீல் இருந்ததை உணர்ந்தேன், மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அத்துடன் அந்த பாடலுக்கு பொருத்தமான பாடகர், பாடகியையும் தேர்வு செய்திருந்தார். அந்தப் பாடலை சின்மயி பாடியிருந்தார்கள். சிவம் மகாதேவனும் தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார். இது போன்ற வெற்றி பாடலை வழங்கிய இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்திக்கு வாழ்த்துகள். மிகுந்த உயரத்திற்கு செல்வார் என்று நம்புகிறேன்,” என்றார்.
இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், ”இப்படத்தின் இயக்குநர் கருணாநிதி என்னுடைய நண்பர். இயக்குநர் சங்கத்தில் எங்களுடன் இணைந்து பணியாற்றுபவர். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இப்படத்தின் பணியில் ஈடுபட்டிருந்தார். படப்பிடிப்பு நடைபெறும் தருணங்களில் என்னை சந்தித்து, ‘இன்னென்ன பிரச்சனை’ என்று ஒவ்வொரு பிரச்சனையையும் பட்டியலிடுவார். அனைத்து பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பேன். இந்த மேடையில் இயக்குநரையும், தயாரிப்பாளரையும் ஒன்றாக சந்தோஷமாக இருப்பதை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். இசை மற்றும் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளரும், இயக்குநரும் நண்பர்களாக இருக்கிறார்களே, இதுவே இப்படத்தின் வெற்றி. ஏனெனில் பல இயக்குநர்கள் என்னிடம் இசை வெளியீட்டு விழாவிற்கு தயாரிப்பாளர் எனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று புகார் தெரிவிப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர் படத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார். இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். அத்துடன் இப்படத்தை தமிழகம் முழுவதும் வெளியிடுவேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த படத்தின் மீது இயக்குநர் வைத்திருக்கும் நம்பிக்கையை விட அதிகமாக தயாரிப்பாளர் வைத்திருக்கிறார் என்பது தெரிகிறது. இதனால் தயாரிப்பாளருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அஸ்வின் பாடகர்களையும், பாடகிகளையும் வரவழைத்து பாடல்களை பாட வைத்தது தான் உண்மையிலேயே இந்த படத்தை சிறப்பாக விளம்பரப்படுத்தும் நிகழ்வு. இது அனைவரையும் சென்றடையும். படத்தின் பணியில் மட்டும் பங்கெடுக்காமல் படத்தினை விளம்பரப்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்கியதற்காக அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தின் பாடல்களை பாடல்கள் திரையிடும்போது நாயகன் டிடிஎஃப் வாசன் என்னிடம் என்னை மெருகேற்றிக் கொள்ள இன்னும் என்ன கற்றுக்கொள்ள வேண்டும் என கேட்டார். அவரிடம் எதையும் கற்றுக் கொள்ளாதே. நீ இப்போது எப்படி இருக்கிறாயோ, அப்படியே இரு. அனைவருடனும் நட்பாக இரு. ஹீரோ ஆனதுக்கு பிறகு மாறி விடாதே. இயல்பாக இருந்தால் போதும். மற்றவை அனைத்தும் தானாக நடக்கும். வாய்ப்புகள் வரும் போதும், வாய்ப்புகள் வழங்கும் போதும் தயாரிப்பாளர்களிடம் எவ்வளவு தூரம் நீங்கள் நட்பாக இருக்கிறீர்களோ, அதுவே உங்களை காப்பாற்றும். மேடையில் எப்போது நீங்கள் பேசினாலும் உங்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிட தவறாதீர்கள். அது தயாரிப்பாளருக்கான சிறந்த மரியாதையாக இருக்கும். அவருக்கு நீங்கள் மேடையில் நன்றி தெரிவிக்கும் போது ,அவருடைய வாழ்த்து உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.
கலைஞர்களுக்குள் எந்தவித கருத்து வேறுபாடும் ஏற்படாமல் சுமுகமாக இயங்க வேண்டும். ஏனெனில் கலைஞர்கள் மக்களின் சொத்து,” என்றார்.
இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், ”இவ்விழாவில் கலந்து கொண்டிருக்கும் நடிகை அபிராமியை மட்டும் என்னால் மறக்க இயலாது. நான் இணைந்து பணியாற்ற விரும்பிய நடிகை. அவருடைய சிரிப்பு சிறப்பானது. அழகானது. என்னுடைய இயக்கத்தில் ‘உலகை விலை பேச வா’ எனும் படத்தில் கார்த்திக் சாரும், அபிராமியும் நடிப்பதாக இருந்தது. அப்படத்தின் பணிகள் பிறகு நடைபெறவில்லை.
எங்க ஊரிலிருந்து ஒரு பையன் தாறுமாறாக பைக் ஓட்டிக்கொண்டு கண்ட இடங்களில் ஓட்டி வழக்குகளை வாங்கியவன். ஒரே ரகளையாக திரிந்த பையன். இங்கு வந்து அமைதியாக நடித்து நாயகனாக மாறி இருக்கிறார். திடீரென்று அவர் ஹீரோவாகி இருப்பது எனக்கு சந்தோஷம் தான். உன்னால் இந்த திரையுலகம் மேம்பட வேண்டும் என வாழ்த்துகிறேன். நன்றாக வளர வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். இப்படியே இருக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இந்த திரைப்பட குழுவினரை பார்த்தவுடன் தான் சினிமா ஆரோக்கியமாய் இருக்கிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏனெனில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளர் படத்தின் மீது இருக்கும் நம்பிக்கையின் காரணமாக தமிழகம் முழுவதும் படத்தை அவரே வெளியிடுகிறார். இதை நான் வரவேற்கிறேன்.
கே .பாக்யராஜ் – பாரதிராஜா வரிசையில் பலர் வந்தாலும் இன்றும் அவர்களைப் பற்றி நாம் பேசுகிறோம் என்றால், அவர்களுடைய கிரியேஷன் தான் காரணம். அவர்களுடைய எதார்த்தமான வாழ்வியல் வெளிப்பாடுதான் காரணம். அந்த வகையில் ‘ஐபிஎல்’ கூட எதார்த்தமான வாழ்வியல் வெளிப்பாடாக இருக்கும் என நம்புகிறேன்.
கருணாநிதியை போன்ற திறமையான இயக்குநர்கள் ஏராளமானவர்கள் எங்களுடைய இயக்குநர் சங்கத்தில் உள்ளனர். அவர்களுக்கும் தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என அவரிடம் கோரிக்கையும் வைக்கிறேன்.
சினிமாவில் தயாரிப்பாளர்கள் முதல் கடைநிலை தொழிலாளி வரை ஒற்றுமையாக இருந்தால்தான் வெற்றி பெற முடியும். இப்படத்தில் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். அதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
பாடலாசிரியர் மோகன் ராஜ் பேசுகையில், ”இந்தப் படத்தில் நானும் ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். இப்படத்தின் இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி எனக்கு மெட்டை அனுப்பி வைத்து விட்டார். அதன் பிறகு நான் அவருடைய இசை சார்ந்த பணிகளை பார்வையிட்ட போது அவர் கமர்ஷியலாக பணியாற்றுபவர், ஆனால் என்னுடைய பாடல் கதை சார்ந்து இருக்கிறது. நான் எப்படி அவருடன் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என நினைத்தேன். அதன் பிறகு இயக்குநருடன் உரையாடினேன். அப்போதுதான் இசையமைப்பாளருக்கு அவருடைய தேவை என்ன என்பதில் ஒரு தெளிவு உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன்.
இந்தப் படத்தில் ‘காத்தோடு போகுமா..’ எனத் தொடங்கும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். இந்தப் பாடலின் சரணத்தில் ‘வெட்டவெளி எங்கேயும் காத்து வழித்துணை ஆகுமே .. விழி அறியா தோழனாக தொட்டுத் தொட்டுப் பேசுமே…’ என்ற பாடல் வரிகளும், ‘நதி மீது வீசும் கல்லால் காயம் ஆகாதே.. அதை வாங்கி உள்ளே வைக்கும் தேங்கி நிற்காதே…’ போன்ற வரிகளை என்னுடைய இளமைக் காலத்தில் என் சொந்த கிராமத்தில் இயற்கையுடன் இணைந்து பெற்ற அனுபவத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இந்த வரிகள் இடம் பெற்றதற்கு இசையமைப்பாளரும், இயக்குநரும் தான் காரணம். அவர்கள் இருவரும் வரிகளை நேசிப்பவர்கள்.
நான் பாடலாசிரியர் ஆர்.வி. உதயகுமாரின் ரசிகன். ‘பொன்னுமணி’ படத்தில் ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னா தெரியுமா…’ அந்த வரிகளுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். அந்த வரிகள் சாதாரணமாக தெரிந்தாலும், அதை எழுத வேண்டும் என்ற யோசனை என்னை வியப்பில் ஆழ்த்தியது,” என்றார்.
நடிகர் போஸ் வெங்கட் பேசுகையில், ”நான் சினிமாவை கற்றுக் கொண்டிருக்கும்போது, இன்னும் கூடுதலாக கற்றுக் கொடுத்த படம் ‘ஐபிஎல்’. இந்த படத்தின் இயக்குநரின் பெயர். எனக்கு மிகவும் பிடித்தமான பெயர். என் அப்பா என்னை ஊட்டி ஊட்டி வளர்த்த பெயர். அவர் பெயர் கருணாநிதி. பெயருக்கு ஏற்றார் போல் இந்த படத்தில் ஒரு அருமையான அரசியலை சொல்லி இருக்கிறார்.
இந்தப் படத்தின் கதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் என் நண்பர் சுரேஷ் என்னிடம் சொன்னார். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, இது சீக்கிரம் திரைப்படமாகும். அதற்கு ஏற்ற கதை என்று அவரிடம் சொன்னேன். அதன் பிறகு இயக்குநர் கருணாநிதி இந்த கதையை என்னை சந்தித்து சொன்னார் அவருடன் சுரேஷையும் பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது.
திடீரென்று நம் வாழ்க்கையில் சில தம்பிகள் குறுக்கிடுவார்கள். அது போல் குறுக்கிட்டவர் தான் இப்படத்தின் தயாரிப்பாளர் மதன் குமார். நான் ஒரு சிக்கலில் இருந்தபோது கேட்காமலேயே கணிசமாக பணம் வழங்கி என்னை அந்தப் பிரச்சனையில் இருந்து மீட்டவர் மதன்குமார். இந்தக் காலத்தில் நேரில் சென்று காலில் விழுந்தாலும் பண உதவி என்பது கிடைப்பது கஷ்டம். அது போன்ற தருணத்தில் மதன்குமாரின் செயல் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவருடைய இந்த நல்ல உள்ளத்திற்காகவே இந்த படம் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்,” என்றார்.
நடிகை குஷிதா பேசுகையில், ”எனக்கு தமிழ் மொழி தெரியாது. கற்றுக் கொண்டு வருகிறேன். நான் நடித்த ‘ஐபிஎல்’ தமிழ் திரைப்படம் நவம்பர் 28ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வந்து பார்க்க வேண்டும். இந்த படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.
நடிகர் டி டி எஃப் வாசன் பேசுகையில், ”இந்த படத்திற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என்னுடைய முதல் படம். நிச்சயமாக நிறைய தவறுகளை செய்திருப்பேன். படத்தை திரையரங்குகளில் பார்த்துவிட்டு உங்களுடைய நேர்மையான விமர்சனங்களை வெளியிடுங்கள். நீங்கள் குறிப்பிடும் என்னுடைய குறைகளை நான் திருத்திக் கொள்கிறேன்.
நான் நான் கூச்ச சுபாவம் உள்ள பையன், இதை சொன்னால் யாரும் நம்ப மறுக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடலுக்காக நடனம் ஆடும் போது நடன இயக்குநருக்கு என்னுடைய கூச்ச சுபாவம் தெரியும். எனக்கு ஆட வேண்டும் என்ற விருப்பம் உண்டு . ஆனால் ஆடத்தெரியாது. இருந்தாலும் இப்படத்தில் நடனமாடி இருக்கிறேன். அதற்காக நடன இயக்குநருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
படப்பிடிப்பு தளத்தில் சக நடிகையான குஷிதா முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். அதிலும் குறிப்பாக முத்த காட்சியில் சௌகரியமான பங்களிப்பை அளித்தார்.
இயக்குநருக்கு முதலில் கர்ணன் – அதன் பிறகு கருணாகரன்- இறுதியாக அவருடைய அசல் பெயரான கருணாநிதியையே டைட்டிலில் இடம் பெற வைத்திருக்கிறார்.
படத்தில் என்னுடன் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படத்தின் டீசர் வெளியான தருணங்களில் இருந்து நான் என் சைடு ப்ரோமோஷனை தொடங்கி விட்டேன். என்னுடைய முதல் படம். என்னை நம்பி ரிஸ்க் எடுத்திருக்கும் இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் ஏதாவது நல்லது நடந்திட வேண்டும் என்ற நோக்கத்தில் புரமோட் செய்து கொண்டு வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்த படத்தின் இரண்டாம் பகுதியில் என்னை நானே திரையில் பார்க்கும்போது ஆச்சரியமாக இருந்தது. அந்த அளவிற்கு இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி மேஜிக் செய்திருந்தார்.
உண்மை சம்பவத்தை தழுவி, அது சற்று கற்பனையை கலந்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறோம். சமூகத்தில் எவ்வளவு அநியாயங்கள் நடைபெறுகிறது என்பதை மக்களுக்கு சொல்லி இருக்கிறோம். செய்தித்தாள்களில் இது போன்ற சம்பவங்களை பார்வையிடுகிறோம், எளிதாக கடந்து சென்று விடுகிறோம். அந்த செய்திக்கு பின்னால் எந்த அளவு உண்மை இருக்கிறது. எந்த அளவிற்கு அரசியல் பலமும், பண பலமும் மிக்கவர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்த படம் எடுத்துச் சொல்கிறது. நவம்பர் 28ம் தேதி உங்கள் வீட்டுப் பிள்ளை வாசனின் முதல் படம் ‘ஐபிஎல்’ வெளியாகிறது. அனைவரும் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகை அபிராமி பேசுகையில், ”எங்களது ‘ஐபிஎல்’ படத்தை வாழ்த்த வந்த விருந்தினர்களுக்கு நன்றி. முதல் பட தயாரிப்பாளர், முதல் பட இயக்குநர், என்ற பாகுபாடு இல்லாமல் இங்கு வாழ்த்த வருகை தந்த அனைவருக்கும் நன்றி. கடினமாக உழைத்து இந்த படத்தை உருவாக்கி இருக்கிறோம். நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி இருக்கிறது. இருந்தாலும் அனைவராலும் எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ளக்கூடிய நிறைய விஷயங்கள் இதில் உள்ளது. குடும்பத்தின் கதை உள்ளது, அழகான காதல் கதை உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது, சண்டை காட்சி இருக்கிறது. வாசன் பைக்கிலேயே சண்டை காட்சிகளில் நடித்திருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் இப்படத்தில் உள்ளது. இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் வந்து பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.
நடிகர் கிஷோர் பேசுகையில், ”சினிமா மக்களின் மீடியம். அதற்கு மிகப்பெரிய உதாரணம் இங்கு மேடையில் வீற்றிருக்கும் இயக்குநர் கே. பாக்யராஜ். மக்களுக்காக மக்களுடைய கதைகளை எடுத்து அதன் மூலமாக நிறைய கேள்விகளை உண்டாக்கி தீர்வினை கண்டவர். தற்போது காலம் மாறி இருக்கிறது. சினிமா கிட்டத்தட்ட சிஸ்டத்தின் அடிமையாக மாறிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இதுபோன்ற மக்களின் குரலாக ஒலிக்கும், கேள்வி கேட்கும் படங்கள் வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த வகையிலான ஒரு படமாக ‘ஐபிஎல்’ இருக்கிறது. அதில் நானும் ஒரு பங்காக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி. இதற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், உடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படக்குழுவின் துணிச்சலுக்கு மக்கள் ஆதரவு கொடுப்பார்கள் என நம்புகிறேன்,” என்றார் .
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ”கோயம்புத்தூரில் பீளமேடு பக்கத்தில் பாரதிபுரம் என்ற பகுதியில் நாங்கள் இருந்தோம் .அங்கிருந்து சித்தா புதூர் எனும் புது ஏரியாவிற்கு குடிபெயர்ந்தோம். அந்த ஊருக்கு செல்லும் வழியில் கேரம் கிளப் என்ற ஒரு விளையாட்டு கூடம் இருந்தது. எனக்கு கேரம் என்றால் மிகவும் பிடிக்கும். அந்த கிளப்பில் கேரம் விளையாடினேன். புது நபர் என்பதால் என்னுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் எதிர்த்து விளையாடினார்கள். நான் நன்றாக விளையாடுவேன். அதனால் தினமும் வெற்றி பெற்றுக் கொண்டே வந்தேன். அங்குள்ளவர்கள் ‘ச்சே! இந்த நேரத்தில் நம்மாள் இல்லையே..!’ என வருத்தப்பட்டனர். இது தினமும் தொடர்ந்தது. எனக்கும் அந்த நபர் யார், என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வமும், அவருடன் விளையாட வேண்டும் என்ற ஆசையும் அதிகரித்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையை தேர்வு செய்து எங்கள் இருவரையும் கேரம் விளையாட வைத்தனர். அவர் அறிமுகமான பிறகு அவரும் நானும் ஆடத்தொடங்கினோம். அவருடைய ஸ்டைல் என்ன என்று தெரிந்து கொள்வதற்காக நான் சற்று பொறுமையாக விளையாடினேன். அவர் தொடர்ந்து நன்றாக விளையாட அந்த ஏரியாவில் உள்ளவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அவரை தொடர்ந்து உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தனர். அவருடைய பலவீனத்தை தெரிந்து கொண்டேன். அதன் பிறகு நான் என் திறமையை வெளிப்படுத்தினேன். அப்போது அவர் லேசாக வியப்படைந்து என்னை பார்த்தார். கூட்டத்தில் உள்ளவர்கள் அவர் தோல்வியை சந்தித்து விடுவாரோ என்ற பதற்றம் அடைந்தனர், சற்று உணர்ச்சிவசப்பட்டனர். அந்த நேரத்தில் நான் சற்று யோசிக்கத் தொடங்கினேன். அத்துடன் என் ஆட்டத்தின் வேகத்தையும் குறைத்துக் கொண்டேன். கூட்டத்தில் உள்ளவர்கள் அவரை ஹீரோவாக பார்க்கிறார்கள். அதனால் அவர் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினேன். பிறகு மெதுவாக விளையாடத் தொடங்க ஆட்டத்தில் அவர் வெற்றி பெற்றார். ஆட்டம் நிறைவடைந்த பிறகு அவரை பாராட்டினேன். அதற்கு நான் உங்களை வெற்றி பெறவில்லை. நீங்கள் தான் எனக்கு விட்டுக் கொடுத்தீர்கள். அதற்கு ரொம்ப நன்றி என்று சொன்னார். அன்றிலிருந்து எனக்கு அவர் தோழனாகி, சிறந்த நண்பன் ஆகி விட்டார். அதன் பிறகு நான் சினிமாவுக்கு வந்து விட்டேன். அவர் தொடர்ந்து குறைந்த சம்பளத்தில் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதன் பிறகு அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தேன். அவர்தான் எனது நண்பரான பழனிச்சாமி. ‘இன்று போய் நாளை வா’ திரைப்படத்தில் இந்தி வாத்தியராக நடித்த பழனிச்சாமி. ‘தீனா’, ‘ரெட்டை ஜடை வயசு’, ‘ஆயுத பூஜை’ என மூன்று படங்களை தயாரித்த தயாரிப்பாளராகவும் உயர்ந்தார். இதை நான் இங்கு ஏன் பகிர்ந்து கொள்கிறேன் என்றால் நட்பு என்பது எப்போதும் உயர்வானது. அதை சம்பாதித்தால் வேறு எதையும் நீங்கள் சம்பாதிக்க வேண்டியதில்லை. இங்கு நான் அவரை அழைத்து வந்து தயாரிப்பாளராக்கினேன். ஆனால் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் தன் நண்பனை அழைத்து வந்து இயக்குநராக்கி இருக்கிறார். இவர்களுடைய நட்பு என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது. இதற்காக தயாரிப்பாளருக்கு நான் பிரத்யேகமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இயக்குநர் கருணாநிதி வெற்றிமாறனின் உதவியாளர் என சொன்னார்கள். அவருடைய நம்பிக்கை வெற்றி பெறும். அவருக்கு என்னுடைய பாராட்டுகள்.
நடிகை ரேவதி முதன்முதலில் என்னுடைய ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ படத்தில் நடிப்பதற்காகத்தான் வந்தார்கள். அவருடைய வயது கதாபாத்திரத்துக்கு பொருத்தமானதாக இல்லை. அதனால் சிறிது காலம் காத்திருங்கள் என்று சொன்னேன். இந்த இடைவெளியில் எங்கள் இயக்குநர் பாரதிராஜா, ‘மண்வாசனை’ படத்தில் ரேவதியை அறிமுகப்படுத்திவிட்டார். அடுத்த படத்தில் நடிகை ரஞ்சனியை அறிமுகப்படுத்துவதற்காக போட்டோ ஷுட் நடத்தி காத்திருக்க சொன்னேன். அதற்குள் எங்கள் இயக்குநர் பாரதிராஜா ‘முதல் மரியாதை’ படத்தில் அவரை அறிமுகப்படுத்திவிட்டார். ‘அந்த ஏழு நாட்கள்’ படத்தில் நடித்த நடிகை அம்பிகாவை அவருடைய தங்கை ராதா தான் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அவரிடம் அடுத்த படம் ‘தூறல் நின்னு போச்சு’ கிராமத்து சப்ஜெக்ட் அதில் அறிமுகப்படுத்துகிறேன் என்று சொன்னேன். இதற்குள் எங்கள் இயக்குநர் அம்பிகாவையும் நடிக்க வைத்தார். இப்படி நடிகைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு தவறி தவறிக் கொண்டே இருந்தது. ஆனால் அனைவரும் சிறப்பான உயரத்திற்கு சென்றார்கள். ஏனெனில் எங்களுடைய இயக்குநரின் ஆசி அப்படி.
அதனால் அபிராமி கதாநாயகியாக நடித்ததை விட, கதையின் நாயகியாக நடிக்கும் போது அவருடைய நடிப்பு சிறப்பாக இருக்கிறது. இப்போதுதான் அவர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
ஹீரோ வாசன் யூடியூப் பிரபலம் என்பதால் அவர்முதல் படத்திலேயே நன்றாக நடனம் ஆடி இருக்கிறார் அவருக்கு ஏற்கனவே ரசிகர்கள் இருப்பதால் இந்த படம் வெற்றி பெறும்.
இந்தப் படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவி எழுதப்பட்டிருக்கிறது என்று இயக்குநர் சொன்னார். இது போன்ற கதைகளை மக்கள் எளிதாக அடையாளம் கண்டு, அதனுடன் தொடர்பு படுத்திக் கொள்வார்கள். அதனால் வெற்றியும் கிடைக்கும். இதனால் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் எழுந்து இருக்கிறது. அதனால் படம் நிச்சயமாக வெற்றி பெறும். வெற்றி விழாவில் அனைவரையும் சந்திக்கிறேன்,” என்றார்.
இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி பேசுகையில், ”இந்தப் படம் இசையமைப்பாளரிடம் வந்த போது அந்தப் படத்தில் நடித்த கதாபாத்திரங்களாகவே நடித்திருந்தார்கள். திரையில் அப்படித்தான் தோன்றினார்கள். அதற்குத்தான் நாங்கள் இசை அமைத்திருக்கிறோம். அதிலும் குறிப்பாக இப்படத்தின் நாயகன் வாசன் தோன்றும் 15 நிமிட சேசிங் காட்சி இருக்கிறது. அது நிச்சயமாக அற்புதமான திரையரங்க அனுபவத்தை அனைவருக்கும் வழங்கும். இதற்காக அனைவரும் திரையரங்கத்திற்கு சென்று இந்த படத்தை பார்க்க வேண்டும்.
இந்தப் படத்தில் வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும், பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.
இயக்குநர் கருணாநிதி பேசுகையில், ”ஐபிஎல்- இந்தியன் பீனல் லா- இந்திய தண்டனை சட்டம். சாதாரண மனிதன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும்போது அதிகார பலமும், பண பலமும் மிக்கவர்கள் தங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை சாதாரண மனிதன் மேல் திணித்து விட்டு எப்படி தப்பித்துக் கொள்கிறார்கள்… இதன் மூலம் சாதாரண மனிதார்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
பத்திரிகைகளில் கொலைகள், விபத்து என நிறைய செய்திகள் வெளியாகும். இவை உண்மையான கொலைகளா, உண்மையான விபத்து தானா என்பது யாருக்கும் தெரியாது. அதற்கு பின்னணி குறித்து விசாரித்து பார்த்தால்தான் உண்மை தெரியவரும். அதன் பின்னால் சதிகள் இருப்பதை தெரிந்து கொள்ள முடியும். ஆனால் நாம் அதை எளிதாக கடந்து சென்று விடுவோம்.
இது போன்றதொரு செய்தியைத் தான் ‘ஐபிஎல்’ படத்தில் நாங்கள் விரிவாக பேசியிருக்கிறோம். அனைவரும் இந்த படத்தை திரையரங்கில் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.