Cinema

ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் மலையாள சீரிஸ் “ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்” படப்பிடிப்பு துவங்கியது !!

ZEE5 நிறுவனம் தனது அடுத்த அதிரடி இருமொழி (தமிழ் – மலையாளம்) ஒரிஜினல் சீரிஸான “ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்” ( “Once Upon A Time in Kayamkulam” )சீரிஸின் படப்பிடிப்பை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த சீரிஸ் புத்தாண்டை முன்னிட்டு ZEE5 தளத்தில் வெளியாக உள்ளது.

Rise East Production House தயாரிப்பில், அமீன் பாரிஃப் இயக்கத்தில் உருவாகும் இந்த சீரிஸ், முழுக்க மண் மணம் கமழும் ஹைஸ்ட் காமெடி (Heist Comedy) ஜானரில் உருவாகவுள்ளது. இந்த சீரிஸ் நகைச்சுவை, பரபரப்பான திருப்பங்கள் மற்றும் இன்றைய OTT ரசிகர்களை கவரும் நவீன கதை சொல்லல் ஆகியவை இணைந்து, தனித்துவமான அனுபவத்தை வழங்கும்.

இந்த சீரிஸில் அன்புசெல்வன், சுபாஸ், ரமேஷ் மாதவன், வின்சு ரேச்சல், ராகேஷ் உசார், கௌதமி நாயர், சாவித்ரி, விஜய் சத்தியா, அருண், விக்னேஸ்வர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த சீரிஸின் படப்பிடிப்பு தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், “ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் காயம்குளம்” தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் ZEE5-இன் ஒரிஜினல் உள்ளடக்க வரிசையில் ஒரு புதுமையான, ரசிக்கத்தக்க படைப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் ஜோடி சேரும் புதிய படம்!

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைக்களங்களுடன் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களை வழங்கி வரும் Million Dollar Studios, ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட ஹாட்ரிக் வெற்றிகளுக்குப் பிறகு, தனது 7-வது தயாரிப்பாக இப்படத்தை உருவாக்கி வருகிறது.

Million Dollar Studios மற்றும் Neo Castle Creations நிறுவனங்களின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தை, சத்யா கரிகாலன் மற்றும் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரிக்கின்றனர்

‘ஜமா’ படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த பாரி இளவழகன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி கதாநாயகனாகவும் நடிக்கிறார். தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

படத்தின் முக்கிய சிறப்பம்சமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரோஜா நடிப்புக்கு ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவருடன் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இசையமைப்பை ‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் கையாள, ஒளிப்பதிவை ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ பட ஒளிப்பதிவாளர் ஷெல்லி ஆர் கேலிஸ்ட் மேற்கொள்கிறார். மேலும் படத்தொகுப்பை பார்த்தா செய்ய, மகேந்திரன் கலை இயக்கத்தை செய்கிறார். பாடலாசிரியர்கள் மோகன்ராஜன், பாக்கியம் சங்கர் ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். மக்கள் தொடர்பை யுவராஜ் கவனிக்கிறார்.

சென்னையின் பெரம்பூர் பகுதியை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இந்த படைப்பு, அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான பேமிலி என்டர்டெயின்ராக உருவாகிவருகிறது.

பூஜையுடன் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிற சூழலில், இப்படம் வருகிற சம்மரில் ரசிகர்களை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாஷின் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, (Toxic: A Fairytale for Grown-ups) திரைப்படத்தில், நயன்தாராவின் லுக்

யாஷ் நடிக்கும் மிகப்பிரம்மாண்ட படைப்பான ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படக்குழு அதன் இருண்ட மர்மமான உலகத்தின் இன்னொரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதில் முக்கியமாக, நயன்தாரா நடித்துள்ள ‘கங்கா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி பெரும் கவனம் பெற்றுள்ளது. அதிரடி, அழகு, ஆற்றல் என அனைத்தையும் ஒருங்கே தாங்கிய இந்த தோற்றம், யாஷின் கனவுப் படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய சக்தியாக இருப்பதை உறுதி செய்கிறது.

தனித்துவமான நடிப்பு திறமை, உணர்வுப்பூர்வ வெளிப்பாடு மற்றும் வலுவான திரை ஆளுமை கொண்ட நடிகையாக நீண்ட காலமாக கோலோச்சி வரும் நயன்தாரா, டாக்ஸிக் படத்தில் இதுவரை தோன்றாத ஒரு புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். இருள் நிறைந்த இந்த உலகத்தில், அவரது இருப்பே ஒரு வலுவான அடையாளமாக திகழ்கிறது.

கங்கா என்ற கதாபாத்திரத்தில் நயன்தாரா, அச்சமற்ற துணிச்சலுடனும், கம்பீரமான அமைதியுடனும் திரையில் தோன்றுகிறார். கையில் துப்பாக்கியுடன், செழுமையான கேசினோ ( grand casino) பின்னணியில் நின்று கொண்டு, அந்த இடத்தையே கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் காட்டுகிறார். அழகும் ஆபத்தும் கலந்த அந்த தோற்றம், கதாபாத்திரத்தின் ஆழத்தையும் மர்மத்தையும் வலுவாக வெளிப்படுத்துகிறது.

இந்தக் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) கூறுகையில்,

“நயன்தாராவை ஒரு சிறந்த நட்சத்திரமாகவும், வலிமையான திரைபட முன்னணி ஆளுமையாகவும் அனைவரும் அறிவோம். ஆனால் டாக்ஸிக் படத்தில், இதுவரை நாம் காணாத ஒரு பரிமாணத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அவர் திரையில் நடிக்கவில்லை; அந்தக் கதாபாத்திரமாகவே மாறினார். அவரின் ஆழம், நேர்மை, உணர்ச்சி எல்லாமும் அந்த கதாப்பாத்திரத்தின் இயல்பாகவே இருந்தது. அந்த தருணத்தில்தான் எனக்கு உண்மையான ‘கங்கா’ கிடைத்தார். அதைவிட அழகானது, அந்த பயணத்தில் ஒரு நெருங்கிய நண்பரையும் நான் பெற்றேன்,” என தெரிவித்துள்ளார்.

KGF: Chapter 2 மூலம் இந்திய சினிமாவின் வரலாற்றை மாற்றிய யாஷ், ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, மூலம் மீண்டும் ஒரு புதிய உயரத்தை நோக்கி பயணிக்கிறார். இந்த படம், தனது தனித்துவமான காட்சியமைப்பு மற்றும் கருப்பொருளால் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. முன்னதாக, கியாரா அத்வானி நடித்த ‘நாடியா’ (Nadia) கதாபாத்திரம் வெளியானபோது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, ஹூமா குரேஷியின் ( Huma Qureshi’s ) மர்மமான ‘எலிசபெத்’ தோற்றம், பழமையான கோத்திக் அழகுடன் கூடிய புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியது.

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதை எழுதி, கீது மோகன்தாஸ் இயக்கியுள்ள Toxic: A Fairytale for Grown-Ups திரைப்படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. பின்னர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட உள்ளது. ஒளிப்பதிவை தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி மேற்கொள்ள, இசையமைப்பை ரவி பஸ்ரூர் செய்துள்ளார். படத்தொகுப்பில் உஜ்வல் குல்கர்னி, கலை இயக்கத்தில் டி.பி. அபித் பணியாற்றியுள்ளனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் புகழ் ஜே.ஜே. பெர்ரி (John Wick) உடன் இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி அமைத்துள்ளனர்.

யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து கதையை எழுதியுள்ள இந்தப் படம், கீது மோகன்தாஸ் (Geetu Mohandas) இயக்கத்தில் உருவாகியுள்ளது. ஆங்கிலம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.

தேசிய விருது பெற்ற ராஜீவ் ரவி ஒளிப்பதிவையும், ரவி பஸ்ரூர் இசையையும், உஜ்வல் குல்கர்ணி எடிட்டிங்கையும், T.P.அபித் புரொடக்ஷன் டிசைன் கவனிக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளை ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் J.J. பெரி (John Wick) உடன் இணைந்து இணைந்து அனுபவம் வாய்ந்த அன்பறிவ் மற்றும் கெச்சா காம்பக்‌டி (Kecha Khamphakdee)அமைத்துள்ளனர்.

வெங்கட் K. நாராயணா மற்றும் யாஷ் இணைந்து KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கும் ‘டாக்ஸிக்: எ ஃபேரி டேல் ஃபார் கிரோன்-அப்ஸ்’, வரவிருக்கும் மார்ச் 19, 2026, ஈத், உகாதி, குடி பட்வா ஆகிய பண்டிகைகளுடன் இணைந்து, திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.

கவின் – ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல்

முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது.

மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய ரகசியங்களுடன் மோதும் போது முற்றிலும் தலைகீழாக மாறுகிறது. விசாரணை தீவிரமடையும் போது, வேலு குற்றத்தின் உண்மையை மட்டுமல்ல, தனது செயல்களின் விலையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.

படம் குறித்து நடிகர் கவின் கூறுகையில்,
“மாஸ்க் ஏற்கனவே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது ZEE5 மூலம் இன்னும் பெரிய ரசிகர்கள் வட்டத்தை அடையப் போவதில் மகிழ்ச்சி. வேலு பல அடுக்குகளைக் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை அதிகமானோர் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர், தயாரிப்பாளர் வெற்றிமாறன் கூறுகையில்..,
“இந்த படம் பேசும் கருக்கள் காலத்தை கடந்தவை. மாஸ்க் இப்போது ZEE5-ல் வெளியாகும் நிலையில், முதன் முறையாக இதை அனுபவிக்கும் புதிய பார்வையாளர்களிடம் சென்று சேரும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி”.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு – ஆர்.டி. ராஜசேகர்
படத்தொகுப்பு – ஆர். ராமர்.

ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் ஆழமான கதை சொல்லலுடன், மாஸ்க் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அசத்தலான அனுபவத்தை வழங்கும் படமாக உருவாகியுள்ளது.

‘மாஸ்க்’ – ஜனவரி 9, 2026 முதல் ZEE5 தளத்தில், தமிழில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

‘தி ராஜா சாப்’ – பிரம்மாண்ட முன்னோட்ட விழா !!

“டார்லிங் ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு வழங்கவே ‘தி ராஜா சாப்’ திரைப்படத்தை உருவாக்கினோம். இந்த படத்தின் கிளைமாக்ஸை பார்த்த பிறகு, மாருதியின் எழுத்துத் திறமையின் ரசிகனாக நான் மாறிவிட்டேன். இந்த சங்கராந்தியில் வெளியாகும் அனைத்து படங்களுடனும் சேர்ந்து, ‘தி ராஜா சாப்’வும் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும்.” – ரெபல் ஸ்டார் பிரபாஸ்

ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள மிகப் பிரம்மாண்ட படமான ‘தி ராஜா சாப்’ (The Raja Saab) படத்தின் பிரம்மாண்ட முன்னோட்ட விழா, நேற்று ஹைதராபாத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவரும் படம் குறித்து தங்கள் அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்துகொண்டனர்.

ரெபல் ஸ்டார் பிரபாஸ் நடித்துள்ள பெரும் எதிர்பார்ப்பை ஏ…
[1:46 pm, 30/12/2025] Sandy Cine Pro Aim: (2/2)

நடிகை நிதி அகர்வால் கூறியதாவது:

“இந்தியாவின் மிகப் பெரிய நட்சத்திரமான பிரபாஸ் உடன் நடிப்பது எனக்கு ஒரு கனவு நனவானது போல இருக்கிறது. அவர் எவ்வளவு நல்ல மனிதர் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் அவருக்குத் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். தெருவில் ஒரு சிக்ஸ் அடிப்பதும், ஸ்டேடியத்தில் ஒரு சிக்ஸ் அடிப்பதும் வெவ்வேறு விஷயங்கள். அந்த அளவுக்கான ரேஞ்ச் கொண்டவர் பிரபாஸ்.

‘தி ராஜா சாப்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த மாருதி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. சப்தகிரி, VTV கணேஷ் உள்ளிட்ட அனைவருடனும் இணைந்து நடித்தது மிகவும் சந்தோஷமான அனுபவமாக இருந்தது. என் சக நடிகைகளான மாளவிகா மற்றும் ரித்தியுடன் பணியாற்றியது மறக்க முடியாத நினைவாக இருக்கும். தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத் காரும், கிரியேட்டிவ் புரொட்யூசர் எஸ்.கே.என் அவர்களும் எங்களுக்கு மிகுந்த ஆதரவு அளித்தனர். தமன் இசையமைத்த பாடல்கள் படத்திற்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளன. ‘தி ராஜா சாப்’ படத்தை அனைவரும் திரையரங்குகளில் கொண்டாடுங்கள்.”

இயக்குநர் மாருதி கூறியதாவது:

“இன்று நான் இந்த மேடையில் நின்றிருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம் நீங்கள் அனைவரும் எனக்கு வழங்கிய ஆதரவே. ‘தி ராஜா சாப்’ படத்திற்குப் பின்னால் உறுதியாக நின்ற இரண்டு பேர் இருக்கிறார்கள் — பிரபாஸ் அவர்களும், விஷ்வ பிரசாத் அவர்களும் தான். விஷ்வ பிரசாத் காரும், பீப்பிள் மீடியா குழுவினரும் இந்த படத்திற்காக தங்களின் உயிரையே கொடுத்தார்கள்.

‘ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ் நடித்துக் கொண்டிருந்த போது, நான் ‘தி ராஜா சாப்’ கதையை அவரிடம் சொல்லச் சென்றேன். கதையைக் கேட்டவுடன் அவர் மிகுந்த உற்சாகத்துடன் ரசித்துச் சிரித்தார். உண்மையில் அவர் இந்த படம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. ‘பாகுபலி’க்கு பிறகு பிரபாஸுக்கு உலகளாவிய அடையாளம் கிடைத்துவிட்டது. தென் ஆப்பிரிக்காவில் ஒரு சிறிய ஊரில் படப்பிடிப்பு நடந்தபோதும் கூட, அங்குள்ள மக்கள் அவரை அடையாளம் கண்டார்கள். அந்த அளவுக்கு ராஜமௌலி சார் உருவாக்கிய பான்–இந்தியா அலை நமக்கு பலன் அளித்து வருகிறது.

இன்று சுகுமார், சந்தீப் வங்கா போன்ற இயக்குநர்கள் அனைவரும் பான்–இந்தியா படங்களை இயக்குகிறார்கள். அதேபோல் நாங்களும் ‘தி ராஜா சாப்’ படத்தை ஒரு பெரிய அளவில் உருவாக்கியுள்ளோம். இந்த படம் எளிதான ஒன்று அல்ல. இதற்காக பலரும் கடுமையாக உழைத்துள்ளனர்.

நான் இதுவரை 11 படங்களை இயக்கியுள்ளேன். ஆனால் பிரபாஸ் காரு என்னை ஒரு பெரிய இயக்குநராக உருவாக்க நினைத்து, ‘ரெபல் யுனிவர்சிட்டி’யில் என்னைச் சேர்த்தார். நான் இந்த படத்தை இயக்கினேன் என்றாலும், இதன் உண்மையான ஆதாரம் பிரபாஸ் தான். அவர் இந்த படத்திற்கு கொடுத்த அர்ப்பணிப்பு, உழைப்பு, நேரம் – இவை எல்லாவற்றையும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இந்த படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்தபோது, பின்னணி இசை சேர்க்கப்பட்ட பிறகு நான் கண் கலங்கினேன். பிரபாஸ் நடிப்பைப் பார்த்து உண்மையிலேயே உணர்ச்சிவசப்பட்டேன். ஒரு காட்சி கூட உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், என் வீட்டின் முகவரியை நான் தரத் தயார் — ரசிகர்கள் வந்து நேரடியாக என்னைச் சந்திக்கலாம்.

இந்த சங்கராந்திக்கு பல படங்கள் வெளியாகின்றன. ஆனால் ‘தி ராஜா சாப்’ மிகப்பெரிய வெற்றியை அடையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.”

தயாரிப்பாளர் டி.ஜி. விஷ்வ பிரசாத் கூறியதாவது:

“பீப்பிள் மீடியா ஃபாக்டரி மிகப் பெரிய நட்சத்திரத்துடன் நாம் உருவாக்கிய மிகப் பெரிய படம் இதுதான். ஆரம்பத்தில் பலர் இது ஒரு சிறிய படம் என்று நினைத்தார்கள். ஆனால் ‘தி ராஜா சாப்’ படத்தை உருவாக்க நாங்கள் மூன்று ஆண்டுகள் கடுமையாக உழைத்தோம். மாருதி சார் சொன்னது போல, இந்த படம் ஒருவரையும் ஏமாற்றாது. உலகளவில் ஹாரர்–ஃபேண்டஸி வகையில் உருவாகும் மிகப் பெரிய படமாக ‘தி ராஜா சாப்’ இருக்கும். இந்த படத்தை நீங்கள் அனைவரும் மனதார ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.”

ரெபல் ஸ்டார் பிரபாஸ் கூறியதாவது:

“என் அனைத்து ரசிகர்களுக்கும் வணக்கம். சமீபத்தில் ஜப்பானில் ரசிகர்களைச் சந்தித்தபோதும் நான் இதே மகிழ்ச்சியை உணர்ந்தேன். இன்று இங்கே உங்களைப் பார்க்கும் போது அதே சந்தோஷம் மீண்டும் வருகிறது. இன்று நான் உங்களுக்காக புதிய ஹேர் ஸ்டைலுடன் வந்திருக்கிறேன். அனில் தடானி எனக்கு ஒரு சகோதரரைப் போல. அவர் வட இந்தியாவில் என் படங்களை முழுமையாக ஆதரித்து வருகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் அவர்களும் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் ஒரு காட்சியில் வந்தாலே அந்த முழுக் காட்சியும் அவருடையதாகிவிடும். இந்த படம் ஒரு பாட்டி – பேரன் கதையாகும். இந்த படத்தில் ஜரீனா வாஹப் என் பாட்டியாக நடித்திருக்கிறார். அவர் டப்பிங் பேசும் போது, என் காட்சிகளை மறந்து அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவ்வளவு அருமையாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரித்தி, மாளவிகா, நித்தி ஆகிய மூன்று நடிகைகளும் நடித்துள்ளனர். அவர்கள் மூவரும் அழகாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைத்தவர் தமன். இப்படிப்பட்ட ஹாரர்–காமெடி படத்திற்கு அவர் சரியான தேர்வு. ஒளிப்பதிவாளர் கார்த்திக் படத்தை மிகவும் அழகாகப் படம் பிடித்துள்ளார். சண்டைக் காட்சிகளை ராம் லக்ஷ்மன் மற்றும் கிங் சாலமன் மிகச் சிறப்பாக வடிவமைத்துள்ளனர். இந்த படத்தின் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத். படம் முதலில் திட்டமிட்டதை விட பெரியதாக மாறினாலும், அவர் ஒருபோதும் பின்வாங்கவில்லை. இந்த படம் முழுவதும் அவரின் நம்பிக்கையால்தான் உருவானது. மாருதி பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், அவர் இந்த படத்தில் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளார். அவர் எனக்கு ‘ரெபல் யுனிவர்சிட்டி’யில் பயிற்சி கொடுத்தவர் போன்றவர். இந்த படத்தை உருவாக்கும்போது அவர் காட்டிய உழைப்பு, அர்ப்பணிப்பு எல்லாம் சொல்ல வார்த்தை இல்லை. இந்த படம் ஒரு ஹாரர்–காமெடி. அதே நேரத்தில் அது ஒரு உணர்ச்சி நிறைந்த படம். இந்த படத்தைப் பார்த்து நீங்கள் சிரிப்பீர்கள், ரசிப்பீர்கள், மனம் நெகிழ்வீர்கள். இந்த சங்கராந்திக்கு வெளிவரும் எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும். அதே நேரத்தில், ‘தி ராஜா சாப்’ ஒரு மிகப் பெரிய வெற்றியாக வேண்டும். நாளை ட்ரெய்லர் வெளியாகிறது – தவறாமல் பாருங்கள். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.”

நடிகர் பட்டியல்:
பிரபாஸ், நித்தி அகர்வால், மாளவிகா மோகனன், ரித்தி குமார், சஞ்சய் தத், பூமன் இரானி மற்றும் பலர்.

தொழில்நுட்ப குழு

எடிட்டிங்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ்
ஒளிப்பதிவு: கார்த்திக் பழனி
இசை: தமன்
சண்டை இயக்கம்: ராம் லக்ஷ்மன், கிங் சாலமன்
கலை இயக்கம்: ராஜீவன்
கிரியேட்டிவ் புரொடியூசர்: எஸ்.கே.என்
தயாரிப்பாளர்கள்: டி.ஜி. விஷ்வ பிரசாத், கிருத்தி பிரசாத்
கதை / திரைக்கதை / இயக்கம்: மாருதி

பிரியங்கா மோகன் நடிக்கும், கன்னட படமான “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்”

கன்னட சினிமாவின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான பிரியங்கா மோகன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் ஒரு பிரம்மாண்ட படைப்பில் இணைந்துள்ளார். தமிழ், தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் இவர், தற்போது “666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்” என்ற வித்தியாசமான தலைப்பைக் கொண்ட கன்னட படத்தின் மூலம், சாண்டல்வுட்டிலும் கலக்கவுள்ளார்.

இப்படத்தில் பிரியங்கா மோகன் ஏற்கும் கதாப்பாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Vaishak J Films தயாரிப்பில், ஹேமந்த் M ராவ் இயக்கதில், கர்நாடக சக்கரவர்த்தி சிவராஜ்குமார், இளம் நட்சத்திர நடிகர் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்கும் இப்படம், 70 களின் காலகட்டத்தை மையப்படுத்தி, பிரம்மாண்டமான ரெட்ரோ ஸ்டைல் ஃபேண்டஸி படமாக உருவாகி வருகிறது.

தனது அறிமுகப்படமான 2016ல் வெளியான ஒந்த் கதே ஹெல்லா Ondh Kathe Hella படத்தைத் தொடர்ந்து, நீண்ட காலமாக கன்னட படத்தில் தோன்றாமல் இருந்த பிரியங்கா மோகன் தற்போது பெரும் ஆளுமைகள் இணையும் பிரம்மாண்ட படத்தில் இணைந்துள்ளார். இதுவரை காதல், குடும்ப உணர்வுகள், கமர்ஷியல் எண்டர்டெய்னர் போன்ற கதைகளில் நடித்து வந்த பிரியங்கா மோகன், இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட, வலுவான கதாபாத்திரத்தில் தோன்றவிருக்கிறார் என்பதே முக்கிய சிறப்பு.

‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ என்ற தலைப்பே, இப்படம் ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும் என்பதைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

இன்று வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இது வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் அல்ல” என்பதைக் கூறாமல் கூறுகிறது. பிரியங்கா மோகன் அழகான பார்பி டால் போல வெண்மை நிற தொப்பி, கருப்பு நிற கையுறை உடன், ரெட்ரோ லுக்கில் அசத்துகிறார்“.

தமிழ், தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றிப்படங்களைத் தந்து வரும், பிரியங்கா மோகன் இப்போது கன்னடத்திலும் நடிக்க ஆரம்பித்திருப்பது, அவரது நடிப்பு பயணத்தில் ஒரு முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது. மொழி எல்லைகளை தாண்டி, கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அவரது தேர்வுகள், அவரை பான்-இந்திய நடிகையாக மாற்றும் பாதையில் கூட்டிச் செல்கின்றன.

‘666 ஆப்பரேஷன் ட்ரீம் தியேட்டர்’ படம் குறித்து முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது. இந்நிலையில் நேற்று ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்தப் படம், கன்னட சினிமாவில் பிரியங்கா மோகனுக்கு ஒரு புதிய அடையாளத்தையும், தனித்துவமான மைல்கல்லையும் உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை

” ரெட்ட தல” திரை விமர்சனம்

பாண்டிச்சேரியில் பெற்றோர்கள் இல்லாமல் தனியாக வளரும் அருண் விஜய், அவரைப் போலவே பெற்றோர் இல்லாமல் தனிமையில் இருக்கும் சித்தி இத்னானியை அருண் விஜய் காதலிக்கிறார். ஆனால், சித்தி இத்னானி அருண் விஜயை விட பணத்தின் மீது அதீத மோகம் கொண்டவராக வாழ நினைக்கிறாள்.அவளை சந்தோஷப்படுத்து
வதற்காக கண்ணுக்கு தெரியாத நிறைய தப்புகள் அதிகமான பணம் சம்பாதிக்கும்வேண்டிய சூழ்நிலையில் ஈடுபடுகிறார் .அருண் விஜய்க்கு, அப்போது தீரென பணக்கார அருண் விஜயின் நட்பு கிடைக்கிறது.இது‌ தீடீரென சந்திப்பு அதுவும் விபத்தில் தான் நடக்கிறது. பணக்காரன் வசதிப்படைத்த அருண் விஜயின் பணத்தின் மீது அதிக ஆசைப்படும், சித்தி இத்னானி தனது காதலர் அருண் விஜய் மூலம் அவரதுபணத்தை அடைய திட்டம் போடுகிறார். பிறகு என்ன நடக்கிறது?. என்பதை விறுவிறுப்பாக சொல்வது‌ தான் திரைப்பட கதையின் கதைக்களம்
“ரெட்ட தல”.
இரட்டை பிறவி போல் இரு வேடங்களில் நடித்திருக்கிறார் அருண் விஜய்,
கதாநாயகியாக நடித்திருக்கிறார் சித்தி இத்னானி,
தன்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரிஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ், யோகி சாமி ஆகியோர் கதாபாத்திரங்
களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளார்கள்.


முதல் பாதி படம் முழுவதும் வேகமாகவும், பல்வேறு திருப்பங்களுடன்பயணிப்பது போல் இரண்டாம் பாதி பயணிக்க வில்லை படத்தை கொஞ்சம் பலவீனம் ஆக்‌ஷன் காட்சிகள் அந்த பலவீனத்தை மறைத்து விடுகிறார்கள்.

“சிறை” திரை விமர்சனம்

சிவகங்கை மாவட்டத்தில் சார்ந்த கொலை வழக்கு ஒன்றில் விசாரணை கைதியாக வேலூர் மத்திய சிறையில் பல வருடங்களாக இருக்கும் எல்.கே.அக்‌ஷய் குமாரை, சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு விக்ரம் பிரபு தலைமையிலான காவலர் குழுவுக்கு வழங்கப்படுகிறது. போகும் வழியில் காவலர்கள் சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்ள , அதன் மூலம் கைதி அக்‌ஷய் குமாரை தொலைத்து விடுகிறார்கள். போலீஸ் துப்பாக்கியுடன் அவர்களிடம் இருந்து தப்பித்த அக்‌ஷய் குமார் மீண்டும் பிடிபட்டாரா ?, கொலை குற்றவாளியான அவரது பின்னணி

என்ன ?, அவர் யாரை எதற்காக கொலை செய்தார்? , இதனால் விக்ரம் பிரபு எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன ?

தனது தாயை அடித்தவனை தள்ளி விடும் போது அது கொலையாக மாறுகிறது. இந்த உண்மை சம்பவத்தை விறுவிறுப்பாகவும் உண்மைக்கு நெருக்கமாகவும் சொல்வது தான் “சிறை”. கதைக்களம்.
ஒரு நடிகர் என்பதை தாண்டி, ஒரு காவலராக பார்வையாளர்கள் மனதுக்குள் விக்ரம் பிரபு பதிந்து விடுகிறார். மற்றொரு நாயகனாக நடித்திருக்கிறார் அறிமுக இளம் நடிகர் எல்.கே.அக்‌ஷய் குமார்நாயகியாக நடித்திருக்கிறார் அனிஷ்மா அனில்குமார்

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தமிழ் எழுதிய கதை சாதாரணமாக இருந்தாலும், அதை தனது திரைக்கதை மற்றும் இயக்கம் மூலம் மிக வலிமையான படைப்பாக கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி.

“மிடில் கிளாஸ்” திரைப்படம்,  வரும்  டிசம்பர் 24 முதல் ZEE5-ல்

இந்த கிறிஸ்துமஸில், நடுத்தர வர்க்க கனவுகளின் கலகலப்பபன உலகைச் சந்திக்க தயாராகுங்கள் !  – “மிடில் கிளாஸ்” திரைப்படம்,  வரும்  டிசம்பர் 24 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!

ZEE5-ல், வெற்றிபெற்ற  “மிடில் கிளாஸ்” திரைப்படம்,  வரும் டிசம்பர் 24 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!

இந்த பண்டிகைக் காலத்தில், ZEE5 தமிழ் ரசிகர்களுக்காக மனதைக் கொள்ளை கொள்ளும், சிரிப்பும் உணர்வும் கலந்த ஒரு நடுத்தர குடும்பத்தின் வாழ்க்கையின் கதையை   கொண்டு வருகிறது. மிடில் கிளாஸ்,  எனும் தமிழ் காமெடி – டிராமா திரைப்படம், டிஜிட்டல் பிரீமியராக, டிசம்பர் 24 முதல் ZEE5-ல் வெளியாகிறது. கிஷோர் M. ராமலிங்கம் இயக்கத்தில், தேவ் மற்றும் K.V. துரை தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில், காளி வெங்கட், முனிஷ்காந்த், விஜயலட்சுமி மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

“மிடில் கிளாஸ்” திரைப்படம், நடுத்தர வர்க்க வாழ்க்கையின் அன்றாட நடைமுறை சிக்கல்களை, ஒரு மனிதன் நீண்ட காலமாக சுமந்து வந்த கனவை அடைய முயலும் பயணத்தை, நகைச்சுவையும் உணர்ச்சியும் கலந்து சொல்லுகிறது. ஆசைகள், அழுத்தங்கள், குடும்ப உறவுகள் மற்றும் குழப்பங்கள் இவை அனைத்தையும் இயல்பாகப் பிரதிபலிக்கும் இப்படம், சிரிப்போடு சேர்த்து மனதையும் நெகிழ வைக்கிறது.

கதையின் மையத்தில், சாதாரண மனிதர்களின் ஆசைகள்,  ஒரு குடும்பத்தின் அன்றாட  இயக்கங்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் இடம்பெறுகின்றன. அதிகமாக வெளிப்படுத்தாமல் சொல்ல வேண்டுமெனில், கனவும் நிஜமும் மோதும் இடங்களில் உருவாகும் சூழல்கள், சில சமயம் கலகலப்பாகவும், சில சமயம் மனதைத் தொடுவதாகவும் அமைகின்றன. எளிமையும் உண்மையும் தான் இப்படத்தின் பலம்.

இப்படம் குறித்து முனிஷ்காந்த் கூறியதாவது..,
“மிடில் கிளாஸ்” படம் நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களின் வாழ்க்கை மற்றும் கனவுகளை பிரதிபலிப்பதால், பார்வையாளர்களுடன் எளிதாக இணையும். இப்படத்தின் நகைச்சுவை நிஜமான வாழ்க்கையிலிருந்து வருகிறது. அது தான் இப்படத்தை சிறப்பாக்குகிறது. என் கதாபாத்திரத்தில் நடித்தது அருமையான அனுபவமாக இருந்தது. இப்படத்தில் நகைச்சுவைக்கு  இணையாக உணர்ச்சிப்பூர்வமான தருணங்களையும் ரசிகர்கள் ரசிப்பார்கள். இந்த பண்டிகைக் காலத்தில் ZEE5-ல் படம் வெளியாகிறது என்பது பெரும் மகிழ்ச்சி.”

இந்த கிறிஸ்துமஸில் மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரைத்  தவறவிடாதீர்கள் — டிசம்பர் 24 முதல் ZEE5-ல் மட்டும்.

“சிறை” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில், அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், மாறுபட்ட களத்தில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “சிறை”

வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு விழா , இன்று படக்குழுவினருடன் தமிழ்த்திரையுலகின் பல முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இந்நிகழ்வில்..

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் பேசியதாவது..,

முதலில் திருப்பூர் சுப்பிரமணியன் அண்ணனுக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன் அவரிடம் இரண்டு வருடங்களாக பேச வில்லை, ஆனால் நான் அழைத்தவுடன் எனக்காக நான் இல்லாமல் விழா நடக்குமா எனக் கேட்டு வந்தார். எஸ் ஏ சி சாரை சுப்பிரமணி அண்ணன் தான் எனக்கு அறிமுகப்படுத்தினார். இப்போது அவரது குடும்பத்தில் ஒருவனாக நான் இருக்கிறேன். கலைப்புலி தாணு, அம்மா சிவா, சுரேஷ் காமாட்சி என அனைவருக்கும் நன்றி.

சிறை ஒரு நிறைவான அனுபவம். முதன் முதலில் கதை கேட்ட போது, இயக்குநர் தமிழ் ஒரு ஒன் லைன் இருக்கிறது என்றார். அவர் சொல்லி முடித்தவுடன் இதில் என் பையனை நடிக்க வைக்கலாமா ? எனக்கேட்டேன், அவர் யோசித்துக் கொள்ளுங்கள் என்றார். இல்லை எனக்கு வெற்றிமாறன் படங்கள் பிடிக்கும் என் பையன் இந்த மாதிரி படத்தில் தான் அறிமுகமாக வேண்டும் என்றேன். பின் அவர் இயக்க முடியாத சூழலில் யாரை இயக்குநராக்கலாம் என்றபோது, சுரேஷை பரிந்துரைத்தார். வெற்றிமாறன் சாரிடம் கேட்டோம் தாராளமாகச் செய்யுங்கள் என வாழ்த்தினார். அடுத்து யாரை ஹீரோவாக போடலாம் என்ற போது, தமிழ் விக்ரம் பிரபு மட்டும் தான் இதற்குப் பொருத்தமானவர் என்றார். எடிட்டிங் பணிகளுக்கு பிலோமின் ராஜ் தான் வேண்டும் என்றேன், அவரும் சிறப்பாகச் செய்துள்ளார். மியூசிக் முதற்கொண்டு பிலோமின் மேற்பார்வையில் விட்டுவிட்டேன், இப்படத்தைத் தூக்கி நிறுத்தியது பிலோமின் தான். மாதேஷ் கேமரா அருமையாக செய்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ வெளியில் தெரிய ஒரே காரணம் விஜய் சார் தான். அவர் படம் மாஸ்டர் லியோ தான் எங்களுக்கு அடையாளம் அதை மறக்கவே மாட்டேன். இந்தப்படத்தை நீங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பீர்கள் எனத் தெரியும் அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் பேசியதாவது..,

இந்த புராஜக்டில் இருப்பது எனக்கு பெருமை. பிலோமின் தான் இந்த கதையை என்னிடம் கொண்டு வந்தார். இயக்குநர் சுரேஷிடம் நான் இல்லாவிட்டாலும் இந்தப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்கும் எனச் சொன்னேன். அவ்வளவு அருமையான கதை. இந்தப்படத்திற்கு உயிர் தந்தது நடிகர்கள் தான். விக்ரம் பிரபு, அனந்தா அக்‌ஷய் குமார் எல்லோரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப்படத்தில் என்னுடன் உழைத்த என் இசைக் கலைஞர்களுக்கு என் நன்றிகள், முக்கியமாக யுவன் சங்கர் ராஜாவுடன் வேலை பார்த்தது மிக அற்புதமான அனுபவமாக இருந்தது. அவருக்கு என் நன்றி. கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் நன்றி.

நடிகை ஆனந்தா பேசியதாவது..,

சிறை என் முதல் படம், எனக்கு மிகப்பெருமையாக உள்ளது. நான் விக்ரம் பிரபு சார் ஜோடியாக நடித்துள்ளேன். எனக்கு வாய்ப்பு தந்த லலித் குமார் சார், சுரேஷ் சார் எல்லோருக்கும் நன்றி. நான் திரைக்குடும்பம் இல்லை. நான் ஆசையில் தான் இந்தப்பட ஆடிஷன் சென்றேன். தமிழ் சார் தான் என்னைத் தேர்ந்தெடுத்தார். அவருக்கு என் நன்றி. ஒரு கனவு நனவானது போல இருக்கிறது அனைவருக்கும் நன்றி.

நடிகை அனிஷ்மா பேசியதாவது..,

இந்த மேடையில் இருப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் சின்ன வயதிலிருந்து நிறைய ஆசைப்பட்டுள்ளேன். எனக்கு இந்த வாய்ப்பு தந்த சுரேஷ் சாருக்கு, லலித் சாருக்கு நன்றி. விக்ரம் பிரபு சாருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். என்னை மிக நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். அக்‌ஷய் எனக்கு மிக ஆதரவாக இருந்தார். இப்போது நல்ல நண்பராகி விட்டார். இருவருக்கும் மதுரை சென்றது ஒரு ஸ்கூல் போன மாதிரி இருந்தது. சூரி சார் தான் எங்களை வழிநடத்தினார். இப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் தமிழ் பேசியதாவது..,

நன்றி சொல்லத்தான் இந்த மேடைக்கு வந்துள்ளேன். பிலோமின் தான் லலித் சாரிடம் என்னை அனுப்பி வைத்தார். அவர் என்னிடம் விசாரணை மாதிரி ஒரு படம் செய்ய வேண்டும் என்றார். அவர் நினைத்திருந்தால் அவர் மகனை எப்படி வேண்டுமானாலும் ஒரு படத்தில் நடிக்க வைக்கலாம் ஆனால் அவர் வெற்றிமாறன் படம் மாதிரி வேண்டும் என்றார். ஒரு ஒன்லைன் இருக்கிறது என்று உண்மை சம்பவமாகத் தான் இந்தக் கதை பற்றிச் சொன்னேன். இந்தக்கதையை நாம் செய்வோம் என்றார். அதன் பிறகு சுரேஷ் சார் வந்தார் வெற்றிமாறன் உதவியாளர் என்றால் ஓகே என்று லலித் சார் சொன்னார். நம் எழுதிய கதையை நாமே பார்த்து அழ வைப்பது மிகப்பெரிய விசயம், அதை சுரேஷ் சார் செய்துள்ளார். நாம் போய் கதை சொன்னால் கதை கேட்க ஒருத்தர் இருக்கிறார் என விக்ரம் பிரபு சாரிடம் போனேன், அவரும் கதை கேட்டு செய்கிறேன் என்றேன். இந்தக்கதை உண்மை சம்பவம். உண்மையானவர்களைப் பார்த்த ஒரே ஆள் நான் தான், ஆனால் அவர்கள் முகம் மறைந்து இப்போது அக்‌ஷய், அனிஷா முகம் தான் ஞாபகத்தில் வருகிறது. இதில் எல்லோரும் அவ்வளவு உழைத்தார்கள். பிலோமின், மாதேஷ் எல்லோரும் எங்களுடைய குடும்ப டீம். என்னை வடிவமைத்தவர் வெற்றிமாறன் சார் தான். விசாரணை ஷீட்டிங்கில் ஏதாவது கதை வைத்திருக்கிறாயா? என்றார். நான் டபுள் ஹீரோ கதை சொன்னேன். உன் பலமே போலீஸ் தான் அதில் உனக்குத் தெரிந்ததை வைத்துக் கதை எழுது என்றார். அப்படி உருவானது தான் டாணாக்காரன், இப்போது சிறை. நான் செய்திருந்தால் கூட இப்படி எடுத்திருக்க மாட்டேன். நான் வெற்றி சார் மாதிரி லாஜிக் பார்ப்பேன் ஆனால் சுரேஷ் மேஜிக்கை செய்து அசத்திவிட்டார். சுரேஷ் சார் என்னை விடச் சிறப்பாகச் செய்து ஜெயித்தது எனக்கு சந்தோசம். படம் ஜெயித்தால் இன்னும் சந்தோசம் நன்றி.

நடிகர் அக்‌ஷய் குமார் பேசியதாவது..,

எக்ஸாம் ஹாலுக்கு போனது போல் எல்லாம் மறந்து விட்டது. முதலில் பிலோமின் சாருக்கு நன்றி. அவர் மகனுக்குக் கூட இவ்வளவு செய்திருக்க மாட்டார். மாதேஷ் சாரும் அவர் டீமும் அவ்வளவு எனர்ஜியாக உழைப்பார்கள் அவர்களுக்கு நன்றி. ஜஸ்டின் சார் உங்கள் இசையில் நடித்தது மகிழ்ச்சி. சுரேஷ் சார், தமிழ் சார், எந்த நம்பிக்கையில் என்னை நடிக்க வைத்தீர்கள் எனத் தெரியவில்லை, நீங்கள் இது கஷ்டமாக இருக்கும் எனச் சொன்னீர்கள், ஆனால் எல்லாவற்றையும் சொல்லித் தந்தீர்கள் நன்றி. விக்ரம் பிரபு சார் என் முதல் ஷாட்டே உங்களுடன் தான். எனக்கு நிறைய நடிக்க கற்றுத் தந்தீர்கள். நன்றி. சூரி சார் என்னையும், அனிஷாவையும் வீட்டு வேலை செய், சமை என்றெல்லாம் சொன்னார் எதுக்குடா எனத் தோன்றியது, ஆனால் நடிக்கும் போது தான் புரிந்தது. நன்றி. அனிஷா எனக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கும் தமிழில் அறிமுக படம். வாழ்த்துக்கள். இறுதியாக அப்பா, கண்டிப்பான புரடியூசர். அவர் கண்டிப்பாக இருந்தது எனக்கு உதவியாக இருந்தது. என அம்மா மற்றும் குடும்பத்திற்கு நன்றி. கஷ்டமாக இருந்தாலும் எனக்குப் பிடித்துச் செய்தேன் எல்லோரும் உதவி செய்தார்கள் நன்றி.

இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசியதாவது..,

சிறை உண்மைக்கதை, உண்மையான மனிதர்களைப் பற்றிய படம். தமிழ் என்னிடம் சொல்லும்போது அப்படித்தான் சொன்னார். ஒரு படைப்பு அதற்குத் தேவையானதை அதுவே செய்து கொள்ளும் என்பார்கள் இப்படத்திலும் அது தான் நடந்தது. லலித் சார் வெற்றிமாறன் அஸிஸ்டெண்ட் என்றால் ஓகே என்றார், அவர் நம்பிக்கையை காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன். ஐஸ்டின் எத்தனை சண்டை போட்டாலும் அவர் மிகச்சிறப்பான இசையைத் தருவார். பிலோமின் மிகப்பெரிய உதவியாக இருந்தார். நடிகர்களை கையாள்வது எனக்குக் கஷ்டம் சூரி அதைப்பார்த்துக்கொண்டார். மாதேஷ் முதல் அனைத்து கலைஞர்களும் முழு உழைப்பைத் தந்துள்ளனர். ஒவ்வொரு டெக்னீஷியனும் அவரவர் வேலையை வெகு அர்ப்பணிப்புடன் செய்துள்ளார்கள். நடிகர்கள் எல்லோரது பெயரையும் சொல்வது கஷ்டம். எல்லோரும் குறிப்பிட்டு காலகட்டத்தில் முடிக்க பெரும் ஒத்துழைப்பு தந்தனர். விக்ரம் பிரபு சார் கிடைத்தது எனக்கு பெரும் அதிர்ஷ்டம். இக்கதாபாத்திரத்திற்காக உடலை ஏற்றி, மெச்சூர்டான ஏட்டாக அற்புதமாக நடித்தார். அக்‌ஷய் கதைக்குள் வந்து, இக்கதாப்பாத்திரத்திற்காக மிக கடினமாக உழைத்தார். உடலை குறைத்து, தாடி மீசை வளர்த்தி, அந்த கதாபாத்திரமாக மாறினார். ஒரு இன்னொசன்ஸ் முகம் தேவைப்பட்டது அனிஷ்மாவிடம் அது இருந்தது, நன்றாக நடித்துள்ளார். அனந்தாவும் அவர் பாத்திரத்தைச் சிறப்பாக செய்துள்ளார். நான் வீட்டிலிருந்ததை விட வெற்றிமாறன் சாருடன் இருந்தது தான் அதிகம். ரஞ்சித் அண்ணன் தான் என்னை வெற்றிமாறனிடம் அனுப்பினார். அவருக்கு நன்றி. இங்கு வந்து வாழ்த்தும் அனைத்து ஆளுமைகளுக்கும் நன்றி. இந்த படத்திற்குள் ஒரு பொறுப்பு இருக்கிறது அதைச் சரியாகச் செய்துள்ளேன் என நம்புகிறேன். அந்த பார்வையை எனக்குத் தந்த வெற்றிமாறன் சாருக்கு நன்றி. ரொம்ப முக்கியமான படம், நெருக்கமான படம். அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் கலைப்புலி தாணு பேசியதாவது..,

தம்பி வெற்றிமாறன் பட்டறையில் தீட்டப்பட்ட இரு திறமைகள் சுரேஷ், தமிழ். இருவரும் இணைந்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. படம் பார்த்தேன் மிக அற்புதமாக உள்ளது. விக்ரம் பிரபு காவலராகவே வாழ்ந்திருக்கிறார். அவரின் தந்தையிடம் பெருமையாகச் சொன்னேன். இப்படத்தைப் பற்றி எல்லோரிடமும் சொல்லி விளம்பரம் செய்து வருகிறேன். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

தயாரிப்பாளர் அருண் விஸ்வா பேசியதாவது..,

இந்த வருடம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் தயாரிப்பாளராக ஆக ஆசைப்பட்டதில்லை, இயக்குநராக ஆசைப்பட்டு ஏதோ ஒரு வழியில் தயாரிப்பாளர் ஆகிவிட்டேன். என்னை மிக மரியாதையாக நடத்திய லலித் சாருக்கு என் நன்றி. அக்‌ஷய் சில வருடங்கள் முன் துக்ளக் தர்பார் படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தார். அவர் மீண்டும் நடிப்பார் என நினைக்கவில்லை. இந்தப்படம் பார்த்துவிட்டேன், சமீபத்தில் ஒரு படம் பார்த்து விட்டு நண்பர்களுடன் 2 மணி நேரம் பேசியது இந்தப்படம் தான். லலித் சார் ஆரம்ப காலத்தில் பால் போட்டுக்கொண்டிருந்தார், அவர் சொந்த உழைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக இத்தனை பெரிய தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவர் மிக கண்டிப்பான தெளிவான தயாரிப்பாளர். அவர் ஒரு விசயத்தில் இறங்கினால் கண்டிப்பாக அதை முழுமையான படைப்பாக முடித்துக் கொண்டு வரும் தெளிவு இருந்தால் தான் செய்வார். இந்த வருடத்தில் நான் பார்த்த மிகச்சிறந்த படம் என்றால் அது சிறை தான். உங்களுக்கு முழுமையாக முக்கியமான கருத்தை வலுவாக சொல்லி, உங்களைத் திருப்தி படுத்தும் படமாக இருக்கும். யாருமே இதை முதல் இயக்குநரின் படமென சொல்ல முடியாது. சுரேஷ் அற்புதமாக இயக்கியுள்ளார். விக்ரம் பிரபு சாரில் ஆரம்பித்து, ஒவ்வொருவரும் அத்தனை சிறப்பாக நடித்துள்ளனர். முதல் ஃப்ரேமிலேயே இந்தப்படம் உங்களைக் கவர்ந்து விடும். இஸ்லாமிய பெயரை மையப்படுத்தி கடைசியாக வந்த படம் மாநாடு தான், ஆனால் இந்தப்படம் அதைத்தாண்டி ஒரு முக்கிய அம்சத்தைப் பேசும் படமாக வந்துள்ளது. வசூலிலும் இப்படம் ஜெயிக்கும் படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசியதாவது..,

சிறை படம் பார்க்கும் வாய்ப்பு லலித் சார் மூலம் வாய்ப்பு கிடைத்தது. படம் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது. தமிழை நினைத்து எனக்குப் பெருமையாக இருந்தது. எங்கள் இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வந்து, இந்த கதையை இவ்வளவு அழுத்தமாக எழுதியுள்ளார் என பெருமையாக இருந்தது. சுரேஷ் எனக்குப் பிடித்த படைப்பாளிகளின் லிஸ்டில் வந்துவிட்டார். விக்ரம் பிரபுவை மிகவும் பிடித்துவிட்டது. அன்னை இல்லம் இனி பிஸியாகிவிடும். வெங்கட்பிரபு My name is Khan, I am not a terrorist என சொன்ன
ஒன்லைன் தான் மாநாடு படம் செய்யக்காரணமாக இருந்தது. அதைப்போல வலுவான விசயத்தை இப்படம் பேசியுள்ளது. நாம் தமிழ் சினிமாவில் முஸ்லீம் இனத்தவரை கொடுமையாகவே காட்டி வருகிறோம். அதைப்பற்றி அழுத்தமாக இப்படம் பேசுகிறது. தமிழ் சினிமாவுக்கு நல்ல நடிகராக அக்‌ஷய் கிடைத்துள்ளார். இளம் நடிகர்கள் தமிழில் இல்லை அந்தக்குறையை அக்‌ஷய் போக்கவேண்டும். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள். பத்திரிக்கை ஊடக நண்பர்கள் இப்படத்திற்கு ஆதரவு தர வேண்டும்.

தயாரிப்பாளர் அம்மா சிவா பேசியதாவது..,

இப்படம் பார்த்துவிட்டு வெளியில் வந்தவுடன், நீங்கள் யார் அஸிஸ்டெண்ட் எனக் கேட்டேன், வெற்றிமாறன் என்றார். உண்மையில் வெற்றிமாறனுக்கு பெருமை சேர்த்துள்ளார். என் பார்வையில் முழுக்க முழுக்க இது இயக்குநரின் படம். சுரேஷ் உழைப்பு இல்லாமல் இது நடந்திருக்காது. ஒவ்வொரு சின்ன விசயத்தையும் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். அக்‌ஷய் அடுத்தடுத்து இது போல காதல் படங்கள் செய்ய வேண்டும். விக்ரம் பிரபு பார்த்துப் பிரமிப்பாக இருந்தது. போலீஸாக கம்பீரமாக வாழ்ந்திருக்கிறார். படம் மிக இயல்பாக பிரம்மாதமாக இருந்தது. தயாரிப்பாளர் லலித் மரியாதைக்குரிய நண்பர். அவருக்கு என் வாழ்த்துக்கள். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். சிறை தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது..,

லலித் எவ்வளவு கண்டிப்பானவரோ அந்தளவு அன்பானவர். கொரோனா காலத்தில் சினிமா மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்தது. எல்லோருக்கும் வேலை இல்லை. நான் தாணு சாருக்கு தான் பேசினேன், அவர் 100 முட்டை அரிசி அனுப்புகிறேன் அடுத்து ஒருவருக்கு, போன் செய் என்றார். லலித் சாருக்கு போன் செய்தவுடன் நேரில் வந்து 10 லட்ச ரூபாய் உதவி அளித்தார். அத்தனை அன்பானவர். தமிழ் சினிமா நன்றாக இருக்கிறது ஆனால் தயாரிப்பாளர்கள் தான் நன்றாக இல்லை. லலித் சார் மாதிரி எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும். சிறை படம் பார்த்தேன். முதல் மூன்று நிமிடங்களில் நிமிர்ந்து உட்கார வைத்துவிட்டது. விக்ரம் பிரபு தமிழில் முக்கியமான ஹீரோவாக வந்துவிடுவார். படம் பார்த்தவுடன் வெற்றிமாறன் படம் போல் இருக்கிறது என்று தோன்றியது. அவர் உதவியாளர் என்றவுடன் மகிழ்ச்சி. வெற்றிமாறனைத் தாண்டி மனித உணர்வுகளைச் சின்ன சின்ன விசயங்களைப் பார்த்துப் பார்த்து செய்துள்ளார். தமிழின் முக்கியமான இயக்குநராக வந்துவிடுவார். அக்‌ஷய் எப்படி இப்படி ஒரு ரோல் செய்தார் என ஆச்சரியமாக இருந்தது. மிக அற்புதமாக நடித்துள்ளார். முஸ்லீம் பெயரை இந்திய ஒருமைப்பாட்டை அழகாகப் பேசும் படைப்பாக இந்தப்படம் இருக்கிறது. இந்தப்படத்தை யாரும் விளம்பரப் படுத்த தேவையில்லை கண்டிப்பாக வெற்றி பெறும், படக்குழு அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி.

இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் பேசியதாவது…,

ஶ்ரீதர் சார் என் மானசீக குரு அதற்குப் பிறகு கவித்துவமான இயக்குநர் பாலுமகேந்திரா, அதற்குப்பிறகு எனக்குப் பிடித்த இயக்குநர் வெற்றிமாறன். பாலுமகேந்திரா சாயல் இல்லாமல் இவர் படம் அதிரடியாக இருக்கும், அவரிடம் 15 வருடம் ஒருத்தர் இருந்துள்ளார் எனில் அவரின் சாயல் இருப்பது ஆச்சரியம் இல்லை. கதையின் கதாப்பாத்திரதை நாம் உருவாக்குகிறோம், அதில் யார் நடித்தாலும் சரியாக இருக்க வேண்டும். அது வெற்றிமாறனிடம் இருக்கும். அவரிடமிருந்து வந்து அருமையான படைப்பை சுரேஷ் தந்துள்ளார். அக்‌ஷய் உங்களுக்கு முதல் படத்தில் நல்ல டீம் கிடைத்துள்ளது. நல்ல ரோல் கிடைத்துள்ளது, உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது, அதைத் தக்கவைத்துக் கொள்ளுங்கள். தயாரிப்பாளர் லலித் எதற்கு செலவு செய்ய வேண்டுமோ அதற்குச் சரியாக செலவு செய்வார். உலகம் முழுக்க தெரியக்கூடிய தயாரிப்பாளராக இருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள். எனக்குக் கல்யாணம் செய்து வைத்தது சிவாஜி சார், அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். விக்ரம் பிரபுவுக்கு முதல் படம் நன்றாக அமைந்தது அவருக்கு சமீபமாக நல்ல டீம் கிடைக்கவில்லை என வருத்தம் இருந்தது. இந்தப்படத்தில் கிடைத்தது எனக்கு சந்தோசம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

திருப்பூர் சுப்பிரமணியன் பேசியதாவது..,

ஒரு விழாவில் கதாநாயகனாக நடித்தவரை பற்றி ஆஹா ஓஹோ எனப் பேசுவதை விட, எப்போது இயக்குநரின் திறமையைப் பற்றிப் பேசுகிறார்களோ? அது தான் வெற்றிப்படம். இயக்குநரின் திறமையைப் பேசினால் அது வெற்றிப்படமாக இருக்கும். தமிழ் சினிமாவின் வெற்றிகள் குறைந்ததற்குக் காரணம் நடிகர்களின் தலையீடு தான். அவர்கள் தலையிடாமல் இருந்தால் தமிழ் சினிமா இன்னும் பெரிய வெற்றியைத் தரும். லலித் போன் செய்து வாழ்த்த அழைத்தார். படம் பார்த்தேன், நடிகர்கள் எல்லோரும் படத்தின் பாத்திரத்திற்கு உயிர் தந்துள்ளனர். இயக்குநர் அற்புதமாக இயக்கியுள்ளார். இவர்கள் அனைவரும் வெற்றி பெற வேண்டும். அக்‌ஷய் புதுமுகம் போல தெரியவில்லை அதற்குக் காரணம் இயக்குநர் தான். நல்ல கருத்துள்ள படத்தைத் தந்துள்ளார், எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

நடிகர் விக்ரம் பிரபு பேசியதாவது..,

சிறை மிகவும் முக்கியமான படம். அக்‌ஷய்க்கு இது பிள்ளையார் சுழி அவருக்கு வாழ்த்துக்கள். நல்லவேளை விசாரணை மாதிரி படம் கிடைக்கவில்லை. நீ மாட்டு சாணி தானே அள்ளினாய், நான் யானை சாணி அள்ளினேன். எல்லாமே அனுபவம் தான். டாணாக்காரன் படம் வெயிலில் உழன்று நடித்த போது, ஜிப்ரானிடம் போன் செய்து எப்படியெல்லாம் மியூசிக் செய்யப் போகிறீர்கள் எனப் பேசினேன். ஆனால் அந்தப்படம் கோவிடால் திரையரங்குக்கு வரவில்லை. இப்போது அதே டாணாக்காரன் டீமுடன் மீண்டும் இப்படம் கிடைத்தது சந்தோசம். உங்களுக்கும் வாழ்த்துக்கள். இம்மாதிரி ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தற்கு லலித் சாருக்கு நன்றி. என்னைத் தேர்ந்தெடுத்ததற்குத் தமிழ் சாருக்கு நன்றி. மாதேஷ் உங்கள் டீமுடன் வேலை பார்த்தது சந்தோசம். அனிஷ்மா, அனந்தா நீங்கள் கொஞ்ச நேரம் வந்தாலும் அட்டகாசமாக நடித்திருக்கிறீர்கள். நான் நடிக்கும் போது, சில காட்சிகளில் எப்படி இசை வரும் என நினைத்தேன். ஜஸ்டின் அற்புதமாகச் செய்துள்ளார். பிலோமின் கிரியேட்டிவ் ஹெட்டாக இருந்து இப்படத்தைச் செய்துள்ளார். நன்றி. சூரிக்கு நன்றி. இன்று இங்கு வந்து படத்தை வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. நான் பெருமைப்படுகிற டீம் அவர்களுடன் இருப்பது சந்தோசம். எல்லோருக்கும் நன்றி.

இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது..,

மிக சந்தோசமான மேடை இது. எங்க காலேஜில் இருந்து, உதவி இயக்குநராக என்னுடன் வந்தவர்களில் ஒருத்தர் சுரேஷ். அவர் வெற்றிமாறனிடம் வேலை பார்ப்பது தெரியும். அவர் சிறை படம் செய்கிறார் என்றவுடன் ஆவலாக இருந்தேன். லலித் சார் பையன் நடித்தது எல்லாம் தெரியாது. படம் பார்த்தேன் அது தந்த எக்ஸ்பீரியன்ஸ் தான் முக்கியம். ஒரு கலைஞனாக ஆர்ட்டுக்கு எவ்வளவு நேர்மையாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். சுரேஷ் கலைக்கு நேர்மையாக மிக முக்கியமான படத்தைத் தந்துள்ளார். வெற்றி சாரிடம் வேலை பார்த்து அவரிடம் கற்றுக்கொண்டு படம் செய்தாலும், இந்தப்படம் எனக்கு ஆச்சரியம் தந்தது. அந்த மனிதர்களுடன் வாழ்க்கைக்குள் நெருங்கி கூட்டிப்போனது. ஒரு வாழ்க்கையாக அதன் இயல்பைப் பேசியதை முக்கியமாகப் பார்க்கிறேன். எனக்கே கதாநாயகி எப்படியாவது கதாநாயகனுடன் சேர்ந்துவிட வேண்டுமென பதட்டம் வந்துவிட்டது. அட்டகாசமான மேக்கிங் இருந்தது. எடிட்டிங் ரிதமுடன் இருந்தது. ஜஸ்டின் பின்னணி இசை அற்புதமாக இருந்தது. கலை இயக்குநர் எங்கள் காலேஜ் செட் தான். எல்லோருக்கும் வாழ்த்துக்கள். மாதேஷ் ஊரை காட்டிய விதம் அருமை, இந்தப்படத்தில் நெருங்கி பார்க்க முடிந்தது. மிகவும் பிடித்தது. அக்‌ஷய் நன்றாகச் செய்துள்ளார். விக்ரம் பிரபு இப்படத்தில் மிகவும் எதார்த்தமாகப் புதிதாக நடித்திருந்தார், அவருக்கு வாழ்த்துக்கள். அனிஷ்மா மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். தமிழுடைய திரைக்கதை மிக நன்றாக இருந்தது. காவலர்கள் இவ்வளவு நல்லவர்களா ? என ஆச்சரியமாக இருந்தது. உண்மைக்கதை எனும் போது ஒத்துக்கொள்ளத் தான் சுரேஷ் மிக அழகாக இப்படத்தை எடுத்துள்ளார். இப்படம் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இப்படம் எல்லோருக்கும் பிடிக்குமென நம்புகிறேன், இப்படத்தை நம்பி எடுத்த லலித் சாருக்கு நன்றிகள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசியதாவது..,

இம்மேடை எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமானது. இந்த வருடத்தில் என் உதவியாளராகள் படம் தந்து வருகிறார்கள். சுரேஷ் மாதிரி இயல்பான மிக நிதானமான ஆளைப் பார்க்க முடியாது. நான் செய்வது தவறாக இருந்தாலும், அதை சொல்லும் விதத்தில் அவர் நேர்மை இருக்கும். மனிதர்களைக் கையாளும் திறமை அவரிடம் உண்டு. அவருக்கு லலித் சார் கார் பரிசு தருகிறார். முதல் படம் எடுக்கும் போது இருக்கும் அழுத்தம் எல்லாத்தையும் விட்டுவிட்டு , மிக இயல்பாக அழகாகப் படத்தை எடுத்துள்ளார். இந்தப்படத்தில் போலீஸ் ஸ்டேஷன் சீன் உள்ளது அதைச் சரியாக எடுத்தால் படம் மிகப்பெரிய படமாக வரும் என்றேன். அதைத்தான் ரஞ்சித் பாராட்டினார். ஒரு விசயத்தை பிரச்சனையை அணுகுவதில், தீர்ப்பதில், அவருக்கு தனித்திறமை உள்ளது. ஆடுகளம் முடித்தவுடன் வந்து சேர்ந்தவர், என்னுடனே இருந்திருக்கிறார். சிறை படம் பார்த்துவிட்டேன். என்னுடன் இருந்தவர்கள் படம் செய்தால் என்ன தப்பு இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பேன். ஆனால் படம் பார்த்த எல்லோரும் என்னைக் கூப்பிட்டு பாராட்டினார்கள். படம் எல்லோருக்கும் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பெரிய மகிழ்ச்சி தருகிறது. தமிழுக்கு அவர் வாழ்க்கையில் போலீஸ் நடைமுறை சார்ந்து நிறைய அனுபவங்கள் இருப்பதால் அது மிகப்பெரிய தாக்கம் கொடுக்கிறது. படத்தில் எடிட் மிக நன்றாக இருந்தது. படத்திற்கு மிக முக்கிய பலமாக மியூசிக் இருந்தது. முதல் ஐந்து நிமிடம் தான் விக்ரம் பிரபு தெரிகிறார் அதன் பிறகு கதாப்பாத்திரம் தான் தெரிகிறது. எல்லா கதாபாத்திரங்களும் அவ்வளவு அற்புதமாக நடித்துள்ளனர். எல்லாம் ஒன்றாக இணைந்து மிக அழகான படைப்பாக வந்து, நமக்குள் அழுத்தமான கேள்வியைக் கேட்கிறது. அனிஷ்மா சிரிப்பு அவ்வளவு அழகாக இருக்கிறது. அக்‌ஷய் அந்த கதாபாத்திரத்திற்குள் காணாமல் போயிருக்கிறார். அவர் இயல்பாக நடித்துள்ளார். இத்தனை பேரின் உழைப்பும் படத்திற்குப் பலமாக அமைந்துள்ளது. சுரேஷ் எடிட்டரின் உதவி பெரிய பலமாக இருப்பதாகச் சொன்னார், பிலோமின் மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். இவ்வளவு நாட்களுள் படம் எடுப்பது அவ்வளவு எளிதல்ல, அதை சுரேஷ் சாதித்துள்ளார். இப்படம் பார்த்த அத்தனை பேருக்கும் மகிழ்ச்சியைத் தருவது சந்தோசம். இந்த வாய்ப்பை சுரேஷுக்கு தந்ததற்கு நன்றி. படம் வெளியாகும் முன் கார் தருவதும் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் உண்மையில் சந்தித்த அனுபவத்தை வைத்து, இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனின் இணை இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை எழுதி இயக்கியுள்ளார்.

நடிகர் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்க, ஜோடியாக நடிகை அனந்தா (Anantha ) நடித்துள்ளார். இப்படத்தில் தயாரிப்பாளர் SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக அனிஷ்மா (Anishma) நடித்துள்ளார்.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் SS லலித்குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். ஸ்டண்ட் காட்சிகளை பிரபு வடிவமைத்துள்ளார். நிர்வாக தயாரிப்பாளராக அருண் K மற்றும் மணிகண்டன் பணியாற்றியுள்ளனர்.

சிறை படத்தின் வெளியீடு நெருங்கி வரும் நிலையில் படைப்பின் மீதான பெரும் மகிழ்ச்சியில், பட வெளியீட்டுக்கு முன்னதாகவே செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio)* தயாரிப்பாளர் SS லலித் குமார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி அவர்களுக்கு விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக வழங்கினார்.

இப்படம் வரும் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.