Breaking
April 26, 2025

Cinema

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா நடிக்கும் # BB4 – படத்திற்கு ‘அகண்டா – 2 தாண்டவம்’ என பெயரிடப்பட்டிருக்கிறது

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா – பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு – தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் – எம். தேஜஸ்வினி நந்தமூரி – கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் படத்திற்கு ‘அகண்டா 2- தாண்டவம் ‘ என பெயரிடப்பட்டு , அதன் தொடக்க விழா இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் பிளாக் பஸ்டர் ஹிட் இயக்குநர் பொயபட்டி ஸ்ரீனு ஆகியோரின் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் படத்திற்கு, #BB4 அகண்டா 2 தாண்டவம் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இது அவர்களின் பரபரப்பான பிளாக்பஸ்டர் அகண்டா திரைப்படத்தின் தொடர்ச்சியாக உருவாகிறது. ராம் அச்சந்தா மற்றும் கோபிசந்த் அச்சந்தா ஆகியோர் 14 ரீல்ஸ் பிளஸ் பேனரில் படத்தைத் தயாரிக்கின்றனர், அதே நேரத்தில் எம் தேஜஸ்வினி நந்தமுரி இந்த பான் இந்தியா திரைப்படத்தை வழங்குகிறார்.

படக்குழு மற்றும் முக்கிய விருந்தினர்கள் முன்னிலையில் அகண்டா 2 இன்று சிறப்பாக தொடங்கப்பட்டது. முஹூர்த்தம் ஷாட்டுக்கு, தேஜஸ்வினி கேமராவை சுவிட்ச் ஆன் செய்ய, பிராமணி கிளாப்போர்டு அடித்தார். முஹூர்த்தம் ஷாட்டுக்கு பாலகிருஷ்ணா ஒரு பவர்ஃபுல் டயலாக்கைச் சொன்னார்.

அகண்டாவில் கதாநாயகியாக நடித்த பிரக்யா ஜெய்ஸ்வால் இப்படத்திலும் பங்கேற்கிறார். மேலும் அவர் பிரமாண்ட துவக்க விழாவிலும் கலந்து கொண்டார்.

நந்தமுரி ராமகிருஷ்ணா அகண்டா 2 டைட்டில் தீமை வெளியிட்டார், இது கதையில் பிணைக்கப்பட்ட ஆன்மீக கூறுகளை வெளிப்படுத்தும் அதே நேரம், எஸ் தமனின் அற்புதமான ஸ்கோர் உண்மையிலேயே தனித்து நிற்கிறது, இந்த தீம் படத்தின் பிரம்மாண்டத்தை எடுத்துக்காட்டுகிறது.

நந்தமூரி பால கிருஷ்ணாவை மாஸாக திரையில் காட்சிப்படுத்துவதில் பொயபட்டி ஸ்ரீனு தனித்துவமான திறமை மிக்கவர். அதிலும் நந்தமூரி பாலகிருஷ்ணாவை மாஸ் மகாராஜாவாக காட்சிப்படுத்தும் வகையில், ஐன் சக்தி வாய்ந்த திரைக்கதையை அவர் எழுதியிருக்கிறார். இத்திரைப்படத்தில் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர். ஸ்ரீ ராம் பிரசாத் மற்றும் சந்தோஷ் டி டெடகே ஆகிய இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்கிறார்கள். ஏ. எஸ். பிரகாஷ் கலை இயக்குநராகவும், தம்மி ராஜு பட தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள். ‘அகண்டா’ படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்த எஸ். தமன் அதன் இரண்டாம் பாகத்திற்கும் இசையமைக்கிறார்.

இந்திய சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் இதுவும் ஒன்றாகும், ஒவ்வொரு திரைப்பட ரசிகரும் இந்த பரபரப்பான கூட்டணியின் வருகைக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அகண்டா 2 க்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கும், மேலும் இந்த அகண்டா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

நடிகர்கள்: மாஸ் கடவுள் நந்தமுரி பாலகிருஷ்ணா, பிரக்யா ஜெய்ஸ்வால்

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : பொயபட்டி ஸ்ரீனு
தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா & கோபி அச்சந்தா
தயாரிப்பு நிறுவனம் : 14 ரீல்ஸ் பிளஸ்
வழங்குபவர் : எம். தேஜஸ்வினி நந்தமூரி
இசை : எஸ். தமன்
ஒளிப்பதிவு : சி. ராம் பிரசாத் & சந்தோஷ் டி டெடகே
கலை இயக்கம் : ஏ.எஸ். பிரகாஷ்
படத்தொகுப்பு : தம்மி ராஜு
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!

வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாக நடிக்கிறார்கள், சிட்டாடல் உலகிலிருந்து வெளிவரும் இந்த இந்தியத் தொடரை டி2ஆர் பிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ ஆகியவை தயாரித்துள்ளன.

சிட்டாடல்: ஹனி பன்னி நவம்பர் 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் திரையிடப்படுகிறது

மும்பை, இந்தியா—அக்டோபர் 15, 2024- மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஒரிஜினல் தொடரான ​​சிட்டாடல்: ஹனி பன்னியின் மனங்கவரும் அதிரடி டிரெய்லரை இந்தியாவில் முன்னிலையில் உள்ள பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ, இன்று வெளியிட்டது. சிட்டாடல் பிரிவில் வெளிவரும் இந்த இந்தியத் தொடரை ராஜ் & டிகே (ராஜ் நிடிமோரு மற்றும் கிருஷ்ணா டிகே) இயக்கியுள்ளனர் மற்றும் ராஜ் & டிகே உடன் இணைந்து சீதா ஆர். மேனன் இதனை எழுதியுள்ளார். இந்தத் தொடரை டி2ஆர் ஃபிலிம்ஸ், அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ, ஏஜிபிஓவைச் சேர்ந்த ஆண்டனி ருஸ்ஸோ, ஜோ ருஸ்ஸோ, ஏஞ்சலா ருஸ்ஸோ-ஓட்ஸ்டாட் மற்றும் ஸ்காட் நேம்ஸ், டேவிட் வெயில் (ஹண்டர்ஸ்) உடன் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக இணைந்து சிட்டாடல்: ஹனி பன்னி-ஐ தயாரித்துள்ளனர் மற்றும் இவர்கள் சிட்டாடல் பிரிவின் அனைத்துத் தொடர்களையும் உருவாக்குகிறார்கள். மிட்நைட் ரேடியோவும் ஒரு நிர்வாக தயாரிப்பாளராகும். இத் தொடரில் திறமை வாய்ந்த வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களாகவும், பல்துறை வல்லுநர் கே கே மேனன், சிம்ரன், சாகிப் சலீம், சிக்கந்தர் கெர், சோஹம் மஜும்தார், சிவன்கித் பரிஹார் மற்றும் காஷ்வி மஜ்முந்தர் ஆகியோரை இணை நடிகர்களாகவும் நடித்திருக்கும் இந்த சிட்டாடல்: ஹனி பன்னி… பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நவம்பர் 7ஆம் தேதி திரையிடப்பட உள்ளது.

90களின் துடிப்பான ஒரு திரைக்கதை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ள உற்சாகமூட்டும் மற்றும் ஆவலைத் தூண்டும் இந்த ஸ்பை த்ரில்லரின் முன்னோட்டமாக இந்த டிரைலர் வெளி வந்துள்ளது, இதில் அதிரடி ஆக்‌ஷன், ஹை-ஆக்டேன் ஸ்டண்ட் மற்றும் இருக்கை நுனிக்கு நம்மை அழைத்துச் செல்லும் உற்சாகம் ஆகியவை நிறைந்துள்ளன.

ஸ்டண்ட்மேன் பன்னி (வருண் தவான்) வாய்ப்புகளைத் தேடும் நடிகை ஹனியை (சமந்தா) துணை நடிகராக நியமிக்கிறார். ​அவர்கள் அதிரடி, உளவு மற்றும் துரோகம் ஆகியவற்றின் இடர் நிறைந்த உலகத்திற்குள் தள்ளப்படுகிறார்கள். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவர்களது ஆபத்தான கடந்த காலத்தை அலசும் போது, ​மனமொடிந்து ​பிரிந்த ஹனியும் பன்னியும் மீண்டும் ஒன்றிணைந்து தங்கள் இளம் மகள் நதியாவைப் பாதுகாக்க போராடுகிறார்கள்.

“டீசருக்கு கிடைத்த அமோக வரவேற்புக்குப் பின், நிகழ்ச்சியின் மீதான ஆர்வமும் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருண், சமந்தா மற்றும் ராஜ் & டிகே ஆகியோருடன் அவர்களது ரசிகர்களும் நவம்பர் 7ஆம் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். ரசிகர்களின் மனம் கவரும் வகையிலான சிட்டாடல்: ஹனி பன்னியின் வியக்கத்தக்க உலகத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட இதுவே சிறந்த நேரம் என நாங்கள் கருதினோம். ராஜ் & டிகே இந்த ஹை-ஆக்டேன் ஸ்பை த்ரில்லரில் எப்போதும் போலவே தங்கள் திறமையையும், அனைவரையும் கவரும் ஆற்றலையும் வெளிப்படுத்தி உள்ளனர், இது எங்கள் பார்வையாளர்களுக்கு ஒரு புதிய த்ரில்லிங் நிறைந்த பயணமாக இருக்கும்,” என்று இந்தியாவின் பிரைம் வீடியோவின் ஒரிஜினல்ஸ் தலைவர் நிகில் மதோக் கூறினார்.

ராஜ் மற்றும் டி.கே கூறுகையில் “சிட்டாடல்: ஹனி பன்னி எங்களுக்கு ஒரு முக்கியமான பிராஜக்ட் ஆகும், இது இதுவரை முயலாத உளவாளிகள் மற்றும் உளவு பார்க்கும் உலகில் பயணிக்க எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது, நாங்கள் பல பிராஜக்ட்களைச் செய்திருந்தாலும், சிட்டாடல்: ஹனி பன்னி எங்கள் முதல் கூட்டுப்பணியாகும். இது ருஸ்ஸோ பிரதர்ஸ் போன்ற படைப்பாற்றல் சக்திகளுடனும், உலகெங்கிலும் உள்ள திறமையான திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் படைப்பாளர்களுடனும் இன்னைந்து செயலாற்றும் அற்புதமான மதிப்புமிக்க படைப்பு அனுபவமாக அமைந்தது.” என்றனர்.

“பன்னி நான் இதுவரை நடித்த கதாபாத்திரங்கள் போலன்றி வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஒரு உளவாளியாக, பன்னி.. இரட்டை வாழ்க்கை நடத்துவது மட்டுமல்லாமல், அவரது ஆளுமையின் ஒவ்வொரு அம்சமும் இரண்டு தனித்துவமான பக்கங்களைக் கொண்டுள்ளது. ஒரு நடிகராக இது எனக்கு மிகவும் உற்சாகமூட்டுவதாக இருந்தது. நுணுக்கமாக பிணைக்கப்பட்டுள்ள இக்கதை களத்திற்கு ஏற்ப நான் உருவகப்படுத்திய அனுபவங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் கலவையைப் புனைந்து அதே சமயம் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கடுமையான ஸ்டண்ட் மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு தயாராக வேண்டிய சூழல். இது எனது மிகவும் சவாலான நடிப்புகளில் ஒன்றாகும். மேலும் பன்னியை உயிர்ப்பிக்க வாய்ப்பளித்த பிரைம் வீடியோ, ராஜ் & டிகே மற்றும் ஏஜிபிஓ ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று வருண் தவான் கூறினார்.

சமந்தா கூறுகையில், “மனங்கவரும் கதைக்களம், செழுமையான கதாபாத்திர ஆழம் மற்றும் சர்வதேச தரத்திற்கு போட்டியாக விளங்கும் சண்டைக்காட்சிகளுடன் ஒரு ஆக்‌ஷன் நிரம்பிய பொழுதுபோக்கின் ஒரு பகுதியாக இருக்கும் வாய்ப்பும், இதில் ஒரு முக்கியப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்துள்ளது. இதிலுள்ள உளவு கதைகளின் தொகுப்பு, இந்த பிராஜெக்ட்டிற்குள் என்னை ஈர்த்தது. இந்தியாவில் மட்டுமல்லாது, பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும். பல நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்கள் இந்தத் தொடரை முழுமையாக ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

SDT18 திரைப்படத்தின் இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி (ஆர்கேடி உலகில் ஒரு பயணம்) வீடியோ வெளியாகியுள்ளது.

மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், ரோஹித் கேபி, கே நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி, பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் #SDT18 திரைப்படத்தின் இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி (ஆர்கேடி உலகில் ஒரு பயணம்) வீடியோ வெளியாகியுள்ளது.

விருபக்‌ஷா மற்றும் ப்ரோ என தொடர்ந்து, பிளாக்பஸ்டர் வெற்றிப்படங்களைத் தந்த மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், தற்போது அறிமுக இயக்குனர் ரோஹித் கேபி இயக்கத்தில் மிகப்பெரிய கேன்வாஸில் உருவாகி வரும் #SDT18 எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

முன்னதாக பான் இந்திய வெற்றிப்படமான பிளாக்பஸ்டர் ஹனுமான் திரைப்படத்தை வழங்கிய பிரைம்ஷோ எண்டர்டெயின்மெண்ட்டின் சார்பில், கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில், பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர்.

சாய் துர்கா தேஜுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து, தயாரிப்பாளர்கள் “இன்ட்ரூட் இன்டு தி வேர்ல்ட் ஆஃப் ஆர்கேடி” என்ற தலைப்பில் ஒரு அற்புதமான வீடியோவை வெளியிட்டுள்ளனர், இது படத்தின் கதைக்களத்தை விவரிக்கும் வகையில், படத்தினைப் பற்றிய ஒரு பார்வையை வழங்குகிறது. ஒரு நிலம் நீண்ட காலமாக தீய சக்திகளின் பிடியில் சிக்கித் தவிக்கிறது, அதன் மீட்பரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறது. தற்போது அந்த காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது.

இந்த அற்புதமான உலகத்தை உயிர்ப்பித்திருக்கும் தயாரிப்புக் குழுவின் அர்ப்பணிப்பு முயற்சிகளை, இந்த வீடியோ நமக்கு எடுத்துக் காட்டுகிறது. பிரமிக்க வைக்கும் செட்கள், சிக்கலான வடிவம் கொண்ட ஆயுதங்கள் மற்றும் நடிகர்கள் பாத்திரங்களாக மாற்றப்படுவதை பார்வையாளர்கள் இந்த வீடியோவில் காணலாம் , குறிப்பாக வீடியோவின் கடைசி பிரேம்கள் பிரமிக்க வைக்கின்றன, கதாநாயகன் பிரம்மாண்டமாக எழுச்சி அடையும் தருணத்தை, படம் பிடித்து காட்டுகிறது. இது படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது.

ஆர்கேட் உலகத்துக்கான இந்த ஸ்னீக் பீக், அபாரமான ஆர்வத்தைத் தூண்டுகிறது, குறிப்பாக சாய் துர்கா தேஜ் பீஸ்ட் மோடில் இருப்பது, நம்மை சிலிர்க்க வைக்கிறது. இது உண்மையிலேயே ஒரு அபாரமான படைப்பு என்பதை உணர்த்துகிறது.

சாய் துர்கா தேஜ் முதன்முறையாக ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த அதிரடி, பீரியட்-ஆக்சன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்கிறார்.

இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.

நடிகர்கள்: சாய் துர்கா தேஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம் : ரோஹித் கே.பி தயாரிப்பாளர்கள்: கே நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி
தயாரிப்பு : பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் மக்கள் தொடர்பு : யுவராஜ்

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு நான்காவது முறையாக இணையும் புதிய படத்தின் தொடக்க விழா

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா- பிளாக் பஸ்டர் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு – தயாரிப்பாளர்கள் ராம் அச்சந்தா + கோபி அச்சந்தா – 14 ரீல்ஸ் பிளஸ் நிறுவனம் – எம். தேஜஸ்வினி நந்தமூரி ஆகியோர் கூட்டணியில் தயாராகும் #BB4 எனும் திரைப்படத்தின் தொடக்க விழா எதிர்வரும் 16 ஆம் தேதி காலை 10 மணி அளவில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குநர் பொயப்பட்டி ஸ்ரீனு இந்தக் கூட்டணி ..‌இந்திய சினிமாவின் அற்புதமான கூட்டணிகளில் ஒன்று. இந்த டைனமிக் கூட்டணி – ஏற்கனவே ‘சிம்ஹா’, ‘ லெஜண்ட்’, ‘அகண்டா’ என மூன்று பிரம்மாண்டமான வெற்றிப் பெற்ற படைப்புகளை வழங்கி உள்ளது. இந்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் எதிர்பார்ப்புகளை கடந்து பாக்ஸ் ஆபீசில் வசூல் சாதனையை படைத்தது.

இந்நிலையில் பாலகிருஷ்ணா – பொயப்பட்டி ஸ்ரீனு இருவரும் நான்காவது முறையாக ‘# BB4 ‘ எனும் படத்தில் மீண்டும் இணைகிறார்கள். இது தொடர்பான அறிவிப்பு நந்தமூரி பாலகிருஷ்ணா பிறந்த நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த திரைப்படத்தை ‘லெஜண்ட்’ படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களான ராம் அச்சந்தா மற்றும் கோபி அச்சந்தா ஆகியோர், 14 ரீல்ஸ் பிளஸ் எனும் நிறுவனத்தின் சார்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை எம். தேஜஸ்வினி நந்தமூரி வழங்குகிறார்.

நவராத்திரி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் இந்த தருணத்தில் எதிர்வரும் பதினாறாம் தேதி இப்படத்திற்கான பிரம்மாண்டமான தொடக்க விழாவில் வெளியீட்டிற்கான அறிவிப்பினை தயாரிப்பாளர்கள் வெளியிடுகிறார்கள். அங்கு இந்த திரைப்படத்தைப் பற்றிய கூடுதல் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்..

BB4 திரைப்படம் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ளது. நடிகர் பாலகிருஷ்ணாவின் நடிப்பில் இதுவரை அதிக பொருட்செலவில் தயாரான திரைப்படமாக இந்தப் படம் அமைய உள்ளது

நடிகர்கள் : ‘மாஸ் கடவுள்’ நந்தமூரி பால கிருஷ்ணா

தொழில்நுட்பக் குழு :

எழுத்து & இயக்கம் : பொயப்பட்டி ஸ்ரீனு
தயாரிப்பாளர்கள் : ராம் அச்சந்தா -கோபி அச்சந்தா
தயாரிப்பு நிறுவனம் : 14 ரீல்ஸ் பிளஸ்
வழங்குபவர் : எம். தேஜஸ்வினி நந்தமூரி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

இயக்குநர் ஷங்கரின் “கேம் சேஞ்சர்” 10 ஜனவரி 2025 அன்று வெளியாகிறது !!

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்,
குளோபல் ஸ்டார் ராம் சரண் கூட்டணியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில், தில் ராஜு தயாரிப்பில், தென்னிந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், கேம் சேஞ்சர் திரைப்படம், ஜனவரி 10, 2025 சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக வெளியாகிறது. பட வெளியீட்டை அறிவிக்கும் விதமாக, ஒரு அசத்தலான போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த போஸ்டரில் ராம் சரண் ஸ்டைலிஷான லுக்கில் காட்சியளிக்கிறார், அவரது தோற்றம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இப்படத்தில் நேர்மைமிக்க ஐஏஎஸ் அதிகாரி ராம் நந்தன் எனும் கதாபாத்திரத்தில், இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். நட்சத்திர நடிகை கியாரா அத்வானி நாயகியாக நடித்துள்ளார், நடிகை அஞ்சலி ஃப்ளாஷ்பேக் காட்சியில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில், கேம் சேஞ்சர் ஒரு அற்புதமான காட்சி அனுபவமாக உருவாகியுள்ளது. தனித்துவமான வெற்றிப் படங்களை வழங்கிய இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இப்படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். சாய் மாதவ் புர்ரா அட்டகாசமான வசனங்களை வழங்கியுள்ளார். இசையமைப்பாளர் தமன் இசையும், எஸ்.திருநாவுக்கரசுவின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்ந்துள்ளது.

தயாரிப்பாளர்கள் கேம் சேஞ்சர் திரைப்படத்தை, மிகப்பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர். ஹைதராபாத், நியூசிலாந்து, ஆந்திரப் பிரதேசம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்களில் உள்ள பிரமிக்க வைக்கும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு கண்கவர் அனுபவமாக இருக்கும்.

அதிரடி ஆக்‌ஷன் மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன், கேம் சேஞ்சர் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகளின் சிக்கல்களை பேசும் படமாக உருவாகியுள்ளது. கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமில்லாமல், அழுத்தமான கதையுடன் அட்டகாசமான அனுபவமாக இப்படம் உருவாகியுள்ளது.

கேம் சேஞ்சருக்கான எதிர்பார்ப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது, படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த உற்சாகத்தை கூட்டும் வகையில், தயாரிப்பாளர்கள் டீசர்கள், போஸ்டர்கள் மற்றும் ஃபிலிம் மேக்கிங் காட்சிகள் என ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகின்றனர். முதல் இரண்டு பாடல்களான ஜருகண்டி மற்றும் ரா மச்சா மச்சா ஆகியவை சார்ட்பஸ்டர்களாக அமைந்தன. ரா மச்சா மச்சா யூடியூப்பில் 55 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதன் மூலம் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாக சாதனை படைத்துள்ளது.

நட்சத்திர நடிகர்கள், திறமையான குழுவினர் மற்றும் வசீகரிக்கும் கதைக்களத்துடன், கேம் சேஞ்சர் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெறத் தயாராக உள்ளது. படத்தின் ரிலீஸை நோக்கி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சங்கராந்தி பாக்ஸ் ஆபிஸில் இப்படம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திரைப்படம்: கேம் சேஞ்சர்

நடிகர்கள்: ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், ஜெயராம், சுனில், நவீன் சந்திரா மற்றும் பலர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள்
இயக்கம் : ஷங்கர் சண்முகம்
தயாரிப்பாளர்கள்: தில் ராஜு, சிரிஷ் எழுத்தாளர்கள்: சு.வெங்கடேசன், விவேக்
கதைக்களம்: கார்த்திக் சுப்புராஜ்
இணை தயாரிப்பாளர்: ஹர்ஷித்
ஒளிப்பதிவு: எஸ்.திருநாவுக்கரசு
இசை: எஸ்.தமன்
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
லைன் புரொடியூசர்ஸ் : நரசிம்ம ராவ். என், எஸ்.கே.ஜபீர்
கலை இயக்கம் : அவினாஷ் கொல்லா
சண்டைக் காட்சி இயக்குநர் : அன்பறிவு
நடன இயக்குநர்: பிரபு தேவா, கணேஷ் ஆச்சார்யா, பிரேம் ரக்ஷித், போஸ்கோ மார்டிஸ், ஜானி, சாண்டி
பாடலாசிரியர்கள்: ராமஜோகையா சாஸ்திரி, ஆனந்த ஸ்ரீராம், காசர்லா ஷியாம்
பேனர்: ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘#நானிஓடேலா2 ‘படத்தின் தொடக்க விழா

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா – தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி – எஸ் எல் வி சினிமாஸ் – கூட்டணியில் உருவாகும் ‘#நானிஓடேலா 2 ‘எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது.

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, ‘தசரா’ எனும் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா மற்றும் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரியுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக இணைகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ #நானி ஓடேலா 2 ‘ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ‘இந்த திரைப்படம் ‘தசரா’ திரைப்படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும்’ என நானி அண்மையில் தெரிவித்திருந்தார்.

‘தசரா’ திரைப்படம் ஏராளமான விருதுகளை குவித்து பெரும் புகழை பெற்றுள்ளதால், இந்த பான் இந்திய திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு உற்சாகத்துடன் அதிகரித்துள்ளது. மேலும் இந்த திரைப்படத்திற்கான தொடக்க விழாவை நடத்த தயாரிப்பாளர்கள் நவராத்திரி திருவிழாவை தேர்வு செய்தனர்.

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா அழுத்தமான மற்றும் வாழ்க்கையை விட பெரிய கதையை அடர்த்தியான திரைக்கதையுடன் வடிவமைத்துள்ளார். இதில் நானியை இதற்கு முன் கண்டிராத வகையில் மாஸான கதாபாத்திரத்தில் காட்சிப்படுத்தவிருக்கிறார். இதற்காக நடிகர் நானி.. அவருடைய தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறார். இது அவரது நடிப்பில் தயாராகும் மிகவும் கொடூரமான கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். பன்முக ஆளுமைக்கு பெயர் பெற்ற நானி- இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைந்துள்ளார். வெற்றிகரமான மற்றும் டைனமிக் கூட்டணியுடன் தயாராகும் இந்த திரைப்படம்.. நானியின் திரையுலக பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமாக இருக்கும்.

நடிகர்கள் : நானி

தொழில்நுட்பக் குழு:

எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓடேலா
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : எஸ் எல் வி சினிமாஸ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

மெகாஸ்டார் சிரஞ்சீவி, வசிஷ்டா, UV கிரியேஷன்ஸ் – இணைந்து வழங்கும் “விஸ்வம்பரா”

மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு ஃபேண்டஸி சாகசத் திரைப்படத்தில் நடித்து நீண்ட காலமாகிவிட்டது, ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அவர், நம்மை புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், பிரம்மாண்டமான
ஃபேண்டஸி சாகசத் திரைப்படமான, விஸ்வம்பரா படத்தில் நடித்து வருகிறார். பிம்பிசாராவின் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, தனது ஆதர்ஷ நாயகனை இப்படத்தில் இயக்குகிறார் இயக்குநர் வசிஷ்டா. முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது, முன்னதாக ரசிகர்களுக்கு உறுதியளித்தபடி, தயாரிப்பாளர்கள் தசரா பண்டிகையை முன்னிட்டு, படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர்.

பார்வையாளர்களைப் பிரமிக்க வைக்கும் டீசர் ரசிகர்களைப் பிரபஞ்சத்திற்கு அப்பாற்பட்ட மெகா மாஸ் ஃபேண்டஸி உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இந்த டீசர் இது ஒரு மாய நிலப்பரப்பில் துவங்குகிறது. மீன் வடிவ பறவைகள் வானத்தில் பறக்க, கர்ஜிக்கும் காண்டாமிருகங்கள் அங்கு உலவுகிறது. ஒரு தீய சக்தி இந்த சாம்ராஜ்யத்தின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க அச்சுறுத்துகிறது. என்ன நடக்கும் ? காலம் தான் அந்த கேள்விக்குப் பதிலளிக்க வேண்டும்.

இந்த இருளை எதிர்கொள்ள முன் எப்போதும் இல்லாத வகையில் ஒரு நாயகன் உதயமாகிறான். ஒரு இளம் பெண் வரவிருக்கும் போரைப் பற்றி அறிய முற்பட்ட உடனேயே, மெகாஸ்டார் சிரஞ்சீவி ஒரு சூப்பர் ஹீரோவைப் போல, பறக்கும் குதிரையில் சவாரி செய்கிறார். டீஸர் சிரஞ்சீவியின் அதிரடி காட்சிகளைக் காட்டுகிறது, இது ஒரு சக்திவாய்ந்த தருணத்தில் முடிவடைகிறது, அங்கு அவர் தனது எதிரிகளுக்கு எதிராக ஒரு சூலாயுதத்தைப் பயன்படுத்துகிறார், இது அவருக்கு வழிகாட்டும் தெய்வீக வலிமையைக் குறிக்கும் ஹனுமான் சிலையால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமாவில் தனித்து நிற்கும் ஒரு நம்பமுடியாத பிரபஞ்சத்தை வடிவமைத்துள்ள வசிஷ்டாவின் தொலைநோக்கு பார்வை உண்மையிலேயே முன்மாதிரியானது. பிரமிக்க வைக்கும் மற்றும் கற்பனையான உலகம் பார்ப்பதற்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கதைசொல்லல் ஆரம்பத்திலிருந்தே ஈர்க்கிறது, அதன் அழுத்தமான அறிமுகங்கள் பார்வையாளர்களை ஈர்க்கிறது. அதிரடி காட்சிகள் பிரமிக்க வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. கடைசி பகுதிகள், ஹனுமான் சிலை மற்றும் சிரஞ்சீவியின் தந்திரத்துடன் கூடிய சக்தி வாய்ந்த செயல் ஆகியவை இந்த டீசருக்கு சிறப்பு சேர்க்கிறது.

சிரஞ்சீவி இளமையாகவும் வசீகரமாகவும் தோற்றமளிக்கிறார், சமீப காலங்களில் தோற்றங்களிலிருந்து மிக மாறுபட்ட தோற்றத்தில் மெகாஸ்டார் ரசிகர்களை ஈர்க்கிறார். ஃபேண்டஸி சாகசத்தில் அவர் ஜொலிக்கிறார். அதிரடி காட்சிகளில் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். ஆன்டிஹீரோவின் முகம் மறைக்கப்பட்டிருந்தாலும், அப்பாத்திரம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

இந்தத் திரைப்படத்தில் ஒரு நட்சத்திர நடிகர்கள் மற்றும் உயர்தர தொழில்நுட்ப வல்லுநர்கள் பணியாற்றுகிறார்கள், த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் ஆஷிகா ரங்கநாத் ஆகியோர் முன்னணி கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் குணால் கபூர் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த டீஸர் முதன்மையாக சிரஞ்சீவியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது.

விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக இருக்கும். இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

இந்த அற்புதமான டீசரைப் பார்த்த பிறகு, விஸ்வம்பராவைப் பார்ப்பதற்கான ரசிகர்களின் உற்சாகம் உச்சத்தில் உள்ளது.

நடிப்பு : மெகா ஸ்டார் சிரஞ்சீவி

தொழில்நுட்பக் குழு:
எழுத்தாளர் மற்றும் இயக்குநர்: வசிஷ்டா தயாரிப்பாளர்கள்: விக்ரம், வம்சி, பிரமோத் பேனர்: UV கிரியேஷன்ஸ்
இசை: எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : சோட்டா கே நாயுடு
தயாரிப்பு வடிவமைப்பாளர்: ஏ.எஸ்.பிரகாஷ் ஆடை வடிவமைப்பாளர்: சுஷ்மிதா கொனிடேலா எடிட்டர்: கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ், சந்தோஷ் காமிரெட்டி
வசனங்கள்: சாய் மாதவ் புர்ரா
பாடல் வரிகள்: ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ்
ஸ்கிரிப்ட் அசோசியேட்ஸ்: ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மதி ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா
நிர்வாகத் தயாரிப்பாளர்: கார்த்திக் சபரீஷ்
லைன் புரடியூசர்: ராமிரெட்டி ஸ்ரீதர் ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ

BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்  !!

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவி, தயாரிப்பு துறையில் கோலோச்சி வரும் BTG Universal நிறுவனத்துடன் இணைந்து இரண்டு புதிய படங்களில் பணியாற்றவுள்ளார். பிரம்மாண்டமான கமர்ஷியல் படங்களாக உருவாகவுள்ள, புதிய படைப்புகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.  

தமிழ் திரையுலகில் கால் பதித்து பல வித்தியாசமான படங்களை பிரம்மாண்டமாக தயாரித்து வரும் BTG Universal நிறுவனம், 20 வருடங்களை கடந்து தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் முன்னணி நட்சத்திர நடிகர் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

டேட்டா பிரைவசி ஸ்பேஸ், சைபர் தடயவியல் உட்பட மென்பொருள் துறையில் உலகளாவிய  அளவில் ஜாம்பவானாக கோலோச்சும் திரு.பாபி பாலச்சந்திரன்,  BTG Universal நிறுவனம்  மூலம் தமிழ் திரைத்துறையில் கால் பதித்துள்ளார். பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் தலைமை நிர்வாக இயக்குநராக பணியாற்றிய திரு டாக்டர் M.மனோஜ் பெனோ தற்போது BTG Universal நிறுவனத்தின் தலைமை திட்ட இயக்குநராக பொறுப்பேற்று நிறுவனம் மற்றும் திரைப்படங்களின் படைப்பாற்றல் மற்றும் அனைத்து நிர்வாகப் பணிகளையும் செய்து வருகிறார். இந்நிறுவனம் சின்ன படம், பெரிய படம் என்று பாராமல் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முனைப்போடு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களுக்கு பிடித்தவாறு உருவாகும் படங்களை கொடுக்க இருக்கிறார்கள்.

முன்னதாக இந்நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்,  அருள்நிதி நடிப்பில் வெளியான ஹாரர் திரைப்படமான “டிமான்ட்டி காலனி 2” ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.  அடுத்ததாக இயக்குநர் விக்ரம் ராஜேஸ்வர் இயக்கத்தில் நடிகர்கள்  வைபவ் மற்றும் அதுல்யா நடிப்பில் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள “சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்” திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

இந்நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக நட்சத்திர நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே படப்புகழ் இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், ”ரெட்டதல” படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனம் அடுத்ததாக ஜெயம்ரவியை வைத்து பிரம்மாண்ட கமர்ஷியல் படங்களை உருவாக்கவுள்ளது.

தமிழ் திரையுலகில் ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ஜெயம் ரவி 20  ஆண்டுகளை கடந்து முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார். வித்தியாசமான கதைகளங்களில், மாறுபட்ட பாத்திரங்களில் பல வெற்றிப்படங்களை தந்து ரசிகர்களின் விருப்பமிகு நாயகனாக, குடும்பங்கள் கொண்டாடும் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். 

ரசிகர்கள்  ஜெயம் ரவியின் அடுத்த படம் குறித்து ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் BTG Universal நிறுவனத்தின் தயாரிப்பில்
அவர் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியாகியிருப்பது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதிய படங்களின் இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் படங்களின்  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டார்

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா, ரியா ஹரி நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் வெளியிட்டார்

டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடிய உற்சாகமிக்க பாடலை சரிகம வெளியிட்டுள்ளது

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லர் ‘லெவன்’ திரைப்படத்தின் முதல் பாடலை உலக நாயகன் கமல் ஹாசன் இன்று வெளியிட்டார். டி. இமான் இசையில் ஷ்ருதி ஹாசன் பாடியுள்ள ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ எனும் இப்பாடலின் வரிகளை முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் திரைப்படத்தின் இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் எழுதியுள்ளார். முன்னணி இசை நிறுவனமான சரிகம இப்பாடலை வெளியிட்டுள்ளது.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ மற்றும் ‘செம்பி’ ஆகிய பெரிதும் பாராட்டப்பட்ட வெற்றி படங்களை தொடர்ந்து விறுவிறுப்பான புலனாய்வு திரில்லரான ‘லெவன்’ திரைப்படத்தை தங்களது மூன்றாவது படைப்பாக ஏ ஆர் என்டர்டைன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிக்கின்றனர்.

இயக்குநர் சுந்தர் சி இடம் ‘கலகலப்பு 2’, ‘வந்தா ராஜாவா தான் வருவேன், மற்றும் ‘ஆக்ஷன்’ ஆகிய திரைப்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய லோகேஷ் அஜில்ஸ் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

முதல் பாடலான ‘தி டெவில் இஸ் வெயிட்டிங்’ குறித்து பேசிய இயக்குநர், “உற்சாகம் மிகுந்த இந்த பாடல் உயர்தரத்தில் முழுக்க ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது. டி. இமானின் இசையும் ஷ்ருதி ஹாசனின் குரல் வளமும் பாடலுக்கு மிகப்பெரிய பலமாகும். நாயகன் மற்றும் வில்லனைக் குறித்த பாடலாக இது அமைந்துள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கும் என்று நம்புகிறோம்,” என்றார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் நவீன் சந்திரா நாயகனாக நடிக்கிறார். ‘ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ இணையத் தொடர், ‘சரபம்’, ‘சிவப்பு’ மற்றும் சசிகுமாரின் ‘பிரம்மன்’ உள்ளிட்டவற்றில் நடித்துள்ள இவர், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தில் எதிர் நாயகனாக தற்போது நடித்து வருகிறார்.

‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ படத்தில் நடித்துள்ள ரியா ஹரி நாயகியாக நடிக்கும் இப்படத்தில் ‘விருமாண்டி’ புகழ் அபிராமி, ஆடுகளம் நரேன், ‘வத்திக்குச்சி’ புகழ் திலீபன், ‘மெட்ராஸ்’ புகழ் ரித்விகா, அர்ஜை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கான இசையை டி. இமான் அமைக்க, பாலிவுட்டில் பணியாற்றிய அனுபவமுள்ள கார்த்திக் அசோகன் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்புக்கு தேசிய விருது பெற்ற ஸ்ரீகாந்த் என்.பி. பொறுப்பேற்றுள்ளார்.

‘லெவன்’ திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ், “ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும் விறுவிறுப்பான புலனாய்வு திரில்லராக ‘லெவன்’ அமையும். திறமைமிக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக இணைந்துள்ளார்கள். அனைவரையும் கவரும் விதத்தில் திரைப்படம் அமையும் என்று நம்புகிறேன்,” என்று கூறினார்.

ஏ ஆர் என்டர்டைன்மென்ட் பேனரில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஹரி தயாரிப்பில் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் திரைப்படமான ‘லெவன்’ படத்தை நவம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

ZEE5 வேதா, சம்விதன் கா ரக்ஷக் திரைப்படத்தை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது ! தசரா பண்டிகை நாளில், கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள் !

~ நிகில் அத்வானி இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தில், ஜான் ஆபிரகாம், ஷர்வரி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.~

இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, அக்டோபர் 10 அன்று ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படத்தினை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது. ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தினை, முன்னணி இயக்குநர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார். இந்த அதிரடி திரைப்படத்தில், நடிகர் ஜான் ஆபிரகாம், ஷர்வரி, அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர். உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘வேதா’ ஒரு உறுதியான தலித் பெண்ணின் பயணத்தை விவரிக்கிறது மற்றும் சாதி அடிப்படையிலான அநீதிகள் மற்றும் குற்றங்களின் அழுத்தமான பிரச்சினைகளைத் தைரியமாகப் பேசுகிறது. இந்த தசரா பண்டிகையில், அக்டோபர் 10 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகத் தொடங்கும், ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ இன் இந்த உற்சாகமூட்டும் மற்றும் உணர்ச்சிகரமான பயணத்தைத் தவறவிடாதீர்கள்.

வேதா, சம்விதன் கா ரக்ஷக் கதைக்களம் மேஜர் அபிமன்யு கன்வர் [ஜான் ஆபிரகாம்], கோர்ட் மார்ஷியல் ராணுவ அதிகாரியின் பார்வையில் விரிகிறது, நீதிக்கான இடைவிடாத தேடலில் உள்ள உறுதியான தலித் பெண்ணான வேதா [ஷர்வரி] உடன் இணைந்து பயணிக்கிறார் அபிமன்யு.
கிராமத்தின் தலைவர் அபிஷேக் பானர்ஜி தலைமையில் இயங்கும் கிராமத்தின் ஆழமான வேரூன்றிய சமூக சவால்களை இருவரும் எதிர்கொள்கின்றனர், அவர்கள் வலிமிகுந்த உண்மைகளை வெளிக்கொண்டுவரப் பல சக்திகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். இந்த திரைப்படம் இந்த வலி மிகுந்த பயணத்தின் பக்கங்களைக் காட்டுகிறது.

நிகில் அத்வானியின் இயக்கத்தில், வேதா, சம்விதன் கா ரக்ஷக், திரைப்படத்தில் தீவிரமான ஆக்‌ஷனுடன் ஒரு தீவிரமான சமூகச் செய்தியும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த தசராவில், பார்வையாளர்கள் அக்டோபர் 10 முதல் ZEE5 இல் வேதா, சம்விதன் கா ரக்ஷக் படத்தினை இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் கண்டுகளிக்கலாம்.

ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்,
‘வேதா’ சக்தி வாய்ந்த கதை மற்றும் ஆக்கப்பூர்வமான கதைசொல்லல் மூலம் அழுத்தமான சமூகப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதை ZEE5 உடன் இணைந்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். சமூக நியாயம் மற்றும் சாதிய ரீதியலான பிரச்சனைகளைப் பற்றிய அர்த்தமுள்ள உரையாடல்களை ‘வேதா’ திரைப்படம் பேசும். தரமான, மிகச்சிறப்பான படைப்புகளை வழங்கி வரும் ZEE5 இன் அர்ப்பணிப்புமிக்க பயணத்தில், அவர்களுடன் இணைந்து, இந்த உணர்வுப்பூர்வமான படைப்பை வழங்குவது மகிழ்ச்சி. இப்படைப்பு சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.

ஜீ ஸ்டுடியோவின் CBO, உமேஷ் Kr பன்சால் கூறுகையில்..,
“வேதா’ இப்போது ZEE5 இல் வெளியிடப்படுவதால், இந்த வலிமைமிக்க கதை இன்னும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடையும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உணர்வுப்பூர்வமான கதை மற்றும் வலுவான கருத்துக்கள் இப்படம் மூலம், பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

தயாரிப்பாளர், மது போஜ்வானி, எம்மே என்டர்டெயின்மென்ட் கூறுகையில்..,
“வேதாவை அதன் ZEE5 டிஜிட்டல் பிரீமியர் மூலம் இன்னும் பெரிய பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கான பயணத்தை நாங்கள் தொடங்கியபோது, ​​அதிகாரத்திற்கு எதிரான எளிய மக்களின் பயணத்தைச் சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம், மேலும் இந்த டிஜிட்டல் வெளியீட்டின் மூலம் இந்த உரையாடலில் மேலும் பலர் இணைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

இயக்குநர் நிகில் அத்வானி கூறுகையில்..,
“வேதா திரைப்படம் பொழுதுபோக்கு மட்டுமல்ல, பல முக்கியமான விஷயங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று நம்புகிறேன். ஆரம்பம் முதலே, இந்த படத்தின் நோக்கம் அர்த்தமுள்ள உரையாடல்களைத் தூண்டும் என்பதாகவே இருந்தது, Zee5 இல் படத்தின் வெளியீட்டின் மூலம் பார்வையாளர்கள் இதன் ஆழமான செய்தியை உணர்வார்கள் என நம்புகிறேன்.

நடிகர் ஜான் ஆபிரகாம் கூறுகையில்..,
“பொழுதுபோக்குடன் மட்டுமின்றி, அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் ஒரு படத்தின் பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வேதா, பெண்கள் தங்கள் வலிமையைத் தழுவிக்கொள்ளத் தூண்டுகிறது, மேலும் நம் அனைவரையும் ஒருவரையொருவர் ஆதரிக்கவும் உயர்த்தவும் ஊக்குவிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானது, இது பெண்கள் முன்னேறும்போது, ​​​​நாம் அனைவரும் முன்னேறுகிறோம் என்பதின் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக உள்ளது. ZEE5 இன் பார்வையாளர்கள் வேதாவில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் செய்தியை, கண்டுகளிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.

முன்னணி நடிகர் ஷர்வரி கூறுகையில்..,
“ZEE5 இல் ‘வேதா’ டிஜிட்டல் ரிலீஸுக்கு ஆவலாக உள்ளேன்! வேதா படத்தில் நடித்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. அவள் சமத்துவத்தையும் நீதியையும் நாடியவள். எழுந்து நின்று போராடும் அவளின் நெஞ்சுரத்தை இந்த பாத்திரத்தில் உணர்ந்தேன். வேதாவுக்காக இவ்வளவு அன்பையும் பாராட்டுக்களையும் பெறுவது மகிழ்ச்சி. உங்களைச் சிந்திக்க வைக்கும் ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது. குத்துச்சண்டை மற்றும் தற்காப்புக் கலைப் பயிற்சியின் மூலம், வேதா தனது வலிமையையும் குரலையும் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவளது எழுச்சியூட்டும் பயணத்தைப் பார்வையாளர்கள் கண்டுகளிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.

அக்டோபர் 10 முதல் ZEE5 இல் பார்வையாளர்கள் ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்!

மேலும் சமூகவலைதளங்களில் ZEE5 ஐ தொடர :


https://www.facebook.com/ZEE5

https://www.instagram.com/zee5