Breaking
August 9, 2026

Cinema

இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் ‘லவ் 3.0’

ஜி.வி. பிரகாஷின் கதாநாயகி உள்ளிட்ட இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் ‘லவ் 3.0’

சினிமா மீதுள்ள ஆர்வத்தால் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் சிவக்குமார், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தவர், இன்ஸ்டாகிராம் மூலம் மக்களிடம் பிரபலமாக இருக்கும் பிரபலங்களைக் கொண்டு படம் தயாரிக்க முடிவு செய்தார் .அந்த வகையில் தனது
மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம்தான் ‘லவ் 3.0’ . இப்டத்தை எழுதி இயக்கியுள்ளார் ராஜேஷ் விகே. வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வைகுந்த் சீனிவாசன் இசையமைத்துள்ளார்.அரவிந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் ஜேபி.

இந்தப் படத்தில் சக்தி மிக்க சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் உலகில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலங்களாக இருப்பவர்கள் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்து உள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் மில்லியன் தொடர்பாளர்களைத் தாண்டி பிரபலமாக இருப்பவர் அரனிகா .இவரை அனைவரும் செல்லமாக ரீல்ஸ் அக்கா என்று அழைப்பார்கள். ரீல்ஸ் உலகில் உச்சத்தில் இருக்கும் இவர் கதாநாயகியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.இவர் ஜிவி பிரகாஷ் நடித்த முதல் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்தப் படம் இன்னும் வரவில்லை.

இப்படத்தில் இரண்டு கதாநாயகர்கள் . ஒருவர்
கோயமுத்தூர் மாப்ள.
இவரும் இன்ஸ்டாகிராம் உலகில் சக்தி மிக்க ஒருவராக இருக்கிறார். மற்றொரு கதாநாயகனாக இன்னொரு பிரபலம்
கார்த்திகேயன் கே என் ஸ்மைலி நடித்துள்ளார்.

இதன் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் லுக் எனப்படும் முதல் தோற்றம், தலைப்பு தோற்றம் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள மெரீனா மாலில் வெளியிடப்பட்டது. பார்வையாளர்கள் நாற்புறமும் சூழ நடைபெற்ற இந்த வெளியீட்டுக் கொண்டாட்டத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் சௌந்தர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் .இவர் விஜய் – அஜித் இணைந்து நடித்த ‘ராஜாவின் பார்வையிலே’ படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர். மேலும்
விழாவில் ‘சம்பவம்’ படத்தின் இயக்குநர் ரஞ்சித் குமார், பாடலாசிரியரும் கவிஞருமான சொற்கோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

விழாவில் கதாநாயகி அரனிகா பேசும்போது,

“இந்த படத்தில் நடிப்பதற்கு என்னைத் தேர்ந்தெடுத்த இயக்குநருக்கு நன்றி. இது இப்போது இருக்கும் தலைமுறையின் லவ் பற்றிப் பேசுகிற படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.நான் எனக்குக் கொடுத்த சவாலான பாத்திரத்தைச் சரியாகச் செய்திருக்கிறேன் என்கிற நம்பிக்கை இருக்கிறது.திரை உலகத்திலும் எனக்கு ஆதரவு கொடுங்கள் “என்றார்.

கதாநாயகன்
கார்த்திகேயன் கே என் ஸ்மைலி பேசும்போது,

“இன்ஸ்டாகிராமில் சின்ன சின்ன விஷயங்களைச் செய்து கொண்டிருந்தேன் இப்போது இந்த இடத்திற்கு வந்து கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது . என்னை நம்பி இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநருக்கு நன்றி. உங்கள் ஆதரவு தொடர்ந்து வேண்டும். ராஜபாளையத்திலிருந்து உங்களை நம்பி சென்னை வந்திருக்கிறேன் ஆதரவு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்’என்றார்

விழாவில் பட குழுவினர்,மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

‘சம்பாலா’ தயாரிப்பாளர், இயக்குநர் கூட்டணியில், சந்தீப் கிஷன் நடிப்பில், உருவாகும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்!

சந்தீப் கிஷன் நடிப்பில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்!

தெலுங்கு மொழியில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற ‘சம்பாலா’ படத்தினைத் தொடர்ந்து, அந்தப் படத்தை தயாரித்த Shining Pictures நிறுவனம் மீண்டும் இயக்குநர் உகந்தர் முனியுடன் கைகோர்த்து, மற்றுமொரு பிரம்மாண்டமான புதிய திரைப்படத்தைத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு ஆகியோர் முன்னதாக ஆதி சாய்குமார் நடித்த “சம்பாலா”படத்தின் மூலம் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தனர்.

இந்த புதிய பட அறிவிப்பை முன்னிட்டு, படக்குழு ஒரு கண்கவர் கான்செப்ட் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், சிங்கம் மற்றும் ஓநாய் நேருக்கு நேர் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது அதிகாரம், விதி, மற்றும் உள்ளார்ந்த வலிமையின் மாபெரும் மோதலை சுட்டிக்காட்டுகிறது. இவ்விரண்டுக்கும் நடுவே, மர்மமான போர்க்களப் பின்னணியில் ஒளிரும் ஒரு பழமையான வாள் காட்சியளிக்கிறது. மேலும், “சில போர்கள் ஒருபோதும் முடிவதில்லை… சில மன்னர்கள் ஒருபோதும் இறப்பதில்லை” என்ற வலிமையான டேக்லைன், இந்த படைப்பு ஒரு பிரம்மாண்டமான ஃபேண்டஸி சாகசமாக உருவாகிறது என்பதைக் குறிப்பதாக உள்ளது.

இந்த புதிய படத்தில் திறமையான முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். தனது உற்சாகமான திரை கவர்ச்சி, பன்முக நடிப்பு திறன் காரணமாக ரசிகர்கள் மத்தியில் தனித்த அடையாளம் பெற்றுள்ள சந்தீப் கிஷன், இந்த சோஷியல் – ஃபேண்டஸி திரில்லர் படத்தில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் தோன்றவுள்ளார். இதுவரை காணாத ஒரு சக்திவாய்ந்த அவதாரத்தில் அவர் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துவார்.

பிரம்மாண்ட வெற்றியைப் பெற்ற “சம்பாலா” படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளர்களும் இரண்டாவது முறை இணைகிறார்கள் என்பதால், இந்த முறை படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்ப தரத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகின்றனர். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த திரைப்படம், சந்தீப் கிஷனின் திரை வாழ்க்கையிலேயே அதிக செலவில் உருவாகும் படங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. தயாரிப்பு வடிவமைப்பு, விஷுவல் எஃபெக்ட்ஸ், மற்றும் கதை சொல்லல் என அனைத்து அம்சங்களிலும் பார்வையாளர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கபடவுள்ளது.

இந்த படக்குழு நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் ஒரு பிரம்மாண்டமான சோஷியல் -ஃபேன்டஸி படத்தை உருவாக்கி வருகிறது. பல மொழிகள் மற்றும் பல கலாசார பின்னணிகளைக் கொண்ட ரசிகர்களை சென்றடையும் வகையில், இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான பான்-இந்தியா படமாக உருவாகிறது.

“சம்பாலா” படத்தின் போது தங்களின் தரமான தயாரிப்பும், வலுவான புரமோஷன் அணுகுமுறை மூலம் கவனம் பெற்ற Shining Pictures, இந்த புதிய படத்திலும் அதே தரத்தையும், அதற்கு மேலான சிறப்பையும் வழங்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. இப்படத்தின் கதைக்களம் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், ஃபேண்டஸி அம்சங்களும், வணிக ரீதியான மக்களை கவரும் மசாலா அம்சங்களும் கலந்து இருக்கும் தனித்துவமான அனுபவமாக இந்த படம் அமையும் என படக்குழு உறுதியளித்துள்ளது.

நடிப்பு குழு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த மேலும் பல சுவாரஸ்யமான அப்டேட்கள் விரைவில் வெளியாக உள்ளன. தற்போது முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் படப்பிடிப்பு 2026 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படமாக்கப்படவுள்ளது.

‘இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த அதிரடி படைப்பு கேம் பிளே பட ஃபர்ஸ் லுக் வெளியானது !!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட ஃபர்ஸ்ட் லுக் !!

காளிதாஸ் (2019) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் (Incredible Productions) தனது அடுத்த தயாரிப்பாக உருவாக்கி வரும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான ‘கேம் பிளே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே இப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “திரைக்கதைதான் ஹீரோ” எனும் நோக்கில் தனது முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்கதை வடிவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார்.

பைனான்ஸியல் க்ரைமை மையமாகக் கொண்ட இப்படம், நொடிக்கு நொடி எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட சஸ்பென்ஸ் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகி வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்ததிலிருந்து மாறுபட்ட களம் மற்றும் கதை அமைப்புடன், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

“Exit is an Illusion” என்ற டேக் லைனுடன் வெளியிடப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கண்ணாடி சிதறல்களாக உடைந்த தெறிக்க, கதையின் முக்கிய கதாப்பாத்திரங்கள் பல்வேறு உணர்வுகளுடன் காட்சியளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வித்தியாசமான போஸ்டர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

நடிகர்கள் கிஷோர் மற்றும் ‘HeartBeat’ சீரிஸ் புகழ் சாருகேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் ஷாலி நிவேகாஸ், வினோத் கிஷான் மற்றும் சார்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சுரேஷ் பாலா கவனித்துள்ளார். படத்தொகுப்பை புவன் சீனிவாசன் மேற்கொண்டு வருகிறார். அனுபவம் வாய்ந்த தொழில்நுட்பக் குழுவுடன் இப்படம் தரமான படைப்பாக உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !

வடசென்னையின் துள்ளலான முகத்தை இசையில் கொண்டுவந்த ‘பெரம்பூர் கானா’ – வைரலாகும் ‘அன்பே டயானா’ முதல் பாடல்!

பெரம்பூரின் மனிதர்கள், மகிழ்ச்சி, மாஸ் லோக்கல் உணர்வுகளை கொண்டாடும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வெளியீடு!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சத்யா கரிகாலன்,  யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளது.

இசையமைப்பாளர் பரத் சங்கர் கலக்கலான  இசையில்,  ஜாஸி கிஃப்ட் பாடியுள்ள  ‘பெரம்பூர் கானா’ பாடல், தலைப்புக்கேற்றபடி பெரம்பூரின் தனித்துவமான வாழ்க்கை ரிதமையும், அந்த பகுதி மக்களின் கலகலப்பான வாழ்வியலையும் திரைமொழியில் உயிரோட்டமாக கொண்டு வந்திருக்கிறது.

‘ஜமா’  திரைப்படத்தில் அசத்திய பாரி இந்த பாடலில் நடனத்தில் கலக்கியிருக்கிறார். NEEK புகழ் ரம்யாவும் இறங்கி ஆடி பட்டைய கிளப்ப, மேக்கிங் வீடியோவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை ரோஜா க்யூட் ரியாக்ஷன்களால் ஹார்டின் அள்ளுகிறார்.

மேலும், சூப் பாயின்   மனநிலையையும், இளமையான கொண்டாட்டத்தையும், மிக ரசிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் பாடல், லோக்கல் பீட், வண்ணமயமான நடனங்கள் சேர்ந்து மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரிப்பீட் பட்டனை தட்ட வைக்கிறது.

இப்படியாக ஜாலி வைப்ஸ் தரும் ‘அன்பே டயானா’ பாடல் ரொமாண்டிக் பேமிலி என்டர்டெய்னராக மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் கலாச்சாரத் தன்மையையும் மக்களின் உணர்வுகளையும் சேர்த்து தரும் என்ற எண்ணத்தை கொண்டுவருகிறது. 
இத்திரைப்படத்தில் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட  பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை கால வெளியீடாக தயாராகி வரும் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Link :  https://www.youtube.com/watch?v=2Sz1o1NqKL4

‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !

வடசென்னையின் துள்ளலான முகத்தை இசையில் கொண்டுவந்த ‘பெரம்பூர் கானா’ – வைரலாகும் ‘அன்பே டயானா’ முதல் பாடல்!

பெரம்பூரின் மனிதர்கள், மகிழ்ச்சி, மாஸ் லோக்கல் உணர்வுகளை கொண்டாடும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வெளியீடு!

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சத்யா கரிகாலன்,  யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ போன்ற படங்களுக்குப் பிறகு தனது 7-வது தயாரிப்பாக ‘அன்பே டயானா’ படத்தை உருவாக்கியுள்ளது.

இசையமைப்பாளர் பரத் சங்கர் கலக்கலான  இசையில்,  ஜாஸி கிஃப்ட் பாடியுள்ள  ‘பெரம்பூர் கானா’ பாடல், தலைப்புக்கேற்றபடி பெரம்பூரின் தனித்துவமான வாழ்க்கை ரிதமையும், அந்த பகுதி மக்களின் கலகலப்பான வாழ்வியலையும் திரைமொழியில் உயிரோட்டமாக கொண்டு வந்திருக்கிறது.

‘ஜமா’  திரைப்படத்தில் அசத்திய பாரி இந்த பாடலில் நடனத்தில் கலக்கியிருக்கிறார். NEEK புகழ் ரம்யாவும் இறங்கி ஆடி பட்டைய கிளப்ப, மேக்கிங் வீடியோவில் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகை ரோஜா க்யூட் ரியாக்ஷன்களால் ஹார்டின் அள்ளுகிறார்.

மேலும், சூப் பாயின்   மனநிலையையும், இளமையான கொண்டாட்டத்தையும், மிக ரசிக்கத்தக்க வகையில் வெளிப்படுத்தும் பாடல், லோக்கல் பீட், வண்ணமயமான நடனங்கள் சேர்ந்து மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரிப்பீட் பட்டனை தட்ட வைக்கிறது.

இப்படியாக ஜாலி வைப்ஸ் தரும் ‘அன்பே டயானா’ பாடல் ரொமாண்டிக் பேமிலி என்டர்டெய்னராக மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட பகுதியின் கலாச்சாரத் தன்மையையும் மக்களின் உணர்வுகளையும் சேர்த்து தரும் என்ற எண்ணத்தை கொண்டுவருகிறது. 
இத்திரைப்படத்தில் சேத்தன், வைரல் யூடியூபர் பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு, சுதர்சன் காந்தி, செல் முருகன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மண்டேலா’, ‘மாவீரன்’ புகழ் இசையமைப்பாளர் பரத் சங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ‘அருவி’, ‘சக்தி திருமகன்’ படங்களின் ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தொகுப்பை பார்த்தா மேற்கொண்டிருக்க, கலை இயக்கத்தை மகேந்திரன் கையாண்டிருக்கிறார். பாடல்களை மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்ட  பணிகள் நடைபெற்று வருகின்றன. கோடை கால வெளியீடாக தயாராகி வரும் ‘அன்பே டயானா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Link :  https://www.youtube.com/watch?v=2Sz1o1NqKL4

காளிதாஸ் 2′ திரைப்பட இசை வெளியீட்டு விழா !

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன்  மற்றும் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் இணைந்து தயாரிக்க, ‘காளிதாஸ்’ வெற்றிப்படத்தைத் தந்த ஸ்ரீ செந்தில் இயக்கத்தில், பரத் நடிப்பில் உருவாகியுள்ள பரபரப்பான திரில்லர் திரைப்படம் “காளிதாஸ் 2”.

இப்படம் ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன்,  திரை பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது

இந்நிகழ்வினில்..,

தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது..,

இங்கு வருகை தந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், தென்னக மாவட்டங்களைச் சேர்ந்த நண்பர்களுக்கும், பத்திரிகை, ஒளிக்காட்சி மற்றும் இணையதள ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இது எங்கள் நிறுவனத்தின் முதல் திரைப்படம். இந்தப் படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. நீங்கள் தரும் ஆதரவும், வெளிச்சமும் இந்தப் படத்தை இன்னும் அதிகமான மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்பதில் எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கு வந்து ஆதரவு அளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி. வணக்கம்.

யோகேஷ்வரன் பேசியதாவது..,

என்னோட பெயர் யோகேஷ். இந்தப் படத்தில் நான் பெரிய பங்கு எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் படத்துக்காக உண்மையாகக் கஷ்டப்பட்டவர்கள் செந்தில் சார் மற்றும் நாராயணசாமி சார். அவர் என்னோட அப்பா. மேடைக்கு வரச் சொன்னாலும் வரமாட்டார்; என்னைத் தான் அனுப்பிவைத்தார். முதலில், இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த ஆடியோ லாஞ்ச் விழாவை பெரிய அளவில் சிறப்பாக மாற்றியதற்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி. பல நாளாக ஒரு நல்ல அறிமுகத்திற்காக  காத்திருக்கிறோம். அது கண்டிப்பாக நல்ல தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். பரத் சார் இந்தப் படத்துக்கு ஒரு பெரிய பலமாக இருக்கிறார். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல வரவாக இருக்கும். இயக்குநர் சார் இந்தப் படத்தை மிகவும் அழகாக எடுத்திருக்கிறார். தயாரிப்பாளரும் மிகவும் நம்பிக்கையுடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு கண்டிப்பாக பெரிய வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

சக்தி பிலிம்ஸ் சக்திவேலன் பேசியதாவது..,

“இது ரொம்ப சந்தோஷமான விஷயம். ஒரு வினியோகஸ்தர் தனது மகனை இந்தத் துறையில் பெரிய அளவில் அறிமுகப்படுத்தும் முதல் விழாவாக இதைப் பார்க்கிறேன். அது மிகவும் பெருமைக்குரிய விஷயம். சினிமாவில் சம்பாதித்த பலர் வேறு துறைகளில் முதலீடு செய்திருக்கலாம். ஆனால், சம்பாதித்த அதே சினிமா துறைக்குள்ளேயே தனது மகனை ஒரு நம்பிக்கையோடு அழைத்து வந்து அறிமுகப்படுத்துவது மிகப் பெரிய விஷயம். அதுவே இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்று நான் நினைக்கிறேன். அதிலும், ஒரு அருமையான கதையைத் தேர்ந்தெடுத்து, பரத் சார் மற்றும் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து, ஒரு பெரிய வெற்றி படத்துக்கான அனைத்து அம்சங்களுடனும் இந்தப் படம் உருவாகி வருவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. செந்தில் சார் என்றாலே மிகவும் நியாயமான ஒரு டிஸ்ட்ரிப்யூட்டர். அனைவரிடமும் அன்பாகவும் அழகாகவும் பழகக்கூடியவர். நாராயணசாமி சார் பற்றி சொல்லவே வேண்டாம். இக்காலத்தில் இவ்வளவு நல்ல மனசுடைய மனிதர்கள் அரிது என்று சொல்லலாம். இந்தக் குழு, சினிமாவை வெறும் பொருளாதார நோக்கில் மட்டும் பார்க்காமல், அதற்கான பேரார்வத்தோடும் பாசத்தோடும் மிக அழகாக ஒரு டீம் வொர்க்காக இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார்கள். அவர்கள் நினைத்ததை நேர்த்தியாகவும் நம்பிக்கையுடனும் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இந்த குழுவினர் எல்லா தளங்களிலும் மிகப்பெரிய வெற்றி அடைய வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன். என் இதயம் கனிந்த வாழ்த்துகள். நன்றி.

தயாரிப்பாளர் லலித்குமார் பேசியதாவது.., 

“செந்தில் சார் ரொம்ப கஷ்டப்பட்டு, இன்று ஒரு உயர்ந்த நிலைக்கு வந்திருக்கிறார் என்பதுதான் எங்களுக்கு மிகவும் பெருமையான விஷயம். அவர் வாழ்க்கையை எப்படி ஆரம்பித்தார், எவ்வளவு போராட்டங்களைக் கடந்து வந்தார் என்பதைக் குறித்து பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் இன்று அவர் ஒரு தயாரிப்பாளராக இங்கே நிற்பது உண்மையிலேயே சந்தோஷமான விஷயம். அவர் விநியோகித்த படங்கள் வெற்றி பெற்றதுபோல, தயாரிப்பாளராக உருவாக்கும் இந்த முதல் படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்த முதல் முயற்சி மிகச் சிறப்பாக அமையும். அஜய்க்கும் எனது வாழ்த்துக்கள். முதல் படம் என்பதால் இது அவருக்கு மிகவும் முக்கியமான தொடக்கம். அவர் நல்ல முறையில் தன்னை நிரூபிப்பார் என்று நம்புகிறேன்.

பரத், உங்கள் ‘காதல்’ படத்தை நான் மிகவும் ரசித்து ரசித்து பார்த்தவன். அந்த படம் உண்மையிலேயே ஒரு மாஸ்டர் பீஸ். எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், அந்த மாதிரி ஒரு படம் எளிதாக வராது. அந்தப் படம் எங்கள் மேல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அதன் கிளைமாக்ஸ் குறித்து எங்களுக்குள்ளும் நிறைய விவாதங்கள் நடந்திருக்கின்றன. சிறை படத்தின் போது நெகட்டிவ் கிளைமாக்ஸ் வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணமே அந்தப் படத்திலிருந்து எங்களுக்குள் வந்த ஒன்று தான். அந்த அளவுக்கு அது மனதில் பதிந்த படம். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் தமிழ்க்குமரன் பேசியதாவது.., 

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த விழாவுக்கு வருவதற்கான முக்கிய காரணம் செந்தில் சார்தான். அவர் மிகவும் நல்ல மனிதர். நாங்கள் இணைந்து நிறைய படங்களில் வேலை செய்திருக்கிறோம். இந்தப் படம் முழு குழுவுக்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள். நன்றி.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,

‘காளிதாஸ்’ எனக்கு மிகவும் பிடித்த படம். அது எல்லோருக்குமே ஒரு இனிய ஆச்சரியமாக இருந்தது. அதனால், ‘காளிதாஸ் 2’ வரும்போதும் நிச்சயம் அதே மாதிரி ஒரு ஆச்சரியம் நமக்கு காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாக, ஒரு திரில்லர் படத்தில் பரத் சாருடன் இணைந்து அஜய் கார்த்திக் வருவது இந்தப் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இன்று ஃபைவ் ஸ்டார் செந்தில் சார், விநியோகத் துறையில் ஆரம்பித்து, அவர் கை வைத்த படங்கள் ஊடகங்களில் பேசப்படும் அளவுக்கு வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. ‘ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் டிஸ்ட்ரிப்யூட் பண்ணினால் அந்தப் படம் வெற்றி பெறும்’ என்ற நம்பிக்கையே இன்றைக்கு உருவாகி இருக்கிறது. மியூசிக் லேபிளாக இருந்தபோது வெற்றி கொடுத்தது போல, டிஸ்ட்ரிப்யூஷனிலும் தொடர்ந்து வெற்றி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

இப்போது அடுத்த கட்டமாக, தனது மகனை அறிமுகப்படுத்துகிறார். அது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்றால், ஃபைவ் ஸ்டார் அமைப்பில் உள்ள மூன்று முக்கியமான கூட்டாளிகளின் மகன்களும் சினிமாவில் வருகிறார்கள். கல்யாண் சாரின் மகன் ஹரிஷ் கல்யாண் இருக்கிறார். செந்தில் சாரின் மகன் அஜய் கார்த்திக் வருகிறார். அதேபோல் நம்முடைய தயாரிப்பாளர் கவுன்சில் செயலாளர் கதிரேசன் சாரின் மகனும் வர இருக்கிறார். ஒருநாள் இந்த மூன்று பேரும் சேர்ந்து நடிக்கும் ஒரு படம் வர வேண்டும். ‘ஃபைவ் ஸ்டார் குழு’ என்று சொல்லும் அளவுக்கு ஒரு படம் உருவாக வேண்டும். அந்த ஆசை எனக்குள்ளது.

இன்றைக்கு தமிழ் சினிமாவைப் பற்றி பலரும் பலவிதமாக பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ‘இண்டஸ்ட்ரி சற்று சிரமமாக இருக்கிறது’ என்று சொல்லப்படும் நேரத்தில்கூட, கடந்த இரண்டு மூன்று மாதங்களாக தமிழ் சினிமா மிக அழகாக வளர்ந்து வருகிறது. நல்ல உள்ளடக்கம் இருந்தால் போதும், ரசிகர்கள் அதை பெரிய அளவில் ஏற்றுக்கொள்கிறார்கள். இன்றைக்கு தமிழ் சினிமா ஸ்டார்களை மட்டும் நம்பி ஓடுவதில்லை; நல்ல கதைகளையும் நல்ல படைப்புகளையும் மக்கள் மனதார வரவேற்கிறார்கள். சிறிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது பார்க்க நமக்கு மிகுந்த மகிழ்ச்சி தரும் விஷயம். அந்த அளவுக்கு தமிழ் சினிமா வளர்ந்திருக்கிறது. அந்த வரிசையில், இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். செந்தில் சாரின் டிஸ்ட்ரிப்யூஷனில் தொடர்ந்து வந்த வெற்றிகளைப் போலவே, இப்போது ஸ்கை பிக்சர்ஸ் மூலமும் மிகப்பெரிய வெற்றி கிடைக்க வேண்டும். இந்தப் படம் ஐம்பது, நூறு கோடி வசூலைத் தொட்டு, மிகப்பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். அனைவருக்கும் என் நன்றி. வணக்கம்.

தயாரிப்பாளர் ஆர் பி சௌத்திரி பேசியதாவது..,

டிரெய்லர் மிகவும் நன்றாக இருந்தது. ஃபைவ் ஸ்டார் கல்யாண் சார் சொன்னதுபோல, அவர் ஏற்கனவே படத்தை பார்த்திருக்கிறார். அவர் அளித்த நம்பிக்கையைப் பார்த்தால், படம் நிச்சயமாக மிகவும் நன்றாக இருக்கும்  என்று தோன்றுகிறது. தயாரிப்பாளர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். டிஸ்ட்ரிப்யூஷன் துறையிலிருந்தும், மியூசிக் நிறுவனத் துறையிலிருந்தும் வளர்ந்து, இப்போது தயாரிப்பாளராக வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அதிலும், தயாரிப்பாளராக மட்டும் இல்லாமல், தனது மகனையும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியிருப்பது மிகவும் சிறப்பானது. அவருக்கும், அவருடைய குடும்பத்திற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் அவர்களுக்கு ஒரு மிகப் பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். குறிப்பாக இப்போது அவர்களுக்கு ஒரு பெரிய வெற்றி தேவைப்படுகிற நேரத்தில், இந்தப் படம் அந்த வெற்றியை கண்டிப்பாகத் தரும் என்று நம்புகிறேன்.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இசையமைப்பாளருக்கும் என் வாழ்த்துகள். நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் தாணு பேசியதாவது..,

இரண்டு விநியோகஸ்தர்கள் — ஒருவர் தம்பி செந்தில், இன்னொருவர் நண்பர் நாராயணசாமி. செந்தில் அவர்களின் மகன் நாயகனாக நடிக்கிறார், நாராயணசாமி அவர்களின் மகன் தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார். ஆகவே, இந்த விழாவில் நான் கலந்து கொள்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.  என்னுடைய நாயகன் பரத், இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார் என்று நம்புகிறேன். அவர் எந்தக் கதாபாத்திரத்தையும் தனித்தன்மையுடன் உயிர்ப்பிக்கக் கூடிய திறமையான நடிகர். ஆகவே, அஜய் கார்த்திக்கும் பரத்தும் இணைந்து உருவாகும் இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன்.

செந்தில் பற்றி தனியாகச் சொல்லவேண்டியது இல்லை. மிகவும் நல்ல விநியோகஸ்தர். விநியோகஸ்தர்கள் தயாரிப்பாளர்களாக வருவது உண்மையிலேயே நல்ல விஷயம். நானும் அந்தப் பாதையில் வந்தவன் என்பதால், இன்னும் பல விநியோகஸ்தர்கள் தயாரிப்புத் துறைக்குள் வர வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால் வருவதற்கு முன் அனுபவம் உள்ளவர்களிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

டிரெய்லரைப் பார்த்தபோது, பின்னணி இசை மிகவும் கவனம் ஈர்த்தது. சாம் சி எஸ் மிக அருமையாக இசையமைத்திருக்கிறார். அவர் திறமையான இளம் படைப்பாளி. அவருக்கு இன்னும் பெரிய வாய்ப்புகள் வந்து, தொடர்ந்து சிறந்த சாதனைகள் படைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். இந்தப் படம் எங்கும் மாபெரும் வெற்றி பெற்று, இந்த அணியின் அனைவருக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

தயாரிப்பாளர் அருண் விஷ்வா பேசியதாவது..,

செந்தில் சார் ஒரு பயங்கரமான hard-working மனிதர். அவரை எனக்கு பத்து வருடங்களாகத் தெரியும். எந்தப் படத்தையும் சுமாராகச் செய்யாமல், தேர்ந்தெடுத்து, யோசித்து, ஒரு ஒரு படமாக முன்னேற்றிக் கொண்டு போகக்கூடியவர். மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களாக இருந்தாலும், நல்ல உள்ளடக்கமுள்ள படங்களாக இருந்தாலும், அவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் அவர் எடுத்த உழைப்பு மிக பெரியது. அந்த சிரமத்தையும் பொறுப்பையும் உண்மையாகச் சுமந்து வந்திருக்கிறார். அவருடைய மகன் அஜய் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறதே என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் பிரதருடன் சேர்ந்து இந்தப் படத்தில் அறிமுகமாகிறீர்கள் என்பது இன்னும் சிறப்பு. ஏனெனில், கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளாக நல்ல நல்ல படங்களைத் தொடர்ந்து செய்து, இன்னும் இந்தத் துறையில் தன்னுடைய இடத்தை நிலைநிறுத்திக் கொண்டு, அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார் பரத். அது பெரிய விஷயம். அப்படிப்பட்ட ஒரு நடிகருடன் இணைந்து உங்கள் பயணம் தொடங்குவது மிகவும் நல்ல ஆரம்பம் என்று நான் நம்புகிறேன்.

அதேபோல், சாம் சி.எஸ். போன்ற திறமையான இசையமைப்பாளர் இந்தப் படத்தில் இருப்பதும் இன்னும் கூடுதல் பலம். அவர் இசையும் இந்தப் படத்திற்கு ஒரு பெரிய ஆதாரமாக இருக்கும் என்று நம்புகிறேன். செந்தில் சார், நாராயணசாமி சார், அஜய், பரத் மற்றும் இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.

நடிகர் சாந்தனு பேசியதாவது..,

இந்த மேடையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். முதலில் இந்தப் படத்தின் முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டிரெய்லரை இரண்டு முறை பார்த்தேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், அது மிகவும் வொர்த்தாக இருந்தது. ‘காளிதாஸ்’ முதல் பாகம் எல்லோருக்கும் பிடித்த படம். அதேபோல, அதைவிட double impact கொடுக்கக்கூடிய படமாக ‘காளிதாஸ் 2’ இருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது. அந்த அளவுக்கு டிரெய்லர் தரமாக இருந்தது. அதனால் இயக்குநர் முதல் இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துகள்.

இந்த பங்சனுக்கு வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றியைச் சொல்லிக்கொள்கிறேன். ஏனெனில், பரத் சம்பந்தப்பட்ட பங்சன் என்றால் அதை நான் என்னோட பங்சனாகத்தான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு பரத்தை ரொம்ப பிடிக்கும். அவர் எனக்கு சகோதரர் போலத்தான்.  இந்த டீமில் எனக்கு நன்றாகத் தெரிந்தவர்கள் இருவர். ஒருவர் பரத், இன்னொருவர் பவானி. பவானியுடன் நான் ‘பாவக் கதைகள்’ல வேலை செய்துள்ளேன். She is a very sincere artist. இங்கே ரொம்ப அமைதியாக உட்கார்ந்து இருப்பாங்க, ஆனால் அவருடன் இருக்கும்போது அவ்வளவு ஃபன். அதே நேரத்தில் கேமரா  முன்னால் வந்துவிட்டால், மொத்தமாக அந்த கேரக்டராக மாறி நடிப்பார்.  அவர் நடித்த எல்லா கதாபாத்திரங்களிலும் அந்த அர்ப்பணிப்பு  தெரியும். ‘விடுதலை’யிலிருந்து இப்போது ‘ஹாட்ஸ்பாட்’, அதற்குப் பிறகு இப்போது ‘காளிதாஸ் 2’ வரை அவ்வளவு அழகாக செய்து வருகிறார்.

அஜய், இது உங்களோட அறிமுகம். ஆனால் வெற்றிகள், தோல்விகள், இதையெல்லாம் தாண்டி, silent-ஆ, consistent-ஆ, தனக்குக் கிடைக்கும் வேலையை சரியாகச் செய்து கொண்டு, 50-க்கும் மேற்பட்ட படங்களை கடந்திருக்கிற என் நண்பன் பரத் — அந்த பயணத்துக்கான celebration ஆக இந்த விழாவைப் பார்க்கிறேன்.  மொத்தத்தில், இந்தப் படம் இந்த மொத்த குழுவிற்கும் ஒரு பெரிய வெற்றி படமாக அமைய வேண்டும். அஜய்க்கு ஒரு மிகச் சிறந்த அறிமுகமாக இருக்க வேண்டும். பரத்துக்கு இன்னொரு முக்கியமான மைல்கல்லாக அமைய வேண்டும். Sky Pictures-க்கு இது ஒரு பிரம்மாண்டமான ஆரம்பமாக இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்.

நடிகர் கலையரசன் பேசியதாவது..,

‘காலிதாஸ் 2’ டிரெய்லர் மிகவும் சூப்பராக இருந்தது. நான் படத்தையும் பார்த்திருக்கிறேன். நிச்சயமாக இது ஒரு அருமையான படம். குறிப்பாக கிளைமேக்ஸ் கணிக்க முடியாததாக இருக்கும். அதேபோல் படம் முழுவதும் எல்லாரும் ரொம்ப நல்லா நடித்திருக்கிறார்கள். சங்கீதா மேம், பவானி, எல்லாருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இது உங்கள் முதல் படம். அதே நேரத்தில், இன்னொரு படத்தையும் முடித்து வைத்திருக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். ஒரு நல்ல பயணம் உங்களுக்குக் காத்திருக்கிறது என்று நம்புகிறேன்.

பரத்… லவ் யூ, எப்போதுமே.  பரத் கேரியரின் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பெரிய ஸ்டார். இப்போவும் அதே மரியாதையோட இருக்கிறார். ஆனால் CCL மாதிரி இடங்களில் நெருக்கமாக பழகிய பிறகு, அவரைப் பற்றி இன்னும் அதிகமான மரியாதை வந்தது.

சினிமா உலகத்தில் success, failure, appreciation, disappointment — எல்லாமே ரொம்ப வேகமாக வரும். அதை கையாள தைரியமாக இருக்கணும். அது இயக்குநர் என்றாலும், நடிகராக இருந்தாலும் அதே தான். அந்த மாதிரி சூழலில், உச்சத்தையும் பார்த்து, தடைகளைச் சந்தித்து, மறுபடியும் அதே fire-ஓட திரும்பி வருவது எப்படி என்று பரத்திடம் இருந்து நான் நிறைய கற்றிருக்கிறேன். அவரிடமிருந்து நிறைய அறிவுரைகள் வாங்கியிருக்கிறேன். அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படம் கண்டிப்பாக பெரிய ஹிட்டாகும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். ‘காலிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் பெரிய வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நன்றி.

ஆதவ் கண்ணதாசன் பேசியதாவது..,

‘காளிதாஸ்’ முதல் பாகத்தில் எனக்கு ஒரு நல்ல கதாபாத்திரம் கிடைத்தது. அந்த அனுபவம் எனக்கு மிகவும் நல்ல நினைவாக இருக்கிறது. இப்போது ‘காளிதாஸ் 2’ டிரெய்லரைப் பார்க்கும்போது, அஜய்க்கு இந்தப் படத்தில் மிகவும் முக்கியமான ஒரு கதாபாத்திரம் அமைந்திருக்கும் என்று தோன்றுகிறது. செந்தில் சார் நிச்சயமாக ஒரு நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து, அழகாக இந்தப் படத்தை உருவாக்கியிருப்பார் என்று நம்புகிறேன். ஒரு அறிமுக நடிகராக அஜய்க்கு இது உண்மையிலேயே மிகச் சிறந்ததாக இருக்கும். அஜய், உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தின் முழுக் குழுவினருக்கும் — பரத், பவானி, ஒளிப்பதிவாளர் மற்றும் இதில் பணியாற்றிய அனைவருக்கும் — என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும். நன்றி.”

இயக்குநர் கணேஷ் K பாபு பேசியதாவது..,

“நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். இன்று இந்த நிகழ்ச்சிக்கு நான் முக்கியமாக வந்ததற்கான காரணம் அஜய் தான். அவர் எனக்கு ஒரு தம்பி மாதிரி. எங்களுக்குள் அப்படிப்பட்ட ஒரு பந்தம் இருக்கிறது. அஜய்யை நான் முதல் நாளிலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். நியூசிலாந்திலிருந்து வந்த பிறகு, கடந்த மூன்று வருடங்களாக அவருடைய பயணத்தை நெருக்கமாக பார்த்திருக்கிறேன். முதல் நாள் ஷூட்டிலிருந்து பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவருக்கு சினிமா பற்றி பெரிய ஐடியாவே இல்லை. நடிப்பு பற்றியும் இந்த துறையைப் பற்றியும் ஒரு தெளிவான புரிதல் இல்லாத நிலையில்தான் அவர் ஆரம்பித்தார். ஆனால் அந்த நிலையிலிருந்து, முழு படப்பிடிப்பு முடியும் வரை அவர் எவ்வளவு பெரிய மாற்றத்தை அடைந்தார் என்பதுதான் எனக்கு மிகப் பெரிய ஆச்சரியம். உண்மையாகச் சொன்னால், அஜய் எனக்கு ரொம்ப பெரிய surprise. நேரில் பழகும்போதும் சரி, திரையில் பார்க்கும்போதும் சரி — ஒரு நடிகராக அவர் தன்னை அவ்வளவு அழகாக மாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் மிகுந்த கடின உழைப்பை தந்துள்ளார். உங்களுக்காக நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன் அஜய். நீங்க இன்னும் பெரிய அளவுக்கு வரணும்.

பரத் சார், நான் அவரோட பெரிய ரசிகன். நிறைய இடங்களில் சந்தித்திருக்கேன்; நேரிலேயே பலமுறை அதைச் சொல்லியிருக்கேன். இந்தப் படத்தில் அவரும் மிகப் பெரிய பலம். செந்தில் சாருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். படம் ரொம்ப நன்றாக இருக்கிறது. நான் பார்த்தபோது, படம் முழுக்க பல டிவிஸ்ட்கள் வருது. ஆனால், அதை ஒரு நம்பகமான திரைக்கதையாக மாற்றி, நம்மை முழுக்க இழுத்துக்கொண்டு போகும் வகையில் அவர் எடுத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சாம் சார் பற்றியும் சொல்லணும் — அவர் இசையால் இந்தப் படத்தை அழகாக மேம்படுத்தியுள்ளார். கண்டிப்பாக இந்தப் படம் குடும்பத்தோடு எல்லாரும் சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு நல்ல படமாக இருக்கும். முழு குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது….,

செந்தில் சாரும் நாராயணசாமி சாரும் எனக்கு நீண்ட நாளாக நண்பர்கள். நாராயணசாமி சார், வம்சம் படத்தில் இருந்து என் படங்களை பின்தொடர்ந்து விநியோகம் செய்து வரும் ஒரு நல்ல நண்பர். இருவரும் என்னை அழைத்தார்கள். நான் கொஞ்சம் தாமதமாக வந்ததற்குக் காரணம், இந்தப் படத்தை முதலில் பார்த்துவிட்டு, அப்படியே அந்த உணர்வோடு இந்த விழாவுக்கு வந்ததுதான். ஒரு படத்தைப் பார்த்த உடனேயே அதன் விழாவிற்க்கு வருவது ரொம்ப  ஸ்பெஷல் – ஆன உணர்வு. உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், படம் ரொம்ப நன்றாக இருந்தது. இதை நான் அவர்களிடம் தனியாக சொல்லவே இல்லை; இந்த மேடையில்தான் சொல்கிறேன். இது ஒரு நல்ல திரில்லர்.

சாம் சார், உங்கள் பின்னணி இசை செமையாக இருந்தது. இப்போது பல படங்களில் உங்கள் இசை ஒலிக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் கூட, அந்த பின்னணி இசையில்  ஒரு தனித்தன்மை இருந்தது. படம் முழுக்க அதை ஒரு அழகான அனுபவமாக  மாற்றியிருக்கிறீர்கள். அது எனக்கு பிடித்திருந்தது.

அதேபோல் இயக்குநர் பற்றியும் சொல்ல வேண்டும். இப்போ முன்பு ஒருவர் சொன்னது மாதிரி, இந்தப் படத்துக்குள்ளே twist இருக்கிறது என்பதல்ல — படம் முழுவதுமே twist-களால் நிரம்பியுள்ளது. ஒவ்வொரு  காட்சி கடந்துகொண்டே போகும்போதும் எப்போதும் ஒரு புதிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதற்காக இயக்குநருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பரத் சார், உங்களுடைய நடிப்பு ரொம்ப ரொம்ப நல்லா இருந்தது. சங்கீதா மேம், நீங்களும் ஒரு பெரிய ஆச்சரியம். பவானி உட்பட இந்தப் படத்தில் நடித்த அனைவரும், தங்களுடைய கதாபாத்திரங்களை மிகவும் அழகாகவும் நம்பகமாகவும் செய்து இருந்தீர்கள்.

அஜய் கார்த்திக், நாங்கள் ஏற்கனவே நேரில் சந்தித்திருக்கிறோம். உண்மையிலேயே இது உங்களுக்கு ஒரு நல்ல படம். ரொம்ப நன்றாக செய்திருக்கிறீர்கள். மனமார்ந்த வாழ்த்துகள். ‘கார்த்திக்’ என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் பலர் பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்; அதேபோல் நீங்களும் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படத்தை எல்லாரும் கண்டிப்பாகப் பாருங்கள். இது ஒரு நல்ல திரில்லர் வாழ்த்துக்கள்.

பா ரஞ்சித் பேசியதாவது.., 

செந்தில்  சாருக்கும், நாராயணசாமி அண்ணாவுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். சமீபமாக அவர்கள் என் நண்பர்கள் வட்டத்தில் இன்னும் நெருக்கமாக இணைந்து, என்கூட நிறைய விஷயங்களைப் பகிர்ந்து, சினிமா குறித்து தொடர்ந்து விவாதித்து வருகிறார்கள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விஷயம். அவர்களுடன் சேர்ந்து இன்னும் நிறைய வேலை செய்ய வேண்டும் என்ற விருப்பமும் எனக்கு இருக்கிறது. நண்பர்களாக மட்டும் இல்லாமல், சினிமாவைப் பற்றி தீவிரமாக சிந்திக்கும் மனிதர்களாக அவர்கள் என்னோடு இணைந்திருப்பது மிகவும் சந்தோஷம் தருகிறது.

நான் இந்தப் படத்தை பார்த்துவிட்டேன். உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால், இது மிகவும் interesting-ஆன ஒரு film. இந்தப் படத்தில் நடித்திருந்த அனைவரும் மிகச் சிறப்பாகப் பணியாற்றியிருக்கிறார்கள். குறிப்பாக மூன்று பெண் கதாபாத்திரங்களும் — சங்கீதா மேம், பவானி, அபர்ணா — மூவரும் மிகவும் அருமையாக நடித்திருந்தார்கள். பரத் சாரும் ரொம்ப நன்றாக நடித்திருந்தார்.

இது ஒரு ரொம்ப நல்ல க்ரைம் திரில்லர். கதை சொல்லப்பட்ட விதம், மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. ஒரு சிறிய உள்ளடக்கத்தைக் கொண்டு, இயக்குநர், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்பக் குழு எல்லோரும் சேர்ந்து அதை மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் மக்களிடம் கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்கள். அந்த முயற்சி இந்தப் படத்திலும் நிச்சயமாக பலிக்கும் என்று நான் நம்புகிறேன். அஜய் கார்த்திக், உங்களுடைய நடிப்பு, லுக்,  எல்லாமே நன்றாக இருந்தது. கண்டிப்பாக உங்களுக்கு ஒரு பெரிய எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

சாம் சி.எஸ். அவர்களின் பின்னணி இசை இந்தப் படத்துக்கு ஒரு பெரிய தூணாக இருந்தது. படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை, அவர் பயன்படுத்திய சவுண்ட் டிசைன்  மற்றும் இசை நம்மை கதைக்குள் பிடித்துக் கொண்டு போகிறது. ஒரு க்ரைம் திரில்லருக்கு இது மிகப் பெரிய பலம். இந்தப் படம் அந்த வகையில் நல்ல ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று நான் நம்புகிறேன்.

சமீபத்தில் சில சிறிய படங்கள் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று, தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கின்றன. முன்னாடி இப்படி நடக்கும் என்று எல்லோருக்கும் எப்போதும் நம்பிக்கை இருக்காது. ஒரு படம் நல்ல படம் என்று நம்புவோம்; ஆனால் அதற்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்க மாட்டோம். இப்போது அந்த நிலை மாறிக் கொண்டு வருகிறது. அது உண்மையிலேயே மகிழ்ச்சி தருகிறது. அந்த நம்பிக்கை ‘காளிதாஸ் 2’-க்கும் தொடர வேண்டும். இந்தப் படம் நிச்சயமாக பெரிய வெற்றி அடையும் என்று நான் மனதார நம்புகிறேன். எல்லாருக்கும் என் வாழ்த்துகள். மகிழ்ச்சி. நன்றி.”

நடிகர் ஹரீஷ் கல்யாண் பேசியதாவது…, 

முதலில் செந்தில் சாருக்கும் நாராயணசாமி சாருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். விநியோகஸ்தர்களாக இருந்த இடத்திலிருந்து தயாரிப்பாளர்களாக உயர்ந்து வந்திருக்கிறீர்கள். இனிமேலும் நல்ல கதைகள், நல்ல நடிகர்கள், நல்ல உள்ளடக்கங்களைத் தமிழ் சினிமாவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன். அதன் அழகான தொடக்கமாக இன்று ‘காளிதாஸ் 2’ அமைந்துள்ளது. இன்னொரு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், அஜய் கார்த்திக் என் தம்பி. அவர் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார் என்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துகள் அஜய். உங்களை வாழ்த்துவதற்காக இன்று தயாரிப்பாளர் சங்கத்திலிருந்தும், விநியோகஸ்தர் சங்கத்திலிருந்தும், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களிலிருந்தும் பல முக்கியமானவர்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுடைய ஆசிகளோடு உங்கள் இந்தப் பயணம் தொடங்குகிறது என்பதில் எனக்கு மகிழ்ச்சி.

பரத் பற்றி நிறைய பேர் ஏற்கனவே பேசியிருக்கிறார்கள். அதற்கு மேலாக நான் ஒரு விஷயம் மட்டும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். நீங்கள் நிறைய வெற்றிகளைப் பார்த்திருக்கிறீர்கள். பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறீர்கள். ஆனால் இந்தப் படத்தில் இன்னொரு கதாபாத்திரத்துக்கும் சமமான இடம் கொடுத்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அது எல்லோராலும் செய்ய முடியாத ஒன்று. கதையை நம்பி, மற்றொரு கதாபாத்திரத்தையும் சமமாக மதித்து நடித்ததற்கு உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ். பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவரையும் பின்னணி இசையையும் பிரித்து பார்க்க முடியாது. படம் பார்த்தவர்கள் எல்லாரும், அவருடைய பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியிருக்கிறது என்று சொல்லியிருக்கிறார்கள். அது உண்மையென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. மிகுந்த மகிழ்ச்சி.

இந்தப் படத்தில் நடித்த பவானி ஸ்ரீ, அபர்ணா மற்றும் மற்ற எல்லா நடிகர் நடிகைகளுக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படத்தின் இயக்குநர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் மற்றும் அனைத்து கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். ‘காளிதாஸ்’ முதல் பாகம் போலவே, ‘காளிதாஸ் 2’வும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று நான் முழு நம்பிக்கையுடன் கூறுகிறேன். நன்றி.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…

“முதலில் இந்த வாய்ப்புக்காக என் மனமார்ந்த நன்றி. இன்று இந்த மேடையிலேயே ஒரு நல்ல பாஸிடிவ் உணர்வு இருக்கிறது. எல்லோரும் மனதார வாழ்த்துவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ‘காளிதாஸ்’ முதல் பாகத்திலிருந்தே இயக்குநர் இந்தக் கதையைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். ஒரு விசாரணைத் திரில்லரை புதிதாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லுவது எளிதல்ல. ஆனால் இந்தப் படத்தில் கதை, திரைக்கதை, திருப்பங்கள் எல்லாமே நன்றாக அமைந்திருக்கிறது. நான் சின்ன படம், பெரிய படம் என்று பார்க்க மாட்டேன். நல்ல படம் என்றால் போதும். இந்தப் படமும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இதில் நடித்திருக்கும் அனைவரும் ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் வேலை செய்தது எனக்கு மகிழ்ச்சி. எனக்கு துணையாக இருந்த என் இசைக் குழுவினருக்கும், பாடகர்களுக்கும், பாடலாசிரியருக்கும், ஒலி கலவை செய்த குழுவினருக்கும் என் நன்றி. பரத் சார் இந்தப் படத்தில் மிகுந்த உழைப்பு கொடுத்திருக்கிறார். அது திரையில் தெளிவாகத் தெரியும். அவருடன் பணியாற்றியது சந்தோஷம். சங்கீதா மேம் உட்பட இதில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இப்போது மக்கள் பெரிய ஹீரோ இருக்கிறாரா என்று மட்டும் பார்க்காமல், படம் நல்லா இருக்கா என்று பார்க்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படம் கண்டிப்பாக மக்களிடம் சேரும். எல்லோரும் திரையரங்கில் வந்து இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும். நன்றி. வணக்கம்.”

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசியதாவது..,

“இந்தப் படத்தில் நிறைய புதிய அறிமுகங்கள் இருக்கின்றனர். அதே சமயம், ‘காளிதாஸ்’ என்ற வெற்றிப் படத்தின் தொடர்ச்சியாக ‘காளிதாஸ் 2’ வருவது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். முதலில் தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ஒரு கதையை நம்பி தொடர்ந்து உழைப்பது சுலபமல்ல. அந்த முயற்சிக்கு இந்தப் படம் பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

அஜய் கார்த்திக்குக்கும், இவருடன் நடித்த அபர்ணதி, பவானி மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். ஃபைவ் ஸ்டார் செந்தில் சார் இந்தத் துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். அந்த அனுபவத்திலிருந்து அடுத்த தலைமுறையை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துவது மகிழ்ச்சியான விஷயம்.

இன்று தமிழ் சினிமா ஒரு நல்ல மாற்றம் கொண்ட காலத்தில் இருக்கிறது. சிறிய முதலீட்டில் உருவாகும் நல்ல படங்களுக்குக் கூட பெரிய வரவேற்பு கிடைக்கிறது. இது புதிய திறமைகளுக்கும் புதிய தயாரிப்பாளர்களுக்கும் நல்ல நம்பிக்கையைத் தருகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய இயக்குநர், சாம் சி.எஸ். மற்றும் முழுக் குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”

நடிகை அபர்ணதி பேசியதாவது..,

முதலில் பழனி சாருக்கு என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் உங்கள் வழியாகத் தான் ஆரம்பமானது. இயக்குநர் செந்தில் சாருக்கும்,  ஃபைவ் ஸ்டார் செந்தில் புரொடக்ஷனுக்கும் என் நன்றிகள். அஜய்க்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நேரில் பார்க்கிற அஜய்யும், திரையில் பார்க்கிற அஜய்யும் முற்றிலும் வேறு. அந்த மாற்றம் ரொம்ப நன்றாக இருந்தது. பரத் சார், உங்களுக்கு வாழ்த்துகள். சங்கீதா மேம், மீண்டும் தமிழில் ‘காளிதாஸ் 2’ மூலம் வருவது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடன் வேலை செய்தது மகிழ்ச்சி. இந்தப் படத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

‘காளிதாஸ் 2’, முதல் பாகத்தை விட இன்னும் அதிகமாக மக்களோடு இணையும் என்று நான் நம்புகிறேன். இது முழுக்க முழுக்க த்ரில்லும் சஸ்பென்ஸும் நிறைந்த படம். என்ன நடக்கப் போகிறது என்று யூகிக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். அதனால், இந்தப் படத்தை எல்லாரும் திரையரங்கில் வந்து பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் அனைவருக்கும் நிச்சயமாகப் பிடிக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

நடிகை பவானி பேசியதாவது.., 

முதலில் செந்தில் சாருக்கு நன்றி. இந்தக் கதாபாத்திரத்துக்கு என்னை நம்பி அழைத்ததோடு மட்டும் இல்லாமல், அதை நம்பிக்கையோடு செய்யும் தைரியத்தையும் எனக்கு கொடுத்தார். அதற்காக ரொம்ப நன்றி சார். பரத் சார் மிக அனுபவம் வாய்ந்த நடிகர். அவரிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிந்தது. சங்கீதா மேமுடன் வேலை செய்த அனுபவமும் ரொம்ப இனிமையானது. அஜயும் நானும் ஒரே நடிப்பு வகுப்பில் படித்தவர்கள். அவர் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகிறார்  என்பது எனக்கு ரொம்ப சந்தோஷம். அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள்.

சாம் சி.எஸ். சார் இந்தப் படத்திற்கு பின்னணி இசையால் பெரிய பலம் சேர்த்திருக்கிறார். ஒளிப்பதிவாளரும் இந்தப் படத்தை மிக அழகாகக் காட்டியிருக்கிறார். பிரகாஷ் ராஜ் சார், கிஷோர் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் வேலை செய்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்று நீங்கள் தரும் ஆதரவைப் பார்த்து எங்களுக்கு ரொம்ப நம்பிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த ஆதரவு படம் வெளியான பிறகும் தொடரும் என்று நம்புகிறோம். மிக்க நன்றி.

நடிகை சங்கீதா பேசியதாவது.., 

இவ்வளவு ஆண்டுகளுக்குப் பிறகு, எனக்கு மிகவும் பிடித்த தமிழில் ஒரு படத்தில் நடித்து, அதன் வெளியீட்டு விழாவில் இருப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி. இதை இன்னும் நம்பிக்கையோடு உணர்ந்து கொண்டிருக்கிறேன். முதலில் இயக்குநர் செந்தில் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. என்னை நம்பி இந்தக் கதையைச் சொல்லி, எனக்கு மிகவும் பிடித்த இந்தத் துறைக்குள் மீண்டும் அழைத்ததற்கு ரொம்ப நன்றி. அதேபோல், இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களான செந்தில் சாருக்கும் என் வாழ்த்துகள். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இதன் பிறகும் இன்னும் பல நல்ல படங்களை உருவாக்க வேண்டும் என்று மனதார வேண்டுகிறேன்.

‘காளிதாஸ் 2’ படக்குழுவில் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இரவு நேரப் படப்பிடிப்புகள் அதிகமாக இருந்தாலும், முழுக் குழுவும் மிகுந்த உற்சாகத்தோடும் அர்ப்பணிப்போடும் வேலை செய்தார்கள். அந்த ஆற்றல் எங்களுக்கும் உற்சாகம் கொடுத்தது. பரத் உடன் வேலை செய்த அனுபவம் ரொம்ப இனிமையானது. மிகவும் எளிமையான, அன்பான, மரியாதையான மனிதர். அவருடன் வேலை செய்தது எனக்கு மிகவும்  மகிழ்ச்சி இருந்தது.

அஜய் மிகவும் மென்மையான மனிதர். ஆனால் திரையில் அப்படியே மாறி நிற்கிறார். மிக நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். பவானி மிகவும் நெகிழ்ச்சியான நடிகை. கேமரா முன் வந்தவுடன் முழு கதாபாத்திரமாகவே மாறிவிடுகிறார். அபர்ணதியும் மிகவும் இனிய குணம் கொண்டவர். அவர்களுடன் வேலை செய்த அனுபவம் மிகவும் நன்றாக இருந்தது. சாம் அவர்களின் இசையுடன் இந்தப் படத்தில் இணைந்தது எனக்கு ஒரு கூடுதல் மகிழ்ச்சி.

இந்தப் படம் நிச்சயமாக திரையரங்கில் பார்க்க வேண்டிய ஒரு அனுபவம் தரும் படம் என்று நான் முழு நம்பிக்கையோடு சொல்கிறேன். அதனால், அனைவரும் திரையரங்கில் சென்று இந்தப் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

நடிகர் அஜய் கார்த்திக் பேசியதாவது…,

“இந்த சிறப்பான விழாவை இவ்வளவு அழகாக மாற்றிய பத்திரிக்கை, ஊடக நண்பர்கள், குடும்பத்தினர், நண்பர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த மேடையில் நான் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், சினிமாவை காதலிக்கும் ஒருவராக நிற்கிறேன். இந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்க காரணமான எங்கள் தயாரிப்பாளர் பழனி அண்ணாவுக்கும், என்னை நம்பி இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த இயக்குநர் செந்தில் சாருக்கும் என் மனமார்ந்த நன்றி.

செந்தில் சார் மிகவும் திட்டமிட்டு, தெளிவான கண்ணோட்டத்துடன் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த உழைப்பின் பலன்தான் இன்று இந்த மேடை. இந்தப் படத்தில் என்னை ஒரு பகுதியாக இணைத்ததற்கு ரொம்ப நன்றி சார். தயாரிப்பாளர்களான செந்தில் சார், டாக்டர் யோகேஷ்வரன், நாராயணசாமி அங்கிள் — உங்களுடைய முழு ஆதரவால்தான் இந்தப் படம் இவ்வளவு சிறப்பாக உருவாக முடிந்தது. அதற்காக ரொம்ப நன்றி.

எங்கள் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., பாடலாசிரியர் மற்றும் எல்லா தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக சாம் சி.எஸ். சார் இசையால் இந்தப் படம் இன்னும் சிறப்பாக உயர்ந்திருக்கிறது.

பரத் அண்ணா, உங்களுடன் வேலை செய்தது எனக்கு ஒரு பெரிய அனுபவம். நீங்கள் கொடுத்த ஆதரவும் ஊக்கமும் எனக்கு மிகவும் முக்கியமானது. பவானி, சங்கீதா மேம், அபர்ணதி, துரை அண்ணா, ஆனந்த், குழந்தை நட்சத்திரங்கள் — அனைவருடனும் வேலை செய்த அனுபவம் எனக்கு ரொம்ப இனிமையானது. என் அப்பாவுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஒரு பெரிய நன்றி. இந்த இரண்டு ஆண்டுகளில் நான் கொடுத்த தொந்தரவுகளையும் பதட்டங்களையும் பொறுமையுடன் தாங்கியதற்கு மனமார்ந்த நன்றி.

இந்தப் படத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் தொடர வேண்டும். ‘காளிதாஸ் 2’ படத்தை திரையரங்கில் பார்த்து ஆதரவு தாருங்கள். மிக்க நன்றி.

இயக்குநர் ஸ்ரீசெந்தில் பேசியதாவது..,

முதலில் இந்த மேடையை இவ்வளவு அழகாக அமைத்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ஆரம்பத்தில் நான் சும்மா நன்றி சொல்லிட்டு போயிடலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த ‘காளிதாஸ் 2’ பயணம் ஒரு சாதாரண பயணம் இல்லை. அது ஒரு நீண்ட, உணர்ச்சியான, நம்பிக்கையோடும் போராட்டத்தோடும் வந்த பயணம்.

‘காளிதாஸ்’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு, பெரிய வாய்ப்புகளும் பெரிய நடிகர்களோடு வேலை செய்யும் சந்தர்ப்பங்களும் வந்தன. அப்படிச் செல்லும் நேரத்தில் பல சூழல்கள் மாறின. அப்போது எனக்கு ஒரு முக்கியமான விஷயம் புரிந்தது — பெரிய படம் பண்ணணுமா என்பதற்கும் மேலாக, நல்ல படம் பண்ணணும் என்பதுதான் முக்கியம். அந்த எண்ணத்தில்தான் ‘காளிதாஸ் 2’ தொடங்கியது.

இந்தப் பயணத்தை ஆரம்பிக்க வைத்த பழனி அண்ணாவுக்கு என் மனமார்ந்த நன்றி. அதன்பிறகு இந்தப் படத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கையையும் வலிமையையும் கொடுத்தவர்கள் செந்தில் சார், நாராயணசாமி சார். நான் ஒரு நல்ல படமாக நினைத்ததை, அவர்கள் பெரிய அளவிலான படமாக மாற்றி நிறுத்தியிருக்கிறார்கள். படம் திரைக்கு வரும் போது அதன் அளவும் உழைப்பும் எல்லோருக்கும் தெரியும். அஜயை இந்தப் படத்தில் கொண்டு வந்த தருணமும் இந்தப் பயணத்தில் ஒரு முக்கியமான நிகழ்வு. அந்த சந்திப்பு மிகச் சாதாரணமாக தொடங்கியது. ஆனால், இன்று அது ஒரு முக்கியமான முடிவாக மாறியிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்தும் பணியாற்றியும் இருக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் படம் முழுக்க இரவு நேரப் படப்பிடிப்புகளோடு, மிகவும் கடினமான சூழலில் உருவானது. மாலை ஆறு மணிக்கு தொடங்கி, காலை ஆறு மணி வரை, சில சமயம் அதையும் தாண்டி படப்பிடிப்பு நடந்தது. ஆனாலும், எல்லாரும் எந்தப் புகாரும் இல்லாமல், முழு அர்ப்பணிப்போடு வேலை செய்தார்கள். அதனால்தான் இன்று இந்தப் படம் இவ்வளவு நன்றாக நம் முன் நிற்கிறது.

என் எழுத்து மற்றும் படைப்புப் பயணத்தில் என்னுடன் இருந்த என் குழுவினருக்கும், குறிப்பாக என்னுடன் தொடர்ந்து உழைத்தவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

கடைசியாக, எனக்குப் பெரிய துணையாக இருந்த என் குடும்பத்தினருக்கு நன்றி சொல்ல வேண்டும். நான் ஒரு நிச்சயமான வாழ்க்கையை விட்டு, சினிமா என்ற கனவுக்காக முழுமையாக வந்தபோது, என்னைத் தாங்கி பிடித்தது என் குடும்பம்தான். என் மனைவியும், என் குழந்தைகளும், என் கனவை என்னுடன் சுமந்தவர்கள். அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. இந்தப் பயணத்துக்கு நீங்கள் தரும் அன்பும் ஆதரவும் எங்களுக்கு மிகப் பெரிய பலம். ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். மிக்க நன்றி.

நடிகர் பரத் பேசியதாவது.., 

‘காளிதாஸ்’ 2019-ல் தொடங்கிய ஒரு பயணம். என் நடிப்பு வாழ்க்கையில் பல புதிய இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். ஆனால் செந்தில் சார் போன்ற இயக்குநர்கள் மிக அரிது. ஒரு நடிகருக்கு நல்ல இயக்குநர் கிடைத்துவிட்டால், அந்தப் படத்தின் பாதி வெற்றி அங்கேயே உறுதியாகிவிடும். எனக்கு அப்படிப்பட்ட ஒரு நல்ல இயக்குநராக செந்தில் சார் அமைந்தார். அவரை என் வாழ்க்கையில் பெற்றிருப்பது எனக்கு ஒரு ஆசீர்வாதம். ‘காளிதாஸ்’ எனக்கு ஒரு முக்கியமான திருப்பம். அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் ‘காளிதாஸ் 2’ வாயிலாக இந்தக் கதாபாத்திரத்துக்கு திரும்பி வருவது எனக்கு இன்னும் அதிக மகிழ்ச்சி தருகிறது.

இந்தப் படம் ஆரம்பத்தில் ஒரு சின்ன க்ரைம் த்ரில்லராகத் தொடங்கியது. ஆனால் செந்தில் சார், நாராயணசாமி சார், யோகேஷ்வரன் சார் ஆகியோரின் நம்பிக்கையாலும் ஆதரவாலும் இது ஒரு பெரிய படமாக மாறியது. இந்தக் கதைக்கு என்ன வேண்டுமோ அதனை முழுமையாகக் கொடுத்து இந்தப் படத்தை உயர்த்திய தயாரிப்பாளர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இது என் படமென்பதற்காக மட்டுமல்ல, இந்தப் படத்தில் உள்ள உள்ளடக்கத்தின் மீது எனக்கு இருக்கும் நம்பிக்கையால்தான் நான் இவ்வளவு உறுதியாகச் சொல்கிறேன் — ‘காளிதாஸ் 2’ ஒரு சாதாரண க்ரைம் த்ரில்லர் அல்ல. இதில் உணர்ச்சி உள்ளது, மர்மம் உள்ளது, சஸ்பென்ஸ் உள்ளது. ஆரம்பத்திலிருந்து முடிவு வரை பார்வையாளரைப் பிடித்து வைத்து செல்லும் வலிமை இந்தப் படத்துக்கு இருக்கிறது.

என் கூட நடித்த நடிகர்கள் பற்றி சொல்ல வேண்டும் என்றால், பவானி இந்தப் படத்தில் மிக அழகாக அவர் கதாபாத்திரத்தைச் செய்திருக்கிறார். அபர்ணதி மிகவும் இயல்பான நடிப்பால் கவர்கிறார். சங்கீதா மேம் — உங்களுடன் வேலை செய்தது ஒரு பெரிய மகிழ்ச்சி. திரையில் மிகவும் நளினமாகவும் உணர்ச்சியோடும் நீங்கள் நடித்திருக்கிறீர்கள்.

அஜய், உங்களுக்கு இது ஒரு கனவு போலான அறிமுகம். இந்த வாய்ப்பை நேர்மையோடும் உழைப்போடும் பயன்படுத்தினால் சினிமா கண்டிப்பாக உங்களைத் தாங்கிக்கொள்ளும். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

சாம் சி.எஸ். சார், இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் உங்கள் இசைதான். ஒவ்வொரு காட்சிக்கும் நீங்கள் கொடுத்த பின்னணி இசை இந்தப் படத்தை இன்னொரு நிலைக்கு உயர்த்தியுள்ளது.

இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. ‘காளிதாஸ் 2’ உங்களுக்குப் பிடிக்கும் என்ற முழு நம்பிக்கை எனக்கிருக்கிறது. நன்றி.,” என்றார்.

முதல் பாகத்தை இயக்கி முத்திரை பதித்த இயக்குநர் ஸ்ரீ செந்தில் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கியுள்ளார். பரத் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருடன் இணைந்து அஜய் கார்த்தி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ‘பூவே உனக்காக’ புகழ் நடிகை சங்கீதா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் இப்படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்கிறார். இவர்களுடன் பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணதி ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.

முதல் பாகம் ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்ட புலனாய்வு திரில்லராக அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. அதே பாணியில், இந்த இரண்டாம் பாகமும் உணர்ச்சிகரமான அதேசமயம் அதிரடியான களத்தில் பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. படத்தின் போஸ்டரில் இடம்பெற்றுள்ள நடிகர்களின் தோற்றங்கள், படம் ஒரு பரபரப்பான திரில்லர் அனுபவத்தைத் தரும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.

இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த திரைப்படத்தை ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் விநியோகஸ் தரும் தயாரிப்பாளருமான ஃபைவ் ஸ்டார் செந்தில் மற்றும் டாக்டர் என். யோகேஸ்வரன் இணைந்து தயாரித்துள்ளனர். முன்னதாக இவர்களது வெளியீட்டில் ‘பார்க்கிங்’, ‘கருடன்’, ‘மகாராஜா’ போன்ற வெற்றி படங்கள் வெளியானதால், ‘காளிதாஸ் 2’ திரைப்படத்திற்கும் திரையுலகத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் ‘காளிதாஸ் 2’ திரையரங்குகளில் வெளியாகிறது.

  ஏப்ரல் 10-ம் தேதி உலகம் முழுவதும் ‘காளிதாஸ் 2’ திரையரங்குகளில் வெளியாகிறது.

Prime Video Presents 2026: Prime Video இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரிய ஒரிஜினல்ஸ் ஸ்லேட்டை அறிவிக்கிறது — பல வடிவங்கள் மற்றும் மொழிகளில் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் விரிவான வரிசை

Hrithik Roshan-இன் HRX Films மற்றும் Alia Bhatt-இன் Eternal Sunshine Productions போன்ற தொழில் முன்னணியான நிறுவனங்களுடனான புதிய ஒத்துழைப்புகளுடன், Dharmatic Entertainment, D2R Films, Excel Entertainment, Tiger Baby Films, Emmay Entertainment, Abundantia Entertainment, The Viral Fever மற்றும் Wallwatcher Films உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து புதிய கதைகளுடன், இந்தியாவின் படைப்பு பொருளாதாரத்தில் Prime Video தன் முதலீட்டு அறிவிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது

Amazon MGM Studios-இன் உற்சாகமான இந்திய திரைப்பட தொகுப்பு அறிவிப்புகள், திரையரங்கு உலகில் நுழைவதை முன்னிலைப்படுத்தும் இந்த வரிசை, ஆழமான தொழில் ஒத்துழைப்புகளை வளர்க்கிறது

2025-ல் புதிய Prime உறுப்பினர்களை ஈர்ப்பதிலும், Prime Video-ஐ ஸ்ட்ரீம் செய்யும் Prime உறுப்பினர்களின் விகிதத்திலும் Prime Video India உலகளவில் மிக உயர்ந்த பகுதிகளில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டு, இந்தியா Prime Video-இன் உலகளாவிய வளர்ச்சியில் முக்கிய பங்கை தொடர்ந்து வகிக்கிறது

மும்பை, இந்தியா — மார்ச் 19, 2026 — இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுதுபோக்கு ஓடிடி தளமான Prime Video, இன்று ‘Prime Video Presents’ நிகழ்வில் 55-க்கும் மேற்பட்ட தொடர்கள் மற்றும் திரைப்படங்களுடன் இதுவரையிலான மிகப்பெரிய புதிய ஒரிஜினல்ஸ் அறிவிப்பை வெளியிட்டது. விரிவான இந்திய ஒரிஜினல்ஸ் வரிசையை மையமாகக் கொண்டு, Amazon MGM Studios India-விலிருந்து திரையரங்கு திரைப்படங்களின் அறிவிப்புகளுடன் மற்றும் சில மிகப்பெரிய உரிமம் பெற்ற தலைப்புகளுடன், வரவிருக்கும் பல மொழி தொகுப்பு ஸ்ட்ரீமிங் முதல் திரையரங்கு வரை ஒவ்வொரு பார்வை தொடர்புப் புள்ளியிலும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க உறுதியளிக்கிறது.

இந்தத் தொகுப்பில் , ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் சிறப்பான ஒரிஜினல் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன, இவை ஸ்கிரிப்ட் மற்றும் unscripted கதை சொல்லல் என இரு வகைகளிலும் பரந்த வகைமைகளை உள்ளடக்கியுள்ளன. இந்த வரிசையில் Bhuvan Bam, Rohit Saraf, Pratibha Ranta மற்றும் Gurfateh Pirzada நடிக்கும் Nikkhil Advani-இன் மகத்தான படைப்பு The Revolutionaries ; Vijay Varma நடிக்கும் Matka King; Ali Fazal, Sonali Bendre மற்றும் Aamir Bashir நடிக்கும் Raakh; ராப்பர் KING-இன் நடிப்பு அரங்கேற்றத்தை குறிக்கும் Lukkhe, மற்றும் ஸ்ட்ரீமிங்கிற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் இந்தி homegrown சூப்பர்ஹீரோ தொடரான Vansh – The Kalyug Warriors உள்ளிட்ட பல எதிர்பார்க்கப்பட்ட புதிய தலைப்புகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

இந்தப் புதிய தொகுப்புகளுடன் , Farzi Season 2, Panchayat Season 5, Call Me Bae Season 2, Dupahiya Season 2, Dahaad Season 2 மற்றும் The Traitors Season 2 உள்ளிட்ட இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் சில franchise-களின் புதிய சீசன்களையும் இந்த அறிவிப்பு கொண்டு வருகிறது.

இதுவரையிலான மிகப்பெரிய தொகுப்புடன் பிராந்திய கதை சொல்லலை விரிவுபடுத்தி, Teja Sajja தொகுத்து வழங்கும் The Traitors-இன் தெலுங்கு தழுவல், Kiran Abbavaram மற்றும் Thiruveer நடிக்கும் தெலுங்கு நாடகமான Guvvala Cheruvu Ghat, தமிழ் நாடகமான Exam, Pushkar மற்றும் Gayatri தயாரித்த Vadhandhi-இன் Season 2, மற்றும் Inspector Rishi-இன் Season 2 ஆகியவை சில குறிப்பிடத்தக்க தலைப்புகளாகும்.

இந்த தொகுப்பு Prime Video-க்கான புதிய உத்தியிலான ஒத்துழைப்புகளின் வரிசையையும் அறிமுகப்படுத்துகிறது – ஒரிஜினல் தொடரான Storm மற்றும் ஒரிஜினல் திரைப்படமான Mess-உடன் ஸ்ட்ரீமிங் உலகில் அடியெடுத்து வைக்கும் Hrithik Roshan-இன் HRX Films, மற்றும் ஒரிஜினல் திரைப்படமான Don’t Be Shy-உடன் Alia Bhatt-இன் Eternal Sunshine Productions. நிறுவப்பட்ட கதை சொல்பவர்கள் மற்றும் வளர்ந்து வரும் படைப்பாளிகளின் பல்வகை கலவை இப்போது இந்தியாவிலும் உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்கள் பொழுதுபோக்கை அனுபவிக்கும் விதத்தை வடிவமைக்கிறது.

ஒரு முக்கிய சிறப்பம்சம் என்னவெனில், Amazon MGM Studios-இன் உற்சாகமான புதிய திரையரங்கு தொகுப்பு, ஐந்து புதிய இந்திய திரைப்படங்களுடன் அறிவிக்கப்பட்டது. Rajkummar Rao மற்றும் Keerthy Suresh நடிக்கும், Aditya Nimbalkar இயக்கும் Raftaar, Kemmu, Preity G Zinta மற்றும் Sparsh Shrivastava நடிக்கும் Kunal Kemmu-வின் இயக்க முயற்சியான VIBE, Lijo Jose Pellissery இயக்கி, Hansal Mehta மற்றும் Sahil Saigal தயாரித்து, A.R. Rahman இசையமைத்த Dilkashi, Yami Gautam நடிக்கும், Balaji Mohan இயக்கி, Aanand L. Rai தயாரித்த Nayyi Navelli, மற்றும் Sharan Sharma இயக்கி, Bhuvan Bam மற்றும் Wamiqa Gabbi நடிக்கும் Kuku Ki Kundli.

திரையரங்கு மட்டுமல்ல, இந்த தொகுப்பு பல இந்திய மொழிகளில் திரையரங்கிற்கு பிறகான டிஜிட்டல் திரையிட்டலுடன் கணிசமான உரிமம் பெற்ற திரைப்படங்களின் வரிசையையும் வழங்குகிறது, இது பார்வையாளர்களுக்கு தைரியமான, திரையரங்கு அனுபவத்தை உறுதியளிக்கிறது.

“இந்த தொகுப்பு Prime Video India-வின் புதிய சகாப்தத்தை குறிக்கிறது, ஒப்பற்ற உள்ளடக்க பன்முகத்தன்மையை வழங்குகிறது என்று Prime Video India-வின் SVOD Business-இன் இயக்குனர் மற்றும் தலைவரான Shilangi Mukherji கூறினார்.

2025-ல் புதிய Prime உறுப்பினர்களை ஈர்ப்பதில் முன்னணி பகுதிகளில் ஒன்றாக தரவரிசைப்படுத்தப்பட்டு இந்தியா Prime Video-இன் உலகளாவிய வளர்ச்சியில் மையமாக உள்ளது. எங்கள் வாடிக்கையாளர்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர் நான்குக்கும் மேற்பட்ட மொழிகளில் உள்ளடக்கத்தை பார்க்கின்றனர், இது பல்வகை கதை சொல்லலுக்கான வளர்ந்து வரும் ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. மேலும் எங்கள் இந்திய உள்ளடக்கம் உலகளவிலான வாடிக்கையாளர்களிடமும் வரவேற்பு பெறுகிறது – 2025-ல் மிகவும் பார்க்கப்பட்ட முதல் 50 ஆங்கிலமல்லாத தலைப்புகளில் பாதிக்கும் மேற்பட்டவை Prime Video India-விலிருந்து வந்தன.”

“Prime Video தொடர்ந்து தொழில் புதுமையில் முன்னோடியாக இயங்கி, தைரியமான கதை சொல்லலை ஆதரித்து வருகிறது. நாட்டில் உள்ள மகத்தான படைப்பு திறமையில் எங்கள் நம்பிக்கை, வளர்ந்து வரும் குரல்களை தீவிரமாக ஆதரிக்கும் அதே வேளையில் இந்தியாவின் மிகவும் கொண்டாடப்படும் படைப்பு சக்திகளுடனான உறவுகளை வளர்க்க வழிவகுத்துள்ளது. Amazon MGM Studios India-விலிருந்து திரையரங்கு திரைப்படங்களின் உற்சாகமான வரிசையுடன் எங்களின் இதுவரை வெளியான மிகப்பெரிய ஒரிஜினல்ஸ் வரிசையை வழங்குவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். கலாசார ரீதியில் வேரூன்றிய, தொடர்புடைய மற்றும் உலகளாவிய ரீதியில் கவர்ச்சிகரமான கதைகளுடன் உயர்தர கதை சொல்லலின் தரத்தை நாங்கள் தொடர்ந்து உயர்த்துகிறோம்.”

வரவிருக்கும் தலைப்புகள் பற்றிய விவரங்கள் இணைப்பில் தனியாக சேர்க்கப்பட்டுள்ளன. தலைப்புகளின் பட்டியல், விவரங்கள், முக்கிய கலைப்படங்கள் மற்றும் நிகழ்வு புகைப்படங்களை அணுக இங்கே கிளிக் செய்யவும்.

மலையாளம் பேசும் ‘ஆதார்’

தமிழில் பெரும் பாராட்டுகள் பெற்ற வெற்றிப் படத்தை மலையாளத்தில் யோகி பாபு முதன்மைப் வேடத்தில் நடிக்க ராம்நாத் பழனிகுமார் இயக்குகிறார்

ராம்நாத் பழனிகுமார் இயக்கத்தில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் சர்வதேச விருதுகளையும் குவித்த ‘ஆதார்’ தமிழ் திரைப்படம் தற்போது மலையாளத்தில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

மலையாளத்திலும் ‘ஆதார்’ என்றே பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ராம்நாத் பழனிகுமார் இயக்க யோகி பாபு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். பிரபல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைகிறார்கள்.

‘ஆதார்’ மலையாளம் ரீமேக் குறித்து பேசிய இயக்குநர் ராம்நாத் பழனிகுமார், “2022ம் ஆண்டு ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளியான சமயத்தில் வெளியாகி இருந்தாலும், ஊடகவியலாளர்கள்,  விமர்சகர்கள், திரைப்படத் துறையினர் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ‘ஆதார்’ பாராட்டுகளை குவித்தது. தற்போது இப்படத்தை யோகி பாபு முதன்மை  வேடத்தில் நடிக்க மலையாளத்தில் இயக்குவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தரமான படைப்புகளை கொண்டாடும் மலையாள ரசிகர்கள் ‘ஆதார்’ படத்தையும் வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்,” என்றார்.

கார்ப்பரேட் உலகத்தின் லாப நோக்கத்திற்காக சாமானிய மனிதர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் ‘ஆதார்’ எடுத்துரைக்கும் என்று இயக்குநர் ராம்நாத் பழனிகுமார் மேலும் தெரிவித்தார்.

கருணாஸ் நடித்த ‘திண்டுக்கல் சாரதி’ திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதிய ராம்நாத் பழனிகுமார் ‘அம்பாசமுத்திரம் அம்பானி’ மற்றும் ஜீவா-நயன்தாரா நடித்த ‘திருநாள்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது ‘ஆதார்’ மலையாளம் ரீமேக்  பணிகளை விரைவில் தொடங்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே ‘ஆதார்’ தமிழ் திரைப்படம் சமீபத்தில் ஓடிடி தளங்களில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

நீளிரா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு


ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகி, ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை அறிமுகப்படுத்தும் வகையில் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

‘நீளிரா ‘ திரைப்படத்தில் நவீன் சந்திரா, சனந்த், ரூபா கொடுவாயூர், கபிலா வேணு, ‘கயல்’ வின்சென்ட், விது, ரோஹித் கோகாட்டே, நவயுகா, சிது குமரேசன், ஸ்வாதி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்வரத்னம் பிரதீபன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கே இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை மார்ட்டின் கவனிக்க படத்தொகுப்பு பணிகளை ராதா ஸ்ரீதர் மேற்கொண்டிருக்கிறார். இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போர் சூழலில் திருமணம் நடைபெறுவதற்காக மணமக்கள், இரு வீட்டார், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் எதிர்கொள்ளும் சவால்களை பின்னணியாக கொண்டு சர்வைவல் திரில்லராக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஏஜிஎஸ் நிறுவனமும், வெளிநாடுகளில் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனமும்  வழங்குகின்றன.

ஏப்ரல் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘நீளிரா’ படத்தினை விளம்பரப்படுத்த சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் இயக்குநர் சோமீதரன் பேசுகையில், “சின்ன வயதில் போர் நடந்து கொண்டிருக்கும் போது தமிழகத்திலிருந்து திரைப்படங்கள் வெளியாகும். அந்தப் படங்களை பார்க்கும் போது எனக்குள் ஒரு ஆசை இருந்தது. எனக்கு மட்டுமல்ல, என்னைப் போன்ற ஏராளமான ஈழத்து கலைஞர்களுக்கும் இருந்தது. என்றைக்காவது ஒருநாள் இந்த பெரிய திரையில் எங்களுடைய மொழியை  கேட்க முடியாதா…! என்னுடைய ஊரின்.. என்னுடைய வீட்டின்.. ஏதேனும் ஒரு காட்சியை திரையில் பார்த்து விட இயலாதா..! என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருந்தது. அந்த ஏக்கம் இன்று சாத்தியப்பட்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகால தமிழ் சினிமாவில் ஈழத்திலிருந்து பாலு மகேந்திரா தொடங்கி ஏராளமான கலைஞர்கள் பலர் முயற்சி செய்திருக்கிறார்கள். அந்த முயற்சியின் ஒரு தொடர்ச்சியாக இது சாத்தியப்பட்டிருக்கிறது. அதனை சாத்தியப்படுத்துவதற்கான முதல் புள்ளியை வைத்த இயக்குநர்- நண்பர் கார்த்திக் சுப்புராஜிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு எங்களுடைய வீட்டில் சமைக்கும் புட்டு உணவு பண்டத்தை பெரிய திரையில் பார்த்திட மாட்டோமா என்ற எண்ணம் இருந்தது, அது இன்று சாத்தியமாகி இருக்கிறது.

இந்த கதையை நான் சொல்லும் போது ஈழத்தில் நடைபெற்ற போரை பற்றி செவி வழியாக கேட்டு ஓரளவிற்கு தெரிந்து வைத்திருந்த எங்களுடைய தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் அவர்கள் இந்த கதையை படமாக உருவாக்குவதற்கான முடிவை மேற்கொண்ட தருணம் முக்கியமானது. இது போன்ற ஒரு கதையை படமாக்குவதற்காக முயற்சியை மேற்கொண்டிருந்த போது, இந்த கதைக்குள் ஒரு வாழ்வியல் இருக்கிறது, அந்த வாழ்க்கை தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும், தமிழ் சினிமா புதிதான வாழ்க்கையை கொண்டாடி இருக்கிறது, இந்த படத்தையும் அந்த வகையில் கொண்டாடும் என்று நம்பிக்கையுடன் தயாரித்த கார்த்திகேயன் சந்தானத்திற்கு என் நன்றி.‌

நான் எழுதிய திரைக்கதைக்குள் கமர்ஷியல் அம்சங்கள் இருக்கிறது என்று ஊக்கப்படுத்திய கல்யாண் அவர்களுக்கும் நன்றி. இந்தப் படம் ஆர்ட் ஃபிலிம் ஆகவோ அல்லது சீரியஸ் ஃபிலிம் ஆகவோ இல்லாமல் நாம் காலம் காலமாக பார்த்த போர்ப்படங்களில் இருந்து அந்த வாழ்க்கையை சொல்லும் படமாக இது இருக்கிறது.

இந்தப் படத்தை இணைந்து தயாரித்த ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணா அவர்களுக்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கும், வெளிநாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும் என் நன்றி.

நாங்கள் நிறைய போர் படங்களை பார்த்திருக்கிறோம். ஹாலிவுட்டிலிருந்து பல திரைப்படங்கள் வெளியாகி  இருக்கின்றன. அந்த படங்களை நாம் கொண்டாடியிருக்கிறோம். அந்த திரைப்படங்களில் இரு தரப்பினரும் துப்பாக்கியால் சுடுவதையும் சுடப்படுவதையும் பார்த்திருக்கிறோம்.  இன்றைக்கு உலகம் போர் சூழலில் இருக்கிறது. தினம் நாம் போர் பற்றிய செய்திகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், கேட்டுக் கொண்டிருக்கிறோம். இந்த செய்திகளில். குண்டுகளின் எண்ணிக்கையை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.‌ ஆனால் இதற்குப் பின்னால், குண்டு விழுகின்ற இடத்தில், அது இஸ்ரேலாக இருந்தாலும் சரி, ஈரானாக இருந்தாலும் சரி… அங்கும். மக்கள் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை இருக்கும். குண்டு விழுகின்ற அந்த நேரத்தில் அவர்கள் ஒரு பிறந்த நாளை கொண்டாடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம், அவர்கள் ஒரு கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்திருக்கலாம், அங்கு ஒரு மரணம் நிகழ்ந்திருக்கலாம், ஏதோ ஒரு விஷயம் நிகழ்ந்திருக்கலாம். அங்கு குண்டு விழுந்த பிறகு என்னவாகும்? அந்த சூழ்நிலையை எப்படி மாற்றும்? அவர்கள் எப்படி பதட்டமடைவார்கள்? அந்த பதட்டமான வாழ்க்கை இருக்கிறதல்லவா, அப்படிப்பட்டதொரு வாழ்க்கையை சொல்லும் படம்தான் ‘நீளிரா’.

நாம் போர் படங்களை பார்க்கும் போது எப்போதும் இரு தரப்பினரின் தாக்குதலை பற்றிய படங்களாக தான் பார்த்திருக்கிறோம். இந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி… அந்தப் பக்கம் ஒரு ஆயிரம் துப்பாக்கி…  குண்டுகள் முழங்கும், துப்பாக்கிகள் சுடும் காட்சிகளைத் தான் பார்த்திருக்கிறோம். இதற்கு நடுவில் மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை இருக்கிறது. போர் என்றால் இரு தரப்பிலிருந்து சுடும் துப்பாக்கிகள் என்று மட்டும் தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் நிஜம் அதுவல்ல.

போருடன் கூடிய வாழ்க்கை தான் எங்கள் வாழ்க்கை. பிறந்ததிலிருந்து என்னுடைய முழு இளமைக்கால வாழ்க்கையும் போருக்குள் தான் இருந்தது. அந்த போருக்குள் தான் நாங்கள் படித்தோம். அந்த போருக்குள் தான் எங்களுடைய சிறு வயது விளையாட்டுகள் இருந்தது. அந்தப் போர் தான் எங்களது விளையாட்டாகவும் இருந்தது. அந்தப் போருக்குள் தான் எங்களின் காதலும் இருந்தது, போருக்குள் தான் திருமணமும் இருந்தது. அந்த போர் வாழ்க்கையை தான் நாங்கள் வாழ்ந்தோம். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு போர் என்றால் இரு தரப்பினரும் கம்பீரமாக நிற்பதை போன்று நினைப்பார்கள். ஆனால் அதுவல்ல.  போர் எங்களுடைய வாழ்க்கையில் ஒரு பகுதியாக மாறிவிட்டது.

பகுதியாக மாறிவிட்ட போரில் எங்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது? அந்த வாழ்க்கையில் நிகழ்வுகள் எப்படி இருந்தது? அதைத்தான் இந்த படத்தில் நாங்கள் சொல்லி இருக்கிறோம்.

ஒரு விசயம் நடந்து விடுமோ என்ற பதட்டத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. உலகத்தில் அப்படியான பல படங்களை நாம் பார்த்திருக்கிறோம். ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என்றொரு திரைப்படம். அந்தப் படம் போரை பற்றிய வலியை தான் சொல்லியது. போரின் வலியை ரத்தமாகவோ அழுகையாகவோ மட்டும் சொல்லாமல் அதற்குள் இருக்கும் வாழ்க்கையை சொல்லியது அந்தத் திரைப்படம். அப்படியானதொரு வாழ்க்கையைத்தான் நாங்கள் இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம்.

இந்த சூழலில் தமிழர்கள் இந்தப் படத்தை ரசிப்பார்கள் என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு பரபரப்பான திரில்லரை ரசிக்க கூடியவர்களாகவும், அந்த படங்களை வெற்றி பெற வைப்பவர்களாகவும் தமிழ் சினிமா ரசிகர்கள் இருக்கிறார்கள்.‌

என்னைப் பொருத்தவரை மரணத்தை விட மரண பயம் கொடுமையானது. இந்த படம் அந்த மரண பயத்தில் இருந்த வாழ்க்கையை சொல்கிறது. இப்படி ஏராளமான இரவுகளில் ஒரு நீண்ட இரவை பற்றிய படம்தான் நீளிரா.  அந்த இரவும், அந்த இரவின் படபடப்பும், அந்த மக்களின் பதற்றமும் உங்களுக்கு நெருக்கமாக இருக்கும்.

நாங்கள் தமிழகத்தில் ஈழத்தைப் பற்றி நிறைய கதைகளை கேள்விப்பட்டிருக்கிறோம். எனக்கு கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள ஊர்களில் உள்ள வீடுகள் எப்படி இருக்கும் என்று தெரியும். இதில் மேல் தட்டு, நடுத்தர வர்க்கம், எளிய மக்கள் ஆகியோரின் வீடுகள் எப்படி இருக்கும் என்றும் எனக்கு தெரியும். ஆனால் என்னுடைய ஈழ மண்ணில் எங்களுடைய வீடுகள் எப்படி இருக்கும் என்பதை இந்த தமிழ் ரசிகர்களுக்கு காட்சிப்படுத்த வேண்டும் என விரும்பினேன். இதுவரைக்கும் அத்தகைய காட்சி முழுமையாக காண்பிக்கப்படவில்லை. இந்த படம் அந்த வேலையை செய்யும். ஈழத்தில் வீடுகள் எப்படி  இருக்கின்றன? அந்த வீட்டின் குசினி ( கிச்சன்) எப்படி இருக்கிறது? அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறது? என்பதை இந்த படம் உங்களுக்குச் சொல்லும்.

லயோலா கல்லூரியில் நான் விசுவல் கம்யூனிகேஷன் படிக்கும் போது ஈழத்தைப்பற்றி நான் எவ்வளவு கதைகளை சொன்னாலும் மற்றவர்களால் அதனை விசுவலைஸ் செய்து பார்க்க இயலாது. ஏனெனில் அவர்கள் அதனை விசுவலாக பார்த்ததில்லை. இந்தப் படம் அந்த வாழ்க்கையை உங்களுக்கு விசுவலாக எந்தவித சமரசமும் இல்லாமல் காட்சிப்படுத்தும்.

எங்கள் ஊரில் போர் நடந்து கொண்டிருக்கும் போதே நாங்கள் படமெடுத்திருக்கிறோம். இங்கிருந்து படங்கள் வராத காலகட்டத்தில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும் தருணத்திலும் கூட நாங்கள் ஒரு விஹெச்எஸ் கேமராவில் படமெடுத்துக் கொண்டிருந்தோம். படத்தில் நடித்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென்று இறந்து விடுவார்கள். இருந்தாலும் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்.‌ அப்படி எடுக்கப்பட்ட படங்களை நாங்கள் 90களில் பார்த்திருக்கிறோம். அங்கிருந்து தொடங்கியது தான் இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம்.

போர் தொடங்கும் போது வாழ்க்கை படப்படப்பாக இருக்கும், ஆனால் அதற்குள் இருக்கும் வாழ்க்கையையும் அந்த வாழ்க்கைக்குள் இருக்கும் ஒரு பதற்றத்தையும் அதற்குள் நடைபெறும் ஒரு திருமணத்தைப் பற்றியும் இந்தப் படம் பேசுகிறது.

இலங்கையில் போர் நடந்த போது பெங்களூருவில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்து இங்கு நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்டு அந்த மக்களுக்காக நிற்க வேண்டும் என்று வந்த ஒரு ஐடி கம்பெனி இளைஞன், பின்னாளில் இயக்குநராகி, தயாரிப்பாளராகி, எனக்கு நண்பராகவும் மாறி இந்தப் படத்தை சாத்தியப்படுத்திய கார்த்திக் சுப்புராஜுக்கு நன்றி.

பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றிய போது அவர் ஒரு முறை என்னிடம் ‘உன்னுடைய முதல் படத்திலாவது நம்முடைய கதையை படமாக உருவாக்கிடு. என்னால் இறுதிவரை எடுக்க முடியாமல் போய்விட்டது.’ என சொன்னார்.  இன்று அதனை சாத்தியப்படுத்துவதற்கு உதவிய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்திற்கு நன்றி. இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,” என்றார்.

நடிகை ரூபா கொடுவாயூர் பேசுகையில், “எம காதகி படத்திற்கு பிறகு நான் நடிக்கும் இரண்டாவது தமிழ் படம் இது. முதல் படத்தை போல் இந்த திரைப்படமும் எனக்கு ஸ்பெஷலானது. எனக்கு மட்டுமல்ல தமிழ் மக்கள் அனைவருக்கும் இந்த படம் ஸ்பெஷலானது. நமக்கு போரைப் பற்றி என்ன தெரியும் என்றால் போர் என்றால் ஆயுதம் இருக்கும், துப்பாக்கி இருக்கும், போராட்டம் இருக்கும் என தெரியும். ஆனால் அதற்குள் மக்கள் இருப்பார்கள். அவர்கள் ஒரு எமோஷனலான போரை எதிர்கொள்வார்கள். அதை பற்றி பேச நினைத்த திரைப்படம் தான் நீளிரா. போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஒரு நீண்ட இரவில் நடைபெறும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. ரசிகர்களுக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர்களுக்கும் , இயக்குநருக்கும் நன்றி. நான் கார்த்திக் சுப்புராஜ் படங்களுக்கு ரசிகை. அவர் ஒரு இயக்குநராக மட்டுமல்லாமல் அர்த்தமுள்ள படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார். நீளிரா போன்ற படங்கள் மீது நம்பிக்கை வைத்து தயாரித்து வழங்கி இருக்கிறார். அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்திற்குப் பிறகு இயக்குநர் சோமிதரனுக்கு ஏராளமான பாராட்டுகள் கிடைக்கும். இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் குறித்து எதுவும் தற்போது பகிர்ந்து கொள்ள இயலாது. ஆனால் இந்தப் படத்தில் நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.‌ இந்தப் படத்தில் நடித்திருப்பது எனக்கு கிடைத்த ஆசீர்வாதமாக கருதுகிறேன்.‌

நீளிரா திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படம் பார்த்துவிட்டு வீட்டிற்கு செல்லும் போதும் உங்கள் நினைவுகளில் இந்த நீளிரா இருக்கும். ஏப்ரல் மூன்றாம் தேதி திரையரங்கத்திற்கு சென்று படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்,” என்றார்.

இசையமைப்பாளர் கே பேசுகையில், “இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அர்த்தமுள்ள திரைப்படத்தில் நானும் பங்களித்திருப்பதில் சந்தோஷம். இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் வாழ்த்துகள். நீளிரா ஒரு அர்த்தமுள்ள படைப்பாக இருக்கும். மறக்க முடியாத படமாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி,” என்றார்.

நடிகர் சனந்த் பேசுகையில், “நான் சென்னையில் பிறந்து சென்னையிலேயே வளர்ந்த பையன். எனக்கு இந்த படத்தில் இருந்த வாழ்வியல் முற்றிலும் புதிதாக இருந்தது. இயக்குநர் சோமிதரன் நிறைய டாக்குமென்ட்ரி திரைப்படங்களையும் வேறு சில வீடியோக்களையும் காண்பித்தார். அங்குள்ள மக்களின் வாழ்வியலை பற்றியும் சொன்னார். அதனை கேட்டு தான் இப்படத்தில் நடித்தேன். நான் இதற்கு முன் போர் சம்பந்தமாக குறும்படம் ஒன்றில் நடித்திருக்கிறேன். இந்த படத்தில் பணியாற்றும் போது தான் நிறைய மக்களை சந்திக்க முடிந்தது. நிறைய மக்களிடம் பேசினேன். அவர்களுடைய கதைகளை கேட்டேன். அவர்களிடம் ஈழத்தைப்பற்றி நிறைய கதைகள் உள்ளது. அதை கேட்கும் போது இன்னும் நிறைய ஈழம் சம்பந்தமான திரைப்படங்கள் வெளியாக வேண்டும் என நினைக்கிறேன். விரைவில் நிறைய படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்.

இந்தப் படத்தை வெளியிடுபவர்களுக்கும் , வழங்குபவர்களுக்கும் என்னுடன் நடித்த நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி,” என்றார்.

நடிகர் நவீன் சந்திரா பேசுகையில், “மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பல வகையான  படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். எனக்கு மட்டுமல்ல இந்தக் குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த திரைப்படம் ஸ்பெஷலானது. இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகளும் எனக்கு பிடித்திருந்தது. மேடைக் கலைஞர்கள், குறும்படங்களில் நடித்தவர்கள், புது முகங்கள், லண்டன், கனடா ஆகிய இடங்களில் இருந்து நடிக்க வந்தவர்கள்… இவர்களுடன் இணைந்து பணியாற்றியது புதிய அனுபவமாக இருந்தது.

இந்த படத்தில் நான் ஒரு கேப்டனாக நடித்திருக்கிறேன். இதைத்தவிர என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி விரிவாக எதையும் சொல்ல இயலாது. ஆனால் படம் பார்த்தால் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இந்தப் படத்திற்காக அஸ்ஸாம், மும்பை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்காக ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் நடிகர்களை கவனமுடன் இயக்குநர் தேர்வு செய்தார்.

படப்பிடிப்பின் போது நடிகர்களுக்கு வழங்கப்பட்ட மரியாதை.. சந்தோஷமாக இருந்தது. நான் இதுவரை ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ நிறுவனத்தில் ஐந்து படங்களில் நடித்து விட்டேன். அது என்னுடைய சொந்த பட தயாரிப்பு நிறுவனம் போன்றது. இங்கு என்ன சிறப்பு என்றால், இங்கு சமத்துவம் இருக்கும். அனைவரும் சினிமா மீது பற்று கொண்டவர்களாகவே இருப்பார்கள். அதிலும் அர்த்தமுள்ள படைப்பை உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டவர்களாகவே இருப்பார்கள்.

நான் நடித்த காட்சிகளை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நிச்சயமாக பார்ப்பார், அப்போது நான் நன்றாக நடித்திருக்கிறேனா? இல்லையா? என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். நன்றாக நடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்.

திரைப்படங்கள், இணைய தொடர் என பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும்போது தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் தொடர்பு கொண்டு இப்படத்தின் கதையை பற்றி விவரித்தார். இயக்குநர் சோமிதரனிடம் கதையை கேட்கிறேன் என்று சொன்னேன்.  கதையைக் கேட்ட பிறகுதான் தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானத்தின் கதை தேர்வு குறித்து வியந்தேன். அவர் சரியான கதையை தேர்வு செய்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களும் கதாபாத்திரத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், “நாங்கள் தயாரிக்கும் 18-வது திரைப்படம் இது. ஆறாவது திரைப்படம் தயாரிக்கும் போது நண்பர் ஒருவர் நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள். ஆனால் ஆங்கிலத்தில் பேசுகிறீர்கள். அதை தமிழில் பேசலாமே என ஆலோசனை சொன்னார். அதன் பிறகு என்னை மாற்றிக் கொண்டு தமிழில் பேசி வருகிறேன். ஆனால் ஆங்கிலத்தில் பேச வேண்டியதிருக்கிறது. ஏனெனில் அப்போதுதான் பிசினஸ் செய்ய முடியும்.

நீளிரா மிகவும் ஸ்பெஷலான படம். பெருமைக்குரிய படம்.  இந்தப் படத்தை தயாரித்ததற்காக நாங்கள் தைரியமாக காலரை தூக்கி விட்டுக் கொள்வோம்.

2012ம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து இங்கு திரும்பி வந்தேன். அங்கும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன். வாழ்க்கையில் எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன். கார்த்திக் சுப்புராஜ் ‘பீட்சா’ படத்தை இயக்கி ஒரே நாளில் புகழ்பெற்றார். அதன் பிறகு தான் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு நாள் இயக்குநர் சோமிதரனை சந்தித்தேன்.  அவரை இதுவரை நான் இயக்குநராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. அவரும் என்னை தயாரிப்பாளராக பார்த்ததில்லை. பார்க்கவும் முடியாது. ஏனென்றால் நாங்கள் நல்ல நண்பர்கள்.‌
அவருடைய படத்தை நாங்கள் தயாரிப்போம் என்று நினைக்கவில்லை. அவரும் எங்களிடத்தில் கதையை சொல்வார் என்று நினைக்கவில்லை. இது ஒரு மிகப்பெரிய நீண்ட பயணம். சோமிதரன் அருமையானதொரு திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

முதலில் இது போன்ற ஒரு கதையை தேர்வு செய்து படமாக உருவாக்க வேண்டும் என்று கார்த்திக் சொன்னார். அதற்காக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றினோம்.

சனந்த் சொன்னது போல் நானும் மதுரையில் பிறந்து மதுரையிலேயே வளர்ந்தவன். இந்தப் படத்தில் சொல்லப்படுவதை போல் நாங்கள் எதையும் கேட்கவில்லை. அறியவும் இல்லை. தெரியாது. நான் ஒரு இந்திய பிரஜையாக எப்படி வாழ்வேன் என்றால் காலையில் எழுந்தது முதல் இரவு உறங்கும் வரை எனக்கு விருப்பமானவர்களுடன் நேரத்தை செலவழிப்பேன். இதுதான் என் உலகம். உலகத்தில் வேறு என்ன நடந்தாலும் அதை பற்றி அதிகமாக தெரிந்து கொள்வதில் விருப்பமில்லாத நபர். ஏனெனில் நான் ஒரு யூனிக்கான இதயம் கொண்ட நபர். காலையில் எழுந்தவுடன் செய்திகள் பார்க்கும்போது நல்ல விஷயமாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நெகட்டிவ் ஆகவே இருந்தால் அது என் வாழ்க்கையை பாதிக்கிறது. அந்த நாளை என்னால் இயல்பாக எதிர்கொள்ள முடியவில்லை. நான் என்னை எந்த அளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள இயலுமோ அந்த அளவில்தான் பேச வேண்டும். பார்க்க வேண்டும் என நானே வரையறை வகுத்துக் கொண்டேன்.

இந்த மனநிலையில் இருந்தபோது ஒரு நாள் கார்த்திக் என்னிடம் ஒரு நிமிட குறும்படம் ஒன்றே காட்டினார். அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய படம். அது எனக்கு பிடித்திருந்தது. ஆனால் ஏன்? எதற்கு? என்று புரியவில்லை.  அப்புறம் கார்த்திக் அதைப்பற்றி எனக்கு விளக்கம் அளித்தார் அதன் பிறகு எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியத் தொடங்கியது.

சினிமா என்று வந்த பிறகு நம்மால் சில விசயங்களை சொல்ல முடியும் என்ற போது.. அதனை சொல்ல வேண்டும் என நினைத்தோம். அப்படித்தான் நாங்கள் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை உருவாக்கினோம். இயக்குநர் சோமீதரன் இப்படி ஒரு கதையை சொன்னபோது அதை படமாக தயாரிக்க பெருமிதத்துடன் முன்வந்தோம்.

படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒவ்வொருவரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து அற்புதமாக நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இயக்குநர் சோமீ நிறைய பேசுவார், ஒளிப்பதிவாளர் பிரதீபன் பேசவே மாட்டார்.  இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற முதல் நாள் நாங்கள் நாகர்கோவிலுக்கு சென்றிருந்தோம். நான் -கார்த்திக் சுப்புராஜ்- கல்யாண் -பவன் -ராஜ் – என பலரும் சென்றிருந்தோம். முதல் காட்சி மிகவும் எளிமையான காட்சி. சினிமாவைப் பற்றி தெரியாதவர்கள் கூட அது மிக எளிமையான காட்சி என்று சொல்வார்கள். ஆனால் அந்தக் காட்சி முதல் டேக் ஓகே  ஆகவில்லை.  இயக்குநர் ஒன் மோர் என்றார். பிறகு மீண்டும் ஒன் மோர் என்று சொன்னார். கிட்டத்தட்ட ஐந்து முறைக்கு மேல் ஒன் மோர் சொல்லிக்கொண்டிருந்தார் . நாங்கள் அங்கு இருப்பதால் இயக்குனர் சோமீ பதட்டமடைகிறாரோ..! என நினைத்து அங்கிருந்து கிளம்பினோம். பிறகு ஐந்து நிமிடம் கழித்து மீண்டும் அங்கு வந்தபோது அதே காட்சி மீண்டும் அதே ஒன் மோர் என்று சென்று கொண்டிருந்தது. அப்போது கார்த்திக்கிடம் படத்தின் டைட்டில் நீளிராவை போல் இது நீண்டு கொண்டே போகும் போல் தெரிகிறது என்று சொன்னேன்.

ஆனால் இந்தப் படம் மிகவும் குறுகிய காலத்தில் அற்புதமாக உருவாக்கப்பட்ட படம். தொழில்நுட்ப ரீதியாகவும் தரமான படமாக உருவாகி இருக்கிறது. குறிப்பாக இசை. இசையமைப்பாளர் கே இந்தப் படத்தில் மிக சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். இசைதான் ஒரு காட்சியை உயிர்ப்புள்ளதாக உணர்வுபூர்வமானதாக மாற்றுகிறது. நடிகர்களின் நடிப்புத் திறனை மேம்படுத்துவது இசை தான். இசையமைப்பாளர் கே உடன் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.

நவீன் சந்திரா – சன் ஆப் ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ. அவர் எங்களுடைய குடும்பத்தில் ஒருவர். அவருடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். அது தொடர்பான அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

இந்த படத்தை காண்பித்தவுடன் பேராதரவு வழங்கிய ஸ்பிரிட் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பாளர் நடிகர் ராணாவிற்கும், தமிழகம் முழுவதும் வெளியிடும் ஏஜிஎஸ் நிறுவனத்தை சார்ந்த அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி மற்றும் சிந்தன் அவர்களுக்கும்,  அயல்நாடுகளில் வெளியிடும் அஹிம்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் விதுர்ஸ் அவர்களுக்கும் நன்றி

இன்றைய ஜென் ஸீ ரசிகர்களை திரையரங்கத்திற்கு அழைத்து வருவதற்கு அரும்பாடு பட வேண்டி இருக்கிறது. அவர்களுக்கும் இந்தப் படம் மிகவும் முக்கியமான படம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இது மிகவும் முக்கியமான படம். நாங்களும் இது போன்ற நல்ல திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அது ரசிகர்களின் கைகளில் இருக்கிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து இந்த படத்தை கண்டு ரசிக்க வேண்டும்,” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “முதலில் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. அதன் பிறகு திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கினோம். எப்படிப்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று நான் விரும்பினேனோ அப்படிப்பட்ட படங்களை தயாரிக்க முன்வந்தோம். பொதுவாக ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கும் எல்லா படத்திற்கும் கார்த்திக் சுப்புராஜ் வழங்கும் என்று தான் இருக்கும். படத்தின் தயாரிப்பாளராக கார்த்திகேயன் சந்தானம் இருப்பார். ஆனால் முதன் முறையாக நானாக இப்படத்தின் தயாரிப்பாளர் பெயரில் என் பெயரும் இடம்பெற வேண்டும் என்று விரும்பி கேட்டேன். அப்படி ஆசைப்பட்ட திரைப்படம் இது.‌

இந்த படத்திற்கு முன் இயக்குநர் சோமீ மிகப்பெரிய டாக்குமெண்ட்ரி இயக்குநர். இலங்கையில் போர் நடக்கும் போது போரை பற்றிய ஆவண படத்தை இயக்கியவர்.‌ அவர் ஒரு ஊடகவியலாளரும் கூட. அவருடைய கதையை அவரே எழுதி இருக்கிறார். அவரிடம் இன்னும் நிறைய ஏராளமான கதைகள் உள்ளது.

எனக்கு ஈழம் சம்பந்தமாக ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பு உண்டு. கார்த்திகேயன் சொன்னது போல் ‘காட்சி பிழை’ தான் என்னுடைய முதல் குறும்படம். அதன் மூலமாகத்தான் நான் நாளைய இயக்குநரில் தேர்வானேன்.

பொதுவாக சின்ன வயதாக இருக்கும் போது ஒரு ஏரோபிளேன் சென்றால் … அதை பார்க்கும்போது உற்சாகமாக இருக்கும். மதுரையில் ஒரு ரிக்ஷாவில் சென்று கொண்டிருக்கும் பசங்களுக்கு ஏரோபிளேன் எப்படி மகிழ்ச்சியை அளிக்குமோ… ஒரு வீட்டின் மொட்டை மாடியில் ஒரு பிள்ளைக்கு அம்மா சோறு ஊட்டிக் கொண்டிருக்கும்போது அவர்களுடைய பார்வையில் ஏரோபிளேனை காண்பித்து எப்படி சோறு ஊட்டுவார்களோ.. இப்படி பலருக்கு ஏரோபிளேன் பறப்பது ஒரு மகிழ்ச்சியான தருணமாக இருக்கும் என்பதை காட்சிப்படுத்தினேன். அதேபோன்று ஏரோபிளேன் பறக்கும் போது ஈழத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கு என்ன மாதிரியான தாக்கத்தை உண்டாக்கும் என்பதுதான் அந்த குறும்படத்தில் நான் சொல்லி இருப்பேன்.

போரை பற்றிய நிறைய கிளாசிக்கல் ஃபிலிம் இருக்கிறது. 1917 என்ற படத்தை போல் போருக்குள் ஆக்சன் படங்களும் இருக்கும். லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்று இயக்குநர் குறிப்பிட்டார்.

‘தி பியானிஸ்ட் ‘படத்தில் இரண்டாம் உலகப்போர் குறித்து நமக்கு எதுவும் தெரியாது. அந்தக் காலகட்ட வாழ்க்கை பற்றி நமக்கு எதுவும் தெரியாது. ஒரு பியானோ பிளேயரை பற்றிய படம். அதில் ஒரு காட்சி வரும். அவரால் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்ல முடியாது. நீண்ட நாட்கள் கழித்து அவர் ஒரு பியானோவை பார்ப்பார். அவர் ஒரு இசைக் கலைஞர். பியானோவை பார்த்தவுடன் அதை வாசிக்க வேண்டும் என்று துடிப்பார். அதை வாசிக்க வேண்டும் என்று நினைப்பார். அப்படி வாசித்தால் அந்த ஒலி வெளியில் கேட்டு குண்டு வீச கூடும். இந்த நிலையில் அந்த இசைக் கலைஞர் பியானோ இசைக்கருவியை தொடாமல் அதை அற்புதமாக வாசிப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும்.‌ அது எனக்கு ஒரு அற்புதமான உணர்வை வழங்கியது. போரை பற்றிய ஒரு புரிதலை ஏற்படுத்தியது. அந்த காலகட்டத்தில் மக்களின் மனநிலை எப்படிப்பட்டது என்பதை உணர வைத்தது.‌ இது போன்ற படங்களை தயாரிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

சோமீ குறிப்பிட்டதைப் போல் பெங்களூரில் இருந்து சென்னைக்கு வந்து அந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஈழ மக்கள் மீது எனக்கு ஒரு எம்பதி இருந்தது. அதை கலை வழியாக கொண்டு வர வேண்டும் என்றும் விரும்பினேன். சினிமா ஆயுதங்களை விட வலிமையான கலை வடிவம் என்பதை உணர்ந்து இருக்கிறேன்.‌ உங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்துவது தான் கலை படைப்புகள். வசூல் என்பதையெல்லாம் கடந்து இந்த சமூகத்திற்கு சில உண்மை கதைகளை அவசியம் சொல்ல வேண்டும். நாம் எல்லா பார்த்திடாத கேட்டிராத கதைகளை சொல்ல வேண்டும் என்பதுதான் சினிமா. ரசிகர்களிடத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது தான் சினிமா. அத்தகைய தருணத்தில் நான் சோமீயை சந்தித்தேன். அவருடைய எல்லா ஆவணப் படங்களையும் பார்த்தேன். பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணியாற்றியவர். அவர் திரைப்படங்களை இயக்க வேண்டும் என்று நினைத்தபோது அவரிடம் இருந்து கதைகளை கேட்டோம்.

குறைந்த முதலீட்டில் நல்ல கதை இருந்தால் சொல்லுங்கள். தயாரிக்கிறோம். ஏனென்றால் அது எங்களின் கனவு என்று அவரிடம் சொன்னேன். ஈழத்தைப் பற்றிய கதையை இந்திய சினிமாவில் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்க்கும் ரசிகர்களுக்காக உருவாக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் நிறைய கதைகளை சொல்லும்போது இந்த நீளிரா கதையையும் சொன்னார். ஒரு திருமணம் – அதற்காக இரவில் நடைபெறும் சடங்குகள் – சம்பிரதாயங்கள் என்று சொன்னார். அதைக் கேட்கும் போது மிகவும் எமோஷனலாக இருந்தது. அதே தருணத்தில் அது ஒரு திரில்லராகவும் இருந்தது. இதனை ஒரு சர்வைவல் திரில்லர் என்றும் சொல்லலாம்.

போரை பற்றிய எந்த சிந்தனையும் இல்லை என்றாலும் இந்த படம் பார்க்கும்போது இது ஒரு அசலான திரில்லர் திரைப்படம் என்ற அனுபவத்தை வழங்கும்.

தற்போது ஈரானில் போர் நடந்து கொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் இங்கு ஒரு திருமணம் நிற்கிறது. அதனால் உலகத்தில் எங்கோ நடைபெறும் ஒரு போரின் தாக்கத்தை நம்மால் உணர முடிகிறது. இந்த சூழலில் போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பகுதியில் திருமணம் எப்படி நடந்திருக்கும் என்பதை எம்மால் எளிதாக புரிந்து கொள்ள இயலும். அதுவும் இந்த திரைப்படம் சுவாரசியங்களுடன் எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லப்பட்ட ஒரு கதையாக உருவாகி இருக்கிறது. குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.  நடித்த நடிகைகள் நடிகர்கள் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார்கள்.

இந்தத் திரைப்படத்தின் ஏப்ரல் மூன்றாம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியிடுகிறோம். தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்,” என்றார்.

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியீடு

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இயக்குநர் வெங்கி அட்லூரி ( (Venky Atluri)- ஒரு சக்தி வாய்ந்த எமோஷனல் டிராமாவை  வழங்க உறுதியளிக்கிறார்

சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப் பற்றிய ஒரு பார்வை- சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘ படத்தின் டீசர் மூலம் வெளியிடப்பட்டது. இது சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தைப்பற்றிய ஒரு பார்வையை ரசிகர்களுக்கு வழங்குகிறது. வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யதேவர நாக வம்ஷீ  தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் – ஒரு உணர்ச்சி பூர்வமான மற்றும் ஈர்க்கக்கூடிய சினிமா அனுபவத்தை வழங்கும் என உறுதி அளிக்கிறது.

இந்த டீசர்- சஞ்சய் விஸ்வநாத்தை சர்வதேச அளவிலான துப்பாக்கி சுடும் வீரராக அறிமுகப்படுத்துகிறது. அவர் நாற்பது வயதிலும் தனது கனவுகளை துரத்துகிறார்.  பல லேயர்களாக உள்ள வேடத்தில் சூர்யா நடிக்கிறார். தந்தையின் அரவணைப்பு மற்றும் உணர்வுபூர்வமான ஆழம் ஆகிய இரண்டையும் சித்தரிக்கிறார். அவருடைய ஸ்டைலான தோற்றம் மற்றும் வெங்கி அட்லூரியின் வசனங்கள்…ஆகியவை இந்த டீசரின் தனித்துவமான சிறப்பம்சங்களாக உள்ளன.

மமிதா பைஜு கதைக்கு புத்துணர்ச்சியை அதிகரிக்கிறார். அவர் படத்திற்கு துடிப்பான மற்றும் வசீகரமான ஆற்றலையும் ஒன்றிணைக்கிறார். இந்த டீசர் குறிப்பிடத்தக்க வயது இடைவெளியை உள்ளடக்கிய ஒரு வழக்கத்திற்கு மாறான காதல் கதையை குறிப்பிடுகிறது. கதை சொல்லலில் வெங்கி அட்லூரியின் பிரத்யேக பாணி மூலம்.. இப்படம் இத்தகைய அம்சத்தை ஆழமாகவும், பல்வேறு உணர்ச்சிகளுடன் முதிர்ச்சியாக கையாளும் எனும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.  

படத்தில் வலிமையான தொழில்நுட்ப குழுவினரின் பங்களிப்பையும் இந்த டீசர் காட்சிப்படுத்துகிறது. ஜி.வி. பிரகாஷ் குமார் – கம்பீரமான மற்றும் சக்தி வாய்ந்த பின்னணி இசையை வழங்கி இருக்கிறார். இது காட்சி அமைப்புகளை உயர்த்துகிறது. ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி படத்தை செழுமையான மற்றும் விஷுவல் ஆக ஈர்க்கும் பிரேம்களுடன் படம் பிடித்துள்ளார். அதே நேரத்தில் நவீன் நூலியின் எடிட்டிங் ..சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது. பங்களானின் கலை வடிவமைப்பும் படத்தின் உலகத்தை மேலும் மேம்படுத்துகிறது.

வலிமையான உணர்ச்சிப்பூர்வமான அடித்தளங்களைக் கொண்ட -ஒரு மிகப்பெரிய அளவிலான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகி இருக்கும் ‘விஸ்வநாத் & சன்ஸ் ‘- ஒரு அட்டகாசமான நட்சத்திர குழுவையும் உயர்தரமான தொழில்நுட்ப குழுவையும் ஒன்றிணைக்கிறது. ‘லக்கி பாஸ்கர் ‘, மற்றும் ‘வாத்தி’ ஆகிய படங்களின் வெற்றி மூலம் உயர்ந்திருக்கும் இயக்குநர் வெங்கி அட்லூரி மற்றொரு மறக்க முடியாத பொழுது போக்கு அம்சமுள்ள படத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் (Sithara Entertainments) மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ( Fortune Four Cinemas )  நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்டு ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் (Srikara Studios) வழங்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து, எதிர்வரும் ஜூலை மாதம் உலகளாவிய அளவில் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக தயாராகி வருகிறது.

ZHEN STUDIOS வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல்

ZHEN STUDIOS தயாரிப்பில், இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர் அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், உருவாகியுள்ள “நீ Forever” திரைப்படம் வரும் மார்ச் 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. “தருணம்” என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ் மற்றும் ஈடன் ஆகியோரின் இரண்டாவது தயாரிப்பாக இப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

இன்றைய GenZ தலைமுறை உலகத்தை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. நவீன டேட்டிங் ஆப் மூலம் இணையும் ஒரு ஜோடியும், அவர்களின் வாழ்வில் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான், இப்படத்தின் கதை. அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்து அழகான லவ் டிரமாவாக இப்படம் உருவாகியுள்ளது.

நாளைய இயக்குநர் 6வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் நாயகனாக நடிக்க, மிஸ் தென்னிந்தியா 2016 பட்டம் வென்ற கேரள அறிமுக நடிகை அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன், ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, டாக்டர்.வித்யா, பிரதோஷ், சினேகா சக்தி, மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படம் சென்னையின் இன்றைய பல முகங்களை காட்டும் வகையில், சென்னையின் 20 முக்கிய டிரேட் மார்க் இடங்களில் நேரடியாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற இடங்களிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பாடல்களை பிரபல இசை நிறுவனமான சரிகமா (SaReGaMa) கைப்பற்றியுள்ளது. மேலும், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு இப்படத்தை ஒளிபரப்பும் டிஜிட்டல் உரிமையை முன்னணி ஓடிடி தளமான Netflix பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நிறைவடைந்து, விளம்பரப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மார்ச் 27 முதல் உங்கள் இதயங்களைக் கவர வருகிறது “நீ Forever”.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு: ஜென் ஸ்டுடியோஸ்
தயாரிப்பாளர்: புகழ் & ஈடன்
எழுத்து மற்றும் இயக்கம் : அசோக்குமார் கலைவாணி
இசை: அஸ்வின் ஹேமந்த்
ஒளிப்பதிவு : ராஜா பட்டாச்சார்ஜி
எடிட்டர்: எஸ்.ஏ.நாகார்ஜுன்
கலை இயக்குனர்: வர்ணாலயா ஜெகதீசன்
ஆடை வடிவமைப்பாளர்: சிந்துஜா அசோக்
ஒப்பனை: கலைவாணி பாலன்
பாடலாசிரியர்: கு.கார்த்திக்
ஒலி வடிவமைப்பு: ஏ.சதீஷ் குமார்
ஒலி கலவை: அரவிந்த் மேனன்
VFX: Hocus Pocus
DI: டி-ஸ்டுடியோஸ் போஸ்ட்
நடனம்: விஜயராணி
தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: ராகேஷ்
டப்பிங்: டி-ஸ்டுடியோஸ்
போஸ்ட் விளம்பர வடிவமைப்பு: விக்ரம் சேகர்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)