திரைத்துறை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட திறமை வாய்ந்த புதுமுகமான மிதுன் சக்கரவர்த்தி புதுமையான கதைக்களம் கொண்ட காதல் திரைப்படம் ஒன்றை எழுதி இயக்குவதோடு முதன்மை வேடத்தில் நடிக்கிறார். வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் பேனரில் இப்படத்தை இவரே தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் ஹரிணி சுரேஷ் மற்றும் ஸ்வேதா அபிராமி நாயகிகளாக நடிக்கின்றனர். இதர நடிகர்களின் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சில பிரபல நட்சத்திரங்களும் இதில் நடிக்க உள்ளனர்.
திரைப்படம் குறித்து பேசிய தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் நாயகனான மிதுன் சக்கரவர்த்தி, “திரை உலகில் இதுவரை சொல்லப்படாத வகையில் மிகவும் புதுமையான காதல் கதையாக இது இருக்கும். சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாத வகையில் உணர்ச்சிகளின் கவின்மிகு கலவையாக இந்த திரைப்படம் உருவாகும்,” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “இம்மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம். படப்பிடிப்பை தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தி நிறைவு செய்து விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்,” என்று கூறினார்.
வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான இந்த திரைப்படத்திற்கு அமர்கீத் இசையமைக்க வெற்றிவேல் ஒளிப்பதிவை கையாளுகிறார். புவன் படத்தொகுப்பிற்கு பொறுப்பேற்றுள்ளார். கலை இயக்குநர்: பிரேம்; நடனம்: வரதா மாஸ்டர்; டிசைனர்: கிப்சன் யுகா; மேலாளர்: பெருமாள்; மக்கள் தொடர்பு: நிகில் முருகன்.
வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் தயாரிப்பில் மிதுன் சக்ரவர்த்தி எழுதி, இயக்கி நடிக்கும் திரைப்படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர்கள் குறித்த விவரங்கள் வெகு விரைவில் வெளியிடப்படும்.
அக்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் லயன் ஈ. நடராஜ் தயாரிப்பில் ஈ.கே.முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பார்க்’ திரைப்படத்தின் இசை மட்டும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாகத் திரைப்பட இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சிங்கம்புலி, சரவண சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லயன் நடராஜ் பேசும் போது,
“இந்த இயக்குநர் முருகன் பத்தாண்டுகளாக என்னைத் தொடர்ந்து வருகிறார்.சினிமாவுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு ரசிகனாக,நான் 30 ஆண்டுகளாக சினிமாவை ரசித்து வருகிறேன் அவ்வளவுதான். மற்றபடி நான் சினிமாவைப் பற்றி ஏதும் நினைத்ததில்லை. அவர் ஒரு இயக்குநராக என்னை அணுகிய போது நான் முதலில் ஒப்புக்கொள்ளவில்லை.ஆனால் அவர் என்னைத் தொடர்ந்து வந்தார்.ஒரு நாள் சுருக்கமாகக் கதை சொன்னார். அப்படி அவர் சொன்ன போது உடனே நான் செய்யலாம் என்றேன். படத்தின் முதல் பாதியில் சிரித்து வயிறு வலிக்கும்,இரண்டாவது பாதில் பயத்தில் நெஞ்சு வலிக்கும் என்றார்.அது எனக்குப் பிடித்தது படம் எடுக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தை எடுத்து முடித்திருக்கிறோம். அனைவரும் நன்றாக உழைத்துள்ளார்கள்” என்றார்
இணைத் தயாரிப்பாளர் ந. ராசா பேசும்போது,
“பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுவிட்ட எனக்கு பாடல் ஆசிரியராகும் ஆசை இருந்தது. இந்த முருகன் அறிமுகத்தில் இதற்கு முன்பு இரண்டு படங்களில் பாடல் எழுதி விட்டேன்.இது மூன்றாவது படம். இதில் நம் இந்தக் காலத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் , வாட்ஸப் காலத்து இளைஞர்களுக்கு ஏற்றபடி வார்த்தைகளைப் போட்டுப் பாடல் எழுதி இருக்கிறேன்” என்றார்.
இயக்குநர் ஈ.கே.முருகன் பேசும் போது,
” இந்த பார்க் படத்தின் மூலம் தயாரிப்பாளர் எனக்குக் கொடுத்தது வாய்ப்பு அல்ல வாழ்க்கை . பொதுவாக இது மாதிரி ஹாரர் படங்களில் பேய்களை விரட்ட மதத்து சாமியார்களைக் கொண்டுதான் விரட்ட வைப்பார்கள்.நான் அதிலிருந்து விலகி ஒரு சாதாரண ஒரு நபர் மூலம், சாலையில் செல்லும் நபர் மூலம் ஓட்ட வைத்துள்ளேன்.அந்த உத்தி தான் தயாரிப்பாளரைக் கவர்ந்தது. முதலில் தயாரிப்பாளர் வைத்து நான் இரண்டு குறும்படங்கள் எடுத்தேன் அதை லட்சக்கணக்கான பேர் பார்த்து அவருக்கு ஒரு வருமானம் வந்தது. அந்த நம்பிக்கையில் தான் திரைப்படத்தில் இறங்கினார்.அதன் பிறகு இந்தப் படம் எடுத்து இதோ உங்கள் முன் வந்து விட்டோம்.இந்தப் படத்திற்காக அனைவரும் கொடுத்த ஒத்துழைப்பு மறக்க முடியாதது” என்றார்.
நடிகை ஸ்வேதா டோரத்தி பேசும் போது,
” அண்மையில் வெளியான லாந்தர் படத்துக்குப் பிறகு விரைவிலேயே பார்க் படத்தின் மூலம் படத்தின் மூலம் உங்கள் முன் நிற்கிறேன் . மகிழ்ச்சி.பார்க் படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாத அனுபவமாக இருந்தது. அனைவரும் திரையரங்கு சென்று படம் பார்த்து ஆதரிக்க வேண்டுகிறோம்” என்றார்.
சிறு பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் அன்பழகன் பேசும்போது,
” சாதாரணமாகப் படத்தில் பணியாற்றியவர்கள்தான் அந்தப் படத்தை நன்றாக இருக்கிறது என்பார்கள். ஆனால் இந்தப் படத்திற்கு சென்சார் ஸ்கிரிப்ட் எழுதியவர் கூட படம் நன்றாக இருக்கிறது என்றார். அதனால் படத்தின் மீது ஒரு நம்பிக்கை இருக்கிறது. சினிமாவில் இப்போது படம் எடுக்க 500 கோடி , 400 கோடி, 200 கோடி என்று கோடிக்கணக்கில் செலவு செய்து படத்தை எடுக்கிறார்கள். எல்லாமா ஓடி விடுகின்றன?அவர்கள் 10 கோடிக்குள் எடுத்தால் 50 படங்கள் எடுக்கலாம். அப்படிப் படம் எடுத்து பலருக்கும் வாய்ப்பு அளிக்கலாம். 50 நடிகர்களை உருவாக்கலாம்; 50 இயக்குநர்களை உருவாக்கலாம். ஏன் அதைச் செய்வதில்லை?” என்றார்.
கதாநாயகன் தமன் குமார் பேசும் போது,
” இந்தப் படத்தின் மூலம் இந்த படத்திற்குப் பிறகு இந்தப் படத்தைத் தயாரித்திருக்கும் தயாரிப்பாளர் இயக்குநர் ஆகி விடுவார்.படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நடிகராகி விடுவார். அந்த அளவிற்கு அவர்கள் இந்த படத்தின் மூலம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் முருகன் நன்றாக நடிப்பார் .அவருக்கு நல்ல காமெடி சென்ஸ் உள்ளது. இந்தப் படத்தில் நான் நடித்தது நல்ல அனுபவம் .ஒரு நொடி படத்திற்குப் பிறகு இந்தப் படம் வெளியாகிறது. ஆனால் படப்பிடிப்பின் போது இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் எடுத்தார்கள். நான் நடித்தேன். இரண்டு பாத்திரங்களையும் என்னால் மறக்க முடியாது.படத்தில் பணியாற்றிய அனைவரும் ஏதோ தங்கள் சொந்தப்படம் போல் நினைத்து உழைத்தார்கள். உண்மைக்கும் நேர்மைக்கும் என்றும் மரியாதை இருக்கும் என்பது என் நம்பிக்கை. இந்தப் படம் ஜெயிக்கும்” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது,
“இந்த பார்க் படத்தின் சில காட்சிகளைப் பார்க்கும் போது கதாநாயகன் தமன் மீது எனக்குப் பொறாமையாக இருக்கிறது. ஏகப்பட்ட முத்தக் காட்சிகள் எடுத்துள்ளார்கள். என்னைவிட வயதானவர்கள் எல்லாம் கதாநாயகனாக நடிக்கும் போது ,எனக்கு மட்டும் அமைச்சர் முதல் மந்திரி என்று வேடம் கொடுக்கிறார்கள் .எனக்கும் இப்போது கதாநாயகன் ஆசை வந்துவிட்டது. தமன் போன்றவர்கள், கதாநாயகர்கள் வாழும் வாழ்க்கையைப் பார்க்கும் போது எனக்கும் அந்த ஆசை வந்துவிட்டது.நான் இயக்கிய போதே நடிக்க வாய்ப்பு வந்தது. என் உதவி இயக்குநர்கள் பொறாமையால் தடுத்து விட்டார்கள்.
எத்தனைக் கோடியில் வேண்டுமானாலும் படம் எடுக்கலாம். அது அவரவர் விருப்பம் .ஆனால் அதைவிட அதில் நல்ல கதை இருக்க வேண்டும், திரைக்கதை இருக்க வேண்டும். எது இருக்க வேண்டுமோ அது இருக்க வேண்டும். நான் கிழக்கு வாசல் ஒன்றரை கோடியில் எடுத்தேன், சின்ன கவுண்டர் இரண்டரைக் கோடியில் எடுத்தேன், எஜமான் நான்கு கோடியில் எடுத்தேன் .அதனால் கோடி என்பது பிரச்சினை இல்லை அதில் என்ன கதை இருக்கிறது என்பதுதான் முக்கியம்.
சினிமாவில் வருவதற்கு கஷ்டப்படுகிறார்கள். கஷ்டம் அனுபவத்தைத் தரும். அந்த அனுபவம் தான் நமது வாழ்க்கைக்கான அடித்தளம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் . எனக்கும் பாடல் எழுத வாய்ப்பு வருகிறது. எல்லாம் ஐட்டம் பாடல்களாக இருக்கின்றன.இன்று வருவதெல்லாம் உயிர் இல்லாத பாடல்களாக உள்ளன. நல்ல மெட்டு கொடுத்தால் தான் நல்ல வரிகள் எழுத முடியும், இது எனது அனுபவம் “என்றார்.
இந்தப் படத்தில் பாடல் எழுதியிருப்பவர் பெயர் ராசாவாம் .அவர் எழுதிய பாடலைப் பார்க்கும்போது இனி அவர் மன்மத ராசா. அந்த அளவிற்கு எழுதி இருக்கிறார் .இயக்குநர் தயாரிப்பாளரிடம் கதை சொன்னதைப் பற்றிப் பேசினார்.நாங்கள் எல்லாம் இரண்டு மணி நேரம் மூச்சு முட்டக் கதை சொல்வோம். இவர் இரண்டே வரியில் கதை சொல்லி தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைத்திருக்கிறார்.
இங்கே உள்ள கதாநாயகி ஸ்வேதாவைப் பார்க்கிறேன்.கொழு கொழு என்று இருக்கிறார். அப்போதெல்லாம் ஜோதிகா, குஷ்பூ போன்றவர்கள் கொழு கொழு என்று இருப்பார்கள். பிறகெல்லாம் சிம்ரன், திரிஷா என்று இளைத்தவர்களாக இருப்பார்கள். கொழு கொழுவென இருந்தால் மக்களுக்குப் பிடிக்கும். இந்த கதாநாயகி ஸ்வேதா அப்படி இருக்கிறார்.
சினிமாவில் இயக்குநருக்குக் கதைப்பிடிப்பும் கதாநாயகிக்குச் சதைப்பிடிப்பும் தேவை.
இந்த இரண்டாவது கதாநாயகி கன்னடத்து பைங்கிளி தமிழைக் கொஞ்சி கொஞ்சிப் பேசினார். கேட்பதற்கு அழகாக இருந்தது.நாங்கள் மொழி பேதம் பார்ப்பதில்லை. சரோஜாதேவியை எல்லாம் கன்னடத்துப் பைங்கிளி என்று கொண்டாடினோம் .உங்களையும் வரவேற்போம்” என்றார்
இயக்குநர் சிங்கம் புலி பேசும்போது, தனது முன் கதையை எல்லாம் சினிமாவில் சிரமப்பட்ட கதையை எல்லாம் சொன்னார்.தொடர்ந்து அவர் பேசும்போது,
“நான் போட்டோ ஸ்டுடியோவில் பிலிம்களை டெவலப் செய்யும் டார்க் ரூமில் ஆறு மாதம் தங்கி இருந்தேன். ஒன்றுமே பார்க்க முடியாது. லைட் போட மாட்டார்கள் சின்ன சிவப்பு விளக்கு மட்டுமே எரியும்.எந்தப் பொருள் எங்கே இருக்கிறது என்று கூட தெரியாது.
இப்படி எல்லாம் சிரமப்பட்டுத் தான் சினிமாவுக்கு வந்தோம். இப்படிச் சிரமப்படுவது பிற்காலத்தில் நன்றாக இருப்பதற்காகத்தான். இந்தக் கதாநாயகன் தமன் வெளிநாட்டில் ஏர்லைன்ஸில் மாதம் 4 லட்ச ரூபாய் சம்பளம் வாங்கியவர் .அதையெல்லாம் விட்டுவிட்டுச் சினிமாவுக்கு வந்திருக்கிறார்.
தமன் நன்றாக இருக்கிறார் நன்றாக நடிக்கிறார். அவருக்கு என்ன குறைச்சல்? இவ்வளவு நாள் தனக்காக அவர் காலத்தைச் செலவிட்டு உள்ளார். இனி அதற்குப் பலன் உண்டு.சினிமா அவரைக் கைவிடாது .ஏனென்றால் அவர் சினிமாவை நேசிக்கிறார். சினிமா இரண்டு பேருக்கு வாய்ப்பு கொடுக்கும். தலை சீவ முடியாத அளவிற்கு அடர்த்தியான முடி கொண்டவர்களுக்கும் தலையில் முடியே இல்லாது தலைசீவ வழியில்லாதவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கும் .எனக்குப் பாட்டு பாடப் பிடிக்கும் ஆனால் டப்பிங் நடக்கும் போது நான் இடைவேளையில் பாடினால் விடவே மாட்டார்கள்.”என்று பேசியவர் ,சங்கீத ஜாதி முல்லை பாடலைப் பாடி அந்த விழாவுக்கு கலகலப்பூட்டினார்.
விழாவில் இயக்குநர் சரவண சுப்பையா,படத்தை வெளியிடும் விநியோக நிறுவனம் அஜய் பிலிம் பேக்டரியின் அஜய், ஆடியோ வாங்கி இருக்கும் ட்ராக் மியூசிக் ஆரோக்கியராஜ்,உயர் நீதிமன்ற வழக்கறிஞர் வடிவேல், இசையமைப்பாளர் அமரா, ஒளிப்பதிவாளர் பாண்டியன் குப்பன், இரண்டாவது கதாநாயகி நீமாரே, இரண்டாவது கதாநாயகன் சுரேந்தர், வில்லன்னாக நடித்திருக்கும் விஜித் சரவணன்,நடிகர் பிளாக் பாண்டி, ரஞ்சனி நாச்சியார், சித்தா தர்ஷன், நடிகை ஜெயந்திமாலா, பாடலாசிரியர் கு.கார்த்திக், ஸ்டண்ட் மாஸ்டர் ஹரி முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தென்னிந்திய சினிமாவின் சிறப்பானவற்றை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA ) வழங்கும் விழா நடைபெறுகிறது. பன்னிரெண்டாவது தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் வழங்கும் விழா எதிர்வரும் செப்டம்பர் மாதம் 14 மற்றும் 15 தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது. தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ( SIIMA) – தென்னிந்திய சினிமாவின் அசலான பிரதிபலிப்பாகும். மேலும் தென்னிந்திய திரைப்பட ரசிகர்களையும், தென்னிந்திய திரைப்பட நட்சத்திரங்களையும் இந்த விழா ஒன்றிணைக்கிறது. 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான திரைப்படங்களில் விருதுக்குரியவற்றை தேர்வு செய்வதற்கான பரிந்துரை பட்டியலை சைமா 2024 – SIIMA 2024 வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக சைமா ( SIIMA) தலைவர் பிருந்தா பிரசாத் அடுசுமில்லி பேசுகையில், ” 2023 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான சைமா ( SIIMA) விருதுக்குரிய படைப்புகளின் பரிந்துரை பட்டியலை வெளியிட்டுள்ளோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள்- மொழி எல்லைகளை கடந்து, தேசிய அளவில் பிராந்திய மற்றும் புதிய தேசிய அளவிலான பிரம்மாண்டமான வெற்றியை உருவாக்கியுள்ளனர். இதன் காரணமாக சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில் வலிமையான போட்டியாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்” என்றார்.
சைமா 2024 – SIIMA 2024 விருதுக்கான பரிந்துரை பட்டியலில் தசரா (தெலுங்கு), ஜெயிலர் (தமிழ்), காட்டேரா (கன்னடம்), 2018 (மலையாளம்) ஆகிய படங்கள் பெரும்பாலான பிரிவுகளில் இடம் பிடித்துள்ளன.
தெலுங்கில் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் நானி – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘தசரா’- பதினோரு விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு, முன்னணியில் உள்ளது. அதே தருணத்தில் நானி- மிருனாள் தாக்கூர் நடிப்பில் வெளியான ‘ஹாய் நன்னா’ திரைப்படமும் பத்து விருதுக்கான பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
தமிழில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் பதினோரு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. இதை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘மாமன்னன்: திரைப்படமும் ஒன்பது பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
கன்னடத்தில் தருண் சுதிர் இயக்கத்தில் தர்ஷன் நடிப்பில் வெளியான ‘காட்டேரா’ எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. ரக்ஷித் ஷெட்டி- ருக்மணி வசந்த் நடித்த ‘சப்த சாகரதாச்சே எல்லோ -சைடு ஏ ‘திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
மலையாளத்தில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் டொவினோ தாமஸ் – ஆசிப் அலி நடித்த ‘2018’ எனும் திரைப்படம் எட்டு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டு முன்னணியில் உள்ளது. இதைத்தொடர்ந்து மம்முட்டி – ஜோதிகா நடிப்பில் வெளியான ‘காதல்- தி கோர் ‘ எனும் திரைப்படம் ஏழு பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் வாக்களிப்பு முறை மூலம் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
www.siima.com மற்றும் SIIMA வின் ஃபேஸ்புக் பக்கத்தில் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நட்சத்திரங்கள் மற்றும் திரைப்படங்களுக்கு வாக்களிக்கலாம்.
பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்கி 2898 AD திரைப்படம், வெளியாகி மூன்றாவது வாரத்திலும், ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் வசூலில் 1000 கோடி ரூபாய் எனும் மைல்கல்லை எட்டியுள்ளது.
பாகுபலி 2க்குப் பிறகு பிரபாஸ், தற்போது ரூ. 1000 கோடி கிளப்பில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார். கல்கி 2898 AD உண்மையில் தென்னிந்தியத் திரைப்படங்களில் பாகுபலி 2 படத்திற்குப் பிறகு, இந்த சாதனையை படைத்துள்ளது. இப்படம் தெலுங்கு மாநிலங்களில் இன்னும் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் ஹிந்தி திரையுலகிலும் மற்றும் பிற மொழிகளிலும் இப்படம் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த திரைப்படம் வட அமெரிக்காவில் $17 மில்லியனைத் தாண்டியுள்ளது மேலும் இந்த பிராந்தியத்தில் பாகுபலி 2 படத்திற்கு அடுத்து இந்த சாதனையைச் செய்துள்ளது. கல்கி 2898 AD யுகே, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி மற்றும் இன்னும் சில நாடுகளிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில், ஒரு உலகத் தரத்தில், மிகச்சிறந்த தொழில்நுட்ப அம்சங்களுடன், மாயாஜால காட்சிகளும் முற்றிலும் புதிய களத்தில் வெளியான இப்படம் பார்வையாளர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தைத் தந்தது. ஹீரோ பிரபாஸ், இயக்குனர் நாக் அஸ்வின் மற்றும் மற்ற குழு உறுப்பினர்கள் அனைவரையும் ரசிகர்களும் சினிமா ஆர்வலர்களும் பாராட்டி வருகின்றனர்.
தனித்துவமான கதைசொல்லல் மற்றும் புதுமையான தோலைநோக்கு படைப்புகளுக்காக பெயர் பெற்ற எடிட்டர் சைஜு ஸ்ரீதரன் “ஃபுட்டேஜ்” படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான அனுராக் காஷ்யப் வழங்க, “ஃபுட்டேஜ்” டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. இது சினிமா ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
“ஃபுட்டேஜ்” படத்தின் டிரெய்லர் தனித்துவமான அழகியல் மற்றும் அழுத்தமான கதைசொல்லலுடன் படம் பற்றிய ஒரு பார்வையை நமக்கு வழங்குகிறது. அற்புதமான விஷுவல்கள் மற்றும் அழுத்தமான கதை என மிகச்சிறப்பான அனுபவம் தருகிறது.
மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் இணைந்து அற்புதமான நடிப்பை வழங்கியுள்ளனர். மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட் என் கோ என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் கீழ் பினீஷ் சந்திரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளர்களான ராகுல் ராஜீவ் மற்றும் சூரஜ் மேனன் ஆகியோருடன், லைன் புரொடியூசர் அனீஷ் சி சலீம் ஆகியோர் இந்த மாறுபட்ட திரைப்படத்தை உயிர்ப்பிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர்.
ஷப்னா முகமது மற்றும் சைஜு ஸ்ரீதரன் ஆகியோரின் கூட்டு முயற்சியின் மூலம் வடிவமைக்கப்பட்ட திரைக்கதை மற்றும் வசனங்களில் இப்படம் ஒரு அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ளது. சந்தீப் நாராயண் வடிவமைத்த இத்திரைப்படத்தில் அஸ்வெகீப்சர்ச்சிங் இசைக்குழுவின் பாடல்களும், சுஷின் ஷியாமின் பின்னணி இசையும் அற்புதமாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஷினோஸ் வினோதமான மற்றும் அழுத்தமான காட்சிகளை ஃபவுண்ட் ஃபுட்டேஜ் வகையில் படம்பிடித்துள்ளார், அதே நேரத்தில் கலை இயக்குனர் அப்புண்ணி சாஜன் இந்த பரபரப்பான சவாரிக்கு சரியான கலை இயக்கத்தை அமைத்துள்ளார். அஸோஷியேட் இயக்குநர் பிரினிஷ் அழுத்தமான படைப்பை வழங்குவதற்காக உறுதுணையாக இருந்துள்ளார்.
நிக்சன் ஜார்ஜின் ஒலி வடிவமைப்பு, இர்ஃபான் அமீரின் ஆக்ஷன் கோரியோகிராஃபி மற்றும் மைண்ட்ஸ்டீன் ஸ்டுடியோஸ் அற்புத VFX ஆகியோரின் உழைப்பில், இப்படம் ஒரு புதிய அனுபவமாக அமைந்துள்ளது. ரோனெக்ஸ் சேவியரின் ஒப்பனை மற்றும் சமீரா சனீஷின் ஆடைகள் கதாபாத்திரங்களுக்கு வலு சேர்த்துள்ளது. அழகியல் குஞ்சம்மாவால் வடிவமைக்கப்பட்ட போஸ்டர்கள் வரவேற்பை பெற்றுள்ளது. மார்க்கெட்டிங் பணிகளை ஹிட்ஸ் நிறுவனம் கையாளுகிறார்கள்.
ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் , சித்தார்த் மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் இந்தியன் ||
சென்னையில் சித்தார்த் மற்றும் நண்பர்கள் இணைந்து பார்கிங் டாக் என்னும் யூடியூப் சேனலை நடத்தி அதன் மூலம் நாட்டில் நடக்கும் ஊழல் குற்றங்களை மக்களுக்கு நையாண்டி தனமாக எடுத்து கூறி நாட்டை திருத்த பார்க்கிறார்கள் ஆனால் இவர்களால் மாட்டும் குற்றவாளிகள் தண்டனை அடையாமல் ஊழல் மூலமாக நாட்டில் சுதந்திரமாக இருக்கிறார்கள் இதனை கண்ட வெகுண்டெழும் சித்தர்த் குரூப், பல ஆண்டுகளுக்கு முன்பு ஊழலை ஒழிக்க போராடி பெற்ற மகனையே கொன்றுவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி சென்ற இந்தியன் தாத்தாவை திரும்ப அழைக்க முடிவெடுத்து கம்பேக் இந்தியன் என்னும் ஹாஸ்டேக் உருவாக்கி அதை வைரல் ஆக்குகிறார்கள் அதை பார்த்து இந்தியன் தாத்தா வந்து நாட்டை காப்பாற்றுவர்கள் என்று நினைக்கிறார்கள், அவர்கள் நினைத்த மாதிரியே தாய் பே என்னும் நாட்டில் அமைதியாக வாழ்ந்து வரும் இந்தியன் தாத்தா பொங்கி எழுந்து அங்கு வரும் ஒரு ஊழல் பெருச்சாளியை கொன்று தன் கணக்கை துவக்கி இந்தியா வருகிறார்.
இங்கே இவரை பிடிக்கும் காவல் அதிகாரியாக பாபி சிம்ஹா தாத்தாவை விமான நிலையத்தில் கைது செய்ய சென்று அவரை பிடித்து கைது செய்ய சொன்னால் வயதான தன் அப்பாவை கூட்டி சென்று இந்தியன் தாத்தாவிடம் அடகு வைத்து தப்பிக்க விடும் காமடி காவல் அதிகாரியாக வருகிறார் அங்கிருந்து தப்பி செல்லும் தாத்தா கத்தியை தூக்கு வார் என்று எதிர்பார்த்தால் பேஸ்புக் லைவில் வந்து ஊழலை ஒழிக்க வேண்டுமானால் முதலில் வீட்டை திருத்த வேண்டும் எனவே வீட்டில் யாராவது ஊழல் செய்தால் அவர்களை வீட்டில் உள்ளவர்களே அரசிடம் காட்டி தர வேண்டும் என்று கூற, அதை கேட்கும் சித்தார்த் அண்ட் கோ அவர் அவர் வீட்டில் இருக்கும் ஊழல்வாதிகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள். இதற்கிடையே இந்தியன் தாத்தா இந்தியா முதுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு சென்று தன் களை எடுக்கும் பணியை செய்கிறார். இப்படி சீரியசாக எடுக்க வேண்டிய படத்தை படுகாடுமடியாக, அபத்தமாக எடுத்திருக்கிறார் இயக்குனர். இது ஷங்கர் படமா என்று சந்தேகமாக இருக்குமளவிற்கு இருக்கிறது.
இந்தியன் முதல் பாகத்தில் தாத்தா கெட்டப் எவ்வளவு கம்பீரமாக இருந்தது. ஆனால் இதில் நேபாளி படத்தில் வரும் நாயகனை போல் மேக்கப்பில் சொதப்பி இருக்கிறார்கள். சும்மா கிடந்த தாத்தாவை கூட்டி வந்து ஓடவிட்டு அடிக்கிறார்கள். அவரும் வடிவேலு ஒரு படத்தில் தாவுடா செவல தாவுடா என்று கூறிகொண்டு ஓடுவதை போல் தாத்தாவையும் ஒடவிட்டிருக்கிறார்கள். சித்தார்த்தை சொஞ்சம் பயன்படுத்தி இருக்கிறார்கள். படத்தில் ஊழல் அதிகாரிகளை பார்த்தால் வெறுப்புதான் வர வேண்டும் ஆனால் இங்கு சிரிப்பு தான் வருகிறது.
இசை என்னத்த சொல்ல இந்தியன் வெற்றிக்கு முக்கிய கரணம் AR ரஹமான் இசை, ஆனால் இந்த படத்தின் முதல் எதிரி இசைதான். பல எமோஷனலான காட்சிக்கு இசையமைக்கு சொன்னால் கருமம் என்னத்தையோ வாசித்து இருக்கிறார் . தாத்தாவை வரவேற்க பாடலை போட சொன்னால் தாத்தவராரு கலக்க போறாருன்னு பிக்காலி பசங்க பாட்டா போட்டிருக்காங்க.இசை வரவில்லை. என்றால் வேறு வேலைபார்க்கலாமே படத்தின் இரண்டு நல்ல விஷயம் ஒளிபதிவு, செட் அமைப்பு.
ஷங்கர் தன் தன் பிரம்மாண்ட எண்ணத்தை வேண்டும். அதேபோல் தன் கதைவிவாத குழுவையும் மாற்ற வேண்டும்
Chennai, July 11 th , 2024: Gemini Edibles and Fats India Ltd, India’s No 1 Sunflower oil company with 21.7% Market Share All India (Source: NielsenIQ MAT Feb’24 ROCP), launched its products under the brand name Be-Rite, exclusively for the Tamil Nadu market, in Chennai today. High-quality Be-Rite brand products from GEF India will be available in all retail shops and supermarkets in urban Tamil Nadu, from now on. Gemini Edibles and Fats India Ltd is into trading, processing, manufacturing and marketing of edible oils and specialty fats for different types of food industry. Sharing more details about the launch, Mr. P. Chandra Shekhara Reddy, Sr Vice President –Sales & Marketing , Gemini Edibles and Fats India Ltd said, “We are elated to introduce our products to the Tamil Nadu consumers. Though the industry has been growing at a rate of 2.5% to 3%, we have been growing at a CAGR of 11.6% over the last 5 years. This entry into TN market will act as a catalyst for our further growth. Sunflower oil constitutes up to 42% share in edible oil category in Tamil Nadu, with 83% house hold penetration. Tamil Nadu is one of the major sunflower oil consuming markets. More people prefer enhancing their lifestyles as the household income increases. They are also becoming health conscious and opt for branded high-quality products. We want consumers in Tamil Nadu to enjoy all our products. GEF India have manufacturing units with state-of-the-art cutting-edge technology which helps to maintain high quality standards without manual intervention. We are a value-for-money brand. We maintain exceptional quality standards to meet the health requirements and also satisfy the taste palate of Tamil Nadu consumers. I am sure consumers in Tamil Nadu will love our products. GEF India has a turnover of 9000 Cr plus (FY23-24), and is committed for long term with strategic investment in brand building. In next 5 years our focus would be on gaining the market share between 10-15%.” The location of the manufacturing facilities of Gemini Edibles and Fats Ltd in Andhra Pradesh, will help in catering to the needs of the Tamil Nadu market. The oil major plans to focus on the urban markets for the next 5 months and then will roll out the products to the rest of Tamil Nadu. Other variants like Groundnut Oil, Gingelly Oil and Rice Bran will be launched, after setting up the retail distribution network.
கர்நாடக சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு, மிகவும் எதிர்பார்க்கப்படும் “உத்தரகாண்டா” படத்திலிருந்து அவரது தோற்றத்தை வெளிப்படுத்தும் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கில் “மாலிகா” வேடத்தில் தோன்றும் சிவண்ணாவின் தோற்றம், திரைப்பட ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கேரக்டர்கள் மற்றும் படத்தின் போஸ்டர்களை அறிமுகப்படுத்த உத்தரகாண்டா படக்குழு ஒரு தனித்துவமான வழியை தேர்ந்தெடுத்துள்ளது, அந்த வகையில் இப்போது சிவண்ணாவின் முதல் தோற்றம் எங்கெங்கும் பேசு பொருளாக மாறியுள்ளது.
டாக்டர்.சிவராஜ்குமார் மாஸ் மாஸ்டராக இருப்பதால், புதுமையான வழிகளில் தனது புதிய அவதாரங்கள் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க தவறியதில்லை. அவருடைய ஒவ்வொரு படமும் அவரின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்த தவறியதில்லை. அந்த வகையில், உத்தரகாண்டாவில் இரத்தக் கறை படிந்த முகத்துடன் சிவன்னாவின் “மாலிகா” தோற்றம் ரசிகர்களிடம் பேரார்வத்தை தூண்டியுள்ளது.
கேஆர்ஜி ஸ்டுடியோஸ் பேனரில் கார்த்திக் கவுடா மற்றும் யோகி G ராஜ் தயாரிக்கும் இப்படத்தை, ரோஹித் பதகி இயக்குகிறார். சாண்டல்வுட்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படைப்பு “உத்தரகாண்டா”. பிரபல இந்திய பாடகர், இசையமைப்பாளர் அமித் திரிவேதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு அத்வைதா குருமூர்த்தி, கலை இயக்குநராக விஸ்வாஸ் காஷ்யப், படத்தொகுப்பாளராக அனில் அனிருத் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
“உத்தரகாண்டா” படத்தில் கர்நாடக சக்கரவர்த்தி டாக்டர்.சிவராஜ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், நடராக்ஷசா டாலி தனஞ்சயா, பாவனா மேனன், திகந்த் மஞ்சாலே மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 4 ‘ எனும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 4’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். முழு நீள பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரிக்கிறார். ஃபின்டேமேக்ஸ் (FYNTEMAX) வி ஆர் வம்சி இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.
ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து, தரமான பட தயாரிப்பு நிறுவனம் என்ற முத்திரையை பதித்து, திரையுலக வணிகர்களிடையேயும் நன்மதிப்பை பெற்றிருக்கும் தயாரிப்பாளரும், தன்னுடைய காந்த குரலாலும், தனித்துவமான நடிப்பாலும் ரசிகர்களிடம் பிரபலமாகி இருக்கும் அர்ஜுன் தாஸ் – அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைவதாலும், இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே ஆரவாரமான எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
டாக்டர் சிவராஜ்குமாரின் சொந்த பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா, ‘பைரவனா கோனி பாதா’ படத்தை தயாரிக்கிறார். இதுவரை டாக்டர் சிவ ராஜ்குமார் நடித்த திரைப்படங்களிலேயே மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இப்படம் தயாராகிறது.
டாக்டர் சிவராஜ் குமார் கவசம் அணிந்து நீண்ட நரை முடியுடன் காட்சியளிக்கும் முதல் தோற்றத்தை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருப்பதால்.. நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. சமீபத்தில் படக்குழுவினர் இப்படத்தின் தலைப்பை வெளியிட்ட போது தலைப்பில் உள்ள தனித்துவத்திற்காகவும், தலைப்பு முழுவதும் கன்னடத்தில் வைத்திருக்க குழு ஒன்றினை தேர்வு செய்ததற்காகவும் ஒருமனதாக பாராட்டப்பட்டது.
படத்தைப் பற்றி டாக்டர் சிவ ராஜ்குமார் பேசுகையில், ” நீண்ட நாட்களாக பேசப்படும் படம் இது. அப்பா ஜி கடந்த காலங்களில் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறியப்பட்டவர். மேலும் அதன் மீது மிகுந்த அன்பையும் பெற்றார். ‘பைரவா’ வாக நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு கதையும் எனக்குப் பிடித்திருந்தது. இயக்குநர் ஹேமந்த் எம். ராவ் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
இயக்குநர் ஹேமந்த் எம். ராவ் பேசுகையில், ” பைரவனா கோனே பாதா’ ஒரு வகையில் என்னுடைய இலட்சிய படைப்பாகும். இந்த அளவில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், நான் ரசிக்கும் படி வளர்ந்த.. ஒரு சூப்பர் ஸ்டாரை இயக்குவதும் பத்து மடங்கு சவாலானதாக இருக்கிறது. சிவா அண்ணாவுடன் பணிபுரிய வேண்டும் என ஒவ்வொரு இயக்குநரும் விரும்புவார்கள். வேலையின் மீதான அவரது வைராக்கியம் தீவிரமானது. ஒரு நாள் முழுவதும் மலை உச்சியில் போட்டோ சூட் நடந்தது. வானிலை நமக்கு சாதமாக இல்லாவிட்டாலும்… சிவராஜ் குமார் சார் படப்பிடிப்பில் ஒத்துழைப்பு வழங்கிய விதம் ஒட்டுமொத்த குழுவும் வியப்பில் ஆழ்ந்தது.
இது சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தை மையமாகக் கொண்ட.. ஒரு நவீன போர் பற்றிய படமாக இருக்கும். ‘பைரவனா கோனே பாதா’வில் நான் உருவாக்குவது ஒரு புதிய அனுபவம்” என்றார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள தயாரிப்பாளர் வைஷாக் ஜெ. கௌடா பேசுகையில், ” பைரவனா கோனே பாதா’வின் கதையைக் கேட்டவுடன் இது மிகவும் சிறப்பான படமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்தப் படம் மிகப் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. அரங்கங்கள், படபிடிப்பு தளங்கள்… என அனைத்தும் விரிவாக திட்டமிடப்பட்டு நேர்த்தியாக செயல்படுத்தப்படும். நாங்கள் அமைக்கும் உலகத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மேலும் அது அந்த காலத்தில் உலகெங்கிலும் உள்ள சிறந்த படங்களுக்கு இணையாக இருக்கும்” என்றார்.
‘பைரவனா கோனே பாதா’ படத்தில் நடிக்கும் ஏனைய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.