Breaking
November 25, 2024

Cinema

தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தின் முன்னோட்டம் திரையிடல் & பத்திரிகையாளர் சந்திப்பு

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இருபத்தைந்தாவது படமாக தயாராகி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகி, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘கோட்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோரின் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (‘கோட்’) திரைப்படத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் அசோசியேட் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆவர். சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.

ஆக்ஷன் எண்டர்டெயினராக தயாராகி செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘கோட்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

‘கோட்’ திரைப்படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ”எங்கள் நிறுவனத்தின் 25வது படமாக ‘கோட்’ உருவாகி இருக்கிறது.‌ தளபதி விஜய்யுடன் ‘பிகில்’ படத்திற்குப் பிறகு நாங்கள் இணைந்திருக்கும் இரண்டாவது திரைப்படம்.‌‌ இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு. எங்கள் நிறுவனத்திற்காக வெங்கட் பிரபு இயக்கும் முதல் படம் இது.

இப்படத்தின் பணிகள் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் நடைபெற்றன. படமும் நன்றாக வந்திருக்கிறது. இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் வலுவான படைப்பு. ஏராளமான வெளிநாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். விஜய் சார் நடிக்கும் படத்தில் அதிகளவு வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட படம் இதுதான்.

இந்த தருணத்தில் படத்தின் முன்னோட்டத்தை உங்களுக்காக திரையிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் நிறுவனத்திற்கும், இந்த திரைப்படத்திற்கும் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், ”என்னுடைய திரையுலக பயணத்தில் இது மறக்க முடியாத பயணம்.‌ இந்த படத்தின் பணிகள் எப்படி தொடங்கியது, எப்படி நிறைவடைந்தது என்றே தெரியவில்லை. இதற்காக அர்ச்சனா கல்பாத்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவரை முதன்முதலாக சந்தித்து இந்த கதையை விவரித்தேன். அப்போது அவரும் ஆர்வமாகி இந்த படைப்பை உருவாக்குவது குறித்து விவாதிக்க தொடங்கினார்.

பின்னர் விஜய்யை சந்தித்து கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது.‌ அதன் பிறகு விஜய் – ஏஜிஎஸ் நிறுவனம் இருவரும் இணைந்தார்கள். கதையைக் கேட்டு ரசித்த தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் அவர்கள், ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படத்திற்காக விஜய்யுடன் மீண்டும் இணைவது மிக்க மகிழ்ச்சி. செலவைப் பற்றி கவலைப்படாமல் உலகத் தரத்திலான படத்தை உருவாக்குங்கள் என்றார். இதனால் பட்ஜெட்டை பற்றி கவலைப்படாமல் பெரிதாக யோசிக்கத் தொடங்கினேன்.‌

இந்தப் படத்திற்காக படப்பிடிப்பு தளத்தை பார்வையிடுவதற்காகவே இஸ்தான்புல் நகரத்திற்குச் சென்றோம். ஆனால் அங்கு பணியாற்ற முடியாத சூழல் இருந்தது. அதனால் படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்தினோம். நாங்கள் படப்பிடிப்பை நடத்திய காலத்தில் அந்த நாட்டில் பெரிய பிரச்சினை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதனால் இந்த படத்தின் படப்பிடிப்பு அனுபவம் மறக்க முடியாதது.

இந்தப் படத்தினை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் தான் தொடங்கினோம். இந்த படத்திற்காக உலகத்தில் சிறந்த தொழில்நுட்ப நிறுவனமான ‘லோலா’ உடன் இணைந்தோம். இந்நிறுவனம் ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறது. இவர்களுடன் இணைந்து பணியாற்றுவதில் முதலில் சற்று தயக்கம் இருந்தது. ஏனெனில் வித்தியாசமாக யோசித்த விசயத்தை எப்படி சாத்தியப்படுத்துவது? இதற்காக என்னுடைய குழுவினருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைய உண்டு. இதனால் திலீப் மாஸ்டர் கடுமையாக உழைத்திருக்கிறார்.‌ ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா- கலை இயக்குநர் ராஜீவன் – ஆடை வடிவமைப்பாளர் பல்லவி சிங் மற்றும் வாசுகி பாஸ்கர், கதாபாத்திரத்தை வடிவமைத்த மும்பையை சேர்ந்த பிரீத்தி ஷீல் சிங்- இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா- என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும்போது அனைத்து பாடல்களும் உங்களுக்கு பிடிக்கும், அனைத்தும் விஷுவல் ட்ரீட் ஆகவும் இருக்கும்.

படத்தின் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டினார்கள்.‌ இது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. அவர்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி.

விஜய்யை தவிர பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், சினேகா, யோகி பாபு ,மீனாட்சி என ஏராளமானவர்கள் நடித்திருக்கிறார்கள். இதுபோன்ற மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் அனைவரும் இணைந்து நடிப்பதற்காக ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். இதுவே எனக்கு மகிழ்ச்சியையும் தந்தது.

இந்தப் படம் ஒரு நேர்த்தியான, கமர்ஷியலான எண்டர்டெயின்மென்ட் படம். விஜய் சாரை இது போன்றதொரு கமர்சியலான படத்தில் பார்க்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது நிறைவேறி இருக்கிறது. படத்தில் பொழுதுபோக்கு அம்சங்கள் மட்டுமில்லாமல் கதையும் இருக்கிறது.
‘கோட்’ செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்.‌

இது விஜய் சார் படம் என்றாலும் அனைவரும் இதில் தங்களுக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதே சமயத்தில் முக்கியத்துவம் இருந்தால்தான் அவர்கள் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். அதனால் இந்த படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. தணிக்கைக்காக படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தில் முதன் முதலாக வசனகர்த்தா விஜியுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன்.

இந்தப் படம் விஜய்யின் ரசிகர்களுக்கு ஸ்பெஷலான விருந்தாக இருக்கும். ‘கோட்’ பக்கா கமர்ஷியலான திரைப்படம் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களை கவரும் வகையில் இந்தப் படம் உருவாகி இருக்கிறது. எந்த இடத்திலும் முகத்தை சுழிக்கும் காட்சிகள் இல்லை. இந்த படத்தை பார்த்துவிட்டு ஆசியையும், ஆதரவையும் வழங்குங்கள்,” என்றார்.

இதனைத் தொடர்ந்து படத்தைப் பற்றி பத்திரிகையாளர்களின் கேள்விக்கு கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு பதிலளித்தனர்.

தளபதி விஜய்யின் ‘கோட்’

தளபதி விஜய்யின் ‘கோட்’ டிரைலர் எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாய் எகிற வைத்துள்ளது: அதிரடி ஆக்ஷன் திரைப்படத்தை காண ஆவலாக காத்திருக்கும் ரசிகர்கள்

ரசிகர்கள் பேரார்வத்துடன் எதிர்பார்த்த தளபதி விஜய்யின் ‘கோட்’ டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வருடத்தின் மிக பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றான ‘கோட்’ மீதான எதிர்பார்ப்பை பரபரப்பு காட்சிகளுடன் கூடிய டிரைலர் இன்னும் அதிகமாக்கியுள்ளது.

Tamil Trailer: https://bit.ly/46S5BPX

ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள, வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் இரண்டு முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் நடிக்கும் ‘கோட்’, தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகும். அதிரடி ஆக்ஷன் படமான இதில் தளபதி விஜய் உடன் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா முதல்முறையாக நடித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பை இது இன்னும் அதிகரித்துள்ளது.

பிரபல நட்சத்திரங்களான மோகன், அஜ்மல் அமீர், மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், வி டி வி கணேஷ் மற்றும் அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

திரைப்படம் குறித்து பேசிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, “தளபதி விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் குழுவினருடன் இணைந்து ‘கோட்’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குவதில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பெருமிதம் அடைகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டிரைலர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட காட்சிகளின் ஒரு சிறு துளியே ஆகும். இந்த திரைப்படத்தை உருவாக்குவதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோமோ அதே மகிழ்ச்சியை ‘கோட்’ படத்தை திரையில் காணும் போது ரசிகர்களும் அடைவார்கள் என்று நம்புகிறோம்,” என்று கூறினார்.

‘கோட்’ திரைப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்த இயக்குநர் வெங்கட் பிரபு, “இது கற்பனை கதை என்ற போதிலும் உண்மைக்கு நெருக்கமாக ‘கோட்’ திரைப்படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்திய உலக அமைப்பாளர் ரா-வின் ஒரு பிரிவான தீவிரவாத எதிர்ப்பு படையில் விஜய் மற்றும் அவரது குழுவினர் பணியாற்றுகிறார்கள். கடந்த காலத்தில் அவர்கள் செய்த செயல் ஒன்று தற்போது ஒரு பிரச்சினையாக வெடிக்கிறது. விஜய்யும் அவரது குழுவினரும் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை. நான்கு ரா அதிகாரிகளை சுற்றி நடக்கும் இந்த கதை சாகசம் நிறைந்த சண்டை காட்சிகளோடு உருவாகியுள்ளது. விஜய்யின் அதிரடி நடிப்பு திரைப்படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்,” என்று கூறினார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும். ஐமேக்ஸ் வடிவத்தில் செப்டம்பர் 5 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகெங்கும் ‘கோட்’ திரைப்படம் வெளியாகிறது.

‘அந்தகன்’ பட வெற்றிக்கான நன்றி தெரிவிக்கும் விழா

ஸ்டார் மூவிஸ் சார்பில் சாந்தி தியாகராஜன் தயாரிப்பில், நடிகரும், இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் நடிப்பில் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி வெளியான ‘அந்தகன்’ திரைப்படம் – வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.

இதற்காக ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் விழா ஒன்றினை படக்குழுவினர் ஒருங்கிணைத்திருந்தார்கள். இந்த நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் இயக்குநர் தியாகராஜன், இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார், ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த், நடிகைகள் சிம்ரன், வனிதா விஜயகுமார், பிரியா ஆனந்த், செம்மலர் அன்னம், நடிகர் பெசன்ட் ரவி, கலை இயக்குநர் செந்தில் ராகவன், சண்டை பயிற்சி இயக்குநர் ராம்குமார், இயக்குநர் பிரவீண் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.‌

இயக்குநர் பிரவீண் காந்த் பேசுகையில், ”’அந்தகன்’ படத்தின் வெற்றிக்கு அப்படத்தின் ‘கரிஸ்மா’ தான் காரணம். தியாகராஜன் சார் தன்னுடைய மகனுக்காக இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார். தன் நடிப்பை நிறுத்திக் கொண்டு பிரசாந்தின் வளர்ச்சிக்காக அரும் பாடுபட்டு வருகிறார். அவருடைய நடிப்புத் திறனுக்கு இன்றைக்கு அவர் ஒரு பான் இந்தியா ஸ்டார்.

தன் மகனை மீண்டும் டாப் ஸ்டார் ஆக்குவதற்காக கடினமாக உழைத்து உருவாக்கிய படம் தான் ‘அந்தகன்’. இன்றைய இளம் தலைமுறை ரசிகர்கள் எதை விரும்புவார்களோ அதை வழங்கி வெற்றியை ருசித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் நடித்த பிரசாந்த், இடைவெளியை உணர வைக்காமல் நன்றாக நடித்திருக்கிறார். ‘ஜோடி’, ‘கண்ணெதிரே தோன்றினாள்’, ‘ஜீன்ஸ்’ போன்ற படங்களில் திரையில் தோன்றிய பத்தாவது நிமிடத்திலே நம் மனதில் பதிந்த பிரசாந்தை இந்த படத்தில் காண முடிகிறது. இதற்கு அவருடைய கடின உழைப்புதான் காரணம். இன்றளவிலும் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் எம்ஜிஆருக்கு பிறகு எந்த கெட்ட பழக்கமும் இல்லாத ஒரே நடிகர் பிரசாந்த் தான் என சொல்லலாம். தியாகராஜன்- பிரசாந்த் ஆகியோரைப் போல் திரையுலகில் அனைவரும் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.‌ பிரசாந்த்திற்கு மீண்டும் ஒரு வெற்றியை கொடுத்த தியாகராஜனுக்கு வாழ்த்துகள்,” என்றார்.

நடிகர் பெசன்ட் ரவி பேசுகையில், ”மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரசாந்துடன் நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அந்தகன் எனக்கு ஸ்பெஷல். படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக அவருடன் தமிழக முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டேன்.

தியாகராஜன் மீது எனக்கு அளவு கடந்த நம்பிக்கை இருக்கிறது.‌ இருந்தாலும் படத்தைப் பற்றிய சிறிய சந்தேகம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. இந்த படத்திற்காக பிரசாந்த் உடன் சுற்றுப் பயணத்தில் இருக்கும் வரை இந்த படத்தை நான் பார்க்கவில்லை. பிரசாந்த் – தியாகராஜன் ஆகியோர் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அவர்களுடன் பயணித்தேன்.

அதன் பிறகு ஒரு நாள் தியாகராஜன் என்னை அழைத்து படத்தை காண்பித்தார். அதிர்ச்சியில் உறைந்தே போனேன். படம் மிக அழகாக இருந்தது. நேர்த்தியாக இருந்தது. படம் வெற்றி பெறும் என்பதை அப்போது உறுதி செய்தேன். இருந்தாலும் இந்த படத்தின் வெற்றி மீது எனக்கு சின்ன சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. இருந்தாலும் படம் வெளியான முதல் நாள் முதல் காட்சி ரசிகர்களுடன் நான், பிரசாந்த், சிம்ரன் ஆகியோர் படத்தை பார்த்துக் கொண்டிருந்தோம்.

பொதுவாக ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் தூக்கம் வந்துவிடும். ஆனால் இந்த படம் கண்ணை மூடி கண்ணை திறப்பதற்குள் முடிவடைந்து விட்டது. அதனால் இந்தப் படம் சிறப்பாக இருக்கிறது என்று மனித உளவியலே சொல்லிவிட்டது. ஏனெனில் ஏற்கனவே பார்த்த திரைப்படத்தை மீண்டும் திரையில் பார்க்கும்போது ஏதேனும் ஒரு வகையில் இடையூறு ஏற்படும். ஆனால் அந்தகன் படத்தை திரையரங்கத்தில் பார்க்கும்போது யாருக்கும் எந்த இடையூறையும் ஏற்படுத்தவில்லை. அனைவரும் படத்தை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் இது போன்ற வெற்றி படத்தை வழங்கிய தியாகராஜனுக்கு நன்றி நன்றி,” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில், ”அந்தகன் படம் வெற்றி பெறுவதற்கு மனதார வாழ்த்திய ஊடகங்களுக்கும், திரையரங்கத்திற்கு வருகை தந்து வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். ’90ஸ் கிட்ஸ்’ என்ற வார்த்தையை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக பிரசாந்த்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ’90ஸ் ஸ்டார்ஸ் கம் பேக்’. இதற்காக சிம்ரனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்திற்காக இணையதளத்தில் வெளியிடப்பட்ட பொதுமக்களின் கருத்தில் ஒரு முக்கியமான விஷயம் இடம் பிடித்திருந்ததை கவனித்தேன். படம் பார்க்கும்போது தியேட்டரில் யாரும் செல்போனை பார்க்கவில்லை என குறிப்பிட்டிருந்தனர்.‌ நானும் இந்த திரைப்படத்தை மூன்று முறை ரசிகர்களின் வரவேற்பினை காண்பதற்காக திரையரங்கத்திற்கு சென்றேன். அந்த தருணத்திலும் யாரும் செல்போனை பார்க்கவில்லை. அனைவரும் படத்தினை சீரியசாக பார்த்தனர். 90களில் ஒரு திரைப்படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்க்கும் போது எம் மாதிரியான வரவேற்பு கிடைத்ததோ..! அது போன்றதொரு வரவேற்பு அந்தகன் படத்திற்கு கிடைத்தது. இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை ப்ரியா ஆனந்த் பேசுகையில், ”இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது மிகவும் பாசிட்டிவாக இருந்தது. படம் வெளியான பிறகும் ரசிகர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் பாசிட்டிவான விஷயங்கள் வந்து கொண்டே இருக்கிறது. அனைத்தும் ஒருமித்த விஷயமாக இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.

90ஸ் ஸ்டார் பிரசாந்த்- சிம்ரன் என்று சொல்லலாம். இப்போதும் அவர்கள் அப்படியே தான் இருக்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் இயல்பாகவும், அமைதியாகவும் இருப்பவர் இயக்குநர் தியாகராஜன். அவர் தொடர்ந்து படங்களை இயக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். அதிலும் குறிப்பாக இன்றைய இளம் தலைமுறைக்கு ஏற்ற வகையில் காதல் கதைகளை அவர் இயக்க வேண்டும்.

அந்தகன் போன்ற மிகப்பெரிய வெற்றி படத்தில் ஒரு பகுதியாக இருந்ததற்கு பெருமிதம் அடைகிறேன். இந்தப் படத்தை வெற்றி பெற செய்த பிரசாந்தின் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் நன்றி,” என்றார்.

நடிகை சிம்ரன் பேசுகையில், ”திரையுலகப் பயணத்தில 29 வருடங்களை நிறைவு செய்து விட்டேன். இந்த முப்பதாவது ஆண்டில் ‘அந்தகன்’ சூப்பர் ஹிட் படமாக அமைந்திருக்கிறது. இதற்காக நான் இயக்குநர் தியாகராஜனுக்கு தான் நன்றி சொல்வேன். அவர்தான் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்தார்.

படப்பிடிப்பு தளத்தில் தியாகராஜன் அமைதியாக இருப்பார். படப்பிடிப்பு தளமும் அமைதியாக இருக்கும். பணிகள் மட்டும் சுறுசுறுப்பாக நடைபெறும்.

பிரசாந்த் – என்னுடைய ராசியான ஜோடி. இதற்காக அவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ப்ரியா ஆனந்த் – படத்தில் அழகாகவும், ரியலிஸ்டிக்காகவும் நடித்திருந்தார். பான் இந்திய நட்சத்திரமாக அவர் உயர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நான் நடித்திருக்கிறேன். உண்மையில் அவர்தான் எனக்கு குரு. நான் இன்று தமிழில் இந்த அளவிற்கு பேசுகிறேன் என்றால் அதற்கு அவரும் ஒரு காரணம். அவருடைய படப்பிடிப்பு தளத்தில் ஒழுக்கமும், நேர்மையும் நிறைவாக இருக்கும். அவர் மிகவும் அன்பானவர், உதவும் குணம் உள்ளவர். இந்தப் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு எனக்கு மிகப்பெரிய பரிசை போன்றது. இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி,” என்றார்.

இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில், ”அந்தகன் படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் இந்த விழாவிற்கு வருகை தந்திருக்கும் ஏராளமான ஊடகங்களை வரவேற்கிறேன். ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்திருப்பதை காண்கிறேன். இது ஆரோக்கியமானது.

தற்போது திரைப்படங்களை உருவாக்குவது எளிது. அதை வெளியிடுவது கடினம். அதன் பிறகு அந்த திரைப்படம் வெற்றி பெறுவது அதைவிட கடினம். நல்ல படத்திற்கு கூட மக்கள் திரையரங்கத்திற்கு வருகை தருவதில்லை. பைரசியிலோ, ஓ டி டி யிலோ வந்து விடும். அதில் பார்க்கலாம் என்கிறார்கள். நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள் என்றால் மட்டுமே அவர்களுடைய ரசிகர்கள் திரையரங்கத்திற்கு சென்று பார்க்கிறார்கள்.

இதையெல்லாம் மீறி அந்தகன் படம் வெற்றி பெற்று இருக்கிறது என்றால் அதுதான் நிஜமான வெற்றி. படத்தைப் பற்றி வெளியான விமர்சனங்கள் அனைத்தும் சிறப்பானதாக இருந்தன.

இந்தப்படம் திரையிட்ட திரையரங்குகளில் இரவு காட்சிகளில் கூட ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தேன். அதனால் இந்த படக் குழுவினர் வெற்றி விழா கொண்டாடுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனெனில் அந்தகன் படம் ஒரு உண்மையான வெற்றியை பெற்றிருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் தியாகராஜனின் சிரிப்பில் பல அர்த்தங்கள் இருக்கும். ஆனால் அவருடைய கவனம் எல்லாம் இயக்கத்தில் தான் இருக்கும். நடிகர்கள் சிறப்பாக நடித்தால் உடனடியாக பாராட்டை தெரிவித்து விடுவார்.

படத்தில் பிரசாந்தின் நடிப்பு மிகச் சிறப்பாக இருந்தது. கண் பார்வை தெரியும். ஆனால் கண் பார்வை தெரியாதது போல் நடிக்க வேண்டும். பிறகு கண்பார்வை நிஜமாகவே தெரியாது. அது போல் நடிக்க வேண்டும். இந்த வேடத்தில் சரியான அளவுகோலில் நடிக்க வேண்டும். கொஞ்சம் மீறினாலும் மிகை நடிப்பு வெளிப்பட்டு விடும். இந்த வேடத்தில் சிறப்பாக நடித்த பிரசாந்துக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் பல திரைப்படங்களில் நடித்து வெற்றி பெற வேண்டும். திரையுலகில் மீண்டும் வலம் வர வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

சிம்ரனை ‘தர்மசக்கரம்’ எனும் படத்தில் நடிக்க வைப்பதற்காக மும்பை சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினேன். ஆனால் அர்ஜுன் நடித்த ‘கொண்டாட்டம்’ படத்தில் தான் அவருடன் இணைந்து பணியாற்றினேன். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் ‘கொண்டாட்டம்’ தான். அந்தத் தருணத்தில் சிம்ரனுக்கு தமிழ் சுத்தமாக தெரியாது. நான் உடல் மொழியுடன் பிராம்ப்ட்டிங் செய்வதை பார்த்துக் கொண்டு நடித்து அசத்தினார். அவர் திரையுலகத்திற்கு வருகை தந்து 29 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறதாம். இன்னும் 30 ஆண்டுகள் திரை உலகில் நடிக்க வேண்டும் என்று தன் ஆசையை தெரிவித்துள்ளார்.

ஒரு எல்லைக்கு பிறகு ஒரு கலைஞருக்கு நடிப்பு நன்றாக வரும் என்றால் சினிமா அவர்களை விடாது. நீங்கள் சினிமாவை விட்டு விலக நினைத்தாலும் சினிமா உங்களை விடாது. நாகேஷ் இறுதி காலகட்டம் வரை நடித்துக் கொண்டே இருந்தார்.‌ அவர் நடித்த கடைசி படம் ‘தசாவதாரம்’. அப்போது கூட அவருக்கு கண் பார்வையில் சிறிய தடுமாற்றம் இருந்ததால் தான் நடிப்பதை குறைத்துக் கொண்டார். நானும் அந்த வகையான நடிகன் தான் என நினைக்கிறேன்.

இயக்குநர் தியாகராஜனுக்கு நன்றிகள் எவ்வளவு சொன்னாலும் போதாது. இந்தப் படம் சற்று தாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் வெளியாகி வெற்றியை பெற்றிருக்கிறது. இதற்காக படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் தியாகராஜன் பேசுகையில், ”அந்தகன் படத்தை மக்களிடம் நல்ல முறையில் சென்றடைய செய்த அனைத்து ஊடகத்தினருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு ஊடகத்திடமிருந்து வெளியான விமர்சனங்கள் மக்களை சென்றடைந்து படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறது. இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இந்தப் படத்தில் சிறிய வேடத்திற்கு கூட திறமையான கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்தோம்.‌ திரையரங்குகளில் மறைந்த நடிகர் மனோபாலாவின் வசனங்களுக்கும், வனிதா விஜயகுமார் பேசும் வசனங்களுக்கும் கைத்தட்டல் கிடைக்கிறது என்றால் அதற்கு அவர்களுடைய கடுமையான உழைப்பும் ஒரு காரணம்.

பிரியா ஆனந்த் நடிப்பு ரியலிஸ்டிக்காக இருந்தது. அவருடைய அழகு – சிரிப்பு- டயலாக் டெலிவரி- என எல்லாம் சிறப்பாக இருந்தது.

இந்தத் திரைப்படத்தில் பிரசாந்த் நாயகனாக இருந்தாலும் அனைத்து கேரக்டருக்கும் சமமான வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்..
முதலில் இந்த திரைப்படத்தை ஜெயம் ராஜா இயக்குவதாக இருந்தது. அவருடன் மூன்று மாதம் இணைந்து பயணித்தோம். இந்த மூன்று மாத காலத்திற்குள் அவர் லண்டனில் உள்ள வெளிநாட்டு நடிகை ஒருவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என்று சொன்னார். அவருடனும் பேச்சு வார்த்தை நடத்தினோம். அவர் கேட்ட சம்பளத்தையும் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டோம். மூன்று மாதத்திற்கு பிறகு ஜெயம் ராஜாவிற்கு சிரஞ்சீவி நடிக்கும் படம் ஒன்றை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அந்தப் படத்தை இயக்கி நிறைவு செய்த பிறகு இந்த படத்தில் பணியாற்றுகிறேன் என ஜெயம் ராஜா சொன்னார்.‌ நான் நன்றி என்று சொல்லிவிட்டு, உங்களுடைய பயணத்தை வெற்றிகரமாக தொடருங்கள் என்றேன்.

அதன் பிறகு நான் இயக்க தீர்மானித்தேன். அந்த கதாபாத்திரத்திற்கு யாரை நடிக்க வைப்பது என்பது குறித்து யோசிக்க தொடங்கினோம். அப்போது சிம்ரனை தவிர வேறு யாரும் என் எண்ணத்தில் வரவில்லை. அவரும் நடிக்க ஒப்புக்கொண்டு பெரிய அளவில் பேராதரவை வழங்கினார். அவர் மேடையில் தமிழில் பேசியதை மிகவும் ரசித்தேன்.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்- அவர் ஏற்கனவே பிரசாந்த் நடித்த ‘தமிழ்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.‌ அவரிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று சொன்னவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய ஈடுபாடு, ஒத்துழைப்பு பாராட்டும்படி இருந்தது.

சமுத்திரக்கனி- தெலுங்கில் பரபரப்பாக நடித்துக் கொண்டு இருக்கும் முன்னணி நடிகர்.‌ நான் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார் அவரை ஒரு காட்சியில் அரைகுறை உடையுடன் பாத்ரூமில் உட்கார சொன்னேன். எந்த தயக்கமும் இல்லாமல் அந்த காட்சியில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார்.

பிரசாந்த்- இந்தப் படத்தில் மட்டுமல்ல எந்த படத்திலும் இயக்குநர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் கேட்பார். அவர் சொன்னதைத்தான் செய்வார். இவராக எந்த கருத்தையும் பகிர்ந்து கொள்ள மாட்டார். அதேபோல் இந்தப் படத்தில் நான் என்ன சொன்னேனோ அதை மட்டுமே அவர் செய்தார்.

அவர் பியானோ வாசிப்பதாகட்டும், கண் தெரியாமல் நடிப்பதாகட்டும் என எல்லா காட்சியிலும். நேச்சுரலாக நடித்தார். இந்த திரைப்படத்தில் சண்டைக் காட்சி இல்லை, பாடல் காட்சி இல்லை, ஆனால் அந்த குறையை தன்னுடைய நேர்த்தியான நடிப்பால் மறக்கடிக்க செய்திருந்தார்.‌ அவருடைய நடிப்பாற்றலால் இந்த படத்தை வெற்றி பெற செய்திருக்கிறார்.

படத்தில் நடித்த அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌ மேலும் இந்த திரைப்படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்களுக்கும், திரையிட்ட திரையரங்க அதிபர்களுக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் பேசுகையில், ”அந்தகன் படத்தை மிகப்பெரிய அளவில் வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.‌

படம் வெளியான தருணத்திலிருந்து இப்படத்தைப் பற்றிய விமர்சனம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியது.‌

இந்தப் படத்தின் வெற்றிக்கு படத்தில் நடித்த கார்த்திக் போன்ற அனுபவமிக்க நட்சத்திரங்களும் மிக முக்கியமான காரணம். படப்பிடிப்பு தளத்தில் அவருடைய உற்சாகம் ஒட்டுமொத்த குழுவினருக்கும் உத்வேகத்தை அளித்தது.‌

சமுத்திரக்கனி, கே. எஸ். ரவிக்குமார், ஊர்வசி, யோகி பாபு போன்ற நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து நடித்த அனுபவமும் மறக்க முடியாதது. நான் ஏராளமான வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது எனக்கு கிடைத்த அனுபவம் வித்தியாசமானதாக இருந்தது. குறிப்பாக நான் இன்றும் மதிக்கும் இயக்குநரான கே. எஸ். ரவிக்குமார் , ஊர்வசி, யோகி பாபு இவர்களுடன் படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய போது ஒவ்வொரு நாளும் படமாக்கப்படும் காட்சியை முழுதாக புரிந்து கொண்டு அந்த காட்சியை எப்படி மேம்படுத்தலாம் என திட்டமிட்டு, அதற்கு ஒத்திகை பார்த்து நடித்தோம். 60களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 70களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள், 80களில் நடிகர்கள் எப்படி நடித்தார்கள் என்பதனை உடன் பணியாற்றிய கலைஞர்களுடன் பேசி விசயங்களை கேட்டு நடித்தோம். குறிப்பாக நாகேஷ், பானுமதி அம்மா, நம்பியார் போன்றவர்களின் நடிப்பு எப்படி இருந்தது என்பதனை அவர்களுடன் அருகில் இருந்து பணியாற்றிய உதவியாளர்களிடமிருந்து கேட்டு தெரிந்து கொண்டேன். இதுபோன்ற அனுபவம் எனக்கு மீண்டும் ‘அந்தகன்’ படத்தில் கிடைத்தது. இதனால் நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

தற்போது நம்மிடம் இல்லாத, இந்த படத்தில் நடித்த நடிகர் மனோபாலா உடன் நடித்த அனுபவமும் மறக்க முடியாது.‌ அவர் என்னுடைய தந்தையார் இயக்கிய அனைத்து படத்திலும் நடித்திருந்தார்.‌ என்னுடனும் பல படங்களில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய ஆசியும் ஒரு காரணம்.

நானும், சிம்ரனும் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றிருக்கின்றன. அந்த வரிசையில் அந்தகனும் இடம் பிடித்திருக்கிறது. இதற்காக சிம்ரனுக்கு பிரத்யேகமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படப்பிடிப்பு தளத்திலும், படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகும் என் வளர்ச்சியின் மீது அக்கறை காட்டி வரும் நடிகை பிரியா ஆனந்திற்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரசிகர்களுக்கு பிடித்த அனைத்து நட்சத்திரங்களும் இணைந்து நடித்தது தான் இப்படத்தின் வெற்றிக்கு காரணம் என்றும் சொல்லலாம். அடுத்ததாக இயக்குநர். என் தந்தையாக இருந்தாலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் கதைக்கு என்ன தேவையோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றினர்.

படத்தை நிறைவு செய்த பிறகு விளம்பரப்படுத்துவதற்காக ப்ரோமோ பாடல் ஒன்றையும் தயார் செய்தோம். இதற்காக ஒத்துழைப்பு அளித்த ‘ராக் ஸ்டார்’ அனிருத், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, பிரபுதேவா, சாண்டி மாஸ்டர் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படத்தின் வெற்றி என் திரையுலக பயணத்தில் ஒரு தொடக்கம் தான். தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும். ரசிகர்களின் அன்பை தொடர்ந்து சம்பாதிக்க வேண்டும்.‌ என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், சக நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தேசிய விருதினை வென்றிருக்கும் இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் மற்றும் தேசிய விருதை வென்ற அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

*

“தங்கலான்” திரை விமர்சனம்

பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடித்து இருக்கும் திரைப்படம் “தங்கலான்”விக்ரமின் நடிப்பை மட்டுமே நம்பி…………..

கதை சுருக்கம்,
வடாற்காடு மாவட்டம் வேப்பூர் கிராமத்தில் வசிக்கும் அடிமை மக்களை சுற்றி கதை ஆரம்பித்து அவர்கள் தங்க சுரங்கத்தை தேடிச் செல்லும் ஆங்கிலேயர்கள் காலத்து கதைக்களத்தை கையில் எடுத்து இருக்கிறார் இயக்குனர்.
வடாற்காடு மாவட்டம் வேப்பூர் என்னும் கிராமத்தில் வசிக்கும் மக்கள் அந்த ஊரில் உள்ள ஒரு ஜமீன்தாருக்கு அடிமைகளாக வாழ்ந்து வருகின்றனர், அவர்களது நிலங்களை எல்லாம் அந்த ஜமீன்தார் அபகரித்து அவர்களை அடிமையாக வைத்திருக்கிறார். ஆனால் அதே ஊரில் வசிக்கும் விக்ரம் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறார், இவ்வாறு வாழ்ந்து வரும் விக்ரமுக்கு ஒரு கனவு வந்து செல்கிறது, அந்த கனவில் அவர் ஒரு தங்க சுரங்கத்தை தேடிச் செல்வதாகவும், அந்த தங்க சுரங்கத்தை ஒரு சூனியக்காரி பாதுகாத்து வருவதாகவும், அந்த சூனியக்காரியை கொன்று அந்த தங்கத்தை எடுத்து, அதன் மூலம் நிலத்தை தன் முன்னோர்கள் வாங்கியதாக அவருக்கு அடிக்கடி கனவு வருகிறது.

இந்நிலையில் விவசாயம் முடிந்து அறுவடை செய்து வைத்திருக்கும் நெல்களை ஜமீன்தார் ஆட்கள் கொளுத்தி விட, அதனால் அவரால் வெள்ளையர்களுக்கு வரி கட்ட முடியாமல் போகிறது. அந்த வரியை ஜமீன்தார் கட்டி விக்ரமையும் அடிமைப்படுத்திக் கொள்கிறார்.இந்த நேரத்தில் அந்த ஊருக்கு வரும் ஒரு ஆங்கிலேயர் இவர்களைக் கொண்டு ஒரு தங்கச் சுரங்கத்தை கண்டுபிடிக்க, விக்ரம் மற்றும் அந்த மக்களை அழைத்துச் செல்கிறார் .அவ்வாறு செல்லும் விக்ரக்கு நம் கனவில் வரும் அந்த இடம் தான் தங்கச் சுரங்கம் என்று கூறி அழைத்துச் செல்கிறார்.

அந்த இடத்தில் உண்மையிலேயே தங்கச்சுரகம் இருந்ததா?

அந்த இடத்தை அந்த சூனியக்காரி தான் காவல் காத்து வருகிறாரா?

அந்த சூனியக்காரிடமிருந்து தங்கத்தை எடுக்கிறார்களா?

என்பதை சுற்றி திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் முதன்மை பாத்திரத்தில் விக்ரம் தங்கலானாக தன் உடலை வருத்தி நடித்திருக்கிறார்.இந்த தங்கலானுக்கு படத்தில் கிட்டத்தட்ட 13 கெட்டப்புகள் ,இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமாக விக்ரமின் நடிப்பு மட்டுமே.
விக்ரமின் மனைவியாக வரும் பார்வதி மூன்று பிள்ளைகளுக்கு தாயாக வாழ்ந்திருக்கிறார், பசுபதியின் கதாபாத்திரம் சிறப்பாக நடித்திருந்தாலும் அது திரைக்கதையில் திணித்தது போல் இருக்கிறது அவரது கதாபாத்திரம்.
மாளவிகாவின் கேரக்டர் படம் முழுவதும் கத்திக்கொண்டே இருக்கிறது. அவளை சூனியக்காரியாக காட்ட அவ்வாறு கத்த வைத்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.
படத்தில் வில்லனாக வரும் ஆங்கிலேய நடிகர் தன் வில்லன் கதாபாத்திரத்தை தந்திருக்கிறார்.
இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ரஞ்சித் அவர்கள் திரைக்கதையில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். இந்த படத்தில் விக்ரம் மட்டுமே மிகவும் மெனக்கட்டு தன் உடம்பை வருத்தி சிக்ஸ் பேக் எல்லாம் வைத்துக் இருப்பது போல் கதாபாத்திரத்தை வடிவமைத்துவிட்டு மற்றவர்களை அனைவரும் தொந்தியும் தொப்பையுமாக இருப்பது போல் வடிவமைத்திருக்கிறார் இது விக்ரமிற்கு இடைஞ்சலாக தான் உள்ளது அதை கவனித்திருக்கலாம். மேலும் இயக்குனர் தனக்கே உரிய குறியீடுகளை ஆங்காங்கே திணித்திருக்கிறார் ராமானுஜர், திப்பு சுல்தான், ஆங்கிலேயர்கள், பண்ணையார்கள் என்று பலரை திரைக்கதை வம்படியாக புகுத்தியிருக்கிறார்.ஒருவேளை கோலார் தங்க சுரங்கத்தில் சிக்கி பலர் உயிரிழந்த, அதை தோண்டி எடுக்க அவர்கள் பட்ட அவஸ்தையை ஆராய்ந்து எடுத்து அதை அப்படியே திரைக்கதை அமைத்திருந்தால் படம் நிச்சயமாக ரசிக்கும்படி இருந்திருக்கலாம்.
படத்தின் இரண்டாவது மிகப் பெரிய பலம் ஜிவி பிரகாஷ் இசை
படத்தின் மிகப்பெரிய மைனஸ் படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகள் கிராபிக்ஸ் டெக்னாலஜிகள் எவ்வளவோ வளர்ந்து இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 10,15 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது போல் உள்ளது.

தங்கலான் தூக்கம் வரவிடாமல் தவிர்த்திருக்கலாம்!!!!!

“டிமான்டி காலனி 2” திரைவிமர்சனம்…..

அஜய் ஞானமுத்து இயக்கத்தின் அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் மற்றும் பலர் நடித்த திரைப்படம் டிமான்டி காலனி 2.

பிரியா பவானி சங்கரின் கணவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைக்கும் நிலையில்,திடீர் என்று மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.அவருடைய ஆத்மா, பிரியா பவானி சங்கரிடம் எதோ சொல்ல வருவதாக மனதளவில் உணர்கிறார். அதற்காக புத்த துறவிகள் உதவியை நாடி அவர்கள் மூலமாக கணவர் மரணத்தில் இருக்கும் பின்னணியை அறிய முயற்சி செய்கிறார்.அது ஒரு பக்கம் இருக்க ஐதராபாத்தில் வசிக்கும் அண்ணன் கதாநாயகன் அருள்நிதி தனது தந்தையின் சொத்தை அடைய முயற்சி செய்கிறார்.ஆனால், அதில் தம்பி அருள்நிதி சென்னையில் இருப்பதாகவும் அவருடைய கையெழுத்தை பெற நினைக்க தேடி சென்னைக்கு வருகிறார்முதல் பாகத்தில் இறந்துப் போன தம்பிதான் அருள்நிதி’ ஆனால் சாகவில்லை கோமாவில் தான் இருக்கிறார்.தன் தம்பி அருள்நீதியை கொல்வ போகும் போதுதான், தம்பி இறந்தால் தானும் இறந்துவிடுவோம் என்ற உண்மையை புரிந்துக் கொள்கிறார்.பிரியா பவானி சங்கர், தன்னுடைய கணவன், இறப்பிற்கும், அருள்நிதி சாவின் விழிம்பில் இருப்பதற்கும் டிமான்ட்டி காலனிக்கும் உள்ள தொடர்பை கண்டுப் பிடிக்கிறார்.6 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் இந்த சம்பவம், சாத்தானுக்கு மனிதர்களை பலியிடும் வழக்கத்தை ஒரு குழு வைத்துள்ளனர்.இந்த முறை இந்த பலிக்கு ஆளாக போவது அருள்நிதி மற்றும் கதாநாயகி பிரியா பவானி சங்கர் இருவரும், சாத்தானின் பிடியில் இருந்து தப்பித்தார்களா? தப்பிக்கவில்லையா? என்பதுதான் டிமான்டி காலனி 2 திரைப்படத்தின் மீதிக்கதை.

அருள்நிதி இந்த கதைக்கு எந்த அளவிற்கு நடிப்பை கொடுக்க முடியுமோ அந்த அளவுக்கு மிக அருமையாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.திகில் காட்சிகளில் நடிப்பின் மூலம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக கவனம் செலுத்தி இருக்கலாம்.

பிரியா பவானி சங்கர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.அமானுஷ்யத்திற்கு பயப்படும் காட்சிகளிலும், தனது காதல் கணவனை இழந்த துக்கத்திலும் பரிதவிக்கும் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் ஸ்கோர் செய்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற அர்ச்சனா ஒரு சில காட்சிகளில் வந்தாலும் மனதில் பதிந்துவிடுகிறார்.

அட்வகேட் கதாபாத்திரத்தில் வரும் முத்துக்குமார் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவின் மூலம் ரசிகர்களை திகிலடைய செய்ய முயற்சி செய்துள்ளார்.

இசையமைப்பாளர் சாம் சி. எஸின் பின்னணி இசை திரைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

வழக்கமான ஹாரர் திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் இல்லாமல்,  இந்த கதைக்கு தேவை இல்லாத பாடல்கள், , பேய்க்கு பிளாஷ்பேக் இல்லாமல் இருப்பது மிகச் சிறப்பு.

கதையின் முதல் பாதியில் திரைக்கதை மிகச்சிறப்பாக அமைந்தாலும், இரண்டாம்  பாதியில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் நிரைப்படம் இன்னும் சிறப்பாக அமைந்து இருக்கும்.

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ …….,

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழுவினர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடினர். இதனைத் தொடர்ந்து சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதன்போது சீயான் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், கலை இயக்குநர் மூர்த்தி, இயக்குநர் பா. ரஞ்சித், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்ஜெயன் பேசுகையில், ” தங்கலான் திரைப்படம் உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு ஊடகங்கள் தான் காரணம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற தங்கலானின் பயணம் அனைவரின் கடும் உழைப்பால் சிறந்த படைப்பாக உருவாகி இருக்கிறது.

கடந்த பத்து நாட்களாக சீயான் விக்ரம் தலைமையில் படக்குழுவினர் பல இடங்களுக்கு பயணித்து தங்கலான் படத்தை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் சென்றடைய செய்திருக்கிறார்கள். இதற்காக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சீயான் விக்ரம் படத்திற்காக உழைத்த உழைப்பை விட படத்தின் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக அவரின் கடின உழைப்பு.. நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழும். ஒரு நடிகர் திரைப்படத்தில் நடிப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அந்த படத்தினை ரசிகர்களிடம் சென்று சேர்ப்பதற்காக மேற்கொள்ளும் உழைப்பு தயாரிப்பாளர் மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் வெற்றியைப் பெற வேண்டும் என்பதற்காக அவர் வழங்கிய அன்பும், ஆதரவும் அசாதாரணமானது. ஒவ்வொரு இடத்திலும் அவரின் செயல்கள் சிறப்பானதாக இருந்தது. திரளாக கூடும் ரசிகர்களை கட்டுப்படுத்தி, அவர்களுடன் உரையாடி அவர்கள் மொழியிலேயே உரையாடி, அவர்களின் தேவையை புரிந்து கொண்டு உற்சாகமாக பேசி தங்கலானை சென்றடைய செய்திருப்பது அவருடைய தனிச்சிறப்பு. சீயான் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல் என அனைவரும் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் திரைப்படம் மிகச்சிறப்பாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் பார்த்துவிட்டு கொண்டாடுவார்கள்.‌ தங்கலான் திரைப்படம் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது? என்பதனை காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ் பேசுகையில், ” எல்லா படத்தையும் போல் இந்த திரைப்படத்திலும் கடினமான உழைப்பு இருக்கிறது. அனைவரும் 100 சதவீத உழைப்பை கடந்து அதற்கும் மேலாக உழைத்திருக்கிறார்கள். அனைவரின் கடின உழைப்பும் திரையில் பளிச்சிடுகிறது. எல்லையே இல்லாத அளவிற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள். அதனால் தங்கலான் படத்தின் மீது எனக்கு அதீத நம்பிக்கை இருக்கிறது.‌

நான் மீண்டும் ஒருமுறை சொல்கிறேன் இதனை நான் ஒரு வாய்ப்பாக கருதுகிறேன். சில படங்களில்தான் நமக்கான வாய்ப்பு கிடைக்கும். ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘சூரரை போற்று ‘ என அந்த வரிசையில் தங்கலானும் இடம் பிடித்திருக்கிறது.

ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இசை கொண்டாடப்பட வேண்டியது என்று சிலர் தற்போது சொல்கிறார்கள்.‌ அதனை அந்த நேரத்தில் நாங்கள் தவற விட்டோம் எனக் குறிப்பிடுகிறார்கள். தற்போது தங்கலான் படத்தை கொண்டாட தயாராகி விட்டார்கள். ஏனெனில் சினிமாவை அடுத்த கட்ட நகர்விற்கு எடுத்துச் செல்லும் அனைத்து விசயங்களும் இந்த படத்தில் இருக்கிறது. அதனால் இந்த படத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்.

பழங்குடியின மக்களின் வாழ்வியலை இசையாக சொல்ல முயற்சித்து இருக்கிறோம். தமிழ் சினிமாவில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பெரிதாக காண்பிக்கப்படவில்லை. ஏராளமான புதிய ஒலிகளை உண்டாக்கி அதில் பழங்குடியின மக்களின் வாழ்வியலோடு தமிழ் மணத்துடன் இரண்டற கலக்கச் செய்திருக்கிறோம். இதுவரை கேட்காத புல்லாங்குழல் ஓசை என தேடித்தேடி பல ஒலி மற்றும் ஓசைகளை சேகரித்து இணைத்து இருக்கிறோம்.‌ நிச்சயம் ரசிகர்களுக்கு இது புதிய அனுபவத்தை வழங்கும்.’: என்றார்.

நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில், ” தங்கலான் நான் நடிக்கும் நான்காவது தமிழ் படம். இது எனக்கு மிகவும் முக்கியமான படம். அதுவும் இந்த தருணம் மிகவும் உணர்வுபூர்வமானது.

கடந்த பத்து நாட்களாக இந்த படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தோம்.

ஆரத்தி எனும் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கியதற்காக இயக்குநர் பா. ரஞ்சித்திற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

விக்ரம் சிறந்த சக நடிகர். பொதுவாக அனைத்து நட்சத்திர நடிகர்களும் சுயநலம் மிக்கவர்களாக இருப்பர். ஆனால் விக்ரம் இந்த விசயத்தில் தாராளமாக சக கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். உடன் பணியாற்றும் நடிகர்கள் நடிகைகள் மீது அக்கறை செலுத்துபவர். இது மிகவும் அரிதான தகுதி. இதைப் பெற்றிருக்கும் சீயான் விக்ரமை பாராட்டுகிறேன். இதற்காக நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

நடிகை பார்வதி பேசுகையில், ” பா ரஞ்சித்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. அந்த ஆசை தங்கலான் படத்தில் நிறைவேறி இருக்கிறது. தங்கலான்- இயக்குநர் பா.ரஞ்சித்தின் கற்பனை படைப்பு.‌ அவர் உருவாக்கிய உலகம் இது.

நடிப்புக்கு அலங்காரம் என்பது மிகவும் முக்கியம். இதற்கு துணையாக இருந்த ஒளிப்பதிவாளர் -கலை இயக்குநர் -ஆடை வடிவமைப்பாளர்- ஒப்பனையாளர் – அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் ரவிக்கை இல்லாமல் நடிப்பது சவாலாக இருந்தது. இதற்கு தேவையான உளவியல் வலிமையை வழங்கிய படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி.

சீயான் விக்ரமின் அன்பு- நட்பு -உழைப்பு இதை நேரில் கண்டு வியந்து விட்டேன். ஒரு கற்பனையான கதாபாத்திரத்தை வடிவமைப்பதற்கு எல்லையில்லை. ஆனால் அதனை ஏற்று நடித்து நடிப்பிற்கு எல்லையே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறீர்கள். உங்களுடைய நடிப்பு எனக்கு முன்மாதிரியாக இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல வளர்ந்து வரும் அனைத்து கலைஞர்களுக்கும் உங்களுடைய நடிப்பு சிறந்த பாடமாக அமைந்திருக்கிறது. ” என்றார்.

இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ” சீயான் விக்ரம் என் மீது நம்பிக்கை வைத்தார். அவருடன் பணிபுரிந்ததை பெருமிதமாக கருதுகிறேன். இவரைப் போன்ற ஒரு திறமையான நட்சத்திர நடிகருடன் பணியாற்றும்போது நாம் எழுதுவதை துல்லியமாக திரையில் செதுக்கி விட முடியும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது.

நேற்று இப்படத்தின் இறுதி பிரதியை பார்க்கும் போது நடித்திருக்கும் அனைத்து கலைஞர்களும் அவர்களது கதாபாத்திரத்தில் திறமையாக நடித்திருப்பதை பார்த்து வியந்தேன். இதுபோன்ற கலைஞர்களை தேர்வு செய்து நடிக்க வைத்ததையே நான் பெருமையாக கருதுகிறேன் இவர்களால் தான் இந்த படைப்பு தரமான படைப்பாக உருவாகி இருக்கிறது.

படப்பிடிப்பு தளத்தில் கலைஞர்கள் நடிக்கும் போது எனக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து அவர்களாகவே நடிப்பை வழங்கினார்கள். இது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது.‌ அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ நடிகர்கள் – நடிகைகள்- மட்டுமல்லாமல் கலை இயக்குநர் -ஒளிப்பதிவாளர் -ஒலி வடிவமைப்பாளர் – படத்தொகுப்பாளர் -சண்டை பயிற்சியாளர் என அனைவரும் தங்களது திறமையான பங்களிப்பை வழங்கினர்.‌

இசையமைப்பாளர் ஜீ. வி பிரகாஷ் உடன் முதன்முறையாக இணைந்து பணியாற்றுவது போல் இல்லை.‌ நான் எழுதிய கதையின் தன்மையை.. அது சொல்லவரும் விசயத்தை புரிந்து கொண்டு.. அதனை இசை வடிவில் மாற்றுவதற்கான அனைத்தும் முயற்சிகளையும் அவர் மேற்கொண்டு இருக்கிறார். அது மிகச் சிறப்பாக இருக்கிறது.

இந்த படைப்பிற்கு ஜீ..வி பிரகாஷ் பொருத்தமாக இருப்பார் என தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் பரிந்துரை செய்தார். ஜீவியுடனான முதல் சந்திப்பிலேயே அவருக்கும் எனக்குமான புரிதல் எளிதாக இருந்தது.‌ அவர் இந்த திரைக்கதைக்கு என்ன மாதிரியான ஒலி வேண்டும் என்பதை ஆர்வத்துடன் விவரித்தார். இப்படத்தில் இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி இருக்கிறது. மூன்று பாடல்களும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இதுவே படத்தின் வெற்றியை தீர்மானிப்பதற்கு காரணியாக அமைந்து விட்டது. அத்துடன் படத்தின் பின்னணி இசைக்காக அவருடைய கடின உழைப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இந்த தருணத்தில் அவருக்கும் அவருடைய குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்திற்காக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் கடினமாக உழைத்து வருகிறார். அதிலும் படத்தின் வெளியீட்டிற்காக கடுமையாக உழைத்து வருகிறார். ‘அட்டகத்தி’ காலகட்டத்தை விட அவருடன் பழகிய போது அவரை சரியாக புரிந்து கொண்டது இந்த காலகட்டத்தில் தான். அவர் என் மீது வைத்த நம்பிக்கை. படத்தைப் பற்றி விவாதம் எழும் போது கலந்து ஆலோசித்த பாணி… தற்போது கூட படத்தின் விளம்பரத்திற்காக ஒரு சிறிய விசயத்தை செய்ய திட்டமிட்டு இருந்தேன். அதற்கு கூட சம்மதம் தெரிவித்தார். இந்த படத்திற்காக அவர் தன்னாலான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் நிபந்தனை இன்றி வழங்கி வருகிறார்.‌ இதற்காகவே அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக தனஞ்ஜெயனின் ஒருங்கிணைப்பு பணி சிறப்பாக இருந்தது. தங்கலான் படத்தை அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய செய்திருக்கிறார்.

ஒரு படத்தை விளம்பரப்படுத்தி அனைத்து தரப்பு ரசிகர்களிடயும் சென்றடையச் செய்ய வேண்டிய பணி அப்படத்தின் நடிக்கும் நடிகர்களுடையது அல்ல என்றாலும்.. சீயான் விக்ரம் இதற்காக உழைத்த உழைப்பு என்னை வியக்க வைக்கிறது.‌ குறிப்பாக தங்கலான் படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி, பிரபலப்படுத்துவதில் அவரால் முடிந்த அளவுக்கு முயற்சி செய்திருப்பதை பார்த்து பிரமித்திருக்கிறேன்.‌ தங்கலான் படத்திற்கு தெலுங்கு திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது சீயான் விக்ரமின் விளம்பரப்படுத்திய பாணி தான். இது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது.

தங்கலான் யார்? தங்கலான் படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறார் ? தங்கலான் எப்படி இருக்கும்? என்பதை பற்றி இப்படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியானதும் பார்வையாளர்களிடத்தில் ஒரு விதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும்.‌ அதே தருணத்தில் பா ரஞ்சித்தின் படம் என்பதால் எந்த வகையான அரசியல் இருக்கும்? என்பது குறித்தும் நீங்கள் யூகித்திருப்பீர்கள்.

இந்தப் படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு தான் என்னை நானே தேடத் தொடங்கினேன். நான் ஒரு வரலாற்றுப் பயணி என நினைத்துக் கொள்கிறேன்.‌
தங்கலான் படத்தின் போது தான் என்னை நானே சரியாக புரிந்து கொள்ள முடிந்தது. என் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களிலும் நான் யார்? என என்னை நானே தேடிக் கொண்டிருக்கிறேன்.

நான் எதைத் தேடிக் கொண்டிருக்கிறேன் என்பதை பற்றியும், மக்களிடத்தில் என்ன மாதிரியான விவாதங்கள் எழ வேண்டும் என நான் தீர்மானிக்கிறேன் என்பதையும் மையமாகக் கொண்டுதான் என் படைப்புகள் உருவாகிறது. தங்கலான் படத்தின் மூலம் நான் என்னை நானே புரிந்து கொண்டு, வரலாற்றுப் பயணியாக பயணிக்கிறேன்.

தங்கலான் படத்தில் தங்கலானுக்கும் அவருடைய சமூக அரசியலுக்கும் இடையேயான புரிதலை விவரித்து இருக்கிறேன். தங்கலான் தான் யார்? என்பதை தேட தொடங்குவதன் ஊடாக விடுதலையை எப்படி அடைகிறார் என்பதும் இடம் பிடித்திருக்கிறது. இதை என்னுடைய திரை மொழி வடிவத்தில் சொல்லி இருக்கிறேன். என்னுடைய திரை மொழி வடிவம் சிக்கலானது என்றாலும்..‌ இந்தப் படத்தில் எளிமையாக சொல்ல முயற்சித்திருக்கிறேன்.‌

தமிழ் திரையுலக ரசிகர்கள் எப்போதும் முற்போக்கான விசயங்களுக்கு ஆதரவை வழங்குவார்கள்.‌ தமிழ் ரசிகர்கள் வணிக படம் கலை படம் என்னை பிரித்துப் பார்த்து ஆதரிப்பதில்லை. அவர்கள் அனைத்தையும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தான் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதனால்தான் என்னுடைய படங்களில் நான் பேசும் அரசியலை புரிந்து கொண்டு தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகிறார்கள். நான் பேசும் கருத்தியலில் முரண் இருக்கலாம். ஆனால் என்னுடைய திரை மொழியை வரவேற்கிறார்கள்.‌ தொடர்ச்சியாக அவர்கள் அளித்து வரும் ஆதரவினால் தான் நான் தங்கலானை உருவாக்கி இருக்கிறேன். அத்துடன் ரசிகர்களுக்கு தங்கலான் ஒரு புது அனுபவத்தை வழங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய ரசிகர்களுக்கும் இந்த தங்கலான் புதிய அனுபவத்தை அளிக்கும். ” என்றார்.

சீயான் விக்ரம் பேசுகையில், ” தங்கலான் படத்தின் முதல் புகைப்படம் வெளியானதிலிருந்து ஊடகங்களின் ஆதரவு எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருந்தது. படத்தை நிறைவு செய்வதற்கான ஊக்கத்தையும் அளித்தது. உங்களுடைய ஆதரவிற்கு நன்றி.

பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட போது ஆயிரம் ஆண்டிற்கு முன்னதான தமிழகத்தின் வரலாறு தொடர்பான கதை. அரசர்கள் -ஆடம்பரம்- வீரம் -வெற்றி- தோல்வி- போர்- ஆகியவற்றை பற்றி பேசி இருந்தார்கள்.‌ ஆனால் தற்போது அதே இந்தியாவில் சில நூற்றாண்டுகளுக்கு முன் நாம் அனைவரும் வறுமையில் இருந்தோம். கஷ்டப்பட்டோம். இது வேறு உலகம்.‌ இதை மையமாக வைத்து பா ரஞ்சித் உருவாக்கிய கதைதான் தங்கலான்.

இந்தப் படத்தின் முன்னோட்டத்தை பார்வையிட்டதிலிருந்து இந்த திரைப்படத்தை ஜனரஞ்சகமாக உருவாக்கி இருக்கிறோம் என அனைவருக்கும் தெரிய வருகிறது. அந்த அளவிற்கு மக்களை மனதில் வைத்து இந்த படைப்பு உருவாகி இருக்கிறது. சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்படும் கலை படைப்புகள் போல் அல்லாமல் இந்த படத்திற்கு முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் ஒரு ஆற்றல் வாய்ந்த படைப்பை பா. ரஞ்சித் உருவாக்கி இருக்கிறார்.‌ இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த தயாரிப்பாளருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக கடந்த பத்து நாட்களில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு என தென்னிந்திய மாநிலங்கள் முழுவதிற்கும் பயணிப்பதற்கான பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்த தயாரிப்பு நிறுவனத்திற்கும், தனஞ்ஜெயனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள்- நடிகர்கள் -நடிகைகள்- என அனைவரும் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு காட்சிக்கும் அற்புதமான இசையமைத்த இசை அமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷுக்கு பிரத்யேகமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் அவருடைய கடின உழைப்பிற்காக சர்வதேச அளவில் கவனிக்கத்தக்க விருதை பெறுவார் என உறுதியாக நம்புகிறேன்.

இந்தப் படத்திற்காக இயக்குநர் பா. ரஞ்சித் கடினமாக உழைத்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியை உருவாக்கும் போதும் அதனை படமாக்கும் போதும் படப்பிடிப்பு தளத்தில் அவருடைய கடின உழைப்பை என்னால் உணர முடிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருந்தாலும்.. படைப்பிற்கு என்ன தேவையோ.. அதனை நட்சத்திரக் கலைஞர்களிடமிருந்து பெறுவதில் உறுதியாக இருந்த விதம் என்னைக் கவர்ந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு இதில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் எந்த படத்திலும் எளிதாக நடிக்க கூடிய அளவிற்கு பயிற்சியை வழங்கி இருக்கிறார். எங்கள் அனைவரையும் திறமை வாய்ந்த நட்சத்திரமாக மாற்றி இருக்கிறார்.

இந்தப் படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள் என சொல்கிறார்கள். ஆனால் இது ஒரு கூட்டு முயற்சி என்று தான் சொல்ல வேண்டும்.

இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் டேனியல் நம்ம ஊர் கலைஞர்களை போல் மாறிவிட்டார். அவருடைய எனர்ஜி பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக படத்தை விளம்பரப்படுத்துவதற்காக பயணிக்கும் போது ரசிகர்களை சந்திக்கும் போது அவரது பேச்சு உற்சாகமாக இருந்தது.

என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் அதை போன்றது.. இதைப் போன்றது.. என்று சொல்வார்கள். ஆனால் இது வேற மாதிரியான படம் என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன். படத்தை பார்த்துவிட்டு உங்களின் மேலான ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

“ரகு தாத்தா” திரைவிமர்சனம்…..

சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் எம் எஸ் பாஸ்கர் ரவீந்திர விஜய் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் “ரகு தாத்தா”

1960 காலகட்டத்தில் வள்ளுவன் பேட்டை என்னும் கிராமத்தில் கீர்த்தி சுரேஷ் தாத்தா எம்எஸ் பாஸ்கர் மற்றும் அண்ணன் தாய் ஐயருடன் வசித்து கீர்த்தி சுரேஷ் அந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். கதாநாயகி கீர்த்தி சுரேஷ் அந்த ஊரில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் அந்த கிராமத்தில் உள்ள ஹிந்தி பிரச்சார சபாவை எதிர்த்து போராட்டம் செய்து, அந்த ஆசிரியரையும் சபாவையும் மூடுகின்றனர்.மேலும் கீர்த்தி சுரேஷ் க. பா. என்ற புனை பெயரில் பத்திரிகைகளில் பெண்ணியம் சார்ந்த கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். ரவீந்தர் விஜய், கீர்த்தி சுரேஷை ஒருதலையாக காதலித்து,முற்போக்கு சிந்தனையாளராக தன்னை சித்தரித்து கொள்கிறார். இந்நிலையில் தாத்தா எம்எஸ் பாஸ்கருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருமணமே வேண்டாம் என்று இருக்கும் கீர்த்தி சுரேஷ், திருமணத்திற்கு ஒத்துக் கொள்ளும் கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்.

இந்நிலையில் தனக்கு நீண்ட நாள் பழக்கமான ரவீந்திர விஜய் என்பவரை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து ஒத்துக் கொள்கிறார். ஆனால் திருமணத்திற்கு முன்பே தனக்கு வரப்போகும் கணவர் முற்போக்கு சிந்தனைவாதி இல்லை, அவன் ஆணாதிக்க சிந்தனை கொண்டவன் என்றும், பெண்களை மதிக்காதவன் என்றும் தெரிய வருகிறது. இதை தெரிந்து கீர்த்தி சுரேஷ் தான் ஒத்துக்கொண்ட திருமணத்தை நிறுத்த எடுக்கும் முயற்சிகளும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்களுமாக திரைக்கதை நகர்கிறது.

கீர்த்தி சுரேஷ் ஹிந்தி கற்று ப்ரோமோஷன் வாங்கிக்கொண்டு கல்கத்தாவில் உள்ள வங்கி கிளைக்கு சென்று விட்டால், நடக்கவிருக்கும் இந்த திருமணம் நின்று போகும் என்ற எண்ணத்தில் ஹிந்தி கற்று கொள்ள ஆரம்பிக்கிறார்.கீர்த்தி சுரேஷ் ஹிந்தியை எதிர்ப்பவர் ஹிந்தி கற்றுக்கொண்டு கல்கத்தாவில் உள்ள வங்கி கிளைக்கு சென்றாரா? செல்லவில்லையா?
அவர் நினைத்தது போல் திருமணம் நின்றதா? என்பதுதான் ‘ ரகு தாத்தா திரைப்படத்தின் மீதிக்கதை.

ரவீந்திர விஜய் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கீர்த்தி சுரேஷ் பெண்ணியம் பேசும் கதாபாத்திரத்தில் நடிப்பை துறுதுறுவெனவும் அதே சமயம் தன்னம்பிக்கையுடன் நடித்து இருக்கிறார்.

தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எம்.எஸ் பாஸ்கர் அவரின் நடிப்பை சற்று வீணடித்து இருப்பது போல் இருக்கிறது. அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ராஜேஷ் பாலச்சந்திரன் அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.அண்ணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருக்கும் இஸ்மத் பானு ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளார்.

மாமி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தேவதர்ஷினி மிகவும் அளவான நகைச்சுவையை வெளிப்படுத்தியுள்ளார். வங்கி மேலாளரின் நடிப்பு, ஹிந்தி வாத்தியாரின் நடிப்பு மற்றும் பலரின் நடிப்பு செயற்கை தனமாகவே இருக்கிறது.

ஒளிப்பதிவாளர் யாமினி யாக்னாமூர்த்தியின் ஒளிப்பதிவு 60களில் காலகட்டத்திற்கு நம்மை இழுக்கவில்லை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசை ஏனோ மனதை வருடவில்லை  

ஹிந்தி எதிர்ப்பையும் ஹிந்தி திணைப்பையும் வைத்து இயக்கி இருக்கும் இந்த படத்தின் திரைக்கதையை இன்னும் ஆழமாக அமைத்திருந்தால் படம் நிச்சயம் நம்மை கவர்ந்திருக்கும்.

படத்தின் மிகப்பெரிய பலம் இரட்டை அர்த்தங்கள் இல்லாமல் கவர்ச்சிகள் இல்லாமல் படமாக்கி இருப்பது.

 ரகு தாத்தா திரைக்கதை ஓட்டத்தில் ஓய்ந்து போன தாத்தா!!!!!!!!

‘கோட்’ திரைப்படத்தின் டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகிறது……..

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்பட டிரைலர் ஆகஸ்ட் 17 அன்று வெளியாகும் என்று இன்று (ஆகஸ்ட் 15) அறிவித்துள்ள படக்குழுவினர், சுதந்திர தினத்தை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் பிரம்மாண்ட தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த பான்-இந்தியா திரைப்படம் நாடு முழுவதும் பலத்தை எதிர்பார்ப்புகளை ஏற்கனவே ஏற்படுத்தி உள்ளது.

திரைப்படம் குறித்து பேசிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெனட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, “ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய திரை விருந்து காத்திருக்கிறது. தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபுவின் கூட்டணி அற்புதங்களை செய்து மாயாஜாலத்தை நிகழ்த்தியுள்ளது. இதன் ஒரு சிறு பகுதியான டிரைலர் வரும் சனிக்கிழமை அன்று வெளியாகிறது,” என்று கூறினார்.

இரட்டை வேடங்களில் தளபதி விஜய் தோன்றும் ‘கோட்’ விறுவிறுப்பும் பரபரப்பும் நிறைந்த திரைப்படமாக ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தும். பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் அமீர், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி மற்றும் யோகி பாபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படம் பிரம்மாண்டத்தின் உச்சமாக இருக்கும். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய்யின் 68வது படமான ‘கோட்’, அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமான படங்களில் ஒன்றாக இருக்கும். தான் ஏற்றிருக்கும் இரண்டு கதாபாத்திரங்களுக்காக கடினமான உழைப்பை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

தேசத்தின் பெருமையான சுதந்திர தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள ‘கோட்’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் எதிர்பார்ப்புகளை இன்னும் எகிற வைத்துள்ளது.

ரசிகர்களின் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்து படைக்கும் வகையில் நிலையான மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் செப்டம்பர் 5 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ‘கோட்’ வெளியாகிறது.

வருண் தேஜ், கருணா குமார், இணையும் பான் இந்திய “மட்கா” படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் ………

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், “மட்கா” படம் மூலம், பான் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளார். இப்படம், அவரது திரைவாழ்வின், மிகப் பெரும் பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படமாகும். கருணா குமார் இயக்கத்தில் வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ் பேனர்களில் டாக்டர் விஜேந்தர் ரெட்டி தீகலா மற்றும் ரஜனி தல்லூரி தயாரிக்கும் இப்படம், மிகப் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், வருண் தேஜ் இளைஞன் மற்றும் நடுத்தர வயது மனிதன் என இரண்டு அவதாரங்களில் தோற்றமளிக்கிறார். கதாநாயகனின் 24 வருட பயணத்தை காணும் இத்திரைப்படத்தில், நான்கு விதமான கெட்-அப்களில் வருண் தேஜ் தோன்றுகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில், அடிதட்டு மனிதனாக இருந்து கிங்காக மாறியுள்ள அவரின் இரண்டு சாயல்களைக் காட்டுகிறது.

போஸ்டரிலல் வருண் தேஜ் இளமையாகவும், துணிச்சலாகவும், சுருட்டு புகைப்பதை காணலாம். அவரது டிரெஸ்ஸிங் ஸ்டைல், ஹேர் ஸ்டைல், வின்டேஜ் ஸ்டைலில் அமைந்துள்ளது. மற்றொரு தோற்றத்தில் அவர், அதே போல் சுருட்டு புகைக்கிறார் ஆனால் அவர் இங்கே பணக்காரராகவும், வயதானவராகவும், கண்ணாடி மற்றும் நரைத்த முடியுடன் இருக்கிறார். அவரது மேஜையில் துப்பாக்கி இருக்கிறது. விளையாடும் அட்டைகளில் இருந்து, கிங் அட்டை பின்னணியாக பயன்படுத்தப்படுகிறது. மிகவும் ஈர்க்கக்கூடிய இந்த ஃபர்ஸ்ட் லுக் பெரும் ஆவலைத் தூண்டுகிறது.

முந்தைய காலப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் மீனாட்சி சவுத்ரி மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ஏ கிஷோர் குமார் ஒளிப்பதிவு , ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார் மற்றும் கார்த்திகா ஸ்ரீனிவாஸ் எடிட்டிங் பணிகளை செய்கிறார்.

இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: வருண் தேஜ், நோரா ஃபதேஹி, மீனாட்சி சவுத்ரி, நவீன் சந்திரா, சலோனி, அஜய் கோஷ், கன்னட கிஷோர், ரவீந்திர விஜய், பி ரவிசங்கர் மற்றும் பலர்.

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார்
தயாரிப்பாளர்கள்: டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா மற்றும் ரஜனி தல்லூரி
தயாரிப்பு நிறுவனங்கள் : வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், எஸ்ஆர்டி என்டர்டெயின்மெண்ட்ஸ்
இசை: ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : கிஷோர் குமார்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் ஆர்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: கிரண் குமார் மன்னே
CEO: EVV சதீஷ்
நிர்வாக தயாரிப்பாளர்: ஆர்.கே.ஜனா, பிரசாந்த் மாண்டவா, சாகர்
அணிகலன்கள்: கிலாரி லட்சுமி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்கெட்டிங் : ஹாஷ்டேக் மீடியா

ACTION-PACKED NEW TRAILER FOR DISNEY’S “MUFASA: THE LION KING” PREMIERES AT D23: THE ULTIMATE DISNEY FAN EVENT

Disney’s “Mufasa: The Lion King” director Barry Jenkins and songwriter Lin-Manuel Miranda, along with cast members Aaron Pierre, Kelvin Harrison Jr., Seth Rogen, Billy Eichner, Theo Somolu, Braelyn Rankins and Anika Noni Rose, shared an exciting new trailer and poster with fans attending the studio showcase at D23: The Ultimate Disney Fan Event. The film capped the studio’s presentation with a show-stopping performance of the classic “Nants’ Ingonyama” and new song “Ngomso” by Lebo M., who contributes to the film’s music, alongside a full choir. “Mufasa: The Lion King” releases only in theatres 20th December 2024.

Trailer Link: https://youtu.be/sAoxK4i97vU?si=gnCFcVbhSzsLEphd

Exploring the unlikely rise of the beloved king of the Pride Lands, “Mufasa: The Lion King” enlists Rafiki to relay the legend of Mufasa to young lion cub Kiara, daughter of Simba and Nala, with Timon and Pumbaa lending their signature schtick. Told in flashbacks, the story introduces Mufasa as an orphaned cub, lost and alone until he meets a sympathetic lion named Taka—the heir to a royal bloodline. The chance meeting sets in motion an expansive journey of an extraordinary group of misfits searching for their destiny—their bonds will be tested as they work together to evade a threatening and deadly foe.

In addition to the cast attending D23 this year, the film also features John Kani, Tiffany Boone, Kagiso Lediga, Preston Nyman, Mads Mikkelsen, Thandiwe Newton, Lennie James, Keith David, Donald Glover, Blue Ivy Carter, Folake Olowofoyeku, Joanna Jones, Thuso Mbedu, Sheila Atim, Abdul Salis, Dominique Jennings and Beyoncé Knowles-Carter. Blending live-action filmmaking techniques with photoreal computer-generated imagery, the all-new feature film is produced by Adele Romanski & Mark Ceryak, and executive produced by Peter Tobyansen.

Disney’s Mufasa: The Lion King will be in releasing in Indian theatres on 20th December 2024, in English, Hindi, Tamil and Telugu.

Insta – @disneyfilmsindia
X- @DisneyStudiosIN
YT – @WaltDisneyStudiosIndia