Breaking
March 7, 2026

Cinema Reviews

தீயவர்குலை நடுங்க- திரைப்பட விமர்சனம்

தீமை செய்வோர் திகைப்பார்கள், நீதி வெல்லும் – இந்த கோட்டை மனதில் கொண்டு நகரும் ஒரு சமூக-த்ரில்லர்!

“தீயவர்குலை நடுங்க” ஒரு வழக்கமான மசாலா படம் போல தொடங்கினாலும், நடுப்பகுதிக்குப் பிறகு கதை மெல்லக் கண்ணியை இறுக்கத் தொடங்குகிறது. மனிதர்கள் மறைத்து வைத்திருக்கும் இருண்ட முகங்களையும், அதிகாரத்தின் பலத்தையும், அதற்கெதிராக பொதுமகன் எப்படிப் போராடுகிறார் என்பதையும் படம் நேரடியாகத் தொட்டுச் செல்கிறது.
நாயகன் ஒரு சாதாரண இளைஞன். வாழ்க்கையில் நடக்கும் அநியாயங்களைக் கண்டுக் கொண்டே செல்லும் அவனுள், ஒரு நாள் வெடிக்கும் கோபமே கதையின் தொடக்கம். சமூகத்தையே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சில சக்திமிக்க மனிதர்களின் பாவங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முயலும் அவனுக்கு எதிராக, “தீயவர்குல்” ஒன்று சேர்ந்து நின்றாலெல்லாம் என்ன நடக்கும் என்பதை படம் விறுவிறுப்பாக காட்டுகிறது. இறுதியில், தன்னுடைய அறிவும் துணிவும் கொண்டு அவன் எப்படிக் கட்டுக்கதை முறியடிக்கிறான் என்பதே சிகரம்.
நாயகனின் கோபம், வேதனை, பழிவாங்கும் ஜாடை – அனைத்தும் நம்ப வைக்கும் வகையில் இருந்தது. எதிர் வேடங்களில் வந்தவர்கள் கதை முழுவதும் ஒரு இருண்ட அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். சில காட்சிகளில் அவர்கள் செய்கின்ற கொடூரம், நாயகனை விட பார்வையாளர்களையே உசுப்பேற்றுகிறது.


பின்னணி இசை கதை சொல்லலுக்கு பேஸைக் கூட்டுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் பகுதிகளில் இசை தாளமே மாற்றித் தருகிறது. சினிமாடோகிரஃபி இரவுக்காட்சிகளிலும், துரத்தல் சீன்ஸ்களிலும் மிகுந்த தாக்கத்தைக் கொடுக்கிறது.
சில இடங்களில் டயலாக் மிகப் பெரியதாக உணரப்படும்; மேலும், நீதி-அநீதி பற்றிய “லெக்சர்” சற்று நீளுகிறது. ஆனால் நோக்கம் சரியாக சென்று சேருகிறது
“தீயவர்குலை நடுங்க” என்பது ஒரு சண்டை-ஆக்ஷன் படம் அல்ல; அது ஒரு சமூகத்தைக் கேள்விக்குள்ளாக்கும் கதை. தீமை பெருகும் காலத்தில், ‘ஒருவன் எப்படியாவது நிற்க வேண்டும்’ என்று சொல்லும் ஒரு சத்தமான முயற்சி. அதற்காகவே ஒரு முறை பார்க்கத் தக்க படம்.

Sisu 2 : Road to Revenge


வெளியீடு -November 21st 2025
நிறுவனம் -Sony Pictures
2022-இல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் படமான Sisu நிறைவிருக்கலாம். இரண்டாம் உலக போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கும் பொது , வெறி கொண்டு அலையும் சில
வீரர்களின் கையில் சிக்காமல் இருக்க அவர்களை திரும்ப தாக்குகிறார்!
தப்பித்து விடுகிறார்!
இனி , இரண்டாம் பாகம் பற்றி …

கொல்லப்பட்ட தன் குடும்பத்தாரின் நினைவாக , அவர்களெல்லாம் வாழ்ந்த வீட்டை இடம் பெயர்த்து வேறிடத்தில் நிலை நிறுத்தி தன் தனிமையான நிலைப்பாட்டை தொடர முற்படும் பொழுது , அவரை கொன்றே தீர வேண்டும் என்கிற ஒரு வெறி உணர்வோடு அவரை தேடி வருகிறது எதிரணி!
அந்த போர் வீரரோ, என்ன நடந்தாலும் நான் மரணிக்க மாட்டேன் என்ற உத்வேகத்தில் வாழ்பவர்!
அவர்கள் அனைவரையும் அவரால் சமாளித்து வெல்ல முடிந்ததா என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம்!
2002 இல் வெளிவந்த Sisu திரைப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது!
இப்படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சிகள் மிக பெரிய அளவில் பேசப்பட்டன!
திரைப்பட துறையை சார்ந்த Stunt Masters பலரும் இப்படத்தை பெரியளவில் கொண்டாடினர்!
இந்த இரண்டாம் பாகத்தில், சண்டை காட்சிகள் , முதல் பாகத்தை விட அசத்தலாக உள்ளது என்றால் மிகையில்லை !
Jelmari Helander படத்தை, எழுதி இயக்கியுள்ளார் .
2022 இல் வெளிவந்த படத்தையும் எழுதி இயக்கியவரும் இவரே!
Jorma Tommila (கதாநாயகன்), Stephen Lang, Richard Brake ஆகியோர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர்.
Mika Orasmaa – ஒளிப்பதிவாளர்

“கும்கி” – 2’ திரை விமர்சனம்

மலை வாழ்வு கிராமத்தில் வாழும் நாயகன் மதி, சிறு வயதில் வழி தவறி பள்ளத்தில் சிக்கிக் கொண்ட குட்டி யானை ஒன்றை காப்பாற்றுகிறார். அதில் இருந்து அந்த குட்டி யானை மதியை .சுற்றி சுற்றி வருகிறது. பாசத்திற்காக ஏங்கும் மதி, யானையின் பாசத்திற்கு அடிமையாகி அதை வளர்க்கிறார்.

யானையும், மதியும் வளர்ந்து சகோதரர்களைப் போல் எப்போதும் ஒன்றாகவே இருக்க, ஒருநாள் திடீரென்று யானை மாயமாகி விடுகிறது. யானையை தேடி அலையும் மதி ஒரு கட்டத்தில் அதன் நினைவில் தன்நிலை மறந்தவராக வலம் வருகிறார். இதற்கிடையே ஆசிரியரின் அறிவுரையால் கல்லூரி படிப்புக்காக தன் ஊரை விட்டு செல்லும் மதி, 5

வருடங்களுக்குப் பிறகு தன் சொந்த ஊருக்கு திரும்புகிறார்.அப்போது மாயமான யானை பற்றிய தகவல் ஒன்று அவருக்கு கிடைக்கிறது. அந்த தகவலை வைத்து யானையை தேடி செல்லும் மதிக்கு

அவரது யானை கிடைத்ததா ?என்பது தான்
“கும்கி ” – 2’.

அறிமுக நடிகர் மதி யானையை இழந்துவிட்டு தவிப்பது, யானையை ஆபத்தில் இருந்து காப்பாற்ற துடிப்பது,
உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தி நடிப்பில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்.

சில காட்சிகளில் மட்டுமே வந்து போகும் ஷ்ரிதா ராவ், நாயகனின்

நண்பராக நடித்திருக்கும் ஆண்ட்ரூஸ், வனத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் அர்ஜுன் தாஸ், அரசியல்வாதியின் உதவியாளராக நடித்திருக்கும் ஆகாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த
வேலையை செய்திருக்கிறார்கள்.
பிரபு சாலமன், எழுதியிருக்கும் திரைக்கதை சற்று சுவாரஸ்யமாக இருந்தாலும், காட்சிகளில்…………….

“வட்டக்கானல்” – திரைப்பட விமர்சனம்

வட்டக்கானல் படம் பார்க்கும் முன்பே ஒரு மெல்லிய கவிதையை வாசிக்க தயாராகும் மனநிலையோடு செல்ல வேண்டும். இது கமர்ஷியல் சினிமாவுக்கான வேகம் அல்ல. மலைக்காற்று போல மெதுவாக, மௌனங்களுக்கு இடையே பேசும் ஒரு திரைக்கதை. கொடைக்கானலின் இன்னும் அதிகம் அறியப்படாத முகமான வட்டக்கானலை, வெறும் லோகேஷனாக அல்லாமல் ஒரு கதாபாத்திரமாகவே இயக்குநர் மாற்றி வைத்திருக்கிறார். மேகத்தின் இடையே மறையும் மலை, இரவு நேரத்தில் பேசும் நிசப்தக் குளிர், பச்சை மரங்களின் பின்னால் ஒளிந்திருக்கும் தனிமை என ஒவ்வொரு ஃபிரேமும் ஒரு ஆழமான உணர்வை கடத்துகிறது.

கதை மிக எளிமையானது. ஆனால் எளிமைக்குள் ஒளிந்திருப்பது மனித மனங்களின் சிக்கல். நகரத்தில் இருந்து தப்பி ஒரு தனிப்பட்ட விடுதலைக்காக மலைகளுக்குள் வரும் கதாபாத்திரங்கள், அங்கு இயற்கையுடன் மட்டுமல்ல, தங்களுக்குள்ளும் உரையாட தொடங்குகிறார்கள். வசனங்கள் அளவாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பல இடங்களில் கண்களும், பின்னணி இசையும் பேசிவிடுகின்றன. இசை இங்கே ஒரு துணை அல்ல, ஓர் உணர்ச்சி மொழி. குறிப்பாக வயலினும், மென்மையான நேட்டிவ் ஃப்ளூட்டும் சேரும் தருணங்கள், படத்தை அடுத்த பரிமாணத்திற்கு தூக்கி செல்கின்றன.

ஒளிப்பதிவு குறித்து தனியாக பேச வேண்டும். மழைக்குப் பிந்தைய ஈர மண்ணின் மணம் கூட திரையில் தெரியும் அளவுக்கு அழகியல் நிரம்பி வழிகிறது. காலை மூடுபனியின் ஊடே நடக்கும் காட்சிகள், இரவு வெளிச்சம் இல்லாத காட்டின் ஒலி மட்டும் நிரம்பிய காட்சிகள், பயம் தராமல் உள்ளே ஏதோ ஒன்றை உலுக்கும் உணர்வை தருகின்றன. எடிட்டிங் மெதுவான ரிதமில் பயணித்தாலும், அது கதைக்கு தேவையான ஓர் அமைதி. அதில் அவசரப்பட எதுவும் இல்லை.

நடிகர்கள் இயல்பாக வாழ்ந்திருக்கிறார்கள். கதாநாயகன், அந்த மலையின் தனிமையை கண்களில் சுமந்து நடக்கிறார். அவருடைய அமைதி கூட ஒரு வசனமாகவே ஒலிக்கிறது. பெண் கதாபாத்திரம் வெறும் காதல் பிம்பமாக கடந்து போகாமல், படத்தின் ஆத்மாவை சமநிலைப்படுத்தும் இன்னொரு தூணாக நிற்கிறார். துணை கதாபாத்திரங்கள் கூட தேவையில்லாமல் திணிக்கப்படவில்லை. இயக்குநரின் கைவண்ணம் சிறிய சிறிய தருணங்களில்தான் அதிகம் வெளிப்படுகிறது. தேநீரின் ஆவி, பழைய கேசட் பாடலின் இரைச்சல், திடீரென பெய்யும் மழையில் யாரோ மறைக்கும் புன்னகை என இவைதான் படத்தை ஞாபகத்தில் நிறுத்துகின்றன.

குறை என்று சொன்னால் – இது பொறுமை இல்லாத பார்வையாளர்களுக்கான படம் அல்ல. வேகம், திருப்பங்கள், அல்லது திடுக்கிடும் திரைக்கதை ட்விஸ்ட்கள் தேடுபவர்களுக்கு இது பிடிக்காமல் போகலாம். இது ஒரு அனுபவ சினிமா. பார்த்து புரிந்துகொள்வதல்ல, உணர்ந்து கடந்து வர வேண்டியது. ஆனால் அதே மெதுவில் தான் இந்த படம் அதன் பலத்தையும் வைத்திருக்கிறது. இறுதியில், படம் முடிந்த பிறகு நம்மோடு ஒட்டிக்கொள்வது கதை அல்ல, அது கடத்திய தனிமையும், இயற்கை ஏற்படுத்தும் சிறிய வாழ்வு புரிதல்களும்.

திரையரங்கை விட்டு வெளியே வரும்போது ஒரு உணர்வு மட்டும் தான் மேலோங்கி நிற்கும் – வட்டக்கானல் ஒரு இடம் அல்ல, அது ஒரு மனநிலை. அதை பார்ப்பவர் உருவாக்கிக் கொள்ள வேண்டிய மனநிலை.

” Others” திரை விமர்சனம்

“Others” திரைப்படம் சமூகத்தின் புறக்கணிக்கப்பட்டவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஒரு சமூக திரில்லர் வகை படம். கதையின் நோக்கம் நன்றாக இருந்தாலும், சொல்லும் விதத்தில் சில குறைகள் தென்படுகின்றன. கதை மனித நேயம், சமத்துவம், சமூக பார்வை போன்றவற்றை பேச முயற்சிக்கிறது, ஆனால் திரைக்கதையின் ஒட்டுமொத்த ஓட்டம் சீராக இல்லாததால் அந்த தாக்கம் குறைந்து விடுகிறது. முதல் பாதி சற்று சுவாரஸ்யமாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதி மெதுவாகி சலிப்பை ஏற்படுத்துகிறது.

நாயகன் தனது பாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் செய்திருக்கிறார். சில காட்சிகளில் அவரது நடிப்பு உணர்ச்சியுடன் பொருந்துகிறது. ஆனால் நாயகியின் நடிப்பு படத்தின் பலவீனமாகவே தெரிகிறது. முக்கியமான காட்சிகளில் அவரின் முகபாவனைகளில் தேவையான உணர்ச்சி புலப்படவில்லை; உரையாடல் சொல்லும் விதமும் இயல்பாக இல்லை. இதனால் பல காட்சிகள் எதிர்பார்த்த தாக்கத்தை அளிக்கவில்லை. சில இடங்களில் அவரின் நடிப்பு கதையின் ஓட்டத்தை தளரச் செய்கிறது.

இயக்குனர் சமூகச் செய்தியை வெளிப்படுத்தும் முயற்சி செய்திருந்தாலும், திரைக்கதையில் ஒருங்கிணைப்பு குறைவாக உள்ளது. சில காட்சிகள் மட்டும் நினைவில் நிற்கும் வகையில் அமைந்துள்ளன. இசை மற்றும் பின்னணி இசை சாதாரணமாகவே இருந்தது; சிறப்பான புதிய முயற்சிகள் எதுவும் காணப்படவில்லை. ஒளிப்பதிவு சில காட்சிகளில் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், எடிட்டிங் மேலும் கூர்மையாக இருந்தால் படம் சுறுசுறுப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில், “Others” ஒரு நல்ல நோக்கம் கொண்ட திரைப்படம் என்றாலும், அதை வெளிப்படுத்தும் விதத்தில் பல குறைகள் இருப்பதால் படம் எதிர்பார்த்த அளவுக்கு ஈர்க்கவில்லை. நாயகியின் நடிப்பு மற்றும் திரைக்கதையின் மெதுவான போக்கு படத்தின் பலத்தை குறைத்துள்ளது. படம் சிந்திக்க வைக்கும் முயற்சி கொண்டதாய் இருந்தாலும், அதற்குத் தேவையான உணர்ச்சி ஆழம் வெளிப்படவில்லை.

பரிசு திரைப்பட விமர்சனம்

கலா அல்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள பரிசு படம், ராணுவப் பின்னணியில் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்ட கதை. ஜன்விகா நடித்திருக்கும் நாயகி, பெற்றோரின் விருப்பத்தின்படி ராணுவத்தில் சேரும் ஒரு சாதாரண மாணவியாக துவங்கி, கடுமையான பயிற்சிகள், சமூகக் கருத்துகள், மன அழுத்தங்கள் ஆகியவற்றை எதிர்கொண்டு தன்னம்பிக்கையால் வெற்றி பெறும் கதையாக இது நகர்கிறது. படத்தின் முக்கியமான கரு “பெண்ணுக்கு பெருமை சேர்க்கும்” என்ற நோக்கத்துடன் உருவாகியுள்ளது.

திரைப்படத்தின் சிறப்புகளில் ஒன்று, ஒளிப்பதிவு மற்றும் காட்சிப்பதிவில் காணப்படும் இயற்கைச் சூழல்களின் அழகு. குறிப்பாக ராணுவப் பயிற்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட காட்சிகள் நிஜத்தன்மையுடன் காட்சியளிக்கின்றன. சில காட்சிகள் உணர்வுபூர்வமாக உருவாகியுள்ளன, குறிப்பாக நாயகியின் உளவியல் போராட்டங்கள் நன்றாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ரீதியாக படம் சுமார் நிலை பெற்றுள்ளது.

ஆனால், கதை சொல்லும் முறையில் சில குறைகள் உள்ளன. கதை சில இடங்களில் மெதுவாக நகர்கிறது; சில நிகழ்வுகள் லாஜிக்கற்றதாகவும் நீளமாகவும் தோன்றுகின்றன. காமெடி மற்றும் இசை அம்சங்கள் பல இடங்களில் சுவாரஸ்யமின்றி போகின்றன. பாடல்கள் நினைவில் நிற்கவில்லை; பின்னணி இசை சில சமயங்களில் உணர்வை தளர்த்துகிறது. மேலும், சில துணை கதாபாத்திரங்களின் நடிப்பு இயல்பாக இல்லாததாக விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன.

மொத்தத்தில், பரிசு என்பது ஒரு நல்ல கருத்தை முன்வைக்கும், பெண்களின் மன உறுதியையும் சாதனையையும் பேசும் படம். ஆனால் அதனை திரையில் உணர்ச்சிமிக்கவாறு சொல்லும் திறனில் சிறிதளவு குறைபாடு தெரிகிறது. நல்ல முயற்சியாக இருந்தாலும், முழுமையான தாக்கம் ஏற்படுத்தாத ஒரு மிதமான திரைப்படமாக பரிசு சொல்லப்படுகிறது.

“ஆரியன்”திரை விமர்சனம்……..

தனியார் டிவி நிருபரான ஷரத்தா ஸ்ரீநாத் தொகுத்து வழங்கும் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பார்வையாளர்கள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் செல்வராகவன், திடீரென்று எழுந்து துப்பாக்கி முனையில் அனைவரையும் பிணைக் கைதிகளாக்கி அதிரடியாக அதிர்ச்சியளிக்கிறார்.அவருக்கு என்ன வேண்டும் ? என்று அவரிடம் கேட்டால்,அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒருவர் என்று ஐந்து பேரை கொலை செய்யப் போகிறேன்,என்றும் முடிந்தால் என்னை தடுத்துக் கொள்ளுங்கள், என்று தைரியமா சொல்கிறார்.பிணைக் கைதிகளை காப்பாற்றி விட்டு, செல்வராகவன் மிரட்டல் குறித்து விசாரிக்கும்காவல்துறை, தொடர் கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால்தலைமையில் குழு ஒன்றை அமைக்கப் படுகிறது. அந்த கொலையாளி செல்வராகவனை பிடிப்பதை விட்டுவிட்டு, அவர்செய்ய இருக்கும் கொலைகளை தடுக்க விஷ்ணு விஷால் முயற்சிக்கிறார். அது

ஏன் ? என்பதை இதுவரை சொல்லப்படாத கோணம்  தான் ‘ இந்த ஆரியன்’.திரைப்படக்
கதைக்களம்.

காவல்துறை சீருடையில் மிடுக்கான தோற்றத்துடன் விஷ்ணு விஷால், முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்திருக்
கிறார்

செல்வராகவன், சைக்கோ கொலையாளியாக பயமுறுத்தவில்லை. தொலைக்காட்சி நிருபராக நடித்துள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத், விஷ்ணு விஷாலின் மனைவியாக நடித்திருக்கும் மானசா செளத்ரி, கருணாகரன், அவினாஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்

இயக்குநர் பிரவீன்.கே, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, என அனைவரும்

பார்க்க கூடிய ஒரு சைக்கோ திரில்லர் படமாகவும் நமக்கு கொடுத்திருக்கிறார்.

RATTING——-3/5

“காந்தாரா-சாப்டர் 1” திரைவிமர்சனம்

ரிஷப் செட்டி இயக்கத்தில் வெளிவந்து சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்த காந்தாரா திரைப்படத்தின் முந்தைய பாகமாக காந்தாரா சேப்டர் ஒன் என்ற பெயரில் எழுதி இயக்கியிருக்கிறார் ரிஷப் செட்டி.
கர்நாடகவில் உள்ள கடம்ப வம்சம் என்னும் பழங்குடியினரின் வரலாறு சொல்ல முயற்சித்து இருக்கிறார் இயக்குனர்.
காத்தாரா மலைப்பகுதியில் தங்கள் வாழும் பகுதியை ஈஸ்வரனின் பூந்தோட்டம் என்று நம்புகிறார்கள் அந்த மக்கள். அந்த பகுதியில் காலம் காலமாக விளையும் மிளகு, பட்டை போன்ற இயற்கை பொருட்களை வைத்து வாழ்ந்து வருகிறார். அந்த நேரத்தில் அவர்கள் மீது படையெடுக்கும் மற்ற பழங்குடியினரை அவர்கள் வணங்கும் கருணீக கற்களின் துணையோடு வெல்கிறார்கள். அந்த கல் சிவனின் வடிவம் தான் என்று நம்பும் அவர்கள் அதை கடவுளாக வணங்குகிறார்கள். இந்த நிலையில் அந்த நாட்டின் மன்னன் அந்த கல்லை கவர்ந்து தனது கோயில் வைத்து கடவுளையும் தனது கட்டுப்பாட்டில் வைக்க நினைக்கிறான்.
அந்த நேரத்தில் அந்த மன்னனின் அதிகார எல்லைக்குள் சென்று தங்களிடம் விளையும் பொருட்கள் விற்பனை செய்ய நாயகன் முயற்சி செய்து அதிலும் வெற்றி அடைகிறான். இந்த சூழ்நிலையில் அந்த மன்னனின் ,மகள் ஒரு சதி திட்டத்தில் ஈடுபட்டு அந்த கற்களை தனது கோவிலுக்குள் கொண்டு வந்து தங்களது அடிமையாக அந்த மக்களையும் வைக்க நினைக்கிறார். அதற்கு அவர் அந்த மலையில் வாழும் சூனியக்காரர்களை உதவிக்கு அழைக்கிறார் இவர்களெல்லாம் வென்று சிவனின் அருளோடு நாயகன் எவ்வாறு தம் மக்களை காப்பாற்றுகிறான் அந்த கடவுளை அந்த சூனியக்காரர்கள் எவ்வாறு விடுவிக்கிறான் என்பதை இந்த படத்தின் திரைக்கதை….


நாயகனாக ரிஷப் ஷெட்டி, மன்னனாக ஜெயராம், நாயகியாக ருக்மணி மற்றும் பலரும் நடித்திருக்கிறார்கள்.
படத்தின் முதல் பகுதியில் நாயகன் மன்னரின் எல்லைக்குள் சென்று வியாபாரம் செய்வது போல் சில காட்சிகளும் அதன் பிறகு காட்டில் விளையும் காட்சிகளாக படம் ஆரம்பத்தில் மிகவும் மெதுவாக தான் நகர்கிறது படம் இடைவெளிக்கு முன் நடக்கும் சண்டைக்காட்சி நம்மை நிமிர வைத்து இரண்டாம் பாதியில் அதே விருப்போடு நம்மை கொண்டு செல்கிறது இந்த படத்திற்கு மிகவும் ஒரு இயக்குனராக உழைத்திருக்கிறார் படத்தின் வரும் விஷுவல் காட்சிகள் ஒளிப்பதிவு இசை செட் ஒர்க் என எல்லாவற்றையும் பார்த்து பார்த்து இளைத்து செய்திருக்கிறார் படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களையும் கதாபாத்திரங்களாக இல்லாமல் வாழ வைத்திருக்கிறார் இதுவே இயக்குனரின் மிகப்பெரிய வெற்றி
காந்தாரா சேப்டர் ஒன் இதற்கு முன் வந்த காந்தாராவின் வெற்றியை முந்துமாஎன்பது பொறுத்திருந்து பார்ப்போம்

#இட்லி கடை# திரைவிமர்சனம்

ரேட்டிங் 4/5

நடிகர் தனுஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் இட்லி கடை.
இன்றைய காலகட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கோ, நகரங்களுக்கோ புலம் பெயர்ந்து வாழும் மக்கள் ஏதோ ஒரு சூழ்நிலையில் தாங்கள் வாழ்ந்த மண்ணையும் அந்த மண்ணின் அடையாளத்தையும் மறக்க முடியாமல் அந்த நினைவுகளில் இருப்பவர்களுக்கு ஓர் இனிய நினைவாக இயக்கியிருக்கிறார் நடிகர் தனுஷ்.
ஒரு கிராமத்தில் இட்லி கடை வைத்து நடத்தும் ராஜ்கிரன், அவருடைய மகன் தனுஷ் கேட்டரிங் படித்துவிட்டு வெளிநாட்டில் சத்யராஜ் நடக்கும் மிகப் பெரிய ஹோட்டலில் வேலை செய்கிறார் ஒரு பெரிய பதவியில் இருக்கிறார்.அவருக்கு சத்யராஜ் தன் மகளை திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது அவ்வாறு இருக்கும் போது ராஜ்கிரண் இறந்துவிட தன் சொந்த ஊருக்கு வருகிறார் தந்தையின் இறுதிச் சடங்குக்காக, ஆனால் அங்கு தந்தையைத் தொடர்ந்து தனது தாயும் இறந்து விட, தந்தை தனக்கு சிறுவயதில் சொல்லிக் கொடுத்த விஷயங்களும், அவருடைய ஹோட்டலும் அதாவது இட்லி கடை அந்த கடை அந்த ஊரின் அடையாளமாக எவ்வாறு மாறியது என்பது நினைவுக்கு வர அங்கேயே தங்கிவிட முடிவு செய்கிறார்.
இதற்கிடையே சத்யராஜின் மகனான அருண் விஜய்க்கும் இவருக்கும் ஒரு ஈகோவில் எப்பொழுதும் ஒரு முரண்பாடு இருந்து கொண்டே இருக்கிறது. தன் தங்கையின் திருமணம் நின்று விட்ட கோபத்திலும் தனுஷ் தன்னிடம் வேலை செய்யும் ஒருவன் அவனுக்காக நாம் காத்திருக்க வேண்டுமா என்ற கோபத்திலும் வெளிநாட்டில் இருந்து வந்து தனுஷை வம்பு இழுத்து அடித்து இழுத்துப் போக நினைக்கிறார். அங்கு நடக்கும் சண்டையை தனுஷ் அவரை அடித்து விடுகிறார் அந்த கோபத்தில் தனுஷை எப்படியாவது பழி வாங்க நினைக்கிறார். இதற்கிடையே தனுஷிற்கு நித்தியாமேனன் மீது காதல், இதுவும் தன் தங்கையின் திருமணம் நின்று போன ஒரு கோபமும் சத்யராஜ் , மகனான அருண் தனுசை எவ்வாறு சித்திரவதை செய்கிறார்கள் அதிலிருந்து எவ்வாறு மீண்டு வந்தார் என்பதுதான் கதை.
இந்த படத்தில் ராஜ்கிரண் அடிக்கடி சொல்லும் விஷயம் சண்டை போடக்கூடாது அகிம்சையே சிறந்தது என்று சொல்லி வளர்க்கிறார் .அதன்படியே இடைவேளையில் தனுஷ் அருன் விஜயைஅடிக்க மீண்டும் எப்படியும் அருண் விஜய் தனுஷை அடிப்பார் ஆனால் தனுஷ் அகிம்சை மூலம் எவ்வாறு செல்கிறார் என்பது நமக்கு தெரிந்தாலும் அதை சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது.
மேலும் இந்தப் படத்தில் உள்ள கதாபாத்திரங்கள் சமுத்திரகனி ஆகட்டும் பார்த்திபனாகட்டும், இளவரசாகட்டும், சத்யராஜ் ஆகட்டும், அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்கள் சிறப்பு .நம் கண் முன்னே வாழ்ந்த சிலரை நமக்கு நினைவு படுத்துகிறது அந்த வகையில் தனுஷ் ஒரு சிறந்த இயக்குனராக நிமிர்ந்து நிற்கிறார்.
நித்யா மேனன் தனக்கே வழக்கமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் கோபம் ஆகட்டும் ,காதல் ஆகட்டும், சந்தோஷமாக, அனைத்திற்கும் ஒவ்வொரு விதமான ரியாக்சன் கொடுத்து அருமையாக நடித்திருக்கிறார்.

ஜி வி பிரகாஷ் இசை சில இடங்களில் தான் என்று நிரூபித்து விட்டார்.

ஒளிப்பதிவு வழக்கம்போல கிராமத்தின் அழகை எதார்த்தமாக காட்டியிருக்கிறார்கள்
நிச்சயம் இட்லி கடை இந்த மாதிரி கடைகளில் வாழும் ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறது

“ரைட்” திரைவிமர்சனம்

நீதியை நிலைநாட்ட சட்டத்தை தன் கையில் எடுக்கும் ஒரு காவல் அதிகாரியின் கதையும், அதே நேரத்தில் தன் மகனை தொலைத்து விட்டு காணாமல் தேடும் ஒரு தந்தையின் தவிப்பையும், ஒரே இடத்தில் ஒரு சேர நடப்பது போல் அமைந்திருக்கும் கதை தான் ரைட்.

காவல்துறை அதிகாரியாக நட்டி என்னும் நடராஜ் தான் கைது செய்யும் நான்கு அரசியல்வாதியின் மகன்களை தனது செல்வாக்கினால் ஒருவன் வெளியில் கொண்டு செல்கிறான். அதே நேரத்தில் அருண்பாண்டியன் தன் மகன் காணாமல் போக அதே காவல் நிலையத்தில் புகார் அளிக்க வருகிறார். அந்த நேரத்தில் நட்டி பிரதமர் வருகையினால் இருக்கும் பாதுகாப்பிற்கு சென்று விடுகிறார் .அந்த நேரத்தில் காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் அருண்பாண்டியனின் புகாரை மதிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்கள் எனவே மீண்டும் மீண்டும் அந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு நடக்கிறார் அருண் பாண்டியன். அந்த நேரத்தில் அந்த காவல் நிலையத்தில் ரைட்டர் அமரும் சேரில் வெடிகுண்டை வைத்து அவர் எழுந்தால் வெடித்துவிடும் என்று மிரட்டுகிறான் ஒருவன். அந்த மிரட்டலில் பலர் பனைய கைதிகளாக மாற அதில் ஒரு நீதிபதியும் மாட்டுகிறார், அந்த காவல் நிலையம் கோர்ட் ஆகிறது, அந்த இடத்தில் என்ன நடக்கிறது அந்த பாம்பை எடுத்தார்களா அந்த ஸ்டேஷனில் உள்ளவர்கள் தப்பித்தார்களா என்பதை ஒரே இடத்தில் ஒரே நாளில் நடக்கும் பரபரப்பு கதையாக இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

இந்தப் படத்தில் கைகள் கட்டப்பட்ட நேர்மையான காவல் அதிகாரியாக நடராஜ் நடிப்பில் தேறியிருக்கிறார் ,தன்னுடைய மகள் பாலியல் வன்கொடுமைக்கு பலியாக அதற்கு எடுக்கும் ரிவஞ்சல் காவல் அதிகாரியாக நிமிர்ந்து நிற்கிறார் நட்ராஜ்.

மகனை காணாமல் பரிதவிக்கும் தந்தையாக அருண்பாண்டியன் நடிப்பில் எதார்த்தத்தை தருகிறார்


மேலும் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் அனைவரும் தங்கள் பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருக்கிறார்கள், நீதிபதியாக வரும் வினோதினி தன் நடிப்பை எதார்த்தமாக வழங்கி இருக்கிறார்,

மிகப்பெரிய கதையாக யோசித்து ஒரே இடத்தில் சிக்கனமாக படம் முடிப்பதில் இயக்குனர் ரைட்டாக நிற்கிறார்