Cinema Reviews

‘நிறம் மாறும் உலகில்’ திரைவிமர்சனம்

தனது பிறந்தநாள் விழாவில் தன் தாயுடன் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறும் லவ்லின் சந்திரசேகர் ரயிலில் பயணிக்கும் போது டிடிஆர் ஆன யோகி பாபுவை சந்திக்கும்போது லவ்லின் சந்திரசேகரின் நிலைமையை புரிந்துக்கொள்ளும் யோகி பாபு, தாய் என்பவர் எவ்வளவு முக்கியம் என்பதை லவ்லின் சந்திரசேகருக்கு உணர்த்தும் வகையில் நான்கு கதைகள் கூறுகிறார்.

தாய் கனிகா இறந்த துக்கத்தில் தாய் பாசத்திற்காக ஏங்கும் மும்பை தாதா, நட்டி நடராஜ் குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து ஆளாக்கினாலும் கடைசி காலத்தில் பசியோடு இறக்கும் தாய், தந்தை பாரதிராஜா வடிவுக்கரசி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட தன் தாயை காப்பாற்ற முடியவில்லை மகன் ரியோ ராஜ் சோகம், தாய் ஆதிரா என்ற உறவுக்காக எதை வேண்டுமானாலும் தூக்கி எரிய தயாராக இருக்கும் ஆதரவற்ற இளைஞன், சாண்டி, துளசி என நான்கு விதமான நல்ல கதைகளும், அதில் பயணித்த கதாபாத்திரங்களின் தாய் மீதான பாசப் போராட்டம் தான்

லவ்லின் சந்திரசேகரிடம் யோகி பாபு கூறும் அந்த நான்கு கதைகளுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை ’தாய்’ என்ற உறவு மட்டுமேதான் என அனைவரும் கொடுத்த கதாபாத்திரங்களை உணர்ந்து நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

இவர்களுடன் இணைந்து நடித்திருக்கும் ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவியா அறிவுமணி, அய்ரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைக் கோபி, விஜி சந்திரசேகர், ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி என அனைத்து கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு மிகச் சிறப்பான நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர்கள் மல்லிகா அர்ஜுனன் மற்றும் மணிகண்ட ராஜு ஆகியோரது ஒளிப்பதிவு மூலம் நான்கு கதையிலும் மிக நேர்த்தியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் தேவ் பிரகாஷ் ரீகனின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.

நான்கு கதைகளையும் தாய் செண்டிமெண்டோடு சொன்னது தவறில்லை, ஆனால் நான்கு கதைகளிலும் அளவுக்கு அதிகமான சோகத்தை கொடுத்திருப்பது தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை இருந்தாலும் மிக அருமையாக இயக்கி இருக்கிறார் இயக்குனர் பிரிட்டோ ஜே.பி.

2K லவ்ஸ்டோரி திரை விமர்சனம்

கதாநாயகன் ஜெகவீர் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் சிறு வயது முதல் பள்ளிக்கூடத்தில் இருந்து கல்லூரி வரை இருவரும் ஒன்றாக படித்து வரும் நிலையில் அதன் பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து வெட்டிங் போட்டோகிராபி கம்பெனி ஒன்றை தொடங்குகிறார்கள்.

கதாநாயகன் ஜெகவீர் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் இவர்கள் எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக இணைந்து செல்வார்கள் இவர்களை பார்க்கும் அனைவரும் இருவரும் காதலர்கள் என கூறுகிறார்கள்.

கதாநாயகன் ஜெகவீர் மற்றும் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்பு மட்டுமே உள்ளது.

இப்படி உள்ள நிலையில் பவித்ரா என்பவரை கதாநாயகன் ஜெகவீர் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனிடன் நெருங்கி பழகுவது நட்பு வைத்துக் கொள்வது என்பது பவித்ராவிற்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.

இதனால் கதாநாயகன் ஜெகவீரிடம் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனுடன் இருக்கும் நட்பை பவித்ரா விட வேண்டும் என கூறுகிறார்.

கதாநாயகன் ஜெகவீர் கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜனுடன் நட்பை தொடரக்கூடாது என பவித்ரா கூற அதை செய்ய மறுக்கிறார்.

நட்புக்கும் காதலுக்கும் என்ன வித்தியாசம் என தெரியாமல் பவித்ரா கூறும் நிலையில் காதலுக்கும் நட்புக்கும் இடையே சிக்கித் தவிக்கிறார் கதாநாயகன் ஜெகவீர்.

இதற்கு அடுத்து என்ன ஆனது? கதாநாயகன் ஜெகவீர் காதலிக்கும் பவித்ராவுடன் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? சேரவில்லையா? கதாநாயகன் ஜெகவீர் காதலுக்கு கை கொடுத்தாரா? இல்லை நட்புக்கு கை கொடுத்தாரா? என்பதுதான் இந்த 2K லவ்ஸ்டோரி திரைப்படத்தின் மீதிக்கதை.

இந்த 2K லவ் ஸ்டோரி திரைப்படத்தில் ஜெகவீர் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் ஜெகவீர் முடிந்த அளவுக்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

கதாநாயகி மீனாட்சி கோவிந்தராஜன் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார்.

சிங்கம்புலி, ஜெய பிரகாஷ், நந்தினி, பால சரவணன், ஜி.பி முத்து மற்றும் சிங்கம்புலி, ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி, லத்திகா பாலமுருகன், ஆகியோரின் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஒளிப்பதிவாளர் வி.எஸ் ஆனந்த கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் டி இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக அமைந்துள்ளது.

இசையமைப்பாளர் டி இமானின் பின்னணி இசை சுமாராக உள்ளது.

இந்த காலத்தில் உள்ள இளைஞர்களின் காதல், நட்பு அவர்கள் மேற்கொள்ளும் எமோஷனை மையமாக வைத்து திரைப்படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

நல்ல கதையை கையில் எடுத்த இயக்குனர் திரைக்கதையில இன்னும் கூடுதல் கவனம் செலுத்திருக்கலாம்.

தண்டேல் திரைப்பட விமர்சனம்

மீனவ குடும்பத்தைச் சார்ந்த கதாநாயகன் நாக சைதன்யா, மற்றும் கதாநாயகி சாய் பல்லவி சிறு வயது முதல் உயிருக்கு உயிராக காதலித்து வருகிறார்கள்.
நாக சைதன்யா தன்னுடைய மீனவக் கிராமத்தில் உள்ள நண்பர்களோடு சேர்ந்து சுமார் பல ஆயிரம் கி.மீ.க்கு தொலைவில் இருக்கும் குஜராத் கடற்கரைக்குச் சென்று, மீன்பிடிக்கச் செல்கிறார்கள்.

மீனவக் குடும்பத்தில் உள்ள அனைவரும் வருடத்தில் ஒன்பது மாதங்கள் மட்டுமே கடலுக்குள் சென்று மீன்பிடிப்பது இவர்களுடைய வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

கடலுக்குள் சென்று 9 மாதங்கள் மீன்பிடிக்கும் இவர்கள் மூன்று மாதங்கள் மட்டுமே தனது குடும்பத்தோடு சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள்.

கதாநாயகன் நாக சைதன்யா மீது உயிரையே வைத்திருக்கும் கதாநாயகி சாய் பல்லவி இப்படி ஒன்பது மாதங்கள் பார்க்காமல் பேசாமல் இருப்பதை கதாநாயகி சாய் பல்லவி தாங்கி கொள்ள முடியவில்லை.

மேலும், மீன்பிடி தொழில் என்பது மிகவும் ஆபத்தான தொழில் என்று, அதனை கைவிடும்படி கதாநாயகன் நாக சைதன்யாவிடம் மீள்பிடி தொழில் மிகவும் ஆபத்து என்பதால் நீ போக வேண்டாம் என கதாநாயகி சாய் பல்லவி கெஞ்சுகிறார்.

ஆனால், நமது கிராமத்தில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் என்று கூறி கதாநாயகன் நாக சைதன்யா கதாநாயகி சாய் பல்லவி பேச்சையும் மீறி மீன்வேட்டைக்கு சென்று விடுகிறார்.
இதனைத் தொடர்ந்து சில நாட்களில், கடும் புயலில் வேறு ஒரு படகு கவிழும் நிலையில் கதாநாயகன் நாக சைதன்யா அந்தப் படகில் உள்ள ஒருவரை காப்பாற்றும் நிலையில் மீன் பிடிக்க சென்றவர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் படகு சென்றுவிட பாகிஸ்தான் கப்பல் காவல் படையிடம் கதாநாயகன் நாக சைதன்யா மற்றும் 21 பேரையும் பாகிஸ்தான் காவல் படையினர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அங்குள்ள சிறைக்குள் அடைக்கப்படுகிறார்கள்..

இறுதியில் கதாநாயகன் நாக சைதன்யா மற்றும் 21 பேரையும் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுதலை ஆனவர்களா?, விடுதலை ஆகவில்லையா?, என்பதுதான் இந்த தண்டேல் திரைப்படத்தின் மீதிக் கதை.

இந்த தண்டேல் திரைப்படத்தில் கதாநாயகனாக நாக சைதன்யா நடித்திருக்கிறார்.

கதாநாயகனாக நடித்திருக்கும் நாக சைதன்யா, திரைப்படத்திற்கு அதனுடைய கதாபாத்திரம் மூலம் உயிர் கொடுத்திருக்கிறார்.

கதாநாயகன் நாக சைதன்யா ஆக்‌ஷன், காதல், செண்டிமெண்ட், நடனம், எமோஷன்ஸ் என நடிப்பின் மூலம் அசத்தியிருக்கிறார்.

கதாநாயகன் நாக சைதன்யாவிற்கும் கதாநாயகி சாய்பல்லவிக்குமான கெமிஸ்ட்ரி திரைப்படத்தில் நன்றாகவே வொர்க் அவுட் ஆகியிருக்கிறது.

நடிப்பு நடனம் என படிப்பின் மூலம் சாய் பல்லவி அசத்தியிருக்கிறார்.

மேலும், ஆடுகளம் நரேன், பப்லு, கருணாகரன் உள்ளிட்ட மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் மிகவும் நேர்த்தியாக கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷ்யாம் தத் ஒளிப்பதிவு மூலம் திரைப்படத்திற்கு தூணாக அமைந்திருக்கிறார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்திருக்கிறது.

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று, மீனவர்கள் கைது செய்யப்பட்டு அங்கு உள்ள சிறைக்குள் அடைபட்டு கிடக்கும் இந்திய மீனவர்கள் எந்த மாதிரியான இன்னல்களுக்கு எப்படி எல்லாம் ஆளாகியிருப்பார்கள் என்பதை வெளிச்சமாக காட்டி நம் கண்களில் ஈரத்தைக் கொண்டு வர வைத்துவிட்டார் இயக்குனர் சந்து மொண்டேட்டி.

’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ பட விமர்சனம்

அயோத்தியின் மன்னனாக பதவி ஏற்க இருக்கும் நிலையில் ராமர், பலவிதமான சூழ்ச்சியின் காரணத்தால் 14 ஆண்டுகள் காட்டுக்கு (வனவாசம்) அனுப்பப் படுகிறார்.
ராவணன் ராமரின் மனைவி சீதாயை கடத்துகிறார்.
கடத்தப்பட்ட சீதையை தேடிச் செல்லும் ராமர், அனுமான் படைகளின் உதவியுடன் இலங்கையில் உள்ள ராவணனை வீழ்த்தி, அங்கு இருக்கும் சீனாவையும் மீட்டதோடு, அங்கு மாட்டிக் கொண்டிருக்கும் அடிமைகளையும் மீட்டது, என ராமாயணத்தின் கதையை அனிமேஷன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும்படியாக ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ மிக அருமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இலங்கை மன்னன் ராவணனின் தம்பி கும்பகர்ணனின் பிரமாண்ட உருவம், வடிவமைப்பு சீதையை ராவணன் கடத்திச் செல்லும் போது அவரை காப்பாற்ற முயற்சிக்கும் ஜடாயு பறவை, பிரம்மாண்டமாகவும் மூலிகைக்காக மலையையே எடுத்து வரும் ஹனுமானின் சாகசங்கள் என ராமாயணத்தின் முக்கிய அம்சங்களை அனிமேஷன் மூலம் மிக அருமையாகவும் மிக நேர்த்தியாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
ராமர் கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் செந்தில் குமார், சீதா கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் டி.மகேஷ்வரி, ராவணனுக்கு கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார், லக்ஷ்மனனுக்கு கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், ஹனுமானுக்கு கதாபாத்திரத்திற்கு பிண்ணனி குரல் கொடுத்திருக்கும் லோகேஷ் மற்றும் ராமாயண கதையை வாய்ஸ் ஓவர் ரவூரி ஹரிதா என அனைவரும் தங்களது பணியை மிகவும் சிறப்பாக கையாண்டு இருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கு பிடித்த 2டி அனிமேஷன் மூலம் போர் நடக்கும் காட்சிகள் மற்றும் அதில் ஈடுபடும் வானரப் படைகளின் செயல்கள் கண்டிப்பாக சிறுவர்களை மகிழ்விக்கும் என்பது உறுதி.
குறிப்பாக, கும்பகர்ணனிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் வானரப் படைகளின் காட்சிகள் சிறுவர்களை திரைப்படத்தை கண்டிப்பாக திரும்ப திரும்ப அனைவரையும் பார்க்க வைக்கும்
இந்திரஜித் மற்றும் லக்ஷ்மன் இடையே நடக்கும் வான் சண்டையும், ராவணனின் புஷ்பக விமானம், கோட்டை என அனைத்துமே அனிமேஷன் மூலம் மிக நேர்த்தியாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஒலி வடிவமைப்பும் அனிமேஷன் தொழில்நுட்பங்கள் மற்றும் அதில் பயன்படுத்தியிருக்கும் கலர்கள் காட்சி அமைப்பு அனைத்தும் சிறுவர்கள் மட்டுமல்லாமல் அதையும் தாண்டி பெரியவர்களையும் கண்டிப்பாக ரசிக்க வைக்கும் படியாக அமைந்துள்ளது.

’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரை விமர்சனம்

அரசியல்வாதியாக இருக்கும் யோகி பாபுக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் போது, வீட்டில் வேலை பார்க்க வந்த வடமாநில பெண்ணுடன் கள்ள உறவு வைத்துக் கொள்கிறார்.இதனால் வடமாநில பெண்ணுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க அந்த வடமாநில பெண்ணை யோகி பாபு மனைவி வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார் .
யோகி பாபுவின் மகன் இமயவர்மன் தன் தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் உட்கார வேண்டும். என்ற ஆசையோடு வளர்ந்து வருகிறான்.கள்ள உறவில் உள்ள மனைவியின் மகனும் அரசியல்வாதியாகி தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறான்
யோகி பாபுவின் இரண்டு மகன்களும் ஒரே பள்ளியில் படிக்க, பள்ளிக் காலம் முதலே, தலைவர், விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான அனைத்து அம்சங்களுடன் வளர்ந்து வருகிறார்கள்.
இவர்கள் இருவரும் நினைத்தது போல் இவர்களது எதிர்காலம் அமைந்ததா?, அமையவில்லையா? என்பதுதான் இந்த‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ திரைப்படத்தின் மீதிக்கதை.
இந்தக் குழந்தைகள் முன்னேற்ற கழகம் திரைப்படத்தில் கதாநாயகனாக இமய வர்மன் நடித்திருக்கிறார்.யோகி பாபு கதாநாயகனாக நடித்திருந்தாலும், திரைப்படத்தின் சில காட்சிகளில் திடீர் திடீரென்று தலைக்காட்டி விட்டு மறைந்து விடுகிறார்.யோகி பாபு வழக்கம் போல், உடல் கேலி செய்து சிரிக்க வைக்க முயற்சித்து சில காட்சிகளில், பல இடங்களில் அவரது காமெடிக் காட்சிகள் கடியாக மாறி திரைப்படம் பார்க்கும் ரசிகர்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது.
நகைச்சுவை நடிகர் செந்தில், அரசியல் கட்சித் தலைவராக நடிப்பில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.
அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் கேமரா பயம் இல்லாமல் மிக தைரியமாக நடித்திருக்கிறார்கள்.
சிறுமி ஹரிகா பெடடாவின் திரை இருப்பும், நடிப்பும் திரைப்படத்திற்கு கூடுதலாக பலம் சேர்த்திருக்கிறது.
சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜெ.லக்ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவின் மூலம் திரைப்படத்திற்கு சிறப்பு சேர்த்துள்ளார்
இசையமைப்பாளர் சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை திரைப்படத்திற்கு ஏற்றவாறு பயணித்திருக்கிறார்.
தமிழக போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் எதிர்காலம் ஆகியவற்றை நகைச்சுவையாக சொல்லி பார்வையாளர்களை சிரிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் என்.சங்கர் தயாள்.

‘வல்லான்’ திரை விமர்சனம்

தொழிலதிபர் கமல் காமராஜ், கொடூரமாக மர்மமான முறையில் கொலை செய்து விடுகிறார்கள்.கொலை வழக்கை பற்றி விசாரிக்கும் காவல்துறையினர் தடையங்கள் கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்.இந்த நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை ஆய்வாளர் சுந்தர்.சி அவர்களிடம் காவல்துறை உயர் அதிகாரி தொழிலதிபர் கமல் காமராஜ், கொலை வழக்கை பற்றி விசாரிப்பதற்காக ஒப்படைக்கிறார்.
சுந்தர்.சி பணி நீக்கம் செய்யப்பட்டு இருந்தாலும், கொலை வழக்கின் பற்றிய பின்னணியில், தன்னுடைய தனிப்பட்ட பிரச்சனைக்கான தீர்வு கிடைக்கலாம் என்ற நோக்கத்தில் விசாரணை மேற்கொள்ளும் சுந்தர்.சி, அடுத்தடுத்த நடக்கும் கொலைகளால் மேலும் பல மர்மங்கள் சுந்தர்.சியை சூழ தொடர்கிறது.
கமல் காமராஜ்யிடம் இருக்கும் ஏதோ ஒரு விஷயத்திற்காக அரசியல்வாதி, மற்றும் சில காவல்துறை அதிகாரிகளும் சதி திட்டம் தீட்ட, அவைகள் அனைத்தையும் முறியடித்து அந்த கொலையாளியை கண்டு பிடித்தாரா ?என்பதுதான் ‘வல்லான்’ திரைப்படத்தின் கதை.
இந்த வல்லான் திரைப்படத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுந்தர்.சி, ஆக்ஷன் காட்சிகளிலும், கொலை வழக்கை விசாரிக்கும் காட்சிகளிலும் நேர்த்தியாக நடித்திருந்தாலும், தனது வருங்கால மனைவியின் கொடூர கொலையை பார்த்து கதறும் காட்சியில் நடிப்பின் மூலம் சற்று தடுமாறியிருக்கிறார்.
திரைப்படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்திருக்கிறார்.காட்சிகள் மிக குறைவு என்றாலும் அதை மிக நிறைவாக நடித்திருக்கிறார்.
ஹெபா பட்டேல், கவர்ச்சிக்கு மட்டுமே பயன்பட்டிருக்கிறார்.
தொழிலதிபராக நடித்திருக்கும் கமல் காமராஜ், அவரது மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபிராமி வெங்கடாச்சலம், மற்றும் சாந்தினி தமிழரசன், அருள் டி.சங்கர், கோச்சிருக்கதா பத்திரத்தில் தலைவாசல் விஜய், ஜெயக்குமார், டி.எஸ்.கே என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திரைக்கதை ஓட்டத்திற்கு மிகப் பெரிய அளவில் பங்கு வகித்திருக்கிறார்கள்.
கதைக்கான திரைக்கதையை பல திருப்பங்களுடன், கொலையை சுற்றி நடக்கும் சன்பென்ஸ் திரில்லர் ஜானரை மிக தெளிவாக புரியும்படி
எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் வி.ஆர்.மணி சேயோன்,

”வணங்கான்”திரைவிமர்சனம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாய் பேச முடியாமலும் காது கேட்க முடியாமலும் அருண் விஜய், சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டு தனது தங்கை ரிதாவுடன் வாழ்ந்து வருகிறார். தனது கண்ணெதிரே எந்த ஒரு தவறு நடந்தாலும், அது யாராக இருந்தாலும், தட்டிக் கேட்கும் முரட்டுத்தனமான சுபாவம் கொண்டவர்.அருண் விஜயின் கோபத்தை குறைப்பதற்காக ஒரு நிரந்தரமான வேலை ஒன்று ஏற்பாடு செய்ய முடிவு செய்யும் தங்கை ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்கள் காப்பகத்தில் வாட்ச்மேன் வேலை வாங்கிக் கொடுக்கிறார்.

தன்னைப் போன்று குறைபாடு இருந்தாலும் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு மத்தியில் காப்பகத்தில் உள்ள அனைத்து பெண்களுக்கும் சொந்த அண்ணன் போல் தனது பணியை செய்து வரும் கதாநாயகன் அருண் விஜய்.காப்பகத்தில் தன்னைப்போல் உள்ள தனது தங்கைகளுக்கு நடந்த ஒரு அநீதியைக் பார்த்து கடுமையாக கோபம் கொள்வதோடு, அநீதி செய்தவர்களை மிகப்பெரிய அளவில் தண்டனை தருகிறார்.

அருண் விஜய்யின் வாழ்க்கை என்னவானது? என்பதுதான் இந்த ‘வணங்கான்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கதாநாயகனாக நடித்திருக்கும் அருண் விஜய், மாற்றுத்திறனாளியாக நடித்து ரசிகர்களை அசர வைத்து இருக்கிறார்.ஆக்ஷன் காட்சிகளில் கவனிக்க வைத்தது மட்டுமல்லாமல் தங்கையின் மீது வைத்திருக்கும் பாசத்தில் நெகிழ வைத்து இருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷின் அறிமுகம் மிக அமர்க்களமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் கதாநாயகன் அருண் விஜய்யை ஒருதலையாக காதலிப்பது, அவரது கதாநாயகனின் முரட்டுத்தனத்தை ரசிப்பது, அவருக்காக கண்ணீர் சிந்துவது, என திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது இருக்கிறார்.

அருண் விஜயின் தங்கையாக கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரிதா, அண்ணனின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை கலங்க வைத்துவிடுகிறார்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரது திரை இருப்பு திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறார்.

டாக்டர்.யோஹன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன் ராஜ், கவிதா கோபி, பாலா சிவாஜி, முனிஷ்குமரன், பிருந்தா சாரதி, தீபிகா என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு மூலம் கன்னியாகுமரி மாவட்ட மக்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு மூலம் சாதாரண மக்களின் வாழ்வியலையும், அவர்களது உணர்வுகளையும் மிகவும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் முலம் கதைக்களத்தை பலம் சேர்த்திருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்ப அளவாக பயணித்திருக்கிறது.

சாதாரண ஏழை எளிய மக்களையும், அவர்களது வாழ்க்கை மற்றும் வலிகளை திரைப்படத்தில் கொண்டு வருவதோடு, அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து நிற்கும் கதாநாயகனையும் எளிய மக்களின் ஒருவனாக சித்தரித்து அவர்களை முன்னிலைப்படுத்துவதை மிக அருமையாக இயக்கி உள்ளார் இயக்குநர் பாலா,

”களம் சேஞ்சர்” திரைவிமர்சனம்

ஆந்திர மாநிலத்தில் முதல்வராக இருக்கும் ஸ்ரீகாந்துக்கு இரண்டு மகன்கள். பெரிய மகன் ஜெயராம் சின்ன மகன் எஸ் ஜே சூர்யா தனது தந்தைக்குப் பிறகு ஆந்திர மாநிலத்தில் முதல்வர் பதவி யாருக்கு? என்பதில் இருவருக்கும் இடையே மிகப்பெரிய போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், ஆந்திரா மாநிலத்திற்கு புதிதாக பதவி ஏற்கும் மாவட்ட கலெக்டர் ராம்சரண், தனது அதிரடி நடவடிக்கைகள் மூலம் மோசடியில் ஈடுபடுபவர்களை விழி பிதுங்க வைக்கிறார்.அவருடைய நடவடிக்கைகளால் முதல்வரின் இளைய மகன் அமைச்சர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும், அவருக்கும் இடையே மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்படுகிறது.

இதற்கிடையே, உடல்நலக் குறைவால் ஆந்திரா மாநிலத்தில் முதல்வர் ஸ்ரீகாந்த உயிரிழக்க, அடுத்த முதல்வர் அவருடைய இளைய மகன் எஸ்.ஜே.சூர்யா பதவி ஏற்க தயாராவதோடு, முதல்வர் பதவி ஏற்று முதல் வேலையாக தன்னை அவமானப்படுத்திய கலெக்டர் கதாநாயகன் ராம்சரணை பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்.

இந்த நிலையில், முதல்வர் ஸ்ரீகாந்த் இறப்பதற்கு முன்பு தன்னுடைய அரசியல் வாரிசாக ராம்சரணை அறிவிப்பதோடு, அவர் தான் தனக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் என்ற தனது கடைசி ஆசையோடு, அவர் தான் ஆந்திர மாநிலத்திற்கு அடுத்த முதல்வர், என்றும் அறிவித்த வீடியோ ஒன்று வெளியாகிறது.

இதனால், எஸ்.ஜே.சூர்யா முதல்வர் ஆவதில் சிக்கல் ஏற்பட, அதே சமயம் கதாநாயகன் ராம்சரணையும் முதல்வராக விடாமல் பலவிதமான முயற்சிகளில் எஸ்.ஜே.சூர்யா ஈடுபடுகிறார்.

இறுதியில், கதாநாயகன் ராம்சரண் ஆந்திரா மாநிலத்திற்கு முதல்வர் ஆனாரா? ஆகவில்லையா? என்பதுதான் ‘கேம் சேஞ்சர்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நாயகனாக ராம்சரண் நடித்திருக்கிறார்

தந்தை கதாபாத்திரத்தில் மக்கள் பிரச்சனைக்காக போராடுபவர்களாகவும், மகன் கதாபாத்திரத்தில் அரசு அதிகாரிகளின் பலம் என்ன? என்பதை வெளிக்காட்டும்
இரண்டு கதாபாத்திரங்களில் அமர்க்களமாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, வழக்கமான இயக்குனர் ஷங்கர் இயக்கம் திரைப்படங்களில் வரும் கதாநாயகிகளுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் கூட இல்லாமல் சில காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலுல் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.

அப்பா ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருக்கும் அஞ்சலியின் கதாபாத்திரத்தில் வெளிப்படுத்திய நடிப்பு திரைக்கதைக்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்திருக்கிறது.

வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான பாணியில் நடித்திருந்தாலும், அவரது நடிப்பு காட்சிகளை மிக அருமையாக பயணித்திருக்கிறார்.

முதல்வரின் மூத்த மகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெயராம், சிரிக்க வைக்கிறார்.

பிரமானந்தம் ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி, சுனில், நவீன் சந்திரா அச்யுத் குமார், வெண்ணிலா கிஷோர், என மற்ற அனைத்து கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் அனைவரும் திரைக்கதை ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு மூலம் காட்சிகளை கலர் புல்லாகவும்ம், பிரமாண்டமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இசையமைப்பாளர் தமன்.எஸ் இசையில் பாடல்கள் புதிதாக இல்லை என்றாலும் பின்னணிசையிலும் புதிதாக ஒன்றும் இல்லை என்பது தான் உண்மை.

சமூக பிரச்சனைகளை கமர்ஷியலாக சொல்வதோடு, கலகலப்பாகவும் தனது வழக்கமான பாணியில் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.

“மெட்ராஸ்காரன்” திரைவிமர்சனம்

சென்னையைச் சேர்ந்த கதாநாயகன் ஷேன் நிகம், தமது திருமணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில் நடத்த வேண்டும் என விரும்புகிறார். திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெரிய அளவில் நடந்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், எதிர்பாராமல் நடக்கும் விபத்து மூலம் ஷேன் நிகமின் வாழ்க்கை தடம் புரள்கிறது அதனால் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார். என்பதுதான் இந்த ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் மீதிக்கதை.

மெட்ராஸ்காரன் திரைப்படத்தில் நாயகனாக ஷேன் நிகம் அறிமுகமாகியிருக்கும் முதல் திரைப்படத்திலேயே ஆக்‌ஷன் காட்சிகளில் அசால்டாக நடித்திருக்கிறார்.

தாயிடம் பாசம் காட்டி பேசுவதும், அத்தைகளிடம் ஐஸ் வைத்து பேசுவதும், தனது காதலியிடம் கெஞ்சி கொஞ்சுவது என்று துறுதுறு என்று நடிப்பின் மூலம், அமர்க்களப்படுத்தியிருக்கிறார்.

நிஹாரிகாவின் ஒரு வார்த்தை தான் அனைத்து பிரச்சனைக்கும் காரணம் என்றாலும் திரைப்படத்தில் காட்சிகள் மிக குறைவே உள்ளது.

கலையரசன், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் மிக அருமையாக நடித்திருக்கிறார்.

ஐஸ்வர்யா தத்தா, சில காட்சிகளில் வந்தாலும் திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

கதாநாயகனின் தாய் மாமன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ், தந்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாண்டியராஜன், தாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கீதா கைலாசம், அத்தை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தீபா, நண்பர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லல்லு என திரைப்படத்தில் நடித்திருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது பங்களிப்பை மிகப்பெரிய அளவில் வழங்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ்.குமாரின் ஒளிப்பதிவு மூலம் காட்சிகளின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், ஆக்‌ஷன் காட்சிகளை மிக மிரட்டலாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ் இசையில் பாடல்கள் பின்னணி இசை கொஞ்சம் சத்தமாக இருந்தாலும், வேகமான திரைக்கதைக்கும், ஆக்‌ஷன் காட்சிகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது.

சிறு விசயத்தை வைத்துக் கொண்டு திரில்லர் ஆக்‌ஷன் ஜானரை ராவான காட்சிகள் மூலம் எழுதி இயக்கியிருக்கும் வாலி மோகன் தாஸ், மிரட்டலாக கொடுத்திருக்கிறார்

“தி ஸ்மைல் மேன்” திரை விமர்சனம்

பலபடங்களில்பார்த்த
சைக்கோ கொலைக்காரன் கதைதான். தொடர் கொலைகளை செய்து உடலை சிட்டியில் அங்கங்கே போடுகிறான் சைக்கோ கொலைக்காரன். கொன்றுவிட்டு வாயை கிழித்து சிரிப்பது போல மாற்றி உடல்கள் போடப்படுகிறது. யார் இந்த கொலைகளை செய்கிறார்? என கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணற இது போன்ற கொலைகள் தொடர்பாக ஏற்கனவே விசாரணை செய்த ஒரு போலீஸ் அதிகாரியை தேடிப்பிடியுங்கள் என உயர் அதிகாரிகள் சொல்ல சரத்குமாரை காட்டுகிறார்கள். அவர் ஒரு புத்தகம் எழுதுகிறார். அதன்பின்னரே கொலைகள் நடப்பதாக காட்டப்படுகிறது.- எனவே, சரத்குமாருக்கும் அந்த கொலைகாரனுக்கும் பல வருடங்களுக்கு முன்பே தொடர்பு
அது என்ன தொடர்பு? கொலை காரனுக்கும் சரத்குமாருக்கும் நடக்கும் யுத்தம் என்ன?

அதேபோல், விபத்தில் சிக்கி ஒரு வருடத்தில் மொத்த ஞாபகங்களையும் மறந்துவிடும் நிலையில் இருக்கும் சரத்குமார் எப்படி அந்த சைக்கோ கொலைகாரனை பிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. ஒருபக்கம், சிஜா ரோஸும் சைக்கோ கொலை காரன் பற்றி விசாரணை நடத்துகிறார்.

ஸ்ரீ குமாரும் சரத்குமாரை பின்தொடர்ந்து கண்டுபிடிக்கிறார்

யார் அந்த கொலைகாரன் என்று தெரிய வரும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது படம் பார்ப்பவர்களுக்கு தெளிவான கதை, சீரான இயக்கம், வித்தியாசமான சிந்தனை ,படத்தின் வெற்றிக்கு அழைத்து செல்கிறது

கம்பீரமான போலீஸ் அதிகாரியாக ஃபிளாஷ் பேக்கில் இவரை காட்டும் பொழுது ரசிக்க வைக்கிறது அதே சமயம் மறதி நோயால் அவதிப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கும் பொழுது பரிதாபம் ஏற்படுகிறது இரண்டு மாறுபட்ட வேடங்களில் சிதம்பரம் நெடுமாறனாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.

கீர்த்தனாவாக,சிஜா ரோஸ்,நர்ஸ் சித்ராவாக இனியா ,அரவிந்தாக
ஸ்ரீகுமார்,

வெங்கடேசன்ஆகசுரேஷ்மேனன்,மற்றும்நடராஜன்,
ராஜ்குமார்,மலைராஜன், ஆகியோரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

பேபி ஆலியா, கலையரசன், ஆகியோரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்

அத்தனை தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக தங்கள் பங்குக்குஒரு வெற்றி படத்தை கொடுத்திருக்கிறார்கள் .

தி ஸ்மைல் மேன் என்ற புத்தகத்தில் சரத்குமார் எழுதியதற்கு பிறகு சைக்கோ கொலைகாரன் ஏன் கொலை செய்கிறான் அவன் யார்?

சரத்குமாரை குறி வைத்து அவன் நடத்தும் அந்த யுத்தம் எதற்காக ?

சரத்குமார் இறுதியில் அந்த கொலைகாரனை கண்டுபிடித்தாரா? என்ற பாணியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்கப்படும்

ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை, ஆர்ட் டைரக்டரின் கைவண்ணம், காஸ்ட்யூமரின் பங்கு,
நேர்த்தியான திரைக்கதை,
தெளிவான இயக்கம்
என எல்லாம் அம்சமாக பொருந்தி இருக்கும் இப்படம் வெற்றி பட்டியலில் சேரும்