அல்லு அரவிந்த் வழங்கும் நாக சைதன்யா அக்கினேனி – சந்து மொண்டேட்டி – பன்னி வாசு – கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து உருவாக்கும் ‘தண்டேல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.
‘யுவ சாம்ராட்’ நாக சைதன்யா மற்றும் இயக்குநர் சந்து மொண்டேட்டி இணைந்து பணியாற்றும் #NC23 எனும் திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் அல்லு அரவிந்த் வழங்க, தயாரிப்பாளர் பன்னி வாசு தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் டிசம்பரில் தொடங்குகிறது. திறமை வாய்ந்த நட்சத்திர நடிகரான நாக சைதன்யா நடிப்பில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் இந்த திரைப்படமும் ஒன்றாகும். அதே தருணத்தில் இயக்குநர் சந்து மொண்டேட்டி, ‘கார்த்திகேயா 2’ படத்தின் மூலம் பான் இந்திய பிளாக் பஸ்டரை வழங்கியவர். மேலும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் பல வெற்றிகளை வழங்கிய முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இதுவரை கண்டிராத தோற்றத்தில் நடிக்கும் நாக சைதன்யாவிற்கு இந்தத் திரைப்படம், இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகும் திரைப்படமாக இருக்கும்.
நடிகர் நாக சைதன்யா தனது பிறந்த நாளை நாளை கொண்டாடுகிறார். இருப்பினும் அவரது பிறந்த நாளுக்காக ஒரு நாள் முன் தயாரிப்பாளர்கள் அவருடைய ரசிகர்களுக்கு பெரிய பரிசினை வழங்கி இருக்கிறார்கள். அவர் தற்போது நடித்து வரும் படத்திற்கு ‘தண்டேல்’ எனும் ஆற்றல் மிக்க தலைப்பினை அறிவித்து, அதனுடன் ஃபர்ஸ்ட் லுக்கையும் வெளியிட்டிருக்கிறார்கள். தண்டேல் என்றால் ஆற்றல் மிக்கவர்… கவர்ச்சியானவர்… லட்சியத்தையும், கவனத்தையும் கொண்டவர்… ஒருவருக்கு ஏதாவது ஒரு உண்மையான ஆசை இருந்தால் அதற்காக அனைத்தையும் கொடுக்க முடியும் எனப் பொருள் கொள்ளலாம்.
நாக சைதன்யா இந்த திரைப்படத்தில் மீனவராக நடிக்கிறார். இந்த தோற்றத்திற்காக கடந்த சில மாதங்களாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டார். ஃபர்ஸ்ட் லுக்கில் அவர் நீண்ட முடி மற்றும் தாடி உடன் முரட்டுத்தனமான தோற்றத்தையும் கொண்டிருக்கிறார். கையில் துடுப்புடன் ஒரு படகில் அமர்ந்திருக்கும் நாக சைதன்யா- வேட்டி அணிந்து, தனது செதுக்கப்பட்ட உடலமைப்பை கதாபாத்திர தோற்றத்திற்காக தீவிரமாக பார்ப்பது போல் தோன்றுகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் – படத்தின் தலைப்பை போல் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இப்படத்தின் கதை உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. மேலும் படப்பிடிப்பு பெரும்பாலும் அசலான இடங்களில் நடைபெறுகிறது. இந்த திரைப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார். சூப்பர் ஹிட்டான ‘லவ் ஸ்டோரி’க்குப் பிறகு இருவரும் இணைந்துள்ள இரண்டாவது படம் இது. ‘தண்டேல்’ என்பது முற்றிலும் மாறுபட்ட பின்னணியைக் கொண்ட காதல் கதை.
இப்படத்தின் கதையில் இசைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதால் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த காதல் கதைக்காக பிரத்யேகமாக இசையமைக்கிறார். ஷாம் தத் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ஸ்ரீ நாகேந்திர தாங்கலா கலை இயக்கத்தை கவனிக்கிறார்.
படப்பிடிப்பிற்கு முன்னதான பணிகளில் படக் குழு போதுமான நேரத்தை செலவிட்டுள்ளதால்..இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது.
ஷாருக்கானின் அக்மார்க் ரொமான்ஸை கண்டுகளியுங்கள். அரிஜித்தின் ஆத்மார்த்தமான குரலில், ப்ரீதமின் அற்புதமான இசையில், மனு மற்றும் ஹார்டியின் அழகான காதல் பயணத்தை நுணுக்கமாக விவரிக்கிறது இந்தப்பாடல்.
இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் அற்புதமான இயக்கத்தில், அட்டகாச படைப்பாக உருவாகியுள்ள “டங்கி” படத்தின் இசைப்பயணத்த்தை, படைப்பாளிகள் படத்தின் முதல் பாடலான “லுட் புட் கயா” டிராப் 2 – வை வெளியிடுவதன் மூலம் தொடங்கியுள்ளனர். ஹார்டிக்காக உலகை எதிர்த்து நிற்கும் மனு மீது ஹார்டி காதலில் விழும் தருணத்தில் இந்தப்பாடல் துவங்குகிறது. மனு மீதான அவனது உணர்வுகள் ஒரு கவிதையாக பாடல் முழுதும் நிரம்பியிருக்கிறது.
மேஸ்ட்ரோ ப்ரீதம் உடைய மெல்லிசை விருந்தில், அரிஜித் சிங்கின் ஆத்மார்த்தமான குரலில், ஸ்வானந்த் கிர்கிரே மற்றும் ஐபி சிங் பாடல் வரிகளில் இந்த மெலோடி மனதைக் கவர்கிறது. புகழ்மிகு நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், அற்புத நடன அசைவுகளுடன், காதல் மேஜிக்குடன் ஒரு துள்ளலான உணர்வைத் தருகிறது இந்தப்பாடல்.
ஒரு தலைசிறந்த கதைசொல்லியாகப் போற்றப்படும் ராஜ்குமார் ஹிரானி, பல காவியப்படைப்புக்களை வழங்கியுள்ளார். இந்த முறை மனம் நிறைந்து, புன்னகை பூக்கும் மற்றுமொரு அழகான ரத்தினமான படைப்பாக டங்கி மூலம் பார்வையாளர்களுக்கு விருந்தளிக்கத் தயாராக உள்ளார்.
இதயம் வருடும் ஒரு அழகான நான்கு நண்பர்களின் நட்பின் கதை. வெளிநாட்டுக்கு செல்லும் தங்கள் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொள்ளும் அட்வென்சரான பயணத்தை, ரசிகர்கள் பிரமிக்கும் வகையில், காதல், அன்பு, நட்பு கலந்து சொல்லும் திரைப்படம் தான் டங்கி. இப்படம் உங்கள் இதயத்தை மயிலிறகால் வருடும் ஒரு அழகான படைப்பாக இருக்கும்.
ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழுவைக் கொண்ட ‘டங்கி’ திரைப்படத்தில் நகைச்சுவை, இதயம் வருடும் அழகான அனுபவம் என மீண்டும் திரையில் ஒரு காவியத்தை காட்டவுள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ள, “டங்கி” திரைப்படம், இந்த டிசம்பர் 21 – 2023 இல் வெளியிடப்பட உள்ளது.
நடிகர் அதிதி சேஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘G2’. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் நாயகி யார்? என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. ‘குடாச்சாரி 2’ எனும் இந்த படத்தில் நாயகன் அதிவி ஷேஷுக்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து நடிக்கிறார் என்ற செய்தியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
‘மேஜர்’, ‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ மற்றும் ‘கார்த்திகேயா 2’ போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் உருவாகும் ஆக்ஷன் கலந்த ஸ்பை திரில்லர் திரைப்படம் தான் ‘ஜி2’. இது போன்ற திறமையான நடிகர்களுடனும் இணைவதால் படம் பிரம்மாண்டமாகவும், தரமுடனும் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. ‘அக்டோபர்’, ‘சர்தார் உத்தம்’ போன்ற படங்களில் நடித்து, பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வருகிறார் நடிகை பனிதா சந்து. இது மட்டுமின்றி அவர் தற்போது இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை இந்த திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காண்பதற்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் தயாராக இருக்கிறார்கள்.
இது தொடர்பாக நடிகை பனிதா சந்து பேசுகையில், ” இது என்னுடைய முதல் பான் இந்திய திரைப்படமாகும். இதுபோன்ற நம்ப முடியாத தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பார்வையாளர்கள் என்னை முற்றிலும் புதிய அவதாரத்தில் திரையில் பார்க்கவிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆக்கபூர்வமான மகிழ்ச்சியுடன் கூடிய அனுபவமாக இருக்கும். ” என்றார்.
இது தொடர்பாக நடிகர் அதிவி சேஷ் பேசுகையில், ” G2 உலகிற்கு பனிதாவை அன்புடன் வரவேற்கிறேன். மேலும் அவருடன் இணைந்து பணியாற்றுவதை விரும்புகிறேன் ” என்றார்.
இந்தத் திரைப்படத்தை மக்கள் மீடியா ஃபேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏ கே என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வினய் குமார் சிரிகிடினி இயக்குகிறார்.
தமிழில நீண்ட இடைவெளிக்குப் பின் ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து ‘லாக்கர் ‘என்றொரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.இவர்கள் இருவருமே சினிமாவின் மீது தீராதகாதல் கொண்டவர்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது.
இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5க்கான இணைய தொடரிலும் நடித்துள்ளார்.
கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளவர்.
வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார்.இவர் தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்தவர்.பிரின்ஸ், மிரள், குட் நைட் போன்ற படங்களில் நடித்த சுப்ரமணியன் மாதவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
இப்படத்திற்கு தணிகைதாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.இவர் தரமணி எம்.ஜி.ஆர் திரைப்படக் கல்லூரி மாணவர்.களப்பணி அனுபவத்திற்காக ஓம் பிரகாஷ் மற்றும் பல்லு போன்ற ஒளிப்பதிவாளர்களிடம் பணியாற்றியவர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற சேனல்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்துள்ளவர்.நிறைய விளம்பரப் படங்கள், கார்ப்பரேட் வீடியோக்கள் எடுத்துள்ளவர்.இவர் டெல்டா என்கிற இன்னொரு படத்திலும் ஒளிப்பதிவுப் பணி செய்து வருகிறார்.
அறிமுக இசையமைப்பாளர் வைகுந்த் ஸ்ரீநிவாசன் இசையமைத்துள்ளார்.இவர் ஏற்கெனவே நடிகர் தளபதி விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணன் வேற மாதிரி என்ற பாடல் இசை அமைத்தவர். ஏராளமான இசை ஆல்பங்களுக்கும், மை டியர் எக்ஸ் இணையத் தொடருக்கும் இசையமைத்துள்ளவர்.
படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கார்த்திக் நேத்தா,விஷ்ணு இடவன் என இரு பாடலாசிரியர்கள் எழுதி உள்ளனர்.
படத்தொகுப்பு ஸ்ரீகாந்த் கண பார்த்தி.இவர் பென்குயின், குருதி ஆட்டம் போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றியவர்.இப்படிப் பல்வேறு திறமைக் கரங்கள் இணைந்துள்ளன.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு மற்றும் அறிமுக விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில்,இரட்டை இயக்குநர்களில் ஒருவரான யுவராஜ் கண்ணன் பேசும்போது,
“இதில் பணியாற்றிய பலருக்கும் இது முதல் படம் என்பதால் தங்களது சொந்தப் படம் போலவே உணர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள். தயாரிப்பாளர் ”தம்பிகளா நல்லா பண்ணுங்க” என்று ஊக்கப்படுத்துவார். எங்கள் மீது நம்பிக்கை வைத்தார். அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை என்று நினைக்கிறேன்.படம் நன்றாக வந்துள்ளது” என்றார்.
இன்னொரு இயக்குநர் ராஜசேகர் என் பேசும்போது,
” நானும் யுவராஜும் 2013ல் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்ததிலிருந்து அறிமுகமாகி நண்பர்களாக இருக்கிறோம். நான் எந்தக் கதை சொன்னாலும் பொறுத்துக் கொள்பவர் யுவராஜ்.நாங்கள் சில ஆண்டுகளாகக் குறும்படங்கள் ,முயற்சிகள் என்று செய்து திரை உலகில் நுழையப் போராடிக் கொண்டிருந்தோம் .இந்த தயாரிப்பாளரைச் சந்தித்தபோது அவர் கேட்டபடி கதையை 20 நாளில் தயார் செய்து கொடுத்தோம் .அப்படித்தான் இந்தக் கதை உருவானது..அவர் எங்கள் மீது நம்பிக்கை வைத்தார் .அதை நாங்கள் வீணாக்கவில்லை. அவர் செலவு செய்த ஒவ்வொரு ரூபாய்க்கும் மதிப்பு இருக்க வேண்டும் என்று நாங்கள் உழைத்தோம். அது நல்ல படமாக வந்துள்ளது.இதில் பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
நாயகன் விக்னேஷ் சண்முகம் பேசும்போது ,
” எனக்கு முதலில் யுவராஜ் அறிமுகமானார்.இயக்குநர் ராஜசேகர் எனது குறும்படங்கள் போஸ்டர் வந்துவிட்டால் கூட அதைப் பார்த்துப் பாராட்டி வாழ்த்துபவர். அது எனக்கு அவரது நல்ல பண்பைக் காட்டியது. ஒருநாள் கதை சொல்லப் போவதாக கூறினார் .ஏதோ ஒரு கதையை நன்றாக இருக்கிறதா என்று கேட்பதற்காக சொல்வதாக நினைத்தேன். ஆனால் என்னை வைத்து இயக்குவதாகச் சொன்ன போது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அப்படித்தான் இந்தப் படத்தில் வந்து நடித்திருக்கிறேன். இதற்கு முன் நான் நடித்த இறுதிப்பக்கம் ,கள்ளச்சிரிப்பு போன்ற படைப்புகள் கொடுத்த இயக்குநர்கள் வழியாகத்தான் இந்த மேடையை நான் அடைந்திருக்கிறேன். அப்படி வாய்ப்பு கொடுத்த அவர்களுக்கு என் நன்றி”என்றார்.
கதாநாயகி நிரஞ்னி அசோகன் பேசும்போது,
“எனது குறும்படத்தைப் பார்த்து விட்டுத் தான் இந்த லாக்கர் பட வாய்ப்பு வந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட போது முதலில் நான் நம்பவில்லை. ஏனென்றால் நிறைய போலிகள் உலா வருகிற காலம் இது. உண்மையாக இருக்குமா என்று நான் சந்தேகப்பட்டேன். அவர்களின் அலுவலகம் சென்றபோது எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்தன .ஒன்று அவர்கள் கதை விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. அவ்வளவு அருமையாக இருந்தது. அடுத்தது முதல் படத்திற்காக அவர்களது முன் தயாரிப்பு ஆச்சரியப்பட வைத்தது. எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருந்தார்கள். அதேபோல் தான் படப்பிடிப்பும் நடந்தது .படம் திறந்தவெளியில் படமாக்கப்படுகிற போது கூட பருவ கால நிலை மாற்றத்தால் திடீரென்று மழை வரும். ஆனால் அதைக் கண்டு மிரண்டு விடாமல் அதற்கு ஒரு மாற்றுத் திட்டம் வைத்திருந்தார்கள். இப்படி மிகவும் சரியாகத் திட்டமிட்டு வைத்திருந்தது எனக்கு ஆச்சரியமூட்டியது.
எல்லோருக்கும் முதல் படம் என்கிற போது ஒரு அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தம் தெரியாத அளவிற்கு அவர்கள் துல்லியமாகத் திட்டத்துடன் இருந்தார்கள் .ஒளிப்பதிவாளர் தாஸ் எனக்கு தனிப்பட்ட முறையில் நான் திரையில் நன்றாகத் தெரிய வேண்டும் என்று கவனத்துடன் அறிவுரைகள் சொல்வார்..
ஸ்டண்ட் மாஸ்டர் சுரேஷ் இதில் ஒரு பாம் ப்ளாஸ்ட் காட்சி எடுக்கும் போது ரியலாக எடுத்தார். ஆனால் அதை எடுக்கும்போது பாதுகாப்பு விதிகளைச் சரியாகக் கடைபிடித்தார். யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்பதற்காக மிகவும் அக்கறையாக செயல்பட்டார் .பாம் சப்தம் வந்து காது பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக காதுகளில் பஞ்சு வைத்துக்கொள்ளச் சொன்னார்.நாயகன் விக்னேஷ் சண்முகம் உடன் நடிக்கும் சக நடிகராக எனக்கு செளகரியமாக இருந்தார்.படக்குழுவினர் யாரும் ஈகோ பார்க்கவில்லை.
இந்தப் படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் நான் ஒருத்தி மட்டும் தான் பெண். இருந்தாலும் அந்த பாலினபேதம் ஏதும் உணரத் தோன்றாமல் சௌகரியமாக பாதுகாப்பாக உணர்ந்தேன். இப்படி ஒரு நல்லதொரு அனுபவம் இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது. அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருமே நல்ல பங்களிப்பைக் கொடுத்துள்ளார்கள். இந்த படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர்களுக்கும் இதை சரியான முறையில் விநியோகம் செய்யும் ஜெனிஷ் அவர்களுக்கும் நன்றி” என்றார்.
விழாவில் படத்தின் ட்ரெய்லரை படக் குழுவினர் வெளியிட, உதவி இயக்குநர்கள் பெற்றுக் கொண்டார்கள்.படம் முழுக்க உழைக்கும் உதவி இயக்குநர்கள் மீது பாராமுகம் காட்டும் திரையுலகில் இது ஒரு புதிய முன்னுதாரணமாக இருந்தது.
Chennai 23, November 2023: Offering the best service possible is the only way to do justice to the world of science and technology. It is with noble principle in mind that ‘Asto Labs’ offers its service to the people, on an “Aggregator basis” (like Ola, Uber, etc.) In other words, persons requiring medical diagnostic services can contact us easily on our app. Our well-trained ‘Asto Labs’ representatives shall promptly make a free house-visit to collect the test samples from you, thus saving you from unnecessary trips to the labs, and waiting. The samples are then taken to an N.A.B.L lab, one of the nationwide authorised labs for medical tests. The test results are usually ready the same day, and are delivered to the user on the app. People don’t have to depend on just one lab for their test results. This service is fast and saves money. It is worth mentioning that in the wide world of service market, the expense incurred by the user is reduced by up to 30 percent by Asto Labs service procedure. It is on this basis that we have designed the process. This is not just a package-based service; it can also be designed based on the doctor’s prescription. This saves you from the hassle of undergoing futile tests and medical procedures. You can ask for custom-made diagnostic service to suit your requirements. The ‘Asto Labs’ representatives are ready from 6.00 in the morning to collect your samples. This is the first time in the disease diagnostics field that the aggregator method is being used with Tamil Nadu as the base. Currently being launched in Chennai, the service shall soon be available in all the main cities, and future plans include making it available all over the state and the neighbouring ones too. You can avail up to 80% discounts on our various diagnostic packages. With more than 12 years’ experience in the world of medical diagnostics, we are launching this service on the 23 rd , with our revolutionary objective to provide accurate results, while saving money and time for the user. This service is being brought to you by our founder, our very own Mr. Venkat Krishnan. The modest launch, to be held at Chepauk’s Press Club, shall have Dr. K. Balakrishnan (Founder- Director of KM Hospital and Bloom, and KM Specialty Hospital Chain of Hospitals). He has been the caring family doctor of most of the families in Chennai for more than 46 years now! With the blessings and support of the people, we are all set to expand our horizon in this specialised service sector.
3rd Eye Cine Creations சார்பில் கார்த்திகேயன் தயாரிப்பில், சதீஷ் கீதா குமார் இயக்கத்தில், புதுமையான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “சூரகன்”. டிசம்பர் 1 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்து கொள்ளப் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
தயாரிப்பாளர் நடிகர் கார்த்திகேயன் பேசியதாவது… சூரகன் டிரெய்லரை இந்தியாவின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகை மீடியா நண்பர்கள் முன் அறிமுகப்படுத்துவது எங்களுக்குப் பெருமை. இந்த படத்தில் வேலை பார்த்த அனைவரும் மிக அர்ப்பணிப்புடன் வேலை பார்த்தனர். அசோகன் சார் சொன்னது போல் மனதளவிலும் நாங்கள் அனைவருமே விஜயகாந்த் சார் போல் தான் கடினமாக உழைத்தோம். இந்த படத்தில் எல்லோருமே அவர்கள் படம் போல் நினைத்து வேலை பார்த்தார்கள். டேஞ்சர் மணி சார் எல்லாம், என்னைப் புதுமுகமாக நினைக்காமல், எனக்காக நிறைய மெனக்கெட்டு உழைத்தார். பணம் மட்டும் எல்லாவற்றையும் செய்துவிடாது, அன்பும் உழைப்பும் நம்பிக்கையும் தான் ஒரு விஷயத்தை உருவாக்கும். அது எங்கள் டீமிடம் இருந்தது. அச்சு ராஜாமணி அருமையான இசையை தந்துள்ளார். தியேட்டரில் கண்டிப்பாக இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடுவார்கள். டிசம்பர் 1 திரையரங்குகளில் இப்படம் வருகிறது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி. இங்கு வந்து எங்களை வாழ்த்திய எங்கள் டீமுக்கு ஆதரவாக இருந்த தனஞ்செயன் சாருக்கு நன்றி
கலை இயக்குநர் தினேஷ் மோகன் பேசியதாவது… இது என்னுடைய நான்காவது திரைப்படம். இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. அவரும் நானும் நீண்ட நாள் நண்பர்கள், அவரிடம் இந்தக் கதையைக் கேட்ட போதே மிகவும் பிடித்திருந்தது. இதற்காக மற்ற பட வாய்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு மிகக் கவனமெடுத்து, மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து, இந்தப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.
ஸ்டண்ட் மாஸ்டர் டேஞ்சர் மணி பேசியதாவது.. வாய்ப்பு தந்த இயக்குநர் சதீஷ் சாருக்கு நன்றி. இந்த படத்தில் முழு உழைப்பைத் தந்து, டூப் இல்லாமல் நடித்த கார்த்திகேயன் தோழருக்கு நன்றி. அவரது உழைப்பு கண்டிப்பாக பேசப்படும். தயாரிப்பு தரப்பில் இப்படத்தில் கேட்ட அனைத்தையும் தந்தார்கள். விஷுவல்கள் நன்றாக வந்துள்ளது. படத்தில் அனைவரும் மிகக் கஷ்டப்பட்டு வேலை பார்த்தனர். அனைவருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை சுபிக்ஷா LA பேசியதாவது… இயக்குநர் என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. ஹீரோ கார்த்திகேயன் மிகப்பெரிய ஆதரவு தந்தார். மிகக்கடினமான உழைத்துள்ளார். இது அற்புதமான டீம். இவர்கள் உழைப்பு கண்டிப்பாக பேசப்படும். தியேட்டரில் போய்ப் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகை தியா பேசியதாவது.. இந்த படத்தில் சின்ன ரோலாக இருந்தாலும் மிக முக்கியமான ரோல் தந்துள்ளனர். என்னுடைய ரோல் தான் கதையின் திருப்புமுனையாக இருக்கும். வாய்ப்பு தந்த இயக்குனருக்கு நன்றி. ஷுட்டிங்கில் அனைவரும் எனக்கு ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தினர். எல்லோருக்கும் நன்றி. படத்திற்கு ஆதரவு தாருங்கள்.
நடிகர் வின்சென்ட் அசோகன் பேசியதாவது.. சூரகன் படத்தில் ஒரு வில்லன் ரோல், இயக்குநர் கதை சொல்லும்போதே, தெளிவாக இருந்தார். இப்போது வரும் இயக்குநர்கள் வில்லனுக்கும் அழுத்தமான கதாபாத்திரம் தருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் சதீஷ் எனக்கு இந்த பாத்திரத்தை தந்ததற்கு நன்றி. அவர் க்ளீன் ஷேவ் தான் வேண்டும், நீங்கள் இப்படித் தான் இருக்கனும், என ஒவ்வொன்றிலும் தெளிவாக எல்லாம் சொல்லி நடிப்பை வாங்கினார். அது எனக்குப் பிடித்திருந்தது. ஹீரோ ஃபைட் செய்ததை பார்த்த போது, எனக்கு விஜயகாந்த் சார் ஞாபகம் வந்தது. ஹீரோ நிறைய கஷ்டப்பட்டிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் பேசப்படும். அனைவருக்கும் நன்றி.
இயக்குநர் சதீஷ் கீதா குமார் பேசியதாவது.. இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. இப்படத்தில் அனைவரும் மிக கடுமையாக வேலை பார்த்திருக்கிறார்கள். இது ஒரு ஆக்சன் படம் மணிக்கு சிறப்பு தேங்ஸ். வழக்கமாக ஆக்சன் காட்சிகளை நானே வடிவமைப்பேன் ஆனால் அதையெல்லாம் திரையில் கொண்டு வர மணி மிக கடினமாக உழைத்துள்ளார். சஸ்பெண்டில் இருக்கும் காவல்துறை அதிகாரி, ரோட்டில் அடிபட்டு கிடக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற முயல்கிறார், அதில் அவருக்கு வரும் பிரச்சனைகள் என்ன என்பது தான் படம். இந்த படத்தில் யாருக்கும் ஓய்வே தராமல் வேலை வாங்கியிருக்கிறேன் அதற்காக இப்போது நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். கார்த்திகேயனும் நானும் நண்பர்கள். ரொம்ப காலமாக பேசித்தான் இந்தப்படத்தை உருவாக்கினோம். ஒரு ஆக்சன் படம் என்றாலும் கார்த்திகேயன் தற்காப்பு கலைகள் கற்றுக் கொண்டவர் என்பதால் ஈஸியாக இருந்தது. டேஞ்சர் மணியும் ஆக்சன் நன்றாகப் புரிந்து கொண்டதால், இந்த படம் எளிதாக நடந்தது. அச்சு ராஜாமணி கதை சொன்ன போதே உற்சாகமாக ஒப்புக்கொண்டு 4 பாடல்களை தந்துள்ளார். சுபிக்ஷா நல்ல ரோல் செய்துள்ளார். வின்சென்ட் அசோகன் வித்தியாசமான வில்லன் ரோல் செய்துள்ளார். படம் கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும் அனைவருக்கும் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது.., கார்த்திகேயன் ரொம்ப ஆக்டிவாக இருப்பார், எதையுமே சுறுசுறுப்பாகச் செய்வார். படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். ஒரு நல்ல கண்டன்ட் கொடுத்தால் கண்டிப்பாக இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் கொண்டாடுவார்கள். நல்ல படம் கொடுப்பது மட்டுமே நம் கடமை. அதை மட்டும் நாம் செய்தால் போதும். இந்தப் படம் டிரெய்லர் பார்க்கவே நன்றாக இருக்கிறது படமும் நன்றாக இருக்கும் என நம்புகிறேன். கார்த்திகேயன் முதன்முதலில் ஆக்சனில் இறங்கியிருக்கிறார் அவருக்கு வாழ்த்துக்கள்.
Through Baroda Kisan Pakhwada, the Bank engages with farmers and creates awareness of various agri initiatives taken by the Bank as well as agri products & schemes offered
The Bank organised a Farmers’ Programme in Madurai as a part of the Baroda Kisan Pakhwada programme; Activates 5 mobile vans to dispense information on various agri products/schemes
Madurai/Chennai, November 22, 2023: Bank of Baroda (Bank), one of India’s leading public sector banks, announced the launch of the 6th edition of Baroda Kisan Pakhwada in Tamil Nadu, the Bank’s annual, fortnight long engagement programme focused on the Indian agrarian economy. The farmer engagement programme takes place from November 16, 2023, and concludes on November 30, 2023, with the Baroda Kisan Diwas celebrations.
The Bank’s Chennai Zone organised a Farmers’ Programme at Nallampatti Village, Dindigul, Madurai as a part of the Baroda Kisan Pakhwada. The event was inaugurated by Shri Saravanakumar A, Zonal Head – Chennai Zone, Bank of Baroda and Shri Jaikishan M, Regional Manager – Madurai Region, Bank of Baroda.
The event was attended by a number of dignitaries like the President of the Nallampatti Milk Society, President of the Sirumalai Farmers Society & the President of the Panchayat of Nallampatti village. During the event, Self Help Groups (SHG) were felicitated, followed by the handing over of in-principle sanction letters to various beneficiaries. The event concluded with the waving of the flag to commence the Baroda Kisan Raths which will cover various clusters of villages in Tamil Nadu.
Speaking on the occasion, Shri Saravanakumar A, Zonal Head – Chennai Zone, Bank of Baroda, said, “Bank of Baroda has a loyal and strong base of agri customers and is one of the leading banks servicing the agriculture sector. We are pleased to organise this Farmers’ Programme in Madurai. In Chennai zone, over 160 branches will participate in this year’s Baroda Kisan Pakhwada, which will help us to boost engagement with the farming community and fulfil the banking & financing requirements of our esteemed agri customers.”
Bank of Baroda has also organised five mobile vans in Tamil Nadu which are being activated to cover villages, town panchayats and markets in Chennai Rural, Madurai, Coimbatore, Trichy and Puducherry. One officer will accompany each van, which will dispense information on various agriculture schemes and loan products, accept loan applications and spread awareness about the Baroda Kisan Pakhwada.
Bank of Baroda has 315 branches in Tamil Nadu, of which 161 are semi-urban/ rural branches. Advances to the agri sector in Tamil Nadu zone have grown year-on-year by 21.4% as on 30th September 2023.
During the Baroda Kisan Pakhwada, Bank of Baroda will reach out to farmers and create awareness about various initiatives such as the Kisan Credit Card drive in the name of “Ghar-Ghar KCC Abhiyaan” as well as create awareness on agri products, schemes/offers and delivery channels offered by Bank of Baroda for the benefit of the farming community. The event will also help to promote various Atmanirbhar Bharat schemes introduced by the Government of India such as the Agriculture Infrastructure Fund (AIF), Animal Husbandry Infrastructure Development Fund (AHIDF), Pradhan Mantri Matsya Sampada Yojana (PMMSY), PM Formalisation of Micro Food Processing Enterprises Scheme (PM-FME), etc.
Chennai, November 22, 2023: Mother’s Recipe, a renowned brand known for its delectable and traditional flavors, is excited to announce its collaboration with Fortune Sunlight Oil, a trusted brand from the Adani Wilmar Group, for a grand festive promotion. With a focus on the vibrant states of Karnataka, Telangana, Andhra Pradesh, and the culturally rich regions of Kerala and Tamil Nadu, this collaboration aims to bring joy and culinary delight to countless households during the upcoming festive season. Under this exciting collaboration, customers can avail of a special offer on the purchase of Fortune Sun Lite 5 Liters, wherein they will receive a complimentary 200g pack of Mother’s Recipe Ginger Garlic Paste. This promotional offer aims to enhance the festive spirit and elevate the culinary experience for families across these states. In conjunction with this campaign, Adani Wilmar has launched an extensive TV campaign on leading channels such as Zee Kannada, along with placed Point of Sale Materials (POSM) including posters for high retail visibility. This multi-faceted promotional approach ensures that the message of this exclusive collaboration reaches every household, creating a buzz and anticipation for the upcoming festivities. Ms. Sanjana Desai, Executive Director of Mother’s Recipe, expressed her enthusiasm about this collaboration, stating, “Diwali is one of the momentous festivals that holds a special place in the hearts of Indians. And to make this Diwali even more special for our consumers, we have collaborated with Fortune Sunlight Oil. Mother’s recipe Ginger Garlic Paste with the rich aroma & free from Class II Preservatives, we are confident that this promotion will add an extra layer of joy and flavor to the festive celebrations of our customers.” With this festive offer, Mother’s Recipe aims to bring families together to celebrate the joyous occasions with festive dishes without any Class II preservatives and any added colours.
Chennai, The Westin Chennai Velachery, celebrated the spirit of the festive season with a delightful Cake Mixing Ceremony. The event, held on 28th October, brought together residents, non-resident guests, influencers, media, and the cherished members of the Westin family for a joyful and all-inclusive celebration.
Cake Mixing is a cherished tradition that heralds the arrival of Christmas season and the beginning of winter festivities, believed to usher in good tidings and happiness. The Westin Chennai Velachery conducted this tradition with great cheer and an exciting twist.
The highlight of the event was a dedicated mixing table for children, where they could indulge in their creativity by mixing their favorite nuts, spices, and juice. This interactive activity added a touch of joy and wonder to the celebration, making it an event for all ages. Adults also joined in the fun, blending a rich mix of ingredients, including colorful cherries, dates, plums, assorted dry fruits, currants, sultanas, dried figs, glacé cherries, mixed spices, almond flakes, and many more to create the perfect cake mix. Executive Chef Saravanan Ranganathan led the cake mixing ceremony, ensuring that the ingredients were mixed to perfection. It was an opportunity for guests to bond, share laughter, and embrace the festive spirit.
In a special collaboration, The Westin Chennai Velachery partnered with Kocoatrait, the world’s first sustainable, zero-waste, single-origin, organic, and planet-friendly bean-to-bar chocolate brand based in Chennai. Mr. Nitin Chordia, the founder of Kocoatrait, hosted a unique cocoa ceremony for the guests, further elevating the experience.
Lakshmanan Ramanathan, General Manager of The Westin Chennai Velachery, expressed his enthusiasm for the event, saying, “At The Westin Chennai Velachery, we believe in creating unforgettable moments that mark the beginning of the season of festivities. Our annual cake mixing event is a time-honored tradition that brings together the essence of joy, togetherness, and anticipation for the upcoming festivities. As we blend a rich tapestry of ingredients, we look forward to inviting the festive season with open arms. We are eager to share in the warmth and merriment of this season with our valued guests and the community. Let the celebrations begin!”
The Westin Chennai Velachery has demonstrated its commitment to offering unique and memorable experiences to its guests. As the festive season unfolds, the hotel stands ready to welcome everyone to join in the spirit of togetherness and celebration.
‘அன்னபூரணி’ படத்திற்காக தொழில்முறை சமையல் கலைஞராக மாறிய நயன்தாரா!
திரையில் தனது கதாபாத்திரத்தின் உண்மைத் தன்மைக்காக தீவிர உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு கொடுப்பதில் நடிகை நயன்தாரா எப்போதுமே தயங்குவதில்லை. இந்த தனித்த விஷயம்தான் சந்தேகத்திற்கு இடமின்றி திரைத்துறையில் அவரை இருபது வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வைத்திருக்கிறது. இந்த நிலையில், தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் இன்னொரு படமாக அவர் ‘அன்னபூரணி- The Goddess of Food’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
இந்தத் திரைப்படம் சமையலைச் சுற்றி வருவதால், செஃபாக நடிகை நயன்தாரா தனது 100% சிறந்த நடிப்பை வழங்கியுள்ளார். மேலும், காட்சிகளின் உண்மைத் தன்மைக்காக படத்தில் உள்ள சமையல் காட்சிகளின் போது, படக்குழு உண்மையான சமையல் கலைஞரை செட்டில் வைத்திருந்தது. சமையல்காரரின் சரியான குணாதிசயங்களாக இருக்கும் பேன் ஃபிளிப்பிங், டாஸ்சிங் மற்றும் பல நுணுக்கங்களையும் சரியாக கற்றுக் கொண்டார் நயன்தாரா. இதில் ஏமாற்றும் விதமாக ஒரு ஷாட் கூட இல்லை என்றும், நயன்தாரா எந்த டூப்பும் இல்லாமல் நடித்துள்ளார் என்றும் குழு உறுதிப்படுத்தியுள்ளது.
படம் பிரமாண்டமாக எடுக்கப்பட்டிருப்பதாலும், பல விஷயங்களை படமாக்க வேண்டியிருந்ததால் நடிகை நயன்தாரா தன்னுடைய மதிய உணவு மற்றும் இரவு உணவு இடைவேளையின் போது கூட கேரவனுக்குள் செல்லாமல் செட்டிலேயே இருந்துள்ளார். நடிகை நயன்தாராவின் இந்த அர்ப்பணிப்பு ‘அன்னபூரணி’ படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. சில நாட்களில் பத்து மணிக்கு முடிந்துவிட வேண்டிய படப்பிடிப்பு நள்ளிரவு 12 மணி வரைகூட நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரது தனிப்பட்ட வேலைகள் காரணமாக படப்பிடிப்பை அடுத்த நாள் தொடரலாம் என்று படக்குழுவினர் தெரிவித்தபோது கூட, தன்னுடைய வேலைகளைக் கூட பொருட்படுத்தாது படத்திற்காக அதிகாலை 5 மணி வரை கூட அவர் இருந்திருக்கிறார்.
இப்படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், குமாரி சஞ்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தமன் எஸ் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். ஜி துரைராஜ் (கலை), அருள் சக்தி முருகன் (உரையாடல்கள்), பிரசாந்த் எஸ் (கூடுதல் திரைக்கதை), சஞ்சய் ராகவன் (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்), லிண்டா அலெக்சாண்டர் (நிர்வாகத் தயாரிப்பாளர்), வெங்கி (பப்ளிசிட்டி டிசைனர்) மற்றும் சுரேஷ் சந்திரா-ரேகா டி’ஒன் (மக்கள் தொடர்பு) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் உள்ளவர்கள்.