‘தி வில்லேஜ்’, இந்தியாவின் 54 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் காலா பிரீமியரில் திரையிடப்பட்டது.
தயாரிப்பாளர் பி. எஸ். ராதாகிருஷ்ணனின் ஸ்டுடியோ சக்தி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் மிலிந்த் ராவ் எழுதி இயக்கியிருக்கும் இணையத் தொடர் ‘தி வில்லேஜ்’. இந்திய அளவிலான ஸ்ட்ரீமிங்கில் இதுவரை கண்டிராத திகில் ஜானரிலான படைப்பை இந்த தொடர் ஆராய்கிறது.
‘தி வில்லேஜ்’ எனும் நீண்ட வடிவிலான தமிழ் ஒரிஜினல் திகில் இணையத் தொடரில் நடிகர் ஆர்யா முதன் முதலாக அறிமுகமாகிறார். இவருடன் திவ்யா பிள்ளை, ஆழியா, ‘ஆடுகளம்’ நரேன், எம். ஜார்ஜ், ‘பூ’ ராம், முத்துக்குமார், கலைராணி, ஜான் கொக்கன், பூஜா, ஜெயப்பிரகாஷ், அர்ஜுன் சிதம்பரம், ‘தலைவாசல்’ விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
நவம்பர் 24ஆம் தேதி முதல் இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் பிரைம் வீடியோவில் ‘தி வில்லேஜ்’ திரையிடப்படவுள்ளது.
கோவா -இந்தியா- நவம்பர் 22 2023- இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் பொழுது போக்கு தளமான பிரைம் வீடியோ, இன்று நடைபெற்று வரும் இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் 54ஆவது பதிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் தமிழ் ஒரிஜினல் தொடரான ‘தி வில்லேஜ்’ எனும் இணையத் தொடரின் முதல் அத்தியாயம் திரையிடப்பட்டது. ஆசியாவின் பழமையான மற்றும் இந்தியாவின் மிகச்சிறந்த சர்வதேச திரைப்பட விழாவில் ஆர்யா, திவ்யா பிள்ளை, இயக்குநர் மிலிந்த் ராவ், பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைவரான அபர்ணா புரோகித் ஆகியோர் அடங்கிய குழுவினருடன் இந்த சர்வதேச திரைப்பட விழாவின் நிர்வாக இயக்குவரான ஸ்ரீ பிருதுல் குமார் மற்றும் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் இணை செயலாளர் (திரைப்படங்கள் பிரிவு) இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் ஆகியோருக்கும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ”இந்திய கதைகள் மற்றும் கதை சொல்லிகள் தங்கள் திறமையையும், பணியையும் வெளிப்படுத்த ஒரு அற்புதமான தளத்தை உருவாக்கியதற்காக இந்திய சர்வதேச திரைப்பட விழா அமைப்பாளர்களுக்கு சிறப்பு நன்றி”யை தெரிவித்து பிரத்யேக அமர்வை அபர்ணா புரோகித் தொடங்கி வைத்தார்.
அதனுடன் வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு நிகழ்ச்சியை பற்றிய சுருக்கமான அறிமுகத்தையும் அவர் வழங்கினார்.
இதனையடுத்து விறுவிறுப்பான ‘தி வில்லேஜ்’ எனும் இணையத் தொடரின் முன்னோட்டம் திரையிடப்பட்டது. அதனுடன் இந்த இணையத் தொடரின் முதல் அத்தியாயமும், பிரத்யேக ஸ்னீக் பிக்கும் பார்வையாளர்களுக்கு திரையிடப்பட்டது. இதனைக் கண்டு ரசித்த திரை ஆர்வலர்கள் கரவொலி எழுப்பி தங்களது பாராட்டை தெரிவித்தனர். மேலும் இந்தத் தொடர் பார்வையாளர்களிடையே திகிலான அனுபவத்தை வழங்கியது என்பதற்கு சான்றாகவும் இருந்தது.
இத்தொடரை பற்றிய எதிர்பார்ப்பை உற்சாகத்துடன் அதிகரிக்க படக்குழுவினர் பிரத்யேக உரையாடலிலும் ஈடுபட்டனர். இதன் போது இந்தியாவில் இதுவரை ஸ்ட்ரீமிங் தளத்தில் முயற்சிக்கப்படாத ஒரு உயிரின திகில் தொடரில் பணிபுரிந்த சவால்கள் மற்றும் அனுபவங்கள் பற்றி பல சுவாரசியமான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். பிறகு கோவாவின் என்டர்டெய்ன்மென்ட் சொசைட்டியின் தலைமை நிர்வாக அதிகாரியான அங்கிதா மிஸ்ரா ஐஏஎஸ் அவர்களாலும் இந்த தொடர் பாராட்டப்பட்டது.
‘தி வில்லேஜ்’ எனும் இந்த தமிழ் ஒரிஜினல் திகில் தொடர் குறித்து பிரைம் வீடியோ ஒரிஜினல்ஸ் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் தலைவரான அபர்ணா புரோகித் பேசுகையில், ” தி வில்லேஜ் வழக்கமான திகில் நிகழ்ச்சிகளை கடந்து, யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு உலகத்தை உருவாக்குகிறது. அதிலும் அதிவேகமான உலகத்தை உருவாக்குகிறது. அழுத்தமான கதை… சிறந்த ஒளிப்பதிவு… மற்றும் இணையற்ற நிகழ்ச்சிகள்… இதில் இடம் பிடித்திருக்கிறது. இயக்குநர் மிலிந்த் ராவ் உண்மையான தொலைநோக்கு பார்வையுடையவர். அவருடன் இணைந்து திரைக்கதையை உயிர்ப்பித்தது விதிவிலக்கான அனுபவமாக இருந்தது. நடிகர் ஆர்யா உற்சாகத்துடன் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய பொழுதுபோக்கு துறைகளை சேர்ந்த நட்சத்திர கலைஞர்களுடன் இணைந்து இந்த நீண்ட வடிவிலான ஒரிஜினல் தொடரில் அவர் அறிமுகமானது வரவேற்கத்தக்கது. எங்களின் தொடக்க தமிழ் ஒரிஜினல் திகில் தொடரான ‘தி வில்லேஜை’ எழுச்சியூட்டும் வகையில் திரையிடுவதற்கான வாய்ப்பை வழங்கியதற்காக இந்திய சர்வதேச திரைப்பட விழா குழுவினருக்கும், அமைப்பாளர்களுக்கும் நன்றி. உலகெங்கிலும் உள்ள சினிமா கலைஞர்களின் பார்வையாளர்கள் எங்கள் வாடிக்கையாளர்கள். இந்த தனித்துவமான திகில் தொடரை ரசிப்பார்கள் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நாங்கள் பிரைம் வீடியோவில் உங்கள் அனைவருக்கும் இந்த தொடரை கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.
‘தி வில்லேஜ்’ மூலம் ஒரிஜினல் ஸ்ட்ரீமிங் தளத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகர் ஆர்யா இது தொடர்பாக பேசுகையில், ” இந்த தொடரின் மூலம் நீண்ட வடிவத்திலான ஓ டி டி எனும் டிஜிட்டல் தளத்தில் அறிமுகமாவதில் நான் பெருமிதம் அடைகிறேன். திறமையான இயக்குநர் மிலிந்த் ராவ் மற்றும் பிரைம் வீடியோவின் குழுவினருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். ‘தி வில்லேஜ்: எனக்கு ஒரு தொடர் அல்ல. கௌதம் எனும் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒரு புதிய வகையிலான ஜானரை ஆராயவும், சிறந்த நடிகர்கள் மற்றும் குழுவினருடன் பணியாற்றவும் எனக்கு வாய்ப்பளித்தது. இந்தத் தொடரில் ஒருவரை அச்சத்தில் உறைய வைக்கும் தருணங்கள் நிறைய உள்ளன. ஆனால் அது ஒரு உணர்ச்சி ஆழத்தையும், அடிப்படையான சமூக செய்தியையும் கொண்டிருக்கிறது. ஒரு நடிகராக எல்லைகளைக் கடந்து மக்களுடன் இணைந்திருக்கும் மற்றும் நீடித்த நினைவுகளை உருவாக்கும் கதைகளின் ஒரு பகுதியாக இருப்பதற்கு நாங்கள் பெரும் அதிர்ஷ்டசாலிகள். இது நாம் அனைவரும் நம்ப முடியாத அளவிற்கு பெருமிதம் கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாகும். நாங்கள் அதை உருவாக்கி மகிழ்ந்ததை போலவே…. நீங்களும் இந்த தொடரை திரையில் காணும் போது பார்த்து மகிழ்வீர்கள் என நம்புகிறேன்” என்றார்.
இந்த தொடர் குறித்து நாயகியாக நடித்திருக்கும் நடிகை திவ்யா பிள்ளை பேசுகையில், ” திறமையான நடிகரான ஆர்யாவுடன் இணைந்து இயக்குநர் மிலிந்த் ராவ் வழிநடத்தும் இந்த திட்டத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ‘தி வில்லேஜ்’ என் இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. பணக்கார… நடுத்தர… மற்றும் ஆழமான மனித கதாபாத்திரங்களை ஆராய்வதற்கான கதை சொல்லலின் நுணுக்கங்களை ஆராய… இந்த படைப்பு எங்களுக்கு வாய்ப்பு அளித்துள்ளது. எங்கள் இயக்குநர் மிலிந்த் ராவை பற்றி நான் அதிக அளவு பேச இயலாது. இந்த திட்டத்திற்கான அவரது பார்வையும், ஆர்வமும் உண்மையிலேயே வியப்பளிக்கிறது. அவர் கருணையுடனும், அசையாத அர்ப்பணிப்புடனும் எங்களை எல்லாம் வழிநடத்திச் சென்றுள்ளார். ஒவ்வொரு நாளும் நம்முடைய திறமைகளின் எல்லைகளை மறு வரையறை செய்வதற்கான வாய்ப்பை அமைத்துக் கொடுக்கிறார். ‘தி வில்லேஜ்’ எனும் இந்த திகில் இணையத் தொடரில் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இதன் முதல் அத்தியாயத்தை காண்பது எனக்கு மிகுந்த பெருமையை அளிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் நவம்பர் 24ஆம் தேதி அன்று இதனை காண்கிறார்கள். ” என்றார்.
இந்தத் தொடர் குறித்து இயக்குநர் மிலிந்த் ராவ் பேசுகையில், ” இந்த தனித்துவமான கதையை உலகிற்கு கொண்டு வந்ததற்காக நான் பெருமிதம் கொள்கிறேன் மற்றும் நன்றி உணர்வை உணர்கிறேன். ‘தி வில்லேஜ்’ ஒரு கிரியேச்சர் ஹாரர் தொடர். இது இந்தியாவில் மிக அரிதாகவே அலசப்படும் ஒரு வகையான ஜானர்.
ஒரு தந்தை தனது குடும்பத்தை சொல்லொணாக் கொடுமைகளிலிருந்து காப்பாற்ற பாடுபடும் ஒரு பயங்கரமான இரவில் இந்த தொடர் நடைபெறுகிறது. இந்த முன் கணிப்புதான் என்னை கதைக்குள் ஈர்த்தது. மேலும் அது ஆழமான உலக கட்டமைப்பையும், நுட்பமான கதையையும் அனுமதித்தது. நீண்ட வடிவிலான கதை சொல்லலுக்கு இது சிறந்ததாக இருக்கும் என உணர்ந்தேன். நிச்சயமாக ப்ரைம் வீடியோ மற்றும் ஸ்டுடியோ சக்தியின் ஆதரவு இல்லாமல் இது எதுவும் சாத்தியமில்லை. அவர்கள் முதல் நாளிலிருந்து எனது பார்வையை முழுமையாக ஆதரித்தனர். மேலும் தங்கள் கதாபாத்திரங்களுக்கு தேவையான அனைத்தையும் கொடுத்தனர். திறமையான நடிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் அனைவரும் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறோம். மேலும் 54 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்த தொடரின் முதல் அத்தியாயத்தை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.” என்றார்.
இந்தத் தொடர் தமிழில் பிரத்யேகமாகவும், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு, ஆங்கிலத்தில் சப் டைட்டில்களுடன் நவம்பர் 24ஆம் தேதியன்று இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த தொடர் திரையிடப்படவுள்ளது.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் பிரைம் வீடியோ பங்கேற்பது இந்தியாவின் ஆக்கபூர்வமான பொருளாதார வளர்ச்சியை செயல்படுத்துவதில் வீடியோ ஸ்ட்ரீமிங் துறையின் முக்கிய பங்கிற்கு ஒரு சான்றாகும். மேலும் இந்தியக் கதைகள், திறமைகள் மற்றும் திறமையான படைப்பாளிகளை உலக அரங்கில் வெளிப்படுத்த ஒரு வலுவான தளமாகவும் செயல்படுகிறது.