Chennai, April 26th, 2024: Padmam, a vegetarian fine dining restaurant launched at Saligramam, This will be the Padmam chain’s second vegetarian restaurant, following their first in T.Nagar. Padmam promises that even the picky eaters in Chennai will have a memorable vegetarian feast. The Saligramam restaurant was inaugurated by Padmam Restaurant management team and Film Director KS. Ravikumar.
The cuisine, crafted by in-house chefs, features a symphony of South Indian flavours reinterpreted for the fine-dining palette. Diners can enjoy a variety of excellent vegetarian dishes that highlight the region’s rich culinary tradition and are made using seasonal, locally sourced ingredients.
Speaking at the event, Film Director KS. Ravi Kumar said that “the Saligramam neighbourhood, which is home to multiple studios, is fortunate to have the new Padmam Restaurant. Vegetarian foods are booming in popularity as more and more people seek out healthier and more sustainable dietary choices. I love that the creators are changing the vegetarian cuisine game with their unique and tasty creations.”
Sprawling across 6,000 sq. ft. with ample dining space, Padmam’s ambience reflects a harmonious blend of tradition and modernity. The menu at Padmam is a veritable feast for vegetarians. Diners can embark on a culinary journey through South India, savouring an array of signature dishes, such as:
Veg Idiyappa Biriyani, a medley of flavours, with delicate rice strings wrapped in fragrant spices. This dish changes the way vegetarians enjoy biryani by combining delicious tastes and textures.
In Andhra Pradesh, MLA Pesarattu Dosa is a very famous dish that is served with upma. This shows how much we care about regional specialties. The crispy pesarattu base is usually made with green moong dal, and the stuffing is very tasty. This dosa is a real celebration of South Indian vegetarian food. This restaurant is set to become a gastronomic attraction in Chennai. Padmam promises an amazing dining experience for food lovers looking for unique South Indian flavours, thanks to its emphasis on fine vegetarian cuisine, impeccable service, and elegant ambience.
The UNESCO World Heritage List includes 32 cultural and natural sites from Russia. Three of them can be seen with your own eyes without travelling outside Moscow. The Moscow City Tourism Committee offers a selection of unique architectural monuments that are worth a visit for visitors from India.
The Moscow Kremlin and Red Square
A masterpiece of world architecture and the main symbol of Russia is located in the heart of Moscow and strikes the imagination from the first glance at the ancient tiles and ruby stars of the Spasskaya Tower. The ensemble of the Moscow Kremlin and Red Square was among the first Russian sites included in the World Heritage List, and one day will not be enough for an inquisitive tourist to see all its sights. Must-see items when visiting the Kremlin are the legendary Tsar Cannon and Tsar Bell from the times of the royal dynasties, as well as the treasury of the Kremlin Armoury. And in addition to the postcard-perfect St Basil’s Cathedral and the Mausoleum, the Historical Museum and the Cathedral of the Intercession of the Most Holy Theotokos on the Moat are also must-sees when visiting the Red Square.
A walk on the Red Square and a visit to the Kremlin will be interesting not only for adults, but also for their children. The Moscow Kremlin Museums offer thematic excursions for different ages, so the program is adapted to the age peculiarities of the child’s perception and interests, which will help to remember the visit to these places better.
Red Square is located in the very center of the capital, near it there are several metro stations, or to be more precise, several entire interchange hubs. The closest stations are Okhotny Ryad, Teatralnaya and Ploshchad Revolutsii. You can enter the Red Square free of charge, but to visit the Kremlin you will need to buy a ticket, we recommend doing it online beforehead. The cost of visiting the Armory is 1300 rubles (approximately $15), the right to pass without queuing is available for excursion groups with a guide. To see the architectural ensemble of Sobornaya Square is possible for a smaller price – 900 rubles ($10), but in both locations, visiting it is organized according to the schedule, there may be queues for entry. We also would like to attract your attention to the fact that the Diamond Fund, Lenin’s Mausoleum do not belong to the museums of the Kremlin.
ChurchoftheAscensioninKolomenskoye
Another architectural masterpiece – one of thefirst hipped roof temples in Russia, located on the territory of the Kolomenskoye Museum-Reserve. According to legend, the Church of the Ascension was built in honour of the birth of the future Tsar Ivan IV, who went down in history as the Terrible. A visit to the site can be combined with a walk through the large-scale park that adorns the south of Moscow’s centre.
At the moment, the Church of the Ascension is closed for restoration, and you can only admire it from the outside, but there are still many sights to visit in Kolomenskoye. For example, together with the tour guests you can visit the palace of Tsar Alexei Mikhailovich, the Falcon Court and the beekeeper’s estate. The Kolomenskoye Museum-Reserve and Izmailovo Estate regularly host events that introduce domestic history and culture in an interactive way. All events are free of charge and designed for family audiences.
Kolomenskoye Museum-Reserve is located 5 minutes from the Kolomenskoye metro station of the same name. Entrance to the park is free, for the cost of excursions please check the website.
Novodevichy Convent
The oldest active convent in Moscow has preserved its monumental appearance since the 16th-17th centuries. Its architectural ensemble belongs to the “Moscow Baroque” style. The interiors of the monastery contain valuable collections of paintings and works of arts and crafts – you can see them and admire the rich interior decoration of the complex by signing up for a tour.
In addition to excursions, the Novodevichy Convent also has a playground for younger visitors – electronic cards for visiting the playground are available at the church shop during its opening hours. Cards are issued only to parents with children (no more than 1 card per family), and to children from the age of 14. So if a child wants to run and play for a little, parents can bring him/her to the playground. For security purposes, the playground is under video surveillance.
Like most of Moscow’s sights, the Novodevichy Convent is the easiest to reach by metro. The nearest station is Sportivnaya, you can walk from it to the convent in just 5-7 minutes. Visiting tickets are not expensive at all – the cost for adults is 300 rubles (a little bit more than $3). Please note that amateur photography and videography cost an additional 100 and 200 ($1–2) rubles accordingly.
தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் பரத் மோகன் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2’
‘இன்று நேற்று நாளை’ மற்றும் ‘அயலான்’ இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணக் கதை
திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பேனரில் சி வி குமார் தயாரிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயலான்’ வெற்றி படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுமார் ஒன்பது வருடங்களுக்கு பிறகு ‘இன்று நேற்று நாளை’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இன்று நேற்று நாளை 2’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் இந்த புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணத் திரைப்படத்தை பரத் மோகன் இயக்குகிறார். சி வி குமாரிடம் ‘மாயவன்’ திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், ‘இக்லூ’ மற்றும் ‘இப்படிக்கு காதல்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
‘கஜினிகாந்த்’, ‘இப்படிக்கு காதல்’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பல்லு ‘இன்று நேற்று நாளை 2’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பரத் மோகன், “ஒரு புதிய கதைக்கருவோடு 2015ல் வெளியான ‘இன்று நேற்று நாளை’ மக்களை கவர்ந்து பெரிதும் பேசப்பட்டது. அதன் இரண்டாம் பாகத்தை, அதுவும் அத்திரைப்படத்தை தயாரித்த சி வி குமார் அவர்கள் தயாரிப்பிலும், இயக்குநர் ரவிக்குமார் எழுத்திலும் இயக்குவது பெரும் மகிழ்ச்சி. காலப்பயண கதையான ‘இன்று நேற்று நாளை 2’ திரைப்படமும் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்கும்,” என்று கூறினார்.
தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் பரத் மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘இன்று நேற்று நாளை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.
Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வினில்…
நடிகை நந்தினி பேசியதாவது…. இது என் முதல் மேடை, இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படம் சம்மருக்கு நல்ல ஒரு விருந்தாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.
நடிகர் அப்துல் லீ பேசியதாவது…. ஒரு ரகசியம் சொல்றேன் ஜீவிக்கு 4 குளோன் இருக்கு, ஒண்ணு மியூசிக் போடுது, ஒண்ணு நடிக்கப்போகுது. இதை ஐஸ்வர்யா ராஜேஷிடம் சொன்னால் அவர் நானே குளோன் தான், ஒரிஜனல் ஐஸ்வர்யா சுழல் நடிக்கப் போயிருக்கிறார் என்றார். அவ்வளவு பிஸியான நடிகர்கள் என்றாலும் இப்படத்தில் இருவரும் நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள். என்னை இப்படத்தில் நல்ல முறையில் பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றி. கேப்டன் மில்லர் படத்திற்காக என்னைப் பாராட்டிய அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை ரோகிணி பேசியதாவது… விருமாண்டி படத்திற்குப் பிறகு லைவ் சவுண்டில் இந்தப்படம் செய்துள்ளேன். மிகப்பெரிய மெனக்கெடல் இருந்தால் தான் இதைச் செய்ய முடியும். அதில் பிடிவாதமாக இருந்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள். லைவ் சவுண்ட் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது தான் அதன் அருமை தெரிகிறது. ஜீவி அருமையான நடிகர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் இசையமைத்த படங்களும் வருவதால், வெள்ளிக்கிழமை நாயகன் என்கிறார்கள், அவரிடம் எப்படி இவ்வளவு வேலைகளைப் பார்க்கிறீர்கள் என்று கேட்டேன், என்னுடைய எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்துவிடுவேன் என்றார். அவருக்கு என் வாழ்த்துக்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச் சிறந்த நடிகை, நல்ல நடிப்பைத் தந்துள்ளார். இளவரசு நன்றாக நடித்துள்ளார். ஒரு அருமையான படைப்பு உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
நடிகை கீதா கைலாசம் பேசியதாவது… எனக்கு நல்ல பாத்திரத்தில் வாய்ப்புத் தந்த இயக்குநருக்கு நன்றி. ரோகிணி மேடமுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஜீவி, ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடித்தது இனிமையான அனுபவம். படம் நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது…. தற்காலத்திய ஆண் பெண் உறவில் ஒரு பிளவு ஏன் ஏற்படுகிறது என்பதை அழுத்தமாக இந்தப்படம் பேசுகிறது. இயக்குநர் அதனை அழகாகப் படம் பிடித்துள்ளார். சில பாடல்களை மெட்டுக்களே தந்து விடும், ஜீவியின் இசையை, மெட்டைக் கேட்டவுடன் வார்த்தைகள் வந்து விழும். அப்படி ஒரு நல்ல பாடலை இப்படத்தில் எழுதியது மகிழ்ச்சி. படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இப்படம் எல்லோருக்குமான படமாக இருக்கும் நன்றி.
கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசியதாவது… வாய்ப்பு தந்த நரேன் சார் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. நான் இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படம் நல்ல அனுபவமாக இருந்தது. இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.
ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் பேசியதாவது… ஆனந்த்துடன் இணைந்த பயணம் குறும்பட காலத்தில் ஆரம்பித்தது. இன்னும் நிறையப் பயணப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன் நன்றி. ஜீவி பிரகாஷுக்கு ஒளிப்பதிவு தெரியும் என்ன லென்ஸ் போடுகிறோம் என்பது முதல் அவருக்குத் தெரிகிறது, எங்குப் படிக்கிறார் என்று தெரியவில்லை, ஜீவி, ஐஸ்வர்யா இருவரையும் அழகாகக் காட்டியுள்ளேன் என நம்புகிறேன். நம் வீடுகளில் உள்ள பிரச்சனைகளை எளிமையாகக் கையாண்டிருக்கிற படம் ஆனந்த்தின் கதை வித்தியாசமாக இருக்கும். குறட்டை ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது.
நடிகர் இளவரசு பேசியதாவது.,, பொதுவாக இயக்குநருக்குள் ஒரு நீதிபதி பார்வை தான் இருக்கும் ஆனால் ஆனந்த் வித்தியாசமானவர். எதற்கு அப்பா எனத் தெரியாமல் நிறைய அப்பா கேரக்டர் பணத்திற்காகச் செய்துள்ளேன் ஆனால் இந்தக்கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஆண் பெண் இருவருக்கும் இடையில் சின்ன சின்ன பிஹேவரியில் ஏற்படும் பிரச்சனை, எங்குக் கொண்டு செல்லும் என்பதை முதிர்ச்சியாகக் கையாண்டுள்ளார் இயக்குநர். இப்படிப்பட்ட அருமையான படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். மிக முக்கியமான விசயத்தை இப்படம் பேசியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். ஜீவியுடன் முறைத்துக் கொள்வது போல் ஒரு பாத்திரம், நன்றாக வந்துள்ளது. கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.
தயாரிப்பாளர் வருண் திரிபுரனேனி பேசியதாவது… நரேனுக்கு நன்றி. அவரால் தான் திரைத்துறைக்குள் வந்தேன். ஆனந்த் கதை சொன்ன போதே மிகவும் பிடித்திருந்தது. அவர் சிறந்த படத்தைத் தந்துள்ளார் அவருடன் படம் செய்தது பெருமையாக உள்ளது. ஜீவி, ஐஸ்வர்யா, ரோகிணி, இளவரசு உட்பட அனைவருக்கும் நன்றி. இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் பேசியதாவது… 2020 ஏப்ரலில் என் முதல் படம் ஓடிடியில் வெளியானது. இங்கிருக்கும் பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவால் தான் நான் வெளியே கொஞ்சம் தெரிந்தேன். அதற்காக அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் ஐடியா வந்த போது நரேனிடம் சொன்னேன் அவர் மூலமாகத் தான் வருணிடம் கதை சொன்னேன். அவர் படங்களே பார்த்ததே இல்லை எப்படிப் புரிந்து கொள்வார் எனத் தயக்கம் இருந்தது, ஆனால் அவருக்குப் பிடித்தது உடனே தயாரிக்கலாம் என்றார். அவருக்குப் பிடித்தால் அதைப் பற்றி முழுதாக தெரிந்து கொண்டு ஆர்வமுடன் செய்வார். பல ஐடியாக்கள் தந்தார். கோபி பிரசன்னா அழகாக டிசைன் செய்து தந்தார். கார்த்திக் நேத்தா அருமையான வரிகள் தந்தார். ஜெகதீஷ் என் குறும்படத்தில் வேலை பார்த்த காலத்தில் கிம்பல் வைத்து ஒரே ஷாட்டில் ஒரு படம் எடுத்தோம் அப்போது ஆரம்பித்த பயணம், என் முதல் படத்திற்கே அவரைத்தான் கேட்டேன். இந்தப்படத்தில் அவர் விஷுவல் தான் ஞாபகம் வரும். ஐஸ்வர்யாவை அழகாகக் காட்டியுள்ளார். எனக்கு பர்ஸனலாக டப்பிங் பிடிக்காது அதனால் தான் லைவ் சவுண்ட். சின்ன சின்ன சவுண்ட் கூட ஷீட்டிங்கில் சிக்கலாகி விடும். திரும்பத் திரும்ப எடுக்க வேண்டி வரும் ஆனாலும் லைவ் சவுண்ட் பேசப்படும். நல்ல பெர்ஃபார்ம் பண்ணுகிற ஆர்டிஸ்டால் தான் முடியும் அதனால் தேடித் தேடி நடிகர்களைத் தேர்வு செய்தேன். ரோகிணி மேடம் ஏற்கனவே லைவ் சவுண்டில் வேலை பார்த்திருக்கிறார். அவர் ஒரு இயக்குநர், இப்படத்திலும் பல காட்சிகளில் அசத்தியிருக்கிறார். தலைவாசல் விஜய் சார் நல்ல ரோல் செய்துள்ளார். காளி அண்ணா நல்ல மெத்தட் ஆக்டர், அருமையாக நடித்துள்ளார். ஐஸ்வர்யாவிடம் தான் முதலில் கதை சொன்னேன் அவர் வீட்டுக்குப் போன போது 60 அவார்ட் இருந்தது. அதைப்பார்த்தால் நல்ல கதை இருந்தால் மட்டும் வா என்பது போல் இருக்கும். மிக எளிமையாகப் பழகுவார். திரைக்கதையிலும் அவர் பங்களிப்பு அதிகம். படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சீன் வரும் அது அவர் ஐடியா தான். தயாரிப்பாளருக்குப் பிடித்த நடிகை. ஜீவியிடம் ஐஸ்வர்யா தான் ஃபிளைட்டில் பார்த்து கால்ஷீட் வாங்கித் தந்தார். ஜீவி நோ தான் சொல்வார் என நினைத்தேன் ஆனால் அவர் கதை நல்லாருக்கு நடிக்கிறேன் எனச் சொல்லிவிட்டார். அவர் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நடிக்கும் போது கதைகள் கேட்பார், மியூசிக் போடுவார், இந்திப்படம் நடிக்கிறார், தயாரிக்கிறார் அவரைப்பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டிலும் பெட்டராக நடிக்க முயற்சிப்பார். இப்படம் அவரோட பெஸ்ட்டாக இருக்கும். இது ஒரு ரிலேஷன்ஷிப் டிராமா உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஏப்ரல் 11 திரையரங்குகளில் வருகிறது ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது… வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள் ஆனால் இது 4 வருடமாக உழைத்து உருவான படங்கள் ஆனால் அது அனைத்து வேலைகளும் முடித்து, இப்போது வருகிறது. டியர் திரைப்படம் ஐஸு ஃபிளைட்டில் என்னைப்பார்த்து இந்தக்கதை கேளுங்கள் என்றார். இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன், ஆனால் கதை கேட்டவுடன் அழுது விட்டேன், மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். வருணுக்கு என் வாழ்த்துக்கள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் நன்றி.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது… இந்த வருடம் ஜீவிக்கு நடந்தது, கடந்த வருடம் எனக்கும் நடந்தது, என்னையும் வெள்ளிக்கிழமை நாயகி எனக் கூப்பிட்டுள்ளார்கள். அதன் காரணங்கள் எனக்குத் தெரியும். கள்வன் படத்திற்காக ஜீவிக்கு வாழ்த்துக்கள். டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். ஜெகதீஷ் மாதிரி கேமராமேன் எனக்கு எல்லாப்படத்திலும் கிடைத்தால் நன்றாக இருக்கும். என்னை அவ்வளவு அழகாகக் காட்டியுள்ளார். இந்தப்படம் ஷீட்டிங்கே ஒரு கொண்டாட்டமாக இருந்தது. ரோகிணி மேடம் பகிர்ந்துகொள்வதைக் கேட்பதே வரம் தான். எல்லோருடன் பழகியது மிகச்சிறந்த அனுபவம். இந்தப்படம் மூலம் ஆனந்த் நண்பராகக் கிடைத்துள்ளார். இந்தப்படம் எனக்கு மூன்று வருடப் பயணம். ஆனந்த் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். வருண்! தமிழ் சினிமாவிற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவருடன் இன்னொரு படமும் செய்துள்ளேன் விரைவில் திரைக்கு வரும். எங்கள் படத்தின் நாயகன் தூண் ஜீவி தான். நல்ல நண்பர், அவரைப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்காகக் கதை கேட்டு நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பையும் கவனித்து வருகின்றனர். ‘ராப்’ ஐகான் அறிவு, ஏகாதசி, ஜிகேபி, விண்ணுலக கவி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் டியர் படத்தினை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.
‘இன்ஸ்பெக்டர் ரிஷி’ திகில் டிராமாவின் வெற்றியை ரசிகர்களுடன் படக்குழுவினர் கொண்டாடுகிறார்கள்; மெரினா கடற்கரையில் ரசிகர்களை சந்திக்கிறார்கள்; இதன் தனித்துவமான சிலந்தி வலை விளம்பர போர்டுகள் சென்னை நகரத்தை அலங்கரிக்கின்றன
மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட தமிழ் ஒரிஜினல் தொடரான இன்ஸ்பெக்டர் ரிஷி இறுதியாக ப்ரைம் வீடியோவில் வெளியிடப்பட்ட தருணத்தில் ஒரு நீண்ட காத்திருப்பு முடிவுக்கு வந்தது. பார்வையாளர்கள் மத்தியில் உற்சாகத்தை கரை புரண்டோடச் செய்து, அவர்களின் உற்சாகத்தை வெளியிடச்செய்யும் வகையில், பிரைம் வீடியோ, மனதை ஒன்றிப்போகச்செய்யும் இந்தத் தொடர் நிகழ்ச்சியின் விளம்பர போஸ்டர்களை சென்னை முழுவதும் நிறுவியது. ஒரு வலைப் பின்னலில் இருந்து ‘வனராட்சி’ AKA ‘ராட்சி’ என்ற ஒரு கொடிய புராணகால வன மோகினி மற்றும் பழங்குடியினருக்கான வன தெய்வம், வெளிவரும் இதயத்தைத் பிழியும் காட்சிகளை இந்த விளம்பரக் காட்சிகள் எடுத்துக் எடுத்துக்காட்டுகின்றன. விளம்பரப் பலகைகளின் ஓரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் சிலந்தி வலை தமிழ்நாட்டின் தென்காடு என்ற சிறிய கிராமத்தில் நடக்கும் தொடர் கொலைகளின் முக்கிய ஆதாரங்களில் ஒன்றாக செயல்படுகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் நிறுவப்பட்ட இந்த விளம்பர போர்டுகள் பார்வையாளர்கள் மத்தியில் இந்த திகில்-கிரைம்-டிராமா தொடரை பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகின்றன. சமீபத்தில் இந்தத் தொடரின் குழுவினர், இந்த ஹோர்டிங்குகளை வெளியிடுவதோடு, நிகழ்ச்சியின் வெற்றியை பார்வையாளர்களுடன் சேர்ந்து கொண்டாடும் நோக்கத்தில் சென்னை மெரினா கடற்கரைக்கும் சென்றிருந்தார்கள்.
நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களிடமிருந்து கிடைத்த நேர்மறையான விமர்சனங்கள் குறித்து பேசிய தொடரின் கதாநாயகனான நடிகர் நவீன் சந்திரா, கூறினார் “இன்ஸ்பெக்டர் ரிஷி தொடருக்கு பார்வையாளர்கள் அளித்த அற்புதமான விமர்சனங்களுக்காக அவர்களுக்கு நன்றி சொல்ல இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.. அனைவரின் பாராட்டும் ஆதரவும் எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டதோடு இந்த நிகழ்ச்சி தொடர்பாக எங்கள் மீது அனைவராலும் காட்டப்படும் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் பணிவாக உணரச்செய்து மகிழ்ச்சியளித்தது. உலகம் முழுவதிலுமிருந்தும் பார்வையாளர் களிடமிருந்து வரும் இத்தகைய பாராட்டுகள் மேலும் சிறப்பாக செயல் படுவதற்கான மன எழுச்சியை என்னுள் தூண்டி, மனதைக் கொள்ளை கொள்ளும் மற்றும் மகிழ்விக்கும் கதைகளைக் வழங்கும் ஆர்வத்தையும் எனக்கு அளிக்கிறது. இன்ஸ்பெக்டர் ரிஷி எங்கள் அனைவரது கடின உழைப்பு மற்றும் ஆர்வத்தின் பலனாக விளைந்தது. மக்கள் இந்த நிகழ்ச்சியை பெருமளவு விரும்பு வதைக் கண்டு நாங்கள் நன்றியோடு மன நிறைவாக உணர்கிறோம்.”
இந்தத் தொடர் இயற்கைக்கு மாறான அல்லது வழக்கத்தை மீறிய சம்பவங்கள் நிறைந்த ஒரு புதிரான மற்றும் மூளையை கசக்கிப் பிழியும் ஒரு வழக்கின் விசாரணையை எதையும் சந்தேகத்தோடு ஒற்றைக் கண் பார்வையில் காணும் குற்றப் பிரிவு ஆய்வாளர் ரிஷி நந்தன் தனது நம்பிக்கைக்குரிய இரண்டு துணை ஆய்வாளர்கள் அய்யனார் மற்றும் சித்ரா ஆகியோரின் உதவியோடு,மேற்கொள்வது குறித்து பேசுகிறது. தனிப்பட்ட முறையில் தான் எதிர்கொள்ளும் தடைகளைத் தாண்டி மர்மமான கொலைகளுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொண்டுவர அவர் இடைவிடாத முயற்சியில் ஈடுபடுகிறார்.
நந்தினி ஜே.எஸ் உருவாக்கி எழுதிய இன்ஸ்பெக்டர் ரிஷி தொடரை, சுக்தேவ் லஹிரி தயாரித்துள்ளார். இதில் பன்முக திறமை கொண்ட நடிகர் நவீன் சந்திரா முன்னணி வேடத்தில் நடிக்க அவரோடு இணைந்து, சுனைனா, கண்ணா ரவி, மாலினி ஜீவரத்தினம், ஸ்ரீகிருஷ்ண தயாள் மற்றும் குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பத்து எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் தற்போது பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன். தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவர் தற்போது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சீயான் 62’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62’ எனும் திரைப்படத்தில் ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.
தமிழ் திரையுலகின் திறமையான முன்னணி கலைஞர்கள் ஒன்றிணைந்திருப்பதால் ‘சீயான் 62’ படத்திற்கு ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில், இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் அதிரடி பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘ஹனுமான்’ படத்தின் தமிழ், கன்னடம் மற்றும் மலையாள பதிப்புகளை ஏப்ரல் 5 முதல் ஸ்ட்ரீம் செய்கிறது.
அதிரடி ஆக்சன், பொழுதுபோக்குடன் பக்தியும் கலந்த, இந்த சூப்பர் ஹீரோ என்டர்டெய்னர், பிரபல இயக்குநர் பிரசாந்த் வர்மா உடைய சினிமா யுனிவர்ஸின் முதல் படைப்பாகும்.
‘ஹனுமான்’ படத்தில் தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹனுமந்து எனும் சூட்டிகையான இளைஞன், ஹனுமனின் அருளைப் பெற்று சூப்பர் ஹீரோவாக எப்படி மாறுகிறான் என்பது தான் இப்படத்தின் மையம்.
அஞ்சனாத்ரி என்ற கற்பனைக் கிராமத்தில் நடப்பதாக இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. அறிவியல் மூலம் தனது சக்தியைப் பெறும் சூப்பர் ஹீரோவான மைக்கேலை, ஹனுமந்து எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பற்றியது தான் இப்படம்.
தேஜா சஜ்ஜா மற்றும் அமிர்தா ஐயர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், வரலக்ஷ்மி சரத்குமார், சமுத்திரக்கனி, வினய் ராய் மற்றும் வெண்ணிலா கிஷோர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஹனுமான் படத்திற்கான இசையமைப்பை கௌரா ஹரி மற்றும் அனுதீப் தேவ் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். பின்னணி இசையை கௌரா ஹரி செய்துள்ளார். படத்திற்கு தாசரதி சிவேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ஏப்ரல் 5 முதல் ஹனுமான் திரைப்படத்தை, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளிக்கலாம்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி:
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முன்னதாக ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றி அமைத்துள்ளது. ரசிகர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது, மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.
சுந்தர் சி இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றிப் படத்தின் நான்காம் பாகம் ‘அரண்மனை 4’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா !
Avni Cinemax (P) Ltd சார்பில் குஷ்பு சுந்தர் மற்றும் Benz Media PVT LTD சார்பில் A.C.S அருண்குமார் தயாரிப்பில், சுந்தர் சி நடித்து, இயக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா உட்பட எண்ணற்ற நட்சத்திரங்களின் நடிப்பில், அரண்மனை பட வரிசையில் நான்காம் பாகமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘அரண்மனை 4’. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா, திரை நட்சத்திரங்கள் சூழ, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வினில்..
நடிகை, தயாரிப்பாளர் குஷ்பு பேசியதாவது… இப்படத்தின் நான்கு பாகங்கள் வரை வெற்றிகரமாகப் போக முக்கிய காரணம் சுந்தர் சி தான். அவருடன் 30 வருடமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அவர் ஒவ்வொரு படத்திலும் எப்படி வித்தியாசமாக ரசிகர்களை மகிழ்விக்கலாம் என எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பார். வீட்டில் இருக்கும் இரு குழந்தைகளும், ஹாரர் திரைப்படங்களுக்கு ஃபேன். எனவே தான் அவரும் இந்த ஜானரில் தொடர்ந்து படமெடுக்கிறார். அரண்மனை படத்தை சோறு கட்டிக்கொண்டு வந்து திரையரங்கில் குடும்பத்தோடு ரசிக்கும் ரசிகர்கள் தான் இந்த வெற்றிக்கு காரணம். அவர்களுக்கு நன்றி. மேலும் எங்களுக்கு உறுதுணையாக இருக்கும் Benz Media A.C.S அருண்குமார் சார், இப்படத்தில் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. ஒரு படத்தில் இரண்டு நாயகிகள் ஒன்றாக இருக்க முடியாது என சொல்வார்கள். ஆனால் இந்த படத்தில் தமன்னா, ராஷிக்கண்ணா அவ்வளவு ஒத்துழைப்பு தந்தார்கள். கோவை சரளா மேம் மற்றும் நடித்த அனைவருக்கும் என் நன்றிகள். எங்கள் வீட்டுப் பிள்ளை ஹிப்ஹாப் ஆதி அட்டகாசமாக இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் சூப்பரான விஷுவல்ஸ் தந்துள்ளார். எல்லோருக்கும் என் நன்றிகள். அரண்மனை 3 பாகங்களை விட இப்படம் இன்னும் அட்டகாசமாக இருக்கும். இறுதியாக எங்கள் மகிழ்ச்சிக்காக தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கும் என் கணவர் சுந்தர் சிக்கு நன்றிகள்.
நடிகர் சந்தோஷ் பிரதாப் பேசியதாவது… சுந்தர் சி சார் படத்தில் வேலை பார்ப்பது, நமது அப்பா அண்ணன் உடன் வேலை செய்வது மாதிரி தான். அவ்வளவு நன்றாகப் பார்த்துக் கொள்வார். அவருக்கு என்ன வேண்டும் என்பதை தெளிவாகச் சொல்லிவிடுவார். வேலை எப்போதும் ஜாலியாக இருக்கும். இப்படத்தில் வேலை பார்த்தது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் சந்தோஷப்படுத்தும்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் பேசியதாவது நடிக்க வந்து 10 வருடங்களுக்குப் பிறகு தான் சுந்தர் சி சார் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு படத்திலும் நமக்கு வாய்ப்பு வருமா என ஏக்கம் இருக்கும். நல்ல வேலை தெரிந்த இயக்குநர் உடன் வேலை பார்க்கும் போது நமக்குள் உற்சாகம் தானாக வரும். அவருடன் எல்லா படத்திலும் வேலை பார்க்க ஆசை. அத்தனை கச்சிதமான இயக்குநர். நடிகர்களை மிக நன்றாகப் பார்த்துக் கொள்வார். இந்தப் படம் கண்டிப்பாக பிரமாண்ட வெற்றி படமாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.
VTV கணேஷ் பேசியதாவது.. தெலுங்கில் பிரபாஸ் படம் பண்ணிக் கொண்டிருக்கும் போது, தான் இந்தப் படம் செய்தேன். ஆனால் திடீரென சுந்தர் சி மீசையை எடு என்றார். அய்யய்யோ பிரபாஸ் படம் பிரச்சனையாகிடுமென்று தயங்கினேன். ஆனால் சுந்தர் சியின் பாசவலையினால் செய்தேன். இப்போது ஃப்ரேம் பார்க்கையில் அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது. யோகி பாபு, சரளா மேடமுடன் சூப்பராக காமெடி ஒர்க்கவுட் ஆகியுள்ளது. எப்போதும் பேய் நம்மைக் கைவிடாது என சுந்தர் சி சொல்வார், அது இந்தப்படத்திலும் நிரூபணமாகியுள்ளது. அவர் 120 வருடம் வாழ்வார், ஏனெனில் அவர் மனைவி தான் காரணம். இப்படி ஒரு மனைவி இருந்தால், யார் வேண்டுமானாலும் 100 வயசுக்கு மேல் வாழலாம். சுந்தர் சிக்கு வாழ்த்துக்கள். படத்திற்கு வாழ்த்துக்கள்.
நடிகை கோவை சரளா பேசியதாவது… இந்த கம்பெனியில் நான் ஒரு கம்பெனி ஆர்டிஸ்ட். எல்லா படத்திலும், நான் இருப்பேன். இவ்வளவு பெரிய படத்தை கட்டி ஆள்வது சுந்தர் சி சாரால் தான் முடியும். சின்ன தவறு செய்தாலும் கரெக்டாக கண்டுபிடித்துச் சரி செய்து விடுவார். மிகத் திறமையானவர். இவரைப்போல் அனுபவம் வாய்ந்த ஒரு இயக்குநர் தமிழ் சினிமாவில் இப்போது யாருமே இல்லை. படத்தில் வேலை பார்ப்பது போன்றே இருக்காது. இப்படம் மற்ற அரண்மனை படங்கள் போல் இருக்காது. அதைவிட அட்டகாசமாக இருக்கும். தமன்னா, ராஷிகண்ணா நன்றாக நடித்துள்ளனர். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நடிகர் யோகிபாபு பேசியதாவது… இப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த சுந்தர் சி சார் தயாரிப்பாளருக்கு நன்றி. கலகலப்பு படத்தில் வேலை பார்த்த போது என்னை அழைத்து நீங்க நடந்து வரும்போது உங்க தலைக்குப் பின்னாடி ஒரு சக்கரம் சுத்துது என வாழ்த்தினார். அவரது ஆசிர்வாதத்தால் இன்னும் திரையுலகில் என் வாழ்க்கை சக்கரம் சுத்த வேண்டும். அவர் நிறைய வாய்ப்பு தர வேண்டும். எல்லோருக்கும் என் நன்றிகள்.
நடிகை ராஷி கண்ணா பேசியதாவது… எல்லா அரண்மனை படத்தை விடவும் இந்த படத்தின் டிரெய்லர் அட்டகாசமாக இருக்கிறது. இந்தப் படம் கண்டிப்பாக எல்லா படத்தை விடவும் பிரம்மாண்டமாக இருக்கும். சுந்தர் சி அத்தனை அழகாக படத்தை எடுத்துள்ளார். அவர் இந்த மாதிரி கமர்ஷியல் படங்களை எடுப்பதில் வல்லவர். இந்தப் படம் வேலை பார்த்தது ரொம்ப ஜாலியாக இருந்தது. நடிகை தமன்னாவுடன் இணைந்து தெலுங்கு படத்தில் வேலை செய்துள்ளேன். இப்போது தமிழில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. படம் அட்டகாசமாக வந்துள்ளது. ஹிப் ஹாப் ஆதி சூப்பர் பாடல்கள் தந்துள்ளார். இப்படத்தில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. படம் கண்டிப்பாக உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் நன்றி.
நடிகை தமன்னா பேசியதாவது… சுந்தர் சி, குஷ்பூ மேடம் எனக்கு ஃபேமிலி மாதிரி. பணம், வாய்ப்பு எல்லாம் அப்புறம் தான். என்னை அவ்வளவு நன்றாக பார்த்துக் கொண்டார்கள். சுந்தர் சி சார் உடன் என்றால் ஓகே என்ன படம் வேண்டுமானாலும் செய்யலாம், அவரை அவ்வளவு நம்புகிறேன். மிகத் திறமையான இயக்குநர். அவர் நினைத்தால் ஹீரோக்களை வைத்து என்ன மாதிரி படங்கள் வேண்டுமானாலும் செய்ய முடியும். ஆனால் பெண்களை மையமாக வைத்து எல்லோரும் ரசிக்கும் படி கதை செய்துள்ளார், அவருக்கு நன்றி. குஷ்பூ மேடத்தால் முடியாதது எதுவுமே இல்லை. சினிமா, பொலிடிகல் என எல்லாவற்றிலும் அசத்துகிறார். அவர் என் இன்ஸ்பிரேஷன். ராஷி கண்ணாவும் நானும் ஏற்கனவே தெலுங்கு படம் செய்துள்ளோம். மிகச்சிறந்த கோ ஆர்டிஸ்ட், மிக உண்மையானவர். என்னை அதிகம் நேசிப்பவர். அவர் நிறைய பியூட்டிஃபுல் படங்கள் செய்துள்ளார் வாழ்த்துக்கள். கோவை சரளா மேடம் செம்ம ஜாலியானவர். இப்படத்தில் நானும் இணைந்திருப்பது மகிழ்ச்சி. இப்படம் வெளியாவதற்காக நானும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன். நன்றி
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி பேசியதாவது… அரண்மனை 4 சுந்தர் சி அண்ணாவுடன் ஆறாவது படம். என்னை இசையமைப்பாளராக, ஹீரோவாக அறிமுகப்படுத்தி என் மீது மிகப்பெரும் அன்பையும், நம்பிக்கையையும் வைத்திருக்கும் அண்ணாவிற்கு நன்றி. அரண்மனை 4 எல்லாப் படங்களையும் விடப் பிரம்மாண்டமான வெற்றி பெறும். தமன்னா, ராஷிகண்ணா இருவரும் மிக அழகாக இருக்கிறார்கள். படத்தில் அத்தனை அழகாக நடித்துள்ளனர். யோகிபாபு, சரளா மேடம் எல்லோருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது… எல்லோருக்கும் வணக்கம். அரண்மனை இப்போது நான்காம் பாகத்துடன் வந்துள்ளேன், முதல் பாகம் செய்யும் போது, இது இப்படி சீரிஸாக மாறும் என நினைக்கவே இல்லை. அரண்மனை 3 படத்திற்கு கிடைத்த வெற்றி தான் இப்படம் உருவாக காரணம். எப்போதும் நான் பணத்திற்காக இந்தப்படத்தைச் செய்யலாம் என நான் நினைத்ததே இல்லை. ஒரு நல்ல கதை, ஐடியா கிடைத்ததால் மட்டுமே இந்தப்படத்தைத் துவக்கியுள்ளேன். இப்படத்திற்கும் பின் ஒரு அட்டகாசமான ஐடியா கிடைத்தது. நம் நாட்டை ஆக்கிரமித்தவர்கள் வட இந்தியாவைப் பிடித்த அளவு, அஸ்ஸாம் பக்கம் பிரம்மபுத்திராவை தாண்டிப் போகவில்லை. அது ஏன் எனக் கேட்டு ஆராய்ந்தால், பாக் எனும் ஆவிகளின் சக்தி பற்றிய சுவாரஸ்யமான விஷயம் சிக்கியது. அதை வைத்து, மிக சுவாரஸ்யமான கதையை அரண்மனை 4 இல் செய்துள்ளோம். நான் வேறொரு படத்தில் வேலை செய்த போது இந்த ஐடியா கிடைத்தது. இதில் வேலை பார்க்கலாமா? எனத் தயங்கினேன். அந்த நேரத்தில் ஒரு பயணம் மேற்கொள்கையில் ஒரு சின்ன பெண், என்னிடம் அங்கிள் அரண்மனை 4 எப்போது வருமென்றார் ?, அந்தப்பெண் என் தயக்கத்தை போக்கிவிட்டார். உடனே இந்த படம் ஆரம்பித்து விட்டேன். என் தயாரிப்பாளர்கள் கதையே கேட்கவில்லை. முழு ஆதரவு தந்தார்கள். அரண்மனை முதல் மூன்று படங்களை விட இப்படத்தில் எல்லாமே பிரம்மாண்டமாக இருக்கும். இப்படத்தில் இரண்டு ஹீரோயின், ஒரு ஹீரோயின் ஒரே நேரத்தில் அவரைப் பார்த்தால் பயமாகவும் இருக்கனும், பரிதாபமும் வரனும், குழந்தைக்கு அம்மாவாக வரணும், யாரை அணுகுவது என்று நினைத்தேன். ஆனால் தமன்னா கேட்டவுடன் ஒத்துக்கொண்டார். அட்டகாசமாக நடித்துள்ளார். அவர் கேரியரில் இப்படம், அவரது வித்தியாசமான முகத்தைக் காட்டும். இப்படம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக இருக்கும். ராஷிக்கண்ணா எனக்கு மிகவும் கம்ஃபோர்ட்டான ஆர்டிஸ்ட். என்னை முழுமையாக நம்புவார். இப்படத்தில் நன்றாகச் செய்துள்ளார். அரண்மனை படத்தில் காமெடி முக்கியம். என் படத்திற்கு ரசிகர்கள் வரக்காரணம் காமெடி தான், அதை நிறைவேற்றனும். பேப்பரில் நாங்கள் எழுதுவது பாதி தான், ஆர்டிஸ்ட் தான் அதை முழுதாக மாற்ற வேண்டும். அந்த வகையில் யோகி பாபு, சரளா மேடம், VTV கணேஷ், சிங்கம் புலி எல்லோரும் கலக்கியுள்ளார்கள். மொத்தத்தில் அரண்மனை 4 மனதிற்கு மிகப்பிடித்த படமாக வந்துள்ளது. பின்னணி இசையில் வழக்கமான பேய் படம் போல இல்லாமல் வித்தியாசமாகச் செய்துள்ளார் ஆதி. எனக்கு எப்போதும் சப்போர்ட்டாக இருக்கும் என் மனைவிக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. படம் ஏப்ரலில் வருகிறது ஆதரவு தாருங்கள் நன்றி.
அரண்மனை படத்தின் நான்காம் பாகம், மிகப்பெரும் பொருட்செலவில், பெரும் நட்சத்திரக்கூட்டணியுடன் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கவலை மறந்து சிரித்துக் கொண்டாடும் வகையிலான ஹாரர் காமெடியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சுந்தர் சி.
இப்படத்தில் சுந்தர் சி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, கோவை சரளா, கே ஜி எஃப் ராம், VTV கணேஷ், சேசு, ஜேபி, டெல்லி கணேஷ், சந்தோஷ் குமார், தீரஜ் விஷ்ணு ரத்தினம், S.நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி உட்பட பெரும் எண்ணிக்கையிலான நட்சத்திரக்கூட்டம் இணைந்து நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப குழு
தயாரிப்பு – Avni Cinemax (P) Ltd & Benz Media PVT LTD எழுத்து இயக்கம் – சுந்தர் சி வசனம் – வெங்கடேஷ் இசை : ஹிப்ஹாப் தமிழா ஒளிப்பதிவு – இசக்கி கிருஷ்ணசாமி படத்தொகுப்பு : ஃபென்னி ஆலிவர் கலை இயக்கம் – பொன்ராஜ் சண்டைப்பயிற்சி – ராஜசேகர் K ஸ்டில்ஸ் – V.ராஜன் மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
தமிழ் திரையுலகில் திரைப்படத்தை உருவாக்குவதற்கு 24 கிராஃப்ட்டுகள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது மரபு. இதுவரை தமிழ் திரையுலகில் ‘அஷ்டவதானி’, ‘தசாவதானி’ போன்ற சாதனையாளர்களை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். முதன்முறையாக திரையுலகின் 24 கிராஃப்ட்டுகளையும் சுயமாக கற்றுக்கொண்டு, ‘பேய் கொட்டு'(PEI KOTTU)எனும் ஹாரர் திரில்லர் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் கின்னஸ் சாதனையாளரான லாவண்யா. இதனுடன் சப்டைட்டில்ஸ், சென்ஸார் ஸ்கிரிப்ட், 5.1 மிக்ஸ், சவுண்ட் இன்ஜினியரிங் உள்ளிட்ட துணை பணிகளையும் மேற்கொண்டு இப்படத்தினை ஒற்றை ஆளாக தோளில் சுமந்து உருவாக்கி இருக்கிறேன். மொத்தம் 31 துறைகளில் இப்படத்திற்காக அயராது உழைத்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் எஸ். லாவண்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேய் கொட்டு’ எனும் திரைப்படத்தில் லாவண்யா கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ். லாவண்யா- பி. வசந்த் -ஜான் விக்டர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். லாவண்யா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கம் மற்றும் படத்தொகுப்பு பணிகளையும் இவரே மேற்கொண்டிருக்கிறார். ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஓம் சாய் புரொடக்ஷன்ஸ் (OM SAI PRODUCTIONS) எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். லாவண்யா(S. Lavanya) தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி ஒன்றரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” சுயாதீன திரைப்பட படைப்பாளியான நான் திரைத்துறையில் இயங்கும் அனைத்து கிராப்டுகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என விரும்பினேன். இதைத்தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, டப்பிங், எடிட்டிங், சிங்கிங், ஆக்டிங், ஃபைட், டான்ஸ், கேமரா, லிரிக்ஸ், கலர் கிரேடிங், இ எஃப் எக்ஸ், வி எஃப் எக்ஸ், எஸ் எஃப் எக்ஸ், காஸ்டிங், ஆர்ட், மேக்கப், லொகேஷன்… ஆகிய 31 கிராப்ட்டுகளையும் சுயமாக கற்று, ‘பேய் கொட்டு’ எனும் இந்த ஹாரர் திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறேன். ‘பேய் கொட்டு’ என்பது தவறுகள் செய்தால் தலையில் கொட்டுவார்கள் அல்லவா… அதே போல் நாம் ஏதேனும் தவறாக நினைத்தால், பேய் நம் தலையில் கொட்டும். இது வித்தியாசமான கதைக்களமாகவும், சுவாரசியமான திரைக்கதையாகவும் உருவாகி இருக்கிறது. ” என்றார்.
இதனிடையே சுயாதீன திரைப்பட கலைஞர் ஒருவர் திரையுலகின் 31 கிராஃப்ட்டுகளையும் கற்றுக்கொண்டு, ஒற்றை ஆளாக முழு நீள திரைப்படத்தை உருவாக்கி இருப்பது தமிழ் திரை உலகில் முதன்முறை என்பதும், இத்தகைய முயற்சி திரையுலகினரையும், ரசிகர்களையும், பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது என்பதும், ‘பேய் கொட்டு’ எனும் திரைப்படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு லாவண்யா எனும் பெண்மணியின் சாதனை முயற்சியாக பார்ப்பதால் இதற்கான வெற்றி உறுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பத்துக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1.BOOK OF WORLD RECORDS USA (America)
2.WORLD WIDE BOOK OF RECORDS, (UK)
3.WORLD ACHIEVERS BOOK (UK)
4.INFLUENCER BOOK OF WORLD RECORDS(UK)
5.INDIA’SWORLDRECORDS(INDIA)
6.UNICORN WORLD RECORDS (UK)
7.KALAM’S WORLD RECORD
8.SIGARAM AWARDS 2023 from Director k.Bakyaraj sir
9.LONDON BOOK OF WORLD RECORDS for covering31 departmens (3 Awards)(LONDON)
10.LONDON BOOK OF WORLD RECORDS for BEST DIRECTOR & ACTOR
11.LONDON BOOK OF WORLD RECORDS for BEST MUSIC DIRECTOR & PLAYBACK SINGER
முதல்முறையாகக் குழந்தைகள் கொண்டாட Sofa Boy கலக்கும் “ஸ்கூல் லீவ் விட்டாச்சு” ஆல்பம் பாடல் !!
Bereadymusic தயாரிப்பில், சமீபத்திய சென்ஷேசன், குட்டி ஸ்டார் Sofa Boy நடிப்பில், இந்த விடுமுறைக் காலத்தைக் கொண்டாடும் வகையில், குழந்தைகளுக்காக பிரத்யேகமாக, டோங்லி ஜம்போ இயக்கத்தில், இசையமைப்பாளர் சுதர்ஷன் வரிகள் மற்றும் இசையமைப்பில், ஸ்கூல் லீவ் விட்டாச்சு ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது .
சமீபத்தில் ஒற்றை வீடியோ மூலம் இணையம் முழுக்க ஃபேமஸானவர் குட்டி ஸ்டார் Sofa Boy. கண் இமைக்கும் ஸ்பீடில், கடகடவென பேசி, மயக்கும் குரலில் இவர் அசத்திய Sofa விற்பனை வீடியோ பெரும் வைரலாக, ஒரே நாளில் மிகப்பெரியளவில் பிரபலமானார். பொது மக்கள் மட்டுமல்லாது திரை பிரபலங்களும் இவரது திறமையைப் பாராட்டி, பல சினிமா வாய்ப்புகளை தந்தனர்.
தற்போது அதன் அடுத்த கட்டமாக சுயாதீனா இசை ஆல்பங்கள் வெளியீட்டில் தொடர்ச்சியாக அசத்தி வரும் Bereadymusic நிறுவனம், Sofa Boy நடிப்பில் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆல்பம் ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள இந்த ஆல்பம் பாடல் ரசிகர்களின் வரவேற்பில், சார்ட்பஸ்டரில் இடம்பிடித்து வைரலாகி வருகிறது.
Bereadymusic தயாரித்துள்ள இந்த வீடியோ ஆல்பம் பாடலை எழுதி இசையமைத்துள்ளார், இசையமைப்பாளர் சுதர்ஷன். பல வெற்றிபெற்ற ஆல்பம் பாடல்களை உருவாக்கிய டோங்லி ஜம்போ இப்பாடலை வடிவமைத்து இயக்கியுள்ளார். பல டிரெண்டிங் ஆல்பம் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்துள்ள நடன இயக்குநர் ரிச்சி ரிச்சர்ட்ஸன் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
முதல்முறையாகத் தமிழில், குழந்தைகள் நடிப்பில், குழந்தைகளுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டிருப்பது இப்பாடலின் சிறப்பு என்றாலும், இப்பாடல் அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படி அமைந்துள்ளது.
இப்பாடலை இங்கே ரசிக்கலாம் லிங்க் : https://bit.ly/4adhGjH