‘ சில ஆண்டுகளுக்கு முன்பு காரைக்காலில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் சம்பவத்தை எடுத்துக் கொண்டு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகி இருப்பது தான் ‘லாரா ‘.
இப்படத்தை அறிமுக இயக்குநர் மணி மூர்த்தி இயக்கி உள்ளார்.எம் கே அசோசியேட்ஸ் என்ற பெயரில் கோவையில் கட்டுமானத் துறையில் முத்திரை பதித்த தொழிலதிபர் M.கார்த்திகேசன் தனது எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ளார்.
ஆர்.ஜெ.ரவின் ஔிப்பதிவு செய்துள்ளார். ரகு சரவண் குமார் இசையமைத்துள்ளார். வளர்பாண்டி படத்தொகுப்பு செய்துள்ளார்.பாடல் வரிகள் – M.கார்த்திகேசன், முத்தமிழ் செய்துள்ளார்கள். ‘லாரா ‘ படத்தில் பிடிச்சிருக்கு, முருகா புகழ் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார்.அனுஸ்ரீ, வெண்மதி, வர்ஷினி என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் மேத்யூ வர்கீஸ் , கார்த்திகேசன், எஸ்.கே. பாபு ஆகியோர் நடித்திருக்கின்றனர். சஸ்பென்ஸ்,பரபரப்பு நிறைந்த திரில்லர்,மர்மங்கள் கொண்ட புலனாய்வு என்று மூன்றும் இணைந்த வகைமையில் அமைந்த கதையே ‘லாரா ‘என்கிற விறுவிறுப்பான படமாக உருவாகியுள்ளது. சில நாட்கள் முன்பு படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் சத்யராஜ் அவர்கள் வெளியிட்டு பாராட்டிய நிலையில், தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை தங்கள் மதிப்பிற்குரிய நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்கள் வெளியிட்டது, தங்களுக்கு மகிழ்ச்சி எனவும் படத்தின் பர்ஸ்ட் லுக்கை பார்த்து, லாரா தலைப்பு மற்றும் கதைக்களம் பற்றி கேட்டு பாராட்டி வாழ்த்தியது இப்படத்திற்குக் கிடைத்த இன்னொரு பலமாக மாறியுள்ளது எனவும் படக்குழுவினர் புதிய உற்சாகத்துடன் இருக்கிறார்கள்.
நடிகர் தியாகராஜனின் மகன் என்ற அடையாளத்துடன் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரசாந்த், அரும்பு மீசையுடன் தன் பயணத்தை பிறகு பாலிவுட் ஹீரோவை போன்ற தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்து, மீண்டும் மீசை, தாடியுடன் ஒரு ஆண் மகனுக்கே உண்டான அழகுடன் வலம் வந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர். குறிப்பாக . ’ஆணழகன்’ என்ற தலைப்புக்கு உண்மையிலேயே பொருத்தமானவர் பிரசாந்த் என்றால் மிகையல்ல . இவர் மீசை தாடியுடன் இருந்தாலும் அழகு, முழுக்க முழுக்க க்ளீன் ஷேவ் லுக்குடன் தோன்றினாலும் அழகு என்று சொல்லத்தக்க வகையில் இருப்பவர் இவர் மட்டுமே . பிரசாந்தை நகர்ப்புற சாக்லேட் பாய் இளைஞன் என்ற கதாபாத்திரங்களில் மட்டும் சுருக்கிவிட முடியாது. கிராமத்துப் படம், காதல் படம், ஆக்ஷன் படம், கதையம்சமுள்ள படங்கள் என பல வகையான படங்களில் நடித்து வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டு இந்த திரையுலகில் உழைத்துக் கொண்டேதான் இருக்கிறார். இதோ இப்போது ‘அந்தாதுன்’ இந்திப் படத்தின் ரீமேட் ஆன அந்தகன்-னில் நடித்து முடித்து ரிலீஸ் பிசியில் இருக்கிறார்.
இந்நிலையில் இந்த அந்தகன் அனுபவம் குறித்து பிரஷாந்திடம் பேசிக் கொண்டிருந்த போது ,”நாளை ஆகஸ்ட் 9ம் தேதி ‘அந்தகன்’படம் ரிலீசாகப் போகுது தமிழகத்தில், 400க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியிடுகிறார்கள்.இதில் என்னுடன் சிம்ரன், பிரியா ஆனந்த், நவரச நாயகன் கார்த்தி, சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உட்பட பலர் நடித்துள்ளனர். மிகுந்த பொருட்செலவில் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அந்தாதுன் படத்துக்கும், அந்தகன் படத்துக்கும் நிறைய வித்தியாசங்களை எதிர்பார்க்கலாம். இது, ‘ரீமேக்’ படம் அல்ல. ‘ரீ மேட்’ படம். அப்பாவின் இயக்கம், பிரமிக்க வைக்கும் அளவுக்கு இருக்கும். ரசிகர்களுக்கு, இப்படம் நிச்சயம் பிடிக்கும். படத்தில், பார்வையற்றவராக நடித்தது சவாலாக இருந்தது.
கொஞ்சம் விரிவாக சொல்வதானால் இந்தப் படத்தில் ஒவ்வொரு சீனிலும் சஸ்பென்ஸ் இருக்கும். பிளாக் காமெடி இருக்கும். அதனால் சிரித்துக் கொண்டே இருக்கும்போது திடீர் ஆச்சரியங்கள் வரும். குறிப்பா என்னுடைய திறமையை வெளிப்படுத்தற மாதிரி பல படங்கள்ல நடிச்சிருந்தாலும். பியானோ இசைக் கலைஞனா நடித்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. எனக்கு நிஜமாகவே பியானோ இசைக்கத் தெரியும் என்பதால், என் திறமையை வெளிப்படுத்த இந்தப் படத்தை பயன்படுத்திக் கொண்டேன். அது மட்டுமில்லாமல், தமிழுக்கு மையக் கதையைக் கெடுத்திடாத வகையில், அப்பா சின்னசின்ன மாற்றங்கள் செய்திருக்கிறார். தமிழுக்கு சரியாக இருக்காதுன்னு நினைச்ச சில காட்சிகளை மாத்தியிருக்கிரார்.கதைக்கு இன்னும் அழுத்தம் கொடுக்கும் விதமாவும் கதையை வேகமாக நகர்த்தும் பாணியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் உண்டு.. குறிப்பாக சொல்வதானால் எனக்கும் சமுத்திரக்கனி அண்ணாவுக்கும் ஒரு பைட் எடுத்தார்கள். இதற்காக ஐந்து நாள் ஷூட் நடத்தினோம். அது மிக மிரட்டலான காட்சியாக அமைந்துள்ளது. இதற்காக மாடியில் இருந்து நிஜமாகவே குதித்ததெல்லாம் தனிக் கதை . இந்த சணடைக் காட்சி தமிழுக்காக சேர்த்த விஷயம்.
மேலும் வெயிட்டான கதை என்பதாலேயே கார்த்திக் அண்ணா, சிம்ரன், சமுத்திரக்கனி அண்ணா. ஊர்வசி , லீலா சாம்சன், செம்மலர், வனிதா விஜயகுமார், யோகிபாபுன்னு நிறைய பேர் கமிட் ஆகி உள்ளார்கள். ஒவ்வொருவரும் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்கள். இது எனக்கு புதிய அனுபவம். பிஸியாக இந்திப் படங்கள் பண்ணி கொண்டிருக்கும் ரவி யாதவைக் கூட்டிட்டு வந்து ஒளிப்பதிவு பண்ண வைத்திருக்கிறார் அப்பா . பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் ஒவ்வொன்றும் கவனிக்க வைக்கும் .கலை இயக்குநர் செந்தில் ராகவன் உள்பட எல்ல டெக்னீஷியந்களும் தங்களின் சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள்.
முன்னொரு காலத்தில் இளசுகளுந் அதரச ஹீரோவாக இருந்த கார்த்திக் சாருக்கு தனி முக்கியத்துவம் இருக்கிறது இந்தப் படத்தில் 1980-ம் வருட கார்த்திக்கை அவர் வரும் ஒவ்வொரு சீனிலும் பார்க்கலாம். அவர் கேரக்டர் எல்லாருக்கும் பிடிக்கும் படி இருக்கும். கதையை கேட்டு , பார்த்து இனவால்வ ஆகி தன் பாணியில நடித்து அசத்தி இருக்கிறார்.
அப்புறம் தமிழ் சினிமாவில் எந்த ஜோடிகளும் நிகழ்த்திக்காட்டாத காதல், மோதல், ஆக்சன் என பல ஜானர்களில் நடித்து கலக்கியுள்ள சிம்ரனும் நானும் சேர்ந்து ஆறு படங்கள்ல ஜோடியா நடித்து எல்லோரையும் கவர்ந்து உள்ளோம். அந்தக் கெமிஸ்ட்ரி வேற மாதிரி இருக்கும். இந்தப் படத்தில் சஸ்பென்ஸ் நிறைந்த கேரக்டரில் சிம்ரன் வருகிறார். கிடைச்ச எல்லா ரோலையும் அவர் தன் பெர்ஃபார்மன்ஸால் மிரட்டுவது வாடிக்கை .அந்த ஸ்டைலில் அந்த கேரக்டருக்குச் சரியான நடிப்பை கொடுத்து அசத்தி இருக்கிறார். நிச்சயமா அவர் நடிப்புக்கு விருது கிடைக்கும் என்றே நம்புகிறேன் .வனிதா விஜய்குமார் கேரக்டரைப் பார்க்கும் ஒவ்வொருவரும் கைத் தட்டி ரசிக்கப் போவது நிஜம்.. அது போல நிக தமிழ் பெண் ஆன பிரியா ஆனந்துக்கு இனி கால்ஷீட் கொடுப்பதில் பிசியாகி விடுவார்.. அந்த அளவுக்கு எல்லாருக்கும் சமமாக, சவாலான வாய்ப்பு வழங்கி இருக்கிறார் இயக்குநரும் அப்பாவுமான தியாகராஜன் சார்.
இனி வெள்ளித்திரையில் எனக்கு இடைவெளி இருக்காது. இது வரை ஒவ்வொரு கதைக்கும் என்னைத் தயார்படுத்திக் கொள்ள அந்த கால அவகாசம் தேவையாக இருந்தது. இனி அது இருக்காது. தொடர்ந்து நடிக்கப் போகிறேன்.இப்ப தினமும் நிறைய இயக்குநர்கள் வந்து கதை சொல்வதும் தயாரிப்பாளர்கள் வந்து போவதும் அதிகரித்து விட்டது. .இந்த அந்தகன்-னுக்கு அடுத்ததாக விஜயுடன் நடித்த கோட் ரிலீஸ் ஆகப் போகிறது. நெக்ஸ்ட் அமிதாப் பச்சன் சாருடன் சேர்ந்து நடிக்கும் ‘ஒரு படம் பண்ணுகிறோம். அதுவும் பெரிய பட்ஜெட் படம். நான்கு மொழிகளில் உருவாகிறது. இது தவிர விஜய் ஆண்டனி நடித்த ‘நான்’ படத்தை இந்தியில் ‘ரீசார்ஜ்’ என்னும் டைட்டிலில் ரீமேக் பண்ணுகிறோம். அது பற்றிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வரும்” என்று உற்சாகமாகச் சொன்னார் ஜூனியர் மம்பட்டியான்.
சென்னை, ஜூலை 30, 2024: நடிகர் விஜய் சேதுபதி, வரவிருக்கும் ‘ரெட் பிளவர்’ படத்தின் கதாநாயகன் விக்னேஷ் மற்றும் அதன் அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூபாண்டியனை சந்தித்தார்.
“ரெட் பிளவர்” படத்தின் இரண்டாவது தோற்றத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டதற்கு விஜய் சேதுபதிக்கு நன்றிதெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது, இது ரசிகர்கள் மற்றும் பட குழுவினர் மத்தியில் குறிப்பிடத்தக்க சந்தோசத்தை உருவாக்கியுள்ளது. தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்ட ‘ரெட் பிளவர்’ படத்தின் இரண்டாவது போஸ்டர் மிகுந்த வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு படத்துக்கு கிடைத்துள்ளது.
இவர்களது சந்திப்பின் போது, ‘ரெட் பிளவர்’ படத்தின் ட்ரைலரை விஜய் சேதுபதி கண்டுக்களித்தார். ட்ரைலர் பார்த்து வியப்படைந்த அவர், பட குழுவினரின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்காகப் பாராட்டினார். “படம் மிகவும் பிரமாண்டத்துடன் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது மற்றும் தொழில்நுட்ப ரீதியாக இது மிகவும் நன்றாக இருக்கிறது என்று கூறினார், குறிப்பாக இசை மிக அற்புதமாக அமைக்கப்பட்டிருக்குறதாகவும் தெரிவித்தார்,காட்சி ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் திறமையான சினிமா அனுபவத்தை உருவாக்கும் படக்குழுவின் அர்ப்பணிப்பை பாராட்டினார்.
ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் பேனரில் கே.மாணிக்கம் மிக பிரம்மாண்டமாக அதிக பொருட் செலவில் தயாரித்துள்ள ‘ரெட்பிளவர்‘ திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமாக இருக்கும். கதாநாயகியாக மனிஷா ஜஷ்னானி நடிக்க, படத்தின் மற்ற முக்கியகதாபாத்திரத்தில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான்விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபிகண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ஒளிப்பதிவாளராக தேவ சூர்யா, இசையமைப்பளராக சந்தோஷ் ராம், படத்தொகுப்பு அரவிந்த், விஷுவல் எஃபெக்ட்களை பிரபாகரன் மேற்பார்வையிட, கதை, திரைக்கதை வசனம் மற்றும் எழுதி இயக்குகிறார் இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன்.
இணையற்ற அதிரடி ஆக்சன் கலந்த திரைப்பட அனுபவத்தை வழங்க இப்படம் தயாராகிக்கொண்டிருக்கிறது. இதன் விளைவாக ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் கூடிக்கொண்டே இருக்கிறது. விஜய்சேதுபதியின் பாராட்டு பட குழுவினருக்கு ஊக்கத்தை அளித்துள்ளது, ரெட் பிளவேர் திரைப்படம் இது வரை தமிழ் சினிமா திரைப்படத்தில் பேசப்படாத புதிய விஷயங்களை வெள்ளி திரையில் மிக பிரம்மாண்டமாக சித்தரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இப்படத்தின் மோஷன் போஸ்ட்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட உள்ளார்.
BIGBOSS புகழ் அமீர் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை, மற்றும் படப்பிடிப்பு மிக விமரிசையாக நடைபெற்றது
P.G.முத்தையா அவர்களின் உதவியாளர் மற்றும் குறும்பட இயக்குனர் P.T. தினேஷ் இயக்கத்தில் SDICE FILM MAKERS தயாரிப்பில் உருவாகும் PRODUCTION NO : 1 படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கியது.
இன்றும் சில மக்கள் எற்று கோள்ள முடியாத வாழ்வியலை மைய கருவாக கொண்டு கதாநாயகனின் கதாபத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார், பிரியதர்ஷினி, மேலும் பல நடிகர்களும் நடிக்க உள்ளனர்.
ஒளிப்பதிவு – R.J.ரவீன் கலை இயக்குனர் – இன்பபிரகாஷ் படத்தொகுப்பு – S .மணிகுமரன் நடன இயக்குனர்- மானாட மயிலாட ஃபயாஸ் இசையமைப்பாளர்- சாய் பாஸ்கர், அபுபக்கர் தயாரிப்பு நிர்வாகி – J.பிரேம் ஆனந்த் தயாரிப்பு – முகமது சமீர் மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் (S2 மீடியா)
பிக்பாஸ் புகழ் அமீர் நடிக்கும் புதிய படம்
BIGBOSS புகழ் அமீர் கதாநாயகனாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் பூஜை, மற்றும் படப்பிடிப்பு மிக விமரிசையாக நடைபெற்றது
P.G.முத்தையா அவர்களின் உதவியாளர் மற்றும் குறும்பட இயக்குனர் P.T. தினேஷ் இயக்கத்தில் SDICE FILM MAKERS தயாரிப்பில் உருவாகும் PRODUCTION NO : 1 படத்தின் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 9 ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கியது.
இன்றும் சில மக்கள் எற்று கோள்ள முடியாத வாழ்வியலை மைய கருவாக கொண்டு கதாநாயகனின் கதாபத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் ஜித்தன் ரமேஷ், இயக்குனர் பேரரசு, சிங்கம்புலி, ஜெயபிரகாஷ், சமீர் தர்ஷன், காதல் சுகுமார், பிரியதர்ஷினி, மேலும் பல நடிகர்களும் நடிக்க உள்ளனர்.
ஒளிப்பதிவு – R.J.ரவீன் கலை இயக்குனர் – இன்பபிரகாஷ் படத்தொகுப்பு – S .மணிகுமரன் நடன இயக்குனர்- மானாட மயிலாட ஃபயாஸ் இசையமைப்பாளர்- சாய் பாஸ்கர், அபுபக்கர் தயாரிப்பு நிர்வாகி – J.பிரேம் ஆனந்த் தயாரிப்பு – முகமது சமீர் மக்கள் தொடர்பு – சதீஷ்குமார் (S2 மீடியா)
திரைப்பட இயக்குநரும், நடிகரும், எழுத்தாளருமான சீனு. ராமசாமி எழுதிய ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலினை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார்.
தேசிய விருதினை பெற்ற திரைப்பட படைப்புகளை உருவாக்கிய இயக்குநர் சீனு. ராமசாமி இலக்கிய உலகிலும் தன்னுடைய தடத்தினை பதித்திருக்கிறார். இவர் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’ எனும் கவிதை நூலை எழுதியிருக்கிறார். இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நூல் வெளியீட்டு விழாவிற்கு எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வரவேற்புரையை பாரதி புத்தகாலயம் பதிப்பக உரிமையாளர் க. நாகராஜன் நிகழ்த்தினார். கவிஞர் நந்தலாலா இந்த நூலுக்கான ஆய்வுரை அளிக்க..’ மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக எழுத்தாளரும், இயக்குநருமான சீனு. ராமசாமி நன்றி உரையாற்றினார்.
இந்நிகழ்வில் ஏராளமான வளரும் கவிஞர்களும் புத்தக வாசிப்பாளர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கலந்து கொண்டனர்.
இளமைக் கால நினைவுகளைப் போற்றும், பொழுதுபோக்கு சீரிஸான “கனா காணும் காலங்கள்” சீரிஸின், முதல் இரண்டு சீசன்களின் அற்புதமான வெற்றியைத் தொடர்ந்து, இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், தற்போது ’கனா காணும் காலங்கள்’ சீரிஸின் அடுத்த சீசனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
‘கனா காணும் காலங்கள்’ முதலில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒரு சீரியலாக ஒளிபரப்பப்பட்டது. பள்ளி மாணவர்கள் மற்றும் அவர்களின் பள்ளி வாழ்க்கையைச் சுற்றி நடக்கும் கதைக்களம், மக்கள் மத்தியில் உடனடி ஈர்ப்பை ஏற்படுத்தியதுடன், மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த சீரிஸ் அனைத்து தரப்பு பார்வையாளர்களிடமும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அவர்களது வாழ்வியலைக் காட்டியதால், மிகப்பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது.
வெப் சீரிஸின் முதல் சீசனுக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்த நிலையிலும், அடுத்தடுத்த எபிசோடுகளுக்காக ரசிகர்களிடமிருந்து பெருமளவிலான கோரிக்கைகள் குவிந்ததையும் அடுத்து, டிஸ்னி+ ஹாட்ஸ்டார், கடந்த ஆண்டு ஏப்ரல் 21 அன்று, இந்த சூப்பர்ஹிட் சீரிஸின், இரண்டாவது சீசனை வெளியிட்டது.
இரண்டாம் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, தற்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம், பள்ளி மாணவர்களை மையமாக வைத்து உருவாகும், இந்த சீரிஸின் மூன்றாவது சீசனை வெளியிட முடிவு செய்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது சீசன்களைப் போலவே, இந்த சீசனும் அனைத்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் , இன்றைய மாணவர்களின் வாழ்வின் மகிழ்ச்சிகள், கண்ணீர், அச்சங்கள், ஆச்சரியங்கள், வலிகள் மற்றும் சிலிர்ப்புகள் என அனைத்தையும் படம்பிடித்துக் காட்டும்படி உருவாகவுள்ளது.
இந்த சீரிஸில் நடிக்கவுள்ள நடிகர்கள், குழுவினர் மற்றும் இந்த சீரிஸ் பற்றிய விவரங்களை, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும்.
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்கள் தங்கள் பொழுதுபோக்கைப் பார்க்கும் முறையை மாற்றியுள்ளது – அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது. மேலும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.
The 8th edition of the India International Footwear Fair (IIFF) 2024 was inaugurated today by the Honourable Minister of Commerce & Industry Shri Piyush Goyal at Bharat Mandapam, New Delhi. The inauguration was graced by the presence of distinguished guests and government dignitaries, including Mr. Pradeep Singh Kharola, Chairman & Managing director, ITPO, Mr. V. Noushad, National President of CIFI, Mr. Rajat Agarwal, Executive Director, ITPO and Mr. Raj Kumar Gupta, Chairman of the Organizing Committee IIFF 2024. Scheduled from 08 th to 10 th August 2024, this prestigious event is organized by the India Trade Promotion Organisation (ITPO) in collaboration with the Confederation of Indian Footwear Industries (CIFI). This event underscores its growing significance as a premier global footwear industry event. The 8th India International Footwear Fair (IIFF) will feature over 200 global exhibitors presenting a wide range of products, including high-fashion, luxury, sports, and everyday footwear. A key highlight of IIFF 2024 is its focus on sustainability, featuring a dedicated section for eco-friendly products and practices, reflecting the industry’s commitment to environmental responsibility. Adding to the excitement, the second day of the event will feature a fashion show showcasing the latest trends in footwear. The fair will display a diverse array of products, including footwear, machinery and equipment, technology, compounds, raw materials, components, synthetic materials (PVC and PU), chemicals, soles, fabrics, and leather goods. With an expected attendance of over 20,000 business visitors, IIFF 2024 promises to be a significant platform for showcasing offerings and finalizing business deals with both national and international buyers. “Today’s inauguration of the 8th India International Footwear Fair (IIFF) 2024 marks a significant milestone for the global footwear industry. With the Honourable Minister of Commerce & Industry Shri Piyush Goyal leading the ceremony, we are thrilled to showcase the latest in footwear innovation and sustainability. This fair not only highlights our commitment to environmental responsibility but also provides a premier platform for connecting industry leaders and finalizing key business deals. We look forward to welcoming over 20,000 visitors and celebrating the future of footwear,” said Mr. V. Noushad, President of CIFI.
An article published in the prestigious British Medical Journal (BMJ) Open Diabetes Research and Care about an all-India study Early screening for foot problems in people with diabetes is the need of hour: ‘Save the Feet, Keep Walking campaign’ in India.
Chennai, 7 August 2024: Dr. Vijay Viswanathan, Managing Director & Chief Physician MV Hospital for Diabetes and Prof M Viswanathan Diabetes Research Centre Royapuram led a national drive “Save the Feet, keep walking campaign” in 2022 across India with the National Research Society for Study of Diabetes in India (RSSDI), the largest organisation of Diabetes Care professionals in the world. The main aim of the campaign was to assess the foot for Loss of Protective Sensation (LOPS) in people with diabetes to detect neuropathy at early stage to prevent Diabetic Foot complications. The HCPs across India joined this 1-month long campaign to raise awareness among people and educate them towards regular foot assessment.
As part of this campaign, a total of 54000 people with diabetes had undergone foot examination. Dr Vijay Viswanathan and his co-authors reported the data for 33259 participants in the article published in the journal BMJ OPen Diab Res Care.
The authors found about one-fourth of the population who underwent examination had high risk feet. The risk was classified as high risk based on the presence of LOPS or Peripheral Artery Disease and one or more of the other risk factors such as history of DFU or lower extremity amputation or end-stage renal disease) as per International Working Group on the Diabetic Foot (IWGDF) guidelines 2023.
Dr. Vijay Viswanathan said that nearly 3/4th of the study population who had HR feet were found to have renal and retinal complications. Heel fissures was found to increase 4.6 times the odds of having HR feet. Presence of callus or corn, age > 45 years, smoking habit, poor glycemic control, male gender were other factors associated with the presence of HR feet.
Low- and Middle-income countries including India face high burden of diabetes and hence foot related problems among them. Poor foot care practices mainly barefoot walking and poor management of foot ulcer may lead to amputation. Wound care is an integral part of healthcare system. Wound clinics play a crucial role in modern healthcare addressing a wide range of acute and chronic wounds. The demand for awareness, early screening of foot and wound care services has been steadily increasing, making it vital for healthcare professionals to stay informed about best practices in preventing and management of Diabetic Foot conditions.
An effective translation of appropriate treatment guidelines on the early diagnosis and management of diabetic foot will improve the quality of foot care practices.
கோலிவுட்டை தாண்டியும் வெள்ளித்திரையில் என்றென்றும் டாப் ஸ்டார் நடிகர் பிரஷாந்த் நடிப்பில் மிகவும் மாஸாக நாளை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘அந்தகன்’. இயக்குநர் தியாகராஜன் இயக்கத்தில் ப்ரீத்தி தியாகராஜன் வழங்கும் இப்படத்தில் சிம்ரன், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், கார்த்திக், யோகி பாபு, பூவையார், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், ஊர்வசி உள்ளிட்ட மிக பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் புரொமோஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ‘அந்தகன்’ வசனகர்த்தா பட்டுக்கோட்டை பிரபாகரிடம் இப்பட அனுபவம் குறித்துக் கேட்டப் போது, ’’நாளை முதல்..இந்தியில் மிகப் பெரிய வெற்றியைத் தொட்ட ‘அந்தாதுன்’ படத்தின் புதிய தமிழ் வடிவம் ‘அந்தகன்’! அந்தப் படம் பார்க்காதவர்களுக்கு சுவாரசியமான திருப்பங்கள் கொண்ட திரைக்கதை த்ரில் அனுபவம் கொடுக்கும். பார்த்தவர்களுக்கு தமிழுக்காக செய்யப்பட்ட மாற்றங்கள் புதிய அனுபவம் கொடுக்கும்.
நாணயமிக்க தயாரிப்பாளரும்,(இந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதியபோது படப்பிடிப்பு துவங்கும் முன்பாகவே என் ஊதியத் தொகையைக் கொடுத்தாராக்கும்) . நினைத்தது நினைத்தபடி வரவேண்டும் என்பதில் பிடிவாதம் கொண்ட இயக்குனருமான திரு. தியாகராஜனுடன் முதல் முறையாகவும், பிரபல நட்சத்திரம் என்கிற பந்தா ஒரு சதவிகிதம் கூட இல்லாத இனிய நண்பர் பிரஷாந்துடன் மூன்றாவது முறையாகவும் இணைந்து பணியாற்றியுள்ளேன்.
இயக்குநர் தியாகராஜன் பற்றி சொல்வதானால் படு எனர்ஜிடிக் பர்சனாலிட்டி. இப்படத்துக்கு முன்பே சில முறை சந்தித்து பேசி இருக்கிறேன். அப்படி பேசும் போதெல்லாம் வார்த்தைகளை கவனமாக கோர்த்து அளவாக பேசும் அவரின் பாணி வியக்க வைக்கும். குறிப்பாக பேச வேண்டியதைத் தவிர எதையும் யோசிக்க கூட விட மாட்டார்..! பார்க்க கொஞ்சம் மெஜஸ்ட்டிக்காக தோற்றமளிக்கும் அவரிம் மனதின் மென்மை பஞ்சை விட இலகுவானது என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருக்கிறார் . அவர் இந்த படத்தை தேர்ந்த மிலிட்டரி மேன் போல் செயல்பட்டு அருமையாக உருவாக்கி இருக்கிறார்.
நாயகன் பிரஷாந்தும் படு பிரண்ட்லி.. ஒரு போதும் தன் அந்தஸ்தைக் காட்டவோ, பின்னணியை வெளிப்படுத்தவோ விரும்பாதாவர் என்பதே அவரின் பலம்.. அதிலும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக பூனை ஒன்று வருகிறது.. அப்பூனை ரோலுடன் ஐக்கியமாக வேண்டும் என்பதற்காக ஒரு குட்டி பூனையை தத்தெடுத்து வீட்டிலே வைத்து வளர்த்து அதனுடன் நடித்துள்ள ஒவ்வொரு காட்சியும் க்ளாப்ஸ் அள்ளும் என்பது நிச்சயம். அது மட்டுமில்லாமல் பிரஷாந்த் லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோ இசையில் நான்காவது கிரேடில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் பியானோ வாசிக்கும் காட்சிகள் எல்லாம் வேற லெவல். மொத்ததில் இந்தப் படம் வெற்றிபெற்றால் இயக்குனர் பல புதிய படங்களைத் தயாரிப்பார். நல்ல நடிப்புத்திறன் கொண்ட பிரஷாந்த் வெற்றி வலம் வருவார். எனவே வெற்றிக்கு வாழ்த்துங்கள்.திரையரங்கில் படம் பார்த்து ஆதரியுங்கள். நன்றி’’என்றார்
ஹிந்தியில் ‘அந்தாதுன்’ என்ற பெயரில் ரிலிஸாகி ஹிட் ஆன படத்தை ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீ மேட் செய்திருக்கிறார், பிரபல நடிகரும் இயக்குநருமான தியாகராஜன். அவர் மகன் டாப் ஸ்டார் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது. படத்தின் புரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கின்றன. அவரிடம் ‘அந்தாதுனு’க்கு இணையா எப்படி ஒரு தமிழ்வார்த்தையை பிடித்தீர்கள்?’என்று கேட்ட போது ”அந்தாதுன் என்றால் ஹிந்தியில, பார்வையற்றவன்னு அர்த்தம். அதுக்கு இணையான, சரியான வார்த்தையை சில நாட்கள் செலவு செய்து தேடினோம். நிறைய ஆய்வு பண்ணினோம். அதில் சிக்கிய வார்த்தைதான் ‘அந்தகன்’.’ என்றார்
மேலும் “ஹிந்தியில, இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் அந்தப் படத்துக்கு அருமையா திரைக்கதை அமைத்திருப்பார். ஒவ்வொரு காட்சி முடிந்ததும் நெக்ஸ் ட் என்ன என்ற பரபரப்பு, சென்டிமென்ட், சஸ்பென்ஸ் எல்லாம் ஒவ்வொரு ரசிகனுக்குள்ளும் உருவாக்கி படத்த்தை ஸ்பீடாக கொண்டு போயிருப்பார் .அந்த வகையில் உருவாகி ஏற்கெனவே ஹிட் ஆன படம் ஆகி விட்டதால் தமிழுக்காக பெரிய மாற்றங்கள் பண்ண வில்லை, அது தேவையுமில்லை என்று நம்புகிறேன் அதே சமயம் சின்ன மாற்றங்களை மட்டும் பண்ணி உள்ளேன். இது கண்டிப்பாக எல்லா ரசிகர்களுக்கும் புது விதமான பீலிங்கை கொடுக்கும்” என்கிறார் தியாகராஜன்.
ஹீரோ பார்வையற்ற பியோனா இசைக் கலைஞராக வருகிறாரே?இதற்காக பிரசாந்த் அதுக்கு ஏதும் பயிற்சி எடுத்தாரா? என்று கேட்டால் ‘அவருக்கு சின்ன வயதிலேயே பியானோ பிரமாதமாக வாசிக்கத் தெரியும். படத்தில் பியானோ இசையை கம்போஸ் பண்ணியது, லிடியன் நாதஸ்வரம். ஆனால், அதை நிஜமாகவே வாசிச்சது பிரசாந்த். அதனால அந்த காட்சிகள் நடிப்பா இல்லாமல், இயல்பா இருப்பது போல் தெரியும். அதே போல சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையும் எல்லாருக்கும் பிடிக்கும்.
ஆனால் ஹிந்தியில இந்தப் படத்தைப் பார்க்கும் போதே, ஆயுஷ்மான் குராணா, தபு தவிர மற்றவர்கள் அதிகம் தெரியாதவர்கள். அதை , கவனத்தில் எடுத்துக் கொண்டு இதில் ஒவ்வொரு கேரக்டர்களிலும் முக்கியமான நடிகர்களை நடிக்க வைக்க முடிவு செய்தேன். அந்த வகையில் பிரசாந்த், பிரியா ஆனந்த் தவிர, நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார், ஊர்வசி, யோகிபாபு, பூவையார்னு ஏகப்பட்ட பிரபலங்கள் இந்தக் கதைக்குள்ள வந்ததும் படம் பிரம்மாண்டமா மாறிவிட்டது. அதிலும் இக் கதைக்கு வலு சேர்க்கவும் இவர்களின் ஒவ்வொருவர் நடிப்பும் இருக்கும் என்பதுதான் ஹைலைட் .
ஹிந்தியில தபு நடித்த கேரக்டர் முக்கியமானது. அவரையே தமிழ்லயும் நடிக்க வைத்திருகலாமே? என்று கேட்கிறார்கள்.. உண்மைதான் .தபு ஹிந்தியில் ஸ்கோர் செய்திருப்பார். ஆனா, ஒரு மொழி புரியாமல் நடிக்கும் போது, உணர்வுகளை சரியாக வெளிப்படுத்த முடியுமா என்று தயக்கம் வந்தது . அதனால், அந்த கேரக்டரில் சிம்ரனை நடிக்க வைத்து இருக்கிறேன். சிம்ரன் நடிப்பு பற்றி யாரும் சொல்லித் தெரியவேண்டாம். ஒரிஜினலில் தபுவை விட இந்த அந்தகனில் சிம்ரன் நடிப்பு மிக அட்ராக்டிவ்வாக இருக்கும். அதே போல்தான் சமுத்திரக்கனி, வனிதா விஜயகுமார் உட்பட ஏனைய ஒவ்வொரு நடிகர், நடிகைகளோட நடிப்பும் எல்லாரையும் கவரும்.
மேலும் ரவி யாதவ் தமிழில் படம் செய்து ஏகப்பட்ட ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் அவரை எப்படி, ஏன் தேடிப் பிடித்து அழைத்து வந்துள்ளீ ர்கள் என்று கேட்டால் ரவி யாதவ் பிரமாதமான/ முக்கியமான ஒளிப்பதிவாளர். பிரசாந்த் நடித்த செம்பருத்தி, காதல் கவிதை உட்பட ஏகப்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு பண்ணியிருக்கிறார். பிறகு ஹிந்திக்கு போய் படுபிசியாகி அங்கே நிறைய படங்கள் பண்ணியபடி இப்போதும் முன்னணி ஒளிப்பதிவாளரா இருக்கார். அதனால் இந்தப் படத்துக்கு அவர் கேமரா மேனாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அழைத்தேன்.கொஞ்சம் கூட யோசிக்காமல் கமிட் ஆனார். நான் மிகைப்படுத்தியோ பெருமைக்காகவோ சொல்ல வில்லை, அவரோட விஷுவல் உங்களை நிச்சயம் மிரட்டும்.
அப்புறம் இளையராஜா பாடல்களை பயன்படுத்தி இருக்கீங்களாம்.. அப்படியா? என்று கேட்டால் ஆமாம். நவரச நாயகன் கார்த்திக், இதில் ஒரு ஆக்டராகவே வருகிறார். அதனால், இசைஞாநி இளையராஜா இசையில் அவர் நடித்த படங்களில் இருந்து 3 பாடல்களை பயன்படுத்தி இருக்கிறோம் . அதுக்கு முறையாக யாரிடம் எப்படி அனுமதி தேவையோ அபப்டி வாங்கி இருக்கிறோம் . அது மட்டுமில்லாமல் ‘அமரன்’ படத்தில் இடம் பிடித்து இன்றைக்கு இளசுகளை கவரும் ‘சந்திரனே சூரியனே’ பாடலையும் பயன்படுத்தி இருக்கோம். அதற்கு இசை அமைப்பாளர் ஆதித்யனிடம் அனுமதி வாங்கி விட்டோம். அந்தக் காட்சிகள் எல்லாமே படத்துல படு ரசனையாக இருக்கும். ஒவ்வொரு ரசிகர்களுக்கும் பழைய ஞாபகங்களை கிளாரும் என்றும் உறுதியாகச் சொல்வேன் .