Breaking
November 23, 2024

deccanwebtv

சசிகுமாரின் ‘நந்தன்’ படத்தை பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நடிகர் எம். சசிகுமார் நடிப்பில், இயக்குநர் இரா. சரவணன் எழுதி, இயக்கி, தயாரித்த திரைப்படம் ‘நந்தன்’. இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்னும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும்… ‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகார பகிர்வு குறித்த யதார்த்த நிலையை நந்தன் துணிச்சலுடனும் எடுத்துரைத்திருக்கிறார்’ என பாராட்டினர். விமர்சகர்களும் ‘நந்தன்’ திரைப்படத்தை கொண்டாடினர். ரசிகர்கள் – விமர்சகர்கள்- திரையுலகினர் – திரையுலக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரின் ஏகோபித்த பாராட்டைப் பெற்ற ‘நந்தன்’ திரைப்படம் , அண்மையில் டிஜிட்டல் தளத்தில் வெளியானது.

‘நந்தன்’ திரைப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்ட பல முன்னணி பிரமுகர்களும் தங்களது பாராட்டை தெரிவித்து வருகின்றனர். இதன் உச்சமாக தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தை டிஜிட்டல் தளத்தில் பார்வையிட்டு தன்னுடைய பாராட்டை தெரிவித்திருக்கிறார்.‌

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்தப் படத்தை பார்வையிட்டவுடன் நடிகர் சசிகுமார் – இயக்குநர் இரா . சரவணன் – விநியோகஸ்தர் ட்ரைடன்ட் ரவி ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ‘நந்தன் மிகத் தரமான.. தைரியமான… படம்’ என மனம் திறந்து பாராட்டினார். இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். ‘நந்தன்’ திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

திரு M.செண்பகமூர்த்தி அவர்கள் தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை பெற்றார்

பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இயக்குனர் திரு மாரி செல்வராஜ், நடிகர்கள் திரு ஆர்யா, திரு சூரி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு R.அர்ஜுன் துரை, Head of Lyca Productions திரு GKM தமிழ் குமரன், தயாரிப்பாளர் Romeo Pictures திரு.ராகுல், Dawn Pictures திரு ஆகாஷ் பாஸ்கரன், இயக்குனர் நடிகர் திரு சந்தோஷ் P ஜெயகுமார், நடிகை பிரியாலயா, தயாரிப்பாளர் திரு தாய் சரவணன், Shakthi Film Factory திரு B.சக்திவேலன், தயாரிப்பாளர் திரு கமல் நயன், தயாரிப்பாளர் திரு குமார், தயாரிப்பாளர் திரு K.V.துரை, விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Kauvery Hospitals and Women Motorsport Club organized a Bikeathon Rally to raise awareness on Breast Cancer

• Kauvery Hospital and Women Motorsport Club successfully entered the Asia Book of Records and India Book of Records for the largest pink ribbon formation by bikers

• 250 women bikers participated for raising awareness about breast cancer

Chennai, October 27th, 2024 – Kauvery Hospitals in association with the Women Motorsport Club, organized a Bikeathon Rally to raise awareness about breast cancer. The event, which attracted 250 women bike enthusiasts, was flagged off from Kauvery Hospital Vadapalani and culminated at YMCA Ground in Nandanam.

The event was presided over by Thiru. Ma. Subramanian, Hon’ble Minister of Health & Family Welfare, Thiru Dayanidhi Maran, MP, Tmt. Thamizhchi Thangapandiyan, MP, Tmt. Priya Rajan, Mayor – Greater Chennai Corporation, Dr Aravindan Selvaraj, Co-Founder and Executive Director Kauvery Group of Hospitals and Dr A N Vaidhyswaran, Senior Consultant and Director Radiation Oncology Kauvery Hospital Alwarpet, Chennai

Participants in the rally took part in a powerful display by creating a ribbon formation at YMCA Ground thus successfully entering the Asia Book of records and India Book of records for the largest ribbon formation by bikers.

“With breast cancer now affecting nearly 1 in 28 women in urban South India, awareness and early detection have never been more critical. Through initiatives like this rally, we aim to foster a proactive approach to health, encouraging women to stay informed, get screened, and take charge of their well-being, ” said Dr A N Vaidhyswaran Senior Consultant and Director of Radiation Therapy, Kauvery Hospital Alwarpet.

“Kauvery Hospital has always been at the forefront of social activities and community awareness programs. Our goal is not only to provide exceptional healthcare but also to educate the community about critical health issues. We are pleased to collaborate with the Women Motosport Club for the 5th consecutive year. I appreciate all the bikers who were part of this noble initiative,” said Dr. Aravindan Selvaraj, Co-founder and Executive Director of Kauvery Group of Hospitals.

The hospital’s ongoing social and community initiatives towards health education includes various events aimed at raising awareness about serious health conditions, as well as providing free screenings and health check-ups in underserved areas. With this event, Kauvery Hospital reinforces its dedication towards a healthier society and making a meaningful impact in the community.

Chennai Residents Come Together To Create Large India Map With Diyas in the City

  1. The initiative ‘One Diya, One Tradition was organized by CavinKare’ iconic flagship brand –
    Meera to showcase the role of tradition in uniting India during festivities
  2. Over 1000 Diyas were lit as part of the India map creation at Anna Nagar Tower Park
    Chennai, 27 th October, 2024: Bringing in the festive spirit and cheer to the city, the residents of
    Chennai came together to create a large India map illuminated with thousands of Diyas ahead of
    Diwali. Organized by CavinKare’s iconic brand, Meera, this unique initiative, titled “One Diya, One
    Tradition,” aimed to celebrate the timeless tradition of lighting diyas, a practice that continues to unite
  3. the country during Diwali, despite evolving trends and festivities. The event witnessed an
    overwhelming participation from residents lighting 1000+ Diyas at the Anna Nagar Tower Park,
    bringing to life a radiant, magnum opus map of India.
    Under the theme “One Diya, One Tradition,” Meera through this initiative highlighted Diya as a
    cultural heritage shared across India, transcending regional differences and connecting households
    through its symbolic glow. Despite the shifts in food, attire, and modern festivities, the lighting of Diyas
    remains central to every Diwali, bringing a glow of togetherness to households across India. The event
    was a visual spectacle as hundreds of participants placed Diyas carefully along an outline of India,
    creating a stunning illuminated map that symbolized the country’s unity and rich cultural diversity.
    Commenting on the occasion, Mr. Rajat Nanda, Business Head – Personal Care, CavinKare said “As a
    brand, Meera has always believed in the Goodness of Tradition. We see traditions as meaningful pillars
    in our lives, to be cherished and passed down from generation to generation. This belief shines through
    as we bring the benefits of traditional ingredients into our hair care and personal care products, and in
    life, we honor and celebrate customs by lighting Diyas, which signifies victory of good over evil.”
    Adding to this, Mr. Rajat Nanda also said, “Through this initiative, every participant has contributed to
    a meaningful tribute to our country, reminding us that no matter where we come from, we are all
    connected by shared traditions and values. The turnout today has been phenomenal, highlighting the
    community’s spirit and our collective dedication to preserving and celebrating tradition that truly unites
    us. This initiative is more than just a Diwali celebration; it’s a celebration of India, our heritage, and the
    unique traditions that define us.”

50 years of CERELAC in India

Announces the introduction of CERELAC no refined sugar recipes

CERELAC, Nestlé’s cereal-based complementary food has entered its 50th year in India. The first batch of CERELAC was manufactured by Nestlé India’s flagship factory in Moga, Punjab on 15th September 1975. Today, hundreds of dedicated employees continue to manufacture quality nutrition products with the same tender care and passion at the Moga factory in Punjab and Samalkha factory in Haryana.

Over the past five decades, CERELAC has maintained its commitment to use high quality ingredients, including grains and milk that are sourced locally. Every batch of CERELAC undergoes rigorous quality checks (over 40 quality tests) to ensure that every pack is safe for consumption.

Vitamins and minerals play a crucial role in reducing micronutrient deficiencies. Appropriate intake of these micronutrients can support well-being. Since its introduction in India, CERELAC has been offering complementary food for infants above 6 months. CERELAC has 15 nutrients*, which includes vitamins and minerals, that can be offered in addition to home food as per the guidance of healthcare practitioner.

CERELAC’s nutrition product recipes are developed in collaboration with Nestlé’s global R&D network, together with local expertise and international innovation.

Over the last 5 years, added sugar has been reduced in CERELAC by up to 30% as a part of its innovation journey. Nestlé has achieved the ambition of introducing ‘CERELAC’ variants with no refined sugar. This was initiated three years ago and has culminated this year with the introduction of new CERELAC variants with no refined sugar. The expanded CERELAC range in India will now consist of 21 variants, of which 14 variants will have no refined sugar. Of these 14 variants, 7 will be available by end of November 2024 and the balance will be available in the coming weeks.

CERELAC’s journey is not just about providing safe nutrition; Nestlé is also about fostering a sense of community and responsibility. Nestlé India works closely with local farmers, upskilling and training them to ensure sustainable and responsible sourcing of ingredients, reducing its carbon footprint and preserving the planet for future generations. Through the successful implementation of Zer’ Eau technology in Moga and Samalkha factory, water extracted from milk is recycled to reduce groundwater consumption every year, thereby reducing reliance on groundwater.

CERELAC’s journey in India has been made possible because of the trust, support and partnerships that Nestlé has forged over many decades with farmers, suppliers, and distributors across India. Nestlé India will continue to leverage Nestlé’s global R&D network to keep innovating its products and offering more options to its consumers that are contemporary, nutritious and in line with local taste and preferences.

Nestlé India will continue to leverage Nestlé’s global R&D network to keep innovating its products and offering more options to its consumers that are contemporary, nutritious and in line with local taste and preferences.

Tata Motors inaugurates ‘Customer Care Mahotsav’, a nationwide engagement program for commercial vehicle customers

  • Pan-India program will be hosted from 23rd October to 24th December, 2024
  • Aims to offer enhanced after-sales experience, including vehicle check-ups, value-added services and driver training for the entire range of commercial vehicles

23 October 2024, Tata Motors, India’s largest commercial vehicle manufacturer, announced the launch of its Customer Care Mahotsav 2024, a comprehensive customer engagement program for commercial vehicle customers till 24th December, 2024. The unique and value adding programme will be held at over 2500 authorised service outlets across the country, bringing together fleet owners and drivers for insightful discussions. Through the Mahotsav, customers can avail a range of benefits, including thorough vehicle check-ups conducted by trained technicians, and access to value-added services. Additionally, drivers will receive extensive training on safe and fuel-efficient driving practices, along with tailored offerings under its Sampoorna Seva 2.0 initiative.

Launching the Customer Care Mahotsav 2024 edition, Mr. Girish Wagh, Executive Director, Tata Motors highlighted, “We are excited to bring back the Customer Care Mahotsav this year, starting 23rd October. The day holds a special significance for us as we sold our first commercial vehicle in 1954, we now celebrate it as the Customer Care Day. This Mahotsav reflects our commitment to deliver the best-in-class service, through meticulous vehicle check-ups and by offering a wide range of benefits. By ensuring that the Mahotsav delights our customers at every touchpoint across the country, we aim to strengthen our relationships across all our stakeholders. We cordially invite all our customers to their nearest Tata authorized service centres, and I am confident that this initiative will add significant value to their businesses.”

Tata Motors’ widest commercial vehicle portfolio is complemented by a host of value-added services designed for comprehensive vehicle lifecycle management through its Sampoorna Seva 2.0 initiative. This all-inclusive solution begins with the vehicle purchase and supports every operational aspect throughout its lifecycle, including breakdown assistance, guaranteed turnaround times, annual maintenance contracts (AMC), and convenient access to genuine spare parts. Additionally, Tata Motors leverages Fleet Edge, its connected vehicle platform for optimal fleet management, enabling operators to maximize vehicle uptime and minimize total cost of ownership.

About Tata Motors

Part of the USD 165 billion Tata group, Tata Motors Limited (BSE: 500570 and 570001; NSE: TATAMOTORS and TATAMTRDVR), a USD 44 billion organization, is a leading global automobile manufacturer of cars, utility vehicles, pick-ups,  trucks, and buses, offering an extensive range of integrated, smart, and e-mobility solutions. With ‘Connecting Aspirations’ at the core of its brand promise, Tata Motors is India’s market leader in commercial vehicles and ranks among the top three in the passenger vehicles market.

Tata Motors strives to bring new products that captivate the imagination of GenNext customers, fuelled by state-of-the-art design and R&D centres located in India, the UK, the US, Italy, and South Korea. By focusing on engineering and tech- enabled automotive solutions catering to the future of mobility, the company’s innovation efforts are focused on developing pioneering technologies that are both sustainable and suited to the evolving market and customer aspirations. The company is pioneering India’s Electric Vehicle (EV) transition and driving the shift towards sustainable mobility solutions by developing a tailored product strategy, leveraging the synergy between Group companies and playing an active role in liaising with the Government of India in developing the policy framework.

With operations in India, UK, South Korea, Thailand and Indonesia, Tata Motors markets its vehicles in Africa, the Middle East, Latin America, Southeast Asia, and the SAARC countries. As of March 31, 2024, Tata Motors’ operations include 90 consolidated subsidiaries, two joint

operations, five joint ventures, and numerous equity-accounted associates, including their subsidiaries, over which the company exercises significant influence.

-ENDS-

ZEE5 நிறுவனம் அதன் அடுத்த ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’

ZEE5 நிறுவனம் அதன் அடுத்த ஒரிஜினல் சீரிஸான, ‘ஐந்தாம் வேதம்’ சீரிஸை, பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு பிரத்தியேகமாகச் சிறப்பு முன் திரையிடல் செய்தது. ஆன்மீகம், மர்மம், அறிவியல் கலந்து பரபரப்பான திரில்லராக உருவாகி இருக்கும் இந்த சீரிஸை, மர்மதேசம் புகழ் இயக்குநர் நாகா இயக்கியுள்ளார். அபிராமி மீடியா ஒர்க்ஸின் சார்பில் தயாரிப்பாளர்கள் அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் தயாரித்துள்ளனர்.

இந்த அதிரடி திரில்லர் சீரிஸில் சாய் தன்ஷிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், இவருடன் சந்தோஷ் பிரதாப், விவேக் ராஜகோபால், ஒய் ஜீ மகேந்திரா, கிரிஷா குருப், ராம்ஜி, தேவதர்ஷினி, மேத்யூ வர்கீஸ், பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த முன் திரையிடல் நிகழ்வில் சீரிஸை பார்த்து ரசித்த பத்திரிக்கை விமர்சகர்கள், படக்குழுவினரைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

பின்னர் மொத்த படக்குழுவினரும் பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் சீரிஸ் குறித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

ZEE5 சார்பில் கௌஷிக் நரசிம்மன் பேசியதாவது…
எங்கள் படைப்புகளைப் பாராட்டி ஊக்கம் தரும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி. இந்த படைப்பிற்கு உறுதுணையாக இருந்த சிஜு பிரபாகரன் சாருக்கு நன்றி. இந்த படைப்பைத் தயாரிப்பது மிக கஷ்டமான விசயம், அதைச் சாத்தியமாக்கிய அபிராமி ராமநாதன் சாருக்கு நன்றி. அஜய் மனதில் உள்ளதைப் பேசி விடுவார் இந்த சீரிஸ் உருவாக மிக முக்கிய காரணம் அவர் தான், நாகா சாருடன் ஆரம்ப காலங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவரை அப்போதிருந்தே பிரமிப்பாகப் பார்த்து வருகிறேன், இன்னும் பிரமிப்பாகவே இருக்கிறது. தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர். தன்ஷிகா மிக அருமையாக நடித்துள்ளார், சந்தோஷ் பிரதாப் இந்த பாத்திரத்தை மிகச்சிறப்பாகக் கையாண்டுள்ளார். அனைத்து நடிகர்களும் நல்ல நடிப்பை வழங்கியுள்ளார்கள். உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடிக்கும், நன்றி

அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அஜய் கூறுகையில்…
இந்த படைப்பு உருவாக 3 வருடம் ஆனது, எதற்கு 3 வருடம் என்பது நீங்கள் பார்த்த போது தெரிந்திருக்கும். ஒரு வெப்சீரிஸை ஒன்றரை வருடங்களுக்கு மேலாக எடுத்தால், அது தயாரிப்பு நிறுவனத்துக்கு லாபம் தராது, ஆனால் இந்தக்கதையை மிகச் சிறப்பாக, மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் தர வேண்டும் என்ற உறுதியுடன், அபிராமி ராமநாதன் சார், நல்லம்மை ராமநாதன் அவர்கள் இணைந்து தயாரித்துள்ளார்கள். அடுத்தடுத்து வரும் வெப் சீரிஸிற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்கள் இந்த சீரிஸை தந்துள்ளார்கள், அவர்களுக்கு நன்றி. மிகச்சிறந்த ஒத்துழைப்பைத் தந்த சிஜு சார், நண்பர் கௌஷிக் இருவருக்கும் நன்றி. கௌஷிக் இல்லாமல் இந்த சீரிஸ் சாத்தியமில்லை அவருக்கு நன்றி. மிகச்சிறந்த இயக்குநர் நாகா, எதற்கும் காம்பரமைஸ் ஆகாத இயக்குநர் அவருக்கு நன்றி, நடிகர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் அனைவரும் மிகச்சிறந்த பங்களிப்பைத் தந்துள்ளார்கள் அனைவருக்கும் என் நன்றி. இந்த சீரீஸ் பார்வையாளர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கும்.

அபிராமி மீடியா ஒர்க்ஸின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் கூறுகையில்…,
மிக நீண்ட நாட்களாவிட்டது, இடையில் எங்கள் தயாரிப்பில் “விநோத சித்தம்” படத்தை உருவாக்கினோம், அது நல்ல வெற்றி. ZEE5 லிருந்து இது நல்ல கதை, தயாரியுங்கள் என்றனர், இந்த டீம் எனக்கு மிகவும் பிடிக்கும். இயக்குநர் நாகாவின் மர்மதேசம் தொடருக்குத் தீவிர ரசிகன் நான், ஒய் ஜி மகேந்திரன் என்னுடன் படித்தவர், நல்ல டீம், நாகா கதை சொன்னார், ஐந்தாம் வேதம் இருக்கிறதா? இல்லையா? எனத் தெரியாது, இந்த சீரிஸ் ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் பற்றிப் பேசுகிறது. ஆர்டிஃபிஷியல் இண்டலிஜென்ஸ் கொலையும் செய்யும், மனித உருவும் எடுக்கும், கடவுளை மீறி விடும், மிகப் பரபரப்பான திருப்பங்களுடன் நீங்கள் ரசிக்கும் வகையில் இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த சீரிஸ் 25 ஆம் தேதி வெளியாகிறது உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

அபிராமி மீடியா ஒர்க்ஸ் CEO டாக்டர் சீனிவாசன் கூறுகையில்…,
இந்த சீரிஸ் எடுக்கும் போது பல தடைகள் இருந்தது, அனைத்து பிரச்சனைகளையும் அபிராமி ராமநாதன் சார் மிக எளிதாகத் தீர்த்து விடுவார், இந்த சீரிஸ் எந்தளவு கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பது நீங்கள் பார்க்கும் போதே தெரியும், இந்த சீரிஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். எங்கள் விநோத சித்தம் படத்திற்குத் தந்தது போல் இந்த சீரிஸிற்கும் முழு ஆதரவைத் தருவீர்கள் என நம்புகிறேன், ZEE5 உடன் எங்களது இனிமையான பயணம் தொடரும், நன்றி.

இசையமைப்பாளர் ரெவா கூறுகையில்…
அயலிக்குப் பிறகு மீண்டும் இந்த சீரிஸில் பணியாற்றியது, மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடித்திருக்கும் என நம்புகிறேன். இந்த சீரிஸில் எனக்கு வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநர் அனைவருக்கும் எனது நன்றி. பட குழுவினருக்கு நன்றி.

நடிகர் சந்தோஷ் பிரதாப் கூறுகையில்…,
இந்த சீரிஸில் நடித்தது பெரிய மகிழ்ச்சி. இந்த சீரிஸிற்காக நிறைய புதிய இடங்கள், நம்ப முடியாத இடங்களுக்கெல்லாம் பயணித்திருக்கிறேன், பல ஊர்களுக்குப் பயணித்தது மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. அறிமுக நடிகர்கள் முதல் அனுபவம் வாய்ந்த நடிகர்கள் வரை நிறையப் பேர் இதில் நடித்துள்ளார்கள், எல்லோரிடமும் நல்ல நட்பு உள்ளது. எல்லோருமே மிகச் சிறப்பான நடிப்பைத் தந்துள்ளார்கள். தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருமே மிகக் கடுமையாக உழைத்துள்ளார்கள் வாரணாசியில் படப்பிடிப்பு நடந்து போது, அனைவருக்கும் காய்ச்சல், ஆனால் யாருமே ஓய்வெடுக்காமல் உழைத்தார்கள். நாகா சாரின் தீவிர ரசிகன், மிகப் பொறுமையாக அனைவரையும் கையாள்வார். அவரது பொறுமை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னுடன் நடித்த சிறு பையனுக்குக் காட்சியை அவ்வளவு விளக்கமாகச் சொல்லி, நடிப்பை வாங்குவார். அவரை பார்க்க ஆசையாக இருக்கும். அவருக்காகத் தான் இந்த சீரிஸ் நடித்தேன், அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன், அவருடைய படைப்பில் இன்னும் நிறைய நடிக்க ஆசை. என்னுடன் நடித்த தன்ஷிகா மிகச் சிறப்பான நடிப்பை வழங்கி உள்ளார். அவருக்கு இது முக்கியமான திருப்புமுனையாக இருக்கும். ZEE5 மற்றும் அபிராமி மீடியா ஒர்க்ஸ் இருவருக்கும் நன்றி, மிகச் சிறப்பாக பார்த்துக் கொண்டார்கள். இந்த சீரிஸ் கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை தன்ஷிகா கூறுகையில்…
உங்களோடு இணைந்து இந்த சீரிஸ் பார்த்தது, மிக மிகத் திருப்தியாக இருந்தது. தாய் மொழியில் மீண்டும் ஒரு படைப்பு, மிகத் திருப்தியாக இருக்கிறது. ஐந்தாம் வேதம் மூலம் மிகச்சிறந்த குழுவுடன் இணைந்து பயணித்து மகிழ்ச்சி. என் சின்ன வயதில் மர்ம தேசம் மிகப்பெரிய பயத்தைத் தந்த சீரிஸ், எனக்கு மிகப்பிடித்த சீரிஸ், நாகா சார் கூப்பிடுகிறார் என்றவுடன் உடனே அவர் ஆபீஸ் போய்விட்டேன், ஐந்தாம் வேதம் பற்றிச் சொன்னார், அனு கதாப்பாத்திரம் பற்றிச் சொன்னார். அவர் ஐடியாவே பிரமிப்பாக இருந்தது, அவரிடம் பேசினாலே பிரமிப்பாக இருக்கும். இந்த சீரிஸில் எங்கள் படக்குழு கடுமையான உழைப்பைத் தந்துள்ளார்கள். பல தடைகள் இருந்தது, ஆனால் அபிராமி ராமநாதன் சார் அனைத்தையும் மிக எளிதாகக் கையாண்டார், அவருக்கு நன்றி. ஒய் ஜி மகேந்திரன் சார் உடன் நடித்தது மிக ஜாலியான அனுபவமாக இருந்தது. ZEE5 மூலம் இந்த சீரிஸ் உங்கள் எல்லோரையும் சென்று சேரவுள்ளது, இந்த சீரிஸை, எங்களை நம்பியதற்கு ZEE5 க்கு நன்றி. என்னை நம்பி இந்த பாத்திரம் தந்த நாகா சாருக்கு நன்றி. இந்த சீரிஸிற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

நடிகர் பொன் வண்ணன் கூறுகையில்…
இந்த படைப்பின் கதாநாயகன் நாகா சார், மர்ம தேசம் வந்து 25 வருடங்களாகிவிட்டது, 25 வருடங்கள் கடந்தும், அதே மனநிலையோடு, அதே திறமையோடு இருக்கும் நாகா சாரை பார்க்கப் பிரமிப்பாக இருக்கிறது. நாகா சார் நினைத்ததைச் செய்வதில் வல்லவர். மிகமிக நுணுக்கமான கலைஞன், ஒவ்வொரு நடிகரிடம் அவர் நடிப்பு வாங்குவதைப் பார்க்க அலாதியாக இருக்கும், இப்படிப்பட்ட மாகா கலைஞனோடு மீண்டும் இந்த ஐந்தாம் வேதம் சீரிஸில் பயணித்தது மகிழ்ச்சி. இந்த சீரிஸை தயாரித்திருக்கும் அபிராமி ராமநாதன் அவர்களும் கலைத்துறையில் முன்னோடி. அவர் தயாரித்த விநோத சித்தம் படமும், இந்த ஐந்தாம் வேதம் சீரிஸை தயாரித்ததும் அவர் முன்னோடி சிந்தனையாளர் என்பதை நிரூபிக்கிறது. காலம் தந்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு வெப் சீரிஸ், அதை முழுமையாகப் புரிந்து கொண்டு, நல்ல கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து,, அயலி, வீரப்பன் என ZEE5 அருமையான படைப்பைத் தந்து வருகிறார்கள். அவர்களுக்கு என் நன்றி. இந்த சீரிஸை அவர்கள் அனைத்து தரப்பினருடமும் எடுத்துச் செல்கிறார்கள். நடிகை தன்ஷிகா பேராண்மையிலிருந்து கவனித்து வருகிறேன் மிகச்சிறந்த நடிகை, அவருக்கு இந்த சீரிஸ் நல்ல பெயரைப் பெற்றுத் தரும், அனைவருக்கும் நன்றி.

நடிகர் ஒய் ஜி மகேந்திரன் கூறுகையில்…,
பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒவ்வொரு காட்சியையும் குறிப்பிட்டு என்னைப் பாராட்டினார்கள் அப்போதே தெரிந்து விட்டது, இந்த சீரிஸ் மிகப்பெரிய வெற்றி என்று, ZEE5 க்கும் அபிராமி மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்திற்கும் இது மிகப்பெரிய வெற்றியாக இருக்கும், உங்களுக்கு வாழ்த்துக்கள். மிஸ்டரி இயக்குநர் நாகா, மிகத்திறமையான இயக்குநர் அவருடன் நான்கு படைப்புகளில் பணிபுரிந்துள்ளேன் அவர் ஒரு நடிகரை ஒரு பாத்திரத்திற்குத் தேர்வு செய்தால் அது கன கச்சிதமாக இருக்கும். எல்லோரிடமும் மிகச்சிறப்பாக வேலை வாங்கி விடுவார், எப்போதும் முழுக்கதையும் சொல்ல மாட்டார், நான் இன்னும் முழுமையாக சீரிஸ் பார்க்கவில்லை, பார்க்க ஆவலாக இருக்கிறேன். நாகா ரிசர்ச் செய்யாமல் ஒரு சீரிஸ் செய்யமாட்டார், அவர் பெர்ஃபெக்ஸனிஸ்ட். அவர் சின்னத்திரை ஸ்பீல்பெர்க் என்பேன். எல்லோரும் நல்ல பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். இந்த சீரிஸ் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

இயக்குநர் நாகா கூறுகையில்
ஐந்தாம் வேதம் கதையைக் கடந்து 10 வருடமாகச் சிறிது சிறிதாக எழுதி வந்தேன், முழுமையாக முடிந்த பிறகு கௌஷிக்கிடம் தந்தேன், சிஜுவுக்கும் அவருக்கு மிகவும் பிடித்திருந்தது, உடனே ஆரம்பிக்கலாம் என்றார். 7 மாதம் திரைக்கதை வேலை மட்டும் பார்த்தோம். பின்னர் தான் அபிராமி வந்தார்கள், எல்லாம் இனிமையாக நடந்தது. என்னோடு இந்த திரைக்கதையை மணிகண்டன் இணைந்து எழுதினார் அவருக்கு என் நன்றி. ஏஐ பற்றிய பயத்தை, நான் இந்த சீரிஸில் கொஞ்சம் பேசியிருக்கிறேன், இன்னும் 2 சீசன் இருக்கிறது, அதில் மனிதர்கள் வெற்றி பெறுகிறார்களா என்பது கதையாக இருக்கும், உங்கள் அனைவருக்கும் இந்த சீரிஸ் பிடித்திருக்குமென நம்புகிறேன் உங்கள் ஆதரவைத்தாருங்கள் அனைவருக்கும் நன்றி.

ZEE5 ஒரிஜினல் ‘ஐந்தாம் வேதம்’ தமிழ் மற்றும் தெலுங்கில் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் ஸ்ட்ரீமாகிறது !

மஜீத் இயக்கத்தில், விமல், யோகிபாபு நடிக்கும் புதிய திரைப்படம்

CONFIDENT FILM CAFE சார்பில் அப்துல் மஜீத் தயாரித்து இயக்க, நடிகர் விமல், யோகிபாபு நடிப்பில், முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக உருவாகியுள்ள புதிய படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில், படக்குழு தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நவீன உலகத்தில் எல்லாமே புரோக்கர் வழியாக என்றாகிவிட்டது. பல வகையான புரோக்கர்களின் வழியாகவே நம் அன்றாட வாழ்க்கை நடக்கிறது. அந்த புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை, சிரித்து மகிழும் அருமையான திரைக்கதையாக கோர்த்து, இப்படத்தை உருவாக்கியுள்ளார் தமிழன் படப்புகழ் இயக்குநர் அப்துல் மஜீத்.

இப்படத்தில் முன்னணி நடிகர் விமல் நாயகனாக நடித்துள்ளார், சாம்பிகா டயானா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தை பெரும் பொருட்செலவில், சார்பில் அப்துல் மஜீத் தயாரித்து இயக்குகிறார். ஒளிப்பதிவு கே. கோகுல், எடிட்டிங் ஏ.ஆர்.சிவராஜ், இசை பைஜூ ஜேக்கப், EJ ஜான்சன், நிர்வாக தயாரிப்பு மு. தென்னரசு, எம்.ரகு. கிரியேட்டிவ் ஆர்கனைஸேசன் பாஸ்கர் ஆகியோர் தொழில் நுட்ப குழுவில் பணியாற்றுகிறார்கள். மக்கள் தொடர்பு
வேலு.

பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையிலான கலக்கலான கமர்ஷியல் காமெடிப்படமாக இப்படம் இருக்கும். இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

“போகுமிடம் வெகு தூரமில்லை” படக்குழுவை பாராட்டிய மக்கள் செல்வன் விஜய் சேதுபதி !!

அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து, சாதனை படைத்த “போகுமிடம் வெகு தூரமில்லை” திரைப்படம் !!

Shark 9 pictures சார்பில் சிவா கிலாரி தயாரிப்பில், நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடிப்பில், அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான திரைப்படமாகத் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற “போகும் இடம் வெகு தூரம் இல்லை” திரைப்படம், தற்போது ப்ரைம் ஓடிடி தளத்தில் பெரும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. படத்தைப் பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படக்குழுவை பாராட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களிலிருந்து மாறுபட்டு, ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன், அழகான படைப்பாக, 2024 ஆகஸ்ட் 23 அன்று திரையரங்குகளில் வெளியானது. விமர்சகர்கள் ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. இந்நிலையில் கடந்த இப்படம் அக்டோபர் 8 ஆம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியானது.

அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான வேகத்தில், இப்படம் பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று, பல புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது. அமேசான் தளத்தில் இந்திய அளவிலான டாப் டாப் 4 படங்களில் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது. மேலும் இப்படம், வெளியான சில நாட்களுக்குள், 70 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி மொழி பார்வையாளர்களையும் கவர்ந்திழுத்து, பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தினை பார்வையிட்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, படக்குழுவினரை நேரில் அழைத்து, அவர்களுடன் படம் குறித்து உரையாடி, விமலின் நடிப்பைப் பாராட்டி, படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். படத்திற்குக் கிடைத்து வரும் பாராட்டுக்களும் வரவேற்பும், படக்குழுவினரை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அறிமுக இயக்குநர் மைக்கேல் K ராஜா இயக்கத்தில் உருவான இப்படத்தில், இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப வல்லுநர்கள் விபரம்

இயக்குநர்: மைக்கேல் K ராஜா
தயாரிப்பாளர்: சிவா கிலாரி (Shark 9 pictures)
இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்
தொகுப்பாளர்: M.தியாகராஜன்
கலை இயக்குநர்: சுரேந்தர்
ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்
நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்
கிரியேட்டிவ் புரோடியுசர் – விஜய் கவுடா
நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி
மக்கள் தொடர்பு – சதீஸ், சிவா (AIM)

ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இயக்கத்தில், ஐஸ்வர்யா அர்ஜுன் மற்றும்  நிரஞ்சன் சுதீந்திரா  நடிக்கும் சீதா பயணம் !!

ஸ்ரீராம் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா நீண்ட இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் இயக்குநராகக் களமிறங்குகிறார்.
மனதை இலகுவாக்கும் ஒரு மென்மையான படைப்பாக உருவாகும்  இப்படத்திற்கு ‘சீதா பயணம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

சீதை எனும் பாத்திரத்தில் வலிமை, நெகிழ்ச்சி மற்றும் கருணை ஆகியவற்றின் உருவமாக நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கிறார். இவர் தெலுங்கில் அறிமுகமாகும் முதல்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  இந்தப் படத்தில் கன்னட நடிகர் உபேந்திராவின் உறவினர் நிரஞ்சன் சுதீந்திரா கதாநாயகனாக தமிழுக்கு அறிமுகமாகிறார்.

சீதா மிகப் புதுமையான ஆற்றல் மிகு பாத்திரம், உணர்வுரீதியாக மிக அழுத்தமான தைரியமான பாத்திரம், இப்பாத்திரத்தில் தன் தனித்துவமான நடிப்பின், முழுத்திறமையையும் வெளிப்படுத்தி நடித்து வருகிறார் ஐஸ்வர்யா அர்ஜுன். அவரது பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ஒரு நிரந்தர தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஐஸ்வர்யாவின் பாத்திரத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் சேர்க்கும் வகையில்,  அவரது தந்தை ஆக்சன் கிங் அர்ஜுன் சர்ஜா இப்படத்தை தயாரித்து இயக்குகிறார். ஐஸ்வர்யா அர்ஜுன் தனது அற்புதமான பாத்திரம் மூலம் தெலுங்கு ரசிகர்களின் இதயங்களை வெல்லவும் தயாராகி வருகிறார். 

சீதா பயணம் படத்தில் மேலும் பல முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.  தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது படத்தின் மற்ற விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக  வெளியாக இருக்கிறது.