deccanwebtv

’கல்கி 2898 கி.பி’ திரைவிமர்சனம்

மகாபாரத குருசேத்திர போர் நடந்து முடிந்து 6000 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் கல்கியின் கதையை திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் பலவிதமான அழிவுகளுக்கு பிறகு கலிகாலம் தொடங்கி உலகம் முற்றிலும் அழிந்துவிட்டது.கடைசியாக காசி என்ற ஒரு நகரம் மட்டுமே மிஞ்சி இருக்கிறது.மிச்சம் இருக்கும் உயிர்களை சுப்ரீம் என அழைக்கப்படும் கமல்ஹாசன் மட்டும் அனைவரையும் கொடுங்கோள் ஆட்சி நடத்தி வாழ்ந்து வருகிறார்.

மறுபக்கம் பணம் மற்றும் வசதி படைத்த மக்கள் மட்டும் செல்வ செழிப்பான எல்லா வசதிகளும் உடைய `காம்பிளக்ஸ்’ என்ற தனி உலகில் வாழ்ந்து வருகின்றனர்.இந்த உலகில் பணம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பிரபாஸ், காசியில் வாழ்ந்து வரும் நிலையில் தன் எப்படியாவது அதிகளவில் பணத்தை சேர்த்து எப்படியாவது காம்பிளக்ஸ் உலகில் நுழைந்து விடவேண்டும் என கனவுடன் வாழ்ந்து வருகிறார்.இதற்காக எந்த ஒரு எல்லைக்கும் சென்று பணம் சம்பாதிப்பதற்கு தயாராக இருக்கிறார்.

இதற்கிடையே காம்பிளக்ஸ் உலகில் தன்னிடம் அடிமையாக உள்ள பெண்களின் கருவில் தொடர்புகளை சுமக்க வைத்து அந்தக் கருவில் இருக்கும் சீரத்தை சுப்ரீம் கமல்ஹாசன் 150 நாட்களுக்கு மேல் கருவில் இருக்கும் சீரத்தை தேடி வருகிறார். கமல்ஹாசன் தேடும் சீரம் கதாநாயகி தீபிகா படுகோனேவின் கருவில் இருப்பதை அறியும் அந்த சீரத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள்.அந்த நிலையில் தீபிகா படுகோனே தப்பித்து விடுகிறார்.

தீபிகா படுகோனை எப்படியாவது கண்டுப்பிடித்து கொடுப்பவர்களுக்கு காம்ப்ளெக்ஸ் சுப்ரீம் கமல்ஹாசன் மிகப்பெரிய தொகைத்தரப்படும் என அறிவிக்க, பிரபாஸ் கதாநாயகி தீபிகா படுகோனை தேடி கண்டுபிடித்து சுப்ரீமிடம் ஒப்படைத்து அறிவிக்கப்பட்ட மிகப்பெரிய தொகையை பெற்றுக்கொண்டு காம்ப்ளக்ஸில் நுழைய வேண்டும் என்ற அவருடைய நீண்ட நாள் கனவை அடைய நினைக்கிறார்.

கதாநாயகி தீபிகா படுகோனேவை பிடித்து கொடுத்து காம்ப்ளக்ஸ் என்ற உலகத்திற்கு கதாநாயகன் பிரபாஸ் நுழைந்தாரா? நுழையவில்லையா? கதாநாயகி தீபிகா படுகோனேவின் கருவில் இருக்கும் சீரத்தை சுப்ரீம் உலக நாயகன் கமலஹாசன் அடைய நினைக்க காரணம் என்ன? என்பதுதான் இந்த கல்கி 2898 AD திரைப்படத்தின் மீதிக்கதை.

கல்கி 2898 AD திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் நடித்திருக்கிறார்கள்.

இந்த வயதிலும் அமிதாப் பச்சனின் நடிப்பு திரைப்படம் பார்க்கும் ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்கள்.

கதாநாயகி தீபிகா படுகோன் அடிமைத்தனமாக வாழும் கர்ப்பிணி கதாபாத்திரத்தில் வாழ்ந்து காட்டியுள்ளார்.

தன் கருவில் இருக்கும் தனது குழந்தைக்கு ஏன் இவ்வளவு ஆபத்து என்று தெரியாமல் பதறும் காட்சியில் கவனிக்க வைத்து இருக்கிறார்.

திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மான், ராஜமௌலி ராமகோபால் வர்மா உள்ளிட்ட பல நட்சத்திர பிரபலங்கள் கவுரவ தோற்றத்தில் ஓரிரு காட்சிகளில் வருகின்றனர்.

ஒளிப்பதிவாளர் டிஜோர்ட்ஜே ஸ்டோஜில்கோவிச் ஒளிப்பதிவு முலம் மிகப்பெரிய அளவில் அசத்தியிருக்கிறார்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை திரைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் பலம் சேர்த்து இருக்கிறார்.

மகாபாரதம் கதைகளுக்குள் இதிகாசக் கதையை சைன்ஸ் ஃபிக்‌ஷன் காட்சி அமைப்புகளோடு இணைத்து நம்பவே முடியாத அளவிற்கு ஒரு திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் நாக் அஸ்வின்.

மேட்மேக்ஸ், பிளாக் பாந்தர் போன்ற ஹாலிவுட் திரைப்படத்தின் இருந்து சாயல்களை இந்தத் திரைப்படத்திலும் அதிகளவில் காணமுடிகிறது.

இந்த திரைப்படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள், பிரமிக்க வைக்கும் அளவிற்கு ஒரு நகரத்தை வடிவமைப்பு மக்களை ஆச்சரியப்படும் வகையில் அமைந்திருப்பதற்கு இந்த திரைப்படத்தில் பணிபுரிந்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மிகப்பெரிய அளவில் அமைந்திருக்கிறது.

ஒரு நல்ல திரைப்படத்திற்கு மிக மிக முக்கியம் ஒரு நல்ல கதை அதன்பிறகு அந்த கதையில் உள்ள கதாபாத்திரங்களை வாழவைப்பதற்கு நடிகர்கள் அந்த நடிகர்களுக்கு கதையில் உருவாக்கப்பட்டுள்ள கதாபாத்திரங்களின் தோற்றங்கள் மற்றும் உடைகள் இது மிக மிக முக்கியமானது.

இந்த கல்கி 2898 கிபி திரைப்படத்தில் 6000 வருடங்களுக்கு முன் நடக்கும் கதையில் கதாநாயகன் மற்றும் நடிகர்கள் அனைவருமே தற்போது உள்ள காலகட்டங்கள் போல் இருக்கிறார்கள் இது இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக அமைந்திருக்கிறது.

ஆதிராஜன் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ” தீராப்பகை”.

ரசிகர்களால் பாராட்டப்பட்ட சிலந்தி, ரணதந்த்ரா, அருவா சண்ட மற்றும் இசைஞானி இளையராஜாவின் 1417 வது படமாக சமீபத்தில் வெளிவந்த ” நினைவெல்லாம் நீயடா” ஆகிய படங்களை இயக்கிய ஆதிராஜன், தற்போது தனது கோல்டன் மேஜிக் கிரியேட்டர் பட நிறுவனம் சார்பில் எழுதி இயக்கி தயாரித்திருக்கும் படம் ” தீராப்பகை”.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் மைத்துனர் விஜயராகவேந்த்ரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். தேசிய விருது பெற்ற இவர் தமிழில் “கேஸ் நம்பர் 13″, ” ஜோக் 101″ உட்பட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
தன் நடிப்பாலும் கவர்ச்சியாலும் தென்னிந்திய ரசிகர்களின் உள்ளம் கவர்ந்த ஹரிப்ரியா நாயகியாக நடித்திருக்கிறார். நடிப்பிலும் கவர்ச்சியிலும் மிரட்டியிருக்கிறார் ஹரிப்ரியா.
பிரம்மாண்டமான பார் செட்டில் படமாக்கப்பட்டுள்ள சரக்கு பாடலுக்கு பிரபல நடிகை மேக்னா நாயுடு படுகவர்ச்சியாக குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

இவர்களுடன் ஐஸ்வர்யா ஷிந்தோகி, விஷால் ஹெக்டே, ரங்கா, ரஞ்சன் குமார், ஆத்ரிகா ரமேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் ராஜேஷ் கே நாராயண் மாறுபட்ட கோணங்களில் மிரட்டியிருக்கிறார்.

‘சிலந்தி’ மற்றும் சில தெலுங்கு, கன்னடப் படங்களுக்கு இசையமைத்த எம்.ஜி. கார்த்திக், இயக்குநருடன் மீண்டும் இணைந்து பின்னணி இசையமைப்பிலும் பாடல்களிலும் மேஜிக்கை உருவாக்கியுள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ‘கேஜிஎஃப்’ புகழ் எடிட்டர் ஸ்ரீகாந்த் இந்த படத்திற்கு எடிட்டிங் செய்திருக்கிறார்.
ஐ.ராதிகா மற்றும் கலைகுமார் நடனக் காட்சிகளை அமைக்க, மாஸ் மாதா ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.
பிரபாஸின் பிரமாண்ட படைப்பான “கல்கி 2898′ மோகன்லாலின் ‘மரைக்காயர்’ உட்பட பல பிரம்மாண்டமான படங்களுக்கு சவுண்ட் டிஸைன் செய்த எம்.ஆர்.ராஜா கிருஷ்ணன் இந்தப் படத்திற்கும் சவுண்ட் மிக்ஸிங்கை கையாள்கிறார்.
பாடல் வரிகளை சினேகன் மற்றும் ஆதிராஜன் எழுதியுள்ளனர்.
தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் கலசா ஸ்டுடியோவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தயாரிப்பு: டி.ஆதிராஜன், இனண தயாரிப்பு: ஏ. சூர்யா. மக்கள் தொடர்பு: சதீஷ் (AIM)

“சென்னை, பெங்களூர், கோவை, என பல இடங்களில் ஒரே மாதிரியான முறையில் இளம் பெண்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இது கொலையா, தற்கொலையா அல்லது அமானுஷ்ய விஷயமா என்ற முடிவுக்கு வர முடியாமல் திணறுகிறது காவல் துறை. விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், அதிர்ச்சியூட்டும் மர்மம் அவிழ்கிறது. அதீத சுதந்திரத்தாலும் நாகரீக மோகத்தாலும் பெண்கள் சிக்கலில் மாட்டுவதைக் கருவாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் கிளைமாக்ஸ் யாராலும் யூகிக்க முடியாது. அதேபோல சுவாரஸ்யமான காதல் காட்சிகளும்
இந்தப் படத்தின் பலம். படப்பிடிப்புக்கு ஆறு டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சென்னை, பெங்களூர், மைசூர், கோவா ஆகிய இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது. த்ரில்லர் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு முழுமையான விருந்தாக இருக்கும்”
என்கிறார், டைரக்டர் ஆதிராஜன்.

15 கோடியில் வைஸாக் நகரை உருவாக்கிய மட்கா படக்குழு !!

மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படமான “மட்கா” படத்திற்காக, 15 கோடி செலவில் பழமையான வைஸாக் நகரம் மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது !!

நடிகர் வருண் தேஜ் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் படம் ‘மட்கா’. தற்போது இப்படத்தின் மூன்றாவது ஷெட்யூல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இது ஒரு விரிவான 35 நாள் ஷூட்டிங் ஷெட்யூலாகும், இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக மட்டும் 15 கோடி ரூபாய் பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. ராமோஜி ஃபிலிம் சிட்டியில் (RFC) விண்டேஜ் வைஸாக் நகர அமைப்பை, தயாரிப்புக் குழு உருவாக்கியுள்ளது. இது பிரம்மாண்டத்துடன் கூடிய பழைய வைஸாக் நகருக்கு பார்வையாளர்களை அழைத்துச் செல்லும் புதுமையான அனுபவமாக இருக்கும்.

‘மட்கா’ மிகப்பெரும் பட்ஜெட்டில் பான்-இந்திய படமாக உருவாக்கப்படுகிறது. விண்டேஜ் லுக்கை கொண்டு வர, பிரம்மாண்ட செட் அமைப்பது, ரசிகர்களுக்கு கண்கவர் அனுபவத்தை வழங்குவதற்கான படக்குழுவினரின் அர்ப்பணிப்பை காட்டுகிறது. கடந்த காலத்திலிருந்த வைஸாக்கின் வசீகரத்தையும் அதன் அமைப்பையும் பிரதிபலிக்கும் வகையில், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட செட், படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருக்கும். மேக்கிங் வீடியோ படத்தின் முன் தயாரிப்பு மற்றும் பிரம்மாண்டமான படப்பிடிப்பு என படத்தின் மீது ஆர்வத்தை கூட்டுகிறது.

பன்முக நடிப்புக்கு பெயர் பெற்ற வருண் தேஜ், ‘மட்கா’ படத்தில் வித்தியாசமான மற்றொரு கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க உள்ளார். அவரது பாத்திரம் படத்தில் முக்கியமானது, மேலும் அவரது கதாப்பாத்திரத்தின் தாக்கம், நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரிய அளவில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேசத்தையே உலுக்கிய உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து பிரம்மாண்டமான திரைக்கதையை எழுதியுள்ளார் இயக்குநர் கருணா குமார். மீனாட்சி சவுத்ரி நாயகியாகவும், பாலிவுட் நடிகை நோரா ஃபதேஹி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

‘மட்கா’ படத்தின் தனித்துவமான கதை, அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு, உன்னிப்பாக வடிவமைக்கப்பட்ட செட் ஆகியவை பார்வையாளர்களை ஈர்க்கும் என்று
படக்குழுவினர் நம்புகிறார்கள். அவர்களின் நோக்கம் வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, இந்திய சினிமாவின் வரலாற்றில் தனித்து நிற்கும் ஒரு மறக்கமுடியாத சினிமா அனுபவத்தை உருவாக்குவதாகும்.

‘மட்கா’ வருண் தேஜின் கேரியரில் ஒரு மைல்கல் படமாக இருக்கும், மட்கா தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியப் படமாக வெளியாகவுள்ளது.

நடிகர்கள்: வருண் தேஜ், நேரா ஃபதேஹி, மீனாட்சி சௌத்ரி, நவீன் சந்திரா, கன்னட கிஷோர், அஜய் கோஷ், மைம் கோபி, ரூபாலட்சுமி, விஜய்ராம ராஜு, ஜெகதீஷ், ராஜ் திரந்தாஸ்

தொழில்நுட்பக் குழு:
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: கருணா குமார்
தயாரிப்பாளர்கள்: மோகன் செருகுரி (CVM) மற்றும் டாக்டர் விஜேந்தர் ரெட்டி டீகலா
பேனர்: வைரா என்டர்டெயின்மெண்ட்ஸ் இசை: ஜீ.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : பிரியசேத்
எடிட்டர்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ் R
தயாரிப்பு வடிவமைப்பு: ஆஷிஷ் தேஜா
கலை: சுரேஷ்
நிர்வாகத் தயாரிப்பாளர் – RK.ஜனா
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் & டிஜிட்டல் – ஹேஷ்டேக் மீடியா

இந்திய திரையுலகில் புதிய சாதனையை படைக்கும் பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரான திரைப்படம் ‘கல்கி 2898 கிபி’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் ஜூன் 27 ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாள் முதல் காட்சியிலேயே இத்திரைப்படம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது. இதனால் இந்திய திரையுலகில் இதுவரை எந்த திரைப்படங்களும் நிகழ்த்தாத வகையில் இப்படம் வெளியான முதல் நாளே 191.5 கோடி ரூபாய் மேல் வசூலித்து புதிய சாதனையை படைத்திருக்கிறது. இரண்டாவது நாள் முடிவில் 298.5 கோடி வசூலித்து தொடர் சாதனையை படைத்துக் கொண்டிருக்கிறது.

இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா படானி ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படம்.. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. வியக்க வைக்கும் வி எஃப் எக்ஸ் காட்சிகள்- ரசிகர்களின் மனம் கவர்ந்த நட்சத்திரங்களின் வித்தியாசமான தோற்றம் – மயக்கும் பின்னணி இசை- வசீகரிக்கும் வசனங்கள்- விறுவிறுப்பான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் வலிமையாக கூட்டணி அமைத்திருப்பதால்.. திரையரங்குகளில் இந்த அறிவியல் புனைவுடன் கலந்த காவிய படைப்பினை காணும் ரசிகர்கள்.. கண்களை இமைக்க மறந்து, அகல விரித்து ஆச்சரியத்தில் ஆழ்ந்து போகிறார்கள். இதனால் ரசிகர்கள் கரவொலி எழுப்பி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறார்கள்.

‘கல்கி 2898 கிபி’ படத்தின் முதல் பாகத்தின் நிறைவு.. இரண்டாம் பாகத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. பிரபாஸ் கதாபாத்திரத்தின் சரித்திர பின்னணி- சுப்ரீம் யாஸ்கினின் அடுத்த கட்ட நடவடிக்கை- சிருஷ்டியை பாதுகாக்கும் அஸ்வத்தாமாவின் பகிரத முயற்சி- புஜ்ஜி வாகனத்தின் மாயாஜால செயல்பாடு.. என இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்திருக்கிறது.

ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்தத் திரைப்படம் இந்திய திரையுலகில் இதுவரை நிகழ்த்தியிராத வசூல் சாதனையை படைக்கும் என திரையுலக வணிகர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி பிரபலங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி, நடிகர்கள் நாகார்ஜுனா, அபிஷேக் பச்சன், யஷ், நடிகை நிதி அகர்வால் உள்ளிட்ட ஏராளமானவர்கள் படத்தைப் பற்றி தங்களது கருத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து, பாராட்டுவதுடன், அன்பினையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பிரபாஸின் ‘கல்கி 2898 கிபி’ இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புதிய வசூல் சாதனையை படைத்து வருகிறது.

குணா மறுவெளியீட்டுக்கு எதிராக கியூப் நிறுவனம் – நடவடிக்கைக்கு தயாராகும் பிரமிட் குரூப்.

சினிமா பிலிம் வடிவத்தில் திரையிடப்பட்ட போது தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தனர். பிலிம் வடிவத்தில் இருந்து டிஜிட்டல் வடிவத்தில் திரையரங்குகளில் படங்கள் திரையிட தொடங்கிய பின்பு அந்தப்படத்தின் முதலீட்டில் எந்த சம்பந்தமும் இல்லாத டிஜிட்டல் நிறுவனங்கள் அதிகாரம் செலுத்த தொடங்கின. படத்தின் மூலப்பிரதி தயாரிப்பாளர்களிடம் இருந்தாலும் அதனை தனது டிஜிட்டல் சேமிப்பகத்தில் வைத்திருக்கும் கியூப், சோனி, டிஸ்ஆர் போன்ற நிறுவனங்கள் மூலமே திரையரங்குகளில் படத்தை திரையிட முடியும். இதனால் கியூப் நிறுவனத்திடம் முதலாளியின் உத்தரவுக்கு காத்திருக்கும் வேலையாள் நிலைமைக்கு பட முதலாளிகள், படத்தின் நெகட்டிவ் உரிமை வைத்திருப்பவர்கள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். அப்படியொரு நிலைமை நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தின் திரையரங்க உரிமை வைத்திருக்கும் பிரமிட் குரூப் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கியூப் டிஜிட்டல் நிறுவனத்திற்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் முயற்சியை பிரமிட் குரூப் நிறுவனம் மேற்கொண்டுள்ளதா தகவல்கள் வெளியாகியுள்ளது.
சாமி வரம் கொடுத்தாலும் பூஜாரி வரம் கொடுக்க விட மாட்டாரு என்பது கிராமங்களில் தினந்தோறும் பேசப்படும் பழமொழிகளில் ஒன்று. அது போன்றதொரு நிலைமை நடிகர் கமலஹாசன் நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான குணா படத்தை மறுவெளியீடு செய்யும் பிரமிட் குரூப் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் டிஜிட்டல் மூலம் திரைப்படங்களை திரையிடும் தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ள கியூப் நிறுவனத்தால் குணா படத்தை பிரமிட் குரூப் திட்டமிட்ட அடிப்படையில் சூன் 21 ஆம் தேதி வெளியிட முடியவில்லை என்கின்றனர் தமிழ்சினிமா
வ ட்டாரத்தில்.

சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா.
இளையராஜா இசையமைப்பில், பாலகுமாரன் வசனத்தில், வேணு ஒளிப்பதிவில் தயாரிக்கப்பட்ட குணா படத்தில்
கமல்ஹாசன், ரோஷினி,
ரேகா,ஜனகராஜ், அஜய்ரத்தினம்,
எஸ். வரலட்சுமி ,கிரீஷ் கர்னாட் ,
எஸ். பி. பாலசுப்பிரமணியம்,
சரத் சக்சேனா,
காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்துள்ளனர். வாலி எழுதிய பாடல்களை, கமல்ஹாசன், எஸ்.ஜானகி, இளையராஜா, யேசுதாஸ், ஆகியோர் பாடியுள்ளனர்.சுவாதி சித்ரா இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் உலகம் முழுவதும் வெளியிட்டது. 33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை ரசிகர்களும் குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர் என்பதற்கு சாட்சியாக உள்ளது மஞ்சு மெல் பாய்ஸ் படத்தின் வெற்றி.

மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட மஞ்சு மெல் பாய்ஸ் திரைப்படம் இந்த வருடம் தொடக்கத்தில் தமிழ்நாட்டில் நகரம் முதல் குக்கிராமம் வரை உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டு வசூலை வாரிக்குவித்தது. மலையாள திரைப்படங்களில் 200 கோடி ரூபாய் மொத்த வசூலை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்கிற சாதனையை நிகழ்த்த அடிப்படை காரணிகளில் ஒன்றாக இருந்தது குணா திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம், பாடல்களை இப்படத்தில் பயன்படுத்தியதே என கூறப்பட்டது.
இதனால் குணா திரைப்படம் திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். குணா படத்தின் நெகட்டிவ் உரிமை பிரமிட் குரூப் நிறுவனத்திடம் குறிப்பாக திரையரங்குகளில் வெளியிடும் உரிமை இருந்ததால் சூன் 21 அன்று மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் வடிவத்தில் உலகம் முழுவதும் வெளியிட இருப்பதாக அறிவித்தனர். அதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று திரையரங்குகளை ஒப்பந்தம் செய்யும் பணிகள் முடிவடைந்த சூழலில் டிஜிட்டல் மூலம் படங்களை திரையிடும் கியூப் நிறுவனம் படத்தை ஒளிபரப்ப மறுத்ததால் சூன் 21 அன்று படம் வெளியாகவில்லை என கூறப்படுகிறது. நெகட்டிவ் உரிமை ஆவணத்தின் அடிப்படையில்பிரமிட் நிறுவனத்திற்கு பிரசாத் பிலிம் லேபரட்டரி வழங்கியிருக்கும் ஆவணத்தில் திரையரங்குகளில் குணாபடத்தை வெளியிடும் உரிமை உள்ளது என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் கியூப் நிறுவனம் ‘தியேட்ரிக்கல்’ என குறிப்பிடவில்லை என்று கூறி வருகிறது. அதே நேரம் வெளிநாடுகளில் குணா படத்தை திரையிடும் உரிமையை தங்கள் நிறுவனத்திற்கு வழங்குமாறு பிரமிட் குரூப்பிடம் கேட்டதாகவும் அதற்கு எந்த தடையும் இல்லை என்று குணா படத்தை தியேட்டரில் ஒளிபரப்புவதுதில் முரண்பட்ட நிலையை கியூப் நிறுவனம் கடைப்பிடிக்கிறது என கூறப்படுகிறது. படத்தை தமிழகத்தில் ஒளிபரப்புவதற்கு மறுப்பதற்கான காரணத்தை எழுத்துபூர்வமாக வழங்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் குணா படத்தை ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் வெளியிடுவது கியூப் நிறுவனத்தால் தடைபட்டு, தாமதமாகி வருகிறது என்று பிரமிட் குரூப் வட்டாரத்தில் கூறப்படுகிறது. வழக்கம்போல விநியோகஸ்தர்கள் சங்கத்தில் இது சம்பந்தமான பேச்சுவார்த்தை நடைபெற்ற போது குணா படத்தின் திரையரங்க உரிமை தன்னிடம் உள்ளது என கியூப் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பிய கன்சிராம் என்பவர் அதற்கான ஆவணத்தை வழங்கவில்லை. தங்களது சங்க உறுப்பினர் என்பதற்காக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்ட விநியோகஸ்தர்கள் சங்கம் கியூப் நிறுவனத்திற்கு குணா படத்தை திரையிட அனுமதிக்க கூடாது என்று அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தங்கள் உரிமையை உறுதிப்படுத்தவும், ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளாமல் சம்பந்தமில் லால் காரணங்களை கூறி குணா படத்தின் மறு வெளியீட்டை தடுத்து வரும் கியூப் நிறுவனம் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் முயற்சியை பிரமிட் குருப் தொடங்கியுள்ளது.

YRGCARE Announces Suniti Solomon Memorial Symposium in Chennai

Chennai, June 26, 2024: YRGCARE, a unit of YR Gaitonde Medical Educational Research Foundation (YRGMERF), is pleased to announce the Suniti Solomon Memorial Symposium. This symposium will honour the enduring legacy of the esteemed Padma Shri Dr Suniti Solomon, founder trustee of YRGMERF, and her monumental contributions to healthcare. The event will witness a significant gathering of distinguished guests, collaborators, community leaders, and healthcare professionals, coming together to celebrate her life and discuss the current advances in public health research.

The Suniti Solomon Memorial Symposium will feature special remarks by Dr Gregory Lucas, Professor at the School of Medicine at Johns Hopkins University (JHU), and a presentation by Dr Amita Gupta, co-chair of the Gupta-Klinsky India Institute at JHU on the institute’s commitment to India. This will be followed by a panel discussion on the lessons from COVID-19 where experts from JHU and Abbott Laboratories, will cover crucial topics such as establishing clinical protocols, conducting research in a socially distanced world, and developing diagnostics relevant to future epidemics.

At the symposium, a short video will introduce the Suniti Solomon Centre, a facility that will be dedicated to Dr Suniti’s memory. The new centre epitomizes YRGCARE’s mission to providing equitable access to healthcare and driving clinical excellence. It includes specialty labs generously donated by the Gupta-Klinsky India Institute at JHU and Abbott Laboratories. These labs will conduct groundbreaking research on viral discoveries, evolution, drug resistance, emerging variants, and pathogenesis.

YRGCARE is renowned for its compassionate care, medical research, and health literacy initiatives. Dr Suniti’s legacy continues to inspire and drive the organization’s quest for excellence in healthcare for underserved communities including free care for children and women with HIV, viral hepatitis, and tuberculosis.

“We are honoured to host the Suniti Solomon Memorial Symposium and to unveil our new healthcare facility dedicated to my mother’s memory,” said Sunil Suhas Solomon, Managing Trustee, YRGCARE. “These events reflect our commitment to medical innovation, compassionate care, and providing affordable healthcare services to all.” For more information, please visit www.yrgcare.org.

For further details please contact:
Sanjay Babu – 94442 44089 / Dinesh – 81247 18171 / Anbazhagan – 88387 09066
Ethos Public Relations | Tel: 044 – 4356 2351 |
http://www.ethospr.in/

Galaxy Unpacked July 2024: Galaxy AI Is Here

Chennai June 26, 2024 – The next frontier of Galaxy AI is coming. Prepare to discover the power of Galaxy AI, now infused into the latest Galaxy Z series and the entire Galaxy ecosystem. Get ready for a world of possibilities as we enter a new phase of mobile AI.

On July 10, Samsung Electronics will host Galaxy Unpacked in Paris — where the iconic cultural nexus and trend epicenter becomes the perfect backdrop for the rollout of our latest cutting-edge innovations. The event will be streamed live on Samsung.com, Samsung Newsroom and Samsung’s YouTube channel at 3 p.m. CEST, 6 a.m. PDT, 9 a.m. and EDT.

Stay tuned and make sure to visit news.samsung.com/global for all upcoming teasers, trailers and updates ahead of Unpacked 2024.

Link for the Galaxy Unpacked July 2024- https://youtu.be/igdWI2MAgPI

அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் 39 ஆண்டுகளுக்குப் பிறகு, “கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

இந்திய திரைத்துறையில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் திரைப்படம் “கல்கி 2898 கி.பி.”. பிரம்மாண்ட உருவாக்கம், தனித்துவமான கதைக்களம், வித்தியாசமான தீம் மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்கள் என இப்படம் இந்திய சினிமாவில் புதிய வரலாற்றை உருவாக்க உள்ளது. படம் ரிலீஸுக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது.

கல்கி 2898 கிபி இல், அமிதாப் பச்சன் அழியாத அஸ்வத்தாமாவின் பாத்திரத்தில் நடிக்கிறார், அதே நேரத்தில் கமல்ஹாசன் உச்ச யாஸ்கின் பாத்திரத்தில் நடிக்கிறார். இருவரும் மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்திருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. பார்வையாளர்கள் இருவரையும் ஒன்றாக ஒரே ஃபிரேமில் காண வெகு ஆவலோடு உள்ளனர்.

ரிலீஸ் தேதி நெருங்க, நெருங்க பரபரப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அமிதாப் பச்சன் மற்றும் கமல்ஹாசன் திரையில் மீண்டும் இணைவதைக் காணும் வாய்ப்பிற்காகவும், படத்தின் புதுமையான கதைக்களம் மற்றும் பல நட்சத்திரங்களை ஒன்றாக தரிசிக்கவும் ரசிகர்களும், திரையுலகினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். கல்கி 2898 கிபி இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமென எதிரப்பார்க்கப்படுகிறது. இப்படம் இந்திய புராணக்கதையில் அடிப்படையில், டிஸ்டோபியன் எதிர்காலத்தில் நடக்கும் கதையை, இந்திய சினிமா இதுவரை கண்டிராத வகையில், அட்டகாசமான உருவாக்கத்தில் வழங்குகிறது.

இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில், வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள, கல்கி 2898 கிபி திரைப்படத்தில், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் மற்றும் திஷா பதானி ஆகிய நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ளனர், இப்படம் ஜூன் 27, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Yatra Garden at Heartfulness Headquarters Wins the Prestigious Asia Architecture Design Award

The award was given in the Best Lighting Design category

Chennai, 24-June-2024: The spectacular Yatra Garden lighting design projects has been awarded global recognition at the prestigious Asia Architecture Design Awards (AADA). The Yatra Garden won the ‘Best Lighting Design’ award at AADA adding to the glorious garden that has been uniquely designed representing the various chakras in the human body and our evolution through the chakras to reach the highest level of consciousness. The Yatra Garden was built under the vision and keen guidance of Rev. Daaji – Guide of Heartfulness & President of Shri Ram Chandra Mission along with a dedicated team of volunteers whose efforts turned the garden into a reality. The Yatra Garden also showcases a splendid statue of Babuji Maharaj – the second in the lineage of Masters of Shri Ram Chandra Mission. Ved Electricals, Endo India and Japan, Ligman India and Semblance contributed immensely towards design and lighting coming to reality.

Speaking on the recognition, Rev. Daaji – Guide of Heartfulness & President of Shri Ram Chandra Mission said, “The Yatra Garden is a reminder of our inner journey to reach the highest Destination in life. The central figure of Babuji Maharaj is symbolic of the constant remembrance of the Master to stay on the path to reach the highest Destination. The design and lighting have attracted the visitors time and again not only for the aesthetics, but also for the inspiration they draw from the serenity, beauty and the pathways designed to represent the inner journey. We are honoured that Asia Architecture Design Awards have bestowed this award on Yatra Garden.”

This year’s theme at Asia Architecture Design Awards was “Emerging Asia”. This compelling theme acknowledges the outstanding ingenuity and creativity demonstrated by visionary architects and designers across Asia. The theme also recognizes Asia’s rising global influence as a hub of architectural and design excellence. The award is given across 6 disciplines and 30 categories. AADA is a juried competition that recognizes the best in the industry involving architecture, interior design, architectural product design and individual works.

தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்திற்காக மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள கிருஷ்ண சேத்தனின் ‘டைம்லெஸ் வாய்சஸ்’ ஸ்டார்ட் அப் நிறுவனம்

இசைஞானி இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பவதாரிணி குடும்பத்தினரின் இதயம் தொட்ட ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல்

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தளபதி விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் இடம்பெறும் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது. மறைந்த பாடகி பவதாரிணி இப்பாடலை பாடியிருந்தது ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரஹ்மான் உடன் நீண்ட காலமாக பணிபுரியும் இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தனின் ஸ்டார்ட்அப் நிறுவனமான‌ டைம்லெஸ் வாய்சஸ் வழங்கும் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பவதாரிணியின் குரலை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார் அவரது சகோதரரும் இசையமைப்பாளருமான யுவன் ஷங்கர் ராஜா.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்த ‘லால் சலாம்’ திரைப்படத்தில் மறைந்த பாடகர்களான சாகுல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களை செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் பயன்படுத்தி ‘திமிரி எழுடா’ என்ற உத்வேக‌மூட்டும் பாடலை கிருஷ்ண சேத்தன் உடன் இணைந்து ரஹ்மான் உருவாக்கி இருந்தார். இந்த பாடலைக் கேட்ட யுவன் ஷங்கர் ராஜா, கோட் திரைப்படத்தில் இடம்பெறும் குடும்ப பாடலான ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்காக பவதாரிணியின் குரலை பயன்படுத்த விரும்பி கிருஷ்ண சேத்தனை அணுகியுள்ளார்.

இந்த வாய்ப்பு கிடைத்ததற்காக பெரிதும் மகிழ்ந்த கிருஷ்ண சேத்தன், பவதாரிணியின் குரல் மாதிரிகளை யுவன் ஷங்கர் ராஜா அலுவலகத்தில் இருந்து பெற்று, மூன்று தினங்கள் தனது குழுவினருடன் உழைத்து செயற்கை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘சின்ன சின்ன கண்கள்’ பாடலுக்கு அதை பயன்படுத்தியுள்ளார்.

இது குறித்து பேசிய கிருஷ்ண சேத்தன், “பவதாரிணி அவர்களின் குரல் மிகவும் விசேஷமானது, தனித்தன்மை மிக்கது. அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் வாய்ப்பை அளித்த யுவன் ஷங்கர் ராஜா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்த பாடலைக் கேட்டு யுவன் ஷங்கர் ராஜா அவர்களும் இயக்குநர் வெங்கட் பிரபு அவர்களும் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்தனர். இசைஞானி இளையராஜா அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றேன்,” என்று கூறினார்.

தற்போது ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்காக மறைந்த நடிகர்கள் விவேக் மற்றும் மனோபாலா ஆகியோரின் குரல்களை பயன்படுத்தும் பணியில் கிருஷ்ண சேத்தன் மற்றும் அவரது டைம்லெஸ் வாய்சஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசை தயாரிப்பாளரும், இசைக்கோர்வை பொறியாளருமான கிருஷ்ண சேத்தன் மூன்றாம் தலைமுறை இசைக்கலைஞர் மற்றும் முதல் தலைமுறை தொழில்முனைவோர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப் பயணத்தில் ‘ரங் தே பசந்தி’யில் இணைந்து இரண்டு தசாப்தங்களாக ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறார். இசைக்கலைஞராக குறிப்பிடத்தக்க பங்களிப்பு வழங்கியுள்ளதோடு, பிட்ச் இன்னோவேஷன்ஸ் எனும் நிறுவனத்தையும் கிருஷ்ண சேத்தன் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த முன்னோடி இசை மென்பொருள் நிறுவனம் அதன் புதுமையான தயாரிப்புகளுக்காக பல சர்வதேச பாராட்டுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டைம்லெஸ் வாய்சஸ் குறித்து கிருஷ்ண சேத்தன் கூறுகையில், “பாடகர்கள் மற்றும் நடிகர்களின் குரலைப் பாதுகாத்து செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் தேவைக்கேற்ப அதை சரியான முறையில் பயன்படுத்துவதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். ரஹ்மான் சாரிடம் இந்த யோசனையை நாங்கள் முன்வைத்த போது அவர் அதை வரவேற்றார். இதைத் தொடர்ந்து ‘திமிரி எழுடா’ பாடலுக்கு பம்பா பாக்யா மற்றும் ஷாஹுல் ஹமீதின் குடும்பத்தினரிடம் அனுமதி வாங்கி அவர்களது குரலை பயன்படுத்தினோம். இந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது,” என்றார்.

கிருஷ்ண சேத்தன் மேலும் கூறுகையில்: “குரல்களை செயற்கை தொழில்நுட்பம் மூலம் பிரதியெடுத்து நாங்கள் பயன்படுத்துகிறோம். இதன் மூலம், பிரபல பாடகர்கள் முதல் இளம் பாடகர்கள் வரை பயனடைய முடியும். பாடகர்கள் தங்கள் குரலை என்றென்றும் பாதுகாக்க முடியும். உலகெங்கும் உள்ள இசை நிறுவனங்கள் மற்றும் இசையமைப்பாளர்களை அவர்கள் எளிதில் அணுக முடியும். பிரபல நடிகர்கள் மிகவும் சுலபமாக பல மொழிகளில் டப்பிங் பேச முடியும்,” என்றார். “கலைஞர்களுக்கு முன்னுரிமை” என்ற அணுகுமுறையுடன், கலைஞர்களின் உரிமைகளை பாதுகாப்பதே டைம்லெஸ் வாய்சஸின் நோக்கமாகும். “கலைஞர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதன் மூலமும் அவர்களின் தேவைகளை ஆதரிப்பதன் மூலமும் நாங்கள் வளர விரும்புகிறோம்,” என்று கிருஷ்ண சேத்தன் தெரிவித்தார்.